மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் 1-3-1
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி 1-3-8
ஒருத்தி மதி எலாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே 1-4-3
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாலார்க்கு 1-4-7
தள வேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இளவேறேழும் தழுவிய எந்தாய் ! 1-5-1
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் ! மாதவா ! 1-5-5
கேசவா ! மனை சேர் ஆயர் குல முதலே ! மா மாயனே ! மாதவா !..ஸ்ரீதரா !..என்று நைவன் அடியேனே 1-5-6
ஆக்கை அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை அடியேன் காண்பான் அலற்றுவன் 1-5-7
வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும் தாயோன் 1-5-9
திரு மகளார் தனி கேள்வன் பெருமை உடைய பிரானார் இருமை வினை கடிவாரே 1-6-9
மாதவன் பால் சடகோபன் தீதவமின்றி உரைத்த ஏதமிலா ஆயிரத்து 1-6-11
தனி முதல் எம்மான் கண்ண பிரான் என் அமுதம் சுவையன் திருவின் மணாளன் என் உடை சூழல் உளானே 1-9-1
பூ மகளார் தனி கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே 1-9-3
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர் மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே 1-9-4
நெஞ்சமே !நல்லை நல்லை உன்னை பெற்றால் என் செய்யோம் ? இனி என்ன குறைவினம் ? மைந்தனை மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் 1-10-4
நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி அம் ஜோதியை எம்பிரானை என் சொல்லி மறப்பனோ ? 1-10-9
கானல் மட நாராய் !….நீயும் திரு மாலால் நெஞ்சம் கோட் பட்டாயே ? 2-1-1
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழ தன்னுள் வைத்து மேல் தன்னை மீதிட நிமிர்ந்து கொண்ட மால் தனில் மிக்கும் ஓர் தேவும் உளதே 2-2-3
வாணுதல் இம் மட வரல் உம்மை காணும் ஆசையுள் நைகின்றாள் 2-4-2
திரு இடமே மார்வம் ….ஒரு இடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானே 2-5-2
காம்பணை தோள் பின்னைக்கா ஏறுடன் ஏழ் செற்றதுவும் 2-5-7
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது யாதவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து தீதவங்க கெடுக்கும் அமுதம் செம் தாமரை கண் குன்றம் கோதவம் இலன் கன்னல் கட்டி எம்மான்கோவிந்தனே 2-7-3
என்னை தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் ? என் ஸ்ரீதரனே 2-7-8
ஸ்ரீதரன் செய்ய தாமரை கண்ணன் என்று என்று இரா பகல் வாய் வெரீஇ…. உன்னை என்னுள் வைத்தனை என் இருடீ கேசனே 2-7-9
அணைவது அரவணை மேல் பூம் பாவை ஆகம் புணர்வது இருவர் அவர் முதலும் தானே 2-8-1
புணர்த்த திருவாகி தன மார்வில் தான் சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே 2-8-3
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே 2-8-7
முடி சோதியாய் உனது முக சோதி மலர்ந்ததுவோ ?அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ ? படி சோதி ஆடையோடும் பல்கலனாய் நின் பைம்பொன் கடி சோதி கலந்ததுவோ ? திருமாலே !கட்டுரையே 3-1-1
நின் மாட்டாய மலர் புரியும் திரு வுருவம் மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய் 3-1-4
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய் ! என் சொல்லி யான் வாழ்த்துவனே ? 3-1-6
திரு மறு மார்வன் எங்கோ ?சங்கு சகரத்தன் எங்கோ ? சாதி மாணிக்கத்தையே 3-4-3
அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை பண்கள் தலை கொள்ள பாடி பறந்தும் குனித்து உழலாதார் மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோதம் அலைந்தே 3-5-2
செம் பவள திரள் வாயன் ஸ்ரீதரன் தொல் புகழ் பாடி கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு கட்டு உண்டு உழலாதார் தம் பிறப்பால் பயன் என்னே ? 3-5-4
நம்பனை ஞ்லம் படைத்தவனை திரு மார்பனை உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரியான் தன்னை 3-7-8
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் செம் மின் சுடர் முடி என் திரு மாலுக்கு சேருமே 3-9-6
பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடி போய் காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதல மாய மனிசரை 3-9-8
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் 3-9-8
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்ம்மினோ 4-1-1
செம் மின் முடி திரு மாலை விரைந்து அடி சேர்மினோ 4-1-2
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மோடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் நல அடி 4-2-2
தோளி சேர் பின்னை பொருட்டு எருது எழ தழீ இக் கோளியார் கோவலனார் குட கூத்தனார் தாள் இணை 4-2-5
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதி அம காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள் 4-2-6
மடந்தையை வண் கமலத் திருமாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் 4-2-7
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி யுய்த்தவர் தாள் இணை மேல் 4-2-8
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை கோவை வீய சிலை குனித்தாய் ! குல நல யானை மருப்பு ஒசித்தாய் 4-3-1
மாய பேய் வுயிர் மாய்த்த ஆய மாயனே ! வாமனனே மாதவா ! 4-3-4
உன் உரை கொள் சோதி திரு வுருவம் என்னதாவி மேலதே 4-3-7
செய்ய தோர் ஜாயிற்றை காட்டி ஸ்ரீதரன் மூர்த்தி ஈது என்னும் னையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே ! 4-4-2
திரு உடை மன்னரை காணில் திரு மாலைக் கண்டேன் என்னும் 4-4-8
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான் 4-5-2
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் 4-5-8
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் இசைப்பின்றி நீர் அணங்காடும் இளம் தெய்வம் அன்று இது 4-6-2
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் 4-8-1
மணிமாமை குறைவில்லா மலர் மாதர் உறைமார்வன் 4-8-2
நிறை இனால் குறைவில்லா நெடும் பணை தோள் மட பின்னை பொறையினால் முலை அணைவான் 4-8-4
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே 4-8-10
வண்டார் தண் துழாயான் மாதவன் 5-2-2
மறு திரு மார்வன் அவன் தன பூதங்கள் கீதங்கள் பாடி 5-2-8
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழி ! கடியனே 5-3-4
மின்னு நூலும் குண்டலமும் மார்வில் திரு மருவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே 5-5-2
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று 5-5-10
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல வாயர் கொழுந்துக்கும் கேள்வன் 5-6-11
மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே ! என்றும் புகற்கரிய எந்தாய் ! 5-7-8
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்.அது இது வுது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் 5-10-2
என் கண்கட்க்கு திண கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு வுருவே 5-10-7
திரு வுருவு கிடந்தவாரும் ..என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோறும் கண்ணீர் என் செய்கேன் ? அடியேனே 5-10-8
என் உடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ ! 6-2-1
பரமே இத் திரு அருள்கள் அழகியார் இவ் உலக மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் 6-2-6
கெண்டை ஒண் கண் வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல மாய கோல பிரான் தன செய்கை நினைந்து மனம் குழைந்து 6-4-2
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்திருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம் 6-5-8
பின்னை கொல் ? நிலா மா மகள் கொல் ? திரு மகள் கொல் ? பிறந்திட்டாள் என்ன மாயம் கொலோ ? 6-5-10
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு …இழந்தது சங்கே 6-6-1
என் கண் புனை கோதை இழந்தது கற்பே 6-6-5
திண்ணம் என் இள மான் புகுமூர் திரு கோளூரே 6-7-1
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் இனி 6-7-3
இனி என் சிறு தேவி போய் இனித் தன் திருமால் திரு கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு ஆவி உள் குளிர 6-7-5
தன் திருமால் திரு கண்ணும் செவ் வாயும் கண்டு நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே 6-7-6
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திரு கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய் 6-7-8
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று மந்திரதொன்று உணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே 6-8-10
கோலத் திரு மா மகளோடு உன்னை கூடாதே சால பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ ? 6-9-3
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திரு மாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் 6-9-11
திரு மா மகள் கேள்வா !தேவா சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே ! 6-10-4
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா ! நிகரில் புகழாய் ! உலகம் மூன்று உடையாய் ! என்னை ஆள்வானே ! நிகரில் முனி கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே ! புகல்
ஒன்றில்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10
இவள் திறத்து என் செய்கின்றாயே ? 7-1-2
உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே ! 7-1-5
என் திருமகள் சேர் மார்வனே ! என்னும் என் உடை ஆவியே ! என்னும் நின் திரு வயிற்றால் இடந்து நீ கொண்ட நிலா மகள் கேள்வனே ! என்னும் அன்று உரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய மகள் அன்பனே ! என்னும் தென் திரு வரங்கம் கோயில் கொண்டானே ! தெளிகிலேன் முடிவிவள்தனக்கே 7-1-9
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே 7-1-10
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை அகம் பால் கொண்ட நான் முகனை நின்ற சசி பதியை …காணேனோ ? 7-6-7
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ ? மறப்பிலா என்னை தன் ஆக்கி என்னால் தன்னை உற பல இன் கவி சொன்ன வுதவிக்கே 7-9-9
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு அங்கனே வான் குருகூர் சடகோபன் இங்கனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும் எங்கனே சொல்லினும் இன்பம் பயக்குமே 7-9-11
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ்உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் 7-10-1
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் 7-10-6
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் 8-1-1
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுள் அமுதமே ! அமுதில் பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே ! பின்னை தோள் மணந்த பேராயா ! 8-1-7
மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்க்கின்ற குணங்களை உடையாய் ! 8-1-8
மாலரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலமிட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் 8-2-7
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய மகள் சங்கு சக்கர கையவன் என்பர் சரணமே 8-3-1
வருவார் செல்வார் வண் பரிசாரத்திருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென் ? 8-3-7
நின்றே தாவிய நீள் கழல் ஆழி திருமாலே ! 8-3-8
திருமால் ! நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் ? பேசி என் ? 8-3-9
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான் திருவமர் மார்வன் திரு கடித்தானத்தை மருவி உறைகின்ற மாய பிரானே 8-6-3
சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை அடி சேர் வகை வண் குருகூர் சடகோபன் முடிப்பான் சொன்ன வாயிரத்து இப் பத்தும் சன்மம் விட தேய்ந்து அற நோக்கும் தன கண்கள் சிவந்தே 8-7-11
திருமாலால் அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால் அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே 8-8-11
கரு மாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் திரு மார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடை 8-9-1
பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் 9-2-1
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ விளக்கும் தொழ இருந்து அருளாய் திரு புளிங்குடி கிடந்தானே ! 9-2-3
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை நிலா மகள் பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே 9-2-10
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் 9-3-5
மையார் கருங்கண்ணி கமல மலர் மெல் செய்யாள் திருமார்வினில் சேர் திரு மாலே ! 9-4-1
இந்திர ஜாலங்கள் காட்டி இவ் யேழ் உலகும் கொண்ட நம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் 9-5-5
மூழி களத்து உறையும் மாதரை தம் மார்வகத்தே வைத்தார்க்கு 9-7-6
கொடியேர் இடை கோகனகத்தவள் கேள்வன் வடிவேல் தடம் கண் மடப் பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திரு நாவாய் அடியேன் அணுகப் பெறு நாள் என் நாள் ? 9-8-2
திரு நாவாய் வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா ! 9-8-4
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் 9-8-5
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் ! தேவாசுரம் செற்றவனே ! திருமாலே ! நாவாய் உறைகின்ற நாரண நம்பீ !ஆவா ! அடியேன் இவன் என்று அருளாயே 9-8-7
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் 9-8-10
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திருவாகம் எம் ஆவி ஈரும் 9-9-6
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் 9-9-11
மானை நோக்கி மடப் பின்னை தன கேள்வனை தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் 9-10-4
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை ?அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் 9-10-10
மாய்ந்து அரும் வினைகள் தாமே மாதவ ! என்ன நாளும் ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே 10-2-10
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை வுடையம் ? மீள்கின்ற தில்லை பிறவி துயர் கடிந்தோம் வாள் கெண்டை ஒண் கண் மடப் பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மெல்புனைந்தேனே 10-4-3
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால் திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற தகையான் சரணம் தமர்கட்கோர் பற்றே 10-4-10
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே 10-5-6
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாராவே 10-5-7
திகழ்கின்ற திருமார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் சேர்விடம் தண் வாட்டாறு 10-6-9
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே 10-7-6
திருமால் இரும் சோலை மலையே திரு பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே 10-7-8
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் குருமா மணி உந்து புனல் பொன்னி தென் பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே 10-8-1
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் கதிரவர் அவர் அவர் கை நிரை காட்டினர் அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே 10-9-4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேத நல வாயவர் வேள்வியுள்மடுத்தே 10-9-5
குடியடியார் இவர் கோவிந்தன் தனகென்று முடிஉடை வானவர் முறை முறை எதிர் கொள்ள கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே 10-9-8
மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளை வந்து அந்தோ ! 10-10-2
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் புனக்காயா நிறத்த புண்டரீக கண் செங்கனி வாய் உனக்கேற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ ! 10-10-6
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ !நீல வரை இரண்டு பிறை கவ்வி நிம்ர்ந்தது ஒப்ப கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் !நீல கடல் கடைந்தாய் ! உன்னை பெற்று இனி போக்குவனோ ? 10-10-7
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply