அவதாரம் அநேகம் சத்யம் பெருமை ஒன்றும் குறையாமல் பஹூதா ஜாயதே
உபநிஷத் மயம் தர்மம் குனியும் பொழுது சாது ரக்ஷணம் துஷ்ட நிக்ரகம் தர்மம் ஸ்தாபனம் காரணம் /
வானோர் திருக் கண்ண புரம் பிராப்யம்/ அவன் எதிர் சூழல் புக்கு தட்டி திரிய நாம் அத்தை அறியாது திரிந்து இருந்தோம்
இழவு எல்லாம் தீரும் படி இருந்த தேசம் /விபவ அனுபவம் /தான் கண்டதை உபதேசிக்கிறார்-
———————————————————–
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின்
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன்
ஆனா உருவிலான் ஆயன் அவனை அம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-1
கொழும் கயலாய்- நெடு -விளையாடும் ஈசன் எந்தை-பிரளய சாகரத்தில் இருந்து ரஷிக்க/
என்ன வியப்பு நாம் ரஷகமாக – கடலே பாதகம்-என்ற வியப்பு/-
ஜகத் காரண பூதன்-தான் நின்ற நிலைக்கு ஏற்ப -அவதரித்து ரஷிக்கிறான்-
வேறு பட்டு-நீரில் வாழும் ஆமையான கேசனே /பெருமை ஓன்று கூட குறையாமல்/ மனுஷ்யச்தே பரத்வம்/
நமக்கு அவதாரம் என்று புரிந்து கொள்ள வில்லையே/
தண் தாமரை கண்ணன்/மத்ஸ்யம் பார்வையாலே வளர்க்கும்/
ஆமை மனசால் நினைத்து வளர்க்குமாம்/சங்கல்பம்/
சத்வ குணம் வளர கர்ப்பம் வந்த உடன் மது சூதனன் கடாஷம் வேண்டும் /
ரவி கர விகசித சும்ர்ஷ்ட நாள புண்டரீக தல அமல ஆய்த தீஷணன் -ஸ்வாமி
குண பிரவாகம் க்ருபா பிரவாகம்-எதிர்த்து நிற்க மண தூண்கள்-பற்று கொம்பு ஆலம்பனம்/
கரியவாகி புடை பரந்து-மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப் பெரிய வாய கண்கள் –
அஷிணீ-மலர்ந்த இரண்டு கண்கள்-அப்பைய தீஷிதர் -ருத்ரனுக்கு மலர்ந்த இரண்டு கண்கள் மலராத ஓன்று-நாராயண -என்பதால் /
வேற ஓன்று சொல்ல முடியவில்லை/
இல்லதும் உள்ளதும்-இல்லது அவன் உரு /
ஆனா உருவில் -மாற மாட்டன்-ஆயன்-இடையன்-விகாரம் இல்லை அஜாயமான பகுவிதா ஜாயதே –
பிறப்பில் பல் பிறவி பெருமான் –கர்மா தீனமாக இல்லை இச்சையால் பிறக்கிறான் -அம் மா விளை வயல் -புறவில்-பர்யந்தம்
—————————————————————————–
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமையாய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-2
மலங்கு-மட்சயங்கள்
மறுக-கலங்க/ மந்திர பர்வதம்-அத்வீதியமான /ஆறு மலைக்கு -அப்பன் சாறு பட அமுதம் கொண்ட வாறே /
உங்கள் அமுதம் என் அமுதம் கொண்டா கடையனும்//
நெடு வரை நட்டு-இலங்கு சொத்து ஆர் அமுதம்-பூரணத்வம் -ஒலி-வாசுகி -சாம வேத ஒலி விட்டு விட்டு இந்த ஒலி கேட்டானாம்/
அனைத்துக்கும் அந்தர்யாமி-தூண்டு கோல் -நிர்வாகன்-பிர பன்னனுக்கு மட்டும் தானே செய்வான் –
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்///கடல் கடைந்த மாதவனை கேசவனை/
ஸ்ரீ தேவி அனைவர் பார்க்கும் பொழுதே மார்பில்-பெண்கள் கோஷ்டியில் பெண்களுக்கு வெட்கம் இல்லை/
கேசவனை-வண்டமர் பூம் குழல் தாழ்ந்து உலவ -தயிர் கடைந்திட்ட வண்ணம் மெய் அறிவன் நான்-ஆஸ்ரித கர ஸ்பர்சம் பெற
———————————————————————————–
பாரார் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான்
கூரார் அரலிரை கருதி குருகு பாய கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-3-
பெரும் கேழ லார் ..நம் மேல் ஒருங்கே பிரள வைத்தான்-
பாசி தூரத்து கிடந்த பார் மகள்–நீல வரை இரண்டு-நீலக் கடல் கடைந்தாய்-முன்பு சொல்லி இதில் வராக அவதாரம்-
உன்னைப் பெற்று இனி போக்குவேனோ/ஏனமாய் நிலம் கீண்ட அம்மானை/
அப்பன் ஊன்றி எடுத்து/திரு குளம்பில் மேரு கண கணப்ப /
ஜகம் ஹிதம் நினைந்து -பூமி பிராட்டி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது /
வராக அவதாராமே பற்றத் தக்கது பட்டர்/ஈனச் சொல்லாயினும்..ஞான பிரானை அல்லால் இல்லை-
——————————————————————–
உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4–
அரி உருவாய் வெருவ நோக்கி–உருக்கின பொன்னை ஓட விட்டால் போல/
எங்கும் உளன் கண்ணன்-சிங்க பெருமான் பெருமை/ தெள்ளிய சிங்கம்/
ஆயிர நாமம்-நாராயண நாமம் -செங்கண் சீயம்-அளந்திட்ட தூணை அவன் தட்ட–உளம் தொட்டு/
சிந்தையினால் இகழ்ந்த -இரணியன்/பிரதி பிம்பம்-ப்ரீதி கண் மறைக்க //அப்பன் ஆழ துயர் –அந்தி அம் பொழுதில் ஆள் அரி உருவாக்கி-
———————————————————-
தொழுநீர் வடிவின் குரல் உருவாய் வந்து தோன்றி மாவலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-5–
பெற்றவர்களே இகழும் படி குள்ளம்/-மாவலி மூவடி /ஓங்கி உலகு அளந்த உத்தமன் /
பொன் விளையும் வயல்-கரு முகில் புஷ்பம் /மூவா வுருவின் அம்மான்-
பொன் வளரும் இடத்தில் முல்லை கரு முகில் விளையாதே -அதனால் அந்த இடம் தவிர வேற இடங்களில் விளைந்தனவாம் -வியாக்யானம்
——————————————————————-
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-6–
கடி-பரிமளம் /கூர்மையான வாய் நிரம்பிய மழு/கோக்குல மன்னரை–போக்கிய தேவன்-போற்றும் புனிதர்/
முக்ய அவதாரமே உபாசனம் /
குடியா வண்டு-குடும்பம் சேர்ந்து உள்ளதாம் /பிரதி பந்தகம்-கடலில் ஒரு சிராய் கொண்டால் கடல் வற்றாது –
எத்தனை தேன் குடித்தாலும் வற்றாது–
—————————————————————–
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி
வெய்ய சீற்ற கடி இலங்கை குடி கொண்டு ஓட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனை செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலி கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே 8-8-7–
தான் போலும் எழுந்தான் தரணியாளன்–பாசுரம் போல்/
வணங்கா மன்னன்-சேவிக்க வேண்டாத மன்னன்/-அவன் இடம் ஸ்வாதந்த்ர்யம் வேண்டும் பார தந்த்ர்யம் கூடாது /
ராமோ ராமோ என்று வையம் எல்லாம்-தேவதாந்த்ரங்கள் காலில் கூட விழுந்தார்கள் ராமனுக்கு அயோத்யா வாசிகள்/
குடி கொண்டு ஓட-அனைவரும் பாதாளம் போனது முன் பார்த்தோம்-கானல்-நெய்தல் நிலம்- கைதை-தாளம் பூ —
——————————————
ஒற்றை குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி
வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்ற தொழிலானை செந்தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-8-
ஒற்றை குழை-காது காப்பு-குண்டலம் -ராஜாவுக்கு லட்சணம் -/
நாஞ்சில்-கலப்பை -பல ராமன் /வெற்றி பெறுவதே தொழில்/குளித்து மூன்று அனலை ஓம்பும்-செந்தீ /
ஹவுஸ் கொடுத்தால் வந்து வாங்க வருவான்-கண்டு கொள்ளலாம் என்று–
————————————————
துவரி கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
உவரி யோதம் முத்துந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே -8-8-9–
லவங்க பூ- கோவை பழம்- போல சிவந்த வாய் பூமி பிராட்டி//
பூ பாரம் நீக்க–உப்பு கடல் சூழ்ந்த /செந்நெல் கவரி வீசும் -வண்ண மாடங்கள் சூழ் வேண்டி தேவர் இரக்க வீங்கிருள்
——————————-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்
தானாய் பின்னும் ராமனாய் தாமோதரனாய் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத்து அடியேன் கலியன் ஒலி செய்த
தேனாரின் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாதே 8-8-10–
கல்கி -சூசுகம் இங்கு சொல்லி இருக்கிறார்/பாவம் நில்லாது/தேனோடு ஒத்த தமிழ் மாலை
———————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply