த்யானஸ்லோகங்கள் – கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்! ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம்!! வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே ! வேத ப்ராசேதஸா தாஸீத் ஸாக்ஷாத் ராமாயணத்மநா!! யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலீம் ! பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் ! மாருதிம் நமத ராக்ஷ ஸாந்தகம்!! ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம் ! லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!! ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே ! ஸஹஸ்ர நாம தத் துல்யம் ராம நாம வரானனே!! –
ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணன் சேதனர்கள் உஜ்ஜீவனத்திற்காக எத்தனையோ அவதாரங்கள் செய்திருக்கிறார் – அதில் ப்ரதானமாய் ராம க்ருஷ்ண அவதாரங்கள் அகிலத்தாலும் போற்றக் கூடியது. இந்த பூலோகத்தில் அவதரித்து நம்மை எல்லாம் நேராக வந்து ரக்ஷித்து பின் திரும்ப வைகுண்டம் சென்றடைந்தார். உபநிஷத் வாக்யமான “யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ: “என்கிறபடியே வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவர் ஸர்வேஸ்வரன் எவராலும் அளவீட்டு கூற முடியாத அளவிற்கு அளப்பறியர் ராமன். ஆழ்வார் தன் பாசுரத்தில் மனன கமலமற மலர்மிசை எழுதரும் மனனுணர் வளவிலன் பொறி யுணர் வவை யிலன் இனனுனர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும் இனனில னெனனுயிர் மிகுநரையிலனே என்ற பாசுரத்தை அர்த்தத்துடன் விசேஷித்தார். யாரோ ஒருத்தருக்கு ராமன் தன்னை காட்டவே மற்றவர்களுக்கும் ராமனை காண வேண்டும் என்ற ஆவல் உந்துகிறது. நாம் காண ஆசைப்பட்டாலும் அவராகவே தன்னை கருணையுடன் வெளிக் காட்டிக் கொண்டால் தான் காண முடியும். கண்டவர் விண்டிலர். விண்டிலர். கண்டலர். வாயு வேகம் மன வேகம் காற்று போவதை விட மனம் வேகமாக செல்லும் இந்த உட் கண்ணால் பெருமானை காண முடியாது. ஞானக் கண்ணால் தான் தரிசிக்க முடியும் என்பர் சான்றோர்கள். ஆகாய தாமரை குதிரை கொம்பு என்று ஒன்று இல்லை. ஆதலால் யாரும் பார்த்திருக்க சாத்யமில்லை. ஆனால் பெருமான் ராமன் குலசேகர ஆழ்வார் போன்ற ஆழ்வார்களுக்கு காட்சி கொடுத்து இருக்கார். யாரோ ஒருவர் கண்டேன் ராமனை என்று கூறியதால் நமக்கும் ராமனை பார்க்க ஒரு துடிப்பு உள்ளது. ஸதா பஸ்யந்தி ஸூரய: நித்ய ஸூரிகள் பெருமானை சேவித்துக் கொண்டே இருக்கும் பாக்யம் பெற்றவர்கள். ஏக தேவ அமிர்தம் திருஷ்ட்வா . ஒரு தடவை பார்த்து திருப்தி ஏற்பட முடியாத திருமுகம் . தெய்வத்தை அபரிமித ஆசையுடன். பார்ப்பதற்கு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். ஆதித்ய குலத்தில் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் நவமி திதியில் மாதா கெளசல்யைக்கு திருக் குமாரனாய் உலகமே மெச்சும்படி அவதரித்து ப்ரதானமாய் ராமசந்திரன் என்ற பெயருடன் விளங்கினார்.
ஸூரிய குலத்தில் அவதரித்தால் பிறர் உதவியை நாடாமல் ஸ்வயம் ப்ரகாசமாய் ப்ரகாசிக்கலாம் என்ற காரணம் தான், விளக்குக்கு இருக்கும் பெருமை அது தன்னைத் தானே ப்ரகாசித்துக் கொண்டு சுற்றி உள்ளதையும் ப்ரகாசப்படுத்தி காட்டும் தன்மை . ராமரை வைகுண்டத்தில் காண்பதை விட இந்த பூலோகத்தில் காண அவா. அது அர்ச்சாவதார திவ்ய தேசத்தில் தான் சாத்யம். எங்கனம் ஆச்சார்யன் நம் மேல் வைக்கும் அபிமானம் தான் நாம் அவர்மேல் வைக்கும் அபிமானம் விட பெரியது. அது போல் நாம் பெருமானை பார்ப்பதை விட பெருமான் நம்மை கடாக்ஷிப்பதே ஏற்றம். பெருமான் அருள் இருந்தால் தான் மோக்ஷம் கிட்டும். அவர் அடியேனை கடாக்ஷப்பதே அவர் அருள் இருந்தால் மட்டுமே சாத்யம். உலக விஷயமான அப்ராப்த விஷயத்தில் ஒரு விஷயம் கிட்டா விடில் பரவாயில்லை ஆனால் ப்ராப்த விஷயமான பகவத் விஷயத்தில் அது கிட்டியே தீர வேண்டும். கைகேயி தசரதனிடம் கேட்ட 2 வரம் அது அனர்த்தம் என்று தசரதன் கருத்து தெரிவித்து அதனால் ராமன் ஊரை விட்டு சென்றால் எனக்கு வயதாகிவிடும். ராமன் என்னுடனே இருந்தால் ராமா வா என்று சொல்லி வரும் போது எனக்கு 100 வயசு கம்மியாகும். ராமா போ என்று சொல்லும் போது இன்னொரு 100 வயசு கம்மியாகும். இங்கே தொடர்ந்து 6௦௦௦௦ வயது இளமை திரும்பி யுவா ஆகிவிடுவேன் என்பது தசரதன் கருத்து எந்த மனைவிக்குத் தான் தன் கணவன் இளமையுடன் இருப்பது பிடிக்காது? ஆனால் மந்திரா கைகேயி மனதை முழுவதுமாய் மாற்றி விட்டாள். தசரதனின் கண்கள் ராமன் என்ற குணக் கடல் அழகுக் கடல் வீரக் கடல் பின்னே சென்று விட்டதால் கெளசல்யை நீ என்னை தொடு அப்போது தான் இருப்பதே உணர்வேன் என்று தசரதன் கூறுகிறார். கடல் கொண்ட வஸ்துவை திரும்ப கிடைப்பது என்பது துர்லபம். திரும்பி வராது. இது தசரதனின் எண்ணம். பரதனோ 14 வருஷம் ராமன் காட்டிலிருந்து பின் 15வது வருஷம் முதல் நாள் ராமன் அயோத்தியில் இல்லை என்றால் தான் அக்கினிக்கு இரையாகுவதாக சபதம் செய்தான். ஆக ராமன் வீபீஷணனிடம் 14 வருஷம் கழித்து நான் ஸ்நானம் செய்வது கூட பரதன் இருக்கும் அயோத்தியில் தான் விபீஷணா என்று ராமன் அறுதியிட்டதோடு
புஷ்பக விமானம் நற் காரியத்திற்கு முதன்முதலில் பயன்படப் போகிறது என்று விபீஷணன் ராமனை அதில் ஏறச் சொல்ல சீதா லஷ்மணருடன் ராமன் அதில் ஏற சுக்ரீவன் தானும் கூட வந்து பட்டாபிஷேகத்தை காண ஆசைப்படுவதாய் தெரிவிக்க சுக்ரிவன் மற்றும் ஏனைய வானரங்களும் தம் தம் மனைவிமார்களுடன் புஷ்பக விமானத்தில் பயணிக்க பரத்வாஜ முனிவர் .ஆச்ரமத்திற்கு ராமன் முதலில் வந்து சேர அந்த பரத்வாஜர் கேட்டுக் கொண்டதின் பேரில் என்று ஒரு நாள் ராத்திரி எங்கு தங்கி விட்டு போக, ராமன் முடிவெடுத்து ஹனுமனையும் குகளையும் முன்னால் அனுப்பி நடந்த விஷயத்தை கூற கோர , அதற்குள் பரதன் அக்னியை மூட்டி ப்ரதக்ஷணம் பண்ணி குதிக்க சித்தமாகும் போது ஹனுமன் மறுபடியும் ராமாயண கதையை முதலிலிருந்து தொடங்கி கூற ராமநாமம் ம்ருத்யு சஞ்சீவினி போகும் உயிரை காப்பாற்றும் என்பதால் பரதன் தீயில் விழுவதிலிருந்து தடுத்தப் பட்டான். ஹனுமன் தன் வாயால் ஊதியே அந்த அக்னியை அனைத்தார் என்பது சரித்ரம் . கம்பன் இதை பாட்டாய் வடிவெடுத்து பக்தர் பித்தன் பேதையர் பேசியது என்று அதை கூறிவிட்டார். ராமனை பற்றி பாட இவ்வளவு தான் இயலும் என்பது போல், சத்யப்ரக்ஞன் திடவரதன் ராமர் வந்ததும் பரதன் அனைத்தும் மறந்து விட்டு ராமனை தரிசிப்பதில் லயித்து போனான். இந்தக் காட்சிக்காக ஏங்கியது எத்தனை வருஷங்கள் இங்கு பேசாமல் இருப்பதே உசிதம் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என கம்பரும் எந்த கவியும் இயற்றவில்லை. ப்ரிய தர்சன: வால்மீகி 16 கேள்விகள் கேட்கிறார். திருட வ்ரத: ஸர்வ பூதேஷு கோயித ஆத்மானன் போன்ற 16 கேள்விகள் ராமனின் கல்யாண குணங்களை பற்றி கேட்க அனைத்தும் ஒரு சேர ராமனிடத்தல் குடியிருக்கிறது எனபதல சந்திரனுக்கு 16 கலைகள் போல 16 கேள்விகள் . ராமன் யாரைப் பார்த்தாலும் ஆனந்தமாய் பார்ப்பார். ரூப ஒனதார்ய குணைகி. பும்ஸாம் த்ருஷ்டி ஸித்தாம். அபஹாரிணம். கண் போகிறது என்றால் மனமும் அவர் பின்னே செல்கிறது. ராம தர்சனத்தை மட்டும் கண்டேன். அவரால் தான் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கு .உம்மை வணங்க வைத்த கரணம் என ஸ்வாமி ராமானுஜர் கூறியபடி கண் இருப்பது ராமனின் சௌந்தரியத்தை காண, காது படைத்த பயன் அவர் நாமங்களை கேட்க, மூக்கு இருக்கும் பயன் அவர் பாத துளஸியை முகர்வதற்கு, இங்கனம் ஒவ்வொரு கரணமும் இருப்பது ராம கைங்கரியத்திற்கு. இதையே முகுந்த மாலையில் ஜிஹ்வே கேசவம் …என துவங்கும் ஸ்லோகத்தை கூறி அதன் அர்த்தத்தை விளக்கினார். அந்த ராமனை பத்மதள பத்ராக்ஷம் மலர்ந்த தாமரைகளை ஒத்த ராமரின் திருக்கண்கள் . கண்கள் பாக்கியசாலிகள். மாதா சீதா ஆசைப்படுகிறாள். எல்லா வானர சைன்யத்தையும் ஒட்டி விட்டார். யாரெல்லாம் மம நாதனை . சேவிக்கிறார்களோ அவர்கள் தன்யர்கள் என சீதா மாதா கூறினாள். ஹனுமனை பார்த்து சீதை இந்த உலகுக்கே நாதன் எனக்காக ஒரு தடவை திரும்பிப் போய் நான் வணங்குவதாக சொல்லி நீ வணங்கி வா என்று அழுத்தம் திருத்தமாக கூறி
சந்திரகுலத்தில் பிறந்த கண்ணனுக்கு அந்த பெயர் இல்லை. இந்த ராமரை தரிசிப்பதே ஆஹ்லாதகரமாய் குளிர்ச்சியாய் இருக்கும். அங்க ணெடு மதின் புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத்து லகனைத்தும் விளக்கும் சோதி….. தில்லைநகர் திருச்சித்திர கூடந்தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ ? கண் குளிரக் காணும் நாளே. எனகுலசேகர பெருமான் ராமனை தரிசித்த அனுபவத்தை பாசுரமாய் வடித்துள்ளார். அவருக்கு ராமன் காட்சி கொடுத்திருக்கார். 11000. வருஷங்கள் இந்த பூவுலகத்தில் இருந்து பின் வைகுண்டம் சென்றடைந்தார். இவர் அவதரித்த அயோத்தி நகரம் அபராஜிதா என்ற வைகுண்டத்திற்கு ஒரு பெயர் போல் அயோத்திக்கும் உண்டு. யாரும் சண்டையிட்டு ஜெயிக்க முடியாத ஊர் அயோத்தி வேதவதி வேதக மறை என்று தமிழில் மறைத்து சொல்லும்.. த்ருஷ்ட்வா திருந்த பந்தி பார்த்து பார்த்து திருப்தி ஏற்படா அளவு பேரழகு. ரம இத்தீ ராம: ராமன் பிறந்தவுடன் ராமன் என்ற பெயரை வைக்க அவர் பேரழகே தூண்டித்தாம். திரும்ப திரும்ப தரிசிக்க தூண்டும் திருமுக ப்ரபாவம். குலசேகர ஆழ்வார் 105 பாசுரங்கள் ராமனை போற்றி பாடியுள்ளார். ராமன் ஆராதித்த அரங்கன் இஷ்வாகு குலம் கொண்டாடிய அரங்கனாய் ஆராதிக்கப்பட்டவராய் இருப்பதால் தான் அவதரிக்க இஷ்வாகு வம்சத்தை ராமன் தேர்ந்தெடுத்தார். சரயு நதியின் தெற்கு கரையில் மனுவால் ஸ்தாபிக்கப்பட்ட அயோத்தி அவரை அர்ச்சிக்கிறோம் அவரே அர்ச்சனாகவும் இருக்கனும். இன்று ஸ்ரீரங்கத்தில் சயனிக்கும் பெருமாள் தான் அங்கு இருக்கும் பெருமாள். வெண்கதிரோன் குலத்திற்கு விளக்காய் திகழ்ந்தார். எங்கனம் நன்கு உண்டு திருப்தியஸ்ய போஜனம் செய்து ஏப்பம் விட்டவனை திரும்ப சாப்பிட கூப்பிட முடியாத அதுபோல்பகலை ப்ரகாசப்படுத்த விளக்கு வேண்டாம். சூரிய குலத்தில் பிறந்த ராமன் ஸ்வயம் ப்ரகாசமாய் திகழ்ந்தார்
சீதை ஹனுமனிடம் நான் சொன்னதாக எனக்காக ஒரு முறை சேவித்து நான் கேட்டேன் என்று குசல ப்ரசனம் பண்ணும்படி கூறினாள். அவள் தேவதேவ திவ்ய மஹிஷி என்று ஹனுமனும் சீதை கூறியதைக் அப்படியே கேட்டுக் கொண்டார். கெளசல்யை தசரதன் கொடுத்த பாயசத்தில் அரை பாகம் குடித்து இந்த லோகமே நன்றாய் இருக்க லோகத்தை ரக்ஷிக்க ஒரு பிள்ளையை லோகார்த்தமாய் வேண்டினாள். மேலும் சீதை இதையே தன் பிரார்த்தனையாய் வைத்து மாதா கெளசல்யை பிரார்த்தித்த லோகத்தில் நானும் ஒருத்திதானே என்னை ரக்ஷிக்காமல் இருக்கிறாயே என்ற பொருள்பட கூறியது ஹனுமன் அறியாமல் இருந்தாலும் ராமனுக்கு விளங்கிவிட்டது. மேலும் தன் தாயார் பெயர் போக ராமன் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டார் என்பது நன்கு சீதை அறிந்து வைத்திருந்தாள். நல்கித்தான் எனதுவங்கும் ஆழ்வார் பாசுரத்தை அனுசந்தித்து பின் அஞ்சன மடவாராய்! அளியத்தாய்! நீயும் நின் அஞ்சிறை சேவலுமாய் ஆவா! என்று எனக்கருளி வெஞ்சிறைப் புள்ளுயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ? என பெருமான் மீது உள்ள ப்ரேமத்தால் நாரையை தூதுவிட்டார் ஆழ்வார். பறவை எங்கே போகனும் என்ன சொல்லனும் என்று கேட்க நாரணன் என்ற பெயர் நிலைத்து இருக்க வேண்டுமானால் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனான அடியேனை ரக்ஷிக்க வேண்டும் என்று சொல் என நாரையிடம் ஆழ்வார் கூறியது போல் சீதையும் ஹனுமனிடம் கூறினாள். சீதை அருகில் இருந்ததால் காகாசுரன் ரக்ஷிக்கப்பட்டான் சீதை அருகில் இல்லாததால் ராவணன் மாண்டான். ஜனஸ்தானத்தில் 14000 ராக்ஷஸர்களை வேதாந்த தேசிகர் கூறியது போல் அசகாயசூரனாய் அநபாய சாகஸனாய் கொன்று வீழ்த்தினார். ஜெய ஜெய மஹாவீர என்னும் படிக்கு ஒருத்தரையும் மிச்சம் வைக்காமல் ராமன் கொன்றார். மஹாலஷ்மி தன் திருமேனியிலேயே சந்தான கரணி ஒரு மூலிகை விஷகரணி ஒரு மூலிகை கொண்டுள்ளதால் அவள் ராமனை ஆலிங்கனம் – ஆரத்தழுவிக் கொள்ள ராமன் திருமேனியில் வழிந்த ரத்தத்திற்கு மருந்தாகி இருந்ததாம். கெட்டது கூடாது என்பதற்காக பூமாதேவி மறைத்து வைக்க வேணன் வேண்டுகோளுக்கினாங்கி தான் காமதேனுவாய் மாற ராஜா அனைத்து செல்வத்தையும் அதிலிருந்து கறந்தான். தம் திருஷ்வா… ராமன் தன்னை காட்டனும் என்று முடிவெடுத்தால் தான் காண முடியும். அவர் அவராகவே அவரை பார்த்துக் கொள்வார் என்பது ராமனிடத்தில் மட்டும் தான் சாத்யம் . அவரே காட்சியாகவும் இருந்து அவரைக் கொண்டே தான் நாம் அவரை அவர் அனுக்ரஹத்தால் அறிந்துமுடி வில் அவரை அடையவும் முடியும். வாலியின் பத்தினி தாரை இதை நன்கு அறிந்து வைத்திருந்தாள். வைய வந்த வாயால் ராமனை வாழ்த்தி விட்டு போனாள்.
திவம் அப்ரமேயச்ச துராதஹஸ்ய…. குரங்கினமான தாரை ராமனை பார்த்து நீ என்று சொன்னாள். அப்ரமேயன் புத்திக்கு அப்பாற்பட்டவன். என்னால் ப்ரத்யக்ஷமாய் கண்ணால் பார்க்க முடியவில்லை. ஆனால் மனதால் புத்தியால் அனுபவிக்கிறேன். ராமன் உடன்பிறந்தவர்கள் கண்களால் ராமனைப் பார்த்தாலும் புத்தியால் மனதால் அனுபவிக்கவில்லை. ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் ஸக்யம் ஆயிற்று. ஸா கேத் என்ற இடத்தில் ஜடாயுக்கு மோக்ஷம் கொடுத்தார். ரிஷ்யமுக பர்வதத்திற்கு வடமேற்கில் இந்த ஸாகேத் இடம் உள்ளது. சீதைக்கு வியப்பு. நரத்துவமும் வாரைத்துவமும் எப்படி தோழமை கொண்டது என்று. ராவணன் சீதையை அபஹரித்து ஆகாய விமானத்தில் சென்ற போது சீதை தன் ஆபரணங்கள கழட்டி ஒரு மூட்டையாய் கட்டி வீச அதை சுக்ரீவாதிகள் கண்டார்கள். வானரர்கள் அப்போதே பிராட்டியின் கடாக்ஷத்தை பெற்றார்கள். சீதை 10 மாதங்கள் சிறை இருந்த போதே வீ பீஷணன் சீதையின் கடாக்ஷத்தை பெற்றதால் தான் ராமனை சரணாகதி பண்ண முடிந்தது. இருந்தும் வியந்து… எனத்துவங்கும் ஆழ்வார் பாசுரம். இதன் அடியாய் நம்பிள்ளை ஈடு காலக்ஷேபத்தில் வானரர்களையே ராமன் சந்தித்தபோது எங்கள் ஆழ்வாரை சந்திக்க கசக்குமா என்று குறிப்பிட்டு உள்ளார். அதேபரமாத்மாவான ராமன் ஆழ்வாரையும் கடாக்ஷித்துக் கொண்டே இருக்கார். கண்டேன் ராமனை என்ற இடத்தில் தான் இரண்டும் கூடுகிறது. ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதஸே. ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நம: ஸ்ரிய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்திதாம். ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீனிவாசாய மங்களம். நல்ல கோட்பாட்டுலங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணனை அந்தண் குரு கூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள். நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே என ஆழ்வார் பாசுரத்துடன் இத்தொடரை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு எனப் ப்ரார்த்திக்கிறேன் . எடுத்துக் கொண்ட தலைப்பை உபநிஷத்து மூலமும் ஆழ்வார் பாசுரங்கள் வாயிலாகவும் அடிகோடிட்டு அற்புதமாய் நிறைவு செய்தார்.
Leave a Reply