நீதியால் வணங்கு பாத நின்மலா
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத
நடந்த கால்கள் நொந்தவோ
அன்று பார் அளந்த பாத போதை ஒன்றி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருகிலாத வண்ணமே
புண்டரீக பாத புண்ய கீர்த்தி
நின்மலன் நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று
கழற்கு ஆசை யாம் அவர்க்கு அல்லால் அமரர் ஆகலாகுமே
வேங்கடம் அடைந்த மால் பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
புலன் கழல் விட்டு விள்விலாத போகம்
தன கழற்கு அன்பு உறைக்க வைத்த நாள்
பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து
சாடு சாடு பாதனே
வானவர் கற்ற பெற்றியால் வணங்கு பாத
நின் இலங்கு பாதம் அன்றி மற்று ஓர் பற்றிலேன் எம் ஈசனே
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே விரும்பி நின்று இறைஞ்சு வேற்கு இரங்கு அரங்க வாணனே
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாது இருந்த நீ வரம் செய் புண்டரீகனே
பெறற்கு அறிய நின்ன பாத பத்தியான பாசனம் பெறற்கரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைபதாக நீ நினைக்க வேண்டுமே
நின்ன பொற் கழல் தொடர்ந்து விள்விலாதது ஓர் தொடர்ச்சி நல்க வேண்டுமே
பாத போதினை புல்லி உள்ளம் விள்விலாது பூண்டு மீண்டது இல்லையே
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு
படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் மார்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீறாடி தான் காண மாட்டாத தார் அகல சேவடியை யான் காண வல்லேற்க்கு இது
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
கடி கமல நான் முகனும் கண் மூன்றத்தானும் அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம் பரிந்து படு காடு நிற்ப
கடை நின்று அமரர் கழல் தொழுது .நாளும் இடை நின்ற வின்பத்தர் ஆவர்
புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே ..நின் அடியை யார் வோத வல்லார் அவர்
நின் தாள் பார்த்து உழி தருவேன்
திறம்பேன்மின் கண்டீர் திரு அடி தன நாமம்
பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை கண்டு
இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை அடைவோம் என்று
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திரு அடிகளே சரணம்..
ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ ஜீயர் திரு அடிகளே சரணம்.
Leave a Reply