ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய முதல் அத்யாயம் – மூன்றாம் பாத ஸாரம்- ஸ்ரீ உ.வே. வித்வான்‌ திரு நாராயண புரம்‌ அனந்தாண் பிள்ளை அக்காரக் கனி ஸம்பத் குமாராசார்ய ஸ்வாமிகள்-

முதல் அத்யாயம் – மூன்றாம் பாதம்-இப் பாதத்திற்கு ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதமென்று முன்னோர்கள்‌ பெயரிட்டார்கள்‌. இதற்குக்‌ காரணம்‌ என்ன வென்றால்‌-இச் சாஸ்த்ரத்தில்‌ ஒவ்வொரு அதிகரணத்திலும்‌ உபநிஷத்தின்‌ ஒரு வாக்யத்தையோ கட்டத்‌தையோ ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு, இங்குப்‌ புகழப் படும்‌ தத்வம்‌ யாது? ஏதாவது அசேதநமா, ஏதாவதொரு தேவதையா, அல்லது பரி சுத்தனான ஜீவனா அல்லது பரமாத்மா தானா? என்று சங்கித்துக் கொண்டு, தகுந்த ப்ரமாணங்களாலும்‌ யுக்தியாலும்‌ மற்ற பக்ஷங்களைக்‌ கண்டித்து, பரமாத்மாவைத் தான்‌ சொல்லிற்று என்று ஸித்தாந்தப் படுத்தப்‌ படுகிறது. இங்கு வேறுவிதமாகச்‌ சங்கிப்பதற்கு ஏதோ காரண மிருக்க வேண்டுமனறோ -அது அந்தந்த ப்ரகரணத்தில்‌ வழங்கப்பட்ட சில பதங்களோ வாக்யங்கள்‌ தானாகவோ இருக்கும்‌, இப்படிச்‌ சங்கிக்கைக்குக்‌ காரணமான வாசகங்கள்‌ சில அஸ்பஷ்டமாக இருக்கும்‌, சில ஸ்பஷ்டமாக இருக்கும்‌, மூன்றாவது பாதத்தில்‌ கையாளப்படும்‌ வாக்யங்‌களில்‌ இப்படிச்‌ சங்கிப்பதற்கு வேண்டிய அடையாளங்கள்‌ (லிங்கங்கள்‌) ஸ்பஷ்டமாகவே யிருப்பதால்‌ இதற்கு ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதமென்‌று பெயரிட்டார்கள்‌-இதில்‌ பத்து அதிகரணங்கள்‌ உள. இவற்றில்‌ 7, 8, 9 லக்கமுள்ளவை, இப்‌ பாதத்தில்‌ சர்ச்சிக்கப்படும்‌ விஷயத்திற்கு நேராக ஸம்பந்தப்படாமல்‌, ஏதோ ப்ரஸக்தாநு ப்ரஸக்தமாக வந்து சேர்ந்தவை. மற்றவை பல உபநிஷத்துக்களில்‌ பேசப்பட்ட பரமாத்‌மாவின்‌ பல குணங்களை விவரித்துக் காட்டுமவை–

1-த்யுப்வாத்யதிகரணம்‌-முண்டகோபநிஷத்தில்‌ (2-2-5) ** யஸ்மிந் த்யெள: ப்ருதிவீ சாந்தரி்ஷமோதம்‌ ஸஹ ப்ராணைச் ச ஸர்வை:, தமேவைகம்‌ ஜாநதர்த்மாநம்‌ அந்யா வாசோ விமுஞ்சத, அம்ருதஸ்யைஷ ஸேது:”‘ என்று ஓதப்பட்டிருக்கிறது. இதில்‌ பேசப்பட்ட வஸ்து ஜீவாத்மாவா, அல்லது பரமாத்மாவா என்று ஸம்சயம்‌. வாக்யத்தின்‌ பொருளாவது–யஸ்மிந் –எந்த வஸ்துவில்‌, தியெள:–த்யுலோகமும்‌, ப்ருதிவீ--பூலோகமும்‌, அந்தரிக்ஷம்‌ ச –நடுவில்‌ லோகமும்‌, ப்ராணை! ச ஸர்வை:–எல்லா இந்த்ரியங்களுடனும்‌, ஓதம்‌--சேர்ந்திருக்கின்றனவோ, தம்‌ ஏவம் ஆத்மாநம்‌ ஏவ ஜாநத— அந்த ஓர்‌ ஆத்மாவையே அறியுங்கோள்‌’ (உபாஸியுங்கோள்‌), அதல: வாச: விமுஞ்சத–வேறு வார்த்தைகளை விட்டிடுங்கோள்‌ ; (ஏனென்றால்‌)ஏஷ அம்ருதஸ்ய ஸேது;–இவன்‌ (ஆத்மா) அம்ருதத்தை அடைவிக்கும்‌ ஸேது போன்றவன்‌ என்று. அடுத்த வாக்யத்தில்‌ ‘! எவனிடத்தில்‌, சக்ரத்தின்‌ நாபியில்‌ அரங்களைப் போல நாடிகள்‌ சேர்ந்திருக்கின்றனவோ, அவன்‌ பலவாறாகப்‌ பிறந்து உள்ளே ஸஞ்சரிக்கின்றான்‌”‘ என்று பேசப் பட்டுள்ளது. நாடீ ஸம்பந்தமும்‌ பல வகையாகப்‌ பிறப்பதும்‌ சரீரத்திற்குள்‌ ஸஞ்சரிப்பதும்‌ ஜீவனின்‌ தர்மங்களே யாகும்‌. இந்த ஸ்லோகத்திலும்‌ இந்த்ரியங்களுக்கு ஆதாரமென்று பேசப்பட்டுள்ளமை ஜீவனுக்கே பொருந்தும்‌, ஆகையால்‌ இவ் விடத்தில்‌ ஜிவனைப் பற்றித் தான்‌ பேசப் பட்டிருக்கிறது–என்பது பூர்வ பக்ஷம்–

இதற்கு ஸமாதாநம்‌ சொல்லுகிறார்‌ ஸூத்ரகாரர்‌–”த்யுப்வாத்யாயதநம்‌ ஸ்வ சப்தாத்‌'”‘ என்று. இதன்‌ பொருளாவது–த்யு-பூ-ஆதி-ஆயதநம்‌-த்யுலோகம்‌-பூலோகம்‌ முதலிய வற்றுக்கு ஆதாரமாகப்‌ பேசப்பட்டது பர ப்ரஹ்மமே; ஸ்வ-சப்தாத்‌–அதற்கு வாசகமான பல சப்தங்களையும்‌ சொல்லியிருப்பதால்‌ என்று, . அதாவது அம்ருதத்திற்கு ஸேது (மோக்ஷமளிப்பவன்‌) என்று சொன்னது ஜீவனை யன்றல்லவா ? ஆத்மா என்கிற சப்தமும்‌ முக்யமாகப்‌ பரமாத்மாவைத் தான்‌ சொல்லும்‌: (!* அஜாயமாநோ பஹுதா விஜாயதே ‘” என்றபடியே அவனும்‌ பலவாறாக அவதரிப்பது உபநிஷத் ப்ரஸித்தம்‌. ஹ்ருதய கமலத்தில்‌ எழுந்தருளி யிருக்குமவனுக்கு அக் கமலத்துடன்‌ சேர்ந்த நாடிகளின்‌ ஸம்பந்தமும்‌ குறையற வுண்டு. ஹ்ருஷீகேசனென்று விருது வஹிக்குமவனுக்கு இந்த்ரிய ஸம்பந்தமும்‌ குறை யற உண்டே- ஸர்வஜ்ஞன்‌, ஸர்வவித்‌ என்றெல்லாம்‌ பேசப்படுமவனும்‌ அவனே யாவான்‌. * பொன் வர்ணமான ஸ்வாமியை உபாஸநத்தில்‌ ஸாஷாத்கரித்தவன்‌ தன்னுடைய புண்ய பாபங்களடைய நீங்கப் பெற்று அவனுடன்‌ பரம ஸாம்யத்தை யடைகிறான்‌ ” *ஸாகரத்தை யடையும்‌ ஆறுகள்‌ தந்தம்‌ பெயரையும்‌ உருவத்தை யுமிழந்து எப்படிக்‌ கடலோடு ஒன்றாய்ப்‌ பொருந்தி விடுகின்றனவோ, அதே போல்‌ உபாஸகன்‌ முக்தி யடைந்து தனது ப்ராக்ருதமான பெயரையும்‌ உருவத்தை யுமிழந்து பராத் பரனான திவ்ய புருஷனை யடைகிறான்‌ ‘” என்றும்‌ மேல்‌ பல ஸ்லோகங்களில்‌ பரமாத்மாவின்‌ ப்ரஸ்தாவம்‌ இடையறாமல்‌ தொடர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு வாக்யத்தில்‌ ”ஒரே மரத்தில்‌ (சரீரத்தில்‌) பரமாத்மாவுடன்‌ வஸிக்கும்‌ – ஜீவன்‌ தனக்கு விருப்பமில்லா மலிருக்தாலும்‌ பல கஷ்டங்களை யனுபவித்து துக்கித்தி ருக்கிறான்‌ ; அவன்‌ ஸ்வாமியான எம்பெருமானையும்‌ அவன்‌ பெருமையையும்‌ எப்பொழுது , அறிகிறானோ, அப்பொழுது இத்துக்கத்தில் நின்றும்‌ விடுபடுவான்‌ ”! என்று ஜீவனையும்‌ ஈஸ்வரனையும்‌ தனித் தனியாகப்‌ பேசி யுள்ளது. இம்முண்டகோபகிஷத்தான து முதலிலிருந்தே பரமாத்மாவைத்தான்‌ விவரிக்கிறதென்று கீழ்‌ இரண்டாவது பாதத்திலேயே ஐந்தாவது அதிகரணத்தில்‌ விவரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நடுவில்‌ சில வாக்யங்களில நாடீ ஸம்பந்தம்‌, பல பிறப்புகள்‌ முதலான சில ஜீவ தர்மங்கள்‌ பேசப்பட்ட மாத்ரத்தால்‌ ப்ரகரணமே மாறிவிட வில்லையென்று இவ்வளவுதான தற்சமயம்‌ நாம்‌ விவரிக்க வேண்டி யிருககிறது. இவைகளும்‌ பரஹ்மத்தின்‌ தர்மங்களே யென்று தெரிவித்த பிறகு இச் சங்கையும்‌ ஒழிந்தது. பிற்பகுதிகளிலும்‌ ஸ்பஷ்டமான பரப்ரஹ்ம லக்ஷணங்கள்‌ பற்பல விவரிக்கப் பட்டிருப்பதால்‌ இவ்வுபநிஷத்து முழுவதும்‌ ப்ரஹ்மத்தையே விவரிக்குமதென்பது அறியலாகிறது –

பூமாதிகரணம்‌-2-” * சாந்தோக்ய-உபநிஷத்தில்‌ ஏழாவது அத்யாயத்தில்‌ பூம வித்யை ஓதப்படுகிறது… அதாவது, பூமா என்று ஒரு வஸ்துவைச்‌ சொல்லி அதன்‌ பெருமையை விளக்கி அதையே உபாஸிக்க வேணுமென்றும்‌ அதனால்‌ உபாஸகன்‌ எல்லா துக்கங்களும்‌ நீங்கி அளவில்லா ஆனந்தத்தை யடைகின்றானென்றும்‌ உபதேசிக்கப் பட்டுள்ளது. இங்கு பூமா என்று-பேசப்‌ பட்டது ஜீவாத்மாவா அல்லது பரமாத்மாவா என்று சங்கை யுண்டாக, அதை. விசாரித்து ஸித்தாந்தப்படுத்துவது பூமாதிகரணம்‌-ஒரு ஸமயம்‌ நாரதர்‌ ஸனத்குமாரரிடம்‌ வந்து அவரை வணங்கி வழி பட்டு, அடியேனுக்கு உபதேசம்‌ செய்தருள வேணுமென்று வேண்டினார்‌. அதைக் கேட்டு ஸநத்‌ குமாரர்‌ இது வரையில்‌ நீர்‌ கற்றதை யெல்லாம்‌ சொல்லும்‌. பிறகு கல்லாததை உபதேசிப்‌பேன்‌ என்றார்‌. நாரதர்‌ தான்‌ நான்கு வேதங்கள்‌, ஆறங்கங்கள்‌, உபாங்கங்கள்‌ போன்ற பற்பல கலைகளையும்‌ கற்றதாகவும்‌, ஆகிலும்‌ இதனால்‌ நான்‌ வெறும்‌ மந்த்ரம்‌ தெரிந்தவனேலது ஆத்மாவை இன்னதென்று தெரிந்து கொண்டேனல்லேன்‌. ஆத்மாவை யறிந்தவன்‌ தான்‌ எல்லா சோகத்தையும்‌ கடப்பனென்று பெரியோர்கள்‌ சொல்லக் கேட்டிருப்பதால்‌, தனக்கு உபதேசம் செய்து சோகத்தில் நின்றும்‌ விடுவிக்க வேணுமென்று வேண்டிக்‌ கொண்டார்‌-சனத்குமாரர்‌ சொல்லுகிறார்‌–கீழ் படித்ததெல்லாம்‌ கேவலம்‌ ,’ நாமம்‌ ”, இதையே ப்ரஹ்மமென்று உபாஸித்தால்‌ இது விளங்குமிடமெல்லாம்‌ யதேஷ்டமாக சஞ்சரித்து இன்புறுவீர்
நாரதர்‌–நாமாவை விட மேலான வஸ்து உளதோ ? ஸநத்குமாரர்‌—ஆம்‌, வாக்கு நாமாவை விடப்‌ பெரிதாகையால்‌ அதையே ப்ரஹ்மமென்‌று உபாஸியும்‌-இதைக் கேட்டு நாரதர்‌–வாக்கை விடப்‌’ பெரியதுண்டோ என்று வினவ, ஸனத்‌ குமாரர்‌ வரிசையாக மனம்‌, ஸங்கல்பம்‌, சித்தம்‌. த்யாநம்‌; விஜ்ஞாநம்‌, பலம்‌, அந்நம்‌, ஜலம்‌, தேஜஸ்‌, ஆகாசம்‌, நினைவு, ஆசை இவைகளை யுபதேசித்து, எல்லாவற்றுக்கும்‌ மேலாக ப்ராணனை யுபதேசித்தார்‌. இங்கு ப்ராண னென்றது ஜீவாத்மாவை, இதை யுபாஸிப்‌பவன்‌ அதிவாதியாவான்‌. அதாவது–தான்‌ உபாஸிக்கும்‌ வஸ்து தான்‌ மிகவும்‌ சிறந்த தென்று சொல்லிக் கொள்பவனாவான்‌ என்று சொல்லி ஸநத்குமாரர்‌ முடித்ததும்‌, நாரதர்‌ அதற்கும்‌ மேலான வஸ்து உளதோ என்று கேட்க வில்லை. ஆகிலும்‌ ஆசார்யர்‌ தொடர்ந்தார்‌–ஸத்யத்தைக்‌ கொண்டு அதிவாதம்‌ செய்கிறவன் தான்‌ உண்மையான அதிவாதி யாவான்‌ என்று, நாரதர்‌ ஸத்யத்தின்‌ படியைத்‌ தெரிந்து கொள்ள விரும்பினார்‌. அப்பொழுது ஆசார்யர்‌ அதற்கு வேண்டிய ஸாஷாத்காரம்‌, மநநம்‌ முதலிய பலவற்றை யுபதேசித்து, ஸூகந்தான்‌ பூமா எனப்படுகிறது. எந்த வஸ்துவை யநுபவிப்பவன்‌ வேறொன்றைக்‌ காணவும்‌ கேட்கவும்‌ அறியவும் மாட்டானோ அது தான்‌ பூமா எனப்படும்‌; இதற்கு எதிர்த் தட்டாக எதை யனுபவிப்பவன்‌ அச் சமயத்திலேயே வேறு பதார்த்தங்களையும்‌ காணவும்‌ கேட்கவும்‌ அறியவும்‌ செய்கிறானோ அது அற்பம்‌ எனப்படும்‌, அது (பூமா) வொரு வஸ்துவை ஆதாரமாகக்‌ கொள்ளாமல்‌ தனக்குத் தானே ஆதாரமாயிருககும்‌. உபாஸகனுக்கு எல்லாப் புறங்களிலும்‌ ‘ அதுவே வ்யாபித்திருககும்‌. அதையே அஹ மென்றும்‌, ஆத்மா வென்றும்‌ நினைக்க வேண்டும்‌, இதனால்‌ அவனுக்கு எல்லா விதமான ஆசந்தங்களும்‌ உண்டாகும்‌. ஒருவிதமான குறைவும்‌ துக்கமும்‌ இராது–என்று சொல்லி உபதேசத்தை முடித்தார்‌. –

இவ்விடத்தில்‌ ப்ராணனை விட மேலான வஸ்து உளதோ என்று நாரதர்‌ வினவாமை யாலும்‌, ஆரம்பத்தில்‌ ஆத்மாவை அறிய வேண்டுமென்று அபேஷித்தபடியே ஸத்யமென்றும்‌ பூமாவென்றும்‌ சொல்லப்பட்ட வஸ்துவையே ஆசார்யர்‌ ஆத்மா வென்று உபாஸிக்கச்‌ சொன்னதாலும்‌ இவ் வஸ்து ஜீவாத்மாவாகவே யிருக்க வேண்டுமென்பது பூர்வபக்ஷம்‌.

இதற்கு ஸமாதாநமளிக்கிறார்‌ ஸூத்ரகாரர்‌, ‘பூமா ஸம்ப்ரஸாதா தத் யுபதேசாத்‌ ‘ என்று. இதன்‌ பொருளாவது–பூமா என்று சொல்லப்பட்டது பர ப்ரஹ்மந்தான்‌ ; ஸம் ப்ரஸாதம்‌ என்கிற ஜீவாத்மாவை விட மேற்பட்டதாக உபதேசிக்கப்படுகையாலே என்‌று -ப்ராணன்‌ என்கிற ஜீவனை உபாஸிக்கச் சொன்ன ஆசார்யர்‌ அதனால்‌ உபாஸகன்‌ அதிவாதியாகிறானென்றும்‌ சொன்னபடியால்‌, இதைக்கேட்ட நாரதர்‌ உபதேசம்‌ இத்துடன்‌ முடிந்து விட்டதென்று எண்ணி அதற்கு மேல்‌ கேட்க வில்லை. இதை யறிந்த ஆசார்யர்‌ இதற்கும் மேல்‌ ஒரு வஸ்துவுளதென்று, ” ஏஷதுவா அதிவததி யஸ் ஸத்யே நாதிவததி ”-ஸத்யத்தால்‌ அதிவாதம்‌ செய்பவன் தான்‌ உண்மையான அதிவாதியென்று புதிய விஷய மொன்றை உபதேசித்தார்‌, அதற்கு நாரதரும்‌ அந்த ஸத்யத்தையே தானும்‌ அறிய விரும்பினார்‌, ஆசார்யரும்‌ அப்படியே அதன்‌ பெருமையை யெல்லாம்‌ உபதேசித்து, அதை யுபாஸிப்பவன்‌ சோகத்தை யெல்லாம்‌ விட்டு ஆனந்தத்தை அடைவான்‌., ஸகல சேதநா சேதநங்களுடன்‌ கூடிய அந்த வஸ்துவை (ப்ரஹ்மத்தை) ஸாஷாத்கரித்தவன்‌, எல்லாம்‌ அதனுள்‌ அடங்கி விட்டபடியால்‌, அதைத் தவிர வேறு வஸ்து இல்லாமையால்‌ வேறொன்‌றைக்‌ காண மாட்டான்‌. எல்லா வஸ்துக்களும்‌ ப்ரஹ்‌மத்தின்‌ விபூதியாகவே காணப்படுவதால்‌ ஆனந்த மயமாகவே தோற்றும்‌–என்று சொலலி உபதேசத்தை முடித்தார்‌.

ப்ரஹ்மத்தை பூமா என்று சொன்னதற்குக்‌ கருத்து யாதெனில்‌, எந்த வஸ்துவில்‌ எல்லாப் பொருள்களும்‌ அடங்கி விட்டபடியால்‌, அதைக்‌ காண்பவன்‌ தனித்து வேறொன்றைக்‌ காண முடியாதோ அதுதான்‌ பூமா–பெரிது ; இதற்கு மாறாக, எதை யனுபவிப்பன்‌ வேறு சில பதார்த்தங்களையும்‌ காண்கிறானோ, அது அற்பம்‌ –என்று ப்ரஹ்மத்தின்‌ விலஷணமான பெருமையைக்‌ காட்டுவதே யாகும்‌–இதற்கு மற்றொரு படியாலும்‌ .அர்த்தங்கொள்ளலாம்‌. “* தவாம்ருதஸ்யந்திநி மது வ்ரதோ நேஷுரகம ஹி வீஷதே “–என்று ஆளவந்தார்‌ ஸாதித்தபடியே, ஆனந்த மயனான எம்பெருமானை யனுபவிப்பவன்‌ நெஞ்சு, அவனை விட்டு வேறொன்றைப்‌ பொருளாகவே நினைக்காது–என்று, ஸ்ரீபாஷ்யகாரர்‌ இதைக்‌ காட்ட வில்லையே என்று வருந்தாதீர்கள்‌, இது ஆழ்வார்கள்‌ வழியைப்‌ பின் செல்லும்‌ பரம ரஸிகர்கள்‌ அனுபவிக்க வேணடும தொன்றாகையால குத்ருஷ்டிகளுக்கு விளக்கலாகாதென்று திருவுள்ளம் பற்றி வேதாந்த ப்ரகிரியைக்கு மட்டும்‌ சேரும்படி, எல்லாம்‌ ப்ரஹ்மத்தில்‌ அடங்கி விட்டபடியால்‌ -தனித்து – ஒரு வஸ்துவும்‌ தென்படாதென்று இவ்வளவோடு நிறுத்திக் கொண்டார் -ஆகிலும்‌ இதிலும்‌ ஒர்‌ அபூர்வமான அர்த்தத்தைக்‌ காட்டி யுள்ளார்‌. அதாவது பகவத் விபூதியில்‌ இந்த லீலா விபூதியாவது நமக்கு துக்கத்தையே : விளைத்து வரூவதால்‌, நாம்‌ இதை யனுபவிக்க விரும்புவதில்லை. ஆனால்‌ இதற்குக்‌ காரணம்‌ நமது கருமமே யன்றி விபூதியின்‌ தன்மை யன்று, ஆகையால்‌ (கர்ம ஸம்பந்தமற்ற முக்தனுக்குப் போல) உபாஸகனுக்கும்‌ இது ஸுகமாகவே தோன்றும்‌, ஆகவே எல்லாப் பொருள்களையும்‌ தான்‌ சரீரமாகக்‌ கொண்டு, தன்னை யனுபவிப்பாருக்கு அளவில்லாப்‌ பேரின்பத்தை யளிக்கும்‌ பெரிய வஸ்து வாகையால்‌, பர ப்ரஹ்மமானது பூமா என்று சொல்லப்பட்டதாயிற்று –

3-அக்ஷராதிகரணம்‌-ப்ருஹதாரண்யகோபநிஷத்தின்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌ யாஜ்ஞவல்க்ய மஹர்ஹி யுடன்‌ பல ப்ராஹ்மணர்கள்‌ வாத விவாதம்‌ செய்கிறார்கள்‌. அவர்களில்‌ கார்க்கி என்பவள்‌ ஒரு பெண்மணி. இவள்‌ இரண்டு முறை கேள்விகள்‌ கேட்கிறாள்‌. அதில்‌ இரண்டாவது முறை கேள்வி யிது–வானுலகுக்கு மேலும்‌, மண்ணுலருக்குக்‌ கீழேயும்‌, இவற்றினிடையும்‌ இருக்கும்‌ பொருள்களும்‌, இவ் விரண்டு உலகங்களும்‌, முக்காலத்திலுமுள்ள பொருள்களும்‌, இவை யெல்லாம்‌ எதில்‌ ஓதப்ரோதமாய்‌ (பிணைந்து) இருக்கின்றன-? (இவற்றுக்கெல்லாம்‌ ஆதாரம்‌ யாது ? என்றபடி.) இதற்கு யாஜ்ஞவல்க்யரின்‌ பதில்‌ –ஆகாசத்தில்‌. இதற்கு மேல்‌ கார்க்கியின்‌ கேள்வி–அவ் வாகாசம்‌ எதில்‌ இணைந்திருக்கிறது?பதில்‌–இதுதான்‌ அக்ஷரமெனப்படும்‌. இது பெரிதுமன்று, சிறிதுமன்று, குட்டை யானதுமன்று, நீண்டதுமன்று, நிறம்‌ நெய்ப்பு நிழல்‌ இருள்‌ முதலியன இல்லாதது…என்று விஸ்தரமாகக்‌ கூறப்பட்டுள்ளது-இங்கு அக்ஷரமென்கிற வஸ்துவைப் பற்றி விசாரம்‌ செய்யப் படுகிறது. அதாவது, அக்ஷரமென்றது மூல ப்ரக்ருதியையா அல்லது ஜீவனையா அல்லது பரமாத்மாவையா ? என்பது ஸம்சயம்‌. முதற் கேள்விக்கு பதிலாகச்‌ சொன்ன ஆகாசமென்பது பூதாகாச மாகையால்‌; அதற்கும்‌ ஆதாரமாய்க்‌ காரணமா யிருப்பது மூல ப்ரக்ருதி யாகையால்‌ அதையே இங்கு அக்ஷரமென்று சொல்லிற்றென்பது பூர்வபக்ஷம்‌-

இதற்கு ஸூத்ரகாரர்‌ சொல்லும்‌ ஸமாதாநம்‌–‘! அக்ஷரமம்பராந்தத்ருதே: ‘* என்பதாம்‌. இதன் பொருள்‌—அக்ஷர மென்பது பர ப்ரஹ்மந்தான்‌. அம்பர… அந்த..த்ருதே:-பூதாகாசத்திற்கும்‌ அப்பாலுள்ள மூல ப்ரக்ருதியைத்‌ தரித்திருப்பதாகச்‌ சொல்லப்படுகையாலே என்று. அதாவது –கீழ்‌ உத்தரத்தில்‌, ஆகாசமென்று சொல்லப்பட்டது பூதாகாச மாகாது. ஏனென்றால்‌ மூவுலகங்களிலும்‌ முக்காலத்திலுமுள்ள எல்லாப்‌ பதார்த்தங்களுக்‌கும்‌ காரணமென்றோதப்பட்டது கார்யமான பூதாகாசமாகாது. அதற்கும்‌ காரணமான மூலப்ரக்ருதியா யிருக்கவேணும்‌. பிறகு அதற்கும்‌ காரணமான அக்ஷரம்‌ பர ப்ரஹ்மமாகத்‌ தானே இருக்க வேணும்‌. ஆகையால்‌ என்றபடி.

இதற்கு மேல்‌ ஆக்ஷேபம்‌ என்ன வென்றால்‌, ஆகிலும்‌ மூல ப்ரக்ருதியையும்‌ தரிக்கக்‌ கூடிய ஜீவனே அக்ஷரமானாலென்ன ! என்று. இதற்கு ஸமாதாநம்‌–*’ஸாச ப்ரசாஸநாத்‌” என்கிற அடுத்த ஸூத்ரம்‌. இதன்‌ பொருளாவது–ஸா ச –அந்த தாரணமானது, ப்ரசா ஸநாத்‌–சிறந்த ஆட்சிக்காக வாகையாலே. அதாவது–இங்கு அக்ஷரமானது ஆகாசத்‌தைத்‌ தரிக்கிறது என்று மட்டும்‌ சொல்லி நிறுத்தாமல்‌, ஸூர்யன்‌, சந்த்ரன்‌, மேலுலகு, கீழுலகு, காலம்‌ முதலிய எல்லாவற்றையும்‌ ஆண்டு அவ்வவற்றைத்‌ தாங்குகிறது என்றும்‌ சொல்லப் பட்டிருக்கிறது. எல்லாவற்றையும்‌ தாங்கி ஆண்டு வருமவன்‌ ஸர்வேஸ்வரன் தான்‌-மேலும்‌, இவ்வக்ஷரம்‌ எல்லாவற்றையும்‌ பார்க்கிறது, யாரும்‌ இதைப்‌ பாரார்கள்‌, எல்லோரையும்‌ கேட்கிறது, யாரும்‌ இதைக்‌ கேளார்கள்‌, எல்லாவற்றையும்‌ நினைக்கும்‌, யாராலும்‌ நினைக்கப் படாதது என்றெல்லாம்‌ விஸ்தரமாக வர்ணித்திருப்பதால்‌ இவ் வக்ஷரம்‌ ஜீவனன்று என்று காட்டப்பட்டது. மேலும்‌, யஜ்ஞம்‌ தானம்‌ ஹோமம்‌ முதலிய நற்கருமங்க ளெல்லாம்‌ இவ்வக்ஷரத்தின்‌ ஆணைப்படி நடக்கின்றன என்றும்‌ பேசப்பட்டிருக்கிறது. மேலும்‌ இதை யறியாதவன்‌ ஸம்ஸாரியாகவே இருந்தொழிவன்‌, இதை யறிந்தவன்‌ முக்தி யடைகிறான்‌ என்றும்‌ சொல்லப் பட்டிருக்கிறது–இக் காரணங்களால்‌, இங்கு அக்ஷரமென்று சொல்லப்பட்டவன்‌ பரமாத்மா தான்‌ என்று தேறிற்று–

4-ஈக்ஷதி கர்மாதிகரணம்‌-வேத வித்துக்களான ஆறு மஹர்ஷிகள்‌ பிப்பலாதர்‌ என்கிற ப்ரஹ்ம வித்தான ஒரு மஹாத்மாவிடம்‌ பணிவுடன்‌ சென்று சில கேள்விகளைக்‌ கேட்டு உபதேசம்‌ பெற்றுக்‌ கொண்டனரென்று ப்ரஸ்நோபநிஷத்தில்‌ விவரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில்‌ ஒருவரான ஸத்யகாமனென்பவர்‌, “ப்ரணவத்தை யுபாசிப்பவனுக்குக்‌ கிடைக்கும்‌ பலனைத்‌ தெரிவிக்க வேணுமென்று வேண்ட, ஆசார்யர்‌ பதில்‌ சொல்லுகிறார்‌–” ப்ரணவமென்பது ஒரு மாத்ரை, இரு மாத்ரை, மூன்று மாத்ரைகளை யுடையதாக மூன்று விதமான உபாஸநங்‌களுள்ளன. அதில்‌ ஒரு மாத்ரை யுடையதாக உபாஸிப்பவன்‌ மநுஷ்ய லோகத்தை யடைந்து-அங்கு ஸூகமே வாழ்வான்‌- இரண்டு மாத்ரைகளை யுடையதாக உபாஸிப்பவன்‌ அந்தரிக்ஷத்தில்‌ ஸோம லோகம்‌ சென்று சேர்ந்து அங்கு பல போகங்களை யனுபவித்து மறுபடியும்‌ பூமிக்கே திரும்பி விடுவான்‌, மூன்‌று மாத்ரைகளை யுடையதாக உபாஸிப்பவன்‌ ஸூர்ய லோகம்‌ சேர்ந்து தோலை யுரிக்கும்‌ பாம்பு போலத்‌ தனது பாவங்களை யெல்லாம்‌ விட்டு ப்ரஹ்ம லோகத்தில்‌ சேர்ந்து அங்கிருக்கும்‌ புருஷனை ஸாக்ஷாத்கரிப்பான்‌ ” என்று-இவ் விடத்தில்‌, மநுஷ்ய லோக–அந்தரிக்ஷ லோகங்களுக்கு அடுத்த படியாகச்‌ சொல்லப்பட்ட ப்ரஹ்ம லோகமென்பது சதுர்முக ப்ரஹ்மாவின்‌ உலகமாயிருப்பதற்கு ஒளசித்ய முடையதாகையாலே, அங்குப் போய்ச்‌ சேர்ந்த உபாஸகன்‌ ஸாக்ஷாத்கரிப்பது சதுர்முகனையேயாக வேண்டும்‌ என்பது பூர்வ பக்ஷம்‌–

“இதற்கு ஸூத்ரகாரர்‌ சொல்லும்‌ ஸமாதானம்‌ –* ஈஷித கர்ம வ்யபதேசாத்‌ ஸ: என்பது. இதன்‌ பொருள்‌—ஈஷித கர்ம–மும் மாத்ரை யுடையதாக ப்ரணவத்தை யுபாஸிப்பவன் அடையும்‌ ப்ரஹ்ம லோகத்தில்‌; அவனால்‌ பார்க்கப் படுபவன்‌, ஸ:—பரமாத்மாவே யாவான்‌, வ்யபுதேசாத்‌–அப்படியே’ (பரமாத்மாவாகவே) சொல்லப் படுகையாலே என்றபடி-அதாவது இது வரையில்‌ சொல்லப்பட்ட அர்த்தத்திற்கு ப்ரமாணமாக வேதமே உதஈஜ்ரித்த இரண்டு ஸ்லோகங்களின்‌ முடிவில்‌ ”யத்‌ தத்‌ சாந்தம்‌ அம்ருதம்‌ அப்யம் பரம்‌ ப்ரஹ்ம’! என்று ஓதப் பட்டுள்ளது. மூன்று மாத்ரை யுடையதாக ப்ரணவத்தை யுபாஸிப்பவன்‌ அடையும்‌ புருஷனை வர்ணிக்கும்‌ பகுதியாம்‌ இது. அப் புருஷன்‌ பசி முதலிய ஊர்மிஷட்க மில்லாதவள்‌ எவ்விதமான பயமும்‌ இல்லாதவன்‌ என்றெல்லாம்‌ இங்குச்‌ சொல்லி யிருப்பதால்‌ இவை பரமாத்மாவையே சுட்டிக் காட்டும்‌ ; சதுர்முகனுக்கு இத் தோஷங்கள்‌ (பசி முதலியன) இருப்பதால்‌ அவனைச்‌ சொல்ல மாட்டா. மேலும்‌ எல்லாப்‌ பாவங்களும்‌ நீங்கப் பெற்றவன்‌ (அதாவது கர்ம பந்தத்தை யறுத்துக் கொண்டவன்‌) பரமபதத்தை யடைய வேண்டுமே யன்றி கர்மாதீநமான சதுர்முக லோகத்தை யடையப்‌ பொருத்தமில்லை. மற்றும்‌ அந்தஸ்தாநத்தை’ யத்‌ தத்‌ கவயோ வேதயந்தே ” என்று நித்ய ஸூரிகள்‌ பார்க்குமிடமாகவும்‌ சொல்லிற்று: அந்தரிக்ஷத்திற்கு அடுத்தது சதுர்முக லோகமென்பதும்‌ ஸரியன்று ஸ்வர்க்கம்‌ முதலிய்‌ பல லோகங்கள்‌ இடையிலிருக்கின்றனவன்றோ ? மேலும்‌ பிப்பலாதர்‌ தமது பதிலுரையை ஆரம்பிக்கும் போதே ப்ரணவத்தை அபர ப்ரஹ்மமென்றும்‌ பர ப்ரஹ்மமென்‌றும்‌, முறையே இவற்றை யுபாஸிப்பவன்‌ அபரப்ரஹ்மத்தையும்‌ பரப்ரஹ்மத்தையும்‌ அடைகின்றானென்றும்‌ தொடங்கி, அதில்‌ அபரமென்பதை ஒருமாத்ரை யுடையது இருமாத்ரையுடையதென்று இரண்டாகப்‌ பிரித்து, ஒருமாத்ரை யுடையதாக உபாஸிப்பவன்‌ பூலோகத்தின்‌ செல்வத்தை யனுபவிப்பான்‌ என்றும்‌, இருமாத்ரையுடையதாக உபாஸிப்பவன்‌ மேலுலகங்களெல்லாவறறின்‌ போகங்களையும்‌ அனுபவிப்பான்‌ என்றும்‌ சொல்லி, பின்பு பரமெனப்பட்ட மூன்று மாத்ரை யுடைய ப்ரணவத்தை யுபாஸிப்பவன்‌ எல்லாப்‌ பாவங்களாலும்‌ விடப்பட்டு ஒருவிதமான தோஷத்திற்கும்‌ இடம் தராத திவ்ய லோகத்தில்‌ பரம புருஷனை யனுபவிக்கிறான்‌ என்று சொல்லுகையால்‌ வேறு சங்கைக்கே இடமில்லையென்று தெளியக் கடவது

5-தஹராதிகரணம்‌ -சாந்தோக்ய-உபநிஷத்தின்‌ எட்டாவது அத்யாயத்தில்‌ தஹர வித்யை ஓதப்பட்‌டுள்ளது. அதன்‌ முதல்‌ வாக்யம்‌ வருமாறு–‘*அத யதிதமஸ்மிந் ப்ரஹ்ம புரே தஹரம்‌ புண்டரீகம்‌ வேச்ம தஹரோ அஸ்மிந்‌ அந்தர ஆகாச; தஸ்மிந் யதந்த: ததந்வேஷ்டவ்யம்‌ தத் வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்‌,’? இதன்‌ பொருளாவது–அஸ்மிந்‌ ப்ரஹ்ம புரே–இதோ தெரிகிற சரீரமாகிற ப்ரஹ்மத்தின்‌ பட்டணத்தில்‌, தஹாம்‌ புண்டரீகம்‌ வேச்ம–தஹரமெனப்படும்‌ கமலம்‌ போன்ற மாளிகை, யத்‌–யாதொன்று உளதோ, அஸ்மிந் அந்த:–இதற்கு உள்ளே, தஹர: ஆகாச:–தஹரமெனப்படும்‌ ஆகாசமும்‌, தஸ்மிந்‌ அந்த: யத்‌–அதற்குள்ளே இருப்பது யாதொன்றோ. தத்‌– அவை யிரண்டும்‌, அந்வேஷ்டவ்யம்‌–தேடப்பட வேண்டும்‌, தத்‌ வாவ–அதுவே, விஜிஜ்ஞாஸிதவ்யம்‌—உபாஸிக்கப்பட வேண்டும்‌ என்‌று உபாஸகனின்‌ சரீரத்தில்‌ இதய கமல மிருப்பதாக சாஸ்தரங்கள்‌ பலவிடங்களில்‌ கூறியுள்ளன, அதற்கு தஹரமென்று பெயராம்‌. அதற்குள்‌ தஹராகாசமென்று ஒரு வஸ்து உளதாம்‌, அதனுள்‌ இன்‌னமும்‌ ஏதோ வொரு பொருள்‌ உளதாம்‌, . அந்த தஹராகாசத்தையும்‌, அதனுள்‌ இருக்கும்‌ மற்றொரு பொருளையும்‌ உபாஸிக்க வேணுமென்‌று இந்த வாக்யம் உபதேசிக்கிறது –

இவ்விடத்தில்‌ தஹராகாசமென்பது எது! ஐந்தாவது பூதமான ஆகாயமா, ஜீவாத்‌மாவா-அல்லது பரமாத்மாவா? என்‌கிற சம்சய முண்டாக, ஆகாசமென்பது பூதாகாசததைச்‌ சொல்லும்‌ சொல்லாகையாலே இங்கும்‌ அதையே சொல்லிற்று என்கிற பூர்வபக்ஷத்தின்‌ மேல்‌ ஸூத்ரகாரர்‌ சொல்லுகிறார்‌ -தஹர: உத்தரேப்ய:– தஹரமென்பது பர ப்ரஹ்மம்‌ தான்‌, மேற் கொண்டு ஓதப்பட்ட காரணங்களால்‌ என்று, அதாவது இவ் வுபநிஷத்தே தஹராகாசத்தில்‌ என்ன இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு, அதற்கு பதில்‌ சொல்லுகிறது—*தஸ்மிந்‌ காமா: ஸமாஹிதா:, ஏஷ ஆத்மா அபஹத பாப்மா விஜரோ.. …. ஸத்ய காம; ஸத்ய ஸங்கல்ப: ” என்று. இதன்‌ பொருளாவது–தஸ்மிந்‌– அந்த தஹராகாசத்தில்‌, காமா:–கல்யாண குணங்கள்‌, ஸமாஹிதா:– இருக்கின்றன. அவையாவன–புண்ய ஸாபங்கள்‌ ஒட்டாமை, மூப்பு, மரணம்‌, சோகம்‌, பசி, தாகம்‌ இவை யில்லாமை, வேண்டிய பொருள்களை யெல்லாம்‌ எப்பொழுதும்‌ உடையவனா யிருககை, நினைத்ததை யெல்லாம்‌ ஸாதிக்கும்‌ தன்மை என்று எட்டு குணங்களைச்‌ சொல்லிற்று. இவைகளை வேதாந்திகள்‌ குணாஷ்டகமென்று ப்ரஸித்தமாகச்‌ சொல்லுவர்கள்‌. இவ் வெட்டுக்‌ குணங்களும்‌ பர ப்ரஹ்‌மத்தில்‌ மட்டும்‌ இருக்கும்‌ விசேஷங்களே யன்றி பூதாகாசத்தில்‌ இருப்பவை யல்ல. மேலும்‌ இவ் வாகாசத்தை யுபாஸிப்பவன்‌ தானும்‌ ஸத்ய ஸங்கல்பன்‌ ஆவான்‌ என்று சொல்லி யிருக்‌கிறது. பூதாகாசத்தை யுபாஸிப்பவனுக்கு ஒரு நன்மையும்‌ உண்டாகாது-இந்த வாக்யம்‌ நமது ஸம்ப்ரதாயத்திற்கு மிகவும்‌ உபகாரகமானது. ஸ குண ப்ரஹ்மத்தை யுபாஸிப்பதா அல்லது நிர்க் குண ப்ரஹ்மத்தையா ? என்கிற கேள்விக்கோ ஸம்சயத்‌திற்கோ சிறிதும்‌ அவகாசம்‌ தராமல்‌, ஸ குண ப்ரஹ்மத்தையே, அதிலும்‌ முக்யமாக குணங்‌களையே உபாஸிக்க வேணுமென்று ஸ்பஷ்டமாகப்‌ பேசி யிருப்பது ஒரு விசேஷம்‌. நிர்க் குண ப்ரஹ்மவாதிகள்‌, உண்மையில்‌ ப்ரஹ்மத்திற்கு குணமே கிடையாது, தோஷமில்லாமையைத்‌ தான் குணமென்று ஆங்காங்குச்‌ சொல்லுகிறது என்று பிதற்றுவதை யெல்லாம்‌ கண்டித்து, தோஷாபாவத்துடன்‌ ஸத்யகாமன்‌ ஸத்யஸங்கல்பன்‌ என்று இரண்டு உண்மையான குணங்களையும்‌ சேர்த்து ஓதியிருப்பது மற்றொன்று. இப்படி யுபாஸிப்பவன்‌ தானும்‌ ஸத்ய காமன்‌ ஸத்ய ஸங்கல்பனாகினான்‌ என்று முக்தி தசையில்‌ ஸாம்யத்தைச்‌ சொன்னது ஒன்று.–இதற்கு மேலும்‌ ஒரு சங்கை யுண்டாகக் கூடும்‌. அதாவது–தஹர வித்யை ஒருவாறு முடிந்தவுடனேயே, கீழே விவரித்த * ய ஆத்மா அபஹத பாப்மா–விஜிஜ்ஞாஸிதவ்ய:” என்கிற வாக்யம்‌ அப்படியே ப்ரஜாபதியால்‌ சொல்லப் பட்டதென்று ஓதப்பட்டிருக்கிறது. அதனால்‌ அத்ற்கு ப்ரஜாபதி வாக்யமென்றே பெயராயிற்று. அது ஜீவாத்மாவைப் பற்றிச்‌ சொல்லுகிறதே யன்றி பரமாத்மாவைப் பற்றியன்று என்பது எல்லோரும்‌ இசைந்த விஷயமாகும்‌, அதனால்‌ முதலில்‌ ஓதப்பட்ட அவ் வாக்யமும்‌ ஜீவனைத் தான்‌ சொல்லிற்றாக வேணும்‌, பரமாத்மாவைச்‌ சொல்லாது என்‌று.

இதற்கு ஸமாதாநம்‌ வருமாறு–ப்ரஜாபதி வாக்யத்தில்‌, ஜீவன்‌ பரமனை யுபாஸித்து அவனது அருளாலேயே, தனது எல்லாக்‌ கர்ம பந்தங்களையும்‌ அறுத்துக் கொண்ட பிறகு அவனுடைய பரிசுத்தமான ஆத்மாவுக்கு குணாஷ்டகம்‌ உண்டாகுமென்று சொல்லப்பட்‌ டுள்ளது, ஆரம்பத்தில்‌ சொன்ன வாக்யத்திலோ வென்னில்‌, இயற்கையாகவே தஹரா காஸத்திற்கு குணாஷ்டக முண்டென்று சொல்லப்பட்டது. தஹராகாசம்‌ ப்ரஹமந் தான்‌ என்று தீர்ந்தது,

6–ப்ரமிதாதிகரணம்‌-கடோபநிஷத்தில்‌ * அங்குஷ்டமாத்ரா புருஷ:!’ என்று ஆரம்பித்து மூன்று மந்த்ரங்கள்‌ ஓதப்படுகின்றன, இவைகளில்‌ அங்குஷ்ட மாத்ரன்‌ (கைக்கட்டை விரலின்‌ அளவை யுடையவன்‌) என்று சொன்னது ஜீிவாத்மாவையா அல்லது பரமாத்மாவையா என்று சங்கை வரும்‌, பரமாத்மா விபுவாகையால்‌ அவன் ஸ்வரூபம்‌ அங்குஷ்டத்தளவா யிராது. ஜீவாத்மா அணு வாகையால்‌ அவனும்‌ அங்குஷ்டத்தளவினனன்று என்றிருந்தாலும்‌, ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில்‌ ஜீவனை வர்ணிக்கும்‌ பிரகரணத்தில்‌ ‘ அவன்‌ ப்ராணாதிபன்‌; (இந்த்ரியங்களுக்கு நாயகன்‌) தன்‌ கர்மங்களால்‌ எல்லாவிடங்களிலும்‌ ஸஞ்சரிப்பவன்‌, ஸூர்யனைப் போல்‌ விளங்குமவன்‌, ஸங்கல்பம்‌ அஹங்காரம்‌ முதலியவற்றை யுடையவன்‌, அங்குஷ்ட மாத்ரன்‌’? என்று ஸ்பஷ்டமாகச்‌ சொல்லி யிருப்பதால்‌, ப்ரக்ருத வாக்யங்களிலும்‌ ஜீவனையே சொல்லிற்றென்று கொள்வது தான்‌ உசிதம்‌. மேலும்‌ பரமாத்‌மாவை அங்குஷ்டமாத்ர னென்று வேறெந்த வாக்யமும்‌ சொல்லவில்லை. மற்றும்‌ ஸாவித்ரீ சரித்ர ப்ரகரணத்தில்‌ யம தேவன்‌ அங்குஷ்டத்தனவாக இருந்த ஸத்யவானின்‌ ஆத்மாவை அவனுடலிலிருந்து விடுவித்து எடுத்துச் சென்றானென்றும்‌ சொல்லிற்று ஆக இங்கு ஜீவனைத் தான்‌ சொல்லிற்று–என்கிற பூர்வ பக்ஷத்தின் மேல்‌ ஸூத்ரகாரர்‌ ஸமாதானம்‌ ஸாதிக்கிறார்‌–* சப்தாதேவ ப்ரமித: ‘” என்று. அங்குஷ்டத்தளவினன்‌ என்று அளந்து பேசப்பட்ட புருஷன்‌ பரமாத்மா தான்‌, ஜீவாத்மா வன்று, இம்‌ மந்த்ரங்களில்‌ வழங்கப்பட்ட சொல்‌ பரமாத்மாவையே காட்டக் கூடியதாகையால்‌ என்பது ஸூத்ரார்த்தம்‌. ப்ரக்ருதம்‌ விவாதிக்கபபடும்‌ மூன்று மந்த்ரங்களுக்குள்‌ இரண்டில்‌ ”ஈசாநோ பூத பவ்யஸ்ய ‘? என்று முக் காலத்திலு முள்ள எல்லாப்‌ பதார்த்தங்களையும்‌ ஆளுபவன்‌ என்று சொல்லி யிருப்பதால்‌, அந்த அடைமொழி ஜீவனுக்குப்‌ பொருந்தாது, பரமாத்மாவுக்‌கே பொருந்தும்‌ மேலும்‌ இந்த ப்ரகரணத்தில்‌, இவனிடம்‌ பயத்தால்‌ உலகிலுள்ள பொருள்களெல்லாம்‌ ஓங்கப்பட்ட வஜ்ஜிரத்தைக்‌ கண்டது போல்‌ நடுங்குகின்றன. அக்நி , ஸூர்யன்‌, இந்த்ரன்‌, வாயு, ம்ருத்யு தேவன்‌ ஆகியோர்‌ இவனிடம்‌ அச்சத்தால்‌ ஓடியோடியும்‌ தமது கடமைகளைச்‌ செய்து வருகிறார்கள்‌ ‘* என்று ஓதப்பட்டிருப்பதால்‌ இதை யெல்லாம்‌ பரமாத்மாவின்‌ குணந்தான்‌ என்று அறியலாம்‌. மற்றொரு வாக்யத்தில்‌ இப் புருஷனை, உலகிலுள்ள தேஜஸ் :பதார்‌த்தங்களை யெல்லாம்‌ ப்ரகாசப்படுத்தும்‌ பரஜ்யோதிஸ்‌ என்று சொல்லிற்று. ஆகையால்‌ இந்த ப்ரகரணம்‌ முழுவதும்‌ பரமாத்மாவையே சொல்லிற்றென்பது ஸித்தாந்தம்‌.

இதன் மேல்‌, பரமாத்மாவை அங்குஷ்ட மாத்ரனென்று சொன்னால்‌, யாருடைய அங்குஷ்டமென்று கேள்வி உண்டாக, உபாஸிக்கும்‌ அவ்வவதிகாரிகளின்‌ அங்குஷ்ட மென்று சொல்ல வேணும்‌. அப்படியானால்‌ அங்குஷ்டமே யில்லாத விலங்கு முதலியவற்றில்‌ இருக்கும்‌ பரமாத்மாவின்‌ பரிமாணம்‌ எவ்வளவென்று கேட்க வேண்டியிருக்கும்‌. இதற்கு ஸமாதாநம்‌ சொல்லக் கிளம்பிய ஸூத்ரகாரர்‌, இது உபாஸந ப்ரகரணம்‌, உபாஸநம்‌ செய்பவர்கள்‌ தம் தம்‌ அங்குஷ்ட ப்ரமாண முடையவனாகப்‌ பரமாத்மாவை உபாஸிகக வேணும்‌. உபாஸநத்தில்‌ அனேகமாக மநுஷ்யர்களுக்கே அதிகார மிருப்பதால்‌, மற்ற இடத்தில்‌ விசாரம்‌ பண்ண வேண்டிய ப்ரஸக்தியே இல்லை யென்று கூறி முடிக்கிறார்‌.நடாதூர்‌ அம்மாள்‌ என்கிற ஆசார்யன்‌ பரத்வாதி பஞ்சகம்‌ என்னும்‌ ஸ்துதியில்‌, ‘ அந்தர்யாமி இரண்டு விதம்‌, எல்லா வஸ்துக்களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ வ்யாபித்திருப்பது ஒன்று, யோகிகளின்‌ இதயத்தில்‌ அவ்வவரது அங்குஷ்ட ப்ரமாணனாக இருப்பது மற்றொன்று ” என்று ஸாதித்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது –

7-தேவதாதிகரணம்‌-கீழ்‌ அதிகரணத்தில்‌ மநுஷ்யன்‌ ப்ரஹ்மோபாஸநம்‌ செய்யலாமென்‌று ஒரு வார்த்தை வந்ததால்‌, தேவர்களும்‌ அது செய்யலாமோ என்கிற விசாரமுண்டாக, அதற்காக தேவதாதிகரணம்‌ தோன்றிற்று, ஒருவன்‌ ஒரு காரியம்‌ செய்ய வேண்டுமானால்‌ அவனுக்கு அர்த்தித்வம்‌ ஸாமர்த்யம்‌ என்கிற இரண்டு அம்சங்கள்‌ கொண்ட அதிகாரம்‌ அவச்யம்‌ இருக்க வேண்டுமென்‌று சாஸ்த்ரஜ்ஞர்‌ சொல்லுவர்‌. அர்த்தித்வ மென்றால்‌ அக் கார்யத்தால்‌ கிடைக்கும்‌ பலனை அடைய வேணு மென்கிற இச்சை-ஸாமர்த்ய மென்றால்‌ அக் கார்யம்‌ செய்து தலைக் கட்டுகைக்குத்‌ தேவையான அறிவு பலம்‌ முதலியவை. ப்ரஹ்மோபாஸாநம்‌ செய்பவனுக்கு அதனால்‌ கிடைக்கும்‌ பலனான மோக்ஷத்தைப்‌ பெற வேணு மென்கிற தீவிரமான ஆசை தான்‌ அர்த்தித்வ மெனப்படும்‌. உபாஸநம்‌ செய்வதற்கு ஆவச்யகமான ப்ரஹ்ம ஜ்ஞாநமும்‌, நல்ல (திடமான) சரீரம்‌ இந்த்ரியங்கள்‌ முதலியவையும்‌ ஸாமர்‌த்யம் எனப்படும்‌. தேவர்கள்‌ தாம்‌ அநுஷ்டித்த புண்யத்தின்‌ பலனான துன்பமிலா வின்பத்தை அனுபவித்து, அதற்கு மேலான மோக்ஷ ஸுகமென்பது ஒன்றுண்டென்று கனவிலும்‌ காணாதவர்களாதலால்‌, அவர்களுக்கு மோக்ஷம்‌ பெற வேணு மென்கிற ஆசையே உண்டாகாது. அதற்கு மேல்‌ தேவதை யென்று ஒரு பொருளே தனித்துக்‌ கிடையாது அதற்கு உருவமும்‌ கிடையாது. அது நாம்‌ செய்யும்‌ யாகங்களுக்கு நேரில் வந்து ஹ்விஸ்ஸைப்‌ பெற்றுக்‌ கொண்டு நாம்‌ வேண்டும்‌ பலனை அளிக்கு மென்பது அடியோடு கிடையாது. நாம்‌ செய்து வரும்‌ யாகங்களில்‌ ஓதப்படும்‌ அவ்வவ மந்த்ரங்கள் தான்‌ தேவதை எனப்படும்‌. ஒழுங்காக யாகத்தைச்‌ செய்து முடித்தால்‌ அதனால்‌ புண்யமுண்டாகி அதனால் தான்‌ நாம்‌ விரும்பும்‌ பலன்‌ கிடைக்கும்‌, ஆக தேவதை ப்ரஹ்மோபாஸநம்‌ செய்யுமா செய்யாதா என்கிற கேள்வியே பொருளற்றது என்பது இவ் விடத்துப்‌ பூர்வ பக்ஷம்‌.

இதற்குப்‌ பதில்‌ சொல்லுகிறார்‌ ஸூத்ரகாரர்‌–‘! ததுபர்யபபி பாதராயணஸ் ஸம்பவாத்‌.” இதன் பொருள்‌–தத்‌-ப்ரஹ்மோபாஸகம்‌, உபரி அபி–மேல்‌ இருக்கும்‌ தேவதைகளுக்கும்‌ (உண்டு) ; ஸம்பவாத்‌–அவர்களுக்கும்‌ அர்த்தித்வ ஸாமர்த்யங்கள்‌ கூடுமாகை யாலே. அதாவது நம்மைப் போலவே தேவதைகளுக்கும்‌ ” வேதாபஹார குருபாதக”’ இத்யாதிகளில்‌ சொல்லப்பட்ட ஸாம்ஸாரிக து:கங்களுண்டாகி அவற்றில் நின்‌றும்‌ விடு பட வேணு மென்கிற இச்சையும்‌, பெரியோர்கள்‌ வாயிலாகப்‌ பர ப்ரஹ்மத்தைப் பற்றின விவரங்கள்‌ கேட்கையாலே அதை யடைந்து ப்ரஹ்மானந்தத்தை அநுபவிக்க வேணுமென்கிற இச்சையும்‌, சரீரம்‌ இந்த்ரியம்‌ முதலியவைகளும்‌ குறை யற இருப்பதால்‌ உபாஸநம்‌ பண்ண ஸாமர்த்யமும்‌ இருப்பது கூடுமென்‌று, அவர்களும்‌ உபாஸநம்‌ செய்யலாம்‌ என்பது ஸூத்ரகாரரான பாதராயணரின்‌ அபிப்ராயம்‌-பலன் பெறுவதற்காக யஜ்ஞ யாகங்களை விதிக்கும்‌ வேத வாக்யங்களே, பல தேவதைகளின்‌ உருவத்தையும்‌ குணங்களையும்‌ பலவாறாகப் பாடி, அவ்வவ தேவதைகள்‌ நாம்‌ தரும்‌ அவிஸ்ஸைப்‌ பெற்று ஸந்தோஷப்பட்டு நமக்குப்‌ பலனைத்‌ தருமென்று ஸ்பஷ்டமாகவே ஓதி இருக்கையால்‌, வேதத்தை ப்ரமாணமென்று இசைந்தவர்கள்‌ அதில்‌ கூறப்பட்ட தேவதைகளின்‌ குண ரூபங்களையும்‌ இசைந்தே தீர வேணும்‌. “ யஜ தேவ பூஜாயாம்‌ ” என்கிற தாது பாடத்தால்‌, தேவ பூஜைக்குத் தான்‌ யாகமென்று பெயரெனறு ஸ்பஷ்டமாகக்‌ காட்டப்படுகிறது. ஆஸ்திகர்களென்று பெயர்‌ சுமப்பவர்கள்‌ * இவை யெல்லாம்‌ கிடையா ” என்று சொல்லுவது தகாது, ஆகத்‌ தேவர்களும்‌ ப்ரஹ்மோபாஸநம்‌ செய்யலாம்‌ என்று தேறிற்று.–

8-மத்வதிகரணம்‌–சாந்தோக்ய உபநிஷத்தின்‌ 3வது அத்யாயத்தின்‌ ஆரம்பத்தில்‌ மது வித்யை என்னும்‌ ஓர்‌ உபாஸநம்‌ விதிக்கப்பட்டுள்ளது. **அஸெள வா ஆதித்யோ தேவமது *’ (இந்த ஸூர்யன்‌ தேவதைகளுக்கு மதுவாக- தேன் போல்‌ பரம போக்யனாக இருப்பவன்‌) என்பது அதன்‌ முதல் வாக்யம்‌. ருகாதி நான்கு வேதங்கள்‌, ரஹஸ்யமாக உபதேசிக்கப்படுகின்ற உபநிஷத் , ஸ்ரீபாஞ்சராத்ரம்‌ முதலிய நூல்கள்‌ ஆகியவற்றில்‌ விதிக்கப்பட்டுள்ள கருமங்களை விதி பூர்வகமாக அநுஷ்டிப்பதால்‌ அக் கருமங்களில்‌ வழங்கப்படும்‌ ஹவிஸ்‌ முதலியவை ரஸமாக (தேனாக) மாறி ஸூர்யனை அடையும்‌. இத் தேனை ஸூர்யனின்‌ நாற்புறங்களிலும்‌ மேல் பாகத்கிலும்‌ இருந்து கொண்டு வஸுக்கள்‌, ருத்ரர்கள்‌, ஆதித்யர்கள்‌, மருத்துக்கள்‌, ஸாத்யர்கள்‌ என்கிற ஐந்து தேவ கணங்கள்‌ பருருகிறார்கள்‌, அதாவது, கண்டு களிக்கிறார்கள்‌ ; தேவர்கள்‌ நம்மைப் போல்‌ உண்பதில்லை குடிப்பதில்லை யாகையால்‌, கண்டே மகிழ்வர்கள்‌. இப்படி ஸூர்யனிடத்தில்‌ மது உண்டாகும்‌ க்ரமத்தையும்‌, அந்த சூர்யன்‌ வஸு முதலியவர்களை உபாஸிப்பவர்‌ தாங்களும்‌ அப் பதவியை அடைவர்க ளென்‌பதையும்‌ இவ் வுபநிஷத்து தெரிவிக்கிறது-இங்கு விசாரம்‌ என்ன வென்னில்‌–கீழே சொல்லப்பட்ட வஸ்வாதி தேவதை களுக்கும்‌ இவ் வுபாஸநத்தில்‌ அதிகாரம்‌ உண்டா இல்லையா என்பது. ஏற்கெனவே வஸு வாயிருப்பவன்‌ தன்னையே உபாஸிப்பான்‌ என்பதும்‌, அதனால்‌ வஸுவாகிறான்‌ என்பதும்‌ அர்த்த மற்ற சொற்களாகையாலே, மது வித்யையில்‌ வஸூ முதலியவர்களுக்கு அதிகார மில்லை யென்பது இங்குப்‌ பூர்வபஷம்‌. இதையே ஸூத்ரகாரர்‌ “மத்வாதிஷ் வஸம்பவாத ந திகாரம்‌ ஜைமிநி : ” என்கிற ஸூத்ரத்தால்‌ சொன்னார்‌. இதன்‌ பொருளாவது–மது ஆதிஷு மது வித்யை முதலிய உபாஸநங்களில்‌ வஸு முதலியவர்களுக்கு, அநதிகாரம்‌–அதிகார மில்லாமையை, ஜைமிநி:–ஜைமிநி மஹர்ஷி சொன்னார்‌.

இதற்குப்‌ பதில்‌ சொல்லுகிறார்‌ ஸூத்ரகாரர்‌–‘* பாவம்‌ து பாதராயண; அஸ்தி ஹி ‘* என்று. இதன்‌ பொருளாவது –பாதராயண; து–வ்யாஸரோ வென்றால்‌, பாவம்‌–இவ்‌ வித்யையிலும்‌ அவர்களுக்கு அதிகாரம்‌ உளதென்பதைச்‌ம் சொல்லுகிறார்‌, ஏனென்றால்‌, அஸ்தி ஹி– அவர்களுக்கும்‌, தமக்கு அந்தர்யாமியான ப்ரஹ்மத்தின்‌ உபாஸநமும்‌, அதனால்‌ மறு பிறவியில்‌ வஸுத்வத்தை யடைந்து, பிறகு ப்ரஹ்மத்தையே யடையும்‌ இச்சையும்‌ உளதன்றோ--என்பது, அதாவது இங்கு உபாஸிககச்‌ சொன்னது, வஸுவை மட்டுமன்று. வஸூவுக்கு அந்தர்யாமியான ப்ரஹ்மத்தை, இதன்‌ பலன்‌ –வஸுத்வ ப்ராப்தியும்‌ அதற்குப்‌ பிறகு மோக்ஷமும்‌ ஆகும்‌. ஆகையால்‌ தற் சமயம்‌ வஸுவாயிருப்பவனுக்கும்‌ இன்னமு மொருமுறை இதே பதலியை யடைந்து (பிறகு மோக்ஷம்‌ பெறலாமென்கிற இச்சை உண்டாகக் கூடுமாகையாலே, அன்னவன்‌ மது வித்யையை யநுஷ்டிக்கத்‌ தடை யிராது. இவ் வித்யையில்‌ கார்ய ரூபமாகவும்‌ காரண ரூபமாகவும்‌ இருக்கும்‌ ப்ரஹ்மத்தை யுபாஸிக்க விதித்திருக்கையால்‌ இது ப்ரஹ்ம வித்யையே யாகும்‌. இதன்‌ பலனாக வஸுவாகி ஸூர்யனை யனுபவிப்பவன்‌ மற்ற வஸுக்களைப் போல்‌ ஸூர்யனை மட்டுமே அநுபவியாமல்‌ அவனுக்குள்‌ அந்தர்யாமியாயிருக்கும்‌ ப்ரஹ்மத்தையும்‌ அனுபவிப்பன்‌. இதுவும்‌ இவனுக்கு ஒரேற்றம்‌. ஸாதாரண வஸுவான வன்‌ எத்தனை நாட்கள்‌ அப் பதவியில்‌ நீடிப்பான்‌ என்பது நிச்சயமாகச்‌ சொல்ல முடியாது. ஆனால்‌ மது வித்யையை அநுஷ்டித்தவன்‌ கல்பாந்தம்‌ வஸுவாக இருந்து பிறகு மறு பிறவி யில்லாமல்‌ மோக்ஷத்தையே அடைவன்‌. இதுவும்‌ ஒரு விசேஷம்–

9-அபஜத்ராதிகரணம்‌-கீழ்‌ அதிகரணங்களில்‌ அர்த்தித்வ ஸாமர்த்யங்களை யுடையவர்கள்‌ ப்ரஹ்‌ம வித்யைக்கு அதிகாரிகள்‌ என்‌று நிச்சயிக்கப்பட்டது. இதனால்‌ சூத்ரன்‌ இத்‌ தகுதிகளைப்‌ பெற்று ப்ரஹ்ம வித்யையை அநுஷ்டிக்கலாமா என்கிற விஷயம்‌ சர்ச்சிக்கப்படுகிறது அப சூத்ராதிகரணததில்‌, தாராளமாக அதுஷ்டிக்கலா மென்பது பூர்வ பக்ஷம்‌, அவனுக்கு ‘வேதாத்யயனம்‌ செய்ய யோக்யதை யில்லா விட்டாலும்‌ இதிஹாஸ புராணங்களைக் கேட்க அதிகாரம்‌ வழங்கப் பட்டிருப்பதால்‌, அதனால்‌ ப்ரஹ்ம ஜ்ஞாநமும்‌ மோக்ஷம் பெற வேணு ‘மென்கிற இச்சையும்‌ உண்டாகலாமன்றோ ? அக்நி ஸாத்யமான கருமங்களைச் செய்ய அதிகாரமில்லா விட்டாலும்‌ அவன்‌ தனது வர்ணத்திற்குத்‌ தகுந்த சுச்ரூஷை ஸத்யவசநம்‌ தர்மங்களை யநுஷ்டித்து உபாஸநத்திலும்‌ இழியலாம்‌. விதுரர்‌ முதலிய பலர்‌ இவ் வர்ணத்தில்‌ பிறந்து வைத்தும்‌ ப்ரஹ்ம நிஷ்டர்களாக விளங்கினரென்று கேள்விப் படுகிறோம்‌. மேலும்‌ ஸம்வர்க வித்யையில்‌ ஆசாரியன்‌ சிச்சனை *’ஏ சூத்ரா!” என்றே விளித்து ப்ரஹ்மோபதேசம்‌ செய்ததாகக்‌ காண்கிறது. ஆகையால்‌ சூத்ரனுக்கும்‌ உபாஸநத்தில்‌ அதிகாரமுளதென்று தெரிகிறது.

இதற்கு ஸமாதாநம்‌— உபநிஷத்துக்களில்‌ ஓதப்பட்ட ப்ரஹ்ம வித்யைகளை, அவ்‌ வுபநிஷத்தை யோதியே கற்றுக் கொள்ள வேணுென்கிற நிர்ப்பந்தமுளது. மூவர்ணத்தினர்க்கும்‌ உபாஸந மாகாமல்‌ வேதங்களையும்‌, உபநிஷத்துக்களையும்‌ ஓத அதிகாரம்‌ கிடையாது. கெளதமர்‌ என்கிற ஓராசார்யர்‌ தமமிடம்‌ உபதேசம்‌ பெற வந்த ஸத்ய காமனென்கிற மாணவனைச்‌ சோதித்து அவன்‌ சூத்ரனன்று என்று தெரிந்த பிறகு தான்‌, அவனுக்கு உபநயநம்‌ செய்வித்துப்‌ பிறகு உடதேசித்ததாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது. சூத்ரனுக்கு இதிஹாஸ புராணங்களைக்கேட்க அநுமதித்தது, அவன்‌ பாவங்களைப்‌ போக்கிக் கொள்ளுகைக்காகவே யன்றி உபாஸநம்‌ செய்வதற்காக அன்று. விதுராதிகள்‌ முன் ஜன்மத்தில்‌ ஸம்பாதித்த ஜ்ஞாநம்‌ இப்பிறவியிலும் லோபிக்காமல்‌ இருக்கப் பெற்றவர்களே யன்றி இப்‌ பிறவிபில்‌ அத்யயநம்‌ பண்ணினார்களல்லர்‌, ஆகையால்‌ இவைகளைக் கொண்டு சூத்ரனுக்கும்‌ உபாஸநத்தில்‌ அதிகாரம்‌ உளதென்று சொல்லுவது தகாது.-

இனி ஓராசிரியன்‌ சிச்சனை சூத்ரனென்‌$ற விளித்தானென்கிற வாதத்தையும்‌ ஆராய்வோம்‌. சாந்தோக்ய உபநிஷததில்‌ நான்காவது அத்யாயத்தின்‌ ஆரம்பத்தில்‌ ஸம்வர்க வித்யை யென்று ஒன்று ஓதப்பட்டிருக்கிறது. அதாவது ஜாந ச்ருதியென்பவர்‌ பரம தார்மிகராகையால்‌ பல வூர்களில்‌ தர்ம சத்ரம்‌ ஏற்படுத்தி அன்னம்‌ முதலிய பலவற்றையும் விசேஷமாக தானம்‌ செய்து வந்தார்‌. இதனால்‌ ஸந்தோஷ மடைந்த இரண்டு பெரியோர்‌ , இவ்வளவு தார்மிகரா யிருக்கு மிவர்க்கு ப்ரஹ்ம ஞான மில்லையே பென வருந்தி ஒரு சூழ்ச்சி செய்தார்கள்‌. ஒரு நாள்‌ இவர்‌ திறந்த வெளியில்‌ படுத்திருக்கும் போது இரண்டு ஹம்ஸ பஷிகள்‌ வடிவு கொண்டு ஆகாசத்தில்‌ பறந்து சென்றனர்‌. அவற்றில்‌ ஒன்று சொல்லுகிறது–௮ண்ணா அண்ணா! கீழே படுத்திருப்பவர்‌ பரம தார்மிகரான ஜாந ச்ருதி, அவருடைய தேஜஸ்ஸு ஆகாயத்தளவும்‌ வ்யாபித்திருக்கும்‌, ஆகையால்‌ ஜாக்கிரதை, அவரை யணுகாமல்‌ சீக்கிரம்‌ விலகி வந்து விடு என்று. இதைக் கேட்ட மற்றொரு பக்ஷி சொல்லுகிறது-இவரென்ன மஹா ஜ்ஞாநியான ரைக்வரா–என்னைக்‌ கொளுத்தி விட. இவரிடம்‌ ஒரு தேசும்‌ கிடையாது என்று, முதல்‌ பஷி -யார்‌ அந்த ரைக்வர்‌? என்று கேட்டது மற்றொன்று பதில்‌ சொல்லுகிறது–உலகிலுள்ள எல்லோருடைய ஞானமும்‌ நற்கருமங்‌களும்‌ எவருடைய ஞான கருமங்களில்‌ அடங்குமோ அவர்தான்‌ ரைக்வர்‌. அவரிடம்‌ ஒரு வண்டியுமுண்டு என்று. இதைக்‌ கேட்டுக் கொண்டிருந்த ஜாந ச்ருதிக்கு, ஞான மில்லை யென்று என்னை ஒரு ஹம்ஸம்‌ திரஸ்கரித்து விட்டதே என்கிற வருத்தம்‌ மிகவுமுண்டாயிற்று, பிறகு அவர்‌ க்ஷத்தாவை அழைத்து, இந்த விவரங்களை யெல்லாம்‌ சொல்லி எப்படியாவது அந்த ரைக்வரைக்‌ கண்டு பிடித்து வர உத்தர விட்டார்‌. அவரும்‌ மிகச்‌ சிரமப்பட்டு கண்டு வந்தார்‌. உடனே ஜாந ச்ருதி அறுநூறு பசுக்கள்‌, தேர்‌, தஷிணை இவைகளுடன்‌ ரைக்வரிடம்‌ சென்று வணங்கி விநயத்துடன்‌ ‘* ஸ்வாமீ ! இக்‌ காணிக்கைகளைக்‌ கைக்கொண்டு, நீர்‌ உபாஸித்து வரும்‌ தேவதையை அடியேனுக்கு உபதேசிக்க வேண்டுகிறேன்‌ ” என்று வேண்டிக் கொண்டான்‌, ரைக்வர்‌ பதில்‌ சொல்லுகிறார்‌ * அஹஹை சூத்ரனே ! இவைகளெல்லாம்‌ எனக்கு வேண்டா, நீயே வைத்துக் கொள்‌ என்று, இதைக் கேட்ட ஜாந ச்ருதி ஆயிரம்‌ பசுக்கள்‌, பெரிய தேர்‌, தன்‌ கன்னிகைப் பெண்‌, சில க்ராமங்கள்‌ இவற்றை யெல்லாம்‌ ஸமர்ப்பித்துப்‌ பின்னும்‌ வேண்டிக் கொண்டனன்‌. இதனால்‌ ரைக்வர்‌ ப்ரஸந்நராகி, ‘* அஹஹ சூத்ரனே ! இவ்வளவும்‌ கொணர்ந்தாயா ? இதே காரணமாக நான்‌ உனக்கு உபதேசிக்கிறேன்‌, கேள்‌?’ என்று சொல்லி ஸம்வர்க வித்யையை உபதேசித்தார்‌-இவ்வளவும்‌ உபரிஷத்து ஓதிய கதை, இதில்‌ ரைக்வர்‌ ஜாந ச்ருதியை இரண்டு தடவை சூத்ரனென்று விளித்திருக்கிறார்‌. இதனால்‌ ஜாந ச்ருதி சூத்ர வர்ணத்தைச்‌ சேர்ந்தவரென்று பொருளன்று. .சூத்ரன்‌ என்கிற சொல்லுக்கு, இலக்கணப்படி சோகிப்‌பவன்‌, அதாவது ப்ரஹ்ம ஞாநமில்லாமையால்‌ ஹம்ஸ பஷியின்‌ நிந்தா வசனத்தைக்‌ கேட்டு மிகவும்‌ துக்கம்‌ கொண்டவன்‌ என்று தான்‌ அர்த்தம்‌, ப்ரஹ்மோபதேசம் பெற -அதில்‌ மிக மிக ஆசை யிருக்க வேண்டும்‌. அதற்குக்‌ காரணம்‌ ப்ரஹ்ம ஜ்ஞாந மில்லையே என்கிற வருத்தம்‌. ஆக இவ்வருத்தம் தான்‌ உபதேசம் பெற மிக முக்யமான யோக்யதை யென்று தேறிற்று. இந்த யோக்யதை ஜாந ச்ருதிக்கு உளதென்பதை விளக்கவே ரைக்வர்‌ அவனை சூத்ரனென்று விளித்தார்‌. வெகுவாக அன்ன தானம்‌ முதலியன செய்தது, ரைகீ்வருக்குத்‌ தன்‌ பெண்ணையும்‌ க்ராமங்களையும்‌ தஷிணையாகக்‌ கொடுத்தது இவை யெல்லாம்‌ சூத்ரனின்‌ செயலாக மாட்டா. ஆகையால்‌ இவன்‌ க்ஷத்ரியன்‌ என்று தேறுகிறது. அடுத்தபடி இவ் வித்யையில்‌ ஒரு அந்தணனும்‌ ஒரு க்ஷத்ரியனும் தான்‌ பங்கு கொண்டவர்களென்‌ று சொல்லப் படுகிறது. ஆகையால்‌ இங்கு சூத்ரனை நினைப்பதற்குச்‌ சிறிதும்‌ வழி யில்லை –

10-அர்த்தாந்தரத்வாதி வ்யபதேசாதி கரணம்‌ -மூன்றாம்‌ பாதத்தின்‌ முடிவான அதிகரணமிது. இதுக்கு ஆகாசாதி கரணமென்ற பெயர்‌ சூட்டியிருக்கலாம்‌. ஆனால்‌ முதற் பாதத்தில்‌ இப் பெயர் பெற்ற அதிகரணமொன்று வந்தபடியால்‌ மறுபடியும்‌ மற்றோர்‌ அதிகரணத்திற்கு அப்பெயர்‌ சூட்ட முடியாமல்‌ பெரிய பெயரொன்று சூட்ட வேண்டியதாயிற்று.: கீழ்‌ தஹராதி கரணத்தில்‌ ஆகாச மென்கிற சொல்லுக்கு பர ப்ரஹ்மம் தான்‌ அர்த்தமென்று சொல்லப்பட்டது தஹார வித்யையின்‌ முடிவிலே ப்ரஜாபதி வாக்யத்தில்‌ பரிசுத்தமான ஜீவாத்ம ஸ்வரூபத்தை வெளியிடலாயிற்று. அதற்கும்‌ பிறகு * ஆகாசோ ஹ வை நாம ரூபயோர்‌ நிர்வஹிதா, தே யதந்தரா தத் ப்ரஹ்ம ததம்‌ருதம்‌ ஸ ஆத்மா ‘” என்றொரு வாக்யம்‌ ஓதப்பட்டிருக்கிறது. கீழ்‌ முக்தாத்மாவின்‌ ப்ரஸ்தாவம்‌ செய்யப் பட்டிருப்பதால்‌, இங்கும்‌ அதுவே நீடித்து, அஜ் ஜீவன்‌ தான்‌ ஸம்ஸாரியாக இருந்த பொழுது தேவாதி நாமங்களையும்‌ சரீரங்களையும்‌ உடையவனாக இருந்து, பிறகு முக்தனானதும்‌ அவைகளிலிருந்து விடுபட்டானென்பது இவ் வாக்யத்தின்‌ கருத்தாகையால இங்கு ஆகாச மென்றது அந்த முக்தாத்மாவைத் தான்‌ என்கிற பூர்வ பக்ஷமுண்டாக, ஸூத்ர காரர்‌ பதில்‌ சொல்லுகிறார்‌–

ஆகாசோ அர்த்தாந்தரத்வாதி வ்பபதேசாத்‌ ‘* என்று. இதன்‌ பொருளாவது —ஆகாச:.இவ் வாகயத்தில்‌ சொல்லப்பட்ட ஆகாசம்‌ பர ப்ரஹ்மம் தான்‌, ஜீவனன்று; அர்த்தாந்தரத்வ ஆதி வ்யபதேசாத்‌-வேறு வஸ்துவாம்‌ தன்மை முதலியன பேசப்‌ பட்டு இருப்பதாலே--என்பதாம்‌. அதாவது இவ் வாக்வத்தில்‌ ஆகாசமாவது நாம ரூபங்களை நிர்வஹிப்பது என்று பேசப் பட்டுள்ளது. நிர்வஹிப்பது–அடைவதாகாது, அடைவிப்பதே யாகும்‌. ஜீவன்‌ ஸம்ஸாரி தசையில்‌ தான்‌ நாம ரூபங்களை யடைகிறானே யன்றி அடைவிப்ப தில்லை. முக்தனும்‌ இச் செயலைச்‌ செய்ய முடியாது. ஏனென்றால ஜகத் ஸ்ருஷ்டி பண்ணும்‌ ஸர்வேஸ்வரனுடைய பணி தான்‌ அது என்று ஸத் வித்யை முதலிய பல ப்ரகரணங்களில்‌ ஸம்சய மறச்‌ சொல்லப் பட்டிருக்கிறது. அதோடு ஸூத்ரத்தில்‌ ஆதி சப்தத்தால்‌ குறிக்கப்‌ பட்ட ப்ரஹ்ம, அம்ருதம்‌, ஆத்மா என்கிற அடை மொழிகள்‌ பர ப்ரஹ்மத்திற்குத் தான்‌ பொருந்தும்‌. ஆத்மா என்கிற சொல்லும்‌, எல்லா வற்றுக்குள்ளும்‌ அந்தராத்மாவாக வ்யாபித்து நிற்கும்‌ பரமாத்மாவைத் தான்‌ முக்கியமாகக்‌ காட்டும்‌-இதற்கு மேல்‌ சிலர்‌ விசித்திரமான வேறொரு வாதத்தைக்‌ கிளப்பினார்கள்‌ –ஸம்ஸார தசையில்‌ ஜீவனென்று சொல்லப் படுபவனே கருமங்கள்‌ கழிந்து முக்தனாகி, ப்ரஹ்மமென்று சொல்லப் படுகிறான்‌. ஆக ப்ரஹ்மமென்று தனியே ஒரு வஸ்துவே கிடையாது–என்று. இதற்கு ஸமாதாநம்‌ இரண்டு ஸூத்ரங்களால்‌ சொல்லப் படுகிறது–” ஸுஷுப்த் யுத்க்ராந்த்‌ யோர்ப்பேதேந ‘?, பத்யாதி சப்தேப்ய: ‘” என்று. இவற்றின்‌ பொருளாவது–ப்ருஹதாரண்ய உபநிஷத்தில்‌ ஜீவாத்ம பரமாத்மாக்களைத்‌ தனித் தனியே ப்ரஸ்தாவித்து, ஜீவன்‌ ஸுஷுப்தி (தூக்கக்‌) காலத்தில்‌ ப்ராஜ்ஞனான அந்தராத்மாவுடன்‌ சேர்ந்து லெளகிக ஜ்ஞாநத்தை இழந்திருக்கிறான்‌ என்றும்‌, சரீரத்தை விட்டுக்‌ கிளம்பும் பொழுது அதே ப்ராஜ்ஞனனான அந்தராத்‌ மாவுடன்‌ கூடிச்‌ செல்லுகிறான்‌ என்றும்‌ இருவரையும்‌ வேறாகவே சொல்லி யிருக்கிறது. மேலும்‌ ப்ரஹ்மத்தை எல்லாவற்றுக்கும்‌ ஸ்வாமி, பதி, ஈஸ்வரன்‌ என்றெல்லாம்‌ சொல்லி யிருக்கிறது: ஆகையால்‌ இருவரையும்‌ ஒன்றாகக்‌ கருத முடியாது.-ஆக, ப்ரக்ருத சாந்தோக்யோபநிஷத்தின்‌ கடைசியில்‌ ஓதப்பட்ட ஆகாசமும்‌ முதலில்‌ சொல்லப்பட்ட ஆகாசமும்‌ –பர ப்ரஹ்ம மென்கிற ஆகாசம் தான்‌ என்று தேறிற்று –

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ திரு நாராயண புரம்‌ அனந்தாண் பிள்ளை அக்காரக் கனி ஸம்பத் குமாராசார்ய ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading