சாதன சப்தகங்கள்-

சாதன சப்தகங்களான விவேகம்‌, விமோகம்‌ , அப்யாஸம்‌ , க்ரியை , கல்யாணம்‌ , அநவஸாதம்‌ , அநுத்தர்ஷம்‌ என்கிற உபாஸந-உபயோகி களான தர்மங்களில்‌ கல்யாண ஸப்த வாச்யமான ஸத்யம்‌ , ஆர்ஜவம்‌ தயை தாநம்‌ , அஹிம்ஸை , அநபித்யை (நிஷ் பல சிந்தை யின்மை) என்கிற தர்ம குணங்களில்‌ ஸ்திரமான நிஷ்டையை உடையவன்‌ மாமுநிகளுடைய அடியவன்‌ . கல்யாணம்‌ என்பது: ஸாதந ஸப்தகம்‌ அனைத்தையுமே உப லக்ஷண முறையில்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌ –

தல்லப்‌திர்‌ விவேக விமோக அப்‌யாஸ-க்ரியா-கல்யாண :அநவஸாத -அநுத்‌தர்ஷேப்ய : ஸம்பவாந் நிர்வசநாச் ச –என்னும்‌ வாக்யகாரருடைய வாக்யத்தின் படி ஸ்வாமி எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷ்யத்தில்‌ லகு ஸித்தாந்த ப்ரகரணத்தில்‌ ஸாதந-ஸப்தகத்தை – ப்ரஹ்மவித்யா நிஷ்டனுக்கு ( பக்தி யோக நிஷ்ட னுக்கு) இருக்க வேண்டிய அடிப்படையான தன்மைகளை நிரூபணம்‌ பண்ணி யருளுகிறார்‌. ஆசார்ய ஹ்ருதய (மூலம்‌ – 99) வ்யாக்யாநத்திலே மணவாளமாமுநிகளும்‌ இவற்றைக்‌ காட்டி யருளுகிறார்‌. மாமுநிகளுடைய வ்யாக்யாந பங்க்திகள் –

இப்படி பிரதிபந்தக பாப நிவ்ருத்தியாலே மனசுத்தி ஹேதுவான விவேகாதி சப்தகமும் –
சம தம நியதாத்மா சர்வபூதானுகம்பீ -(சமம் தமம் இவற்றில் நியமத்துடன் கூடிய மனத்தை யுடையவன்
எல்லா உயிர்கள் இடத்திலும் அருள் பொருந்தினவன் )இத்யாத் யுக்த சம தமாதிகளும் அபிவிருத்தமாக ..( விவேகம் -விமோகம் -அப்பியாசம் -கிரியை -கல்யாணம் -அநவசாதம் -அநுத் தர்ஷம் )

இதில் விவேகமாவது –( சரீரத்தின் தூய்மை )
ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டாத் அன்னாத் காய சுத்திர் விவேக -போதாயன விருத்தி –
(சாதி – ஆஸ்ரயம் – நிமித்தம் – என்ற மூன்று குற்றங்கள் இல்லாத அன்னத்தால் காய சுத்தி-சரீரத்தின் தூய்மை – ஏற்படும் ) என்கிறபடியே – ஜாதி துஷ்டமும் -ஆஸ்ரய துஷ்டமும் நிமித்த துஷ்டமும் இன்றிக்கே இருந்துள்ள அன்னத்தால் உண்டான காய சுத்தி -(காயம் -அந்தக்கரணம் -மனஸ் )
ஜாதி துஷ்டங்கள் ஆனவை -களஞஜ்க்ரஞ்ச நாதிகள் ( வெங்காயம் காளான் என்கிற நாய்க்குடை போல்வன ) ..
ஆஸ்ரய துஷ்டங்கள் ஆனவை -அபிசச்த பதித சண்டாளாதிகள் உடைய த்ரவ்யம் –
(அபிசஸ்தன்-பிறரால் இகழப்படுபவன் -பதிதன் -தன் நிலையில் நின்றும் இழிந்தவன் /
சண்டாளாதிகள் -கர்ம ஜாதி சண்டாளர்கள் )-ஆஸ்ரயம் என்றது -த்ரவ்ய ஸ்வாமியான புருஷனைச் சொல்லுகிறது ..
நிமித்த துஷ்டம் ஆவது -உச்சிஷ்ட கேசாத் யுபஹதம் ஆனது (எச்சில் மயிர் கல் முதலியவற்றுடன் கூடிய பொருள் )
இந்த த்ரிவித தோஷமும் இல்லாத ஆகாரத்தின் விவேசந பலமான காய சுத்தியிலே
விவேக சப்தம் உபசாரனோக்தம்
–அன்றிக்கே –
விவிக்த ஆகார சேவையாலே ராஜச தாமச ஹாராப்யாயித தேஹத்தில் காட்டில் ஸ்வ தேஹத்தினுடைய விவேசனம் விவேகம் என்னவுமாம் —
சுத்தி யாவது -அகத்தே பயோ விவேசனம் இறே ( அசுத்தங்கள் நின்றும் பிரித்து அறிதல் )
காய சுத்தி -என்ற இடத்தில் காய சப்தத்தால் அந்த கரணத்தை சொல்லுகிறது –
ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-சாந்தோக்யம் -என்று சுருதி சொல்லிற்று –சத்வமாவது அந்த கரணம் இறே —
அபயம் சத்வசம் சுத்தி -ஸ்ரீ கீதை –16-1-( சத்துவத்துக்குத் தூய்மை பயம் அற்று இருத்தல் )என்றும் –
சத்வானுரூப சர்வஸ்ய ஸ்ரத்தா பவதி -ஸ்ரீ கீதை -17-3-–(எல்லாருக்கும் ஸ்ரத்தையானது சத்வத்துக்குத் தகுதியாக உண்டாகிறது ) என்றும் சொல்லுகிற இடங்களிலும் –சத்வ சப்தம் அந்த கரணம் வாசியாக பாஷ்ய காரர் அருளிச் செய்தார் இறே —
ஆகை இறே விவேகமாவது -ஆகார சுத்தவ் சத்வ சுத்தி-என்கிற படியே அந்த கரண சுத்திக்கு
அடியான அன்ன சுத்தி என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது ..

விமோகமாவது -விமோக காமாநபிஷ்வங்க-போதாயன விருத்தி –என்கிற படி காமத்தில் அநபிஷ்வங்கம்..-யாதொரு விகாரத்தாலே விஷயத்தை புஜியாது நிற்க மாட்டான் -அந்த விகாரம்-அபிஷ்வங்கம் — காமத் க்ரோதோபீஜாயதே -ஸ்ரீ கீதை –2-62 –இத்யாதி வசனத்தாலே குரோத அத்யபாவமும் இவ் இடத்தில் பலிதம் –

அப்யாசமாவது – ஆரம்பண சம்சீலனம் புன புன அப்யாசக-போதாயன விருத்தி – -என்கிற படி
த்யான ஆலம்பனமான வஸ்துவிலே பலகாலம் பரிசீலனம் பண்ணுகை –-ஆரம்பணம் என்றது -ஆலம்பனம் என்ற படி–இவ் இடத்தில் ஆலம்பனம் ஆவது-ஸூபாஸ்ரயம் –( தியானத்துக்கு உரிய பொருளை )

கிரியையாவது -பஞ்ச மகா யஜ்ஞாத்ய அனுஷ்டானம் – சக்தித க்ரியா-போதாயன விருத்தி – -என்கிறபடியே-பஞ்ச மகா யக்ஞாதி நித்ய கர்மங்களை வல்ல அளவும் அனுஷ்டிக்கை –

கல்யாணமாவது -சத்யார்ஜவ தயா தான ஹிம்சாநபித்யா கல்யாண நி ”–போதாயன விருத்தி – -என்கிற படியே – சத்யம், ஆர்ஜவம் ,தயை தானம் ,அஹிம்சை,அனபித்யை – ஆகிற இவை கல்யாணம் எனப்படும் –-இதில் சத்யம் -பூதஹிதம் ..ஆர்ஜவம்-மனோ வாக் காய ஏக ரூப்யம் .
தயை-ஸ்வார்த்த நிரபேஷை–பர துக்க அசஹிஷ்ணுத்வம் –( தன் நலம் அற்று பிறர் துன்பம் பொறாமை )
தானம்-லோபராஹித்யம்-அஹிம்சை- கரண த்ரேயேண பர பீடா நிவ்ருத்தி
அபித்யை-பர கீயே ஸ்வ புத்தி -பிறர் பொருளை தனது பொருளாகக் கருதுதல்
அன்றிக்கே-நிஷ் பல சிந்தை யாதல் -பரக்ருத அபகார சிந்தை ஆதலுமாம் .அது இல்லாமை- அநபிதியை
–

அனவசாதமாவது -தேச கால வைகுண்யாத் -சோக வஸ்த்வாத்ய நுசம்ருதேச்ச
தஜ்ஜம் சைதன்யம் அபாஸ்வரத்வம் மனச அவஸாத
-போதாயன விருத்தி -–என்கிறபடியே
தேச கால வைகுண்யத்தாலும்(குணக் கேட்டினாலும் ) சோக ஹேதுவாயும் பய ஹேதுவாயுமாய் உள்ள வஸ்துக்களில் அனுசம்ருதியால் உண்டான தைன்யமாகிற மனசினுடைய அபாஸ்ரத்வம் ,அவசாதம் ஆகையாலே ,அதனுடைய விபர்யயம்
சோக வஸ்து என்றது -சோக நிமித்த வஸ்து என்ற படி –அதாவது அதீதமான புத்ர மரண ஆதி-
ஆதி சப்ததாலே -பய நிமித்தமான ஆகாமி வஸ்து விவஷிதம் –-சோகம்-அதீத விஷயமாய்-பயம்-ஆகாமி விஷயமாய் இறே இருப்பது —-அபாஸ்த்ரத்வம் என்கிற இது -தைன்ய சப்த விவரணம் ..தைன்யமாவது –அபீஷ்ட கார்ய பிரவர்த்ய ஷமத்வம் –பாஸ்வரத்வ விரோதி என்று தைன்ய விசேஷணம் ஆகவுமாம்–(அவஸாதமாவது : – தேஸ -காலங்‌களினுடைய குணக் கேட்டினாலும்‌ , ஸோகத்துக்கும்‌ அச்சத்துக்கும்‌ காரணமாக உள்ள பொருள்‌களில்‌ வைத்த இடையறாத நினைவினாலும்‌ உண்டான தைந்ய மாகிற மனத் தெளிவு இல்லாமை.)

அனுத்தர்ஷம் ஆவது -தத்வி பர்யயஜா துஷ்டி ருத்தர்ஷ -என்கிற படி தேச கால ஷாட் குண்யத்தாலும் பிரியவஸ்த்வாத்ய அனு ஸ்ம்ருதியாலும் உண்டான துஷ்டி உத்கர்ஷம் ஆகையாலே அதனுடைய விபர்யயம் –-அதாவது ஹர்ஷ ஹேதுகள்–உண்டானாலும் அப்ரீதனாகது ஒழிகை-
(பாஸ்வரம் -விளக்கம் -தெளிவு –அபாஸ்வரம் -தெளிவின்மை /தைன்யம் -வறுமைத்தன்மை )
(பகவத் விஷய சம்ச்லேஷத்தில் தரிக்கையும் விஸ்லேஷத்தில் தரியாமையும் தானே வேண்டும் –
லௌகிக விஷ உணர்ச்சி கொந்தளிப்பு கூடாது
என்றபடி )(அநுத்தரஷமாவது =-உத்தர்ஷம்‌ இல்லாமை. உத்தரஷமாவது – தேஸ காலங்களினுடைய அநுகூலத்தாலும்‌ , ப்ரியமான பொருள்களில்‌ வைத்த இடையறாத நினைவினாலும்‌ உண்டான மகிழ்ச்சி. எனவே மகிழ்ச்சிக்குக்‌ காரணங்கள்‌ உளவானாலும்‌ அவற்றைக்‌ கண்டு கழிபேருவகையன் ஆகாது ஒழிகை என்றபடி -)

இனி–சமாதிகளில் – -அதாவது –-சமம் ஆவது அந்த கரண நியமனம் –-தமம் ஆவது பாஹ்ய கர்ண நியமனம்-சமச் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமச்சேந்திரிய நிக்ரஹ – என்னக் கடவதிறே–
ஷமா சத்யம் தமச் சம -என்கிற இடத்தில்-தமோ பாக்ய கரணானம் அநர்த்த விஷயேப்யோ நியமனம் -சம – அந்த கரணச்ய ததாவித நியமனம் – என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
மாறி சொல்லும் இடங்களும் உண்டு ..-ஆத்ம குணங்களில் பிரதானங்கள் இறே இவை …
சாந்தோ தாந்த உபரதஸ் திதிஷூ சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவ ஆத்மானம் பச்யேத்–ப்ருஹதாரண்யம் -6-4-23-( மனத்தினை அடக்கி புற இந்திரியங்களை அடக்கி காம்யகர்மங்களில் ஆசை இல்லாதவனும் பொறுமை யுள்ளவனும் சமாதானம் யுடைய மனத்தினையும் யுடையவனாகி இந்த உயிரினிடத்திலே பரம்பொருளை பார்க்கக் கடவன் )-என்கையாலே , உபாசனத்தில் இழியும் அவனுக்கு ,பிரதம அபேஷிதங்கள் இவையாக இறே சுருதியும் சொல்லிற்று ..-மற்றும் உள்ள ஆத்ம குணங்களுக்கும் எதா யோகம் அர்த்தம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி இருந்துள்ள விவேகாதிகளும் சமாதிகளும் மேன்மேலும் அபிவிருத்தமாய் வளர –

உபாஸநம்‌ ஸ்யாத்‌ த்‌ருவாநுஸ்ம்ருதி : என்பதனாலே அது உண்டாவதற்கு (1) விவேகம்‌ (2) விமோகம்‌ (3) அப்யாஸம்‌ (4) கல்யாணம்‌ (5) க்ரியை (6) அநவஸாதம்‌ (7) அநுத்தர்ஷம்‌ என்று ஏழு ஸாதநங்களைக்‌ கூறுகிறார்‌ வாக்யகாரர்‌-
தல்‌ தல்லப்‌திர்‌-விவேக-விமோக-அப்‌யாஸ-க்ரியா-கல்யாண
அநவஸாத-அநுத்‌தர்ஷேப்ய : ஸம்பவாந் நிர்வசநாச் ச
– ” என்பது வாக்யகாரருடைய வாக்யம்‌. இவற்றில்‌ க்ரியை எனப்படுபவை தான்‌ யஜ்ஞாதி கர்மங்கள்‌. விவேகம்‌ என்பது காய ஸூத்தி.

