வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-
அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .
1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் –முலையோ முழு முற்றும் போந்தில –பால்யாத் ப்ராவண்யம் –கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் -மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்–அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே –கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் –யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் –8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
1
3-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-
மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ் சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —
““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம் த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்யாஸ்தாந வேதம் போல் இங்கும் இவருடைய ப்ரபந்தங்கள் நாலும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய், “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்?” (திருமொழி 1 – 7 – 10) என்றும், ““கலியன் வாயொலி செய்த பனுவல் ” (திருமொழி 1 – 4 – 10) என்றும் சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும், அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய், மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் உபாங்கங்களா யிருக்கும் –
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது ——57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை–
—
கலியுகத்தில், தமிழகத்தில் உள்ள ஆற்றங்கரையோரங்களில் ஆழ்வார்கள் அவதரிக்கப் போகிறார்கள் என்று துவாபர யுகத்திலேயே ஸ்ரீமத் பாகவதத்தில் வேதவியாசர் கூறியுள்ளார்.-அந்தச் சமஸ்கிருத ஸ்லோகம்:
“கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் க்வசிந் மஹாபாகா
த்ரமிடேஷுச பூரிச: | தாம்ரபர்ணி நதியத்ர
க்ருத மாலா பயஸ்விநீ | காவிரீ ச மஹாபாகா ப்ராதீசீச மாஹாநதீ ||”.
இதன் பொருள்: கிருதயுகம் முதலியவற்றில் வாழ்ந்த ரிஷிகள் கலியுகத்தில் பிறக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஏனென்றால், நாராயணனே அடையத்தக்கவன் என்று பறைசாற்றும் சான்றோர்கள் கலியுகத்தில் திராவிட தேசத்தில் தோன்றுவார்கள். எங்கு தாமிரபரணி, கிருதமாலா (வைகை), பயஸ்வதி (பாலாறு), பெருமை மிகுந்த காவிரி, மேற்குக்கடலில் சென்று கலக்கும் பெரியாறு ஆகிய நதிக்கரையில் அவர்கள் தோன்றுவார்கள் என்று வேதவியாசர் கூறினார். அப்படியே பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்து, சரணாகதி தர்மத்தை நிலைநாட்டினர்.
——–
கஜ ஸிம்ஹ -கதி விசார ஸதஸ் -வேழம் -வலிமிக்க சீயம் ராமானுஜன் –
விரிவு நம்மாழ்வார் -சுருக்கம் திருமங்கை ஆழ்வார் -தூது -நான்கு பதிகம்-இவர் 3 -6 வயலாலி மணவாளனுக்கு வண்டு தூது -வேதம் வல்லார் மூலம் பற்ற என் நிலைமை உரையாய் — –
நரஸ்துதி தவிர்தல் – 3-10-திருவாய் மொழி -சொன்னால் விரோதம் -1-1-7-கண்டவா தொண்டரைப் பாடாமல் திருக்குடந்தை வம்மின் –
அனுகரித்துத் தரித்தல்-5-6-கடல் ஞாலம் –8-2-6-வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொண்டது யான் -ஒரே பாசுரம்
நம்மாழ்வார் சுருக்கமாக -இவர் விரித்து பாடியவை
பிரளயம் -திருவாசிரியம் -7 பாசுரம் -ஒரே -11-6-பதிகம் முழுவதும் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–
ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்-
மடலூர்தல் -5-3- ஒரே பாசுரம் -தேவப்பிரான் தன்னை –மடலூர்துமே -சிறிய திரு மடல் -155 வரிகள் 297 வரிகள் பெரிய திரு மடல் -அரங்கனுக்கு மதிள் நறையூர்நம்பிக்கு மடல் ஆச்சார்யன் -என்பதால் –
யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –
சமமாக பாடியவை
பாகவத சேஷத்வம் -இரண்டு பதிகங்கள் இருவரும் -பயிலும் சுடரொளி 3-7/நெடுமாற்க்கு அடிமை -8-10-/கடல்மல்லை 2-6-/திருச்சேறை -7-4/
தாய் பாசுரம்–கங்குலும் பகலும் -7-2/திருவிடவெந்தை -2-7-
பிரேமத்தில் பெண் பேச்சு -27 பதிகங்கள் இருவரும் இவள் திறத்து என் செய்கின்றாய் -உன் மனத்தால் என் நினைத்திருந்தாய் –
சரணாகதி -நோற்ற நாலும் -திருவேங்கடத்திலும் 6-10–இவர் பத்து இடங்களிலே –1-6நைமிசாரண்யம் -1-9-திருவேங்கடம் /4-6 காவளம்பாடி /4-7 திருவெள்ளக்குளம் /5-8 திருவரங்கம் /6-2-ஒப்பிலியப்பன் /6-9- நாச்சியார் கோயில் /7-7 தேரெழுந்தூர் -திருஎழுகூற்றிருக்கை திருக்குடந்தை
சிறப்பித்து பாடியவை
குறி சொல்வது -கட்டுவிச்சி -4-6-தீர்ப்பாரை -ஸ்ரீ வைஷ்ணவ கட்டுவிச்சி இவளுக்கு -தெய்வ நல் நோய் இது –
உண்ணும் சோறு -திண்ணம் இள மான் புகுவது திருக்கோளூரே -3-7-1கள்வன் கொல் – அணியாலி புகுவர் கொலோ -ஆளவந்தார் நிர்வாகம் –
கேசவன் தமர் -2-7- திரு நாமங்கள் பதிகம் -பன்னிரு நாமப்பாட்டு -நாராயணன் -ஒன்றே -20 தடவை -1-1 வாடினேன் உப கிரமத்திலும் பின்பு நறையூர் -6-10 கிடந்த நம்பி -நாமம் சொல்லில் நமோ நாராயணமே
இருவரும் -6-3 ஒப்பிலியப்பனுக்கு
———
வார்த்தை -435-
நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு –
அறிவு நடையாடின போதோடு –
சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே அநுவர்த்தநத்தோடு -வாசியற
மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில் –
அறிவு கலங்கின போது
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –
அறிவு நடை யாடின போது –
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான்
தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் –
அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –
அநுவர்த்தநத்தில் –
அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –
——————————————————-
வார்த்தை -436-
திருமங்கை ஆழ்வாரை ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து –
இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது –
இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது அவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய் இருந்தார்-என்கிற இதுவே பற்றாசாக
நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட
அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –
————————————————————
வார்த்தை -437-
நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் –
அவருக்கு எல்லாம் பரத்வத்திலேயாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலேயாய் இருக்கும் -எங்கனே என்னில்
அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-
(அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது என்றோ -அர்ச்சாவதார மஹிமை பேசிய செந்தாமரைக்கண்ண பதிகம் நிகமனம் பாசுரம்)
அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –
அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் – சிறிய திருமடல் -72-77- என்றும் –
அவர் வளை இழப்பது -விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும்
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –
அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –
அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்
அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –
அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –
அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3 -என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –
——————————————————————————————–————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply