யத் பதாம் போருஹத் யாநவித் வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்து தாமுபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்-எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய யாமுனாசார்யரை வணங்குகிறேன் –
ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம் த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர தம் வந்தே யாமுநாஹ் வயம்-
ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –
இந்த ஸ்தோத்ர ரத்னத்தின் ஒவ் ஒரு ஸ்லோகமும் வேதாந்தப் பொருளைகளையே விளக்கி அருளும் பண்டிதரோடு பாமரர்களோடு வாசியற மதுரமாக -போக்யமாக -உபநிஷத்துக்கள் பொருள்களை அருளிச் செய்த எதிகட்க்கு இறைவன் யமுனைத் துறைவனை வணங்குகிறேன்-யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவருமான ஸ்ரீ ஆளவந்தாரை வணங்குகிறேன். என்கிறது இந்த தனியன்
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம–அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-ஆதார அதிசயத்தாலே ஸ்ரீ ஆளவந்தாருக்கு நமஸ்காரம் என்று பலகாலும் சொல்லி வணங்குவது-ஸ்ரீ ஆளவந்தாரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். -என்னால் அவரை வணங்குவதை நிறுத்த முடியவில்லை.-
ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –
அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத-
–
ஸ்லோகம் -31-அவதாரிகை –இதில் – கண்ணால் காணும் அளவும் போறாது-படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் மொழி -9-2-2–என்றும்-கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்றும் சொல்லுகிறபடியே உன் திருவடிகளாலே என் தலையை அலங்கரிக்க வேண்டும் –என்கிறார் –
கதா புநஸ் சங்க ரதாங்க கல்பக
த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்
த்ரிவிக்ரம த்வச் சரணாம் புஜத்வயம்
மதிய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி—31-
த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.
த்ரிவிக்ரம–மூவடி நிமிர்த்தி மூ வுலகு அளந்த பெருமானே
சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம்-சங்கு சக்கரம் கற்பக வ்ருக்ஷம் கொடி
தாமரைப்பூ மாவட்டி வஜ்ராயுதம் இவற்றை அடையாளமாக உடைய
த்வச் சரணாம் புஜத்வயம்-உனது திருவடித் தாமரை இணைகள்
மதிய மூர்த்தாநம் -கதா புநஸ் -அலங்கரிஷ்யதி—எனது தலையை எப்போது அலங்கரிக்கப் போகிறது
கதா புநஸ் –-திருவடிகளில் உண்டான பிராப்தியையும் சௌலப்யத்தையும் போக்யதையையும்
அனுசந்தித்து -அத்தாலே வந்த த்வரையாலும் விளம்ப ஹேது இல்லாத உபாயத்தைப் பரிக்ரஹித்தவர் ஆகையாலும் பின்னை எப்போது செய்வது -என்கிறார் –சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்த அங்குஸ வஜ்ர லாஞ்சநம் –-சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்ய ஸூசகமாய் –-என் தலைக்கு ஆபரணமான சங்க சக்ராதி லஷணங்களாலே லிகிதமாய் உள்ளத்தை –-அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது –-பாத விலச்சினை வைத்தார் -என்னக் கடவது இறே –என் சென்னி -பெரியாழ்வார் திரு மொழி -5-2-8-இத்யாதி –த்ரிவிக்ரம –-குணாகுண நிரூபணம் பண்ணாதே-திருவடிகளில் வை லஷண்யமும் பாராதே எல்லார் தலையிலும் வைக்குமவன் அல்லையோ –தவச் சரணாம் புஜத்வயம் –
இப்படி பிராப்தனுமாய் ஸூலபனுமான உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-மதிய மூர்த்தாநம் -அலங்கரிஷ்யதி-என்னுடையதான ஸிரஸ்ஸிலே எப்போது அலங்கரிக்கப் புகுகிறாய்
என் தலை மேலவே -திரு நெடும் தாண்டகம் -1- என்று-அபகர்ஷம் சொல்லிற்று-நரக ஹேதுவான பதார்த்தங்களின் கால் காண பிரார்த்தித்துப் போந்த என் தலையை -என்னுதல்-இதுக்கு பிராப்தனாய் போந்த என் தலையை -என்னுதல்-பதி வ்ரதைக்கு மங்கள ஸூத்ரம் போலே இறே சேஷ பூதனுக்கு திருவடிகள் –-மே மூர்த்நி பாதி என்று தன் தலையிலே நீர்மைக்கு உடலாக ஸ்வ சம்பந்தம் அத்தலைக்கு ஏற்றமாகச் சொன்னார்-இங்கு தத் சம்பந்தமே இத்தலைக்கு ஏற்றம் -என்கிறார் ஸ்வ சேஷத்வ சித்திக்காக-(நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் –என்றும் –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும் –-அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா யுன் கோலப் பாதம் -என்றும் – இந்த விபூதியில் பேறு கிடைக்க என்றும் –
திரு நாட்டிலே புகுந்து அப்ராக்ருத தேகத்தை பெற்று பர வாசு தேவனுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாக பெற த்வரிக்கிறார் -என்றுமாம் -)
கீழே திருவடித் தாமரைகளைக் கண்ணாலே எப்போது காணப் போகிறோம் என்றார் – அவ்வளவில் திருப்தி பெறாதே-நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-கோலமாம் என் சென்னிக்கு கமலம் அன்ன குரை கழலே-அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம்-ஸ்ரீ பரதாழ்வானுக்கு கிட்டிய பேறு பாவியேனுக்கும் கிடைக்க வழி யுண்டோ என்கிறார்-இந்த விபூதியிலேயே பிரார்த்தனை என்றும்-பர வாஸூதேவனுடைய பாதார விந்தங்களை அங்கு ஸீரோ பூஷணமாகப் பெறப் போவது என்றோ என்கிறார் என்றுமாம்-அவனுக்கு ஐஸ்வர்ய ஸூசகமாய் ஆகர்ஷகமுமாய் – திருவடிகளோட்டை சம்பந்தத்தாலே இவர் தலைக்கு சேஷத்வ லஷணமுமாய் ஆபரணமுமாய் இறே இருப்பது
சங்கு சக்கரத்தினோடு ஸரோருகம் த்வஜம் சார்ந்த
வங்குசம் வயிரம் கற்ப தரு முதலாகும் சின்னம்
தங்கு நின் தாமரைத் தாள் விக்ரம என் சிரத்தைப்
பொங்கும் என் மனம் களிப்பப் புனையும் நாள் எந்த நாளோ –31-எல்லாருடைய சிரஸ்ஸுக்களிலும் உன் திருவடியை அமர்த்தி அருளிய ஏ த்ரி விக்ரமனே-சங்கம் சக்கரம் பத்மம் த்வஜம் அங்குசம் வஜ்ரம் கற்பம் இவை முதலியவற்றின் உபய விபூதி சாம்ராஜ்யத்தை குறிக்கின்ற திவ்ய ரேகைகளையுடைய உன் திருவடிகள் என் மனம் பொங்கிக் களிக்குமாறு எப்பொழுது என் சிரஸ்ஸை அலங்கரிக்கப் போகின்றவோ –
—
ஸ்தோத்ரம் -32- அவதாரிகை –இந்த ஸ்லோகம் முதலாக-பவந்தம் -ஸ்லோகம் -46- அளவும்-பர்வ க்ரமத்தாலே-அவயவ-ஆபரண-ஆயுத-மகிஷி-பரிஜன பர்ச்சேதங்களோட்டை சேர்த்தி அழகை அனுபவித்து-அனுபவ ஜனித ப்ரீதி காரிதமான கைங்கர்யத்தாலே உன்னை உகப்பிப்பது எப்போது -என்கிறார் –-இத்தால் தம்முடைய ப்ராப்யத்தை அருளிச் செய்கிறார்-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்திர் பாகவதைஸ் சஹ – என்று இறே வஸ்து இருப்பது –(வைகுண்டே, து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்த,ம் ஜக,த்பதி:। ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா ப,க்தைர் பாகவதைஸ் ஸஹ॥ [மேலான உலகமான வைகுண்டத்தில். அதை நினைக்க வொண்ணாத ஸ்வரூபத்தை உடையவருமான விஷ்ணு, ப,க்தர்களுடனும், பாக,வதர்களுடனும் கூடியவராய், ஸ்ரீதேவியுடன் கூட எழுந்தருளியிருக்கிறார்)இதன் மூலம், ஆளவந்தார் பகவானுக்குப் பரமபதத்தில் அடியார்களுடன் கூடி இருந்து கைங்கர்யம் செய்யும் குறிக்கோளை அருளிச் செய்கிறார்.
விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்
நிமக்ன நாபிம் தநு மத்யம் உந்நதம்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–32-
எம்பெருமான் ஒளிவிடும் திருப் பீதாம்பரத்தை அணிந்துள்ளான்;
மலர்ந்த காயாம்பூவின் நிறத்தைப் போன்ற தோஷமற்ற ஒளியுடையவன்;
ஆழமான திருநாபி மற்றும் மெலிந்த இடைப்பகுதியை உடையவனாகச் சிறந்து விளங்குகிறான்,
ஒளிவிடும் ஸ்ரீவத்ஸம் என்கிற மறுவைத் தன் பரந்த திருமார்பில் உடையவன்-
விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்–விளங்கிக் கொண்டு இருக்கிற மிகவும் பிரகாசமான
பீதாம்பரத்தை யுடையவனாயும்-உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று-திருவரை பூத்தால் போலே இருக்கிற திருப் பீதாம்பரம்-விராஜமானே உஜ்ஜ்வல-இரண்டு விசேஷணங்கள்-இயற்கையான சோபா பிரகாசமும் –-நீல நிற திவ்ய மங்கள விக்ரஹ சேர்த்தியால் உண்டான பர பாக சோபையும்
ஸ்மித அதஸீ ஸூந அமலச்சவிம்–மலர்ந்த காயாம்பூப் போன்ற நிர்மலமான ஒளியை உடையவனாயும்
காயம் மலர் நிறவா-பூவைப்பூ வண்ணா–நிமக்ன நாபிம் -ஆழ்ந்த திரு நாபியை உடையவனாயும் –
ஸுவ்ந்தர்ய அமுத வெள்ளம் நான்கு புறமும் ஓடி வந்து இங்கு சுழித்துக் கிடக்குமே–தநு மத்யம் -நுட்பமான இடையை உடையவனாயும் அனைத்து உலகுக்கும் இருப்பிடமாய் இருக்கும் உதரம் க்ருசமாய் இருக்கின்றதே என்று ஆச்சர்யப்பட வைக்குமே-உந்நதம்-உயர்ந்தவனையும் –இவ்வடிவாலும்-உடையாலும் அழகாலும்-சர்வாதிகன் என்று தொடரும்படி திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம்–விசாலமான திரு மார்பிலே விளங்குகின்ற ஸ்ரீ வத்சம் என்கிற மறுவை உடையவனாயும் இருக்கிற-திரு மறு மார்பன் – இப்படி உள்ள உன்னை என்று நான் அனுபவிக்கப் போகிறேன் –
விராஜமானே –-திருவடிகளைத் தலையிலே வைக்க அமையுமோ -என்ன-அவ்வளவு போராது -என்று
சாமான்ய ஸோபையை அனுபவிக்கிறார்-விராஜமான திரு நிறத்துக்கு பரபாகமான அழகு–உஜ்ஜ்வல –
மாஹார ரஜனம் -(மாஹாரஜநம் வாஸ:(பரமாத்மாவுக்கு) ஆடை பீதாம்பரம்)என்கிற ஸ்வரூபத்தாலே வந்த ஔஜ்ஜ்வல்யம்-உடையார்ந்த ஆடை -திருவாய்மொழி -3-7-4-என்று திருவரை பூத்தால் போலே இருக்கிற அழகு –பீத வாஸஸம் ––பீதக வாடை யுடையான் -என்று அழகே அன்றிக்கே ஐஸ்வர்ய ஸூசகமமாய் இருக்கை –ஸ்மித அதஸீ –-அலருகிற போதை செவ்வியை உடைத்தான-காயம் பூப் போலே இருக்கை –-அத ஸீ புஷ்ப சங்காஸம் ––காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை -பெருமாள் திருமொழி -1-2-என்று அபியுக்தர் ஆழம் கால் படும் நிலம் இறே-(அதஸீ புஷ்ப ஸங்காஸம் பீதவாவாஸ ஸமச்யுதம் |யே நமஸ்யந்தி கோவிந்த,ம் ந தேஷாம் வித் வதே ப,யம்। [அடியவர்களை நழுவவிடாதவனும், காயாம் பூவைப் போன் றவனும், பீதாம்பரத்தை யுடையவனுமான கோவிந்தனை எவர்கள் நமஸ்கரிக்கிரார்களோ அவர்களுக்கு பயமில்லை)-ஸூந அமலச்சவிம் –-தோஷம் அற்ற காந்தியை உடையவனாயும்-நிமக்ன நாபிம் – ஆவர்த்த இவ கங்காயா -(ஆவர்த்த இவ க,ங்காயா: [கங்கையின் சுழல் போன்றிருக்கும் (திரு நாபி)என்கிறபடியே சௌந்தர்ய வெள்ளம் சுழித்தால் போலே இருக்கிற திரு நாபியை உடையவன்-நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி -பெரியாழ்வார் திருமொழி -1-3-8-என்னக் கடவது இறே-தநு மத்யம் –சிற்றிடையும் வடிவும் -திருவாய் மொழி -5-5-8–துடி சேர் இடையும் -திருவாய்மொழி -8-5-3-என்னக் கடவது இறே-உந்நதம்--இவ்வடிவாலும் உடையாலும் அழகாலும் சர்வாதிகனாய் இருக்கிற இருப்பு தோற்றும்படி இருக்கை –விஸால வஷச் ஸ்தல ஸோபி லஷணம் –-விஸ்தருதமான திரு மார்பிலே விளங்கா நிற்பதான ஸ்ரீ வத்ஸ சிஹ்னம் உடைய -உன்னை-
(இது முதல் –14-ஸ்லோகங்களால் விசேஷணங்களை அருளிச் செய்து அனுபவித்து-46-ஸ்லோகத்தில் -க்ரியா பதம் -பவந்தமே வாநுசரன்—-நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–என்று அணுகி –
கைங்கர்யம் செய்து -உன்னை உகப்பிப்பது என்றைக்கோ -என்கிறார்–இப்படி அனுபவித்துக் கொண்டு கைங்கர்யங்களைச் செய்து உன்னை உகப்பிப்பது என்றைக்கோ – என்று தலைக் கட்டுகிறபடி -இவை குளகம் -என்பர்-விராஜமானே உஜ்ஜ்வல பீதவாஸஸம்-இரண்டு விசேஷணங்கள்–இயற்கையான சோபையையும் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேர்ந்த பரபாக சோபையையும் காட்டும் –-அதஸீ ஸூ நம் -என்றது –காயம் பூ -பூவைப் பூ -–)
விந்தையுடன் திருவரை யது பூத்தது எனச் சுடர் வீசு பொன் அம்பரமும்
அந்தமுடன் அலர் காயாம்பூ நிற வாசறு மேனியும் யுன்னதமும்
சுந்தர வாழி சுழன்றது எனச் சுழற் ஆழ்ந்திடும் உந்தியும் சிற்றிடையும்
சந்தமுடன் தட மார்வம் விளங்குவதாம் மறு ஓன்று தரிப்பவனாய் –32—திருவரையே பூத்தது என்று சொல்லும்படி வெகு ஆச்சர்யமாயும் அழகாயும் ப்ரகாசிக்கும் பீதாம்பரத்தையும்-அலர்ந்த காயாம்பூவைப் போன்ற நிர்மலமான திரு மேனியையும்-அழகு என்னும் கடலில் சுழல் யுண்டாக்கியது என்னும் படி அழுத்திச் சுழல் கொண்ட திரு நாபி கமலத்தையும்-சிற்று இடையையும் விசால மார்வில் பொலிவுடன் விளங்குகின்ற ஸ்ரீ வத்ஸம் என்னும் ஒரு மறுவையும் தரித்து உன்னதமாய்ப் ப்ரகாசிப்பவனாய் –
—
ஸ்தோத்ரம் -33- அவதாரிகை –திருத் தோள்களில் சௌர்ய வீர்யாதிகளையும் அழகையும் அனுபவிக்கிறார்-திருப் பீதாம்பரத்தைப் பிடித்து திரு மார்பு அளவும் வந்தார் கீழ் – திரு மார்பில் இருந்து திருத் தோள் அழகில் -ஐஸ்வர்ய வீர்யங்களையும் அழகையும் அனுபவித்துப் பேசுகிறார்-இப்படித் திகழும் உன்னை என்று அனுபவிக்கப் போகிறேன் –
சகாஸதம் ஜ்யாகிண கர்க்கசைஸ் ஸூபைஸ்
சதுர்ப்பிர் ஆஜாநு விளம்பிபிர் புஜை
ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண
ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–33-
வில்லில் நாணேற்றியதால் கடினமாக இருக்கும் நான்கு திருக் கைகளால் ஒளிவிடுகிறான் எம்பெருமான்; மேலும் அவனுடைய திருத்தோள்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் காதுகளில் அணிந்திருக்கும் கரிய நிறத்தில் இருக்கும் அல்லிப் பூக்கள், அவளின் காதணிகள் மற்றும் அலையும் கூந்தலின் அடையாளங்கள் தெரிகின்றன –
ஆஜாநு விளம்பிபிர் –திரு முழந்தாள் வரை தொங்குகின்றவைகளாயும்
ஜ்யாகிண கர்க்கசைஸ்–நாண் தழும்பு ஏறிக் கரடுமுரடாய் இருப்பவைகளாயும்-வீரச் செயலின் பெருமையை –தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவா மங்கை –-விபவத்தில் பெற்ற தழும்புடன் பர வாஸூ தேவன் இடமும் விளங்குவதாக அனுசந்திக்கிறார்-ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி–பிராட்டிமார்களுக்குக் கரண அலங்காரமான-கரு நெய்தல் மலர் என்ன-கரண பூஷணங்கள் என்ன -அலைந்த திருக்குழல் கற்றை என்ன -ஆகிய இவை-பிராட்டி அணைக்கும் பொழுது அழுந்தி இருக்கிற படியைத் தெரிவிக்கின்றவைகளாயும்-ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்-அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு
ப்ரணய சிஹனங்களும்-ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்-ஸூபைஸ்-அழகியவைகளாயும் -ஓவ்தார்யம் வீர்யம் ஸுவ்ந்தர்யம்-எல்லாம் அமைந்து உள்ளவை-சகாஸதம் சதுர்ப்பி ராபுஜை–நான்கு புஜங்களோடே பிரகாசியா நிற்கிற பர வாஸூ தேவனுக்கும் சதுர் புஜத்வம் பிராமண சித்தம்
சகாஸதம்-ப்ரகாசிப்பவனாகவும்-ஜாகிண கர்க்கசைஸ் – நாண் தழும்பு ஏறிக் கரடு முரடாய் இருப்பவையும்- தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்தவா மங்கை -முதல் திருவந்தாதி -23-என்கிறபடியே-ஸ்ரீ சார்ங்கத்தில் நாணித் தழும்பாலே அலங்க்ருதமான திருத் தோள்கள் –
நாணித் தழும்பு எல்லாவற்றிற்கும் உண்டாகையாலே-ஸ்வ்யவாசி -என்கை -இடது கைகளாலும் அம்பு விடுபவன்-ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து-தழும்பை யுடைத்தான திருத் தோள்கள் வீரத் தழும்பு வீர புஜங்களுக்கு அழகு இறே-ஸூபைஸ் – ஸூபேந மனஸா த்யாதம் -(ப்ருந்தாவநம் ப,க,வதா க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா |-மே.ந மநஸா த்,யாதம் கவாம் வ்ருத்தி மபீ,ப்ஸதா।॥! [கல்யாண கு,ணங்கள் நிறைந்தவனும், பெருங்காரியங்களையும் எளிதாகச் செய்பவனும், பசுக்களின் வ்ருத்தியை விரும்புபவனுமான க்ருஷ்ணனால் ப்ருந்தாவனமானது, ஸூபமான மனத்தினால் நினைக்கப் பட்டது )என்னுமா போலே ஆஸ்ரித சம்ருத்தியே பிரயோஜனமாக வெறும் புறத்திலே உபகரிக்கும் தோள்கள் -என்னுதல் ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமான தோள்கள் -என்னுதல் –சதுர்ப்பிர் –கல்பக தரு பணைத்தால் போலே-ஆஸ்ரித ரஷணமே விளை நீராக பணைத்த படி –-ஆஜாநு விலம்பிபிர் –-முழம் தாள்கள் வரை தொங்குகின்றவையும்-ஆஜாநு பாஹூவாய் இருக்கை இறே-புருஷோத்தம லஷணம்–ப்ரியாவதம் ஸோத் பல கர்ண பூஷண-ஸ்லதாலகா பந்த விமர்த்த ஸம ஸிபி ––ப்ரிய அவதம்ஸ் உத்பல கர்ண பூஷண ஸ்தல அல்கா பந்த விமர்த்த ஸம்ஸிபி –-ஆஸ்ரித ரஷணமே யாத்ரையாம்படி சொல்லிற்று -கீழ்-அதுவே பச்சையாக பிராட்டி அணைக்கும் படி சொல்லுகிறது இங்கு-பிராட்டி திருச் செவி மலரான உத்பலம் என்ன-கர்ண பூஷணம் என்ன-ஸ்பர்சத்தாலே தத் காலத்தில் கிஞ்சிதா குஞ்சிதமான திருக் குழல் கற்றை என்ன இவற்றின் உடைய ஸ்ம்மர்த்ததைக் கோள் சொல்லுமவையாய் அவற்றாலே விளங்கா நின்று உள்ளவனை
ஸ்யனே சோத்த மாங்கே ந ஸீதாயா ஸோபிதம் புரா -யுத்தம் -21-5-(ஸயநே சோத்தமாங்கே,ந ஸீதாயா: ஸோபி,தம் புரா। [படுக்கையில் ஸீதா பிராட்டியின் தலையாலே முன்னெல்லாம் பிரகாஸியா நின்றதான திருக் கையை)என்கிறபடியே வீர புஜத்தை இறே வீர பத்னி அணைவது அல்லாத போது சஜாதீயை யான ஸ்திரீயை அணைத்த வோபாதி இறே ப்ரணய சிஹனங்களும் ரஷண சிஹனங்களும் இறே திருத் தோள்களுக்கு மாங்கள்யம்–சகாஸதம் –-இப்படிப் பட்ட தோள்கள் இறே-நாராயண பிரணயி யானவனுக்கு ஔஜ்ஜ்வல்ய ஹேதுக்கள்-(பரத்வ திசையிலும் அவதார திசையிலும் திவ்ய மங்கள விக்ரஹத்தில் பேதம் இல்லாமல் தழும்புகள் இருக்கும் என்பதே ஆளவந்தார் திரு உள்ளம்-பிராட்டி திருக் கைகளை தலை அணையாக வைத்து கண் வளர்ந்து அருளும் போது திவ்ய ஆபரணங்கள் அழுந்திய தழும்பும் திருக் குழல் கற்றை பரிமளமும் திருத் தோள்களில் ப்ரத்யக்ஷம் ஆகுமே )
பத்த விரோதிகள் பட்டற வேந்து வில் நாணியின் சுவடு படிந்து உளவா
யுத்தம புருட விலக்ஷண முற்று முழந்தளவாய்ச் சுப ஸூசிகையாய்
அத்திருவின் செவி யலர் மலர் உத்பலமும் இழையும் மவிழ் பின்னகமும்
ஒத்தி யுறுத்தியது என்ன ஒளிர் தரு மென்மையில் நான்கு புயத்தவனாய் –33–ஆஸ்ரித விரோதிகளைக் களையும் பொருட்டு தரித்த சார்ங்கத்தின் நாணினால் யுண்டான தழும்பு படிந்துள்ளவனாய்
உத்தம புருஷ லக்ஷணமாக முழங்கால் வரைக்கும் நீண்டவனாய் பக்தர்களுக்கு மங்கள கரமானவையாய் அந்த மஹா லஷ்மியினுடைய திருச்செவி மலரான உத்பலமும் கரண ஆபரணங்களும் அவிழ்ந்து இருக்கும் திருக் குழல் கற்றையும் ஆகிய இவைகள் உறுத்தினது தோற்றும்படி ப்ரகாசிக்கும் மிருதுவான நான்கு திருத் தோள்களையும் யுடையவனாய்
—
ஸ்தோத்ரம் -34- அவதாரிகை –திருத் தோள்களுக்கு அனந்தரமான-திருக் கழுத்தையும்
தத் அனந்தரமான திரு முகத்தில் சாமான்ய ஸோபையையும் அனுபவிக்கிறார்-திருத் தோள்களில் இருந்தும் திருக் கழுத்தைப் பற்றுகிறார்-கழுத்தில் மூன்று ரேகைகள் இருப்பது புருஷோத்தம லக்ஷணம் -எனவே சங்கு உவமை–-சங்குக்கு வட மொழி -சொல் -கம்பு —-கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் அமைந்த கழுத்து –
உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல
அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்
முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா
அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–34-
எம்பெருமான் அணிந்திருக்கும் குண்டலங்கள் அவனுடைய உயர்ந்த திரண்டிருக்கும் திருத் தோள்களின் வரை வந்து தொங்குவதாலும்,-அவனுடைய சுருண்ட கூந்தலினாலும், மூன்று வரிகள் இருப்பதாலும் அவனுடைய திருக் கழுத்து அழகாக இருக்கிறது. தன்னுடைய திருமுக மண்டலத்தின் ஒளியால் தோஷமற்ற நிலவு மற்றும் அப்போதலர்ந்த தாமரை மலரை ஜயித்திருக்கிறான் —
உதக்ர பீன அம்ஸ விலம்பி குண்டல-அலக ஆவளீ பந்துர கம்பு கந்தரம்-உயர்ந்தும் பருத்தும் இருக்கிற
திருத் தோள்கள் வரையில் தொங்குகின்ற திருக் குண்டலங்களாலும் திருக் குழல் கற்றைகளாலும்
அழகு பெற்றுச் சங்கு போல் விளங்குகின்ற திருக் கழுத்தை உடையவனாய்
முக ஸ்ரீ யா –திரு முகத்தின் காந்தியினால்
ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம்–பூர்ணமாய் நிர்மலமான
சந்த்ர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையையும் திரஸ்கரித்து மிக விளங்கா நிற்கிற –-எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது
உதக்ர பின அம்ஸ விலம்பி குண்டல அலக ஆவளீ –-ஓங்கித் தசைத்து இருந்துள்ள அம்ஸ்த்திலே வரத் தாழ்ந்த திருக் குண்டலங்கள் -என்ன அவ்வளவு வரத் தாழ்ந்த திருக் குழல்கள் -என்ன இவற்றாலே சுந்தரமாய்-வடிவு தான் ரேகா த்ரயாங்கிதமாய் இருந்துள்ள திருக் கழுத்தை உடையவனை –பந்துர-
சுந்தர ரேகா த்ரயாங்கிதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே –-மின்னு மணி மகரக் குண்டலங்கள் வில் வீச -பெரிய திருமடல் -2–மகரம் சேர் குழை இருபாடு இலங்கி யாட -திரு நெடும் தாண்டகம் -21-என்றும்-சொல்லுகிறபடியே (ரேகாத்ரயாங்கதா க்ரீவா கம்பு க்ரீவேதி கத்யதே | [மூன்று ரேகை,களால் அடையாளம் செய்யப்பட்ட கழுத்து ‘கம்புக்ரீவா” என்று சொல்லப்படுகிறது)திருக் கழுத்துக்கு பர பாகமான ஒளியை யுடைத்தாய் இரண்டு ஆதித்யர்கள் ஆபரண வேஷத்தாலே அலங்கரிக்கிறாப் போலே இருக்கை –-கொள்கின்ற கோள் இருளை -திருவாய்மொழி -7-7-9-இத்யாதிப் படியே திருக் குழலாலே அலங்க்ருதமாய் இருக்கிறபடி–முக ஸ்ரீ யா ந்யக்ருத பூர்ண நிர்மலா அம்ருதாம் ஸூ பிம்பாம்புருஹ உஜ்ஜ்வல ஸ்ரீயம் –-அத் திருக் குழலாலே அழகு திரு முகத்திலே மூட்ட அந்த அழகை அனுபவிக்கிறார் –-தன்னுடைய ஜ்யோதிஸ்ஸாலே பூர்ண சந்தரன் உடைய ஒளியையும் அப்போது அலர்ந்த தாமரைப் பூவில் அழகையும் தோற்ப்பிக்கும் திரு முகத்தை உடைய உன்னை –முக ஸ்ரீ யா -முக காந்த்யா ந்யக்ருத -அவன் சம்பூர்ண கலைகளாலும் பூரணமான பௌரணமாவாஸ்யையில் சந்திர மண்டலமாய் மறு கழற்றின அளவிலே யாயிற்று-அஸ்த்ருசமாய் இருப்பது எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -பெரியாழ்வார் திருமொழி -1-4-3-என்று
அது தன்னைத் தாழ விட்ட இடத்திலே யாயிற்று ஒவ்வாது ஒழிவது-தேஜஸ்ஸே யன்றியே சௌகுமார்யத்துக்கும் விகாஸி ஸார தாம்போஜமவஸ் யாய ஜ லோ ஷிதம் –-செவ்விக்கும் தாமரைப் பூவும் ஸ்த்ருஸ்ம் அன்று-பரிபூய ஸ்திதம் -என்னக் கடவது இறே-(திருக் கழுத்துக்கு சங்கு உவமை –கம்பு -சங்குக்கு பெயர் –கம்பு க்ரீவா -மூன்று ரேகைகள் -கொடுக்கல் அமைந்த கழுத்து -)
பருத்து உயர்வான திருப்புய மட்டும் படிந்து இழி குண்டலமும் குழலும்
இருத்தலின் ஓர் எழில் ஏந்து இலங்கும் இடம் புரி போல் ஒளிர் கண்டம் அதும்
தரித்ததுவும் ஓர் அழகோ என நின்மல பூர்ண சந்த்ரனார் ஒளியும்
திருத்துவதா மலர் மரை எழிலும் மிகு திரு முக மண்டல சோதியனாய் –34–பருத்து உயர்ந்த திருத்தோள்கள் மட்டும் தாழ்ந்து தொங்குகின்ற குண்டலங்களாலும் குழல்களாலும் பொலிந்து விளங்குகின்ற சங்கம் போன்ற அழகான திருக் கழுத்துடன்-தன் காந்தியினாலே கலைகளால் நிறைந்தும் நிர்மலமுமான பூர்ண சந்திரனுடைய ஒளியும்-அப்போது மலர்ந்த தாமரைப் புஷ்பமும் படைத்துள்ள அழகும்-ஒரு அழகோ எனத் தோற்பிக்கும் பேர் அழகு வாய்ந்த திரு முக மண்டலத்துடன் ஜ்வலித்துப் பிரகாசிக்கும் ஒரு ஜோதி யானவனாய் –
—
ஸ்தோத்ரம் -35-அவதாரிகை –கோள் இழைத் தாமரை -திருவாய்மொழி -7-7-8-என்கிறபடியே
திரு முகத்தில் அவயவ சௌந்தர்யத்தின் உடைய சேர்த்தியை அனுபவிக்கிறார்-ஆழ்வார், திருவாய்மொழி 7.7.8இல் “கோளிழைத் தாமரை”(எம்பெருமானின் திருக்கண்கள் அவற்றின் ஒளியையே ஆபரணமாகக் கொண்டிருக்கின்றன) என்று சொன்னபடி,-ஆளவந்தார் எம்பெருமானின் திரு முக மண்டலத்தை ஒவ்வொரு அவயமாக அனுபவிக்கிறார்.(ஸக்,ய: பஸ்யத க்ருஷ்ணஸ்ய முகமத்யருணேக்ஷணம்|.,. விகாஸி ஸாரதராம்பே ஜமவஸ்யாய ஜலோக்ஷிதம் | பரிபூய ஸ்திதம் ஜந்ம ஸபலம் க்ரியதாம் த்,ருஸ: ॥ [ஸகி,களே | மிகவும் சிவந்த திருக் கண்களை உடையதும் பனி ஜலத்தினால் தெளிக்கப்பட்டிருக்கும் மலர்ந்த ஸரத் ‘ காலத் தாமரையை வெற்றி கொண்டிருப்பதுமான கிருஷ்ணனுடைய முகத்தைப் பாருங்கள். கண்களைப் பெற்றிருப் பதை ப்ரயோஜனமுள்ளதாகச் செய்யுங்கள்)
ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்
ஸவிப்ரமப் ரூலத முஜ்ஜ்வலாதரம்
ஸூ சிஸ்மிதம் கோமள கண்ட முந்நஸ்ம்
லலாட பர்யந்த விலம்பி தாலகம்–35-
எம்பெருமான் மலர்ந்த, புதிய தாமரை மலரைப் போன்ற திருக் கண்களையும், கொடி போன்று வளைந்த திருப் புருவங்களையும், மிகவும் ஒளிவிடும் திரு வதரங்களையும், புனிதமான புன்முறுவலையும், அழகிய கன்னங்களையும், நிமிர்ந்த திரு மூக்கையும், திரு நெற்றி வரை படர்ந்திருக்கும் திருக் குழலையும் (கூந்தலையும்) உடையவன் –
ப்ரபுத்த முக்தாம்புஜ சாரு லோசனம்–அப்போது அலர்ந்த தாமரைப் பூ போன்று அழகிய
திருக் கண்களை உடையனாய்
முக்த -அழகிய என்றும் புதிதான என்றும்
ஸவிப்ரம ப்ரூலதம் –விலாசத்தோடு கூடினதாய்-கொடி போன்றதான திருப் புருவங்களை
யுடையனாய்
உஜ்ஜ்வலாதரம்–பிரகாசிக்கின்ற திரு அதரத்தை உடையனாய்
ஸூ சிஸ்மிதம் –கபடம் அற்ற புன் சிரிப்பை உடையனாய்
ஸூசி -வெளுத்த என்றுமாம் –ருஜு வான அபிப்ராயத்துடன் சிரிக்கிறபடி
கோமள கண்டம் -அழகிய கபோலங்களை உடையனாய்
உந்நஸ்ம்–உயர்ந்த திரு மூக்கை உடையனாய்
லலாட பர்யந்த விலம்பித அலகம்—திரு நெற்றி அளவும் தொங்குகின்ற முன்னுச்சி மயிர்களை உடையனாய் இருக்கிற
ப்ரபுத்த – ஆஸ்ரித சம்ச்லேஷத்தாலே விகஸிதமாய் இருக்கை –முக்த-–கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே –அங்கண் இரண்டும் கொண்டு –திருப்பாவை -22- என்கிறபடியே அலரத் தொடங்கின அளவாய் இருக்கும் -என்னுதல் –-பேதுறு முகம் செய்து -திருவாய் மொழி -9-10-9-என்னும் படிக்கு ஆஸ்ரிதர் ஓட்டைக் கல்வியால் வந்த ஆனந்தாதிஸயத்தில் விக்ருதியைச் சொல்லுதல் –
அம்புஜ சாரு லோசனம் –-இப்படிப் பட்ட தாமரை த்ருஷ்டாந்தமாகப் போராமையாலே
தார்ஷ்டாந்திகம் தன்னையே சொல்கிறது-தத் புண்டரீக நயனம் விஷ்ணோர் த்ரஷ்யாம் யஹம் முகம் -(பாபம். ஹரதி யத் பும்ஸாம் ஸ்ம்ருதம் ஸங்கல்பநாமயம் | தத் புண்டரிக நயநம் விஷ்ணோர் த்ரக்ஷயாம் யஹம் முக,ம்॥! [எந்தத் திருமுகமண்டலமானது நினைக்கப்பட்டவுடன், மனிதர்களின் பாபத்தைப் போக்கடிக்கிறதோ, ஆல்ரிதர் களுடைய ஸங்கல்பத்தின்படியே அமைந்திருப்பதும், தாமரை போன்ற திருக் கண்களை உடையதுமான விஷ்ணு வினுடைய அத் திருமுக மண்டலத்தை நான் பார்க்கப் போகிறேன்)என்று ஆஸ்ரிதர் ஆசைப்படுமது இறே–ஸவிப்ரமப் ரூலதம் – மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்-திருவாய்மொழி -7-7-4- என்கிறபடியே ஆஸ்ருதர் பக்கல் ஆதரம் எல்லாம் தோற்றும்படி நெரித்து இருக்கும் புருவத்தை உடைய உன்னை –-தன் கைச் சார்ங்கம் அதுவே போல் – நாச்சியார் திரு மொழி -14-7-என்று த்ருஷ்டாந்திக்கும் படி இறே–உஜ்ஜ்வலாதரம் –வாலியதோர் கனி கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும்-கோலம் திரள் பவளக் கொழும் துண்டம் கொல் -திருவாய்மொழி -7-7-3- என்றும் –நீல நெடு முகில் போல் திரு மேனி யம்மான் தொண்டை வாய் -திருவாய் மொழி -7-7-3- என்றும் –சொல்லுகிறபடியே மிக்க அழகை உடைய திரு அதரத்தை உன்னை –ஸூசி ஸ்மிதம்–பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளி முளை போல் சில பல்லிலக -பெரியாழ்வார் திருமொழி -1-6-9-என்றும்
என்னாவி யடும் அணி முத்தம் கொல் -திருவாய்மொழி -7-7-5- என்றும் சொல்லுகிற திரு முறுவலை யுடையவனை–கோமள கண்ட– அனுபவிப்பார்க்கு ஆகர்ஷகமாய் ஸூகுமாரமான கண்ட ஸ்தலத்தை யுடைய உன்னை –உநநஸ்ம் –-மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -திருவாய் மொழி -7-7-2-
என்கிறபடியே நாஸ்லதையை உடைய உன்னை –லலாட பர்யந்த விலம்பி தாலகம்- முன்னமுகத் தணியார் மொய் குழல்கள் -பெரியாழ்வார் திருமொழி -1-5-5- என்றும்-சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் -பெரியாழ்வார் திருமொழி -3-6-9- என்றும் சொல்லுகிற திரு நெற்றியின் எல்லையிலே வர அலை எறிகிற திருக் குழலை உடைய உன்னை பின்பு -அம்ஸ விலம்பி -யாய் முன்பு லலாட பர்யந்தமாய் -இருக்கிறபடி-
(கீழே திரு முக மண்டல சமுதாய சோபை -இங்கு திரு முக அவயவ சோபை அனுபவம்
முக்த -அழகிய புதியதான-சுசி ஸ்மிதம் -வெளுத்த –பரிசுத்த -ருஜுவான -கள்ளம் கபடு அற்ற
கீழே திருக் குழல்கள் திருத் தோள்கள் அளவும் -இங்கு முன் நெற்றியில் தொங்கும் அழகு
களி வண்டு எங்கும் கலந்தால் போலே கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர
நின்று விளையாட -நாச் -14–8–செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டே போல் –பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப –பெரியாழ்வார் -1–8–2—பங்கி -மயிர் )
சீரலர் செவ்விய தாமரை போன்ற திருக் கண் இணைகள் அமர்ந்தவனாய்
நேரியதாம் யடியார்க்கு அருள் தோன்ற நெரித்து உளவாம் புருவத்தனனாய்
ஏர் ஆதரத்துடன் இலகு கபோலமும் இன் முறுவல் உயர் நாசிகையும்
காரின் இருண்டு சுருண்டு நுதல் வரைக் கவினுற வீழ் அளகத்தனனாய் –35—சிறப்புடன் மலர்ந்த செந்தாமரை மலர் போன்ற சுந்தரமான திருக்கண்களை யுடையவனாய்-ஆஸ்ரிதர் விஷயத்தில் தன் ஆதரவு எல்லாம் தோற்றும்படி நெறித்து இருக்கும் புருவத்தை யுடையவனாய்-அழகான திரு அதரத்துடன் தாவள்யமான திரு முறுவலுடன் கோமளங்களான கபோலங்களுடனும் உயர்ந்த திரு நாசிகை யுடனும் -மேகம் போல் இருண்டு நெற்றி வரையில் தாழ்ந்து சுருண்டு இருக்கும் திருக் குழல்களுடன் விளங்குபவனாய்
—
ஸ்தோத்ரம் -36- அவதாரிகை-ஆபரண ஆயுதாதிகள் உடைய சேர்த்தி அழகை அனுபவிக்கிறார்–
ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகா
மணீந்த்ர காஞ்சீ குண நூபுராதி பி
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை
லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்–36-
எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும்,
திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.
ஸ்புரத் கிரீ டாங்க தா ஹார கண்டிகாமணீந்த்ர காஞ்சீ குண நூபுராதிபி–விளங்குகின்ற திரு அபிஷேகம் –திருத் தோள் வளை-முக்தாஹாரம் -திருக் கழுத்து அணி -குரு மா மணிப் பூண்-ஸ்ரீ கௌஸ்துபம் -திருவரை நாண் –திருப் பாடகம் முதலிய திரு ஆபரணங்களாலும்
ஆதி -சப்தத்தாலே-பல பலவே ஆபரணம் -என்றும்-அபரிமித திவ்ய பூஷண – (அபரிமிததி,வ்யபூ ஷண ! [கணக்கற்ற தி,வ்யாப,ரணங்களை உடையவனே)என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதம் என்கை –
ரதாங்க சங்க அஸி கதா த நுர்வரை–சக்கரம் சங்கு வாள் கதை சார்ங்கம் என்கிற பஞ்சாயுதங்களாலும்
லஸ்த் துளஸ்யா வனமாலய -ஒளி விடுகின்ற திருத் துழாய் மாலையை உடைய வனமாலையினாலும்
உஜ்ஜ்வலம்–பிரகாசித்துக் கொண்டு இருக்கிற-கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இறே –பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்
ஸ்புரத் கிரீட--உபய விபூதி நாதத்வம் ஆகிற ஐஸ்வர்யத்துக்கு அனுரூபமாய் –-திரு முடியிலே விளங்கா நிற்கிற திரு வபிஷேகம்-கதிராயிர மிரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடி -பெரியாழ்வார் திருமொழி -4-1-1-இறே –அங்கத--சர்வ ஆஸ்ரயமான திருத் தோள்களைப் பற்றி விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகள்-–ஹார – பொன்னின் மா மணி யார மணியாகத் திலங்கு மால் –பெரியாழ்வார் திருமொழி -8-1-3–என்றும்-சொல்லுகிறபடியே விளங்கா நின்ற திருவாரம் –கண்டிகா – திருக் கழுத்திலே விளங்கா நின்ற முத்துத் திருக் கட்டு வடம் –மணீந்த்ர –அவன் தனக்கும் சதா ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ கௌஸ்துபம் –காஞ்சீ குண –திருவரையிலே விளங்கா நின்ற அரை நூல் பட்டிகை—நூபுர- திருவடிகளைப் பற்றி விளங்கா நின்றுள்ள திருச் சிலம்பு –ஆதி –-சப்தத்தாலே-பல பலவே ஆபரணம் -என்றும்-அபரிமித திவ்ய பூஷண – என்றும் சொல்லுகிறபடியே அசங்க்யாதம் என்கை –ரதாங்க -சங்க அஸி கதா தநுர் வரை-இந்த ஆபரணங்களோடு விகல்ப்பிக்கலாம் படி ஸோப அவஹமான திவ்ய ஆயுதங்களின்
சேர்த்தியை அனுபவிக்கிறார் –லஸ்த் துளஸ்யா வனமாலய உஜ்ஜ்வலம்-சர்வ ஐஸ்வர்ய ஸூசகமாய் திருவடிகள் அளவும் தாழ்ந்து-அல்லித் துழாய் அலங்கல் -திருவாய்மொழி -7-9-10- என்கிற வனமாலையால் விளங்கா நின்ற உன்னை ஆபரண ஆயுதாதிகள் தன்னைப் பற்றி விளங்குகையும்
அவற்றாலே தான் விளங்குகையுமாக செல்லுகிறபடி–ஸ்ரக் வஸ்த்ர ஆபரணைர் யுக்தம் ஸ்வரூபைர் அநு பூமி சிந்மயை ஸ்வ பிரகாச சைஸ்ஸ அந்யோந்ய ருசி ரஞ்ஜகை –(ஸ்ரக்,வஸ்த்ராப,ரணைர் யுக்தம் ஸ்வாநுரூபைரநூபமை: | 1. சிந்மயை: ஸ்வ ப்ரகாஸைஸ்ச அந்யோந்ய ருசிரஞ்ஜகை: || [தனக்குத் தகுந்தவையும், ஒப்பற்றவையும், ஞான மயமா யிருப்பவையும், ஸ்வயம் ப்ரகாமமானவையும், ஒன்றுக் கொன்று (சேர்த்தியினலுண்டான) காந்தியினால் அழகாயிருப்பவை யுமான மாலைகளினாலும், வஸ்த்ரங்களினாலும், ஆபரணங்களினாலும் கூடியிருப்பது பர ப்ரஹ்மம்)
தேசமரும் திரு முடியனோர் மௌலியும் அங்கத ஆரமும் கண்டிகையும்
காசில் ஒளி தரு கௌத்துவமும் அரை நாணுடன் நூபுரம் முதலியவும்
மாசுகம் ஆர் தனு வாழி வளைக் கதை வாள் முதலாகிய ஆயுதமும்
வாச நறும் துளவத் தழகாம் வன மாலையுடன் விரி தேசனுமாய் –36—ஜோதி மயமான திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் -தோள் வளைகள் -முத்துத் திருக்கட்டு வடம்-மாசு மறு இன்றிப் ப்ரகாசிக்கும் ரத்ன ஸ்ரேஷ்டமான கௌஸ்துபம் அரை நூல் பட்டிகை திருச் சிலம்புகள் முதலான திவ்ய ஆபரணங்களால்
திருவாழி திருச்சங்கு வாள் கதாயுதம் சார்ங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களாலும் வாசனை வீசும் திருத்துழாயாலே அழகு வாய்ந்த வனமாலையாலும் பிரகாசிப்பவனாய் –
—
ஸ்தோத்ரம் -37-அவதாரிகை –மேலில் ஸ்லோக த்வயத்தாலே-பிராட்டியோட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார் –-இதில் முதல் ஸ்லோகத்தாலே- பிராட்டி உடைய மேன்மையையும் இவள் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான வ்யாமோஹத்தையும் அருளிச் செய்கிறார் –
சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ
ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம்
யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச–37-
எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,
எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,
எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ, யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–
சகரத்த யஸ்யா பவனம் புஜாந்தரம் தவ –-சர்வ யஜ்ஞமயம் வபு -என்கிற-திரு மார்பைப் பிராட்டிக்குக் கோயில் கட்டணமாகப் பண்ணி யருளிற்று–யஸ்யா -என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே–சர்வ யஜ்ஞ்மயம் வபுரத் யாஸ்தே – பஸ்யதாம் சர்வதேவா நாம் யயௌ வஷஸ்ஸ்தலம் ஹரே –நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை – திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -திருவாய் மொழி -10-6-9-என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2–அலர் மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10–மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2–செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-
தவ ப்ரியம் தாம யதி யஜன்மபூ –-யாவள் ஒருத்தி அவதரித்த திருப்பாற்கடல்-அயர்வறும் அமரர்கள் அதிபதியான தேவருக்கு இனிது அமரும் இடம் ஆயிற்று-ஸ்ரீ பூர்வமுத தே –தேவதா நவயத் நேன ப்ரஸூதாம்ருத மந்தனே -என்றும்-நேதா நீம் த்வத் ருதே ஸீதே ஸ்வர்க்க அபி மம ரோசதே—ஜகத் சமஸ்தம் யத் அபாங்க சம்ச்ராயம் –அஸ்யேசா நா ஜகத – ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் த்வம் மாதா சர்வ லோகா நாம் -என்கிறபடியே இவ் உபய விபூதியும் யாவள் ஒருத்தி உடைய மந்த கடாஷத்தைப் பற்றி உண்டாய் இருக்கிறது –யதர்த்த மம்போதிர மந்தய பந்தி ச –-விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2- என்கிறபடியே யாவள் ஒருத்தியைப் பெறுகைக்கு கடல் கடைந்து அருளிற்று-அபந்தி ச-யாவள் ஒருத்தி உடைய பிரிவாற்றாமையாலே கடலை அசைத்து அருளிற்று-ஏஷ ஸே துர் மயா பத்தஸ் ஸா கரே ஸ லிலார்ணவே தவ ஹேதோர் விசாலாஷி நள ஸே துஸ் ஸூ துஷ்கார-(விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமான் –உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -)
(கா த்வந்யா த்வாம்ருதே தே,வி ஸர்வ யஜ்ஞமயம் வபு: | அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகி; சிந்த்யம் கதா ப்ருத:। [ஹே தேவி! கதையை த,ரித்தவனும், தேவ தே,வனுமான: எம்பெருமானுடைய, யோகிகளால் நினைக்கத் தக்கதும், ஸர்வ யஜ்ஞ மயமுமான ஸரீரத்தில் உன்னைத் தவிர வேறு எவள் இருக்கிறாள்)திவ்ய மால்மாம்பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா। பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயென வக்ஷ:ஸ்தலம் ஹரே--அப்ராக்ருதமான மாலையையும், வஸ்த்ரத்தையும் தரித்திருப்பவளும், ஸ்நானம் செய்தவளும், பூஷணங்களால் அலங்கரிக்கப் பட்டவளுமான ஸ்ரீதேவி எல்லா தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹரியினுடைய திரு மார்பை அடைந்தாள்) ப்ருகோ: க்,யாத்யாம் ஸமுத்பந்நா ஸ்ரீ: பூர்வமுததே; புந:।தே,வதா நவயத்நேந ப்ரஸூதா £ம்ருதமந்த,நே ॥ [முதலில், ப்,ருகு,மஹர்ஷிக்கு: (அவர் பத்னியான) க்யாதி யிடம் ஸ்ரீதேவி உண்டானாள்; மறுபடியும் அம்ருத மத,ன காலத்தில் தே,வாஸுரர்களுடைய யத்னத்தினால் கடலிலிருந்து உண்டானாள்)நேதாநீம் த்வத்,ருதே ஸீதே ஸ்வர்க்கே,£₹பி மம ரோசதே! [ஸீதே! இப்பொழுது நீயில்லாமல் ஸ்வர்க்கமும் எனக்கு ருசிக்காது.]த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதே,வோ ஹரி; பிதா।த்வயைதத் விஷ்ணுநா சாம்ப, ஐக,த் வ்யாப்தம் சராசரம் || [எல்லா உலகங்களுக்கும் நீ தாய்; தேவதே,வனான ஹரி தந்தை. தாயே ! அசைபவையும், அசையாதவையு மடங்கிய இந்த உலகம் உன்னாலும், விஷ்ணுவாலும் வியாபிக்கப் பட்டிருக்கிறது)ஏஷ ஸேதுர் மயா பத்த்ஸ் ஸாகரே ஸலிலார்ணவே | தவ ஹேதோர் விஸாலாக்ஷி ! நள ஸேதுஸ் ஸுது,ஷ்கர: | [அகன்ற கண்களை உடையவளே | நீர் நிறைந்த கடலில், நள ஸேது என்ற பெயர் பெற்றதும், மிகவும் கட்டுவதற்கு அரிதுமான இந்த அணை உனக்காக என்னால் கட்டப் பட்டது.]பரிஸ்ரமாத் ப்ரஸுப்தா ச ராக,வாங்கே $ப்யஹம் சிரம் |பர்யாயேண ப்ரஸுப்தஸ்ச மமாங்கே ப,ரதாக்,ரஜ: || [ராக,வனுடைய திருத் தொடையில், நான் களைப்பினால் வெகு நேரம் தூங்கினேன். பரதனுடைய தமையனாரான அவரும் என் தொடையில் தூங்கினார்)
தவ புஜாந்தரம்-உன்னுடைய திரு மார்பை
சகரத்த யஸ்யா பவனம் –யாவள் ஒரு பிராட்டிக்கு இருப்பிடமாக பண்ணி அருளினாயோ
யதிய ஜன்மபூ–யாவள் ஒரு பிராட்டியின் பிறந்தகமான திருப் பாற் கடல்
தவ ப்ரியம தாம–உனக்கு இனிதான இருப்பிடம் ஆயிற்றோ
ஜகத் சமஸ்தம் –உலகம் எல்லாம்
யத் அபாங்க சம்ச்ராயம்–யாவள் ஒரு பிராட்டியின் கடாக்ஷத்தைப் பற்றி இருக்கிறதோ
யதர்த்தம் அம்போதிர் அமந்தி அபந்தி ச–யாவள் ஒரு பிராட்டிக்காக கடலானது கடையவும் அணை கட்டவும் பட்டதோ –
கீழே -திவ்ய அவயவ திவ்ய ஆபரண சோபை எவ்வளவு இருந்தாலும்-திவ்ய பிராட்டி உடன் சேர்த்தி இல்லாத போது நிறம் பெறாதே-இது முதல் மூன்று ஸ்லோகங்களாலும் ஸ்ரீ யபதித்தவம்
யஸ்யா –என்கிறது இதில் உண்டான பிரமாண பிரசித்தியாலே-
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -திருவாய் மொழி -10-6-9
என் திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -திருவாய்மொழி -4-5-2-
அலர் மேல் மங்கை யுறை மார்பா -திருவாய்மொழி -610-10-
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-
செய்யாள் திரு மார்பினில் சேர் திருமால் -திருவாய் மொழி -9-4-1-
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமான் -பெரிய திருமொழி -6-1-2-
உன்மூல்யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமல ஆலாபேந சரவச்சிரம -உத்தர சதகம் –
உன் அழகான யுரம் தனை உன் பிரியைக்கு உறை மாளிகையாய் யுதவி
அன்னவனுடன் ஒன்றிய ஆழி யுனக்கு இனிது அமரும் இருப்பிடமாய் அருளி
மன்னும் இவ்வுபய விபூதி யினுள் பவம் ஆர்ந்திடும் அந்த கடாக்ஷம் உறும்
பொன்னை யடை குபு புணரி கடைந்து அணை கட்டி யுகந்து பொலிந்தவனாய் –37—உன் அழகான திரு மார்பை உன் ப்ரியையான பெரிய பிராட்டியார் உறைவதற்குத் தக்க ஒரு மாளிகையாகக் கொடுத்து
அந்நாள் அவதரித்த ஷீராப்தியை உனக்கு இனிதாக அமரும் இருப்பிடமாய்க் கொண்டு இவ் வுபாய விபூதியும் கடைக்கண் பார்வையாக-கடாக்ஷம் யுடைய அந்தப் பிராட்டியாரைப் பெறுவதற்காக கடலைக் கடைந்தும்-பின்பு ஒரு கால் திரு அணை கட்டியும் உக்காந்து திகழ்ந்து அருளியவனாய் –
—
ஸ்தோத்ரம் -38-அவதாரிகை –இதில் பிராட்டி உடைய நிரதிசய போக்யதையும்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை -திருவாய்மொழி -10-10-6- என்கிறபடியே அவனுக்கேயாய் இருக்கிற இருப்பையும் -அனுபவிக்கிறார்-
ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அப்
யா பூர்வவத் விஸ்மயம் ஆகததாநயா
குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ்
சதா தவை வோ சிதயா தவ ஸ்ரீ யா–38–
ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா அபி -தனது விஸ்வரூப நிலைமையைக் கொண்டு
எப்போதும் அனுபவிக்கப் பட்டாலும்
அபூர்வவத் –புதிய புதிய வஸ்து போலே
விஸ்மயம் ஆகததாநயா–ஆச்சர்யத்தை விளைவிப்பவளாய்
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ்–குணங்களாலும் வடிவு அழகாலும் விலாச சேஷ்டைகளாலும்
சதா -பரம் வ்யூஹம் முதலிய எல்லா நிலைமைகளிலும்
தவ ஏவ உசிதயா –உனக்கே ஏற்றவளாய்
தவ ஸ்ரீ யா–உனக்கு செல்வமாய் இருப்பவளான
நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.
ஸ்வ வைஸ்வ ரூப்யேண் சதா அநு பூதா –-சர்வ சக்தியான தேவர்-சர்வ விக்ரஹத்தாலும்
சர்வ காலமும்-சர்வ பிரகாரத்தாலும் அனுபவியா நின்றாலும் பிராட்டியினுடைய போக்யதையைப் பரிச்சேதிக்கப் போகாது – சௌபரியைப் போலே அநேக விக்ரஹத்தைப் பரிக்ரஹித்தாலும் முடியாது –
பர்யாயேண் பிரஸூப்தஸ் ச-என்கிறபடியே பிரகாரங்கள் அநேகம் ஆனாலும் முடியாது-அபூர்வவத் விஸ்மய மாத தா நயா – நித்ய அபூர்வம் போலே ஆச்சர்ய அவஹமாய் இருக்கும்-ஸ ஏகதா பவது த்விதா பவதி -(ஸ ஏகதா பவது த்ரிதா ப,வதி பஞ்சதா। ஸப்ததா நவதா சைவ புநஸ் சைகாதஸ,; ஸ்ம்ருத: | ஸதஞ்ச தஸ சைகஞ்ச ஸஹஸ்ராணி ச விம்மத; ॥ [“முக்தாத்மா பல ஸரீரங்களை உடையவனாகிறான்” என்று தாத்பர்யம்.)என்று நித்ய ஸூரிகள் தன் திறத்தில் படுவது எல்லாம் பிராட்டியைக் குறித்து தான் படும் -என்கை –பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில் -பெரிய திருமொழி -8-1-9- என்றும்
அப் பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -திருவாய் மொழி -2-6-6- என்றும் ஆழ்வார்களும்
சதா பஸ்யந்தி -என்று நித்ய ஸூரிகளும் நித்ய அபூர்வதையாலே தேவர் திறத்தில் படுமது எல்லாம்
தேவர் படும்படி இறே பிராட்டி போக்யதை இருப்பது –
உகப்பிப்பது எவ்வழியாலே என்னில்–குணேந ரூபேண விலாஸ சேஷ்டி தைஸ் –-வடிவு அழகாலும்
சீலாதி குணங்களாலும்-சக்ருத் த்வதா கார விலோக நாசயா -என்றும்-ஈர்க்கின்ற குணங்களை யுடையாய் -திருவாய் மொழி -8-1-8–இப்படி குணங்களாலும்-உன் செய்கை நைவிக்கும் –5-10-2- என்கிற சேஷ்டிதங்களாலும் அபியுக்தர் ஆழம் கால் படும்படி இருக்கும் இறே அவன்-இப்படி இவள் ஸ்வரூபாதிகளிலே அழுந்துகிறான்-அவன் ஸ்வரூபத்தாலே அபரிச்சின்னன் இவள் போக்யதையாலே அபரிச்சின்னை–
சதா தவை வோ சிதயா –-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -(துல்ய ஸீல வயோ வ்ருத்தாம் துல்யாபி,ஜஐநலக்ஷணாம் |ராக,வோஃ5ர்ஹதி வைதேஹீம் தம் சேயமஸி தேக்ஷண ॥ [ஒரே விதமான குணங்கள், வயது, ந்டத்தை இவைகளை உடையவளும், ஸமானமான குலத்தையும், லக்ஷ்ணங் களையும் உடையவளுமான வைதேஹிக்கு ராகவனே தகுந்தவர்; கறுத்த கண்களை உடைய இவளும் அவருக்கே தகுந்தவள்)என்றும்-உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை -என்றும் சொல்லுகிறபடியே தேவர் தமக்குத் தகுதியாய் இருக்குமவள் –சதா-என்று பர வ்யூஹ விபவ ரூபேண உண்டான சர்வ அவஸ்தை களிலும் என்கிறது-குனேன ரூபேண விலாஸ சேஷ்டிதைஸ் சதா தவை வோ சிதயா -என்னவுமாம்-தவ ஸ்ரீ யா–விஷ்ணோ ஸ்ரீ –என்றும்–உன் திரு -10-10-2- என்றும்-சொல்லுகிறபடியே அனன்யார்ஹை என்னுதல் தேவர்க்கு சம்பத்தாய் இருக்கும் என்னுதல்-(தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய் –
கொண்டு அனுபவித்தாலும்-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதாகும் விலக்ஷண வஸ்து –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு-பாசுரம் படியே — தவைவ உசிதயா -தவச்ரியா -அநந்யார்ஹத்வம் )
(நித்யைவைஷா ஜக,ந்மாதா விஷ்ணோ: ஸ்ரீரநபாமிநீ | யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததை,வேயம் த்,விஜோத்தமா [உலகிற்கெல்லாம் தாயும். அழிவற்றவளும் விஷ்ணுவினுடை யவளுமான இந்த ஸ்ரீதே,வி நித்யமானவளே. ப்ராஹ்மண ஸ்ரேஷ்ட,ரே! ஸர்வ வ்யாபியான விஷ்ணு எப்படிப்பட்ட வரோ அப்படிப்பட்டவளே இவளும்)க,ந்த,ர்வாப்ஸரஸஸ் ஸித்,தாஸ் ॥ நாந்தம் குணாநாம். கச்சந்தி தேநாநந்தோயமுச்யதே ॥கந்த ர்வர்களும், அப்ஸரஸ்ஸுகளும், கின்னரர்களுடனும், மஹா நாகங்களுடனும் கூடிய ஸித்,த,ர்களும், (இவனுடைய) குணங்களின் எல்லையை அடைவதில்லை; ஆகையால் இவன் அநந்தனென்று சொல்லப்படுகிறான்)
நின்னிட சேர்த்தி நிரந்தரமாய்ப் பல வடிவிலும் செவ்வி நிலை பெறினும்
அன்ன வணிக்கு ஓர் அபூர்வமாகிய ஆச்சார்யத்தை விளைப்பவளாய்
தன் நிகரில் வடிவாலும் தகைமையினாலும் விலாஸ விதங்களிலும்
உன் ஒருவருக்கே யுரியவளாகும் உன் நித்ய ஸம்பத்து உறுபவனாய் –38—ஸர்வ சக்தனான உன்னுடைய எல்லா விக்ரகத்தாலும் ஸர்வ காலத்தும் உன்னால் அனுபவிக்கப் பட்டு இருந்தும்
நித்யம் அபூர்வமான ஆச்சர்யத்தை யுனக்கு யுண்டாக்குபவளாய்-நிகரில்லாத உன் வடிவு அழகாலும் சீலாதி குணங்களாலும் திரு விளையாட்டுக்களினாலும்-பர வ்யூஹ விபவ விபவாதி எல்லா அவஸரங்களிலும் உனக்கே உரியவளாய் விளங்கும் அந்த மஹா லஷ்மியை உன் நித்ய சம்பத்தாய்க் கொண்டான் இலங்குபவனாய்-
—
ஸ்தோத்ரம் -39-அவதாரிகை –பர்யங்க விதையில் சொல்லுகிறபடியே-திரு வநந்த ஆழ்வான் -மடியிலே
பிராட்டியோடே எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியை -அனுபவிக்கிறார் –அநந்த போகிநி -ஆஸீ நம-திருவனந்த ஆழ்வான் இடத்தில் எழுந்து அருளி இருக்கின்ற உன்னை எப்போது சேவிக்கப் பெறுவேன் -என்று -46-ஸ்லோகத்தில் சேர்ந்து முடிகிறது
தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி–39-
ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணா மணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளி விடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;-இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–
தயா ஸஹா -அப்படிப்பட்ட பிராட்டியோடே கூட
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி-சிறந்த ஞான சக்திகளுக்கு முக்கியமான இருப்பிடமானவனும்
பணா மணி வ்ராதம யூக மண்டல பிரகாஸ மாநோதர திவ்ய தாமநி–தனது பண மணிகளின் ஸமூஹங்களினுடைய கிரண ராசிகளாலே பள பள என்று விளங்கா நின்ற மத்ய பிரதேசத்தை எம்பெருமானுக்குத் திருக் கோயிலாக யுடையவனும்-மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே-திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –
தயா ஸஹா ஸீ நம –-ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி ராஸ்தே -என்கிறபடியே நித்ய விபூதியில் மிதுனமாய் இருந்து இறே அடிமை கொள்வது-அவதாரத்திலும் –பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா-என்னக் கடவது இறே –அநந்த போகி நி- ஸ்ரீய பதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தோ பாதி இறே-இவனோட்டைச் சேர்த்தியும் –-கந்தர்வாப்ஸ ரஸ்ஸ் சித்தாஸ் ஸ கின்னர மஹோ ரகா நாந்தம் குணா நாம் கச்சந்தி தேனா நந்தோ அயமுச்யதே--என்கிறபடியே குண அநந்யத்தாலே -அநந்தன்-என்ன கடவது இறே
ஈஸ்வரன் ரஷணத்திலே அசங்க்யாத குணன் – இவன் கைங்கர்யார்த்தமாக அசங்க்யாத குணன் – போகிநி –-மென்மை குளிர்ச்சி நாற்றம் இவற்றை ஸ்வபாவமாக உடைய திரு மேனியிலே –-போகம் -சரீரம் –ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி--இருவருமாய்ப் பரிமாறும் போது அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –-ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே-துகைத்துப் பரிமாறலாம் படியான தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –பணா மணி வ்ராதம யூக மண்டலபிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி- தன்னுடைய பணா மணி சமூஹங்களின் உடைய-ரஸ்மி மண்டலங்களினாலே-பிரகாசியா நின்ற மத்யத்தை யுடைய
திவ்ய அந்தப்புரத்தை உடையவன்-மணி விளக்காம் -முதல் திருவந்தாதி -53 என்கிறபடியே
திவ்ய அந்தப்புரத்துக்கு மங்கள தீபமாய் இறே இருப்பது –
உத்தம ஞான பலன்கள் தமக்கு ஒரு உறைவிடமாக நிலைத்து அவனும்
துத்தி யுடைப் பணம் ஏந்தும் ரத்னம் எங்கும் துலங்கும் ஓர் சோதியுடன்
மத்தி யமாம் உதரத்தை ஓர் அத்புத மாளிகையாக வகிப்பவனும்
பத்தனுமான அநந்தன் அணை மிசை பத்தினியோடு உறைகின்றவனாய் –39–உத்தமமான ஞான சக்திகளுக்கு ஒரு இருப்பிடமாக நிலை பெற்றவனும் பொறிகளை யுடைய படங்களை ஏந்தும்
தன் சிரோ ரத்னங்களின் காந்தியினால் பிரகாசிக்கின்ற தன் உத்தரத்தின் மத்திய பிரதேசத்தை
ஒரு திவ்ய அந்தப்புரமாக வகிப்பவனும் பரம பக்தனுமான திரு அநந்த ஆழ்வான் மடியிலே பத்தினியாக பெரிய பிராட்டியாரோடு வீற்று இருப்பவனாய் –
—
ஸ்தோத்ரம் -40-அவதாரிகை –திரு வனந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்களை
அனுபவிக்கிறார் –-தமக்கு அடிமையில் உண்டான த்வரையாலே-உபமாநம சேஷாணாம் ஸாது நாம் -என்னும் ந்யாயத்தாலே அடிமையில் ருசி யுடையார்க்கு எல்லாம் உதாஹரண பூதமாய் இறே திரு வநந்த ஆழ்வான் உடைய வ்ருத்தி விசேஷங்கள் இருப்பது இவன் உடைய காஷ்டையை அருளிச் செய்கிறார் –கைங்கர்யத்தில் இருக்கும் ஆசையால், ஆளவந்தார் திருவனந்தாழ்வானின் உயர்ந்த லீலைகளை அனுபவிக்கிறார்.-ஸ்ரீவிஷ்ணு புராணம் 1.15.157இல் ““உபமானமஶேஷாணாம் ஸாதூனாம் யஸ் ஸதா’ பவத் |” (எப்படி ப்ரஹ்லாதன் எல்லா நல்லவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறானோ) உபமாநம ஸேஷாணாம் ஸாதூ,நாம் யஸ்ஸதா ப,வத் | [எந்த ப்ரஹ்லாதாழ்வான், எப்போதும் எல்லா ஸாதுக் களுக்கும் உபமானமாக ஆயினனோ…]சொன்னபடி, கைங்கர்யத்தில் ருசியுடைய அனைவருக்கும் திருவனந்தாழ்வானின் செயல்களே சிறந்த உதாரணம்.-ஆளவந்தார் இப்படிப்பட்ட ஆதிசேஷனின் உயர்ந்த நிலையை அருளிச் செய்கிறார்.
நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக
உப தான வர்ஷா தபவாரணாதிபி
சரீர பேதைஸ் தவ சேஷதாம் கதைர்
யதோ சிதம் சேஷ இதீரிதே ஜனை–40-
நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக் கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்து கொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக் கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக் கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக் கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —
நிவாஸ ஸய்யா ஆஸன பாதுகா அமஸூக உப தான வர்ஷா தபவாரணாதிபி–எம்பெருமானுக்கு எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாகவும் திருக்கண் வளர்ந்து அருளும் இடமாகவும் சிங்காசனமாகவும் பாதுகையாகவும் திருப்பரி யட்டமாயும் அணையாகவும் குடையாகவும் மற்றும் பலவிதமாகவும் ஆவதற்கு உரியவைகளாய்
யதோ சிதம்- தவ சேஷதாம் கதைர்-சரீர பேதைஸ்–உசிதமானபடி உனக்கு அடிமைப்பட்டவைகளான
பல பல வடிவங்களாலே
சேஷ இதீரிதே ஜனை–சேஷன் என்று ஜனங்களால் சொல்லப்படுபவனுமான-பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி –-என்கிற சேஷத்வத்தின் படியே
நிவாஸ –எழுந்து அருளி இருக்கிற திரு மாளிகையாம்–ஸய்யா--கண் வளர்ந்து அருளுகைக்குப் படுக்கையாம்-ஆஸன –-இருந்தால் சிங்காசனமாம் -முதல் திருவந்தாதி -53-பாதுகா – நின்றால் மரவடியாம் –அமஸூக – பும்ஸ்த்வ அவஹமான திருப் பரியட்டமாம் –உப தான – புல்கும் அணையாம் –வர்ஷா தபவாரணாதிபி –சென்றால் குடையாம் -என்கிறபடியே வர்ஷத்துக்கும் ஆதபத்துக்கும் சத்ரமாம் –ஆதி சப்தத்தாலே-அடிமையில் அபி நிவேச அநு ரூபமாக சரீரத்துக்கு தொகை இல்லை –-ஸ ஏக்தா பவதி -என்று தொடங்கி சஹஸ்ரதா பவதி -என்னக் கடவது இறே –சரீர பேதைஸ் – கைங்கர்ய பேதமே சரீர பேதத்துக்கு ஹேது –தவ சேஷதாம் கதை – தேவரீர் உடைய விக்ரஹங்கள் ரஷண ஹேதுவாய் இருக்கிறாப் போலே இவனுடைய விக்ரஹங்கள் சேஷத்வத்தை அடைந்து இருக்கும் என்கை –
யதோ சிதம் –-யதா யதார் ஹி கௌசல்யா -என்கிறபடியே தத் தத் கால உசிதமாய் இருக்கை-(இம் சைநாம் ப்ரதிவக்ஷ்மாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் | யதா யதா ஹி கெளஸல்யா தாஸீவச்ச ஸகீ வச ॥ பார்யாவத் ப.கி.நீவச்ச மாத்ருவச்சோப திஷ்டதி ||[கெளஸல்யை தாஸியைப் போலும், ஸகியைப் போலும், மனைவியைப் போலும், ஸஹோதரியைப் போலும், தாயைப் போலும் ஸூஸ்ரூஷை செய்யும் போதெல்லாம், இப்படிப் பட்ட அநிஷ்டமான காரியத்தைச் செய்துவிட்டு அவளுக்குஎன்ன பதில் சொல்லுவேன் ])
சேஷ இதீரிதே ஜனை –-சிறியார் பெரியார் என்னாதே-சர்வராலும் சேஷம் என்று சொல்லப் படுகை –
சேஷத்வம் தான் ஒரு வடிவு கொண்டாப் போலே இருக்கை-ஜனை-பெருமக்கள் உள்ளவர் -திருவாய் மொழி -3-7-5-என்கிறபடியே-நித்ய சித்தரைச் சொல்லவுமாம்–பரகத அதிசய அதான இச்சா உபாதேயதவ மேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ -பரஸ் சேஷி – (மற்றொருவனிடத்திலிருக்கும் ஒரு மேன்மையை உண்டு பண்ண வேண்டுமென்னும் எண்ணத்துடன் அங்கீ,கரிக்கப் படுகையே எவனுக்கு ஸ்வரூபமோ அவன் ஸேஷன்; மற்றவன் ஸேஷி)என்கிற சேஷத்வத்தின் படியே –பாரதந்த்ர்யம் பரே பும்சி -(பாரதந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்கத பந்தந: | ஸ்வாதந்த்ர்ய மதுலம் ப்ராப்ய தேநைவ ஸஹ மோததே॥ [கர்ம ப;ந்த,த்திலிருந்து விடுபட்டவனான முக்தன், பரம புருஷனிடத்தில் பாரதந்த்ரியத்தை அடைந்து, ஒப்பற்ற ஸ்வாதந்த்ரியத்தையும் அடைந்து, அவனுடன் கூடவே ஆநந்த,ப்படுகிறான்.) இத்யாதி –(மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாள் அரவின் சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள் மன்னிய நாகத்தணை மேல் -ஸ்ரீ பெரிய திருமடல் பாசுரம் படியே – பணா மணிவ்ராத–சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு -முதல் திருவந்தாதி பாசுரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் – வர்ஷாத பவாரண–வெய்யில் மழை இரண்டாலும் காக்கும் குடை என்றவாறு –)
வாஸம் யுனக்கு ஒரு மாளிகையும் உபாதானமும் பள்ளியும் அஞ்சுகமும்
ஆசனமும் மணி பாதுகையும் மழை யாதவர்க்கு அரணாதி பல
பேச அரிதாம் உபச்சார விசித்ர பேத சரீர விதங்களினால்
தேசுறும் சான்றவரால் உசிதப்படி சேஷன் எனப்படுவோன் மிசையே –40—நீ நிவாஸம் பண்ணுவதற்காக ஒரு திரு மாளிகையாயும்-சயனத்திற்காகப் படுக்கையாயும் தலையணை யாகவும்
ஸிம்மாஸனமாகியும் மரவடியாகவும்-மழை வெயில் இத்யாதிகளை போக்க ஒரு குடையாகவும்
இவை முதலாக இன்னும் அநேக கைங்கர்ய பேதங்களுக்குத் தக்கபடி தன் சரீர பேதங்களினால் உன்னுடைய சேஷத்வத்தை அடைந்து இருப்பதனால் உசிதப்படி நித்ய ஸூரிகளால் சேஷன் என்று சொல்லப்படும் அந்த திரு வநந்த ஆழ்வான் மீது வீற்று இருப்பவனுமாய் –
—
ஸ்தோத்ரம் -41- அவதாரிகை--இதில் வாகனத்வ ஜாதி-சர்வ வ்ருத்திகளையும் உடையவனாய்
ஈஸ்வரனுக்கு -மோம் பழம்-மோந்து கொண்டு இருக்கிற பழம் -போலே-பழுத்த கனியைப் போன்று- சதா விரும்பும்படி அபிமதனாய் இருக்கிற பெரிய திருவடி யோட்டைச் சேர்த்தியை அனுபவிக்கிறார்–
தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜனம் த்ரயீமய
உபஸ்திதம் தேன புரோ கருத்மதா
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–41-
வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளி விடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —
த்ரயீமய யா -வேத மூர்த்தியான யாவன் ஒரு பெரிய திருவடி
தே சாசஸ் ஸகா வாஹநம் ஆஸனம் த்வஜோ விதாநம் வ்யஜனம் –உனக்கு அடியவனாயும் தோழனாயும்
வாஹனமாயும் ஆசனமாயும் கொடியையும் மேற்கட்டியாயும் விசிறியாயும் இருக்கிறானோ
தேன-அப்படிப்பட்ட
த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா–உன்னுடைய திருவடி நெருக்கின தழும்பை அடையாளமாகக் கொண்டு விளங்குகிற ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே
இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-
கருத்மதா-பெரிய திருவடியால்
உபஸ்திதம் புரோ –திரு முன்பே சேவிக்கப்பட்டு இருக்கிற
தாஸஸ் –-தன்னுடைய வியாபாரங்கள் அடங்க ஈஸ்வரனுக்கு அதிசயத்தை விளைக்குமவையாய் இருக்கும்-ஸகா – ஜகத் வியாபாரங்களில் ஈஸ்வரன் தன்னோடு உசாவ வேண்டும்படியான
பெருமையை உடையவன்-வாஹநம் – ஆஸ்ரிதர் உடைய ஆபத்துக்களிலே ஈஸ்வரனைக் கொடு வந்து சேர்க்குமவனாய் இருக்கை –ஆஸனம் – ஒரு கார்யம் இல்லாத போது ஸிம்ஹாசனஸ்தனாய் இருந்தாலோபாதி தன் மேன்மைக்கு சத்ருஸ்ம் என்னும்படி சிம்ஹாசனமாய் இருக்கை –த்வஜோ-
ஈஸ்வரன் கிட்டுவதற்கு முன்னே எழுந்து அருளி நின்றான் என்று ஆஸ்ரிதர்க்கு ப்ரீதி ஹேதுவான கொடியானவன் –-அவனுடைய ரஷகத்வத்துக்கு ஹேது வானவன் -என்றுமாம்-பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போலே -திருவாய் மொழி -9-2-6–என்றும் புள்ளூர் கொடியான் -திருவாய்மொழி -3-8-1-என்றும் உண்டான பிரசித்தியைச் சொல்லுகிறது-யஸ்தே விதாநம் –-வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான் -நாச்சியார் திருமொழி -14-3- என்கிறபடியே ஆதப நிவாரணமாய் இருக்கை
கருடஞ்ச ததர் ஸோச்சைரந்தர்த்தா நக்தம் த்விஜ க்ருதச்சாயம் ஹரேர் மூர்த்னி பஷாப் யாம் பஷி புங்கவம் -(முனிவரே! சிறகுகளால் ஹரியின் தலையில் நிழலை உண்டு பண்ணிக் கொண்டிருப்பவனும், பறவைகளுக்குத் தலைவனும், மறைந்திருப்பவனுமான கருடனையும் அந்த இந்திரன் ஆகாயத்தில் பார்த்தான்.)ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-12-4-இதி பராசர –வ்யஜனம் –-தன்னை மேற் கொண்டு போம் போது சாமரங்கள் போலே திருச் சிறகாலே ஆஸ்வாஸ்கனாய் இருக்கை –த்ரயீமய-ஸூபர்னோ அஸீ கருத்மான் த்ரிவ்ருத் தே ஸிர காயத்ரம் சஷூ -(நல்ல சிறகுகளை யுடையவனாயும், க,ருத்மான் என்னும் திருநாமத்தை உடையவனாயுமிருக்கிறாய்; த்ரிவ்ருத் உன்னு டைய தலை; காயத்ரம் கண்…])என்கிறபடியே வேதங்களை அவயவங்களாக உடையனாய் இருக்கை – அவயவார்த்தே மயட் -ஈஸ்வரன் வேத பிரதிபாத்யன் -இவன் வேத சரீரன் –உபஸ்திதம் தேன புரோ கருத்மதா –சர்வேஸ்வரன் தன்னை பிரகாசிப்பிக்கும் நிலைக் கண்ணாடி போலேயும்-மோம் பழம் போலேயும் திரு முன்பே சர்வதா சந்நிஹிதனாய் உள்ளவனை –த்வத் அங்க்ரி சம்மர்த்த கிண அங்க ஸோபிநா –தன்னை மேற் கொண்டால் திருவடிகளால் நெருக்கின தழும்பு
தனக்கு போக சிஹ்னம் ஆகையாலே -அத்தாலே விளங்கா நிற்குமவன் –-ஈஸ்வரனுக்கு ஸ்ரீ கௌஸ்துபம் லஷணம் ஆனால் போலே இவனுக்கும் அது தாஸ்ய சிஹ்னமாய் இருக்கும்-(ஸூபர்னோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிர–தைத்ரியம் –வேதாத்மா விஹகேஸ்வர -சதுஸ் ஸ்லோகி
ஹூங்காராஸ் பாலநாங்க்ரி ப்ரஹதிபிரபி தம் தார்ஷ்யமத்யஷி பஸ்த்வம் –தழும்பு அலங்காரம் உண்டே
விதானம் -மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -)
நண்ணு நினக்கு ஒரு தாசனும் நண்பனும் வாகனமும் மரி யாசனமும்
திண்ணம் உறத் திகழும் கொடியும் விரி சாரமும் ஓர் விதானமுமாய்
எண்ணின் மறை வடிவானவனாய் அடி இணைகள் இறுத்தும் தழும்பு இலகிய
ஒண்ணும் உனக்கு எதிர் நின்று பணிந்திடும் உத்தமன் கலுழன் உகந்தவனாய் –41–உனக்கு தாஸனும் தோழனும் வாகனமும் ஸிம்ஹாஸனமும் கொடியும் மேற் கட்டியும்-திருவால வட்டமும் ஆகின்றவனும் உன்னுடைய திருவடிகள் நெருங்குவதால் உண்டாகிய தழும்பின் அடையாளத்தாலே சோபிக்கிறவனும்
வேத ஸ்வரூபியுமான பெரிய திருவடியாலே உன் முன் நிலைக்கண்ணாடி போல் நின்று கொண்டு சேவிக்கப் படுகின்றவனாய் –
—
ஸ்தோத்ரம் -42-அவதாரிகை –உபய விபூதி விஷயமான தன்னுடைய சர்வ பரத்தையும் இவன் பக்கலிலே வைத்து இவன் இட்ட வழக்காய் இருக்கிற ஸ்ரீ சேநாபதி யாழ்வான் உடைய தாஸ்ய சாம்ராஜ்யத்தை அனுபவிக்கிறார் –
த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண யத் யதா
பிரியேண சேநாபதிநா ந்யவேதி தத்
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–42–
விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;-எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.
த்வதீய புக்த உஜ்ஜீத சேஷ போஜிநா-உனது போனகம் செய்த சேஷத்தை உண்பவனும்
த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண -உன்னாலே வைக்கப்பட்ட உபய விபூதி நிர்வாக பாரத்தை உடையவனும்
பிரியேண சேநாபதிநா-உனக்கு அன்பனுமான சேனாபதி ஆழ்வானாலே-அனைவரும் பிரியமானவர்களே அங்கே -இங்கு விசேஷித்து அருளியது இவருக்கு அசாதாரண பிரியம் –-ஆகவே இத் தத்துவம் சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளருவது என்றார் பட்டர்
யத் யதா–யாதொரு விஷயம் யாது ஒரு படியாக
ந்யவேதி தத்-விண்ணப்பம் செய்யப் பட்டதோ அந்த விஷயத்தை
ததா அநு ஜாநந்த முதார வீஷணை–அப்படியே செய்வது என்று அழகிய கடாக்ஷங்களாலே நியமித்து அருளா நிற்கிற
த்வதீய புக்த உஜ்ஜீத –-தேவர் அமுது செய்து கை வாங்கின ப்ரசாதத்தாலே தரிக்குமவராய் இருக்கை –
த்வதீய -என்கையாலே வகுத்த ஸ்வாமி உடைய சேஷமே போஜ்யம் -என்கிறது –
யதுச் சிஷ்டம் போஜ்யம் -யத் வா துஸ் சரிதம் மம சர்வம் புநந்து மாமாய -(உண்ணத் தகாத உச்சி,ஷ்டம் யாதொன்று என்னால் உண்ணப்பட்டதோ, என்னுடைய கெட்ட காரியம் யாதொன்று உண்டோ, “ஆப: எனப்படும் எம்பெருமான் என்னை அவைகளெல்லாவற்றிலிருந்தும் பரிஸூத்,த,ப்படுத்த)என்கையாலே அல்லாதார் உடைய உச்சிஷ்டம் அபோஜ்யம் -என்கை –-புக்த உஜ்ஜிதம் -என்கையாலே-கலத்ததுண்டு -திருப் பல்லாண்டு -9- என்கிறபடியே-அமுது செய்து கை வாங்கின பின்பு அற்றையதே போஜ்யம் –-முன்பு பாத்திர சேஷமே அபோஜ்யம் என்கிறது –சேஷ போஜிநா – தனக்கு தாரகமாய் இருக்கும் அளவு அன்றிக்கே-ரஸான் பக்தஸ்ய ஜிஹ்வாயாம் -(ரஸாந் ப,க்தஸ்ய ஜிஹ்வாயாம் க்,ருஹ்ணாமி கமலோத்,ப,வ! [தாமரையில் பிறந்த பிரமனே ! இனிய சுவைகளை ப,க்த னுடைய நாக்கிலிருந்து அறிகிறேன்) என்கிறபடியே ஈஸ்வரனுக்கு போக்யமாவதும் ஆழ்வார் அமுது செய்தால் -என்கை –த்வயா நிச் ருஷ்டாத்ம பரேண –-நம்மிலும் பெரியவன்-சமர்த்தன் என்று தேவராலே தன் பக்கலிலே வைக்கப் பட்ட உபய விபூதி ரூபமான பரத்தை உடையவனாலே–பிரியேண –-சர்வ அபிமதன் ஆனவனாலே-சேநாபதிநா –-சர்வ சேநா நிர்வாஹகனாலே –-அசைவில் அமரர் தலைவர் தலைவா -திருவாய் -5-8-9-என்னக் கடவது இறே-யத் யதா ந்யவேதி – யாதொரு கார்யம் யாதொருபடி விண்ணப்பம் செய்யப் பட்டது-இதில் உள்மானம் புறமானம் பார்ப்பது இல்லை –-செய்யும் பிரகாரங்களும் அனுசந்திப்பதும் இல்லை-ஈஸ்வரன் இவன் உக்தியைப் பின் செல்லும் இத்தனை –தத் -ததா அநு ஜாநந்த முதார வீஷணை – அவலோக நாதா நேன பூயோ மாம் பாலயாச்யுத -என்றும்-உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -பெரிய திருமொழி -7-1-9-என்றும் சொல்லுகிறபடியே
அநவதிக தயா சௌஹார்த்த அநு ராக கர்ப்பமான இக் கடாஷங்களாலே யாயிற்று –-இவன் இப்படிச் செய்வது -என்று நினைப்பிடுவது –ததா அநு ஜாநந்தம் –-ஐயராலே யாதொரு விண்ணப்பம் செய்யப் பட்டதோ அது அப்படியே -என்று பாசுரப் பரப்பற நியமித்து அருளுவது –(சேஷாசனர் –இதுவே நிரூபகம் ஸ்ரீ விஷ்வக் சேனர்–பர தத்வம் ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழே வளரும் -விசேஷித்து இங்கு – ப்ரியேண் )
நித்தமும் நீ யமுதுண்ட பின் நின்றதை நிகர் இலதாம் ப்ரஸாதம் எனா
பத்தி மகிழ்ந்து அதை யுண்பவனும் நினது ஆணையினால் செக பாரம் எல்லாம்
சித்திரமாய் சிரம் ஏந்தி நடத்து நின் நண்பனுமாம் சேனா பதியின்
வித்தகமாம் பணிவிடைகள் உகந்து அவன் வேண்டியவாறு பணிப்பவனாய் –42–பிரதி தினமும் அமுது செய்த பிற்பாடு சேஷமாய் நின்றதை பரம உத்தமமான ப்ரஸாதமாக மதித்து மன மகிழ்ச்சியுடன்
அதைப் புஜிப்பவனும் உன் நியமனப்படி ஜகத்தின் -உபய விபூதியின் -பாரத்தை எல்லாம் தன் சிரஸ்ஸில் வஹித்து விசித்ரமாய் நடத்துபவனும் உனக்கு இஷ்டனுமான ஸேனாபதி ஆழ்வான்
செய்யும் பணிவிடைகளை உகந்து அவன் செய்யும் விண்ணப்பத்திற்கு அநு குணமாகவே அவனுக்கு கட்டளைகள் இடுபவனாய் –
—
ஸ்தோத்ரம் -43-அவதாரிகை –சதா பஸ்யந்தி ஸூரய-இத்யாதிகளில் சொல்லுகிற நித்ய ஸூரிகளுடைய தாஸ்யைக சம்ருத்தியை அனுபவிக்கிறார் – அடியார்கள் குழாம்களை –உடன் கூடுவது என்று கொலோ –திருவாய் -2-3-10-என்று இறே இவர் பிரார்த்தனை-
ஹத அகில க்லேஸ் மலை ஸ்வ பாவாத
ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் தவ உசித
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை
நிஷேவ்ய மாணம் ஸ சிவைர் யதோ சிதம்–43-
துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக் கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக் கேற்ப உன்னை வணங்கக் கூடிய நித்ய ஸூரிகளால் வணங்கப்படுபவனே!
ஸ்வ பாவாத-இயற்கையாகவே
ஹத அகில க்லேஸ் மலை –வருத்தங்களும் மலர்களும் எல்லாம் அற்ற வர்களாயும்-அவித்யை அஹங்காரம் ராகம் த்வேஷம் அபிநிவேசம் ஐந்து கிலேசங்கள்-பிரகிருதி சம்பந்தமாகிய மலம் -இவை இல்லாதவர்கள் இவற்றை இயற்கையாக உள்ள நித்ய ஸூரிகளைச் சொல்கிறது
தவ ஆநு கூல்ய ஏக ரசைஸ்-உனது கைங்கர்யம் ஒன்றையே போகமாக உடையவர்களாயும்
தவ உசித–உனக்கு ஏற்றவர்களாயும் -ஸ்வரூப ரூப குணங்களால் உன்னோடே ஒத்து இருப்பவர்களாயும்
க்ருஹீத தத் தத் பரிசார சாதநை–அந்த அந்த கைங்கர்யங்களுக்கு உபகரணங்களான-குடை சாமரம் முதலியவற்றை கையிலே ஏந்தி இருப்பவர்களையும் உள்ள
ஸ சிவைர்-மந்திரிகள் போன்ற நித்ய ஸூரி களாலே
ஹத அகில க்லேஸ் மலை –-அவித்யா அஸ்மித அபி நிவேச ராக த்வேஷா பஞ்ச க்லேசா-(அவித்யை, அஹங்காரம், பேராசை, விருப்பம், கோபம் இவ் வைந்தும் க்லேஸங்கள்)என்கிறவை க்லேசங்கள் –-அவற்றின் உடைய –ப்ராகபாவம் -முன் எப்பொழுதும் இல்லாது இருத்தல் – உடையவர்கள் -என்கை –-மலம் என்று ப்ரக்ருதியாய் தத் சம்சர்க்க அனர்ஹதயா வந்த ப்ராக பாவத்தை உடையவர்கள் -என்கை இத்தால் பிரபுத்த ஸ்வ பாவ யுக்தரான முக்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது ––ஸ்வ பாவாத ஸ்தா ஆநு கூல்யை கரசைஸ் – சத்தா பிரயுக்தமாக-தேவர் திருவடிகளில் கைங்கர்யத்தையே போக்யமாக உடையராய் இருக்கை –-இத்தாலும் ஒரு நாள் தொடங்கி அடிமை செய்யத் தொடங்கின முக்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –தவ உசித – ஸ்வரூப ரூப குணங்களாலே தேவருக்கு
சத்ருச லஷண ரானவர்கள் –க்ருஹீத தத் தத் பரிசார சாதநை -நிஷேவ்ய மாணம் – கைங்கர்ய உசித பரிகரங்களை ஆதர அதிசயத்தாலே விட மாட்டாமையாலே-சூட்டு நன் மாலை -திரு விருத்தம் -21-படியே தரித்து இருக்கையாலே தேவர்க்கே சத்ருசர் ஆனவர்களாலே சேவிக்கப் படா நின்று உள்ள உன்னை-ஸ சிவைர் – வாத்சல்யத்தாலே அவன் முறை அழியப் பரிமாற்ற நினைத்தாலும் அவனை முறை உணர்த்தி அடிமை செய்யுமவர்கள்-நீதி வானவர் -அமலனாதி -1- இறே-ஆஸ்ரித ரஷணத்தில் தேவரை பிரேரிக்கும் அவர்கள் இறே-யதோ சிதம் –-ஸ்வரூப அநு ரூபமாக என்னுதல் – அவஸ்ரோசிதமாக-என்னுதல்-(யதோசிதம் நிஷேவ்ய மாணம் –அவரவர்கள் அதிகாரத்துக்கு தக்கபடியும் –-அவன் திரு உள்ளத்துக்கு தக்கபடியும் -சமயங்களுக்கு தக்க படியும் கைங்கர்யம் )
துன்ப மலங்கள் அனைத்தையும் நீத்து நின் தூய மலர்த் திருவடி இணையில்
இன்பம் இயற்கையில் ஊட்டுவதாம் பணிவிடைகளில் போக்யம் உற்றவராய்
யன்புடன் இற்கு உபசாரம் இழைத்திட வாயின ஸாதனம் ஏந்தினராய்ப்
பொன் புரை நித்தியர் நின்னை யதோ உசிதம் போற்ற மகிழ்வுடன் பொலிபவனாய் –43-துன்பத்தைத் தரக்கூடிய -அவித்யை முதலான குற்றங்கள் ஒன்றும் இல்லாதவராய்-மகா பரிசுத்தமாகிய உன் திருவடிகளில் கைங்கர்யங்களையே இயற்கையாக எக்காலத்தும் போக்யமாக எண்ணுபவராய்
பரம ப்ரேமத்துடன் உனக்கு உபசாரம் செய்யும் பொருட்டு அந்தவந்த கைங்கர்ய உப கரணங்களான சத்ர சாமராதிகளைத் தரித்துக் கொண்டு இருப்பவராய் உள்ள அந்த நித்ய ஸூரிகள் உன்னை ஸ்வரூப அனுரூபமாக சேவிக்க அதனால் மன மகிழ்ச்சி கொண்டு பிரகாசிப்பவனாய்-
—
ஸ்தோத்ரம் -44-அவதாரிகை –பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசா அநு ஷூ ரம்ஸ்யதே – என்கிறபடியே பிராட்டியை நாநா ரசங்களாலே உகப்பிக்கும் படியை அனுபவிக்க வேண்டும்-என்கிறார்-
அபூர்வ நாநா ரஸபாவ நிர்ப்பர
ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் –44-
தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;-இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப் பொழுதில் செல்லும்படி ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக் கைகளை உடையவன்.
அபூர்வ நாநா ரஸ்பாவ நிர்ப்பர ப்ரபத்தயா–விலக்ஷணங்களான பலவகை ரசங்களாலும் பாவங்களாலும் நெருக்குண்டு இடைவிடாது தொடர்ந்து நடப்பதாய்
ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா–ஒரு க்ஷணப் பொழுதிலே ஏக தேசம் போலே விரைவாகக்
கழிக்கப் பட்ட காலங்களை யுடையதான
முக்த விதக்த லீலயா–மிகவும் அழகிய லீலையினாலே
ப்ரஹர்ஷ யந்தம் மஹி ஷீம் மஹா புஜம் -பெரிய பிராட்டியாரை சந்தோஷப்படுத்தா நிற்கிற
விசாலமான புஜங்களை யுடையனாய் இருக்கிற
அபூர்வ –பிரதி ஷணமும் முன்பு கண்டு அறியாதது போலே இருக்கை –நாநா ரஸபாவ நிர்ப்பர- பஹூ முகமான ரசத்தாலும் பாவத்தாலும் நெருங்கும் படி –ப்ரபத்தயா- ஸ்ம்பத்தயா--ரசமாவது -சேதனர் யாதொன்றை அனுசந்தியா நின்றாலும்-யேன மாத யதி-(எதனாலே மதமடைகிறானோ)என்கிறபடியே மதியா நிற்பார்-அது இறே ரசம்-அதுக்கு அடி பாவம்-மானச விகாசம் –முக்த விதக்த லீலயா –-அவ்வோ தச அநு குணமாய்-முக்தமாயும் விதக்தமாயும் உள்ள லீலையாலே –ஷணாணுவத் ஷிப்த பராதி காலயா –-ஒரு ஷணத்தில் ஏக தேசம் போலே போக்கப் பட்ட பரகாலம் பரார்த்த காலம் இவற்றை உடைத்தாய் இருக்கும் அதனாலே-பரகாலம் ஆகிறது -ப்ரஹ்மா ஆயுஸ்ஸூ-பரார்த்த காலம் ஆகிறது -அதில் சம பாதி-ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் – யஸ் த்வ்யா சஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வ்யா விநா -(யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கேரா நரகோ யஸ் த்வயா விநா। இதி .ஜாநந் பராம் ப்ரீதிம் ௧ச்ச, ராம மயா ஸஹ॥ [ராக,வரே ! உம்முடன் கூடியிருக்கும் இருப்பே (எனக்கு) ஸ்வர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்குமிருப்பு நரகம்” என்பதை அறிந்து, என்னுடன் கூடவே மேலான ஆநந்தத்தை அடைவீராக.]) என்றும் –-த்வத் வியோ கே ந மே ராம த்யக்தவ்ய மிஹ ஜீவிதம் –(த்வயா ச ஸஹ கந்தவ்யம் மயா கு,ருஜநாஜ்ஞயா। த்வத், வியோகே,ந மே ராம! த்யக்தவ்யமிஹ ஜீவிதம் ॥| [ராக,வரே! பெரியோர்களின் கட்டளைப்படி நான் உம்முடன் கூடவே போகவேண்டும்; உம்மைப் பிரிந்தால் இங்கேயே உயிரை விடவேண்டும்.)என்றும் சர்வதா தேன ஹீநாயா ராமேண் விதிதாத்மநா தீ ஷணம் விஷமி வாஸ் வாத்ய துர்லபம் மம ஜீவிதம் -([நெஞ்சிலுள்ளதை அறிபவனான ராம பிரானை விட்டுப் பிரிந்த எனக்கு, கொடுமையான விஷத்தைக் குடித்ததைப் போல், ‘ உயிர் தரிப்பது எல்லா விதத்திலும் துர்லப,ம்.) என்றும்-அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே வ்யதிரேகத்தில் ஆற்ற முடியாத பிராட்டியை மிகவும் உகப்பியா நின்று உள்ளவனை-ப்ரஹர்ஷ யந்தம் -என்கையாலே-இவ் உகப்பு நித்யம் -என்கை –மஹா புஜம் – கீழ் சொன்ன லீலா ரசத்தாலே உகப்பிக்கும் அவனோபாதி யன்று-அணி மானத் தட வரைத் தோளாலே -திருவாய் -4-8-2- அணைத்து உகப்பிக்கும் என்றும் ஸ்வரூப குணங்களைக் காட்டில் ரூப குணம் இறே இனிதாய் இருப்பது –(கீழே பிராட்டியுடைய சேர்த்தி அழகை அனுபவித்து இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு —-சமரசனாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் பிரமனுடைய ஆயுள் காலமும் சிறிய நொடிப் பொழுது போலே தோன்றுமே இந்த லீலா ரசத்தால் அவிதித கதயாமா ராத்ரிரேவ வயரம்ஸீத-உத்தர ஸ்ரீ ராமாயணம் -)
கீழே -37-/38-/39–பாசுரங்களில் பிராட்டி சேர்த்தி அழகு அனுபவம் –-இதில் பிராட்டியை உகப்பிக்கும் பரிசு சொல்லுகிறது –-காந்தர்வ வேதத்தில் உள்ள வீரம் சிருங்கார ரசங்களும் உத்ஸாஹம் போன்ற பாவங்களும் புதிது புதிதாக தொடர்ந்து செல்லும் லீலைகளை அனுபவிக்கிறார்-பராதி காலயா -பிரமன் காலம் பரம் -அதில் பாதி பரார்த்தம் -அது கூட க்ஷணம் பொழுதில் அவலீலையாக கழிகின்றனவாம்-
பற்பலவாகும் அபூர்வ பாவ ரசங்கள் பணித்து நிறைப் பதினாறு
கல்பம் அநேகம் அடங்கிய காலம் அதும் கண லேஸம் எனக் கழியப்
பொற்புடன் சாதுரியம் பல பூண்டு விளங்கு விலாஸ வகைகளினால்
அற்புதம் என்று உனது அன்பினள் மெச்சி யணைக்கு மகா புயம் உற்றவனாய் –44-இதற்கு முன் என்றும் கண்டு அறியாதன போன்று வெகு விதங்களாய் ஸ்ருங்கார உத்ஸஹாதி ரசங்களால் அதிகமாய் விருத்தி அடைந்து இருப்பதால்-பரம்பரார்த்தம் என்னும் கற்பகங்கள் அடங்கிய காலமானது ஒரு க்ஷணம் போலே கழிந்து கொண்டு இருக்க வெகு சாதுர்யம் பூண்டு அழகாய் அமைந்துள்ள லீலைகளினால் பெரிய பிராட்டியார் அற்புதம் என்று மெச்சி அணைத்துக் கொள்ளும் பெரிய திருத் தோள்களை யுடையவனாய்-
—
ஸ்தோத்ரம் -45-அவதாரிகை –இப்படிப் பிராட்டியை உகப்பிக்கிற ரச பாவங்களுக்கு ஆஸ்ரயமான வடிவையும் குணங்களையும் அனுசந்திக்கிறார்-
அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன
ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்
ஸ்ரீய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்
ஸ்மர்த்த மாபத்ஸக மர்த்தி கல்பகம்-45-
எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்; அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்; தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக் கூடியவன், ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –
அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய யௌவன ஸ்வ பாவ லாவண்யமய அம்ருதோதிதம்–சிந்தைக்கு எட்டாததாய் – ஆச்சர்யமாய் –நித்தியமாய் –இருக்கிற யவ்வனத்தை ஸ்வ பாவமாக யுடைய லாவண்யம் நிறைந்த அமுதக்கடலாய்
ஸ்ரீய ஸ்ரீயம் –திருவுக்கும் திருவாய்
பக்த ஜனைக ஜீவிதம்–பக்த ஜனங்களுக்கு நற் சீவனாய்-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருப்பார்க்கு-இவன் ஜீவன் –சாத்மிக்க போக ப்ரதன் –-பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் -உயிர் நிலையாக -உடையவன் -என்றுமாம் – மம ப்ராணா ஹி பாண்டவா –ஸ்மர்த்தம்-சர்வ சக்தனாய் –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான்
ஆபத் ஸகம் –ஆபத்துக்களிலே வந்து உதவுமவனாய் –-காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2- உதவும் ஸ்வ பாவனான உன்னை –அர்த்தி கல்பகம்-யாசிப்பவர்களுக்கு கற்பக வ்ருக்ஷம் என்னத் தகுந்தவனாய் இருக்கிற-என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11- என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-
அசிந்த்ய –-விக்ரஹ குணங்கள் உடைய அவாங் மனஸ் அகோசரத்வத்தை சொல்லுகிறது-ஸ்வரூபத்தையும் குணத்தையும் பரிச்சேதிக்கிலும் வடிவில் போக்யதை பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை-இச்சா க்ருஹீ தாபி மதோரு தேக –திவ்ய-–ந பூத சங்க சம்ச்தானோ தேஹோச்ய பரமாத்மன -என்கிறபடியே-அப்ராக்ருதமாய் இருக்கை –அத்புத –க்ருஹீ தாமசம் ஆச்சர்யமாய் இருக்கை-முழுசி வண்டாடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணி -என்கிறபடியே இருக்கை –-நித்ய – அகால கால்யத்வத்தைச் சொல்கிறது-யௌவன -ஸ்வ பாவ–யுவா குமார -(யெளவனத்தை உடையவனாகவும், சிறிது பாலனாகவு மிருப்பவன்.])என்கிறபடியே -இருக்கை – தருணெள ரூப சம்மன்ன நௌ -(தருணெள ரூப ஸம்பந்நெள ஸுகுமாரெள மஹாபலெள| புண்டரீக விஸாலாக்ஷெள சீர க்ருஷ்ணாஜிநாம்ப,ரெள ॥| : [(ராமலக்ஷ்மணர்கள்) வாலிபமானவர்கள்; அழகு நிறைந்தவர்கள்; ஸெளகுமார்யத்தை உடையவர்கள்; அதிகமான ப,லமுள்ளவர்கள். தாமரை போன்ற அகன்ற கண்களை உடையவர்கள் ; மரவுரியையும், மான் தோலையும் உடுத்தவர்கள்.])என்கிற படி ஸ்வா பாவிகமான யௌ வனத்தை உடைத்தாய் இருக்கை – லாவண்ய மய –-பிரசுரமான சாமான்ய சோபையை உடைத்தாய் இருக்கை –அம்ருதோதிதம்- சர்வ பிரகார போக்யதையாலே-அப்ரமேயோ மஹோததி -(ஸமுத்ரம் ராகவோ ராஜா ஸரணம்’ ௧,ந்துமர்ஹதி | ‘காநிதஸ் ஸக,ரேணாய மப்ரமேயோ மஹோத,தி,: ॥ [அரசரான ராகவர் ஸமுத்ரத்தை ஸரணமடையத் தகுந்தவர். அளவற்றதான இப் பெருங்கடல் ஸகரரால் வெட்டு விக்கப்பட்டதன்)என்கிறபடியே பரிச்சேதிக்க போகாமைக்கு ஒரு சமுத்ரம் என்கை-
ஸ்ரீய ஸ்ரீயம் –-திருவுக்கும் திருவாகிய செல்வன் -பெரிய திருமொழி -7-7-1- என்கிறபடியே பிராட்டிக்கும் மங்கள அவஹனாய் இருக்குமவனை-பக்த ஜனைக ஜீவிதம் –எல்லாம் கண்ணன் -6-7-1- என்கிறபடியே ஆஸ்ரிதர்க்கு தாரகாராதிகள் தானேயாய் இருக்குமவனை-பக்த ஜனங்களையே தனக்கு தாரகமாய் உடையவன் -என்றுமாம் – மம ப்ராணா ஹி பாண்டவா –(த்,விஷத,ந்நம் ந போக்தவ்யம் த், விஷந்தம் நைவ போஜயேத் | பாண்ட, வாந் த்,விஷஸே ராஜந் ! மம ப்ராணா ஹி பாண்ட,வா: || [த்,வேஷிப்பவனின் அன்னம் புஜிக்கத் தக்கதன்று ; த்வேஷிப்பவனை பு,ஜிப்பிக்கவும் கூடாது, அரசனே | நீ பாண்டவர்களை த்,வேஷிக்கிறாய். பாண்டவர்கள் எனக்கு ப்ராணனன்றோ) ஸ்மர்த்தம் – அளவுடையரான நித்ய சூரிகளை அனுபவிக்குமவனை –-நித்ய சூரிகள் அனுபவிக்கும்படி-ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை -4-5-5- என்கிறபடியே சாத்மிக்க சாத் மிக்க அனுபவிப்பிக்கும் சாமர்த்தியத்தை உடைய உன்னை-ஆபத்ஸகம்-காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்த அளவிலே -8-5-2- உதவும் ஸ்வ பாவனான உன்னை – அரத்தி கல்பகம் – என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11- என்கிறபடியே தன்னை ஔதார்யம் பண்ணுமவனை-
(கீழே தனித் தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட திவ்ய மங்கள விக்ரஹ குணம் -திவ்யாத்ம குணம் –
எல்லாவற்றையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –-திருவுக்கும் திருவாகிய செல்வன் -சகலவித ஜீவனம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –சாத்மிக்க போக ப்ரதன் – அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ –என்று கீழ் உடன் அன்வயம் )
விசேஷண சங்கீர்த்தனம் -32-ஸ்லோகம் தொடங்கி இது வரை தனித்தனியே பிரஸ்தாபிக்கப் பட்ட
திவ்ய மங்கள விக்ரஹ குணம் திவ்ய ஆத்ம குணம் எல்லாவற்றையும் ஓன்று சேர்த்து அனுபவிக்கிறார் இதில்–லாவண்யமய அம்ருதோதிதம்-விசேஷமாகக் கொண்டு யௌவன ஸ்வ பாவத்தை அதுக்கு விசேஷணமாக உரைத்து அருளினார் தூப்புல் அம்மான்-லாவண்யம் -சமுதாய சோபை -நீரோட்டம் -மிருதுவாயும் கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் தேஜஸ்ஸூ-குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு அடியேனை அனுபவிக்கப்ப் பண்ணுவது என்றோ -என்று கீழ் உடன் அன்வயம் –
நெஞ்சில் நினைக்க அரிதாகிய அற்புத நித்ய யவ்வன நீர்மையனாய்
விஞ்சும் எழில் மயமாய் அமுதக் கடலாய் விமலைக்கும் ஓர் சுப கரனாய்
தஞ்சம் அடைபவர்க்கு ஒரு தாரக போஷக போக்ய சதுரனுமாய்
நஞ்சின் விதத்திலும் நண்பனுமாய் வர நாடுபவர்க்கு ஒரு கற்பகமாய் –45–மனத்தால் எண்ணுதற்கு அரிதாகி வெகு ஆச்சர்யத்தை உண்டு பண்ணுவதான நித்ய யவ்வனத்தை இயற்கையாக யுடையவனாய்-லாவண்யம் நிறைந்து அமுதக்கடல் போன்றவனாய் -ஸ்ரீ மஹா லஷ்மிக்கும் மங்கள கரனாய்-தன்னை அடையும் ஆஸ்ரிதற்கு தாரக போஷக போக்யனாய்-தன் ஆஸ்ரிதர் அனுபவிக்கும் பொருட்டு தன்னையே கொடுக்க ஸாமர்த்யம் யுடையவனாய்-எந்த ஆபத்தில் நின்றும் ரக்ஷிக்க தோழன் போன்றவனாய்-யாசிப்பவர்க்குக் கொடுக்கும் விஷயத்தில் ஒரு கற்பக வ்ருக்ஷம் போன்றவனாய் –
—
ஸ்தோத்ரம் -46-அவதாரிகை –கீழ்ச் சொன்ன ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பூர்ணனாய்-நித்ய விபூதியிலே குறைவற எழுந்து அருளி இருக்கிற தேவரை பாஹ்ய மநோ ரதங்களைத் தவிர்ந்து
என்னுடைய சத்தையால் உள்ள பிரயோஜனம் பெறும்படி நித்ய கைங்கர்யத்திலே உகப்பிப்பது -என்று – என்கிறார் –
பவந்தமேவா நுசரன் நிரந்தரம்
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர
கதா அஹ மை காந்திக நித்ய கிங்கர
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித–46-
பவந்தமேவ அஹம் அநுசரன் நிரந்தரம்-உன்னையே நான் இடைவிடாமல் பின் தொடர்ந்து கொண்டு
ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர–வேறே எவ்விதமான இதர ஆசையும் அற்றவனாய்
ஐகாந்திக நித்ய கிங்கர–நித்ய நியதி கைங்கர்யத்தை யுடையவனாய்
ஸநாத ஜீவித–நாதனோடு கூடிய உயிரை யுடையவனாய்
கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி –எப்போது திரு உள்ளத்தை உகப்பிக்கப் போகிறேன்
மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து,
எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?
பவந்தம்-ஸ்வரூப ரூப குண விபவை-பரி பூர்ணம்-இன்பம் பயக்க -7-10-1-என்று தொடங்கி-ஆள்கின்ற எங்கள் பிரான் -என்கிற பூர்த்தியைச் சொல்லுகிறது –ஏவ-–தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4- என்கிறபடியே அநுகூல வருத்தி தேவருக்கே அனுகூலமாய் இருக்கை –அநுசரன்-யேன யேன தாத்தா கச்சதி–ஏதமாநந்த மயமாத்மா நமுப சங்க க்ரமய ––அநு சஞ்சரன் ––குருஷ்வ மாமு நுசரம் -என்கிறபடியே அநு வர்த்தனத்தை யுடையனாய்-நிரந்தரம் – இடைவிடாதே இருக்கை –ப்ரசாந்த நிஸ் சேஷ மநோ ரதாந்த்ர ––மற்றை நம் காமங்கள் மாற்று -என்று தேவரை ஒழிந்த விஷயங்களில் மநோ வியாபாரங்களை ஸூ வாசனமாக தவிர்ந்து–கதா –என்று கொள் கண்கள் காண்பது -3-6-10-எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் -3-2-1-என்னும்படியே காலத்துக்கு எல்லை அருளிச் செய்ய வேணும் –அஹம் – ருசியேயாய் இத் தலையால் உபாயம் இல்லாத நான் –ஐகாந்திக நித்ய கிங்கர –
ஏக ரூபமாய்-யாவதாத்மபாவியான கைங்கர்யத்தை நிரூபகமாக உடையனாய் –ஸநாத ஜீவித –
சநாதமான சத்தையை உடையனாய்-என் சத்தையை ஸ பிரயோஜனமாக்கி -என்கை –ப்ரஹர்ஷயிஷ்யாமி –-மிகவும் உகப்பிக்கக் கடவேன் –-தன்னுடைய அநு வ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப்
பிறந்த ப்ரஹர்ஷம் இறே சேதனனுக்கு பிராப்யம் –
(ஏதமாநந்த, மயமாத்மாநமுப ஸங்க்ரம்ய | இமாந் லோகாந் காமாந்நீ காமரூப் யநுஸஞ்சரந் | ஏதத் ஸாம காயந்நாஸ்தே। ஹாவு ஹாவு ஹா வு || [ஆனந்த,மயனான இந்தப் பரமாத்மாவை அணுகி, இஷ்டப் பட்ட உருவங்களை உடையவனாய், இந்தக் காமங்களிலும், லோகங்களிலும் (பரமாத்மாவைப்) பின் தொடர்ந்து கொண்டு இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்: ஹாவு ஹாவு ஹாவு]ஸோ5ஹம் தே தேவதே,வேஸ! நார்ச்சநாதெ,ள ஸ்துதெள ந ச ॥ ஸாமார்த்,யவாந் க்ருபா மாத்ர மநோவ்ருத்தி: ப்ரஸீத, மே॥தே,வர்களுக்கும் தேவர்களான நித்யஸூரிகளுக்கும்’ தலைவனே | இப்படிப்பட்ட நான் உன்னுடைய ஸ்துதியிலும், அர்ச்சனை முதலியவற்றிலும் ஸாமர்த்தியம் உடையவனல்லேன். அருள் கூர்ந்த திருவுள்ளத்துடன் கூடியவனாய் எனக்கு தயை புரிய வேண்டும்.] (ஜாயமாநம் ஹி புருஷம் யம் பஸ்யேந் மது,ஸூத,ந: | ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞஜேயஸ் ஸ வை மோக்ஷார்த்த,சிந்தக: ॥| [பிறந்து கொண்டிருக்கும் போது எந்தப் புருஷனை மது, ஸுூதனன் பார்க்கிறானோ அவனே ஸத்வ குணமுடைய வனென்று அறியத் தக்கவன். அவனே மோக்ஷ் பலத்தை நினைப்பவன்)(இச்சாத ஏவ தவ விஸ்வ பதரார்த்த ஸத்தா நித்யம் ப்ரியாஸ் தவ து கேசந தே5பி நித்யா: ! நித்யம் த்வதே,பரதந்த்ர நிஜ ஸ்வரூபா; பாவத்க மங்கள குணா ஹி நிதர்மஸம் ந: [எல்லாப் பொருள்களின் இருப்பும் உன்னுடைய விருப்பத் தாலேயே ஏற்படுகிறது. உனக்குச் சில வஸ்துக்கள் எப்போதும் பிரியமானவை; அவை நித்யமாக விளங்கு கின்றன. எப்பொழுதும் உனக்கே பரதந்திரமான ஸ்வ ரூபத்தையுடைய உன்னுடைய கல்யாண குணங்கள் (இவ்விஷயத்தில்) எங்களுக்கு த்,ருஷ்டாந்தம்)(யோ5ஹமஸ்மி ஸ ஸந் யஜே [நான் எப்படிப் பட்டவனா யிருக்கிறேனோ, அப்படிப்பட்ட வனாகவே இருந்து கொண்டு, (ஆத்ம ஸமர்ப்பணமாகிற) யாகத்தைச் செய்கிறேன்.)(யஸ்யாஸ்மி ந தமந்தரேமி-[எவனுக்கு கான் தராஸனாயிருக்கிறேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்.]
(நிரந்தரம் அநு சரன் -சென்றால் குடையாம் இத்யாதி சகல வித கைங்கர்யங்களும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று -ஐகாந்திக நித்ய கிங்கர –-சேதன லாபம் எம்பெருமானுக்கே புருஷார்த்தம் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி -எப்பொழுது உன்னை ஸந்துஷ்டனாக செய்யப் போகிறேன் என்றபடி -இந் நிலத்திலும் நீயே நாதனாக இருந்தாலும் உபேக்ஷிக்கப்பட்டு அநாதன் போலே தீனனாய் அன்றோ இருக்கின்றேன்-நித்ய கைங்கர்யம் செய்வேனாக என்னை ஆக்கி அருளினால் ஒழிய என்னுடைய சத்தை பயன் பெறாதே என்பதையே சநாத ஜீவித -என்று அருளிச் செய்கிறார்
நின்று நிறை நினையே யனுவர்த்தனம் என்றும் இயற்றி நினை ஒழி மற்று
ஒன்றிலும் இச்சை லேசமும் ஒன்ற விடாமல் ஒழித்து ஒரு நியதம் உடன்
என்றும் உன் நித்ய கைங்கர்யங்களை ஏந்தும் ஓர் சத்துடை வாழ்க்கையனாய்
நன்றென நிற்கு மகிழ்ச்சி விளைப்பதை நானும் வகித்தல் எஞ்ஞான்று கொலோ –46-இத்யாதி ஸ்வரூப ரூப குண விபவங்களால் நிறைந்த உன்னையே இடைவிடாது என்றும் அனுவர்த்தித்துக் கொண்டு
உன்னைத்தவிர மற்ற விஷயங்களில் மநோ வியாபாரங்களை முற்றவும் தவிர்த்தவனாய்
இந்த ஆத்ம ஸ்வ பாவமுள்ள காலம் அத்தனையும் திடமான மனத்துடன் உனக்கு நித்ய கைங்கர்யங்களையே செய்து கொண்டு சபலமான சத்தை யுடைய வாழ்க்கை யுள்ளவனாய் உன்னை நான் உகப்பிக்கும் நாள் எப்பொழுது வருமோ –
—
ஸ்தோத்ரம் -47-அவதாரிகை –இதில் பிராப்யனான ஈஸ்வரன் உடைய வைலஷண்யத்தையும்
தம்முடைய பூர்வ வருத்தத்தையும் பார்த்து விதி சிவா சநகாதிகள் உடைய மனஸ்ஸூக்கு
அத்யந்த தூரமாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகள் ஆசைப்படுமதான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை சம்சாரியானவன் ஆசைப்படுவாதாவது -என்–ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே தம்மை நிந்திக்கிறார் –
திக ஸூ சிமவி நீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ யோ அஹம் யோகி வர்யாக் ரகண்யை
விதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம்
தவ பரி ஜன பாவம் காம்யே காம வ்ருத்த —47–
புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும், ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்து கொள்ள வேண்டும்.
பரம புருஷ-புருஷோத்தமனே
காம வ்ருத்த —மனம் போகும் படி நடக்கிற
ய அஹம்–யாவன் ஒருவன்
யோகி வர்யாக் ரகண்யை–யோகி ஸ்ரேஷ்டர்களுள் சிரந்தவர்களான
விதி ஸிவ ஸ்நகாத் யைர்-பிரமன் சிவன் சனகர் முதலான வர்களாலும்
த்யாதும் அத்யந்த தூரம்–நெஞ்சால் நினைப்பதற்கும் மிகவும் எட்டாதான
தவ பரி ஜன பாவம் காம்யே –உனது பரிசாரகன் ஆவதற்கு விரும்புகின்றேனோ
தம -அப்படிப்பட்ட
அ ஸூசிம் அ விநீதம் நிர்த்தயம் அலஜ்ஜம்-மாம் திக் -அபரிசுத்தனும் -வணக்கம் அற்றவனும்-இரக்கம் அற்றவனும் வெட்கம் அற்றவனுமான என்னை நிந்திக்க வேணும்
அஸூசிம் –அநாதியான தேக சம்பந்த யுக்தனான என்னை-தேக சம்பந்தா பாவம் சத்தா பிரயுக்தமான
நித்ய சித்தர் இறே நித்ய ஸூத்தர்-அ விநீதம்–இவ்வாத்மாவுக்கு தேக சம்பந்தம் அஸூசி ஹேது என்று
அறிகைக்கு அடியான ஆசார்ய சேவை இல்லாமையாலே-ஸூஷிதன் அல்லாத -என்னை-நிர்த்தயம் –
அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை-அலஜ்ஜம் –கடதாஸி சார்வ பௌமனை மேல் விழுமா போலே – நம்மைப் பாராதே மேல் விழுந்தோம் -இது அபஹாஸ்யம் -என்று லஜ்ஜிக்கவும் அறியாத என்னை –மாம் திக் –இப்படி ஹேய குண பூர்ணனான என்னை-வேண்டேன் என்று தம்மை குத்ஸிக்கிறார் –
பரம புருஷ –சர்வாதிகனான புருஷோத்தமனே –யோ அஹம் – நிஹீ நாக்ர கண்யன் என்று பிரசித்தனான -நான் –யோகி வர்யாக் ரகண்யைவிதி ஸிவ ஸ்நகாத் யைர் த்யாது மத்யந்த தூரம் –
யோகி ஸ்ரேஷ்டரில் பிரதமகண்யரான ப்ரஹ்ம ருத்ராதிகள் என்ன –ப்ரஹ்ம பாவ நிஷ்டரான சநகாதிகள் என்ன இவர்களாலே நினைக்கைக்கும் அத்யந்தம் தூரமாய் உள்ளதை –தவ பரி ஜன பாவம் –ஆத்ம ஸ்வாமியாய்-நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும் வைலஷண்யத்தையும் உடைய நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது –காம்யே –சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்-கதா நு சாஷாத் கரவாணி -என்றும்-கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்-காம வ்ருத்த –விஷய பிரவணனாய் யுக்த அயுக்தங்கள் பாராதாப் போலே தோற்றிற்றுச் செய்த நான் –-ராகம் ஸ்வ ரூபத்தைப் பார்க்க ஒட்டாதே-
(அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யான் யார் –-அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்-தம்முடைய புன்மையை அருளிச் செய்கிறார் –நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –-திருமாற்கு யாமார் வணக்கமார் ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ்-பெரிய திருவந்தாதி -10-)
கீழே பவந்தம் -என்று அனுசந்தித்து –அஹம் -தன்னைப் பார்த்த வாறே-அசுசிம் -அவிநீதம் –நிர்த்தயம் -அலஜ்ஜம் -நான்கு விசேஷணங்கள்-நிர்த்தயம்-அம்ருதத்தை விஷத்தாலே தூஷித்தால் போலே விலஷண போக்யமான பகவத் தத்தவத்தை கண்ணற்று தூஷிக்கப் பார்த்த நிர்த்தயனை
நிர்ப்பயம் -பாட பேதம் தேசிகன் காட்டுகிறார் –-நிரதிசய போக்யரான தேவர் உடைய கைங்கர்ய அம்ருதத்தை சத்தா பிரயுக்தமான ருசியையும் வைலஷண்யத்தையும் உடைய நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் அத்தை அன்றோ நான் ஆதரித்தது – சங்கத்து அளவிலே நின்றேனோ-பெற்று அல்லது தரியாத தசையைப் பற்றி நின்றேன்-கதா நு சாஷாத் கரவாணி -என்றும் கதா ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்றும் -கூப்பிட்டேன்-ராஜ அன்னம் விஷ சம்ஸ்ப்ருஷ்டம் ஆவதே -என்று-வளவேழுலகில்-1-5- ஆழ்வாரைப் போலே பெரிய திருவந்தாதி -10-) ஹா ஹா என்ன சகாசமான கார்யம் செய்ய முயன்றோம் என்று தம்மை நிந்திக்கிறார் –
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள் தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே- ‘நான் சம்பந்தம் உள்ளவனாய் நீ சம்பந்தம் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் முற்றறிவினனாய் நீ அறிவு இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எல்லா ஆற்றலையும் உடையவனாய் நீ ஆற்றல் இல்லாதவனாய் இருக்கிறாய் அல்லை; நான் எங்கும் பரந்திருப்பவனாய் நீ அணுவாய் இருக்கிறாய் அல்லை; இத்தலை நோவு பட விட்டு அருள் அற்றவனாய் இருக்கிறாய் அல்லை; ‘உடையவனாய் வைத்து உடைமை நோவுபட விட்டிருக்கிறது செய்ய நினையாமையே அன்றோ?’ என்று ஆறி இருக்க மாட்டாதொழிகிறது என் அறிவு கேடாமித்தனை அன்றோ?’ என்னுதல். இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘நாராயணனே’ என்றதனை நோக்கிச் ‘சம்பந்தமுடையனாவது’ என்றும், ‘ஞானமூர்த்தி’ என்றதனை நோக்கி,‘முற்றறிவினனாவது’ என்றும், ‘துப்பனே’ என்றதனை நோக்கி, ‘ஆற்றலையுடையனாவது’ என்றும், ‘ஞாலமுண்டாய்’ என்றதனை நோக்கி,‘நீர்மையுடையனாவது’ என்றும், ‘நீக்கமின்றி எங்கும் நின்றாய்’ என்றதனை நோக்கி, ‘உடனிருத்தலையுடையனாவது’ என்றும் அருளிச்செய்கிறார். 1-நாராயணா -பிராப்தம் உண்டு 2-ஞான மூர்த்தி -சர்வஜ்ஞ்ஞன் 3-துப்பன் -சர்வசக்தன் 4-ஞாலம் உண்டாய் -இரக்க ஸ்வபாவம் 5-நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் -சதா சந்நிஹிதன்
பத்துடை யோகிகளுக்குள் முதன்மைப்படும் அயன் அரன் ஸநகாதிகளாலும்
எத்துணை எண்ணுதலுக்கு மிகக்கும் வெகு துலை யுறு நின் பணிவிடை தன்னை
நத்துவன் காம விருத்தி யனேனான் நசை யுறு மசுசியன் விநயம் இலாதேன்
உத்தம புருட விலச்சை யொடச்சம் ஒழித்த வெனக்குறு மிழிவசையாமே –46—ஏ புருஷோத்தம பரம யோகிகளுக்குள் முதன்மை பட்ட பிரமன் சிவன் ஸநகாதியர் முதலானவர்களாலும் நினைப்பதற்கும் எட்டாத வெகு தூரத்தில் உள்ள உன்னுடைய கைங்கர்யங்களை சரீர சம்பந்தத்தினால் அபரிசுத்தனனும்
ஆச்சார்ய முகமாக சிஷிக்கப்படாதவனும் காம விருத்தியை யுடையவனுமான நான் அபேக்ஷிக்கத் துணிந்தேன் இப்படி பயத்தை ஒழித்து வெட்கத்தை விட்டுத் துணிந்த எனக்கு நிந்தையே தகும்
—
ஸ்தோத்ரம் -48-அவதாரிகை –தம்முடைய அயோக்யதையை அனுசந்தித்து – அகலப் பார்த்தவர் ருசியின் மிகுதியாலே அகல மாட்டாதே நிற்க இந்த அயோக்யதைக்குப் பரிஹாரமும் நம் கிருபா ஜநிதமான பிரபத்தியே காணும் – என்ன மீண்டாராய்-இந்த அயோக்யதா ஹேது பூத சர்வ அபராதங்களுக்கும்
பரிஹாரம் தன்னுடைய வெறுமையை முன்னிட்டுப் பண்ணும் பிரபத்தியே யாகாதே -என்று-வேதாந்திர ரஹச்யத்தை முன்னிட்டு-கேவல கிருபையாலே தேவர் என் பாபத்தைப் போக்கி விஷயீ கரிக்க வேணும் -என்கிறார் –-அதவா தாம் பிரார்த்தித்த போதே ப்ராப்யம் சித்தி யாமையாலே சம்சாரியான நாம் ஆசைப்படக் கடவோமோ -என்று நிந்தித்துக் கொண்டு – பின்பும் ருசியாலே அகல மாட்டாதே
இப்படி விளம்பிக்கைக்கு ஹேதுவான பாபத்தையும் தேவர் உடைய கேவல கிருபையாலே
போக்கித் தந்து அருள வேணும் -என்கிறார் ஆகவுமாம் –-அத் தலையில் பெருமையின் எல்லையைப் பார்த்து அன்றோ அகன்றார் அங்கு- இங்கு நீர்மையின் எல்லையைப் பார்த்து கிட்டுகிறார் –
அபராத சஹஸ்ர பாஜநம்-
பதிதம் பீம் பவார்ண வோதரே
அகதிம் சரணா கதம் ஹரே
க்ருபயா கேவல மாத்ம ஸாத்குரு–48–
துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை; உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஹரே-ப்ரணதார்த்தி ஹரனான பெருமானே
அபராத சஹஸ்ர பாஜநம்-பலவகைப்பட்ட அபராதங்களுக்கு கொள்கலமாகவும்
பதிதம் பீம்ப வார்ண வோதரே–பீம பாவ அர்ணவ உதரே பதிதம்–பயங்கரமான சம்சாரக் கடலினுள்ளே விழுந்தவனாயும்-உதரே–நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் –3-2-2- என்கிறபடியே
எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –
அகதிம் –வேறே கதி அற்றவனாயும்
சரணா கதம் -சரணாகத்தான் என்று பேர் இட்டுக் கொண்டவனாயும் இருக்கிற அடியேனை
க்ருபயா கேவல மாத்மஸாத் குரு–உனது திருவருள் ஒன்றையே கொண்டு திருவுள்ளம் பற்றி அருள வேணும் –
அபராத சஹஸ்ர பாஜநம்--தேவர் குணைக பாஜநராப் போலே அஸங்குசிதமான அபராதங்களுக்குக் கொள்கலமான என்னை –-அபராத சப்தத்தாலே சொல்லிற்று-புண்ய பாப ரூபமான பகவன் நிக்ரஹ அனுக்ரஹம் -என்கை-ஆகையால் இந்த வேதார்த்தத்தை வெளி இடுகிறார் –பதிதம் – அந்த பாபத்தை விளைக்கும் சம்சாரத்திலே இருந்து இறே கூப்பிடுகிறது – கொடு வினைத் தூற்றுள் நின்று –பீம் ஜ்ஞானம் பிறந்தார்க்குக் கட்டடங்க-பய அவஹமாய் இருக்கும் -என்கை –-அஹம் பீதோ அஸ்மி தேவேஸ சம்சாரே அஸ்மின் பயாவஹே-–பவார்ணவ – பரிச்சேதிக்க அரியதாய்-அத்தாலே துஸ்தரமாய் இருக்கை –சம்சாரம் ஆகிற கடலிலே புக்கார்க்கு-விஷ்ணு போதம் ஒழியத் தம் தாமால் கரை ஏற ஒண்ணாது இருக்கை –வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச் திருமொழி -5-4-என்னக் கடவது இறே–உதரே-–நின் பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -3-2-2- என்கிறபடியே எடுக்கப் பார்த்தாலும் எட்டாத படியாய் இருக்கை –பதிதிம்- கர்மம் புகத்தள்ள விழுந்து கிடக்கிற படி –அகதிம் –
உன்னை ஒழிய வேறு புகல் அற்று இருக்கிற என்னை –சரணா கதம் –சரணா கத சப்த யுக்தனான என்னை –ஹரே –மித்ர பாவமே யடியாக சமஸ்த துக்கங்களையும் போக்குகையே ஸ்வ பாவமாக உடையவனே –க்ருபயா கேவல –ஆர்த்த ப்ரபன்னன் அல்லன் -என்னாதே-க்ருபா மாத்திர மநோ வ்ருத்தி -என்கிறபடியே சஹகாரம் இல்லாத கிருபையினாலே-ஆத்மஸாத் குரு – ஆத்மா ஸாத்தாகப் பண்ணி அருள வேணும் –-நம்முடையவன் என்று விஷயீ கரித்து அருள வேணும் –(இங்கே விசேஷணங்களை மாத்திரம் அருளிச் செய்து –விசேஷயமான தம்மை மாம் -என்று கூட சொல்லிக் கொள்ள திரு உள்ளம் இல்லாமல் – கீழ் அனுசந்தித்த நைச்ய பாவம் தொடர்கிறது- பகவத் சந்நிக்குள் புகும் பொழுது அனுசந்திக்க வேண்டிய ஸ்லோகம் – )
அகலப் பார்த்தார் கீழ் -கைங்கர்ய அபிநிவேசம் மிக்க இருக்க கை வாங்க முடியாதே – இரும்பையும் பொன்னாக்க வல்ல சர்வ சக்தன் அன்றோ – கிருபை ஒன்றையே கொண்டு நித்ய கைங்கர்யத்துக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
எண்ணிலா அபராதங்கட்க்கு இருப்பிடமாகி நானே
பண்ணிய வினையின் கோரப் பவக்கடல் நடுவில் வீழ்ந்தே
திண்ணமுற்ற கதியேனாய்ச் சேவடி யடைந்த என்னை
கண்ண நின் கருணை ஒன்றே கொண்டு உகந்து அருளுவாயே –48–எண்ணுக்கு வராத ஆயிரக்கணக்கான அபராதங்களுக்கு இருப்பிடமாகி நான் பண்ணிய பாவத்தின் பலனாக விளைந்த கோரமான ஸம்ஸார சாகரத்தின் நடுவில் விழுந்து தடுமாறி உன்னைத் தவிர வேறு கதி இல்லேனாய் உன்னை உறுதியுடன் சரண் அடைந்த என்னை அருள் நிறைந்த திருக் கண்களை யுடைய நீ கடாக்ஷித்து உன் நிர்ஹேதுக கிருபையாலே உன்னுடையவன் என்று அங்கீ கரித்து அருள வேணும்
—
ஸ்தோத்ரம் -49-அவதாரிகை –அபராத பஹூளமான பின்பு சாஸ்த்ரீயமான உபாயாந்தரங்களைப் பற்றி போக்குதல்-விட்டுப் பற்றுதல் -செய்கை ஒழிய-கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று நம்மை நிர்பந்திக்கிறது என் -என்ன சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு ஜ்ஞானமே இல்லை-வேறு கதி இல்லாமையாலே விட மாட்டேன் ஆன பின்பு கிருபா கார்யமான விசேஷ கடாஷமே எனக்கு உஜ்ஜீவன சாதனம் -என்கிறார் –
அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—49-
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல் வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.
அவிவேக-க நாந்த திங்முகே –-அதாவது -விவேக அபாவம்-ஜீவ பர விவேக அபாவம் –
தேஹாத்ம விவேக அபாவம்-த்யாஜ்ய உபாதேய விவேக அபாவம்-பந்த விமோசன விவேக அபாவம்
இவை ஆகிற மேக படலங்களாலே திரோஹிதமான மனஸ்சை யுடையவனாகை யாலே உஜ்ஜீவன உபாயத்தில் திங் மாதரமும் தெரியாது இருக்கிறதற்கு மேலே –பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி –
பஹூ பிரகாரமாய் இடைவிடாதே யுண்டான துக்க வர்ஷத்தை உடைத்தானதிலே –-அவிவேகம் துக்கத்தை விளைக்கை யாவது –-அஜ்ஞாநத்தாலே கர்மமாய் –-அத்தாலே தேவாதி சரீர பிரவேசமாய்
அத்தாலே தாப த்ரய ரூபமான துக்கமாய் இருக்கும் –-பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே-பஹூதா –ஆத்யாத் மிகாதி பஹூ பிரகாரமாய் இருக்கை –-பகவன்–இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில் ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும் தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை – இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –பவதுர்த்தி நே –சம்சாரம் ஆகிற மழைக் கால விருளிலே- துர்த்திநம் -மேக திமிரம்-பத ஸ்கலிதம் –கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே-மாம் – கர்மாதி யுபாயங்களில் பிரச்யுதனான என்னை – நான் படுகிற பாடு இதுவானால் சாஸ்த்ரீய அனுஷ்டானத்துக்கு நான் ஆர் – தேவரை ஒழிய வேறு உண்டோ -என்று கருத்து -அவலோக்ய-அவலோகனதா நேன பூயோ மாம் பாலய -என்று சொல்லுகிற படியே-சகல கிலேசமும் போம்படி பார்த்து அருள வேணும்-சாதனாந்தர நிஷ்டர்க்கும் தேவர் விசேஷ கடாஷம் உத்தாரகம் இறே –
ஜாயமா நம் ஹி புருஷம் யம் பஸ்யேன்மது ஸூதன -என்று அதிகார சித்தியும் தேவர் கடாஷம் இறே–அச்யுத –அடியரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -1-7-2-என்கிறபடியே ஆஸ்ரிதரை ஒரு வழியாலும் நசிக்க விட்டுக் கொடாதவர் இறே தேவர் –-அவர் உயிரைச் சோர்ந்தே போகல கொடாச் சுடரை -2-3-6- என்னக் கடவது இறே –
பகவன் அச்யுத—அடியாரைக் கை விடாத எம்பெருமானே
அவிவேகக நாந்த திங்முகே–அவிவிவேகம் ஆகிற மேகங்களினால் இருந்து கிடக்கிற திசைகளை உடையதும்
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி–பலவிதமாக இடைவிடாமல் பெருகுகின்ற துக்கங்களை வர்ஷித்துக் கொண்டு இருப்பதுமான
பவதுர்த்திநே –சம்சாரமாகிற துர் ததிநத்திலே–மழைக் கால விருளிலே—மப்பு மூடின தினத்துக்கு துர்த்தினம்-நண்ணாதார் முறுவலிப்ப நல்ல உற்றார் கரைந்து ஏங்க எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
பத ஸ்கலிதம் மாமவ லோகயா–கொடு வினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம்
வழி திகைத்து அலமருகின்றேன்-3-3-9-என்கிறபடியே-நல் வழியில் நின்றும் தப்பி இருக்கிற அடியேனை கடாக்ஷித்து அருள வேணும்
கிருபயா கேவல மாத்ம ஸாத் குரு – என்று-உனது கடாக்ஷம் அடியேனுக்கு உஜ்ஜீவன ஹேது
அடா விவேக மேகப் படலம் எத்திசையும் மூடி
இடை விடாது இடும்பை மாரி பலவிதம் சொரியும் இந்தப்
படு பவ துர்த்தி நத்தில் பதம் ஒழிந்து ஏங்கி நிற்கும்
கடையனைக் கடைக் கணிப்பாய் அச்யுத பகவானேயோ –49–துர் தினம் -கொடிய தினம் -ஸூர்ய தர்சனம் இல்லாத தினம்-அவி விவேகம் ஆகிற மேகங்கள் எல்லாத் திக்குகளையும் மூடிக் கொண்டு பலவிதமாக இடைவிடாமல் துக்கங்களை வர்ஷிக்கிற இந்த ஸம்ஸாரம் ஆகிற துற தினத்தில் சரியான வழியின் நின்றும் நழுவி ஏக்கம் கொண்டு நிற்கும் கடையனான என்னை ஏ பகவானே ஆஸ்ரிதரை நழுவ விடாதவனே -கடாக்ஷித்து அருள வேண்டும்
—
ஸ்தோத்ரம் -50-அவதாரிகை –தேவர் கிருபையால் அல்லது வேறு எனக்கு இல்லாதவோ பாதி தேவர் கிருபைக்கு நான் அல்லது விஷயம் இல்லை – இத்தை இழவாதே கொள்ளீர் – என்கிறார்-
ந ம்ருஷா பரமார்த்த மேவ மே
ஸ்ருணு விஜ்ஞாப நமேக மக்ரத
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தய நீயஸ் தவ நாத துர்லப—50-
ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால், உன்னுடைய கருணையைப் பெற என்னை விடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.
நாத-எம்பெருமானே
ந ம்ருஷா –பொய் அன்றிக்கே
பரமார்த்த மேவ –உண்மையாகவே இருக்கிற
மே ஏக விஜ்ஞாபநம் –அடியேனது ஒரு விண்ணப்பத்தை
ஸ்ருணும் அக்ரத–முந்துற முன்னம் கேட்டு அருள்-இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -ஆழ்வார் போலே இங்கு இவரும்
மே ந தயிஷ்யஸே யதி -அடியேனுக்கு அருள் செய்யாயாகில்
தத -அடியேன் கை தப்பிப் போன பின்பு
தய நீயஸ் தவ துர்லப—உனக்கு அருள் செய்யத் தகுந்தவன் கிடைக்க மாட்டான்-கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –-இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார்
ந ம்ருஷா பரமார்த்த மேவ –-இது சம்சாரத்திலே கேட்டு அறிவது ஓன்று அல்லாமையாலே மெய்யாக மாட்டாது -என்று ஈஸ்வர ஹ்ருதயத்தில் பிறந்த அதி சங்கையைத் தவிர்க்கைக்காக அந்வய வ்யதிரேகத்தாலே சத்யம் -என்கிறார் –ந ம்ருஷா- லௌகிகர் பக்கலிலே இரக்கம் பிறக்கைக்காக
அபுத்த்யா சொல்லும் வார்த்தையைப் போலே பொய் அன்று –பரமார்த்த மேவ – நினைவுக்கு வாய்த்தலை இருந்து அறியும் தேவர் திரு முன்பே-விண்ணப்பம் செய்யும் அதுவே உஜ்ஜீவன உபாயம்
என்று இருக்கும் என்னுடைய விண்ணப்பத்தை –மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -என்னக் கடவது இறே-ஏகம் –-அத்விதீயம்-இதுக்கு மேலாக நிஷ்கர்ஷித்துச் சொல்லுவது ஒரு வார்த்தை இல்லை – இதுவே எல்லையான நிஷ்கர்ஷம் –அக்ரத ஸ்ருணு –-மேல் கார்யம் செய்யிலும் செய்யாது ஒழியிலும் முற்படக் கேட்டு அருள வேணும் –-சம்சாரத்தில் பரிமாறாதது ஓன்று என்று அனாதரியாதே அவதானம் பண்ணிக் கேட்டு அருள வேணும் –யதி மே ந தயிஷ்யஸே – தயைக ரஷ்யனான எனக்கு தயை பண்ணி அருளீர் ஆகில் –தத- தேவரீரைக் கிட்டின இவ் வஸ்து தப்பினால் பின்பு-தய நீயஸ் தவ – ரஷ்ய விஷயார்த்தி யாகைக்கு தயையே அன்று -பிராப்தியும் உண்டு -என்கை-துர்லப – தயைக ரஷ்யராய் இருப்பார் துர்லபர்-ஸ மகாத்மா ஸூ துர்லப -என்னும் அவர் இறே தேவர் –(கொள்வார் தேட்டமான தேவரீர் கிருபைக்கு என்னைப் பாத்ரமாக்கா விடில் வேறு கிடைப்பது அரிது –
இழக்காதே -என்று சமத்காரமாக அருளிச் செய்கிறார் )
வஞ்சனை அன்று நாத வாய்மையே யான் வழங்கும்
செஞ்சொலில் இவ்விண்ணப்பம் செவியில் நீ முன்னம் ஏற்பாய்
தஞ்சமாய் அடைந்த என்னைத் தயை யுறாது ஒழிகில் அந்தோ
விஞ்சும் உன் தயைக்குத் தக்க விஷயம் மற்று அரியதாமே –50-ஏ ஸர்வ சேஷியே -அடியேன் செய்யும் இவ்விண்ணப்பம் பொய்யன்று -உண்மையே ‘-இத்தை முன்னம் நீ திருச்செவி சாய்த்து அருள வேணும்
தஞ்சமாக அடைந்த என்னை நீ தயை பண்ணாது ஒழிவாயாயின் உனக்குத் தயை பண்ணி ரக்ஷிக்கத் தக்க வஸ்து கிடைப்பது துர்லபம்-
—
ஸ்தோத்ரம் -51-அவதாரிகை –இப்படி தய நீயத யாவான்களான இருவர்க்கும் முக்யமான இஸ் சம்பந்தம் தானும் தேவரீர் உடைய கிருபையாலே யாயிற்று-ஆன பின்பு -இதைக் கை விடாதே ரஷித்து அருள வேணும் என்கிறார்-
தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப —51-
ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப் பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப் பட வேண்டும்; அதை நழுவ விடாதே.
பகவன்-எம்பெருமானே
தத் அஹம் த்வத் ருதே ந நாத வான்–ஆகையினால் அடியேன் உன்னைத் தவிர வேறே ஒருவனை நாதனாக உடையேன் அல்லேன்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ-நீயும் என்னைத் தவிர வேறு ஒருவனை அருள் கொள்பவனாக உடையை அல்ல
விதி நிர்மிதமே ததந்வயம்–தெய்வ வசத்தால் நேர்ந்த இந்த சம்பந்தத்தை-விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே –-விதி வசத்தால் வாய்ந்து இருக்கிற ரஷ்ய ரஷக பாவத்தை
ஸூஹ்ருத விசேஷம் அடியாகப் பிறக்கும் பகவத் கிருபையை -நம்மால் பரிஹரிக்க ஒண்ணாததை -விதி என்கிறோம்-உன் தன்னோடு உறவேல் நம்மோடு இங்கு ஒழிக்க ஒழியாதே-அவனாலும் பரிஹரிக்க ஒண்ணாதே —ஏதத் அந்வயம் ஏதம் அந்வயம் -பாட பேதங்கள்-பாலய மா ஸம ஜீஹப —காப்பாற்றிக் கொள் விடுவிக்க வேண்டாம் –-இந்த சம்பந்தத்தை நான் விட நினைத்தாலும் நீ விடுவிக்க ஒண்ணாது தடுக்க வேண்டும் என்றபடி –-இத் தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்-தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்-கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –
தத் –ஆதலால் தய நீயர் தேவருக்கு துர்லபமான பின்பு –அஹம் – ஸா பதாரனாய் அனுதாபம் பிறந்த நான் –த்வத் ருதே ந நாதவான் –ப்ருஸம் பவதி துக்கித -என்று துக்கியான என்னிலும் என் துக்கத்தைப் பொறுக்க மாட்டாத தேவரை ஒழிய நாதவான் அல்லேன் –-பர துக்க அஸ்ஹிஷ்ணுத்வம் இறே தயை –மத்ருதே தவம் தயநீயவான் ந ஸ –தயைக ரஷ்யனான என்னை ஒழிந்தாலும் தேவரீர் உடைய கிருபை குமர் இருந்து போம் இத்தனை –விதி நிர்மிதமே ததந்வயம் –-ஏதத் அநவயம் விதி நிர்மிதம்
ஒருவரை ஒழிய ஒருவருக்குச் செல்லாத -இம் முக்ய சம்பந்தம் தேவரீர் உடைய கிருபையால் வந்தது –
விதி வாய்க்கின்று காப்பாரார் -5-1-1- என்கிறபடியே – இப் பஷத்தில் ததஹம் -என்கிற இடத்தில் தச் சப்தம் மேலுக்கு உடலாக இங்கும் அந்வயிக்கக் கடவது –-அதவா-விதி என்று தைவமாய்-இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -என்கிறபடியே சத்தா பிரயுக்தமான சம்பந்தத்தைச் சொல்லிற்று -ஆகவுமாம் பகவன் –இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –பாலய – இதை ரஷித்து அருள வேண்டும் -என்னுதல்-இதி புசித்து அருள வேண்டும் -என்னுதல்–புஜ பால நாப்யவஹாரயோ –மா ஸம ஜீஹப – இத் தலையில் பூர்வ அபராதத்தைப் பார்த்தாதல்-தேவர் பூர்த்தியைப் பார்த்த்தாதல்-கை விட்டு அருளாது ஒழிய வேண்டும் –(விதி -ஸூஹ்ருத விசேஷம் -பகவத் கிருபையே –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாதே– )
எனக்கும் ஓர் நாதனில்லை நின்னை விட்டு என்னை அன்றி
யுனக்கியல் பாந்தயைக்கும் உரிமை யோர் ஒருவரும் இல்லை
தனித்த நின் தயையினால் எம் இருவர் இனி இவ்விணக்க
மனத்தினில் கொண்டு அருள்வாய் மாதவ கை விடாமே –51–எனக்கும் உன்னை விட ஒரு நாதனும் இல்லை-இயல்பாக அமைந்து இருக்கும் உன்னுடைய தயைக்கும் என்னை விட உரிமை பூண்டவர் வேறே ஒருவரும் இல்லை-ஆகையால் ஏ மாதவ உன் கிருபையினால் ஏற்பட்டு இருக்கும் இந்த சம்பந்தத்தைத் திரு உள்ளம் கொண்டு-அடியேனைக் கை விடாது ரக்ஷித்து அருள வேண்டும் –
—
ஸ்தோத்ரம் -52-அவதாரிகை –இதில் ஆத்ம அநு ரூபமாக வன்றோ நம்முடைய ரஷணம் இருப்பது –
தய நீயரான உம்முடைய ஸ்வ ரூபத்தை நிஷ்கர்ஷித்து-நம் பக்கலிலே சமர்ப்பியும் -என்ன
சிறப்பில் வீடு -2-9-5- என்கிற பாட்டின் படி-எனக்கு அதில் நிர்ப்பந்தம் இல்லை-அஹம் புத்தி போத்யமான இவ் வஸ்து தேவர் திருவடிகளிலே என்னாலே சமர்ப்பிதம் – என்கிறார் –
வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா
குண தோ அஸாநி யதா ததா வித
ததயம் தவ பாத பத்மயோ
அஹமத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –52–
வபுராதி ஷூ –சரீரம் முதலியவைக்குள்
யோ அபி கோ அபி வா-ஏதாவது ஒன்றாகவும்
குண தோ அஸாநி யதா ததா வித–குணத்தினால் எனும் ஒருபடிப் பட்டவனாகவும் இருக்கக் கடவேன் –
அவற்றில் ஒரு நிர்பந்தம் இல்லை
ததயம் தவ பாத பத்மயோ அஹம் -ஆகையினால் இந்த ஆத்ம வஸ்துவானது உன்னுடைய திருவடித் தாமரைகளில்
மத் யைவ மயா ஸ்மர்ப்பித்த –இப்பொழுதே என்னால் சமர்ப்பிக்கப் பட்டதாயிற்று
வபுராதி ஷூ யோ அபி கோ அபி வா – தேக இந்த்ரிய மன பிராண புத்திகளைச் சொல்லுகிறது –
இவற்றில் ஒன்றே ஆத்மா என்பாரும்-ப்ரக்ருதே பரமாய்-ஜ்ஞான ஆனந்த லஷணம் என்பாருமாய்
ஸ்வ ரூபத்தில் -விப்ரதிபத்தி -அபிப்ராய பேதம் -உண்டாய் இருக்கும்-இவற்றில் ஏதேனும் ஓன்று ஸ்வ ரூபமாகவும் –குண தோ அஸாநி யதா ததா வித –-ஸ்வ பாவாத –அணுத்வ விபுத்வ சரீர பரிமாணத்வ நித்யத்வ அநித்யத்வ ஜ்ஞாத்ருத் வதாதிகளிலே விப்ரதிபத்தி உண்டாய் இருக்கும்-அதில் ஏதேனும் ஓன்று ஸ்வரூபம் ஆகிலும் அதிலும் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை –தத் – தஸ்மாத்-கீழ்ச் சொன்ன ஸ்வரூப ஸ்வ பாவங்களிலே நிர்ப்பந்தம் இல்லாமையாலே –அஹம் – பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்-பிரத்யகர்த்த பூதனாய்-ப்ரத்யஷ பூதனாய்-பிரகாசிக்கிற நான் –தவ பாத பத்மயோ –ரஷகரான தேவரீர் உடைய போக்யமான திருவடிகளிலே –அத்யைவ – ஆத்ம ஷணிகம் ஆகிலும் இந்த ஷணத்திலே சமர்ப்பிதம் -என்கை –மயா ஸ்மர்ப்பித்த –என்னாலே சமர்ப்பிதன் – யோ அஹம் அஸ்மி ஸ சந் யஜே –
யஸ்ய அஸ்மி ந தமந்த ரேமி – ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா – ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –(தேஹ இந்திரிய மன பிராணாதிகளில் விலக்ஷணனாய்- அஹம் புத்தி போத்யனாய் உள்ளவனே ஆத்மா –
சித்தாந்தமும் அருளிச் செய்தார் ஆயிற்று -)
சம்பந்தம் உண்டு என்று ஹ்ருதய விசுவாசம் இல்லாமல் மேல் எழுந்த -பொறி புறம் பூசின பாசுரம் இல்லை-த்வம் மே அஹம் மே -விவாதம் செய்யாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறார்
ஆத்மா ராஜ்யம் தனம் மித்ரம் களத்ரம் வஹநானி ஸ –இதி தத் ப்ரேஷிதம் சதா – ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி –(ஆத்மா ராஜ்யம் த,நம் மித்ரம் களத்ரம் வாஹநாநி ச। ஏதத் ப,க,வதே ஸர்வமிதி தத்ப்ரேக்ஷிதம் ஸதா॥ [‘ஆத்மா, ராஜ்யம், பொருள், நண்பர்கள், மனைவி, வாஹனங்கள் இவையெல்லாம் ப,கவானுக்கு” என்று உபரிசர வஸுவினால் எப்போதும் நினைக்கப்பட்ட) (கதம் த,ஸரதராஜ் ஜாதோ ப,வேத்; ராஜ்யாபஹாரக: | ராஜ்யம் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்துமிஹார்ஹஸஹி ॥ [தஸரதரனிடமிருந்து பிறந்தவன் எப்படி ராஜ்யத்தை அபஹரிப்பவனாவான்? ராஜ்யமும், நானும் ராமனுடையவை. நீர் இவ் விஷயத்தில் தர்மத்தைச் சொல்ல வேண்டும்)சித்தி த்ர்யம் அருளிச் செய்த இவரே ஆத்மா தேகமோ இந்த்ரியமோ பிராணனோ எதுவாக இருந்தாலும் ஆத்மா அணுவாகவோ சர்வ வியாபியோ ஏக ரூபனோ பரிணாமம் கொண்டதோ ஞானியா அஞ்ஞானியா – இவற்றை நிஷ்கரிக்கப் போகிறேன் அல்லேன் அதுவாகவே கொண்டு உன்னை ஆராதிப்பேன் என்கிற வேத வாக்கியத்தின் படியே -என்பது சேஷத்வ பிரதானத்தை அருளிச் செய்கிறார்-இங்கு ஆத்மாவை அஹம்-அஹம் – பராகர்த்த வ்யாவ்ருத்தனாய்-பிரத்யகர்த்த பூதனாய் ப்ரத்யஷ பூதனாய் பிரகாசிக்கிற நான் – என்கிறார் ஆகையால்-தேக இந்திரிய மனா பிராணாதி விலக்ஷணனாய் அஹம் புத்தி போத்யனாய் உள்ள ஆத்மா என்கிற சித்தாந்தமும் வெளியிட்டு அருளுகிறார்
—
ஸ்தோத்ரம் -53-அவதாரிகை –இவரை பிரமத்தோடே விடுகிறது என் -என்று பார்த்து அருளி –
நீர் ஆர் – அத்தை ஆருக்கு சமர்ப்பித்தீர் -என்ன-நிரூபித்த விடத்து-எனதாவியும் நீ –எனதாவி யார் யானார் -2-3-4- என்கிறபடியே உமதை நீரே ஸ்வீகரித்தீர் இத்தனை-ஆத்மா சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோ பாதி -என்று பண்ணின ஆத்மா சமர்ப்பணத்தை அனுஸ்யிக்கிறார் –-பகவத் பர தந்த்ரமான ஆத்மாவுக்கு அநாதி அவித்யா சித்தமான ஸ்வா தந்த்ர்யம் அடியாக பகவத் வைமுக்யம் பிறந்து-அத்தாலே ஹதன் என்று பீதி பிறந்த அளவிலே ததீயத்வ அனுசந்தானத்தாலே வந்த
தாதாம்யைக கரண சங்கல்பம் ஆதல் – ராஜ ஆபரணத்தை ரஷித்து வைத்து ப்ராப்த காலங்களிலே கொடுக்குமா போலே ஆத்மாவை ஈஸ்வரன் பக்கலிலே சமர்ப்பிக்கை என்னுதல் –-இவை இரண்டும் அர்த்தம் அன்று என்னும்படி பண்டே அவனதான வஸ்துவை அவனதாக இசையுமது ஒழிய -சமர்ப்பணமும் ஆத்மா அபஹாரத்தோடு ஒக்கும்–
மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்
சகலம் தத்தி தவைவ மாதவ
நியத ஸ்வ மிதி பரப்புத்ததீ
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–53-
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானே! லக்ஷ்மீநாதனே! என்னுடைய எல்லா உடைமைப் பொருள்களும் நானும் எப்பொழுதும் உன்னுடையவையே. இது தெரிந்த நான், உனக்கு எதை ஸமர்ப்பிப்பேன்?
மாதவ நாத-ஸ்ரீ யபதியான பெருமானே
மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம்—-யத மம அஸ்தி -அஹம் யஸ் அஸ்மி –யாது ஓன்று எனக்கு உரியதாய்
இருக்கின்றதோ -நான் எப்படிப்பட்டவனோ
சகலம் தத்தி தவைவ –நியத ஸ்வ மிதி-அது எல்லாம் உனக்கே எப்போதும் உரிமைப் பட்டது என்று
பரப்புத்ததீ–நன்றாகத் தெரிந்து கொண்ட அடியேன்
அதவா கிந்நு சமர்ப்பயாமி தே–உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன்-அதவா -கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –
மம நாத யதஸ்தி யோஅஸ்ம்யஹம்-நாத –-அகில ஜகத் ஸ்வாமின்-அவனைத்தான சம்பந்தத்தைச் சொல்லுகிறது –-மம யதஸ்தி யோஅஸ்ம்யஹம் – குணமாயும்-விபூதியாயும் மமதா விஷயமாயும்
உள்ளது யாதொன்று அதுக்கு ஆஸ்ரயமான நான் யாவனொருவன் ஆகிறேன்–தத் சகலம் – ஔ பாதிகமாயும்-ஸ்வா பாவிகமாயும் உள்ளது எல்லாம் –தவைவ மாதவ –-ஸ்ரீ ய பதியாய் -சர்வ சேஷியாய் உள்ள உன்னுடையது அவதாரணத்தால் அந்ய சேஷத்வத்தை வ்யாவர்த்திக்கிறது-ஹி ––சர்வேஷா மேவ லோகானாம் பிதா மாதா ஸ மாதவ -இத்யாதி பிரமாண பிரசித்தியைச் சொல்லுகிறது –நாத மாதவ –-சர்வ ஸ்வாமி யாய் -ஸ்ரீயபதியான வஸ்துவுக்கே அனன்யார்ஹ சேஷம் சர்வ பதார்த்தங்களும் -என்கை – யானே நீ என் உடைமையும் நீயே -2-9-9–நியதஸ்வம்--சமர்ப்பணம் மிகையாம்படி ஜ்ஞானம்
பிறந்த காலத்துடன் பிரமித்த காலத்துடன் வாசி அற நியதஸ்வம்-இதி பரப்புத்ததீ – என்று தெரிந்த புத்தியை யுடைய நான் –அதவா – கீழில் சமர்ப்பண பஷ வ்யாவ்ருத்தி –கிந்நு சமர்ப்பயாமி தே
இத்தை உடைய உனக்கு எதை சமர்ப்பிப்பேன்-சமர்ப்பணீயம் ஏது-சமர்ப்பகர் ஆர் –-சமர்ப்பணீயம் ஆகைக்கு ஸ்வாம்யம் இல்லை –-சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்த்ர்யம் இல்லை –-சம்சார பீதையாலே சமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானத்தாலே அநு சயிக்கையும் இரண்டும் யாவன் மோஷம் அநு வர்த்திக்கக் கடவது-
(எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே –என்றதுமே –-எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய் -எனது யாவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் –இப்படி எம்பெருமான் உடன் கலந்த கலவையால் உள்ள நிரவதிக ப்ரீதியாலே அறிவு இழந்து இவ்வாத்மா தன்னுடையது அன்று என்று நிரூபிக்க மாட்டாராய் –
அவன் தம்மோடு கலந்த இப்பெரு நல் உதவிக்கு கைம்மாறாக தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா வடிமையாகக் கொடுத்து – பின்னையும் தம்முடைய ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து -என்று அருளிச் செய்கிறார் – கர்ம உபாத்திகம் அன்றிக்கே ஞான விபாக கார்யம் -ஆகையால் அடிக் கழஞ்சு பெறுமே)
ஒட்டு உரைத்து இவ் வுலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —இழிவுச் செயல் –என்றவரே கொண்டல் வண்ணா கடல்வண்ணா என்று பலகாலும் அருளிச் செய்கிறார்களே-புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் -என்று அருளிச் செய்தெ பலவாறு புகழ்கின்றார்களே-பரஸ்பர வ்ருத்தமாக தோற்றினாலும் விருத்தம் இல்லையே
எனது நா என்ப எல்லா மாதவ யேற்று நிற்கும்
உனதலான் மற்று எவர்க்கும் உண்மையில் உரிய தாமோ
தனி முதலாகு நீயே சருவ சேடி எனத் தேர்ந்தே
யினி யுனதடிக்கு எதை நான் இன்புடன் சமர்ப்பிப்பேனே –53–ஸ்ரீ யபதியே என்னுடைய சகலமும் அவைகளுக்குத் தங்கும் இடமான நானும் ஆகிய எல்லாம் உண்மையில் ஸர்வ சேஷியான உனக்கே சொந்தம் அல்லால் மற்று எவருக்கு ஆயினிமாமோ இப்படி சகலமும் உன்னுடையதே எனத் தெளிந்த உணர்ச்சியை யுடைய நான் முன் செய்த ஆத்ம சமர்ப்பணம் அபராதத்தோடே ஒக்குமாயின் உன் திருவடிகளுக்கு வேறே எதை ஸமர்ப்பிக்கிப் போகின்றேன்-
—
ஸ்தோத்ரம் -54- அவதாரிகை –ஆத்மா அபஹார பர்யாயமான ஆத்ம சமர்ப்பணத் தளவிலே நான் நில்லாமையாலே – நிர்ஹேதுக கிருபையால் இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி இந்த கிருபையாலே ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –ஸ்தான த்ரயம் ஆவது-புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22-பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும்-மத் பக்திம் லபதே பராம் -18-54-ஆளவந்தார் எம்பெருமானிடம் “ஆத்மாவைத் திருடுவதற்கு ஸமமான இந்த ஆத்ம ஸமர்ப்பணத்தை நான் நிறுத்தாததால், உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினால் என்னுடைய சேஷத்வத்தை வெளியிட்டதைப் போலே, பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி ஆகியவைகளையும் அளித்து,
இந்த ஞானம் உன்னுடைய கைங்கர்யத்துக்கு உதவும்படிச் செய்” என்கிறார்.
அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—54-
என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ,-அதே போல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.
பகவன் மயி நித்யாம்–எம்பெருமானே என் பக்கல் சாஸ்வதமாய் உள்ள
இமாம் பவதீ யதாம்–உனக்கே உரிமைப்பட்டு இருக்கிற இந்த சேஷத்வத்தை
யதா ஸ்வயம் அவபோதி த்வாந் -எப்படி நீ தானே அறிவித்தாயோ
ஏதத் அநந்ய போக்யதாம-இது தவிர வேறு ஒன்றில் போக்யதையை உடைத்தது ஆகாதே -பரம போக்யமான
பக்திமபி ப்ரயச்ச மே—பக்தியையும் அடியேனுக்குத் தந்து அருள வேணும்
மயி நித்யாம் பவதீ யதாம் அவபோதி தவாந--என் பக்கலிலே நியதியான-த்வத் விஷய சேஷதையை –
பவதீ யதை -என்கையாலே அந்ய சேஷத்வ வ்யாவ்ருத்தி-மயி நித்யாம் -என்றது இத்தலையில் பகவச் சேஷத்வம் ஸ்வரூபம் -என்கை-ஸ்வ த்வமாத்மனி ஸ்ஞ்ஜாதம் ஸ்வாமி த்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் –
இமாம் (ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்நதம் | உப,யோரேஷ ஸம்ப;ந்தோ ந பரோ5பிமதோ மம॥ [உடைமையாயிருக்கும் தன்மை ஆத்மாவினிடத்தில் உள் ளது; உடையவனா யிருக்கும் தன்மை ப்ரரஹ்மத்தினிட முள்ளது; இருவருக்கும் இதுவே ஸம்பந்தம்; வேறு ஸம்பந்தம் எனக்கு இஷ்டமன்.று])என்று சேஷத்வத்தில் இனிமையாலே கொண்டாடுகிறார்–யதா அவபோதி தவாந – யாதொருபடி அறிவிக்கப் பட்டேன் –ஸ்வயம் க்ருபயா –-கேவல கிருபையாலே-ஸ்வயம் -கேவலம் –ஏதத நனய போக்யதாம் –இது ஒழிய வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயம் ஆகாதபடி இருக்கும் போக்யதையை உடைத்தான -பக்தியை –பகவன் –ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால் ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால்-பூரணன் -என்கை –பக்திமபி ப்ரயச்ச-யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்-அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –மே-அஜ்ஞனாய் அசக்தனாய் ருசி மாத்ரமேயாய் இருக்கிற எனக்கு-(சேஷத்வ ஞானம் அருளி ஆத்ம சமர்ப்பணத்துக்கு அனுதபிக்கச் செய்தது போலவே ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும் –-வேறு ஒன்றுக்கும் நெஞ்சுக்கு விஷயமாக்காத படி இருக்கும் போக்யதை யுடைத்தான பக்தியை -என்றபடி – )
ஸ்வயம் புருஷார்த்தமான பக்தியையும் தந்து அருள வேணும்-வேறு ஒன்றில் போக்யதா புத்தியையும் தவிர்த்து அருளி -வேறு ஒன்றுக்கு நெஞ்சுக்கு விஷயம் ஆக்காதபடியான பக்தியைத் தந்து அருள வேணும் – நிர்ஹேதுக கிருபையால்-இந்த சேஷத்வத்தை உணர்த்தினாப் போலே இந்த ஜ்ஞானம் புருஷார்த்த உபயோகியாம்படி-இந்த கிருபையாலே ஸ்தான த்ரயோதித -பர பக்தியைத் தந்து அருள வேண்டும் என்கிறார் –-ஸ்தான த்ரயம் ஆவது-புருஷஸ் ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -ஸ்ரீ கீதை -8-22 பக்த்யா த்வ நன்யயா சக்ய -11-54-என்றும் மத் பக்திம் லபதே பராம் -18-54-
என்னிடம் எக்காலத்தும் இசைந்து நின் விஷயமாக
மன்னிய யுரிமை நாத வகை யுடன் அறிவித்தால் போல்
நின்னிடம் அன்றி மற்றோர் நிலையினைப் பற்றாதாகும்
பன்னரும் பக்தி எற்குப் பணித்திடாய் அன்பு கூர்ந்தே –54–ஏ நாத எக்காலத்தும் என் பக்கலில் இசைந்து நிற்கும் உன் விஷயமான அநந்யார்ஹ சேஷத்வத்தை வகையுடன் தெரிவித்து இருக்கும் வண்ணமே யுன்னை விட்டு வேறே ஒன்றிலும் போக்யதையைப் பெறாது உன்னிடத்தே யுண்டாகும் பரம பக்தியை கேவலம் உன்னுடைய கிருபையாலேயே அடியேனுக்கு உண்டு பண்ண வேணும்
—
ஸ்தோத்ரம் -55 அவதாரிகை –பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே-தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –-ஆழ்வார் -கண்கள் சிவந்து -8-8- விலே பகவச் சேஷத்வத்தை அனுபவித்து-கருமாணிக்க மலை -யிலே அனன்யார்ஹ சேஷத்வத்தை
அனுசந்தித்து-அவ்வளவிலும் பர்யவசியாதே-நெடுமாற்கு அடிமை யிலே ததீய சேஷத்வத்தை
அனுசந்தித்தாப் போலேயும் ஸ்ரீ இராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைப் போலேயும்
ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
தவ தாஸ்ய ஸூ கைக ஸங்கி நாம்
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே
இதரா வஸ தே ஷூ மா ஸம பூத்
அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா—55-
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.
தவ தாஸ்ய ஸூ கைக ஸ்ங்கி நாம்–உன்னுடைய அடிமை யாகிற இன்பம் ஒன்றிலேயே
விருப்பம் உள்ள மஹான்களுடைய
பவ நேஷ் வஸ்த்வபி கீட ஜன்ம மே-அஸ்து -திரு மாளிகைகளில் அடியேனுக்குப் புழுவாகப் பிறப்பதுவும் ஆயிடுக
அபி -சப்தம் அவதாரணத்திலே யாய் கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் –இதரா வஸ தேஷூ –அடிமைச் சுவடு அறியாத மற்றையோர் வீடுகளில்
மா ஸம பூத்அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா–நான்முகனாகப் பிறப்பது தானும் எனக்கு வேண்டா-
தவ தாஸ்ய ஸூக-ஐஸ்வர்ய கைவல்ய ஸூகங்கள் விக்நமாம் படி இறே-தாஸ்ய ஸூகம் இருப்பது –
தஸ்யாந்தராயோ மைத்ரேய தே வேந்த்ரத் வாதிகம் பலம் – ஸ்வர்க்காப் திஸ் தஸ்ய விக்னோ அநு மீ யதே -என்றும்-அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் செற்றது –1-2-5-என்றும்-இறுகல் இறப்பு -4-1-10-என்றும்-இவை தாஸ்யத்துக்கு விரோதியாய் இறே இருப்பது –ஏக ஸங்கி நாம் – நிஸ் தரந்தி மநீ ஷீண -என்றும் –ஸோ த்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும் சம்சார நிவ்ருத்தியால் வந்த ஸூகமும்-பரம பத ப்ராப்தியால் வந்த ஸூகமும்-தாஸ்ய ஸூகத்துக்கு அபாயம் -என்கை –
தஸ்ய யஜ்ஞ் வராஹ்ஸ்ய விஷ்ணோ ரமித தேஜஸ ப்ரணாமம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம –
வாஸூ தேவஸ்ய யே பக்தா சாந்தாஸ் தத் கத மானஸா தேஷாம் தாஸ்ஸ்ய தாஸோ அஹம் பவேஜஜன்மநி ஜன்மநி-அடியார் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல
கோட்பாடே –வாய்க்க -8-10-10-என்னக் கடவது இறே -தாஸ்ய ரசம் ரசித்தால்-தேஷாம் -பவநேஷ் கீடஜன்ம மே வஸ்த்வபி--அவர்கள் திருவடிகளில் அடிமை செய்ய வேண்டா –-அவர்கள் திரு மாளிகையில் ஒரு கீடமாய் ஜனிக்கும் அதாகிலும் உண்டாக வேண்டும்-அபி -சப்தம் அவதாரணத்திலே யாய்-கீட ஜன்மமே உண்டாக வேண்டும் என்றுமாம் – மனுஷ்யாதி ஜன்மங்களில் ஆசைப் படாது ஒழிந்தது தேசாந்தர பிராமண சம்பாவனையாலே உத்பத்தி ஸ்திதி நிலையங்கள் அங்கேயாகக் கிடையாது என்னும் அத்தாலே எல்லாரும் உத்க்ருஷ்ட ஜன்மங்களை அன்றோ ஆசைப் படுவது -என்ன தம் தாம் உகந்த தன்றோ புருஷார்த்தம் என்கிறது எனக்கு இதுவே பெற வேணும் என்கை –இதரா வஸ தே ஷூ –
தாஸ்ய ரசம் அறியாதே -எனக்கு என்னும் அவர்கள் இருப்பிடத்திலே-மா ஸம பூத் அபி மே ஜன்ம சதுர்முகாத்மா நா –-சதுர முகாத்மனா ஜன்மாபி மா ஸம பூத்-சதுர்முக ரூபேண வரும் ஜன்மமும் எனக்கு உண்டாமதன்று-சதுர முகாதி ஜன்மம் லௌகிகருக்கு ஸ்லாக்யமானாலும்-தாஸ்ய ருசியை உடைய எனக்கு வேண்டா -என்கிறார் – அன்வயத்திலும் வ்யதிரேகத்திலும் இரண்டிலும் உண்டான நிர்ப்பந்தம் தோற்ற இருக்கலாம் -என்கிறார் –
பாகவத சேஷத்வ பர்யந்தம் போனால் தானே பகவத் சேஷத்வம் ரசிக்கும் -என்கிற சாஸ்த்ரார்த்தம் அருளிச் செய்கிறார் ஜாதியில் ஏற்றத்தாழ்வு உபயோகம் அற்றது பாகவத சேஷத்வமே வாய்க்கும் அத்தனையே வேண்டுவது பகவத் ப்ரசாதத்தாலே லப்தமான பக்தி ப்ராசுர்யத்தாலே தச் சேஷத்வ அளவில் பர்யவசியாதே ததீய சேஷத்வத்தை பிரார்த்திக்கிறார் –
உனது கைங்கர்ய இன்பம் ஒன்றையே நாடுவோர் சீர்
மனையினில் கிருமிச் சென்மம் வாய்க்கினும் மகிழ்வன் நானே
நினதொழி மற்றோர் மார்க்க நேடுவார் தன்னிடத்தில்
இனிமையார் எண் கணார் தம் சென்மமும் இச்சியேனே –55-உன் கைங்கர்யம் ஒன்றிலேயே விருப்பம் கொள்ளும் பாகவதர்களுடைய திரு மாளிகையில் எனக்கு ஒரு கிருமி புழு ஜென்மம் யுண்டாயினும் அதை நான் மகிழ்ந்து அடைவேன் -அப்படி அன்றி உன் கைங்கர்யங்களை விட்டு மற்ற எந்த மார்க்கத்தை ஏனும் இச்சிப்போருடைய குடி இருப்பில் ப்ரம்மாவினுடைய சென்மம் கிடைத்த போதிலும் அதில் எனக்கு அபேக்ஷை இல்லை –
—
ஸ்தோத்ரம் -56-அவதாரிகை –ஸ்ரீ வைஷ்ணவ க்ருஹத்தில் பிறக்கும் பிறப்பால் வந்த ஏற்றம் எல்லாம் வேணுமோ – அவர்கள் கண்டால் உபேஷியாதே -நம்முடையவன் -என்று விசேஷ கடாஷம் பண்ணுகைக்கு அர்ஹனாம் படி பண்ணி அருள வேணும் – என்கிறார் –
ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி
மஹாத்மபிர் மாமவ லோக்யதாம் நய
ஷானே அபி தே யத் விரஹொ அதிதுஸ் ஸஹ–56-
உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.
ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா–ஒரு கால் உனது திரு மேனியை சேவிக்க வேணும் என்கிற விருப்பத்தினால்
த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி-மிகவும் சிறந்த செல்வத்தையும் மோக்ஷத்தையும் த்ருணமாக வெறுத்து இருக்கிற
மஹாத்மபிர் அவ லோக்யதாம் –மஹானுபவர்களால் கடாக்ஷிக்க உரியனாய் இருக்கையையே
மாம் நய–அடியேனுக்கு அளித்து அருள வேண்டும்-எப்படிப்பட்ட மஹான்களின் கடாக்ஷத்தை விரும்புகிறேன் என்னில்
ஷனே அபி தே யத் விரஹ–எந்த மஹான்களினுடைய பிரிவானது உனக்கு ஒரு நொடிப் பொழுதும்
அதிது ஸ்ஸ்ஹ–மிகவும் பொறுக்க முடியாததோ-தை- மஹாத்மபிர் அவ லோக்யதாம்–என்று கீழோடே அந்வயம்
ஸ்க்ருத் த்வ தாகார விலோக நாஸ்யா – பஸ்யேம சரதஸ் ஸ்தம் – சதா பஸ்யந்தி ஸூராய -என்கிறபடியே
சதா தர்சனம் பண்ண வேண்டி இருக்க -ஸ்க்ருத் -என்றது-சத்தையை தரிப்பைக்கைக்கு-ஒரு கால் அமையும் என்கைக்காக- போக மோஷங்களை உபேஷிக்கைக்கும் ஒரு கால் அமையும் -என்கைக்காக –
ஒரு நாள் காண வாராய் -8-5-1- என்று இறே விடாய்த்தவர் வார்த்தை –நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே -பெரிய திருமொழி -4-9-1—த்வ தாகார விலோக ந – ஸ்வரூபத்து அளவிலும்-தத் ஆஸ்ரயமான குணத்தளவிலும் பர்யவசியாதே உபயத்துக்கும் ப்ரகாசகமான விக்ரஹத் தளவிலே வர
அவகாஹித்தவர்கள் –ஆஸ்யா த்ருணீ கருதா நுத்தம புக்தி முக்திபி –-காண வேண்டா காண்-
காண வேணும் என்னும் ஆசை தானே த்ருணீ கரிப்பிக்கும்-அநுத்தம புக்தி -ப்ரஹ்மாதிகள் போகம்
அநுத்தம முக்தி –பரம புருஷார்த்த லஷண மோஷம் – அலமத்ய ஹி புக்திர் ந பரமார்த்தி ரலஞ்ச ந
யதா பஸ்யாம் நிர்யாந்தம் ராமம் ராஜே ப்ரதிஷ்டிதம் த்வயாபி ப்ராப்த மைஸ்வர்யம் – ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தா நஸய பர மாதமான ––மஹாத்மபிர் – மஹாத்மா நஸ்துமாம் பார்த்த தை வீம் பிரகிருதி மாஸ்ரிதா- ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்றும்-பேராளன் பேரோதும் பெரியோரை –பெரிய திரு மொழி -7-4-4-என்றும்-ஈஸ்வரன் தானும் ஆழ்வார்களும் கூடக் கவி பாடுகிறவர்களாலே –
மாம் –புருஷார்த்தின் மேல் எல்லையிலே ருசியை உடைய என்னை-அலோக்யதாம் –-அவலோகன விஷயனாம் படி –நய – சர்வ சக்தியான தேவர் நிர்வஹிக்க வேண்டும்-நம் பக்கல் ஒழிய நம்முடையார் பக்கல்-கீட ஜன்ம மே அப் யஸ்து –என்றும்-அவலோக்யதாம் நய -என்றும்-அத்ய ஆதாரத்தைப் பண்ணுகிறது எத்தாலே -என்ன-ஸா பேஷனான நான் ஆதரிக்கைக்கு ஹேதுவைச் சொல்லுகிறேன்
ஸ்வத பூரணரான தேவர்க்கு அவர்கள் உடைய விஸ்லேஷம் அசஹ்யமாய் இருக்கைக்கு ஹேது அருளிச் செய்ய வேணும் –என்கிறார்–ஷானே அபி தே யத் விரஹொ அதிது ஸ்ஸ்ஹ-ஸ்வத பூர்ணனாய் அவாப்த சமஸ்த காமனான தேவருக்கு ஷண மாதரம் துஸ் ஸ்ஹம் அன்று –-அதி துஸ் ஸ்ஹம் -என்கை
சிரம் ஜீவதி வைதே ஹீ யதி மாஸ்ம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாமஸி தேஷணம்
யத் விநா பரதம் த்வாஞ்ச ஸ்த்ருக் நஞ்சாபி மா நத – ஸ்ம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்–மம ப்ராணா ஹி பாண்டவா–கிம் கார்யம் ஸீதயா மம –
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியின் பால் வாராய் விண்ணும் மண்ணும் மகிழவே -என்று பிரார்த்தித்து–இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வானாளும் மா மதி போல் வெண் குடைக் கீழ் மன்னவர் தம் கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வம் அறியேன்–கம்ப மத யானைக் கழுத்தகத்தின் மேல் இருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் —-ஆழ்வார்கள் கடாக்ஷம் பெற ஆசைப்படுகிறார்-இவர்கள் தானே –அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே ஒரு மா நொடியும் பிரியான என் ஊழி முதல்வன் ஒருவனே -என்று இருப்பார்கள் அன்றோ –
ஒரு முறை யுன் வடிவு அழகின் நோக்கில் யுறும் ஆசையினால் உயர்ந்து சீர்த்த
வரிய சுக போகமுடன் முத்தியையும் அபதார்த்தம் என நினைப்போர்
பிரிவதினால் ஒரு நொடியும் ஆற்றாமை யுனக் கூட்டும் பேற்றை யுற்றோர்
பரம வர பாகவதர் பார்வைக்குப் பாத்திரனா எனைப் பணிப்பாய் –56–உன் திவ்ய மங்கள விக்ரகத்தை ஒரு முறை சேவிக்க ஆசை கொண்டு அதினால் அருமையான பிரமாதி போகத்தையும்-அதற்கும் மேலான மோக்ஷத்தையும் கூட ஒரு அபதார்த்தமாக நினைக்கின்றவர்களும்-தாம் ஒரு க்ஷணம் பிரிந்தாலும் அப்பிரிவினால் பொறுக்க முடியாத சங்கடத்தை உனக்கே உண்டு பண்ணுபவருமான அந்த பரம பாகவதர்களுடைய கடாக்ஷத்துக்குத் தக்கவனாக அடியேனைச் செய்து அருள வேண்டும் –
—
ஸ்தோத்ரம் -57-அவதாரிகை-கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் – இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில் அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத் தந்து அருள வேணும்-என்கிறார் –
ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—57-
ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.
நாத
தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம்–உனது சேஷப்பட்டு இருக்கும் செல்வத்துக்குப் புறம்பான -உனக்கு சேஷப்படாத
தேஹம் க்ஷணம் அபி ந –உடம்பை ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன்
ந ப்ராணான் சஹே –அப்படிப்பட்ட பிராணனையும் பொறுக்க மாட்டேன்
ந ஸ ஸூகம் அசேஷ அபி லஷிதம் சஹே -எல்லாரும் விரும்பக் கூடிய ஸூகத்தையும் ஸஹிக்க மாட்டேன்
ந ச ஆத்மானம் சஹே –ஆத்மாவையும் ஸஹிக்க மாட்டேன்
அந்யத் கிமபி ந சஹே -சேஷத்வ சூன்யமான வேறே ஒன்றையும் ஸஹிக்க மாட்டேன்
யாது ஸததா விநாஸம் -சேஷத்வ சூன்யமான கீழ்ச் சொன்ன தேஹாதிகள் எல்லாம் உரு மாய்ந்து போகட்டும்
தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாபநம் இதம் —-இங்கனம் விண்ணப்பம் செய்த இது சத்யம்-இது பொய்யாகச் சொன்னேன் ஆகில் மது பட்டது படுவேன் அத்தனை
ந தேஹம் –-அஹமபிமானத்துக்கு அர்ஹமாம்படி அந்தரங்கமான சரீரத்தையும் –-தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் -ந ப்ராணான் –-தேகாதிகளுக்கு தாரகமான பிராணங்களையும் சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –ந ஸ ஸூகம் –-தேஹாதிகளையும்
பிராணங்களையும்-ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –-அந்த ஸூகமும் வேண்டா – ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –அ சேஷாபி லஷிதம் ஸூகம் – எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் – ஸூகம் என் என்னில் தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே-ஸூகம் என்று பிரியச் சொன்ன போது அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று மேல் கூடக் கடவது –-நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது-ந சாத்மானம் –-கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய் ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய ஆத்மாவை –தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப் பூதம் – ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை அந்தர்ப் பூதம் ஆனவன்று எல்லாம் உபாதேயம் -என்கை-
நாத –சேஷத்வத்துக்கு புறம்பானவை-அசஹ்யம் என்கைக்கு அடியான அவர்ஜனீய -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது–ஷணம் அபி சஹே – ஷண காலமும் சஹிக்க கில்லேன்-காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள் அசஹ்யமானாப் போலே–மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-ந தேவ லோகா க்ரமணம் –-இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்–யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்-அடிமைக்குப் புறம்பானவை அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்-அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்-உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம் –தத் ஸத்யம் – இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று-மெய்யாகக் கூடுமோ -என்ன-இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்–மது மதன- திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்-சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே போக்கி அருள வேணும் -என்னவுமாம்–விஜ்ஞாப நமிதம்–இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்-ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும் விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –
(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது-கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே – அழிவில்லா ஆத்ம வஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –-விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)
உன்னுரிமையாம் பெருமை யிற்கு வெளியுள்ள யுடல் வேண்டிலேன் உயிர் வேண்டிலேன்
பின்னும் எவரும் பெற விரும்பும் சுகமானம் முதலான பிறவும் வேண்டிலேன்
என்னுடைய நாத மது ஸூதன சகிக்ககிலன் இந்நொடியில் இவை களுக்கு எலாம்
மன்னிய விநாஸம் பலவகையில் யுற வேண்டுவன் இனி வசனம் அது வாய்மை யதுவே –57—ஏ ஸ்வாமியே உன்னுடைய சேஷத்வமாகிய பெருமைக்கு வெளிப்பட்டுள்ள சரீரத்தையும் உயிரையும்
எல்லாரும் அடைவதற்கு ஆசைப்படக் கூடிய ஸுகத்தையும் ஆத்மாவையும் இன்னும் இது போன்ற மற்ற எதையும் நான் வேண்டிலேன் –ஏ மது ஸூதன இவைகள் ஒன்றையும் நான் சகிக்க வல்லேன் அல்லேன்
இவ்வஸ்துக்கள் யாவும் பல விதங்களால் இந்த க்ஷணத்தில் நாஸம் அடையட்டும்-இப்படி சொல்லும் அடியேனது விண்ணப்பம் சத்தியமானதே –
—
ஸ்லோகம் -58-அவதாரிகை –நிக்ரஹ ஹேதுவான பகவத் அபசாராத்ய அஸூபங்கள் சஞ்சரிக்கிற சம்சாரத்திலே -கைங்கர்ய விரோதிகள் அசஹ்யமாம்படி –-அதிலே அருசி பிறந்து –-அத்தைப் போக்கி தந்து அருள வேண்டும் என்று-யோகிகளுக்கு துர்லபமான இதை அபேஷிப்பார் உண்டாவதே -என்ன
அவதி யில்லாத அஸூபங்களையும் போக்க வல்ல தேவர் உடைய அபரிச்சின்ன குணங்களை
நினைத்து இருந்து அபேஷிக்கிறேன் -என்கிறார்-
துரந்தஸ்யா நாதே ரபரிஹரணீ யஸ்ய மஹதோ
நிஹீந ஆசாரோ அஹம் ந்ருபஸூர ஸூபஸ்யாஸ் பதமபி !
தயா ஸிந்தோ ! பந்தோ ! நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !
தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணமி தீச்சாமி கத பீ—58-
கருணைக் கடலான ஸ்வாமியே! என்னுடன் எல்லா உறவுகளையும் உடையவனே! வாத்ஸல்யக் கடலாக இருப்பவனே!-நான் மிகப் பெரிய, அநாதி கால, முடிவில்லாத, போக்க முடியாத பாபங்களை உடையவனாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் உன்னுடைய திருக்கல்யாண குணங்களை நினைப்பதால், பயமில்லாமல் இதை ஆசைப் படுகிறேன்.
தயா ஸிந்தோ ! –கருணைக் கடலே
பந்தோ !–சகலவித பந்துவானவனே
நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !–எல்லையற்ற வாத்சல்ய சமுத்ரமே
நிஹீந ஆசாரோ அஹம்–இழிவான நடத்தை உள்ள நான்
துரந்தஸ்ய –முடிவு இல்லாததும்
அநாதே-அடி அற்றதும்
அபரிஹரணீ யஸ்ய –பரிஹரிக்க முடியாததும்
மஹதோ–பெரியதுமான
அஸூபஸ்ய–பாபத்திற்கு
ஆஸ்பதமபி !–இருப்பிடமாய் இருந்தாலும்
தவ குணகணம் –உன்னுடைய அளவற்ற குணங்களை
ஸ்மாரம ஸமாரம் –பலகாலும் நினைத்து
கதபீ—அச்சம் கெட்டவனாய்
இதி இச்சாமி –இங்கனே இச்சிக்கின்றேன்-உனது சேஷத்வத்தை ஆசைப் படுகிறேன் என்கை –-பாபங்கள் வலிமை அச்சப்பட வைத்தாலும் திருவருள் முதலிய திருக் கல்யாண குணங்களை அனுசந்திக்க பயங்கள் விலகி கைங்கர்யப் பிரார்த்தனை பண்ணுகிறார்
ந்ருபசு –ம்ருக பிராயன் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானங்களை மீறி ஆகார நித்தமும் இன்றி
மனம் போனபடி திரிவதால் –
துரந்தஸ்யா –-முடிவு இன்றிக்கே இருக்கும் அஸூபம்.-பிராயச் சித்தத்தால் ஆதல் –-அனுபவத்தால் ஆதல்-உத்தர கோடி காண ஒண்ணாது இருக்கை–துர் விபாகமாய் இருக்குமது -என்னவுமாம் –-உத்தரத்தில் எதிர் காலத்தில் -நரக கர்ப்ப வாசங்கள் பலிக்கை –அநாதே –முன் செய்த முழு வினை -திருவாய் -1-4-2-என்னக் கடவது -இறே –அபரிஹரணீ யஸ்ய –-சர்வ சக்தியான தேவருக்கும் பிற்காலிக்கும் படி இருக்கை –மஹதோ –-சங்க்யாவதி ரஹீதமாய் இருக்கை –-கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் அவதி காண ஒண்ணாது இருக்கையும் இப்படிப் பட்ட அஸூபத்திற்குத் தொகை இன்றிக்கே இருக்கையும் –-யத் ப்ரஹ்ம கல்ப நியுத அனுபவ வேபய நாஸ்யம் –அணு பரிமாணனான சேதனன் இவற்றை எல்லாம் செய்தான் என்று விஸ்மயப் படும்படி இருக்கை –
சீலமில்லாச் சிறியன் -திருவாய் -4-7-1–நி ஹீ நா சாரோ அஹம் –அஹம் புத்தி போத்யமான தரமி ஸ்வரூபம் அதர்மாசார நிரூபகமாய் இருக்கை –-ஆசாரம் ஆகிறது -விலஷண தர்மத்திலே இழிகைக்கு
யோக்யதாபாதகம்-தகுதியைக் கொடுப்பது -சந்த்யா வந்த நாதிகள்–பாப அனுஷ்டானத்துக்கு யோக்யன் -என்கை-ந்ருபஸூ – சதுஷ் பாத்துக்களில் காட்டில் த்வி பாதமே விசேஷம் -என்கை –
ஜ்ஞாநேன ஹீன பஸூபிஸ் சமான –-சாஸ்திர வஸ்ய ஜன்மம் ஆகையாலே -பசு -என்ன ஒண்ணாது –
ஆஹார நித்ர அபயமைது நாதி களிலே -நியதி இல்லாமையாலே மனுஷ்யன் என்ன ஒண்ணாது
இரண்டு ஜென்மத்தையும் தப்பினேன் -என்கை –அஸூபஸ்யாஸ் பதமபி !–அஸூபம் ஆகிறது -ஸூப விரோதி-ஸூபம் ஆகிறது புருஷார்த்தம்-தத் விரோதிக்கு எல்லாம் ஆஸ்ரயம் –-அக்ருத்ய கரணம் முதலாக அசஹ்ய அபசாரம் முடிவானவற்றுக்கு ஆகரமாய் இருக்கை –-தேவர் குணாநாம் ஆகரம் ஆனால் போலே – நான் அஸூபாநாம் ஆகரம் -என்கை –
அபி – இப்படிப் பட்டவனாய் இருக்கச் செய்தேயும் ஷணம் அபி சஹே யாது ஸததா விநாசம் -என்று
அபேஷிக்கைக்கும் ஒரு வழி யுண்டு – அது ஏன் என்னில் –தயா ஸிந்தோ ! – கீழ்ச் சொன்ன அஸூப சாகரம் எல்லாம் தேவர் உடைய தயார்ணவத்திலே ஒரு குளப்படியாய் யன்றோ தேவர் உடைய க்ருபா சத்தை –-வதார் ஹம்பி காகுத்ஸ்த க்ருபயா பர்யா பாலயத்—யதி வா ராவண ஸ்வயம் –கச்சா நுஜா நாமி –-பந்தோ ! –-ஆஸ்ரிதர் உடைய இழவு பேறு தன்னதாம் படியான நிருபாதிக சம்பந்தம் சொல்லுகிறது –
அஹம் வோ பாந்தவோ ஜாத-—க்ருத்க்ருத்யஸ் ததா ராம –-ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ––உரஸா தாரயாமாஸ பார்த்தம் ஸ்ஞ்சாத்ய மாதவ ––மம ப்ராணா ஹி பாண்டவ—நிரவதிக வாத்ஸல்ய ஜலதே !-
வாத்ஸல்யம் -ஆகிறது–அன்று ஈன்ற கன்றின் பக்கல் தோஷம் தாய்க்கு போக்யமாய் இருக்குமா போலே–ஆஸ்ரித தோஷம் போக்யமாய் இருக்கை –-க்ருபா சமுத்ரத்துக்கு கரை உண்டாகிலும்
வாத்ஸ்ல்ய சாகரத்துக்கு கரை இல்லை -என்கை–சரணாகத வத்ஸல ––ரிபூணாம்பி வத்ஸல-
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்—த்வயி கிஞ்சித் சமா பன்நே கிம் கார்யம் சீதயா மம –-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம்—தவ ஸ்மாரம் ஸ்மாரம் குணகணம் –ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா –-கீழ்ச் சொன்ன குணங்களை உடைய தேவர் உடைய திருக் கல்யாண குண சமூஹத்தை எப்போதும் சிந்தை செய்து
குணா நாமா கரோ–யதா ரத்நாநி ஜலதே–சதுர்முகாயு –இதீச்சாமி கதபீ-–அஸூபாஸ்பதமான என்னை நினைத்து அஞ்சாதே–தேவர் குண கணத்தை நினைத்து-ந தேஹம் ந பிராணான்–என்கிறபடியே
இச்சியா நின்றேன் –(ந்ருபசு -மனுஷ்யனாக பிறந்தும் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டான வரம்பை மீறி
ஆஹார நித்ராதிகளிலே நியதி இன்றி மனம் போன படியே திரியும் பசு பிராயர்)
ஆதியறத் துன்பமுறு மகத்தாய் நின்று யுன் அருள் அதினாலே யன்றி யகற்ற ஒண்ணா
வேதமுறும் பாவத்திற்கு இடமாய் நின்று ஓர் ஈன நடை யுற்று நரப்பசு போன்றேனும்
மாதவ தயோ ததியே பந்துவே ஓர் வரம்பில்லா வாற் சலியக் கடலே நின் தன்
கோதிலவாம் குண கணங்கள் எண்ணி எண்ணிக் கூசாது இங்கனம் இச்சை கொள்ளுவேனே –58–அநாதி யாய் துன்பங்களை விளைவித்துக் கொண்டு நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பருத்து நின்று
உன் கிருபை ஒன்றினால் அன்றி மற்று எதினாலும் பரிஹரிக்க முடியாதன வாயுள்ள பாவங்களுக்கு இருப்பிடமாகி-துராசாரம் யுடையவனாய் நர ஜன்மம் எடுத்தும் ஞானம் இல்லா ஒரு பசுவைப் போலே இருந்தேனாயினும்-ஏ மாதவ ஏ தயா சாகரமே ஏ பந்துவே கரை இல்லாத வாத்சல்யக் கடலே உன்னுடைய அநந்த திருக்கல்யாண கூட்டங்களை நினைத்து நினைத்து அஞ்சாமல் இவ்வண்ணம் பரம புருஷார்த்தத்தில் இச்சை கொள்கின்றேன் –
—
ஸ்தோத்ரம் -59-அவதாரிகை –இச்சாம் –என்கிற இச்சை தான் சத்தியமோ -என்ன-மந்த புத்தியான நான் விஷய அனுரூபமான இச்சை உண்டு என்று திரு முன்பே விண்ணப்பம் செய்யப் போகாது –-இச்சா ஸூ சகமான வசனத்தை அவலம்பித்து மெய்யாம்படி என்னுடைய மனஸ்சை ஸிஷித்து அருள வேண்டும் –
என்கிறார் –
அநிச்சன்நப் யேவம் யதி புநரி தீச்சந்நிவ ரஜஸ்
தமஸ் சந்தஸ் சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
ததா அபித்தம் ரூபம் வசநம வலம்ப்யா அபி க்ருபயா
த்வமேவை வம்பூதம் தரணி தர மே சிஷ்ய மந–59-
ஹே தரணி தர–சர்வ லோக நிர்வாஹனான எம்பெருமானே
ரஜஸ் தமஸ் சந்தஸ்-அஹம் -ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் மூடப்பட்டுள்ள அடியேன்
அநிச்சந் அபி ஏவம் -உண்மையாக இப்படி இச்சியாது இருந்த போதிலும்
இச்சந்நிவ–இச்சிப்பவன் போலே அபிநயித்து
சத்மஸ்துதி வசன பங்கீம் -கபடமாக ஸ்தோத்ரம் சொல்லுகிற இத்தை
யதி புநஸ் அரசயம்ந் ததா அபி -செய்தேனேயாகிலும்
இத்தம் ரூபம் வசநம் –இப்படிப்பட்ட கபடமான சொல்லை
அவலம்ப்ய அபி –ஆதாரமாகக் கொண்டாவது-இந்த பொறி தடவின வார்த்தையைவாவது பற்றாசாகக் கொண்டு
க்ருபயா–திருவருளாலே நீ தானே
ஏவம் பூதம் மே மநஸ் சிஷ்ய –இப்படிப்பட்ட எனது மனஸ்ஸைத் திருத்த வேணும்-திருத்திப் பணி கொண்டு அருள வேணும்
அநிச்சன்நப் யேவம் –-யேவம் அநிச்சன்நபி– உக்தமான பிரகாரத்துக்கு அனுரூபமாக இச்சை இன்றிக்கே இருந்த தாகிலும் -நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –
பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்-யதி புநரி தீச்சந்நிவ –
புனர் இதீச்சந்நிவ--மெய்யான இச்சை உடையார் சொல்லுமா போலே –-சத்மஸ்துதி வசன பங்கீ மரசயம்
-க்ருத்ரிம ஸ்துதி வசனம் மெய் என்று பிரமிக்கும் படி பண்ணினேன் –-வசன பிரகாரத்தைப் பார்த்தால் சர்வஜ்ஞாரான தேவரும் மெய் என்று பிரமிக்கும் படி சொன்னேன் –-பொய்யே கைம்மை சொல்லி -திருவாய் -5-1-1- என்னுமா போலே – ஹேது என் என்ன –ரஜஸ் தமஸ் சந்தஸ் –-அந்யதாஜ்ஞான விபரீதஜ்ஞான ஹேதுவான-ரஜஸ் தமஸ் ஸூக்களாலே மறைக்கப் பட்டவனாய்க் கொண்டு -என்றபடி –
அநாதி காலம் அந்த தேஹம் ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்களை மறைத்துப் போந்தது ரஜஸ் தமோ த்வாரத்தாலே இறே –ததா அபி- இப்படி த்யாஜ்யமாக வேண்டும் செயலைச் செய்தேன் ஆகிலும் –
யாதாதத் யேன வர்ணிதம் -என்கிறபடியே-சர்வஜ்ஞ சகாசத்திலே மெய் சொல்லிப் பிழைக்க வேண்டி இருக்க அங்கே பொய் பற்றினால் த்யாஜ்யன் இறே-
இத்தம் ரூபம் வசநம வலம்ப்யா ––ந தேஹம் ந பிராணான்–தயா சிந்தோ பந்தோ ––என்கிற வசன மாதரத்தையே பற்றாசாகக் கொண்டு–மாதவன் என்றதே கொண்டு –திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்-உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –அபி க்ருபயா –-வதார்ஹம் -என்கிறபடியே தோஷத்தில் அவிஜ்ஞாதா வாயிற்று கிருபா பாரதந்த்ர்யத்தாலே–த்வமேவை வம்பூதம் மே சிஷ்ய மந – ஏவம் பூதம் மே மனஸ் த்வமேவ ஸிஷய – சத்மா ஸ்துதிக்கு உபகரணமான மனஸ் சை
அடிமை கொள்ளக் கடவ தேவரே அதுக்கு உபகரணாம் படி சிஷித்து அருள வேண்டும்-தீ மனம் கெடுத்தாய் -2-7-8–மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-என்கிறபடியே-பாஹ்யமான மனஸ் ஸைத் தவிர்த்து அடிமைக்கு அனுகூலமான மனஸ் ஸைத் தந்து அருள வேணும்-மனனக மலமறக் கழுவி -1-3-8-என்கிறபடியே மநோ நைர்மல்யம் யோகத்தாலே பிறக்கக் கடவது உபாஸ்கனுக்கு – அந்த யோக ஸ்தானத்திலே பகவத் அனுக்ரஹமாய் இறே இவ்வதிகாரிக்கு இருப்பது –தரணி தர – ரசாதல கதையான பூமியை ஆபத்தே ஹேதுவாக உத்தரித்தவர் அல்லீரோ தேவர் –-ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே –5-7-6-என்றும்-பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான்-பெரிய திருமொழி -1-1-4- என்றும் சம்பந்தமும் சக்தியும் உண்டு இவன் இடத்தில் இனி இச்சையே வேண்டுவது – அதை உண்டாக்கி ரஷித்து அருள வேண்டும் என்கிறார் –
(கையார் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே
யாடி மெய்யே பெற்று ஒழிந்தேன் –-ஏதேனும் வியாஜ்யத்தை கொண்டு அஸ்மாதாதிகள் அஹ்ருதயமாக சொல்வதையும் கொண்டு கார்யம் செய்ய வல்லவன் அன்றோ – )
நாஸ்திகர் அல்லாமையாலே இச்சை இல்லை -என்ன மாட்டார் –-பேற்றுக்கு அனுரூபமான இச்சை பெறாமையாலே உண்டு -என்ன மாட்டார்-மாதவன் என்றதே கொண்டு –திருவாய் -2-7-3-என்றும்
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய் -10-8-1- என்றும்உக்தி மாத்ரமே ஜீவிக்கையாம் விஷயம் இறே –
—
ஸ்லோகம் -60-அவதாரிகை –இச்சையும் இன்றிக்கே–உக்தி மாதரத்தைக் கொண்டு–இச்சையையும் உண்டாக்கி–ரஷித்து அருள வேண்டும் -என்கிறது என் என்ன அவர்ஜநீய சம்பந்தத்தைச் சொல்லுகிறார் –
பிதா த்வம் மாதா த்வம் தயித தநயஸ் த்வம் ப்ரிய ஸூஹ்ருத்
த்வமேவ த்வம் மித்ரம் குருரஸி கதிஸ் சாஸி ஜகதாம்
த்வதீ யஸ் த்வத் ப்ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத் கதி ரஹம்
பிரபன்னஸ் சைவம் ஸத்யஹம்பி தவை வாஸ்மி ஹி பர–60-
இவ்வுலகங்களுக்கு நீயே தந்தை; நீயே தாய்; நீயே விரும்பத்தக்க பிள்ளை; நீயே நல்ல உள்ளம் கொண்ட நண்பன்; நீயே நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பன்; நீயே குரு; நீயே உபாயம் (வழி) மற்றும் உபேயம் (குறிக்கோள்); நான் உன்னுடையவன்; உன்னுடைய அடிமை; உன்னுடைய தொண்டன்;
உன்னையே சிறந்த உபேயமாகவும், உபாயமாகவும் கொண்டுள்ளவன்; ஆகையால் நான் ஏன் உன்னால் ரக்ஷிக்கப்படக் கூடாது?
ஜகதாம் பிதா த்வம் மாதா த்வம் –உலகங்கட்க்கு எல்லாம் தகப்பனும் நீயே பெற்ற தாயும் நீயே
தயித தநயஸ் த்வம் –அன்பனான மகனும் நீயே
ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ –உயிர்த் தோழனும் நீயே
த்வம் மித்ரம் –சர்வ ரஹஸ்யங்களும் சொல்லிக் கொள்ளுதற்குப் பாங்கான மித்ரனும் நீயே
குருரஸி –ஆச்சார்யனும் நீயே
கதிஸ்சாஸி –உபாய உபேயமும் நீயே
அஹம் த்வதீயஸ் –அடியேனோ என்றால் உன்னுடையவன்
த்வத் ப்ருத்யஸ் -உன்னாலே பரிகரிக்கத் தகுந்தவன்
தவ பரிஜநஸ் –உனக்குத் தொண்டன்
த்வத் கதிர் –உன்னையே கதியாகக் கொண்டவன்
பிரபன்னஸ் ச -ப்ரபன்னனுமாயும் இருக்கிறேன்
ஏவம் ஸதி –ஆன பின்பு
அஹம் அபி தவ ஏவ –அடியேனும் உனக்கே
பர அஸ்மி ஹி–ரஷ்யனாக இரா நின்றேன் காண் –
பிதா த்வம்--உத்பாதகராய் ஹித காமராய் இருக்கிறவர் தேவர்–மாதா த்வம் – கர்ப்ப தாரணம் பண்ணி
பிரசவ க்லேசத்தை அனுபவித்து அஸூசி பிரசவங்களையும் மதியாதே இவன் ப்ரிய ஹிதமே அபேஷித்து இருக்கும் தாயைப் போலே பரிவுடையீர் தேவர்-பிதா அஹம் அசய ஜகத –-பூதா நாம் யோ அவ்யய பிதா -(ஸ்ரீ சஹஸ்ர நாமம் -அவ்யய பிதா-அழிவற்ற தந்தை ) தஞ்சமாகிய தந்தை தாய் -திருவாய் -3-6-9–தயித தநயஸ் த்வம் –அபிமதனாய் நிரய நிஸ்தாரகனான புத்ரனைப் போலே நின்று சஹகரிப்பீர் தேவர்-நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -திருவாய் -5-1-8-ப்ரிய ஸூஹ்ருத் த்வமேவ – அபிமதருமாய் சர்வ காலத்திலும் ஸோபனத்தையே பண்ணும் திரு உள்ளத்தை யுடையராய்
இருப்பீர் தேவரீர் –-அனர்த்தத்தைப் பண்ணி விட்டாலும் விட ஒண்ணாத அபிமதத்வம் அநபிமதன் ஆனாலும் விட ஒண்ணாத ஸூஹ்ருத்த்வம் —அவதாரணம் -சர்வத்திலும் அந்வயிக்க கடவது –த்வம் மித்ரம் –-அர்ஜுனன் ஸூபத்ரை யுடைய ஸ்வயம்வரத்தை தேவருக்கு அறிவித்து லபித்தால் போலே
அசேஷ ரஹஸ்யங்களையும் அறிவிக்கலாம் படி விஸ்வஸ நீயராய் இருப்பீர் தேவரே –குருரஸி –
மன்மனா பவ மதபக்த -என்றும்-மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் நின்ற நிலைகளிலே ஹித உபதேசம் பண்ணும் ஆசார்யரும் தேவரே –கதிஸ் சாஸி –-புருஷார்த்த உபாய பூதரும் தேவர் -என்னுதல் – கந்தவ்யத்வாதி கதி -என்று பரம ப்ராப்யர் தேவர் -என்னுதல்-ஜகதாம் – இந்த சம்பந்தம் தேவாதி சகல பிராணிகளுக்கும் சாதாரணம்-உபய விபூதிக்கும் சாதாரணம் -என்னவுமாம் –த்வதீ யஸ் – அந்த சாமான்யம் ஒழிய தமக்கு உண்டான விசேஷ பிரதிபத்தியை அருளிச் செய்கிறார் –-யஸ் யாஸ்மி -என்கிறபடியே தேவருக்கு சேஷ பூதன் –த்வத் ப்ருத்யஸ் – தேவருக்கு அதிசயத்தை விளைத்து ஸ்வரூபம் பெரும் சம்பந்தத்தை உடையன் -என்கை அதனால் தேவருக்கு பரணீயன் -என்னுதல்-தவ பரிஜநஸ் –ஆத்ம தாஸ்யம் -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )என்கிற நிருபாதிக தாஸ பூதன் -என்னுதல் –-தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத் மாந பரமாத்மந ––அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சர்வ கைங்கர்யத்துக்கும் அர்ஹன் –த்வத் கதிர் – தேவரே ப்ராப்ய பூதர் -என்று இருக்கிறேன்-அஹம் பிரபன்னஸ் – ப்ராப்யம் பெறுகைக்கு தேவரையே உபாயமாக அத்யவஸிக்கிறேன்-ஏவம் ஸதி-
தேவர் சர்வ வித பந்துவுமாய் நான் அநந்ய கதியுமான பின்பு –யஹமபி – அஹ்ருத யோக்தன் ஆனாலும்-தவை வாஸ்மி ஹி பர – தவைவ ப்ரோ அஸ்மி –-தேவருக்கே பரனாகிறேன்-ஜ்ஞான சக்த் யாதியாலும் ப்ராப்தி யாலும் என் கார்யம் தேவருக்கே பரம் -என்கை –பரம் ஆகையாவது – சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை களிலும் சர்வ பிரகார நிர்வாஹ்யனாகை –
(ஒழிக்க ஒழியாத உறவு முறை உள்ளதே–சேலேய் கண்ணியரும் பெரும் செல்வனும் நல் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவரே-என்றும் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு -என்றும் -போலே –ஸூஹ்ருத்-எப்பொழுதும் ஹித விரும்பி–மித்ரன் -சமண வயஷகன் -சகல ரஹஸ்யங்களையும் பகிர்ந்து கொள்ள உரியவன் )
அத்தனும் நீ யன்னையும் நீ செகத்திற்கு எல்லாம் அரு மகவும் மித்ரனும் இதனும் நீயே
வித்தகமாம் குரு நீயே கதியும் நீயே வினையேனும் நின்னடிமை கதி வேறு இல்லேன்
உத்தமமாம் உன் பணிகள் பலவும் செய்ய யுரியேனான் உனை அடைக்கலம் புகுந்தேன்
எத்திறனும் இலனாய் யுன் இணக்கம் கொண்டேன் இனி யான் உனக்கே யாம் பாரம் தானே –60–இவ்வுபய விபூதிகளுக்குள் அடங்கிய எல்லா செகங்களுக்கும் தந்தை நீயே தாய் நீ அருமையான புத்ரன் நீ -மித்ரன் நீ ஹிதனும் நீ -ஆச்சார்யனும் நீ -அடைய வேண்டிய கதியும் நீயே-அடியேன் உன்னுடைய சேஷ பூதன் -ஊழியன் -உன்னால் போஷிக்கத் தக்கவன் -எத்திறனும் இல்லேனாய் உன்னையே கதியாக அடைந்துள்ளேன்-ஆகையால் என்னை ரக்ஷிக்கும் பாரம் உன்னுடையதே –
—
ஸ்தோத்ரம் -61- அவதாரிகை –நீர் மஹா வம்ஸ ப்ரஸூதர் அல்லீரோ –-நிராலம்பரைப் போலே இங்கன் சொல்லுகிறது -என் -என்ன இவ் வம்ஸ்த்தில் பிறந்தேனே யாகிலும் பாப ப்ரசுரனாகையாலே சம்சாரத்தில் அழுந்தா நின்றேன் எடுத்து அருள வேண்டும் – என்கிறார் –
ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி ஜகதி க்யாத யஸஸாம்
ஸூசீ நாம் யுக்தா நாம் குண புருஷ தத்தத்வ ஸ்திதி விதாம்
நிஸர்க்காத் ஏவ த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்
அதோ அத பாபாத்மா ஸரணத! நிமஜ்ஜாமி தமஸி–61-
புகலிடம் கொடுக்கும் ஸ்வாமியே! நான் பரிசுத்தமான, உன்னுடன் எப்பொழுதும் இருக்க விரும்புபவர்களான, சித் மற்றும் அசித் ஆகியவற்றின் ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்களான, உன் திருவடிகளிலேயே எப்பொழுதும் தன்கள் மனதை வைத்திருக்கும் சிறந்தவர்களான, ப்ரஸித்தமான புகழை உடைய பெரியோர்கள் அவதரித்த, உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், பாபமே வடிவெடுத்தவனாகையாலே, இந்த ப்ரக்ருதியில் ஆழமாக மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
ஸரணத! –வழி காட்டும் பெருமானே –அவர் அவர்களுக்கு தகுந்த உபாயத்தைக் கொடுத்து அருளுபவனே
அஹம் ஜகதி க்யாத யஸஸாம்–அடியேன் உலகம் எங்கும் பரவின புகழை யுடையவர்களும்
ஸூசீநாம்–பரிசுத்தர்களும்
யுக்தா நாம்–உன்னை விட்டுப் பிரியாதவர்களும்-ஆத்ம சாஷாத்காரமான யோகத்தில் ஊன்றினவர்கள் என்றும் உன்னுடன் நித்ய சம்ச்லேஷத்தை விரும்பி இருப்பவர்கள் என்றும் ஒரு காலும் உன்னை விட்டுப் பிரியாதவர்கள் என்றும் மூன்றுமே உண்டே-மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது
செல்லாதவர்கள் -என்னுதல்
குண புருஷ தத்வ ஸ்திதி விதாம்–-–அசேதன தத்வம் என்ன சேதன தத்வம் என்ன இவற்றின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறிந்தவர்களும்-குண த்ரயாத்மகமான பிரக்ருதியை குணம் -புருஷன் -ஆத்மா –-தத்வ ஸ்திதி உண்மை நிலையை உணர்ந்தவர்கள் -தத்துவங்களின் ஸ்தியை உணர்ந்தவர்கள் என்றுமாம்
நிஸர்க்காத் ஏவ –த்வச் சரண கமல ஏகாந்த மநஸாம்–பரிமளத்துடனே அங்குரிக்கும் திருத்துழாய் போலவும்-வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலவும்
இயற்கையாகவே உன்னுடைய திருவடித் தாமரைகளில் ஊன்றின மனமுடையவர்களான மஹான்களினுடைய
ஜநித்வா வம்ஸே மஹதி –சிறந்த குலத்திலே பிறந்து வைத்து
அதோ அத பாபாத்மா தமஸி–பாபிஷ்டனாய்க் கொண்டு இருள்மயமான மூதாவியிலே-அடி காண ஒண்ணாத கீழ் எல்லையில்
நிமஜ்ஜாமி–அழுந்திக் கொண்டே கிடக்கிறேன்-பன்மாமாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே-இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –-சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் -என்கை –
ஜநித்வா அஹம் வம்ஸே மஹதி –வம்ஸ்த்துக்கு மஹத்தை யாவது –-மஹாத்மாக்கள் வந்து ஜனிக்கை ஏதத்தி துர்லப தரம் லோகே ஜந்ம யதீத் ருஸ்ம் -ஸ்ரீ கீதை -6-42-என்னும் வம்சத்திலே பிறந்து வைத்து அனர்த்தப் படா நின்றேன் -என்கை –ஜகதி க்யாத யஸஸாம் – சதுஸ் ஸாகர பர்யந்தமான பூமி எல்லாம் பிரசித்தமான புகழை உடையவர்கள் –திகழும் தன திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து -திருவாய் -8-7-5– என்கிறபடியே பகவத் விஷயீ காரத்தால் வந்த புகழ் –ஸூசீ நாம் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் போக்யதா கந்த ரஹிதராய் இருக்கை –-ஆந்த்ர பாஹ்யமான உபய ஸூசியைச் சொல்லவுமாம்–இவ்வம்சத்திலே பிறந்து அஸூபாஸ் பதம் என்னக் கடவீரோ –யுக்தாநாம்-
க்ருதக்ருத்யா ப்ரதீ ஷந்தே-என்கிறபடியே-நித்ய யோகத்தில் ஆகாங்ஷமாணராய் இருக்குமவர்கள் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய் -9-3-7-என்று இருக்கை-இளைய பெருமாளைப் போலே தேவரோடே யல்லது செல்லாதவர்கள் -என்னுதல் இப்படிப் பட்ட வம்சத்திலே பிறந்து இச்சை போராது -என்னக் கடவீரோ -என்ன –
குணா புருஷ தத்தத்வ ஸ்திதி விதாம் – சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ சம்பந்தங்களை அறியுமவர்கள் – குணம் என்று குண ஆஸ்ரயமான பிரக்ருதியைச் சொல்லுகிறது
ஸ்திதி யாவது ஸ்வரூப ஸ்வபாவாதிகள் ––நிஸ்ரக்கா தேவ தவச் சரண கமலை காந்த மநஸாம்–
வத்ஸ்ம் ஆனது ஜனித்த போதே தாய் முலையிலே வாய் வைக்குமா போலே-த்வச் சரணார விந்தங்களிலே ஏகாந்தமான மனஸ் சை ஜந்ம ப்ரப்ருதியாக உடையவர்கள் –-கீழ்ச் சொன்ன ஸூஸி யோகாதிகள் நைசர்க்கிகம் -என்கை –பாபாத்மா – பாபம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் –-ஞானாநந்தம் ஒழிய பாபமே நிரூபகமாய் -இருக்கை –ஸ்ரணத! –-இவ்வளவிலும் உன் பக்கல் அவகாசம் உண்டாம் படி ஆள் பார்த்து உழி தரும் -நான் -திரு -60-தேவரீரே –தமஸி -அதோ அத -நிமஜ்ஜாமி-பிரக்ருதியிலே தேவர் எடுக்க நினைத்தாலும் கைக்கு எட்டாதபடி ஆழ நின்றேன்-பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான் -திருவாய் -3-2-2-என்கிறபடியே இன்னம் தரை கண்டிலன் -என்கிறார் –இத்தால் – சந்தாநிகர் தேவர் பக்கல் அவகா ஹித்த அளவும் நான் பிரக்ருதியில் உள் புக்கேன் –என்கை –
ஜனித்த வம்சம் இது-தேவர் சரண்யர்–நான் படுகிற பாடு இது இறே-அவமஞ்ஜனைப் போலே -வம்ஸ ப்ரபாவமும் ஜீவியாதே–தேவருடைய நீர்மையும் ஜீவியாதே இருக்கிற படி இறே -என்னுடைய பாப ப்ராசுர்யம் என்கிறார் –(யுக்தானாம் -1-ஆத்ம சாஷாத்கார யோகத்தில் ஊன்றியவர்கள்–2-உன்னுடன் நித்ய சம்பந்தத்தை விரும்பி இருப்பவர்கள்-3-ஒருக்காலும் உன்னை விட்டு புரியாதவர்கள் -என்ற மூன்றும் உண்டே-சரணத–தத்வ ஞானம் அறிந்தவர்களுக்கு தகுந்த உபாயத்தை கொடுத்து அருளுபவன் -)
பூ தலம் எங்கும் பரவும் புகழ் பெற்றோராய் புனிதரு நித்ய யோகம் புரிவோர் தாமாய்
கோதில தாய்க் குண புருட தத்துவத்தின் குறிப்பு உணர்ந்து ஜனன முதல் இயற்க்கை கொண்டு
மாதவ நின் மலர் அடி பால் நிலைத்து நின்ற மனமுடையோர் தம் சிறந்த மரபில் தோன்றி
ஏதமுறு இருள் ப்ரக்ருதியில் ஆழ்வேன் எட்டாமே சரணிய மா பாவி நானே –61-ஜகத் பிரசித்தமான கீர்த்தியை யுடையவர்களாய் மஹா பரி ஸூத்த ஆத்மாக்களாய் உன்னுடன் நித்ய யோகத்தை அபேக்ஷித்தவர்களாய் சித் அசித் ஈஸ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவ ஸம்பந்தங்களை அறிந்தவர்களாய்-ஜனன காலம் தொடங்கி இயற்கையாவே உன் திருவடிட் தாமரைகளில் நிலைத்து நின்ற மனத்தை யுடையவர்களாய்-விளங்கும் உத்தமர்களுடைய திரு வம்சத்திலே ஜனித்து ஆபாஸமான இருள் நிறைந்துள்ள இந்த ப்ரக்ருதியில் நீச்ச நிலை யற்று அமிழ்ந்து கிடக்கின்றேன்
மஹா பாவியேன் -ஏ -சரண்யனே –
—
ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –இவ்வம்சத்தில் ஜென்மத்தையும் அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –-நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர ஸூயாப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-
நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன் மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?
1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்-சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –
அமர்யாத –வேத மரியாதைக்கு பஹிர்ப் பூதன்-ஷூத்ரஸ் –-ஷூத்ரத்வம் ஆவது-நீச விஷயங்களில் அதி சபலன் – உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து அதுக்கு மேலே விநாச ஹேதுவான
நீச சேவையிலே அதி சபலன்-சல மதிர்- நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது-வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று-ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால் அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –அஸூயா ப்ரஸ்வபூ –பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –க்ருதக்ந – உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை–கோக் நே சைவ ஸூ ரா பேச சோரே பக்நவ்ரதே ததா நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி கருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும் பஹிஷ்க்ருதன் -என்கை-–துர்மாநீ –இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும் சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –ஸ்மர ப்ரவஸோ – தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக நினைத்து இருக்கிற அளவன்றிக்கே விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும் பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும் அனர்த்தப் பட்டேன் -என்கை –வஞ்சன பர – காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் – அவ்விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –-சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-ந்ரு ஸ்ம்ஸ – தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே – தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல் க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –பாபிஷ்ட- இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று-அறிவுடையார் தம்தாமை
பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –கதம் உத்தீர்ண – இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற எனபது ஓன்று உண்டோ –-முத்தனார் –திருச்சந்த -115-என்கிறபடியே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –தவ சரணயோ -கதம் -பரிசரேயம் – துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான் நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே எங்கனே பரிசர்யை பண்ணுவன்-துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் – அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் –என்கை —
நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன நின்னடி இணையில் பணி செய்வேனே –62—சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்-நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்-நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்-பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்-நன்றி கொன்றவனாய் மஹா பாதகனாய் அஹங்காரியாய் காம வசத்தனாய் வஞ்சகனாய் குரூரம் உள்ளவனாய் பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன்-
—
ஸ்தோத்ரம் -63-அவதாரிகை –புத்தி பூர்வேண பண்ணின ப்ராதி கூல்யங்களைப் போக்கப் போமோ -என்ன காகாபராதத்தையும் ஸிஸூபாலாப ராதத்தையும் பொறுத்து அருளின தேவருக்குப்
பொறுக்க முடியாதது உண்டோ – என்கிறார் –
ரகுவர யத பூ ஸ்தவம் தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய
ப்ரணத இதி தயாளூர் யச்ச சைத் யஸ்ய கிருஷ்ண
பிரதிப வமபராத்துர் முக்த சாயுஜ்யதோ அபூ
வத கிமபத மாகஸ் தஸ்ய தி அஸ்தி ஷமாயா-63-
ரகுகுல திலகமான ஸ்ரீராமராக அவதரித்தவனே! பெரிய தவறைச் செய்த காகாஸுரன் விஷத்தில்,
அவனை ஒரு சரணாகதனாகக் கொண்டு, உன் கருணையைக் காட்டவில்லையோ?-எந்தத் தவறுகளையும் பொருட்படுத்தாத கண்ணனே! சேதி குலத்தைச் சேர்ந்த, பிறவிதோறும் உன்னிடத்தில் அபராதம் செய்த சிசுபாலனுக்கு நீ மோக்ஷத்தையே அளித்தாயே. எந்த பாபம் தேவரீருடைய பொறுமைக்கு விஷயமாகாது? எனக்கு தேவரீர் விளக்கி யருள வேண்டும்.
ஹே ரகுவர –ராகு வம்சத்தில் ஸ்ரீ ராமனாக திரு அவதரித்தவனே
த்வம் -நீ
தாத்ரு ஸோ வாயஸ்ஸ்ய-அப்படிப்பட்ட மஹா அபராதியான காகாஸூரனது விஷயத்திலே
ப்ரணத இதி-இக் காகம் நம்மை வணங்கிற்று என்பதையே கொண்டு
தயாளூர் யத் அபூ –தயை பண்ணினாய் இறே-ஷிபாமி -என்றும் ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே-தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது – பிராட்டி சந்நிதி யாகையால் இறே-முக்த கிருஷ்ண-குற்றம் அறியாத கண்ண பிரானே-கிருஷ்ணனாகி என்றும் கிருஷ்ண என்று சம்போதானமாகவும் –
பிரதிபவம் அபராத்துர்–பிறவி தோறும் அபராதம் பண்ணின
சைதயஸ்ய–சிசுபாலனுக்கு – யது வம்ஸ பூதரில் காட்டில் சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –
சாயுஜ்யதோ அபூச சயத-சாயுஜ்யம் அளித்தவனாயும் ஆனாய் இறே
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-
தஸ்ய தே ஷமாயா-அப்படி எல்லாம் செய்தவனான உன்னுடைய பொறுமைக்கு
அபதம ஆகஸ் கிம் அஸ்தி -இலக்காகாத குற்றம் என்ன இருக்கிறது
வத –அருளிச் செய்ய வேணும்-உனக்குப் பொறுக்க முடியாதது உண்டோ-சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –
ரகுவர –சரணாகத ரஷணம் பண்ணிப் போந்த-ரகு ப்ரப்ருதிகள் காதகர் என்னும்படி சரணாகத ரஷணததிலே அதிகரராய் இருக்கை – ரகு ராஷச சம்வாதத்தில் சரணாகத ரஷணம் பண்ணிப் போந்தவர்கள் அன்றிக்கே –ஸூக்ரீவம் சரணம் கத -என்றும் த்வயி கிஞ்சித் சமாபன்நே -என்றும் இறே இவர் படி –தாத்ருஸ –அப்படிப் பட்டவன் என்னுமது ஒழிய அனுபாஷிக்கை தான் அசஹ்யமாம் படி இறே பண்ணின அபராதம் –வாயஸ்ஸ்ய – அபராதம் பண்ணுகைக்காக ப்ராப்தமான தேவத்வத்தை விட்டு
நிஹீனமான திர்யக் த்வத்தைப் பரிக்ரஹித்தான் -என்கை –ப்ரணத இதி –ஸ பித்ரா ஸ பரித்யக்த -என்கிறபடியே இவனைப் பரிக்ரஹிக்கில் நமக்கு அனர்த்தம் என்று சர்வரும் உபேஷிக்க -புகலற்று
ஸ தம் நபதிதம் பூ மௌ-என்கிறபடியே விழுந்தவனை சரணாகதன் என்று பிரதிபத்தி பண்ணி
ருஷி –சரணாகதம் -என்றதும் ராம அபிப்ராயத்தாலே-த்வம் தயாளூரபூ –-ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காம் அளவிலே தேவர்-க்ருபயா பர்யபாலயத் -என்கிறபடியே-தயாளு வானீர் –-ஷிபாமி -என்றும்- ந ஷமாமி -என்றும் பண்ணி வைத்த பிரதிஜ்ஞை பழியாதே தேவர் க்ருபா கார்யமே பலித்து விட்டது –
பிராட்டி சந்நிதி யாகையால் இறே-
யச் ச – ச சப்தத்தாலே-காகாபராதத்தை பொறுத்த அளவேயோ-என்று உதாஹரணாந்தரத்தை சமுச்சயிக்கிறார்-சைத்யஸ்ய –யது வம்ஸ பூதரில் காட்டில் சேதி குலோத்பவன் என்று தன்னை உத்க்ருஷ்டனாக அபிமானித்து இருக்குமவன் –பிரதிப வமபராத்து-காகத்தைப் போலே ஒரு கால் அபராதத்தைப் பண்ணின அளவன்ற்றியே- ஜன்மம் தோறும் பிரதி கூல்யத்திலே வாசனை பண்ணினவனுக்கு –-சாயுஜ்யதோ அபூ –-என்றும்-பஹூ நாம் ஜந்ம நாமந்தே -என்றும்-அநேக ஜந்ம சமசித்த -என்றும் ஜன்மம் தோறும் ஆஸ்ரயித்தார் பெரும் பேற்றை இறே கொடுத்தது –
சாயுஜ்யம் ஆவது -சமான குண யோகம் –-சாயுஜ்யம் ப்ரதிபன்னா யே தீவர பக்தாஸ் தபஸ் விந
கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா—முக்த –ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை –திருவாய் -7-6-10-என்கிறபடியே அபராத அநபிஜ்ஞன் இறே கிருஷ்ணன்-(ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ர ப,க்தாஸ் தபஸ்விந: | கிங்கரா மம தே நித்யம் ப,வந்தி நிருபத்,ரவா: || [எவர்கள் மேலான ப,க்தியை உடையவர்களோ, எவர்கள் ப்ரபத்தி யாகிற தபஸ்ஸைச் செய்தவரோ, அவர்களே என்னுடன் ஸாயுஜ்யத்தை அடைந்து, ஸம்ஸாரமாகிற உபத்ரவம் நீங்கப் பெற்றவர்களாய், எப்போதும் எனக்குக் கைங்கர்யம் செய்பவர்களாகிறார்கள்)அதுக்கு மேலே ஒரு பேற்றை முடிக்கிற தசையிலே ஸூக ரூபமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின ஏற்றம் –தஸ்ய தே ஷமாயா அபத்த மாக கிமஸ்தி--கால பேதத்தாலே தேவர் வேற ஒருவன் ஆகிறீர் அல்லீர்-தேவர் க்ருபைக்கு அவிஷயமான பாபம் உண்டோ-கிம் ஷேப அப்தம் -அஸ்தானம் -அவிஷயம் இத்யர்த்த –
வத சர்வஜ்ஞரான தேவருக்கும் மறு மாற்றம் இல்லை க்ஷமித்து அருளி விஷயீ கரிக்கும் இத்தனை -என்கை –
(ப்ரதிபவம் -காகாசுரன் ஒரு ஜன்மாவில் பண்ணின அபசாரம் -சிசுபாலனோ மூன்று ஜன்மாக்களில் அபராதம் – இருந்தாலும் க்ஷமித்து சாயுஜ்யம் அளித்தாயே- சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை –திருவாய் -7-5-3-)
அத்தகைய காகனையும் அன்று அளித்தாய் அடி பணிந்தான் என விரகு திலக ராமா
மொய்த்த பவம் தொறும் பிழையே முடித்து வந்த மூர்க்கன் சிசு பாலனுக்கும் கண்ண அந்நாள்
உத்தமமாம் ஓர் பதவி யுதவினாய் ஒப்பிலாதாம் பொறுமைக்கு ஓர் இலக்கு ஆகாத
எத்தகைய அபராதம் எங்கு தானும் இசைந்துளதோ என் நாத இயம்புவாயே –63-ஏ ரகூத்தமா -அத்தன்மைத்த மஹா அபராதியான காகாசூரன் கீழே விழ-அவனை சரணாகதி பண்ணினவனாகக் கொண்டு ரக்ஷித்தாய்-ஜென்மம் தோறும் அபராதமே செய்து நின்ற அந்த சிசுபாலனுக்கும் ஏ கண்ணபிரானே ஸாயுஜ்ய பதவியைத் தந்து அருளினை-ஆதலால் உன் க்ஷமா குணத்தால் -ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் போல் இருக்கும் தன்மையினால் முக்தனானவனே இவ் விதமான உன்னுடைய பொறுமைக்கும் அகப்படாமல் விலக்கான எந்த அபாராதமேனும் எங்காயினும் இருக்கின்றதோ ஏ நாத அருளிச் செய்வாய் –
—
ஸ்தோத்ரம் -64-அவதாரிகை –ஸ்வ தந்த்ரரான நாம் சிலர் திறத்தில் ஒன்றைச் செய்தோம் -என்னா
இதுவே மரியாதையாகக் கடவதோ –என்ன கடல் கரையிலே ஆஸ்ரித சாமான்யத்திலே-தேவர் பண்ணின பிரதிஜ்ஞை என்னை ஒருவனை ஒழியவோ என்கிறார் –
நநு பிரபன்னஸ் ஸக்ருதேவ நாத
தவாஹ மஸ்மீதி ச யாசமாந
தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம்
மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே–64-
ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்-“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,-நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான், உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?
நநு நாத-ஸ்வாமிந்
அஹம் ஸக்ருதேவ பிரபன்னஸ் இதி –நான் ஒரு கால் பிரபத்தி பண்ணினவன் என்றும்
அஹம் தவ அஸ்மி இதி ச -நான் உனக்கே உரிமைப்பட்டு இருக்கிறேன் என்றும் சொல்லிக் கொண்டு
யாசமாநஸ் அஹம் -கைங்கர்ய புருஷார்த்தத்தைப் பிரார்திக்கிற அடியேன்
தவ ஸ்மரத பிரதிஜ்ஞாம்–அன்று நீ கடற்கரையில் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்குப் பண்ணின ப்ரதிஜ்ஜையைத் திரு உள்ளத்திலே கொண்டு இருக்கிற உனக்கு
அநு கம்ப்ய –அருள் புரிய அறியேன் –
மதேக வர்ஜம் கிம் இதம் வ்ரதம் தே–உன்னுடைய இந்த விரதம் என் ஒருவனைத் தவிர்த்ததோ
சர்வ சாதாரணமான ப்ரதிஜ்ஜை பொய்யோ
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே –ஸக்ருத் பிரபதனம் பண்ணினேன்-கதா அஹம் ஐகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று-தவாஸ்மீதி யாசநனும் பண்ணினேன் -ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –-அபயம் ததாமி ப்ரதிஜ்ஜை பலிக்க வேண்டியது அன்றோ –
நநநு பிரபன்னஸ் –-ஸ்க்ருதேவ -என்றத்தை ஸ்மரிக்கிறார்–ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே -அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம ஸக்ருதேவ -என்றது –-சஹசைவ –உடனேயே -என்று ஆழ்வான் நிர்வஹிக்கும் –-அநாதி காலம் சம்சரித்துப் போந்த இவன் ஒரு ஜன்மம் எல்லாம் ப்ரபத்தியை அனுசந்தித்தால் தான் -ஸ்க்ருத் -என்கைக்குப் போருமோ -என்பர் எம்பார் –-பகவத் ப்ரபாவத்தைப் பார்த்தால் ஒரு காலுக்கு மேல் மிகை – ப்ராப்ய ருசி ப்ராப்தி அளவும் அனுவர்த்திக்கும் -என்பர் பட்டர் – நாத –ஒரு கால் பண்ணின பிரபத்தி அமைகிறது வகுத்த நாதன் ஆகையாலே – ஆபி முக்யம் மாத்ரமே அமைந்து இருக்கிறது – இழவு பேறு தன்னதான குடல் துடக்கு – அசரண்ய விஷயத்தில் ஆர்த்த பிரபத்திக்கும் பலம் பாஷிதம் – வகுத்த விஷயத்தில் த்ருப்த பிரபத்திக்கும் பல வ்யாப்தி யுண்டு – தவாஸ்மீதி ச யாசமாந -அஹம் தவாஸ்மி-பிரத்யக் வஸ்து வானது கிஞ்சித் கரித்துத் தன சத்தையை லபிக்க வேணும் என்று யாசிக்கை – உத்தார்த்த பிரக்ரியையால் -த்வயம் உத்தரார்தம் -கைங்கர்யத்தை பிரார்திக்கை –த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்று என்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பிரபத்தி பண்ணினேன் –-ஐ காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி -என்று ப்ராப்ய அபேஷையும் பண்ணினேன் –இரண்டு பதத்தாலும் பக்தி பிரபத்திகள் இரண்டிலும் அதிகரித்த அதிகாரிகள் இருவரையும் சொல்லுகிறது -என்பாரும் உண்டு-தவா நுகம்ப்ய ஸ்மரத பிரதிஜ்ஞாம் –
ஏதத் வ்ரதம் மம -என்று கடல் கரையில் பண்ணின பிரதிஜ்ஞையை ஸ்மரியா நின்று கொண்டு
தேவருக்கு அனுக்ராஹ்யன் –மதே கவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே – சர்வ சாதாரண பூதரான தேவர் உடைய
அசாதாராண இந்த சங்கல்பம் என்னை ஒழிந்து இருக்குமோ –-கிம் ஷேப –-இன்னானை ஒழிய -என்று விசேஷித்த தாகில் அன்றோ-எனக்கு இழக்க வேண்டுவது-தேவர் சத்ய சங்கல்பராகையால் என்னை ரஷித்து அருள வேணும் –என்கை –(தத் ப் ரூஹி வசநம் தே,வி ! ராஜ்ஞோ யத,பி காங்க்ஷிதம் | கரிஷ்யே ப்ரதிஜாநே ச ராமோ த்,விர் நாபியாஷதே ॥ [அம்மா। அரசர் விரும்பிய தான அந்த வசனத்தைச் சொல்லுவாயாக, அப்படியே செய்கிறேன்; ப்ரதிஜ்ஞையும் செய்கிறேன். ராமன் இரண்டு வித,மாகப் பேசமாட்டான்)
ஒரு முறை யுனக்கு அடைக்கலம் புகுந்து எனக்கே யான
யுரிமையை யுடையேனாக வேண்டு நான் சபதம் முன்னி
யருளு நின்னருளுக்கு இலக்கா வாகுவன் நாத னினில்
விரதம் என் ஒருவனைத் தான் விலக்கியே ஒழிக்கும் கொலோ –64-ஏ நாத ஒரு தரம் உனக்கு அடைக்கலம் புகுந்து உனக்கே சேஷபூதன் ஆகின்றேன் என்று பிரார்த்திக்கும் அடியேன் தென் கடல் கரையில் செய்து அருளிய ப்ரதிஜ்ஜையை நினைத்து உன் கிருபைக்குப் பாத்திரம் ஆகிறேன்-இப்படிப்பட்ட உன் ஸங்கல்பம் அடியேன் ஒருவனை மாத்ரம் விலக்கி ஒழித்து விடுமோ -ஒருக்காலும் ஒழியாது அன்றோ –
—
ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும் ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே விஷயீ கரிக்க வேணும் -என்ன அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-
எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான, தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.
மத் வ்ருத்தம் –என்னுடைய நடவடிக்கையை
அசிந்தயித்வா–கணிசியாமல்
அக்ருத்ரிம த்வச் சரணார விந்த ப்ரேம ப்ரகர்ஷ அவதிதம் -உனது திருவடித் தாமரையில் உண்மையாக
உண்டான பரம பக்திக்கு எல்லை நிலமாய் இருப்பவரும்
ஆத்மவந்தம்–ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்தவரும் -ஜிதேந்த்ரியர் -சத்தை பெற்றவர்
பிதாமஹம் நாத முநிம் -எனக்குப் பாட்டனாருமாகிய ஸ்ரீ மந் நாத முனிகளை–-ஸ்ரீ ஈஸ்வர பட்டரது திருக்குமாரர் நம் ஆளவந்தார்
விலோக்ய–கடாக்ஷித்து
ப்ரஸீத –அடியேனை அனுக்ரஹித்து அருளாய்
அக்ருத்ரிம – க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம ஸ்வாபாவிக -இத்யர்த்த –-ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை அப்படி அற்றது அக்ருத்ரிமம்-இயற்கையானது –-குலம் தானே யோகி குலம் ஆகையாலே நை சர்க்கிகம் -என்கை – மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –தவச் –ப்ராப்த சேஷியான உன்னுடைய-சரணார விந்த –ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான திருவடிகளை –ப்ரேம ப்ரகர்ஷாவதிம்--ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம் இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது – மாத்மவந்தம் – பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –பிதாமஹம் நாத முநிம் –-குடல் துடக்கை உடையராய் பகவத் ஜ்ஞான நிதியாய் உள்ளவரை –விலோக்ய – கடாஷித்து-ப்ரஸீத – அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் – மத் வ்ருத்தம சிந்தயித்வா – அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –
மத் வ்ருத்தம் -என்று சத் கர்மத்தை நினைக்கிறது –-வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –-ஸ்வ கதமான வற்றை அநாதரித்து-பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )
(த்வச்சரணாரவிந்த,) இவ்வாத்மாவுக்கு வகுத்த தேவர் திருவடித்தாமரைகளிலே.
(ப்ரேம ப்ரகர்ஷாவதி,ம்) பக்த்யுத் கர்ஷத்துக்கு அவதி,யாயுள்ளவரை. பரபக்தியுக்தரா யிருக்கை. அநபாயினியான ப்ரீதி ஸம்ஸாரிகளுக்கு ஸப்தாதி,களிலே; இவர்க்கு இவ் விஷயத்திலே யிறே.
(ஆத்ம வந்தம்) ப.கவச் சேஷதைக ரஸராயுள்ளவரை.
மேல் ப்ரேம ப்ரகர்ஷத்துக்கு அடியா ன ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞான முடையவரென் கை.
(பிதாமஹம்) .“*வித்,யயா ஜந்மநா ச ”,
(நாதமுநிம்) ஸ்ரீரங்க நாதரென்ற திருநாமத்தை உடையவராய், பகவத்,ஜ்ஞாந நிதியாயுள்ளவரை.
(விலோக்ய ப்ர ஷீத;) அவரைப் பார்த்து என் அபராதங்களைப் பொறுத்தருள வேணும்.
(மத்,வ்ருத்தமசிந்தமித்வா) அஸத் கர்மத்தை விஸ்மரித்தவோ பாதி ஸத் கர்மத்தையும் சிந்தியாதே, அவரைப் பார்த்து ப்ரஸந்ராக வேணுமென்கை, “மத்,வ்ருத்தம்”” என்று ஸத் கர்மத்தை நினைக்கிறது. “வ்ருத்த வாந்‘ என்றால் ஸத்கர்ம யுக்தனை யிறே சொல்லுகிறது. ஸ்வகதமான வற்றை அநாதரித்து பெரிய முதலியாரோட்டை ஸம்பந்தத்தையே பார்த்து ரக்ஷித்தருள வேணும்
இயற்கையில் இசைந்து இலங்கு நின் மலரடியின் பக்தி
வியப்பினுக்கு எல்லையாம் என் வித்தகப் பாட்டனாராம்
நயப்புறும் ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடைக் கணித்து என்
கயப்புறும் காதை நோக்காக் கனிவுடன் அருளுவாயே –65-இயற்கையினாலேயே யுண்டான உன் திருவடிக்கண் உற்ற பக்தியின் விசேஷத்துக்கு எல்லை போன்றவரும்-ஆத்ம ஞானம் யுடையவரும் -ஜென்மத்தாலும் ஞானத்தாலும் எனக்குப் பாட்டனாருமான-ஸ்ரீ மன் நாத முனிகளைக் கடாக்ஷித்து அடியேனுடைய கைப்பு உண்டாக்கும் ஹீன சரித்திரங்களைப் பாராது
ஸ்தோத்ரம் தன்னில் செய்ததாகிறது:– முதலிட்டு அஞ்சு ஸ்லோகத்தாலே பகவத், விஷயத்தில் இழிகைக்கு யோக்யனாக்கின ஆசார்யனை உபகார ஸ்ம்ருதியாலே ஸரணம் புக்கு,
அநந்தரம் நாலு ஸ்லோகத்தாலே பகவத், விஷயத்திலே இழிந்து, தத் ப்ரப௱வத்தாலே ஸ்தோத்ரா க்ஷேப ஸமாதானத்தைப் பண்ணி,
நா வேஷஸே’–தொடங்கி *த்வதராஸ்ரிதாநாம்’ அறுதியாக ஸரண்ய ப்ரபாவத்தைச் சொல்லி,
நமோ நம:விலே அந்த ப்ரபாவத்துக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழுந்து,
ந த,ர்ம நிஷ்டோஸ்மி என்று தொட்ங்கி *தவாம்ருதஸ்யந்திநி’யளவும் வெறு மையை முன்னிட்டு ஸரணம் புக்கு, ஸரணாகதனுக்கு ஸம்பாவிதமான ஸ்வ பாவங்களைச் சொல்லி,
‘த்வதங்க்ரி தொடங்கி இரண்டு ஸ்லோகத்தாலே, “மநோ வாக் காயங்கள் எல்லாவற்றாலும் ஸரணம் புக வேண்டா; காயிகமாதல் மானஸமாதல் அமையும் அபிமத ஸித்திக்கு” என்று சொல்லி,
*விலாஸ தொடங்கி பவந்தம்’ முடிவாக ப்ராப்யத்தை ப்ரார்த்தித்து,
தாம் ப்ரார்த்தித்தபோதே ப்ராப்யம் ஸித்தியாமையாலே ஸூரி போக்யமான விஷயத்தை நித்ய ஸம்ஸாரியான நான் ஆசைப்படக் கடவேனோ?” என்று தம்மை “திகஸூசிம்’ என்று நிந்தித்து,
பின்பு தம்முடைய ருசியாலே, “அயோக்யதாஹேதுவான பாபத்தையும் தேவருடைய க்ருபையாலே போக்கி யருள வேணும்’ என்று தாம் பண்ணின ப்ரபத்தியை ஸ்மரிப்பித்து, “அபராத, ஸஹஸ்ரவிலே அபேஷித்து.
*அவிவேக’ என்று தொடங்கி மூன்று ஸ்லோகத்தாலே “தேவர் க்ருபைக்கும் ஆகாதாருண்டோ?” என்று சொல்லி,
மேல் இரண்டு ஸ்லோகத் தாலே ஸ்வ ஸ்வரூப யாதாத்ம்யத்தையும்,
“அவபோதி,த” விலே பரபக்தியையும் அபேக்ஷித்து,
மேல் இரண்டு ஸ்லோகத்தாலே அப் புருஷார்த்தத்தில் சரமாவதியான ததீய ஸேஷத்வத்தை ப்ரார்த்தி,த்து,
மேல் ஒரு ஸ்லோகத் தாலே *“ஸேஷத்வ விரோதிகளைப் போக்கித் தந்தருள வேணும் என்று அபேக்ஷித்து,
மேல் மூன்று ஸ்லோகத்தாலே “இப்படி இச்சிக்கிற தான் அஸூபாஸ்பதன்; இச்சைதானும் போட்கனானாலும் தேவர் க்ருபாதி,குணங்களாலே அஸூபத்தைப் போக்கி, நிருபாதிக ஸம்பந்தாத் தாலே இச்சையையும் பிறப்பிக்கை தேவர்க்கே பரம்” என்று, மேல் இரண்டு ஸ்லோகத்தாலே ‘விலக்ஷண ஸந்தானத்தில் ஜன்மமும், பாப ப்ராஸூர்யத்தாலே அகிஞ்சித்கரம்” என்று,
மேல் இரண்டு ஸ்லோகத்தாலே,நான் பண்ணின ப்ரபத்தியை நினைத்து, இப் பாபத்தை தேவருடைய க்ஷ்மைக்கு விஷயமாக்கவேணும்’ என்று ௮பேக்ஷித்து, “நான் பண்ணின ப்ரபத்தியை அநாதரிக்கிலும், ப்ரபந்ந விஷயமாகப் பண்ணின ப்ரதிஜ்ஞையை அநாதரிக்கிலும், பெரிய முதலியார் பக்கல் தேவர்க்கு உண்டான ராகத்தை விடவொண்ணாதிறே; தத் ஸம்பந்த,த்தைப் பார்த்து, என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே ரக்ஷித் தருள வேணும்’ என்று முடிக்கிறார் –
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply