ஆபத் ஸகத்வம்”திருவாய்மொழி ஒன்பதாம் பத்தில் *’ஸ்ரீ பதி ஆபத்ஸகன் ” என்ற விஷயம் நிரூபிக்கப்படுகிறது.-திருவாய்மொழி, நம்மாழ்வார் திருவாய் மலர்ந் தருளிய நாலு திவ்ய ப்ரபந்தங்களில் நாலாவதாகும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நாலாவது ஆயிரமாகும். நம்மாழ்வார், தம் பேரருளால் ஸ்ரீமந் நாத முனிகளுக்கு நாலாயிரத்தையும் உபதேசம் செய்தருளினார். நாதமுனிகள் காலத்தில் *ஆராவமுதே” என்று தொடங்கும் (திருவாய்மொழி 5ம் பத்து 8ம் திருவாய்மொழி) பதினொரு பாசுரங்களும், நம்மாழ்வார் விஷயமாக மதுர கவிகள் திருவாய் மலர்ந்தருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பினால்- என்று தொடங்கும் திவ்ய ப்ரபந்தம் பதினொரு பாசுரங்களுமே பிரசாரத்தில் இருந்தன. மற்றவை யெல்லாம் பிரசாரத்தி லில்லாமல் மறைந்து போயிருந்தன. நாத முனிகள் நம்மாழ்வார் திரு முன்பே ஒரே கருத்தாக ” கண்ணி நுண் சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தத்தை 12 ஆயிரம் உரு ஜபித்தார். நம்மாழ்வார் நாத முனிகளுடைய யோகத்தில் ஸாக்ஷாத்காரமானார். நாதமுனிகளின் வேண்டுகோளின்படி. திருவாய்மொழி ஆயிரத்தையும் தமது மற்ற மூன்று திவ்ய ப்ரபந்தங்களையும் மற்ற ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்களையும் பொருளோடு கூட நம்மாழ்வார் நாதமுனி களுக்குத் தமது நிர்ஹேதுக க்ருபையாலே உபதேசித்தருளினார்.
சாஸ்த்ர ஸாரமான திருமந்த்ரம், அதன் விவரணமான த்வயம், அதன் விவரணமான சரம ஸ்லோகம் இவற்றின் பொருளை நாலாயிர திவ்ய ப்ரபந்தம் விவரிக்கிறது என்று நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு உபதேசம் செய்தருளினார். அந்த உபதேசமடியாக நாதமுனிகளும், ப்ரணவார்த்த விவரணமான திருப் பல்லாண்டை முதலிலும், சரம பதார்த்த விவரணமான கண்ணி நுண் சிறுத் தாம்பை முதலாயிரத்தின் முடிவிலும் அடுத்தபடி. நாராயண பதார்த்த விவரண மான பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம் இவற்றை இரண்டாவது ஆயிரமாகவும் சரம ஸ்லோகார்த்த விவரணமான இயற்பாவை மூன்றாவது ஆயிரமாகவும் த்வயார்த்த விவரணமான திருவாய்மொழியை நாலாவ தாயிரமுகாக வரிசைப் படுத்தி அமைத்தருளினார். சாஸ்த்ர ஸாராத்த விவரணமான நாலாயிர திவ்ய ப்ரபந்தம் “*திராவிட வேதாந்தம்” என ப்ரஸித்தி பெற்றது .. இது பகவானின் ஸ்வரூப ரூப குண விபூதிகளைத் தெளிவாகவும் உறுதியாகவும் பிரகாசப் படுத்துகிறது-
சாஸ்த்ரமான ஸம்ஸ்க்ருத வேதம், பகவானின் ஆராதன ரூபமான யாகாதி கர்மாக்களைக் கூறிக் கர்ம காண்டமென்ற பூர்வபாகம் என்றும், ஆராத்யனான பகவானின் ஸ்வரூபத்தைக் கூறி ப்ரஹ்ம காண்டமென்ற உத்தர பாக மென்றும் இரு பிரிவானது. உத்தர பாகத்துக்கு *வேதாந்த’மென்று ப்ரஸித்தி, அந்த வேதாந்தம் பகவானின்-பர ப்ரஹ்மத்தின் ஸ்வரூப ரூப குண விபூதிகளை *(இது இப்படி” என்று தெளிவாகக் கூறாது. பலபடியாகப் பொருள் கொள்ளலாம் படியான வாக்யங்களை உடையது. வேதாந்த வாக்யார்த்த நிர்ணயம் செய்வதற்கான விசார சாஸ்த்ரத்தை வ்யாஸர் செய்தார். அதுவும் பலபடி வ்யாக்யானம் செய்யலாம்படியான சப்த ஸமூஹமாய் அமைந்தது. வ்யாஸ ரிஷியின் கருத்தறிந்த போதாயன ரிஷி, வ்யாஸரின் ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ப்ரமாண நியாய யுக்திகளைக் கொண்டு உள்ளபடியான பொருளைத் தனது விருத்தி க்ரந்தத்தில் தெளிவாகக் கூறினார். அதுவும் நாளடைவில் பிரசார மின்றி யொழிந்தது. அதன் பொருளை யெல்லாம் எம்பெருமானது நிர்ஹேதுக க்ருபையால் தெளிவாக அறிந்த நம்மாழ்வார், “உடன்மிசையுயிரெனக் கரந் தெங்கும் பரந்துளன், சுடர்மிகு சுருதியளிவையுண்ட சுரனே ‘: (திருவாய்மொழி ].1-7) என்று தெளிவாக அருளிச் செய்தருளினார். நாதமுனிகளுக்கு உபய வேதாந்தத்தின் ஐகரஸ்யத்தையும்-ஒற்றுமையையும்-உபதேசித்தருளினார். இப்போது உலகில் பிரசாரமாயுள்ள விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய அர்த்தங்கள் எல்லாம் ஆழ்வார்களின் சரித்திர வைபவங்கள் உள் பட நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் உபதேசித்தரள , நாதமுனிகள் மூலமாக உலகில் பிரசாரமாயிற்று. நாதமுனிகள் பேரனான யாமுன முநி – ஆளவந்தார் மூலமாக வளர்ந்து, யதீந்தீரரான ஸ்ரீராமானுஜரால்–எம்பெருமானாரால் நன்கு ரக்ஷிக்கப்பட்டது. ஆகவே இந்த ஸம்ப்ரதாயத்துக்கு * எம்பெருமானார் தரிசனம் ‘” என்று எம்பெருமான் பேரிட்டு காட்டி வைத்தார். “பாஷ்யகாரர் இது கொண்டு ஸுத்ர வாக்யங்களொருங்க விடுவர்’ என்று ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி உபய வேதாந்த ஐக கண்ட்யத்தைக் குறிப்பிடும்.
சாஸ்த்ர ஸாரமான திருமந்த்ரார்த்தம் “எம்பெருமானுக்கே உரியேனான நான் எனக்குரியனன்றிக்கே யொழிய வேணும்; ஸர்வ சேஷியான நாராயண னுக்கே எல்லா அடிமைகளும் செய்யப் பெறுவேனாக வேணும்” என்பது, மந்த்ர ரத்னம் என்னும் த்வயம், இரண்டு வாக்யமாய் அமைந்தது. முதல் வாக்யத்தால் பிராட்டியை முன்னிட்டு ஸ்ரீய: பதியான எம்பெருமான் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது. பின் வாக்யத்தால் அச் சேர்த்தியிலே அடிமையை இரக்கிறது–பிரார்த்திக்கிறது. த்வயார்த்தம் தீர்க்க சரணாகதி யென்றது ஸார ஸங்கரஹத்திலே’” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப்படி திருவாய் மொழி த்வயார்த்த விவரணம் என்பது நிரூபிக்கப்படுகிறது, த்வயத்தின் ஒன்பதாவது பொருளான–உத்தர வாக்யத்தில் உள்ள நாராயணாய என்றதில் சதுர்த் யர்த்தமான “நித்ய கைங்கர்யம்” திருவாய்மொழியின் ஒன்பதாம் பத்தின் பொருள், ஸார ஸங்ரஹ ஸ்ரீஸூக்தி வருமாறு :– ஒன்பதாம் பத்தால் பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்து”’ என்றும் *நின் தீர்த்த வடிமைக் குற்றேவல்” என்றும் “தொடர்ந்து குற்றேவல் செய்து என்றும் *கொடு வினையேனும் பிடிக்க” என்றும் ”உறுவதிது வென்றுனக் காட்பட்டு?” என்றும் “ஆட்கொள்வா னொத்து:’ என்றும் நானும் மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன்:’ என்றும் நித்ய கைங்கர்யம் ப்ரதிபாதிதமாய்த்து’” என்று. ஆசார்யர்களுக்கு ஆபத்தன மாயிருந்துள்ள ஸ்ரீய:பதியான ஸர்வேச்வரனே உபாயோபேயம் என்ற பொருளை அறிவிக்கும் த்வயமும் திருவாய்மொழியும் பகவத் சாணார்த்திகளாய் அநந்யோபாயராய் இருக்கும் பரம ஸாத்விகர்களான முமுஷுக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சரீராவஸான கால பர்யந்தம் எப்போதும் கால க்ஷேபத்துக்காகவும் பகவன் முகோல்லாஸத்துக்காகவும் அநுஸந்தானம் செய்யப்பட வேண்டியவையாகும்.
ஒரு கிரந்தம்– நூல் என்றால் அதன் பொருள் ஒன்றேயாயிருக்க வேணும். அந்த ஒரு பொருளை நிலை நிறுத்த மற்ற பொருள்கள் கூறப்பட வேண்டும். திருவாய்மொழிக்கு முக்கியமான ஒரு கருத்துப் பொருள் ஜ்ஞான ப்ரதனான எம்பெருமான் அருளால் முமுஷுவுக்கு மோஷ லாபம்” என்பது. அவித்யா நிவர்த்தக ஜ்ஞான பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத் மோஷ லாப மென்கை மயர்வற வீடு பெற்ற என்ற ப்ரந்தைகார்த்தயம்’‘ என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி இதைக் குறிப்பிடுகிறது. இங்கு விசத வாக் சிகாமணியான மணவாள மாமுனிகளின் வயாக்யான ஸ்ரீஸூிக்தி “இத்தால் ஜ்ஞாந ப்ரமான பகவத் ப்ரஸாதமே மோக் ஷப்ரதமும் என்னுமிது இப்பிரந்தத்துக்கான ‘ தாத்பர்ய மாயிருப்பதோரர்த்தம் என்றதாய்த்து’” என்று. மேலும் அர்த்த பஞ்சகம் திருவாய்மொழியின் பொருள் என்றும், அதிலும் உபாயோபேயங்களிரண்டுமே பொருள் என்றும், உபேயமொன்றுமே பொருள் என்றும், ஆசார்யர்கள் அருளி யுள்ளனர். ஸ்ரீ வேதாந்த தேசிகர் திரவிடோபநிஷத் தாத்பர்ய ரத்நா வளியில் ஸ்ரீமானான தேவன் தன்னைப் பெறுவதற்கு ஸாதனமாகிறான் என்பது திருவாய்மொழியின் முக்கியமான ஒரு பொருள் என்து அருளிச் செய்தார்.இந்த ஒரு பொருளை நிலைநிறுத்தப் பத்து பத்திலும் முறையே எம்பெருமான்-ஸேவ்யன், அதி போக்யன், முதலான பத்துப் பொருள் கூறப்பட்டது என்றும், ஒவ்வொரு திருவாய்மொழியிலும் முறையே பரத்வம் முதலான ஒவ்வொரு குணம் எம்பெருமானுக்கு மொத்தம் 100 குணங்கள் கூறப்பட்டன என்றும், ஒவ்வொரு பாசுரங்களிலும் முறையே எல்லை கடந்த உயர்ந்த கல்யாண குண முடையவன் ஸ்ரீமானான தேவன் என்று மொத்தம் 1,000 குணங்கள் கூறப்பட்டன என்றும் தாத்பர்ய ரத்னாவளியில் ஸ்ரீவேதாந்த தேசிகர் நிரூபித்துக் காட்டி யருளி யிருக்கிறார்.
பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, சரண்யத்வ, சக்தித்வ, ஸத்ய காமத்வ ஆபத் ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன் மயர்வை யறுக்க….. தம் பேற்றைப் பிறர் அறியப் பத்துத் தோறும் வெளியிடுகறார்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி, திருவாய்மொழி முதல் பத்தில் எம்பெருமானுடைய பரத்வ குணம் பிரகாசமாகிறது என்று முறையே பத்துப்பத்தின் 10 குணங்களைக் குறிப்பிடுகிறது. அதில் திருவாய்மொழி ஒன்பதாம் பத்தில் ஸ்ரீய:பதியான எம்பெருமானுடைய * ஆபத் ஸகத்வம் ? என்ற குணம் பிரகாசப்படுத்தப்படுகிறது –
ஆழ்வார் எம்பெருமானை முற்றூட்டாக அநுபவித்து ** இவ்வநுபவத்தை ஸம்ஸாரி சேதனர்கள் அனைவரும் பெற்று இன்புற வேணும் :” என்னும் தம் பரமக்ருபையாலே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி என்னும் திவ்ய ப்ரபந்தங்களிலே தம் அநுபவத்தை வெளியிட்டு ‘பிறரைக் குறித்து “நீங்களும் இவ்வநுபவத்தைப் பெறப் பாருங்கோள்”” என்று உபதேசம் செய்தருளுகிறார். பரோபதேச ஸமயத்திலும் தம் அநுபவம் குறையாதவர் ஆழ்வார். அநுபவ ஸமயத்திலும் பரோபதேசத்தில் திருவுள்ளமாய் தம்மனுபவத்தை வெளியிடுவார். ஆக எப்போதும் ஆழ்வாருக்குப் பரோபதேசத்திலேயே முக்கிய நோக்கு. இதைத் தான் அநுபவ கர்ப்ப பரோபதேசம் என்றும், பரோபதேச கர்ப்பாநுபவம் என்றும் ஆசார்யர்கள் குறிப்பிடுகின்றனர். ‘ஒரு பாட்டுக்கு க்ரியை–வினைமுற்று எப்படி முக்கியமோ ஒரு திருவாய் மொழிக்கு அதன் முக்கியப் பொருளைக் குறிப்பிடும் பாட்டு எப்படி. முக்கியமோ இதே போல் ஒரு பத்துக்கு–10 திருவாய்மொழி கொண்ட பகுதிக்குப் பரோபதேசத்தில் நோக்கான திருவாய்மொழி முக்கியம் என்று ** பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து – என்ற ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி விளக்குகிறது. இப்படி பரோபதேசத்தில் நோக்கான திருவாய்மொழி முக்கியம் என்று தேறின போது முதல் திருவாய் – மொழியும் பத்தாம் திருவாய்மொழியும் பரோபதேச ரூபமாய் ஒன்பதாம் பத்து மிகவும் முக்கியமாகிறது. தமக்கு மோக்ஷம் விரைவில் கிடைக்கப் போகிறது என்பதை உணர்ந்த ஆழ்வார், ஒருவரும் இப் பேற்றை இழக்கக் கூடாது என்ற தம் பரம க்ருபையால் அவரவர் தகுதிக்கு ஏற்றார்ப் போலே அவரவர் விரும்பி கைக் கொள்ளத் தக்க உபாயங்களை எல்லாம் பரக்க உபதேசித்தருளுகிறார் ஒன்பதாம் பத்தில், இப்படி நிர்ஹேதுகமாக எல்லாரிடமும் கிருபையாலே அனைவரும் உஜ்ஜீவிக்க உபதேசம் செய்யுமிந்த ஆழ்வாரின் ஸ்வபாவம் பிராட்டிக்கும், ப்ரஹ்லாதனுக்கும், விபீஷணனுக்கும், ஆழ்வார் அடி பணிந்த இராமானுஜருக்குமே இருப்பதொன்று. *: தாய்க்கும், மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்க்குமே இவையுள்ளது ” என்பது ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸக்தி. “மாலை நண்ணி”’ (திரு. 9-10) திருவாய்மொழிப் ப்ரவேசத்தில் ஈட்டில் “மோஹித்துக் கிடந்தாராகில் கிடக்குமித்தனை போக்கி ௨ணர்ந்தாராகில் பிறர்க்கு ஹிதம் சொல்லி யல்லது நிற்கமாட்டார் என்று ஆழ்வாரின் ஸ்வபாவம் ‘விளக்கப்பட்டது. ஈட்டின் ௮வதாரிகை இரண்டாம் ஸ்ரீ ய:பதியில் “நம்மாழ்வார் திருவாய்மொழி ப்ரபந்தத்தாலே த்வய விவரணம் பண்ணுகிறார். இதில் முதலிட்டு மூன்று பத்தாலே உத்தரார்த்ததைத் விவரிக்கிறார்–
மேலிட்டு மூன்று பத்தாலே பூர்வார்த்தத்தை விவரிக்கறார். மேலிட்டு மூன்று பத்தாலே உபாயோபயோகியான குணங்களையும், ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசையற்ற படியையும்,அவனோடு தமக்குண்டான நிருபாதிக ஸம்பந் தத்தையும்? அருளிச் செய்தார் மேலிற்பத்தாலே தாம் ப்ரார்த்தித்தபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்: என்று த்வய விவரணம் திருவாய்மொழி என்பதையும், ஒன்பதாம் பத்து எம்பெருமானுடைய நிருபாதிக ஸம்பந்தத்தை நிரூபிக்கிறது என்பதையும் நாம் அறியலாம். மாதா பிதா பார்யா புத்ர ப்ராதா மாதுலாதி ஸகல வித பந்துவும் ஸ்ரீயபதியான எம்பெருமானே. லெளகிகர்களான மற்ற பந்துக்கள் அர்த்த காமாதி நிபந்தனமாக வந்தேறியான ஸம்பந்தமுடையவர்களே. ஆபத்து வந்தவாறே கைவிட்டு விடுவார்கள். எப்போதும் நம்மோடு கூட இருக்து தோன்றியும் தோன்றாதும் உதவி புரிந்து கைகொடுப்பான் ஸ்ரீமந் நாராயணனே. அவனே ஸகா-ஸுஹ்ருத்-உயிர்த் தோழன். * என்னை யாள்வானே”’” என்று குறிப்பிடப்படும் மிகப் பெரியவன், அறத்தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கும் அளவிறந்த சீல குணமும் உடையவன் என்பதை ஒன்பதாம் பத்து குறிப்பிடுகிறது. ஈடு 9ம் ஸ்ரீய:பதியில் “ஒன்பதாம் பத்தால், நீரென்றிய அதி சங்கை பண்ணிப் படுகிறீர் இப்படி என்று தன்னுடைய நிருபாதிக பந்தத்தையும் காட்டி ** நான் நாராயணன் ஸர்வசக்தியுக்தன், உம்முடைய ஸர்வாபேக்ஷிதங்களையும் செய்து தலைக்கட்டுகிறோம்:” என்றருளிச் செய்ய ‘சீலமெல்லையிலான்” (திருவாப்மொழி 9-9-11) என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார் ” என்று. *நிருபாதிக பந்துவானவனே ஆபத்ஸகன் ” அவனே நிருபாதிக ஸுஹ்ருத்து, அல்லாதார் பக்கல் தோற்றுகின்ற ஸெளஹார்த்தம் ஸோபாதிகம்’” (ஈடு 9.1. ப்ரவேசம், முதற்பாட்டவதாரிகை) என்று-
-“1-எண்டிசையுமகல் ஞாலம் எங்குமளிக்கின்ற ஆலின் மேலென்னுபடி நித்வ போக பாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்கும் ஆபத் ஸகன், (2) ஆருயிரென்னப் படுத்தின ஆத்ம தர்சன பலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுக விட்டு (3) ஏகமெண்ணிக் காணக் கருதி எழு நண்ணி நினை தொறு முருகியலற்றிக் கவையில் மனமின்றிப் பதினலாண்டு பத்துமாஸ மொரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாஸதிந ஸந்த்யையில் படுமது கணத்திலேயா கவிரங்குகிற த்வரைக்கீடாக (4) இன்பத்திலொன்று தசம தசையிலே பேறென்று நாட் கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவைபாலே நாளிடப்பெற்றவர் (6) இம்மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவாரஷகா போக்யா ஸூகாநுபாய ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி. (6) மற்றொன்று கண்ணல்லா லென்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், (7) அதில் துர்ப்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் ஸாங்க பக்தி, அதில் அசக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி, (8) அதில் அசக்தர்க்கு உச்சாரண மாத்ரம் – ஸர்வோபாய ஸூந்யர்க்கு இப் பத்தும் பாடியிடும் தெண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறியெல்லா முறைக்கிறார் ஒன்பதாம் பத்தில்”: (ஆசார்ய ஹ்ருதயம் 4ம் ப்ரகரண்ம் ஸூத்ரம் 9) என்று ஒன்பதாம் பத்தில் ப்ரகாசப்படுத்தப்படும் பொருள்களை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்தார்.
பரம காருணிகனான கீதாசார்யன் கண்ணன், உலகோர்கள் உஜ்ஜீவிக்கும் படி எவரெவர் எதை யெதை விரும்புகிறார்களோ அதைப் பற்றி உஜ்ஜீவிக் கட்டும் என்ற திருவுள்ளமடியாக கர்ம யோகம், ஜ்ஞாந யோகம், பத்தி யோகம், ப்ரபத்தி, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநம், புருஷோத்தம ப்ரஹ்ம வித்யை என்று பல பல மோக்ஷாபாயங்களை ஸ்ரீகீதையில் அருளிச் செய்தான். அதே போல் ஆழ்வாரும் ஒன்பதாம் பத்தில் அவரவர் ருசிக்கீடாக அவரவர் பற்றலாம் படியான மோக்ஷ நெறிகளை உபதேசித்தார், மோக்ஷோபாயமொன்றிலும் அந்வயமில்லாத நாம் ஆழ்வார் அருளிச் செய்த ‘*மாலை நண்ணி” (திருவாய் மொழி 9. 10) என்னும் திருவாய்மொழியைப் பாடி ப்ரீதராய் ஆடி ஸுலபனான செனரி ராஜன் அடி பணிந்தால் போதும். நம் வினை கிட்ட அண்டாது. இத்தேஹாவஸானத்தில் மோக்ஷம் நிச்சயம் உண்டு. ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக ஸர்வாபீஷ்ட ப்ரதன் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே ஸித்தோபாயம்: அவன் ஸ்வபாவத்தையும் நம் ஸ்வபாவத்தையும் நினைத்தால் நாம் ஒரு ப்ரவிருத்தியும் செய்ய வேண்டியதில்லை. நாம் செய்வதெல்லாம் அவனுடைய கைங்கர்யமேயாகும். ஆசார்ய ஸமாச்ரயணத்தால் இவ்வித ஸித்தோபாய நிஷ்டர்களான நாம் பேற்றில் கவலை யற்று மார்பில் கை வைத்து உறங்கலாம். மரணமடைந்ததும். மோக்ஷம் நிச்சயமுண்டு, இது 9ம் பத்து 10ம் திருவாய் மொழியின் ஸாரமான பொருள்.
9ம் பத்து முதல் திருவாய்மொழியின் ஸாரமான பொருள், ஸம்ஸாரத்தின் தண்மையும்-அல்பாஸ்திரதையும் ஸர்வேச்ரவ ‘னுடைய ப்ராப்ய ப்ராபகபாவமும். **அவனுக்கு நாம் செய்ய வேண்டுவது அவன் தானே மேல் விழா நின்றால் விமுகராகாதொழியு மத்தனை யிறே வேண்டுவது. இவனுடைய உத்யோகத்திலே (முயற்சியிலேயே) அவனுக்கு வயிறு நிறையும்”. இது 9.1.8ம் பாட்டின் ஈட்டின் வாக்யம்.
ஓன்பதாம் பத்து 2ம் திருவாய்மொழியின் ஸாரமான பொருள் கைங்கர்யம் செய்வதில் மநோரதம்-பாரிப்பு: ‘*ப்ராப்தியை அநுபவித்தார் கீழிற் திருவாப் மொழியில்; ப்ராப்தி பலத்தை ஆசைப்பட்டு அபேஷிக்கிறாரிதில்?? (9,3 ஈடு ப்ரவேசம்) எம்பெருமான் நமக்குச் செய்துள்ள உபகார பரம்பரைக்குக் க்ருதஜ்ஞனாயிருக்க ,வேணும் நாம். அவன் நமக்குச் செய்ய வேண்டுமம்சத்துக்கு நாம் ப்ரார்த்திக்கவும் வேணும், ப்ரார்த்தனை உபாயமன்று. அதிகாரி ஸ்வரூபமே”. ‘*செய்த அம்சத்துக்கு கருதஜ்ஞனாகவும், செய்ய வேண்டும் அம்சத்துக்கு ப்ரார்த்திக்கவும் வேணுமிறே அதிகாரிக்கு? (9.3.1. ஈடு ) என்று.
9ம் பத்து 3ம் திருவாய்மொழியின் ஸாரமான பொருள் எம்பெருமானுடைய சீல குண ப்ராசுர்யமே. எம்பெருமான், அடியார் ஒன்று செய்கையும் மிகையாக எண்ணுமவன். அடியாரும் எம்பெருமான் சீல குணத்திலே ஈடுபட்டுத் துவக்குண்டு ஒன்றும் செய்ய முடியாத வராயிருப்பர், ஆக இத்திருவாப்மொழி எம்பெருமானின் சீல குணத்தின் மிகுதியைச் சொல்லித் தலைக் கட்டுகிறது. 9.4. ஈடு ப்ரவேசத்தில் இவ்வர்த்தம் கூறப்படுகிறது.
9ம் பத்து 4ம் திருவாய்மோழியின் ஸாரமான் பொகுள் : ஆழ்வாருடையவும் அவர்-இந்திரியங்களினுடையவும் பகவத் குணாநுவபத்திலுள்ள சாபல்யம் பெரு விடாய். ஆழ்வாருக்கு இந்த விடாய் எப்போதுமுள்ளதாய் எல்லாத் திருவாய் மொழிகளிலும் ஊடுருவியிருப்பதொன்று. எம்பெருமானும் ஆழ்வாரின் பெரு விடாயை யறிந்து ஆழ்வாருக்கு முகம் காட்ட, ஆழ்வார் “நான் க்ருதக்ருத்ய ‘ னானேன், அடிமை செய்யப் பெற்றேன், வாழ்ந்தேன் (தொண்டர்க்கமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் ‘ (திருவாய்மொழி 9.4.9) என்றபடி), ஸ்ரீ வைஷ்ண வர்களுக்கெல்லாம் நான் உபகாரகனாம் படியானேன்; இதொருவன் பெறும் பேறிருந்தபடியே என்று தமக்குப் பிறந்த லாபத்தை ௮நுஸந்தித்து அத்தைப் பேசித் தலைக் கட்டுகிறார்” (9.4. ஈடு பிரவேசம்) என்று.
9ம் பத்து 5ம் திருவாய்மொழியின் ஸாரமான பொருள்: (கண்ணனைக் கண்டு கொண்டேனே ‘ என்னும்படி மாநஸா நுபவத்தில் ஜ்ஞாந வைசத்யம்-தெளிவு ஏற்பட்டதும் உடனே பாஹ்ய ஸம்ச்லேஷாபேஷை பிறந்து அது உடனே கிட்டாமையாலே வருந்தி ஆண் பெண்ணாய் ௮வனை நினைப்பூட்டும் போலியான குயில் மயில் கிளி போன்ற பொருளைக் கண்டு தளர்வுற்ற ஆழ்வாரின் தன்மை.
9ம் பத்து 6ம் திருவாய்மொழியின் ஸாரமான பொருள்: * இருத்தும் வியந்தில் ” (திருவாய்மொழி 8.1) அநுபவம் ஆழ்வாருக்கு இங்கு ஸ்ம்ருதி விஷயமாய்–நினைவுக்கு வந்து எம்பெருமானுடைய தம்மோடு கலந்த பரிமாற்றத்தின் சில குணத்தில் ஈடுபட்டுப் பேசுவது, இங்கே ஈட்டில், நம்பிள்ளை “கடலைத் தரை காண்பாரைப் போலே இருத்தும் வியந்தில் அநுபவத்தை இதிலே கொண்டுவந்து சேர்ப்பதே நம் முதலிகள்”! என்று ஈடுபட்டு அருளிச் செய்வார் என்னும் ஐதிஹ்யம் வந்துள்ளதைக் குறிக் கொள்ள வேணும். நம் பூர்வாசார்யர்கள் எப்போதும் திருவாய்மொழியின் பொருளை அநுஸந்திப்பதையே யாத்திரையாய்ப் போருவர்கள்.
9ம் பத்து 7ம் திருவாய் மொழியின் ஸாரமான பொருள், எம்பெருமானின் வடிவழகிலும் குணத்திலும் ஈடுபட்டு அவனைப் பெற்றுப் பிழைத்தல், பெறா விடில் முடியும்படியான தன் தசையை பிராட்டி பாவத்தில் ஆழ்வார் அருளிச் செய்தது.
ஒன்பதாம் பத்து 8ம் திருவாய்மொழியின் ஸாரமான பொருள்: திருவடி பெருமாளின் செய்தியைச் சொல்லிச் சென்ற பிறகு பெருமாளைக் கிட்டுவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த மநோ ரதம் போலே ஆழ்வாருடைய மநோ ரதம், என்று இங்கே ஈடு வாக்யம் “உபாயோபேயங்களிரண்டும் ஈச்வரனே என்று அத்ய வஸித்தார்க்கு ப்ராப்ய ருசி கண்ணழிவற்றால் விளம்பஹேது இல்லாமையாலே ப்ராப்ய ஸித்தியளவும் மநோ ரதம் செல்லா நிற்குமிறே””, (9. 8ஈடு ப்ரவேசம்) என்று பெரிய முதலியார்-(ஆளவந்தார்) ப்ராப்ய ஸித்தியில் த்வரையாலே எப்போதும் இத்திருவாய்மொழியை அநுஸந்தியா நிற்பர்; ஆகையாலே இத்தை “*பெரிய முதலியார் திருவாய்மொழி‘” என்றாய்த்துச் சொல்வது (ஈடு ப்ரவேசம் 9.8) என்று.
9ம் பத்து 9ம் திருவாய்மொழியன் ஸாரமான பொருள்: பெருமாளைக் காட்டிலே ஏகாந்தமாக அநுபவிக்கலாமென்று புறப்பட்டு வந்த பிராட்டியை விலலாப ஸீதா?” என் றபடியே கூப்பிடப் பண்ணினப்போலே திருவாயில் ஏகாந்தமாக அநுபவிக்கலாமென்று மநோ ரதித்த ஆழ்வார் அது கிட்டப்பெறாமல் அவனை நினைப்பூட்டும் குழலோசை முதலான மாலைப் போதில் உண்டாமவையெல்லாம் ஆழ்வாருக்கு பாதகமாய் ஆழ்வாரை வருத்த, அவ்வருத்த மேலீட்டால் கூப்பிடப் பண்ணிற்று என்பது. **செல்கின்ற வாற்றாமை பேசி அலமந்த மாறன் !’ என்று மா முனிகள் திருவாய்மொழி நூற்றந் தாதியில் இத் திருவாய் மொழியின் ஸாரப் பொருளைக் குறிப்பிட்டருனினர்.
1- ப்ரளயாத்பாபத்துக்களிலே ஜகத்தை நோக்க ரக்ஷிக்கும் எம்பெருமான் -2- ஆழ்வாருக்கு ப்ராப்ய ருசியை அதிகமாக்கி -3-அந்த ப்ராப்ப ருசி மூலமான ப்ராப்ய த்வரைக் கீடாக -4-மரணமானால் வைகுந்தம் ** என்று ப்ராப்ய லாப நாளைக் குறிப்பிட்டான். அத்தால் தெளிந்த ஆழ்வார் (5) இம் மடவுலகர்களும் தம்மைப் போல் பேற்றைப் பெற்று புஜிக்க வேணுமென்ற கிருபையாலே அவர்களுடைய அஜ்ஞான ௮ந்யதாஜ்ஞாந விபரீத ஜ்ஞாநங்களை நீக்க நேரான ஜ்ஞாநமான ““எம்பெருமானே ஸர்வவித பந்து ரஷகன் இனியன் “* என்பதை உபதேசித்தார். அப்படி உபதேசிக்கும் போது அவரவர்களுக்குத் தக்கபடி (6) எம்பெருமானாகிற ஸித்தோபாயம் (7) அதில் விச்வாஸ மில்லா தார்க்கு பக்தி, பக்தியில் பசிகரம்–ஸஹ காரி இல்லாதார்க்கு தாளடையும் ப்ரபத்தி-சரணாகதி (8) அது செய்ய மாட்டாதவர்களுக்கு எம்பெருமானையும் அவன் உகந்தருளின திவ்ய தேசத் திருநாமங்களையும் சொல்லுவதே போதும். அதுவும் முடியாதவர்களுக்கு இப் பத்துப் பாட்டையும் பாடி ஆடி எம்பெருமான் திருவடியைப் பணிவதே போதுமானது என்று உஜ்ஜீவனோபாயங்களை யெல்லாம் எடுத்துரைத்தார். இது 9ம் பத்தின் பொருளைக் குறிக்கும் ஆசார்ய ஹ்ருதயம் 4ம் ப்ரகரணம் 9ம் ஸஃத்திரத்தின் பொழிப்புரையாகும். ‘
ஒன்பதாம் பத்தில் 8 திவ்ய தேசங்கள் மங்களாசாஸனம் செய்யப் பட்டுள்ளன.-திருப்புளிங்குடி-2-திருவரகுணமங்கை –3, திருவைகுந்தம்–4. திருவேங்கடம் -5. திருக்காட்கரை -6-திருமூழிக்களம்- 7. திருநாவாய்–8. திருக்கண்ணபுரம்
9ம் திருவாய்மொழியில் 1. திருப்புளிங்குடி. 2,- திருவரகுணமங்கை திருவைகுந்தம் மூன்று திவ்யதேசங்கள் “புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று” (திருவாய்மொழி 9.9.4) குறிக்கப்பட்டது. இத் திவ்ய தேசங்கனில் தனக்கு போக்ய பூதரான ஆழ்வாருக்கு பரம பக்தி யாகிற பரிபாகம் பிறக்குமளவும் எம்பெருமானுக்கு ஆழ்வாரை புஜிப்பதில் உண்டான த்வரை விளங்குகிறது. பசி மிகுக்தவன் அன்னம் பக்குவமாவதற்கு முன்னே பதற்றத்தோடே மடைப்பன்னிக்கு அணித்தாக வந்து கிடப்பது இருப்பது நிற்பதாய் அவஸரப் படுவான். அது போல் எம்பெருமான், ஆழ்வார் எழுந்தருளியிருக்கும் திருக்குருகூர்க்கு கூவுதல் வருதல் செய்யும்படி வெகு சமீபமாயுள்ள திருப்புளிங்குடி, திருவரகுணமங்கை, திருவைகுந்தம் திவ்ய தேசங்களிலே கிடப்பது இருப்பது நிற்பதாகா நின்றான். “போக்ய பாக த்வரை தெளிந்த சிந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்’” (ஆசார்ய ஹ்ருதயம் 9ம் ப்ரகரணம்)
திருவேங்கடம் 3ம் திருவாய்மொழி. 8ம் பாட்டில் *நின்ற வேங்கடம் நீணிலத்துள்ளது’‘ என்று குறிக்கப்பட்டுள்ளது. திருவேங்கடத்தில் நிகரில் புகழாய் என்று கூறப்பட்ட எம்பெருமானுடைய வாத்ஸல்ய குணம் உஜ்வலமாய் விளங்குகிறது.
திருக்காட்கரை 9-6ம் திருவாய்மொழியில் மங்களாசாஸனம் செய்யப் பெற்றது. அதில் எம்பெருமானுடைய சீல குணம் பிரகாசிக்கும். : ஸம்ச்லேஷ தசையில் எம்பெருமான் ஆழ்வாரை -முறை மாறாடிப் பரிமாறும் சீல குண முடையவன், இதுவே திருக்காட்கரை மருவிய மாயன்தன் மாயமாகும்-“போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரை யழிக்கும்”” (ஆசார்ய ஹ்ருதயம் 3ம் ப்ரகரணம்)
திருமூழிக்கனம் 9-7ம் திருவாய்மொழியில் மங்களாசாஸ்னம் செய்யப் பெற்றது. அதில் எம்பெருமானுடைய தன் உயிரான மஹாத்மாக்களின் விரஹத்தை ஸஹியாத. மார்த்தவ குணம் ப்ரகாசிக்கும். ‘*ஒரு தடவை யாவது எம்பெருமானுடைய திருமேனியை ஸேவிக்க வேண்டுமென்ற அவாவினல் மற்ற புருஷார்த்தங்களைப் புல்லுக்கு ஸமமாக எண்ணியிருக்கும் மஹாத்மாக்களின் விரஹம் எமபெருமானுக்கு மிகவும் பொறுக்க வரிது’” என்று ஆளவந்தார் அருளிச் செய்தார். ஆகவே தான் திருமூழிக்களத்தில் தமரோடங் குறைவான் எம்பெருமான். “*மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தேடு கூடு பூரிக்கும்!” (ஆசார்ய ஹ்ருதயம் 3ம் ப்ரகரணம்),
திருநாவாய் 9-6ம் திருவாய்மொழியில் மங்களாசாஸனம் செய்யப் பெற்றது. அதில் எம்பெருமானுடைய ஆஸ்ரித விஷயத்திலுண்டான க்ருபை பிரகாசிக்கிறது. எம்பெருமான் ஸம்ஸாரக் கடலில் மூழ்குகிறவர்களுக்கு செய்யுமவ்வூரும் அக்காரணத்தால் நாவாய்” எனப் பேர் பெற்றது. **துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போதாந்ருசம்ஸ்யம் நாவாயிலே நிழலெழும்” (ஆசார்ய ஹ்ருதயம் 8ம் ப்ரகரணம்)
திருக்கண்ணபுரம் : 9-10ம் திருவாய்மொழியில் மங்களாசாஸனம் செய்யப்பெற்றது. அதில் எம்பெருமானுடைய சரண்யத்வம் முகுந்தத்வம் இவை பிரகாசிக்கின்றன. முகுந்தன்-மோக்ஷ பூமி ப்ரதன்- சரண்யன்-எல்லார்சக்கும் சரண வரணார்ஹன்.“சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதகத்திலே பிரஸித்தம்” (ஆசார்ய: ஹ்ருதயம் 8ம் ப்ரகரணம்)தேஹத்தில் உபேஷை பண்ணி உலர்ந்த வடிவினரான முமுஷுக்தாக்களை ரஷிக்கிற எம்பெருமான் உகந்து வர்த்திக்கிற இடமாகையால் அவ்விமானம் – உத்பலாவதகம் ” என்ற பெயர் பெற்றது.
ஒன்பதாம் பத்து ஈடு முப்பத்தாராயிர வ்யாக்யானத்தில் 29 ஐதிஹ்யங்கள் -நிர்வாஹங்கள் வந்துள்ளன. அவற்றில் மொத்தம் 24 பூர்வாசார்யர்களின் திருநாமங்கள் வந்துள்ளன.
24 ஆசார்யர்களின் திருநாமங்கள்– 1. ஆப்பான் திருவழுந்தூரரையர் 2. ஆழ்வான் (கூரத்தாழ்வான்) 3. பிள்ளை திரு நறையூர் அரையர் 4. பட்டர். 5- திருக் கண்ணமங்கை ஆண்டான் -6-. பிள்ளை தேவப் பெருமாளரையர் 7. ஆழ்வார் (கூரத்தாழ்வார்- ஆழ்வானின் திருத்தகப்பனர்- ஆளவந்தா ராழ்வாராகவுமாம்) 8. பிள்ளை அழகிய மணவாளரையர் 9. வங்கிபுரத்து நம்பி 10. ஆண்டான் (முதலியாண்டான்) 11. நடுவில் திருவீதிப்பிள்ளை 12, கோயிலாத்தான் 13. மணக்கால் நம்பி 14. நம்பிள்ளை -15-ஆளவந்தார் -16-எம்பெருமனார்-17-பிள்ளை அகளங்க ப்ரஹ்ம ராயர் 18-இரு கை மத வாரணம்-19-பிள்ளான் (திருக்குருகைப் பிள்ளான்) 20-எம்பார்–21-நஞ்சீயர்–22-சிற்றாள் கொண்டான்–23-பெற்றி–24-நம்பி திருவரங்க நாராயண தாஸர்.
குருபரம்பரா ப்ரபாவம் முதலான இடங்களில் இவ் வைதிஹ்யங்களில் வந்துள்ள சரித்திர பாகங்கள் வந்திருக்காது, இவற்றையும் சேர்த்து பெரியதொரு குரு பரம்பரா ப்ரபாவம் அமைக்க அமையும். இவ்வாறு திருவாய்மொழி 9ம் பத்தில் விஷயத்தை ஈடு, ஆசார்ய ஹ்நதயம் முதலான நூல்களைக் கொண்டு ஒருவாறு முடிந்தவனவு அநுபவித்தோமானோம்
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ உ, வே. வித்வான் திருநாங்கூர் ப்ரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply