ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-எட்டாம் பத்தின் ஸாரம்-ஸ்ரீ.உ.வே , வித்வான்‌. யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்‌ ஸ்ரீ பிள்ளை லோகம்‌ பாஷ்ய காரர் ஸ்வாமிகள் —

ஸத்ய காமத்வம்‌” திருவாய்மொழி– எட்டாம்‌ பத்தின்‌ ஸாரம்‌
ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனாலே மயர்வற மதிநலமருளப்‌ பெற்றவர்‌ களான நம்‌ ஆழ்வார்களில்‌, அவயவி யென்றும்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனென்‌றும்‌. கொண்டாடப்படும்‌ நம்மாழ்வார்‌ அருளிய திருவாய்மொழியில்‌ எட்டாம்‌ பத்தின்‌ ஸாரார்த்தத்தை ஆசார்யாநுக்ரஹத்தால்‌ யதா மதி யதா சக்தி விண்ணப்பித்துக்‌ கொள்கிறேன்‌.நம்மாழ்வார்‌ 10 பத்திலும்‌, எம்பெருமான்‌ பிறப்பித்த பத்து தசா விசேஷங்களை ப்ரகாசப்படுத்திஞர்‌. ஆசார்ய ஹ்ருதய-ஸூத்ரம்‌ (218) பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் ஸகத்வ ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன்‌ இத்யாதி காண்க. இந்த எட்டாம்‌ பத்தில்‌ ஸர்வேஸ்வரனுடைய ஸத்ய காமத்வத்தை வெளியிடுகிறார்‌.கீழ்ச் சொன்ன ஸர்வ ஸக்‌தி யோகத்தாலே நித்யமாகக்‌ கல்பிதமான போக்ய போகோபகரண போக ஸ்தாநங்கள் யுடையவனாகையாலே ஸத்ய காமன்‌ ஸர்வேச்வரன்‌ என்பது விளக்கப்படுகிறது.-

1-தேவிமாராவார்‌
ஸ்ரீ ய: பதியான எம்பெருமான்‌ ஆதார சக்தி க்ரமத்தில்‌ திருவநந்தாழ்வான்‌ மேலே மஹிஷீ பூஷண ஆயுத பரிஜந பரிச்சதாதி விஸிஷ்னாய்‌, நித்ய முக்தாநு பாவ்யனாய்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ப்ரகாரமே பர்யங்க வித்யைபில்‌ கூறப்பட்ட தாகும்‌, அந்த பிரகாரத்தில்‌ திருவாறன்விளை என்னும்‌ திவ்ய தேசத்தில்‌ ஆழ்வார்‌ பாடின திருவாய்‌ மொழியைக்‌ கேட்கைக்காக எழுந்தருளி யிருந்தான்‌. அங்கே போய்‌ திருவாய்மொழி கேட்பித்து அநு கூல விருத்திகளைப்‌ பண்ணி அநுபவிப்போம்‌ என்று (7-10-) கீழே பாரித்தார்‌. ஆனால்‌ அது மநோ ரத மாத்‌ரமேயாய்‌ நினைத்தபடி தலைக் கட்டப்‌ பெற்றதில்லை. இத் திருவாப்‌ மொழியில்‌ 8–1 4தேவிமார்‌ ஆவார்‌” என்று தொடங்கி ‘நின்னுருவம்‌’ என்னுமளவும்‌-பிராட்டிமார்‌ அருகே எழுந்தருளி யிருக்க, நித்ய ஸூரிகள்‌ உண்டாயிருக்க, நினைத்தபடி கார்யம்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான ஐஸ்வர்யம்‌ குறைவற்றிருக்க, ஆஸரிதர்‌ உகந்தவற்றைத்‌ தனக்குத்‌ திருமேனியாகக்‌ கொண்டு உதவும்‌ ஸ்வபாவனா யிருக்க, தனக்கும்‌ ருசி குறைவற்றிருக்க நினைத்தபடி பரிமாற்றம்‌ கிடைக்க வில்லையே என்று வெறுத்தார்

1-தேவிமாராவார்‌ ப்ராபக ப்ரதாநம்‌
2-நங்கள்‌ வரிவளை–ப்ராப்ய ப்ரதாநம்‌
– அவன்‌ குணங்களிலும்‌ ஸ்வரூபத்திலும்‌ அதி சங்கை பண்ணித் தெளிந்து (1-8) *வணங்குமாறறியேன்‌“, என்று தந்தலையில்‌ ஸாதந யோக்யதையைத்‌ தவிர்த்து (1-9) யானும்‌ நீ தானே யாவதோ மெய்யே” என்று அவனிடத்தில்‌ ந்யஸ்த பரதையைச்‌ சொல்லி, இப்படி ப்ராஸங்கிகமாக அவனே ப்ராபகன்‌ என்று நிஷ்கரித்தார்‌. ஆகையால்‌ கீழில்‌ திருவாய்‌ மொழி ப்ராபக ப்ரதாநம்‌.
3-அங்குமிங்கும்‌–ஆழ்வாருடைய திருப் பல்லாண்டு, பீதராவதும் ஸமாஹிதராவதும்‌.
4-வார்கடாவருவி-சவ்ர்ய வீர்யாதி குணங்களையும் சக்தியையும்‌ காட்டிக்‌ கொடுக்க வடிவழகில்‌ நெஞ்சைச் செலுத்தி இனியராகிறார்‌.
5-மாயக்‌ கூத்தா--பாஹ்ய ஸம்ச்லேஷா பேஷை பிறந்து அது பெறாமை யால்‌, அவன்‌ வந்து முகக்‌ காட்டாமல்‌ கிலேசத்தோடே முடிந்து போமித்தனை யாகாதே என்‌று இழவோடே தலைக்‌ கட்டுகிறது.
6-எல்லியும்‌ காலைவும்‌–ஊர்த்தவம்‌ மாஸாந் ந ஜீவிஷ்யே-என்ற அவனிற்‌ காட்டில்‌ *ந ஜீவேயம்‌ ஷணமபி”” என்றவனுகையாலே ஹ்ரீரேஷாஹிம மாதுலா” என்று லஜ்ஜித்து தம்முடன்‌ கலக்கைக்காக திருக் கடித்தானத்தில்‌ எழுந்தருளியிருந்து தம்‌ பக்கல்‌ பண்ணுகிற வ்யாமோஹத்தை அநுஸந்தித்து இனியராகிறார்‌.
7-இருந்தும்‌ வியந்து– விபீடணன்‌ தறைப் பட்டாற் போலவும்‌ ஸ்ரீஜனக ராஜன்‌ திருமகள்‌ ராம நாம ஸங்கீர்த்தனம்‌ கேட்டுத்‌ தெளிந்து ஹ்ருஷ்டையானாப்‌ போலவும்‌ இவ் வாழ்வாரும்‌ தெளிந்து ப்ரீதராய் *தமக்கு அத் வேஷத்தைப்‌ பிறப்பித்து ஆபிமுக்யத்தை உண்டாக்கித்‌ தன்னாலல்லது செல்லாமையைப்‌ பிறப்பித்துத்‌ தன்‌ மேன்மை பாராதே இப்படித்‌ தாழ நின்று வந்து கலந்து பரிமாறுவதே ! இதென்ன ஆஸ்ரித பாரதந்தர்யம்‌, இதென்ன நீர்மை என்று அவன்‌ படிகளை அநுஸந்தித்து ஹ்ருஷ்டராகிறார்‌.
8-கண்கள்‌ சிவந்து–மாயக்‌ கூத்தனில்‌ ஆழ்வார்க்கு ஒடின விடாயெல்‌லாம்‌ ஆறும்படி எம்பெருமான்‌ ஸம்ஸ்லேஷித்தான்‌. ஈச்வரன் விடாயும்‌ தீர்ந்தது. ஸம்மஸ்லேஷம் சிதிலமாக ஒண்ணாது, வளவேழுலகில்‌ தம்‌ அயோக்யதையை அநு ஸந்தித்து அகலப் பார்த்தார்‌. அவ்வாறு அகலாமல்‌ இருக்க ஈஸ்வரன்‌ இவ்‌ வாத்ம வஸ்‌துவினுடைய வைலக்ஷண்யத்தை இவர்‌ நெஞ்சில்‌ படுத்த வேணும்‌ என்று பார்த்து *நித்யமாய்‌ ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்‌, நமக்கு அத்யத்த சேஷமாய்க் காணும்‌ இருப்பது, நீர்‌ கிட்டுவது நமக்கு அவத்யமல்ல -கௌஸ்துபம் பிராட்டிமாரோபாதி நமக்கு நிறமாகும்‌ என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தை இவர்‌ நெஞ்சில்‌ படுத்தினன்‌. தம்முடைய வடிவழகை முற்பட அநுபவிப்பித்து, தனக்கு நூபுராதிகளைப்‌ போன்று அத்யந்த போக்யமுமாய்‌ அத்யந்த சேஷமு மாயிருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபத்தைக்‌ காட்டிக்‌ கொடுக்க அத்தை அநுபவித்து இனியராகிறார்‌.
9-கருமாணிக்கமலைமேல்‌–
கீழ்த்திருவாய்‌ மொழியில்‌ முதல்‌ இரண்டரைப்‌ பாட்டால்‌ அவனுடைய ஸெளந்தர்ய சீலாதிகளை அநுஸந்தித்து, அவற்றோ பாதி விலஷணமுமாய்‌ அநந்யார்ஹமா யிருக்கிற ஆத்ம ஸ்வரூபத்தைக்‌ குறைப்பாட்‌டால்‌ அநுஸந்தித்து இனியரானார்‌. அந்த சேஷத்வ ரஸத்தால்‌ ப்ரீதராய்‌, ப்ரீதி பரவஸ்யத்தாலே தாமான தன்மை யழிந்து ஒரு பிராட்டி தசையை அடைந்து அதனை அந்யாபதேசத்தாலே பேசி இனியராகிறார்‌.
10-நெடுமாற்கடிமை–
கீழ் இரண்டு திருவாய்‌ மொழிகளில்‌ ஆத்மாவினுடைய அநந்யார்‌ஹ சேஷத்வத்தை அருளிச்‌ செய்தார்‌. அதாவது பிறர்க்கும்‌ உரித்தல்ல, தனக்கும்‌ உரித்தல்ல என்பதாகும்‌, ப்ரணவத்தில்‌ மத்யம பதமான உகாரத்தாலும்‌, நமஸ்‌ ஸாலும்‌ விளக்கப்பட்ட அர்த்தமிது. அநந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ததீய சேஷத்வ பர்யந்தமிறே. ஈஸ்வர ஸேஷம்‌ என்று அறிந்தவன்று ப்ரமித்து மீளலாம்‌, ததீய ஸேஷத்வ பர்யந்த முணர்ந்தால்‌ மீள வேண்டா,-ஐச்வர்யமும்‌ புருஷார்த்தம்‌ ஆத்ம லாபம்‌ புருஷார்த்தம்‌ பகவத் மோஷத்வமும்‌ புருஷார்த்தம்‌, ஈஸ்வரனாய்‌ ஆநந்த மய : என்றிருக்கும்‌ இருப்பு புருஷார்த்தம்‌ என்று நினைத்திருப்பவர்‌ பலர்‌. இவை தனித் தனியாகவும்‌ திரளவும்‌ நான்‌ பற்றின பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்தத்திற்கு ஒவ்வாது. இதுவே கால தத்வ முள்ளதனையும்‌ எனக்கும்‌ என்னோடு ஸம்பந்தமுடையார்க்கும்‌ வாய்க்க வேணும்‌ என்று ப்ரார்த்தித்து தலைக்‌ கட்டுகிறார்‌ நம்மாழ்வார்‌.

பாகவத சேஷத்தவம்‌- நெடுமாற்கடிமை-பயிலும்‌ சுடரொளியில்‌-(இவ்வாத்மாவுக்கு நாதர்‌ ஸ்ரீ வைஷ்ணவர்கள்‌ என்றது) (இதில்‌ நிரதிசய புருஷார்த்த பூதர்‌-போக்ய பூதர்‌-அவர்கள்‌ என்றது) பாகவத போக்யதைக்கு ஹேது பகவத் ஸம்பந்தமாகையாலே அந்த எம்‌ பெருமானுடைய-ஆஸ்ரித வ்யாமோஹம்‌, உதார ரூபத்வம்‌, அசேஷ ஜந ஸம்ச்‌ லேஷம்‌, ஆபத் ஸகத்வம்‌, ஆஸ்சர்ய ஸ்வபாவம்‌, ஆஸ்ரித விரோதி நிரஸநம்‌, அகில காரணத்வம்‌, அர்ணவ சாயித்வம்‌, ஆயுத பூர்த்தி. அநுபாவ்யாகார யோகம்‌ இவற்றை முறையே பத்துப் பாட்டுக்களில்‌ அநுபவித்தார்‌ ஆழ்வார்‌.

எம்பெருமானுக்கு அபிமதர்கள்‌ பாகவதர்‌-ஆகவே அத்யந்த சேஷத்வ காஷ்டா விசேஷமே அதிசயித போக்யம்‌, ஐஸ்வர்ய கைவல்ய பகவத் ப்ராப்த்யாதிகளும்‌ அதுக்கு ஸத்ருசமாக மாட்டா. சேஷித்வத்தை முதல்‌ நான்கு பாட்டுக்‌களிலும்‌, சரண்யத்வத்தை 5, 6, 7 பாட்டுக்களிலும்‌ ப்ராப்பதிவத்தை 8, 9, 10 பாட்டுக்களிலும்‌ பாகவத விஷயத்தில்‌ ப்ரதிபாதித்தருளுகிறார் – கோதியைடியார்‌– ப்ரயோஜநாந்தர ஸம்ஸர்கமாகிற கோது. இல்லாத அடியார்‌-சத்ருக்நாழ்வான்‌ போல்வார்‌. ராம பக்தி யாகிற கோதில்லை யவர்க்கு—நீக்க மில்லா வடியார்‌-– பிரிவு ‘இல்லாதபடி அனுபவிக்கும் அடியார்‌ -நீக்க மில்லா இளைய பெருமாள்‌ போல்வார்‌.—சயமே அடிமை தலை நின்றார்‌-பரதாழ்வான்‌ போல்வார்‌. ஸ்வயம்‌ ப்ரயோஜநனமாகை,.

இந்தப் பத்தில்‌-100- பாசுரங்களில்‌-3 திருவாய்‌ மொழிகளில்‌ மூன்று அர்ச்சா ஸ்தல எம்பெருமானுடைய அநுபவம்‌.
1- வார்கடாவருவி-8-4—திருச்செங்குன்‌ றூர்த்‌ திருச்சிற்றாறு
2- எல்லியும்‌ காலையும்‌–8-6 -திருக்கடித்தானம்‌
3-கருமாணிக்க மலைமேல்‌–குட்ட நாட்டுத் திருப்புலியூர்‌ 8.9-

கரு மாணிக்கமலைமேல்‌-8-9-தோழிப்பேச்சு,
நங்கள்‌ வரிவளை -8-2–தலைவிப்‌ பேச்சு

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ.உ.வே , வித்வான்‌. யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்‌ ஸ்ரீ பிள்ளை லோகம்‌ பாஷ்ய காரர் ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading