(கீழே மதி உடன் படுதல் துறை
ஸம்ஸ்லேஷம் நடக்க
இவருக்கு ஆர்த்தி விளைக்க
பிரிவு என்ற துறை உண்டே -பொதுவாக
வித்யா அப்யாசம்- பொருளீட்ட -காவலில் பொருட்டு -போர் செய்ய -இலக்கியம் உள்ளதை கதை சொல்வது போல்
இவள் நெஞ்சில் உறைத்து வலிமைப்படுத்துவோம் என்று பார்க்க
அதுவே இவளுக்கு பிரிந்து விட்டாரோ என்று எண்ணி
திருமேனி விகாரம் அடைய
கூடி இருக்கவே -ஐந்தாவது பிரிவு இது -கீழ் சொன்ன நான்கிலும் இல்லை
தலைமகன் வார்த்தையாய் இது இருக்கிறது
பெருமானே ஆழ்வாருடைய ஞான பக்தி வைராக்யங்களை கொண்டாடி பேசும் பாசுரம் இது )
(கண்ணனுடைய ஸ்ரீ வைகுந்தத்துக்கு சமமானவளே -சம்போதகம்
பொருளின் பொருட்டு பிரிதல் உண்டு என்று பொதுவாக சொல்ல
கடலுக்கு அக்கரை இருந்தால் போல் பிரிந்தனாக நினைத்து விகாரம்
கண்கள் -பக்தி ரூபா பன்ன ஞானம்
உபமானம் கெண்டைக்குலம் -முற்று உவமை மட்டும் உண்டு இதில் –
ஞாலம் -உலகம் -உயர்ந்தோர் மாட்டே -அனைவரும் ஆசைப்படும் ஞானம்
அஸ்ரு பிந்து -ஒண் முத்து
மேனி வர்ணம் -பசலை நிறம்
மைய கண்ணாள் -சிவந்து இருக்க
பொருளுக்காகப் போக வேண்டாமே -இங்கேயே குண அனுபவமும் கைங்கர்யமும் ஆழ்வார் இடமே உள்ளது
குடக்கை -மெலிந்து குடங்கை -வளைந்த கை என்றவாறு
சிறாங்கை -என்றவாறு
ஞானம் அனுக்ரஹம் எட்டாக்கனி இல்லையே
ஆழ்வார் பாசுரம் ஒரே பாதம் போதுமே பூர்ண பகவத் ஞானம் பெற
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே
இவை -இரண்டு கண்கள் -பன்மை -எண்ணிறந்த ஞானம் அன்றோ ஆழ்வாரது –
என்று பார்ஸ்வத்தில் உள்ளோர் கொண்டாடுகிறார்கள்
பக்தி ப்ரபாவத்தைக் கொண்டாடிய படி )
(ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)
பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||
“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத
பெருமையை யுடைதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”)
—
அப்பிள்ளை உரை
பொருள் வரிற் பிரிவேன் என்ற தலைமகன்
இவள் கருத்தை அறிய சில சொல்லி
பொருளுக்காகப் பிரிவர் பேச்சு வழக்கு என்னும் இடத்தை பிரசங்கிக்க ‘
இவர் தானும் பிரிய நினைக்கிறான் என்று
அவன் பிரிந்தால் பிரிந்தார் படும் வியஸனத்தை அவன் முன்னே இவள் பட்டத்தைக்கண்டு
நான் உடன் இருக்கவே இப்படிப் படுவார்களோ
என்ன ஆச்சார்யம் -விஷமிதான் ஆகிறான்
அரியன யாமின்று காண்கின்றன
லோகத்தில் சிலருக்கு கூடாதவை
நாங்கள் காண்கிறோம்
கண்ணன் விண்ணனையாய்
புறம்பே சிலரோடு கலந்தவர்கள்
ஒரோ ஹேதுக்களாலே பிரியக் கண்டு என்னையும் அங்கனே பிரிந்தாரோ என்று சங்கிக்கும் அளவிலே
அல்லாத விஷயங்களோபாதியோ நீ
உன்னுடைய வீறு பாட்டைப் பாராய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென
சிலரைச் சிலர் பொருளுக்குப் பிரியலாம் என்ற பேச்சு வர
உனக்கும் எனக்கும் நூறு யோஜனை –
படா நின்றாய்
பொருளுக்காக நெடும் தூரம் பிரிவார்கள் என்றுமாம்
ஞாலம் எய்தற்குரியன
உலகம் அடைய தனக்கு சேஷமாக்கும் படியான என்றும்
லோகம் எல்லாம் ஆசைப் படப்படுமவன என்றுமாம்
வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
கலங்கின போது உண்டான ஆற்றாமையால் உண்டான விரஹ தாபத்தால் உண்டான
கண்களில் சிகப்பும் -இது வந்தேறியான சிகப்பு
அகவாயில் உள்வாயில் உள்ள சிகப்பையும்
கண்ணீர் துளி வெளி வர -இவன் வெளிவர
பத்தர் கூட்டத்தில் முக்தர்
முத்துச் சிப்பியில் முத்து போல்
அழகியதாக இருக்கும் படி
பைம்பொன் –
விரஹ சங்கையால் உண்டான வை வரண்யம் சொல்லியிரு
ஒரோ குடங்கைப்
பருகலாம் படி
பெரியன
இங்கனே இருந்து வைத்தும்
பரம்பின கண்கள்
அஸி தேஷிணா -மிளிரும் கண்கள் –
அவ்வளவு ஞானம் இருந்தாலும் -எளிய பாசுரங்கள் கையாலே பருகலாம்
கெண்டைக் குலம்
முக்தமான நோக்கின்
ஞான பரம்பரை இருக்கும்படி
இவையோ வந்து பேர்கின்றவே
இவற்றைக் கண்டாரை இப்படிப் படும் பாட்டை இவை படுவதே
இப்படும் பாட்டோடு ஸஞ்சரியா நின்றனவே
ஸ்வா பதேசம்
பிரிவு என்று ஓன்று உண்டு என்னும் அளவில்
பிரிவு உண்டாய்த்து என்று வெருவும்படியான தமக்கு
யாரோ சிலர் திருக்கண்ண புரம் சென்றார் என்ற பிரசங்கத்தில்
திருமேனி மாறி கண்கள் சிவந்து கண்ணநீர் முத்து அரும்ப
ஆழ்வாருக்கு உண்டான பாகவத விஸ்லேஷ அஸஹத்வத்தைச் சொல்லிற்று
———-
அவதாரிகை –
தலைமகனோடு கலந்து
விஸ்லேஷம் அறியாத படி அதி மாத்ரமாய்ச் செல்லா நிற்க
பொருள் அதிகாரத்தை ஒருவன் வந்து வாசிக்க
அதைக் கேட்டு இருந்ததைக் கொண்டு –
அப்ரதிஷித்த மநுமதம் பவதி -என்று பிரதிஷேதியாமையாலே
அநு மதமாய் இருந்தது என்று கொண்டு
இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே
பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து செல்லுகிறது –
அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-
பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு
தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-
பதவுரை
யாம் இன்று காண்கின்றன–நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன–(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய்–எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
அவிகாராய -ஆனந்தவாஹமாய் இருக்கும் ஞானம் இப்படி விகாரம் அடைந்து துக்கம் அடைவதே
பெரியன காதம் பிரிவு–அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ–பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என–என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க
(அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன–எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன–தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை–கெண்டை மீன்களின் இனமான இக் கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி–(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
(பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு
வந்து பேர்கின்ற–(என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ–இது என்ன வியப்பு!.
வியாக்யானம் –
அரியன –
ஒக்க இருக்கச் செய்தே
கண்ணும் கண்ண நீருமாய் இருந்தபடி என் -என்று கொண்டாடுகிறான் –
கலந்த காலத்திலும் பிரிந்த காலத்திலும் கண்டு அறியோம்-
யாமின்று –
கடலில் குளப்படியும்
ஆயிரத்தில் ஒன்றும் உண்டானால் போலே
இவள் சம்ஸ்லேஷத்துக்கு உள்ளே எல்லாம் உண்டு என்று இருக்க –
சில பெறுதற்கு அரியன இருந்த படி என் -என்கிறான் தலைமகன்
காண்கின்றன-
ஓதல் -காவல் -பூசல் -பரத்தை மாட்டு -என்று சொல்லப் படுகிற
(ஓதல் -ஸ்ருங்கார வித்யை கற்க
பரத்தை மாட்டு
வேசி ஸ்த்ரீகள் பக்கம் போக என்றும்
இவளது ஆனந்த சாகரத்தை மட்டுப்படுத்தி சாத்மிக்க-தன்னுடைய பரத்வ அங்கியை
மாட்டிக் கொண்டு என்றுமாம் )
நாலு வகை யில் பிரிவிலும் -இது கண்டு அறியோம் -என்கிறான் –
இது ஐந்தாவது வகை பிரிவு கூடி இருக்கச் செய்தே பிரியுமோ என்று அதிசங்கை
கண்ணன் விண்ணனையாய்-
நச புன ஆவர்த்ததே -என்னும்படியே அத்தேசத்தில் புக்கார் புறப்படில் அன்றோ
உன்னைக் கிட்டினார் பிரிவது –
அவிகாராய -என்ற தேசத்தை ஒத்து இருக்கிற உனக்கு
இவ் விகாரங்கள் எல்லாம் என் –
பெரியன காதம் பொருட்கோ பிரிவென –
பிரிவு என ஒ பெரியன காதம் –
பிரிவு என்ற மாத்ரத்திலே பிரிந்ததாய்
நெடும் தூரமுமாய் நடுவே மலைகளும் கடல்களுமாய்
ஆளி இயக்கம் அற்று
தூத ப்ரேஷணத்துக்கும் யோக்கியம் இன்றிக்கே இருந்தபடி –
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-
என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,
நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச்செய்தார்.
பொருட்கு –
சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பாக பொருள்களுக்கு பிரியத் தேடினீர் ஆகில்
அவை இங்கே உண்டு -என்கிறது –
ஞாலம் எய்தற்குரியன –
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு -என்கிறபடியே
விசேஞ்ஞர் ஆனவருக்கு அனுபவிக்கலாய் இருந்தபடி –
உபய விபூதியும் விலை என்னலாம் படி இருந்தது -என்கை-
ஒரு முகத்தாலே -நீர் தேடித் போகிறவை -இங்கே உண்டு -என்கிறாள் –
முகத்திலே என்று த்வனி
(ஒரு முகத்தால் -பிரிய நினைந்த -பிரகாரத்தாலே வழியிலே
அனைத்தும் இவள் திரு முகத்திலே உண்டே
ஞாலம் லீலா விபூதி
நித்ய விபூதி க்கு உப லக்ஷணம் )
(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- )
வொண் முத்தும் –
ஆகாரத்தே பட்ட முத்தும் –
பைம் பொன்னுமேந்தி –
பசும் பொன்னாய் இருந்த படி
இவை உண்டாய் இருக்கப் போகையாவது என் என்று
இவற்றைக் கைக் கொள்ளும் -என்று ஏந்தின படி –
ஒரோ குடங்கைப் –
போக்தாவுக்குக் கண்களை சிறாங்கித்துப் பருகலாய் இருந்த படி –
பெரியன-
போக்தாவுக்கு பரிச்சேதிக்கலாம் அத்தனை தான் அவ்வருகாய் இருந்தபடி –
கெண்டைக் குலம் –
கெண்டை-
மௌக்த்யமும்
மதமதப்பும் இருந்தபடி –
குலம் –
ஜாதியாகக் கூடினால் ஒப்புப் போரும் இத்தனை –
இவையோ வந்து பேர்கின்றவே –
அசலமான பதார்த்தம் சலித்த படி
இக் கண்களைக் கண்டார் படும்பாட்டை
கண் தான் பட்ட படி
வந்து பேர்கின்றவே -சேதன சமாதியாலே சொன்ன படி –
ஸ்வா பதேசம் –
இத்தால்
ஆழ்வாருக்கு வைஷ்ணவர்களோடே (கிளைவித் தலைமகன் இங்கு )
கூடி இருக்கச் செய்தே
பிரிவை அதிசங்கை பண்ணி
நோவு படும்படி
பிரிவு பொறாமை -இருந்தபடி –
———-
தாத்பர்யம்
இப்பாசுரத்தில் பாகவத விஸ்லேஷம் ஒரு ஷணமும் பிரியாமையை ஸஹியாத ஆழ்வாரைக்
கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தனம் அர்த்தமாக பிரிந்த நாயகனைக் கண்ட
நாயகியின் அவஸ்தையைக் கண்டு உரைத்த நாயகன் பாசுரமாய் இருக்கிறது
அத்யந்த போக்யமாய் உள்ள ஓ நாயகியே
நான் இன்றைக்கு ஒருநாளும் காணாத அத்புதம் கண்டேன்
சிலர் என்னிடத்தில் பொருளின் பொருட்டு பிரிவதைச் சொல்ல
நான் அவர்களை நிஷேதியாமல் இருக்க
நானும் பிரிந்தேன் என்று எண்ணி அவ்வளவிலேயே
நெடுதூரம் பிரிந்த நாயகி போல் படுகிறாய்
நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன்
உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி
கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து
ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல்
நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே
இது என்ன ஆச்சர்யம்
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply