திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்-திருமங்கை ஆழ்வார் ..

மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த-1-2-5

இமையோர்கள் பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகை 1-2-8

ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க 1-4-1

அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி 1-4-7

மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன் சாள கிராமம் அடை நெஞ்சே 1-5-6

வந்து உன் திரு அடி அடைந்தேன் நைமிசாரணியதுள் எந்தாய் 1-6-1..

பாவினார் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து ஏன் நாவினால் வந்து உன் திரு அடி அடைந்தேன் நைமிசாரணியதுள் எந்தாய் 1-6-8

தான் உடை குரம்பை பிரியும் போது  உன் தன சரணமே சரணம் என்று இருந்தேன் 1-6-9

பைம் கண் ஆனை கொம்பு கொண்டு  பத்திமையால் அடி கீழ் செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே 1-7-1

என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான் 1-8-3

கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே 1-10-4

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தார்க்கு இடம் மா மலை ஆவது நீர் மலையே 2-4-1

அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து  அரியாய் நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர் மலையே 2-4-2

தொண்டையார் தாம் பரவும் அடிஇனான் 2-5-9

கடல் மல்லை தல சயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி ஒலி வல்லார் முடி கொள் நெடு மன்னர் தம் முதல்வர் முதல் ஆவரே 2-6-10

நின் தாள் நயந்து இருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட எந்தை எந்தை பிரானே 2-7-1

சந்தணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையான் 2-10-2

சேவடி கை திரு வாய் கண் சிவந்த ஆடை செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை 2-10-9

மூவராகிய ஒருவனை மூ உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை தேவர் தானவர் சென்று சென்று இரைஞ்ச 3-1-10

பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடி போது அணைவான் விருப்போடு இருப்பீர் 3-2-3

அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் 3-2-4

ஆயர் தங்கள் கோவை நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை கழல் கூடும் குறிப்பு உடையீர் ….திரு சித்ர கூடம் சென்று சேர்மின்களே 3-2-8

ஒலி மாலை வல்லார் பாரார் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும் படி வாழ்வர் தாமே 3-2-10

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் 3-4-1

எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் 3-4-2

வாணன் திண் தோள் நேர்ந்தவன் தாள் அணைகிற்பீர் 3-4-3

நெஞ்சு இடந்து குருதி யுக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் 3-4-4

செவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கொண் தாள் அணைவீர் 3-4-5

வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைவீர் 3-4-6

தோள் வேந்தன் திரு அடி சேர்ந்து உய்கிற்பீர் 3-4-7

மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்3-4-8

திருவை மார்பில்  கலந்தவன் தாள் அணைகிற்பீர் 3-4-9

நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் 3-5-4

நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் 3-5-5

ஓ மண் அளந்த தாளாளா தன குடந்தை நகராளா  வரை எடுத்த தோளாளா 3-6-5

கண்டவர் தம் மனம் மகிழ மா வலி தன வேள்வி களவில் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்..அரி மேய விண்ணகரம் வணங்கு நெஞ்சே 3-10-5

சாடு போய் விழ தாள் நிமிர்த்து ஈசன் தன படையோடும் கிளையோடும் ஓட வாணனை ஆயிரம் தோளும் துணித்தவன்  உரை கோயில் ..வண் புருடோத்தமமே 4-2-5

அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதர கால் நிமிர்த்து அருளிய கண்ணன் உறை கோயில் ..வண் புருடோத்தமமே 4-2-6

வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன அருள் மாரி 4-2-10

வசை அறு குறளாய் மா வலி வேள்வி மண் அளவிட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை 4-3-4

தாவளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு நாவளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் 4-6-1

தொண்டர் பரவ சுடர் சென்று அணவஅண்டத்து அமரும் அடிகளூர் ..கூடலூரே 4-7-5

மூ எழு கால் கொன்ற தேவா நின் குறை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள் புரியே  5-3-1

ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-1

எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-2

உன் அடியேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-3

அடியேன் அஞ்சி வந்து நின்அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-4

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் ….எனக்கும் ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-5

நின் சரண் என சரனாய்…நின் திரு அடி பிரியா வண்ணம் எனக்கும் அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-6

ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-7/8

உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு அரங்கத்தானே 5-8-9

பொய் இலன் மெய்யன் தன தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் 5-9-1

நக்க அரி உருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கர செல்வன் தென் பேர் தலைவன் தாள் அடைந்து உய்ந்த்தேனே 5-9-5

நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி  எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எரிந்து வந்து செறிந்தேன் நின் அடிக்கே திரு விண்ணகர் மேயவனே 6-2-4

துறந்தேன் ஆர்வ செற்ற சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திரு மாலே 6-3-2

ஈசன் தந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் 6-6-2

அம்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்ப்பீர்..திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-4

ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடி கீழ்எய்த கிற்ப்பீர்..திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே 6-6-7

மா வலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே 6-8-1

முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ உலகும் பலி திரிவோன்  இடர் கெடுத்த திரு வாளன் இணை அடியே அடை நெஞ்சே 6-9-1

பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாறும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே 6-9-2

மூ உலகோடு அளை வெண்ணெய் உண்டான் தன் அடி இணையே அடை நெஞ்சே 6-9-3

மன்றார குடமாடி வரை எடுத்து மழை தடுத்த குன்றாறும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே 6-9-4

பகல் கரந்த சுடர் ஆழி படையான் இவ் வுலகேழும் புக கரந்த திரு வயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே 6-9-5

மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திரு மார்பில் மன்னத்தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே 6-9-6

கார் தழைத்த திரு உருவன் கண்ண பிரான் விண்ணவர்கோன் தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே 6-9-7

தடம் சோலை திரு நறையூர் மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே 6-9-8

பிறையாரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த இறையாகி நின்றான் தன் இணை அடை நெஞ்சே 6-9-9

மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேழலாகி உலகை ஈர் அடியால் நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாரயணமே 6-10-2

எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கை போது கொண்டு இறைஞ்சி கழல் மெல் வணங்க  நின்றாய் இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் நல போது வண்டு கிண்டும் நறையூர் நின்றநம்பியோ 7-2-8

ஆங்கு வெம் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை அன்ன பொன்னார் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற வேம்கடத்து அரியை பரிகீறியை வெண்ணெய் உண்டு உரலின் இடை ஆப்புண்ட தீம் கரும்பினை தேனை நல பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5

செல்வ தண்   சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே 7-4-1

வண் சேறை வான் உந்து கோயில் மேய எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே 7-4-2

தாதொடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே 7-4-3

சந்த பூ மலர் சோலை தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே 7-4-5

திரு அடியே துணை இலேன் சொல்லுகின்றேன் 7-4-6

தண் சேறை எம்பெருமான் திரு அடியை சிந்தித்தேற்கு என் ஐஅறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே 7-4-7

மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி இனானை….தண் சேறை அம்மான் தன்னை கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும் காலே 7-4-8

என்மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா சந்தோகா  பெளழியா தைத்ரியா சாம வேதியனே நெடு மாலே அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்றஅம்மானே 7-7-2

பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்றஅம்மானே 7-7-3

கண்டேன் நான் கலி யுகத்தன் தன்மை கருமமாவதும் ய்ர்ன் தனக்கு அறிந்தேன் அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்றஅம்மானே 7-7-5

கிரேத திரேத துவாபர கலி யுகம் இவை நான்கும் முன் ஆனாய் ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்றஅம்மானே 7-7-6

கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலை பிழைத்து குடி போந்து  உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனை பணி ஆண்டுகொள்எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்றஅம்மானே 7-7-8

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் ..சிறு புலியூர் சல சயனதுள்ளும் எனது உள்ளது உள்ளும் உறைவாரை உள்ளீரே 7-9-1

ஏறி நீர் செம் தாமரை மலரும் சிறு புலியூர் சல சயனத்து அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள் புரியே 7-9-5

சிறு புலியூர் சல சயனம் தொழு நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே 7-9-6

அடி தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் ….கண்ண புரத்து அம்மானை கண்டாள் கொலோ 8-1-5

அவ் அரத்து அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்….கண்ண புரத்து அம்மானை கண்டாள் கொலோ 8-1-7

தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யமா  கண்டு தான் கண்ண புரம் தொழ போயினாள் -8-2-8

வேத முதல்வன் விளங்கு புரி நூலன் பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி காதன்மை செய்யும் கண்ண புரத்து எம்பெருமான்8-4-2

காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ண புரம் தொழுதுமே 8-6-8

கய மிடை கண புரம் அடிகள் தம் இடமே 8-7-1

கண மலி கண புரம் அடிகள் தம் இடமே 8-7-2

கயல் துளுகண புரம் அடிகள் தம் இடமே 8-7-3

காதல் செய் கண புரம் அடிகள் தம் இடமே 8-7-4

கண்டவர் கண புரம் அடிகள் தம் இடமே 8-7-5

எழுவிய கண புரம் அடிகள் தம் இடமே 8-7-6

கருதிய  கண புரம் அடிகள் தம் இடமே 8-7-7

கடி புல்கு கண புரம் அடிகள் தம் இடமே 8-7-8

கல மனு கண புரம் அடிகள் தம் இடமே 8-7-9

மலி புகழ் கண புரம் உடைய எம் அடிகளை….. கலியன தமிழ் இவை விழுமிய விசையினோடு ஒலி சொலும் அடியவர் உரு துயர் இலரே8-7-10

ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது 8-10-6

மன்னவன் பெரிய  வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழ் உலகும் ஈர் அடியாக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் 9-1-5

முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகி பொன் பயந்தேன் 9-4-2

அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள் தம் கோயில் 9-8-3

திரு மால் இரும் சோலை நின்றான் கனை கழல் காணும் கொலோ 9-9-2

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானமும் மண் அகமும் அளந்த திரி விக்கிரமன் 9-9-5

சகடு உதைத்த கரு மாணிக்க மலையை 9-9-7

கற்றினம் தோறும் மறித்து கானம் திரிந்த களிறே 10-4-9

கள்ள குழவியாய் காலால் சகடத்தை தள்ளி உதைதிட்டு தாயாய் வருவானை 10-5-9

நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயராய எல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த்த பிரான் 10-6-5

கருள கொடி ஓன்று உடையீர் தனி பாகிர் உருள சகடம் அது உறக்கில் நிமிர்தீர் 10-8-3

மன்றில் மலிந்து கூத்து வந்தாடி 10-9-2

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன் ஆர் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் 10-10-9

பொருந்து மா மரம்   ஏழும் எய்த புனிதனார்  திருந்து சேவடி உஎன் மனத்து நினை தொறும் கரும் தன மா கடல் கங்குலார்க்கும் அது அன்றியும் வருந்த வாடை வரும் இதற்க்கு இனிஎன் செய்கேன் 11-2-4

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து  ஓர் அடிக்கும் எய்தாது மண் என்று இமையோர் தொழுது இறைஞ்சி கை தாமரை குவிக்கும் கண்ணன் என்கண்ணனையே 11-3-6

நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் அன்னம் சேர் கானல் அணி ஆலி கை தொழுது முன்னம் சேர் வல் வினைகள் போக முகில் வண்ணன் பொன் அம்சேர்  சேவடி மேல் பொது அணிய பெற்றோமே 11-3-9

வெம் திரள் வாணன் வேள்வி இடம் எய்தி அங்கு ஓர் குறளாகி மெய்ம்மை உணர  செம் தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே 11-4-5

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் வெல்லத்தான் வேங்கடத்தான் 11-5-10

திரு வயிற்றில் வைத்து உம்மை உய்ய கொண்ட கனி களவத் திரு வுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே 11-6-4

விழுங்கி உய்ய கொண்ட கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை என்னாத போதெல்லாம் இனியவாறே 11-6-7

நீள் வான் குறள் உருவாய் நின்று இரந்து மா வலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை கேளா செவிகள் செவி அல்லகேட்டாமே 11-7-2

கள்ளார் துழாயும் கண வலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன் அடிக்கு என்று உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே 11-7-6

மெய் நின்ற பாவம் அகல திரு மாலை கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி கை நின்ற வேல் கை கலியன் ஒலி ..இவை பாடி ஆடுமினே 11-7-10

தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடி பணியுமாறு  கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே-திரு குறும் தாண்டகம்-11

நாளும் தே மலர் தூவி ஏத்தும் சேவடி செம் கண் மாலை மான வேல் கலியன் சொன்ன வன் தமிழ் மாலை ..வல்லார் ஒளி விசும்பு ஆழ்வார் தாமே திரு குறும் தாண்டகம்-20

ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமர் சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுது நின்ற எந்தை மலர் புரியும் திரு அடியே வணங்கினேனே -திரு நெடும் தாண்டகம்-5

நீரகத்தாய் ..பேரகத்தாய் பேராது எண் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திரு அடியே பேணினேனே-திரு நெடும் தாண்டகம்-8

கார் வண்ணம்  திரு மேனி கண்ணும் வாயும் கை தலமும் அடி இணையும் கமல வண்ணம்-திரு நெடும் தாண்டகம்-18

மை வண்ண நறும் குஞ்சி …கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அகதே -திரு நெடும் தாண்டகம்-21

நைவளம் ஓன்று ஆராயா நம்மை  நோக்கா ….எண் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அணைய-திரு நெடும் தாண்டகம்-22

மூவடி நானிலம் வேண்டி …ஒரு முறை ஈர் அடி மூ உலகு அளந்தானை …நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலரன அம கையின் முப் பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை..நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோவினையே-திரு வெழு கூற்று இருக்கை

ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்..ஓர் ஆயிரம் பண வெம் கோவியல் நாகத்தை வாராய் எனக்கென்று மற்று அதன் மத்தகத்து சீரார் திரு வடியால் பாய்ந்தான்..பேர் வாமனன் ஆகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் –சிறிய திரு மடல்

நில மங்கை தன்னை  முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை …அடி இணையை தன உடைய அம கைகளால் தான் தடவ தான் கிடந்தது ஓர் உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை ….கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் மன்னன் ராமன் பின் வைதேகி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்திலளே….மேல் எடுத்த சூழ் கழல் கால் பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர்மேல் சிலும்ப..பின் ஓர் அரி உருவமாகி எரி விழித்து கொள் நவிலும் வெம் சமத்து கொல்லாதே வல்லாளன்  மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து தன் உடைய தாள் மேல் கிடாத்தி அவன் உடைய பொன் அகலம் வள்ளுகிரால் போழ்ந்த்து புகழ் படைத்த மின் இலங்கும் ஆழி படை தடக்கை வீரனை …தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் மன்னும் குறள் உருவின் மாணியாய் மாவலி தன் பொன் இயலும் வேள்வி கண் புக்கு இருந்து போர் வேந்தர் மண்ணை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி என் உடைய பாதத்தால் யான் அளப்ப  மூவடி மண் மன்னா தருக்க என்று வாய் திறப்ப மற்று அவனும் என்னால் தரப்பட்டது என்றலுமே அத துணை கண் மின்னார் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த பொன் ஆர் கனைகழல் கால் ஏழ உலகும் போய் கடந்து அங்கு ஒன்னா அசுரர் துளங்க செல நீட்டி  மன்னு இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து தன் உலகம் ஆக்குவித்த தாளானை ..கொன் நவிலும் கூத்தனாய் பெயர்த்தும் குடமாடி என் இவன் ..பெரிய திரு மடல்

திருமங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading