ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-பத்தாம் பத்தின் ஸாரம்- ஸ்ரீரங்கம் ஸ்ரீ. உ. வே, வித்வான்‌ கோவிந்த நரஸிம்மாசார்ய ஸ்வாமிகள் —

திருவாய்மொழி பத்தாம்‌ பத்தின்‌ ஸங்க்ரஹம்‌ “ஆர்த்தி ஹரத்வம்‌”
ஸ்ரீ ய: பதியான எம்பெருமானால்‌ மயர்வற மதிநலமருளப்‌ பெற்றவர்‌ நம்மாழ்வார்‌. ௮வர் ஸாம வேத ஸாரமாய்‌ * திருவாய்‌ மொழி ” என்னும்‌ 1102 பாட்டுக்கள்‌ கொண்ட திவ்ய ப்ரபந்தத்தை அருளிச்‌ செய்திருக்கிறார்‌. அதில்‌ பதினோரு பாட்டுக்கள்‌ கொண்ட பகுதிக்கு **ஒரு திருவாய்மொழி ” என்றும்‌ பத்துத்‌ திருவாய்மொழி கொண்ட பகுதிக்கு “ஓர்‌ பத்து ” எனவும்‌ பெயர்‌ வழங்கி வருகிறது. ஆழ்வார்‌ ஒவ்வொரு பத்திலும்‌ காரணத்வம்‌ தொடங்கி ஒரோர்‌ கல்யாண குணத்தை வெளியிடருளுறார்‌. அவ்விதத்தில்‌ பத்தாம்‌ பத்தில்‌ ஆர்த்தி ஹரத்வம்‌’ என்கிற குணத்தை வெளியிடுகிறார்‌.-ஆர்த்தியாவது–ப்ரபந்நர்களுக்கு ஸம்ஸாரத்தில்‌ அடிக் கொதிப்பாலும்‌ எம்பெருமான்‌ திருவடிகளைக் கிட்டாமையாலும்‌ உண்டாகும்‌ வருத்தம்‌. அதனை எம்பெருமான்‌, அடியார்களின்‌ இடரை நீக்க அவதாரங்களில்‌ கொள்ளும்‌ திரு மேனிகளுக்கு காரணமான ஸெளந்தர்யம்‌ மிக்க திருமேனியாலே பரிஹரிக்‌கிறான்‌ என்பது 10-ம்‌ பத்தில்‌ உபபாதிக்கப் படுகறது. இதனை *‘சுரிகுழல்‌ கமலக் கண்கனிவாய்‌ காளமேகம்‌ **” “*காமரூபங்‌ கொண்டெழுந் தளிப்பான்‌ ” “அஞ்சன மேனி” புனல் மை நின்ற வரை போலும்‌ திருவுருவம்‌” **பொல்லாக்‌ கனி வாய்‌ தாமரைக் கண்‌ கரு மாணிக்கம்‌” *புனக்காயா நிறத்த புண்டரீகக்கட்‌ செங்கனிவாய்‌ ‘ என்றும்‌ பாசுரங்களால்‌ அறியலாம்‌-ஆழ்வாருடைய ஆர்த்தி இப்பத்தில்‌ 10ஆம்‌ திருவாய்‌ மொழியால் முனியே நான்முகனில்‌ ”! நன்கு விளங்குகிறது. அத்திருவாய்மொழி தம்‌ தாபத்தை வெளியிடும்படி அமைந்ததற்கு காரணம்‌ அதற்கு முன்‌ திருவாய்‌ மொழிகளில்‌ ௮நுபவங்களேயாகும்‌. இதனை நன்கறிய திருவாய்‌ மொழியின்‌ பத்தாம்‌ பத்தின்‌ முதல்‌ திருவாய்மொழி தொடங்கி சுருக்கமாக ஒவ்வொரு திருவாய்‌ மொழியின்‌ ப்ரமேயமும்‌ காட்டப்படுகிறது

பத்தாம்‌ பத்தில்‌ முதல்‌ திருவாய்மொழி *தாள தாமரை ‘: என்பது. இது திருமோகூர்‌ எம்பெருமானை ப்ரதிபாதிப்பது. இத் திவ்யதேசத்தில்‌ எம்‌ பெருமான்‌ ஆழ்வாருக்குக்‌ காட்டிக் கொடுத்த குணம்‌ :’: மார்க்கபந்து சைத்யம்‌ ”” என்பது. அதாவது வழிக்குத்‌ துணையாகும்‌ பந்துவிடம்‌ பார்க்கப்படும்‌ குணங்‌களில்‌ முக்யமான குணம்‌ குளிர்த்தயே யாகையாலே அது இத் திவ்யதேசத்தில்‌ நன்கு புலனாகிறதென்கிறார்‌. *தாள தாமரை:’ என்கிற முதல்‌ பாட்டில்‌ * காள மேகத்தை யன்‌றி மற்றொன்றிலம்‌ கதியே ” என்பதனால்‌ இது அறியலாகிறது.-ஆழ்வார்‌, கீழ்‌ ஒன்பதாம்‌ பத்தில்‌ * நாளேலறியேன்‌ என்று எம்பெருமானைப்‌ பரமபதத்தில்‌ அடையும்‌ நாள்‌ ஏதோ தெரிய வில்லையே: என்று கலங்க திருக்கண்ணபுரத்து எம்பெருமான்‌ இந்த சரீரத்தின்‌ முடிவில்‌ வைகுந்தம்‌ கொடுப்பதாக நாளிட்டுக்‌ கொடுக்கிறான்‌. இதனை **மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌ ‘? என்‌று அருளிச்‌ செய்தார்‌-வைகுந்தம்‌ போம் போது அர்ச்சிராதி கதியின்‌ போக வேண்டும்‌, அவ்‌ வழியோ பழக்கமில்லாதது, அதில்‌ போம் போது ஓர்‌ ஆப்தனை வழித் துணை யாகக்‌ கொள்ள வேணும்‌. தானும்‌ பந்துக்களும்‌ இத்தனை காலம்‌ தனக்குத்‌ தீங்கிழைத்தவர்களே தவிர தன்னையும்‌ அவர்களையும்‌ ஆப்தர்களாக வெண்ணி வழிக்குத்‌ துணையாகக்‌ கொள்ள முடியாது. *யார்‌ ஆப்தராய்‌ வழித் துணை யாவார்‌ * என்று ஆழ்வார்‌ திகைக்க திருமோகூரில்‌ எம்பெருமான்‌ தன்‌ ஆப்ததையைக்‌ காட்டிக்‌ கொடுக்கிறான்‌. ஆழ்வாரும்‌ *திருமோகூர்‌ ஆத்தன்‌ தாமரை அடி யன்றி மற்றிலம்‌ அரணே ” என்று அவனை வழித்துணையாகப்‌ பற்றுகிறார்‌. ஆப்தனாயப்‌ வழித் துணையாமவனுக்கு வேண்டிய குணங்கள்‌ இத்திருவாய்‌ மொழியில்‌ பெருக்க ப்ரதிபாதிக்கப்படுகின்‌றன. அக்குணங்கள்‌
:1-ஸர்வேச்வரத்வம்‌ . . இது கார்யம் செய்யும்‌ எனத் துணிகைக்க வேணும்‌.
2-ஸர்வஜ்ஞத்வம்‌ .. இது கொண்டு செல்ல உபாயமறிகைக்கும்‌ விரோதியை அறிகைக்கும்‌ வேணும்‌.
3-ஸர்வ சக்தித்வம்‌ . . இது விரோதிகளைப்‌ போக்குகைக்கு வேணும்‌.
4-ப்ராப்தத்வம்‌ . . இது கார்யம்‌ செய்கைக்கு வேணும்‌.
5-ஆப்தத்வம்‌ . . இது நாம்‌ நம்புவதற்கு வேணும்‌.
6-தயை ... இது நம்மிடத்தில்‌ அவன்‌ இரங்குவதற்கு வேணும்‌.
7-வடிவழகு . . இது வழிச் செல்பவனுக்கு ஸ்ரம மாற்‌றுகைக்கு வேணும்‌
8-மதிப்புடமை … இது விரோதிகள்‌ மேலிடாமைக்காக வேணும்‌.-இக் குணங்கள்‌ இப்பதிகத்தின் பாட்டுக்களில்‌ காணலாகிறது.

இப்பதிகத்தில்‌- அண்ட மூவுலகளந்தவன்‌ ‘ என்றும்‌ * அவனடி. நிழல்‌ தடம்‌ ‘ என்றும்‌ திரிவிக்கிரமனும்‌, “தயரதன்‌ பெற்ற மரதக மணித் தடம்‌ ” என்று சக்ரவர்த்தித்‌ திருமகனும்‌ *: கூத்தன்‌ கோவலன்‌ :’ எனக்‌ கண்ண பிரானும்‌ குறிப்பிடப்படுவதை யிட்டு அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ தம்‌ ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ ஓர்‌ நிரூபணம்‌ பண்ணி அருளுகிறார்‌. அது மிகவும்‌ அநுபவிக்கத்‌ தக்கதாகையாலே மிக மிகச்‌ சுருக்கமாக இங்கு காட்டப்‌ படுகிறது-அதாவது-எம்பெருமான்‌ திரி விக்கிரமனாய்‌ மேலுலகங்களை யெல்லாம்‌ அளந்தது, தன்னை வழித் துணையாகக்‌ கொண்டு செல்வார்க்கு வழியில்‌ நிழல்‌ தடங்களை ஏற்படுத்தவும்‌; தான்‌ கடல்‌ கடைந்து அமுதமளித்தது, தன்னை வழித்‌ துணையாகக்‌ கொள்பவருக்கு * வழிக்கு தாரகத்தை கொடுப்பவன்‌ ‘ என்பதை அறிவிக்கவும் தானாம்‌; தேவர்களுக்கு தாரமாக அம்ருதம்‌ கொடுத்தவன்‌, தன்னைப்‌ பற்றிச்‌ செல்வார்க்கு வழியில்‌ தாரகமாக பாதேயம்‌ புண்டரீகாஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்‌’” என்று தன்‌ நாமங்களையும்‌ திருமேனியையும்‌ பாதேயமாகக்‌ கொடுத்து அழைத்துச்‌ செல்வனாம்‌. இப்படி அவன்‌ சிலரை அழைத்துச்‌ சென்றதுண்டோ? என வினா எழ, ராமாவதாரத்தில்‌ 6 பேரையும்‌, க்ருஷ்ணாவதாரத்தில்‌ 10 பேரையும்‌ நரஸிம்ஹாவதாரத்தில்‌ ஒருவரையும்‌ கஜேந்த்‌ரனையும்‌ ஆக 18 பேர்களை வழி நடத்தப்பட்டவர்களாக அறிவிக்கிறார்‌.
1-வேடன்‌–குஹப் பெருமாள்‌ 2-வேடுவிச்சி–சபரீ 3-பக்ஷி–ஜடாயு மஹாராஜர்‌ 4-குரங்கு–ஸூக்ரீவ மஹாராஜர்‌ முதலான எழுநூறு வெள்ளம்‌ வானரர்கள்‌: 5-சராசரம்‌–திருவயோத்தியிலுள்ள சராசர வஸ்துக்கள்‌ 6-இடைச்சி–சிந்தயந்தி 7-இடையன்‌ –ததிபாண்டன்‌ 8-தயிர்த்தாழி-ததி பாண்டனின்‌ தயிர்ச்சட்டி 9-கூனி–கண்ணனுக்குச்‌ சந்தனமிட்ட கூனி 10-மாலாகாரர்‌–கண்ணனுக்குப்‌ பூச்சூட்டினவர்‌ 11-பிண விருந்திட்டவன்‌-கண்டாகர்ணன்‌ 12- வேண்டடிசிலிட்டவர்‌–பத்த விலோசனத்தில்‌ ரிஷி பத்நிகள்‌ 13-அவன்‌ மகன்‌–ப்ரஹ்லாதன்‌ 14-அவன்‌ தம்பி–விபீஷணாழ்வான்‌. 15-ஆனை–கஜேந்தராழ்வான்‌ 16-அரவம்‌–ஸுமுகன்‌ 17- மறை யாளன்‌-கோவிந்த ஸ்வாமி 18- பெற்ற மைந்தன்‌ மார்க்கண்டேயன்‌ ஆக 18 பெயர்களை எம்பெருமான்‌ ஆப்தனாய்‌ வழி நடத்தின படியாலே அவனையே ஆழ்வார்‌ தமக்கு வழித் துணையாகப்‌ பற்றுகிறார்‌ * தாள தாமரை ” என்னும்‌ முதல்‌ திருவாய்‌ மொழியில்‌, என்பது ஆசார்ய ஹ்ருதய நிரூபணம்‌, இதனை மாமுநிகள்‌ ** தாளடைந்தோர்‌ தங்கட்குத்‌ தானே வழித் துணையாம்‌ காளமேகத்தைக்‌ கதி யாக்கி மீளுதலாம்‌ ஏதமிலா விண்ணுலகில்‌ ஏக வெண்ணும்‌ மாறன்‌ எனக்கேத முள்ளதெல்லாம்‌ கெடும்‌
‘
என்றருளிச்‌ செய்தார்‌.

அடுத்து 10ஆம்‌ பத்தில்‌ *கெடுமிடர்‌”” என்னும்‌ இரண்டாம்‌ திருவாய்மொழி: கீழ்‌ திருமோகூரில்‌ தன்னை ஆப்தனாகப்‌ பற்றின ஆழ்வாருக்கு, திருவநந்தபுரத்தில்‌ எம்பெருமான்‌, பரமபதத்தில்‌ போய்ச்‌ செய்யும்‌ அநுபவ கைங்கர்யங்களைத்‌ தன்‌ திறத்தில் செய்யலாமென ப்ராப்யதையைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. அதனை நெஞ்சு போல்வாரை ‘ தொண்டீர்‌ ? என்றழைத்து *நாம்‌ பரமபதம்‌ சென்று செய்யும்‌ அடிமைகள்‌ எல்லாவற்றையும்‌ இத் திவ்யதேசத்திலேயே செய்யலாம்‌, என்‌ உறவு பெற நினைப்பவர்கள்‌ இப்போதே நடமினோ ” என்று பிறருக்கு உப தேசிக்கிறார்‌-இத் திவ்ய தேசத்தில்‌ ப்ரகாசிக்கும்‌ குணத்தை ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ “ஸஸைந்ய புத்ர சிஷ்ய-ஸாத்ய ஸித்த பூ ஸுரார்ச்சனத்துக்கு முக நாபி பாதங்‌களை த்வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்த சயநத்திலே வியக்தம்‌ ‘ எனக் காட்டி யருளுகிறார்‌.-அதாவது–” அமரர்கோன்‌ அர்ச்சிக்கின்‌று ௮ங்ககப்‌ பணி செய்வர்‌ விண்ணோர்‌” என்று ஸேநா ஸஹிதரான ஸேனை முதலியாராகிற ஸாத்யரும்‌, * அமரராய்த்‌ திரிகின்றார்கட்காதி? என்று எம்பெருமானின்‌ புத்ரர்‌களான ப்ரஹ்மாதிகளாகிற ஸித்தரும்‌, படமுடையரவில்‌ பள்ளி பயின்றவன்‌ பாதம்‌ காண நடமினே நமர்களுள்ளீர்‌’” என்று ஆழ்வார்‌ உபதேசங்கேட்டு சிஷ்யர்களாய்‌ பூஸுரச்களான நாமும்‌, தன்னை அர்ச்சிக்கைக்கு–திரு முகம்‌ சுண்டு அநுபவிப்பவர்களான நித்யர்களுக்குத்‌ திருமுக மண்டலத்தையும்‌, திரு நாபியில்‌ தோன்றியவர்களாகையாலே ப்ரஹ்மாதிகளுக்குத்‌ திரு நாபியையும்‌, திருவடியைப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டியர்களாகையாலே ஆழ்வார்‌ சிஷ்யர்‌களாய்‌, பூ ஸுரர்களான நமக்குத்‌ திருவடிகளையும்‌ மூன்று திருவாசல்களாலே காட்டி யருளும்‌ திருவநந்தபுரத்தில்‌ நித்யஸுரிகள்‌ ஸம்ஸாரிகள்‌ என்று வாசி வையாத ஸாம்ய குணம்‌ வயக்தமா யிருக்கும்‌ என்கிறார்‌.

இது அர்ச்சா ஸ்தலமாகையாலே பரமபதத்தில்‌ காட்டில்‌ மேம்பாடோ, ஸாம்யமோ பெற்றதாக எங்கனமாகும்‌? என்கிற வினவுக்கு, இது * வாசமே கமழுஞ்‌ சோலை யாகையாலே பரம போக்யம்‌. எம்பெருமான்‌ உகந்து வர்த்திக்‌கையாலும்‌ நித்யமுக்தரும்‌ வந்தடிமை செய்கையாலும்‌ பரமபதத்துக்குச்‌ சமம்‌. கெடுமிடராயவெல்லாம்‌ கேசவாவென்ன நாளும்‌ கொடுவினை செய்யும்‌ கூற்‌றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌” என்றும்‌ *’ எழுமையும்‌ ஏதம்‌ சாரா’ என்றும்‌ பகவதநுபவத்துக்கு இடையூற்றைப்‌ போக்கும்‌ சிறப்புடையதாகையாலே ருசி பிறந்த போதே இவ்வுடம்போடே இடரற்று எல்லா வடிமைகளையும்‌ செய்யும்‌ இடமாகையாலே பரம பதத்தில்‌ மேம்பாடுடையது. இன்னம்‌, பரம புருஷார்த்‌ தம்‌ * அடியார்கள்‌ குழாங்களை உடன்‌ கூடுவது என்று கொலோ ”‘ என்று நித்‌ய ஸூரிகளுடன்‌ கூடப்பெறுகையால்‌ நித்யர்களும்‌ இங்கே வருகிறபடியாலே இத் திவ்ய தேசத்தில்‌ அவர்களுடனும்‌ கூடலாம்‌; சரீரம்‌ உள்ளதனையும்‌ இங்கு கைங்கர்யம்‌ செய்துவிட்டு சரீரம்‌ கழிந்ததும்‌ அவர்களுடன்‌ பரமபதம்‌ செலலலாம்‌. ஆகவே இதுவே ப்ராப்யம்‌ என்கிறார்‌.-பரமபதத்தைக்‌ காட்டிலும்‌ உகந்தருளின நிலங்களுக்குப்‌ பெருமையுண்டு, உகந்தருளின நிலங்கள்‌ சேதனர்க்கு ஆசையை உண்டாக்கும்‌. ஆசையுண்டானல்‌ உபாயமாகும்‌. உபாயமாகக்‌ கொண்டால்‌ ப்ராப்யமா யிருக்கும்‌, ஆகவே பரமபதத்தில்‌ சிறந்த திருவநந்தபுரமே பரம ப்ராப்யம்‌ என்கிறார்‌.

முக்யமாக திருவநந்தபுர வாஸிகளுக்கு யம வச்யதை இல்லை யென்பது ஸாரம்‌.“கடுவினை களையலாகும்‌. நடமினோ நமர்களுள்ளீர்‌ * என்கிற 8ஆம்‌ பாட்டில்‌ ஒர்‌ ஐதிஹ்யம்‌ காண்கிறது. அதாவது–கோயிலில்‌ மார்கழித்‌ திரு நாள்‌ இராப்பத்து நடைபெறும்போது கோஷ்டியில்‌ சிஷ்யர்களுடன்‌ ஆள வந்தார்‌ எழுந்தருளி யிருந்தாராம்‌; அப்போது அரையர்‌ ஸ்வாமி இத்திருவாய்‌ மொழியை கையில்‌ தாளத்துடன்‌ தேவகாநத்தில்‌ ஸேவித்து வந்தவர்‌ இப்பாசுரத்தைப்‌ ஸேவிக்கும் போது ஆளவந்தாரை நோக்கி * படமுடையரவில்‌ பள்ளி பயின்றவன்‌ பாதம்‌ காண நடமினோ நமர்களுள்ளீர்‌ நாமுமக்கறியச்‌ சொன்னேம்‌”” என்று இவரை நியமிக்கிறாப் போல ஸேவித்தாராம்‌. உடனே ஆளவந்தாரும்‌ இது ஆழ்வார்‌ நியமனமென உகந்து திருநாள்‌ பூர்த்தியான மறு நாளே சிஷ்யர்களுடன்‌ திரு வநந்தபுரம்‌ எழுந்தருளினாராம்‌.
இத்திருவாய்மொழி பரோபதேச பரமாகையாலே இதில்‌ ஆழ்வார்‌ உப தேசிக்கும்‌ அர்த்தங்களை ஆசார்ய ஹ்ருதயக்காரர்‌ .** நெஞ்சு போல்வாரைத்‌ தொண்டீரென்றழைத்து 1. வலஞ்செய்து -2. எண்ணுமின்‌ -3 பேசுமின்‌ 4. கேண்மின்‌ 5. காண்மின்‌ 6. நடமின்‌ -7-புகுதும்‌ என்று 1. கர்த்தவ்யம்‌ 2-ஸ்மர்த்தவ்யம்‌ -3-வக்தவ்யம்‌ -4-ச்ரோதவ்யம்‌ -5-த்ரஷ்ட்வ்யம்‌ 6. கந்தவ்யம்‌ 7. வஸ்தவ்யம்‌ எல்லாம்‌ வெளியிட்டு ** என்று ஸங்க்ரஹிக்கிறார்‌. இதனை மாமுனிகள்‌ * கெடுமிடர்‌ வைகுந்தத்தைக்‌ கிட்டினாற்‌ போல தடமுடையனந்த புரந்தன்னில்‌–படவரவில்‌ கண்டுயில்‌ மாற்காட்செய்யக்‌ காதலித்தான்‌ மாறன்‌ உயர்‌ விண்டனிலுள்ளோர் வியப்பவே :! என்‌றருளிச்‌ செய்தார்‌.

அடுத்தது 10ஆம்‌ பத்தில்‌ *“வேய்மருதோனிணை ” என்கிற மூன்றும்‌ திருவாய்மொழி. இது ஒர்‌ தனித்தன்மை பெற்றது. கீழ்‌ திருவநந்தபுரத்தில்‌ அநுபவம்‌ மானஸிகமாய்‌ பாஹ்யமாக அநுபவாபேக்ஷை பிறந்து அது கிடையாமையாலே ஆழ்வாருக்கு ஓர்‌ கலக்க முண்டாகிறது. அதாவது எம்பெருமானை அநுபவித்துக்‌ கொண்டிருக்கும் போதே எம்பெருமானைப்‌ பிரிந்து அநுபவ மிழந்து கிடப்பதாக ஓர்‌ கலக்கம்‌ உண்டாகிறது. இதற்கு ஹேது இத் தேஹத்தை மறக்கும்படி எம்பெருமானைப்‌ பெறாததேயாம்‌. தேஹத்தை மறக்கும்படி பகவதநுபவம்‌ ஏற்படுவது பரமபதத்திலேயாம்‌. எம்பெருமான்‌, தன்னை இன்னம்‌ இப் பூமியிலேயே வைத்து விடுவனோே என்கிற சங்கை உண்டாயிற்று ஆழ்வாருக்கு.-இத்தசையை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்‌. அதாவது அவனை அநுபவிக்கும்போதே, “எம்பெருமானே, நீ என்னைப்‌ பிரியா திருக்க வேணும்‌ அநுபவிக்கப்‌ பண்ண வேணும்‌ என்று வளைக்கை ”. இதற்கு அந்யாபதேசமாவது கண்ணனுடன்‌ ஒரு படுக்கையில்‌ படுத்திருக்கும்‌ ஒர்‌ கோபிகை, அவனால்‌ நன்கு அணைக்கப் பட்டிருக்கச்‌ செய்தேயும்‌, அவன்‌ இவளை விட்டகல வேணும்‌ என்கிற நினைவின்‌றிக்கே இருக்கச்‌ செய்தேயும்‌, பொழுது விடிவதற்கு உண்டான அடையாளங்களை அறிந்து, பொழுது விடிந்தால்‌ கண்ணன்‌ பசு மேய்க்கப்‌ போய்‌ விடுவான்‌ என உறுதி கொண்டு, அவளைப்‌ பிரிந்தாளாகவே கொண்டு அவன்‌ முன்னிலையிலேயே * கண்ணா நீ பசு மேய்க்கப்‌ போகாதே கொள்‌; நீ பிரிந்திருத்தலால்‌ நான்‌ பாதக பதார்த்தங்களால்‌ படும்‌ நலிவைப்‌ பார்‌” எனக்‌ கண்ணனுக்கு அறிவித்து அவனைப்‌ பசு மேய்க்கப்‌ போகாமல்‌ தடுக்கிறாள்‌. அவன்‌ பிரிந்து போயிருந்து இவள்‌ பட்டால்‌ வந்து ஸமாதானம்‌ செய்யலாம்‌. போகப்‌ புறப்பட்டிருந்தால்‌, தவிர்ந்து ஸமாதானம்‌ செய்யலாம்‌ அவனுக்கோ இப்போது போகும்‌ உத்தேசமே இல்லை. இவளையே கெட்டியாக அணைத்துக்‌ கிடக்கிறான்‌. ஆகவே போகாதவனைப்‌ போனானாகக்‌ கொண்டு இவள்‌ படும்‌ அலமாப்பை அவன்‌ ஸர்வஜ்ஞனானாலும்‌ ஸர்வ சக்தனானாலும்‌ எங்ஙனம்‌ தவிர்ப்பது? ஆக எம்‌ பெருமானுக்கே பரிஹரிக்க முடியாததொரு தசை கோபிகைக்குப்‌ பிறந்ததாம்‌-இத்தால்‌ பகவதநுபவத்தை இடரறச்‌ செய்துவரும்‌ ஆழ்வார்‌ ஸம்ஸாரத்‌ திலிருப்பால்‌ பகவதநுபவம்‌ தடைபடுவதாக ஓர்‌ நினைவு கொண்டு அருளிச்‌ செய்யும்‌ திருவாய்‌ மொழியிது-அந்யாபதேசத்தில்‌ விடிவுக்குண்டான அடையாளங்கள்‌ போல. இங்கு ஆழ்வாருக்கு ஸம்ஸாரத்தில்‌ தேஹத்தோடிருப்பு. அங்கும்‌ விடிவுக்குண்டான அடையாளங்களால்‌ விடிந்தாலும்‌ கிருஷ்ண விச்லேஷமில்லை. இங்கும்‌ ஆழ்‌ வாருக்கு இஸ் ஸம்ஸாரத்திலிருப்பும்‌ தேஹ ஸம்பந்தமும்‌ பகவதநுபவ விரோதி யன்று. அங்கு கோபிகை படுகிறாள்‌. இங்கு ஆழ்வார்‌ படுகிறார்‌. இத்‌ திருவாய்மொழிக்குப்‌ பலம்‌ காட்டும் போது * இவையும்‌ பத்து அவற்றின்‌ சார்வே ‘ என்பதற்கு அவற்றினருகே இதுவுமொரு திருவாய்மொழியே ‘ என நஞ்ஜீயர்‌ அருளிச்‌ செய்வராம்‌. மற்றைத்‌ திருவாய்மொழிகளில்‌ இதற்கு வாசி–இது விலஷணம்‌ என்றபடி.

இத்திருவாய்மொழி புருஷார்த்த நிர்ணயத்தில்‌ முக்யமானது. எங்ஙனே வென்னில்‌ அர்த்த பஞ்சகத்தில்‌ புருஷார்த்த ஸ்வரூபத்துக்கு *’ எம்மாவீடு:” *ஒழிவில்காலம்‌:” ** நெடுமாற்கடிமை”’ ** வேய்மருதோளிணை ” என்கிற இது, ஆக நான்கு திருவாய்மொழிகள்‌ ப்ரதிபாதகங்கள்‌. “*எம்மா வீட்டில்‌?’, புரு ஷார்த்தத்தை ! தனக்கேயாக எனைக்‌ கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான்‌ கொள்‌ சிறப்பு‘ என்று எம்பெருமானுக்கே விநியோகப்படுமது புருஷார்த்த மென அருளிச்செய்தார்‌. தனக்கேயாகக்‌ கொள்வது எவ்விதமென்பது இத்‌ திருவாய்மொழியில்‌ *உகக்கு நல்லவரொடும்‌’” என்கிற பாட்டால்‌ காட்டப்‌ படுகிறது.--அதாவது–படுக்கையில்‌ அணைந்து கிடக்கும்‌ பெண் கண்ணனைப்‌ பசு மேய்க்கப்‌ போகாதே கொள்‌:’ என்றாள்‌. அவன்‌ இவள்‌ நெஞ்சறிவதற்‌காக, **நான்‌ பசு மேய்க்கையை வியாஜமாகக்‌ கொண்டு என்னை அங்கு எதிர்‌ நோக்கியிருக்கும்‌ சில பெண்களை அணைவதற்காகத் தான்‌ போகிறேன்‌, நீ போகாமல்‌ தடுத்தால்‌ அவர்கள்‌ என்படுவர்களோ, என்னாலும்‌ அவர்களைப்‌ பிரித்திருக்க்‌ வொண்ணாது, ஆகவே பசு மேய்க்கப் போகை தவிராது :‘ என்றானாம் -அவனைப்‌ பார்த்துச்‌ சொல்லுகிறார்கள்‌ கோபிகைகள்‌, ‘உகக்கு நல்லவரொடும்‌ உழிதந்து உன்தன்‌ திருவுள்ளம்‌ இடர்கெடுந் தோறும்‌ நாங்கள்‌ வியக்க வின்புறுதும்‌ எம் பெண்மை யாற்றோம்‌ எம்பெருமான்‌ பசு மேய்க்கப்‌ போகேல்‌’? என்று. அதாவது–” உன்னால்‌ உகக்கப் பட்டவர்களோடு நீ எங்கள்‌ கண் வட்டத்தில்‌ நன்கு கலக்கலாம்‌. அதனால்‌ உன்‌ திருவுள்ளத்துக் குண்டான குறை நீங்க நீங்க நாங்கள்‌, நீ எங்களுடன்‌ கலப்பதால்‌ நாங்கள்‌ பெறும்‌ இன்பத்தைக்‌ காட்டிலும்‌, அவர்களோடு கலப்பதால்‌, நீ பெறும்‌ இன்பத்தைக்‌ காட்டிலும்‌ நாங்கள்‌ அதிக வின்பம்‌ பெறுவோம்‌. உன்‌ மகிழ்வுக்கு இடையூறான எங்கள்‌ பெண்மையை வேண்டோம்‌. அதற்காக நீ பசு மேய்க்க என்று போகவேண்டாம்‌. அவர்களை இங்கேயே அழைத்து அவர்களுடன்‌ கலப்பாயாக, நாங்கள்‌ அச் சேர்த்தியில்‌ எல்லா வடிமைகளையும்‌ செய்யப்‌ பெறுவோம்‌ ‘ எனக்‌ கண்ணனை வேண்டுகிறார்கள்‌. இதுவே பாரதந்தர்யத்தின்‌ கார்யமான புருஷார்த்தத்தின்‌ எல்லையாம்‌.

இங்கு ஆசார்ய ஹ்ருதயகாரர்‌ ஆழ்வாருக்கு ஏற்பட்டிருக்கும்‌ பகவதநுபவத்தை அக்ரூரர்‌ பெற்றதற்கும்‌ மதுரா நகரத்துப்‌ பெண்கள்‌ பெற்றதற்கும்‌ ஸமமாகக்‌ காட்டி அப்படியிருந்தும்‌ அநுபவம்‌ பெராதவராகத்‌ துடிக்கிறார்‌ ஆழ்வார்‌ என்‌கிறார்‌. இதனை மாமுனிகள்‌ நூற்றந்தாதியில்‌ இப் பதிகத்துக்கான பாட்டில்‌ “ வேய் மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தை
தாள்மருவாந் தள்மையினால்‌ தன்னை யின்னம்‌–பூமியிலே
வைக்கு மெனச்சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள்சார்வு ?
என அருளிச்‌ செய்கிறார்‌.

அடுத்த திருவாய்மொழி * சார்வே தவ நெறிக்கு * என்னும்‌ நான்காவது. ஒரு சாஸ்த்ரத்தில்‌ ஒரர்த்தம்‌ முதலில்‌ காட்டப்பட்டதே யானால்‌ அதை அந்த சாஸ்த்‌ தரத்தின்‌ முடிவில்‌ பலத்தோடே சேர்ந்ததாகக்‌ காட்டி முடிக்க வேணும்‌. இதற்கு நிகமநம்‌ ” எனப் பெயர்‌. ஆழ்வார்‌ ** உயர்வற உயர்நலம்‌ ‘” என்னும்‌ முதல்‌ திருவாய்மொழியில்‌ நலமுடையவன்‌ என்று ப்ராப்யமான பர ஸ்வரூபத்தையும்‌ “தொழுது எழு என்‌ மனனே” என கைங்கர்யமாகிற புருஷார்த்த ஸ்வரூபத்தையும்‌ காட்டி யருளினார்‌. இந்த முதல்‌ திருவாய்மொழியின்‌ அர்த்தத்தை “*கெடுமிடராய வெல்லாம்‌ என்றும்‌ 10ஆம்‌ பத்தில்‌ இரண்டாம்‌ திருவாய்மொழியால்‌ ‘:படமுடை அரவில்பள்ளி பயின்‌ றவன்‌ பாதம்‌ காண நடமினோ நமர்களுள்ளீர்‌ நாமுமக்‌ கறியச்‌ சொன்னேம்‌’: என்று பர ஸ்வரூபமே ப்ராய்யமென்றும்‌ **கடைத்தலை சீய்க்கப்‌ பெற்றால்‌ கடுவினை களையலாமே என்று கைங்கர்யமே புருஷார்த்த மென்றும்‌ நிகமித்து, அடுத்த மூன்றாம்‌ திருவாப்மொழியான * வேய்மரு தோளிணையில்‌’? “உன்‌ தன்‌ திருவுள்ளம்‌ இடர்‌ கெடுந்தோறும்‌ நாங்கள்‌ வியக்க வின்புறுதும்‌? என்று த்வயத்தில்‌ உத்தர கண்டத்தில்‌ நம: சப்தார்த்தமான கைங்கர்யத்தில்‌ களை யறுத்தலை உபபாதித்தார்‌.
ஆக முதல்‌ திருவாய்மொழியின்‌ உயர்வற உயர் நலத்துக்கு நிகமநங்கள்‌ கெடுமிடர்‌ ‘” “வேய்மருதோளிணை *’ இரண்டு திருவாய்மொழிகள்‌. நான்காவதாக சர்வே தவநெறியால்‌ வீடுமின்‌ முற்றத்தில்‌ பிரதிபாதிக்கப் பட்ட ப்ரபத்‌தியை நிகமிக்‌கிறார்‌, * சார்வே தவநெறிக்குத்‌ தாமோதரன்‌ தாள்கள்‌ ” என்று. ஆவதான கண்ணன்‌ கழலிணையால்‌ பத்துடை யடிவரில்‌ * வணக்குடைத்‌ தவ நெறி வழி நின்று ‘ என்பதனால்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட பக்தியை நிகமிக்கிறார் –

“ வீடுமின்‌ முற்றவும்‌ ‘* என்ற திருவாய்மொழி பக்தி பரமே யென்பது எம்பெருமானார்‌ நிர்வாஹம்‌; அப்படியானாலும்‌ இந்த ‘*சார்வே தவ நெறி” பக்திக்கு நிகமநமாகக்‌ கொள்வது, இதனை மாமுனிகள்‌
சார்வாகவே யடியில்‌ தானுரைத்த பத்தி தான்
சீரார்‌ பலத்துடளே சேர்ந்ததனை–சோராமல்
கண்டுரைத்த மாறள்‌ கழலிணையே நாடோறும்‌
கண்டுகக்கு மென்னுடைய கண்
‘என வருளிச்‌ செய்கிறார்‌.

அடுத்த 5ஆம்‌ இருவாய்மொழி கண்ணன்‌ கழலிணை ” என்பது:எம்பெருமான்‌ தம்மைப்‌ பரமபதம்‌ கொண்டு செல்ல துவரிக்குப்படியைக்‌ கண்ட ஆழ்வார்‌, உலகத்தாருக்கு பக்திமான்களின்‌ பரிமாற்றத்தையும்‌ உபதேசிக்கிறார்‌ * கண்ணன்‌ கழலிணையில்‌ “.-இவர்‌ மிக்க க்ருபை யுடையராகையாலே இது வொன்றும்‌ இவர்களுக்குக்‌ குறையக்‌ கூடாதென்று கேட்கிறவர்கள்‌ நெஞ்சில்‌ படவும்‌, எம்பெருமான்‌ தம்மைக்‌ கொண்டு போக த்வரிக்கிறபடியால்‌ அவகாச மின்மையாலும்‌ சிறிய சிறிய பாட்டுக்களால்‌ பக்திமான்களுடைய பரிமாற்றத்தை வெளியிடுகிறார்‌.-இதில்‌ இவர்‌ உபதேசிக்கும்‌ கிரமமாவது–பக்திக்கு ஆலம்பந மந்தரத்தை *நாரணமே”’ என்றும்‌, அதிலர்த்தாநுஸந்தானமே மோக்ஷ ஸாதன மென்பதை “ நாரணனெம்மான்‌ ” என்கிற பாட்டாலும்‌ “ தானே உலகெல்லாம்‌” என்ற பாட்டாலும்‌ காட்டுகிறார்‌. அவ் வழியாலே பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று, தாள் வாய்‌ மலரிட்டு நாள்‌ வாய்‌ நாடீரே” என்றும்‌, கரண த்ரயத்தாலே அவனை ஆச்ரயிக்க வேணுமென்பதை *’ நாடீர்‌ நாடோறும்‌” என்கிற பாட்டா லும்‌, * ஆச்ரயிப்பார்க்கு அவன்‌ ஸுலபன்‌ என்பதை *: மேயான்‌ வேங்கடம்‌ ” , என்ற பாட்டாலும்‌, ஸ்ரீய:பதியாகையாலே ஸ்வாராதன்‌ என்பதை “’ மாதவ னென்றென்று :’ என்கிற பாட்டாலும்‌, ஆச்ரயிக்குமிடத்தில்‌ அதிகார ஸம்பத்தி வேண்டா, ருசி யுடையார்‌ எல்லாரும்‌ இதற்கதிகாரிகள்‌ ‘ என்பதை ** பேரார்‌ ஓதுவார்‌ என்றும்‌, ** மனமுடையீர்‌ ** என்றும்‌, புஷ்பாத் யுபகரணங்களைக்‌ கொண்டு ஆச்ரயிக்க வேணும்‌ என்பதை * சுனை நன்மலரிட்டு ” என்றும்‌, விரோதி நிவ்ருத்தியை ‘*அமரா வினைகளே ” * வினை வல்லிருளென்றும்‌ முனைகள்
வெறுவிப்போம்‌ ” என்றும்‌ ௮ர்த்த விசேஷங்களை உபதேசித்துத்‌ தாம்‌ பரோப தேசத்தைத்‌ தலைக் கட்டுகிறார்‌.
ஆக திருவாய்மொழியில்‌ கடைசி உபதேச பதிகம்‌ இத் திருவாப்‌ மொழியே யாகும்‌. இங்கு ஆசார்ய ஹ்ருதயம்‌: ** எண்‌ பெருக்கில்‌ என்னும்‌ திருநாமத்தைச்‌ சுருக்கி மாதவனென்று த்வயமாக்கி கரணத்ரய ப்ரயோக விருத்தி ஸம்ஸாரிகளுக்குக்‌ கையோலை செய்து கொடுத்து ‘” என்பது. இதனை மாமுனிகள்‌. ்‌
கண்ணனடி யிணையில்‌ காதறுறுவார்‌ செயலை
திண்ணமுறவே சுருங்கச்‌ செப்பியே–மண்ணவர்க்குந்‌
தானு பதேஸிக்கை தலைக் கட்டினான்‌ மாறன்‌
ஆன புகழ் சேர்‌ தன்னருள்‌
-என்றருளிச்‌ செய்தார்‌.

அடுத்தது * அருள்‌ பெறுவார்‌ **” என்கிற ஆறாம்‌ திருவாய்மொழியாகும்‌ :இங்கு ஈட்டின்‌ அவதாரிகையில்‌ ‘‘பொய்நின்‌ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர ஈச்வரனை ஆழ்வார்‌ பின்‌ தொடர்ந்தபடி சொல்லிற்று; இது தொடங்கி ஆழ்வாரை ஸர்வேச்வரன்‌ பின்‌ தொடருகிறபடி சொல்லுகிறது என்று, இது முதல்‌ எம்பெருமானின்‌ அவா உபபாதிக்கப்‌ படுகிறது என்கிறார்‌-இது :* திருவாட்டாறு என்னும்‌ திவ்ய தேசப்‌ பதிகம்‌. அத் திவ்யதேசத்‌தில்‌ ப்ரகாசிக்கும்‌ குணம்‌ ஆசார்ய ஹ்ருதயத்தில்‌, மோக்ஷ தாநத்தில்‌ ப்ரணத பாரதந்தர்யம்‌ வளம் மிக்க நதியிலே கரை புரளும்‌ ‘” என்று ஆச்ரித பாரதத்தர்ய மாகக்‌ காட்டப்படுகிறது. அதாவது! ஆழியான்‌ அருள்‌ தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதி வகையே * என்று ! இப்படி ஸர்வ ஸ்மமானவன்‌ ஆச்ரிதற்கு மோக்ஷம் கொடுக்குமளவில்‌ அவர்கள்‌ விதித்தபடியே செய்வானாய் நிற்கிறான்‌ ‘ என்று ஆச்ரித பாரதந்தர்யம்‌ வளம்‌ மிக்க வாட்டாற்றிலே எல்லை யில்லாமல்‌ பெருகுகிறது என்பதாம்‌. ஆழ்வாரைப்‌ பெற எம்பெருமான்‌, ஆழ்வார்‌ தன் பால்‌ அவா கொள்வதற்கு முன்பாகவே அவா கொண்டு திருவாட்‌டாற்றிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி யிருக்கிறானாம்‌. ஆழ்வார்‌ பரமபதம்‌ வர இசைந்த உடனேயே அவர்‌ நினைவின்‌ படி ஆழ்வாரைப்‌ பரமபதம்‌ கொண்டு செல்ல அவர்‌ நியமனத்தை எதிர்பார்த்து த்வரையுடன்‌ நிற்கிறானாம்‌. இதுவே அவனின்‌ ப்ரணத பாரதந்தர்யமாவது, இதனை. ஆழ்வார்‌ * ஆழியான்‌ அருள்‌ தருவான்‌ அமைகின்றான்‌ அது நமது விதி வகையே”’ என்றருளிச்‌ செய்கிறார்‌. அதாவது ஆழ்வாரின்‌ திருமேனியை மிகவும்‌ விரும்பி இருக்கும்‌ எம்பெருமான்‌ ஆழ்வாரை அவர்‌ திருமேனியுடன்‌ கொண்டு செல்ல ஆழ்வாரின்‌ நியமனத்தை எதிர்பார்த்து நிற்கிறானாம்‌. இனி இத்திருவாய் மொழியில்‌ காட்டப்படும்‌ அர்த்தங்கள்‌ சுருங்கக்‌ காட்டப்படுகின்‌றன-எம்பெருமானின்‌ ப்ரணத பாரதந்தர்யத்தைப்‌ பிறருடன்‌ உசாவித்‌ தரிக்க வேண்டும்‌ நிலையேற்பட்டது ஆழ்வாருக்கு. ஸம்ஸாரிகள்‌ சப்தாதி விஷயங்‌களிலே மண்டினவர்களாகையாலே அவர்களை விட்டார்‌. ஸர்வேச்வரன்‌ தம்‌மிடத்தில்‌ அபிநிவேசாதிசயத்தை உடையவனாய்‌ முன்னடி தோற்றாதே யிருக்‌கிறான்‌; அவனையும்‌ விட்டார்‌. இனி தமக்கு உடன்பட்ட தம்‌ நெஞ்சைப்‌ பார்த்து, எம்பெருமான் படிகளையும்‌ நெஞ்சு செய்ய வேண்டியதையும்‌ அருளிச்‌ செய்கிறார்‌.

இங்கு ஆசார்ய ஹ்ருதயம்‌ ‘**முந்துற்ற நெஞ்சுக்குப்‌ பணி மறவாது மருளொழி நகு கைவிடேல்‌ என்று க்ருத்யா க்ருத்யங்களை விதித்து ”’ என்பது. அதாவது “தொழுது எழு என்‌ மனனே ‘‘ என்று ப்ரதமத்திலே உபதேசிக்கும்‌ * முந்துற்ற நெஞ்சு” என்னும்படியே தம்மிலும்‌ பகவத் விஷயத்தில்‌ முற்பட்டிருக்கிற தம்‌ திருவுள்ளத்துக்கு ** பணி நெஞ்சே நாளும்‌ பரமபரம்பரனை ” வாழி. யென்னெஞ்சே மறவாது வாழ் கண்டாய்‌” *மருளொழி நீ மடநெஞ்சே ” நரகத்தை நகு நெஞ்சே!” * வாழி மனமே கைவிடேல்‌ ” என்று நம்‌ ப்ரதிபந்தகங்களை யெல்லாம்‌ போக்கித்‌ தானே யடிமை கொள்ளும்‌ ஸர்வஸ்மாத் பரனை அநுபவிக்கப்‌ பார்‌; உனக்கு இஸ் ஸம்ருத்தி மாறாதே சென்றிடுக; பகவத்‌ விஷயம்‌ கைபுகுந்து விட்டதென்று, இதர விஷயங்கள்‌ கைபுகுந்தால்‌ அவைகளை விடுமாபோலே விடாதே கொள்‌. உனக்கு திவ்ய தேசங்களில்‌ மண்டி ‘ பரம பதம்‌ வேண்டேன்‌ ” என்பதும்‌ ஓர்‌ நினைவுண்டு, அந்த ப்ரமத்தை தவிரப் பார்‌;. நான்‌ பரமபதத்தேறப்‌ போகா நின்றேன்‌, நெடுநாள்‌ நம்மைக்‌ குடிமக்களாக்கி அவமானப்படுத்தின ஸம்ஸாரத்தைப்‌ புரிந்து பார்த்து சிரித்துப்‌ போகவேணும்‌. நமக்கு இந்த ஐச்வர்யமெல்லாம்‌ திருமாலிருஞ்சோலை மலையாலே வந்தது, அத்‌ திருமலையைக்‌ கைவிடாதே கொள்‌ என்று செய்ய வேண்டியதையும்‌ தவிர வேண்டியதையும்‌ விதிக்கிறார்‌ ஆழ்வார்‌.

இதற்கு முன்பெல்லாம்‌ ஸர்வேச்வரனாகிறான்‌ ஸர்வ நியந்தாவாய்‌ ஸ்வதந்தரனாய்‌ இருப்பானொருவன்‌ என்றிருந்தார்‌, இப்போது அங்ஙனல்ல. ஆச்ரித பாரதந்தர்யமே அவனுக்கு ஸ்வரூபம்‌ என்கிறார்‌. முன்பெல்லாம்‌ தம்மாலே பார்தந்தர்யத்தை இழந்தார்‌. இப்போது அவனாலே பாரதந்தர் யத்தை யிழக்‌கிறார்‌. ஆக தம்‌ நியமனப்படி எம்பெருமான்‌ நடக்க நிற்பதை உபபாதிக்கிறது இத்திருவாய்மொழி.-இங்கு மாமுனிகள்‌
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து – இரு விசும்பில்
இத்துடள்‌ கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும்‌ மாறன் செஞ்சொல்
-என்று அருளிச்‌ செய்கிறார்‌.-இங்கு சுத்தியாவது ஆச்ரித பாரதந்தர்யம்‌.

அடுத்த திருவாய்மொழி ஏழாவதான “செஞ்சொற்‌ கவிகாள்‌”‘ என்பது-இது திருமாலிருஞ்சோலைக்கான பதிகம்‌. இதில்‌ ஆழ்வார்‌ திருமேனியில்‌ எம்பெருமான்‌ கொண்டிருக்கும்‌ வ்யாமோஹம்‌ பேசப்படுகிறது. ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ திருமாலிருஞ்சோலை மலையில்‌ ப்ரகாசிக்கும்‌ குணத்தைக்‌ காட்டும் போது * த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்‌ மருள்கள் கடியும்‌ மயல் மிகு பொழிலிலே தழைக்கும்‌” என்கிறார்‌. அதாவது-முமுக்ஷுக்களுக்கு விடத் தக்கதான அவர்கள்‌ தேஹத்தில்‌, இதுவே அவர்களுக்குக்‌ கடைசி தேஹமாகையாலே மனைவியின்‌ எச்சிலை விரும்பும்‌ ராஜ புத்ரனைப் போலே வஞ்சக்‌ கள்வனாய்‌ ஆழ் வாரின்‌ *நெஞ்சுமுயிரும்‌ உள்‌ கலந்து ” * மாயவாக்கையதனுள்‌ புக்கு” என்று இதின்‌ தோஷம்‌ பாராதே உட்புக்கு ‘ திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்‌ கடலே என்‌ தலையே திருமால்‌ வைகுந்தமே தண்‌ திருவேங்கடமே எனதுடலே ‘! இத்யாதிப்படியே உகந்தருளின நிலங்கள்‌ எல்லாவற்றிலும்‌ பண்ணும்‌ விருப்‌பத்தை ஆழ்வார்‌ திருமேனியின்‌ ஏகதேசத்திலே பண்ணினான்‌. ஆழ்வார்‌ பரம பதம்‌ போனாலும்‌ எனக்கு சரீர ஸம்பந்தம்‌ போகாது போலிருக்கிறதே என்று, எம்பெருமானை ** இச் சரீரத்தைக்‌ கழித்துக்‌ கொண்டு போக வேணும்‌ என்றார்‌. அவன்‌ எனக்கு இதில்‌ ஆதரமிக்கிருக்கிறபடியால்‌ விடமாட்டேன்‌ என்றான்‌. இச் சரீரத்தின்‌ தோஷம்‌ அறிவித்தால்‌ விடுவனென்று 24 தத்‌வமான ப்ரக்ருதி ப்ராக்ருதத்தால்‌ ஆனது இது, இத்தை விட வேணும்‌” என்றார்‌, அவன்‌ விட இசையாத போது சரணாகதி பண்ணி விடுவிக்கப்‌ பிரார்த்திக்கிறார்‌. ௮வன்‌ கீழ்‌ * அது நமது விதிவகையே:’ என்று இவர்‌ சொல்படி செய்வானாய்‌ தன்னை அமைத்‌துக்‌ கொடுத்திருக்கையாலே, ஆழ்வாரின்‌ பிரார்த்தனைக்கு இசைந்தான்‌.-ஆழ்வாரும்‌, “ஸர்வேச்வரனாய்‌ இருந்து வைத்து என் சொல்‌ கேட்கிறானே, இது வென்ன சீல குணம்‌? என்று எம்பெருமானின்‌ சீல குணத்தில்‌ ஈடுபட்டு சிதிலராகி அப்படி மற்றையார்‌ ஆகாமலிருக்க கவி பாடுவாரெல்லாரையும்‌ அழைத்து நீங்கள்‌ கவி பாடும் போது சீல குணத்தில்‌ இழியாதீர்கள்‌; அது உங்களை அழித்து விடும்‌ ‘, என்கிறார்‌. இவ்விடத்தில்‌ எம்பெருமானார்‌ நிர்வாஹம்‌–எம்‌ பெருமானின்‌ உயிர்‌ காத்தாட்‌ செய்யுங்கோள்‌; அவன் தன்‌ சீல குணத்தால்‌ மேல்‌ விழ வருவான்‌ அப்போது உங்கள்‌ தாழ்வை நினைத்து இறாய்த்துப்‌ பின் வாங்கி அவனுக்கும்‌ முடிவைத்‌ தேடாதீர்கள்‌ என்பதாம்‌. ஆக இத்திருவாய்மொழி யில்‌ எம்பெருமானின்‌ த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்‌ பிரகாசிக்கிறது.

இங்கு ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ ஓர்‌ நிரூபணம்‌ காணப்படுகிறது, அதாவது–எம்பெருமான்‌ ஆழ்வாருக்கு மயர்வறமதிநலமருளி, * வளவேழுல”கில்‌ நை ச்சியம்‌ தலை யெடுத்துக்‌ கூடோமென்ற ஆழ்வாரைத்‌ தன் பால்‌ மனம்‌ வைக்‌கத் திருத்தி, ஆழ்வாரைக் கொண்டு செல்லுமிடமான பரமபதத்தை, ஆழ்வார்‌ வரவுக்குத்‌ தகுந்ததாம்படி அலங்கரிக்கத்‌ திருநாட்டுக் கெழுந்தருளினானாம்‌. அவன்‌ திருநாட்டை அலங்கரித்துத்‌ திரும்புவதற்குள்ளாக இங்கு ஆழ்வார்‌, தம்‌ பாசுரங்களாலே ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌ எம்பெரு மானுடைய பெயரையும்‌ அவன்‌ ஒப்பனை யழகையும்‌ பேசும்படி திருத்தி விட்டா ராம்‌. **’ஆழ்வாரைக்‌ கொண்டு நாடு திருந்தப் பாசுரமிடுவிக்க வேணும்‌” என்ற எம்பெருமானின்‌ நினைவும்‌ நிறைவேறிற்றாம்‌. பிறகு ஆழ்வாரைத்‌ தனி யிடத்தில்‌ அநுபவிக்க ஆசை கொண்டு ஆழ்வாருக்கு விண்ணுலகம்‌ தர விரைந்தானாம்‌ எம்பெருமான்‌. அப்படி. விரைவுற்‌ற எம்பெருமான்‌. அத்தை மறந்து ஆழ்வார்‌ திருமேனியில்‌ மிகவும்‌ ஈடுபாடு கொண்டானாம்‌. எப்படி என்னில்‌-இடைப்‌ பெண்களுடன்‌ குரவைக்‌ கூத்தாடும்‌ போது பஞ்ச லக்ஷம்‌ குடியில்‌ பெண்களையும்‌ பஞ்சலக்ஷம்‌ திருமேனி கொண்டு அநுபவித்தாற் போலவும்‌, த்வாரகையில்‌ நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறாமாயிரவர்‌ தேவிமார்ககாயும்‌ ஒரே முஹூர்த்தத்தில்‌ அத்தனை வடிவு கொண்டு கைப்பிடித்து அநு பவித்தாற் போலவும்‌, “ திருமாலிருஞ்சோலை மலையே ‘:என்கிற பாட்டின்படி உகந்தருளின நிலங்கள்‌ எல்லாவற்றிலும்‌ பண்ணும்‌ விருப்பத்தை ஆழ்வாரின்‌ சரீரத்தின்‌ ஒவ்வோரவயவங்களிலும்‌ பண்ணி அநுபவிக்க ஆரம்பித்தானாம்‌. இப்படி தம்முடம்பில்‌ சபலனானவனுக்கு இத்தைக் கழித்துத்‌ தன்னைப்‌ பரமபதம்‌ கொண்டு செல்லும்படிக்கு அவன்‌ மிக விருப்பத்தைச்‌ செய்யும்‌ தம்‌ மேனியின்‌ தோஷத்தை *“பொங்கைம்புலனும்‌ பொறி ஐந்தும்‌ கருமேந்திரியம்‌ ஜம்பூதம்‌ இங்கிவ் வுயிரேய்‌ பிரக்ருதி மானாங்கார மனங்களே” என்று தம்‌ தேஹம்‌ ப்ருக்ருதி ப்ராக்ருதங்களான 24 தத்வத்தாலானது என்று அறிவித்து, அத்தைத்‌ தவிர்க்கச் சொல்லியும்‌ காமினியின்‌ அழுக்குகக்கும்‌ காமுகனைப் போலே எம்‌ பெருமான்‌ தோஷங்கண்டு மிக்க ஆதரத்தைப்‌ பண்ணினான்‌. ஆழ்வார்‌ சரணம் புக்கு விடுவித்துக்‌ கொள்கிறார்‌. எம்பெருமானும்‌ தனக்கு அநபித மானாலும்‌ இவர்‌ சொற்படி நடப்பவனாகையாலே இவர்‌ தேஹத்தைக் கழித்துக்‌ கொண்டு செல்ல இசைகிறான்‌ ‘” என்பது ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ உபபாதநம்‌.
இதனை மாமுனிகள்‌
“*செஞ்சொற் பரன்‌ தனது சீராரும்‌ மேனி தனில்‌,
வஞ்சித்துச்‌ செய்கின்ற வாஞ்சைதனின்‌–விஞ்சுதலைக்‌
கண்டவனைக்‌ காற்கட்டிக்‌ கை விடுவித்துக் கொண்ட
திண்டிறல்மாறன்‌ நம்‌ திரு
” எனக் காட்டி யருளுகிறார்‌.

அடுத்த திருவாய்மொழி திருமாலிருஞ்‌ சோலை மலை ”’ என்றும்‌ எட்டாவது-இத்திருவாய்மொழியில்‌ எம்பெருமான்‌ கிருபை நிர்ஹேதுகம்‌ என்பதை நிரூபிக்கிறார்‌. இப் பதிகம்‌ திருப்பேர் நகர்‌ விஷயமானது. இத் திவ்யதேசத்தில்‌ பிரகாசிக்கும்‌ குணம்‌ அங்கீகரிக்க அவகாசம்‌ பார்க்கும்‌ ஸ்வாமித்வம்‌ பெரு நகரிலே பேர்‌ பெற்றது என்னும்‌ ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியடியாக “ஸ்வாமித்வம்‌ ” என்பதாகத்‌ தெரிகிறது. ஸ்வாமித்வ குணத்துக்கு ப்ரயோஜனம்‌ ஒருவனைத்‌ தனக்காக அங்கேரிப்பதேயாம்‌. ஆக எம்பெருமான்‌ தான்‌ ஸர்வ ஸ்வாமி யாகையாலே சேதனனை ஏதாவதொன்றை வ்யாஜமாக்கி அங்கீ கரிக்க அவகாசம்‌ பார்த்திருப்பானாம்‌. ஆழ்வாரையும்‌ “’ திருமாலிருஞ்சோலை ” என்று சொன்ன மாத்திரத்தைக்‌ கொண்டு அங்கீகரித்தானாம்‌, இதனையே இப்‌ பதிகத்தில்‌ ஆழ்வார்‌ காட்டுகிறார்‌.

இன்னம்‌ இத்திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ காட்டுமர்த்தங்களாவன : ‘ எம்பெருமான்‌ பெரிய திருவடி மேல்‌ வந்து ஆழ்வாரைப்‌ பரம பதம்‌ கொண்டு செல்லப்‌ பதறத்‌ தொடங்கினமையையும்‌, இப்படி தம்பால்‌ அவன்‌ இப்போது பண்ணும்‌ விருப்பத்தை இத்தனை நாள்‌ பண்ணாமலிருக்கக்‌. காரணத்தையும்‌ இப்‌போது பண்ணக்‌ காரணத்தையும்‌ விசாரிக்கிறார்‌-தம்மிடமுள்ளது *! திருமாலிருஞ்சோலை மலை” என்று சொன்ன சொல்‌ ஒன்றுமே தான்‌. அதுவும்‌ அம்மலைக் குண்டான ஏற்றமறிந்து சொன்னதன்று; மலைகளைச்‌ சொல்லி வரும் போது அம் மலையின்‌ பெயரைச்‌ சொன்னத்தனையேயாம்‌; எம்பெருமான்‌ எனக்கருள்‌ செய்வானாய் நிற்கிறவன்‌. இச் சொல்லை வியாஜமாகக் கொண்டு அருள்‌ செய்தானத்தனை. ஆனால்‌ இப்படி நான்‌ சொல்லும்‌ ‘படியாக என்னைப்‌ படைத்து மேல்‌ கார்யம்‌ செய்தவனுமவனே. ஆகவே க்ருபை நிர்ஹேதுகம்‌ எனத் திர்மானித்தார்‌. அப்போது ஆழ்வாருக்கு ஒர்‌ சங்கை உண்‌ டாயிற்று. . இன்று இப்படி ஏதோவொன்றை வியாஜமாக்கி என்னை யாதரிப்‌ பவன்‌ கீழ்க் கழிந்த பல ஜன்மங்களில்‌ என்னை அநாதரித்ததற்கு ஹேது வென்‌?என்று ஆராய்ந்தார்‌; தமக்கொன்றும்‌ புலப்படவில்லை; அவனையே கேட்போம்‌ என்று * இன்றென்னைப்‌ பொருளாகத்‌ தன்னை என்னுள்‌ வைத்தான்‌; அன்‌ றென்னைப்‌ புறம் போகப்‌ புணர்த்தது என்‌ செய்வான்‌’‘ என்று கேட்டார்‌. எம்‌பெருமானும்‌ ஆழ்வாருக்கு ஸமாதானம்‌ சொல்லப்‌ பலபடியாக யோசிக்கிறான்‌. அவைகள்‌ ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ அழகாகக்‌ காட்டப்படுகன்‌ றன. அவைகளை இங்கு சுருங்கப்‌ பார்க்கலாம்‌. அதாவது **மாயையை மடித்‌து வானேதரக்‌ கருதி கருத்தின்‌ கண்‌ பெரியனானவனை * இன்று அஹேதுகமாக ஆதரித்த நீ ௮நாத்ய நாதர ஹேது சொல்‌’ என்று மடியைப்‌ பிடிக்க ‘‘ என்பது அவ் விடத்தில்‌ வாக்யம்‌ அதாவது-எம்பெருமான்‌ ஆழ்வாருக்குச்‌ சரீரத்தை விடுவிப்பதாக ௮நுமதி பண்ணி, ஆழ்வாரும்‌ உகந்து “*மடித்தேன்‌ மனை வாழ்க்கையுள்‌ நிற்பதோர்‌ மாயையை ‘? என்று “ஸம்ஸாரத்தில்‌ நிற்கைக்கடியான மாயை யுண்டு-மூல பிரக்ருதி. அத்தை, கடிக்க வரும்‌ ஸர்ப்பத்தைத்‌ திருப்பி ஓட்டுமா போலே திரிய விடுத்தேன்‌ “” என்று சுருக்கப்‌ பேசி * வானே தருவான்‌ எனக்காய்‌ என்னோ டொட்டி” என்று தமக்குப்‌ பரமபதத்தைக்‌ தருவானாக ஒருப்பட்டு ‘*கருத்தின்‌ கண்‌ பெரியன்‌ ** என்று உபய விபூதி யோகத்தாலே தனக்கு வரும்‌ கவனப்‌ பிசகையும்‌ தவிர்த்துக் கொண்டு ஆழ்வாரைப்‌ பரமபதம்‌ கொண்டு போகை யிலும்‌, அர்ச்சிராதி வழியில்‌ கொண்டு செல்ல ஆதி வாஹிகரை நியமிப்பதிலும்‌, தான்‌ முற்பாடனாய்க்‌ கொண்டு போகையிலும்‌, பெருக்கப்‌ பாரியா நிற்கிறவனை ॥ இன்‌றிப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்த அநாதி காலம்‌ என்னை உபேஷித்‌ ததற்கு ஹேது அருளிச் செய்ய வேணுமென்று மடியைப் பிடித்துக்‌ கேட்க; எம்பெருமான்‌ இதற்கு என்ன பதில்‌ சொல்லலாம்‌ என்று தனியே நின்று ஆலோசித்து அதில்‌ தேறியவைகளை உத்தரமாகச்‌ சொல்ல முடியாது, ஆழ்வார்‌ கேள்வி, பதிலற்றது என்று கவிழ்தலை யிட்டு நின்றானாம்‌. அவன்‌ சொல்ல நினைத்தவைகள்‌ :
1-இந்திரியங்களுக்கு நீர்‌ வசப்பட்டுத்‌ திரிந்தீர்‌ ‘ என்று சொன்னால்‌, எம்பெரு மானே இந்திரியங்களை, நீ கொடுத்தது; உனக்கு வேண்டாதாரை உன்னை விட்டு அகற்றவேயாம்‌ ‘ என்பர்‌.
2-நீர்‌ பெற்றிருக்கும்‌ தேஹ ஸம்பந்தத்தாலே உமக்கு இந்திரியங்களுக்கு வசப்படுகை உண்டாயிற்நு” என்று சொன்னால்‌ * அத் தேஹத்தைக்‌ கொடுத்தவன்‌ நீ தானே ‘ என்பர்‌.
3-அந்த தேஹத்துக்கு அடி அநாதி காலமாய்‌ நீர்‌ பண்ணி வைத்த புண்யா புண்ய ரூபமான கர்மங்கள்‌ தான்‌ ? என்றால்‌ * அந்தக்‌ கர்மமும்‌ நீ யிட்ட வழக்கு ‘ என்பர்‌.
கர்மத்தைச்‌ செய்கையில்‌ கர்த்ருத்வமும்‌ பலமனுபவிக்கையில்‌ போக்த்‌ருத்வமூம்‌ உம்மதன்றோ ‘ என்னில்‌ ‘கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்‌ நீ யிட்ட வழக்காகையாலே நீயே கர்த்தா போக்தா ‘ என்பர்‌(உம்முடைய அஜ்ஞாந அந்யதா ஜ்ஞானாதிகளாலே உமக்குக் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்‌ வந்தன” என்றால்‌ அந்த அஜ்ஞானாதிகளும்‌ நீ யிட்ட வழக்கு; ஆகையாலே உனக்கு வேண்டாதாருக்கு அஜ்ஞானாதிகளை விளக்கை உன்‌ தொழில்‌’ என்பர்‌-ஜீவனிடமுள்ள சைதன்யம்‌ என்கிற அறிவு ஏதாவதொன்றை யிட்டு நம்மை விட்டு நீங்கும்‌ வ்ரதத்துக்கு ஹேதுவாகிறது-என்‌ அந்தரங்க சரீரமான ஜீவனின்‌ தோஷத்தைப்‌ போக்குகை சரீரியான என்னுடைய கார்யம்‌-நாம்‌ ஸ்நேஹேத்தோடு சேதனனை ரக்ஷிக்கைக் கடியான, நாராயணனாகையால்‌ உண்டான அயந ஸம்பந்தம்‌ நிர்ஹேதுகம்‌-அயந ஸம்பந்தமடியாக எல்லாருக்கும்‌ நன்மையை விரும்பும்‌ ஸெள ஹார்த்த குணத்தில்‌ நமக்குக்‌ குறை சொல்ல முடியாது-உலகை யெல்லாம்‌ அழித்தும்‌ மறுபடியும்‌ படைக்கும் போது ஒருவர்‌ கர்மம்‌ மற்றெருவருக்குத்‌ தட்டாதபடி பிரித்து ஸ்ருஷ்டிக்கைக்கும்‌, நமக்கு விகார மின்றியிலே யிருக்கைக்கும்‌ உறுப்பான ஜ்ஞாந சக்தி களுக்குக்‌ குறை யில்லை-இவ்வாழ்வாரைப்‌ பெற யத்நம்‌ பண்ணுகையும்‌ பெற்றால்‌ உகக்கும்‌ பலித்வம்‌ நமக்கே உள்ள தொன்று யிருந்தது-நாம்‌ வேண்டிற்றைச்‌ செய்யும்படி நிரங்குச ஸ்வதந்தரன்‌ ‘ என்றும்‌ ஸகல கார்யங்களிலும்‌ ஸஹகாரி நிரபேக்ஷனாயிருப்பன்‌ * என்று ஆழ்வார்‌ நன்கறிவார்‌-ஆகவே, இவர்‌ பெரிய திருவந்தாதியில்‌ ‘ நெறி காட்டி! என்ற பாட்டில்‌( என்னை இதரோபாயங்களைக்‌ காட்டி உன்னை விட்டு அகற்றப் போகிறாயா ‘ அல்லது உன்னுடைய விலக்ஷணமான திருமேனியை நீயே காட்டி உகப்பிக்கப் போகிறாயா? இத்தை அருளிச் செய்ய வேணும்‌ ” என்று கேட்ட கேள்விக்கும்‌, அதே பெரிய திருவந் தாதியில்‌ ** அருகும்‌ சுவடும்‌ ‘ என்கிற பாட்டில்‌ உம்முடைய அருகு வந்தாலும்‌ உம்‌முடைய சுவடறிதல்‌ செய்யாதிருக்க, உம்மளவிலே ஸ்நேஹமானது அற மிக்கு வாரா நின்றது அதற்கடி அருளிச் செய்ய வேணும்‌ என்றும்‌ கேட்ட கேள்விக்கும்‌ நம்மால்‌ பதிலில்லாமையாலை இது வரை பதில்‌ சொல்லப்படவில்லை. அதைப் போன்றதே இக்‌ கேள்வியும்‌ என்று ” என்னை அநாதி காலம்‌ உபேக்ஷித்ததற்குக்‌ காரணமென்ன? என்று ஆழ்வார்‌ கேட்ட கேள்விக்குப்‌ பதில்‌ சொல்ல முடியாதானாய்‌ எம்பெருமான்‌ தலை கவிழ்க்‌து கால்‌ நகத்தால்‌ தரையைக்‌ கீறிக் கொண்டு நின்றானாம்‌.-ஆக திருமாலிருஞ்சோலைப்‌ பதிகம்‌ எம்பெருமானின்‌ நிர்ஹேதுக க்ருபையையும்‌ அதனடியாகச்‌ சேதனர்களை அங்கீ கரிக்க அவகாசம்‌ பார்க்கும்‌ ஸ்வாமித்வத்தையும்‌ வெளியிடுகிறது.
இதனை மாமுனிகள்‌
** திருமால்‌ தன்பால்‌ விருப்பம்‌ செய்கின்ற நேர் கண்டு,
அருமாயத்தன்‌ அகல்விப்பானென்‌–பெருமால்‌ நீ
இன்றென்பால்‌ செய்வா னென்‌ன இடருற்று நின்றான்‌
துன்னு புகழ்‌ மாறனைத் தான்‌ சூழ்ந்து
‘”-என்ற ருளிச்‌ செய்தார்‌.

அடுத்து 9ஆம்‌ திருவாய்மொழி ! சூழ் விசும்‌ பணிமுகில்‌ ‘!பகவதநுபவத்‌துக்குத்‌ தகுதியை விளைவிப்பன பரபக்தி, பரஜ்ஞாந, பரம பக்திகள்‌– பரபக்தியாவது — எம்பெருமானுடன்‌ கூடுதலே ஸுகம்‌. எம் பெருமானைப்‌ பிரிகையே துக்கம்‌ என்னும்‌ தசை. பரஜ்ஞாந மாவது : எம்பெருமானையும்‌ அவன்‌ திருமேனியை யும்‌ அவன்‌ குணங்களையும்‌ அவன்‌ விபூதியையும்‌ மிகத் தெளிவாகக்‌ காணும்‌ தசை, பரம பக்தி யாவது : அப்படித்‌ தெளியக் கண்ட எம்பெருமானை அப் போதே ஒட்டி அநுபவிக்கப்‌ பெறாவிடில்‌ முடியும்படியான தசை-இத் தசைகள்‌ மூன்றில்‌ இத்திருவாய்‌ மொழிக்குக்‌ கீழெல்லாம்‌ ஆழ்வாருக்கு பரபக்தி தசையாம்‌. இத் திருவாய்மொழியில்‌ பரஜ்ஞான தசையாம்‌, அடுத்த “முனியே நான்முகனில்‌ ?* பரம பக்தி தசையாம்‌.-பரம யோகிகளுக்கு யோக பலத்தால்‌ பிறக்கும்‌ பரம பக்‌தி இவருக்கு எம்பெருமானின்‌ நிர்ஹேதுக கிருபையாலே பிறந்தது அதை இத்திருவாய் மொழி யளவும் உபபாதித்தார்‌. இனி இங்கிருந்து அநுபவிப்ப தொன்றில்லாமையாலே பரமபதத்‌ தேறப்‌ போக வேணுமென்று மநோ ரதிக்கிற ஆழ்வாரை, ஆழ்வாரைக் காட்டிலும்‌ சடக்கெனக் கொண்டு போக வேணும்‌ என த்வரிக்கிற ஸர்வேச்வரன்‌ பரமபதத்தில்‌ அநுபவத்துக்குத்‌ தகுதி பெற, இவர்க்கு மிகவும்‌ விடாய்‌ பிறக்கைக்காக, தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்ணால்‌ கண்டாற்போலே விசத தமமாக ப்ரகாசிக்கும்படி பண்ணி யருளினான்‌; அதாவது–உபநிஷத்துக்களில்‌ பிரஸித்தமான அர்ச்சிராதி மார்க்கத்‌ தையும்‌ சரீரத்தை விட்டுப்‌ பிரியும்போது உண்டாகும்‌ கஷ்டங்கள்‌ ஆறும்படி,, தான்‌ வந்து முகம் காட்டும்‌ படியையும்‌ “தொழுதனர்‌ உலகர்கள்‌ ?’ ‘* எதிரெதிர்‌ இமையவர்‌ இருப்பிடம்‌ வகுத்தனர்‌” “*மாதவன்‌ தமரென்று வாசலில்‌ வானவர்‌ போதுமின்‌ எமதிடம்‌ புகுதுக வென்றனர்‌ ” என்ற பாட்டுக்களில்‌ காட்டியபடி. வழியிலுள்ளவர்கள்‌ பண்ணும்‌ ஸத்காரங்களையும்‌ ‘ வடிவுடை வானவர்‌ வைகுந்தம்‌ புகவே” என்று அவ்‌ வழியாலே போய்ச் சேரும்‌ பரமபதத்தையும்‌, *’முடியுடை வானவர்‌ முறை முறை எதிர்‌ கொள்ள”: என்று நித்ய ஸூரிகள்‌ வந்து ஆதரிக்கும்படியையும்‌, **வந்தவர்‌ எதிர்கொள்ள” என்று பிராட்டியும்‌ வைகுந்த நாதனும்‌ எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்‌, * மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை ‘” என்‌று பரம ப்ராப்யரான நித்ய ஸூரிகள்‌ நடுவே தாம்‌ ஆநந்தத்தால்‌ பூர்ணரா யிருக்கிற படியையும்‌, காட்டி யருளக் கண்டு பிரீதி யுடையராய்‌ அத்தை அந்யாபதேசத்தாலே ௮நுபவிக்கிறார்‌. இங்கு அந்யாபதேச மாவது-தமக்கவன்‌ பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ எல்லாரும்‌. பெற்றாராகப்‌ பேசுதலேயாம்‌. இப்படி ஆழ்வார்‌ காட்டினதற்கு ப்ரயோஜனம்‌ இங்குள்ளார்‌ நமக்கும்‌ ஆழ்வார்‌ பெற்ற பேறு தப்பாது என்றிருக்கைக்காக‘, ஆக இத் திருவாய்மொழி அர்ச்சிராதி மார்க்கத்தையும்‌ அதில்‌ ஸத்காரத்தை.பும்‌ சொல்லுகிறது. இங்கு ஆசார்ய ஹ்ருதயம்‌ ** அமந்த்ரஜ்ஜோத்ஸவ கோஷம் போலே ஏறப்பெறுகிற எழுச்சியை ஸூசிப்‌ பிக்கிற மேக ஸமுத்ர பேரீ கீத காஹள சங்காசீஸ் ஸ்‌துதி கோலாஹலம்‌ செவிப்பட்ட வாறே!” என்பது. இதுக்குக்‌ கருத்தாவது? கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ ஆழ்வார்‌ எம்பெருமானைக்‌ கேட்ட கேள்விக்கு எம்பெருமான்‌ பதில்‌ சொல்ல முடியாதவனாய்‌, கவிழ்‌ தலை யிட்டுக்‌ கால் கட்டை விரலால்‌ தரையைக்‌கீறி நின்று என் செய்யலாம்‌ என யோசித்‌தானாம்‌. உடனே ஒன்று நினைவுக்கு வந்ததாம்‌, விவாஹம்‌ செய்விக்கும்‌ உபாத்யாயருக்கு மந்த்ரம்‌ மறந்தால்‌ மேளம்‌ கொட்டச் செய்‌து அதைக் காட்டாமல்‌ மறைக்குமா போலே எம்பெருமானும்‌ ஆழ்வாரைக்‌ கொண்டு செல்லும்‌ வழியான அர்ச்சிராதி கதி ப்ரயாணத்‌துக்கு, ராஜபுத்ரனை யழைத்துச்‌ செல்லும் போது வாத்ய கோஷம்‌ முதலானமையை உண்டாக்குமா போலே ஸமுத்ரம்‌, மேகம்‌ முதலானவையை முழங்கச்‌ செய்தானாம்‌; அவைகளே சூழ்விசும்‌ பணிமுகில்‌ திருவாய்மொழியால்‌ பேசப்‌ படுகிறது என்‌றருளிச்‌ செய்கிறார்‌. அவன்‌ காட்டியவை மேக த்வனி ஸமுத்ர த்வனி பேரீ வாத்ய த்வ்நி காஹள த்‌வநி சங்கத்‌ த்வநி ஆசீர்வாதத்‌ த்வநி முதலிய கோலாஹலங்கள்‌. ஆழ்வாரும்‌ எம்பெருமான்‌ உத்தரம்‌ சொல்ல மாட்டாமல்‌ திகைக்கிறான்‌ என்‌றறிந்ததும்‌ அவற்றை விட்டிட்டு அவன்‌ காட்டக்‌ கண்டவைகளுக்குப்‌ பாசுர மிட்டாராம்‌, இவ் வர்த்தத்தை மாமுனிகள்‌ :
‘*சூழ்ந்து நின்ற மால் விசும்பில்‌ தொல்லை வழி காட்ட
ஆழ்ந்ததனை முற்றுமநுபலித்து–வாழ்ந்தங்‌
கடியரூடனே யிருந்த வாற்றை யுரை செய்தான்‌
முடி மகிழ் சேர்‌ ஞானமுனி !!
என்றருளிச்‌ செய்தார்‌.

அடுத்த , திருவாய்மொழி * முனியே நான்முகனே *”? என்கிற பத்தாவது: இது ஆழ்வாரின்‌ பரமபக்தி தசையிலுண்டான ஆர்த்தியைக்‌ காட்டுகிறது-கீழில்‌ திருவாய்மொழியில்‌ ஆழ்வாரின்‌ அநுபவம்‌ *: அந்தமில்‌ பேரின்பத்‌து அடியரோடிருந்தமை’” என்று பரம பதத்தில்‌ நித்ய முக்தர்களின்‌ திரளிலிருந்து பகவதநுபவம்‌ பெற்ற நிலையது. ஆனால்‌ அவ்வநுபவமும்‌ மனதிலுண்டான அநுபவமே தவிர நேரிலுண்டானதன்று. அவ்வநுபவத்தை நேரில்‌ பெருததாலும்‌, இஸ் ஸம்ஸாரத்தில்‌ தேஹத்தோடிருத்தலைக்‌ கண்டும்‌, மேருமலையின்‌ சிகரத்தில்‌ துயர மற்றவனாய்‌ இன்பமே பெற்றிருந்தவன்‌ துயரமே நிறைந்ததாய்‌ கரை யேற முடியாத மிகவும்‌ ஆழமான பாதாளத்தில்‌. விழுந்தால்‌ படுமாப் போலே மிகவும்‌ துயருடையராய்‌. அந்தமில்‌ பேரின்பத்தைப்‌ பெறுகைக்காகக்‌ கீழ்த்‌ திருவாய்மொழியில்‌ மானஸிகமாகத்‌ தம்‌ தலை மேல்‌ பெற்ற எம்பெருமானின்‌ திருவடிகளைக்‌ கட்டிக்கொண்டு போகாமல்‌ தடுத்து திருவாணை நின்னாணை கண்டாய்‌ ** என்று-அவனுக்கும்‌ மறுக்க வொண்ணாதபடி ஆணை யிட்டார்‌. ஆழ்வார்‌ இட்படி ஆணை யிட்டவாறே ஆழ்வாரின்‌ நெஞ்சைச்‌ சோதிக்கைக்காகவும்‌ ஆழ்வாரின்‌ ஆர்த்தி மிக்க சொல்‌ கேட்கையிலுள்ள குதூஹலத்தாலும்‌ எம்பெருமான்‌ ஆழ்வாரை நோக்க *’ நீர்‌ நமக்கு அத்யந்த பரதந்த்ரர்‌; அயோத்யையில்‌ பரதாழ்வாழ் வானைப் போலே அசோக வனத்தில்‌ சீதா பிராட்டியைப் போலே, வைத்த விடத்‌திலிருக்க வேண்டாமா? நம்மைப்‌ பெறாத போதும்‌ வருந்தியாகிலும்‌ பாடாற்ற வேண்டாமா? நீர்‌ இடும்‌ ஆணை பெறுமாணையல்ல. பெறாவாணை காணும்‌, அதாவது நீர்‌ ஸ்வாதந்தர்யம்‌ கொண்டு விட்டீர்‌ என நான்‌ வெறுத்து உம்மைக்‌ கைவிட நீர்‌ நம்மைப்‌ பெறாமல்‌ பண்ணும்‌ ஆணை என்றான்‌-ஆழ்வார்‌ இது பர்யந்தம்‌ தம்மோடு எம்பெருமான்‌ மேல் வீழ்ந்து கலந்து தமக்‌குண்டாக்கின ஆற்றாமையைப்‌ பலபடி.யாக உபபாதித்து தாம்‌ இட்ட ஆணை ஆற்றாமை யின்‌ கனத்தால்‌ வந்ததாகையாலே பெறமாணையே. பரதாழ்வாலும்‌ பிராட்டியையும்‌ பிரிவில்‌ பாடாற்றினாலும்‌, இளைய பெருமாள்‌ “நில்‌ என்ன முடிவன்‌”‘ என்றாற் போன்றது தம் நிலை. அந்த பரதாழ்வாலும்‌ 14 வருஷம்‌ நாளிட்டுக் கொடுத்தபடியால்‌ பாடாற்‌றினாரே தவிர இனி என்றும அயோத்யை திரும்போம்‌ என்று சொல்லி யிருந்தால்‌ பாடாற்றி . யிருப்பாரோ:

பிராட்டியும்‌ “ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்யச தமத: நாத்யர்த்தம்‌ ஷுப்பதே தேவீ கங்கேவ ஜல தாகமே” என்று பெருமானின்‌ ஆச்ரித ரக்ஷ்ண ஸ்த்தைர்யத்தையும்‌ இளைய பெருமானின்‌ புருஷகார பலத்தையும்‌ நம்பி அசோக வனத்தில்‌ அவ்வளவு பட வில்லையாகையாலே பாடாற்றினாள்‌. அடியேனும்‌ இதுவரை ஓர்‌ விதத்தில பாடாற்றியே வந்திருக்கிறேன்‌. கீழ்‌ என்னால்‌ “இனி தரிக்க மாட்டேன்‌ இனி தரிக்க மாட்டேன்‌” என்று 19 இனி” சொல்லப் பட்டது, இப்போதும்‌ ** இனி நான்‌ போக லொட்டேன்‌ ஒன்றும்‌ மாயம்‌ செய்யேல்‌ என்னை” என்று ஓர்‌ இனி” சொல்கிறேன்‌. இதை மற்மை இனிகளைப்போலே தள்ளி ஏதாவதொரு குணத்தைக்‌ காட்டி. என்னைத்‌ தரிக்கப்‌ பண்ணின முன்புற்றை மாயத்தைச்‌ செய்யாதே கொள்‌”, எனத்‌ தம் மார்த்தி பூர்த்தியைத் தெரிவிக்கிறார்‌,-பெறுவாணை அல்லவாக்கிய படியை –கூசம்‌ செய்யாது கொண்டாய்‌ ‘* என்று தொடங்கி முதல்‌ தணி வித்தேயோ ” என்கிற பர்யந்தம்‌ உபபாதிக்கிறார்‌. இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ 1-கூசம் செய்யாத செய்திப்பிழை -2- பற்றுக் கொம்பற்ற மதி கேடு -3-போரவிட்ட பெரும் பழி –4-புறம் போனால்‌ வருமிழவு- 5- உண்டிட்ட மூற்றீம்பு -6-அன்பு வளர்ந்த அடி யுரம்‌ -7-உயிருறவு, முதலளவு துரக்கைகளாலே பெரு வாணை யல்லவாக்கின பேரவா” எனக் காட்டி யருளுகிறார்‌. அதாவது–என்‌ தாழ்‌வைப் பாராமல்‌ என்னை ஏன்‌ ஏற்றுக்‌ கொண்டாய்‌… அதனால்‌ உன்னதன்றே செய்தப்‌ பிழை–2-கொடி, கொள் பொம்பை யொழிய தரிக்க மாட்டாதாற் போலே என்‌ ஆத்மாவுக்கு ஜீவந ஹேதுவா யிருப்பதொன்று உன்னை யொழிய வேறு காண்கிறிலேன்‌, ஆகையால்‌ நான்‌ அநந்ய கதி-3-என்‌ காரியம்‌ நீ செய்வதாக ஏறிட்டுக் கொண்டு உன்‌ பக்கலில்‌ நின்றும்‌ பிரித்து உன்‌ குணங்கள்‌ நடையாடாத ஸம்ஸாரத்திலே தள்ளி உபேக்ஷித்தாய்‌ இது உனக்குப்‌ பரி ஹரிக்கமுடியா* பெரும்பழி –4-அநந்யகதியான என்னை உன்‌ பக்கலி னின்றும்‌ பிரித்து உபேஷித்து என்னை என் கையில்‌ காட்டித் தந்தால்‌ நான்‌ இழவை யன்றோ தேடிக் கொள்வேன்‌ -5-என்னையும்‌ என்‌ சரீரத்தையும்‌ மனதையும்‌ விடாமல்‌ இது பர்யந்தம்‌ அநு பவித்தா யன்றோ, இனி குறையையும்‌ அநுபவிக்கப்பார்‌, இப்படி. முன்பு உண்டது நீ முன்பு செய்த தீம்பன்றோ–6- நீ பெரிய பிராட்டியார்‌ பக்கல் கொண்ட வன்பாலே அவள்‌ பரிகரமான என்‌ பக்கல்‌ மிக்க அன்பு கொண்டவனல்லையோ நீ. அந்த: புர பரிகரம்‌ என்று தானே என்னிடம்‌ உன்‌ அன்பு வளர்ந்தது. ஆக என்னிடத்தில்‌ உனக்குண்டான அன்புக்கு அடி யுரமுண்டே.-7-உயிரை விட்டு உடல்‌ தரிக்க வற்றோ. எனக்கும்‌ உனக்குமுண்டான ஸம்பந்தம்‌ சரீராத்ம பாவமல்லவோ?
ஆக இக்காரணங்களால்‌ நானிட்டது பெறாவாணை அன்று கடாய்‌ என்று தம்‌ மாணையை பெறுமாணையாகக்‌ காட்டினார்‌, தாம்‌ எம்பெருமானிடம்‌ கொண்ட அவாவை யிட்டு, இந்த அவாவுக்கு **சூழ்ந்தகன்றாழ்ந்து'” என்று சித்து, அத்து, ஈச்வரன்‌ என்கிற தத்வங்கள்‌ மூன்றைக் காட்டிலும்‌ பெரியது என்று அளவைக்‌ காட்டினார்‌-இப்படி. எம்பெருமானிடம்‌ தாம் கொண்டிருக்கும்‌ அவாவைக்‌ காட்டின ஆழ் வாருக்கு எம்பெருமான்‌ தான்‌ ஆழ்வாரிடம்‌ கொண்டிருக்கும்‌ அவாவைக்‌ காட்டினான்‌. அது இவரவாவை விழுங்க விட்டதாம்‌. * எம்பெருமானே ‘ நான் தான்‌ உன்னிடம்‌ மிக்க அவா கொண்டிருந்ததாக நினைத்திருந்தேன்‌; நீ என்னிடம்‌ கொண்டிருக்கும்‌ அவா அதனிலும்‌ பெரிது, அவ் வவா தீரும்படியாக, 14 வருஷம்‌ பிரிந்திருந்த பரதாழ்வானை மடியிலிட்டு உகந்தாற் போலே, என்னோடு கலந்தாயே; இதென்ன குணம்‌ என்று கொண்டாடி, தம்மை எம்பெருமான்‌ தனக்காககக்‌ கொண்டமையை * அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச்‌ சடகோபன்‌ ” என்‌று பேசி முடிக்கிறார்‌.

இதனை ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ ** பேரவா குளப்படியாம்படி. கடல் போன்ற ஆதரத்தோடே சூழ்ந்து தாபங்களை ஹரித்தமையை வெளியிடுகிறார்‌ பத்தாம்‌ பத்தில்‌ ” என்று காட்டி யருளுகிறார்‌. அதாவது ஆழ்வார்‌ அவா–குளப்படி–எம்பெருமான்‌ அவா கடல்‌, இப் பத்தில்‌ ப்ரதி பாதிக்கப்படும்‌ ஆர்த்தி ஹரத்வம்‌”, அக் குணமுடைய எம்பெருமான்‌ ஆழ்வாரின்‌ ஆர்த்தியைப்‌ பரிஹரித்தான்‌. இது தான்‌ பத்தாம்‌ பத்தின்‌ கருத்‌து என்பது ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ வ்யக்தம்‌. இது தனை மாமுனிகள்‌ ;
“ முனி மாறன் முன்புரை செய்‌ முற்றின்பம் நீங்கித்‌
தவியா நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால்‌ நைந்து_பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச்‌ சேர்ந்தா னுயர்ந்து ‘”
என்று அருளிச்‌ செய்கிறார்‌

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ. வே, வித்வான்‌ கோவிந்த நரஸிம்மாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading