1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
–
கீழ் சொன்ன பரத்வாதிகளால் வந்த தன்னுடைய உத்கர்ஷத்தையும் தம்தாமுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து -அகல்வார் அளவிலும் மேல் விழுந்து – விஷயீகரிக்கும் படி பரம காருணிகனான சர்வேஸ்வரன்-கீழ் இவருக்கு பிறப்பித்த விரக்திக்கு பலமான-ஸ்வ விஷய பக்தியை-பரம்பரயா அபி விருத்தமாக்கி –-அந்த பக்தியையும் பாகவத சமாகத்தையும் உடையரான இவர் தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -திருத்தின தம்மையும் – காண்கைக்கு வந்த நித்ய சூரிகளையும் -ஸ்வேத தீப வாசிகளுமான சித்தர்களையும் கண்டு மங்களா சாசனம் பண்ணி – திருந்தாத அசுர ராஷச பிரகிருதி களையும் – பகவத் பாகவத வைபவத்தை உபதேசித்து -திருத்தி பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படியான ஜ்ஞானம் பிறந்தார்க்கு பிராப்ய த்வரைக்கு அடியான பக்தியையும் உபதேசித்து தலைக் கட்டுகிறார் என்கிறார்-
கீழ்ச் சொன்ன பரத்வாதிகளால் வந்த அவனுடைய உத்கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையு மநுஸந்தித்து அகல்வாரளவிலும் மேல் விழுந்து விஷயீகரிக்கும்படி பரம க்ருபாவானான ஸர்வேஸ்வரன் கீழிவர்க்குப் பிறப்பித்த விரக்தி பலமான ஸ்வ விஷயமான பக்தியை பரம்பரயா அபிவிருத்தமாக்க அந்த பக்தியையும் பாகவத ஸமாகமத்தை யுமுடையரான இவர் திருத்தின தம்மையும் திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்களையும் காண்கைக்கு வந்த நித்ய ஸூரிகளையும் ஸ்வேத த்வீப வாஸிகளான ஸித்தரையும் கண்டு மங்களாஸாஸநம் பண்ணி திருந்தாத ஆஸுர ப்ரக்ருதிகளையும் பகவத் பாகவத வைபவத்தையும் உபதேஸித்துத் திருத்தி பாகவத ஸமாஜம் தர்ஸநீயமாம்படியான ஜ்ஞாநம் பிறந்தார்க்கும் ப்ராப்ய த்வரைக் கடியான பக்தியையும் உபதேஸித்துத் தலைக் கட்டுகிறார் என்கிறார்-
(1-)ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன் எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன் பொய் கூத்து வஞ்சக் களவு தவிர முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம் (2)-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர (3-)விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து (4-)தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியும் கோள் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுதினவனை (5)-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-சூர்ணிகை -223.-
1-ஆவா வென்று தானே தன் அடியார்க்கு செய்யும் தொல் அருள் என்று பரத்வாதிகளை உடையவன்
எவ்விடத்தான் என்னும் பாவியர்க்கும் இருகரையும் அழிக்கும் க்ருபா பிரவாஹம் உடையவன்
ஆவா என்று அருள் செய்து -5-1-9–என்று ஐயோ ஐயோ என்றுஎன் பக்கல் கிருபையை பண்ணி என்றும் ,
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -5-2-11-என்று தன் பக்கல் ந்யச்த பரர் ஆனவர்களுக்கு கலியுக தோஷம் ஒன்றும் வாராத படி கிருபை பண்ணும் என்றும் -,
பெருமானது தொல் அருளே-5-9-9- -என்று சர்வேஸ்வரனுடைய ஸ்வாபாவிக கிருபை என்று சொல்லும்படி – அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் -யானார் -எம்மா பாவியர்க்கும்
விதி வாய்க்கின்றது வாய்க்கும் கண்டீர் -5-1-7–என்று கையும் திரு ஆழியும் ஆன அழகை நித்ய சூரிகளுக்கு காட்ஷி கொடுத்து கொண்டு – அங்கு உள்ளாருடனே பரிமாறி இருக்கிற சர்வேஸ்வரன் எவ்வளவிலே ! நித்ய சம்சாரிகளுக்கு மிவ்வருகான நான் எவ்வளவிலே !-என்று கீழ்ச் சொன்ன
பரத்வ-காரணத்வ -வியாபகத்வ -நியந்த்ருத் வாதிகளால் வந்த உத்கர்ஷத்தையும் -தங்களுடைய நிகர்ஷத்தையும் அனுசந்தித்து-
(ஆவாவித்யாதி,)“ஆவாவென்றருள்செய்து’‘ (திருவாய்மொழி 5-1-9) என்றும், “தானே இன்னருள் செய்து” (திருவாய்மொழி 5-1-10) என்றும் “கலியுக மொன்றுமின்றிக்கே தன்னடியார்க் கருள் செய்யும்”(திருவாய்மொழி 5-2-11 என்றும் “தொல்லருள் நல் வினையால்” (திருவாய்மொழி 5-9-10) என்றும் சொல்லுகையாலே “அம்மானாழிப்பிரான் அவனெவ்விடத்தான் யானார் எம்மா பாவியற்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் (திருவாய்மொழி 5-1-7) என்று கையும் திருவாழியுமான வழகை நித்ய ஸூரிகளுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டு அங்குள்ளார் பரிமாற விருக்கிறவன் எவ்வளவிலே, நித்ய ஸம்ஸாரிகளுக்கும் இவ்வருகான நானெவ்வளவிலேன்; கீழ்ச் சொன்ன அவனுடைய பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வாதிகளாலே வந்த உத்கர்ஷத்தையும் தங்களுடைய நிகர்ஷத்தையும் அநுஸந்தித்து
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–ஐயோ ஐயோ என்று தன்னுடையநிரவதிக கிருபையை பண்ணி -கேசவன் தமர் தொடங்கி-கிருபையை விதி சப்தத்தால் சொல்லிப் போந்தவர் -இப் பாட்டில் அருள் என்று வெளியிடுகிறார் – அடியேனொடும் ஆனானே.– ஸ்வரூப அநு ரூபமாக சேஷியாய் வந்து கலந்தான் –
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-தான் இருந்த இடத்தே நான் செல்லுகை அன்றிக்கே நான் இருந்த இடத்தே தானே வந்து -அர்த்தியாது இருக்க தானே தன் பேறாக கிருபை பண்ணி –
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-தன்னடியார்க்கு கலியுகம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் -நாட்டுக்கு இட்ட நினைப்பு அன்று இறே அந்தப்புரத்துக்கு இடுவது
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9-விரோதி நிரசன த்வரையாலே மிகவும் சுழன்று வருகிற திரு வாழி யை கையிலே யுடைய சர்வேஸ்வரனுடைய -சுழல்வது போலே விளங்கா நின்றுள்ள சக்கரம் என்றுமாம் -ஸ்வாபாவிகமான அவன் பிரசாதத்தாலே –
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-ஸ்வாபாவிக கிருபையால் யுண்டான ஸூக்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ என்னுதல் -ஸ்வாபாவிக கிருபையால் அவனைக் காணப் பெற்று ப்ரீதியாலே யுகந்து கொண்டு திரு நாமத்தை சொல்லக் கூட வற்றோ என்னுதல் –நல்வினை -உகப்பு –
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7–கையும் திரு வாழியுமான சேர்த்தியை நித்ய ஸூ ரிகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிற சர்வேஸ்வரன்-அவன் எவ்விடத்தான்?--அவன் எவ்வளவில் உள்ளான் -நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூ ரிகளுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத படி அவ்வருகு ஆனவன்-யான் ஆர்?--நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகு ஆனவன் -உபய விபூதியும் இருவருக்கும் நடுவே -நீர் கண்ட படி என் என்னில்–எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்- எல்லா வகையாலும் மஹா பாபத்தை பண்ணினவர்கள் பக்கலிலும் பகவத் கிருபை -பெருகப் புக்கால் தகை இன்றியிலே பெருகும் கிடி கோள் -பகவத் கிருபை ஏறிப் பாய புக்கால் கரையிலே நின்றோம் என்ன தப்ப விரகு இல்லை—-அந்த பொய்ம்மால் போய் மெய்ம்மாலாய் நின்றேன் -அவன் செய்வது என் என்னில் –எம்பிரானும் என் மேலானே.– நான் மெய் சொன்ன அன்றோடு பொய் சொன்ன அன்றோடு வாசி அற எனக்கு உபகாரகனாய் போந்தவன் -என்னை இப்படி யாக்கின தானும் தன் பேறாக மேல் விழுந்தான் –கிருஷியும் தன்னதாயே விட்டது – மொயம்மாலாய் ஒழிந்தேன் -எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
அகலும் படி எத்தனை யேனும் மகா பாபிகள் அளவிலும் -கர்ம அனுகுண நிர்வாகத்துக்கு
உடலான -தன் நிரந்குச ஸ்வாதந்த்ரமாகிற கரையும் – தன் அனுக்ரகம் தங்கள் பக்கல் வாராதபடி அபராதங்களே பண்ணும் இவர்கள் ஒவ்பாதிக ஸ்வாதந்த்ரம் ஆகிய கரையும் -அழிய பெருகா நிற்குமதான கிருபா பிரவாகத்தை உடைய சர்வேஸ்வரன் (கையார் சக்கரம் -சாரம் ) பொய் கூத்து வஞ்சக் களவு தவிர பொய்யே கைம்மை சொல்லி – என்று என்றே சில கூத்து சொல்ல –5-1-2-
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே –5-1-3–என்று மெய் கலவாத பெரும் பொய்யை சொல்லி -பிரேம பரவசரைப் போலே பாவித்து – ஹிருதயம் பிராக்ருத விஷயம் பிரவணமாய் இருக்க -அநந்ய பிரயோஜனரைப் போலே – உன் ஒவ்தாரத்தையும் வடிவழகையும் சஹ்ருதயமாய் சொல்லுகிறார் என்று தோற்றும்படி பலகாலும் சொல்லா நின்று கொண்டு- சர்வஜ்ஞ்ஞான உன்னையும் -பகட்டும் க்ரித்யமா உக்தமான மனசை தவிர்ந்து என்று -அவற்றை இவர் தவிரும்படி –
அகலும்படியான எத்தனையேனும் மஹா பாபிகளளவிலும் ஐயோ ஐயோ வென்று அர்த்தித்வ நிரபேக்ஷமாக தன் பக்கலிலே ந்யஸ்த பரரானார்க்கு கால தோஷம் தட்டாதபடி பண்ணும் ஸ்வாபாவிக க்ருபையை உடையனாகையாலே “விதி வாய்க்கின்று வாய்க்கும்” (திருவாய்மொழி 5-1-7) என்கிறபடியே தன்னுடைய நிரங்குஸ ஸ்வாதந்த்ர்யமாகிற கரையையும் இவனுடைய ஒளபாதிக ஸ்வாதந்த்ர்யமாகிற கரையும் அழியப் பெருகும்படியான க்ருபா ப்ரவாஹத்தை யுடைய ஸர்வேஸ்வரன். (பொய்க் கூத்து வஞ்சக் களவு தவிர) “பொய்யே கைம்மை சொல்லி” (திருவாய்மொழி 5-1-1 என்றும் “என்றென்றே சில கூத்துச் சொல்ல” (திருவாய்மொழி 5-1-2) என்றும் “என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே” (திருவாய்மொழி 5-1-3) என்கிறபடியே மெய் கலவாத பெரும் பொய்களைச் சொல்லி ஸர்வஜ்ஞனாய் ஸர்வாந்தர்யாமியான உன்னையும் பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மநஸ்ஸைத் தவிர்ந்தே என்று இவர் தவிரும்படி
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-நல்ல வார்த்தை இறே நாமும் மெய்யாகப் பெற்றோம் ஆகில் –பொய் என்றும் -கைம்மை என்றும் -இரட்டிப்பால் மிகுதியாய் -பெரும் பொய் என்கை –அதாவது அகவாய் அறியாதாரைப் பகட்டுகை அன்றிக்கே-ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆனவனும்-மெய் என்று இருக்கும் படி சொல்லுகை -அகவாயில் நினைவு ஒழிய சொல்லக் கூடாது என்று இருக்கும் இறே அவன்
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2—ஒரு கால் சொல்லி அநு தப்பித்து மீண்டேனோ-சிலருடைய செயலை வேறே சிலர் அநு கரிக்கை-ப்ரேம பரவசையானவள் சொல்லக் கேட்ட வார்த்தையை அஹ்ருதயமாக நான் சொல்லுகை-
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-சர்வஞ்ஞானான நீயும் மெய் என்று பிரமிக்கும் படி –பகட்டும் க்ருத்ரியுக்தமான மனசை – அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும்படி கொண்டு முழுகும் விஷயம் இறே-உன்னை -மித்ர பாவம் அடியாக -நத்யஜேயம் -என்னும் உன்னை –ப்ராப்தனாய் நிரதிசய போக்யனான உன்னை-நிதி எடுத்தால் போலே லபித்து-அசன்னேவ என்னும் படி இருக்கிற நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
முற்றவும் தானாய் உன்னை விட்டு என்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்–என்னை முற்றவும் தானான்–5-1-10–என்று இவர்க்கு சர்வ வித போக்யமும் தானாய் –-இனி உன்னை விட்டென் கொள்வனே -5-1-3–என்று நான் உன்னை விட்ட வன்றும் விடமாட்டாத உன்னை ஒழிய துராராதமாய் -வருந்தி ஆராத்திதாகிலும் கிடைப்பது ஓன்று இல்லாத விஷயங்களைப் பற்றவோ என்று இவர் தாமே பேசும் படி பண்ணின-கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்-4-9-10- -என்கிறபடியே அவன் போக்யதையாலே அந்ய விஷயங்களை அடைய உபேஷிக்கும் படி -கீழில் பத்தில் பிறந்த விரக்திக்கு பலமான -பரமாத்மினி யோ ரக்த -பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி -என்கிற பரமாத்ம விஷயத்தில் ராகமானது
(முற்றவும் தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம்) “என்னை முற்றவும் தானானான்” (திருவாய்மொழி 5-1-10) என்று எனக்கு ஸர்வ வித போக்யமுமான “உன்னை விட்டென் கொள்வன் ” (திருவாய்மொழி 5-1-3) என்று நான் விட்டவன்றும் விட மாட்டாத உன்னை யொழிய துராராதமாய் ஆராதித்தாலும் கிடைப்ப தொன்றில்லாத விஷயத்தைப் பற்றவோ என்று இவர் தாமே பேசும்படி “கண்ட சதிர் கண்டொழிந்தேன்” (திருவாய்மொழி 4-9-10) என்கிறபடியே தன்னுடைய போக்யதையாலே ஸ்வ வ்யதிரிக்தங்களை யுபேக்ஷிக்கும்படி கீழில் பத்தில் பிறந்த விரக்திக்குப் பலமான ‘ பரமாத்மநி யோரக்த: விரக்த: அபரமாத்மநி” (பார்ஹஸ்பத்ய ஸ்ம்ருதி) என்கிறபடியே அபரமாத்ம விஷயமான விரக்திக்குப் பலமான பரமாத்ம விஷய ராகம்.
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-உள்ளொடு புறம்போடு வாசி அற கலந்தான் -என்னுதல்–சேலேய் கண்ணி யரும் பெரும் செல்வமும் -என்ற படியே சர்வவித பந்துவும் தான் ஆனான் என்னுதல் –
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3–பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக -அவசர பிரதீஷனனாய் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே-சத்ருசமான பரமபதத்தை விட்டு –விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷணத்திலே அவசர பிரதீஷனான பின்பு நான் விட்ட வன்றும் என்னை விட மாட்டாத உன்னை ஒழிய
பச்சை கொண்டு பல வேளையிலே நிஷ் பிரயோஜனமாக விஷயங்களை பற்றவோ -ஆராதிக்கும் இடத்தில் துராரதரைப் பற்றவோ –
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-பார்த்து வைத்த வாய்ப்பு -உங்கள் இவருடைய அனுபவமும் நித்தியமாய் செல்லும்படி நீ பார்த்து வைத்த வாய்ப்பைக் கண்டு -அதாவது அவ் விபூதியில் உள்ளார் சந்த அனுவர்த்திகளாம் படி பண்ணி வைத்த சதிர் -அத்தைக் கண்டு
; அடைந்தேன் உன் திருவடியே.–-உன் திருவடிகளை அடையவும் பெற்றேன்
2-பேர் அமர் பின்னின்று கழிய மிக்கு யானே என்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர பேர் அமர் காதல் 5-3-4–என்று அபரி சேதமாய் பொருந்தி – பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதிடும் -5-4-6–என்று பிடரி பிடித்து நின்று நெஞ்சை முடிக்கும்படியாய் – கழிய மிக்கதோர் காதல் -5-5-10–என்று பார்ஸ்வச்தர்க்கு பேசும்படி மிகவும் கை கழிந்து –
(பேரமர் இத்யாதி, ஊடு புக்கு வளர) “பேரமர் காதல்” (திருவாய்மொழி 5-3-4) “பின்னின்ற காதல்” (திருவாய்மொழி 5-4-6) என்று அபரிச்சேத்யமாய்ப் பொருந்திப் பிடரி பிடித்துக் கொண்டு நின்று நெஞ்சை முடிப்பதாய்க் “கழிய மிக்கதோர் காதலளிவள்” (திருவாய்மொழி 5-5-10) என்று பார்ஸ்வஸ்த்தரும் பேசும்படி மிகவும் கை கழிந்து–
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4–ஊரார் பழியும் -தாயார் ஹித வசனமும் -கேளாத படியான காதல் -அமர்ந்த காதல் -தர்ம அனுபந்தியான காதல் -பெரிதான அமரை விளைத்த காதல் -ஊராரை பூசல் ஆக்கின காதல் என்னவுமாம் –ஈரம் -சங்கம் -காதல் -காமம் –சங்காத் சஞ்சாயதே காம –
கடல் புரைய விளைவித்த-–அப்ரமேயோ மஹா த-என்ற கடல் ஒப்பாம் அத்தனை -கிடையா விடினும் விட மாட்டாத காதல் என்கை-கடல் புரைய என்றார் முதல் -அநந்தரம் கடலின் மிகப் பெரிதால் என்றார் –பின்னை மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றார் -முடிவில் அதனில் பெரிய என் அவா -என்றார் -இது இறே காதல் பெருகின படி -இது இறே பொய் நின்ற ஞானத்திற்கு பின்பு இவ்வளவும் வர விளைத்துக் கொண்ட கார்யம் –
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?–5-4-6—புக்க இடம் புக்கு -பின்னாட்டிக் கொண்டு திரிகிற பிரேம வியாதியானது -இதுக்கு இடைந்தால் வேறு நிழல் இல்லையாய் இரா நின்றது –
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் –சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –-தாயார் நம்பியை நினைக்கவும் விட்டுக் கொடாள்-ஒரு விஷயத்தில் பிரவணையாக காண வல்லனே என்று இருந்தவள் -நெஞ்சையும் காவலிடா நின்றாள் -கிருஷி பண்ணினவள் தானே நிஷேதிக்கிறது -தர்மி லோபம் வரும் அளவாகையாலே
கடல் ஞாலம் செய்தேனும் யானே -5-6-1–என்று தொடங்கி –-வாய்ந்த வழுதி வள நாடன் -என்று அவனுடைய ஜகத் காரண த்வாத் அத்புத கர்மங்களை நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே விஷயத்தை கிட்டி பேசும் படியாய் – உன்னை விட்டு ஒன்றும் மாற்ற கிற்கின்றிலேன் -என்று அவனை ஒழிய ஒரு ஷணமும் தரித்து இருக்க மாட்டாது படியாய் –-ஆரா அமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே நீராய் -என்று விஷய போக்யத அதிசயத்தால் வந்த பிராவன்யத்தாலே ஞான ஆச்ரயமான ஆத்மா ஆதல் – ஞான பிரசரண த்வாரமான மனசாதல் அன்றிக்கே -ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரமும் சிதிலலாம் படியாய் –-வைகலும் வினையேன் மெலிய -என்று அந்த சைலிந்த்யம் தான் காதாசித்கம் அன்றிக்கே -சர்வகாலமும் மெலியும் படியாக –-நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண் கின்ற -என்று பகவத் குணங்கள் மர்மத்தில் புகுந்து ஆத்மாவை இடைவிடாமல் த்ரவ்ய த்ரவ்யமாக்கும் படி அவிவிருத்தமாக-
(யானே யென்ன வாய்ந்து) “கடல் ஞாலம் செய்தேனும் யானே” (திருவாய்மொழி 5-6-1 என்றும் “வாய்ந்த வழுதி வளநாடன்” (திருவாய்மொழி 5-6-1) என்றும் “துஷ்ட காளிய” இத்யாதி. இப்படி இவனுடைய ஜகத் காரணத்வாதி, அத்புத கர்மங்களை நானே செய்தேன் என்று அநுகார முகத்தாலே அவனை பாவித்துப் பேசும்படி திட்டி (ஆற்றகில்லாது) “உன்னை விட்டொன்றும் ஆற்றகிற்கின்றிலேன்” (திருவாய்மொழி 5-7-1) என்று அவனை யொழிய ஒரு ப்ரகாரத்தாலும் ஆற்ற மாட்டாத படியாய், (நீராய்) “ஆராவமுதே அடியேனுடலம் நீராய்” (திருவாய்மொழி 5-8-1) என்று போக்யதாதிஸயத்தாலே வந்த ப்ராவண்யத்தாலே அநுபவோபகரணமான ஸரீரம் ஸிதிலமாம்படியாய், (மெலிய) “வைகலும் வினையேன் மெலிய-(திருவாய்மொழி 5-9-1 அது தான் ஒருநாளன்றிக்கே ஸர்வ காலமும் மெலியும்படியாய், (ஊடு புக்கு வளர) “நிறந்தனூடுபுக்கெனதாவியை உருக்கி (திருவாய்மொழி 5-10-1) என்று மர்மத்திலே புக்கு ஆத்மாவை த்ரவ த்ரவ்யமாக்கி முடிக்கும்படி அபிவிருத்தமாய் –
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்? கடல்ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1–கடலோடே கூடின ஜகத்தை சஹாயாந்தர நிரபேஷமாக ஸ்ருஷ்டித்தேன் என்னும் –அஹம் க்ருத்நஸ்ய ஜகத் பிரபவ -என்னா நின்றாள் –யானே என்கிற அவதாரணத்தாலே -த்ரிவித காரணமும் ஆகை –ததா தர்சித பந்த்தா நவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார கௌ -என்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளும் கரண கோடியிலேயாம் –
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-வாய்க்கை யாவது கிட்டுகை -அதாவது பாவனா ப்ரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்கை-மயர்வற மதிநலம் அருள பெறுகையாலே -அநுகாரம் அவர்களை போலே அவதாரத்து அளவிலேயாய் ப்ராதேசிகம் இன்றிக்கே-
ச விபூதிகனானவனை யநுகரிக்கையாய் விபூதி அத்தியாயத்தில் சொன்ன படியே ப்ராசுர்யேண அநுகரிக்கிறாள்-பிரகாரியான அவ்வளவும் செல்ல தன்னை யநுசந்தித்த பாவனா பிரகரக்ஷத்தாலே
–அஹம் மனுரபம் ஸூ ர்யச்ச-தத்பாவ மா பன்ன–மத் தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்கிறபடியே அவன் பாசுரமேயாய் இருக்கத் தட்டில்லை –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன்-என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ -இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு –ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-கிடைத்தது இல்லை என்று ஆறி இருக்கலாம் படியோ உன் வடிவு அழகு -இத்திரு வாய் மொழியில் இவருடைய விடாய்க்கு எல்லாம் நிதானம் இது -அனுபவியா நின்றாலும் பர்யாப்தி பிறவாத படி நிரதிசய போக்யமான விஷயத்தை இழந்து இருக்கவோ -நாள் செல்ல நாள் செல்ல விடாயைப் பிறப்பிக்கும் விஷயம் என்கை –அப்பொழுதைக்கு அப் பொழுது என் ஆரா வமுதமே -தானே தன்னை அனுபவிக்கப் பார்த்தாலும் துணை கொண்டு இழிய வேண்டி இறே இருப்பது –ஸஹ பத்நயா விசாலாஷ்யா-சர்வாதிகாரமாய் சதா ஸேவ்யமாய் பந்த நிவர்த்தகமாய் இறே இவ்வம்ருதம் இருப்பது -லோக சாரங்க மஹா முனிகளை இத்தேசத்திலே அழைப்பித்த சொல் இறே-அடியேன் என்கிறது யஸ்யாஸ்மி என்ற வசனத்தால் அன்று -போக்யதைக்கு தோற்று சொல்லுகிறார்–அடியேன் உடலம் -ஞான குணகமான ஆத்மவஸ்து அழியும் அளவன்றிக்கே அசேதனமான சரீரத்து அளவும் செல்லக் கரைகை –ஆத்மவஸ்து உத்தேசியத்தில் ஈடுபட்டு அழியாமைக்கு கட்டின கரை யாயிற்று சரீரம் அதுவும் அழிந்தது என்கை
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1—தன்னை விஸ்லேஷிக்கும் படி மஹா பாபத்தை பண்ணின நான் நாள் தோறும் வியஸன பரம்பரையாலே அவசன்னையாய்-ஒரு நாள் மெலிய பொறுக்க மாட்டாத ம்ருது ப்ரக்ருதியானவள் கிடீர் நெடு நாள் நோவு படுகிறாள் –இமா மஸீதா கே சாந்தம் சதபத்ர நிபேஷனாம்-ஸூ கார்ஹாம் -தூக்கிதாம் -த்ருஷ்ட்வா மமாபி வ்யதி தம்மன -என்று ஒரு ராத்திரியில் வியஸனம் திருவடி பொறுக்க மாட்டிற்று இலன் இறே-வி லக்ஷண விஷயத்தை பிரிந்தால்-ஜீவிக்கவும் ஒண்ணாது முடியவும் ஒண்ணாது
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1—தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு –துர்யோதனாதிகள் நசித்துப் போனார்கள் -பாண்டவர்கள் ராஜ்ஜியம் பெற்றுப் போனார்கள் -இவரை அந்த குண சேஷ்டிதங்கள் மர்மத்திலே நலியா நின்றது – விரஹத்தாலே அவசன்னமான என் ஆத்மாவை –எல்லாரும் மஹா பாரதத்தில் கேட்டு தயாரிக்கிறது இறே-இடை விடாதே நின்று நின்று
உருக்கி உண்கின்ற-சிதிலமாகி முடிகின்ற –முடியவும் மாட்டாதே ஜீவிக்கவும் ஒட்டாதே நலிந்த படி
3-விஷ வருஷ பலங்கள் கை கூடினவர்-இப்படி பகவத் ப்ரேமம் வளருகையாலும் -பாகவதர்களோடு கூடப் பெருகையாலும் –-சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே ஹ்யம்ருதோ பமே ,கதாசித் கேசவ பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம –என்று – சம்சாரமாகிற விஷ விருஷத்திலே -அம்ருதோபமா பலங்களாக சொல்லப் பட்ட பகவத் பக்தியும் – பாகவத சமாகமும் ஆகிய பல த்வயமும் கை வந்த இவர்-
அடிமை புக்காரையும் ஆட் செய்வாரையும் காண லோக த்வீ பாந்தரங்களிலும் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு – ஒன்றும் தேவிலே – மற்றை தெய்வம் நாடுதீர் –பாடி யாடி பரவிச் சென்மின்கள் –தெய்வம் மற்று இல்லை –நாயகன் அவனே –ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே –
அறிந்தோடுமின் –ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே –மற்றைத் தெய்வம் விளம்புதீர் –உளம் கொள் ஞானத்து வைம்மின் – ஆட் செய்வதே -உறுவதாவது -என்று –
(விஷ வ்ருக்ஷ பலங்கள் கை கூடினவர்) “ஸம்ஸார விஷ வ்ருக்ஸ்ய த்வே பலே ஹ்யம்ருதோபமே கதாசித் கேஸவே பக்திஸ் தத் பக்தைர்வா ஸமாகம:’ என்கிறபடியே ஸம்ஸார விஷ வ்ருக்ஷ பலம் இப்படிப்பட்ட பகவத் பக்தியும் பாகவத ஸமாகமமான இவை இரண்டும் கை புகுந்த விவர். (அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையுங் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு) ஒன்றுந் தேவிலே ‘ பாடியாடிப் பரவிச் செல்மின்கள்” (திருவாய்மொழி 410-9) “தெய்வம் மற்றில்லை” (திருவாய்மொழி 4-10-3) “நாயகனவனே” (திருவாய்மொழி 4-10-4) “ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே” (திருவாய்மொழி 4-10-5) ” அறிந்தோடுமினோ” (திருவாய்மொழி 4-10-6) “ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக் கடிமை புகுவதுவே” (திருவாய்மொழி 4-10-7) “உளங்கொள் ஞானத்து வைம்மின்” (திருவாய்மொழி 4-10-9)”ஆட்செய்வதே உறுவதாவது” (திருவாய்மொழி 4-10-10) என்று–
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்
குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-லோகம் அடங்க கும்பிடுவாரும் கும்பீடு கொள்வாருமாய் ஆழி மூழையாய் செல்லா நிற்க -இவர் ஒருத்தரையும் காண் கிறிலர் யாயிற்று
அப்ரஹ்மாத்மகமாய் இருபத்தொரு வஸ்து இல்லாமையால்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2—நின்ற ஆதிப்பிரான் என்றது மிகையாய் இருக்கை-விஷ்ணோ ராயத நேவ சேத்-தேசோயம் சர்வ காம துக் –ப்ரீதி பிரேரித்தராய்ப் பாடி -அவ்வளவில் பர்யாப்தி பிறவாமையாலே அக்ரமாகப் புகழ்ந்து -இதுவே யாத்திரையாக வர்த்தியுங்கோள்-இத்தேசம் என்றால் எல்லார்க்கும் தன் திரு உள்ளம் போலே என்று இருக்கிறார்
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3—ஸ்வதந்திரமாய் இருபத்தொரு தெய்வம் இல்லை -தேவதைகளுடைய ஸ்வரூப நிஷேதம் பண்ணுகிறார் அல்லர் -ஈஸ்வர விபூதி யாகையாலே ஸ்வாதந்தர்ய நிஷேதம் பண்ணுகிறார்-அவனுக்கு பிரகாரம் என்று ஆச்ரயிக்கில் அவனுடைய ஆசிரயணீயத்திலே புகும்-ஸ்வதந்த்ர புத்தி பண்ணில் ஸ்வதந்திரமாய் இருப்பது ஓன்று இல்லை –தேஹ நா நாஸ்தி -யேய ஜந்தி
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-அவன் என்று ஸ்ருதி பிரசித்தி -அநந்ய பரமான நாராயண அனுவாக ப்ரஸித்தியையும் –யா பரஸ்ஸ மஹேஸ்வர -என்கிற அகாரார்த்த பிரசித்தியையும் நினைக்கிறார் –-ஜகத்தாகிற காரியத்துக்கு அநுரூபமான கர்த்ருத்வத்தை கற்பிக்கிலும் இவனே நிர்வாஹகானாக வேணும் என்னவுமாம்
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5-இத்தேவதைகள் பக்கல் உதகர்ஷம் எல்லாம் பொய்யாய் இருக்குமா போலே -இவ்விஷயத்தில் சொல்லுகிற உதகர்ஷத்துக்கு ஒன்றும் பொய்யில்லை-போற்றுமினே -சடக்கென ஆஸ்ரயிங்கோள் -நீங்கள் அபேக்ஷியாது இருக்க நான் சொல்லுகிறது உங்கள் துர்தசையைப் பற்ற –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள்-மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-சேஷத்வ அனுசந்தானத்தால் வந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே ஆடா நின்ற பெரிய திருவடியை ரக்ஷகத்வ க்யாபன த்வஜமாக யுடையவன் – ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு கொடி கட்டி ரக்ஷிக்குமவன் என்கை -கருட வாஹனத்வம் பரத்வ லக்ஷணம் இறே –
காரணந்து த்யேய என்கிறபடியே ஜகத் காரண வஸ்து இ றே உபாஸ்யம் ஆவது-அவனுக்கு அடிமை புகப் பாருங்கோள் -செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பாடியாடிப் பணிந்து என்கிறது எல்லாம் வேண்டா
சர்வ ரக்ஷகனாய் -சர்வ ஜனகனாய் சர்வாந்தராமியான அவன் உடைமையை அவனுக்காக இசையை அமையும் – பல்படிகால் வழி ஏறி கண்டீர் அடிமை புகுவதுவே -என்று விதிக்கிறார் –
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8—சர்வாதிகனாய் -ஜகத் காரண பூதனானவன் திரு நகரியிலே ஸூ லபனாய் நிற்க-மிக்க– ஆஸ்ரயண காலத்தில் ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு பல வேளையில் வேறு ஒருவன் வாசலிலே கொடு போக வேண்டும் படி குறைவாளன் இன்றிக்கே இருக்கை –-மற்றைத் தெய்வம் -நாரங்களிலே ஒன்றை ஈஸ்வரன் என்று பற்றவோ -பிரகாரமாய் கொண்டு அல்லது வஸ்துத்வம் இல்லாதவற்றை பிரகாரியாக பிரமிக்கிறி கோள் இறே
விளம்புதிரே!–இவனை ஒழிய வ்யவஹார யோக்யமாய் இருப்பது ஓன்று இல்லை என்று இருக்கிறீர் –
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9—உளம் கொள் ஞானம் -மானஸ ஞானம் -ஞானம் உதித்து பாஹ்ய இந்த்ரியங்களாலே பாஹ்ய விஷயங்களை க்ரஹிப்பதற்கு முன்பே மானஸ ஞானத்துக்கு இவ் ஊரை விஷயம் ஆக்குங்கோள்
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-குறிய-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி – உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி-குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு – அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவது ஆள் செய்வதே உறுவது ஆவது
தேவதாந்தராவரத்வ பூர்வகமாக பகவத் பரத்வத்தையும் – பகவத் ஆஸ்ரயண பிரகாரத்தையும்
பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்னும் அத்தையும் தெளிய உபதேசிக்கக் கேட்டு திருந்தி அடிமை புக்க ஸ்ரீ வைஷ்ணவர்களையும் – ஆள் செய்து ஆழிப் பிரானை சேர்ந்தவன் -என்று இப்படி திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும் -காண்கைக்கு – வைகுந்தன் பூதங்களேயாய் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடை பூதங்களேயாய் – தேவர்கள் தாமும் புகுந்து -என்னும்படி –
லோகாந்தரமான ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளாரையும் – த்வீயாந்தரமான ச்வேதத் தீபத்தில் உள்ளாரையும் – நேமிப் பிரான் தமர் போந்தார் -என்கிறபடியே வந்த நித்ய சூரிகளும் –
முக்த பிராயருமான தேவர்களுடைய திரள்களை –
இப்படி உபதேஸிக்கக் கேட்டுத் திருந்தி அடிமை புக்க ஸ்ரீவைஷ்ணவர்களையும் “ஆட்செய்தாழிப் பிரானைச் சேர்ந்தவன்” (திருவாய்மொழி 4-10-11 என்று இப்படித் திருத்துகையாலே அடிமை செய்தாரான தம்மையும் காண்கைக்கு வந்த “வைகுந்தன் பூதங்களேயாய்” (திருவாய்மொழி 5-2-5) “தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்” (திருவாய்மொழி 5-2-4) “தேவர்கள் தாமும் புகுந்து குழுமித் தேவர் குழாங்கள்” (திருவாய்மொழி 5-2-3 என்று லோகாந்தரமான ஸ்ரீவைகுண்ட,த்திலே நின்றும் போந்தவர்களுமாய் த்வீபாந்தரமான க்ஷீராப்தியில் நின்றும் போந்தவர்களுமான நித்ய ஸூரிகளான திரள்களை–
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-முறையால் சர்வேஸ்வரனைப் பற்றினவர் -அடிமை செய்வித்துத் கொள்கைக்கு யாயிற்று -கையும் திரு வாழி யும் சேர்ந்த சேர்த்தி அழகு -ஆழ்வானுடைய வ்ருத்தத்தைக் காட்டி இவரையும் வ்ருத்தவான் ஆக்கின படி-சேர்ந்தவன்-கையும் திரு வாழியும் பொருந்தினால் போலே யாயிற்று இவர் பொருந்தின படி -கெடு மரக்கலம் கரை சேர்த்ந்தால் போலே-இந்த நன்மைக்கு அடி -திரு நகரியில் பிறப்பு -ராம பக்திக்கு திரு அயோத்தியில் மண் பாடு போலே
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5—மாக வைகுந்தம் காண்பதற்கு -என்றும் கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -என்று ஆசைப்படும் ஸ்ரீ வைஷ்ணவர்களாய்
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினை மஹா குணத்துக்கே அற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களே யாய் –பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று இருக்குமவர்கள் –
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3–தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூ ரிகளும் புகுந்தார்கள்-வா ஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்னக் கடவது இறே
கண்டோம் கண்டோம் -என்று கண்ணுக்கு இனியதாய் இருக்கையாலே -கண்டோம் -என்று பல காலும் சொல்லும் படி கண்டு – பொலிக பொலிக -என்று அத் திரள் அபி விருத்தம் ஆயிடுக என்று மங்களா சாசனம் பண்ணி – பிரகலாதர் விபீஷணர் சொல் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரை தடவி பிடித்து
த்வயி அஸ்தி மயி அஸ்தி ச –என்று பிரகலாதன் உபதேசிக்க கேட்டும் திருந்தாத அசுரனான ஹிரண்யனும் –-ப்ரதீயதாம் தாசரதாய மைதலீ –யுத்த -14-34- -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் உபதேசிக்க கேட்டும் திருந்தாத ராஷசனான ராவணனை போலேயும் – கீழ் தாம் உபதேசத்தில் திருந்தாமல் கிடந்த ராஷச பிரக்ருதிகளும் ஆசூர பிரக்ருதிக்களுமாய் உள்ளோரை – அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்-என்று தேடிப் பிடித்து-(விஷ்ணு பரராக்கி -என்றதனுடன் முடிக்க )
கண்டோம் கண்டோம் கண்டோம்” (திருவாய்மொழி 5-2-2) என்று கண்ணுக்கினியதா யிருக்கையாலே கண்டோம் என்று பல காலும் சொல்லும்படி கண்டு பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5-2-1 என்று அத் திரள் அபிவிருத்த மாயிடுக என்று மங்களாஸாஸநம் பண்ணின விவர்-(ப்ரஹ்லாத விபீஷணர் சொல் கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து) “அரக்கரசுரர் பிறந்தீர் உள்ளீரேல்” (திருவாய்மொழி 5-2-5) என்று “த்வய்யஸ்தி மய்யஸ்தி” என்று ப்ரஹ்லாதாழ்வான் உபதேஸிக்கக் கேட்டுத் திருந்தாத ஆஸூர ப்ரக்ருதியான ஹிரண்யன் போல்வாரையும், “ப்ரதீயதாம் தாஸரதாய மைதிலீ ” (ராயு. 14-34) என்று ஸ்ரீவிபீஷணப் பெருமாளுடைய உபதேஸம் கேட்டுத் திருந்தாத ராக்ஷஸ ப்ரக்ருதியான ராவணன் போல்வாரையும் தேடிப் பிடித்து.
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—காணப் பெற்றோம் -ப்ரீதி ப்ரகாஷத்தாலே ஆவர்த்திக்கிறார்-கண்ணுக்கு இனியன கண்டோம்–-கண்ணிலும் உருப்பொலார்-கொடு உலகம் காட்டேல்-என்கிற சம்சாரத்திலே பாகவதர்களைக் கண்டு அனுபவிக்கப் பெற்றோம் –-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -புல கீக்ருத காத்ரவான் சதாபர குணா விஷ்டோ த்ரஷ்டவ்யஸ் சர்வ தேஹிபி
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் –சாந்தி சாந்தி சாந்தி –என்று முக்கால் சொல்லுகையாலே
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-அஸூர ராக்ஷஸரான நீங்கள் மனுஷ்ய வேஷத்தை கொண்டு பிறந்து கலந்து திரிகிறீர் உள்ளீர் ஆகில் -சுக சாரணர்களை போலே கடல் கரையில் ஒற்றுப் பார்க்க வந்தவர் குரங்கு வடிவைக் கொண்டு –
4-தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்ட வர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் -என்றும்-திரியும் கலி யுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து -என்கிறபடியே –
சரீரத்தை முடித்து -பிராண அபஹாரம் பண்ணக் கடவதான வியாதி — அப்படி செய்யும் பகை -பசி -முதலான தேச தோஷமும் – பவிஷ்யத் யதாரோத்தரம்-என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறு படியாயான கலி பிரயுக்தமான கால தோஷமும் – தங்கள் சஞ்சாரத்தாலே போம் படி –-இரியப் புகுந்து இசை பாடி எங்குமிடம் கொண்டன -என்கிறபடியே – பகவத் அனுபவ ஹர்ஷ பிரகர்ஷத்தாலே பெரிய ஆராவரத்தோடே -புகுந்து பிரதி கூலருக்கு இடம் இல்லாதபடி -சர்வ பிரதேசத்திலும் பரம்பினவர்களை –
மேவித் தொழுது உய்மினீர்கள் -என்று நீங்கள் அநந்ய பிரயோஜனராய் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் – அவ்வளவு போக மாட்டாதே தேவதாந்திர பிராவண்யத்தாலே பகவத் வைபவம் அறிக்கைக்கு ஈடான அளவிலி களாகில் நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை
நிறுத்தி உம் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்-என்று அவை தமக்கு ஸ்வத உத்கர்ஷம் இல்லாமையாலே -வசன ஆபாசங்களாலும் – யுக்தி ஆபசங்களாலும் -நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி -புறம் பேசில் -அவர் அறியில் அபஹசிப்பார்கள் என்று -உங்கள் நெஞ்சுக்குள்ளே நீங்கள் அறிந்ததாக உபாசிக்கும் -தேவதைகளை--நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -என்று
ராஜா வானவன் ஊர் தோறும் கூறு செய்வார்களை நிறுத்துமா போலே – உங்களுக்கு ஆஸ்ரயனீராக நிறுத்திய சர்வேஸ்வரனை
(தேஸ கால தோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்) “கொன்றுயிருண்ணும் விசாதி பகை பசி தீயன வெல்லாம் நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் (திருவாய்மொழி 5-2-6) என்றும் “திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து” (திருவாய்மொழி 5-2-3) என்றும் சொல்லுகிறபடியே ஸரீரத்தை முடித்து ப்ராணாபஹாரம் பண்ணக் கடவதான வ்யாதி பகை பசி முதலான தேஹ தோஷமும் “பவிஷ்யத்யத ரோத்தரம்” என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள் வேறுபட்டு வரக் கடவதான கலி ப்ரயுக்தமான கால தோஷமும் தங்கள் ஸஞ்சாரத்தாலே போம்படி “திரியப் புகுந்திசை பாடி எங்குமிடங் கொண்டனவே” (திருவாய்மொழி 5-2-3) என்கிறபடியே பகவதநுபவ ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே பெரிய ஆராவாரத்தை யுடைத்தாம்படி விபரீதர்க்கு இடமில்லாதபடி விஸ்ம்ருதராய்க் கொண்டு “மறுத் திருமார்வனவன்தன் பூதங்கள் கீதங்கள்பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே’ (திருவாய்மொழி 5-2-8) என்று ஸ்ரீய:பதியாய் ஸ்ரீவத்ஸ வக்ஷஸ்தனான ஸர்வேஸ்வரனுடைய குணங்களைத் தங்களுக்கு ஸத்தா தாரகமாக உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த விபூதி ஸ்வபாவத்தாலே வந்த வெறுப்பற்று எங்கும் விஸ்த்ருதரானார்கள். அவர்களை அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு கட்டி நீங்கள் உஜ்ஜீவியுங்கோள்; அவ்வளவு போகமாட்டாதே தேவதாந்தர ப்ராவண்யத்தாலே பகவத் வைபவமறிகைக்கீடான அளவிலிகளாகில் (நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவன்) “நிறுத்தி நும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள்” (திருவாய்மொழி 5-2-7) என்றும் அஸதஸ்ய மாகையாலே பிறரறியாதபடி ராஜஸ தாமஸ யுக்தமான உங்கள் நெஞ்சாலே அவற்றுக்கு ஸ்வத:உத்கர்ஷ மில்லாமையாலே நீங்கள் சேமம் சாத்தி நிறுத்தி த்யாநம் பண்ணுகிற தேவதைகளை “நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே” (திருவாய்மொழி 5-2-8) என்று ராஜாவானவன் ஊர் தோறும் விடைச் சேவகரை நிறுத்துமா போலே உங்களுக் காஸ்ரயணீயராக நிறுத்தினான் அந்த ஸர்வேஸ்வரன் தானே;
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-கையும் திரு வாழி யுமான அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –-கடிவான் போந்தார் ஆனவர்கள் –அதுக்காக லோகத்தில் பூமியிலே பரந்தார்கள்–யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி–சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்று பணிக்கும் திருமாலை ஆண்டான் –
அவர்களோடே சென்று சர்வேஸ்வரனைத் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்று அருளிச் செய்வார் எம்பெருமானார் –
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3—பவிஷ்யத் யத்ரோத்தரம் என்கிறபடியே -பதார்த்தங்களினுடைய ஸ்வ பாவம் மாராடி இருக்கும் கலி ஸ்வ பாவம் போய் -ஷூ த்ர தேவதைகள் பரராகவும் பர தேவதை அபரனாகவும் கடவதாய் இறே இக்காலம் இருப்பது –-தேவர்கள் தாமும் புகுந்து-
தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூரிகளும் புகுந்தார்கள்-வாஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்ன கடவது இறே-மண் மேல்-இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–-பரம பதத்தில் போலே பூமி எல்லாம் ஆரவாரப் படும்படி புகுந்து பகவத் அனுபவ ஜெனித ப்ரீதியாலே பாடி -எங்கும் தங்களுக்கு ஸ்தானமாகக் கொண்டார்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு இடம் இல்லாத படி சிஷ்யர்களும் ப்ரசிஷ்யர்களுமாய் வ்யாபித்தார்கள் –பிராகாரம் வாநரீக்ருதம்-என்கிறபடியே பிரதி கூலர்க்கு இடம் இல்லை யாயிற்று –
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை –அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் -தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் – அத் தெய்வ நாயகன் தானே--ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான் –-மறுத் திரு மார்வன் –மறுவையும் திருவையும் மார்விலே உடையவன் என்னுதல்-ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பிலே உடையவன் என்னுதல்-அவன் தன் பூதங்கள்- அசாதாரணமான விக்ரஹத்தின் அழகிலே தோற்று தங்கள் உளராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –கீதங்கள் பாடி-வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–பகவத் அனுபவ ஹர்ஷ த்தாலே பாடி -சம்சாரத்திலே இருந்தோம் என்ற வெறுப்பு இன்றிக்கே-பூமியிலே திரண்டார்கள் –-நீங்கள் அவர்களோடே கூட அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்னுதல் -அவரை தொழுது உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்-
5-மேவிப் பரம்பும் அவரோடு ஒக்க தொழில் யுக தோஷம் இல்லையாம் என்று நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக தொக்க அமரர் குழாங்கள் –கண்ணன் திரு மூர்த்தியை மேவி — மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஒக்க தொழுகிற்று ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லை-என்று
ருத்ரனோடு பிரம இந்திரன் முதலாக திரண்ட தேவதா சமூகங்கள் கிருஷ்ணனுடைய அசாதாரண விக்ரகத்தை ஸூபாஸ்ரயமாகப் பற்றி விஸ்த்ருதமான லோகங்கள் எங்கும் ஒக்கப் பரந்து விபூதி விஸ்தாரத்தை உடையவர் ஆனார்கள் .-அவர்களைப் போலே நீங்களும் அவனை ஆஸ்ரயிக்கப் பெறில் -விபரீத பிரவர்தகமான-கலி யுக தோஷம் உங்களுக்குத் தட்டாது என்று உபதேசித்து
விஷ்ணு பக்தி பரராக்கி-விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே – அரக்கர் அசுரர் -என்னும் அது போய்-தேவ சப்த வாச்யராம் படி பகவத் பக்தி பரராக திருத்தி கண்ணுக்கு இனியன காட்டலாம் படியானார் கண்ணிலே நோக்கிக் காணும்-பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் ஐஞ்சாம் பத்தில்-அதாவது – திருந்தாதவரை திருத்தின அளவு அன்றிக்கே -முன்பே திருந்தி – கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும்படி- பாகவத சமாஜ தர்சனம் இனிதாம் படி -அவ்விஷயத்தில் சாபலம் உடையராய் – உபாய அத்யாவச தசையிலே -நின்று -பிராப்ய தசையில் நிற்கிற தம்மை பொடியும் படி யானவர்களுடைய –உபாயத்வ அத்யாவச்ய அஞ்ஞானாதின் மேலே –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே -என்றும் ,-மனசி விலச தாஷ்ணா பக்தி சித்தாஞ்சநேன -ஸ்ரீ குணரத்னகோசம் –12-– என்கிறபடியே சித்தாஞ்சனம் போலே கூடார்த்ததை பிரகாசிப்பதாய்- பிராப்ய வைலஷண்யத்தை விஷயீகரித்ததான பக்தியை உபதேச முகேன
உண்டாக்குகிறார் அஞ்சாம் பத்தில் என்கை-
அவனை (மேவிப் பரம்புமவரோ டொக்கத் தொழில் யுக தோஷமில்லையா மென்று) “நக்கபிரானோ டயனு மிந்திரனும் முதலாகத் தொக்க வமரர் குழாங்கள் கண்ணன் திரு மூர்த்தியை மேவி மிக்க உலகுகள் தோறும் எங்கும் பரந்தன ஓக்கத் தொழுக ஒற்றிராகில் கலியுக மொன்றுமில்லை” (திருவாய்மொழி 5-2-10) என்று ப்ரஹ்மேந்த்ர ருத்ராதிகளான தேவதா ஸமூஹங்கள் ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனுடைய ஸூபாஸ்ரயமான விக்ரஹத்தை யாஸ்ரயித்துத் தங்கள் லோகங்களிலே விஸ்த்ருதரானார்கள்; அவர்களைப் போலே நீங்களும் அவனை யாஸ்ரயிக்கப் பெறில் விபரீத ப்ரவர்த்தகமான யுக தோஷம் உங்களுக்குத் தட்டாதென்று (விஷ்ணு பக்தி பரராக்கி) என்றிப்படி உபதேஸித்து “விஷ்ணு பத்தி பரோ தேவ: விபரீதஸ் ததா ஸர; என்று பகவத் ப க்தி யுக்தராம்படி திருத்தி, (கண்ணுக்கினியன காட்டலாம்படி யானார் கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி ஸித்தாஞ்ஜனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்) “கண்ணுக்கினியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர்” (திருவாய்மொழி 5-2-2) என்று பாகவத ஸமாஜ தர்ஸனம் இனிதாம்படி அவ் விஷயத்தில் சாபலமுடையார்க்கு “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே” (திருவாய்மொழி 5-5-2) என்று உபாய தஸையிலே நின்று ப்ராப்ய தஸையிலே நிற்கிற தம்மைப் பொடியும்படியான அவர்களுடைய உபாயாத்யவஸாய ஜ்ஞாநத்தின் மேலே “மநஸி விலஸ தாக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந” ஸ்ரீகுண ரத்ந கோசம் 12) என்கிறபடியே ப்ராப்ய வைலக்ஷண்யத்தை விஷயீகரித்த பக்தியை உபதேஸிக்கிறார் என்கிறார் அஞ்சாம் பத்தில்
மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-பிரான் என்று ஸ்வ கோஷ்ட்டீ பிரசித்தி தொக்க -திரண்ட – சம்ருத்தமான லோகங்கள் -மிக்க யுலகுகள் -ப்ரஹ்மா தொடக்கமாக திரண்ட தேவதா சமூகங்கள் சம்ருத்தமான லோகங்கள் தோறும் தங்களுடைய ஐஸ்வர்யத்தாலே விஸ்திருதர் ஆனார்கள் –தொண்டீர்!-ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.-தேவதாந்த்ர சேஷ பூதரான நீங்கள் நீங்களும் அவர்களை போலே ஆஸ்ரயிப்புதி கோள் ஆகில் கலியுக ப்ரயுக்தமான சகல தோஷங்களும் நீங்கும் – தொக்க அமரர் குழாங்கள்–மிக்க வுலகுகள் தோறும் -எங்கும் பரந்தன-
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள் –
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-நாங்களும் நம்பியை அனுபவித்தே ஸ்த்ரீத்வம் கெடாமல் இருக்கிறி லோமோ -எங்களுடைய ஹித வசனம் கேளாதே மாரு மாற்றம் சொல்லுகை போராது காண் என்ன -ஏன் நெஞ்சு போலேஅதி பிரவணமான நெஞ்சை யுடையீராய் அனுபவித்து அறியுங்கோள்–என்னை பொடியாதே -என் நெஞ்சை யுடையீராய் காணப் பெறுமன்று-பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே-என்று உங்களை நீங்களே பொடிவுதி கோள்-என் நெஞ்சை இரவலாக வாங்கிக் காண மாட்டி கோளோ-என்னை பொடியாதே -மாயாம் ந சேவே
மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12–பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே!-உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள்.-ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று , உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.-அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா? அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply