பெரிய திரு மொழி -திரு கண்ண புர பதிகம்-8-6- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

பகல் கண்டேன் நாரணனை கண்டேன்/ஞான பாவத்துடன் உபதேசிக்கிறார் /
ஆதித்யனும் முன்பு உதிக்கிலன்-நாழிகை பெருக கவலை பட்டார்/
இருட்டைக் கண்டு கண்ணனை ரஷித்துக் கொடுத்தது என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருட்டை வணங்குவாராம்/
பிரிவில் இருட்டு நலிந்தது/அனுகூல பதார்த்தங்களும் நலிய0

இனி சம்சார ஸ்வ பாவத்தாலே இவை மாற –
வந்திலன் சொன்னது தப்பைச் சொன்னீர் – திரு கண்ண புரம் ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு தானே வந்து நிற்கிறேன்
அதை தெரிந்து கொள்ளாதது உம் குற்றமே -கவலை வேண்டாம் தெரிந்து கொண்டால்-
ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே-எதிர் பார்த்து நிற்கிறேன் /ஆறி இருந்தால் குறை இல்லை /
ஆழ்வாரும் சமாதானம் அடைந்து -அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே-
ஆழ்வாரும்-பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
ஆனந்தம் உடன் பாட ஓலம் இட்டார் அடுத்து பூ லோகம் பார்த்ததும் நாம் கண்ணில் பட சம்சார பயம்-
மாறி மாறி வரும் /சுக துக்ககங்கள் /
17 வித சாம்யம் அங்கி/அங்கம்-ஆழ்வாரும் கலியனும்/
தொண்டீர் உமக்கு அறிய உபதேசம் பண்ணுகிறார் நேற்று வரை அழுதார் –
அவன் உதவ வில்லை நீர் சாவியை கிடக்கும் அநு கூலரை கண்டு விரகு உண்டு உஜ்ஜீவிக்க சந்நிகிதனாய் அருகில் இருக்கிறான்/
ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கலாம்  என்கிறார்-
அவன் மணி வண்ணன் -ரத்னம் நம்மை தேடி கையில் வந்து இருக்கும் /
ஞானம் வைராக்கியம் பக்தி கடல் போல அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட –
சிரமம் இன்றி நிர்கேதுகமாக மயர்வற மதி நலம் அருள பெற்றவர்கள்/
ஈஸ்வரனும் தானும் ஆச்சர்ய பதவி ஆசை பட்டு கீதாசார்யன் லஷ்மி நாதன் /
அசிந்தய-மனசுக்கும் வாக்கும் எட்டாத எப்படி அத்புத-எட்டிய அம்சமே அத் புத்தம் /அது போல /ஆரா அமுதம் –

தொண்டீர்! உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடைந்தை மான் நோக்கம்
கண்டான் கண்டு கொண்டு உகந்த கண்ண புரம் நாம்  தொழுதுமே–8-6-1-

கண்ண புரம்- திவ்ய தேசமே உத்தேசம்-ஆஜ காம முகூர்த்தக யாத்ர ராம-  எங்கு ராமன் இருந்தானோ அவ் இடம்/
பிராப்யம் திவ்ய தேசம் பெருமாள் பிராபகம்-பிராவண்யம் திவ்ய தேசம் –
புறம்புள்ள பற்றுகளை விட்டு அவனே தஞ்சம் என்று இருக்கையும்  
பேறு தப்பாது -பேற்றுக்கு துவரிக்கையும்
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே பிரவணராய் /
உபரி சரவரஸ் ராஜ உத்பாலர் ஞானிகள் இங்கு இருக்க-யுவாக வந்து ராஜாவுக்கு நல்ல எண்ணம்-
உத்பாலவதாக விமானம்-அடியார்களை ரஷிக்க வசு ராஜாவை திருத்தி சேவை இங்கு /
துளங்கா -பயம் இல்லா /சிறிதே /பொல்லா அரக்கரை-நல்ல அரக்கர் விபீஷணன்–
சிவனை- ஸ்ரீமான் என்கிறார் வால்மீகி- திரும்பி வர சொல்லாததால்–
யுத்தம் ஆனதும் -ஷட் அர்த்தம்-முக் கண்ணன் -மேகநாத அரி -சூரி-லஷ்மணன் -சப்தம் –
வானர உயிர்களை-கொடுக்கச் சொல்ல –முகுந்த மோஷ பூமி கொடுக்க இவன் /உயிர் படைக்க பிரம –
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்து –
ஆழ்வார்கள் சிவனை கூட கொண்டாடுவார்கள் உயிர் எடுத்து சம்சாரம் நீக்கியதால்
ராவணனுக்கு ஈம கடன் செய்ய சொன்னான் விபீஷணன்-பஷிக்கு பண்ணினான் பெருமாள்/
மரணம் ஏற்படும் வரை தான் விரோதம்-சமோகம் சர்வ பூதானாம்
அவன் என்றுமே பகைவனாக கொள்ள வில்லை ராவணன் எண்ணத்தால்/
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான் /திரு இருக்கிறதால் தானே சிறிதே முனிந்து
மால்-பித்தன்-ஆஸ்ரித வியாமோகம் வடிவு எடுத்தவன்/திரு மால்-கிருபை தயை- சாஸ்திரம் எல்லாம்-
உசிதை உபாயம்-புருஷோத்தமனை அடக்கி/கொய்சகத்துக்குள் அடக்கி வைத்து /
சரணம் என்று வந்தவரை /சிறிதே முனிந்த-மா மான் நோக்கம் இரண்டும்/வடி-கூரிய/
இரண்டு பக்கம் இருத்திக் கொண்டான்-சங்கல்பித்து கொண்டான் ஸ்ரீ தேவி பூ  தேவி மார்களை -இரண்டு திருவடிகளும் –
அடியவனை நான் தான் போய் ரஷிப்பேன் என்று போட்டி /
நான்கு பேர் இங்கு/ஆண்டாளும் பத்மாவதி தேவி மாறும் உண்டு /
எம்பாரும் ஆண்டானும் ஞானக் கை தா விழுந்தவனை இருவர் முயன்றால் சுலபமாக தூக்கலாமே /
ஏகாந்தமாக கண்டு கொண்டு உகந்தான்–

———————–

பொருந்தா அரக்கர் வெம் சமத்து போன்ற அன்று புள் ஊர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் அரக்கர் தென் இலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிழைத்து புக்கு ஒலிப்ப
கருந்தாள் சிலை கை கொண்டாநூர் கண்ண புரம் நாம் தொழுதுமே-8-6-2-

பிலம்-பாதாளம்-பிராட்டி பக்கல்-இங்கு விரோதி நிரசன சீலர் /
நமக்கும் செய்வார்/பொருந்தா அரக்கர் /திருவடியை-புள் ஊர்ந்து -ஹனுமான் மேல் ஏறி-வாகனம் எல்லாம் கருட அம்சம்/
ஆயுதம் எல்லாம் சக்கிர அம்சம் துரும்பால் கிளறிய சக்கர கையன்/
படுக்கை எல்லாம் அநந்தம் அம்சம்/
மாலி- கும்பனோடு நிகும்பனும் பட்டான் /
பேர்ந்த-விடு பட்டவர்கள்-வைரம் பாய்ந்த சிலை-வில்லாண்டான் தன்னை–

——————————————–

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்
வள்ளால் அரக்கர் குல பாவை வாட முனி தன வேள்வியை
கல்வி சிலையால் காத்தானூர் கண்ண புரம் தொழுதுமே 8-6-3-

இருப்பதால் இவர் சிறியவர் இல்லை/
பரதன் விட்டு -கைகேயி பிள்ளை-நாளை காலையில் போய் ஆசுவாச படுத்த வேண்டும்-
ஸ்நானம் இல்லை சங்கு லஷ்மணன் விட்டு தூக்கம் இல்லை படுக்கை//
பொருட்டாக-அவளுக்காக -இதில் நேராக ராவணனை கொன்றது -7 நாள்கள் இரவும் பகலும் நடந்த -உவமானம் வேற இல்லை
ஆகாசம்-ஆகாசம் சமுத்ரம் -சமுத்ரம்-போல ராம ராவண யுத்தம்/
ஆனை ஆயிரம் தேர் .சேனை கபந்தன் ஆயிரம் கபந்தன் ஒரு நாழிகை -75-நாழிகை/கிள்ளிக் களைந்தான் -ஆண்டாள் /
அவனை பார்க்கும் பொழுது இது பொருட்டே இல்லை/
அரக்கர் குல பாவை-தாடகை- முதலில் செய்த சண்டை-கல்வி சிலை-தன்னைதான வில்லை வாங்கும் முன் –
கரிய செம்மல் ஒருவனை தர கேட்டார் விஸ்வாமித்ரர் -வித்யாப்யாச சிலை /பருவம் நிரம்பாத பொழுது வேள்வி காத்தானே- 12 வயசிலே-
கன்னி போர்-முதல் போர் அவள் கன்னி இல்லை மாரிசன் சுபாகு பிள்ளைகள்/
கல்வி சிலை-மதிள் மூன்று துர்க்கம்-நீர் மலை வனம் /திருவடி மதித்த ஐஸ்வர்யம்-சிறிய திருவடி -சம்சாரத்தில் இருந்து கொண்டே

——————————————

மலை முந்நீர் அதர் பட வரி வெண்சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணி செய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைதானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-4-

சேது பந்தனம்-அத்புத ரசம் இங்கு-குரங்கு-மரம் தாவி அவை கொண்டு/
இக் கரையிலே பட்டாபிஷேகம் பண்ணி பரத்வம் காட்டி/ ஆற்று நீர் வேற்று நீர் ஊற்று நீர் –
சமுத்ரம்/வில் அம்பு மெதுவாக கொண்டு வந்தான் லஷ்மணன்-படுக்கை ஒரே ஜாதி சமுத்ரம் /
புகல் உற்று-புகுவதற்கு-கல்லால் கடலை அடைத்தான்-என்பதால்-
குரங்குகள் மலையை நூக்க-தொட்டு கொண்டு கைங்கர்யம் பண்ண –
ஆச்சார்யர் ஊசி கேட்க மரம் வெட்டி குத்தி நான்கு  பேரும் கொண்டு வந்த கதை-
குளித்து தாம் புரண்டிட்டு ஓடி- நிறைய தூரம் ஓடுமாம் நிறைய மணல்  கொண்டு வர –
மணல் உதிர்ந்து போகும் என்ற ஞானம் இல்லை-பக்தி பரவசம்-

———————————–

ஆமையாகி அரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஒமமாகி ஊழி யாகி உலகு சூழ்ந்த  நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கை கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-5

சுதர்சன மந்த்ரம் கிருஷ்ணாய கோவிந்தாய சேர்த்து சொல்வது போல வித்யா ரசம் சொல்லி கோபம் சொல்லி புக ரசம்/
அரி யாகி-நரசிங்கன்/ஹயக்ரீவர்/அன்னம்-ஹம்ச அவதாரம்/ வித்யா பிரகாரம்/
ஆமை அறிய்-அன்னம்-ஷாந்தி ரசம்/ யஜ்ஜம் ஆகி கால தத்வமும் ஆகி/
உலகு உவரி சூழ்ந்த -உப்பு கடல் /சேம மதிள்- ராவணன் கருத்தால்-
காமன் -பயந்தான்-கண்ணன் போக ரசம் தெரிவித்தான் /காமன் சாமான் உன்னையும் உம்பியும் தொழுதோம் /

———————————————–

வருந்தா திரு நீ மட நெஞ்சே! நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை செந்தீ உண்ண சிவந்து ஒரு நாள்
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன்
கரும் தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-6

மாதவன் என்னும் ஓத வல்லீரேல் ஏதம் சாராது /மட பவ்யம் /திருத்த பார்த்தான்-
சிவந்த -மாருதியால் முன் சுட பண்ண -செந்தீ-அடை மொழி -அக்னி ராவணனுக்கு பயந்து எரிக்காமல் வெளுத்து /
மாதலி தேர் முன்பு-இப் பொழுது தான் முன் போனான் /பின் நோக்கி ஓடி பழக்கம் /
சேர்த்து வைத்ததால்-உஷை அநிருத்தன்-பாணன் பிழை பொறுத்த புனிதன்/காளிக்கு சாபம் கண்ணன்- /
பட்டர் -ஸ்ரீ பாதம் தூக்கும் பாகவதர் அடி பொடி வாங்கிய/ரஜோ தமஸ் குணம் பயம்-/
நேர் செறிந்தான் /வாணர்க்கு அருள்-கை இரண்டை விட்டு விட்டான் /முன் குலவலையா பீடம் ஒசித்தான் என்கிறார்

————————————————

இலையார் மலர் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர் புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள் புரிந்தான்
அலை நீர் இலங்கை தசகிரீவர்க்கு இளையோர்க்கு அரசை அருளி முன்
கலை மா சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-7

யானை கொன்றது பேசி-யானை ரஷித்தது நினைவு வர-கஜேந்திர மோட்ஷ விருத்தாந்தம் –
திரி கூட பர்வதம் -பொய்கை/இலைகள் செறிந்து -முதலை காட்டாமல்–ஜகத் காரணம் காட்ட-
பக்தன் திருவடி பிடிக்க காத்து இருந்ததாம்-முதலை தன்னால்-ஜல சாரா தத்வம் நீர் புழு-தாழ்ந்தது புரிய தன்னால்-
யானை தான் ராமானுஜர்/ பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று இரு கண் இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து நீட்டும் –
ஸ்வாமி தான்-வேழம்-இது கொண்டு சூத்திர வாக்யங்களை ஒருங்க விடுவார்-
ஆண் யானை-திருவடி சம்பந்திகள்-பெண் யானை-பிடி/ துவய வாக்கியம்-இரு கண் இள மூங்கில்/
தேன் -திரு மந்த்ரம் சரம ஸ்லோகம்-தோய்த்து -திருவேங்கடம்//மேனானிப்பு தோற்ற யானை//
ஆயிரம் ஆண்டுகள் போராட்டம்-தேவர் கால அளவில்/ நம் ஒரு வருஷம் ஒரு நாள் /
துதிக்கை மட்டுமே நீட்டி கொண்டு நீரில் அழுந்த -காத்து இருந்தான்-
நாராயணா ஒ மணி வண்ணா கூப்பிட அகில அத்புத நிஷ் காரணன்-அதனுக்கு அருள் புரிந்தான்-
அலை குலைய தலை குலைய -வேகத்துக்கு நமஸ்காரம் -பட்டர்–
வான் இள வரசு வைகுந்த குட்டன்-சப்த சக சகஸ்ரநாம திரு நாமம் –கூக்குரல் கேட்டு இருந்தான் –
வேதாத்மா -கருடனையும் தூக்கி கொண்டு போனான் /கை நின்ற சக்கரத்தான்-
கடி கொள்பூம் பொழில் காமரு  பொய்கை -வைகு தாமரை வாங்கிய வேழம்  முடியும் படி ஒரு முழு வலி முதலை பற்ற – – 
மற்றது நின் சரண் நினைப்ப /உம்பரால் அறியல் ஆகா -யானைக்காக சீறிவந்தான்
-செம் புலால் உண்டு வாழும் -விரோதி நீர் புழு -.அகங்காரம் கொண்டு திரியும்-முதலை-
மழுங்காத ஞானமே படையாக-சங்கல்பத்தாலே பண்ணி இருக்கலாமே–தொழும் காதல்.களிறு அளிப்பான் — 
சுடர் ஜோதி மறையாதே –மீனமர் பொய்கை–வேட்கையினோடு-சென்று -பிரமனும்-வெள்கி நிரப்ப –
வாராய் -என் ஆர் இடரை தீராய் -தீராத சீற்றம் -/
தன் பிராட்டி பிரித்த பாவிக்கு  தம்பிக்கு அரசு அளித்தது-முன் மாயா மிருகம் -கொன்று முடித்தவன்-

————————————————

மாலாய் மனமே! அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மருதும் காய் சினத்த கழுத்தும் கத மா கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர்  உயிரும்  மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-8

அசுரர்கள் பலர் முடித்த -பல கதைகள்- சேர்த்து-கண்ணன் கையையும் காலையும் உதைத்து செய்த செயல்கள்-
கையும் காலுமே அவனுக்கு ரஷகம்/மிச்சம் இன்றி முடித்தான்-ராமன் போல இல்லை-மாரீசன் ஒட்டி சுபாகு கொன்றான்/
சூர்பணகை விட்டான்/அகம்பனனை-13999 பேரை கொன்று  மட்டும் விட்டு கொன்றான்-கம்பனம்-நடுக்கம் –
ஒரு வழி பாதை கோகுலம் விரோதி பிராணம் போக்கி அன்பர் அவன் இடமே /
காய் சினத்த கழுதும்-பேய் முலை நஞ்சு உண்ணாக கொண்டான்-கழுதும் கேசி  -கதமா-தேனுகாசுரன் /
கிடக்கில் தொட்டில்-மிடுக்கிலாமையால்-குழந்தைக்கு /பேய் முலை –கள்ள சகடம்-ஆவேசித்து -அவனுக்கும் அவன் திருவடி தானே ரடஷகம்-/
யானைக்கு கை ஓய்ந்த பின் உதவினான்-விபீஷணன் சரண் அடைய அருள் புரிந்தான்-சஞ்சல நில்லவா நில்லாத நெஞ்சு -நம் பகைவர்களையும் முடிப்பான்

——————————————

குன்றால் மாரி பழுதாக்கி கொடியர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை எழ அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தாநூர் கண்ண புரம் நாம் தொழுதுமே 8-6-9

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி/கோவர்த்தன கிரி தாரி/
ரிஷபம் முடிக்க- திருவடிகள் நித்யர் கூட கிட்ட  பாரிக்க மாடுகள் பெற்றனவே /
அடி போற்றி சொன்ன பின்பு கழல்/மேல் திருவடி கீழ் திருவடி இரண்டுக்கும் பல்லாண்டு/
கழுத்துக்கு ஓலை கட்டி கொண்டு தூது போனதும்-திரௌபதி மங்கள சூத்திரம் காக்க-

——————————————

கரு மா முகில் தோய் நெடு மாட கண்ண புரத் தடிகளை
திரு மா மகளால் அருள் மாரி செழு நீராலி  வள நாடன்
மருவார் புயல் கை கலி கன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மாநிலத்தர்க்கு அரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே 8-6-10

கரு மா முகில்-கருத்த பெருத்த -ஸ்வாமி-ஸ்ரீ தேவியால் அருள் மாரி-ஆனார் இன்ப மாரி ஆழ்வார் அடியாருக்கு இன்ப மாரி/
இவர் கைக்கு எப் பொழுதும் புயல் கொண்ட மேகம்-நித்யர் போல் ஆவார் பலன் சொல்லி தலை கட்டுகிறார்

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading