1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)–
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
—
ஆறாம் பத்தால்--தன்னுடைய பரம கிருபையாலே சர்வரும் வந்து ஆஸ்ரயிக்கும் படி இருக்கிற
சர்வ சரண்யனான சர்வேஸ்வரன் -பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளாம் தமக்கு தம் திரு அடிகளையே -நிரபேஷ உபாயமாகக் காட்டிக் கொடுக்க – அவ்வுபாயத்தில் விச்சேதம் இல்லாதபடி நடக்கிற வ்யவசாயத்தை உடையராய் – தம்முடைய வ்யவசாயத்தை கடக முகத்தாலே -இவனுக்கு அறிவித்து – வரவு தாழ்க்கையாலே தமக்கு விளைந்த -பிரணய ரோஷத்தை அவன் பரிகரிக்க –
அவன் சாமர்த்தியத்தை அனுசந்தித்து -குண அனுபவத்துக்கு பண்ணின பிர பத்தியும் பலித்தவாறே –பிராப்திக்கு பிரபத்தி பண்ணுவதாகக் கோலி – ஸித்த உபாய வர்ணம் இதர பரித்யாக பூர்வகம் ஆகையாலே பௌராணிக வசன பிரக்ரியையாலே -உபாய விரோதிகளான த்யாஜ்ய அம்சங்களை
சாவசனமாக தத் பிரசங்கமும் அசஹ்யமாம் படி விட்டு – விட்டவை எல்லாம் தமக்குப் பற்றுகை விஷயமாக நினைத்து –பரம ஆர்த்தியோடே தமக்கு உபாயமாக நினைத்து இருக்கும் -திரு உலகு அளந்தவனுடைய சர்வ சுலபமான திரு அடிகளை – நித்ய ஸூரிகளும் வந்து அனுபவிக்கும் படி வந்து நிற்கிற -திரு மலையிலே கண்டு கொண்டு – பூர்வ வாக்ய பிரக்ரியையாலே சரணம் புக்கவர் –
பத்துடை அடியவரிலே -தொடங்கி ஐஞ்சாம் பத்து அளவாக உபதேசித்த பக்தி உபாயத்தின்
துஷ்கரத்வாதி தோஷ அனுசந்தானத்தாலே சோகம் ஜனிக்கும் படியான பாகம் பிறந்தவர்களுக்கு
தம்முடைய பிரபத்தி நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் என்கிறார்
தன்னுடைய பரம க்ருபையாலே ஸர்வரும் வந்தாஸ்ரயிக்கும்படி யிருக்கிற ஸர்வ ஸரண்யனான ஸர்வேஸ்வரன் பக்தி பாரவஸ்யத்தாலே அநந்ய கதிகளான இவர்க்குத் தன் திருவடிகளே நிரபேக்ஷோ பாயமென்னுமிடத்தைக் காட்டிக் கொடுக்க, அந்த உபாயத்திலே விச்சேதமில்லாதபடி வ்யவஸாயத்தை யுடையராய்த் தம்முடைய வ்யவஸாயத்தை ௧டகர் முகத்தாலே யவனுக்கறிவித்துத் தம்முடைய விளம்ப அக்ஷமத்வத்தால் வந்த இன்னாப்பைப் பரிஹரித்தவனுடைய ஸாமர்த்யத்தை அநுஸந்தித்து குணாநுபவத்துக்குப் பண்ணின ப்ரபத்தியும் பலித்தவாறே ப்ராப்திக்குப் ப்ரபத்தி பண்ணுவதாக ஸித்தோபாய ஸ்வீகாரம் இதரோபாய த்யாக பூர்வகமாக வேண்டுகையாலே பெளராணிக வசந ப்ரக்ரியாலே உபாய விரோதி களான த்யாஜ்யங்களை வாஸநையோடே அவற்றினுடைய ப்ரஸங்கமும் அஸஹ்யமாம்படி விட்டு விட்டவை யெல்லாம் தமக்கு ப்ராப்த விஷயமே யாக்கி நிரதிஸயமான பர பக்தியோடே திருவுலகளந்த ஸர்வ ஸுலபமான திருவடிகளை நித்ய ஸூரிகளும் வந்தனுபவிக்கும்படி நிற்கிற திருமலையிலே கண்டு பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே ஸரணம் புக்கவர் பத்துடையடியவரிலே தொடங்கி அஞ்சாம் பத்தளவாக உபதேஸித்த பக்த் யுபாயத்தினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தானத்தாலே ஸோகம் ஐநிக்கும்படியான அதிகாரம் பிறந்தவர்களுக்குத் தம்முடைய ப்ரபத்தி நிஷ்டையை ப்ரகாஸிப்பிக்கிறார் என்கிறார் –
(1)என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல்வெட்டாக்குகிற சரண்யன் (2)அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு (3) பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய (4) உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின (5) சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்களைக் கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும் -புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு (6) தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி (7)தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே (8) திரி விக்ரமனாய்க் குறள் கோலப் பிரானாய் அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை (9) இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் (10) பிணக்கறத் தொ சசோக சஜாதீயர்க்குத் டங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண (11)தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த்ய அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் —
1-என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மின் என்று கருணையாலே-சர்வ லோக பூதேப்ய -என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல் வெட்டாக்குகிற சரண்யன்
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்களே -6-1-10–என்று ஆர்த்த ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவனுக்கு -ரஷ்ய வர்க்கத்தில் நானும் ஒருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும் –
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே-6-3-7- -என்று திரு விண்ணகரிலே நின்று அருளும் அவன் திரு அடிகள் அல்லது சர்வருக்கும் வலிய புகல் அல்லை என்றும்–வன் சரண் சுரர்க்காய் -6-3-8–என்று தேவர்களுக்கு வலிய ரஷகனாம் என்றும் –
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும் -6-10-11–என்று
நமக்கு சேஷ பூதராய் உள்ள எல்லோரும் நமக்கு அடிகளின் கீழே -அநந்ய பிரயோஜனராய் புகுந்து
உஜ்ஜீவி யுங்கோள் என்று தன் அருளைப் பண்ணா நிற்கும் என்றும் சொல்லுகிற படி-தன்னுடைய கிருபையாலே – சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயத மாம் ஷிப்ரம் விபீஷண உபஸ்திதம்—யுத்த —17-14-என்று வந்து சரணாகதனான விபீஷண ஆழ்வான் – சர்வலோக சரண்யன் என்ற உக்தி சமுத்திர கோஷம் போலே நிரார்த்தம் ஆகாதபடியாகவும் – சக்ருதேவ பிரபன்னாயா தவாச்மீதச யாசதே அபயம் சர்வ பூதேப்ய ததாம் ஏதத் வ்ரதம் மம –யுத்த –18-33– என்று(பூதேப்ய -சர்வராலும் வரும் பயம்) சரணாகத ரஷணத்தில் தீஷிதனாய் சரண்யனான தான் செய்த யுக்தி ச ஹ்ருத்யமாகாதா படியும் – வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் -3-3-7–என்றும் ,
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேம்கடம் –முதல் திருவந்தாதி-26-என்றும் — போதறிந்து வானரங்கள்–இரண்டாம் திருவந்தாதி-72–என்றும் – கண்டு வணங்கும் களிறு-மூன்றாம் திருவந்தாதி-70 -என்றும் –
நித்ய ஸூரிகள்–நித்ய சம்சாரிகள் -பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனர் –மனுஷ்யர்-திர்யக்குகள் -என்கிற வாசி அற ஆஸ்ரயிக்கலாம் படி சர்வ ஸமாச்ரயணீயனாய் நிற்க்கையாலே –
தன்னுடைய உபாயத்வம் சிலா லிகிதம் ஆகும் படி திரு மலையில் எழுந்து அருளி இருக்கிற
அநாலோசித விசேஷ சேஷ லோக சரண்யனான சர்வேஸ்வரன் –
(என்னையும் இத்யாதி, சரண்யனென்கிற தளவாக) “ஏறு சேவகனார்க்கு என்னையும் உளளென்மின்௧ளே” (திருவாய்மொழி 6-1-10) “யாவர்க்கும் வன் சரணே” (திருவாய்மொழி 6-3-7) ‘வன் சரண் சுரர்க்காய்” (திருவாய்மொழி 6-3-8) என்று ஆர்த்த ரக்ஷ்ணத்திலே தீக்ஷித்திருக்கிறவனுக்கு ரக்ஷ்ய வர்க்கத்திலே நானுமொருத்தி உளள் என்று சொல்லுங்கோள் என்றும், திருவிண்ணகரிலே நின்றருளினவனுடைய திருவடிகளல்லது ஸர்வர்க்கும் வலிய ரக்ஷை இல்லை; தேவர்களுக்கும் வலிய ரக்ஷ என்று இவர் தாமே பேசும்படி “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்” (திருவாய்மொழி 6-10-11) என்று நமக்கு ஸேஷபூதராயுள்ளா ரெல்லாரும் நம்மடியின் கீழே அநந்ய ப்ரயோஜநராய்ப் புகுந்து உஜ்ஜீவியுங்கோள் என்று அவன் தானே அருளிச் செய்யும்படியான க்ருபையாலே (ஸர்வ லோக பூதேப்ய: என்கிறவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல்) “ஸர்வலோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபஸ்த்திதம்” ரா.யு. 17-14 என்றும், “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம” (ரா.யு. 18-33) என்றும் சொல்லுகிற ஸரணாக தனுடையவும் ஸரண்யனுடையவும் உக்தி ஸமுத்ர கோஷம் போலே நிரர்த்தகமாகாத படியாகவும், கண்டாதுபரியாகாத படியாகவும் “வானவர் வானவர் கோனொடும் நமன்றெழும் திருவேங்கடம்” (திருவாய்மொழி 3-3-7 என்றும் “வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடம்” (முதல் திருவந்தாதி 26) என்றும் “வானரமும் வேடுமுடை வேங்கடம்” நான்முகன் திருவந்தாதி 47) என்றும் “கண்டு வணங்கும் களிறு” (மூன்றாம் திருவந்தாதி 70) என்றும் சொல்லுகிறபடியே நித்ய ஸூரிகளோடு நித்ய ஸம்ஸாரிகளோடு திர்யக்குகளோடு வாசியற ஆஸ்ரயிக்கலாம்படி நிற்கையாலே தன்னுடைய ஸமாஸ்ரயணீயத்வம் ஸிலா லிகிதமாம்படி திருமலையிலே யெழுந்தருளி நிற்கிற அநாலோசித விஸேஷ அஸேஷ லோக ஸரண்யனான ஸர்வேஸ்வரன்
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் -ரதசர்யா ஸூ சம்மத -என்று வீரர்கள் கொண்டாடின வீரம் – உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7–வரையாதே எல்லார்க்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஸ்ரேஷ்டமான திருவடிகள்-சிறியோர் பெரியோர் என்று அன்றிக்கே எல்லார்க்கும் தஞ்சமான புகல் வேறு இல்லை –அல்லாதவை ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் கழுத்துக் கட்டியாய் இறே இருப்பது –
வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண் நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8–தேவ ஜாதிக்கு தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் புகலாய்-தத் பிரதி கூலர்க்கு -வெங்கூற்றம் –அந்தகன் தண்ணீர் என்னும் படியான கூற்றமாய்-
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11—தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-நித்ய ஸூ ரிகள் -ஸ்ரீ சேனாபதி ஆழ்வானோடு என்னுதல்
தேவர்களோடு ப்ரஹ்மா என்னுதல் -அமர்ந்து -அநந்ய பிரயோஜனராய்-நமன்று எழும்–தொழுது எழு-என்னும் தம்மைப் போலே என்கை -பக்கன அபிமானராய் உத்தியோகிக்கும் திருவேங்கடம் – பிரயோஜ நான்தர பரரை-அநந்ய பிரயோஜனர் ஆக்கும் -நில மிதியாலே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26–இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு-பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்-அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது-ஐஸ்வர்ய விரோதி ஆத்ம பிராப்தி விரோதி பகவத் ப்ராப்தி விரோதி இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்-மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி – சிலருக்கு சத்ரு பீடாதிகள் சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-நீருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம் –
புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )-ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )
2-அஜ்ஞ்ஞான சக்தி யாதாத்ம்ய ஜ்ஞானங்கள் அளவால் அன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணராய் என்னும் படி மெய்யமர் பக்தி பூமா பலமாகவும் அநந்ய கதித்வம் உடைய தமக்கு அவித்யாதோ தேவே பரிப்புருட தயாவா விதிதயா ஸ்வ பக்தேர் பூம்நாவா ஜகதி கதிமந்யா மவிதுஷாம் கதிர் கம்யச்சாஸௌ ஹரிரிதி ஜிதந்தாஹ்வயமனோ ரஹச்யம் வியாஜக்ரே சகலு பகவான் ஸௌ நகமுனி -ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ஸூக்தி –(அஞ்ஞானத்தாலாவது -அளவிட்டு அறிய ஒண்ணாதாவன் என்கிற ஞானத்தாலாவது -தன் பக்தியினுடைய மேன்மையாலாவது அவனைத் தவிர வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்களுக்கு இவன் பேறாகவும்-உபாயமாகவும் -ஆகிறான் என்று ஸுநக மகரிஷி ஜிதந்தே மந்திரத்தின் உள் பொருளை விரித்து உரைத்தார் )-என்று –உபாயாந்தரங்களை அறியவும்-அனுஷ்டிக்கவும் ஈடான ஜ்ஞான சக்திகள் இல்லாமையாலே -ஆதல்-பகவத் ஏக பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு-தத் ஏக உபாயத்வம் ஒழிய-தத் வ்யத்ரிக்தோ உபாயம் அன்வயம் ஆகாது என்று –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3–என்னும்படியான ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தால் ஆதல்–அநந்ய கதிகளாம் அளவு அன்றிக்கே –(அஞ்ஞானத்தாலோ ஞான ஆதிக்யத்தாலோ இல்லாமல் பக்தி பாரவசயத்தால் அன்றோ ஆழ்வாராதிகள் பிரபத்தி )அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் எங்குற்றேனும் அல்லேன்-5-7-2- -என்றும்-என் நான் செய்கேன் -5-8-3–என்றும்–பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய் -6-10-4–என்று ஸாதனம் அனுஷ்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் –சாதன அனுஷ்டானம் பண்ணுபவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் –மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி உன் சௌந்தர்யாதிகளில் ஈடுபட்டு -உன்னைக் காண வேணும் என்னும் ஆசையினால்-பலஹீனமாய் தளர்ந்து –இனி உபாய அனுஷ்டான ஷமன் அல்லேன் –உன் திருவடிகளை பெருகைக்கு என்னால் செய்யல் ஆவது இல்லை –எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி உண்டு –முன்பு பரிகல்ப்தமான உபாயங்கள் ஒன்றும் என் பக்கல் இல்லை –நிரதிசய போக்யமான உன் திருவடிகளை நான் கிட்டும் வழி கல்பிக்க வேண்டும் என்று சொல்லும் படி –மெய்யமர் காதல்–6-8-2–என்று அவன் ஸ்வரூபத்தை அனுசந்திதாதல் –குண ஜ்ஞானத்தாலே ஆதல் —தரிக்க ஒண்ணாத படி திரு மேனியிலே அணைய வேண்டும் படியான காதல்-என்னும் படி–கீழ்ப் பத்திலே தமக்கு பிறந்த பக்தி பூமா உண்டு –பாரவச்ய ஜனகமான பக்தி அதிசயம் –அதனுடைய பலமாகவும் -உபாயாந்தரதுக்கு ஆள் அன்றிக்கே –களை கண் மற்று இலேன் -5-8-8–என்னும் படி அநந்ய கதித்வம் உடையரான தமக்கு சமாசத்தில் பக்தி பூம பலம் என்ன வேணும் –பூமா பலம் என்கிற இது -பாடச்கலனத்தாலே வந்ததாம் இத்தனை –
(அஜ்ஞாந அஸக்தியித்யாதி, அநந்ய கதித்வமுடைய தமக்கு) “அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஐகதி கதி மந்யா விதுஷாம் கதிர் கம்யஸ் சாஸெள ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ : ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவாந் சவ்நகமுநி:” (பட்டர் ஸ்ரீஸூக்தி)என்று உபாயாந்தரங்களை அறிகைக்கும் அநுஷ்டிக்கைக்கு மீடான ஜ்ஞாந ஸக்திகளில்லாத அளவால் வந்த அந்த உபாயாந்தரங்களில் அந்வயமே யன்றிக்கே ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே பகவதேக ரஷ்யமாகை யொழிய வ்யதிரிக்தோபாயங்கள் ஸ்வரூப விருத்தங்கள் என்கிற யாதாத்ம்ய ஞானத்தாலே “யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-(திருவாய் -5-8-3) என்று அவற்றிலுண்டான அநந்வயத் தளவன்றிக்கே அங்குற்றேனல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான எங்குற்றேனுமல்லேன்‘ (திருவாய்மொழி 5-7-2) “என் நான் செய்கேன்” (திருவாய்மொழி 5-8-3) “புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ” திருவாய்மொழி 6-10-5) என்று நித்ய ஸூரிகள் ஸம்ஸாரத்திலே உலாவினாப் போலே ஸித்த ஸாதநம் பண்ணி வர்த்திக்கிறேனல்லேன் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுகிறவர்களிலே ஒருவனாய் வர்த்திக்கிறேனல்லேன், அன்றிக்கே உன்னை அநுபவிக்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவனாய் அங்கே வர்த்திக்கிறேனல்லேன் உன்னை யொழிய ஸப்தாதி, விஷயாநுப,வம் பண்ணுகிற ஸம்ஸாரிகளிலேயாய் இங்கே வர்த்திக்கிறேனல்லேன். உன்னுடைய ஸெளந்தர்யாதி களிலே ஈடுபட்டு உன்னைத் தான் வேணுமென்று ஆசையாலே பல ஹீநனாய்த் தளர்ந்து இனி உபாயாநுஷ்டாநம் பண்ண க்ஷமனல்லேன்; உன் திருவடிகளைக் கிட்டுகைக்கு என்னால் செய்யலாவதில்லை; எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு? உன்னுடைய ரக்ஷணத்திலே அதி ஸங்கை பண்ணின மஹா ராஜருடைய ஸங்கா நிராகரணார்த்தமாக இலக்குக் குறிக்க வொண்ணாதபடி திரண்டு நின்ற மராமரங்கள் ஏழையும் எய்த ஏக வீரனே ஓ என்று கூப்பிடும்படி “மெய் யமர் காதல்” (திருவாய்மொழி 6-8-2) என்று அவனுடைய திருமேனியோடே யமர வேண்டும்படியாய்த் தம்முடம்போடே அவனமர வேண்டும் படியாய் ஸத்யமாய்ப் பொருந்தி ஸ்வரூபாநுபந்தியாய் கீழில் பத்தில் தமக்குப் பிறந்த பக்தி பாரவஸ்யத்தினுடைய பலமாகவுமாம். உபாயாந்தரத்துக் கன்றிக்கே “களை கண் மற்றிலேன்” (திருவாய்மொழி 5-8-8) என்னும்படி அநந்ய கதித்வமுடைய இவர்
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3—என்னான் செய்கேன் –
உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பவ –
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2—சாதனம் அனுஷ்ட்டித்து முக்த பிராயனாய் இருக்கிறேன் அல்லேன் -சாதனம் அனுஷ்டானம் பண்ணுமவர்களில் ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -மேலும் சாதன அனுஷ்டானம் பண்ண ஒண்ணாத படி ஸுந்தரியாதிகளிலே ஈடுபட்டு உன்னைக் காண வேணும் ஆசையால் பலஹீனனாய் தளர்ந்து இனி உபாய அனுஷ்டான ஷமனும் அல்லேன் –இது பூர்வர்கள் நிர்வாகம் –-அதவா – நீ இருந்த இடத்தே வந்து கிட்டி உன்னை அனுபவிக்கிறேன் அல்லேன் -உன் பக்கல் நிரபேஷராய் இருக்கிற சம்சாரிகளிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன் -உன்னை ஒழிய தரித்து இருக்கிற சம்சாரிகளோடே பொருத்தம் யுடையேன் அல்லேன் –அங்கு வர மாட்டேன் -அபி நிவேசத்தால் இங்கு நிற்க மாட்டேன் -பிறரோடு பொருத்தம் உடையேன் அல்லேன் -என்றுமாம் –
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-புணர்ந்து நின்ற -அம்புக்கு நேரோட ஒண்ணாத படி திரண்டு நின்ற-மரமேழ் அன் றெய்த -ரக்ஷணத்தில் சங்கை பண்ணின வன்று ஏழையும் ஓர் அம்பால் அழித்த-அதி சங்கை பண்ண மழு வேந்திக் கொடுத்து ரசித்தவன் கிடீர் ஆசைப்பட்ட என்னை அநாதரிக்கிறான் -அதி சங்கையைப் போக்கி பணி கொண்டவன் கிடீர் இரந்த என்னை பணி கொள்ளாது ஒழிகிறான்-ஒருவில் வலவாவோ!-ஏக வீரனே –ஓ என்று விஷாத அதிசய ஸூ சகம் –
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-திருமேனியில் அணைய வேண்டும்படியான காதல் -என் உடம்போடு அணைய வேண்டும் காதல் என்றுமாம் –காத்ரைச் சோகாபி கர்ச்சிதை சம்ஸ்ப்ருசெயம்-என்ன கடவது இறே –குண ஞானத்தால் தரிக்கும் அளவன்று என்று சொல்லுங்கோள் -என்று சீயர் அருளிச் செய்வர் -பிள்ளான் -தம்மை போல் பொய்யாய் நிலை நில்லாத காதல் அன்று என்று சொல்லுங்கோள் என்று பணிக்கும்
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ
3-பாதமே சரணாக்க அவையே சேமம் கொண்டு ஏக சிந்தையராய்–ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-7-10–என்னும்படி தன் திருவடிகளை சகாயாந்தர நிரபேஷ சாதனமாகக் காட்டிக் கொடுக்க –கழல்கள் அவையே சரணாக கொண்ட -5-8-11-என்றும் –அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன்–5-9-11-என்றும் நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும் ஏக சிந்தையனாய் –5-10-11 -என்றும் சொல்லுகிறபடி-விரோதி நிரசன சீலனானவன் திரு வடிகளையே நிரபேஷ உபாயமாகக் கொண்டு ஏக ரூப மான வ்யவசாயத்தை உடையராய் திர்யக்குகளை இட்டு ஸ்வ அபிப்ராயத்தை நிவேதித்து-வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் கனிவாய் பெருமானைக் கண்டு வினையாட்டியேன் காதன்மை –கைகள் கூப்பிச் சொல்லீர்-6-1-1- -என்று தொடங்கி –ஏறு சேவகனார்க்கு என்னையும் உளன் என்மின்கள் -என்னுமதளவாக பெற்று அன்றி தரியாத அதி மாத்ர பிராவண்யம் உண்டாய் இருக்கவும்-ஸ்வ ரக்ஷண ஸ்வாந்வயத்தை சகியாத ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே –ததேக ரஷத்யத்வ வ்யவசாய ரகிதராய் இருக்கிற தம்முடைய கருத்தை –உபாப்யாமேவ பஷாப்யாம் -என்கிறபடியே ஜ்ஞான அனுஷ்டான ரூப பஷ த்வய யோகத்தாலே ப்ராப்யமான பகவத் விஷயத்தை சீக்கரமாக ப்ராபிக்கைக்கு ஈடான யோக்யதை உடையரான கடகரை இட்டு அறிவித்து –விளம்ப ரோஷம் உபாயத்தாலே அழிய இப்படி அறிவித்த அளவிலும் அவன் வரவு தாழ்க்கையால் உண்டான பிரணய ரோஷத்தாலே -வந்து மேல் விழுந்த அளவிலும் –போகு நம்பீ –கழக மேறேல் நம்பீ -என்று உபேஷித்து அவன் முகம் பாராமல் இருப்போம் என்று -சிற்றில் இழைப்பது –சிறு சோறு அடுவதாக –அது தன்னுடைய போக விரோதி ஆகையாலே –அழித்தாய் உன் திருவடியாலே -என்கிறபடியே அவன் அந்த அநாதர அந்நிய பரதைகளை தனக்கும் சரம உபாயமான திரு வடிகளாலே யுப லஷிதமான விக்ரகத்தின் உடைய வைலஷண்யத்தாலே – குலைக்க -அவனோடு பொருந்தி –
தமக்கு (பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டேக சிந்தையராய் ) “ஆறெனெக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” (திருவாய்மொழி 5-7-10) என்று தன் திருவடிகளே ஸஹாயாந்தர நிரபேஷமான ஸாதநமென்னுமிடத்தைக் காட்டிக் கொடுக்க; “கழல்களவையே சரணாகக் கொண்ட” (திருவாய்மொழி 5-8-11 என்றும், “அடிமேல் சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன்” (திருவாய்மொழி 5-9-11) என்றும், “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறு மேக சிந்தையனாய்” (திருவாய்மொழி 5-10-11 என்றும் சொல்லுகிறபடியே விரோதி நிரஸந ஸீலனாயிருக்கிறவன் திருவடிகளே நிரபேக்ஷோபாய மென்கிற ஏக ரூபமான வ்யவஸாயத்தை யுடையராய் , (திர்யக்குக்களை யிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து) “வைகல் பூங்கழிவாய் வந்து மேயுங் குருகினங்காள் வினையாட்டியேன் காதன்மை கைகள் கூப்பிச் சொல்லீர் ” (திருவாய்மொழி 6-1-1) என்றும், “சேவகனார்க் கென்னை யுமுளளென்மின்களே’ (திருவாய்மொழி 6-1-10) என்றும் பெற்றல்லது தரியாத அதி மாத்ர ப்ராவண்ய முடையரா யிருக்கச் செய்தேயும், ஸ்வ ரக்ஷணத்தில் அந்வயமில்லாத அத்யந்த பாரதந்த்ர் யத்தினாலே ததேக ரக்ஷ்யமா யிருக்குமென்கிற தம்முடைய கருத்தை, ஸூத்த ஸ்வபா வராய் ஸாகா ஸஞ்சாரிகளாய் மதுகர ப்ரக்ருதிகளாய் பக்ஷபாதிகளாய் ஷட்பத நிஷ்டரான கடகரை யிட்டறிவித்து (விளம்ப ரோஷ முபாயத்தாலே யழிய) இப்படியறிவித்த விடத்திலும் அவன் தாழ்க்க அத்தால் வந்த ப்ரணய ரோஷத்தாலே, அவன் வந்து மேல் விழுந்த வளவிலும், “போகு நம்பீ ” (திருவாய்மொழி 6-2-2) “கழகமேறேல் நம்பீ (திருவாய்மொழி 6-2-6) என்று அவனை உபேஷித்து அவன் முகம் பாராமலிருப்போமென்று சிற்றிலிழைப்பது சிறு சோறடுவதாக, அவனும் தன்னுடைய போக விரோதி யாகையாலே “அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்மொழி 6-2-9) என்கிறபடியே அந்த அநாதராந்ய பரதைகளை தனக்கும் சரமோபாயமான திருவடிகளாலே உப லக்ஷிதமான விக்ரஹ வைலக்ஷ்ண்யத்தாலே குலைத்த அவனோடே சேர்ந்து.
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10—ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் -நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர சூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-அவனுக்கு மறுக்க ஒண்ணாத அஞ்சலியைப் பண்ணுங்கோள் – பலத்தோடு வியபிசரியாத செயலைச் செய்யுங்கோள் -என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்-பத்தாம் பாட்டிலே யாயிற்று இன்னாப்பு பிரசங்கிப்பது-பட்டர் பத்துப் பாட்டிலும் இன்னாப்பு தோற்ற நிர்வஹித்து அருளுவார்-முன்பு போலே என்று இராதே பெரிய முதலிகள் கும்பிடுங்கோள் -கும்பிட்ட வாறே முகம் பார்ப்பார் -பின்னை முகம் மாறுவதற்கு முன்னே என் தசையைச் சொல்லுங்கோள்-கைகளை கூப்பி -கைகளை கூப்புகையாவது -சிறகுகளை விரிக்கை –
சொல்லீர்-ஒரு மஹா பாரத்துக்கு போரும் இறே-வினையாட்டியேன் காதன்மையே.-சொல்லீர்
பிரிந்தால் அவனைப் போல் அன்றியே தரிக்க மாட்டாத படி பாபம் பண்ணின என் காதன்மை சொல்லீர் -அவன் வேண்டேன் என்றாலும் விட மாட்ட தபடியான பாபம் -வந்த ஆளின் கையிலே வார்த்தை சொல்லி விடுகை அன்றிக்கே திர்யக்குகளைக் குறித்து தூது விட வேண்டும்படியான பாபத்தை பண்ணினேன் –-காதன்மை என்றவாறே -தம்மளவு என்று இராமே -என்னுடைய காதன்மை -வன் நெஞ்சர் காதல் போல் அன்றி இறே மெல்லியலார் காதல் -மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதன்மை சொல்லீர் -சொல்லின் தாழ்வே -வரவு தப்பாது என்று இருக்கிறாள் –
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-எங்கும் மேற்பட்ட ஆண் பிள்ளை தனத்தை யுடையவர்க்கு -ரஞ்ச நீ யஸ்ய விக்ரமை -என்று எதிரிகள் மேலிட்ட வீரம் –ரதசர்யா ஸூ சம்மத –என்று வீரர்கள் கொண்டாடின வீரம் –உம்முடைய ரஷ்ய வர்க்கத்தில் இன்னும் ஒருத்தி நோவுபடா நின்றாள் என்னுங்கோள் –
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போகவிட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2-நீர் பரப்பராய் -முதலிகளாய் -இருப்புதீர்-உறவு உடையாரைப் போலேதீண்டாதே போம் -எத்தனைபேரைத் தீண்டினீர் என்பதை அறியோம் -எங்கள் மேல் புடவை படாமே போம்-முற்பட போகு நம்பீ என்றவாறே வர நின்றான் -பின்பு போகு நம்பீ என்றவாறே தொட்டான் –
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6-எங்கள் திரளில் ஏறாதே கொள் -என்ன -எனக்கு குற்றம் என் என்ன –நம்பி!-சமதம யாதி ஆத்ம குணோபேதர் திரளில் அன்றோ நீர் புகுவது -அவர்கள் அன்றோ உம்மை கிட்ட உரியார்-சிறு பெண்கள் திரளில் புகுகை யீடன்று
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9–உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ
4-உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்கப் பலித்தவாறே -பிறந்தவாற்றிலே –அவதார அனுபவம் பெறாத இழவாலே பதற –தத் குண சேஷ்டிதங்களை அனுபவித்தாகிலும் தரிப்போம் என்று இழிந்த அளவில்-நிறந்தனூடு புக்கு என தாவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற -என்றும் –பையவே நிலையும் வந்து என் நெஞ்சை வுருக்குங்கள் -என்றும் –உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கும் -என்றும் –ஊடு புக்கு எனதாவியை வுருக்கி உண்டு இடுகின்ற –என்னும்படி அவை மிகவும் சைதில்ய ஹேதுவாகையாலே -தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேண்டும் என்று அவனை உபாயமாக வரித்தித்தும்–குரவை ஆய்ச்சியரிலே- என்ன குறை எனக்கு -என்று தொடங்கி –நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கு யார் பிறர் நாயகர் -என்று ப்ரீதி பூர்வகமாக அவதார குண சேஷ்டிதங்களை சர்வ காலமும் முறையிலே கிட்டி அனுபவிக்கப் பெற்ற எனக்கு யார் தான் நியாமகர் என்று கர்விக்கும் படி பலித்தவாறே ––சப்ரகாரமாக சக்ருத் கரணீயம் என்று இதர உபாய த்யாக பூர்வ கத்வமாகிற பிரகாரத்தோடே –சித்த உபாய வர்ணம் சக்ருதேவ –என்கிறபடியே -பிராப்த்திகாகவும் ஒருகால் பண்ண வேண்டும் என்று பார்த்து புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகின் குருன் ரத்னானி தான தான்யானி ஷேத்ராணி ச க்ருஹானிச சர்வ தர்மாம்ச்ச சந்தய்ஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான் லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ-என்கிற வசனம் ஆக்னேயம் அஷ்டம் அஞ்சைவ பவிஷ்யன் நவமம் ஸ்ம்ருதம்-என்கிறபடி அஷ்டாதச புராணத்திலும் வைத்துக் கொண்டு ஒன்பதாம் புராண மாக சொல்லப் பட்ட –பவிஷ்யத் புராண சித்தம் ஆகையாலும் –புராண வித்தகர் ஆகையாலே -பௌ ராணிகரான ஸ்ரீ பாஷ்ய காரர் கத்யத்தில் -இவ் வசன பிரக்ரியையாலே -த்யாஜ்யங்களின் உடைய த்யாக பூர்வகமான சரண வரணத்தை பண்ணுகையாலும் –புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின -என்கிறது —இங்கன் அன்றிக்கே –இவ் அர்த்தம் புராண சித்தம் ஆகையாலும் -அது தான் புராதான புருஷ அனுஷ்டான ரூபமாக சொல்லப் படுகையாலும் -இவை இரடையும் பற்ற –புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின–என்று அருளிச் செய்தார் ஆகவுமாம் -சித் அசித் பிராப்ய பிராபக உபாசங்களை ஆக இப்படி புராணரும் பௌ ராணிகரும் –பிதரம் மாதரம்-என்று தொடங்கி –சாஷரான்-என்னும் அளவாக –சந்த்யஜ்ய -என்கிற இதுக்கு கர்மீ பவிக்கையாலே –வஹ்ய மாண சித்த உபாய வர்ணத்துக்கு அங்கமாக த்யாஜிக்கும் படும் அம்சம் ஆக்கின சித் வஸ்துகளும் அசித் வஸ்துக்களுமாய் உள்ள – பிராப்ய உபாசங்களையும் -பிராபக உபாசங்களையும் –இதில்-சர்வ தர்மாம்ச்ச –கீழ் -உபாயாந்தர சக காரியுமாய் -ஸூயம் பிரயோஜனம் ஆகையாலே -உபேயமுமாய் –இரண்டுக்கும் பொதுவாய் இருந்துள்ள வற்றை சொல்கிறது -எங்கனே என்னில்-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ -என்று கொண்டு –ஈச்வரனோபாதி மாதா பிதா அனுவர்த்தனத்தையும் உபாசன அங்கமாக சாஸ்திரம் விதிக்கையாலே -மாதா பிதாக்கள் -உபாயாந்தர சக காரிகளுமாய் –அவ்வளவு இன்றிக்கே -இவர்களுடைய வியோகம் அசஹ்யமாய் இருக்கையாலே –ஸூயம் பிரயோஜனமாயும் இருப்பார்கள் —ஸ்திரீயும் சஹா தர்ம சாரினியாய் இருக்கையாலே -உபாயாந்தர சக காரியுமாய்-அபிமதையும் ஆகையாலே உபேய பூதை யுமாய் இருக்கும் புத்ரனும் –புன்நாம்னோ நரகாத் த்ராயதே இதி புத்ர – என்கிறபடி-நரக தர்சனத்துக்கு அடியான பாப விமோசன ஹேது வாகிற முகத்தாலே -உபாயாந்தர சக காரியுமாய் -தம்முடைய வியோகம் அசஹ்யாகும் படி இருக்கையாலே உபேயாமுமாயும் இருக்கும் பந்துகள்-இவனைக் குடிப் பழியாக வர்த்தியாத படி நியமித்து நல் வழியே நடத்துபவர்கள் ஆகையாலே –உபாயாந்தர சக காரிகளுமாய் -பெரும் குடி பாட்டத்தே பிறந்தோம் என்கிற செருக்காலே –உபேய பூதருமாய் இருப்பார்கள் –தோழனும்- இவனுக்கு ஹிதைஷயாய் -ஹிதத்தை யே பிரவர்த்திப்பிக்கை யாலே – உபாயாந்தர சக காரியுமாய்-அபிமதனாய் இருக்கையாலே உபேயமுமாய் இருக்கும்–குருக்கள் ஆகிறார்கள்- உபயாந் தரங்களை உபதேசித்துப் போந்தவர் ஆகையால்-உபயாந்தர சக காரிகளுமாய் –உபகாரர் ஆகையாலே உபேயமுமாய் இருப்பார்கள்–ரத்னங்கள் உபாயாந்தரங்களுக்கு இதி கர்தவ்யதா சக காரகமுமாய் -மேற் சொல்லுமவற்றை அழிய மாறி ஸ்வீகரிக்க படுமவை ஆகையாலே உபேயமுமாய் இருக்கும்-தான தான்யங்களும் ஷேத்ரங்களும் அப்படியே க்ருகங்கள் வாசஸ்தான முகத்தாலே உபாயந்தரங்களுக்கு சக காரகமுமாய் –மாட மாளிகையாய் எடுக்கும் படியான அபிமதத்வத்தாலே உபேயுமாய் இருக்கும் –மேல் சர்வ தர்மாம்ச்ச -இத்யாதியாலே சாஷாத் உபாயாந்தரங்களையும் -உபேயாந்தரங்களையும் சொல்கிறது –அதில் சர்வ தர்மாம்ச்ச என்று கர்ம யோகத் உபாயங்களை சொல்கிறது –சர்வ காமாம்ச்ச -ஐ கிக பரலோக ஐஸ்வர்ய விசேஷங்களைச் சொல்கிறது–சாஷரான்-அஷர சப்த வாச்யமான கைவல்யத்தையும் அவ்வோபாதி த்யாஜ்யம் என்கிறது –ஆக இப்படி உபாயத்வேனவும் உபேயத் வேனவும் வ்யவஸ்திதங்கள் அன்றிக்கே – கீழ் சொன்ன படியே –உபாயாந்தர சக காரித்வத்தாலும்-அபிமதத் வாதிகளாலும் உண்டான பிராப்ய பிராபகங்கள் உடைய மாதா -பித்ராதிகளும் -ரத்ன தான தான்யாதிகளும் –ஆனவற்றை சித் அசித் பிராப்ய பிராபக ஆபாசங்கள் என்கிறது –அதவா -சர்வ தர்மாம்ச்ச -இத்யாதிகள்-தானும் பரம பிராப்ய பிராபகங்கள் பற்ற ஆபாசங்கள் ஆகையாலே -அவை தன்னையும் கூட்டிக் கொண்டு சொல்லவுமாம் –கை வலிந்து -இத்யாதிக்கு அனுகுணமாக ஒதுக்குகிறதே இறே உள்ளது -மேல் சொல்லுகிற வர்ணத்து அங்கமான த்யாகம் -உபாய விரோதிகள் சர்வத்தையும் –விஷயமாக உடைத்து ஆகையாலே -கை வலிந்து -இத்யாதிகளால் சொன்னது த்யாஜ்யமான இத்தனைக்கும் உபலக்ஷணம் –அப்படி ஆனால் இறே சப்ரகாரமாக சத்ருத் கரணீயம் என்றதுக்கு சேருவது ஆக இப்படி இருந்துள்ள
(உருகாமல் வலித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே) “உகவையால் நெஞ்சமுள்ளுருகி உன் தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்” (திருவாய்மொழி 6-2-9) என்றிப்படி அல்லோம் என்ற நம்மைச் சேர்த்துக் கொண்ட தோராஸ்சர்ய மிருந்தபடி யென் என்றுருக, இது தொன்று கண்டோ ஆஸ்சர்யப்படுகிறீர், தன்னில் தான் சேராதபடி விலக்ஷணங்களானவை நம்மோடே சேர்ந்திருக்கிறபடி பாரீர் என்று தன்னுடைய விருத்த விபூதிகத்வத்தை நல்குரவுஞ் செல்விலே காட்டி உருகாதபடி வலிக்கப் பண்ண இவரும் “நல்குரவும்” என்று தொடங்கி “திருவிண்ணகர்க் கண்டேனே” (திருவாய்மொழி 6-3-1) என்று அத்தைக் கண்டு தேறின விதுவும் குரவையாய்ச்சியரிலே “என்ன குறை நமக்கே” (திருவாய்மொழி 6-4-1) என்று தொடங்கி “நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே” (திருவாய்மொழி 6-4-10) என்னும்படி க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை தரித்து நின்று அநுபவிக்கலாம்படி பலித்தவாறே. ‘உருகாமல் வரித்தும்’ என்று பாடமானபோது பிறந்தவாற்றிலே உன்னைப் பிரிந்த தஸையிலே உன்னுடைய குணாநுஸந்தாநம் பண்ணி தரிக்கலாமோ வென்று பாரா நின்றேன்; “ஊடுபுக்கென தாவியை நின்று நின்றுருக்கி யுண்கின்ற” (திருவாய்மொழி 5-10-10) என்று அவை தானே ஸிதிலமாக்கா நின்றன-தரித்து நின்று குணாநுஸந்தாநம் பண்ணும்படி பண்ணி யருள வேணுமென்றும் “மற்றோர் களை கணிலம் காண்மின்களே” (திருவாய்மொழி 6-3-10) “(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” (திருவாய்மொழி 5-10-11 )என்று உபாய வரணம் பண்ணி அந்த வரணமும் என்ன குறை யெனக் கென்று தொடங்கி “விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன் (திருவாய்மொழி 6-4-10) என்று க்ருஷ்ண குண சேஷ்டிதங்களை திவா ராத்ர விபாகமற ப்ரீதி ப்ரேரிதனாய்க் கொண்டு பேசப் பெற்ற எனக்கு என்ன குறையுண்டு, பொய்யாஸநமிடுவார் மல்லரை யிட்டு நெருக்கத் தேடுவார் எதிரம்பு கோர்ப்பாராய்க் கொண்டு இருக்கற இந்த விபூதியிலிராதே “கதஸ் ஸ்வம் ஸ்த்தாந முத்தமம்” என்கிறபடியே பரிவரேயான நிர்பய ஸ்த்தா நத்திலே எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை அநுஸந்தித்து முறையிலே கிட்டப் பெற்ற வெனக்கு வேறு நிர்வாஹகருண்டோ என்றும்; கர்விக்க வேண்டும்படி பலித்தவாறே என்றுமாம். (ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று) இதரோபாயத்யாகமாகிற ப்ரகாரத்தோடே ஸித்த ஸாதந ஸ்வீகாரம் “ஸக்ருதேவ” (ராயு. 18-33 என்கிற படியே ஒருக்கால் பண்ண வேணுமென்று பார்த்து. (புராண பெளராணிகர் தயாஜ்யா மஸமாக்கின சித சித் ப்ராப்ய ப்ராபகா பாஸங்களை) புராணேதிஹாஸங்களும் அவற்றை உள்ளபடி யறிகையாலே பெளராணிகரான உடையவரும் –பிதரம் மாதரம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீந் குரூந், ரத்நாநி தந தாந்யாநி க்ஷேத்ராணி ச க்ரஹாணிச, ஸர்வ தர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்” (சரணாகதி கத்யம்) “பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகாநிவை த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம் ச ராகவம் ஸரணம் கத: (ரா.யு19-5) என்று த்யாஜ்யாம்ஸமாக்கினவற்றில் பித்ராதிகளான சேதநருடைய ரக்ஷணம் “மாத்ரு தேவோ பவ” (தைத்திர்யோபநிஷத் இத்யாதி ப்படியே ஸாதநாந்தரத்துக்கு உபகாரகமாகையாலே ப்ராபகங்களாயும் அவர்களுடைய வியோகம் அஸஹ்யமாம்படி ப்ரிய விஷயமாகையாலே ப்ராப்யங்களாயு மிருக்கையாலும்; ரத்நாதிகள் உபாயாந்தரத்துக்கு தாநாதி முகத்தாலே ஸஹகாரிகளா யிருக்கையாலே ப்ராபகங்களாயும் தன்னை யழிய மாறியும் இவற்றை ஆர்ஜிக்க வேண்டும்படி ஸ்வயம் ப்ரயோஜநங்க ளாகையாலே ப்ராப்யங்களா யுமிருக்கிற இந்த ப்ராப்ய ப்ராபகாபா ஸங்களை; ஸாக்ஷாத் ப்ராப்ய ப்ராபகங்கள் அல்லாமையாலே ஆபாஸங்களென்கிறது.
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-பிரிந்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய -எங்கள் உகவையால் நெஞ்சம் உள்ளுருகி-உன் தாமரைத் தடம்கண் விழிகளின்-அகவலைப் படுப்பான் –-தாமரைத் தடாகம் போலே மநோ ஹரமான உன்னுடைய கண்ணிலே நோக்கு ஆகிற வலையுள்ளே அகப்படுத்துகைக்காக -த்ருஷ்ட்டி பந்தத்தாலே இறே அநந்யார்ஹம் ஆக்குவது –
அழித்தாய் உன் திருவடியால்;-உன் சிற்றில் அழிக்க வேண்டும் பரிகரம் அமையாதோ இதுக்கு -ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது சங்கல்பத்தாலே இறே -சங்கல்பத்தாலே யாதல் -கையாலே யாதல் அழிக்கல் ஆகாதோ
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –-
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ -புருஷார்த்த காஷடையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10–தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்-
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை –மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –-சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –-நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார்
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-பொய்யாசனம் எடுவார் -பரிபாவிப்பாரான தேசத்தை விட்டுப் போய் -பரிவரேயான பரம பதத்தில்-தன தாமமே புக மேவிய சோதி–கதஸ் ஸ்வம் ஸ்தானம் உத்தமம் –என்கிறபடியே தனக்கு அசாதாரணமான ஸ்தானத்தில் போய்ப் புக்கான்-தன்தாள்-நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே- அவன் திருவடிகளைக் கிட்டி நான் அனுபவிக்கப் பெற்றேன் -எனக்கு வேறு நியந்தாக்கள் உண்டோ –புருஷார்த்த காஷ்டையாக ததீயரை நினைக்கை யாலே-அவர்களை பிறர் என்கிறிலர்-
5–கை வலிந்து கை கழல கண்டும் எல்லாம் கிடக்க நினையாத கன்றும்-(போலி உபாய உபேய பொருள்கள் தாமே கழன்று போவதையும் -உபேக்ஷித்துப் போவதுமாவையுமாக இருப்பதை –துவளில் மா மணி மாடம் -மாலுக்கு வையம் -உண்ணும் சோறு -மூன்றிலும் காணலாமே )நம்மை கை வலிந்து -6-5-7–என்றும் –இழந்தது சங்கே -6-6-1-என்றும் –இதெல்லாம் கிடக்க இனிப் போய் –6-7-9-எம்மை ஒன்றும் நினைத்து இலளே –6-7-9-இன்று எனக்கு உதாவாது அகன்ற -6-7-6–என்று சித் அசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டு -உறங்குவான் கைப் பண்டம் போலே –பகவத் பிரேம பாரவச்யத்தாலே தன்னடையே தன் கையில் நின்றும் நெகிழ்ந்து போக கண்டும் –சர்வான் போகான் பரித்யஜ்ய -சரணாகதி கத்யம்-என்கிற படியே இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்து அகன்று போயும் –
(கை வலிந்து கை கழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும்) “நம்மைக் கை வலிந்து” (திருவாய்மொழி 6-5-7) “இழந்தது சங்கே” (திருவாய்மொழி 6-6-1) “இதெல்லாம் கடக்க இனிப் போய் எம்மை யொன்றும் நினைத்திலளே” (திருவாய்மொழி 6-7-9) “இன்றெனக்கு உதவாதகன்ற” (திருவாய்மொழி 6-7-6) என்று சிதசித் வர்க்கமான இவற்றைக் கை விட்டும், உறங்கினவன் கையிலே எலுமிச்சம் பழம் போலே ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே தன் கையில் நின்றும் நெகிழும்படி கண்டு “ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய” என்கிறபடியே இவற்றை மதியாமல் அகன்றும்
அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-இவள் பருவம் இது –நமக்கு அவ்வருகே போன ஆச்சர்யம் பாரி கோளே -மைத்ரேய என்னுமா போலே – அழகிய நிறத்தை உடையளாய் -முக்தமான மான் போலே அதி பாலையாய் இருக்கிறவள்-அழகியதாய் சிலாக்யமானமாய் இருக்கிற மயில் போலே இருக்கிற சிறுப் பெண் என்றுமாம்-முக்தையான இவள் நம்மைக் கை விஞ்சி -நம்மில் காட்டிலும் அந்தரங்கை யானாள்
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-இவள் மயிர் முடி ஒன்றுக்கும் தோற்று குமிழ் நீர் உண்ணுமவன் கிடீர் இவளை அழித்தான் -பங்களப் படை கொண்டு தனி வீரம் செய்வாரை அழிக்குமா போலே
இவளுக்குத் தோற்று -அவன் இழக்குமத்தை இவள் இழந்தாள் –சங்கு -வளை –
இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-தன்னை பிரிந்து நோவு படுகிற இத்தசையிலே துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு உதவாதே கை கழிய போன -தன்னைப் பிரிந்து நோவு படும் என்று உதவுகைக்கு அன்றோ தன்னைப் பெற்றது -இத்தசைக்கு உதவாள் ஆகில் இனி எற்றைக்கு உதவ இருக்கிறாள் –இமாமவஸ்தா மா பன்னோ நேஹபஸ்யாமி ராகவம்–இள மான்-உதவப் பெற்றிலோம் -என்று அனுதபிக்கவும் அறியாத பருவம்-இனிப் போய்த்-பெற்றோரை விடும் படி இவ் விஷயத்தில் அவகாஹித்த இதுக்கு மேலே என்ன ஏற்றம் பெறப் போனாள் -பெற்றோரை விட்டு பற்றுமது இறே ப்ராவண்யத்துக்கு எல்லை
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9—இதெல்லாம் கிடக்க-வி லக்ஷண பதார்த்த தரிசனத்தில் அவனுக்கு என்கை -அவன் குண அனுசந்தானத்தாலே விக்ருதியாகை -இவற்றை அளவிறந்த சம்பத்தாக நினைத்து இருக்கிறாள் இவள் -கண்டதை மமேதம் என்று இராதே அவனுக்கு என்று இருக்கை இ றே சம்பத்து –இனிப்போய்ச்-பாவ சுத்தியால் துஷ்டனாம் அவனுக்கு ஓன்று செய்யப் புறப்பட்டு போனாளோ-இத்தலையில் உள்ளது ஓன்று இல்லை -அவனுக்கு வேண்டுவது ஓன்று இல்லை –எம்மை ஒன்றும் நினைத்திலளே–வழித் துணையாக நினைத்திலள் -அங்கே சென்று எதிர் கொள்ளுவாரில் ஒருத்தியாக நினைத்திலள் -பழி சொல்லுவார் கோடியாகவும் நினைத்திலள் –குரவ கிங்கரிஷ்யந்தி-என்றும் நினைத்திலள்-
ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷம் ஆக்கியும்-இதில் ததீயருக்கு போக்யமாக சமர்ப்பிக்கத் தக்க வற்றை-பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலோடு மேவீரோ –ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ-என்று தமக்கு உபாதேயமான பரம பத்தோடு ஒக்க கடகருக்கு பரிசிலாக சமர்ப்பித்தும்-
(ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய ஷோஷமாக்கியும்) “பொன்னுலகாளீரோ” (திருவாய்மொழி 6-8-1 “நெய்யமரின்னடிசல் நிச்சல் பாலொடு மேவீரோ” (திருவாய்மொழி 6-8-2 )“ஓடிவந்தென் குழல்மேலொளி மாமலரூதீரோ” (திருவாய்மொழி 6-8-3) என்று கீழ் தாம் விட்டவிடத்திலும் தம்மை விடாதபடி பற்றிக் கிடக்கிற ஆத்மாத்மீயங்களை பகவத் விஷயத்தில் உபகாரகரானவர்களுக்கு “ஸத் குருப்யோ நிவேதயேத்” என்கிறபடியே ஸமர்ப்பித்து.
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-ஈஸ்வர விபூதியானது விஸ்லேஷ தசையில் அவனையும் தன்னையும் சேர்ந்தார்க்கு பரிசிலாக கண்டது என்று இருக்கிறாள் -உபய விபூதியும் ஒரு மிதுனத்துக்கு சேஷம் இறே-அவ்வவஸ்தை பிறந்தால் சொல்லலாம் இ றே -நித்ய விபூதியைக் கொடுத்து பின்பு லீலா விபூதியைக் கொடுக்கிறாள் -இவளுக்கு இதிலும் நித்ய விபூதி விதேயமாய் இருக்கிற படி -அவன் அடியில் காட்டிக் கொடுத்த அடைவும் இது இ றே -அயர்வறும் அமரர்கள் அதிபதி -இலனது உடையனிது -என்றது இறே -தான் பெற்ற அடைவிலே கொடுக்கிறாள் -வி லக்ஷணமான நித்ய விபூதியைக் கொடுத்து வைத்து லீலா விபூதியைக் கொடுப்பான் என் என்னில் -பண்ணின உபகாரத் த்திலே கலங்கி கொடுக்கிறாள் –அபராவர்த்தி நாம் யாச யாச பூமி ப்ரதாயி நாம் -என்றாரைப் போலே –ஆளீரோ -உங்கள் விபூதியை அராஜமாக விட்டு வைக்கிறது என் -ஆளி கோளோ-தான் கொடுத்ததாக நினைத்து இருக்கிறிலள்
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2—நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்யமிஸ்ரமாய் பால்முடிவான சோறு -இன்னடிசில் –எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி -என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –-நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இறே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ்வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே
ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3—ஓடி வந்து -முன்பே அவற்றின் வார்த்தை கேட்க்கையில் உண்டான த்வரையாலே யாதல் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான த்வரையிலே யாதல் -சடக்கென வர வேணும் என்கிறாள்-என் குழல் மேல்-அவனோடே போக சாம்யம் உண்டாம் படி பண்ணைக் கட வேன் -அவன் தனக்கு தூது போனவர்களுக்கு ததிமுகன் காத்து இருக்கிற காவல் காட்டை அழிக்கக் கொடுத்தான் இறே -அவன் காவல் காட்டை அழிக்க தருகிறேன் உங்களுக்கு -என்கிறாள் –அஹமாவாராயிஷ்யாமி யுஷ் மாகம் பரிபந்தின-என்று திருவடியைப் பற்றி அழிக்கவும் வேண்டா விறே -இவளுடைய ஏஷ ஸர்வஸ்ய பூதஸ்து இருக்கிற படி -உங்களுடைய வரவால் தளிர்த்து இருக்கிற என்னுடைய குழலிலே –ஒளி மா மலர் ஊதிரோ?-ஒளியை யுடைத்தாய் சிலாக்கியமான மலரில் மதுவைப் பானம் பண்ணீரோ –ஊதிரோ?-மதுவின் ஸம்ருத்தியாலே கிண்ணகத்தில் இழிவாரைப் போலே இழிய மாட்டாதே நின்று பறக்கிற படி -உங்கள் காரியமுமாய் பர ரக்ஷணமும் ஆனால் ஆறி இருக்கிறது என் என்கை
புறத்திட்டு காட்டி என்று பிரசங்கிக்கில் முடியும் படி விட்டு என்னைப் புறத்து இட்டு இன்னும் கெடுப்பாயோ–6-9-8–என்று உனக்கு அசலாம்படி விஷயங்களிலே என்னைத் தள்ளி இன்னம் கெடுக்கப் பார்க்கிறாயோ என்றும் –பல நீ காட்டிப் படுப்பாயோ-6-9-9–என்றும் -நாட்டார் காணா விடில் பிழையோம் என்கிற விஷயங்கள் தமக்கு காணில் முடியும் படி-அத்யந்த அசக்யமாய் இருக்கையாலே -விஷயங்களைக் காட்டி என்னை முடிக்கப் பார்க்கிறாயோ என்றும் சொல்லுகையாலே –அவற்றின் பிரசங்கத்திலே ஏங்கி- மூச்சு அடங்கும் படி -பீதராய் -அவற்றை விட்டு–
(புறத்திட்டுக் காட்டி யென்று ப்ரஸங்கிக்கில் முடியும்படி விட்டு) “புறத்திட்டின்னம் கெடுப்பாயோ பல நீ காட்டிப் படுப்பாயோ” (திருவாய்மொழி 6-9-8) என்று ஸம்ஸாரிகளுக்கு போக்யமான ஸப்தாதி, விஷயங்களினுடைய தர்ஸநத்திலே ஸத்தா ஹாநி பிறக்கும்படி அஸஹ்யமாயிருக்கையாலே அவற்றை விட்டு,-
அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8—கிறிசெய்து என்னைப் -எனக்கு முன்பு செய்தது இத்தனையும் விரகு அடித்ததாம் இத்தனை இ றே -அநந்ய கதியாய் இருக்கிற என்னை பிரமிக்கும் படி ஒரு விரகு பண்ணி -அதாகிறது பேறு உன்னதான பின்பு கிருஷியும் உன்னதாக வேண்டாவோ என்கை-புறத்திட்டு-உனக்கு அசலாம் படி விஷயங்களில் தள்ளி-இன்னம் கெடுப்பாயோ?-அநாதி காலம் இழந்தது போராதோ-உன் சுவடு அறிந்த பின்பும் உனக்கு அசலாகவோ -அறிவிலேன் என்றாலும் -அருளாய் என்றாலும் கெடுக்கும் இத்தனையோ –புத்தி நாஸாத் ப்ரணச்யதி -விஷய ப்ராவண்யம் என்றும் விநாசம் என்றும் பர்யாயம் இறே-இன்னம் கெடுப்பாயோ?-பேறு அவனாலே யானாள் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்ய பிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9–பல -பைதல் கைசு -நோய் முக்கை சு -என்று தம் அளவன்றிக்கே பலவாய் இருக்கை-நீ காட்டிப் படுப்பாயோ?-ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ -சப்தாதி விஷயங்களின் உடைய தர்சன மாத்திரத்திலே முடியும்படி யாயிற்று இவர் பகவத் குணங்களிலே நைந்த படி -நாம் காணாவிடில் முடியும்படியான விஷயங்கள் இவருக்கு காணில் முடியும்படி யாயிற்று
6-தந்தை தாய் உண்ணும் சோறு மாநிதி பூவை யாவையும் ஒன்றே ஆக்கி த்வமேவ மாதா ச பிதா த்வமேவ -த்வமேவ பந்துச -குருஸ் த்வமேவ த்வமேவ வித்யா த்ரவிணம் -த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ-கத்ய த்ரயம் -என்கிறபடியே –தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த -6-5-11–என்றும் -அயர்வறும் அமரர்கள் அதிபதியே மாதா பித்ராதி சர்வ பந்து— என்றும் –உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்–6-7-11–என்றும் –தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் சர்வ சுலபனான கிருஷ்ணனே என்றும் –வைத்த மா நிதியாம் மது சூதனையே –6-7-11- என்று ஆபத் ரஷகமாக சேமித்து வைத்த அஷயமான நிதியும் அவனே என்றும் –பூவை பைம்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் -6-7-3–என்றும்-லீலா உபகரணங்களால் பிறக்கும் ரசம் எல்லாம் ஸ்ரீய பதி யினுடைய திரு நாமங்களை சொல்லவே உண்டாகா நிற்கும் என்றும் –இப்படி கீழ் இட்டவை எல்லாம் பற்றுகிற விஷய மொன்றுமாக நினைத்து–
(தந்தைதாயுண்ணுஞ் சோறு மாநிதி, பூவை யாவை யுமொன்றே யாக்கி) “பவத் கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை” ரா.யு என்றும், “த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்துஸ் ச குரஸ் த்வமேவ, த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதே வ” என்றும் ‘வாஸுதேவஸ் ஸர்வம்” (கீதை 7-) என்றும் “மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் ஸரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண:” (ஸுபால உபநிஷத் )என்றும் சொல்லுகிறபடியே “தேவபிரானையே தந்தை தாயென்றடைந்த‘” (திருவாய்மொழி 6-5-11) என்று அயர்வறுமமரர்களதிபதியே மாதா பித்ரு ப்ரப்ருதிகளான ஸர்வ வித பந்துவும் என்றும், ‘ உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யுமெல்லாம் கண்ணன்” (திருவாய்மொழி 6-7-1 என்று தாரக போஷக போக்யங்க ளெல்லாம் ஸர்வ ஸுலபனான கிருஷ்ணனே என்றும், “வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி” (திருவாய்மொழி 6-7-11) என்று ஆபத் ரக்ஷகமாகச் சேமித்து வைத்த அக்ஷயமான நிதியும் விரோதி நிரஸந ஸீலனான அவனே யென்றும், “பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவியெழும்’ (திருவாய்மொழி 6-7-3) என்று லோபகரணங்களால் பிறக்கும் ரஸமெல்லாம் ஸ்ரீயபதியினுடைய திருநாமங்களைச் சொல்லவே யுண்டாகா நின்றதென்றும், இப்படி கீழ் விட்டவை யெல்லாம் பகவத் விஷய மொன்றிலுமே யாக்கி,
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வைத்து திருத் தொலை வில்லி மங்கலத்திலே ஸூலபனாய் இருந்தவனையே சர்வவித பந்துவும் என்று -அப்படியே பற்றுவதும் செய்தவர்
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் –வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-உண்டு என்ன உயிர் நிற்க்க கடவதாய் அனாயாச போக்யமாய் இஷ்ட விநியோக அர்ஹமான மஹா நிதி போலேயாய் விரோதி நிராசன ஸ்வ பாவனானவனை சொல்லி ஆர்த்தியாலே கூப்பிட்டு-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-யாவையாலும் பிறக்கும் ரசம் எல்லாம் அவனுடைய திரு நாமத்தால் பிறக்குமாயிற்று இவளுக்கு -அவனுடைய லீலா உபகரணங்களோ பாதியும் போருமாயிற்று இவளுடைய லீலா உபகரணங்களும் -பகவான் நாமங்களை சொல்லி உஜ்ஜீவிக்கும் –திரு நாமச் சுவடு அறிந்த பின்பு லீலா உபகரண தர்சனம் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு ராஜ்ய தர்சனம் போலே அஸஹ்யமாய் இருக்கும் -இவளுடைய லீலா உபகரணங்கள் அவனுக்கு போக உபகரணங்களாய் இருக்கும் -இந்த லீலா உபகரணங்கள் திரு நாமத்தை சொல்லிற்று ஆனாலோ என்ன -என்று பெற்றி கேட்க -பந்து தூதை பூம் புட்டிகளால் ஏறாது என்று பிள்ளை பரிஹரித்தார் -அவற்றைத் திரு நாமத்தை சொல்லி அழைத்தால் ஆனாலோ என்னில் அது -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறதுக்குச் சேராது –
7-தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ என்னும் ஆர்த்தியோடே–கோலத் திரு மாகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்றும் ,-தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –என்றும்–கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குருகாதோ -என்றும் –புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ -என்றும்-ஜகத்துக்கு சர்வ பிரகார ரஷகனாய் –ஸ்ரீயா சார்த்தம்-என்கிறபடியே –பெரிய பிராட்டி யாரோடு எழுந்தி அருளி இருக்கிற உன்னைப் பெறப் பெறாதே –சம்சாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இப்படி அவசன்னனாகக் கடவேன் –திரி விக்கிரம அவதார முகத்தாலே நீயே வந்து எல்லார் தலையிலும் திருவடிகள் வைத்த உன்னைக் காண ஆசைப் பட்டு கிடையாமல் அக்நி சகாசத்தில் மெழுகு போல-ஜீவிக்கவும் பெறாதே -முடிக்கவும் பெறாதே –சம்சாரத்தில் இப்படி திரியக் கடவனோ -சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளிலே என்னை அருளப் பாடிடும் காலம் இன்னும் அணித்தாகாதோ –விரோதிகளின் கையில் அகப்படாதே -ஜகத்துக்கு வேர் பற்றான -உன்னை நோக்கித் தந்தவனே ! மானச அனுபவம் மாத்ரம் அன்றிக்கே –உன் திரு அடிகளை பிரத்யஷமாக கிட்டுவது என்றோ என்கிற ஆர்த்தி யோடே-
(தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னு மார்த்தியோடே) “கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேனின்னம் தளர்வேனோ” (திருவாய்மொழி 6-9-10) “தீயோடுடன் சேர் மெழுகா யுலகில் திரிவேனோ” (திருவாய்மொழி 6-9-6) “கூவிக்கொள்ளுங்காலமின்னம் குறுகாதோ” (திருவாய்மொழி 6-9-9) “புணரேய் நின்ற மரமிண்டின் நடுவே போன முதல்வாவோ” (திருவாய்மொழி 6-10-5) என்று ஸர்வ ப்ரகார ரக்ஷகனாய் பெரிய பிராட்டியாரோடே யிருக்கிற உன்னைக் கிட்டப் பெறாதே ஸம்ஸாரத்திலே யிருந்து எத்தனை காலம் இப்படியே அவஸந்நனாகக் கடவேன் என்றும், த்ரிவிக்ரமாபதாநம் பண்ணின வுன்னைக் காண வாசைப்பட்டுக் கிடையாமையாலே அக்நி ஸகாஸத்தில் மெழுகு போலே ஸம்ஸாரத்திலே இப்படி எத்தனை காலம் திரியக் கடவேன் என்றும், ஸர்வ ஸுலபமாய் நிரதிஸய போக்யமான உன் திருவடிகளிலே என்னை அருளப் பாடிடுங்காலம் இன்னமணித்தாகாதோ என்றும், யமளார்ஜுநங்களின் நடுவே போன ஸர்வ காரண பூதனே என்றும் உன் திருவடிகள் மாநஸாநுபவ மாத்ரமன்றிக்கே ப்ரத்யக்ஷமாகக் கிட்டுவதென்றோ என்கிற ஆர்த்தியோடே
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இறே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே-சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–-அநாதி காலம் இழந்த நான் அநந்த காலம் இழக்கவோ-முறை அறியாத காலம் இழந்தேன் ஆகில் முறை அறிந்த காலமும் இழக்கவோ -ருசி பிறவாத காலம் இழந்தேன் ஆகில் ருசி பிறந்த பின்பும் இழக்கும் அத்தனையோ –
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6-அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தாமரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-புணர்ந்து நின்ற -இரண்டும் கூடி ஓன்று என்னலாம் படி பொருந்தி நிற்க -அதிலே இடம் கண்டு போய் உன்னைத் தப்புவித்து ஜகத்தை உண்டாக்கினவனே-
8-திரி விக்ரமனாய் குரல் கோலப் பிரானே அடியை மூன்றை இரந்த வன் கள்வன் கண் முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தட வந்த தடம் தாமரைகளை லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ரஜம் விபோ -என்று வசிஷ்ட சண்டாள விபாகமற வரையாதே திருவடிகளை வைக்கையாலே-சௌசீல்யமும் –உறங்குகிற பிரஜையின் முதுகைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே விமுகனார் தலையிலும் திரு வடிகளை வைக்கையாலே –வாத்சல்யமும் –அவதரித்து முன்னே நின்று கார்யம் செய்கையாலே –சௌலப்யமும் –தே -என்கையாலே -தன் பேறாக செய்கைக்கு உறுப்பான ஸ்வாமித்வமும் –விபோ -என்கையாலே –ஞான சக்த்யாதி குண பூர்த்தியும் -சொல்லுகையாலே –த்ரி விக்கிரம உபதானத்திலே –ஆஸ்ரயண உபயோகியாயும் -கார்ய உபயோகியாயும் –உள்ள குணங்கள் எல்லாம் பிரகாசிக்கையாலே –தெய்வ நாயகன் திரி விக்ரமன்-5-7-11-மாண் குறள் கோலப் பிரான் –5-9-6-அடியை மூன்றை இரந்தவாறும்-5-10-9-மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்-6-1-11 -என்று-சர்வேஸ்வரனாய்-ஆஸ்ரித வத்சலனான தான் –திரு விக்கிரம உபாதானம் பண்ணுகைக்காக பெரு விலையனான அழகை-சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து கொண்டு மகாபலி யஜ்ஞ வாடத்திலே சென்று – மூன்று அடி- என்று இரந்து -தான் சொன்ன படியே அவன் செய்யும் படி விநீதமாய் ஆகர்ஷமான வடிவைக் காட்டி வசீகரித்து நின்ற மகா வஞ்சகன்- காண் மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்த -6-3-11-என்று நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே -இதோர் ஆஸ்ரயம் பாரும் கோள் என்று – லௌகிகர் எல்லோருடையவும் கண் எதிரே –அகல் கொள் வையம் அளந்த மாயன்-6-4-6-திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6-5-3-வையம் அளந்த மணாளன் –6-6-1-மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மான் –6-9-2-ஓர் அடியால் எல்லா உலகும் தட வந்த –6-9-6-தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள்-6-9-9–என்று விஸ்த்ருதமாய் -திக்குகளோடு -கூடின பூமியையும் -உபரிதன லோகங்களையும் –தென்றல் உலவினால் போலே -ஸூகரமாம்படி –எங்கும் ஒக்கப் பரப்பி அளந்து கொண்ட சர்வ சுலபமாய் -நிரதிசய போக்யமான திரு அடிகளை –
(ப்ரபத்தி முக்யாதிகாரமான பரமார்த்தியை உடையராய்) (த்ரிவிக்ரமனென்று தொடங்கி தடந் தாமரை யென்கிற தளவாக) “லோக விக்ராந்த சரணெள ஸரணம் தே(அ)வ்ரஜம் விபோ” என்று ஸம்ஸாரிகளுடைய தோஷங்களை போக்யமாகக் கொண்டு அவர்களுடைய தண்மை பாராதே “தலை விளாக் கொண்ட எந்தாய்” என்கிறபடியே ஒரு நீராகவும் அவர்கள் தாங்களே ப்ரத்யக்ஷிக்கும்படி வடிவைக் காட்டி திருவடிகளை எல்லாருடைய தலைகளிலும் வைக்கையாலே ஆஸ்ரயணோப யோகியான வாத்ஸல்ய ஸெளஸீல்ய ஸெளலப்யங்களும், “தே?” என்று தன் பேறாகச் செய்கைக் குறுப்பான ஸ்வாமித்வமும், “விபோ” என்று கார்யோப யோகியான ஜ்ஞாந ஸக்திகளும் த்ரிவிக்ரமாபதாநத்திலே ப்ரகாபபிக்கையாலே “தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன்” “மாண் குறள் கோலப் பிரான்’ (திருவாய்மொழி 5-9-6) “அடியை மூன்றை இரந்தவாறும்” (திருவாய்மொழி 5-10-9) “மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன்” (திருவாய்மொழி 6-1-11) என்றும் ஸுூரிபோக்யனாய் ஸர்வ ஸ்வாமி யானவன் த்ரிவிக்ரமாபதாநம் பண்ணுகைக்காகப் பெரு விலையனான அழகைச் சிறாங்கித் தனுபவிக்கலாம்படி வாமந வேஷ பரிக்ரஹம் பண்ணி மஹாபலியுடைய யஜ்ஞ வாடத்திலே சென்று மூன்றடி யென்றிரந்து ப்ரஹ்மசாரி வேஷத்தோடே நிற்கிற மஹா வஞ்சகன்- “காண்மின்களுலகரென்று கண் முகப்பே நிமிர்ந்த” (திருவாய்மொழி 6-3-1 )நோக்கு வித்யை காட்டுவாரைப் போலே லெளகிகர் ப்ரத்யக்ஷிக்கும்படி “அகல் கொள் திசை வையமளந்த மாயன்‘ (திருவாய்மொழி 6-4-6) “திசை ஞாலம் தாவி யளந்ததும்” (திருவாய்மொழி 6-5-3) “வையமளந்த மணாளன்” (திருவாய்மொழி 6-6-1) “மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மான்’” (திருவாய்மொழி 6-9-2) “ஓரடியால் எல்லா வுலகும் தட வந்த” (திருவாய்மொழி 6-9-6) “தாவி வையம் கொண்ட தடந் தாமரைகட்கே” (திருவாய்மொழி 6-9-9) என்று விஸ்த்ருதமாய் திக்குகளோடே கூடின பூமியையும் உபரிதந லோகங்களையும் தென்றலுலாவினாப் போலே ஸுக தரமாம்படி எங்குமொக்கப் பரப்பி யளந்து கொண்ட நிரதிஸய போக்யமாய் அதிஸுகுமாரமான திருவடிகள்.
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11-சர்வேஸ்வரனாய் -ஆஸ்ரித வத்சலனாய் -தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தியாய் அபேக்ஷிதம் செய்து கொடுக்குமவன் திருஅடிகளிலே
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-தன்னுடைமை பெறுகைக்கு தான் அர்த்தியாய் -வடிவை குறுக விட்டு மிக்க அழகை யுடையவனாய் -ஸுலப்யத்தையும் அழகையும் திரு வல்ல வாழிலே ஆஸ்ரிதரை அனுபவிப்பித்துக் கொண்டு நிற்கிறவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை காண்பது எஞ்ஞான்று கொலோ-மலர்த்தாமரை -அப்போது அலர்ந்த தாமரை –
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9–இந்திரன் இழந்தது த்ரை லோக்யம் இறே -த்ரை லோக்யத்தையும் தா என்றால் இசையால் -அடி என்றால் உதாரன் ஆகையாலே இசையக் கூடும் என்று அடியை இரந்தான்-ஓர் அடிக்கு சிறையிட்டு வைக்க நினைக்கிறான் ஆகையாலே மூன்றை இரந்தான் – இரந்தவாறும்- தன்னதை அவனதாக்கி-தான் அர்த்தி யான படியும்
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-மின்னை வென்று ஸ்யாமமான திரு மேனிக்கு பரபாகமான சேர்த்தியை யுடைத்தான திரு யஜ்ஜோபவீதத்தை யுடைய ஸ்ரீ வாமனனாய் –
வி நீதமாய் ஆகர்ஷகமான வடிவைக் காட்டி இசைவித்து -பூமிப் பரப்பை தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட-வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன-தன் உடைமை அவனதாக்கி அவன் தந்தானாம் படி பண்ணின பண்ணின மஹா வஞ்சகன் திருவடிகளில் –-ஸ்ரீ வாமன வ்ருத்தாந்த கதனம் மின்னிடை மடவாருக்கு தோற்றுகிற தோற்றரவுக்கு ஸூ சகம் -இதில் பிறந்த பிரணய ரோஷம் மின்னிடை மடவாராக்கைக்கு ஸ்ரீ வாமனனாய் வந்து தோன்ற கிழக்கு வெளுத்த படி -மஹா பலியை அர்த்தியாய்ச் சென்று வஞ்சித்து பூமிப் பரப்பு அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டால் போலே யாயிற்று பிரணய கோபத்தால் -அல்லோம் -என்றவர்களை திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட படி
காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-நோக்கு வித்யை காட்டுவரைப் போலே இது ஓர் ஆச்சர்யம் பாருங்கோள் என்று லௌகிகர் எல்லாருடையவும் கண் எதிரே வளர்ந்த திருவடிகளை யுடையவனை -உங்கள் தலையிலே திருவடிகளை வைக்க வாருங்கோள் -என்றால் இசைவார் இல்லையே
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-பரப்பை யுடைத்தான பூமி அடங்கலும் தன் திருவடிகளின் கீழே கொண்ட ஆச்சர்யத்தை யுடையவன் -வரையாதே தீண்டும் ஸ்வ பாவ சாம்யத்தாலே சொல்லுகிறார் என்னப்பன் தன் மாயங்களே -இவ் வபதானம் தமக்கு உதவ பலித்தது என்று இருக்கிறார் -ஆச்சர்ய சேஷ்டிதங்களையே
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-மஹா பலியால் பூமி அபஹ்ருதை யாயிற்று என்று கேட்டவாறே அப்படுக்கையில் பொருந்தாதே திக்குகளோடே கூடின பூமியை அநாயாசேன எல்லை நடந்து கொண்டதும்-
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-உகாதவரையும் கூட தன்னை இரப்பாளன் ஆக்கி தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட வ்யாமோஹத்தாலே அநந்யார்ஹம் ஆக்கி தன்னை போக்தாவானவனுக்கு
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.–6-9-2–மஹா பலியாலே அபஹ்ருதமான த்ரை லோக்யத்தையும் இந்திரனுக்கு வாங்கிக் கொடுத்த –கொண்ட என்றது இந்திரன் பேறு தன் பேறாய் இருக்கிற படி -பிறந்த வன்றே ப்ரஹ்மசாரியாய் -கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு இரந்து -சிறு காலைக் காட்டி அபஹரித்து பெரிய காலாலே அளந்து கொண்ட ஆச்சர்யங்கள் –-அம்மானே-இது எல்லாம் வேண்டிற்று உடையவனாகை இறே
பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6–ஓர் அடியை பாய் வைத்து -பரம்ப வைத்து -அத் திருவடியின் கீழே கடல் சூழ்ந்த பூமியை எல்லாம் அளந்து கொண்டு-தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த-மற்றை ஓர் அடியால்-சகல லோகங்களையும் ஸ்பர்சித்த-தட வந்த -தடவின -தென்றல் பட்டால் போலே உஜ்ஜீவிக்கும் படி இருக்கை –மாயோன்! -ஆச்சர்ய பூதனே -இது எல்லாம் தன் பேறாகச் செய்த வ்யாமோஹத்தை உடையவன் என்கை
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –/தடந்தா மரை கள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-
9-இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும் படி சென்று சேர்ந்த உலகத் திலதத்தே கண்டு எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று -இத்யாதி படியே திரு உலகு அளந்து அருளின -சர்வ சுலபமாய்-நிரதிசய போக்யமாய்-சேர்த்தி அழகையும் உடைத்தான திரு அடிகளை நாம் காண்பது எப்போது என்று -நித்ய ஸூரிகளும் அனுபவிக்க ஆசைப் பட்டு வரும் படி-அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திரு வேம்கட மா மலை -என்று திரு உலகு அளந்த செயலாலே பிரகாசிக்கிற சர்வ ஸ்மாத் பரத்வத்தை உடையவன் –அந்த ஸ்ரமம் தீர விடாயர் மடுவிலே சேருமா போலே உகந்து நிற்கிற –திலதம் உலகுக்காய் நின்ற திருவேம்கடம் -என்று லோகத்துக்கு முக்ய ஆபரணமான திரு மலையிலே கண்டு –அகலகில்லேன் என்று பூர்வ வாக்யம் அனுசந்தித்தவர் அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா -என்று புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு –நிகரில் புகழாய்-என்று தொடங்கி-திருவேம்கடத்தானே -என்னும் அது அளவாக –வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -சௌசீல்யம்-சௌலப்யம் -ஆகிய குணங்கள அடைவே அனுசந்தித்துக் கொண்டு –புகல் ஓன்று இல்லா -என்றும் அடியேன் -என்றும் தம்முடைய ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வ்பம் புரஸ்சரமாக உன் அடிக் கீழ் -என்று -சரணவ்-என்கிற திருவடிகளையும் –அமர்ந்து புகுந்தேன் -என்று சரணம் பிரபத்யே -என்கிற அர்த்தத்தையும் அனுசந்தித்து அருளுகையாலே –பூர்வ வாக்ய பிரக்ரியையாலே -பூர்ண பிரபதனம் பண்ணினவர்-
(இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு) “எந்நாளே நாம் மண்ணளந்த” (திருவாய்மொழி 6-10-6) இத்யாதி, திருவுலகளந்தருளின ஸர்வ ஸுலபமாய் நிரதிஸய போக் யமாய்ச் சேர்த்தி யழகை யுடைத்தான திருவடிகளை நாம் காண்பதெப்போதோ என்று நித்ய ஸூரிகளும் வந்தநுபவிக்க ஆசைப்பட்டு வரும்படி “அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கடமாமலை‘ (திருவாய்மொழி 3-3-8) என்று திருவுலகளந்தருளின ஸ்ரமந் தீர அச் செயலாலே ஸர்வ ஸ்மாத் பரனானவன் விடாயர் மடுவிலே சேருமாப் போலே உகந்து நிற்கிற ‘ உலகுக்குத் திலதமாய் நின்ற திருவேங்கடம்” (திருவாய்மொழி 6-10-1 என்று ஸ்ரீபூமிப் பிராட்டிக்கு முக்யமான ஆபரணமாயிருக்கிற திருமலையிலே கண்டு (அகலகில்லேன் என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே அநுஸந்தித்தவர்) ‘ “அகலகில்லேன் இறையும்”(திருவாய்மொழி 6-10-10) இத்யாதி புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரை முன்னிட்டு வாத்ஸல்யாதி, குணங்களை அநுஸந்தித்துக் கொண்டு தம்முடைய அநந்ய கதித்வாநுஸந்தாந பூர்வகமாக பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே பூர்ண ப்ரபதநம் பண்ணினவர்
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-நித்ய ஸூரிகள் பாசுரம் இருக்கிற படி -பரம பதத்தில் மேன்மையை அனுசந்திக்கிற நாம் சர்வ ஸூலபமான திருவடிகளைக் கிட்டுவது என்றோ -என்று -இங்குள்ளார் அங்குப் போவது மேன்மையை அனுபவிக்க -அங்குள்ளார் இங்கு வருவது சீல குண அனுபவம் பண்ண -விஷயம் உண்டாகையாலே வ்யக்தமாக அனுபவிக்க லாவது இங்கே -சங்கோசம் அற்றவர்களுக்கும்-எந்நாள் என்னும் படி இறே சீல குணத்தில் ஏற்றம்
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-இந்திரனுடைய பூமியை மஹா பலி பறித்துக் கொள்ள எல்லை நடந்து மீட்டு பூமியை ரஷித்த உபகாரகன் –-பரன் –சர்வேஸ்வரன்-சென்று சேர் திரு வேங்கட மாமலை–சேஷியானவன் விரும்புகிற தேசம் சேஷ பூதனுக்கு ப்ராப்யமாகச் சொல்ல வேணுமோ
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய் -பிராட்டியோட்டை பழக்கத்தால் ஆஸ்ரிதரை கைவிடாத ஒப்பில்லாத குண பிரதையை யுடையையாய் -எல்லோரோடும் அவரஜனீயமான சம்பந்தத்தையும் உடையையாய் -உன்னை அறியாதே இருக்கிற எனக்கு குணங்களை அறிவித்து அத்தாலே என்னை நடத்துவதும் செய்து திரு நாட்டில் உள்ளாரும் திருமலையில் எனக்கு ஆஸ்ரயிக்கைக்கு எளிதாம் படி வந்து நின்று அருளினவனே –-சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான் அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு உன் திருவடிகளே உபாயமாகப் பற்றினேன் -புருஷார்த்த சாதனமாக என் தலையில் உள்ள வற்றை எல்லாம் தவிர்ந்து என் தலைக்கும் திருவடிகளுக்கு நடுவு விளக்கு வாய் தெரியாத படி செறிந்து புகுந்தேன் என்றுமாம்
10-பிணக்கற தொடங்கி வேத புனித விறுதி சொன்ன சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு (சாத்ய உபாய ஸ்ரவண சசோக சஜாதீயர்க்கு-சாதன பக்தியை கேட்டு துஷ்கரம் என்றும் அபிராப்தி என்றும் நினைத்தலால் பிறந்த சோகமுடைய தன்னை ஒத்த அதிகாரிகளுக்கு என்றவாறு )- பத்துடை அடியவரிலே –பிணக்கற அறு வகை சமயமமும் -என்கிற பாட்டிலே –வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று உபக்ரமித்து –வேத புனித விருக்கை நாவில் கொண்டு-ஞான விதி பிழையாமே -அச்சுதன் தன்னை மேவித் தொழுது உய்ம்மினீர்கள்–5-2-9- என்கிறது அளவாக கீழ் உபதேசித்த சாத்ய சாதன பக்தி ஸ்ரவணத்தாலே –அதினுடைய துச்சகத்வ ஸ்வரூப விரோதித்வங்களை நினைத்துப் பிறந்த சோகத்தோடு கூடி அத்தாலே-எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு-5-7-5-என்னான் செய்கேன் –5-8-3-என்று இருக்கும் தம்மோடு சஜாதீயராம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு-
(பிணக்கறத் தொடங்கி வேதப் புனித விருக்கை நாவில் கொண்டு) “பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து ஞான விதி பிழையாமே அச்சுதன் தன்னை மேவித் தொழுதுய்ம்மினீர்கள்’ (திருவாய்மொழி 5-2-9) என்கிறதளவாகக் கீழுபதேஸித்த ஸாத்ய ஸாதந பக்தி ஸ்ரவணத்தாலே அதினுடைய துஷ்கரத்வாதி தோஷாநுஸந்தா நத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யா நுஸந்தானத்தாலும் ஸோகம் பிறக்கையாலே தம்முடைய ப்ரபத்தி நிஷ்டை துணையாம் படியான அதிகாரம் பிறந்தவர்களுக்கு
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே–வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்-இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்-புற நெறிகளை கட்டு
இதுக்கு விரோதியான சப்தாதி விஷயங்களில் போகிற வழி யாகிற களையைக் கடிந்து பறித்து
இத்தை நெறி என்பான் என் என்னில் இருந்ததே குடியாகப் போகிற மஹாதபம் ஆகையாலே -துர்மார்க்கம் என்னக் கடவது இறே –உணக்கு மின்பசை யற-பறித்தாலும் கிடந்திடத்தே கிடக்குமாகில் பருவம் செய்யும் இறே-அதுக்காக சவாசனமாக விடுங்கோள் -இது செய்வது என் கொண்டு என்னில்-அவனுடைய யுணர்வு கொண்டு உணர்ந்தே தத் உக்த ஜ்ஞானம் -தத் விஷய ஜ்ஞானம் என்னுதல் –
அவனை விஷயீ கரித்த ஜ்ஞானத்தைக் கொண்டு -விலஷண விஷயத்திலே நெஞ்சை வைத்து -இவற்றின் தோஷத்தை தர்சித்து விடுங்கோள்-அவனை சரணம் புக்கு இவற்றை சவாசனமாக விடுங்கோள் எனவுமாம்-தானி சர்வாணி சம்யம்ய -மாம் ஏவ ப்ரபத்யந்தே -சரம ஸ்லோகத்தின் படியே –
மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-அநந்ய பிரயோஜனராய் தொழுது உஜ்ஜீவியுங்கோள் -வேதத்தில் விபூதி விஷயமாக சொன்னவை அன்றிக்கே -பகவத் குணங்களையும் வடிவு அழகையும் ப்ரதிபாதியா நின்றுள்ள ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு –
அச்சுதன் தன்னை –-அஹ்ருதயமாக சொன்னதை ஹ்ருதயமாக நினைத்து –நத்யஜேயம் –என்னுமவன் -அகவாய் பாராதே யுக்தி மாத்ரத்தைக் கொண்டு நழுவ விடாதவனை-ஞான விதி பிழையாமே-
வேதங்களில் பிரதிபாதிக்கிற பக்தி மார்க்கம் தப்பாமே –ஞானம் என்று ஞான விசேஷமான பக்தியைச் சொல்லுகிறது –-பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து--பூவோடு கூடின புகையையும் -ஸமாராதன த்ரவ்யங்களையும் மிகுத்து –-மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–
அநந்ய பிரயோஜனராய் தொழும் கைங்கர்ய நிஷ்டரும் – -பகவரும் -அதுக்கு ஷமர் அன்றிக்கே குண அனுபவம் பண்ணும் குண நிஷ்ட்ருமாய்க் கொண்டு லோகம் அடங்க சம்ருத்தம் ஆயிற்று –-கிடந்த இடத்தே கிடந்து குண அனுபவம் பண்ணும் ஸ்ரீ பரத ஆழ்வானையும்-தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும் போலே இருக்குமவர்கள் –-மேவித் தொழுது உய்ம்மின்கள்-
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5–தம்முடைய வெறுமை திரு உள்ளத்தே படுகைக்கு திரியவும் சொல்லுகிறார் -நீ எனக்கு கைப்படும் படியாக நான் ஒரு சாதன அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ -உன்னோபாதி நான் என்னை அறிவேனோ -என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்க்கிறார் –-எனக்கு -இந்த சர்வ சக்தியைக் கண்ட வாறே -தன் கார்யம் தானே செய்து கொள்ளுகிறான் என்று இருக்கிறாயோ –
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3–உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இ றே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ
11-தந்தனன் மற்றோர் களை கண் இலம் புகுந்தேன் என்று ஸ்வ ஸித்த உபாய நிஷ்டையை உக்த அனுஷ்டானங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில் –அதாவது –திரு விண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழல்-திரு விண்ணகர் மன்னு பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண் மின்களே –என்கிற தம்முடைய உக்தியாலும் –(களை கண் இலம் காண் மின்களே –முன்னிலை வினைமுற்று உபதேசத்தில் நோக்கு ) அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே –என்கிற தம்முடைய அனுஷ்டானத்தாலும் -தமக்கு இந்த சித்தோ உபாயத்தில் உண்டான நிஷ்டையை பிரகாசிப்பிக்கிறார் ஆறாம் பத்தில் -என்கை–
(தந்தனன் களை கணிலம் புகுந்தேனென்று ஸ்வ ஸித்தோபாய நிஷ்டையை உக்த் யநுஷ்டாங்களாலே காட்டுகிறார் என்கிறார்) “தந்தனன் தன தாள் நிழலே”(திருவாய்மொழி 6-3-9) “திருவிண்ணகர் மன்னு பிரான் கழல்களன்றி மற்றோர் களை கணிலம் காண்மின்களே‘ (திருவாய்மொழி 6-3-10) என்கிற தம்முடைய உக்தியாலும் “அடிக்கீழ் அமர்ந்து புகுந்து” (திருவாய்மொழி 6-10-11 என்கிற தம்முடைய அநுஷ்டானத்தாலும் தமக்கிந்த ஸித்தோபாயத் திலுண்டான நிஷ்டையை ப்ரகாஸ்ரிப்பிக்கிறார் என்கிறார் ஆறாம் பத்தில்–
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள்நிழலே.–6-3-9—தன் தாள் நிழல் தந்தான் -தன் பாதாச்சாயைத் தந்தான் -அழித்தாய் உன் திருவடியால் -என்கிறபடியே என் மநோ ரத்தத்தை திருவடிகளாலே அழித்து தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டான் –
நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய்வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண்இலம்; காண்மின்களே.–6-3-10-நித்ய வாசம் பண்ணுகிற உபகாரகன் திருவடிகள் அல்லது வேறு புகல் இல்லை -மாம் ஏக சரணம் வ்ரஜ -என்கிறவன் அன்றிக்கே -திருவடிகள் தானே தஞ்சம் என்கை-காண்மின்களே.-இத்தை எல்லோரும் புத்தி பண்ணுங்கோள் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-படிக் கேழில்லாப் பெருமானைப்-இப்படிக்கு தனக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply