1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
—
மூன்றாம் பத்தால்–தத் த்ருஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் -தைத்ரியம்-என்கிறபடியே – கார்ய பூத சேதன அசேதனங்களை அடைய வியாபித்து -தத்கத தோஷை ரசம் அஸ்ப்ருஷ்டனாக இருக்கையாலே
சர்வ வியாபனான சர்வேஸ்வரன்-கீழில் பத்தில் –-இவர் உபாய அனுகுணமாக நிஷ்கர்ஷித்த மோஷத்துக்கு பலமான ஸ்வ விக்ரக அனுபவத்தை இவரைப் பண்ணுவிக்க – இவர் அனுபவித்து தரித்து -அவ் அனுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷத்தால் –சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேசத்தை உடையராய் -தம் அபிநிவேச அனுகுணமாக -அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய சர்வாத்ம பாவத்தைப் பேசி -அத்தால் வந்த ப்ரீதியின் உகளிப்பை உடையராய் -அந்த பிரீதி அவன் அளவில் பர்யவசியாதே – பாகவத சேஷத்வத்தில் -எல்லை அளவும் சென்று –
அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான -பகவத் வைலஷண்ய அனுசந்தானத்தாலே – ஒன்றின் வ்ருத்தியை ஓன்று ஆசைப் படும் படி -சேதன சமாதியை அடைந்த – கரண க்ராமமும் தாமும் தனி தனியே அனுபவிக்கும் வேண்டும் பெரு விடாயை உடையராய் – இதர ஸ்தோத்ரத்துக்கு அனர்ஹா கரணராய்-அவ்வளவும் அன்றிக்கே – பகவத் ஸ்தோத்தரத்துக்கு அர்ஹா கரணருமாய் பகவத் அனுபவத்துக்கு தமக்கு ஒரு பிரதி கதி தொடக்க மானவையும் அற்று நிரதிசய ஆனந்த யுக்தரானவர் –
புண்டரீ காஷனாய் -ஸூரி சேவ்யனானவனை நம்மால் ஆஸ்ரயிக்கப் போமோ -என்று சம்சாரிகள் அஞ்சி கை வாங்காமல் -மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும் படி –கீழ் இரண்டு பத்தாலும் உபதேசித்த -அவதார சௌலப்யம் – பரத்வ ஸ்தாநீயமாம் படி அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசித்து – அர்ச்சிராதி கதியாலே பரமபதத்தை ப்ராபிக்கும் அவனை ஒழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ இழிகை நிஷ் பிரயோஜனம் -ஆன பின்பு நீங்கள் – சகல பல பிரதனுமாய் -சாம்யா பத்தி பிரதனுமான – அவன் விஷயத்திலே வாசிகமான அடிமை செய்யுங்கோள் என்று நிஹீன வ்ருத்தியான இதர சேவையை நிவர்ப்பித்து – தம்முடைய விருத்தியான வாசிக கைங்கர்யத்தில் மூட்டுகிறார் என்கிறார் ..
மூன்றாம் பத்தாலே “தத் ஸ்ருஷ்ட்வா ததே வாநுப்ராவிஸத்” (தைத்திரீய உபநிஷத் )என்கிறபடியே கார்யமான சேதநாசேதநங்களை யடைய வியாபித்து தத் கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கையாலே ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன் கீழ்ப் பத்தாலே இவர் உபயாநுகுணமாக நிஷ்கர்ஷித்த மோக்ஷத்துக்கு பலமான தன்னுடைய விக்ரஹாநுபவத்தை இவரைப் பண்ணுவிப்பிக்க இவரும் அநுபவித்து தரித்து அநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே ஸர்வ வித, கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபி நிவேஸத்தை யுடையராய்த் தம்முடைய அபிநிவேஸ அநு குணமாக அவன் காட்டிக் கொடுத்த அவனுடைய ஸர்வாத்ம பாவத்தைப் பேசி அத்தாலே வந்த ப்ரீதியை யுடையராய் அது அவனளவில் பர்யவஸியாதே பாகவத ஸேஷத்வத்தில் எல்லை யளவும் சென்று அந்த பாகவதர்களுக்கு நிரூபகமான பகவத் வைலக்ஷண்யா நுஸந்தாநத் தாலே தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் சேதந ஸமாதியாலே அநுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய் இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணராய் அவ்வளவே யன்றிக்கே பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணராய் பகவதநுப வத்துக்குத் தமக்கொரு ப்ரதிஹதி தொடக்கமானவையுமற்று நிரதிஸய ஆநந்த யுக்தரானவர் புண்டரீகாக்ஷனாய் ஸுரி ஸேவ்யனானவவனை நம்மாலே ஆஸ்ரயிக்கப் போமோ என்று ஸம்ஸாரிகள் அஞ்சிக் கை வாங்காதே மேல் விழுந்து ஆஸ்ரயிக்கும்படி கீழிரண்டு பத்தாலும் உபதேஸித்த அவதார ஸெளலப்யம் பரத்வ ஸ்தாநீயமாம்படி அர்ச்சாவதார ஸெளலப்யத்தை யுமுபதேஸித்து அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷ ப்ராப்தியைப் பண்ணுவிக்குமவனை யொழிய இதர ஸ்தோத்ரத்திலே தாழ விழிகை நிஷ் ப்ரயோஜநம்; ஆன பின்பு நீங்கள் ஸகல பல ப்ரதனுமாய் ஸாம்யாபத்தியைக் கொடுப்பானுமா யிருக்கிற அவன் விஷயத்திலே வாசிகமான வடிமை செய்யுங்கோளென்று நிஹீநதமமான இதர ஸேவையை நிவர்த்திப்பித்துத் தம்முடைய வ்ருத்தியான வாசிக கைங்கர்யத்திலே மூட்டுகிறார் என்கிறார் –
—
(1)-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன் தீர்ந்த அடியார்களை தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் (2-)நீ தந்த மா மாயப் புணர்வினை பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும் சத்ருசமாக கண்டு கொள் என்னும் (3)-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சர்வ ஆத்ம பாவத்தைப் புகழ்ந்து (4)-சொல்லிப் பாடி ஏத்திப் பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்து தடு குட்டக் கும்பிடு நட்டமிட்டு சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி உகள தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர (5-)பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்-(6 )-குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி (7-)அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி வழியைத் தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது வேண்டிற்று எல்லாம் தரும் –தன்னாகவே கொள்ளும் கவி சொல்ல வம்மின் என்று (8 )-முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்
1-முழுதுமாய் எங்கணும் ஒழிவற அருவாகி நின்று தோய்விலனாம் சர்வ வியாபகன்–அதாவது
முழுதுமாய் முழுதி யன்றாய்–3-1-8-என்றும்-ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் -3-2-4–என்றும் ,-எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற -3-2-7–என்றும் ,-அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும் –3-10-10- யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் உணர்வின் மூர்த்தி-3-4-10- -என்றும் தேச கால வஸ்துக்களால் பர்ச்சேதிக்க ஒண்ணாதபடி கார்யபூத சகல சேதன அசேதனங்களையும் வியாபித்து –-அநஸ்நன் அந்யோ அபிசாக சீதி-(இவற்றில் வேறான பர ப்ரஹ்மம் கர்மபலன்களை அனுபவிக்காமல் அதிகமாகப் பிரகாசிக்கிறான் )கடோபநிஷத் -என்கிறபடியே-தத்கத தோஷை ரச அஸ்ம்ப்ருஷ்டனாய் இருக்கையாலே வியாபகனான சர்வேஸ்வரன்
முழுதுமாயெங்கணு மொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வ வ்யாபகன்) முழுதுமாய் முழுதியன்றாய் ‘(திருவாய்மொழி 3-1-8) ‘ஏழ்ச்சிக் கேடின்றி எங்கணும் நிறைந்த வெந்தாய் திருவாய்மொழி 3-2-4) ” எஞ்ஞான்று மெங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதி” (திருவாய்மொழி 3-2-7) “அளவுடை ஐம்புலன்களறியா வகையால் அருவாள் நிற்கும் யாவையும் யாவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன் (திருவாய்மொழி 3-10-10) என்று தேஸ கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க வொண்ணாதபடி கார்யமான ஸகல சேதநாசேதநங்களையும் வ்யாபித்து “அநஸ்நந்நந்யோ அபி சாகஸீதி” (கடோபநிஷத் என்கிறபடியே தத்கத தோஷைர ஸம் ஸ்ப்ருஷ்டனாய் இப்படி ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரன் –
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8—முழுதுமாய் –ஸமஸ்த குண விபத்திகளையும் பிரகாரமாக உடையையாய்க் கொண்டு-முழுதியன்றாய்-அவை எல்லாம் உன் பக்கலிலே வர்த்திக்கும் படி ஆஸ்ரயமானவனே
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4—ஏழ்ச்சி -விகாசம் –கேடு-குறைவு -சங்கோசம் -/சங்கோச விகாச ரஹிதமான ஞானம் -என்கை –எங்கணும்–எல்லா பதார்த்தங்களிலும்-கண் -இடம் –
நிறைந்த வெந்தாய்--ஜாதி -வியக்தி தோறும் -பரிசாமாபியா வர்த்திக்குமா போலே-எந்தாய் -ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே வியாப்தியும் என்னை உத்தேசித்து என்கை –
உன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளுகைக்கு விரகு தேடி உணர்ந்து என்னை வியாபித்துக் கொண்டு நிற்கச் செய்தேயும் விஷய பிரவணனாய் தப்பினேன் என்கை
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7–இப்படி நாம் இருந்தாலும் அவன் அஸந்நிஹிதன் ஆனால் அஞ்ஞானாதல் ஆகப் பெற்றோம் ஆகிலுமாம் இறே-சர்வ காலமும் சகல பதார்த்தங்களிலும் குறைவற வியாபித்து நிற்குமவனாய் விசதமமான ஞானத்தை உடைய கிருஷ்ணனை –நினைவுக்கு வாய்த்தலையிலே புகுந்து நம் படியை உள்ளபடி அறியுமவன் ஆனவனை-கண்ணனை -மேவுதுமே-ஸூ லபன் என்றால் அவனைக் கிட்டப் போமோ -என்னுதல்–நிர்வாஹகன் என்றால் அவனைக் கிட்டலாமோ என்னுதல் –யதா பாடம் அன்வயமாதல் -எஞ்ஞான்றும் மேவுதல்-என்னுதல் – ஏகோ அஹம் அஸ்மீதிசம் அந்நிய சேத்வம் நஹ்ருச்சயம் வேத்ஸி முனிம் புராணம் யோ வேதிதா கர்மண-பாப கஸ்ய தஸ் யாந்தி கேத்வம் வ்ருஜி நம் கரோஷி –
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-அளவுபட்ட இந்திரியங்கள் -பரிச்சின்ன விஷய க்ராஹங்கள் இறே -அவற்றுக்கு அறிய ஒண்ணாத படி அவிஷயமாக நிற்கும்
யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-சகல சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மாவாய் அவற்றினுடைய துக்கித்தவ பரிணாமித்வங்கள் தட்டாத படி யாய் இருக்கிறவன் –
சமயந் தோறும்-தோய்வு இலன்; -அசித்துக்கு பரிணாமித்வமும்-தத் ஸம்ஸ்ருஷ்ட சேதனனுக்கு துக்கித் வாதிகளும் வியவஸ்திதம் என்கை
தீர்ந்த அடியார்களைத் தாளிணைக் கீழ் கொள்ளும் தன் படிக்கும் –-அதாவது தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல-3-5-11 -என்று பிராப்ய பிராககங்கள் இரண்டும் தானேயாக ஆஸ்ரயித்த ஆஸ்ரிதரை – சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்-தன்மை பெறுத்தி தன் தாளிணைக் கீழ் கொள்ளும் அப்பன் -3-10-10–என்று ஜன்ம பரம்பரைகளில் புகாதபடி ரஷித்து ஆரப்த சரீர அவசானத்திலே – அர்ச்சிராதி மார்க்கத்தில் -தேச விசேஷத்தில் கொண்டு போய் –-ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து -பாத உபதானத்தோபாதி – தன் திருவடிகளின் கீழ் இட்டுக் கொள்ளும் சேஷியான தன்னுடைய ஒவ்தார்யத்துக்கும்–
தீர்ந்த வடியார்களைத் தாளிணைக் கீழ்க் கொள்ளும் தன்படிக்கும்) “தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல ஆர்ந்த புகழச்சுகனை” (திருவாய்மொழி 3-5-11) என்று தன்னையே உபாயோபேயங்களென்று நிஷ்கர்ஷித்தவர்களை “சன்ம சன்மாந்தரம் காத்தடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளுமப்பனை” (திருவாய்மொழி 3-7-7) என்று இனியொரு ஐந்ம பரம்பரைகளிலே போகாதபடி ரக்ஷித்து ஆரப்த ஸரீராவஸாநத்திலே அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேஸ விஸேஷத்திலே கொடு போய் ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுத்து தனக்குப் பாதோபதாநமாக விட்டுக் கொள்ளும்படியான ஸேஷியான தன்னுடைய ஒளதார்யத்துக்கும் –
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-அவனே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்த ஆஸ்ரிதரை பிரதிபந்தகங்களைப் போக்கி அடிமை கொள்ளும் சக்தியை உடையவன் –அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருப்பாரை-க்ரியதாம் இதி மாம் வத-என்று அடிமை கொள்ளும் என்றுமாம்-ஆர்த்த புகழ் அச்சுதனை-மிக்க புகழ் -அடிமையில் நழுவ விட்டுக் கொடாதவனை
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7—ஜென்ம பரம்பரைகளில் புகாதபடி பரிஹரித்து-அடியார்களைக்-தன் பக்கலில் சர்வ பரந்யாசம் பண்ணி இருக்குமவர்களைக் கொண்டு போய்த்-தன்மை பெறுத்தித் –ஒரு நாடீ விசேஷத்தாலே புறப்படுத்தி அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்-ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று ஸ்வ ஸ்வரூபத்தைக் கொடுத்து-தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்-சர்வாதிகனான தனக்கு சரண உபாதானத்தோ பாதி யாகக் கொள்ளும் நிருபாதிக சேஷியை
2-நீ தந்த மா மாயப் புணர்வினைப் பிறப்பு அழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாள் எங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்து புகும் தம் காதலுக்கும்-அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வன் –3-2-1–பல் மாயப் பல்பிறவியில் படிகின்ற யான் –3-2-2–பொல்லா ஆக்கையின் புணர்வினை –3-2-3-வினை யியல் பிறப்பு அழுந்தி –3-2-7–கொடுவினை தூற்றுள் நின்று பாவியேன் பலகாலம் வழிதிகைத்து அலமருகின்றேன்-3-2-9- என்று சிருஷ்டி காலத்தில் உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ தந்த சரீரத்தைக் கொண்டு உன்னை நான் பெறப் பெறாதே – நான் அதன் வழியே போய் அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டு -குண த்ரய பேதத்தால் -பலவகைப் பட்டு – துரத்யயையான பிரகிருதி கார்யமான தேவாதி தேஹங்களில் அவஹாகித்து – ஹேயமான சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடு ஓன்று பிணைந்து இருக்கிற கர்மம் அடியாக மீண்டும் பாபத்திலே கொண்டு போய் மூட்டக் கடவதான ஜன்ம பரம்பரைகளில் அழுந்தி – என்னால் அடி அறுக்கவும் அடி காண ஒண்ணாதே –புகுர வழியும் தெரியும் ஒழிய – புறப்பட வழி தெரியாத -பாபம் ஆகிற மிடைந்த தூற்றிலே அகப்பட்டு நின்று – உன்னை பிராபிக்கைக்கு ஈடான வழி காணாதே -கூப்பிட்டு அலமாவா நின்றேன் –
(நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன் வேரற வரிந்து எந்நாளெங்கு வந்து தலைப் பெய்வன் என்று கழித்துப் புகும் தம் காதலுக்கும்) “அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்” (திருவாய்மொழி 3-2-1 “பன்மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்” (திருவாய்மொழி 3-2-2) “பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா” (திருவாய்மொழி 3-2-3) “வினையியல் பிறப்பழுந்தி கொடுவினைத் தூற்றுள் நின்று பாவியேன் பல காலம் வழிதிகைத் தலமருகின்றேன்” (திருவாய்மொழி 3-2-7) என்று ஸ்ருஷ்டி காலத்திலே உன்னை வழிபடுகைக் குடலாக நீ ஸரீரத்தைக் கொடுக்க நான் அதின் வழியே போய் அநர்த்தத்தைச் சூழ்த்துக் கொண்டு ப்ரக்ருதி கார்யமான தேவ மநுஷ்யாதி, ஸரீரங்களிலே அவகாஹித்து ஹேயமான ஸரீரத்துக்கடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிற கர்மமடியாக மீண்டும் பாபத்திலே கொடு போய் மூட்டக் கடவதான ஐந்ம பரம்பரைகளிலே யழுந்தி என்னால் அடி யறுக்க வொண்ணாதே அடி காண வொண்ணாதே புகுர வழி தெரியுமத்தனை யொழிய புறப்பட வழி தெரியாதிருப்பதா யிருக்கிற பாபமாகிற மிடைந்த தூற்றிலே கிடந்து உன்னை ப்ராபிக்கைக்கீடான வழி காணாதே கூப்பிட்டு அலமருவா நின்றேன்;
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1—அந்நாள் –அசித் விசிஷ்டானாய் சோஸ்ய தசா பன்னனான நாள்-நீ –என்று இழவு உள்ளதாய் முகம் காட்டின நீ-தந்த – திருவடிகளில் தலை சாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாம் உடம்பை அபகரித்து –துர்லபோ மானுஷோ தேஹ -மானுஷ்யம் ப்ராப்ய -தன்னைப் பெறுகைக்கு உபகரணமும் தானே தர வேண்டி இருக்கிற படி-ஆக்கையின் வழி உழல்வேன்-விஷய ப்ராவண்யத்தை விளைத்துக் கொண்டு சரீரத்தின் வழியே போய் அநர்த்தப் பட்டேன் –உழல்வேன்-சுழி தோறும் முழுகா நின்றேன் -கரை ஏற கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அதன் வழியே போய் கடலிலே புகுவாரைப் போலே உடம்பின் வழியே போய் சம்சார ஆர்ணவத்திலே புக்கு நசிக்கை-
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–நின்-பன் மா மாயம் –மம மாயா என்று உன்னுடையதாய் -தான் ஒன்றாய் இருக்க குண த்ரய பேதத்தை உடைத்தாய் துரத்யையாய் இருந்துள்ள ப்ரக்ருதி –நீ முடித்த முடியை நான் அவிழ்க்கவோ -ஸூ கத்திலே சங்கிப்பிப்பது -பிரவ்ருத்தியிலே மூட்டுவது–உணர்த்தி அறப் பண்ணுவது -ஆகிற குணங்களை தப்பவோ –-பல் பிறவியில் –பிரகிருதி சம்பந்த ப்ரயுக்தமான தேவாதி பேதங்கள்-படிகின்ற யான்-விழுகின்ற -என்னாத படி கின்ற -என்கிறது இவ்வனர்த்தத்திலே வெறுப்பு இன்றிக்கே பொருந்தி இருக்கை –வர்த்தமான நிர்த்தேசத்தால் இன்னம் தரை கண்டது இல்லை என்கை –
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3—பொல்லா வாக்கையின் –-துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்–இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி
புணர்வினை யறுக்கலறா-புணர்வினை– சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்-அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-வினையியல் பிறப்பு அழுந்தி-அவித்யாதிகளை பிறப்பிக்கும் சம்சாரத்தில் மூழ்கி இருக்கிற நாம் –அவித்யாதிகள் அடியான பிறப்பில் அழுந்தி இருக்கிற நாம் என்றுமாம் –
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9–கொடிதான பாபத்தை விளைக்க வற்றாய் புக்க இடமும் புறப்பட்ட விடமும் தெரியாததான சம்சாரத்திலே யாயிற்று நிற்கிறது-பாவியேன் – ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆஸ்ரம பரிசரத்திலே கூப்பிட்டால் போலே சிலர் ஐயோ என்ன கூப்பிடுகிறேனோ -என்னுதல் –உன்னைக் கிட்ட விரகு அறியாதே அலமருகைக்கு அடியான பாபத்தைப் பண்ணினேன் -என்னுதல் –-பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்–நெடும் காலம் உன்னைப் பெறும் விரகு அறியாதே அலமரா நின்றேன்
வினைகளை வேரற பாய்ந்து –-தொன் மா வல் வினைத் தொடர்களை முதலரிந்து –3-2-2–என்று –
அநாதியாய் -அபரிச்சேதமாய் -ஸ்வ யத்னம் நிவர்த்யம் அல்லாதபடி -அதி பிரபலமான
பாபங்களினுடைய அனுபந்தங்களை மறு கிளை வாராமல் வேரற்று போம் படி ஊசி
வேரோடே அறுத்து பொகட்டு – எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் –3-2-1-
எங்கு வந்து அனுகிற்பன் –3-2-5- எங்கு இனி தலைப் பெய்வன் -3-2-9–என்று நான் உன்னை கிட்டுவதற்கு நாள் அறுதி இட்டு தரவேணும் – நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் – இனிக் கிட்டுகை என்ற பொருள் உண்டோ -என்று சரீர சம்பந்தத்துக்கு நொந்து – அதிலுண்டான அருசியோடே – காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் 3-9-8–என்று பகவத் குண அனுபவத்தோடு -கால ஷேபத்தைப் பண்ணி -சரீரத்தை விட்டு – அவன் திருவடி களின் கீழ் புக வேணும் என்னும்படியான சேஷ பூதரான தம்முடைய ஆசைக்கும் – சத்ருசமாக கண்டு கொள் என்னும் இப்படியான இருவர் படிக்கும் தகுதியாக –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே-3-9-9- -என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற–
“வினைகளை வேரறப் பாய்ந்து” (திருவாய்மொழி 3-2-1) “தொன்மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து” (திருவாய்மொழி 3-2-2) என்று அநாதியாய் மஹத்தாய் என்னாலே போக்கிக் கொள்ள வொண்ணாதபடி வலிதாய் ஸ்ருங்கலாஞ்சலமா(?) யிருக்கிற பாப ஸமூஹங்களை உச்சி வேரோடே யரிந்து பொகட்டு “எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே–திருவாய்மொழி 3-2-1 “எங்கு வந்து அணுகிற்பனே (திருவாய்மொழி 3-2-5) “ எங்கினித் தலைப் பெய்வனே (திருவாய்மொழி 3-2-9) என்று நான் உன்னைக் கிட்டுவதொரு நாள் அறுதியிட்டுத் தர வேணும் நான் உன்னை எங்கே வந்து கிட்டக் கடவேன் இட்டுகை என்று ஒரு பொருளுண்டோ என்று ஸரீர ஸம்பந்தத்துக்கு நொந்து அதிலுண்டான அருசியோடே “காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன்‘ (திருவாய்மொழி 3-9-8) என்று பகவத் குணாநுபவத்தோடே கால க்ஷேபத்தைப் பண்ணி ஸுரீரத்தை விட்டு அவன் திருவடிகளிலே புக வேணும் என்னும்படியான ஸேஷ பூதரான தம்முடைய ஆசைக்கு (ஸத்ருஸமாகக் கண்டு கொள் என்னும்) உபய ஸ்வரூபத்துக்கும் அநுகுணமாக “வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்” (திருவாய்மொழி 3-9-9) என்று ஈஸ்வரன் காட்டிக் கொடுக்கிற-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-வினைகளை–சரீர சம்பந்தத்துக்கு அடியானை பாபங்களை-வேர் அறப் பாய்ந்து--சவாசனமாகப் போக்கி –பாய்ந்து என்று சினம் தோற்றுகிறது-
ஒரு சர்வ சக்தி செய்யுமத்தை நான் செய்யவோ –
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–தொன் மா வல்வினைத் தொடர்களை –
அநாதியாய் அநேகமாய் சர்வ சக்திக்கும் நெஞ்சு உளுக்க வேண்டும் படி பிரபலமான பாவத் தொடர்ச்சிகளை ஒன்றோடு ஓன்று அனுபந்தித்து இருக்கை –-முதல் அரிந்து--வாசனையோடு போக்கி
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5–உன்னைக் கிட்டுக்கைக்கும் கைம்முதல் இல்லாத நான் –தஸ்யைக்ஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -என்று நீயே அனுபவிப்பிக்கும் உன்னை -எங்கே கிட்டப் போகிறேன் –
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8—இக் குணங்களை ப்ரீதி பிரேரிதனாய் சொல்லி இதுவே யாத்திரையாக -பின்னை இச் சரீரத்தை விட்டு-பாண்டரஸ்யா தபத் ரஸ்ய ச் சாயாயாம் ஜரிதம்மயா-என்று சக்கரவர்த்தி பிரஜா ரக்ஷண அர்த்தமாக சுற்றும் பயணம் திரிந்து-முத்துக் குடை நிழலிலே சரீரத்தை ஜெரிப்பித்தால் போலே பகவத் குண அனுபவத்தால் சரீரத்தை ஜெரிப்பித்து என்கிறார்–அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,-அவன் பக்கலிலே பிரயோஜனாந்தரங்களை கொள்ள இராதே விலக்ஷண சரீரத்தை பெற்று தாய் முலைக்கீழ் ஒதுங்கும்-ஸ்தந்த்ய பிரஜையை போலே திருவடிகளின் கீழே ஒதுங்கிடுவன் என்னும் அபி நிவேசத்தை உடையனான நான்
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9—அத்தேசம் நித்ய ஸூ ரிகளுக்கு இட்ட வழக்காய் இருக்கை-குடி இருப்பாரோ பாதி யாயிற்று ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு –-நீ கண்டு கொள் என்று –க்ருசம் தச குணம் மயா-என்று பண்டாரத்தை வளர்த்து வைத்து பெருமாள் மீண்டு எழுந்து அருளினை போது ஸ்ரீ பரத ஆழ்வான் காட்டிக் கொடுத்தால் போலே நித்ய ஸூ ரிகளோபாதி இவர் கையில் காட்டிக் கொடுக்கை-அபூர்வ லாபம் அன்றிக்கே இழந்தது கண்டானாய் இருக்கை என்றுமாம்
வீடும் தரும்-கைங்கர்ய ஸூ கத்தையும் தரும் –முக்திர் மோஷோ மஹா நந்த –நின்று நின்றே.–-இப்படி முழுக்க கொடுத்தாலும் இவனுக்கு என் செய்தோம் -என்று குறைப் பட்டு இருக்கும் -என்று நம்முடைய பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்-ஒரு தமிழன் அடைவடைவே என்றான்-முந்துற ஐ ஹிகத்திலே அனுபவிப்பித்து பின்பு ஒரு தேச விசேஷத்தை காட்டிக் கொடுத்து பின்பு கைங்கர்ய ஸூகத்தை கொடுக்கும்-இவை தரும் இடத்தில் சாத்மிக்க சாத்மிக்க தரும் -என்றுமாம் –
3-ஊனமில் மோஷ பலமான முடிச் சோதியில் அனுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று ஊனமில் மோக்கம் என்கோ-3-4-7- -என்று பிரகாரமான ஆத்ம அனுபவ மாத்ரத்தில் அன்றிக்கே -ப்ரகாரி அளவும் செல்ல அனுபவிக்கையாலே -குறைவில்லததாய் – ஸ்வரூப அனுரூபமாக -கீழில் பத்தில்-அறுதி இட்ட -பரம புருஷார்த்த லஷண மோஷத்துக்கு பலம் -பகவத் அனுபவ கைங்கர்யங்கள் ஆகையாலே –
முடிச் சோதி -3-1–என்கிற திரு வாய் மொழியிலே அவன் வடி வழகையும் ஆபரண சேர்தியையும் அனுபவித்து –அவை பரிசேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே -இது கரண சங்கோச நிபந்தனம் என்று நினைத்து – இவர் படுகிற கிலேசத்தை – விஷய வைலஷண்ய நிபந்தனம் -என்று அறிவித்து -ஈஸ்வரன் நிவ்ருத்தமாக – அவ் அனுபவத்தாலே –-நிலை பெற்றது என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே -என்று நித்ய வஸ்து சத்தை பெற்று அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும் படி சத்தாகார்யமும் பலிக்க வேண்டுகையாலே –
ஊனமில் மோக்ஷ பலமான முடிச் சோதியில் அநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று) “ஊனமில் மோக்கமென்கா” (திருவாய்மொழி 3-4-7) என்று ப்ரகாரமான ஆத்மாநுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும் செல்ல அநுபவிக்கையாலே ஸ்வரூபாநுரூபமாகக் கீழில் பத்தில் அறுதியிட்ட பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்குப் பலமான “முடிச் சோதி’ (திருவாய்மொழி 3-1) என்கிற திருவாய்மொழியில் விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் ஆபரணங்களினுடைய சேர்த்தியையும் அநுபவித்து அவை பரிச்சேதித் தநுபவிக்க வொண்ணா தொழிய இது கரண ஸங்கோசத்தாலேயோ என்றதிஸங்கை பண்ணின இவருடைய அதி ஸங்கையை வஸ்து வைலக்ஷண்ய நிபந்தந மென்னுமிடத்தைக் காட்டி நிவ்ருத்தமாக்க அவ்வநுபவத்தாலே “பெற்றது நீடுயிர் (திருவாய்மொழி 3-2-10) என்கிறபடியே நித்ய வஸ்து ஸத்தை பெற்று ஸத்தா கார்யமும் பலிக்க வேண்டுகையாலே –
வானவர் ஆதி என்கோ! வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ! வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ! ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ ஒளிமணி வண்ண னையே!–3-4-7-த்வம்ச என்னாதே ஆகல்பாவ சானமான சுவர்க்கம்-
முடிச் சோதி -3-1–-திருமலையில் போக்யதையை அனுபவியா நிற்கச் செய்தே –வட மா மலை யுச்சி என்னுமா போலே திருமலைக்கு அவயவ பூதராய் இருபத்தொரு கற்பக தரு பணைத்தால் போலே இருக்கிற அழகருடைய நிரதிசய ஸுந்தர்யத்தையும் ஆபரண சேர்த்தியையும் வேதங்கள் வைதிக புருஷர்கள் ஞானாதிகரான ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானாருடைய -ஸ்தோத்ரங்களுக்கு அபூமியான மேன்மையையும் -அவற்றையும் விளாக்கொலை கொள்ளும் படியான ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும் அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –-அந்தாமத்து அன்பிலும் அழகு சொல்லிற்று -இங்கும் அழகாய் இரா நின்றது -இரண்டுக்கும் வாசி என் என்னில்–ஆடியாடிக்கு அனந்தரமாகையாலே – ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் தான -என்று அடைவு கெட ஒப்பித்து வந்த அழகு இங்கு-இவ் வழகினுடைய ஸூ கடிதத்வத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிறார் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1-என்று – தேச கால அவஸ்தா பிரகாரங்களை இட்டு -அவச்சேதியாபடி – சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களும் செய்ய வேண்டும் படியான அபிநிவேசத்தாலே – சர்வ ஆத்ம பாவத்தை (நான்காம் பத்தின் பொருள் சர்வ வியாபகத்வம் ) புகழ்ந்து தம்முடைய பாரிப்புக்கு ஈடாக தம்மை அடிமை கொள்ளும் படி கோலி – அவன் காட்டிக் கொடுத்த -சர்வாத்ம பாவத்தை –-புகழில் நல் ஒருவனிலே –
பூதங்கள் பௌதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள் -ரசவத் பதார்த்தங்கள் – காநாதி சப்தராசிகள் -மோஷாதி புருஷார்த்தங்கள் -ஜகத் பிரதானரான -பிரம ருத்ராதிகள் – இவற்றுக்கு அடைய காரணமான பிரகிருதி புருஷர்கள் – இவற்றை அடைய விபூதியாக உடையவனாய் –இவற்றுக்கு அந்தராத்மாதயா வியாபித்து -தத்கத தோஷ -ரச அஸ்ம்ஸ்ப்ருஷ்டனாய்- இருக்கிற படியைப் பேசி அவ் அனுபவத்தால் பிரீதராய்-
அவச்சேதமற்று அடிமை செய்ய வேண்டும்படி “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய” (திருவாய்மொழி 3-3-1 என்கிற பாட்டின் படியே தேஸ காலாவஸ்த்தா, ப்ரகாரங்களை யிட்டு அவச்சேதியாதபடி ஸர்வ தேஸ ஸர்வ கால ஸர்வாவஸ்த்தைகளிலும் ஸர்வவித, கைங்கர்யங்களும் செய்ய வேண்டும்படியான அபிநிவேஸத்தாலே (ஸர்வாத்ம பாவத்தைப் புகழ்ந்து) புகழு நல்லொருவனிலே (திருவாய்மொழி 3-4) பூதங்கள் பெளதிகங்கள் உஜ்ஜ்வலமான மாணிக்யாதி பதார்த்தங்கள் காநாதி ஸப்த ராஸிகள் மோக்ஷாதி புருஷார்த்தங்கள் ஜகத்துக்கு ப்ரதாநரான ப்ரஹ்ம ருத்ராதிகள் இவற்றுக்கடைய காரணமான ப்ரக்ருதி புருஷார்த்தங்கள் ஆக விவற்றை யடைய விபூதியாக வுடையனாய் இவை தனக்குள்ளே அந்தராத்மதயா வ்யாபித்து தத்கத தோஷை: அஸம்ஸ்ப்ருஷ்டனா யிருக்கிற படியைப் பேசி அநுபவித்து அவ்வநுபவத்தாலே ப்ரீதராய் –
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்
செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –-நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்
புகழில் நல் ஒருவனிலே -3-4-தாம் முன்பு பிரார்த்தித்த அடிமை கொள்ளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய சர்வாத்ம பாவத்தை காட்டி அருளக் கண்டு-பகவத் குணங்களோ பாதி விபூதியும் ததீயத்வ ஆகாரேண உத்தேச்யம் ஆகையால் பூதங்களையும் பவ்திகங்களையும்அசாதாரண விக்ரகத்தையும் மாணிக்யாதி ஸ் ப்ருஹணீய பதார்த்தங்களையும் -போக்யமான ரஸ்யமான பதார்த்தங்களையும்
செவிக்கு இனிய காநாதி சப்த ராசிகளையும் மோஷாதி புருஷார்த்தங்களையும் ஜகத்துக்கு பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளையும்-ஜகத்துக்கு எல்லாம் காரணமான ப்ரக்ருதி புருஷர்களை விபூதியாக உடையனாய் அந்த சரீர பூதமான விபூதியில் ஆத்ம தயா வியாபித்து ததகத தோஷை ரசம்ஸ்ப்ருஷ்டனான மாத்திரம் அன்றிக்கே ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள எம்பெருமானை -இவனுக்கு தகுதியாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து பகவத் குண அனுசந்தானம் பண்ணினால்-
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் என்னும் கணக்கால் காயிகமான அடிமையில் ஷமர் இல்லாமையாலும்-கோவை வாயாளில் படியே எம்பெருமான் இவர் தாம் பேசின பேச்சை எல்லா அடிமையுமாக கொள்ளுவான் ஒருவன் ஆகையாலும் விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –
4-சொல்லிப் பாடி ஏத்தி பிதற்றி எழுந்தும் பரந்தும் துள்ளிக் குனித்துதடு குட்டக் கும்பிடு
நட்டமிட்டுசிரிக்க குழைந்து நையும் ப்ரீதி உகள எம்மானைச் சொல்லிப் பாடி –பண்கள் தலைக் கொள்ளப் பாடி –முனிவின்றி ஏத்தி –பேர் பல சொல்லிப் பிதற்றி –எழுந்தும் பறந்தும் துள்ளாதார் –
ஏத்தி குனிப்பார்-தடு குட்டமாய்-கும்பிடு நட்டமிட்டு ஆடி –உலோகர் சிரிக்க நின்றாடி – நெஞ்சம் குலைந்து நையாதே என்று வாசிக காயிக மானச வியாபாரங்களாலே களிக்கும் படி – அந்த ப்ரீதி தலை மண்டி இட்டு செல்ல –
(சொல்லிப் பாடி யேத்திப் பிதற்றி யெழுந்தும் பறந்தும் துள்ளிக் குனித்துத் தடுகுட்டக் கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதி யுகள) “எம்மானைச் சொல்லிப் பாடி” (திருவாய்மொழி 3-5-1 “பண்கள் தலைக் கொள்ளப் பாடி” (திருவாய்மொழி 3-5-2”முனிவின்றி யேத்தி’ (திருவாய்மொழி 3-5-6 “பேர் பல சொல்லிப் பிதற்றி” (திருவாய்மொழி 3-5-8) ‘ எழுந்தும் பரந்தும் துள்ளாதார்‘திருவாய்மொழி 3-5-1) “ஏத்திக் குனிப்பார்’ (திருவாய்மொழி 3-5-6) தடு குட்டமாய் (திருவாய்மொழி 3-5-3) “கும்பிடு நட்டமிட்டாடி” (திருவாய்மொழி-3-5-4)உலோகர் சிரிக்க நின்றாடி உள்ளங் குழைந்து நைய” (திருவாய்மொழி 3-5-8) என்று வாசிக காயிக மாநஸங்களினாலே களித்து அந்த ப்ரீதி தலை மண்டை யிட்டு
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1–எம்மானைச்-அவன் வந்த போதே ஆனையின் சிறை போயிற்று -அந்நீர்மையில் இவர் சிறை பட்டார்-தன் மேன்மை பாராதே ஒரு திர்யக்க்குக்கு உதவுவதே என்று தாம் எழுதிக் கொடுக்கிறார்-சொல்லிப் பாடி-எழுந்தும் பறந்தும் துள்ளாதார்--அந்நீர்மையை வாயாலே பேசி -ப்ரீதி பிரேரித்தராய் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே எழுந்து இருந்து தரையிலே கால் பாவாதே-சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதவர்கள்
நமக்கு ஒரு ஆபத்து வந்தால் இருந்த இடத்தில் இராதே விக்ருதனாம் போதும் அவனே வேணும் –
அவன் நூறாயிரம் செய்தாலும் அவிகிருதராம் போதும் நாமே வேணும் என்று பட்டர் அருளிச் செய்வார்
தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2–பண்கள் உஜ்ஜவலமாம் படி -என்னுதல் -ஹர்ஷத்தாலே ஒரு பண்ணிலே எல்லாப் பண்ணும் கூடும்படி அடைவு கெடப் பாடி என்னுதல் –
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6—முனிவு இன்றி-அவதாரம் ஆகிற மஹா குணத்திலே அநீஸ்வரத்வ தோஷத்தை அனுசந்திக்கிற அ ஸூ யையிலே இழியாதே-முனிவு என்று –முனித்வமாய்அவதாரத்தை அனுசந்தித்து தெளிவு உடையராய் அவிகிருதராகை இன்றிக்கே இருக்கை –ஏத்திக் குனிப்பார்-வாசிக காயிகமான விக்ருதிகளை உடையராய் இருக்கை –
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8—விபூதி விஷயமாகவும் ஸ்வரூப ரூப குண விஷயமாகவும் தாம் புகழு நல் ஒருவனில் -அனுபவித்தவற்றை நினைக்கிறார் –-அக்ரமமாகவும் சொல்லி
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1–அந்நீர்மையை வாயாலே பேசி -ப்ரீதி பிரேரித்தராய் பாடி இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே எழுந்து இருந்து தரையிலே கால் பாவாதே-சாசம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதவர்கள்-நமக்கு ஒரு ஆபத்து வந்தால் இருந்த இடத்தில் இராதே விக்ருதனாம் போதும் அவனே வேணும் – அவன் நூறாயிரம் செய்தாலும் அவிகிருதராம் போதும் நாமே வேணும் என்று பட்டர் அருளிச் செய்வார்
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6—ஏத்திக் குனிப்பார்-வாசிக காயிகமான விக்ருதிகளை உடையராய் இருக்கை –முழுது உணர் நீர்மையினாரே.–முழுதும் உணர்ந்த ஸ்வ பாவத்தை உடையார் ஆவார்கள் –-ஒன்றுமே கற்றிலரே யாகிலும் –ஏக விஞ்ஞாநேந சர்வ விஞ்ஞானம் -என்கிறபடியே எல்லாம் அறிந்த பூர்த்தியை உடையவர்கள் –
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-தலை தரையிலே தட்டப் பண்ணும் அங்க விகாரத்தை உடையராய் ஸம்ப்ராந்தர் ஆகாதார் –
வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?–3-5-4—கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்-கும்பீடு நட்டம் இட்டுக் கூத்தாடி-கோகு உகட்டு உண்டு உழலாதார்-கோகு -அடைவு கேடு –உகட்டு -தலை மண்டையிட்டு –உண்டு -இதுவே ஜீவனம் ஆகி –உழலாதார்-அதுவே யாத்திரையாக இராதார்
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8—மனுஷ்ய சந்நிதத்தோடு அ சந்நிதத்தோடு வாசி அற -விசேஷஞ்ஞர் உள்ள இடத்தோடு இல்லாத இடத்தோடே வாசி அற-லௌகீகர் சிரிக்க அதுவே தளமாக நின்று ஆட-ஆர்வம் பெருகிக் குனிப்பார்-அபி நிவேசம் மிக்கு விக்ருதரமாவார்கள்-அமரர் தொழப்படுவாரே.–பகவத் அனுபவத்தால் களித்து-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னுமவர்களாலே கொண்டாடப் படுவார்கள்–
(அடுத்த செய்ய தாமரைக் கண்ணன் –திருவாய் மொழியும் பர உபதேசம் என்பதால் இதன் பொருளையும் சொன்னால் விரோதம் திருவாய் மொழியின் பொருளுடன் மேலே அருளிச் செய்வார் –
ஆகையால் பயிலும் சுடர் ஒளி -தாத்பர்யம் இங்கே )தம் அடியார் என்ன உடன் கூடும் சாத்யம் வளர
இப்படி உண்டான ப்ரீதி அவன் அளவில் பர்யவசியாதே –தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியார் அடியோங்களே – என்று ததீய சேஷத்வத்தின் எல்லையிலே நிற்கிறவர்கள் -நமக்கு உத்தேச்யர் என்னும் படி – அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று கீழ் பத்தில் பிரார்த்தித்த சாத்தியம் -அவர்களோடு கூடி அவனை அனுபவிக்கும் அளவு அன்றிக்கே – அவன் அடியார் உடைய சேஷத்தின் எல்லை அளவும் செல்ல வளர —
(தம்மடியாரென்று உடன் கூடும் ஸாத்யம் வளர) இப்படி யுண்டான ப்ரீதி அவ் வளவில் பர்யவஸியாதே “தம்மடியாரடியார் தமக்கடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே (திருவாய்மொழி 3-7-10) என்று ஸேஷத்வத்தினுடைய எல்லையிலே நிற்கும்படி “அடியார் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ” (திருவாய்மொழி 2-3-10) என்று கீழில் பத்திலே ப்ரார்த்தித்த பாகவத ஸேஷத்வமாகிற புருஷார்த்தம் அதினுடைய எல்லை யளவாக வளர–
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10—தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் -என்று சேஷித்வத்துக்கு அவனுக்கு அவ்வருகு இல்லாதா போலே சேஷத்வத்துக்கு தமக்கு அவ்வருகு இல்லாத படி அதன் எல்லையில் நிற்கிறார்-தம்முடைய ருசிக்கு அவதி உண்டாய் மீண்டார் அல்லர்-சந்தஸ் ஸூ முடிய வேண்டுகையாலே மீண்டாராம் அத்தனை –
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே – திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும் இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ–நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே
5-பை கொள் பாம்பு போலே இந்திரிய வ்ருத்தி நியம மற-பை கொள் பாம்பேறி உறை பரனே -என்று (முடியானே -எட்டாம் திருவாயமொழியின் தாத்பர்யம் )-அவனுடைய சர்வாதிகத்வ பிரகாசமான படுக்கையாய் இருக்கும் – திரு அனந்தாழ்வான் –சஷுஸ் ஸ்ரவா -என்கிறபடியே – ஒரு கரணத்தாலே கர்ணாந்தர விருத்தியும் கொள்ளுமா போலே – நெஞ்சம் நீள் நகராக இருந்த என் தஞ்சனே -என்றும் ,
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்றும் , கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை-என்றும் , கண்களால் காண வரும் கொல் -இத்யாதிகளாலே – வாக் பாணி சஷூர் விருத்திகளை -ஆசைப் படும்படி ஆகையாலே – இந்திரிய விருத்தி நியமமின்றிக்கே -அவனை அனுபவிக்க வேண்டும் படியான பெரு விடாயை உடையராய்-
(பைகொள் பாம்பு போலே இந்த்ரிய விருத்தி நியமமற) “பைகொள் பாம்பேறி உறை பரனே‘ (திருவாய்மொழி 3-8-4) என்று திருவனந்தாழ்வான் சஷுஸ்ரவா: என்கிறபடியே ஒரு கரணத்தாலே மற்றைக் கரணத்தில் கார்யமும் கொள்ளுமா போலே “நெடியானே என்று கிடக்கு மென் நெஞ்சமே” (திருவாய்மொழி 3-8-1 “வஞ்சனே என்னு மெப்போதும் என் வாசகமே” (திருவாய்மொழி 3-8-2) “ஆனாயர் தாயவனே என்று தடவுமென் கைகளே” (திருவாய்மொழி 3-8-3) என்றித்யாதிகளாலே கரணம் சேதந ஸமாதியாலே கரணாந்தர ப்ரவருத்தியையும் ஆசைப் படும்படியான பெரு விடாயை உடையராய்-
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4—இப்படி தொழுகைக்கு அடியான சர்வாதிகத்வமும் ஸ்ப்ருஹநீயத்வமும் சொல்லுகிறது –-ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடைய திரு வனந்த ஆழ்வான் மேலே நித்ய வாசம் பண்ணுகையாலே தகட்டில் அழுந்தின மாணிக்கம் போலே ஸ்ப்ருஹணீயமாய்-இருக்கை
அனந்த சாயி என்கிறபடியே சர்வாதிகாத்வம் சொல்லிற்று ஆகவுமாம்-உன்னை இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை
முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-பெரிய திருவடியின் முதுகில் இருப்பைக் கண்டால் ப்ரஹ்மாதிகளுடைய ஐஸ்வர்யம் ஷூத்ரமாய்-இவனே சர்வாதிகன்-என்று தோற்றும்படி இருக்கை- வடிவு அழகோபாதி இவர்க்கு ஐஸ்வர்யமும் ஆகர்ஷகமாய் இருக்கிற படி – என்று கிடக்கும் என் நெஞ்சமே.–இப்படிகளைச் சொல்லி அச் சொல்லைத்த தலைக் கட்டாமே கிடக்கும்–உக்த்வார்யேத்தி சக்ருத்தீ நம் புனர் நோவாச கிஞ்சன -என்ற ஸ்ரீ பரத்தாழ்வானை போலே-என் நெஞ்சமே.-என் மனனே என்கிறார் அல்லர் -நான் செய்தபடி செய்ய இப்பிரஜையைக் கொண்டு என் செய்கேன் -என்கிறார் –
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2—வஞ்சனே!-சிறு காலாலே மூவடி என்று வேண்டிப் பெரிய காலாலே இரண்டு அடியிலே அடங்கின வஞ்சனம்–கொள்வான் -என்கிறார் இந்திரன் பேறு தன் பேறாக இருக்கையாலே-வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.– அவ்வஞ்சனத்தையே சர்வ காலமும் சொல்லா நின்றது என் வாக்கானாது
அவ்வஞ்சனத்தை அனுசந்தித்த பின்பு ராமாவதாரத்தில் செவ்வையிலும் போகிறது இல்லை
ஸ்வரூபம் அறியாமை செய்த இடம் இறே அவ்வவதாரம் -தன்னை அழிய மாறின இடம் இறே இது
எப்போதும்-கலியன் சோறு சோறு என்னுமா போலே
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—இடையாருக்கு தாய் போலே பரிவன் ஆனவனே-என்று தடவும் என் கைகளே.–-அவன் வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே வழியைக் கட்டிப் பிடித்துக் கொள்ள தேடா நின்றது என் கைகள்
நவநீத ஸுர்ய வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை -என்னவுமாம் –ராமம் மே அநு கதாத்ருஷ்ட்டி –
பாடவந்த கவி அன்றிக்கே படைத்தான் (சொன்னால் விரோதம் -திருவாய் மொழி தாத்பர்யம் )
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் –என்றும்-ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு –என்றும் –அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத் -என்கிற உபநிஷத்தின் படி கவி பாடுமவருமாய்-
(பாடவந்த கவி யன்றிக்கே படைத்தான் ஸ்லோக க்ருத்தாய்) “வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேனல்லேன்” (திருவாய்மொழி 3-9-9) என்று இதர ஸ்தோத்ரத்துக்கநர்ஹ கரணராய் “ஒன்றி யொன்றி உலகம் படைத்தான் கவியாயினேற்கு” (திருவாய்மொழி 3-9-10) என்று ஐகத் ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே தம்முடைய ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணின ஸர்வேஸ்வரன் விஷயத்திலே “அஹம் ஸ்லோக க்ருத் அஹம் ஸ்லோக க்ருத்” (தைத்திரீய உபநிஷத்) என்கிற உபநிஷத்தின்படியே கவிபாடுமவருமாய்-
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9—ஸ்ருஷ்டத்வம் வனவாசாய என்கிறபடியே அவன் தன்னை ஏத்துகைக்காக தந்த வாக்கைக் கொண்டு ஷூ த்ரரைக் கவி பாட பிறந்தேன் அல்லேன்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிற விஷயத்தை கவி பாடப் போமோ -என்னில் தன்னை எனக்கு விஷயம் ஆக்கித் தந்தால் கவி பாடக் குறை என் என்கிறார்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10—ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான்-கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு
6 -குறை முட்டுப் பரி விடர் துயர் துன்பம் அல்லல் துக்கம் தளர்வு கேடுகள் இன்றி அம்ருத ஆனந்த மக்நரானவர் (சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் )-தேச விஷயத்தில் போய் அனுபவிக்க பெற்றிலேன் என்கிற குறை இல்லை – இவ் அனுபவத்துக்கு எனக்கு ஒரு பிரதிஹதி இல்லை –-அவன் விஷயத்தில் ஆன பின்பு -ஏக தேசமும் என் மனசில் துக்கம் இல்லை –வகுத்த சேஷி என்று பற்றுகையாலே எனக்கு ஒரு துக்கம் இல்லை – ருசி முன்னாக தேச விசேஷ பிராப்தி பண்ணுகிற எனக்கு -வைதிக புத்ரர்களைப் போலே – மீளில் செய்வது என் என்கிற துக்கம் இல்லை – இங்கே அவன் குணங்களை நெருங்கே புஜித்த எனக்கு -பூர்ண அனுபவம் பண்ணலாம் தேசத்தில் போகப் பெற்றிலேன் என்கிற துக்கம் இல்லை – இது அவனுடைய லீலா விபூதி என்று அறிந்த எனக்கு -இனி லீலா விபூத் அன்வயமாகிற துக்கம் இல்லை – ஸ்வ சங்கல்ப்பத்தாலே -சிருஷ்டியாதிகளை பண்ணவல்ல ஆசர்ய சக்தி யுக்தனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை .. அகடி தகடனா சமர்த்தனானவனை பற்றின எனக்கு ஒரு தளர்ச்சி இல்லை – விமுக தசையில் வியாப்தி யாலும் -அபிமுக தசையில் அவதாரத்தாலும் – ரஷிக்கும் அவனைப் பற்றின எனக்கு ஒரு கேடு இல்லை -என்றபடி – சன்மம் பல பலவில் -பத்துப் பாட்டாலும் அடைவே-(குறைவிலனே –முட்டிலனே –பரிவிலனே -இடரிலனே- துயரிலனே -துன்பமிலனே -அல்லலிலனே -துக்கமிலனே-தளர்விலனே -கேடிலனே-என்று ) தாம் பேசும்படி –
(குறை முட்டுப் பரிவிடர் துயர் துன்ப மல்லல் துக்கம் தளர்வு கேடுகளின்றி அம்ருதாந்த மக்நரானவர்) தேஸ விஸேஷத்தில் போயநுபவிக்கப் பெற்றிலேனென்கிற குறைவில்லை; இவ்வநுபவத்துக்கு எனக்கொரு ப்ரதிஹதி யில்லை, ஏகதேஸமும் மநோதுக்க, மில்லை; வகுத்த ஸேஷி என்று பற்றுகையாலே எனக்கொரு துக்கமில்லை. ருசி முன்னாக தேஸ விஷேஷ ப்ராப்த பண்ணுகிற எனக்கு வைதிக புத்ரர்களைப் போலே மீளில் செய்வதென் என்கிற துக்கமில்லை; இங்கே அவனுடைய கல்யாண கு ணங்களை நெருங்க புஜித்த எனக்கொரு தேஸ விஸேஷத்திலே போகப் பெற்றிலேன் என்கிற துக்க மில்லை; இவ் விபூதி அவனுடைய லீலை என்றறிந்த வெனக்கு ஒரு தளர்த்தி யில்லை: எனக்காக ஸர்வ வ்யாபகனா யிருக்கிறவனைப் பற்றின எனக்கொரு கேடில்லை. அவனுடைய லீலா விபூத்யந்வயமாகில் செய்வதென் என்கிற அல்லலில்லை; ஆஸ்சர்ய பூதனான க்ருஷ்ணனைப் பற்றின எனக்கொரு கேடில்லை; என்றிப்படித் தாமே சொல்லும்படி–
சன்பம் பல பல -பத்தாம் திருவாய்மொழியின் தாத்பர்யம் -கீழ் உபதேசித்த ஹிதம் நெஞ்சில் படாத -இப்படி ஹேயரான சம்சாரிகளைப் நடுவிலே இருந்து வைத்து பகவத் விஷயத்துக்கு அர்ஹமான கரணங்களை உடையேனாகப் பெற்றேன்-அது தன்னிலும் ஆஸ்ரித அர்த்தமாக கர்மா வஸ்யரைப் போலே சம்சாரிகள் நடுவே வந்து திருவவதரித்த திவ்ய அவதாரங்களையும் அவதார ஸித்தமான திவ்ய குணங்களையும் திவ்ய சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து இதுவே போது போக்கப் பெற்றேனுக்கு -இதில் காட்டில் வேண்டுவது ஓன்று உண்டோ என்று மிகவும் ப்ரீதர் ஆகிறார் – முடியானேயில் தம்முடைய ஆற்றாமையும் நித்ய ஸூ ரிகளுடைய அனுபவத்தையும் அனுசந்தித்தவாறே இழவாய் தோற்றிற்று -சொன்னால் விரோதத்தில் சம்சாரிகள் படியை பார்த்தவாறே அவ்விழவு தானே பேறாகத் தோற்றிற்று –
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.-3-10-1-–செவ்வையாகிற நன்மையை யுடையவனுடைய -சவ்ர்ய வீர்ய பராக்கிரமங்களை ஆஸ்ரித விஷயத்தில் ஸ்வாமித்வ வாத்சல்யங்களையும் பரக்கப் பேசி ஸ்துதிகாபி பெற்ற நான் தேசாந்திரத்திலும் காலாந்தரத்திலும் தேகாந்தரத்திலும் பகவத் விஷயத்தில் இன்ன அம்சம் அனுபவிக்கப் பெற்றிலோம் என்று ஒரு குறையுடையேன் அல்லேன் –
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.– இந்த லக்ஷணத்தாலே குறைவற்ற புகழை ப்ரீதி பிரகரக்ஷத்தாலே ஏத்தியும் பாடியும் பிரேம பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராதே ஆடியும் வர்த்திக்கிற நான் பகவத் போகத்துக்கு ஒரு ப்ரதிஹதையை உடையேன் அல்லேன் என்கிறார் –
இறை யாகிலும் யான் என் மனத்துப் பரிவு இலனே.–3-10-3-அநந்யார்ஹமாம் படி உட்பட்ட பின்பு பரிபூர்ண விஷய அவகாஹியான நான் ஏகதேசமாகிலும் இதர விஷய சம்பாவிதமான அலாப வைகல்ய விச்சேத துக்க உத்தரத்வாதி நிபந்தமான பறிப்பானது என் மனசிலே உடையேன் அல்லேன்
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-இவனைப் பற்றின எனக்கு அல்ப துக்கமும் இல்லை – பேரன் என்று இருக்கையாலே அநிருத்த ஆழ்வானுக்கு நாலு நாள் சிறை இருக்க வேண்டிற்று-அடியேன் என்று பற்றினவன் ஆகையால் எனக்கு அதுவும்வேண்டிற்று இல்லை –
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-சரீர சம்பந்தம் அற்றால் போகக் கடவதாய் இருக்க -இச் சரீரத்தோடு யாயிற்று இவர்களைக் கொண்டு போயிற்று
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையால் அவ்வுடம்போடே அப்பருவத்தோடே கொண்டு வந்து கொடுத்தவனைப் பற்றுகையாலே ஒரு துக்கம் இல்லை என்கிறார் – புத்ரார்த்தியான அளவன்றியே ஸ்வரூபத்தை அறிந்து பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை என்கிறார் –
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-ஹேய ப்ரத்ய நீகனாய் கல்யாண குணாத்மகனான கிருஷ்ணன் ஆகிற ஆச்சர்யவானுடைய குண சேஷ்டிதாதி பிரதையை நெருங்க அனுபவிக்கப் பெற்ற நான் ரு அப்ரீதியை உடையேன் அல்லேன் –-துன்பம் -இன்பத்துக்கு எதிர்த்தட்டான அப்ரீதி –
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-அவனுடைய அகர்ம வஸ்யத்தையை அநு சந்திக்கப் பெற்ற எனக்கு கர்ம வஸ்யன் ஆகையும்-தத் பலமான லீலா விபூதி அன்வயமும் ஆகிற துக்கமும் இல்லை என்கிறார்-நமாம் கர்மாணி லிம்பந்தி நமே கர்ம பல ஸ் ப்ருஹா-இதிமாம் யோ அபி ஜா நாதி கர்மபிர் ந சபத்யதே- மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்திதே -என்னக் கடவது இறே –
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-பிராட்டி புருஷகாரமாக சஹகார நிரபேஷமாக நம் கார்யம் செய்பவனுமாய்-ஏஷ -ஹ் யே வா நந்தயாதி -என்கிறபடியே ஆனந்த அவஹனானவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கமும் இல்லை என்கிறார் –
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-சர்வ சக்தியாய் -ப்ரஹ்மாதிகளுக்கு ரக்ஷகனானவனை அனன்யா ப்ரயோஜனனாய் ஆஸ்ரயித்த எனக்கு ஒரு துக்கம் உண்டோ என்கிறார்-
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-இவன் விமுகனான அன்றும் வியாப்தியாலே சத்தையை நோக்கி இவன் ஆபிமுக்யம் பண்ணின அன்று கண்ணுக்கு தோற்ற நின்று ரக்ஷிக்குமவன் திருவடிகளை முறையிலே பற்றின எனக்கு ஒரு நாளும் ஒரு அநர்த்தம் இல்லை
நிரஸ்த சமஸ்த கிலேசராய் -அம்ருதரான முக்தர் –பகவத் அனுபவத்தாலே ஆனந்திக்குமா போலே –
அவ் ஆனந்த சாகர மக்நரானவர் –செய்ய தாமரைக் கண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி
செய்ய தாமரை கண்ணனாய் -என்று தொடங்கி –-எஞ்சலில் அமரர் குல முதல் மூவர் தம் உள்ளும் ஆதியை அஞ்சி நீர் உலகத்து உள்ளீர்கள்-என்று – புண்டரீகாஷத்வாதி பரத்வ சிஹ்னங்களை உடையனாவன் – ஞான சங்கோச ரஹீதரான நித்ய ஸூரிகள் திரளுக்கு நிர்வாஹன் அன்றோ –
சம்சாரிகளான நம்மால் அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்று அஞ்சாதபடி-எளிவரும் இணைவனாம் என்றவை பரத்வமாம் படி எளிவரும் இயல்வினன்- இணைவனாம் எப்பொருட்கும் -என்று பத்துடை அடியவரிலும் -அணைவது அரவணை -மேலிலும் வெளி இட்ட அவதார சௌலப்யம் பரத்வ ஸ்தாநீயனாம் படி–
அம்ருதரான முக்தர் பகவதநுப வத்தால் ஆநந்திக்குமாபோலே அவ்வாநந்த ஸாக,ரத்திலே மக்நரான இவர் (செய்யதாமரைக் ௧ண்ணன் அமரர் குல முதல் என்று அஞ்சாதபடி) “செய்ய தாமரைக் கண்ணனாய்” (திருவாய்மொழி 3-6-1 “எஞ்சலிலமரர் குல முதல் (திருவாய்மொழி 3-6-9) “அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் (திருவாய்மொழி 3-6) என்று புண்டரீகாஷனான ஸர்வேஸ்வரன் ஜ்ஞாந ஸங்கோசமில்லாத நித்ய ஸூரிகளுடைய திரளுக்கு நிர்வாஹகனன்றோ, ஸம்ஸாரிகளான நம்மாலே அவனை ஆஸ்ரயிக்கப் போமோ என்றஞ்ச வேண்டாதபடி (எளிவரு மிணைவனாம் என்றவை பரத்வமாம்படி) “எளிவரும் இயல்வினன்’ (திருவாய்மொழி 1-3-2) “இணைவனாம் எப்பொருட்கும்” (திருவாய்மொழி 2-8-1 என்று பத்துடை யடியவரிலும் அணைவதரவணையிலும் வெளியிட்ட அவதார ஸெளலப் யம் பரத்வ ஸ்த்தாநீயமாம்படி
7-அவனாகும் சௌலப்ய காஷ்டையைக் காட்டி-நெஞ்சினால் நினைப்பவன் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -என்று மனசால் யாதொன்றை திரு மேனியாக கோலினி கோள்-அபரிசேத்ய மஹிமனான சர்வேஸ்வரன் அத்தையே தனக்கே அசாதாரமான விக்கிரகமாக விரும்பும் என்று –
யேய தாமாம் பிரபத்யந்தே தாம்ஸததைவ பஜாம் யஹம் –ஸ்ரீ கீதை -4-11 -என்றும்-அர்ச்சயஸ் சர்வ சஹிஷ்ணுர் அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் -74–என்கிற அர்ச்சாவதார சௌலப்ய காஷ்ட்டையைக் காட்டி வழியை தருமவன் நிற்க இழிய கருதுவது என்னாவது-
ஒழிவு ஓன்று இல்லாத -என்று தொடங்கி – இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே -என்று
யாவதாத்மபாவி பகவத் அனுபவம் தான் ஒரு சிறாங்கை என்னும் படியான அர்ச்சிராதி மார்க்கமும் தருகிறவன் -தன்னை ஒரு சொல் சொல்லுவார் யாரோ – என்று அவசர பிரதீஷனாய் நிற்க -அவனை விட்டு புறம்பே கவிபாடுகைக்கு விஷயம் தேடித் போய் –ஒரு சொல்லுக்கு பாத்தம் போராத-சூத்ர மனுஷ்யரைக் கவி பாடி முன்பு நின்ற நிலையிலும் காட்டில் தாழ இழிய நினைக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு ? அத்தால் ஸ்வரூபம் பெற்றிலிகோள்–வேண்டிற்று எல்லாம் தரும் – சகல பல ப்ரதோஹி விஷ்ணு -என்கிறபடியே சர்வ அபேஷிதங்களையும் தரும் –தன்னாகவே கொள்ளும்
பரம் சாம்யம் உபைதி -என்கிறபடி – தன்னோடு சாம்யா பத்தியை கொடுக்கும் .-கவி சொல்ல வம்மின் என்று-இதுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை —இதர ஸ்தோத்ரம் பண்ணி உங்கள் கரணங்களை பாழே போக்காதே -வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி – இவ் விஷயத்திலே கவி சொல்ல வாருங்கோள் என்று –
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ-என்றும்-யஞ்ஜேசோ யஞ்ஞ புருஷ புண்டரீகாக்ஷ சம்ஞ்சித –என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே-செவ்வியை உடைத்தாய் சிவந்த தாமரைப் பூ போலே இருக்கிற கண் அழகை உடையனாய் பிரளய ஆர்ணவத்திலே அந்தர படாத படி ஜகத்தை திரு வயிற்றில் வைத்தவன் கிடீர் – வடிவு அழகில் புண்டரீகாக்ஷத்வம் போலே குணங்களில் பிரளய ஆபத் ஸகத்வமும்
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9–எஞ்சல் ஆகிறது -சுருங்குதல் -பகவத் அனுபவத்தில் சங்கோசம் இல்லாத நித்ய ஸூரிகள் குலம் உண்டு -திரள் -அதுக்கு நிர்வாஹகனை –அவர்களுக்கு ஜீவன ஹேது வானவனை என்றுமாம் –அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் –
சர்வாதிகனை ஆச்ரயிக்கப் போமோ -என்று அஞ்சி -உலகத்தில் உள்ளீர்களான நீங்கள் கலங்கி
அவன் இவன் என்று கூழேன்மின்;-அவன் ஆகிறான் வி லக்ஷண தேசத்தில் அசாதாரண விக்ரஹ விசிஷ்டானாய் இருப்பான் ஒருவன்-இங்கு நாம் உகந்ததொரு த்ரவ்யத்தை திரு மேனியாக விரும்பும் அளவாய் இருக்கையாலே இவ்விடம் பரிச்சின்னம் -அவ்விடம் அபரிச்சின்னம் என்று ஸம்ஸியாதே
நெஞ்சினால் நினைப்பான் எவன்?-மனசாலே யாது ஒன்றை ஸ்வரூபமாக நினைத்தி கோள்
அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.– அபரிச்சேதய மஹிமானான சர்வேஸ்வரன் அத்தையே தனக்கு அசாதாரண மாக விரும்பும்-ப்ரதிமாஸ் வபரப்புத்தா நாம் -என்னும் ருஷிகளைப் போலே தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே –அவன் இவன் என்கிறார் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:–4-11-யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
ஆஸ்தாம் தே குண ராசிவத் குண பரீவாஹ ஆத்மாநம் ஜன்மனாம்
சங்க்யா பவ்ம நிகேத நேஷு அபி குடீ குஞ்சேஷு ரெங்கேஸ்வர
அர்ச்சயஸ் சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகில ஆத்ம ஸ்திதி
ப்ரீணீஷே ஹ்ருதயாலுபி தவ ததச் சீலாத் ஐடீ பூயதே –-2-74-தேவர் பூமியில் உண்டான ஸ்ரீ கோயில்களிலும் மாளிகைகளும் ஆஸ்ரமங்களிலும் அஞ்ஞாபிஞ்ஞ வர்ணாஸ்ரம விபாகமற
எல்லாராலும் பாஞ்சராத்ர விதிப்படி ஆராத நீயனாய் – மத்யே சம்பாவிதங்களான அபராதங்களையும் பொறுத்து ஆசன போஜன சயனாதிகள் அவர்கள் இட்ட வழக்காய் அவர்கள் இட்டது கொண்டு திருப்தராகிறது –
8 -முக்த ஐஸ் வர்யத்தை முன்னிட்டு வழியை தரும் நாங்கள் வானவர் ஈசன் நிற்க -என்றும் ,
தன்னாகவே கொண்டு -என்றும் சொல்லுகையாலே -இவ் விஷயத்தை கவி பாடினால் சித்திப்பது பகவத் அனுபவ பரம சாம்யா பத்தி யாதிகள் என்று -முக்த ஐஸ் வர்யமான பேற்றை முன்னிட்டு
ஸ்வ விருத்தியை மாற்றி ஸ்வ விருத்தியில் மூட்டுகிறார் மூன்றாம் பத்தில் .. அதாவது – இப்படி தம்முடைய உபதேசத்தாலே –-சேவா ஸ்வ விருத்தி ராக்யயாதா -என்று நிஹீநதரர் ஆகையாலே -ஸ்வ விருத்தியாக சொல்லப் பட்ட அப்ப்ராப்த விஷய சேவையை மாற்றி – சாயாவா சத்வமனுகச்சேத் –சா கிமர்த்தம் ந சேவ்யதே – விஹகேஸ்வர சம்ஹிதை -என்று இவ் விஷயத்தை சேவிப்பான் என்றும் -எத்தைப் பற்ற இவ் விஷயம் சேவிக்கப் படாது-ஒழிகிறது என்றும் -விதிக்கும் படி ப்ராப்தமான இவ் விஷயத்திலே –-புகழு நல் ஒருவனில் -படியே தம்முடைய வாசிக விருத்தியிலே மூட்டுகிறார்
மூன்றாம் பத்தில் என்கை-
(முக்தைஸ்வர்யத்தை முன்னிட்டு) “ஹாவு ஹாவு ஹாவு அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்’ (தைத்திர்யோபநிஷத்) என்று முக்தருடைய ஐஸ்வர்யமான வாசிக கைங்கர்யத்தை முன்னிட்டு (ஸ்வவ்ருத்தியை மாற்றி ஸ்வ வ்ருத்தியிலே மூட்டுகிறார்) “ஸேவா ஸ்வ வருத்திராக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜயேத்’ (மநு ஸ்ம்ருதி’ என்று அப்ராப்த விஷயத்திலே ஸேவை நிஹீந தரமாகையாலே அந்த ஸ்வ வ்ருத்தியை மாற்றி சாயாவாஸத்வமநுகச்சேத்”(மூல ஸம்ஹிதை )என்றும் “ஸா கமர்த்தம் ந ஸேவ்யதே” (விஹகேஸ்வர ஸம்ஹிதை 24-14) என்றும் விதிக்கப் படுகிற ப்ராப்த விஷயத்திலே புகழு நல்லொருவனில் படியே தம்முடைய வாசிக வருத்தியிலே மூட்டுகிறார் முன்றாம் பத்தில் -என்கிறார் –
ஆக -மூன்றாம் பத்தில் –சர்வ வியாபகத்வம் -வெளியிட்டு அருளி-அவன் வண்மைக்கும் இவர் நிஷ்கர்ஷித்த ப்ராப்யத்துக்கும் அனுரூபமான மோக்ஷத்தைக் காட்டிக் கொடுக்க-அதன் பலமாக ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் ஒருவாறு பெற்றமையையும் அதனால் பெற்ற ப்ரீதி உள்ளடங்காமல் தலைமண்டியிட்டுச் சென்றமையையும் அவன் அளவோடு நில்லாமல் அடியார் அடியார் அடியார்கள் அளவும் செல்ல வளர்ந்தமையையும் மீண்டும் பகவத் அனுபவத்தில் விடாயைப் பெற்றமையையும்
அவனை ஸ்தோத்ரம் பண்ணி நிரதிசய ஆனந்தம் பெற்றமையையும் பரோபதேசம் செய்தமையும் அருளிச் செய்கிறார்-என்றவாறு )
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply