உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்..மயர்வற மதி நலம் அருளினன் யவன் அவன்..அயர்வறு அமரர்கள் அதிபதி யவன் அவன்..துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே-1-1-1
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரன் இறை ஆயிரத்து இவை பத்தும் வீடே 1-1-11
மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் 1-3-1
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது நலமே 1-3-8
பெரும் நிலம் கடந்த நல அடி போது 1-3-10
முன் செய்த முழு வினையால் திரு அடி கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ ? விதி இனமே 1-4-2
அருளாத திரு மாலர்க்கு என் பிழைத்தாள் திரு அடியின் தகவினுக்கு என்று ஒரு வாய் சொல் என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே 1-4-7
நாடி நாள் தோறும் நாராணன் தன வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று 1-4-9
திசைகள் எல்லாம் திரு அடியால் தாயோன் எல்லா எவ் உயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே 1-5-3
வானோர் சோதி மணிவண்ணா மதுசூதா நீ அருளாய் உன் தேனே மலரும் திரு பாதம் சேருமாறு வினையேனே 1-5-5
நீள் கடல் சூழ் இலங்கை கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலை கழிமினே 1-6-7
நாதன் ஜாலம் கொள் பாதன் என் அம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே 1-8-10
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாள் இணை மேலும் புனைந் தண் அம் துழாய் உடை அம்மான் 1-9-7
நெற்றி உள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி கற்றை துழாய் முடி கோல கண்ண பிரானை தொழுவார் ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் மற்றை அமரரும் எல்லாம் வந்து ஏன் உச்சிஉளானே 1-9-10
இவையும் ஓர் பத்து எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே 1-9-11
பொருமா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழ உலகும் தொழ ஒரு மாணி குறளாகி நிமிர்ந்த அக் கருமாணிக்கம் என் கண் உலதாகுமே 1-10-1
உலகு ஏழும்ஓர் மூவடி கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே 1-10-5
தென் இலங்கை வூட்டினான் தாள் நயந்த யாம் உற்றது உற்றாயோ ? வாழி கணை கடலே ! 2-1-3
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழ்ந்து நொந்தாயே 2-1-8
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தனில் மிக்கும் ஓர் தேவும் உளதே 2-2-3
கள்வா! எம்மையும் ஏழ் உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா ! என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள் வூர்தி கழல் பணிந்து யேத்துவரே 2-2-10
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே 2-3-3
தனியேன் வாழ் முதலே ! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் ! உன பாதம் சேர்ந்தேனே 2-3-5
ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி சூட்டல் ஆகும் அந்தாமமே 2-4-11
செம் தாமரை தடம் கண் செம்கனி வாய் செம்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே 2-5-1
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் 2-5-3
அப் பொழுதை தாமரை பூ கண் பாதம் கை கமலம் 2-5-4
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம் பேரார நீள் முடி நாண் பின்னும் இழை பலவே 2-5-5
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்ப திரு வெள்ளம் யான் மூழ்கினேன் 2-6-8
விட்டிலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் விட்டிலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு 2-7-5
உள்ளி பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே மருவி தோலும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே 2-7-7
வாமனன் என் மரகத வண்ணன் தாமரை கண்ணினன் காமனை பயந்தே என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனாய் பிறவி துழுதி நீங்க என்னை தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்ஸ்ரீதரனே 2-7-8
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு 2-8-6
எம்மா வீட்டு திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை 2-9-1
எந்தாய் எய்தா நின் கழல் யான் எய்த ஜான கை தா கால கழிவு செய்யேலே 2-9-2
ஐயர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த அருள் செய் எனக்கே 2-9-3
வாராய் உன் திரு பாத மலர் கீழ் பேராதே யான் வந்து அடையும் படி தாராதாய் 2-9-7
உன் பொன் அடி சேர்த்து ஒல்லை வேறே போக என்ஜான்றும் விடலே 2-9-10
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ 3-1-1
கட்டு உரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா 3-1-2
அமரர் கோன் வழி பட்டால் மா சூணா வுன பாத மலர் சோதி மழுங்காதே 3-1-8
தொன் மா வால் வினை தொடர்களை முதலரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது என்ஜான்று கொலோ 3-2-2
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே 3-2-4
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா ! நின் நல பொன் சோதி தாள் நணுகுவது எஞ்சான்றே ? 3-2-5
அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் தாவிய அம்மான் 3-2-9
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து ஆயன் நாள் மலராம் அடி தாமரை வாய் உள்ளும் மனதுள்ளும் வைப்பார் கட்கே 3-3-9
வைத்த பாம்பணையான் திருவேங்கடம் மொய்த்த சோலை மாய் பூந்தடம் தாழ்வரே 3-3-10
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை 3-3-11
வானவர் தம்மை ஆளும் அவனும் நான்முகனும் சடை முடி அண்ணலும் செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே 3-6-4
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே ? 3-6-10
எந்தை பிரான் தன்னை பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆள் உடையார்களே 3-7-3
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களை கொண்டு போய் தன்மை பெறுத்தி தன்தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை 3-7-7
கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே 3-8-9
பொருந்திய மா மருதின் இடை போய எம் பெரும்தகாய் உன் கழல் காணிய பேதுற்று வருந்தி நான் வாசக மாலை கொண்டு 3-8-10
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் 3-9-8
பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்மினோ 4-1-1
திருமாலை விரைந்து அடி சேர்மினோ 4-1-2
அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ…கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினைமினோ 4-1-3
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ 4-1-4
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குருகுமினோ 4-1-9
உய்ய புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல் கொய் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் குற்றேவல் …கற்பவர் ஆள் துயர் போய் உய்யற் பாலரே 4-1-11
ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் தாள் இணை மேல் அணி தண் அம துழாய் என்றே மாலுமால் 4-2-1
நல அடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் 4-2-2
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் 4-2-3
பிரான் பரன்பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஒதுமால் 4-2-4
கோவலனார் குடக்கூத்தனார் தாள் இணை மேல் அணி தண்
அம் துழாய் என்றே நாளு நாள் நைகின்றதால் 4-2-5
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் பாதங்கள் பைம்பொன் துழாய் என்றே ஒதுமால் 4-2-6
மடந்தையை வண் கமலதிரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாள் இணை மேல் வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் 4-2-7
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்புஎறி உய்த்தவர் தாள் இணை மேல் வம்பவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால் 4-2-8
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே 4-2-10
மெலியு நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல் மலி புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் 4-2-11
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே 4-3-6
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா! குரை கழல் கை கூப்புவார்கள் 4-3-7
உய்யும் உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல் செய்ய தாமரை பழனத் தென்னன் குருகூர் சடகோபன் பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ஊடே 4-3-11
தண் தாமரை சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேர்க்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே 4-5-8
மதுவார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே 4-6-3
கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே 4-6-9
தாவி வையம் கொண்ட எந்தாய் 4-7-3
கண்டு கொண்டு என் கைகளால் ஆர நின் திரு பாதங்கள் மேல் எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஜாளத்துள் உள்ளே வண் துயின் கண்ணி வேந்தே ! வந்திடகில்லாயே 4-7-8
கண்ணாளா!கடல் கடைந்தாய்! உன கழல்கே வரும் பரிசு தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாமாறே 4-9-1
பண்டே போல் கருதாது உன் அடிக்கே கூய் பணி கொள்ளே 4-9-3
வள்ளலே! மணிவண்ணா !உன கழல்கே வரும் பரிசு வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே 4-9-4
கூட்டரிய திருவடிகள் என்ஜான்று கூட்டுதியே ? 4-9-8
கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே 4-9-9
ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே 4-9-10
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன் திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்துஒன்றுமினே 4-9-11
ஊர்ந்த சகடம் உதித்த பாதத்தன் 5-3-3
அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் 5-4-10
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு நான் ஓன்று இலேன் எனது ஆவியும் உனதே 5-7-10
தெய்வ நாயகன் நாரணன் திரு விக்ரமன் அடி இணை மிசை கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் செய்த ஆயிரத்துள் இவை தண் ஸ்ரீவர மங்கை மேய பத்து உடன் வைகல் பாட வல்லார் வானோர்க்குஅமுதே 5-7-11
சென் நாள் என் நாள்? அன் நாள் உன தாள் பிடித்தே செல காணே 5-8-3
செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செம் தாமரை கண்ணா தொழுவன் யேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய் 5-8-5
என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் வூழ் கண்டு இருந்தே தூரா குழி தூரத்து எனை நாள் அகன்று இருப்பன் ? 5-8-6
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே ! 5-8-7
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் பொது இளையாது உன தாள் ஒருங்கே பிடித்து போத இசை நீயே 5-8-8
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே 5-8-9
பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட குருகூர் சடகோபன் குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்கே 5-8-11
தண் திருவல்ல வாழ் நீடுறை கின்ற பிரான் கழல் காண்டும் கொள் நிச்சலுமே 5-9-3
பாதங்கள் மேல் அணி பூதொழ கூடும் கொல் ? 5-9-7
திருவல்ல வாழ் நீடுறை கின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே 5-9-8
நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த நாமம்கள் ஆயிரத்துள் 5-9-11
பேர்ந்து ஓர் சாடிற செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் …என் நெஞ்சை உருக்குங்களே 5-10-3
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்று ஆழ கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈர் அடியால் முடித்து கொண்ட முக்கியமும் ..என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துஉருகும் 5-10-9
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள் தோறும் ஏக சிந்தையனாய் குருகூர் சடகோபன் மாறன் ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் 5-10-11
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.
Leave a Reply