ஜாத் யாஸ்ரய நிமித்தாதுஷ்டாதந்நாத்‌ காய ஸூத்‌தி விவேக: -என்கிறார்‌ எம்பெருமானார்‌. ஜாதியினாலும்‌ , ஆஸ்ரயத்தினாலும்‌ , நிமித்தத்தினலும்‌ தோஷம்‌ இல்லாதிருப்பதான அந்நத்தினால்‌ ஏற்படும்‌ தேஹ ஸூத்தி விவேகம்‌ எனப்படும்‌. ஜாதி தோஷம்‌ , ஆஸ்ரய தோஷம்‌ ச நிமித்த தோஷம்‌ இவைகள்‌ இல்லாத அந்நத்தாலே காயத்தை ஸூத்தி பண்ணுதல்‌ விவேகம்‌ ஜாதிதோஷம்‌ – வெங்காயம்‌ , பூண்டு , நாய்க் குடை முதலானவை இயற்கை யாகவே தோஷமுடைய பதார்த்தங்கள்‌- இவைகளுக்கு மருத்துவ ஸக்தி உண்டு ; இவை இரத்தத்தை ஸூத்திகரிக்க வல்லவை என்றெல்லாம்‌ இக் கால மருத்துவர்கள்‌ சொல்லுகிறார்‌கள்‌. இவை தேஹ ஆரோக்யத்துக்குச்‌ சிறந்தவைகளாக இருக்கலாம்‌. ஆனால்‌ இவற்றை உட்‌கொண்டால்‌ ஸத்வ குணம்‌ அழிந்து ரஜஸ்‌ , தமோ குணங்களே ஒருவனிடத்தில்‌ மேலோங்கி இருக்கும்‌. இவை ஆத்மாவுக்கு கேடானவை என்பதை இட்டு இவற்றை விலக்குதல்‌ அவஸ்யம்‌.

ஆஸ்ரய தோஷம்‌ என்பது பதார்த்தங்களுக்கு யஜமானனாக இருக்கிறவன்‌ அபிசஸ்தனாகவோ சண்டாளனாகவோ பதிதனாகவோ இருந்தால்‌ அவன்‌ ஸம்பந்தத்தை இட்டு வரும்‌ தோஷமாகும்‌. மஹாபாதகி , வேத மார்க்கத்துக்குப்‌ புறம்பானவன்‌ , தன்னுடைய வர்ணாஸ்ரம தர்மங்களை விட்டவன்‌ போன்றவர்களுடைய த்ரவ்யங்களை ஸ்வீகரித்தல்‌ என்பது தகாது. பக்வம்‌ பண்ணப்‌ படாத பதார்த்தங்களை – காய்கறிகள்‌ போன்றவற்றை – பணம்‌ கொடுத்து வாங்கிக்‌ கொள்வதில்‌ (க்ரயஸூத்தி ஏற்பட்டு விடுவதால்‌) தோஷம்‌ இல்லை. பஞ்ச ஸம்ஸ்காரங்கள்‌ பண்ணிக்‌ கொள்ளாத வர்களுடைய க்ருஹங்களிலே (அவர்கள்‌ ப்ராஹ்மணர்களாக இருந்தாலும்‌) உணவு உட்‌ கொள்ளுதல்‌ தகாது. த்ரிவித தோஷமும்‌ இல்லை யென்றாலும்‌ பகவந் நிவேதிதமல்லாத வஸ்துவும்‌ துஷ்டமே-
யஜ்ஞ ஸிஷ்டாஸிந : ஸந்தோ முஞ்சந்தே ஸர்வகில்பிஷை : |
தே த்வகம்‌ பு,ஞ்ஜந்தே பாபா யே பசந்த் யாத்ம காரணாத்‌ |
| (3-13) [பரமபுருஷனுடைய திருவாராதநமான ) யஜ்ஞத்தில்‌ எஞ்சி யுள்ளதை புஜிப்பவர்‌களான ஸத் புருஷர்கள்‌ (ஆத்ம தர்ஸநத்துக்குத்‌ தடையாக இருக்கும்‌) அனைத்து பாபங்களில்‌ இருந்தும்‌ விடுபடுகிறார்கள்‌. எவர்கள்‌ தங்களுடைய பசியை போக்கிக்‌ கொள்வதற்காக மட்டுமே சமைத்து உண்கிறார்களோ அவர்கள்‌ பாபத்தையே புஜிக்கிறார்கள்‌]
யஜ்ஞஸிஷ்டாம்ருத புஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்‌ (4-31) (யஜ்ஞத்தில்‌ எஞ்சிய அந்நம்‌ முதலான அம்ருதத்தை புஜிப்பவர்கள்‌ பழையதான ப்ரஹ்மாத்மகமான ரூபத்தை அடைகிறார்கள்‌) என்றும்‌ கீதா வசநங்கள்‌. பகவானைத்‌ தவிர இதர தேவதைகளுக்குப்‌ படைக்கப்பட்ட அந்நமும்‌ ஸ்வீகரிக்கத் தக்கதன்று. சில பதார்த்தங்கள்‌ ஜாதி தோஷம்‌ ஆஸ்ரய தோஷம் இல்லாமல் இருந்தாலும் கூட அந்தப் பதார்த்தங்களில் தலை மயிர்‌ எச்சில் போன்ற நிஷித்த வஸ்துக்கள் சேர்ந்து விட்டன வென்றால் அவை நிமித்த தோஷத்தை உடையனவாய் ஆக விடுகின்றன – ஸ்ரீ பெரும்பூதூர் ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமி பற்றிய சரித்‌ரம் ஓன்று சொல்லப்படுகிறது -ஜீயர் ஸ்வாமி மடத்தில் எழுந்தருளி இருக்கிறார் -ஸந்நிதியில் ஸ்வாமிக்கு (எம்பெருமானாருக்கு) கண்டருளப்‌ பண்ண வேண்டும்‌ என்று விஸேஷமாக சர்க்கரைப் பொங்கல்‌ தளிகை ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறார்கள்‌-மடத்‌திலிருந்து ஒருவர்‌ மூலம்‌ மடைப்பள்ளி அதிகாரிகளுக்கு அந்த சரக்கரைப் பொங்கலை எம்பெரு மானாருக்கு கண்டருளப்‌ பண்ண வேண்டாம்‌ என்று செய்தி அனுப்புகிறார்‌ ஜீயர்‌ ஸ்வாமி. அவர்களும்‌ ஸித்தமாக்கி வைத்திருந்த தளிகைப்‌ பாத்ரத்தைத்‌ திறந்து பார்க்க அதில்‌ பல்லி விழுந்திருந்ததைக்‌ கண்டனர் -இது நல்ல பதார்த்தங்களைக் கொண்டு கொண்டு நல்ல வ்யக்திகளாலே பக்வம்‌ பண்ணப்பட்டாலும்‌ ஒரு காரணத்தை ( நிமித்தத்தை)க்‌ கொண்டு வந்து சேர்ந்துள்ள தோஷத்தினால்‌ உபயோகப்படுத்தக் கூடிய யோக்யதையை இழந்து விட்டது. இப்படி மூன்று வகையான தோஷங்களும்‌ இல்லாத அந்நத்தினாலே தேஹத்தை தரித்தல்‌ , வளர்த்தல்‌ காய ஸூத்தி எனப்படும்‌–

அத்ர நிர்வசனம்
ஆஹார ஸூத்‌தெள ஸத்த்வ ஸூத்‌தெள : |
ஸத்த்வ ஸூத்‌தெள த்‌ருவா ஸ்ம்ருதி : |
(ஸ்ம்ருதி லம்பே, ஸர்வ க்‌ரந்தீ,_நாம்‌ விப்ரமோக்ஷ்‌ : ||)

(பரிஸூத்தமான ஸாத்விக ஆஹரத்தை உட் கொண்டால்‌ மனம்‌ அழுக்கற்றதாகிறது. மனம்‌ ஸூத்தமானால்‌ நிலையான நினைவான ஆத்ம த்யாநம்‌ விளைகிறது. அது விளைந்த வளவில்‌ அஜ்ஞாநம்‌ விருப்பு வெறுப்பு முதலிய சிக்கல்கள்‌ நீங்குகின்றன)(சாந்‌ 7-26-2) என்கிறார்‌ எம்பெருமானார்‌. ஆஹார ஸூத்தி இருந்தால் தான்‌ மனம்‌ ஸூத்தமாக இருக்கும்‌. மனம்‌ ஸூத்தமாக இருந்தால் தான்‌ பகவானைப்‌ பற்றிய நிலைத்த நினைவு உண்டாகும்‌.
நிர்வசநம்‌ – நிஷ் க்ருஷ்ட வசநம்‌ , அப்ரமாணேப்யோ நிஷ் க்ருஷ்டம்‌ ப்ரமாண பூ,தம்‌ வசநம்‌ இத்யர்த்த-
( அப்ரமாணங்களிலிருந்து நிஷ்க்ருஷ்டம்‌ – ப்ரமாண பூதமான வசநம்‌ என்று அர்த்தம்‌) என்று விளக்கம்‌ அநுக்ரஹித்துள்ளார்‌ ஸ்ருத ப்ரகாஸிகாசார்யர் –
பிணச் சோறும்‌ , மணச் சோறும்‌ , விலைச் சோறும்‌ , புகழ்ச் சோறும்‌ , பொருட் சோறும்‌ , எச்சிற்‌ சோறும்‌ இவை ஆறும்‌ த்யாஜ்யம்‌ மற்றைச்சோறிறே வைஷ்ணவன்‌ உண்ணும்‌ சோறு என்று தீரத்தங்குடி ஜீயர்‌ அருளிச்செய்வர்‌ * என்று வார்த்தாமாலை (292-வார்த்தை )

விமோகம்‌ என்பது காம க்ரோதங்களினால்‌ விகாரம்‌ அடையாமல்‌ இருத்தலைக்‌ குறிக்கும்‌.
ஸாந்த உபாஸீத- (ராக த்வேஷங்கள்‌ அற்றவனாய்‌ உபாஸிக்க வேண்டும்‌) (சாந்‌ 3-14-1) என்பது இதற்கு ப்ரமாணம்‌-

ஆரம்பண ஸம் ஸீலநம்‌ புந : புந : அப்‌,யாஸ :மனஸ்ஸுக்கு ஒரு பற்றுக் கோடாக பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைத்‌ திரும்பத்‌ திரும்ப நினைத்தல்‌ அப்யாஸம்‌ எனப்படும்‌. இதற்கு ப்ரமாணமாக -ஸதா தத்பாவ பாவித: (எப்பொழுதும்‌ ப்ரஹ்மத்தைப்‌ பற்றிய நினைவை உடையவனாய்‌ இருக்க வேண்டும்‌) என்னும்‌ கீதா வசநம்‌ (8-3) த்ரமிட பாஷ்யகாரரால்‌ எடுக்கப்பட்டுள்ளது. பகவான்‌ கீதையிலே தான்‌ எந்தெந்த குணங்கள்‌ உடையவனாக உபதேஸம்‌ செய்தருளி இருக்கிறானோ , அந்தந்த குணங்களை உடையவனாக அவனை பற்றிய சிந்தநத்துடன்‌ எப்போதும்‌ இருக்க வேண்டும்‌. இதற்கு அப்யாஸம்‌ என்று பெயர்‌. இது த்யாநம்‌ அன்று ; இது த்யாநத்துக்கு அங்கமாகும்‌. (பூர்வமாக இருப்பதொன்றாகும்‌)–

பஞ்ச மஹா யஜ்ஞங்களையும்‌ மற்ற நித்ய நைமித்திக கர்மங்களையும்‌ யதா ஸக்தி அநுஷ்டித்தல்‌ க்ரியை எனப்படும்‌. தேவ யஜ்ஞம்‌ , ப்ரஹ்ம யஜ்ஞம்‌ , பித்ரு யஜ்ஞம்‌ , மநுஷ்ய யஜ்ஞம்‌ , பூத யஜ்ஞம்‌ என்பவை பஞ்ச மஹா யஜ்ஞங்களாகும்‌.
க்ரியாவாநேஷ ப்‌ரஹ்ம விதாம்‌ வரிஷ்ட, :
(முண்டகம்‌ 3-1-4) (ப்ரஹ்ம வித்துக்களிலே க்ரியையை உடையவனானவன்‌ ஸ்ரேஷ்டன்‌ (பெருமை வாய்ந்தவன்‌),-தமேதம்‌ வேதாநு வசநேந ப்‌ராஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந (ப்ருஹ 6-4-22) (அத்தகைய இந்த பரமாத்மாவை ப்ரஹ்ம ஜ்ஞாநிகள்‌ வேதாத்யயநத்தாலும்‌ யஜ்ஞத்தாலும்‌ தாநத்தாலும்‌ உபவாஸ ரூபமான தபஸ்ஸாலும்‌ அறிய விரும்புகிறார்கள் -என்னும்‌ வேதாந்த வாக்யங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள க்ரியைகள்‌ அனைத்தும்‌ ப்ரஹ்ம உபாஸநத்துக்குஸஹகாரி யாகின்றன.

ஸத்ய ஆர்ஜவ தயா தாந அஹிம்ஸ அநபித்‌,யா : கல்யாணாநி (ஸத்யம்‌ , ஆர்ஜவம்‌ , தயா, தாநம்‌ , அஹிம்ஸா , அநபித்யை முதலான நற் குணங்கள்‌ கல்யாணங்கள்‌ )
ஸத்யம்‌ பூத ஹிதம்‌ ப்ரோக்தம்‌ * என்பது மநு வசநம்‌. –ஸத்யம்‌ – பூத ஹிதம்‌ என்கிறார் ஸ்ருத ப்ரகாஸிகாசார்யர்‌. பூத ஹிதமான வசநங்களையே சொல்லுதல்‌ ஸத்யம்‌ எனப்படும்‌. மஹா பாரதத்திலே ஒரு சரித்ரம்‌ சொல்லப்பட்டுள்ளது. ஒரு ரிஷியினுடைய ஆஸ்ரமத்துக்குள்‌ ஒரு பசு வந்து புகுந்து விட்டது. அதை ஹிம்ஸிக்கும்‌ நோக்கத்துடன்‌ துரத்தி வந்த வேடன்‌ ரிஷியைப்‌ பார்த்து * இங்கே பசு வந்ததா? * என்று கேட்கிறான்‌. அவர்‌ * இங்கு பசு வர வில்லை * என்று சொல்லி விட்டார்‌. அவர்‌ இப்படிச்‌ சொன்னது ஸத்யமா? அஸத்யமா? என்றால்‌ ஸத்யமே ! தஸரதன்‌ பெருமாளைக்‌ கை விட்டுத்‌ தன்‌ வசநத்தை நிலை நாட்டினது அஸத்யமே! – ஆபாஸ (போலியான) தர்மமே என்கிறார்கள்‌ நமதாசார்யர்கள்‌ .

ஆர்ஜவம்‌ என்பது சிந்தையாலும்‌ , சொல்லாலும்‌ , செயலாலும்‌ ஒருபடிப் பட்டிருப்பதாகும்‌ உயர்ந்த விஷயத்திலே இப்படி இருப்பது தான்‌ ஆர்ஜவம்‌ எனப்படும்‌. தகாத விஷயத்தில்‌ சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செயலாலும்‌ ஒருபடிப்பட்டிருப்பது என்பது குடில பாவமாகும்‌. மநோ வாக்காயங்களினுடைய ஐகரூப்யம்‌ எதில்‌ பர்யவஸிக்கும்‌?
சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையினாலும்‌ தேவபிரானையே தந்தை தாய்‌ என்றடைந்த வண்குருகூரவர்‌ சடகோபன்‌ (திருவாய்மொழி 6-5-11) என்று தன்னைப்‌ பற்றிச்‌ சொல்லிக்‌ கொள்கிறார்‌ ஆழ்வார்‌. சூர்ப்பணகை ஸ்ரீராமனைப்‌ பார்த்து * நீ யார்‌? * என்று கேட்கிறாள்‌. உடனே நேர்மையுடன்‌ தம்‌ சரித்ரம்‌ முழுவதையும்‌ சொல்லுகிறார்‌ பெருமாள்‌. நமதாசார்யர்கள்‌ பெருமாளுடைய ஆர்ஜவ குணத்தை நன்கு அநுபவித்திருக்கின்றனர்‌.

ஸ்வார்த்த நிரபேக்ஷ பரது: க்க, அஸஹிஷ்ணுத்வம்‌ – தயை என்று காட்டுகிறார்‌ ஸ்ருதப்ரகாஸிகாசார்யர்‌. பிறருடைய துக்கத்தைப்‌ பொறுக்காமல்‌ இருத்தல்‌ ; இப்படி இருக்கும் போது அதனால்‌ தனக்கு ஒரு ப்ரயோஜநத்தை (புகழையோ பெருமையையோ) கருதாதிருத்தல்‌ தயை எனப்படும்‌.

கரண த்ரயேணாபி பரபீடா நிவ்ருத்தி : – பரஹிம்ஸையிலிருந்து கரண த்ரயத்தாலும்‌ விலகி இருத்தல்‌ அஹிம்ஸை எனப்படும்‌.

தாநம்‌ – *லோப ராஹித்யம்‌ * என்று அர்த்த மருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ருதப்ரகாஸிகா சார்யர்‌. இது மனத்தினுடைய இளகிய தன்மையை (மனம்‌ இருக்க வேண்டிய நிலையை )க்‌ குறிப்பதாகும்‌. தன்னிடம்‌ இருக்கும்‌ அல்லது தனக்கு வரும்‌ தநத்தைத்‌ தனக்காகவே சேர்த்து வைத்துக்‌ கொள்ளும்‌ கருமியாக (கஞ்சனாக) இல்லாமலிருக்க வேண்டும்‌. ஆராதிக்கப்பட வேண்டிய பூதங்கள்‌ வந்தால்‌ உடனே தன்னிடம்‌ இருப்பதைக்‌ கொடுக்கும்‌ ஸாமர்த்யம்‌ உபாஸகனுக்கு இருக்க வேணும்‌. செல்வந்தர்கள் தான்‌ இத் தன்மையை உடையவரகளாக இருக்க முடியும்‌ என்பதன்று-

அநபித்‌யை – அபித்‌யை என்கிற தன்மை இல்லாமலிருப்பது அநபித்‌ யை எனப்‌படும்‌. அபித்‌ யை என்றால்‌ என்ன? இதை -(1) * பரகீயே ஸ்வத்வ புத்‌தி, : * (பிறருடைய வஸ்துவினிடத்தில்‌ தன்னுடையது என்கிற புத்தி) என்றும்‌ (2) * நிஷ்பலசிந்தா * (லோகத்திலுள்ள அஸாரமான, வேண்டத் தகாத விஷயங்களைப்‌ பற்றிச்‌ சிந்தித்தே தன்‌ மனத்தையும்‌ பாழ்படுத்திக்‌ கொள்ளுதல்‌ – எதற்கும்‌ உபயோகமில்லாத சிந்தை) என்றும்‌ (3) * பர க்ருத அபகார சிந்தா (அந்யனால்‌ செய்யப்பட்ட அபகாரத்தை சிந்தித்தல்‌) என்றும்‌ மூன்று விதமாக அருளிச்‌ செய்கிறார்‌ ஸ்ருத ப்ரகாஸிகாசார்யர்‌. இக் குணங்கள்‌ இல்லாதிருத்தல்‌ அநபித்‌யை எனப்படும்‌ நிஷ்டையில்‌ – பகவானைப்‌ பற்றிய சிந்தநத்தில்‌ – உயர்ந்து கொண்டே போகிறவனுக்கு சஞ்சல புத்தி இருக்காது

ஸத்யேந லப்‌,ய: * *தேஷாமேவைஷ விரஜோ ப்‌ரஹ்ம லோக : (ப்ரஸ்ந 1-15-11)(அவர்களுக்கே ரஜஸ் தமஸ்ஸுக்களால்‌ விடுபட்டிருக்கிற இந்த ப்ரஹ்ம லோகமானது ஸத்யத்தினால்‌ அடையத் தக்கது) என்பது நிர்வசநம்‌.

அநவஸாதம்‌ என்பது அவஸாதம்‌ (துக்கம்‌) இல்லாமை. து :க்கப்படுவதற்கு காரணங்கள்‌ இருந்தாலும்‌ து:க்கப்படாமல்‌ இருத்தல்‌ அநவஸாதம்‌ எனப்படும்‌ தேஸ கால வைகுண்‌யத்தாலும்‌ (தேஸ காலங்கள்‌ கெட்டு இருக்கின்றனவே என்று நினைத்திருத்தல்‌ ) , ரோக நிமித்தமான வஸ்து முதலியவைகளை (புத்ர மரணாதிகளை) நினைத்தல்‌ போன்ற காரணங்களால் மனதில்‌ ஏற்படும் ப்ரகாசமின்மை அவஸாதம்‌ எனப்படும்‌. இதை வெற்றி கொள்வதற்கு மனதில் பலம் வேண்டும் –நாயமாத்மா பல ஹீநேந லப்‌, ய: (முண்டகம்‌ 4-2-4) (இந்த பரமாத்மா மநோ பலம்‌ அற்றவனால்‌ அடையத் தக்கவன்‌ அல்லன்‌) என்கிறது ஸ்ருதி. லோகத்திலே பல விபரீதங்கள்‌ ஏற்படக் கூடும்‌. இவற்றை நம்மால்‌ தடுக்க முடியாது. ஆனால்‌ இந்த விபரீதங்களினால்‌ மனதில்‌ தைந்யம்‌ (அபாஸ்வரத்வம்‌ – மனத் தெளிவு இன்மை) வந்து சேரக் கூடாது. அவஸாதம்‌ என்பது மனதில்‌ ஏற்படக்‌ கூடிய கலக்கத்தைக்‌ குறிக்கும்‌. இப்படிப்பட்ட அவஸாதம்‌ இல்லாதிருப்பது அநவஸாதமாகும்‌.

அநுத்‌தர்ஷம்‌ என்பது மனதில்‌ அதிக ஸந்தோஷ மின்மையைக்‌ குறிக்கும்‌. ஸந்தோஷப்‌ படுவதற்குக்‌ காரணங்கள்‌ இருந்தாலும்‌ மனதில்‌ அதிக ஸந்தோஷத்துடன்‌ கூடி யிருக்கும்‌ தன்மையும்‌ விரும்பத் தக்கதன்று. ஏனென்றால்‌ விஷயாந்தரங்களைப்‌ பற்றிய இத் தன்மையும்‌ பகவானைப்‌ பற்றிய த்யாநத்தைக்‌ கெடுக்கும்‌. மனதில்‌ அதிக ஸந்தோஷத்துடன்‌ கூடியவனாக இல்லாதிருத்தல்‌ அநுத்தர்ஷம்‌ எனப்படும்

—

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருதி பிரகாஸி காச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading