ஸ்ரீ திவ்ய பிரபந்தத்தில் திவ்ய திரு அடிகள்-ஸ்ரீ பெரியாழ்வார்

உன் செவ்வடி செவ்வி  திரு காப்பு

அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

பாத கமலங்கள் காணீரே

எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட்டு இருந்தவாறு காணீரே

இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும் கணை கால் இருந்தவாறு காணீரே

யசோதை முன் சொன்ன திரு பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த
இருபதோடு ஒன்றும் உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவார் தாமே

மணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ

உலகம் அளந்தானே தாலேலோ

சிறுமையின் வார்த்தையை மாவலி இடை சென்று கேள்

தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா

அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்

தடம் தாள் இணை கொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ

தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ

தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ

கருமலை குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல் ….தன தம்பி ஓட பின் செல்வான் தளர்நடை நடவானோ

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள் அடி பொறித்து அமைந்த இரு காலும் கொண்டு
அங்கு எழுதினால் போல் இலச்சினை பட நடந்து…காமர் தாதை தளர்நடை நடவானோ

கள்ள சகடு கலக்கு அழிய பஞ்சி அன்ன  மெல் அடியால்

மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப

தள்ளி தளர் நடை இட்டு

ஓர் அடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே தாவடி இட்டான்….தரணி அளந்தான்

கஞ்சனை காய்ந்த கழல் அடி

பொன் அடி நோவ புலரியே கானில் கன்றின் பின்

குடையும் செருப்பும் கொடாதே ..  கால் அடி நோவ கன்றின் பின்

பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே

மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி

உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உய்ந்து காட்ட

என் சென்னி திடரில் பாத இலச்சினை வைத்தார்

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading