1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
—
கீழ் சொன்ன வியாப்தி ஆகாச வியாப்தி போல் அன்றிக்கே -நிறம் பெறும்படி – அந்த பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் –ஆரணம் -3-20–என்றும் ,-ய ஆத்மா நமந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யம் -என்றும் –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷஸ்ய ஜகத –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-20– -என்றும் – சாஸ்தா சராசரஸ் யைக -இத்யாதிகளிலே சொல்லுகிறபடியே – ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களின் -பிரவ்ருத்தி நிவ்ருதிகள்- ஸ்வாதீனமாம் படி -நியமித்து கொண்டு போருகையாலே –-சர்வ நியந்தாவாய் இருக்கிறவன் – ஒழிவில் காலத்தில் -கைங்கர்ய அபிநிவேசம் போலே – தேச கால விப்ரக்ருஷ்டமான அபதானங்களை -தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்க வேண்டும் என்று – அதி சாபலம் பண்ணின இவர்க்கு -காலோபாதியை கழித்து -சமகாலம் ஆக்கி அனுபவித்து –-இவருடைய இழவைத் தீர்த்து -இவருடைய கரண த்ரய வியாபாரத்தையும் போக்யமாகக் கொள்ள –-அந்த பிரணயித்வத்திலே தோற்று – விரஹ தசையில்-சத்ருச பதார்த்தங்களையும் -சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகக் கருதும்படி பித்தேறி – தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு கூப்பிட –அவ் இழவு தீரும்படி –
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணு அசிந்தியாத்மா பக்தைர் பாகவதஸ் ஸஹ –-இத்யாதிப் படியே –தேச விசேஷத்தில் பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களாய் இருக்கும் இருப்பைக் காட்டி அனுபவித்தாப் போலே -பிரத்யஷமாம் படி -அனுபவிப்பிக்க அனுபவித்து –-இப்படி முக்த போக்யதை மானசமாக பிராபித்து –அதுக்குப் பலமான
தேவதாந்த்ரங்களில் வைராக்யதை உடையரான இவர் – ஐஸ்வர்ய கைவல்யங்களின் அல்ப அஸ்திரத்வ சாவதிகத்வாதி -தோஷங்களையும் – நிந்த்த்ய பதார்த்தங்களாலே சூத்திர தேவதா பஜனம் பண்ணுமத்தின் நிஹீததையும் – ப்ரசம்சா பர வாக்யங்களாலே சொல்லப்பட்டு – பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே அவனோடு விகல்ப்பிக்கலாம் படி அவன் கொடுத்த ஐஸ்வர்யத்தை உடையராய் இருக்கிற பிரம ருத்ராதிகளுடைய அஞ்ஞனாதி களையும் – பாஹ்ய குத்ருஷ்டிகள் மதங்களின் தமோ நிஷ்டதையும் -வெளி இட்டு – தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத் பலமும் கை கண்டிகோள் –
ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரனே ரஷகன் –-அல்லாதார் அடையவம் -தத் ரஷ்ய பூதர் – என்னும் அர்த்தத்தை சாஸ்திர முகத்தால் கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிலிகோள் –
இப்படி நீங்கள் தேறாமைக்கு அடி -அவன் இட்ட வழக்கான -பிரகிருதி சம்பந்தம் –-தத் விமோசன உபாயமும் -அவன் திரு அடிகளில் ஆஸ்ரயணீயம் என்று அறிந்து – தத் ஆஸ்ரயணீயத்தைப் பண்ணி இத்தை தப்பப் பாருங்கோள் –-அவன் திரு அடிகளில் கைங்கர்யமே உங்களுக்கு சீரிய புருஷார்த்தம் என்று – பிரயோஜனாந்தர -தேவ தாந்திர -விரக்தி -முன்னாக -பரதேவதையும் பரம பிரயோஜனமும் அவனே – அவன் விஷயத்தில் கைங்கர்யமே -என்று உபதேசித்து பகவத் ஆஸ்ரயணீயத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்-
நாலாம் பத்திலே கீழ்ச் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போல் அன்றிக்கே-“அந்த: ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” (ஆரணம் 3-20) என்றும்-“ஆத்மாநமந்தரோ யமயதி” (ப்ருஹ தாரண்யகம்) என்றும் “ஸாஸ்தா விஷ்ணு:அஸேஷஸ்ய ஐகதோ யோஹ்ருதி.ஸ்திதி .” ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-17-20 என்றும் சொல்லுகிறபடியே அந்த வ்யாப்தி நிறம் பெறும்படி ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானிட்ட வழக்காம்படி நியமித்துக் கொண்டு போருகையாலே ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன் கீழ் ஒழிவில் காலத்தில் கைங்கர்யாபி நிவேஸம் போலே தேஸ கால விப்ரக்ருஷ்டமான அபதாநங்களை தத்தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று இவர்க்குக் காலோபாதியைக் கழித்து ஸம காலமாக்கி யநுபவிப்பித்து இவருடைய இழவைத் தீர்த்து இவருடைய கரண த்ரய வ்யாபாரத்தையும் யோக்யமாக்கிக் கொள்ள அந்த ப்ரணயித்வ குணத்திலே தோற்று ஸத்ருஸ பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்த்தங்களையும் அவனென்று பிச்சேறி தேஸ விஸேஷத்திலே அநுபவத்தை யாசைப்பட்டுக் கூப்பிட்ட இவர்க்கு அவ் விழவும் தீரும்படி “ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ” (லைங்கம்) என்கிறபடியே தேஸ விஸேஷத்திலே பெரிய பிராட்டியாரும் தானுமே போக்தாக்களா யிருக்கிற இருப்பை ப்ரத்யக்ஷாநுபவம் போலே அநுபவத்துக்கு விஷயமாக்க இவருமநுபவித்து மாநஸாநுபவமாகையாலே தத் பலமான பகவத் வ்யதிரிக்தங்களான தேவதாந்தரம் முதலானவற்றிலே வைராக்யத்தை உடையராயிருக்கிற இவரை ஐஸ்வர்ய கைவல்யங்களினுடைய அல்பாஸ்திரத்வாதி தோஷங்களையும் நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு ஷுத்ர தேவதா பஜனம் பண்ணுகிற இதினுடைய தண்மையையும் ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலே சொல்லப்பட்டு பகவத் விபூதி பூதராய் இருக்கச் செய்தே இவனோடே விகல்பிக்கலாம்படி அவனாலே தத்தமான ஐஸ்வர்யத்தை உடையராயிருக்கிற ப்ரஹ்ம ருத்ரர்களுடைய அஜ்ஞாந அஸக்தி ஸாபேக்ஷத்வாதிகளையும், பாஹ்ய குத்ருஷ்டி மதங்களினுடைய தமோ நிஷ்டதைகளையும் வெளியிட்டு தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்து தத்பலமும் பெற்றுப் போனிகோள்; ஸர்வேஸ்வரனுடைய ஜகந் நிகரணாதி ஸர்வ சேஷ்டிதங்களாலும் ஸர்வேஸ்வரனே ரஷகன் அல்லாதாரடைய ரக்ஷ்ய பூதரென்னும் அர்த்தத்தை வ்யாஸ பராஸராதிகளுடைய வசநங்களாலே கண்டு வைத்தும் தேற மாட்டுகிறிகோள்; இப்படி நீங்கள் தேறாதிருக்கைக்கடி அவனிட்ட வழக்கா யிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்; தத் விமோசநோபாயம் அவன் திருவடிகளே என்றறிந்து ஆஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள், அவன் திருவடிகளில் கைங்கர்யமே உங்களுக்குச் சீரிய புருஷார்த்தம் என்று ப்ரயோஜநாந்தரங்களுடையவும் தேவதாந்தரங்களினுடையவும் விரக்தி முன்னாக பர தேவதை ஸர்வேஸ்வரனே என்றும் தத் விஷய கைங்கர்யமே பரம ப்ரயோஜநமென்றும் உபதேஸித்து பகவத் ஸமாஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் என்கிறார்.
(1 )-ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா –ஒழிவில் காலத்துக்கு சேர -பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கிப்(2-)போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் (3)-தேச தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீர கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட வீவில் இன்பம் கூட்டினை என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான தேவதாந்தர ஆத்ம ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர் (4)-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சாவாதிகத் வாதிகளையும் (5-)ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் (6)-பேச நின்ற தேவாத ஞான சக்தி சாபேஷத்வாதிகளையும் (7-)இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி ஓடிக் கண்டீர் (8)-கண்டும் தெளிய கில்லீர் அறிந்து ஓடுமின் ஆட் செய்வதே உறுவது ஆவது என்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயனத்தை ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் –
1 -ஈசனை ஈசனின் ஈசன் பால் என்ன ஏர் கொள் வானத்தும் ஆயே என்கிற வியாப்தி நிறம்பெற தனிக் கோல் செலுத்தும் -சர்வ நியந்தா – மருகலில் ஈசனை –4-1-10- ஈசன் ஞாலம் உண்டுமிழ்ந்த–4-3-2-
ஈசன் பாலோரவம் பறைதல் என்னாவது இலங்கியர்க்கே -4-10-4–என்று நியந்தரு வாசக சப்தத்தாலே சொல்லும் படி –ஏர் கொள் ஏழு உலகமும் துன்னி முற்றுமாக நின்ற சோதி ஞான மூர்த்தியாய் -4-3-8–என்றும்-வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-4-5-9- – என்றும்-ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே -4-9-7–என்கிற
கீழில் பத்தில் சர்வ விஷயமாகச் சொன்ன வ்யாப்தி -ஆகாச வியாப்தி போல் ஆகாமே நிறம் பெரும்படியாக – வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செல்ல-4-5-1- -என்கிறபடி உபய விபூதியும் தன் நியமனத்திலே ஆம் படி –தன் ஆக்ஜை நடத்துகிற சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் ஒழிவில் காலத்துக்கு சேர -(பாலனாய் ஏழு உலகு -திருவாய் மொழியுடைய தாத்பர்யம் இது முதல் )-பூர்வ போகங்களை ஒதுமால் எய்தின சாபலத்துக்கு சேர -சம காலமாக்கி ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -என்று அடிமை செய்யப் பாரிக்கிற அளவில் சர்வ தேச சர்வ அவஸ்தைகளோபாதி சர்வ காலத்திலும் வேணும் என்று கீழ் கழிந்த காலத்தில் அடிமையையும் ஆசைப் பட்டதுக்குச் சேரும் படி –
பாலனாய் ஏழு உலகு உண்டு -தொடங்கி – தேச கால விப்ரக்ருஷ்டங்களான அவனுடைய அபதானங்களை – தத் தத் தேச கால விசிஷ்டமாக அனுபவிக்கையில் அபிநிவேசத்தாலே –
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேலணி பைம் பொற் துழாய் என்றே ஒதுமால் எய்தினள்-என்று பூர்வ காலீன போகங்களையே வாய் புலற்றும் படி பிராந்தியை அடைந்த
சாபலத்துக்கு அனுரூபமாக காலத்தினுடைய பேத வ்யவஹாரத்துக்கு உடலான உபாதியைக் கழித்து ஒரு போகி ஆக்குகையாலே -சம காலமாக்கி அனுபவிப்பித்து–
(ஈசனை ஈசன்பாலென்ன ஏர்கொள் வானத்தும் ஆயே என்கிற வ்யாப்தி நிறம் பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா ) “மறுகலிலீசனை” (திருவாய்மொழி 4-1-10)’ ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த” (திருவாய்மொழி 4-3-2) “ஈசன்பாலோர் அவம் பறைதல்’ (திருவாய்மொழி 4-10-4) என்று நியந்த்ரு வாசகமான ஸப்தத்தாலே சொல்லும்படி ‘ஏர்கொளேழுலகமும் துன்னி முற்றுமாகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய்” (திருவாய்மொழி 4-3-8) “வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த் தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றான்” (திருவாய்மொழி 4-5-9) “ஆயே இவ்வுலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே” (திருவாய்மொழி 4-9-7) என்று கீழ்ப்பத்தில் சொன்ன வ்யாப்தி ஆகாஸ வ்யாப்தி போலன்றிக்கே அது நிறம் பெறும்படி “வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்ல” (திருவாய்மொழி 4-5-1) என்னும்படி உபய விபூதியும் தன் நியமனத்திலே யாம்படி தன் ஆஜ்ஞையை நடத்துகிற ஸர்வ நியந்தாவான ஸர்வேஸ்வரன் (ஒழிவில் காலத்துக்குச் சேர பூர்வ போகங்களை ஓதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கி) “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி (திருவாய்மொழி 3-3-1) என்று ஸர்வதேஸ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் அடிமை செய்ய வேணுமென்று கீழ்க் கழிந்த காலத்தில் அடிமையையும் ஆசைப்பட்டதுக்கு ஒக்க தேஸ கால விப்ரக்ருஷ்டங்களாயிருக்கிற அவனுடைய அபதானங்களை “மாதர் மா மண் மடந்தை பொருட்டு இத்யாதி, ஒதும் மால் எய்தினள்” (திருவாய்மொழி 4-2-6) என்று தத் தேஸ கால விஸிஷ்டமாக அநுபவிக்க வேணுமென்று பிச்சேறும்படியான இவருடைய சாபல்யத்துக்குச் சேர காலோபாதியைக் கழித்து வர்த்தமாந காலம் போலே ஸம காலமாக்கி அநுபவிப்பித்து–
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-மறுகல் இல் ஈசனைப் பற்றி ஹேய ப்ரத்ய நீகனாகவும் ஞான ஏக ஆகாரகனாகவும் அனுசந்தித்து அவனோடு சஜாதீயனாகவும் ஆத்மாவை அனுசந்தித்து-மறுகல் இல்-மறுகுகிற சமயத்தில் -சரீர விஸ்லேஷ சமயத்தில் என்னவுமாம் –
விடாவிடில், வீடு அஃதே.–-இப்படி துஸ் சாதகம் ஆகையால் -ஈஸ்வர சாபேஷம் யாகையாலும் -பகவத் அனுபவத்தை குறித்து தண்ணிது யாகையாலும்-தண்ணிது ஆனது தானே ஸ்த்திரம் ஆகையால் மிகவும் அபுருஷார்த்தம் ஆகையால் -அபிராப்த புருஷார்த்தம் ஆகையால் அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்று கீழ்ச் சொன்ன கைங்கர்யமே புருஷார்த்தம் –
பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-சர்வேஸ்வரனுக்கு -ரக்ஷகன் என்னும் பேரேயாய் உடைமை நோவு பட விட்டிட்டு இருக்குமோ -என்னில்-ஞாலம் உண்டு உமிழ்ந்த-ஜகத்துக்கு சர்வ பிரகார ரக்ஷகன்-எந்தை-அந்த ரஷானத்தாலே என்னை எழுதிக் கொண்டவன்-ஏக மூர்த்திக்கே.–
அத்விதீயமான திரு மேனியை உடையவனுக்கு-சர்வ கந்த என்கிற விக்கிரஹத்தை உடையவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சம் ஆவதே என்கிறார் –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-திருக்குருகூர் அதனுள்-ஈசன் பால் –
அஜஹத் ஸ்வபாவன் ஆகையால் இஸ் ஸுலப்யத்திலேயும் மேன்மை குறையாது இருக்கிறபடி
ய பரஸ்ஸ மஹேஸ்வர -என்றும் ஈஸதே பகவா நே க -என்றும் பிராமண பிரசித்தனான சர்வேஸ்வரன்
ஈசன் ஈசானன் என்கிற இது மஹாவ்ருக்ஷம் என்னுமா போலே சமாக்கிய மாத்ரமேயாய் அர்த்தம் இன்றிக்கே இருக்கை –-ஓர் அவம் பறைதல்-அநீசரத்வ சாதகமாக ஏதேனும் ஒரு ஆபாச யுக்திகளை சொல்லுகிறது -அத்தை தாம் சொல்ல மாட்டாமையாலே -அவன் என்கிறார் –பறைதல் -ஸ்வ கோஷ்டிகளிலே ரஹஸ்யமாக சொல்லுமது ஒழிய சதாஸ்யம் அன்றிக்கே இருக்கை –என் முன்பே சொல்லுவது அன்று-என்னாவது இலிங்கியர்க்கே?–-ஆனுமா நிகர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு –அந்த தேவதைகளுக்கு ஓர் உத்கர்ஷம் பெற்றி கோள் அன்று – ஸமாச்ரயணத்துக்கு ஓர் பலம் பெற்றி கோள் அன்று உங்கள் அனுமானம் ஸ்ருதி சந்நிதியில் ஜீவிக்க மாட்டாது நீங்கள் சொல்லுகிற சமாக்கியை கபால மோக்ஷம் ஆகிற அர்த்த சாமர்த்யத்தின் முன்பு நிற்க மாட்டாது –
என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8—இவரைப் பெற்ற பிரியத்தால் வியாப்திலேயும் ஒரு புஷ்கல்யம் உண்டாயிற்று என்னுதல்-இவரைப் பெறுகையாலே விபூதி த்வயமும் புதுக் கணித்தது-துன்னி முற்றும் ஆகி நின்ற-எங்கும் ஓக்க நெருங்கி வியாபித்து நின்ற நிலை -ஜாதி வியக்தி தோறும் பரி ஸமாப்யா வர்த்திக்குமா போலே –
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9–ஸ்வர்க்கத்திலும்-அதுக்கு உள்ளாய் பெரிதாய் இருக்கிற மஹர் லோகாதிகளிலும் -பூமியிலும் -கீழ் உண்டான பாதாளாதிகளிலும்
எண் திசையும் தவிராது நின்றான் தனை,-சர்வ தேசங்களிலும் உண்டான தேவாதி சகல பதார்த்தங்களிலும் ஜாதி போலே வியக்தி தோறும் பரி சாமாப்ய வர்த்திக்கிறவனை-இத்தால் -அணு த்ரவ்யங்களிலும் விபுவான ஆகாசாதிகளிலும் வியாவ்ருத்தி சொல்கிறது – அணுவுக்கு ஸர்வத்ர வியாப்தி இல்லை -விபு த்ரவ்யத்துக்கு நியன்தருதயா வியாப்தி இல்லை
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7–ஆயே -என்றது தாயே என்றதாய் -தாய் போலே பரிவனானவனே –மாதா பிதா பிராதா –நீயே ஆயே -என்று கூட்டவுமாம்-இந்த லோகத்தில் ஸ்தாவர ஜங்கமமாத்மகமாய் உள்ள சகல பதார்த்தங்களும் நீயே என்கிற சொல்லுக்கு உள்ளே யாம் படியாக -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-வீற்றிருந்து –-வேறு பாடு தோற்ற இருந்து
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் சேஷி என்று தோற்ற இருக்கை-ஸ்வ வ்யாதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும் சேஷமாக உடையான் ஆகையால் உண்டான ஆனந்தத்தால் வந்த இறுமாப்பு தோற்ற இருக்கை – சேதனர்க்கு பரஸ்பரம் பேதம் உண்டாகிலும் ஞான ஏக ஆகாரதையாலும் பகவத் சேஷத்வ ஆகாரதையாலும் சாம்யம் உண்டு – விபுத்வ நியந்த்ருத்வ சேஷித்தவாதிகள் இவனுக்கே உள்ளது-இருந்து -இப்படி நிர்வஹிப்பது-சுற்றும் பயணம் வந்த வன்னியம் அறுத்தோ என்னில் -தான் இருந்த இருப்பில் தனி யாணை செல்லும் படியாய் யாயிற்று இருப்பது-ஏழுலகும் – உபய விபூதியும் சொல்லிற்று ஆதல் -லீலா விபூதியை சொல்லிற்று ஆதல் –-உபய விபூதி பரமான போது சதுர்வித பிரக்ருதியும் த்ரிவித ஆத்மவர்க்கமும் லீலா விபூதி பரமான போது பாதாளாதிகளும் பூமியும் கூட ஒன்றாய் அந்தரிஷிதிகள் ஆறுமாக கடவது-அப்போது வீவில் சீர் -நித்ய விபூதியாகக் கடவது -உபய விபூதி பரமான போது கல்யாண குணமாக கடவது-தனிக்கோல் செல்ல,-தன்னுடைய அத்விதீயமான சாசனம் செல்லும் படி
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6—வராஹ கல்பாதியாய் அவதாரகாலம் ஆகையாலே ஸ்லாக்யமான காலத்திலே மஹா பிருத்வியை அண்ட பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து அருளினவருடைய திருவடிகளில்-ரோமாந்தரஸ் த்தா முனயஸ் ஸ்துவந்தி -என்று சனகாதிகள் இட்ட திருத் துழாயை யாயிற்று இவள் ஆசைப்படுகிறது-ஓதும்மால் எய்தினள்-எப்போதும் இத்தையே சொல்லும்படியான பிரேமத்தை -பிரமத்தை -உடையவள் ஆனாள்-என்றன் மடந்தையே.– இவள் பருவத்தை கண்டார் யாயிற்று மால் எய்துவர் -அத்தலை இத்தலை யாவதே –
2-(கோவை வாயாள்-திருவாய் மொழி தாத்பர்யம் இது முதல்) -போதால் வணங்காமை தீர்த்த பிரணயித்வத்தாலே காதல் மையல் ஏறிய பித்தாய் பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே – என்று தொடங்கி – ஏக மூர்த்திக்கே பூம் தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் பூம் தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – என்று விரோதி நிரசனம் பண்ணுகிற அவ்வவ காலங்களிலே உதவி புஷ்பாதி உபகரணங்களை கொண்டு சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேன் ஆகிலும் -விலஷண விக்ரக யுக்தனாய் -சர்வேஸ்வரனாய் இருக்கிறவன் -என்னுடைய கரண த்ரய வியாபாராதிகளையே தனக்கு போக்ய வஸ்துகள் எல்லாமாகக் கொள்வதே ! என்று இவர் தாமே ஈடுபடும்படி பண்ணி -அவ்வவோ காலங்களில் தனக்கு உதவி அடிமை செய்யாத இழவை அவன் தீர்த்த பிரணயித்வ குணத்திலே –
காதல் மையல் ஏறினேன் -என்கிறபடியே பிரேமம் மேல் இட்டு அறிவு கலங்கினவாறே – வெள்ளக் கேடாக ஒண்ணாது என்று அவன் அல்பம் பேர நிற்க (மண்ணை இருந்து துழாவி -திருவாய் மொழி சாரம் இது முதல் )-அவனோடு சத்ருச பதார்த்தங்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும் அவனாகவே கருதி பேசும்படியாக பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே -என்னும்படி பித்தேறி –
(போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையலேறிய பித்தாய்) “பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே” (திருவாய்மொழி 4-5-1என்று; “பூசுஞ்சாந்தென் நெஞ்சமே இத்யாதி ஏக மூர்த்திக்கே” (திருவாய்மொழி 4-3-2) என்று விரோதி நிரஸநம் பண்ணுகிற அவதார காலங்களிலே உதவி புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு ஸிஸிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் ஸர்வ நியந்தாவாய் ப்ரளயாத்யாபத் ஸகனானவன் தன்னுடைய அத்விதீயமான விக்ரஹத்துக்கு என்னுடைய கரண த்ரய வ்யாபாரத்தையும் தனக்கு போக்யமாகக் கொள்ளுவதே என்று இவர் தாமே ஈடுபடும்படி இவருடைய இழவு தீர்த்த அவனுடைய ப்ரணயித்வ குணத்திலே “காதல் மையலேறினேன்” (திருவாய்மொழி 4-3-9 என்கிறபடியே அவன் பக்கல் உண்டான ப்ராவண்யாதிஸயத்தாலே அறிவழிய அது வெள்ளக் கேடாகாதபடி அவன் அல்பம் பேர நிற்க அவனோடு ஸத்ருஸ பதார்த்தங்களையும் ஸம்பந்தி பதார்தங்களையும் அவனென்று ப்ரமித்து “என் பெண்கொடி ஏறிய பித்தே’‘ (திருவாய்மொழி 4-4-6) என்று பிச்சேறி–
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-நின்-பூவை வீயாம் மேனிக்குப்
பூவை ஒழியா மேனிக்கு -பூவை ஒழியச் செல்லாத மேனி என்னுதல்-பூவைவீ யுண்டு -பூவைப் பூ -அது தான் மேனி -காயாம்பூவின் தன்மை உடைத்தாகை–புஷ்ப ஹாஸ ஸூகுமாரமான திருமேனி
மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே-அவ்வடிவுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –
ஸூ கந்த மேதத் –அப்படி சாந்தில் உள்மானம் புறமானம் அறியுமவனுக்கு பூசும் சாந்து என் நெஞ்சமாய் விடுவதே –
பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இ றே சாந்துக்கு பூக்கட்டி இ றே மனம் கொடுப்பது-; வான் பட்டாடையும் அஃதே; ஓன்று ஒரு போக உபகாரணமாகை தவிர்ந்து -அவனுக்கு பும்ஸவதாவஹமான பரிவட்டமும் என் யுக்தி யாவதே
வான் பட்டாடையும்-பெரு விலையனான திருப் பரிவட்டம்-தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;-தேஜஸ் கரமான திரு ஆபரணமும் என்னுடைய அஞ்சலி யாவதே-ராஜ மஹேந்த்ரன் படி போலே இவருடைய அஞ்சலி அவனுக்கு உதகர்ஷ ஹே துவாய் இருக்கிற படி
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9—உன்னுடைய முடிவு இல்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தியின் வெள்ளத்தின் கரையில் என்று செல்லக் கட வேன்-ஒரு காலத்திலும் முடியாதே – ஆனால் நீர் பேச உபக்ரமிப்பான் என் என்ன –ப்ரேமாந்தனாய் பிரமித்தேன்
கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6—தாய் உதவாத தனிமையிலே பூதனை தாய் வடிவு கொண்டு நலிய புக அவளை முடித்து தன்னை அபகரித்த உபகாரத்துக்கு தோற்றாயிற்று இவள் பிச்சேறிற்று-பூத் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி ஆறு தரு புணர்ச்சி –
அசிந்திதமாக கையிலே பூவைக் கொடுத்தல் -ஆணையின் கையிலே அகப்பட்டவர்களை மீட்டல் -ஆற்றிலே அமிழா நிற்க எடுத்தல் செய்தவர்களுக்கு அவர்கள் அநன்யார்ஹைகள் –தம் தாமை உண்டாக்கினவர்களுக்கு இறே அங்கு-அவன் தன்னை உண்டாக்கிக் தந்தத்துக்கு தன்னை அநந்யார்ஹம் ஆக்கினாள்-என் பெண் கொடி-நிருபாதிகமான ஸ்த்ரீத்வத்தை உடைய என் மகள் ஏறிய பிச்சு –
3-(சீலமில்லாச் சிறியேனேலும்-பொருள்)தேச தூரத்துக்கு கூவியும் கொள்ளாய் என்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட தேச விசேஷத்தில் அனுபவத்தை ஆசைப் பட்டு தேச தூரத்தைப் பற்ற –
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே -என்று உன் வடிவு அழகை இங்கே வந்து அனுபவிப்பித்து அருளுதல்- என்னை அங்கே அருளப் பாடு இடுதல் -செய்கிறிலை என்று -கூப்பிட்ட இழவும் தீர –(நண்ணாதார் முறுவலிப்ப சாரம்) ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் கண்டு -என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்த்தாக்களாய் -அவ் விபூதியில் உள்ளார் அடைய போகோ உபகரண கோடியாம்படி கண்டு வைத்த நேர்பாட்டை நான் கண்டேன் என்னும்படி – கீழ் காலோ உபாதியை நீக்கி சமகாலம் ஆக்கினார் போலே -அவ் விபூதியில் அனுபவத்தையும் இங்கு இருந்தே அனுபவிக்கலாம் படி ஒரு போகியாக பிரகாசிப்பிக்க (வீற்று இருந்து ஏழு உலகம் சாரம்)-வீவில் இன்பம் கூட்டினை– என்று முக்த போக மானச ப்ராப்தி பலமான வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்றும் , கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே –4-9-8–என்று அவனைக் கிட்டி நிரதிசய ஆனந்தியாகப் பெற்றேன் –யாவர் சிலர்க்கும் தம் தம்மால் சேர்த்து கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய் – நான் அனுபவிக்கப் பெற்றேன் என்ற அது மானச அனுபவம் ஆகையாலே -இப்படி முக்தருடைய போகமான-
அவ் அனுபவத்தில் மானசமாக உண்டான பிராப்திக்குப் பலமாக – தேவதாந்திர ஆத்மா ஆத்மீய லோக யாத்ரை ஐஸ்வர்ய அஷரங்களில் வைராக்கியம் -உன்னித்து உயிர் உடம்பினால் கொடு உலகம் வேட்கை எல்லாம் ஒழிந்தேன் என்ன உடையரானவர்-உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள்–4-6-10–என்று தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு-தெய்வத்தை தொழுது அறியாள் என்னும் படி -தேவதாந்தரங்களில் வைராக்யத்தையும் –-உயிரினால் குறைவிலமே -4-8-10–என்றும் ,
உடம்பினால் குறைவிலமே–4-8-9- -என்னும் படி ஆத்ம ஆத்மீயங்களில் வைராக்யத்தையும் –
கொடு உலகம் காட்டேல்—4-9-7-என்னும் படி லோக யாத்ரையில் வைராக்யத்தையும் -,-வேட்கை எல்லாம் விடுத்து -4-9-9–என்று சமுதாயவேனவும் ஐம் கருவி கண்ட இன்பம் ஒழிந்தேன் சிற்று இன்பம் ஒழிந்தேன்—4-9-10-என்று ப்ருதக்தவேனவும் சொல்லும்படி ஐஸ் வர்யத்திலும் அஷர சப்த வாச்யமான ஆத்ம அனுபவ கை வல்யத்திலும் உண்டான வைராக்யத்தையும் உடையரான இவர்–
(தேஸ தூரத்துக்குக் கூவியும் கொள்ளாய் என்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட) “கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே” (திருவாய்மொழி 4-7-1) என்று உன்னுடைய வடிவழகை வந்தநுபவிப்பித்தருளுதல் அங்கே அருளப்பாடிடுதல் செய்கிறிலை என்று தேஸ விஸேஷத்தில் அநுபவத்தை ஆசைப்பட்டுக் கூப்பிட்ட இவருக்கு “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக் கண்டசதிர் கண்டொழிந்தேன்” (திருவாய்மொழி 4-9-10) என்று நித்ய விபூதியிலே பெரிய பிராட்டியாரும் நீயுமே போக்தாக்களாய் அவ் விபூதி யிலுள்ளாரடைய போகோபகரண கோடியிலேயாம் படி கண்டு வைத்த கட்டளையை நான் கண்டேன் என்று கீழ் காலோபாதியைக் கழித்து ஸம காலமாக்கினாப் போலே அவ் விபூதியிலநுபவத்தை இங்கே யிருந்தே அநுபவிக்கலாம்படி ஒரு போகியாக ப்ரகாஸிப்பிக்க (வீவிலின்பம் கூட்டினை என்று முக்த போகம்) “வீவிலின்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே” (திருவாய்மொழி 4-5-3) என்று அவனைக் கிட்டி நிரதிஸயாநந்தியாகப் பெற்றேன், “கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே” (திருவாய்மொழி 4-9-8) என்று ஸ்வ யத்நத்தாலே கிட்டுவார்க்குக் கிட்ட வரிதாயிருக்கிற திருவடிகளை உன்னருளாலே பெற விருக்கிற நான் பெற்றநுபவிக்கும்படி கூட்டினாய், நானுங்கண்டநுபவிக்கப் பெற்றேன் என்று பேசும்படியான முக்த போகமான இவ்வநுபவம் மாநஸாநுபவமாய் அந்த மாநஸ ப்ராப்திக்குப் பலமான (தேவதாந்தராத்மாத்மீய லோக யாத்ரைஸ்வர்ய அக்ஷரங்களில் வைராக்யம் உன்னித்துயிருடம்பினால் கொடுவுலகம் வேட்கை யெல்லா மொழிந்தேனென்ன உடையரானவர்) “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்” (திருவாய்மொழி 4-6-10) என்று தன்னெஞ்சாலே துதித்து ஒரு தேவதைக்கு மூச்சுண்டென்று தொழுதறியாள் என்று தேவதாந்தர விஷயமான வைராக்யத்தையும் “உயிரினால் குறைவிலமே” (திருவாய்மொழி 4- 8-10) “உடம்பினால் குறைவிலமே’ (திருவாய்மொழி 4-8-9 என்று ஆத்மாத்மீயங்களில் வைராக்யத்தையும் “கொடு வுலகம் காட்டேல்’ (திருவாய்மொழி 4-9-7) என்று லோக யாத்ரையில் வைராக்யத்தையும் “வேட்கை யெல்லாம் விடுத்து” (திருவாய்மொழி 4-9-9) என்று ஐஸ்வர்யத்தில் வைராக்யத்தையும் “சிற்றின்பம் ஒழிந்தேன்” (திருவாய்மொழி 4-9-10) என்று அக்ஷரமென்று சொல்லப்படுகிற ஆத்மாநுபவத்தில் வைராக்யத்தையும் உடையரான விவர்–
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-இப்படி விடாயைப் பிறப்பிக்கும் வடிவு -விடாய்த்தார்க்கு காட்ட அன்றோ வடிவு படைத்தது -பக்தா நாம் அன்றோ –-காண-காண்கை இறே பிரயோஜனம் –சதா பஸ்யந்தி இறே-கருமுகை மாலை தேடுவார் சூட வன்றோ தேடுவது -சும்மாட்டைக் கொள்ள அன்றே-வாராய்; இப்போதும் அவன் வரவால் பெறுகை முறை என்கை -வருகிறிலை
கூவியும் கொள்ளாயே. இஷ் ஷூ த்ர ஜந்துவின் பக்கலிலே நான் செல்லவோ என்று இருந்தாயாகில் என்னை அழைத்துக் கொள்ளலாம் –அதுவும் செய்கிறிலை
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10–இவள் நித்ய அநபாயினி இறே
நீயும் அவளுமே என்னும் படி இருவருடையவும் அபிமானத்துக்கு உள்ளே ஒரு விபூதியாக அடங்கும் படி இருக்கை -நான்யோர் வித்யதேபரம்-என்னா நிற்க –வாசல்கள் தோறும் ஈஸ்வரர்களாய் இருக்கை அது போல் அன்றிக்கே இருக்கை –நிலாவுகை -வர்த்திக்கை-கண்ட சதிர் கண்டொழிந்தேன் -பார்த்து வைத்த வாய்ப்பு -உங்கள் இவருடைய அனுபவமும் நித்தியமாய் செல்லும்படி நீ பார்த்து வைத்த வாய்ப்பைக் கண்டு -அதாவது அவ் விபூதியில் உள்ளார் சந்த அனுவர்த்திகளாம் படி பண்ணி வைத்த சதிர் -அத்தைக் கண்டு-; அடைந்தேன் உன் திருவடியே.–-உன் திருவடிகளை அடையவும் பெற்றேன் –
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-–நித்தியமாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையேன் ஆனேன்-அவனுடைய ஆனந்தத்துக்கும் தம்முடைய ஆனந்தத்துக்கும் வாசி சொல்கிறார்
மேவியே--அவனுடைய ஆனந்தம் ஸ்வதஸ் சித்தம்-என்னுடைய ஆனந்தம் -அவனை மேவி வந்தது
அவனுடைய ஆனந்தம் தான் தோன்றி-என்னுடைய ஆனந்தம் அபிஜாதம்-ஏஷ ஹ் யேவா நந்தயாதி –
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8-–துஷ் ப்ராபமான திருவடிகளிலே –என்னால் சாத்தியம் இன்றிக்கே நீயே தர காணுமது என்கை –எஞ்ஞான்று கூட்டுதியே?–-இன்ன நாள் செய்யக் காட்டுவோம் என்று எல்லை பெறிலும் தரிக்கலாம்-மா ஸூ ச என்று ஒரு வார்த்தை பெறிலும் ஸ்திதி தோஸ் மிக்கது ஸந்தேஹ-என்று தரிக்கலாம்-பூர்ணே சதுர்த்தசே வர்ஷே என்று நாள் எல்லை பெற்ற ஸ்ரீ பரத ஆழ்வானை போலே –விரோதியைப் போக்கிலும் தன்னைப் பற்றியே போக்க வேணும்-தன்னைப் பெறிலும் தன்னாலே பெற வேணும்-மாமேவ ப்ரத்யந்தே –தமேவ க்ரணம் கச்ச
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10—உன்னித்து -மதித்து -நெஞ்சால் ஒன்றாக நினைத்து கிருஷ்ணனை ஒழிய வேறு ஒரு தேவதையை தொழாள்-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-தேவதாந்தர்ய ஸ்பர்சம் பொறாத இவளுக்கே இந்த பரிஹாரம் பண்ணுவது
உடம்பினால் குறையில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர்குழாம் துணித்துஉகந்த
தடம்புனல சடைமுடியன் தனிஒருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10–பிராட்டி திரு மார்பை அபிமானித்து இருக்குமா போலே துர்மானிக்கும் அணையலாம் படி உடம்பு கொடுத்து இருக்குமவன்-இப்படி பொதுவான உடம்போடு என்னை அணைக்கைக்கு அவன் மேல் விழாத பின்பு என்னால் எனக்கு என்ன கார்யம் உண்டு-முன்பு ஆத்மாத்மீயங்களைவேண்டா என்றது -அதுக்கு எல்லாம் ஆச்ரயமான ஆத்மவஸ்துவும் வேண்டா என்கிறாள் –
மேகலையால் குறையில்லா மெலிவுற்ற அகல்அல்குல
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகுஅணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9–இப்படி சர்வரையும் ஆதரிக்கிறவன் என்னை ஆதரியான் ஆகில் என் உடம்பைக் கட்டிக் கொண்டு கிடக்கவோ–அவன் பக்தாநாம் என்று இருக்குமா போலே இவளும் அவனது என்று இறே இருப்பது –
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-கொடிதான லோகம் -சப்தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி-
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10–சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூ கத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூ கத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகம் இவற்றை-ஒழிந்தேன் -விட்டேன்
(இது முதல் பர உபதேசம் செய்து அருளியவை )-4-ஒரு நாயகம் என்று ராஜ்ய ஸ்வர்க்க ஆத்ம அனுபவ அல்ப அஸ்த்ரத்வ சா வாதிகத்வாதிகளையும் ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் -4-1-1–என்று தொடங்கி- ராஜ்ஜியம் நாம மகா வியாதி ரசிகி த்ச்யோ விநாசன பிரதாரம்வா ஸூதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா – என்கிற ராஜ்ய ஐஸ்வர்யத்தின் அல்பத்தையும் – குடி மன்னு மின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்று
தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி–ஸ்ரீ கீதை-9-21 -என்கிற ஸ்வர்க்க அனுபவத்தின் அஸ்த்ரத்வத்தையும் –-இருகலிறப்பு-4-1-10- -என்ற ஆத்ம அனுபவத்தின் சாவதிகத்வத்தையும் – ஆதி சப்த்தாலே -துக்க மிஸ்ரத்வ -துச்சாததத்வ-நிச்சாரத்வங்களை சொல்லுகிறது-
(ஒருநாயகம் என்று ராஜ்ய ஸ்வர்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதி கத்வாதிகளையும்) ஒரு நாயகத்திலே ‘ஒரு நாயகமாய் ஓட உலகுடனாண்டவர் பெருநாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்” (திருவாய்மொழி 4-1-1 )என்று “ராஜ்யம் நாம மஹா வ்யாதி : அசிகத்ஸ்யோ விநாமந: ப்ராதரம் வா ஸுதம் வாபி த்யஜந்தி கலு பூமிபா:” என்கிறபடியே ராஜ்யைஸ்வர்யத்தினுடைய அல்பதையையும் ‘குடிமன்னுமின்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்” (திருவாய்மொழி 4-1-9) என்றும் “ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி” (கீதை 9-21 என்று ஸ்வர்க்காநுப வத்தினுடைய ௮ஸ்திரத்வத்தையும் “இறுகலிறப்பு” (திருவாய்மொழி 4-1-10) என்று ஆத்மாநுபவத்தினுடைய ஸாவதிகத்வத்தையும்-
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-முன்பு ஸார்வ பவ்மன் என்று சொல்லுமதுவும் போய் நாய் கவர்ந்த காளான் என்று நிரூபகமாய் –-சிதைகிய பானையர்--கண்ட இடம் எல்லாம் பொளிந்து-உபயோக அர்ஹம் இன்றிக்கே பொகட்டு கிடந்தது ஒன்றை எடுக்கும் –-பண்டு பொன் காலத்தில் அல்லது ஜீவியானே-பெரு நாடு காண-முன்பு ராஜாக்கள் தங்களைக் காண அவசரம் பெறாதே நிற்கும் படி இருந்தவர்கள் இருந்ததே குடியாக திரண்டு காணும் படி–தாங்கள் சம்ருத்தராய் வாழ்ந்த தேசத்தில் உள்ளார் எல்லாரும் காணும் படி-இம்மையிலே-தாங்கள் ஜீவித்த ஜென்மத்திலே
பிச்சை தாம் கொள்வர்-முன்பு ராஜாக்களுக்கு ராஜ்யம் வழங்கும் –-இன்று பிக்ஷை தனக்குத் தேட்டமாய் இருக்கும் –-முன்பு ராஜாக்கள் ரத்நாதிகளை பச்சையாகக் கொண்டு வந்தால் அநாதரித்து இருக்குமவனுக்கு பிக்ஷை திட்டமான படி முன்பு ராஜாக்கள் கொண்டு வந்த பச்சையை ஆள் இட்டு இறே வாங்குவது
படி மன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன்வென்று,
செடி மன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9-பூமியிலே போலே அன்றிக்கே தீர்க்க காலம் இருக்கலாய் விலக்ஷணமான ஸ்வர்க்கம் பெற விரகு இல்லை –
தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஸாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா கதாகதம் காமகாமா லபந்தே–9-21-விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள்.
இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-இந்த சங்கோசத்தையும் மோக்ஷமாக நினைத்து இருக்கும் ஞான நிஷ்டனுக்கும்-இறுகல்-பகவத் அனுபவத்தைப் பற்ற தமக்கு சங்குசிதமாய் இருக்கை-இறப்பு -மோக்ஷம்
(தீர்ப்பாரை -சாரம் )-5-ஆடுகள் இறைச்சி கரும் செஞ்சோறு ஆகிற நிந்த்யங்களாலே இளம் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும் த்ரவ்யம் நிந்த்த்ய ஸூராதி தைவத மதி சூத்ரஞ்ச பாஹ்யாகமோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜனா திக் திக் திகேஷாம் க்ரமம்-என்கிறபடி-அங்கோர் ஆடும் கள்ளும் –4-6-7- அங்கோர் கள்ளும் இறைச்சியும் –4-6-3- கரும் சோறும் மற்றை செஞ்சோறும்-4-6-4- -என்கிற சூரா மாம்ஸாதி நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு – நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம்-4-6-2- -என்கிற சூத்திர தேவதைகளுக்கு களன் இளைத்து-4-6-4- -என்று அவ்வோ தேவதைகள் சந்நிதி பண்ணும் ஸ்தலங்களிலே பலி இட்டு – நீர் அணங்கு ஆடுதல் கீழ்மை-4-6-8- -என்று தைவா விஷ்டராயாடுமதின் தண்மையும்-
(ஆடு கள்ளிறைச்சி கருஞ் செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந் தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும்) ‘அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும் கள்ளும்பராய்” (திருவாய்மொழி 4-6-7) “அங்கோர்கள்ளுமிறைச்சியும் தூவேன்மின்” (திருவாய்மொழி 4-6-3) “கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும்” (திருவாய்மொழி 4-6-4) என்று “த்ரவ்யம் நிந்த்ய ஸூராதி தைவத மதி ஷூத் ரஞ்ச பாஹ்யாக மோ த்ருஷ்டிர் தேவலகாஸ்ச தேஸிகஜநா திக் திக்தி கேஷாம் க்ரமம் வேதா வேதநாஸ்ச தேஸிக ஜநா ஸத்வஞ்ச வேதாந்தகம் ப்ரஹ்ம ஸ்ரீதர மத்ர வேத,விஹிதந் நிஜீவஜீவாதவே” என்கிறபடியே நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு “நீரணங்காடும் இளம் தெய்வம்” (திருவாய்மொழி 4-6-2) என்று ஷூத்ர தேவதைகளுக்கு ‘ ‘கள்ளிழைத்தென் பயன்” (திருவாய்மொழி 4-6-4) என்று அவ்வோ தேவதைகள் ஸந்நிதி பண்ணுகிற ஸ்தலங்களிலே யிடுகிறவிது “நீரணங்காடுதல் கீழ்மையே” (திருவாய்மொழி 4-6-8) என்று நிந்த்ய பதார்த்தங்களைக் கொண்டு ஷூத்ர தேவதா பஜநம் பண்ணுகை நிஹீநமென்னுமத்தையும்,–
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7—அப்ராக்ருத ஸ்வ பாவையான இவளுக்கு பெறுதற்கு அரிய மருந்து என்று –இவள் வை லக்ஷண்யம் அறிந்திலி கோள் -செய்கிறதின் தண்மையும் அறிந்திலி கோள்-சூரும் அணங்கும் தெய்வப் பெண் பெயர் -என்ன கடவது இறே
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,- நிஷித்த த்ரவ்யங்களை பிரார்த்தித்து –பராய்-பரவி -பிரார்த்தித்து
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-துர்த்ரவ்யங்களால் வைஷ்ணவ க்ருஹத்தை தூஷியாதே கொள்ளுங்கோள்-அங்கு என்று தான் காண மாட்டாமையாலே -முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-தாமஸ அன்னமும் -அத்தோடு தோள் தீண்டியான ராஜஸ அன்னமும்-களன் இழைத்து என் பயன்?–அந்த தேவதைகள் வந்து சந்நிதி பண்ணும் நாற்சந்தி முதலான ஸ்தலங்களில் அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடு இட்டு
என்ன பிரயோஜனம் உண்டு –களன் -களம்
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-தேவா விஷ்டராய் ஆடுகிற ஷூத்ர தேவதை அடியாக வந்த நோய் அன்று இது
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-அந்த தேவதைகள் வந்து சந்நிதி பண்ணும் நாற்சந்தி முதலான ஸ்தலங்களில் அவற்றுக்குச் சொல்லுகிற நியமங்களோடு இட்டு
என்ன பிரயோஜனம் உண்டு –களன் -களம் –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8–நீங்கள் தேவா விஷ்டராய் ஆடுகிற இது -உங்களுக்கு அத்யாவஹம் இது உங்கள் அளவிலே போகிறது இல்லை
(ஒன்றும் தேவும் -சாரம் )-6-பேச நின்ற தேவதா அஜ்ஞான அசக்தி சாபேஷத்வாதிகளையும்
தத குரோதபரீ தேன சம்ரக்த்ன யநேனச வாமாம்குஷ்ட ந காக்ரேனஸ் சின்னம் தஸ்ய சிரோ மயா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் , யச்மா தன பராதச்ய சிரச் சின்னம் த்வயா மம தச்மச்சாபா சமாயுக்த கபாலீ த்வம் பவிஷ்யசி–ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும்-தத்ர நாராயணா ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித—ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் ,-விஷ்ணு பிரசாததாத் சூஸ்ரோணி கபாலம் தத் சஹச்ரதா –
ஸ்புடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம்யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் -என்றும் சொல்லுகிறபடியே – பிரம்மா ருத்ரனால் தலை அறுப்புண்டு -சோச்யனாய் ருத்ரனை சபிக்க -ருத்ரன்
குருசிரச் சேதநத்தாலே பாதகியாய்-பிரம சாபம் தன்னால் போக்கிக் கொள்ள போகாமையாலே – ஸ்ரீய பதியான சர்வேஸ்வரனை அர்த்திக்க -அவன் சாபத்தை போக்கினான் ஆகையாலே –-பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்து கண்டு கொண்மின் –என்று வேதத்தில் பர சம்சா பரமான வாக்யங்களாலும் –ராஜச தாமச புராணங்களாலும் -பரத்வேன பேசலாம் படி – முட்டுப் பொறுத்து நின்ற -பிரம ருத்ராதிகள் ஆகிற தேவதைகள் உடைய அன்யோன்யம் –தங்களுக்கு வருகிற கிலேசம் அறியாமையும் -அந்த கிலேசம் தங்களால் தவிர்த்துக் கொள்ள
மாட்டாமையும் -அதைத் தவிர்த்து கொடுக்கைக்கு ஈஸ்வரன் வேண்டுகையும் -ஆகிற அஞான அசக்தி சாபேஷ்த்வங்களையும்–ஆதி சப்ததாலே கர்ம வஸ்யதையும்–
(பேச நின்ற தேவதா ஜ்ஞாநா முக்தி ஸாபேக்ஷத்வாதி களையும்) “பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் நாயகனவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்’ (திருவாய்மொழி 4-10-4) என்று ப்ரஸம்ஸா பரமான வாக்யங்களாலும் தாமஸ புராணங்களாலும் பேசப்பட்டு அவற்றுக்கு முட்டுப் பொருத்து நின்ற ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய “வாமாங்குஷ்டநகாக்ரேண சிந்நம் தஸ்ய ஸிரோ மயா” என்றும் “யஸ்மாத ந பராதஸ்ய ஸிரஸ் சிந்நம் த்வயா மம, தஸ்மாச்சாப ஸமாயுக்த: கபாலீ த்வம் பவிஷ்யஸி த்த்ர நாராயணஸ் ஸ்ரீமாந் மயா பி அசாம் ப்ரயாசித: விஷ்ணு ப்ரஸாதாத் ஸுஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா ” (மாத்ஸ்ய புராணம் )என்றும் சொல்லுகிற படியே ப்ரஹ்மா ருத்ரனாலே தலை யறுப்புண்டு ஸோச்யனாகையாலும் ருத்ரன் குருவினுடை ஸிரஸ் சேதநத்தாலே பாதகியாய் ஸர்வேஸ்வரன் பக்கலிலே ஸாபேஷனாக, அந்த ஸர்வேஸ்வரன் அந்த ப்ரஹ்மாவினுடைய ஸோகத்தையும் போக்கி ருத்ரனுடைய ஸாபத்தையும் போக்கினான் என்கையாலே இவர்கள் அந்யோந்யம் தங்களுக்கு வருகிற க்லேஸ மறியாமையாலும் வந்த க்லேஸம் தாங்கள் தாங்கள் தவிர்த்துக் கொள்ள மாட்டாத அஸக்தியாலும் (இவை போமிடத்தில் ஸர்வேஸ்வரனே போக்க வேண்டும் படியான ஸாபேக்ஷதையாலும் இப்படி மஹாபாரத வசந ஸித்தமாக அஜ்ஞாநாஸக்தி ஸாபேக்ஷங்களையும். ஆதி-ஸப்த த்தாலே அவர்களுடைய கர்ம வஸ்யதையையையும்
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4-கர்ம விதி சேஷமாகையாலே அந்நிய பரமாய் இருக்கிற அர்த்த வாதங்களால் சொல்லலாம் படி முட்டுப் பொறுத்து நிற்கிற ருத்ரனும் –
நீங்கள் ஈஸ்வரன் என்று பேசுகிற ருத்ரனுக்கும் -என்றுமாம் –-பிரமன் தனக்கும் -பிறர்க்கும்-அவனுக்கும் ஜனகனான ப்ரஹ்மாவுக்கும் –ப்ராஹ்மண புத்ரா யஜ்யே ஷ்டாய ஸ்ரேஷ்டாய-ப்ராஹ்மணச் ஸாபி ஸம்பூதச் சிவ-ருத்ரனுடைய ஈச்வரத்வம் பகவத் ப்ரஸாதயத்தம் -மஹா தேவஸ் சர்வமேத மஹாத் மாஹு தவாதமானம் தேவதேவோ பபூவ--இவர் கருத்தால் இவர்களோடு பிறரோடு வாசி இல்லை -இவரே அன்று -சத்துவம் தலை எடுத்தால் அவர்களும் அப்படியே நினைத்து இருப்பது –தவாந்தராத்மா மமசயே சந்யே தேஹி சம்ஜிஞ்சிதா -என்றான் இறே -ருத்ரனை நோக்கி ப்ரஹ்ம-நாயகன் அவனேlஅவன் என்று ஸ்ருதி பிரசித்தி -அநந்ய பரமான நாராயண அனுவாக ப்ரஸித்தியையும் –யா பரஸ்ஸ மஹேஸ்வர -என்கிற அகாரார்த்த பிரசித்தியையும் நினைக்கிறார் –-ஜகத்தாகிற காரியத்துக்கு அநுரூபமான கர்த்ருத்வத்தை கற்பிக்கிலும் இவனே நிர்வாஹகானாக வேணும் என்னவுமாம்
7-இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டததையும் சொல்லி இலிங்கத்திட்ட -4-10-5–என்றும் , விளம்புமாறு சமயமும் -4-10-9–என்கிற பாட்டுகளில் சொல்லுகிற பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் ஆவன-யன்மயம் ச ஜகத் சர்வம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்–1-1-5- என்ற பொதுவிலே பிரசன்னம் பண்ண –
விஷ்னோஸ் சகாசாதுத்பூதம் ஸ்ரீ விஷ்ணு புராணம்-1-1-41–என்று கோல் விழுக்காட்டாலே-உத்தரமாகை அன்றிக்கே – எருமையை ஆனையாக கவி பாடத் தர வேணும் என்பாரைப் போலே – லிங்கம் என்று ஒரு வியக்தியை நிர்தேசித்து இதுக்கு உத்கர்ஷம் சொல்லித் தர வேணும் என்று – கேட்கிறவனும் தமோ பிபூதனாய் கேட்க-சொல்லுகிறவனும் தமோ பிபூதனாய் சொல்ல – இப்படி பிரவர்த்திகமான இலிங்க புரணாதிகள்-குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளும் – சிலவற்றைச் சொல்லா நின்றால்-தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் இத்தனை போக்கி -பிராமண அனுகூல தர்க்கம் அல்லாமையாலே –கேவலம் உக்தி சாரமாய் இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் என்கிற – ஷபணக பௌத்தாதிகளுடைய ஸ்ம்ருதிகளும் ஆகையாலே – ய வேத பாஹ்யாஸ் ஸ்ம்ருதய யாச்ச காச்ச குத்ருஷ்டைய தாச் சர்வா நிஷ்ப்பலா ப்ரேத்ய தமோநிஷ்டா ஹி தா ஸ்ம்ருதா –மனு ஸ்ம்ருதி-12-95-என்கிறபடியே அவற்றினுடைய தமோ நிஷ்டைதையும் சொல்லி –-ஓடிக் கண்டீர் ஓடியோடி -4-10-7–என்று தொடங்கி-வழி ஏறிக் கண்டீர் -என்று ,-கதாகதம் காமகாமா லபந்தே–ஸ்ரீ கீதை-9-21- -என்கிற படியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது – கர்ப்பதேற வருவதாய்க் கொண்டு –அநேக ஜன்மங்களில் பிறந்து -தேவதாந்தரங்களை திரிவித கரணங்களாலும் பல பர்யாயம் தத் ஆஸ்ரயணத்தைச் சொல்லுகிற சாஸ்திர மார்க்கத்தாலே ஆஸ்ரயித்து -அவ் ஆஸ்ரய பலமும் கண்டீர்கள்–
(இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி தமோ நிஷ்டதையையும் சொல்லி) ” இலிங்கத்திட்ட புராணத்தீரும்” (திருவாய்மொழி 4-10-5) என்றும், “விளம்புமாறு சமயமும்” (திருவாய்மொழி 4-10-9) என்றும் சொல்லுகிறவிவை “யந்மயஞ்ச ஐகத் ஸர்வம்” (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-1-5) என்று ப்ரஸ்நம் பண்ண” விஷ்ணோஸ் ஸகா ஸாதுத்பூதம்’ (ஸ்ரீவிஷ்ணுபுராணம் 1-1-41) என்று கோல் விழுக்காட்டிலே உத்தரமாகை யன்றிக்கே எருமையை யானையாகக் கவிபாடவேணு மென்பாரைப் போலே லிங்க மென்றொரு வ்யக்தியை நிர்தேஸித்து, இதுக்குத்கர்ஷம் தேடிச் சொல்ல வேணுமென்று கேட்கிறவனும் தமோபிபூதனாய்க் கேட்கச் சொல்லுகிறவர்களும் தமோபிபூதராய்ச் சொல்ல லிங்க விஷயமாக உத்கர்ஷம் தேடியிட்ட குத்ருஷ்டி ஸ்ம்ருதிகளென்ன, ப்ரமாணாநுகூலமான தர்க்க மல்லாமையாலே கேவலம் உக்தி ஸாரமான பாஹ்யருடையவும் மதங்களென்ன, இவை “யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய: யாச்ச காச்ச குத்ருஷ்டய: தாஸ் ஸர்வா நிஷ்ப்பலா: ப்ரேத்ய தமோ நிஷ்டாஹி தா: ஸ்ம்ருதா:” (மநுஸ்ம்ருதி 12-95) என்கிறபடியே தமோ நிஷ்டங்களென்னுமிடத்தையும் சொல்லி, (ஓடிக் கண்டீர்) “ஓடியோடி வழியேறிக் கண்டீர்;” (திருவாய்மொழி 4-10-10) “கதாகதம் காமகாமா லபந்தே” (6. தை 9-21 என்கிறபடியே ஸ்வர்க்க நரகங்களிலே போவது கர்ப்பத்தேற வருவதாய்க் கொண்டு அநேக ஐந்மங்கள் தேவதாந்தரங்களை ஸப்ரகாரமாக த்ரிவித கரணங்களாலும் ஆஸ்ரயித்து அவ்வாஸ்ரயணமும் முடிய நடத்தி தத் பலமும் கண்டிகோள்;
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5—லிங்கம் என்று ஒரு வ்யக்தியை விசேஷித்து அதுக்கு உத்கர்ஷம் சொல்லுகையிலே ப்ரவ்ருத்தமான தாமஸ புராண நிஷ்டரும் –-சாத்விக புராணங்களில் காட்டிலும் ராஜஸ தாமஸ புராணங்களுக்கு வாசி இது –
யன்மயஞ்ச ஜகத் ப்ரஹ்மன்-என்று சாமான்யத்தில் ப்ரஸ்னமாக-விஷ்ணோஸ் ஸகாசா துத்ப்பூதம்-என்று கோல் விழுக்காட்டாலே பரிஹாரமாய் இருக்கை இறே சாத்விக புராண லக்ஷணம்
ருஷிக்கு தமஸ் பிரசுர தசையில் தமஸ் அபி பூதன் கேட்கப் பிறந்த தாகையால் அவ்வோ தேவதைகளினுடைய உதகர்ஷத்துக்கு பிரமாணம் ஆக மாட்ட்டாது
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9—பேச்சே போக்கி உள்ளீடான அர்த்தம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற பாஹ்ய சமயங்கள் ஆறும் -பிரமாணம் அனுகுணம் சுஷுக தர்க்கங்களாலே யுக்தி சாரமேயாய் இருக்கை-
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-கதா கதம் காம காம லபந்தே என்கிறபடியே கர்ம அனுகூலமாக தட்டித் திரிந்த இத்தனை இறே –சகல யோனிகளிலும் அசங்க்யாதமான ஜென்மங்களை பண்ணி –ஆத்மா நித்யன் –காலம் அநாதி -இடைவிடாமல் பிறந்து போந்த இதில் பலித்தது இறே இனி பலிப்பது – தங்களுடைய ஜென்ம பரம்பரைகள் அடைய இவர் வாயாலே கேட்க வேண்டும் படி இறே இவர்களுக்கு அவிசதமாய் இருக்கிற படி
8–கண்டும் தெளிய கில்லீர்-4-10-3- இவனுடைய ஜகன் நிகரணாதி திவ்ய சேஷ்டிதங்களை -சாஸ்த்ரத் த்வாரா பிரத்யஷித்தும் –-இவனே ஆஸ்ரயணீயன் என்று தெளிய மாட்டுகிறீலி கோள் –அறிந்து அறிந்து ஓடுமின்-4-10-6- உங்களை இங்கனே வைத்தது -சதசத் -கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்ம
அணுகுண பலங்களை அனுபவிக்கக் கடவதான சாஸ்திர மரியாதை -அழியும் என்று –-அது தான் -மம மாயா துரத்யயா –ஸ்ரீ கீதை-7-14- என்று பிரக்ருதியை இட்டு -அவன் மயக்கி வைத்தபடி காணுங்கோள்-
ஆன பின்பு அது அவன் மாயை என்று அறிந்து –-மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -என்கையாலே -மாயா தரண உபாயமும் – அவன் திருவடிகளைப் பற்றுகை என்று அறிந்து -அவனை ஆஸ்ரயித்து இந்த மாயையை தப்பப் பாருங்கோள் –-ஆட் செய்வதே உறுவது ஆவது என்று நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவதாவது -4-10-10–என்கையாலே – நிரதிசய போக்யமான சேஷ்டிதத்தை உடையவனுக்கு அடிமை செய்வதே இவ் ஆத்மாவுக்கு சீரியதும் ஸூசகமும் -என்று இப்படி உபதேசித்து விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில் .-அதாவது –
பிரயோஜனாந்தர -தேவதாந்திர -பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் – விரக்தி பூர்வகமாக –
ஜகத் காரணத்வாதிகளான பிரமாண உப பத்திகளாலே பகவத் சமாஸ்ரயனத்தை சம்சாரிகளுக்கு ருசிப்பிக்கிறார் என்கை-
(கண்டும் தெளிய கில்லீர்) இவனுடைய ஐகந் நிகரணாதி, திவ்ய சேஷ்டிதங்களை ஸமாஸ்த்ர த்வாரா ப்ரத்யக்ஷித்தும் இவனே ஸர்வ ஸமாஸ்ரயணீயனென்று தெளிய மாட்டுகிறிலிகோள். (அறிந்தறிந்தோடுமின்) உங்களை யிங்ஙனே வைத்தது ஸதஸத்கர்ம காரிகளான ஜந்துக்கள் அவ்வோ கர்மங்களை அநுபவிக்கக் கடவதான ஸாஸ்த்ர மர்யாதை, அழியுமென்று. “மம மாயா துரத்யயா” (கீதை 7-14) என்கிறபடியே இதுவும் அவனுடைய மாயை என்றறிந்தும், மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” (கீதை 7-14) என்கிறபடியே மாயாதரணோபாயம் அவன் திருவடிகளை யாஸ்ரயிக்கையே என்றறிந்து அவனை யாஸ்ரயித்துத் தப்பப் பாருங்கோள். (ஆட் செய்வதே உறுவதாவதென்று) “நீள்குடக் கூத்தனுக்கா ட் செய்வதே உறுவது” (திருவாய்மொழி 4-10-10)என்று ஆஸ்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவனுக்கு அடிமை செய்கையே இவ் வாத்மாவுக்குச் சீரியதும் ஸு-ஸூமும் என்று (விரக்தி பூர்வகமாக ஆஸ்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம் பத்தில்) ப்ரயோஜநாந்தரங்கள் க்ஷத்ர தேவதைகள் பாஹ்ய குத்ருஷ்டிகள் என்கிற இவற்றிலுண்டான விரக்தி பூர்வகமாக ஐகத் காரணத்வாதிகளான ப்ரமாணோபபத்திகளாலே பகவத் ஸமாஸ்ரயணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேஸித்து ஸூசிப்பிக்கிறார் என்கிறார் நாலாம் பத்தில் –
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3—ப்ரத்யக்ஷத்திலும் -விசதமாய் இருக்கிற தாயிற்று இவர்க்கு சாஸ்திரம்-இவ்வதி மானுஷ சேஷ்டிதங்களாலே ஆஸ்ரயணீயன் என்று அறியலாய் இருக்க சக்தர் ஆகிறிலி கோள்- இவர்கள் ஞான அஞ்ஞானங்கள் ஒழிய அர்த்தத்தில் மாறாட்டம் இல்லை என்கை –-அவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் இவனை அநீஸ்வரன் ஆக்குதல் செய்ய ஒண்ணாதாய் இருக்கை –
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6-மம மாயா துரத்யயா -என்கிறபடியே தான் அகற்ற நினைத்தாரை தன் பக்கல் பிரக்ருதியை இட்டு வஞ்சித்து வைத்த படி கிடி கோள்-அது அறிந்தறிந்து ஓடுமினே.– அத்தை அறிந்து மாயா தரண உபாயமான ப்ரபத்தியைப் பண்ணி சம்சாரத்தை தப்ப பாருங்கோள் –மாமேவயே பிரபத்யந்தே -என்கிறபடியே அவனையே கால் கட்டி அவனை வெல்லப் பாருங்கோள் -என்கிறார் –
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே–7-14-இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள்குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10-ஆஸ்ரிதற்கு கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி தன்னை தாழ விட்ட படி –-உண்டு என்று இட்ட போதொடு இல்லை என்ற போதொடு வாசி இன்றிக்கே முகம் மலர்ந்து போம் படி இரப்பிலே தகணேறினபடி-குடகு கூத்தாடுகிற போது கண்டாரோபாதி பிற்பாடராய் கேட்டார் வாய் கேட்டார்க்கும் சம காலம் போலே பிரியமாம் படி மநோ ஹரியான சேஷ்டிதத்தை யுடையவனுக்கு –-அந்த சேஷ்டிதங்களே அடிமை கொள்ளும் -நீங்கள் இசையும் அத்தனையே வேண்டுவது ஆள் செய்வதே உறுவது ஆவது
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply