1-ஏஷ சம்ப்ரசாதே அஸ்மா சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதிரூப சம்பாத்திய ஸ்வேன ரூபேணாபி நிஷ்பத்யதே –-சாந்தோ 8-12-2,(இந்த ஜீவன், இந்த ஸாரீரத்திலிருக்து கிளம்பி, பரஞ்சோதியான நாராயணனை அடைந்து, ஸ்வரூப மலர்ச்சி பெறுகிறான்)
2-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்ஜன பரமம் சாம்யம் உபைதி –-முண்டம் -3-1-3-(பரம புருஷனே ஸாக்ஷாத்கரித்தவுடன் ப்ரஹ்ம ஜ்ஞானி யானவன், புண்ய பாபங்களை விட்டு, ப்ரக்ருதி ஸம்பந்த மற்றவனாய், (புருஷோத்தமனுடன்) மேலான ஸாம்யத்தை. அடைகிறான்)
3-ஸ்தோத்ரம் நாம கிம் ஆம நந்தி கவயோ யத்யந்ய தீயாந் குணாந்
அந் யத்ர த்வஸதோதி ரோப்ய பணிதஸ் சா தர்ஹி வந்த்யா த்வயி
சம்யக் சத்ய குணாபி வர்ண நமதோ ப்ரூயுஸ் கதம் தாத்ருசீ
வாக் வாசஸ்பதி நாபி சக்ய ரஸநா த்வத் ஸத் குண அர்ணோ நிதவ்–ஸ்ரீ ஸ்தவம்-3-[ஸ்தோத்ரமென்று கவிகள் எதைச் சொல்லுகிறார்கள் ? ஒருவனுடைய குணங்களை அவைகளில்லாதவனான மற் றொருவனிடம் ஏறிட்டுச் சொல்லுவதே (ஸ்தோத்ரம் எனில்,–அம்மாதிரியான ஸ்தோத்ரம் உன்னிடம் முடியாது; உள்ள குணங்களை நன்றாக வர்ணிப்பதே (ஸ்தோத்ரம்) என்று சொல்லுவார்களாகில்-—உன்னுடைய கல்யாண குணக்கடல் விஷயத்தில் ப்ருஹஸ்பதியாலும் அப்ப டிப்பட்ட ஸ்தோத்ரம் செய்ய எப்படி முடியும்?])
4-அந் யத்ர அதத் குண யுக்தி பகவதி ந தத் உத்கர்ஷ ஸுவ்ர்யை பரேஷாம்
ஸ்துத் யத்வாத் யாவத் அர்த்தா பணிதி அபி ததா தஸ்ய நிஸ்ஸீமகத்வாத்
ஆம்நாயாநாம் அசீம் நாம் அபி ஹரி விபவே வர்ஷ பிந்தோ இவ அப்தவ்
சம்பந்தாத் ஸ்வாத்ம லாப நது கபளநத ஸ்தோது ஏவம் ந கிம் மே ––ர ஸ்த்வம் -1-19–[இல்லாத விஷயங்களை ஏறிட்டுச்சொல்லுவது ப,க,வானைத் தவிர மற்றவர்கள் விஷயத்தில்; ப,க,வத்,விஷயத்திலல்ல; அவனுடைய பெருமைகளைத் திருடி மற்றவர்களைத் துதிக்க வேண்டியிருக்கிறபடியால், உள்ள விஷயங்களைச் சொல்லு வதும் (ப,க,வான் விஷயத்தில்) முடியாது; பகவானுடைய பெருமைகள் எல்லையற்றவையாகையாலே )
5-யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மநஸா ஸஹ। ஆநந்தம் ப்,ரஹ்மணோ வித் வாந்। ந பி,பே,தி குதங்சநேதி ॥—தை ஆ -9-1-எந்த ப்ஏஹ்மத்தினிடமிருந்து, மனத்துடன் கூடிய வாக் குக்கள், (அதை) அளவிட்டறியாமல் திரும்புகின்றனவோ, அந்தப் பரமாத்மாவின் ஆநந்த,த்தை அறிந்தவன் எதனிட மும் பயப்படமாட்டான்-
6-யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத, ஸ:। அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ॥ கேந -2-3-[எவனுக்கு ப்,ரஹ்மம் (அளவிட்டு) அறியப்படவில்லையோ, அவனுக்கு (அது) அறியப்பட்டதாகிறது. எவனுக்கு (ப்ரஹ் மம்) அறியப்பட்டதாகிறதோ, அவன் (அதை) அறிய வில்லை. (அளவிட்டு) அறிந்தவர்களுக்கு அறியப்படாத தாகவும், (அளவிட்டு) அறியாதவர்களுக்கு அறியப்பட்ட தாகவுமிருக்கிறது (ப்,ரஹ்மம்)
7-பூதார்த்தே கதமா ஸ்துதி -(உண்மையாக உள்ள விஷயத்தில் ஸ்துதி எப்படி முடியும்?
8-ந ஸமர்த்தராஸ் ஸுரா: ஸ்தோதும் த்வாமநந்யப வம் விபு,ம் -வி.பி, 5-7-49.[ஸர்வ வ்யாபியும், ஒருவரிடத்திலிருந்தும் உண்டாகாதவனுமான உன்னை ஸ்தோத்ரம் செய்ய தேவர்களும் ஸமர்த்த,ரல்லர்.
9-ஸ்தவயஸ் ஸ்தவ ப்ரிய —விஷ்ணு, ஸஹஸ்ர.([ஸ்தோத்ரம் செய்யத்தக்கவன்; ஸ்துதியை விரும்புபவன்
10-(தர்மார்த்தகாமமோக்ஷாக்யா:புருஷார்த்த உதராஹ்ருதா: இதம் சதுஷ்டயம் யஸ்மாத் தஸ்மாத் 8ம் மிதம் வச: ॥–வி-பு. 1-18.22-.ப்ரஹ்லாத வாக்யம் [தர்மம், அர்த்தம், கர்மம், மோக்ஷ்மென்று புருஷார்த்த;ங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த நான்கும் எவனிடத்திலிருந்து அடையப்படுகின் றனவோ, அவனைக் குறித்து“அவனால் என்ன ப்ரயோஜனம்?” என்னும் இந்த வார்த்தை ஏன் சொல்லப்படுகிறது)
11-ததஸ்ய த்ரிவித,ஸ்யா$பி து;க்கணாதஸ்ய வை மம। கர்ப்ப ஜந்மஜராத்,யேஷ- ஸ்தராநேஷு ப்ரப,விஷ்யத: ॥ நிரஸ்தாதிய யாஹ்லாத; ஸுக,ப ஈவைக லக்ஷணு | பேஷஜம் ப,சு,வத் ப்ராப்திரேகாந்தாத்யந்திகீ மதா—, விபு, 6 -5.58 & 59[கர்ப்ப,ம், பிறப்பு, கிழத்தனம் முதலிய அவஸ்தை,களில் உழலும் என்னுடைய (ஆத்,யாத்மிகம், ஆதி,தைவிகம் ஆதி, பெனதிகம் என்னும்) மூன்று விதமான து;க்க ஸமூஹத் திற்கு, தனக்கு மேலில்லாத ஆகந்த,ரூபமான ஸுகமா யிருக்கையே லக்ஷ்ணமாக உடையதும், துன்பமற்றதும், முடிவற்றதுமான ப,கவத் ப்ராப்தியே மருந்தாக எண்ணப் படுகிறது.,]
12–116 ஐப் பார்க்கவும்
13-அநந்யசேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யா:। தஸ்யா5ஹம் ஸுலப,: பார்த்த, ! நித்யயுக்தஸ்ய யோ8,ந: ॥! –கீதை. 8-14,-[அர்ஜுனா! வேறொன்றிலும் மனத்தைச் செலுத்தாதவனாக, எவனொருவன் தினந்தோறும் எப்பொழுதும் என்னை நினைக்கிறானோ, என்னுடைய நித்ய யோக,த்தில் விருப்பமுள்ள யோகியாகிய அவனுக்கு நான் ஸுலபனாகிறேன்)
14-ப்ரதான ஷேத்ரஜ்ஞபதிர் குணேச –ஸ்வே 6-16.([ப்ரக்ருதிக்கும் ஜீவனுக்கும் ஸ்வாமி; கல்யாண குணங்களை உடையவன்.])
15-ஜ்ஞாஜ்ஜௌ தவா வஜா வீஸ நீ சௌ—ஸ்வே 1-9,([(பரமாத்மாவும் ஜீவனும்) ஸர்வஜ்ஞனாகவும், அஜ்ஞனாகவுமிருக்கிறார்கள்; ஈஸ்வரனாகவும், அநீஸ்வரனாகவும் இருக்கிறார்கள்)
16-தமீஸ் வராணாம் பரமம் மகேஸ்வரம் –ஸ்வே 6-7.([ஈஸ்வரர்களுக்கும் மேலான மஹேஸ்வரனான அவனை)
17-தாஸோஹம் வாஸுதே,வஸ்ய தேவதேவஸ்ய சார்ங்கிண சங்க, சக்ர கதா பாணேஸ் த்ரைலோக்யஸ்யைக சஷுஷ–புண்டரீகஸம் வாதம்; தாரத வாக்யம்[தேவதேவனும், ஸார்ங்க,மென்னும் வில்லை யுடையவனும், சங்கம், சக்ரம், கதை; இவைகளைக் கையிலே உடையவனும், மூவுலகிற்கும் ஓர் கண்ணா யிருப்பவனுமான ‘ வாஸு தேவனுக்கு நான் அடிமை.]
18-தாஸபூ,தாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந: | –ஹாரீ த ஸ்ம்ருதி; ஈஸ்வர ஸம்ஹிதை . சிவ வாக்யம் [பரமாத்மாவுக்கு, எல்லா ஆத்மாக்களும் இயற்கையாகவே அடிமைப் பட்டவர்களன்றோ
19-தாஸோ5ஹம் கோஸலேந்த்,ரஸ்ய ராமஸ்யா$க்லிஷ்டகர்மண: | ஹநுமாந் மத்ருஸைந்யாநாம் நிஹந்தா மாருதாத்மஜ: ॥ -ரா-ஸு 42.35.=[கோஸலதேஸத்துக்கு அதிபதியும், பெருங்காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பவனுமான ராமனுக்கு, ஸத்ரு ஸைன்யங்களை அழிப்பவனும், வாயுவின் புத்ரனும், ஹனுமான் என்னும் பெயரை உடையவனுமான நான் தாஸன்)
20-21-யஸ் யாத்மா சரீரம் –ப்.ருஹ 5-7-22,(எந்தப் பரமாத்மாவுக்கு ஆத்மா ஸரீரமோ-யஸ்யாக்ஷரம் ஸரீரம் -ஸுபால 7-[எவனுக்கு ஜீவன், ஸரீரமோ)
22-அந்த ப்ரவிஷ்டச் சாஸ்தா ஜ்நாநாம் சர்வாத்மா —யஜு, ஆர 3-11-21.(ஸர்வாந்தர்யாமியான புருஷோத்தமன் ஜனங்களை உள் நுழைந்தவனாய் நியமிக்கிறான்)
23-(பூ: ப்ராணிநஸ் ஸர்வ ஏவ கு,ஹாஸயஸ்ய அஹந்யமாநஸ்ய விகல்மஷஸ்ய–ஆபஸ்தம்ப ஸூத்ரம் 22.1[எல்லாப் பிராணிகளும், ஹ்ருதய குஹையில் ஸயனித்திருப்பவனும், அழியாதவனும், தோஷமற்றவனுமான பரமாத்மாவுக்கு இருப்பிடம்)
24-யாநி மூர்த்தாந்யமூர்த்தாநி யாந்யத்ராந்யத்ர வா க்வூத்। ஸந்தி வை வஸ்துஜாதாநி தாநி ஸர்வாணி தத்,வபு: || விபு, 1-22-86-[உருவமுள்ளவையாயும், உருவமற்றவையாயும், இங்கும் எங்கும் ஒரு சமயத்திலிருக்கும் வஸ்து ஸமூஹங்களெல்லாம்அந்தப் பரமாத்மாவுக்கு ஸரீரம்.)என்றும் –
25-யேந யேந ததா கச்ச,தி தேந தேந ஸஹ கச்சதி। தத் யத; தருணவத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் சராயா வா ஸத்வமநுக,ச்சே,த் ததா ப்ரகாரம் ॥ –, பரம ஸம்ஹிதை-[இளங் கன்றையுடைய பசு கன்றையும், கன்று பசுவைவும் (அல்லது குழந்தை தாயையும்), நிழல் பிராணியையும் எப்படிப் பின் தொடர்கின்றனவோ அப்படியே எப்படி எப்படிப் பரம புருஷன் செல்லுகிறானோ, அப்படி அப்படியே: (முக்தனும்) கூடப்போகிறான்)
26-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா விபச்சிதா –தை-ஆ 1-2,-(முக்தன் எல்லாக் கல்யாண குணங்களையும், ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட அனுப,விக்கிறான்
27-காமயே வைஷ்ணவத்வம் து சர்வ ஜன்ம ஸூ கேவலம் (ஜிதந்தே (1-13).
28-ப,வாம்ஸ்து ஸஹ வைதே,ஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே ॥ அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ்ச தே –ரா-அ 31-25, லக்ஷ்மண வாக்யம் [நீர் வைதேஹியுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும், தூங்கும் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.]
29-விஜ்ஞாந ஸாரதிர் யஸ்து மந: ப்ரக்ரஹவாந் நர: | ஸோத்வந: பாரமாப்நோதி தத், விஷ்ணோ: பரமம் பதம் ॥ -கடட 1-3-9.-[எவனொருவன் நல்ல ஞானத்தை ஸாரதியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ, அவன் ஸம்ஸாரத்திற்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறான்)
30-நிஸ்தரந்தி மநீஷிண–ஜிதந்தே (1-4).
31-ந ஹி மே ஜீவிதேநார்த்தேோ நைவார்த்தைர் ந ச பூஷணை: | வஸந்த்யா ராக்ஷஷீ மத்,யே விநா ராமம் மஹாரத,ம் ॥ –ரா ஸு 26-5– ஸீதாவாக்ய[மஹா ரதனான ராமனை விட்டு ராக்ஷ்ஸிகள் நடுவில் வசிக்கும் எனக்கு உயிரினால் ப்ரயோஜனமில்லை; பொருள்களினால் ப்ரயோஜனமில்லை; ஆபரணங்களால் ப்ரயோஜன மில்லை)–
32-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் –தை.ஆ 1,-([ப் ரஹ்மத்தை அறிபவன் (தியானிப்பவன்)மேலான பலனை (ப்ரஹ்மத்தை) அடைகிறான்)
33-ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய ––ப்ருஹ 6-5-6.([கேட்கத்தக்கதும், நினைக்கத்தக்கதுமான ஆத்மா தியானிக்கத்தக்கது; பார்க்கத்தக்கது.])
34-நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸருநேன
யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்—கட, 1-2-23.(இந்தப் பரமாத்மா (பக்தியற்றற ஸ்ரவணத்தினாலும், மனனத்தினாலும், தியானத்தினாலும் அடையத்தக்க வனல்லன். எவனை இப்பரமபுருஷன் வரிக்கிறனோ, அவனாலேயே அடையத்தக்கவன்; அவனுக்கு இந்தப் பரமாத்மா தன்னுடைய திவ்ய மங்க,ள விக்ரஹத்தை (ஸ்வரூபத்தை) காட்டுகிறான்)
35-பித்யதே ஹ்ருத யக் ரந்திஸ் சித் யந்தே சர்வ சம்சயா
ஷீ யந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே –முண்ட; 2-9.9,-(மேலானவர்களிலும் மேலானவனான அந்தப் பரமாத்மா பார்க்கப்பட்டவுடன், இவனுடைய (ராகம், த,வேஷம் முதலிய) ஹ்ருதய க்ரந்தி,கள் பிளக்கின்றன; எல்லா ஸம்மயங்களும் சிதறுகின்றன; கர்மங்களும் அழிகின்றன)
36-பக்த்யா த்வ நன்யா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப -(அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே! ஒரு பலனை எதிர்பாராத பக்தியினாலேயே இம் மாதிரியான நான், உண்மையாக அறிவதற்கும், பார்ப்பதற்கும், நுழைவதற்கும் தக்கவன்)ஸ்ரீ கீதை -11-54-
37-சமஸ் சர்வேஷூ பூதேஷு மத் பக்திம் லபதே பராம் -(ஸர்வ ப்ராணிகளிடமும் (பற்றற்றிருக்கும் விஷயத்தில்) ஸமமாயிருப்பவன் என்னிடம் மேலான பக்தியை அடை கிறான்)ஸ்ரீ கீதை -18-54-
38-யோ ப்,ரஹ்மாணம் வித,த,ாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை | தம் ஹ தேவமாத்மபு,த்,தி,ப்ரஸாத,ம் முமுஷூர் வை ஸரணமஹம் ப்ரபத்,யே ॥| -ஸ்வே 6-18.[எவன் பிரமனை முன் படைத்தானோ, எவன் வேத,ங்களை யும் அவனுக்கு உபதேஹித்தானோ, அப்படிப்பட்ட தேவனும், தன் விஷயமான ஞானத்தை ப்ரகாசிப்பிப்பவனுமான பரமபுருஷனே, மோக்ஷமடைய விரும்பும் நான் ஸரண மடைகிறேன்.])
39–ந்யாச மாஹூர் மநீஷிணோ ப்ரஹ்மாணம்—தை-நர-49,-(பெரியோர்கள் பரமாத்மாவை ந்யாஸமென்று சொல்லு கிருர்கள்)
40-ந்யாச இதி ப்ரஹ்மா -தை-நர-49,-(ந்யாஸமென்பது ப்,ரஹ்மம்)
41-தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்த மாஹூ—தை*நாஃ50,-(ஆகையால் ந்யாஸத்தை (ஸரணாக,தியை) இந்தத் தபஸ் ஸுக்களுள் மேலானதாகச் சொல்லுகிறார்கள்
42-தேவா வை யஜ்ஞாத் ருத்ரமந்தராயந் | ஸ ஆதித்யா நந்வாக்ரமத | தே த்,விதைவத்யாந் ப்ராபத்,யந்த | தாந் ந ப்ரதிப்ராயச்ச,ந்। தஸ்மாத;பி வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதிப்ரயச்ச,ந்தி ||[தேவர்கள் யஜ்ஞத்தில் ருத்ரனுக்கு ஹவிர்ப்பாகம் கொடுக்க மறுத்தார்கள்; ருத்ரன் தேவர்களைக் கொல்லத் தொடங்கினான்; அவர்கள் அஸ்விநீ தேவதைகளை ஸரணம் புகுந்தார்கள்; அஸ்விநீ தேவர்கள் அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை; ஆகையால் ஸரணமடைந்தவன் கொல்லத் தகுந்தவனாயிருந்தாலும் அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை)தேவா வை த்வஷ்டாரமஜிகாம்ஸந் ! ஸ பத்நீ: ப்ராபத்யத। தம் ந ப்ரதி ப்ராயச்ச,ந்। தஸ்மாதபி வத்யம் ப்ரபந்நம் ந ப்ரதப்ரயச்ச,ந்தி || –யஜுஃகாண்டம் 6-5–[தேவர்கள் (ஹவிர்ப் பாகம் கேட்ட) த்வஷ்டாவைக் கொல்ல விரும்பினார்கள்; அவன் தேவ பத்னிகளை ஸரண மடைந்தான்; அவர்கள் அவனைக் காட்டிக் கொடுக்க வில்லை; ஆகையால் ஸரணமடைந்தவன் கொல்லத் தகுந்தவனாயினும் அவனைக் காட்டிக் கொடுப்பதில்லை –
43-(ஸ ப்ராதும் சரணென காட் நிபீட்ய ரகு,நந்த;ந:। ஸீதாமுவாசாதியமா ராக,வஞ்ச மஹா வ்ரதம் ॥ ரா-அ 31-2,-[ரகு,குலத்தை உகப்பிப்பவனும், மிகுந்த கீர்த்தியை உடைய வனுமான அந்த லக்ஷ்மணன், தமையனின் திருவடிகளை நன்றாகப் பிடித்துக் கொண்டு ஸீதையையும், (ஆஸ்ரித ஸம் ரக்ஷணமான) பெரிய விரதத்தை யுடைய ராகவனையும் பார்த்துச் சொன்னான்.)
44-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |அபயம் ஸர்வபூ,தேப்,யோ ததாம் யேதத், வ்ரதம் மம।| -யு 18-33.[ஒரு தடவை ஸரணமடைந்தவன் பொருட்டும், “உனக்கு அடியேனாகிறேன்” என்று பிரார்த்திப்பவன் பொருட்டும், எல்லா ப்ராணிகளிடத்தினின்றும் அபயமளிக்கிறேன். இது எனக்கு விரதம்.])
45-ஸோ$ஹம் த்வாம் ஸரணமபாரமப்ரமேயம் ஸம்ப்ராப்த: பரமபதஹ் யதோ ந கிஞ்சித் –வி பு 5-23-47,[எவனைக் காட்டிலும் மேலான ப்ராப்ய மில்லையோ அப்படிப் பட்டவனும், எல்லை யற்றவனும், அளவிட முடியாதவனுமான உன்னை, இப்படிப்பட்ட நான் ஸரணமடைந்தேன்
46-தேவர்ஷி பூ,தாப்தந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜந்। ஸர்வாத்மநா யமஸ் ஸரணம் ஸரண்யம் நாராயணம் லோக கு,ரும் ப்ரபந்ந: ॥1 –பாகவதம் 11-5-41.[அரசனே! எவனொருவன், ஸரணமடையத் தகுந்தவனும், லோக கு,ருவுமான நாராயணனை எல்லா வித,த்திலும் ஸ்ரண மடைந்தானோ, அவன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், பூதங்களுக்கும், பந்துக்களுக்கும், பித்ருக்களுக்கும் அடிமை யல்லன்; கடன் பட்டவனுமல்லன்
47-மாமேவ யே ப்ரபத்,யந்தே மாயாமேதாம் தரந்தி தே -7-14-[எவர்கள் என்னையே ஸரணமடைகிறார்களோ அவர்கள் இந்த ப்ரக்ருதியைத் தாண்டுகிறார்கள்
48-தமேவ மாரணம் கச்சு, ஸர்வ பாவேந பாரத -18-62-[பரத குலத்துதித்தவனே | எல்லா விதத்திலும் அந்த பகவானையே ஸ்ரணமடை
49-ஸர்வதர்மாந் பரித்யஜ்ம மாமேகம் ரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்,யோ மோக்ஷமிஷ்யாமி மா ஸூ௪:॥ [–18-66-(பலஸாதனமான) எல்லா தர்மங்களையும், வாஸனையுடன் விட்டு, என்னை ஒருவனையே உபாயமாக அடை; நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்; துக்கிக்காதே)
50-தாவதார்த்திஸ் தத; வாஞ்சா தாவந் மோஹஸ் ததா அஸூகம் ! யாவந்ந யாதி ஸரணம் த்வாமஸேஷாக,நாஸநம் i –வி.பு 1.9-73-[எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கும் உன்னை எதுவரையில் ஸரணமடையவில்லையோ, அதுவரையிலேயே (செல்வத்தை இழந்ததினாலேற்படும்) வருத்தம்; அதுவரையிலேயே (செல்வம் வேண்டுமென்னும்) ஆசை; அதுவரை யிலேயே (ஆத்ம ப்ராப்தியின்மையினாலேற்படும்) மோஹம்; அதுவரையிலேயே (பகவானை அடையாததினாலேற்படும்) துன்பம். (ஆர்த்தன், அர்த்தரர்த்தி,த கைவல்ய நிஷ்டன் , பகவத் ப்ராப்தி காமன் என்னும் நான்கு விதமான அதிகாரிகளுக்கும் ப்ரபத்தியே பல ஸாதனம் என்று தாத்பர்யம்
51-கர்ணே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி[காதைத் தொட்டால் இடுப்பை” ௮சைக்கிறான்)
52-ஆசார்ய தேவோ பவ –-தை-சீஷா-11(ஆசார்யனை தெய்வமாக உடையவனாக ஆவாயாக)
53-நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய –-யஜு-ஆர. ப்ர-4.=(மந்த்ரத்தை ஸாக்ஷாத்கரித்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்)
54-ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம –ஆப-ஸு- 1-1-6,-(ஆசாரியனன்றோ வித்யையினால் சிஷ்யனைப் பிறப்பிக்கிறான்; அது மேலான ஜன்மம்)
55-மந்த்ரே தத்தேவதாயாஞ்ச தத மந்த்ரப்ரதே, கு;ரெள। த்ரிஷு ப,க்திஸ் ஸத் கார்யா ஸா ஹி ப்ரதம ஸாத,நம் ॥ –விஷ்ணு தத்வம் [மந்திரம், அதில் சொல்லப்படும் தேவதை, மந்த்ரோபஸதேம் செய்த ஆசாரியன் இம் மூவரிடத்திலும் எப்போதும் பக்தி செய்யவேண்டும் ; அதுவன்றோ (பல ஸித்தி,க்கு) முதல் உபாயம்.)
56-அபிவந்த்ய குளுநாதென் ஙிஷ்யதயத்மிநீரவீந் [சிஷ்யர்களுடைய புத்தியாகிய தாமரைக்கு ஸூர்யன் போன்றவர்களான ஆசாரியர்களை முதலில் நமஸ்கரித்து)இது மீமாம்ச காரிகை
57-யதா கருந் க.நித்ரேண நரோ வார்யதி,க,ச்ச,தி | ததர குருக;தாம் வித்,யாம் மாம்ரூஷாரதி கச்ச; தி ॥ மனு 2-218.[மனிதன் எப்படி மண்வெட்டியால் (பூமியை) வெட்டித் தண்ணீரை அடைகிறானோ, அப்படியே கு,ருவிடமிருக்கும் வித்யையை குருஸேவை செய்பவன் அடைகிறான்
58-நமோ பகவதே தஸ்மை வ்யாஸாயாமிததேஜஸே | யஸ்ய ப்ரஸாத;த் வக்ஷ்யாமி நாராயணகதரமிமாம் || –பார-ஆதி, 1-27.[எவருடைய அருளினால் இந்த நாராயண கதையைச் சொல்லுகிறேனோ, அளவற்ற தேஜஸ்ஸை யுடைய அந்த பகவான் வியாஸருக்கு நமஸ்காரம்)-
59-லெளகிகம் வைதிகம் வா அபி ததாத்,யாத்மிகமேவ ச 1 ஆததீத யதோ ஜ்ஞாநம் தம் பூர்வமபி,வாதயேத் || –மனு 2-117,-(உலக விஷயங்களைப் பற்றியாவது, வேதத்தைப் பற்றியாவது, ப்ரஹ்ம விஷயமாகவாவது எவரிடமிரு்நு ஞானத்தை அடைந்தானோ, அவரை முதலில் நமஸ்கரிக்க வேண்டும்)-
60-ப்ரதமமபி குரும் நாத மீடே –-ஸஹஸ்ரநாம பாஷ்யம்-(முதல் குருவான நாதமுனியையும் துதிக்கிறேன்)
61-அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -(நான் எனக்குமுரியேனல்லேன்; ப,கவானுக்கு அடியேனா கிறேன்’” என்று இம்மாதிரியாக மமகார மில்லாமையைத் தருவதால் நம: எனப்படுகிறது)
62-ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )
63-முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதத் யச்ச்,வேதத்,வீபவாஹிநாம்। நித்யாஞ்ஜலிபுடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதி,ந: ॥ –பார-சாந்தி 344-45-[ஸ்வேதத்,வீபவாஸிகளுக்கு எது லக்ஷ்ணமோ, அதுவே முக்தர்களுக்கும் லக்ஷணமாகும்; அதாவது: எப்போதும் அஞ்ஜலி செய்து கொண்டிருப்பார்கள் ; (அதனால்) ஆநந்திப்பார்கள்; வாயால் *நம:” என்றே சொல்லும் தன்மை யுடையவர்களா யிருப்பார்)
64-தஸ்ய யஜ்ஞ வராஹஸ்ய விஷ்ணோரமித தேஜஸ: |ப்ரணாமம் யே$பி குர்வந்தி தேஷாமபி நமோ நம:॥ –விஷ்ணுதர்மம்-90; யமவசனம் [யஜ்ஞ வராஹராகியவரும், அளவற்ற தேஜஸ்ஸை உடைய வருமான அந்த விஷ்ணுவுக்கு எவர்கள் ஒரு நமஸ்காரம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பலகால் நமஸ்காரம்
65-தேஷாம் ஸததயுக்தாநாம் ப,ஜதாம் ப்ரீதிபூர்வகம் | ததாமி புத்தி,யோகம் தம் யேந மாமுபயாந்தி தே॥| -கீதை 10-10.[என்னிடத்தில் எப்போதும் சேர்ந்திருப்பதை விரும்புபவர்களும், என்னை ப.ஜிப்பவர்களுமான அவர்களுக்கு, என்னை அடைவதற்கு ஸாதனமான அந்த புத்தி யோகத்தை அன்புடன் ௮ளிக்கிறேன்)
66-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மலமேகரூபம் | ஸந்த்,ருஸ்யதே வாப்யதி,கம்யதே வா தத் ஜ்ஞாநமஜ்ஞாநமதோந்யது,க்தம் ॥| -விஷ்ணு பு. 6 -5-87.[எந்த அறிவினால், தோஷமற்றதும், ஸூத்தமானதும், மிகவும் மலமற்றதும், ஒப்புயர்வற்றதுமான அந்தப் பரவஸ்து அறியப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ, அடையப்படுகிறதோ, அதுவே ஜ்ஞானம்; அதைக் காட்டிலும் வேறானது அஜ்ஞானம்)
67-தத் கர்ம யந்ந பூந்தாய ஸா வித்யா யா விமுக்தயே | ஆயாஸாயாபரம் கர்ம வித்,யாந்யா ஸில்பநைபுணம் || –வி.பு 1-19-41,-[எந்தக் கர்மம் பந்தத்திற்குக் காரணமல்லவோ அதுவே கர்மம்; எது முக்திக்குக் காரணமோ அதுவே வித்யை, மற்ற கர்மம் ஸ்ரமத்திற்கே. மற்ற வித்,யை செருப்புக்குத்தக் கற்றது போன்றது.)
68-(பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந்। ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்,ருஹாணி ச ॥ ஸர்வத,ர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ் ச ஸாக்ஷராந் | லோக விக்ராந்த சரணெள ஸரணம் தே$வ்ரஜம் விபோ ॥–விஹகேஹ்வர ஸம்ஹிதை [பூத;வானே ! தந்தையையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், உறவினரையும், நண்பர்களையும், ஆசாரியர்களையும், ரத்னங்களையும், தனதான்யங்களையும், வயல் களையும், வீடுகளையும், எல்லா உபாயங்களையும், கைவல்ய முள்ளிட்ட எல்லா ஆசைகளையும், வாஸனையுடன் விட்டு, திருவுலகளந்தருளின உன் திருவடிகளை ஸரணமடை கிறேன்.]
69-ஏநம் ஸர்வம் தத;பி,ஸமேதி யத்கஞ்சித் ப்ரஜாஸ் ஸாது, குர்வந்தி யஸ்தத் வேத, யத்ஸ வேத, ஸ மயை தது,க்த இதி –சாந்தோக்யம் 4-1-4-[மனிதர்கள் எந்தெந்த நல்ல காரியங்கள் செய்கிறார்களோ, அவை யெல்லாம் ரைக்வரிடம் பொருந்தி யிருக்கின் றன. எதை அவர் (ரைக்வர்) அறிந்திருக்கிறரோ அதையே எவனும் அறிகிறான். அப்படிப்பட்ட ரைக்வர் என்னால் இபபோது சொல்லப்பட்டார்)
70-யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம் விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி –-ஸ்ரீபாஷ்யம் 1-3-33-([உலகத்தில் அனுஷ்டி,க்கப்படும் எந்த நற்கருமமும், எல்லாச் சேதனர்களுடைய அறிவுமாகிய இவ்விரண்டும் எவருடைய ஜ்ஞானத்திலும், கர்மத்திலும் அடங்கியிருக்கின் றனவோ அவரே ரைக்வர் என்று (ஹம்ஸம்) சொல்லிற்று)
71-(ஸ த்வாஸக்தமதி: க்ருஷ்ணே தஸ்யமாநோ மஹோரகை;:। ந விவேதராத்மநோ காத்ரம் தத் ஸ்ம்ருத்யஹலாத,ஸுஸ்தி,த: ॥ -வி பு 1-17-99.[மஹா நாகங்களினால் கடிக்கப்படுபவனும், க்ருஷ்ணனிடத் தில் புததியைச் செலுத்தினவனுமான அந்த ப்ரஹ்லாதன், பகவானை நினைக்கையினாலுண்டான ஆனந்தத்தி னால் நிலை நின்றவனாய், தன்னுடைய ‘உடம்பை அறிய வில்லை)
72-பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -([பார்த்துக்கொண்டிருந்த போதும் பார்க்க வில்லை)என்கிறபடியே-தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை
73-ஸ்நேஹபூர்வமநுத்,யாநம் ப,க்திரித்யபி,த,யதே | பூஜ இத்யேஷ தாதுர்வை ஸேவாயாம் பரிகீர்த்தித: ॥ தஸ்மாத் ஸேவா புதை; ப்ரோக்தா ப,க்கி ஸப்,தே.ந பூயஷீ ॥ –லைங்க;புராணம் உத்தர பாகம்.[ஸ்நேஹத்தை முன்னிட்ட தியானம் பக்தியெனப்படுகிறது. ‘ப.ஜ’ என்கிற தாது (ஸேவை! என்னும் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் மேலான ஸேவையே பெரியோர்களால் பத்தி ஸப்,த,த்தினால் சொல்லப்படுகிறது.])
74-ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -([ஸ்வாமியிடத்தில் தாஸனுடைய ஸ்நேஹம் நிறைந்திறாக் கும் நிலைமை.])
75-வாஸூ தேவோ அஸி பூர்ண – (ஆறு குணங்களாலும் பூர்ணனான வாஸுதேவனாயிருக் கிறாய்)என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது-
76-நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை மஹாத்மநே—விஃபு 1-19.79. ப்ரஹ்லாத வாக்ய-என்றும் –([மஹாத்மாவான அவனுக்கு நமஸ்காரம்; அவனுக்கு நமஸ் காரம்; அவனுக்கு நமஸ்காரம்)
77-நமோ நமஸ்தேஸ்து ஸஹஸ்ர க்ருத்வ:புநஸ்ச பூூயோபி நமோ நமஸ்தே |நம: புரஸ்தாத;த, ப்ருஷ்ட்டதஸ்தே நமோஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ॥ கீதை 11.99,[உனக்கு ஆயிரந்தடவை நமஸ்காரம்; மறுபடியும் மறுபடியும் உனக்கு நமஸ்காரம்; எல்லாமாயிருப்பவனே! உனக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்; உனக்கு எல்லாவிடத்திலும் நமஸ்காரம்.]
78-அஹமஸ்யாவரோ ப்,ராதா குணைர் தாஸ்யமுபாக,த: –ரா-கி 4-12, லக்ஷ்மண வாக்யம் [நான் இவருடைய நினைவினால் (இவருக்குத்) தம்பி; (உண்மையில்) இவருடைய குணங்களால் (இவருக்கு) அடிமைப் பட்டவன்.]
79-ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-([அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான பிறப்பையும், சேஷ்டிதங்களையும் எவன் இப்படி உண்மையாக அறிகிறானோ, அவன் தேஹத்தை விட்டு மறு ஜன்மம் அடையான்; என்னை அடைகிறான்)
80-அஜாயமாநோ ப,ஹாதா விஜாயதே | தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநி –புருஷஸூக்தம் உத்தரானு -[பிறப்பற்றவனா யிருந்தும் பலபடியாகப் பிறக்கிறான் (பரம புருஷன்). அவனுடைய அவதாரத்தை தீரர்களே (அறிவில் மிக்கோரே) நன்கு அறிகிறார்கள்)
81-அஹத்வா ராவணம் ஸங்க்,யே ஸ புத்ர பல பாந்த,வம் | அயோத்,யாம் ந ப்ரவேக்ஷ்யாமி த்ரிபி,ஸ்தைர் ப்,ராத்ருபிஸ் ஸயே || -ராயு 19-21,-[பிள்ளைகளுடனும், ஸேனையுடனும், பந்துக்களுடனும் கூடிய ராவணனைச் சண்டையில் கொல்லாமல் அயோத்தியில் ப்ரவேசிக்கமாட்டேன். மூன்று தம்பிகளின் மீதும் ஆணையிடுகிறேன்)
82-யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -ரா-அ 97.8,=([பெருமையைத் தருபவனே! பரதனையும், உன்னையும், ஸத்ருக்னனை யுமில்லாமல் ஏதாவது எனக்கு ஸுக,முண் டாகுமானால், அதை அக்னி சாம்பலாக்கட்டும் என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன்
83-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஷீதே ஸ லக்ஷ்மணம் | ந து ப்ரதிஜ்ஞாம் ஸம்ஸ்ருத்ய ப்,ராஹ்மணேப்,யோ விஸேஷத: || -ரா.ஆ 10-19.-[நான் உயிரையும், லக்ஷ்மணனோடு கூட உன்னையும் விடுவேனே யொழிய செய்த ப்ரதிஜ்ஞையை விட மாட்டேன்) அதிலும், விஸேஷமாக ப்,ராஹ்மணர்களுக்குக் கொடுதத ப்ரதிஜ்ஞையை விடேன்])
84-(ப,ரதஸ்ய வச: குர்வந் யாசமாநஸ்ய ராக,வ। ஆத்மாநம் நாதிவர்த்தேதா: ஸத்ய த,ர்ம பராக்ரம ॥ ரா-அ 111-7. வஸிஷ்ட வாக்ய[ராக,வனே | ஸத்யமான தர்மத்தையும், பராக்ரமத்தையும் உடையவனே ! யாசிக்கும் பரதனுடைய வார்த்தையைச் செய்வதன் மூலம், உன்னுடைய ஸ்வரூபத்தை (ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை) மீறாமலிருப்பாயாக)
85- 209-ஐ பார்க்கவும்
86-(அவிஸ்தரமஸந்தி,க்,த,மவிலம்பி,தமத்,ருதம் | உரஸ்ஸ்தஹ் கண்டஆஹ் வாக்யம் வர்த்ததே மத்யமே ஸ்வரே ॥ [–ராகி 3-31-( இந்த ஹனுமானுடைய ) மார்பிலிருந்தும், தொண்டை யிலிருந்தும் வரும் வாக்யம் மத்,யம ஸ்வரத்திலும், விஸ்தார மின்றியும், ஸந்தேஹமின் றியும், காலதாமத மில்லாமலும், வேகமில்லாமலுமிருக்கிறது)
87-சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா —தை-ப்,ருகு,வல்லீ-9-(இது ப்,ருகு,விற்கு வருணனால் சொல்லப்பட்ட வித்யை; பரமபதத்தில் நிலை நிற்பது (இது)என்று பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
88-ச ஹோவாச வியாச பாராசர்ய -தைத்திரீய ஆரண்யகம் ப்ரஸ்நம் 1, அனு-(பராஸரரின் புத்திரரான அப்படிப்பட்ட வியாஸரன்றோ சொன்னார்)
89-ஆத்மா ஸூ ததோ அஷரஸ் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதே பர ப்ரவ்ருத்த்ய பசயௌ நாஸ்ய சைகஸ் யாகில ஜந்துஷூ -([ஆத்மாவானவன், கர்மம் முதலிய அஸாுத்,த,மற்றவன் விநாஸமற்றவன் ; பசி, தாஹம் முதலியவையற்றவன் ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களற்றவன்; ப்ரக்ருதியைக் காட்டி லும் மேலானவன் ; எல்லாப் பிராணிகளிலும், ஒரே மாதிரி (ஜ்ஞாநைகாகாரனாக) இருக்கும் இவனுக்கு அதிகமாவதும், குறைவதும் கிடையாது.])ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-71
90-91-வித்,யா விநய ஸம்பந்நே ப்,ராஹ்மணே க,வி ஹஸ்திநி | மாநி சைவ ஸ்வபாகே ௪ பண்டி,தாஸ் ஸம தர்ஸ்ரிந: || இஹைவ தைர்ஜிதஸ் ஸர்க்கேரா யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:। நிர்ததோஷம் ஹி ஸமம் ப்,ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்தி,தா: ॥[–கீதை 5-18& 19,-வித்,யை, அடக்கம் முதலியவைகளுடன் கூடிய ப்ராஹ் மணனிடமும், கேவல ப் ராஹ்மணனிடமும், பசுவிடமும், யானையிடமும், நாயிடமும், சண்டாளனிடமும், ஆத்மாவை உண்மையாய் அறிந்தவர்கள் ஸமதர்ஸிகளாக இருப்பார்கள். எவர்களுடைய மனமானது (இம்மாதிரியான) ஸம நிலைமையிலிருக்கிறதோ, அவர்களால் இங்கேயே ஸம் ஸாரம் ஜயிக்கப்பட்டது. ப்ரகருதி ஸம்ஸர்க்க,மற்றதும், ஸமமானதுமான ஆத்மவஸ்து வன்றோ ப்ரஹ்மம் (ப்,ரஹ்மத் திற்கு ஸமானமானது). ஆகையால் அவர்கள் ப்ரஹ்மத் திலேயே நிலை நிற்கிறார்கள்)
92-விகார ஜநநீமஜ்ஞாம் அஷ்டரூபாமஜாம் த்.ருவாம் [–மந்த்ரிகோபனிஷ-(பதினாறு) விகாரங்களை உண்டாக்குவதும், (ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம் ஐந்து தன்மாத்ரைகள் என்னும்) எட்டு ரூபத்தை உடையதும், ஞானமற்றதும், பிறப் பற்றதும், நிலையானதுமான ப்ரக்ருதியை)-
93-அக்ஷய்மம் நாந்யதாதா ரமமேயமஜரம் த்,ருவம்| ஸப்,த;ஸ்பர்ஸ விஹீநம் தத் ரூபாதி,பி,ரஸம்ஹிதம் || த்ரிகுணம் தஜ்ஜக,த்,யோநிரநாதி,ப்ரப, வாப்யயம் ||–வி-பு 1-2-20 & 21,-[(ப்ரக்ருதியானது) க்ஷயமற்றது; மற்றொரு அசித்தை ஆதாரமாகக் கொண்டிராதது; (தேஸகாலாதி,களால்) அளவற்றது;குறைவற்றது; நிலையானது; ஸப்த,ஸ்பர்ஸங்களற்றது; ரூபம் முதலியவை யற்றது ; ஸத்வ ரஜஸ் தமோ கு,ணங்களை உடையது ; தனக்குக் காரணத்தையும், பிறப்பையும், முடிவையுமற்ற அதுவே உலகிற்குக் காரணம்.])
94-பரமாத்மா ச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர விஷ்ணு நாமா ச வேதேஷூ வேதாந்தேஷூ ச கீயதே –வி.பு 6-4.40-([பரமாத்மாவே எல்லோருக்கும் ஆதாரமாகவும், மேலான ஈஸ்வரனாகவுமிருப்பவன். அவன் வேதங்களிலும், வேதாந்தங்களிலும் விஷ்ணுவென் ற பெயரை யுடையவனாகக் கீர்த்திக்கப் படுகிறான்)
95-பர பராணாம் பரம பரமாத்மாத்ம சம்ஸ்தித ரூப வரணாதி நிர்தேச விசேஷண விவர்ஜித சர்வத்ரா சௌ சமஸ்தஞ்ச வசத் யத்ரேதி வை யத ததஸ் ச வாஸூ தேவாதி வித்வத்பி பரிபட்யதே -வி-பு 1-2.10 & 12,-(மேலானவர்களைக் காட்டிலும் மேலானவனும், தன்னைக் காட்டிலும் உயர்ந்தவனற்றவனும், தனக்குத் தானே ஆதாரமாக இருப்பவனுமான பரமாதமா–ரூபம்,நிறம் முதலியவை,காமம் எனப்படும் (ப்ராக்ருதமான) விசேஷணங்களற்றவன்.இவன் அறிஞர்களால் வாஸுஃதேவனென்று படிக்கப்படுகிறான்)
96-ப்ரதாநஞ்ச புமாம்ச்சைவ சர்வ பூதாத்மா பூதா விஷ்ணு சக்த்யா மகா புத்தே வருதௌ சம்ச்ரய தரமிநௌ—விபு 2-7-29..(மஹா புத்,தியை யுடையவரே ! ஒன்றோடு ஓன்று சேர்ந் திருக்கும் ஸ்வபாவத்தை யுடைய ப்ரக்ருதியும், புருஷனும், எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவான விஷ்ணு ஸக்தியினால் வியாபிக்கப்பட்டிருக்கின்றன)
97-தத்ராபி ஸ –-யோகி நாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் –வி-பு1:6-38.(ஆத்மமாத்ரானுப,வரிஷ்டரான யோகிகளுக்கு அழிவற்ற ஸ்தானம்]
98-(ஸர்க்கஸ்ச ப்ரதிஸர்க்கஸ்ச வம்ஸ மந்வந்தராணி ச।வம்ஸாநுசரிதம் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் ॥! -நரஸிம்ஹ புராணம் 3-33-[ஸ்ருஷ்டி, ப்ரளயம், வம்ஸம், மன்வந்தரம், வம்ஸ சரித்ரம் ஆகிய இவ் வைந்து லக்ஷணங்களை யுமுடையது புராணமாகும்.)
99-தபந பவநயோர் ய: ப்ராப்தவாந் புத்ரப,ாவம் ஸதமக,க்குதபாலிர் வித்,யயா ஐந்மநா வா। -. போஜசம்பு-கிஷ்-10-[இந்திரனால் அடையாளம் செய்யப்பட்டவனும், ஸூர்யனுக்கும், வாயுவுக்கும், வித்,யையினாலும், ஜன்மத்தினாலும் புத்ரனா யிருக்கும் தன்மையை அடைந்தவனுமான ஹனுமான்…])
100-அப்ர வீச்ச ததா வாக்யம் ஜாதக்ரோதா விபீஷண அந்தரி ஷகதஸ் ஸ்ரீமான் ப்ராதரம் ராஷஸாதிபம் –யுத்த -16-17-([ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயையுடைய விபீஷணன் அப்போது மிகவும் கோபங்கொண்டவனாய், ஆகாயத்தில் கிளம்பி, ராக்ஷ்ஸர்களுக்கு அதியதியான தன் தமையனைக் குறித்துச் சில வார்த்தைகள் சொன்னான்)
101-பரமாபதமா பன்னோ மனஸா சிந்தயத் ஹரிம் ஸ து நாக வர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-47-(ஸ்லாக்,யமான ஆபத்தை அடைந்தவனும், கைங்கர்ய ஸ்ரீயை உடையவனும், நாராயணனையே மேலான கதியாகக் கொண்டவனுமான அந்த கஜேந்திராழ்வான் மனத்தி னாலே ஹரியை நினைத்தான்)
102-சர்வ பரியகரஸ் தஸ்ய ராம ஸ்யாபி சரீரத-லஷ்மனோ லஷ்மி சம்பன்னோ பஹி ப்ராண இவாபர -பால -18-28-(கைங்கர்ய லக்ஷ்மியை உடைய லக்ஷ்மணன், ராமனுக்கு ஸரீரத்தைக் காட்டிலும் எல்லாப் பிரியத்தையும் செய்பவனாகவும், வெளியிலிருக்கும் மற்றொரு ப்ராணன் போலவும் விளங்கினான்)
103-ஸ்லோக ரத்னம்– ஸ்லோகம் -60-
104-ஜிதந்தே ஸ்தோத்ரம் -1
105-ஏவமுக்த்வா5ர்ஜுநஸ் ஸங்க்,யே ரதேராபஸ்த, உபாவிஸத்। விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோக ஸம்விக்,நமாநஸ: ॥| -கீதை 1-47.[அர்ஜுனன், இம் மாதிரி சொல்லி விட்டு, சோகத்தினால் பீடிக்கப்பட்ட மனத்தை உடையவனாய், அம்புடன் கூடிய வில்லைக் கைவிட்டு, யுத்,த, களத்திலேயே ரத,த்தின் மேல் உட்கார்ந்தான்.])
106-யத; ரத்நாநி ஜலதேர ஸங்க்,யேயாநி புத்ரக | ததா குணா ஹ்யநந்தஸ்ய அஸங்க்,யேயா மஹாத்மந: ॥’ –மாத்ஸ்ய புராணம். வராஹ புராணம் 74–40-[குழந்தாய் | எப்படி ஸமுத்ரத்திலுள்ள ரத்னங்கள் கணக்ற்றவையோ, அம் மாதிரியே மஹாத்மாவான அநந்தனுடைய குணங்களும் அளவற்றவை.]
107-ஆரோக்யம் பராஸ்கராதி,ச்சே,த் த,நமிச்சே,த் ஹுதாமநாத் | ஈஸ்வராத் ஜ்ஞாநமந்விச்சே,த் மோக்ஷமிச்சே,ஜ்ஜநார்த்த, நாத் ॥| –மாத்ஸ்ய புராணம் 67-41-[ஸுர்யனிடமிருநங்து ஆரோக்யத்தை விரும்பக் கடவன் ; அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் ; சிவனிட மிருந்து அறிவை விரும்பக் கடவன். நாராயணனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்
108-இஷுக்ஷயாந் நிவர்த்தந்தே நாந்தரிக்ஷக்ஷி திஷயாத் | மதிக்ஷயாந் நிவர்த்தந்தே ந கோவிந்த,குணக்ஷயாத் |[பாணங்களில்லாமல் திரும்புகிருர்களே யொழிய, பூமியும் ஆகாயமும் அழிந்துவிட்டதாலல்ல. ( ௮ம் மாதிரியே ). பு,த்திக் குறைவினால் திரும்பு)அளவுடையாரும் தாம் தாம் ஜ்ஞான சக்த்யாதிகள் அளவும் புகழ்ந்தார்கள் அத்தனை – உமக்கும் அவ்வளவு புகழ்கைக்கு விரோதம் இல்லை
109-ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தெளதி தச் சித்தம் யத்தத,ர்ப்பிதம் | தாவேவ ச கரெள ஸ்லாக்,யெள யெள தத் பூஜாகரெள கரெள ॥ –விஷ்ணுதர்ம-1-[எது ஹரியைத் துதிக்கிறதோ, அதுவே நாக்கு, எது அவனிடம் ஸமர்ப்பிக்கப் பட்டதோ அதுவே நெஞ்சு. எவை அவனுக்குப் பூஜை செய்கின்றனவோ அக் கைகளே ஸ்லாக்,யமானவை
110-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்,த, த்வத் ப்ரஸாதாந் மயாச்யுத | ஸ்திதோ5ஸ்மி க,தஸந்தே,ஹ: கரிஷ்யே வசநம் தவ॥ –கீதை 18-73,-[அச்சுதனே | (விபரீத ஜ்ஞானமாகிய) மோஹம் நசித்தது. உன்னருளால் உண்மை அறிவு என்னால் அடையப் பட்டது. ஸந்தேஹம் நஸிக்கப் பெற்றவனாயிருக்கிறேன். உன் வசனத்தின்படியே (யுத்,த,ம்) செய்கிறேன்)
111-யந்நாயம் ப,க,வாந் ப்,ரஹ்மா ஜாநாதி பரமம் பத;ம் | தந்நதா: ஸ்ம ஜகத்,தாம தவ ஸர்வகதாச்யுத ॥ -வி பு 1-9-59,[அச்யுதனே ! ஸர்வ வ்யாபியே | மேலான ப்ராப்யமான எதை பகுவானான பிரமனும் அறியானோ, உலகிற் கெல்லாம் இருப்பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்)
112-தவாந்தராத்மா மம ௪ யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஞிதா: | ஸர்வேஷாம் ஸாஷி பூதோ3ஸெள ந க்,ராஹ்ய: கேநசிந் க்சித் ॥ [–பாரதம் – மோக்ஷ தர்மம் 179-4( பிரமனாகிய ) எனக்கும், ( ருத்ரனாகிய ) உனக்கும், ( தேஹத்தை உடைத்தாயிருப்பதால் ) *தேஹீ’ என்ற பெயரையுடைய மற்றவர்களுக்கும் அந்தராத்மா நாராயணனே. எல்லாருக்கும் ஸாஷியாயிருக்கிறார் அவர், எவராலும் எக்காலத்தீலும் அறியத்தக்கவரல்லர் அவர் )
113-தத், விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய: । திவீவ சக்ஷுராததம் | தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே | விஷ்ணோர் யத் பரமம் பதம்॥–ருக் வேதம் அஷ்டக 1-2-7, ஸாமவேதம் 3-18-2-4--[விஷ்ணுவினுடைய அந்தப் பரமபத,த்தை நித்ய ஸுரிகள் எப்போதும் பார்க்கிறார்கள். அப் பரமபத,ம், எல்லாவற்றையும் பிரகாசிப்பிப்பவனும், ஆகாயத்திலிருப்பவனும் உலகிற் கெல்லாம் கண்ணாயிருப்பவனுமான ஸுர்யன் போல் ப்ராகாஸமுள்ளது. விஷ்ணுவினுடைய யாதொரு பரமபத, மிருக்கிறதோ, அதில் மேதாவிகளும், துதிப்பதையே ஸ்வப,௱வமாக உடையவர்களும், ஜாக ரூகர்களாயிருப்பவர்களுமான நித்யஸுரிகள் பிரகாஸிக்கின்றனர் –
114–தேவ! ப்ரபந்நார்த்தி ஹர! ப்ரஸாதம் குரு கேஸவ! | அவலோகநததாநேந பூயோ மாம் பாலயாச்யுத! ||–வி-பு 1-20-16. ப்ரஹ்லாதவாக்ய [தேவனே ! ஸரணமடைந்தவர்களின் துக்கத்தைப் போக்கடிப்பவனே ! கேஸவனே ! அருள் புரிவாயாக, அச்சுதனே! மறுபடியும் கடாக்ஷிப்பதன் மூலம் என்னைக் காப் பாற்றுவாயாக –
115-(ததைகத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோ$ஸ்ருஜத | –சாந் 6-2-3,[அந்தப் பரப்ரஹ்மம் (நானே) பலவாக ஆகக்கடவேன்” என்று ஸங்கல்பித்தது; அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்டி செய்தது)
116-(ரஸோ வை ஸ:। ரஸம் ஹ்யேவாயம் லப்,த்,வாநந்த, பவதி। கோ ஹ்யேவாந்யாத் க:. ப்ராண்யாத்| யதே;ஷ ஆகாம ஆநந்தே ந ஸ்யாத் ஏஷ ஹ்யேவாநந்த –தைத்திரியம் ஆதந்த வல்லி–7–ரஸ (ஆநந்த) ஸ்வரூபனன்றோ அந்தப் பரம புருஷன். ரஸ ஸ்வரூபனான அவனை அடைந்து (இந்த ஜீவன் ) ஆநந்த,த்தை உடையவனாகிறான். பிரகாசிப்பவனும், ஆநந்த,ஸ்வரூபனுமான இப் பரம புருஷன் இல்லாவிடில் எவன் இவ்வுலகிலுள்ள ஸுகத்தையோ, மோக்ஷ ஸுகத்தையோ அடைய முடியும் ? (ஆகையால்) இவனே (ஜீவனை) ஆநந்தி,ப்பிக்கிறான் )என்னக் கடவது இறே
117-ந ததஹஸ்தி விநா யத் ஸ்மாந்மயா பூ,தம் சராசரம் –கீதை 10-39,[அசையக்கூடியவையும், அசையக் கூடாதவையுமான வஸ்துக்களில், நானில்லாமல் இருக்கக்கூடிய வஸ்து கிடையாது
118-ஸ ஏகாகீ ந ரமேத —மஹோபனிஷ-([(ப்ரளய காலத்தில்) ஒருவராயிருந்த அந்த நாராயணன் ஆனந்தத்தை அடையவில்லை)
119-உபாத,த்தே ஸத்தாஸ்தி,திநியமநாத்,யைஸ் சித,சிதெள ஸ்வமுத்,இஸ்ய ஸரீமாநிதி வததி வாகெ,ளபநிஷதீ, | உபாயோபேயத்வே ததி, தவ தத்த்வம் ந து கரணெள அதஸ்த்வாம் ஸ்ீரங்கேஸய ஸரணமவ்யாஜமப,லம் || –ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2:-88-[ஹே ஸ்ரீரங்கநாதனே ! “ஸ்ரீமந்நாராயணன் ஸ்ருஷ்டி, ஸ்தி,தி, நியமனம் முதலிய காரியங்களால் சேதனாசேதனங்களைத் தனக்காக ஸ்வீகரிக்கிறான்” என்று உபனிஷத், வாக்யமானது சொல்லுகிறது. ஆகையால், இவ்விஷயத்தில் உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கு இயல்வு; செயற்கையல்ல. ஆகையால் உன்னை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன்
120-கிமத்ர சித்ரம் த.ர்மஜ்ஞ! லோகநாத, ! ஸுகாவஹ !| யத் த்வமார்யம் ப்ரபாஷேதரா: ஸத்த்வவாந் ஸத்பதே, ஸ்தி,த: ॥--0. ரா யு 18-36-தர்மங்களை அறிந்தவரே | லோக நாதரே |! ஸாுகத்தைத் தருபவரே |. ஸத்வ கு,ணத்தை யுடையவரும், நல்ல மார்க் கத்தில் நிற்பவருமான நீர் அழகிய சொல்லைச் சொன்னீர் என்பதில் என்ன ஆச்சரியம்)
121-காரணம் து த்யேய–அதர்வஸிகை-(காரண வஸ்துவே தியானிக்கத்தக்கது)என்கையாலே சர்வ சமாஸ்ரயணீயன்
122-ஸ ஸ்வராட் பவதி -சாந்தோக்யம் 7-25-2-(அந்த முக்தாத்மா கர்மத்திற்கு வசப்படாதவனாக ஆகிறான்
123-ய ஆத்மா ௮பஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விஸோகோ விஜிக,த்ஸோ$பிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸத்யஸங்கல்பஸ் ஸோ$ந்வேஷ்டவ்ய:–சாந்தோக்யம் 8-7-1,[எந்த ஆத்மாவானவன், பாபமற்றவனாகவும், கிழத்தனமற்றவனாகவும், ம்ருத்யுவற்றவனாகவும், மோகமற்றவனாகவும், பசியற்றவனாகவும், தாகமற்றவனாகவும், வீண்போகாத இஷ்டத்தையும், ஸங்கல்பத்தையும் உடையவனாகவுமிருக்கிறானோ அவன் தேடத்தக்கவன்.)
124-(ய: புத்ர: பிதரம் த்,வேஷ்டி தம் வித்,யாத,ந்யரேதஸம் | யோ விஷ்ணும் ஸததம் த்,வேஷ்டி தம்வித்,யாதந்த்யரேதஸம் ॥| -ப்ஏஹ்மாண்ட, புராணம்-[எந்தப் புத்திரன் பிதாவை துவேஷிக்கிறானோ அவனை மற்றொருவனுடைய ரேதஸ்ஸுக்குப் பிறந்தவனாக அறியலாம்; எவனொருவன் விஷ்ணுவை எப்போதும் த்வேஷிக் கிறானோ அவனைச் சண்டாளனுக்குப் பிறந்தவனாக அறியலாம்)
125-விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த,வேத்யபி। ப்,ராஹ்மண்யம் தஸ்ய ந ப,வேத் தஸ்யோத்பத்திர் நிரூப்யதாம் || — பாத்ம புராணம்-எல்லா ஸாஸ்த்ரங்களின் அர்த்தத்தை அறிந்தவனான போதிலும் எவன் விஷ்ணுப,க்தி யில்லாதவனோ அவனுக்கு ப்.ராஹ்மண்யம் கிடையாது. அவனுடைய உத்பத்தியை நிரூபிக்கலாம்)
126-ஹிரண்ய கர்ப்பச் சம வர்த்த தாக்ரே பூ தஸ்ய ஜாத பதி ரேக ஆஸீத்—-தைத்திரிய ஸம்ஹிதை 4-2-8-முதலில் பூ,தங்களுக்கெல்லாம் ஒரே பதியான ஹிரண்ய கர்ப்பன் (ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுட் கொண்ட பகவான்) இருந்தான்
127-ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்து –ஸ்வேதாஸ்வதரம்-3-2-[ருத்ரன் ஒருவனே; இரண்டாவதாக (ஸஹாயமாக) ஒருவருமில்லை.-
128-ந கிரிந்த்,ர த்வது,த்தரோ ந ஜ்யாயோ ௮ஸ்தி வ்ருத்ரஹந் [–ருக் அஷ்டகம்-3.6-19–இந்திரனே | உன்னைக் காட்டிலும் மேலானவனில்லை ; வ்ருத்ரனைக் கொன்றவனே (உன்னைக் காட்டிலும்) பெரிய வனில்லை.]
129-தஸ்ய மத்,யே வஹ்நிஸிகர அணியோர்த்,வா வ்யவஸ்தி,த:। நீலதோயதமமத்,யஸ்த;ா வித்,யுல்லேகேவ பாஸ்வரா | நீவார ஸூகவத் தந்வீ பீதாபாஸ்யாத் தநூபமா| தஸ்யாஸ் ஸிகராயா மத்,யே பரமாத்மா வ்யவஸ்து,த: | ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ்ஸேந்த்,ரஸ் ஸோக்ஷர:பரமஸ் ஸ்வராட் ॥|[அந்த இருதய கமலத்தின் நடுவில், சிறியதும் மேல் நோக்கினதுமான அக்னி ஸிகை, –தைத்-நாராயண வல்லி-11-(பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்,ரஹம்) இருக்கிறது. ( அது) நீலமேகத்தை உட்கொண்ட மின்னல் போல் பிரகாஸமுள்ளதாகவும், நெல் நுனிபோல் சிறிதாகவும், மஞ்சள் நிறமுள்ளதாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கிறது. அந்த ஸிகையின் நடுவில் பரமாத்மா விளங்குகிறான். அவனே பிரமனுக்கும் அந்தர்யாமி; அவனே ஸிவனுக்கும் அந்தர்யாமி; அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி; (பிரமன் முதலியவர்களைக் காட்டிலும்) மேலானவனும், கர்மத்திற்கு வசப்படாதவனும், அழிவற்றவனுமான முக்தாத்மாவுக்கும் அவனே அந்தர்யாமி)முக்தர்கள் கர்ம வஸ்யர்கள் என்றதே-நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி –
130-(நாராயண பரா வேதா தேவா நாராயணாங்க,ஜா: | நாராயணபரா லோகா நாராயணபரா மகா: ॥ -பாகவதம் 2-5-15.[வேதங்கள் நாராயணனைச் சொல்லுபவை ; தேவர்கள் நாராயணனுடைய அங்க,த்திலிருந்து உண்டானவர்கள் ; நாராயணனைப் பற்றியிருப்பவை உலகங்கள் ; யாகங்கள் நாராயணனை ஆராதி,ப்பவை)
131-க,ந்த,த்,வாராம் து,ராத,ர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம்। ஈஸ்வரீம் ஸர்வபூ,தாநாம் தாமீஹோபஹ்வயே ஸ்ரியம் ॥ -ஸ்ரீஸூக்தம்-9-[கீர்த்தியைத் தருபவளும், ( து;ஷ்டர்களால் ) அடைய முடியாதவளும், எப்போ தும் ஸம்ருத்,தி,யை. உடையவளும், எல்லா ஸம்பத்துகளையும் உடையவளும், எல்லா பூ,தங் களுக்கும் ஈங்வரியுமான ஸ்ரீதேவியை இங்கு அழைக் கிறேன்.])–
132-அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்நீ –-நீனா ஸூக்தம் தைத்திரீய ஸம்ஹிதை 4 -4-12-திருவுக்கும் திருவாகிய செல்வா –பெரிய திருமொழி -7-7-1- ([இந்த உலகிற்கெல்லாம் ஸ்வாமினியாகவும், விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவளும்,)
133-மகான் ப்ரபுர்வை புருஷ சத்த்வஸ் யைஷ ப்ரவர்த்தக – ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் –க புண்டரீக நயன -ஸ்வே. உப. -3-12-([மஹாபுருஷனே ! (மோக்ஷ) பலத்தைக் கொடுக்கக்கூடியவன். இவனே ஸூத்த,ஸத்வத்திற்கு ப்ரவர்த்தகன்-
134-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதி,த்யவர்ணம் தமஸ; பரஸ்தாத்। தமேவம் வித்,வாநம்ருத இஹ பவதி -… நாந்ய: பந்தள வித் மதே5யநாய ॥ [–புருஷஸூக்தம் உத்தரானுவாகம்–(வேத,புருஷனாகிய) நான் (ஸ்வரூப ரூப கு,ண விபூ,திகளில்) பெரியவனும், ஸுர்யன் போல் ப்ரகாஸிப்பவனும், ப்ரக் ருதிக்கு அப்பாற்பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன். அவனை இம் மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனக ஆகிறான். மோக்ஷத்திற்கு ( அவனைத் தவிர ) வேறு வழி கிடையாது )
135-ய ஏஷோ$ந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்,ருஸ்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹிரண்யகேஸ ஆப்ரணகராத் ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யத கப்யாஸம் புண்ட, ரீகமேவமக்ஷிணீ॥–சாந்தோக்யம் 1-6 & 7-।[ஸுர்யனுக்கு நடுவில் தங்கம் போல் அழகிய உருவை யுடைய எந்த இந்தப் பரம புருஷன் காணப்படுகிறானோ, அவன் ஸுவர்ணம் போன்று அழகான மீசையையும், கேஸங்களையும், எல்லா அவயவங்களையும் உடையவன். அவனுக்கு ஸுர்யனால் மலரும் தாமரை போன்ற இரு கண்கள் உள.])
136-ததஸ் ஸமுத் க்ஷிப்ய தராம் ஸ்வத;ம்ஷ்ட்ரயா மஹா வராஹ: ஸ்புட பத்மலோசந: |ரஸாதலாதுத் பல பத்ர ஸந்நிப,: ஸமுத்ததோ நீல இவாசலோ மஹாந் ॥ –விபு 1-4-26,[மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்களை உடையவரும், நீலோத்பலமலரின் இதழ் போன்ற நிறத்தை யுடையவருமான மஹா வராஹ ஸ்வரூபியான பகவான் தன்னுடைய தந்தத்தால் பூதேவியை ரஸாதலத்திலிருந்து எடுத்துக் கொண்டு பெரிய நீல மலை போல் கிளம்பினார்) –
137-யஸ்மாத் ஷரமதீ தோஹம்-இத்ராப்ய-அதோ அஸ்மி லோகே வேதே ச பிரதித புருஷோத்தமா -ஸ்ரீ கீதை -15-38-(நான் ஞானத்தில் ஏற்றக் குறைவுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதிக்ரமித்திருப்பதாலும், ஞானத்தில் ஏற்றக் குறைவுகளற்ற . முக்த புருஷனைக் காட்டிலும் மேலானவனா யிருப்பதாலும், ஸ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும் புருஷோத்தம னென்று பிரஸித்தி,பெற்றிருக்கிறேன்)
138-ஏதாவாநஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ்ச பூருஷ: |பாதேரஸ்ய விஸ்வா பூ,தாநி த்ரிபாதஃஸ்யாம்ருதம் திவி ॥ –புருஷஸூக்த-13–[இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது. பரமபுருஷன் இதைக்காட்டிலும் மேலானவன், எல்லா உலகங்களும் இவனுடைய ((விபூ,தியில்) கால் பாகம்; பரமபதத்தில் இவனுடைய (விபூ,தியில்) அழிவற்றதான முக்கால் பாக, மிருக்கிறது)
139-யஸ்யாயுதாயுதாம்மாம்மே விஸ்வமுக்திரியம் ஸ்தி,தா |பரப்,ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமாமஸ்தமவ்யயம் || -வி-பு 1-9:53–[பரப்,ரஹ்ம ஸ்வரூபியான எவனுடைய பல்லாயிரத்தில் ஒரு பாகத்தில் உலகமாகிற ஸக்தி நிலைகிற்கிறதோ, குறை வற்றவனான அவனை வணங்குகிறோம்-
140-மேரோரிவாணுர் யஸ்யை தத் ப்,ரஹ்:மாண்ட,மக,லம் முநே [முனிவரே ! இந்த ப்ரஹ்மாண்ட,ம் முழுவதும் எவனுக்கு, மேருவுக்கு அணுவைப் போலாகிறதோ)இத்யாதி பிரமாணங்கள்-அவனே சர்வ வியாபகன்-ப்ரஹ்மாதிகள் இவனுடைய ஏகதேசத்தில் அடங்கி உள்ளார்கள் என்பதை பறை சாற்றும்
141-ஸ்ரீ கீதையில் விஸ்வரூப அத்தியாயத்தில் (விஷ்டப் யாஹமித,ம் க்ருத்ஸ்நமேகாம்மேநஸ்தி,தோ ஜகத்[நான் இவ்வுலகையெல்லாம் (எனது) ஒரு அம்ஸத்தினால் தரித்துக் கொண்டிருக்கிறேன்)அர்ஜுனன் வியந்து நின்றானே
142-ததோ ஹ்ருதேஷூ வேதேஷூ ப்ரஹ்மாணம் காசமஅவிசத் – ததோ வசனமீஸாநம் ப்ராஹ வேதைர் விநாக்ருத ப்ரஹ்மா வேதா மே பரமம் சஷூ வேதா மே பரமம் தனம் வேதா மே பரமம் தாம வேதா மே ப்ரஹ்ம சோத்தமம் மம வேதா ஹ்ருதாஸ் சர்வே தானவாப்யாம் பலாதித்த அந்த காரா இமே ஜாதா லோகா வேதைர் விவர்ஜிதா வேதா த்ருதே ஹி கிம் குர்யாம் லோகன் வை ஸ்ரஷ்டுமுத்யத
அஹோ பத மஹத் துக்கம் வேத நாச நஜம் மம ப்ராப்தம் து நோதி ஹ்ருதயம் மாம் து சோகாமயஸ் த்வயம்-ஜக்ராஹ வேதா ந கிலான் ரஸா தல கதான் ஹரி ப்ராதாச்ச ப்ரஹ்மனே ராஜன் ததாஸ் ஸ்வாம் ப்ரக்ருதிம் யயௌ ததஸ் தயோர் வதே நாஸூ வேதோ பஹரனேந ச- சோகாப நயனம் சக்ரே ப்ரஹ்மன புருஷோத்தம —பார. ஸாந்தி 357-31.-இத்யாதி([பிறகு, வேதங்கள் அபஹரிக்கப்பட்டவுடன், பிரமனை அஜ்ஞானம் பீடித்தது. அதன் பின் வேதங்களை இழந்த அவன ஈசனைக் குறித்துப் (பின்வருமாறு) பேசினான். பிரமன்; *வேத,ங்களே எனக்கு உயர்ந்த கண்; வேதங் களே எனக்கு மேலான தனம்; மறைகளே எனக்கு மேலான தேஜஸ்; வேதங்களே எனக்கு உயர்ந்த ப்ரஹ்மம். அஸாுரர்களுடைய பலத்தினால் இங்கிருந்து என்னுடைய எல்லா வேத,ங்களும் அபஹரிக்கப் பட்டன. வேத,ங்களற்ற இவ்வுலகங்களெல்லாம் இரு ளடைந்தன. லோகங்களை ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்த நான் வேத,மில்லாமல் என் செய்வேன் ? ஐயோ ! வேதங்கள் நஸித்ததினால் எனக்குப் பெரிய துக்கும் வந்து சேர்ந்தது; என்னை அடைந்த இந்த மோக மாகிய வியாதி (என்) மனத்தைத் துன்புறுத்துகிறது”…… ஹரியானவர் ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களையும் எடுத்துப் பிரமனிடம் கொடுத்தார். அரசனே! பிறகு (அப்பிரமன்) தன் இயற்கை நிலையை அடைந்தனன். இப்படி (மது,கைடப,ர்களென்னும்) அவ் விருவரையும் கொன்றதாலும், வேதத்தை மீட்டுக் கொணர்ந்ததாலும், புருஷோத்தமன் பிரமனுடைய ஸோகத்தைப் போக்கடித் தான்.])
143-ஸ்ரீ மாத்ச்யே-தேவீம் ப்ரதி ருத்ர -தத கரோத பரீதேன சம்ரக்தனய நேன ச வாமாங்குட்ட நாகாக் ரேன சின்னம் தஸ்ய சிரோ மயா–ப்ரஹ்மா -யசமாத நபரா தஸ்ய சின்னம் த்வயா மம தஸ்மாச்சா பசமா விஸ்ட கபாலீ தவம் பவிஷ்யசி ருத்ர -ப்ரஹ்ம ஹாஸ் ஸ் குலிதோ பூத்வா சரண தீர்த்தானி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்ச்சயம்-தத்ர நாராயணஸ் ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித்த ததச்தேன ஸ்வகம் பார்ச்வம் நகாக்ரேன விதாரிதம் மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தச்ய நிஸ் ஸ்ருதா விஷ்ணு பிரசாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் சஹஸ்ரதா ஸ் புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் யதா –மாத்ஸ்யபுராணம்-182–இத்யாதி-([தேவியைக் குறித்து ருத்ரன்: “பிறகு கோபத்தை யுடையவனும், சிவந்த கண்களை உடையவனுமான என்னால், அப்பிரமனுடைய தலை இடதுகைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் கிள்ளப்பட்டது’. பிரமன்:– “அபராத, மற்ற என்னுடைய தலை, உன்னால் அறுக்கப்பட்டபடியால் நீ பாபத்தை அடைந்து கபாலியாக (கபாலத்துடன் கூடிய வனாக) ஆவாய்.” ருத்ஜன்:- தேவி! ப்,ரஹ்மஹத்தி செய்த வனாயும் கலங்கினவனாகவும் பூமியில் தீர்த்தங்களைச் சுற்றிக் கொண்டிருந்த நான் அதற்குப் பின் ஹிமாசல மலைக்குச் சென்றேன். அங்கு ஸ்ரீமந் நாராயணன் என்னால் பிச்சைக்காக யாசிக்கப்பட்டான். அதன் பின் அவனால் தன் (தே,ஹத்தில்) ஒரு பாகம் நகத்தின் நுனியால் கீறப் பட்டது. அதிலிருந்து பெரிதாக வெள்ளமிடும் ரத்த தாரை பெருகியது. …… அழகிற் சிறந்தவளே! விஷ்ணுவினுடைய அருளினால் அக் கபாலம் ஆயிரக் கணக்கான பல துண்டுகளாக வெடித்து, கனவில் கிடைத்த பணம்போல் போயிற்று)
144-யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புநஸ் த்ரை லோகய தாத்ருத்வம் ப்ராப்தவாநிதி ஸூ ச்ரும—ஸப_பர்வம் 14.8-([தாமரையில் பிறந்த நான்முகன் ஆயிரங்கோடி யுகங்கள் விஷ்ணுவை ஆராதித்து மறுபடியும் மூவுலகிற்கும் பதியா யிருக்கும் தன்மையை அடைந்தானென்று கேள்விப்படு கிறோம்)
145-ப்ரஹ்மா தயஸ் ஸூ ராஸ் சர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவச்ய பிரசாத்த –(-நரரஸிம்ஹ புராண-[பிரமன் முதலிய எல்லா தேவர்களும் முன் விஷ்ணுவை ஆராதித்து, தங்கள் தங்கள் பதவிகளைக் கேஸவனுடைய அருளாலே பெற்றார்கள்.]
146-ஏவமேஷாஸ் ஸூ ராணாம் ச ஸூ ராணாஞ்சாபி சர்வச பயா பயங்கர கிருஷ்ணஸ் சர்வ லோகேஸ்வரபிரபு –ஸபா பர்வம்.([இம் மாதிரியாக (நமக்கு) ஸ்வாமியும், எல்லா உலகங் களுக்கும் ஈஸ்வரனுமான இந்த க்ருஷ்ணன் அஸூரர்களுக்கும் தேவர்களுக்கும் எக் காலத்திலும் (முறையே) பயத்தையும், அபயத்தையும் அளிப்பவன் .)
147-த்ரவீபூ தஸ் ததா தரமோ ஹரி பக்த்யா மஹா முனே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரா பக்த்யா பாத் யார்க்யாதி பிரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவ நாரத்தம் ஜடா மத்யே யோகயோ அஸ்மீத்யவ தாரணாத்
வர்ஷா யுதாந்யத பஹூன் ந முமோச ததா ஹர—ஈஸ்வர ஸம்ஹிதை; பிரமன் வாக்யம்.-([ரிஷி ஸ்ரேஷ்ட,ரே! (பகவான் திருவுகைளந்தருளின) அச்சமயம், ஹரியினிடம் பக்தியினால் தர்மம் ஜலமாயிற்று. தர்மமாகிய அந்த ஜலத்தை எடுத்து, ஜகந்நாத,னுடைய ஸந்தோஷத்திற்காக (அவனுடைய) திருவடி யானது (என்னால்) மேலான பத்தியுடன் விளக்கப்பட்டது; பாத்யம், அர்க்,யம் முதலியவைகளாலும் பூஜிக்கப்பட்டது. விழுந்த அந்த ஜலத்தைப் பார்த்து, நான் (பரிஸூத்தப் படுத்தத்) தகுந்தவனாயிருக்கிறேன்’ என்று நிஸ்சயித்து, சிவன் தன்னைப் பரிஸூத்,தப்படுத்திக் கொள்வதற்காக ஜடையின் நடுவில் தலையால் தாங்கினான். பிறகு, பல பதினாயிரக்கணக்கான வருஷங்கள், உருத்திரன் அப்படியே(அதை) விடவில்லை)
148-ஸ தேவ சோமயே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்விதீயம் –சரந்-உப. 6.2.1-(குழக்தாய்! (நாம ரூபங்களுடன் காணப்படும்) இந்த உலகம் ப்ரளயகாலத்தில் (நாம ரூபங்களில்லாமையால்) ஒன்றாகவும், (தன்னைப் போல் வேறொன்றில்லாததால்) இரண்டற்றதாகவுமிருந்த “ஸத்” எனப்படும் ப்,ரஹ்மமாகவே இருந்தது)
149-தம பரே தேவ -ஏகி பவதி –-ஸுபாலோபனிஷத்-2-([“தமஸ்” எனப்படும் மூல ப்ரக்ருதி பரமாத்மாவுடன் ஒடுங்குகிறது.])
150-ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீநேஷூ நஷ்டே லோகே சராசரே ஆபூத சம்ப்லவே ப்ராப்நே ப்ரலீநே ப்ரக்ருதௌ மஹான் ஏகஸ் திஷ்டதி விஸ்வாத்மா ஸ து நாராயண பிரபு –ஸாந்திபர்வம். 210-24,-([பிரமன் .’முதலியவர்களெல்லாம் லயமடைந்து, சராசரமான “உலகெல்லாம் நஸித்து, பஞ்ச பூதங்களும் லயமடைந்து, மஹத் தத்வமானது மூல ப்ரக்ருதியிஸ் லயமடை யும்போது ஸர்வாந்தர்யாமியான ஒருவனே இருக்கிறான். அவனே ஸர்வ ஸ்வாமியான நாராயணன்)
151--ந ஹி பாலான சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம் ஸ்தி தௌ ஸ்திதம் மகாப்ராஜ்ஞ பவத் யன்யச்ய கஸ்யசித் –([மஹாபு,த்,திமானே! ரக்ஷ்ணத்தில் நிலைநிற்கும் ஸர்வேஸ்வரனான ஹரியைத் தவிர வேறு எவனுக்கும் ரக்ஷிக்க ஸாமர்த்யம் கிடையாதன்றோ)ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-21
152-ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே | ஸமர்த்தேரா த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் ॥|-பரம ஸம்ஹிதை [செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதிலும், ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும் மைர்த்தனாயிருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை)
153-154—மஹா பாராதே மார்க்கண்டேய சமாக்யானே-ஸ்ருஜதஸ் தஸ்ய தேவஸ்ய பத்மம் ஸூரிய சமப்ரதம் நா பேர் வினிஸ் ஸ்ருதம் தஸ்ய தத் ரோத் பன்ன பிதா மஹா ஸூ பர்ண வைகுண்ட சமவாதே-–யத் தத் பத்ம பூத் பூர்வம் தத்ர ப்ரஹ்மா வ்யாஜாயத ப்ரஹ்மனாஸ் சாபி சம்பூதஸ் சிவா இதய வதார்ய தாம் சிவாத் ஸ்கந்தாஸ் சம்பபூவா ஏதத் சிருஷ்டி சதுஷ்டயம் –மஹாபாரத-([அந்த தேவன் ஸ்ருஷ்டிக்கும் போது, ஸூர்யனை ஒத்த ஒளியை உடைய ஒரு தாமரை அவனுடைய உந்தியிலிருந்து வெளிப்பட்டது; அதில் நான்முகன் உண்டானான்–பகவானுடைய உந்தியிலிருந்து) யாதொரு தாமரை முன் உண்டாயிற்றோ அதில் பிரமன் பிறந்தான். பிரமனிடமிருந்தே சிவன் பிறந்தானென்று அறியத்தக்கது)
155-ஸங்கைஸ் ஸுராணாம் திவி பூ,தலஸ்தைஸ் ததா மநுஷ்யைர் ககநே ச கே,சரை: | ஸ்துத: க்ரமாந் ய: ப்ரககார ஸர்வதா மமாஸ்து மாங்கஃல்ய விவ்ருத்த,யே ஹரி: || -விஷ்ணுதர்மம் ,-மங்கள்ய ஸ்தவம்-[ஸ்வர்க்க,த்தில் தேவ ஸமூஹங்களாலும், அப்படியே பூ,மி ப்ர தேஸ்த்திலிருக்கும் மனுஷ்யர்களாலும், ஆகாயத்தில் ஆகாம ஸஞ்சாரிகளாலும் துதிக்கப்பட்டவனாய், எந்த பகவான் திருவடிகளை வைத்தருளினானோ, (திரிவிக்ரமாவ தாரம் செய்த) அந்த ஹரி எனக்கு எப்போதும் மங்களங்களின் வ்ருத்தியின் பொருட்டு ஆகட்டும்)
156-சந்திக்தே கலு நியாய ப்ரவர்த்ததே –-([ஸந்தே,ஹத்திற்கு இடமுள்ள விஷயத்திலன்றோ ந்யாயம் ப்ரவர்த்திக்கும் (செல்லுபடி யாகும்)
157-ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா ஐந்மநி ஐந்மநி। மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்யத,மாம் க,திம்॥ [அர்ஜுனா ஆஸாுரஸ்வபாவமுள்ள ஜன்மத்தை அடைந்து, ஜன்மந் தோறும் மூடரர்களாய், என்னை அடையாமலே, அதிலும் கீழான கதிக்குப் போகிறார்கள்.])ஸ்ரீ கீதை -16-20-
158-ந பூ,த ஸங்க,ஸம்ஸ்தாநோ தே,ஹோஃஸ்ய பரமாத்மந: | [இந்தப் பரமாத்மாவினுடைய திருமேனி பஞ்ச பூ,தங்களு டைய சேர்க்கையால் உண்டானதன்று-
159-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸ மஜ்ஜாஸ்த்தி, ஸம்ப,வா | -வராஹபுராணம் 14-41-[அவனுக்கு, மாம்ஸம், மஜ்ஜை, எலும்பு இவைகளாலுண்டான ப்ரக்ருதி ஸம்பந்த முள்ள உடம்பு கிடையாது)
160-தம் த்வா க்,ருணாமி தவஸ மதவீயாந் ச ஷயந்தமஸ்ய ரஜஸ: பராகே [-ருக்-அஷ்டக 5-6-24-12-இந்த ரஜோ குணத்தை யுடைய மூலப்ரக்ருதிக்கு மேலான பரமபத,த்தில் எழுந்தருளியிருக்கும் தனி வீரரான அப் படிப்பட்ட உம்மை ஸக்தியற்ற அடியேன் துதிக்கிறேன்-
161-ஸ்வஸத்தா தாரகம் ஸத்த்வம் மிஸ்ர ஸத்த்வாத் விலக்ஷணம் –பாஞ்சராத்ர-[தன்னுடைய ஸத்தையினாலேயே (பிறருக்கு) தாரகமானதும், ரஜஸ் தமோ குணங்களோடு சேர்ந்திருக்கும் ஸத்வத்தைக் காட்டிலும் வேறுப்பட்டதுமான ஸத்வம்)
162-(௮க்நே: ஸிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷ” ப்ரகீர்த்யதே। ராஜஸேஷ ச மாஹாத்ம்யமதிகம் ப்,ரஹ்மணோ விது; |! ஸாத்த்விகேஷ்வத, கல்பேஷு மாஹாத்ம்யமதிகம் ஹரே: | தேஷ்வேவ யோக,ஸம்ஷித்,த. க,மிஷ்யந்தி பராங்கதிம் ॥–மாத்ஸ்ய புராணம் 53-63-[அக்னியினுடையவும், சிவனுடையவும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்படுகிறது. ராஜஸ கல்பங்களில் பிரமனுடைய பெருமை அதிகமாகச் (சொல்லப்படுவதாக) அறிகிறார்கள். ஸாத்விக கல்பங்களில் ஹரியின் பெருமை அதிகமாகச் சொல்லப்படுகிறது, அவைகளிலேயே யோக; ஸித்,தி, அடைந்தவர்கள் மேலான கதியை அடைகிறார்கள்-(கல்பம்–பிரமனுடைய தினம்)
163-மஹாத்மா நஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்-ஸ்ரீ பகவத்கீதை-9-13-(அர்ஜுனா! தேவ ஸ்வபாவத்துடன் கூடிய மஹாத்மாக்களோவெனில், ஸகல பூ,தங்களுக்கும் காரணனாகவும், குறைவற்றவனாகவுமிருக்கும் என்னை அறிந்து வேறெதிலும் மனம் செலுத்தாதவர்களாய், (என்னை) உபாஸிக்கிறார்கள்)
164-(அப்,ரவீத் த்ரித,ஸஸ்ரேஷ்ட்டாந் ராமோ தர்ம ப்ருதாம் வர: | ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஸரதரத்மஜம் ॥ –ரா யு 120-11.[நான் என்னை மனுஷ்யனாகவும், தயரதன் பிள்ளை ராமனாகவும் நினைக்கிறேன்”
165-நாஹம் தே,வோ ந க,ந்த,ர்வோ ந யக்ஷோ நச தராநவ:।அஹம் வோ பாந்த,வோ ஜாதோ நைதச்சிந்த்யமிதோ$ந்யதரா ॥[நான் தே,வனல்லன்; க;ந்தருவனல்லன்; யக்ஷ்னல்லன்; அஸுரனுமல்லன்; நான் உங்களுக்கு உறவினனாகப் பிறந் திருக்கிறேன். என் பிறப்பு இதைத் தவிர வேறுவிதமாக (உங்களால்) நினைக்கத் தக்கதல்ல)
166-அண்டாநாந்து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராண்யயுதாநி ச। ஈத்ருஸாநாம் ததர தத்ர கோடிகோடியதாநி ச ॥[*-வி-பு 2-7-27.அந்த ப்ரக்ருதியில் இம் மாதிரியான பல கோடி நூறாயிரம் அண்டங்கள் இருக்கின்றன என்பது ஸாரார்த்தம்
167-(ஹிரண்மயே பரே லோகே விரஜம் ப்,ரஹ்ம நிஷ்களம் | தச்சு ப்ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ் தத், யதாத்ம விதோவிது: ॥ –முண்ட;கோபனிஷத் 2-2-10-[பொன் மயமான மேலான உலகத்தில், ரஜோ குணமற்றதும் அவயவங்களில்லாததுமான ப்ரஹ்மமிருக்கிறது. அது பரிஸூத்த,மானது. சோதிகளுக்கெல்லாம் சோதியா யிருக்கும் அதைப் பரமாத்மஜ்ஞானிகள் ௮றிகிறார்கள்)
168-யோ அ௮ஸ்யாத் யக்ஷ: பரமே வ்யோமந் |ஸோ அங்க, வேத, யதி, வா ந வேத,-தைத்திரீயப்,ராஹ்மணம் 2-8-9-6- [எவனொருவன் இவ் வுலகத்திற்கு அதிபதியாய், பரமபத,த் தில் (எழுந்தருளி யிருக்கிறானோ), அவனே (தன் பெருமையை) அறிவானோ, அறியானோ)
169-தே ஹ நாகம் மஹிமாநஸ் ஸ சந்தே யத்ர பூர்வே ஸாத்,யாஸ் ஸந்தி தேவா:–69. புருஷஸூக்தம்- 1-18-[யாதொரு பரம பத,த்தில் ஸாத்,யர்கள் எனப்படும் தேவர்கள் இருக்கிறார்களோ, அந்தப் பரமபத,த்தை அவர்கள் மஹிமை யுடையவர்களாய் அடைகிறார்கள்
170-அத்யர்க்காநல$,ப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரப,யா ராஜந்! துஷ்ப்ரேக்ஷம் தே,வதாநவை: |… தத்ர கத்வா புநர் நேமம் லோகமாயாந்தி பாரத॥–ஆரண்யபர்வம் 136-18 & 23 [மஹாத்மாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்தானம் ஸுர்யனுடையவும், அக்னியுடையவும் ஒளியை விஞ்சியது. அரசனே! அது தன்னுடைய ஒளியினாலேயே தேவர்களாலும், அஸாரர்களாலும் காண அரியது. பரதவம்மத்தில் உதித்தவனே ! அங்கு போய் மறுபடியும் இவ்வுலகுக்குத திரும்பி வருவதில்லை)
171-ஸ பரஸ் ஸர்வ ஸக்தீநாம் ப்,ரஹ்மணஸ் ஸமநந்தரம் | மூர்த்தம் ப்,ரஹ்ம மஹா பாக, ஸர்வ ப்,ரஹ்ம மயோ ஹரி: ॥|[–விஃபு 1-22.63–பகவான் (இவனுடைய உருவமான ஸம்ஸாரி ஜீவன், முக்தன், திவ்யமங்கள விக்ரஹம் எனப்படும்) எல்லா ஸக்திகளைக் காட்டிலும் மேலானவன். “ப்ரஹ்மம்” என்று சொல்லப்படும் ப,க,வானுடைய திருமேனி விஷ்ணுவுக்கு அந்தரங்கமானது. மஹா பாக்,யவானே! ப்ரஹ்மமென்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாயிருப்பவன் ஹரி.]
172-சாந்தாநந்தமஹாவிபூ,தி பரமம் யத் ப்,ரஹ்ம ரூபம் ஹரே: மூர்த்தம் ப்,ரஹ்ம ததோ 5பி தத்ப்ரியதரம் ரூபம் யத,த்யத்ஃபு,தம் | யாந்யந்யாநி யதா ஸூக,ம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாந்யாஹு: ஸ்வைரநுரூபரூபவிப,வைர் காடோபகூடடாநி தே॥–சது:ல்லோகி-4- [தோஷங்களற்றதும், அளவற்றதும், பெரிதான உபய விபூ,திகளை உடையதும், மேலானதும், ப்ரஹ்ம ஸப்,த,த்தி னால் சொல்லப்படுவதுமான ஹரியினுடைய ஸ்வரூபம் யாதொன்று உண்டோ, அந்த ஸ்வரூபத்தையும் விட அவனுக்கு மிகவும் பிரியமானதும், மிகவும் அற்புதமான தும், “உருவமுள்ள ப்,ரஹ்மம்’என்று சொல்லப்படுவதுமான, எம் பெருமானுடைய திஃவ்ய மங்கள விக்ரஹம் யாதொன்று உண்டோ, திருவுள்ளமுகந்தபடி விளையாடுகிற அந்த ஸர்வேஸ்வரனுடைய மற்ற திருவுருவங்கள் யாவையோ, அவை எல்லாவற்றையும் உமக்கே அஸாதாரணமானவையும், தகுந்தவையுமான ஸ்வரூப ரூப விஸேஷங்களாலே நன்றாக அணைக்கப் பட்டிருப்பவையாகச் சொல்லுகிறாள்)
173-ப்.ரஹ்மா தக்ஷாதவ: காலஸ் ததை,வாகி,லஜந்தலவ: | விபூ,தயோ ஹரேரேதா ஜக,தஸ் ஸ்ருஷ்டி ஹேதவ: ॥ -வி-பு 1-22.31.[பிரமனும், தக்ஷன் முதலிய ப்ரஜாபதிகளும், காலமும், அம் மாதிரியே எல்லா ஜந்துக்களும் உலகை ஸ்ருஷ்டிப்ப தற்குக் காரணமாயிருக்கும் ஹரியின் ஸரீரங்கள்
174-யத்ஞ்சித் ஸ்ருஜ்யதே யேந ஸத்த்வ ஜாதேந வை த்ஸிஜ। தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூ,தெள தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு: ॥ -வி-பு 1-22-38.[ப்ராஹ்மண | ஒரு ப்ராணியால் யாதொன்று ஸ்ருஷ்டிக்கப் படுகிறதோ, ஸ்ருஷ்டிக்கப்படும் அதை ஸ்ருஷ்டிக்கும் விஷயத்தில் (ஸ்ருஷ்டி செய்யும்) அவை யெல்லாம் ஹரியினுடைய ஸரீரமாகின் றன)
175-ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்யேசாநஸ் ஸர்வஸ்யாது, பதி: ‘–ப்ருஹதாரண்யகம் 6-4-22, [எல்லாவற்றையும் தன் வத்தில் நடத்துபவன்; எல்லாருக்கும் ஈஸ்வரன்; எல்லாருக்கும் அதி,பதி.]
176-ஸஸுராஸுரக,ந்த,ர்வம் ஸயக்ஷோரக,ராக்ஷ்ஸம் |ஜகத் வஸே வர்த்ததேத,ம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || [–ஸஹஸ்ரநாமாத்யாய-தேவர், அஸுரர், கூந்த ர்வர்களோடு கூடியதும், யக்ஷர், நாகர், ராக்ஷ்ஸர்களுடன் சேர்ந்ததும், அசையக் கூடியதும், அசையக் கூடாததும் சேர்ந்ததுமான இந்த உலகம் கிருஷ்ணனுடைய வஸத்திலிருக்கிறது)
177-(இமெள ஸ்ம முநிஸார்தூ,ல! கிங்கரெள ஸமுபஸ்தி,தெள।| ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை ஸமாஸநம் கரவாவ இம் | [-ரா-பா- 31-4,முநி ஸ்ரேஷ்ட,ரே ! நாங்களிருவரும் ( தேவாீருக்குக் ) கைங்கர்யம் செய்பவர்களாக அருகில் இருக்கிறோம், (தேவரீருடைய) இஷ்டப்படி கட்டளை யிட வேண்டும்; (தேவரீருடைய) எந்தக் கட்டளையை நாங்கள் செய்யவேண்டும்)
178-ஆஜ்ஞாபய மஹா பாஹோ! ப்ரூஹி யத்தே விவக்ஷிதம் | கரிஷ்யாமி ஹி தத் ஸர்வம் யத்த்வம் வக்ஷ்யஸி பாரத ॥–பாரதம்-|நீண்ட கைகளை உடையவனே | நீ சொல்ல விரும்பியதைச் சொல்; கட்டளையிடு. தர்ம புத்தீரனே! நீ சொல்லுவது எதுவோ அது முழுவதும் நான் செய்கிறேன்
179-ஸ்வயமேவ ஹரிர் வவரே விபர பாதாவநே ஜநம்-பாரதம்-[ஹரியானவர், ப்ராஹ்மணர்களுடைய திருவடியை விளக்குவதைத் தாமாகவே ஸ்வீகரித்தார்)
180-அநந்யாத,நத்வம் தவ கில ஜகுர் வைதிக: பராத,நம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே।| உபாலம்போ அயம் போ ஸ்ரயதி ப,த ஸார்வஜ்ஞ்யமபி தே யதோ தோஷம் ப,க்தேஷ்விஹ வரத, நைவாகலயஸி॥ –வரதராஜஸ்தவம்-20-[வரதனே! வேத,வாக்கியங்கள் உனக்குப் பிறர்க்கு வஸப் பட்டிராமையாகிய ஸ்வாதந்த்ரியத்தைப் பேசியுள்ளன; நாங்களோ வெனில் அடியவர்களுக்கு ஆட்பட்டவனான.. உன்னைப் பரதந்த்ரனாகவே நினைக்கிறோம். இம் மாதிரியான நிந்தை, உன்னுடைய ஸர்வஜ்ஞத்வத்தையும் பற்றுகிறது; ஆஸ்சர்யம் ! ஏனெனில்; இவ் வுலகிலுள்ள பக்தர்களிடத் தில் நீ குற்றத்தைச் சிறிதும் பார்க்கிறா யில்லை யன்றோ)-
181-ப்ரியவாக், தராநமீலஸ்ச வதாந்ய: பரிரேத்தித: [இனிமையாகப் பேசுபவனும், கொடையாளியும் “வதாந்யன்’ என்று சொல்லப்படுகிறான்
182-ய ஆத்மதா பலதா:-யஜு-காடகம் 7-5-36. [எந்தப் பரமபுருஷன், தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவிக்கத்தகுந்த மநோ பலத்தையும் கொடுக்கிறான்)
183-அத; மத் யமகக்ஷ்யாயாம் ஸமாக,ச்சத் ஸுஹ்ருஜ் ஜநை: | ஸ ஸர்வாநர்த்திநோ த்,ருஷ்ட்வா ஸமேத்ய ப்ரதிநந்த்,ய ச ॥-ரா-௮ 16-27. [அந்த ஸ்ரீராமன் யாசிப்பவர்களைக் கண்டு, (அவர்களை) எதிர் கொண்டு ஆநந்தப் படுத்திப் பிறகு நடுக்கட்டில் நண்பர்களுடன் சேர்ந்தார்
184-(உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்-கீதை 7-18.[இவர்கள் எல்லாரும் உதாரமானவர்களே; ஜ்ஞாநியோ எனக்கே ஆத்மா (தாரகன்) என்று என் ஸித்,தாந்தம்)
185-ஜிதந்தே ஸ்தோத்ரம் (1-5)-
186-187-(கோந்வஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கஸ்ச வீர்யவாந்।… நாரத;– ..இக்ஷ்வாகு வம்ஸ ப்ரப,வோ ராமோ நாம குணாகர: |[வால்மிகி:– “இப்போது இவ்வுலகில் எவன் குணவானா யிருக்கிறான்? எவன் வீர்யவானாயிருக்கிறான்?…… ”நாரதரர்: இக்ஷ்வாகு வம்ஸத்தில் பிறந்தவனான ராமனென்பவன் குணங்களுக்கெல்லாம் இருப்பிடமா யிருப்பவன்)(பபூவ குணவத்தர:, ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ம வதார்த்தி,பி; | அர்த்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந: ||[-ரா-பரா 1-2 & 8,-கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவனும், பழமையானவனுமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் பிறந்தான்; (அப்படி அவதாரம் செய்த) அந்த: ராம பிரானே (தன் பராவஸ்தை,யைக் காட்டிலும்) குணத்தில் சிறந்தவனானான்)
188-(யஜ்ஜாதயோ யாத்,ருமோ யத் ஸ்வvவ: பாதச்சாயாம் ஸம்ஸ்ரீதோ யோ$பி கோஅபி । தஜ்ஜாதீயஸ் தாத்,ருஸஸ் தத்ஸ்வபாவ: ஸ்லிஷ்யத் யேநம் ஸுந்த,ரோ வத்ஸலத்வாத்--ஸுந்தர பாஹுஸ்தவம்-30-[தன் திருவடி நிழலில் ஒதுங்கினவன் எவனாயிருந்தாலும், அவன் எந்த ஜாதியை உடையவனாயிருக்கிறானோ, எந்த ஆசாரத்தை உடையவனோ, எந்த குணங்களை உடையவனோ, அந்த ஜாதியையும், அந்த ஆசாரத்தையும், அந்த குணங்களையும் உடையவனாய், அவனிடம் வாத்ஸல்யத்தினால் அவனுடன் ஸுந்தரராஜனாகிய பகவான் சேருகிறார்.]
189-(தத்,வை ததாஸ்து கதமோ5யமஹோ ஸ்வபாவோ யாவாந் யதாவித கு,ணோ பஜதே பவந்தம்। தாவாம்ஸ்தத;வித,குணஸ் தததீந வ்ருத்தி: ஸம்ஸ்லிஷ்யஹி த்வமிஹ தேந ஸமாந த,ர்மா।॥ ஸ்ரீவைகுண்ட ஸ்த–66-[முன் சொன்னது அப்படியே இருக்கட்டும், இந்த ஸ்வ பாவம் எவ்வளவு ஆஸ்சர்யமானது | (அதாவது:–) தேவரிரை எவனொருவன் எம்மாதிரியான ஸ்வரூபத்தையும், குணத்தையும் உடையவனாய் உம்மிடம் பத்தி செய்கிறானோ, அவனோடு அம் மாதிரியான ஸ்வரூபத்தையும்,குணங்களையும் உடையவனாயும், அவனுக்கு வஸப்பட்ட எல்லா வ்யாபாரங்களையும் உடையவனாகவும், அவனோடொத்த ஆசாரத்தை உடையவனாகவும் இங்கேயே நீ சேர்கிறாய்)
190-ஸர்வேஷாமேவ மெளசாநாம் அர்த்த மெளசம் பரம் ஸ்ம்ருதம் | யோரர்த்தே, ஸூசிஸ் ஸ ஹி ஸூதிர் ந ம்ருத்வாரி ஸூசி: ஸூசி: || 1மநுஸ்-5-106-[எல்லா ஸூத்திகளுக்குள்ளும், பொருள் விஷயத்தில் ஸூத்,தனாயிருக்கையே மேலானதாக எண்ணப்படுகிறது; பொருள் விஷயத்தில் எவன் ஸூத்,த,னாயிருக்கிறானோ, அவனே ஸாத்,தன். மண்ணாலும், தண்ணீராலும் மட்டும் ஸூத்தி செய்து கொள்ளுபவன் ஸூத்தனல்லன்)
191-பாவநஸ் ஸர்வலோகாநாம் த்வமேவ ரகு,நந்த;ந -ரா.உத். 82-9-[ரகுநந்தனா! நீயே எல்லா உலகங்களையும் பரிஸூத்,த,ப் படுத்துபவன்)
192-(ப.க்திரஷ்டவிதரா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சே,5பி வர்த்ததே | ஸ விப்ரேந்த்,ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதிஸ் ஸ ச பண்டி,த:।| மயா பூஜ்யஸ் ஸதா சாஸெள மத்,ப,க்த: ஸம்வபசோ$பி ய:। தஸ்மை தேயம் ததோ க்,ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம் ॥ காருட புராணம் 219-6-9-[இம் மாதிரியான எட்டு விதமான பக்தியானது எந்த மிலேச்சனிடமும் இருக்கிறதோ, அவனே (பகவானை) மனனம் செய்யும் பிராஹ்மண ஸ்ரேஷ்டடன்; அவனே கைங்கர்ய லக்ஷ்மியை உடையவன்; அவனே ஸந்யாஸி; அவனே பண்டிதன்; சண்டராளனா யிருந்த போதிலும் எவனொருவன் என் ப,க்தனோ அவன் என்னுடன் எப்போதும் பூஜிக்கத் தக்கவன். அவனுக்கு (ஜ்ஞானத்தைக்) கொடுக்கலாம்; அவனிடமிருந்து (ஜ்ஞானத்தைக்) கொள்ளலாம்; என்னைப் போல் அவனும் பூஜிக்கத்தக்கவன்)
193-நைவ தம்ஸாந் ந மஸகாந் ந கீடாந் ந ஸரீஸ்ருபாந் | ராகவோஃபநயேத் காத்ராத் த்வத், க,தே நாந்தராத்மநா ॥ -ரா-ஸு 96-42,[உன்னிடம் மனம் லயித்திருப்பதால், ராக,வன் ஈக்களையும், கொசுக்களையும், புழுக்களையும், பாம்புகளையுங் கூட உடம்பிலிருந்து தள்ளுவதில்லை)
194-(சிரம் ஜீவதி வைதே,ஹீ யதி, மாஸம் த,ரிஷ்யதி। ந ஜீவேயம் க்ஷணமபி விநா தாமஸி தேக்ஷணாம் | -ராஸு 66.10,[ஸீதை ஒரு மாதம் தரித்திருப்பாளாகில், வெகுகாலம் * பிழைத்திருந்தவளாகிறாள். கறுத்த கண்ணை உடைய அவளை விட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்திருக்க மாட்டேன்.])
195-அவக்ராஹ்யார்ணவம் ஸ்வப்ஸ்யே ஸெளமித்ரே ! ப,வதா விநா | கத,ஞ்சித் ப்ரஜ்வலந் காம: …’ ஸ மாம் ஸுப்தம் ஜலே த,ஹேத்॥ -ரா-யு 5-9.[லக்ஷ்மணா! (உன்னைப் பார்ப்பதால் ஸீதையின் நினைவு வருகிறபடியால்) உன்னை விட்டுவிட்டு ஸமுத்ரத்தில் இறங்கித் தூங்கப் போகிறேன். மிகவும் ஜ்வலிக்கும் அந்தக் காமாக்னியானது ஜலத்தில் தூங்கும் என்னைக் கஷ்டப் பட்டே தஹிக்கும்)
196-வ்யசநேஷூ மனுஷ்யாணாம்– ப்ருஸம் பவதி துக்கத: | உத்ஸவேஷு-ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி | [-ரா-அ 2-40.-(ராமன்) மனுஷ்யர்களுடைய துக்கங்களில், (அவர்களைக் காட்டிலும) அதி,கமாக துன்புறுகிறான். (அவர்களுடைய) எல்லா உத்ஸவங்களிலும தந்தையைப் போல் ஆனந்தப் படுகிறான்)
197-(தேஷாம் ஜ்ஞாநீ நித்ய யுக்த: ஏக ப,க்திர் விஸிஷ்யதே | ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ$த்யர்த்த,மஹம் ஸ ச மம ப்ரிய:।| -கீதை 1-17.-[(என்னுடன்) எப்போதும் சேர்ந்திருப்பவனும், என்னிடம் மட்டும் அன்பு. செய்பவனுமான ஜ்ஞானி அந்த நால்வருள் மேலானவன், நான் ஜ்ஞானிக்கு மிகவும் பிரியனன்றோ. (அப்படியே) அவனும் எனக்குப் பிரியமானவன்.)
198-(இயம் ஸா யத்க்ருதே ராமஸ் சதுர்ப்பி,: பரிதப்யதே। காருண்யே நாந்ரு ஸம்ஸ்யேந ஸோகேந மத,நேந ச॥ ஸ்த்ரீ ப்ரணஷ்டேதி காருண்யா தாஸ்ரிதேத். யாந்ரும்ஸ்யத: | பத்நீ நஷ்டேதி ஸோகேந ப்ரியேதி மத,நேந ச-–ரா-ஸு 15.49 & 50. ஹநுமான் வாக்யம்-[எவளுக்காக ஸ்ரீராமபிரான் கருணை, இரக்கம், சோகம், காமம் என்னும் நான்கினாலும் வருந்துகிறாரோ, அந்த ஸீதை இவளே. (ஸ்ரீராமபிரான்) *ஒரு பெண் பிள்ளை அபஹரிக்கப் பட்டாளே’ என்னும் கருணையினாலும், * நம்மைச் சேர்ந்தவள் (அபஹரிக்கப்பட்டாளே) என்னும் இரக்கத்தினாலும், நம்முடைய மனைவி நஷ்டமாயினளே” என்னும் மோகத்தினாலும், ‘ நமக்கு இனியவள் (அபஹரிக்கப்பட்டனளே): எனனும் காமத்தினாலும் (வருந்துகிறார்)
199-(ஸ பித்ரா ச பரித்யக்தஸ் ஸுரைஸ்ச ஸ மஹர்ஷிபி;: | த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ ஸரணம் ௧,த: || ஸ தம் நிபதிதம் பூமவ் ஸரண்ய; ஸரணாக,தம் | வதார்ஹமபி காகுத்ஸ்த;: க்ருபயா பர்யபாலயத் ॥ ரா-ஸு 38-34 & 35 [அந்தக் காகாஸுரன், தந்தையினாலும், ( தாயினாலும், ) மஹர்ஷிகளுடன் கூடிய தேவர்களாலும் கைவிடப்பட்ட வனாய், மூன்று உலகங்களையும் சுற்றித் திரிந்து அந்த ராமனையே ஸரணமடைந்தான். ஸரணமடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான அவனை, கொல்லத் தகுந்தவனா யிருந்த போதிலும், ஸரணமடையத் தகுந்தவனான ஸ்ரீ ராம பிரான் (தன்) அருளாலே காப்பாற்றினார்)
200-(மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந | தோஷோ யத்,யபி தஸ்ய ஸ்யாத் ஸதா மேதத கர்ஹிதம் ॥ -ராஃயு 18-9.[நண்பனுடைய பாவத்தோடு நெருங்கின இவ் விபீ,ஷணனை ஒரு பொழுதும் கைவிட மாட்டேன். அவனிடம் தோஷமிருந்தாலும் இருக்கட்டுமே. நல்லோர்களுக்கு இவனை ஸ்வீகரிப்பது நிந்திக்கத் தக்கதல்ல)
201- 44-வது எண்ணைப் பார்க்கவும்
202-ஸமோஹம் ஸர்வபூ,தேஷு ந மே த்,வேஷ்யோ $ஸ்தி கஸ்சந–கீதை 9-29,-என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில்) நான் எல்லா பூ,தங் களுக்கும் ஸமமாயிருப்பவன்; எனக்கு ஒருவனும் வெறுக்கத் தக்கவனல்லன்)
203-(அபி,ஷிச்ய ச் லங்காயாம் ராக்ஷஸேந்த்,ரம் விபீ,ஷணம் | க்ருதக்ருத்யஸ் தத,” ராமோ விஜ்வர: ப்ரமுமோத, ஹ॥[லங்கையில் ராக்ஷஸ ஸ்ரேஷ்டனான விபீஷணனை அபி,ஷேகம் செய்து தன் காரியத்தைச் செய்து முடித்தவனான ராமன், கவலை நீங்கப் பெற்று ஸந்தோஷித்தான்)நன்றி புரியுபவனாய் –தனக்கு செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லாதவனாய்-ஆஸ்ரித ரக்ஷணமே விரதமாகக் கொண்டவன்
204-குருஷ்வ மாமநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்,யதே । க்ருதார்த்தே 5ஹம் ப,விஷ்யாமி தவ சார்த்த; ப்ரகல்பதே॥ -ரா-அ 31-24, லக்ஷ்மண வாக்யம்[என்னைக் கைங்கர்ய பரனாக வைத்துக் கொள்ளும். இதில் தவறொன்றுமில்லை. ( இதனால் ) நானும் தன்யனாவேன். உம்முடைய காரியமும் நடைபெறும்.])
205-அவிஜ்ஞாதா சஹஸ்ராம் ஸூ – ஸஹஸ்ர நாம-(அடியார்களின் தேரஷங்களைக் காண்பதில்) ஞானமற்றவனாயிருப்பவன் ; (அடியார்களின் நன்மைகளைக் காண்பதில்) அளவற்ற ஞானமுடையவனாயிருப்பவன்)
206-(கோவிந்தே,தி யதா க்ரந்த;த். க்ருஷ்ணா மாம் தூர வாஸிநம் | ருணம் ப்ரவ்ருத்,த,மிவ மே.ஹ்ருதயாந்நாபஸர்ப்பது || -பாரதம் உத்யோக பர்வம் 47-22[திரெளபதி,யானவள் வெகு தூரத்திலிரு்த என்னைக் குறித்து ‘கோவிந்தா ! என்று கூக்குரலிட்டது ( வட்டியினால் ) வ்ருத்தி யடைந்த கடனைப் போல் என்னுடைய ஹ்ருத்யத்திலிருக்து அகலுகிறதில்லை)
207-தம் து மே ப்,ராதரம் த்,ரஷ்டும் பரதம் த்வரதே மந: | மாம் நிவர்த்தயிதும் யோ5ஸெள சித்ரகூடமுபாக;த: ॥ ஸிரஸா யாசதஸ்தஸ்ய வசநம் ந க்ருதம் மயா॥-ரா-யு 124-19.[என்னைத் திருப்பி யழைத்துச் செல்ல எவனொருவன் சித்ர கூடத்திற்கு வந்தானோ, அந்த என்னுடைய தம்பியாகிய பரதனைப் பார்க்க என் மனம் விரைகிறது. தலையாலே யாசித்த அவனுடைய வார்த்தை என்னால் செய்யப்பட வில்லை)
208-(நாம ரூபஞ்ச பூ,தாநாம் க்ருத்யாநாஞ்ச ப்ரபஞ்சநம் | வேத,ஸப்,தே,ப்,ய ஏவாதெ,ள தேவா$,நாம் சகார ஸ: ॥| –வி-பு 1-5-63.[தே,வர்கள் முதலிய ஜீவ ராசிகளுடைய பெயரையும், உருவத்தையும், வைதிக க்ரியைகளுடைய விவரணத்தையும் ஆதியில் பிரமன் வேத,ஸப்,த,ங்களிலிருந்து (அறிந்தே) செய்தான்.])
209-(ஸைஷாநந்த,ஸ்ய மீமாம்ஸா ப,வதி–௮ந்த இந்த ப், ரஹ் மானந்த,த்தினுடைப விசாரம் செய்யப்படுகிறது; யுவா ஸ்யாத் ஸாது, யுவாத்யாயக;। ஆஸிஷ்டோ த்ரடிஷ்டோ ப,லிஷ்ட,;--யெளவனமுள்ளவனாகவும், (தன்போல்) நல்ல யெளவனமுடையவர்களுக்கு ௮த்,யயனம் செய்விப்பவனாக வும், ஸக்தியுள்ளவனாகவும், வீர்யமுள்ளவனாகவும், பல முள்ளவனாகவும் (ஒரு மனிதன்) இருக்கட்டும். தஸ்யேயம் ப்ருதி,வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்–ஸர்வைஸ்வர்யமும் நிரம்பிய பூமி முழுவதும் அவனுக்கு வமப்பட்டதாக இருக்கட்டும். ஸ ஏகோ மாநுஷ ஆநந்த: இது ஒரு மனுஷ்யனுடைய ஆனந்தம், ஸ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய--ப்,ரஹ்ம நிஷ்ட,னும், ஸம்ஸாரத்தில் ஆசையற்ற வனுமான முக்தனுக்கும் (இந்த ஆனந்த,ம் உண்டு,) தேயே ஸதம் மாநுஷா ஆநந்தா:। ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணாமாநந்த;:– அப்படிப்பட்ட நூறு மனுஷ்யர் களுடைய ஆனந்த,ங்கள் ஒரு மனுஷ்ய கந்தர்வனுடைய ஆனந்த,மாகிறது …… தே யே மதம் ப்ரஜாபதேராநந்தா: | ஸ ஏகோ ப்,ரஹ்மண ஆநந்த;:-—தைத்திரீயம் ஆனந்த,வல்லி-8-அப்படிப்பட்ட நூறு ப்ரஜாபதியின் ஆனந்த,ங்கள் ஒரு ப்ரஹ்மானந்த,மாகும்)
210-(த்ரய்யுத், யதா தவ யுவத்வ முகைர் குணெளகை : ஆநந்த,மேது, தமியாநிதி ஸந்நியந்தும் | தே யே ஸதந்த்விதி பரம்பரயா ப்ரவ்ருத்தா நைவைஷ வாங் மநஸகேரசர இத்யுதாஹ ॥ ஸ்ரீவைகுண்ட ஸ்தவம்-51-[யெளவனம் முதலிய கு,ண க,ணங்களால் வ்ருத்,தி,யடைந்த உன்னுடைய ஆநந்த,த்தை “இவ்வளவு! என்று அளவிடு வதற்கு ஆரம்பித்து *தே யே ஸதம்” என்று படிப்படியாகப் படித்த வேதம், (அதற்குப் பின்) *இவன் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவன்’ என்று உரக்கக் கூவிற்று)
211-“அஸ்மிந்நஸ்ய ச தத்யோகம் ஶாஸ்தி”-1-1-20-(வேதம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஆனந்தமாகக் கூடியிருக்கும் ஆனந்தத்தை விளக்குகிறது)
212-(ஸங்கல்பாதே;வ தச்ச்,ருதே:–ப்ர-ஸூ 4-4-8, [ஸங்கல்பத்தாலேயே (முக்தன் ஸ்ருஷ்டிக்கிறான்),
213-(ஸ யதி, பித்ரு லோக காமோ ப,லதி। ஸங்கல்பா தேவாஸ்ய பிதரஸ் ஸமுத்திஷ்ட,ந்தி |[-சாந்-உ -3-2-1.அந்த முக்தன் (தன் பழைய பிறப்புகளிலிருந்து) பித்ரு வர்க்கங்களைக் காண விரும்பினானாகில் அந்தப் பித்ரு வர்க்கங்கள் இவனுடைய ஸங்கல்பத்தாலேயே கிளம்பி வருகின்றன.])
214-ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத சன்னிஹி தத்வாச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-17-(முக்தனுடைய ஐஸ்வர்யம்) ஜகத் வ்யாபார மில்லாத (ப்ரஹ்மானுபவ மாத்ரமே ) ; ப்ரஹ்மத்தைக் குறித்தே ஐகத், வ்யாபாரம் சொல்லப்படுவதால் ; (ஜகத்,வ்யாபாரத்தில் முக்தனுக்கு) ஸந்நிதானம் இல்லாததாலும்)-
215-போக மாத்ர சாம்ய லிங்காச்ச -ப்ரஹ்ம சூத்ரம் -4-4-21-(ப்ரஹ்மானுப,வமாகிற) போகத்தில் மட்டும் ஸாம்யத்தைச் சொல்லும் அடையாளத்தினாலும் ( முக்தனுக்கு ) ஜகத் வ்யாபார மில்லை)
216-இதம் குரு இதம் மா கார்ஷீ -([இதைச் செய்; இதைச் செய்யாதே)
217-ப்,ரஹ்மவாதி,நோ வத,ந்தி –ஸ்வேதாம்வதரோபனி-1-1-[ப்,ரஹ்மவாதி,கள் சொல்லுகிறார்கள்)
218-(அத; யதி, தே கர்ம விசிகித்ஸா வா வ்ருத்த விசிகித்ஸா வா ஸ்யாத் |. யே தத்ர ப்,ராஹ்மணாஸ் ஸம்மர்ஸிந:| யுக்தா ஆயுக்தா:। அலூக்ஷா தர்ம காமா: ஸ்யு:। யதா தே தத்ர வர்த்தேரந்। ததா தத்ர வர்த்தேதா:।[–தைத் 1-11–உனக்குக் கர்மத்திலேயோ, ஆசாரத்திலேயோ ஸந்தேஹம் ஏற்பட்டதாகில், விசாரம் செய்வதில் நிபுணர்களாகவும், வேத,ஸாஸ்த்ரங்களில் ஈடுபட்டவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் ஸமர்த்த,ர்களாகவும், காம க்ரோ தாதிகள் அற்றவர்களாகவும், தர்மத்தில் விருப்பமுள்ள வர்களாவுமிருக்கும் ப் ராஹ்மணர்கள் அவ் விஷயத்தில் எப்படி நடக்கிறார்களோ, அப்படியே நீயும் அவ் விஷயத்தில் நடப்பாயாக.
219– 33-வது ப்ரமாணத்தைப் பார்க்கவும்
220-தமேவ தீரோ விஜ்ஞாய ப்ரஜ்ஞாம் குர்வீத ப்,ராஹ்மண-ப்;ரூுஹதராரண்யகம்-6-4-21-ஜ்ஞான முடையவனான ப்ராஹ்மணன் அந்தப் பரமாத்மாவை (ஸ்ரவண மனனங்களாலே அறிந்து த்யானம் செய்யக் கடவன்)
221-ஓமித்யேவ த்,யாய தாத்மாநம்-முண்டகோபனிஷத் 2-2-6- [பரமாத்மாவை *ஓம்’ என்றே த்யானம் செய்யுங்கள்.
222-(ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சேதீ, மம த்ரோஹீ மத்,ப,க்தோ5பி ந வைஷ்ணவ: || விஷ்ணு தர்மம்-6-31-[வேத,மும்,ஸ்ம்ருதியும் என்னுடைய ஆஜ்ஞையே, எவனொருவன் அதை மீறி நடக்கிருனோ, அவன் என் ஆஜ்ஞையை மீறினவன்; எனக்கு த்,ரோஹம் செய்தவன்; என்னுடைய ப,த்தனாயிருந்த போதிலும் (அவன்) வைஷ்ணவனல்லன்0
223-அநாத்மந்யாத்மபு,த்,திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி:| ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்,விதா ஸ்திதம் | -விபு 6-7-11,[ஆத்மா வல்லாத தே,ஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும், தனதல்லாத பொருளில் தன்னுடையது என்னும் புத்தி,யும், ஸம்ஸாரமாகிய வ்ருக்ஷத்தின் விருத்திக்கு இருவகை யாயிருக்கும் விதையாகும்)
224-(த்வ்யக்ஷரஸ்து பவேந்ம்ருத்யுஸ் த்ர்யக்ஷரம் ப்.ரஹ்மண: பதம்!மமேதி த்வ்யக்ஷரோ ம்ருத்யுர் ந மமேதி ச ஸாஸ்வதம் ॥ -பாரதம், ஸாந்தி -13-4-[இரண்டு அக்ஷரத்தை யுடையது ஸம்ஸாரமடையக் காரண மாகிறது.மூன்றக்ஷரங்களை யுடையது ப்,ரஹ்மத்தை யடையக் காரணமாகிறது. இரண்டெழுத்துச் சொல்லான*மம”என்பது ஸம்ஸாரத்திற்குக் காரணம். மூன்றெழுத்துச் சொல்லான ந மம” என்பது நிலையான மோக்ஷத்திற்குக் காரணம்-
225-(ஸக்ருத்தே ௮க்நே நம:। த்விஸ்தே நம:। த்ரிஸ்தே நம:। சதுஸ்தே நம:। பஞ்ச க்ருத்வஸ்தே நம:। தஹுக்ருத்வஸ்தே நம: | மத க்ருத்வஸ்தே நம: | ஆஸஹஸ்ர க்ருத்வஸ்தே நம: | அபரிமித க்ருத்வஸ்தே நம: || தை-ஆர-ப்ர--4-[அக்னியே! உனக்கு ஒருகால் நமஸ்காரம்; இருமுறை நமஸ்காரம்; மும்முறை நமஸ்காரம்; நாலு தரம் நமஸ்காரம்; ஐந்து முறை நமஸ்காரம்; பத்து தரம் நமஸ்காரம்; நூறு முறை நமஸ்காரம்) ஆயிரம் தரம் வரை நமஸ்காரம்; கணக்கற்றமுறை நமஸ்காரம்)
226-(ப,வந்தி பாவா பூ,தாநாம் மத்த ஏவ ப்ருத,க் விதா: [ஜீவராசிகளுடைய (ஞானம் முதலிய) பலவகையான மநோ பாவங்கள் என்னுடைய ஸங்கல்பத்தாலேயே ஏற்படுகின்றன)ஸ்ரீ கீதை -10-5-
227-(தாம்நா சைவோத,ரே படத்,த்,வா ப்ரத்யப,த் நாது,லூக,லே | க்ருஷ்ண மக்லிஷ்ட கர்மாணமாஹ சேத,மமர்ஷிதா || யதி, ஸக்நோஷி கச்ச, த்வமதி சஞ்சல சேஷ்டித || -விபு 5-6.14[(யசோதையானவள்) குறும்புச் செயல்களை வெகு ஸுலப,மாகச் செய்யும் அந்த க்ருஷ்ணனைத் தாம்புக் கயிற்றினால் வயிற்றில் பிணைத்து ஒரு உரலில் கட்டினாள், கோபங் கொண்டவளாய் இப்படிச் சொன்னாள்:– “மிகவும் சஞ்சல மான செயல்களை உடையவனே! முடியுமாகில் இப்போது போ.”])என்று
228-(பஹுூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்யதே வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப,: || கீதை 7-19.[பல ஜன்மங்களுக்குப் பின் ஜ்ஞானியானவன் **வாஸு தேவனே (எனக்கு)எல்லாம்” என்று என்னை உபாஸிக்கிறான். அப்படிப்பட்ட மஹாத்மா மிகவும் கிடைத்தற்கரியவன்)
229-(உபாயே க்,ருஹ ரக்ஷித்ரோஸ் ஸப்தஸ் ஸரணமித்ய்யம் |வர்த்ததே ஸாம்ப்ரதம் சைஷ உபாயார்த்தை,கவாசக: ॥ அஹிர்புத்ன்யை ஸம்ஹிதை-[ஸரணம் என்னும் இந்த வார்த்தை–உபாயம், வீடு, காப்பாற்றுபவன் என்னும் அர்த்தங்களில் வழங்கப் படுகிறது. இப்போது இது “உபாயம்” என்னும் அர்த்தத்தையே சொல்லுவதா யிருக்கிறது)
230-அஹமஸ்ம் யபராதாநாமாலயோ அகிஞ்சநோ5க,த: ॥ த்வமேவோபாயபூ,தோ மே ப,வேதி ப்ரார்த்தநாமத: ॥ ஸரணாக,திரித்யுக்தா ஸா தேவே ஜஸ்மிந் ப்ரயுஜ்யதாம் || -அஹிர்புத்ன்யை ஸம்ஹிதை-[நான் குற்றங்களுக்கு ஓர் இருப்பிடமாயிருக்கிறேன்.(என்னை ரக்ஷித்துக் கொள்ள) ஒரு உபாயமுமற்றவனாயிருக்கிறேன். உன்னை யொழிய வேறு கதியில்லாதவனா யிருக்கிறேன். நீயே எனக்கு உபாயமாக ஆவாயாக” என்று ப்ரார்த்திக்கும் புத்தியே ஸரணாகதியெனப்படுகிறது. அது இந்த பகவான் விஷயத்தில் செய்யப்படட்டும்-
231-(து.ராசாரோ$பி ஸ்வாமீ க்ருதக்நோ நாஸ்திக; புரா।| ஸமாஸ்ரயேதராதி,தே;வம் ஸ்ரத்,தயா ஸ்ரணம் யதி, ॥ நிர்தோஷம் வித்தி, தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந:।!–ஸாத்வத ஸம்ஹிதை-[அநாதிகாலமாக ஒருவன் கெட்ட ஒழுக்கமுள்ள வனாகவும், எதையும் சாப்பிடுபவனாகவும், செய்ந்நன்றி மறந்தவனாகவும், நாஸ்திகனாகவும் இருந்த போதிலும், ஆதிதேவனாகிற பகவானை ஸ்ரத்தையுடன் ஸரணமடைவானாகில், அந்த மனிதனை, பரமாத்மாவினுடைய மஹிமையினாலே தோஷமற்றவனாக அறிவாயாக.)
232-தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் வதார்ஹமபி காகுத்ச்த க்ருபயா பர்யா பாலயத்
233-தஸ்மாதபி வத்யம் பிரபன்னம் ந ப்ரதி ப்ரயச் சந்தி
234-அஹிர் புத்ன்ய சம்ஹிதாயாம் அநேநைவ ப்ரபன்னச்ய பகவந்தம் ஸ நாதனம் தஸ்யா நுபந்தா பாபமா நஸ் சர்வே நச்யந்தி தத் ஷணாத் கரு தான்ய நேன சர்வாணி தபாம் சி தபதாம் வர சர்வே தீர்த்தாஸ் சர்வ யஜ்ஞ்ஞாஸ் சர்வ தாநானி தத் ஷணாத் க்ருதாந்யே தேன மோஷச்ச தஸ்ய ஹஸ்தே ந சம்சய-([இந்த மந்த்ரத்தால் பழைமையான அந்த பகவானை ஸரணமடைந்தவனுக்கு, அவனை ஒட்டியிருக்கும் எல்லாப் பாபங்களும் அந்த க்ஷணத்திலேயே நஸிக்கின்றன. முனி ஸ்ரேஷ்ட,ரே ! இவனால் எல்லாத் தவங்களும் செய்யப் பட்டன. எல்லாத் தீர்த்தங்களும், எல்லா யஜ்ஞங்களும், எல்லா தானங்களும் அந்த க்ஷணத்திலேயே இவனால் செய்யப்பட்டன. மோக்ஷ்மும் இவனுடைய கையிலிருக்கிறது. (இதைப் பற்றி) ஸந்தேஹமில்லை)
235-ப்ரஸீதந்து பவந்தோ மே ஹ்ரீரேஷா ஹி மமாதுலா | யதீத்,ருஸைரஹம் விப்ரை ருபஸ்தேயை ருபஸ்தி,த: ||ரா -ஆ -10-9- ராம வாக்யம் (முனிவர்களே!) நீங்கள் உகந்தருளுவீர்களாக, வந்து அடையத் தகுந்த பெரியோர்களான உங்களால் (நான்) அடையப் பட்டபடியால், எனக்கு இப்போதிருக்கும் லஜ்ஜை மிக அதிகமா யிருக்கிறது-
236-ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த;ந; | மாம் நயேத் யதி, காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத் || ரா ஸூ -39-30-[ஸத்ருக்களின் பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் லங்கையை பாணங்களாலே கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில், அப்படிச் செய்வது அவருக்கே தகுந்ததாகும்.]
237-ஈஸ்வரஸ் ஸர்வ பூதாநாம் ஹ்ருத்,தேஸே அர்ஜுந! திஷ்டதி। ப்ராமயந் ஸர்வ பூதாநி யந்த்ரா ரூடாநி மாயயா॥கீதை -18-61-[ஸர்வேஸ்வரனாகிய வாஸுதேவன் ( ப்ரக்ருதி யாகிய ) யந்திரத்தில் ஏறி நிற்கும் எல்லா ஜீவ ராசிகளையும், (ஸத்வ ரஜஸ் தமோ குண மயமான) மாயையினால் சுழற்றிக் கொண்டிருக்கிறான் –
238-போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வ லோக மஹேஸ்வரம் | ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸாந்திம் ருச்சதி || கீதை -5-29-[யஜ்ஞங்களையும், தவங்களையும் புஜிப்பவனும், எல்லா உலகங்களுக்கும் மஹேஸ்வரனும், எல்லா ஜீவ ராசிகளுக்கும் நண்பனுமான என்னை அறிந்து சாந்தியை அடைகிறான் –
239-ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:। கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா: ||-பாரதம், ஆரண்ய பர்வம் 192-56 [புருஷ ஸ்ரேஷ்டர்களே ! எல்லா உலகங்களுக்கும் தந்தையும், தாயும் லக்ஷ்மீ நாதனே; ஸரணமடையத் தகுந்த இவனை ஸரண மடையுங்கள்.]
240-ததஸ்ய ப்ரியமபி, பாதோ ௮ஸ்யாம்।நரோ யத்ர தேவயவோ மத;ந்தி உருக்ரமஸ்ம ஸ ஹி ப,ந்துரித்தா ।விஷ்ணோ: பதே, பரமே மத்வ உத்ஸ: |-யஜுர் வேதம், 2-4-6-(எந்த கங்கா தீர்த்த விஷயத்தில், தேவத்வத்தை விரும்பும் மனிதர்கள் ஸக்தோஷிக்கிறார்களோ, இனியதாக விருக்கும் இந்த பகவானுடைய அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை ஆதரவுடன் பானம் செய்வேனாக. அப்படிக் குடிப்பவன் திரி விக்ரமனுக்கு பந்துவாவான். இம் மாதிரியாக விஷ்ணு வினுடைய மேலான திருவடியில் அம்ருதத்தினுடைய ப்ரவாஹம் உண்டாகிறது]
241-மய்யாஸக்தமநா: பார்த்த,! யோகம் யுஞ்ஜந் மதாஸ்ரய: |அஸம்ஸயம் ஸமக்,ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு! -கீதை -7-1-[அர்ஜுனா | என்னிடம் ஈடுபட்ட மனத்தை யுடையவனாய், என்னையே ஆதாரமாகக் கொண்டவனாய், என் விஷயத்தில் யோகத்தை ஆரம்பித்தவன், ஸந்தேஹமில்லால் என்னை எந்த ஜ்ஞானத்தினால் பூர்ணமாக அறிவானோ அந்த ஜ்ஞானத்தைக் கேட்பாயாக-
242-பத்தாஞ்ஜலி புடம் தீநம் யாசந்தம் ஸரணாக;தம் | ந ஹந்யாதாந் ருஸம்ஸ்யார்த்தமபி ஸத்ரும் பரந்தப ||ரா யு -18-27-(ஸத்ருக்களைத் துன்புறுத்துபவனே | இருப்பிடத்துக்கு வருதல், கை குவித்தல் என்னும் காயிக ப்ரபத்தியை யாவது, மனத்திலே தைர்யமாகிற மானஸ ப்ரபத்தியை யாவது, வாயாலே ப்ரார்த்திப் பதாகிற வாசிக ப்ரபத்தியை யாவது செய்தவனை, ஸத்ருவா யிருந்த போதிலும், “இவன் இரக்க மற்றவன்” என்னும் அபவாதம் வாராமைக்காக ஹிம்ஸிக்கக் கூடாது –
243-௮ஞ்ஜலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதிநீ -பரத்வாஜ ஸம்ஹிதை [வெகு சீக்கிரமாக பகவானை உகப்பிக்கும் அஞ்ஜலி மேலான அடையாளமா யிருக்கிறது-
244-ராஜ வித்வா ராஜ குஹ்யம் பவித்ரமிதமுத்தமம் | ப்ரத்யக்ஷாவகஹம் தர்ம்யம் ஸுஸுகம் கர்த்துமவ்யயம் || கீதை -9-2-[வித்யைகளுக்குள்ளும், ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது. இது பாபங்களைப் போக்கடிப்பவற்றில் உயர்ந்தது. என்னை நேரில் காட்டுவது, என்னை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது, செய்வதற்கு வெகு ஸுகமானது. (பலத்தைக் கொடுத்த பின்பும்) அழியாதது –
245-அஸந்நேவ ஸ பவதி| அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் | அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத; | ஸந்தமேநம் ததோ விது,:॥தைத்திரியம் – ஆனந்த,வல்லி-6-[ப்ரஹ்மம் இல்லை யென்று அறிந்தானாகில், அவன் இல்லாதவனாகவே ஆகிறான். ப்ரஹ்மம் இருக்கிற தென்று அறிந்தானாகில் ௮க் காரணத்தினாலேயே இவனை இருக்கிறவனாக அறிகிறார்கள் –
246-யதா ; ஹ்யேவைஷ ஏதஸ்மிந் நத்ருஸ்யே அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே அபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே। அத, ஸோ அபயங்கதோ பவதி। -தை -ஆனந்த -7-[காண முடியாதவனும், (ப்ராக்ருத) ஸரீரமற்றவனும், (தேவன், மனுஷ்யன் முதலிய) வார்த்தைகளால் சொல்லத் தகாதவனும், (தனக்கு ஒரு) ஆதார மற்றவனுமான இந்தப் பரமாத்மாவிடம் ஸம்ஸார பயமில்லாமைக்காக பக்தி யோகத்தை எப்போது அடைகிறானோ, அப்போது அவன் (ஸம்ஸார) பயமற்றவனாக ஆகிறான்-
247-தத், யதே;ஷீக தூல மக்நெள ப்ரோதம் ப்ரதூயேத | ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே ॥ -சாந்தோக்டியம் 5-24-3-[நெருப்பிலிட்ட இஷீகப் புல்லின் பஞ்சு எப்படிக் கொளுத்தப் படுகிறதோ, அப்படியே இவனுடைய எல்லாப் புண்ய பாபங்களும் கொளுத்தப் படுகின்றன-
248-இதம் ஜ்ஞாந முபாஸ்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா: | ஸர்க்கே அபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யதந்தி ச॥கீதை -14-2-[இந்த ஜ்ஞானத்தை அடைந்து, என்னைப் போல் ஆனவர்கள்,ஸ்ருஷ்டி காலத்திலும் பிறப்பதில்லை; ப்ரளய காலத்திலும் அழிவதில்லை –
249-வைகுண்டே, து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்த,ம் ஜகத்பதி:। ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ॥-சைவ புராணம் -[மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத் பதியும் நினைக்க வொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, பக்தர்களுடனும், பாகவதர்களுடனும் கூடியவராய், ஸ்ரீதேவியுடன் கூட எழுந்தருளி யிருக்கிறார் –
250-மாஹா ரஜநம் வாஸ:–ப்ருஹ 4-3-6.-பரமாத்மாவுக்கு) ஆடை பீதாம்பரம் –
251-அதஸீ புஷ்ப ஸங்காஸம் பீத வாவாஸ ஸமச்யுதம் |யே நமஸ்யந்தி கேரவிந்தம் ந தேஷாம் வித்யதே ப,யம்। -பார-சாந்தி 46-118-பீஷ்ம வாக்யம் [அடியவர்களை நழுவ விடாதவனும், காயாம் பூவைப் போன்றவனும், பீதாம்பரத்தை யுடையவனுமான கோவிந்தனை எவர்கள் நமஸ்கரிக்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை –
252-ஆவர்த்த இவ கங்காயா: [கங்கையின் சுழல் போன்றிருக்கும் (திரு நாபி )
253-ப்ருந்ததா வநம் பகவதா க்ருஷ்ணே நாக்லிஷ்ட கர்மணா |-ஸூபேந மநஸா த்யாதம் கவாம் வ்ருத்தி மபீப்ஸதா।॥! -விபு -5-6-28-[கல்யாண குணங்கள் நிறைந்தவனும், பெருங்காரியங்களையும் எளிதாகச் செய்பவனும், பசுக்களின் வ்ருத்தியை விரும்புபவனுமான க்ருஷ்ணனால் ப்ருந்தாவனமானது, ஸூபமான மனத்தினால் நினைக்கப் பட்டது –
254-ஸயநே சோத்த மாங்கேந ஸீதாயா: ஸோபிதம் புரா। ரா யு 1-5-[படுக்கையில் ஸீதா பிராட்டியின் தலையாலே முன்னெல்லாம் பிரகாஸியா நின்றதான திருக்கையை –
255-ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே | [மூன்று ரேகைகளால் அடையாளம் செய்யப்பட்ட கழுத்து ‘கம்பு க்ரீவா” என்று சொல்லப்படுகிறது
256-ஸக்ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய முக மத்யருணே க்ஷணம்|.,. விகாஸி ஸார தாம்போஜமவஸ்யாய ஜலோக்ஷிதம் | பரிபூய ஸ்திதம் ஜந்ம ஸபலம் க்ரியதாம் த்ருஸ : ॥ வி பு -5-20-25-[ஸகி,களே | மிகவும் சிவந்த திருக் கண்களை உடையதும் பனி ஜலத்தினால் தெளிக்கப் பட்டிருக்கும் மலர்ந்த ஸரத் காலத் தாமரையை வெற்றி கொண்டிருப்பதுமான கிருஷ்ணனுடைய முகத்தைப் பாருங்கள். கண்களைப் பெற்றிருப்பதை ப்ரயோஜன முள்ளதாகச் செய்யுங்கோள் –
257-பாபம் ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் ஸங்கல்பநாமயம் | தத் புண்டரிக நயநம் விஷ்ணோர் த்ரக்ஷயாம்யஹம் முகம்॥! -வி பு -5-17-4-[எந்தத் திருமுக மண்டலமானது நினைக்கப் பட்டவுடன், மனிதர்களின் பாபத்தைப் போக்கடிக்கிறதோ, ஆஸ்ரிதர்களுடைய ஸங்கல்பத்தின் படியே அமைந்திருப்பதும், தாமரை போன்ற திருக் கண்களை உடையதுமான விஷ்ணுவினுடைய அத்திருமுக மண்டலத்தை நான் பார்க்கப் போகிறேன் –
258-அபரிமித திவ்ய பூஷண ! -கத்ய த்ரயம் [கணக்கற்ற தி,வ்யாப,ரணங்களை உடையவனே-
259-ஸ்ரக்,வஸ்த்ராபரணைர் யுக்தம் ஸ்வாநுரூபைரநூபமை: | சிந்மயை: ஸ்வப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை: || -பெவ்ஷ்கர ஸம்ஹிதை -[தனக்குத் தகுந்தவையும், ஒப்பற்றவையும், ஞான மயமாயிருப்பவையும், ஸ்வயம் ப்ரகாஸமானவையும், ஒன்றுக் கொன்று (சேர்த்தியினா லுண்டான) காந்தியினால் அழகா யிருப்பவையுமான மாலைகளினாலும், வஸ்த்ரங்களினாலும், ஆபரணங்களினாலும் கூடியிருப்பது பர ப்ரஹ்மம் –
260-கா த்வந்யா த்வாம்ருதே தேவி ஸர்வ யஜ்ஞமயம் வபு: | அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி; சிந்த்யம் கதாப்ருத:।0, வி.பு 1-9-122--[ஹே தேவி! கதையை தரித்தவனும், தேவ தேவனுமான: எம்பெருமானுடைய, யோகிகளால் நினைக்கத் தக்கதும், ஸர்வ யஜ்ஞ மயமுமான ஸரீரத்தில் உன்னைத் தவிர வேறு எவள் இருக்கிறாள் –
261-திவ்ய மால் யாம்பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா। பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யவவ் வக்ஷ:ஸ்தலம் ஹரே –1. வி பு 1-91-05-அப்ராக்ருதமான மாலையையும், வஸ்த்ரத்தையும் தரித்திருப்பவளும், ஸ்நானம் செய்தவளும், பூ,ஷணங்களால் அலங்கரிக்கப் பட்டவளுமான ஸ்ரீதே,வி எல்லா தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹரியினுடைய திரு மார்பை அடைந்தாள் –
262-ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பந்நா ஸ்ரீ: பூர்வமுததே; புந:। தேவதா நவயத்நேந ப்ரஸூதா அம்ருதமந்தநே ॥ -வி.பு 1-9-141.[முதலில், ப்ருகு,மஹர்ஷிக்கு: (அவர் பத்னியான) க்யாதி யிடம் ஸ்ரீதேவி உண்டானாள்; மறுபடியும் அம்ருதமதன காலத்தில் தேவாஸுரர்களுடைய யத்னத்தினால் கடலி லிருந்து உண்டானாள்
263-நேதாநீம் த்வத்ருதே ஸீதே ஸ்வர்க்கோ ,அபி மம ரோசதே! -ரா-அ 30-42.[ஸீதே! இப்பொழுது நீயில்லாமல் ஸ்வர்க்கமும் எனக்கு ருசிக்காது.]
264-த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரி; பிதா।த்வயைதத் விஷ்ணுநா சாம்ப, ஐகத் வ்யாப்தம் சராசரம் ||வி-பு 1-9.126, [எல்லா உலகங்களுக்கும் நீ தாய்; தேவதேவனான ஹரி தந்தை. தாயே ! அசைபவையும், அசையாதவையு மடங்கிய இந்த உலகம் உன்னாலும், விஷ்ணுவாலும் வியாபிக்கப் பட்டிருக்கிறது-
265-ஏஷ ஸேதுர் மயா பத்தஸ் ஸாகரே ஸலிலார்ணவே |தவ ஹேதோர் விஸாலாக்ஷி ! நளஸேதுஸ் ஸுது,ஷ்கர: | ரா.யு 126-12.[அகன்ற கண்களை உடையவளே | நீர் நிறைந்த கடலில், நள ஸேது என்ற பெயர் பெற்றதும், மிகவும் கட்டுவதற்கு அரிதுமான இந்த அணை உனக்காக என்னால் கட்டப் பட்டது.]
266-பரி ஸ்ரமாத் ப்ரஸுப்தா ச ராக,வாங்கே அப்யஹம் சிரம் |பர்யாயேண ப்ரஸுப்தஸ்ச மமாங்கே பரதாக்ரஜ: ||ரா ஸூந் 38-21. [ராகவனுடைய திருத் தொடையில், நான் களைப்பினால் வெகு நேரம் தூங்கினேன். பரதனுடைய தமையனாரான அவரும் என் தொடையில் தூங்கினார் –
267-ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா। ஸப்ததா நவதா சைவ புநஸ் சைகாத ஸ ; ஸ்ம்ருத: | ஸதஞ்ச தா சைகஞ்ச ஸஹஸ்ராணி ச விம்ஸத; ॥–சாந்தோ 7-26-2, [“முக்தாத்மா பல ஸரீரங்களை உடையவனாகிறான்” என்று தாத்பர்யம்.
268-துல்ய ஸீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஐந லக்ஷணாம் |ராகவோஃ5ர்ஹதி வைதேஹீம் தம் சேயமஸி தேக்ஷணா ॥ ரா-ஸு 16-5-[ஒரே விதமான குணங்கள், வயது, நடத்தை இவைகளை உடையவளும், ஸமானமான குலத்தையும், லக்ஷணங்களையும் உடையவளுமான வைதேஹிக்கு ராகவனே தகுந்தவர்; கறுத்த கண்களை உடைய இவளும் அவருக்கே தகுந்தவள்
269-நித்யைவைஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாமிநீ |யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தமா –விபு 1-8 -17-[உலகிற்கெல்லாம் தாயும். அழிவற்றவளும் விஷ்ணுவினுடை யவளுமான இந்த ஸ்ரீ தேவி நித்யமானவளே. ப்ராஹ்மண ஸ்ரேஷ்ட,ரே! ஸர்வ வ்யாபியான விஷ்ணு எப்படிப்பட்டவரோ அப்படிப்பட்டவளே இவளும்
270-கந்தர்வாப் ஸரஸஸ் ஸித்தாஸ் ஸ கிந்நர மஹோரக ॥ நாந்தம் குணாநாம். கச்சந்தி தேநா நந்தோ அயமுச்யதே ॥ [கந்தர்வர்களும், அப்ஸரஸ்ஸுகளும், கின்னரர்களுடனும், மஹா நாகங்களுடனும் கூடிய ஸித்தர்களும், (இவனுடைய) குணங்களின் எல்லையை அடைவதில்லை; ஆகையால் இவன் அநந்தனென்று சொல்லப்படுகிறான் –
271-உபமாநமஸேஷாணாம் ஸாதூநாம் யஸ்ஸதா அபவத் | -வி 1.15.157-[எந்த ப்ரஹ்லாதாழ்வான், எப்போதும் எல்லா ஸாதுக்களுக்கும் உபமானமாக ஆயினனோ…]
272-கிம் சைநாம் ப்ரதி வக்ஷ்மாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் | யதா யதா ஹி கெளஸல்யா தாஸீ வச்ச ஸகீ வ ச ॥ பார்யாவத் பகிநீவச் ச மாத்ருவச்சோபதிஷ்டதி ||-ரா-அ 12.68 தஸரத வாக்யம் [கெளஸல்யை தாஸியைப் போலும், ஸகியைப் போலும்,மனைவியைப் போலும், ஸஹோதரியைப் போலும், தாயைப்போலும் ஸூஸ்ரூஷை செய்யும் போதெல்லாம், இப்படிப் பட்ட அநிஷ்டமான காரியத்தைச் செய்து விட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன் ]
273-பரகத அதிஸய ஆதா நேச்ச, யோபாதே,யத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ ஸேஷ: । பரஸ் ஸேஷீ॥-வேதார்த்த ஸங்க்ரஹம் [மற்றொருவனிடத்திலிருக்கும் ஒரு மேன்மையை உண்டு பண்ண வேண்டு மென்னும் எண்ணத்துடன் அங்கீகரிக்கப் படுகையே எவனுக்கு ஸ்வரூபமோ அவன் ஸேஷன்; மற்றவன் ஸேஷி-
274-பாரதந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்கத பந்தந: |
ஸ்வாதந்த்ர்ய மதுலம் ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே॥ -விஷ்ணு தத்வம் -[கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவனான முக்தன், பரம புருஷனிடத்தில் பாரதந்த்ரியத்தை அடைந்து, ஒப்பற்ற ஸ்வாதந்த்ரியத்தையும் அடைந்து, அவனுடன் கூடவே ஆரந்தப் படுகிறான்-
275-கருடஞ்ச ததர்ஸோச் சைரந்தர்த்தாநக,தம் தவிஜ। க்ருதச்சாயம் ஹரேர் மூர்த்நி பக்ஷாப்யாம் பக்ஷி புங்கவம்॥ -வி-பு 5-12-4 [முனிவரே! சிறகுகளால் ஹரியின் தலையில் நிழலை உண்டு பண்ணிக் கொண்டிருப்பவனும், பறவைகளுக்குத் தலைவனும், மறைந்திருப்பவனுமான கருடனையும் அந்த இந்திரன் ஆகாயத்தில் பார்த்தான்.
276-ஸுபர்ணோ அஸி கரூத்மாந்। த்ரிவ்ருத் தே ஸிர: | காயத்ரம் சக்ஷுஸ் : |.தைத்திரிய யஜுஸ் ஸம்ஹிதை . [நல்ல சிறகுகளை யுடையவனாயும், கருத்மான் என்னும் திருநாமத்தை உடையவனா யுமிருக்கிறாய்; த்ரிவ்ருத் உன்னு டைய தலை; காயத்ரம் கண்…]
277-யது,ச்சிஷ்டமபோஜ்யம், யத், வா துஸ் சரிதம் மம, ஸர்வம் புநந்து மாமாப: –தை-நா- 38.[உண்ணத் தகாத உச்சிஷ்டம் யாதொன்று என்னால் உண்ணப்பட்டதோ, என்னுடைய கெட்ட காரியம் யாதொன்று உண்டோ, “ஆப: எனப்படும் எம்பெருமான் என்னை அவைகளெல்லா வற்றிலிருந்தும் பரி ஸூத்தப்படுத்தட்டும்
278-ரஸாந் பக்தஸ்ய ஜிஹ்வாயாம் க்ருஹ்ணாமி கமலோத்ப,வ!-பாஞ்சராத்ர- [தாமரையில் பிறந்த பிரமனே ! இனிய சுவைகளை பக்தனுடைய நாக்கிலிருந்து அறிகிறேன்
279-௮வித்யாஸ்மிதாபி,நிவேஸ ராக த்வேஷா: பஞ்ச க்லேஸா :। -பாதஞ்ஜல ஸூத்ரம் [அவித்யை, அஹங்காரம், பேராசை, விருப்பம், கோபம் இவ் வைந்தும் க்லேஸங்கள்.]
280-யேந மாத்வதி –-எதனாலே மதமடைகிறானோ
281-யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நரகோ யஸ் த்வயா விநா। இதி ஜாநந் பராம் ப்ரீதிம் ௧ச்ச, ராம மயா ஸஹ॥ ரா.௮ 90-18-[ராகவரே ! உம்முடன் கூடியிருக்கும் இருப்பே (எனக்கு) ஸ்வர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்கு மிருப்பு நரகம்” என்பதை அறிந்து, என்னுடன் கூடவே மேலான ஆநந்தத்தை அடைவீராக.]
282-த்வயா ச ஸஹ கந்தவ்யம் மயா குருஜநாஜ்ஞயா।த்வத், வியோகேந மே ராம! த்யக்தவ்யமிஹ ஜீவிதம் ॥ ரா-அ 29-5- [ராகவரே! பெரியோர்களின் கட்டளைப்படி நான் உம்முடன் கூடவே போக வேண்டும்; உம்மைப் பிரிந்தால் இங்கேயே உயிரை விட வேண்டும்
283-ஸர்வதா , தேந ஹீநாயா ராமேண விதி,தாத்மநா । தீக்ஷணம் விஷமிவாஸ்வாத்ய துர்லபம் மம ஜீவிதம் ॥-ரா-ஸு 25.17. [நெஞ்சிலுள்ளதை அறிபவனான ராம பிரானை விட்டுப் பிரிந்த எனக்கு, கொடுமையான விஷத்தைக் குடித்ததைப் போல், ‘ உயிர் தரிப்பது எல்லா விதத்திலும் துர்லபம் ]
284-யுவா$குமார:-ருக்; வே-அஷ் 2-8-25- [யெளவனத்தை உடையவனாகவும், சிறிது பாலனாகவு மிருப்பவன்.]
285-தருணெள ரூப ஸம்பந்நெள ஸுகுமாரெள மஹா பலெள| புண்டரீக விஸாலாக்ஷெள சீர க்ருஷ்ணாஜிநாம்ப,ரெள ॥| : ரா-ஆ 19-14 சூர்ப்பணகை வார்த்தை [(ராம லக்ஷ்மணர்கள்) வாலிபமானவர்கள்; அழகு நிறைந்தவர்கள்; ஸெளகுமார்யத்தை உடையவர்கள்; அதிகமான பலமுள்ளவர்கள். தாமரை போன்ற அகன்ற கண்களை உடையவர்கள் ; மரவுரியையும், மான் தோலையும் உடுத்தவர்கள்.]
286-ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம்’ ௧ந்துமர்ஹதி | ‘காநிதஸ் ஸகரேணாயம ப்ரமேயோ மஹோததி,: ॥ ரா யு -19-31-[அரசரான ராகவர் ஸமுத்ரத்தை ஸரணமடையத் தகுந்தவர். அளவற்றதான இப் பெருங் கடல் ஸகரரால் வெட்டு விக்கப் பட்டதன்றோ
287-த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத் | பாண்டவாந் த்விஷஸே ராஜந் !மம ப்ராணா ஹி பாண்டவா: || பார-உத், 74-27,[த்வேஷிப்பவனின் அன்னம் புஜிக்கத் தக்கதன்று ; த்வேஷிப்பவனை புஜிப்பிக்கவும் கூடாது, அரசனே | நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய். பாண்டவர்கள் எனக்கு ப்ராணனன்றோ
288-289- ஏதமாநந்த, மயமாத்மாந முபஸங்க்ரம்ய |இமாந் லோகாந் காமாந் நீ காமரூப் யநுஸஞ்சரந் | ஏதத் ஸாம காயந் நாஸ்தே। ஹாவு ஹாவு ஹாவு || தை-ப்ரு 10-5 [ஆனந்த,மயனான இந்தப் பரமாத்மாவை அணுகி, இஷ்டப் பட்ட உருவங்களை உடையவனாய், இந்தக் காமங்களிலும், லோகங்களிலும் (பரமாத்மாவைப்) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப் பாடிக் கொண்டிருக்கிறான்: ஹாவு ஹாவு ஹாவு]
290-ஜிதந்தே (1-8)
291-ஸோ அஹம் தே தேவதே,வேஸ ! நார்ச்சநாதெ,ள ஸ்துதெள ந ச ॥ ஸாமார்த்,யவாந் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி: ப்ரஸீத, மே॥ வி.பு 57-70, காளிய ஸ்தோரம் -[தேவர்களுக்கும் தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும்’ தலைவனே | இப்படிப்பட்ட நான் உன்னுடைய ஸ்துதியிலும், அர்ச்சனை முதலியவற்றிலும் ஸாமர்த்தியம் உடையவனல்லேன். அருள் கூர்ந்த திருவுள்ளத்துடன் கூடியவனாய் எனக்கு தயை புரிய வேண்டும் –
292-ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது,ஸூதந: | ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞஜேயஸ் ஸ வை மோக்ஷார்த்த, சிந்தக: ॥| பார -சாந்தி 358.78.[பிறந்து கொண்டிருக்கும் போது எந்தப் புருஷனை மது, ஸுூதனன் பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடையவனென்று அறியத் தக்கவன். அவனே மோக்ஷ பலத்தை நினைப்பவன் –
293-இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த ஸத்தா நித்யம் ப்ரியாஸ் தவ து கேசந தே அபி நித்யா: ! நித்யம் த்வதே,பரதந்த்ரநிஜ ஸ்வரூபா; பாவத்க மங்கள குணா ஹி நிதர்ஸநம் ந: -வைகுண்ட ஸ்தவம் -96-[எல்லாப் பொருள்களின் இருப்பும் உன்னுடைய விருப்பத்தாலேயே ஏற்படுகிறது. உனக்குச் சில வஸ்துக்கள் எப்போதும் பிரியமானவை; அவை நித்யமாக விளங்குகின்றன. எப்பொழுதும் உனக்கே பரதந்திரமான ஸ்வ ரூபத்தை யுடைய உன்னுடைய கல்யாண குணங்கள் (இவ் விஷயத்தில்) எங்களுக்கு த்ருஷ்டாந்தம் –
294-யோ அஹமஸ்மி ஸ ஸந் யஜே-யஜார் ப்ராஹ்மணம் [நான் எப்படிப் பட்டவனா யிருக்கிறேனோ, அப்படிப்பட்ட வனாகவே இருந்து கொண்டு, (ஆத்ம ஸமர்ப்பணமாகிற) யாகத்தைச் செய்கிறேன்.
295-யஸ்யாஸ்மி ந தமந்தரேமி -யஜார் ப்ராஹ்மணம் -எவனுக்கு நான் தாஸனா யிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்ல மாட்டேன் –
296-ஆத்மா ராஜ்யம் தநம் மித்ரம் களத்ரம் வாஹநாநி ச।
ஏதத் பகவதே ஸர்வமிதி தத் ப்ரேக்ஷிதம் ஸதா ॥ சாந்தி 343-24 [‘ஆத்மா, ராஜ்யம், பொருள், நண்பர்கள், மனைவி, வாஹனங்கள் இவை யெல்லாம் பகவானுக்கு” என்று உபரிசர வஸுவினால் எப்போதும் நினைக்கப்பட்டது –
297-கதம் தஸரதாஜ் ஜாதோ பவேத்; ராஜ்யாபஹாரக: |
ராஜ்யம் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார் ஹஸி ॥ ரா அ -82-12-[தஸரதனிடமிருந்து பிறந்தவன் எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாவான்? ராஜ்யமும், நானும் ராமனுடையவை. நீர் இவ் விஷயத்தில் தர்மத்தைச் சொல்ல வேண்டும்
298-ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்நி,தம் |
உப,யோரேஷ ஸம்பந்தோ ந பரோ அபிமதோ மம॥-விஷ்ணு தத்வம் [உடைமையா யிருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள்ளது; உடையவனா யிருக்கும் தன்மை ப்ரரஹ்மத்தினிடமுள்ளது; இருவருக்கும் இதுவே ஸம்பந்தம்; வேறு ஸம்பந்தம் எனக்கு இஷ்டமன்று]
299-300-விஷ்ணு ஸம்ஸ்மரணாத் க்ஷீண ஸமஸ்த க்லேஸ ஸஞ்சய:। முக்திம் ப்ரயாதி ஸ்வர்க்கராப்திஸ் தஸ்ய விக்நோ அநுமீயதே ॥| வாஸுதேவே மநோ யஸ்ய ஐபஹோமார்ச்சந। இஷ தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்,ரத்வாதிகம் பலம்॥ -விஷ்ணு புராணம் -2-6-40-41-விஷ்ணுவை நினைப்பதினால் துக்க ஸமூஹங்களெல்லாம் நீங்கப் பெற்றவனாய், அவன் மோக்ஷத்தை அடைகிறான் -ஸ்வர்க்கத்தை அடைதல் அவனால் தனக்கு இடையூறாக நினைக்கப் படுகிறது. மைத்ரேயனே! ஜபம், ஹோமம், அர்ச்சனம் முதலியவைகளில் எவனுடைய மனம் வாஸுதேவனிடம் லயித்திருக்கிறதோ , அவனுக்கு தேவேந்திரனா யிருக்கை முதலிய பலங்கள் இடையூறாகவே ஆகின்றன.].
301- வாஸுதேவஸ்ய யே பக்தா: சாந்தாஸ் தத்கத மாநஸா:। தேஷாம் தாஸஸ்ய தாஸோஹம் பவேஜ்ஜந்மநி ஜந்மநி॥| (தேஷாஞ்ச தாதா தாஸ்யம் மே… என்றும் பாடம்: காண்கிறது.) [ஸாந்தர்களாயும் பகவானிடத்திலேயே மனத்தைச் செலுத்தி யவர்களாயுமிருக்கும், வாஸுதேவ பக்தர்கள் எவர்களுளரோ, இந்த ஆத்ம வஸ்துவானது, அவர்களுடைய தாஸனுக்கும் தாஸனாக, ஜன்மந் தோறும் ஆகக் கடவது –
302-பஸ்யேம ஸரதஸ் ஸதம் । -மாத்யாஹ்னிக மந்த்ரம் [நூறு வருஷங்கள் (உன்னைப்) பார்க்கக் கடஸ்
303-ஸோ அப்யேநம் த்வஜ வஜ்ராப்,ஜக்ருத சிஹ்நேந பாணிநா । ஸம்ஸ்ப்ருஸ் யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாட,ம் பரிஷஸ்வஜே!॥ .வி-பு 5.18.2--[அந்தக் க்ருஷ்ண பகவானும், இந்த அக்ரூரனை, கொடி, வஜ்ரம், தாமரை இவைகளால் அடையாளம் செய்யப் பட்ட திருக்கையால் தொட்டு இழுத்து, அன்புடன் நன்ராகத் தழுவிக் கொண்டான் –
304-அலமத்ய ஹி புக்தைர் ந: பரமார்த்தைரலஞ்ச ந:! யத; பஸ்யேம நிர்யாந்தம் ராமம் ராஜ்யே ப்ரதிஷ்டிதம் ॥ ததோ ஹி ந: ப்ரிய தரம் நாந்யத் கிஞ்சித் பவிஷ்யதி || ரா -அ -17-10-[உண்பது முதலிய இவ்வுலக போகங்களும் வேண்டிய தில்லை; மோக்ஷம் முதலிய மேலான போகங்களும் வேண் டியதில்லை, ராஜ்யத்தில் அபிஷேகம் செய்யப் பட்டவரும் ஊர்வலம் வருகின்றவருமான ராமனைக் காண்பதைக் காட்டி லும் மேலான ப்ரியம் நமக்கு வேறொன்றும் இல்லை –
305-த்வமிந்த்ரஸ் ஸத்யமேவைதத் தேவஸ் த்ரிபுவநேஸ்வர: | த்வயா $பி ப்ராப்தமைஸ்வர்யம் யதஸ்தம் தோஷயாம் யஹம்॥ -விஷ்ணுதர்மம் 2-14-[நீ இந்திரனே; இது உண்மையே; நீ தேவன் தான்; மூவுலகங்களுக்கும் ஈஸ்வரன் தான். (ஆனால்) உன்னாலும் எவனிடமிருந்து செல்வம் அடையப்பட்டதோ, அவனையே நான் ஆராதிக்கிறேன்-
306-ஏதே வை நிரயாஸ்தாத! ஸ்தாநஸ்ய பரமாத்மந: –சாந்தி -195-6-குழந்தாய்! பரமாத்மாவினுடைய இருப்பிடத்திற்கு ஒப்பிடும் போது இந்த ஸ்வர்க்கம் முதலியவை யெல்லாம் நரகங்களாகின் றன.]
307-ஸம்ஸ்மராம்யஸ்ய வாக்யாநி ப்ரியாணி மதுராணி ச। ஹ்ருத்யாந் யம்ருத கல்பாநி மந:ப்ரஹ்லாதநாநி ச ॥ ரா -ஆ -16-39-[பிரியமாயும், இனியவையாயும், ஹ்ருதயத்திலிருந்து வெளி வருபவையாயும், அம்ருதம் போன்றவையாயும், மனத்தை உகப்பிப்பவையா யுமுள்ள அந்த பரதனுடைய வாக்கியங்களை நினைக்கிறேன்-
308-த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம। பரதேந மஹாபாஹோ! லக்ஷமணேந யவீயஸா। ஸத்ருக்நேந ச ஸத்ருக்,ந! ஸ்வ ஸரீரேண வா புந:॥-ரா -யு -41-4-[நீண்ட கைகளை யுடைய ஸுக்ரீவனே! உனக்கு ஏதாவது அவமானம் கேர்ந்ததாகில் ஸீதையால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? பரதனாலும், இளையவனான லக்ஷ்மணனாலும், சத்ருக்னனாலும் என்ன ப்ரயோஜனம் ?: சத்துருக்களை அழிப்பவனே | என்னுடைய ஸரீரத்தினால் தான் என்ன ப்ரயோஜனம்]
309-ந தேவலோகா க்ரமணம் நாமரத்வமஹம் வ்ருணே | ஐஸ்வர்யம் வா5பி லோகாநாம் காமயே ந த்வயா விநா॥ ரா -அ -31-5-[நித்ய ஸூரிகள் வாழும் உலகான ஸ்ரீவைகுண்ட,த்தில் வாழ்ச்சியையும், கைவல்யத்தையும், உலகங்களிலுள்ள ஐஸ்வர்யத்தையும் உன்னைப் பிரிந்த நான் விரும்ப மாட்டேன்
310-யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவே அப்யநாஸ்யம்
தத் கில்பி,ஷம் ஸ்ருஜதி ஜந்துரிஹ க்ஷணார்த்தே, । வைகுண்ட ஸ்தவம் -60-[யாதொரு பாபம், பல்லாயிரம் ப்ரஹ்ம கல்பங்கள் அனுபவித்தாலும் நஸிக்காதோ, அந்தப் பாபததை இந்த ஜந்து (ஜீவன்) இங்கு அரை க்ஷண நேரத்தில் செய்கிறான் –
311-ஆஹார நித்ரா பயமைதுநாநி துல்யாநி கூல்வத்ர ஸமஸ்த ஜந்தோ: |
ஜ்ஞாநாத், விஸிஷ்டோ ஹி நர: பரேப்யோ ஜ்ஞாநேந ஹீந: பஸுபிஸ் ஸமாந: ॥| நரஸிம்ஹபுராணம் 16-13-[ஆஹாரம், நித்திரை, பயம், ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் என்பவை இங்கு எல்லா ஜந்துக்களுக்கும் ஸமானம். மற்றவைகளைக் காடடிலும் மனிதன் அறிவினால் மேலானவனாயிருக்கிறான். ஞான மற்றவன் பசுக்களுக்கு ஸமானமானவன்.
312-ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட, தத்தமஸ்யாபயம் மயா। விபீஷணோ வா ஸுக்ரீவ! யதி, வா ராவண: ஸ்வயம் ॥ ரா-யு 18-34-[வானரர்களுள் சிறந்தவனான ஸுக்ரீவனே! இவனை அழைத்துவா; விபீஷணனாயிருந்தாலும், ராவணன் தானே யாயிருந்தாலும், இவனுக்கு என்னால் அப,யமளிக்கப் பட்டது –
313-கச்சாநுஜாநாமி ரணார்த்தி,தஸ் த்வம் ப்ரவிஸ்ய ராத்ரிஞ்சரராஜ லங்காம் -ஆஸ்வாஸ்ய நிர்யாஹி ரதீ ச தந்வீ ததா பலம் த்ரஷ்யஸி மே ரதஸ்த; ॥|-ராயு 59-144, * [ராக்ஷ்ஸ ராஜனே! நீ யுத்தத்தில் களைப்படைந்து விட்டாய்; திரும்பிப் போ நானே அணுமதிக்கிறேன். லங்கையில் நுழைந்து, களைப்பாற்றிக் கொண்டு, ரதத்தையுடையவனாக வும், வில்லையுடையவனாகவும் திரும்பி வா. ரதத்திலிருந்து கொண்டு அப்போது என்னுடைய பலத்தைப் பார்ப்பாய் —
314-விஸ்ருஷ்டம். பகதத்தேந தத,ஸ்த்ரம் ஸர்வகாதுகம் !
உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸஞ்சாத்வ மாதவ:॥ -பார.தி–33:18,[பகதத்தனாலே விடப்பட்டதும், எல்லாவற்றையும் ஸம் ஹரிப்பதுமான அந்த பாணத்தை, அர்ஜுனனை மறைத்து, மாதவன் மார்பினாலே தரித்தான் –
315-விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞம் ஸரணாகத வத்ஸல: | தேந மைத்ரீ பவது தே யதி, ஜீவிதுமிச்சஹி ||-ரா-ஸு 21-20. ஸீதா வாக்யம் [(ராவணா!) ஸ்ரீராமபிரான் தர்மத்தை அறிந்தவராகவும், ஸரணமடைந்தவரிடம் வாத்ஸல்ய முடையவராகவும் பிரஸித்த மானவர். நீ உயிர் வாழ விரும்பினாயாகில் அவருடன் உனக்கு நட்பு உண்டாகட்டும்.
316-ஸகே,! ராகவ! தர்மஜ்ஞ! ரிபூணாமபி வத்ஸல ! | அப்யநுஜ்ஞாது மிச்சாமி கமிஷ்யாமி யதாக,தம் ||-ரா-யு 50-56, கருட வாக்யம், [நண்பரே! ரகு குலத்தில் உதித்தவரே! தர்மத்தை அறிந்தவரே ! சத்துருக்களுக்கும் வாத்ஸல்யத்தை உடையவரே! விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். வந்தவாறே போய் விடுகிறேன் –
317-தாதூநாமிவ ஸைலேந்த்ரோ குணா நாமாகரோ மஹாந் –ரா-கி 15-21, தாரா வாக்யம் –[ஒரு சிறந்த மலை. தாதுக்களுக் கெல்லாம் இருப்பிடமா யிருப்பது போல், ஸ்ரீராமபிரானும் குணங்களுக் கெல்லாம் பெரியதோர் இருப்பிடமாவர் –
318-சதுர்முகராயுர் யதி, கோடி வக்த்ரோ பவேந்நர: க்வாபி விஸாுத்,த,சேதா: | ஸ தே குணா நாம யுதைகதேஸம் வதேந்ந வா தேவவர ப்ரஸீத, ॥வராஹ புராணம் 78-9[பல ப்ரஹ்மாக்களின் ஆயுளை உடையவனாய், கோடிக் கணக்கான முகங்களை உடையவனாய், மிகவும் ஸூத்தமான மனத்தை யுடையவனான ஒரு மனிதன் இருப்பானே யாகில், அவன் உன்னுடைய குணங்களில் பதினாயிரத்தில் ஒரு பங்கைச் சொல்லுவானோ மாட்டானோ அறியோம். தேவர்களில் சிறந்தவனே | அருள் புரிய வேண்டும் –
319-யாதாதத்,யேந வர்ணிதம்[உண்மையாக வர்ணிக்கப் பட்டது.]
320-பிதா அஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: | [நான் இவ் வுலகிற்குத் தந்தையாகவும், தாயாகவும், தாரகனாகவும், பிதா மஹனாகவும் இருக்கிறேன்
321-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாஞ்ச மங்களம் |
தைவதம் தேவதாநாஞ்ச பூதாநாம் யோவ்யய: பிதா ॥ ஸஹஸ்ர நாமாத்யாயம் [எந்த பகவான் பவித்திரங்களுள் பவித்திரனா யிருக்கிறானோ, மங்களங்களுள் மங்களமா யிருக்கிறானோ, தேவதைகளுக்கும் தேவதையாயிருக்கிறானோ, எவனொருவன் ஜீவ ராசிகளுக்கெல்லாம் அழிவற்ற தந்தையாயிருக்கிறானோ —
322- மந்மநா பவ மத் ப,க்தோ மத்,யாஜீ மாம் நமஸ் குரு |
மாமேவைஷ்யஷி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோ$ஸி மே -கீதை 18.65-[என்னிடத்தில் மனத்தை வைத்தவனாகவும், என்னுடைய பக்தனாகவும், என்னை ஆராதிப்பவனாகவும் ஆவாயாக, என்னை நமஸ்கரிப்பாயாக, என்னையே அடைவாய்; இது ஸத்யம். உனக்கு ப்ரதிஜ்ஞை செய்கிறேன். எனக்குப் பிரியனன்றோ நீ.]
323-ஸ்வோஜ்ஜீவநேச்சா யதி, தே ஸ்வ ஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி, |
ஆத்ம தாஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர॥-விஷ்ணு தத்வம் – [உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்ப மிருக்குமாகில், உன் இருப்பில் ஆசை யிருக்குமாகில், ஆத்மாவினுடைய தாஸனா யிருக்கும் தன்மையையும், ஹரியினுடைய ஸ்வாமியா யிருக்கும் தன்மையையும், (இவைகள்) இயல்வானவை யென்பதையும் எப்போதும் நினைப்பாயாக
324-அத,வா யோகி,நாமேவ குலே ப,வதி தீ மதாம் |ஏதத்தி , துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம் || கிதை 6-42,[அல்லது, புத்தி, மான்களான யோகிகளின் குலத்திலேயே (யோகத்திலிருக்து நழுவினவன்) பிறக்கிறான். இம் மாதிரியான பிறப்பு உலகத்தில் மிகவும் துர்லபமன்றோ –
325-ப்ராய ஸ : பாபகாரித்வாந் ம்ருத்யோருத்,விஜதே ஐந:। க்ருதக்ருத்யா: ப்ரதீ க்ஷந்தே ம்ருத்யும் ப்ரியமிவாதிதிம் ॥ -இதிஹாஸ ஸமுச்சயம் [பெரும்பாலும், பாபம் செய்பவனா யிருப்பதாலேயே மனிதன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறான். செய்ய வேண்டியதைச் செய்தவர்கள் மரணத்தைப் பிரியனான விருந்தாளியைப் போலே எதிர் பார்க்கிறார்கள் –
326-கோக்நே சைவ ஸுராபே ச சோரே பக்ந வ்ரதே ததர! நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி –. ரா-கி 34-12-பசுவைக் கொன்றவன், ஸுரா பானம் செய்தவன், வ்ரத பங்கம் செய்தவன், இவர்கள் விஷயத்தில் பெரியோர்களால் ப்ராயஸ் சித்தம் விதிக்கப்பட்டிருக்கிறது. செய்ந்நன்றி மறந்தவன் விஷயத்தில் ப்ராயஸ் சித்தமில்லை –
327-ஈஸ்வரோ$ஹமஹம் போகீ , ஸித்தோஹம் பலவாந் ஸுகீ –கீதை 16.14– | [நானே ஈஸ்வரன். நானே போகத்தை அடைபவன். நான் இயற்கையாகவே ஸித்தனா யிருப்பவன்; பலவானாகவும் ஸுகமுடையவனாகவு மிருப்பவன் நானே –
328–ராவணோ நாம துர் வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: | தஸ்யா ஹமநுஜோ ப்ராதா விபிஷண இதி ஸ்ருத: ॥ ரா யு 17.12,[கெட்ட நடத்தை யுள்ளவனாகவும், ராக்ஷஸர்களுக்கு அதிபதியாக வுமிருப்பவன் ராவணன் என்னும் ராக்ஷஸன். அவனுக்கு நான் இளைய ஸஹோதரன்; விபீஷணன் என்று பிரஸித்தி பெற்றவன் –
329-பிதா யஸ்ய புரா ஹ்யாஸீச் சரண்யோ தர்ம வத்ஸல: | தஸ்ய புத்ர: ஸரண்யஸ்ச ஸுக்ரீவம் ஸரணம் க,த:।! ரா -கிஷ் 4-19,[தர்மத்தில் பிரியமுள்ளவரான எவருடைய தந்தை முன்னொரு காலத்தில் சரணமடையத் தகுந்தவரா யிருந்தாரோ, அவருடைய புத்திரரும் சரண்யருமான ராகவர் ஸூக்ரீவனை ஸரணமடைந்தார் –
330-தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந் | ஷிபாம் யஜஸ்ரம ஸூபாநா ஸுரீஷ்வேவ யோநிஷு ||-கீதை -16-19–என்னைத் த்வேஷிப் பவர்களும், கொடூரமான வர்களும்,மனிதர்களுள் கீழ்மையான வர்களும், ஸூபமற்றவர் களுமான அவர்களை ஸம்ஸாரத்தில், அதிலும் ௮ஸுர யோனிகளில் எப்போதும் தள்ளுகிறேன்.
331-மத் பக்தம் ஸ்வபசம் வா$பி நிந்தாம் குர்வந்தி யே நரா: பத்,ம கோடி ஸ்தேநாபி ந க்ஷமாமி வஸுந்த ரே ॥--வராஹ புராணம்-பூதேவி! சண்டராளனா யிருந்த போதிலும், என்னுடைய பக்தனை : எந்த ஜனங்கள் நிந்தை; செய்கிறார்களோ, அவர்களை கோடிக் கணக்கான பத்ம காலங்களானாலும் பொறுக்கமாட்டேன்
332, ப்ரயத்நாத் யதமாநஸ்து யோகீ, ஸம் ஸூத்த,கில்பி,ஷ: | அநேக ஜந்ம ஸம் ஷித்தஸ் ததோ யாதி பராம் ௧,திம் ॥ -கீதை 6.45,-[ஆகையால், அநேக ஜனமங்களில் ஸித்;தி,யடைந்தவனும், பாபங்கள் நீங்கப் பெற்றவனுமான யோகி, முயற்சியுடன் யத்னம் செய்வானாகில் மேலான கதியை அடைவான்
333-ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ர ப,க்தாஸ் தபஸ்விந: | கிங்கரா மம தே நித்யம் ப,வந்தி நிருபத்,ரவா: || -பரம ஸம்ஹிதை-[எவர்கள் மேலான ப,க்தியை உடையவர்களோ, எவர்கள் ப்ரபத்தியாகிற தபஸ்ஸைச் செய்தவரோ, அவர்களே என்னுடன் ஸாயுஜ்யத்தை அடைந்து, ஸம்ஸாரமாகிற உபத்ரவம் நீங்கப் பெற்றவர்களாய், எப்போதும் எனக்குக் கைங்கர்யம் செய்பவர்களாகிறார்கள்-
334, தத் ப்ரூஹி வசநம் தே,வி ! ராஜ்ஞோ யத,பி காங்க்ஷிதம் | கரிஷ்யே ப்ரதிஜாநே ச ராமோ த்,விர் நாபியாஷதே ॥ -ரா-அயோ 18-90,-[அம்மா। அரசர் விரும்பிய தான அந்த வசனத்தைச் சொல்லுவாயாக, அப்படியே செய்கிறேன்; ப்ரதிஜ்ஞையும் செய்கிறேன். ராமன் இரண்டுவித,மாகப் பேசமாட்டா
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply