திருக் கண்ண புரம் – கலியன் அனுபவம்..

பெண் தன்மை அடைந்து தான் பேச்சு பேச முடியாமல் தாய் பாசுரமாக அருளுகிறார்..
என் பெண்  அந்த எம்பெருமான் ஸ்வரூபத்தையும் பார்க்கவில்லை ,
தன் ஸ்வரூபத்தையும் பார்க்கவில்லை, 
நான் சொல்லும் ஹிதமும் கேட்க்கவில்லை ..
ஆகையால் இவள்  திரு கண்ண புரத்து எம்பெருமானை சேவித்து இருப்பாள் போலும்..
அவன் ஆஸ்ரிதர்களின் ஸ்வரூபத்தை அழிக்கும் சீல குணத்தனன்..
எம்பெருமான் ஆயுதங்களை ஆபரணங்களாக அனுபவித்துக்கொண்டு இருக்கும் பரகால நாயகி “எற்றே காண் “என்று முன்னிலையாக பேசுகிறாள்..
அர்ச்சையில் ஊடூவதும் மடல் ஏறுவதும் இன்னார் என்று அறியாமல் தவிப்பதும் இவர் ஒருவருக்கே உரியது..
நூறு பாசுரம் பாடி தனது ஆற்றாமை தீர்த்து கொள்கிறார் ..வாய் வெருவி திரு கண்ண புரம் என்கிறாள்..

இரண்டாம் பதிகத்தில் நேராக தாயார் பேசுகிறாள் ..
“நீரோ தெள்ளியீர் சர்வஞ்ஞர்  – தேவாதி தேவர் பொன் நிற மேனி உடையவர் ..ஆகையால் அனைவராலும் விரும்ப படுகிறீர் ..
என் பெண் வளை கொள்வது தகுதியோ ..என் மகள் ஆத்மா அபகார கள்வி இல்லையே ..இவள் கண்ண புரம் தொழுதாள் அவ்வளவே ..
இப்படியும் ஒரு பெண் பிள்ளையை கொலை செய்யலாமா” ..
அரையர் சேவையில் ஓ படுகொலை படுகொலை படுகொலை என்று சேவிப்பார்கள்..
குகப் பெருமாள் உபகாரமாக கொடுக்க நான் கொடுக்கப் பிறந்தோம்- கொள்ளப் பிறந்தோம் அன்று என்று அருளி செய்தீர் ..
ஆண் பிள்ளைகள் இசைந்து கொடுத்ததை கொள்ளாத நீர் பெண் பிறந்தார் பொருளை வலிய கவர்ந்து கொள்ளுதல் என்ன தகுதி?..என்கிறாள் ..
ந தே அநுரூப நின் சாயை அழிவு கண்டாய் ..உன் பெருமைக்கு சேராது காண் என்கிறாள்..

மூன்றாம் பதிகம் நம் ஆழ்வார் மாலுக்கு பதிகம் -6-6-போல
இழந்தது சங்கே நிறமே பீடே பண்பே கற்பே தோற்றது மெய்யே,இழந்தது சாயே மாண்பே ,தோற்றது பொற்பே
இழந்தது கட்டே..போல தான் இழந்ததை அருளுகிறார்..
நம் ஆழ்வார் தன் பிரபந்தத்தை”இன்ப மாரி ” என்றார்..
இவர் தன்னையே “அருள்மாரி “ஆக்கிக் கொண்டார்..
அவர் “என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து “என்றார்..
இவர் “இரும் தமிழ் நூல் புலவன் ” என்றார்..அடி ஒற்றி அமைந்த பிரபந்தம்..

நான்காம் பத்தில் தும்பிகளை வண்ண நறும் துழாய் பரிமளம் கொண்டு வந்து வூத சொல்கிறார் ..
அவன் சம்பந்த வஸ்துவின் சம்பந்தம் பெற ..பாகவத சம்பந்தம் பெற்று தரிக்க..

ஐந்தாம் பத்தில் ஆய்ச்சிகள் அனைவரும் பட்ட பாட்டை இவள் ஒருத்தியே பட்டதாக அருளுகிறார்..
திருத்துழாயில் ஆசை பட்டு சென்ற நெஞ்சமும் அங்கே தங்கி விட்டதாம் ..துணை யாரும் இல்லை..
வெம் கதிரோனும் தேரோடு போய் மறைந்தான் ..
பிள்ளை உறங்காவல்லி தாசரும் பரம பதிக்க -பொன் நாச்சியாரும் இந்த பாசுரம் அருளி கொண்டே திரு நாடு எழுந்து அருளினாராம்..
ததீய விச்லேஷத்தில் சரீர விச்லேஷம் பிறக்கும் படி ததீய பிரேமம்..

ஆழ்வாரைத் தேற்ற தொண்டீர் உய்யும் வகை கண்டேன் என்று களித்துப் பேசுகிறார்..
ஏழாம் பத்தில் இன்ப மிகு ஒலி மீண்டும் மீண்டும் சேவிக்கப் பண்ணும்..

எட்டாம் பத்தில் அவதாரங்களின் அடைவு அனுபவம்.. 

ஒன்பதாம் பத்தில் அவன் ஒருவனுக்கே உரியவன் என்று திரு மந்த்ரார்த்த உறுதியை அருளுகிறார் ..

அடுத்து வண்டார் பூ  மா மலர் மங்கை மணம் நோக்கம் உண்டான் என்று மிதுனத்தில் கைங்கர்யம் அருளி த்வையத்தின் அர்த்தத்தை அருளுகிறார்-

உற்றத்தும் உன் அடியார்க்கு அடிமை என்று பாகவத சேஷத்வத்தை உணர்த்தி நமக்கு நல் வழி காட்டுகிறார்..

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்..
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading