1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்
—
இரண்டாம் பத்தால்-சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண – அவனாலே தத் ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று ஆசைப் பட்டுப் பெறாமையாலே – அவசன்னராக –இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி – அவன் வந்து சம்ஸ்லேஷித்து –அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையனாய் –
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு – அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட – அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் – ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு – தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக- த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும் சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் – முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை – நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —
இரண்டாம் பத்தில் ஸர்வ காரண பூதனான ஸர்வேஸ்வரன் கீழிற் பத்திலே இவ்வாழ்வார்க்கு அஜ்ஞாத ஜ்ஞாபநம் பண்ணி அவனாலே தத்த ஜ்ஞாநரான இவர் அந்த ஜ்ஞாநத்துக்குப் பலமான மோக்ஷத்தை அப்போதே பெற வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே அவஸந்நராக இவருடைய அவஸாதமெல்லாம் தீரும்படி அவன் வந்து ஸம்ஸ்லேஷித்து அந்த ஸம்ஸ்லேஷத்தாலே வந்த ப்ரீதியை உடையராய் அந்த ப்ரீதியை இவரொருவர் அளவில் பர்யவஸியாதே இவரோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரளவும் வெள்ளமிட்டு அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லக்ஷணமான மோக்ஷத்தை இவர்க்கவன் கொடுக்கத் தேட அந்த மோக்ஷத்தை அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய ஸேஷத்வத்துக்கும் அநுகுணமாம்படி நிஷ்கர்ஷித்த இவர் ஆஸ்ரயணீயனான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனவான லக்ஷணங்களையும் வெளியிட்டு ஸம்ஸாரிகள் துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ ஸுக ப்ராப்திக்கு ஸாதநமாக விதிக்கப்பட்ட ஸ்வரூபாந்தர்கதமான குணோபாஸநத்தை நிஷித்தாநுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக க்ஷேத்ர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் என்கிறார்.
1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித, காரணமானவன் அறியாதன அறிவிக்க உள்ளம் தேறித் தூ மனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடிவாட, -2-உலராமலாவி சேர்ந்து சிக்கனப் புகுந்து ஸம்பந்தி களும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உப்யாநுகுண மாக்கினவர் -3-ஆஸ்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகலபல ப்ரதத்வ காரணத்வ ஸேஷஸாயித்வ ஸ்ரிய:பதித்வ ஸெளலப்யாதிகளைத் திண்ணன் அணைவதென்று வெளியிட்டு -4-கள்வா -தீர்த்தனென்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டிப் -5-புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குணோபாஸகத்தை மதித்துப் -6-பெருக்கி முழ்கி அழுந்திக் கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல் செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தந அஞ்ஜலி ப்ரதக்ஷண கதி சிந்தநாத் யங்க யுக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்.–சூரணை–220-
1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்-அதாவது-சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,-மூவாத் தனி முதலாய் –2-8-5–என்றும் ,-எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,-பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்று-லீலா விபூதியில் சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் – சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் — ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —
இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும் ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும் திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்–
“சோராத எப்பொருட்கும் ஆதியாஞ்சோதி” (திருவாய்மொழி 2-1-11) “மூவாத்தனி முதலாய்” (திருவாய்மொழி 2-8-5) “எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்” (திருவாய்மொழி 2-8-10) “பொருளென்றிவ்வுலகம் படைத்தவன்” (திருவாய்மொழி 2-10-11 என்று பத்த முக்த நித்யாத்மகமான சித் த்ரயத்துக்கும் ஸூத்த ஸத்வ மிஸ்ர ஸத்வ ஸத்வ ஸூந்யமென்கிற அசித் த்ரயத்துக்கும் நித்ய விபூதியிலே அப்ராக்ருத த்ரவ்ய விஸிஷ்டனாய்க் கொண்டு உபாதாநமாயும் இச்சா விஸிஷ்ட வேஷத்தாலே நிமித்தமாயும் விநியோக விஸிஷ்ட வேஷத்தாலே ஸஹகாரியாயும் லீலா விபூதியில் ஸுஷ்ம சிதசித் விஸிஷ்ட வேஷத்தாலே உபாதாநமாயும் ஸங்கல்ப விஸிஷ்டனாய்க் கொண்டு நிமித்தமாயும் ஜ்ஞாந சக்த்யாதி, விஸிஷ்டனாய்க் கொண்டு ஸஹ காரியாயும் போருகையாலே ஸர்வத்துக்கும் நிமித்தோபாதாந ஸஹகாரிகளான த்ரிவித காரணமும் தானேயான ஸர்வேஸ்வரன்–
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11-இப்படி இவரோடு கலந்து இவரை உளர் ஆக்குகையாலே ஓன்று ஒழியாதபடி சகல பதார்த்தங்களும் ஈஸ்வரனுமாய்-சோதிக்கே--முக மலர்த்தியும் தன்னைத்தான் படி இருந்தான்-இவர் ஒருவரையும் சோர விட்டான் ஆகில் சர்வ சேஷி யாக மாட்டானே-நிரவதிக தேஜோ ரூபமான விகிரஹத்தை உடையானான் என்றுமாம் – சர்வ ரக்ஷகத்வம் நிலை நின்றது வடிவு அழகும் புதுக் கணித்தது
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-மூவாது ஒழிகை யாவது -முசியாது ஒழிகை – இவன் தன்னைப் பெறுகைக்காக-கரண களேபரண்களைக் கொடுக்க -அவற்றைக் கொண்டு விஷய ப்ரவணராய் அநர்த்தப் படா நின்றால்-நிஷ் ப்பலமாயிற்று-என்று முசியாது ஒழிகை
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-த்ரிவித காரணமும் தானே யாய்-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசத்-என்கிறபடியே சர்வ சப்த வாச்யனாய் ஜகதாகாரேண அத்விதீயனாய் நிற்கை
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-பண்ணின கிருஷிகள் தப்பினாலும் சோம்பாதே க்ருஷி பண்ணும் கார்ஷிகனைப் போலே- கொடுத்த கரணங்களைக் கொண்டு அநர்த்தத்தை விளைத்துக் கொள்ள பின்னையும் கரணங்களைத் தந்த ஜகத் காரண பூதனுடைய கல்யாண குணங்களிலே சேர்த்து
அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி-அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை விசத தமமாக அறிவிக்க —அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி நெஞ்ளில் தெளிவை உடையவராய்-
(அறியாதன வறிவிக்க உள்ளம் தேறி) “அறியாதன அறிவித்த அத்தா”(திருவாய்மொழி 2-3-2) என்று இவர்க்கஜ்ஞாதமான தத்த்வ ஹித புருஷார்த்தங்களை விஸதமாக அறிவிக்க, “அடியை அடைந்துள்ளம் தேறி” (திருவாய்மொழி 2-6-8)-அத்தாலே இவரும் அவனைக் கிட்டி நெஞ்சிலே தெளிவை உடையராய்-
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2–சஹி வித்யாஸ் தம் ஜநயதி -என்கிறபடியே ஆச்சார்யனாய்-ஏதத் விரதம் மம –மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்னுமவன் இறே-அத்தா –ஸ்வாமி
தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட தூ மனத்தனனாய் –2-7-8–மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று-மோஷ க ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் – அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு பலம் மோஷம் ஆகையாலே –-களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் – அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் – சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் – நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி அப்போதே கிடையாமல்-வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி
(தூமனம் மருளிலென்னும் ஞான பலமான) “தூ மனத்தனனாய்’” (திருவாய்மொழி 2-7-8)“மருளில் வண் குருகூர் வண் சடகோபன்” (திருவாய்மொழி 2-10-11) என்று-மோக்ஷ ஏக ஹேதுவாய் பரி ஸூத்தமான அந்தக் கரணத்தை உடையவராய் அவனுடைய கல்யாண குண விஷயமான அஜ்ஞாந கந்த மில்லாதபடி கீழ்ப் பத்தில் பிறந்த தம்முடைய ஜ்ஞானத்துக்குப் பலமான (ஒளிக் கொண்ட மோக்ஷம் தேடி வாட) “களிப்பும் கவர்வுமித்யாதி, ஒளிக் கொண்ட சோதியமாய் அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவதென்றுகொலோ” (திருவாய்மொழி 2-35-10) என்று ப்ராக்ருத பதார்த்தங்களினுடைய லாபாலாபங்களினால் வருகிற க்லேஸ ஹர்ஷங்களுமற்று ஷட்பாவ விகார ரஹிதமாய் நிரவதிக தேஜோ ரூபமாய அப்ராக்ருதமுமாயிருக்கிற விக்ரஹத்தை யுடையோமுமாய் அவனுடைய ரஷகத்வத்திலே தோற்றிருக்கிற நித்ய ஸூரிகளுடைய திரளோடே கூடப் பெறுவதெப்போதோ என்று அந்த மோக்ஷத்தை ஆசைப்பட்டவர்க்கு அப்போதே கிடையாமையாலே “நாடி நாடி வாடும்” (திருவாய்மொழி 2-4-1 என்று தேடிப் பெறாமையாலே ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே இவர் வாட,
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-பந்த ஹேது அன்றிக்கே குண அனுபவமே யாத்ரையாம் படியான நிர்தோஷ அந்தகரணாய்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-அஞ்ஞான கந்தம் இல்லாதாராய் சர்வ பிரகார வி லக்ஷணமான திரு நகரியை உடைய பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்தது-
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10–இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –-குழாங்களையே –-திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும் இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் -நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே
ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-இவ் வவசா னத்தில் ஸர்வதா வாராது இரான் -என்று வரவுக்கு சம்பாவனை இல்லாத இடத்தே தேடுவான் என் என்னில்-நரசிங்கா –-வரவுக்கு சம்பாவனை இல்லாத இடத்திலே தோன்றினவன் ஆகையால்-பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரங்களை அவ்வருகு போக மாட்டார் –-ஆணுமாய் –மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னும் தெளிவும் வேணுமோ உதவும் போது
முன்பு தனக்கு உதவினவன் இப்போது உதவுகிறிலனாக சொல்லுகிறாள்-நரசிங்கா வென்று வாடும்
அப்போதே உதவாமையாலே ஆஸ்ரயம் இழந்த தளிர் போலே வாடா நின்றாள் –அப்போதே உதவாமையாலே ஆஸ்ரயம் இழந்த தளிர் போலே வாடா நின்றாள் –வாடிவாடும்--அது தான் தளிரும் முறியும் -என்னும் படி வாடா நின்றாள் விச்வாஸம் குலையாமையாலே முடிய பெறுகிறிலள்-
2-உலராமல் ஆவி சேர்ந்து-உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து — கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி – சிக்கெனப் புகுந்து- சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே -உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து
(உலராமல் ஆவி சேர்ந்து) “உள்ளுளாவி உலர்ந்துலர்ந்து” (திருவாய்மொழி 2-4-7) என்கிற இவர் தாபமாறும்படி “அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேரம்மான்” (திருவாய்மொழி 2-5-1 என்கிறபடியே பரமபதத்திலே பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ணி கமர் பிளந்த தறையிலே நீரைப் பாய்ச்சுவாரைப் போலே இவருடைய தாபமாறும்படி இவரோடே நிரதிஸய ஸம்ஸ்லேஷத்தைப் பண்ணி (சிக்கெனப் புகுந்து) சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கி சிக்கெனப் புகுந்தான்” (திருவாய்மொழி 2-6-2) என்கிறபடியே அத் யல்பமா யிருப்பதொரு பதார்த்தமும் தன் பக்கலிலே நின்றும் பிரி கதிர்ப் பட்டு நோவு படாதபடி ஸர்வ லோகங்களையும் தன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைகதேஸத்திலே வைத்து இனி ஒருக்காலும் பேராதபடி புகுந்து-
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7-ஆந்தரமான மனஸ் ஸூ க்கு தாயகமான ஆத்மா சருகாய் வருகிறபடி-உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து--அந்தக் கரணத்துக்கும் அவ்வருகான ஆத்மா –
அசோஷ்யம் என்கிறதும் போயிற்று என்கிறாள் – பாவ பந்தம் அடியாக வந்த நோய் ஆகையால் குருத்து வற்றாக உலர்ந்து செல்லா நிற்கை
அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-அந்தாமத்தன்பு செய்து – பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்
என்னாவி சேர் – கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே –உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் அம்மானுக்கு--நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று –
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2—ஷூத்ரமாய் இருபத்தொரு பதார்த்தமும் பிறி கதிர் படாத படி தன் சங்கல்பத்தாலே சகல லோகங்களையும் ஒரு காலே வைத்து சிக்கென புகுந்தான் – இனி ஒரு காலமும் பிரியாத படி புகுந்தான் -புகுந்த பின் அவன் இருந்த படி என் என்னில் –
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் –ஞான வெள்ளத்தால் வந்த மிக்க தேஜஸை உடையவனாய்
விகசித சஹஜ சார்வஞ்ஞனாய் சேதனனுக்கு கர்ம பாரதந்தர்யத்தால் வரும் ஞானத்தில் விகாரம் -ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் ஈஸ்வரனுக்கு உண்டாகிறது ஆயிற்று அங்கனே ஆகில் இறே ஆஸ்ரயணீயன் ஆவது –
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து-எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினார்-2-6-7- -என்று இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா –2-7-1–என்று என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் – நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர் தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
(ஸம்பந்தி களையும் சேர்தல் மாற்றினரென்ன வாழ்வித்து) “எமர் ஏழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந் நரகத்து என்றும் சேர்தல் மாறினர் ‘ (திருவாய்மொழி 2-7-1) என்று இவருடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் ஸம்ஸாராந் முக்தராம்படி பண்ணி “எமரேழ் எழு பிறப்பும் மா சதிரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” (திருவாய்மொழி 2-7-1) என்று என்னுடைய ஸம்பந்தமே ஹேதுவாக என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளும் கேசவன் தமராம்படி “நாராயணனாலே” (திருவாய்மொழி 2-7-1) என்கிற மா சதிரைப் பெற்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகா நின்றது என்று இவர் தாமே ஆஸ்சர்யப்படும்படி இவரை வாழ்வித்து,
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7-வேறு ஒன்றால் அன்றியே என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக -எவ்வளவு என்னில் –கீழ் ஏழு படியும் மேல் ஏழு படியும்-விடியா வென்னரகத்து –
ஒரு நாளிலே முடிவுண்டான தண்டல் யமனது –விடியா வென்னரகம் சம்சாரம்-வென்னரகம் -நரகம் என்று புத்தி பிறக்குமதில் தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே –
என்றும் கிட்டக் கடவதான தண்மையும் தவிர்த்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை
அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-என் பக்கல் அவன் பண்ணின பக்ஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள் –
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1--அவனுடைய அவயவ ஸுந்தர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்-கீழ் ஏழு படிகளிலும் மேலே ஏழு படிகளிலும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக கேசவன் தமர்கள் ஆனார்கள்-ஆழ்வார் பரிகரம் என்றாயிற்று அவன் விரும்புவது -கேசவன் தமர் என்றாயிற்று இவர் விரும்புகிறது-மாசரிது பெற்று –-கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –-மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –
விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்-மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது-இது பெற்று-காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா-வைஷ்ணவ சம்பத்து -ஊற்று மாறாதே மேன் மேல் எனப் பெருகி வருகிறபடி என் –-ஆக ஏழு படி கால் என்று ஓர் அளவு இல்லை – நம் அளவில் வரச் சொல்லுகிறது இறே
உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர் இப்படி தம்முடைய பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2–கெடலில் வீடு-2-9-11–எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் – அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே – அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –-நின் செம்மாபாத பறப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1- என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –-கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் — சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -2-9-4–என்று உபாய ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-
(உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபயாநுகுணமாக்கினவர்) “நீந்தும் துயரில்லா வீடு” (திருவாய்மொழி 2-8-2) “கெடலில் வீடு” (திருவாய்மொழி 2-9-17 “எம்மா வீடு” (திருவாய்மொழி 2-9-1 என்று துக்க கந்த ரஹிதமாய் அநர்த்த கந்த மில்லாததாய் எவ் வகையாலும் விலஷணமான மோக்ஷத்தை இவர்க்கு உபரிக்கத் தேட எனக்கென்று உபகரிக்கில் மோக்ஷம் அஹங்கார கர்ப்ப மாகையாலே ஐஸ்வர்ய கைவல்யங்களோபாதி ஸ்வரூப விருத்த மாகையாலே அது த்யாஜ்யம்; எனக்கு மோக்ஷம் தரப் பார்த்ததாகில் “நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த் தொல்லை அம்மா அடியேன் வேண்டுவதீதே” (திருவாய்மொழி 2-9-1 என்று அகவாய் சிவந்து புறவாய் கறுத்து பரம பூஜ்யமாய் பரம போக்யமாய் ஸேஷியானவனுடைய திருவடிகளை ஸேஷ பூதனானவன் தலையிலே கொக்கு வாயும் படு கண்ணியும் போலே சடக்கெனச் சேர்க்க வேணும்; ஸேஷியான உன் பக்கல் ஸேஷ பூதனான நான் அபேக்ஷித்துப் பெறுவதுமிது; “தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே” (திருவாய்மொழி 2-9-4 என்று உபய ஸ்வரூபத்துக் கநுகுணமாக புருஷார்த்தத்தை நிஷ் கர்ஷித்த இவர்–
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2–நீந்தும் –என்றது நீத்தும் என்றபடி -நீந்தும் என்கிற வர்த்தமான நிரதேசத்தாலே துஸ்தரம் என்கை –துயரில்லா வீடு முதலாம்–துக்க கந்த ரஹிதமான மோக்ஷத்துக்கு ஹேதுவாம் -இது பிள்ளை திரு நறையூர் அரையர் நிர்வாகம்-நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றும் –-நீந்தும் துயரான எவ்வெவையும் இல்லா வீடு முதலாம் என்றுமாம் –-இவர் வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாத்ரத்தை அன்று –-ஸூக பாவைக லக்ஷனை யான பகவத் ப்ராப்தியை –
முக்திர் மோஷா மஹா நந்த -என்னைக் கடவது இறே
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11-ஸ்ராத்தராய் இதிலே இழிவாருக்கு இது தானே -தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -என்று நிஷ்கர்ஷித்த அஹங்கார கந்தம் இல்லாத பேற்றைக் கொடுக்கும் –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம்-இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்-என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்-நீ ஸ்வாமி -நான் சேஷ பூதன் –-உத்க்ருஷ்டம் என்று வேண்டுகிறேன் அல்லேன்-நிஷித்தம் என்றாலும் விட ஒண்ணாத படி எனக்கு ராக பிராப்தம் -மற்ற என்ன வேணும் என்ன-ஈதே-உன் திருவடிகளை என் தலையிலே வைக்கும் இதுவே –
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை–கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –-முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் –என்று சகல பல பரதத்வம் – தேவும் எல்லா பொருளும் —கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் – ஆக்கினான் தெய்வ வுலகுகள் -என்று சர்வ காரணத்வம் – ஆழி அம் பள்ளியாரே -என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் – பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து – என்று ஸ்ரீ ய பதித்வம் – கண்ணன் கண் – கோபால கோள் அரி ஏறு -என்று அவதார சௌலப்யம் –ஆதி -சப்தத்தாலே தகும் கோலத் தாமரைக் கண்ணன் -என்று புண்டரீ காஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —-அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –-இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –-வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்–ஆதி -சப்தத்தாலே-பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –-மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம் ஆகியவற்றை –அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய சேஷ புருஷார்த்த பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –-மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –-கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த – தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் –திண்ணன் வீட்டிலும் -அணைவது அரவணை மேலிலும் -என்றும் –பூம் பாவை யாகம் புணர்வது– என்றும் –இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்-அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..-முற்பட்ட யோஜனையில் – ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் -வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி -மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் – சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும் சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு–
ஆஸ்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற) ஆஸ்ரயணீயனானவனுக்கு முதற்பத்தில் சொல்லப்பட்ட ஸர்வ ஸ்மாத் பரத்வத்தை நிலை பெறுத்துவனவான (ஸகல பல ப்ரதத்வ காரணத்வ ஸேஷ ஸாயித்வ ஸ்ரீய:பதித்வ ஸெளலப்யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளியிட்டு) ஸகல பல ப்ரதத்வம் முதலான பரத்வ லக்ஷணங்களை “வீடுமுதல் முழுதுமாய்” (2-2-1) மோக்ஷ ப்ரப்ருத் யஸேஷ புருஷார்த்த ப்ரதனாகையாலே ஸகல பல ப்ரதத்வம் “தேவும் எப்பொருளும்” (திருவாய்மொழி 2-2-4) “கருத்தில் வருத்தித்த மாயப் பிரான்’‘ (திருவாய்மொழி 2-2-8) “ஆக்கினான் தெய்வ உலகுகளே” (திருவாய்மொழி 2-2-9) என்று ஸர்வ காரணத்வம், “ஆழியம்பள்ளியாரே” திருவாய்மொழி 2-2-6) என்று லக்ஷணையாலே அநந்த ஸாயித்வம் “பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து” (திருவாய்மொழி 2-2-3) என்று ஸ்ரிய:பதித்வம், ‘கண்ணன் கண்” (திருவாய்மொழி 2-2-1) “கோபால கோளரி” (திருவாய்மொழி 2-2-2 என்கிற அவதார ஸெளலப் யம் இப்படி இவ்வர்த்தங்களை திண்ணன் வீட்டிலும், அணைவதரவணை மேல்” என்று ஸேஷஸாயித்வம், “பூம்பாவை யாகம் புணர்வது” (திருவாய்மொழி 2-8-1) என்று ஸ்ரீய:பதித்வம், “இருவரவர் முதலும் தானே” (திருவாய்மொழி 2-8-1) என்று காரணத்வம், “இணைவனாம் எப்பொருட்கும்” (திருவாய்மொழி 2-8-1 என்று அவதார ப்ரயுக்தமான ஸெளலப்யம், “வீடு முதலாம்” (திருவாய்மொழி 2-8-1 என்று ஸகல பல ப்ரதத்வம் என்கிற இவற்றை அணைவதரவணையிலும் வெளியிட்டு-
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-த்ருடம் –-வீடு முதல் முழுதுமாய்-மோக்ஷ ப்ரப்ருத்ய அசேஷ புருஷார்த்த ப்ரதனாய்-திண்ணன் வீடு முதல் முழுதுமாய்– ஒரு நாளும் அழியாத பரமபதம் தொடக்கமான சகல லோகங்களையும் உடையனாம் என்றுமாம்
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–தேவ ஜாதி முதலான சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக திரு நாபீ கமலத்தில் தன்னையும் மிகும்படியான சதுர்முகனை ஸ்ருஷ்டித்த –-தேவன் –-ஸ்ருஷ்ட்ருதவத்தால் வந்த த்யுதி என்னுதல்- ஸ்ருஷ்ட்டி அவனுக்கு நிலை என்னுதல் ஸுந்தர்யாதிகளால் வந்த விளக்கம் என்னுதல் –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8—தன் சங்கல்பத்திலே தேவ ஜாதி முதலாக சகல பதார்த்தங்களையும் -நிவர்த்திப்பித்த -உண்டாக்கின -ஸ்ருஷ்டித்த-மாயப்பிரானை யன்றி யாரே-
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனை ஒழிய மற்று யார்
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9-தன்னுடைய திரு நாபீ கமலத்தில் ஸ்ருஷ்ட்ருத்வத்தில் விலக்ஷணமான ப்ரஹ்மா இந்திரன் அல்லாத தேவதைகள் தேவ லோகங்கள் இவற்றை உண்டாக்கினான் –
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6--கடலைப் படுக்கையாகக் கொண்டார்-பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை-எம் –-என்று தாம் இருக்கிற சம்சாரத்திலே வந்து கண் வளர்ந்து அருளிற்று -தம்மை உஜ்ஜீவிப்பைக்கு என்று –
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3–அந்நிய பரரான அவர்களையும் -அநந்ய பரையான பிராட்டியையும் தரம் பாராதே ஓக்க உடம்பு கொடுத்த நீர்மைக்கு தோற்று நித்ய சூ ரிகள் தொழா நிற்பர்கள் ஆயிற்று-கூறாளும் தனி உடம்பன் -என்கிறபடியே வ்யவஸ்திதமாக உடம்பு கொடுக்கை
விண் தொழ-மஞ்சா க்ரோசந்தி -இத்யாதி -இங்கு உள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள்-அங்கு உள்ளார் சீலம் என்று தோற்று இருப்பார்கள்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-நம்-கண்ணன்-
என்று -க்ருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபிசாப்ய -க்ருஷ்ண ஸ்யஹிக்ரு தேபூத மிதம் விஸ்வம் சராசரம் -என்கிற பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது-நம் -என்று அத்தை நமக்கு பிரகாசிப்பித்தவன்-கண் –த்ருஷ்ட்டி -நிர்வாஹகன் –களை கண் -என்று நிர்வாஹகரை சொல்லக் கடவது இறே-அல்லது இல்லையோர் கண்ணே– வேறு ஒரு த்ருஷ்ட்டி இல்லை -அர்த்தம் இன்றிக்கே -பீலிக் கண் -மாலைக் கண் -என்னுமா போலே-யுக்தி மாத்ரமாக இருப்பது ஓன்று இல்லை
கண்ணன் கண் –என்றது அன்வயத்தாலே-அல்லது இல்லையோர் கண் – என்றது வியதி ரேகத்தாலே
இல்லையோர் கண் -இது திண்ணம் –
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2-–கோபால கோளரி யேறன்றியே–சிறியாரை ரக்ஷிக்கும் படி சொல்லுகிறது -ஸ்ரீ நந்தகோபர் திரு மகனாய் வந்து திருவவதரித்து – அவர் சீராட்டி வளர்க்க -அத்தாலே மேனானித்து இருக்குமவன்-கோள்-என்று மிடுக்காதல் -பிரதிபக்ஷத்தை கிரஹிக்கும் என்னுதல்
இடையர்கள் உடைய சத்ருக்களை கொள்ளும் என்கை-கோளரி ஏறு –-நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகன் ஆனவன்-இடையருக்கு நியாம்யகனாய்ப் பெற்ற மேனாணிப்பு–அரற்குப் பிச்சை பெய்-கோபால கோளரி யேறன்றியே--ருத்ரன் பாதகி யாயிற்று-தன் நிலை குலையாத ஏற்றத்தோடே ஆயிற்று
இவன் ரக்ஷிப்பது தாழ நின்ற இடத்தே யாயிற்று ஹிமவானிலே யாதல் -திருப் பாற் கடலிலே யாதல்
யேறன்றியே-அளிப்பார் யார் –-தலை அறுப்புண்டும்-தலையை அறுத்து பாதகியாயும்-நின்ற இவர்களை ஈஸ்வரன் என்னவோ-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்
நிரவாதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை-தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை-யாகம்-புணர்வது –-இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை-இருவரவர் முதலும் தானே–ந ப்ரஹ்ம ந ஈசான -என்று சுருதி பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு காரண பூதன் காரணந்து த்யேயா -என்கிறபடியே உபாஸ்யனும் அவனே -ப்ரஹ்மாதிகளுக்கு காரணத்வம் இல்லை -பாவ நாத்ர யான்விதர் யாகையாலே-இணைவனாம் எப்பொருட்கும் – தேவாதி சகல பதார்த்தங்களோடும் சஜாதீயனாய் அவதரிக்கும்
அவதார பிரயோஜனம் சொல்லுகிறது-வீடு முதலாம்–மோக்ஷ ஹேதுவாகைக்காக அவதரிக்க வேண்டுகிறது-பரமபதம் சென்று அபேக்ஷிக்க நிலம் அல்லாமையாலே சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறது-உத்க்ருஷ்டன் ஆகில் வெகுண்டு அகலுவார்கள் -தாழப் பிறக்கில் காற்கடைக் கொள்ளுவார்கள்
4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி–கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே -அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும் எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் -அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –
தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே -ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு
ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து -அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு –என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய -அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த
திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —-பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம் ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர கருத நிச்சி தார்த்த – என்கிறபடி தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு -சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே – தானே பிரத்யஷித்து –சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று பிரத்யஷைத்தையும் காட்டி-
(கள்வா தீர்த்தன் என்று வசந ப்ரத்யக்ஷங்களும் காட்டி) “கள்வா ‘ (திருவாய்மொழி 2-2-10) என்கிற பாட்டாலே, அவதரித்து உன்னுடைய பரத்வம் தெரியாதபடி நின்றாயே யாகிலும் எங்களுக்குக் காரண பூதனான ஸேஷி நீயே என்று தேவதாந்தரங்களில் தலைவனான ப்ரஹ்மாதிகளே தங்களுக்குக் காக்ஷி கொடுக்கைக்கு பெரிய திருவடியை மேல் கொண்டு புறப்பட்டால் அவனுடைய திருவடிகளிலே விழுந்து கூப்பிடா நிற்பர்கள் என்று இவ்வர்த்தத்துக்கு வசநத்தையும் “தீர்த்தன் உலகளந்த” (திருவாய்மொழி 2-8-6) என்கிறபாட்டிலே ஒரு அஸ்த்ர லாபத்துக்கு ஒரு தேவதையை உபாஸிக்க வேணுமென்று அர்ஜுநன் சொல்ல அப்பூவை என் காலிலே பொகடென்று க்ருஷ்ணன் அருளிச் செய்ய “பார்த்தோ , விஜேதா மது ஸூதநஸ்ய பாதாரவிந்தார்ப்பித சித்ர புஷ்பம் ததேவ கங்கா தர மெளலி மத்யே ததர்ம வீர: க்ருத நிஸ்சயார்த்த :” என்கிறபடியே தீர்த்த பூதனான ஸர்வேஸ்வரனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளிலே அப் பூவைப் பணிமாறி அவற்றோடு ஸஜாதீய மானவை யன்றிக்கே அவை தன்னையே பாடே பக்கலிலே யன்றிக்கே ருத்ரன் தலை மேலே ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே தானே ப்ரத்யக்ஷித்துப் பேரளவுடையனான அர்ஜுநன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளாலே இன்றாராயும்படி இருந்ததோ என்கிற ப்ரத்யக்ஷத்தையும் காட்டி–
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10–உன் ஐஸ்வர்யத்தை மறைத்து எங்களுக்குத் தெரியாதபடி வந்து நிற்கிறவனே-பரதந்த்ரனாய் தன் ஸ்வா தந்தர்யத்தை அபலிக்கை இ றே-களவாவது –
கைலாச யாத்திரையில் இது பிரகாசிக்கிறது-நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன் -ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த –என்கிறபடியே வாய் தழும்பு ஏறிக் கிடக்கிறது அன்றோ-நீ மறைத்து நிற்கிற நிலையை நாங்கள் அறிந்திலோம் ஆகில் செய்வது என்-என்கிறார்கள் –-எம்மையும் ஏழுலகும் நின்-னுள்ளே தோற்றிய இறைவ என்று- அது களவு என்னும் இடத்தை உபபாதிக்கிறார்கள் – எங்களையும் நாங்கள் இருக்கிற லோகங்களையும் உன் சங்கல்ப ஏக தேசத்தில் தோற்றுவித்த ஸ்வாமி-இது ஸ்வரூபமாய் இருக்க எங்களை ஸ்தோத்ரம் பண்ணக் கடவையோ –
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6–உலகளந்த சேவடி மேல் –-அவனுடைய சர்வ ஸூ லபமான திருவடிகளில் -இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –
வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே-பூந்தாமம்-சேர்த்தி –-அழகிய மாலையைச் சாத்தி -பூ மாலை என்னவுமாம்-யவையே சிவன் முடி மேல் தான் கண்டு-அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்
தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே
அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று-பார்த்தன் தெளிந்து ஒழிந்த--அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ-பைந்துழாயன் பெருமை-சர்வாதிகனுடைய பரத்வம் -சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை-பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே-இது பின்னை சிலரால் ஆராய வேண்டும்படி இருந்ததோ –
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் குண உபாசனத்தை புலன் ஐந்து -என்கிற பாட்டில் -ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் – பிராப்யத்தில் பிராவண்யமும் –சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி– என்று பரிச்சின வஸ்துக்க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை
தவிர்ந்தது என்கையாலே -அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –-நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -என்று நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்
பலமுந்து சீரில் படிமின் -என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே – பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே – சாதனத்தினுடையரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் – அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே -பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –-தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி குண உபாசனத்தை
புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந துக்காநந்த ரஸம் முன்னாக விதிக்கிற அந்தர் குணோபாஸநத்தை) “புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்” (திருவாய்மொழி 2-8-4) என்று பரிச்சிந்ந வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்து நன்மைக்கு முடிவில்லாதே யிருக்கிற நாட்டிலே புக வேண்டியிருப்பீர் “அலமந்து வீய அசுரரைச் செற்றான் பலமுந்து சீரில் படிமின்” (திருவாய்மொழி 2-8-4) என்று தடுமாறி முடியும்படி அஸுர வர்க்கத்தை அழியச் செய்தவனுடைய கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோளென்று ஸம்ஸார துக்க நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷாநந்த ரஸ ப்ராப்திக்கு ஸாதனமாக விதிக்கப் படுவதாயிருக்கிற “தஸ்மிந்யதந்தஸ்த்து, பாஸிதவ்யம்” (தைத்திரீய உபநிஷத் என்று ப்ரஹ்ம ஸ்வரூபாந்தர்கதமான அபஹத பாப்மத்வாதி குண விஸிஷ்ட வஸ்து உபாஸநத்தை-
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-இப்படிப்பட்டவன் என்று அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அற்று மோக்ஷத்தை பெற வேண்டி இருப்பார்-அவன் கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள் -என்கிறார் –புகுவீர் என்கையாலே –அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச பிராப்தியையும் -அதுக்கு இச்சையே அதிகாரம் என்னும் இடத்தையும் சொல்லுகிறது – விரோதி வர்க்கம் செய்வது என் என்னில் –
அலமந்து வீய அசுரரைச் செற்றான்- அஸூரசங்கங்களை தடுமாறி முடியும் படி நிரசித்தால் போலே நிரசிக்கும்-பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்-ஓவாதே –-அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே –என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை-தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்-நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே
6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல் சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து – திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி – வல்வினை மூழ்கி நரகழுந்தி கீழ்மை செய்து வலம் கழித்து சூது என்று களவும் சூதும் செய்து கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி – அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு தண்மையை செய்து பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய் பால்யத்தை பாழ் போக்காதே –
(மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக் கீழ்மை வலம் சூதுஞ் செய்து இளமை கெடாமல்) “சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது” திருவாய்மொழி 2-10-2) “திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி” (திருவாய்மொழி 210-5) “வல்வினை மூழ்கி” (திருவாய்மொழி 2-10-9) “நரகழுந்தி” (திருவாய்மொழி 2-10-7) “கீழ்மை செய்து” (திருவாய்மொழி 2-10-6) “வலங்கழித்து” (திருவாய்மொழி 2-10-8) “சூதென்று களவும் சூதும் செய்து” (திருவாய்மொழி 2-10-10) “இளரொளி இளமை கெடுவதன் முன்னம்” (திருவாய்மொழி 2-10-12) என்று உபாஸந விரோதியான இதர விஷய ப்ராவண்யத்தாலே பாபங்களைக் கூடு பூரித்து அவற்றிலே மறு நனைய மூழ்கி அழுந்தி தாழ்வு பட்டு பலத்தைப் பாழே போக்கி பற்யதோஹரனாய் க்ருத்ரிமனாய் பஸ்யதோ ஹரனாய் –க்ரித்ரமனாய் பால்யத்தைப் பாழே போக்காதே-
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2–சதிரிள மடவார் –-கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் – கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் – இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்
மடவார் -தாழ்ச்சியை மதியாது-ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல் -அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்-பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை
பக்தாநாம் த்வம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5-திறம் – ஸமூஹம்-திறள் –வலம் -பலம் – திரண்ட பலத்தாலே பிரயோஜ நான்தர பிராவண்யம் ஆகிற பாபத்தை கூடு பூரியாதே –
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9-நான் சொல்லுகையாலே ஆப்தம் என்று இருக்கையை அன்றிக்கே இது ஸ்வரூப பிராப்தம் என்று நினையுங்கோள்-வல்வினை மூழ்காது-வ்யதிரிக்த விஷயங்களில் ப்ராவண்யம் ஆகிற வலிய பாபங்களில் புக்க அவகாஹியாதே
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7–இத்தை விலக்ஷணமான புருஷார்த்தம் என்று நினையுங்கோள்-நரகழுந்தாதே-இதற்கு புறம்பு ஆகை யாகிற நரகத்திலே புக்கு விழாதே
நிரயோ யஸ் த்வயா வி நா –ஏதைவ நிரயா–
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-நல் விரகு என்று புத்தி பண்ணுங்கோள்-கீழ்மை செய்யாதே-
இதுக்கு புறம்பான பிரயோஜனங்களில் பிரவணர் ஆகாதே –கீழ்மை யாவது -பகவத் வியதிரிக்தங்களில் ப்ராவண்யம் இறே
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8–கரண படாவத்தை உண்டாக்கி நாள் தோறும் அந்த பலத்தை இதர விஷயங்களுக்கு உறுப்பாக்கி வியர்த்தல் ஆக்காதே-
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10–சூது -வெற்றி -நேர்பாடு என்று பார்த்து களவு காணுதல் –பஸ்யதோ ஹரணம் ஆதல் செய்யாதே ஆத்ம அபஹரணம் பண்ணுதல் –ஈஸ்வரனே ரக்ஷகன் என்று இருக்கும் சாத்விகரை யுக்தி ஆபாசங்களாலே விச்வாஸத்தைக் குலைத்தல் செய்யாதே என்றுமாம் –
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1–கிளாரா நின்றுள்ள ஒளியை உடைத்த யவ்வனம் கழிவதற்கு முன்பே கரண படவம் உள்ள போதே –பால்யம் போய் யவ்வனம் தலை வைக்கிற அளவிலே யவ்வனம் விஷயத்திலே மூட்டி நசிப்பதற்கு முன்பே என்றுமாம் –தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ச்ரேயஸே சதா என்னக் கடவது இறே-கோ ஜா நீதே கதா கஸ்ய ம்ருத்யு காலோ பவிஷ்யதி யுவைவதர்ம புத்திஸ் ஸ்யாதே கோ அநித்தியம் ஹி ஜீவிதம்-திருமலையை ஆஸ்ரயிப்போம் -என்ற பிறந்த ஸ்ரத்தை மாளுவதற்கு முன்னே என்றுமாம் –
செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்-அதாவது-பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,-தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும் சொல்லுகிறபடியே பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே – போது அவிழ் மலையே புகுவது பொருளே -என்கிற ஷேத்திர வாசம் –பதியது ஏத்தி -என்கிற சங்கீர்த்தனம்-தொழக் கருதுவதே -என்கிற அஞ்சலி-வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்கிற பிரதஷணம் நெறிபட அதுவே நினைவது நலமே -என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கை–
செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தநாதி அங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில் –பால்ய ஏவ சரேத் தர்மம் –என்றும் தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரேயஸே ஸதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75) என்றும் சொல்லுகிறபடியே பால்யத்திலே கர்த்தவ்யமான -சார்வது சதிரே (2-10-1)போதவிழ் மலையே புகுவது பொருளே (2-10-10)என்றும் க்ஷேத்ர வாஸம் -பதியதி ஏத்தி எழுவது (2-10-2) என்றும் ஸங்கீர்த்தனம் -தொழக் கருதுவதே (2-10-9) என்றும் அஞ்சலி -வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே (2-10-8) என்று ப்ரதக்ஷிணம் -நெறிப்பட யதுவே நினைவது நலமே (2-10-6) என்று கதி சிந்தனம் என்கிற இவை முதலான உபாசந அங்கத்தோடு சேர்க்கிறார் இரண்டாம் பத்தில் என்கிறார்-
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1--தளர்வாகிறது திருமலைக்கு புறம்பாகை- அந்த அநர்த்தம் இன்றிக்கே -திருமலையை அபாஸ்ரயமாக சென்று புகுவதுவே சதிர் –-இதர விஷயங்களை பற்றுகை இளிம்பு-சா ஹாநி
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10-போது என்று பூவாய் -திருமலையை முட்டாக்கி இடப் பூத்துக் கிடைக்கும் அத்தனை – நித்ய வசந்தமான திருமலையில் புகுகையே பிரயோஜனம் –
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்
இதுவே பிரயோஜனம் -அல்லாதது பிரயோஜன சூன்யம் –
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9–திருமலையைத் தொழுவோம் என்று மநோ ரதித்து-அத்தையே பிரயோஜனமாக அத்யவசித்து இருக்குமதுவே விஜய ஹேது –-
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8-நாமும் திருமலையில் சென்று அவர்களோடு ஒரு கோவையாய் சர்வ காலமும் அனுகூல வ்ருத்திகளை பண்ணி வர்த்திக்கும் இதுவே பிராப்தம் -என்கிறார் –
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6-திருமலைக்கு போம் வழி நெஞ்சிலே பட -என்னுதல்
உங்கள் சத்தை உண்டாக என்னுதல் –வதுவே நினைவது நலமே –அத்தையே நினைக்குமது வி லக்ஷணம் -அத்தை ஒழிந்தது எல்லாம் பொல்லாதது என்கை –
(ஆக இரண்டாம் பத்தால் காரணத்வத்தை வெளியிட்டு – அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும் ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும் அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும் அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும் உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும்-தெரிவித்தபடி – )
—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply