பெருமை -எங்கு இருந்தாலும் உத்தேசம் -அவனிருப்பதால் தான் இடத்துக்கு ஏற்றம்-
பிராட்டிமார் உடன் ஒக்க நாமும் இருக்க -இங்கு வந்து -சேவை புரிகிறான்-
வியமுடை விடை இனம் உடை தர மட மகள்
குயமிடை தடவரை அகலமது உடையவர்
நய முடை நடையனம் இளையவர் நடை பயில்
கயமிடை கண புரம் அடிகள் தம் இடமே 8-7-1
அடிகள்-ஸ்வாமி/கயமிடை-பொய்கைகள் /குயம்-திரு முலை தடங்கள் /
அன்னம் நடை பயில வெட்கி-குருகுல வாசம் பண்ணித்தாம் அன்னம்-/
நீளா தேவி-நப்பின்னை /கண் பார்வை இவளை அனுபவித்து குறைய நம் பாவங்கள்-பக்த தோஷம் பட வில்லையாம்-
பூமி நீளா தேவிமார் சாயை போல ஸ்ரீ தேவிக்கு /குற்றம் பொறுப்பிக்க / குற்றம் பண்ணிவவர் இல்லை/குற்றமே இல்லை
அந்த புரம்-சந்தன காப்பு உள் கோவில் சாந்து வைஜயந்தி புஷ்ப மாலை சரங்கள் ஹாரம் கௌஸ்துபம்-
விளக்கு கோலம் ஏழு ரிஷபங்கள் குதித்து கோலம் போடும் படியாக குதித்தான்/
கரு விருத்த குழி நீத்து காம குழி-திரு விருத்தம் தனியன்-பாபம் புண்யம் -கற்ப ஜன்ம-போல்வன
———————————
இணை மலி மருதினோடு எரு திற இகல் செய்து
துணை மலி முலை யவள் மன மிகு கலவியுள்
மன மலி விளவினோடு அடியவர் அளவிய
கண மலி கண புரம் அடிகள் தம் இடமே 8-7-2
அடியவர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூடிய -மருது இற எருதுகளோடு /மன மிகு கலவி-சுயம்வரம்
—————————————-
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை எடுவிய நெடியவர்
முயல் துயர் மிளை முயல் துள வளவிளை வயல்
கயல் துளு கண புரம் அடிகள் தம் இடமே 8-7-3
மீன்கள் துள்ளும்-வரை மழை -கல் வருஷம்
லோகாயுத மதம் போல பேசினான்-அவன் சொன்னதை பார்க்க வேண்டும் பாவி என்று சொன்னாலும் அதுவே உத்தேசம்//
பெரிய திரு பாவாடை உத்சவம்-ஜேஷ்டா அபிஷேகம் அடுத்த நாள் ஸ்ரீ ரெங்கத்தில்/மணி கட்டிய பசுக்கள் / முயல்-முயற்சி செய்கிற -/
முயல் குட்டிகள் துள்ளும் -அவனே ரக்ஷகன் என்று இருக்கும்-துக்க வர்ஷம் காப்பான்
—————————————–
ஏதலர் நகை செய இளையவர் அளை வெண்ணெய்
போது செய்த மரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புரம் அடிகள் தம் இடமே –8-7-4
ஸ்ரீ தேவி நாச்சியார் -ஆசை உடன் வசிக்கும்-ஏதலர் சிசுபாலர் போல்வார்/
அமரிய -பூரணன்/புனிதன் -வெண்ணெய் களவாடி உண்டாலும் ஏதலர் ஏசினாலும் இவன் புனிதனே பூரணனே-
———————————
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமோடு அகல் இடம் அளந்தவர் அமர் செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ
கண்டவர் கண புரம் அடிகள் தம் இடமே– 8-7-5
திரு விக்கிரம/ராம அவதாரம்/ஆழி எழ -வென்றி தரும் பத்தும்-/அளந்தவர்-திரு விக்ரமன்/விண்டவர்-சத்ருக்கள் பொருந்தாவர்கள்
—————————————–
மழு இயல் படை வுடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர் திரு மகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கண புரம் அடிகள் தம் இடமே– 8-7-6–
பரசுராமன்-/திரு மகள் மருவிய-/வண்டுகள்-ஆழ்ந்து பண் இசைத்து பாட சாம கானம்
ஒரு தலை காமம் இல்லை/திரு மகள் உண்டே புருஷாகாரத்துக்கு –
————————————————
பரிதியோடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரிதி யோடனவின இயல்வினர் செலவினர்
சுருதியோடு அருமறை முறை சொலும் அடியவர்
கருதிய கண புரம் அடிகள் தம் இடமே 8-7-7
வேதம் -சுரத்தோடு-சொல்பவர் இங்கு இருக்க -எரிதி-அக்னி-//சரீரம் அதீனம்/எல்லாம் அவன்
நின்றனர் இருந்தினர்..நின்றிலர் எல்லாரும் அவன் அதீனம் /சேஷ சேஷி பாவம் அறிந்த வேத நாவர் விரும்பும் திருக் கண்ண புரம்
————————————-
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை யகல மதுடையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கண புரம் அடிகள் தம் இடமே– 8-7-8
புல்குதல்-அளந்த /மலரில் நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ தேவி நாச்சியார் /
முடி-நாற்று-படை-கலப்பை அடி செல -காலாலும் துகைத்து /இடையில் தாமரை பட மணம் வீசுகிறதாம் /
கைங்கர்யம் பண்ண புஷ்பங்கள் உண்டே / பட்ட -ஆஸ்ரிதர் திரு மேனி பட்டத்தில் ஆசையாம்
————————————
புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகள் என இன மகளிர்கள் இவரோடும்
வல மனு படை உடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புரம் அடிகள் தம் இடமே– 8-7-9
கலம்-கப்பல் /புலம்-இந்த்ரியங்கள் /புணரிய -நித்ய சம்ச்லேஷம் /நிதி குவை-பொன் முடிப்பு /
நீல மணி போன்றவன் /சுத்த ஸ்வ பாவம் /கைங்கர்யம் வாங்க மிதுனம் உண்டு/
————————————————–
மலி புகழ் கண புரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன தமிழ் இவை விழுமிய இசையினோடு
ஒலி சொலும் அடியவர் உரு துயர் இலரே– 8-7-10
கானத்தோடு /துயர் இல்லை/ பரம பதம் விட ஏற்றம் /
———————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply