ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –(219–228)-முதல் பகுதி-(219) ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் – தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண
–அத்தாலே – சம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் – அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –
அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து – த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் – தத் த்யாக பிரகாரத்தையும் உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும் தத் பஜன பிரகாரத்தையும் பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –பஜநீயவனுடைய சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை – ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் – பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் – பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று தேவதாந்த்ரங்கள் பக்கல்
பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று – தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி பஜனத்திலே மூட்டுகிறார்
என்கிறார் —

இதில்‌ முதல்‌ பத்தாலே ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌ தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலே அஜ்ஞாநத்தை வாஸநையோடே போக்கி பத்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இன்னமும்‌ இவர்‌ நம்மை விஸ்மரிக்கக்‌ கூடுமென்று இவர் பக்கல்‌ தனக்குண்டான ஸ்நேஹத்தாலே விடாதே இவருடைய ஹ்ருதய கமலத்திலே ஸுப்ரதிஷ்டிதனாய்க்‌ கொண்டு நிரந்தர வாஸம்‌ பண்ண இவரும்‌ அத்தாலே ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்த்வ ஜ்ஞாநத்தை உடையராய்‌ அவருடைய குணங்களைத்‌ தம்முடைய திருவுள்ளத்தோடே அநுபவித்து இவ் விஷயம்‌ தனியே அநுபவிக்க வொண்ணாமையாலே ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து த்யாஜ்யமான ஸம்ஸாரத்தினுடைய அல்பாஸ்திரத்வாதி, தோஷங்களையும்‌ அதினுடைய த்யாக ப்ரகாரத்தையும்‌ உபாதேயமான பகவத்‌ விஷயம்‌ நிரதிஸய போக்‌யமாயிருக்கும்‌ என்னுமத்தையும்‌ அவனுடைய பஐநீயத்வத்தையும்‌ பஐநத்துக்கு ஆலம்பநமான மந்த்ரத்தையும்‌ உபதேஸித்து அந்த பஜநீயனுடைய ஸெளலப்‌யம்‌ அபராத ஸஹத்வம்‌ ஸீலவத்தை ஸ்வாராததை ஆஸ்ரயண ரஸ்யதை ஆர்ஜவம்‌ ஸாத்ம்ய போக ப்ரதத்வம்‌ பரபக்திக்கும்‌ பரிகணநைக்கும்‌ ஒக்க முகம்‌ காட்டுகிற ஸாம்யம்‌ இப்படிப்பட்ட குணங்களையும்‌ பஐநத்தினுடைய ஸூகரத்வ ரஸ்யதைகளையும்‌ பஜிக்கவே ஸர்வ பலங்களும்‌ ஸித்‌திக்கும்‌ என்னுமிடத்தையும்‌ பஜநோபக்ரமத்திலே பஜந விரோதி யடைய நஸிக்கும்‌ என்னுமிடத்தையும்‌ அறிவித்து இப்படியான பின்பு ஸ்ரீகீதையில்‌ அவன்‌ அருளிச்‌ செய்த பக்தி மார்கத்திலே நின்று தேவதாந்தரங்கள்‌ பக்கல்‌ பரத்வ ஸங்கா நிவ்ருத்தி பூர்வகமாக அவன்‌ விஷயமான ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு அவன்‌ பக்கலிலே அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோள்‌ என்று தமக்கு ஸர்வேஸ்வரன்‌ மயர்வற மதிநலம்‌ அருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக ஞாந பக்திகளை உபதேஸித்து அவனுடைய பஜநத்திலே மூட்டுகிறார்‌ என்கிறார்‌.

(1-ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்-2-ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்-3-உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும் ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1-பரபரனாய் நின்ற வளவேழ் வைப்பாமவையுள்‌ உம்பர்‌ வானவர் அதிபதி மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி –2-மறக்குமென்று நல்கி விடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன்‌ என் சொல்லி மறப்பனோ என்னும்படி தத்தவ ஜ்ஞானரானவர்‌ -3-சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய்‌ நீயும்‌ நானுமென்கிற ஸஹ்ருதயாநுப,வம்‌ ஸம்ஸாரிகளுக்கமாம்படி -4-வீடுமினென்று தயாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக, ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஸித்து –5-எளிதாக ௮வதரித்துப்‌ பிழைகளை ஸஹித்துப்‌ புரையறக்‌ கலந்து அல்ப ஸந்துஷ்டனாய்‌ அம்ருதமே ஒளஷதமாக்கி –6-நீர் புரையத்‌ தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து –7-பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும்‌ இனிமையுமுண்டு, –8-தொழுதால்‌ அரும்‌ பயனாயதரும்‌, உத்‌யோகத்தே வினைகளும்‌ மாளும்‌, –9-௮வனுரைத்த மார்க்கத்தே நின்று இரு பசை மலமற உணர்வு கொண்டு –10-நலம்‌ செய்வதென்று தாம்‌ மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார்‌ முதற்பத்தில்‌.–சூரணை-219-

முதல் பத்தில் ..-பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது-வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,-ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,-வைப்பாம் மருந்தாம் -நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப் பால் அவன் -1-7-2–என்றும் ,-அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,-உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,-அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-

(பரபரனாய்‌ நின்ற வளவேழ்‌ வைப்பாமவையுள்‌ உம்பர் வானவரதிபதி) முழுதுண்ட பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-8) “ஆய்நின்ற பரபரன்‌” (திருவாய்மொழி 1-1-14 வளவேழுலகின்‌ முதலாயவா னோரிறை” (திருவாய்மொழி 1-5-1 “வைப்பாம்‌ மருந்தாம்‌ (திருவாய்மொழி 1-7-2) “நலத்தால்‌ உயர்ந்துயர்ந்து அப்பாலவன்‌” திருவாய்மொழி 1-7-2) “அவையுள்‌ தனிமுதல்‌” (திருவாய்மொழி 1-9-1 “உம்பர்‌ வானவர்‌ ஆதியஞ்சோதி” (திருவாய்மொழி 1-10-9)”அயர்வறுமமரர்களதிபதி” (திருவாய்மொழி 1-1-1 என்று –

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-ஈஸ்வரனாலும் -அவன் அடியாக ப்ரஹ்மாவாலும் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ருத்ரனால் சம்ஹார்யம் ஆவது ஏகதேசம் –
சம்ஹர்த்தாவான ருத்ரனையும் -அவனுக்கு நிலம் அல்லாத மஹதாதிகளையும் அகப்பட சம்ஹரித்தவன்-பரபரன்-ஈஸ்வரன் அடியாக ஏகதேச சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிற ப்ரஹ்மாதிகள் அஸ்மாதிகளில் பரர்- அந்த ப்ரஹ்மாதிகளுக்கும் பரனாகையாலே பராத்பரன் –

கரவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே 
–1-1-11-ஆய் நின்ற பரன்-இந்த உபய விபூதியையும் சரீரத்வத் பிரகாரமாக யுடையவன் ஆகையாலே சர்வ ஸ்மாத் பரன்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-வளவியனாய் ஏழ் உலகுக்கும் காரண பூதனாய்-நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்துள்ளவனை-வளவியனாகை யாவது -ஸ்வரூபாதிகளால் வந்த வைலஷண்யத்தை யுடையனாகை-

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2–வைப்பாம் –ப்ராப்யமான புருஷார்த்தமாம் –நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கைக்கு யோக்யமாம் படி சேமித்து வைக்கும் நிதி போ லே -தன்னை ஆக்கி வைக்கும்-மருந்தாம் – விரோதியைப் போக்கி போக்த்ருத்வ சக்தியைக் கொடுக்கும் -இத்தால் பிராபகத்வம் சொல்கிறது –-நிர்வாணம் பேஷஜம் -என்னக் கடவது இறே-எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து-எல்லா இடத்திலும் உள்ள எல்லாரிலும் காட்டில் ஆனந்தத்தால் மேற்பட்டு-அப்பாலவன் –மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி சத குணி தோத்தர க்ரமத்தாலே ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் சென்று -அத்தை மனுஷ்ய கோடியில் ஆக்கி
மேல் மேல் கற்ப்பித்துக் கொண்டு ஆனந்தத்தைப் பெருக்கினாலும்-பிரமாணங்களால் வாங்மனஸ் சங்களுக்கு நிலம் அன்று என்று மீளும்படி அவ்வருகான ஆனந்தத்தை உடையவன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1—அவையுள் தனி முதல்--அவற்றின் பக்கலில் அந்தராத்மாவாய் –-தான் ஒருவனே நிர்வாஹகானாய் -நிற்கும்-எம்மான்–தன் விபூதி விஷயமாக உண்டான ஓரத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன்–கண்ண பிரான்
இப்படிப் பட்டவன் முகம் தோற்றாத படி மறைய நிற்கை அன்றிக்கே கண்ணுக்கு விஷயமாக வந்து நிற்கும் உபகாரத்தைச் சொல்கிறது-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–ஆக்கரான ப்ரஹ்மாதிகள் அன்றிக்கே அவ்வருக்கான நித்ய ஸூரிகளுக்கு சத்தா ஹேதுவாய்-அவர்களுக்கு அதி மநோ ஹரமுமான தேஜஸையும் உடையவனை-அவ்வடிவுக்கு போக்தாக்கள் இறே அவர்கள்-எம்பிரானை –-நித்ய ஸூரிகளுக்கு போலே தானே தாரகமாம் படி எனக்கு உபகரித்தவனை

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-அயர்வறும்-பகவத் ஜ்ஞானத்துக்கு விச்ம்ருதி இல்லாமை ஸ்வ பாவமாய் இருக்கை-அமரர்கள் -மரணம் இன்றிக்கே இருப்பவர்கள்
அவர்களுக்கு மரணம் ஆவது பகவத் அனுபவ விச்சேதம் -அது இன்றிக்கே இருக்கை
அதிபதி-அதிகனான பதி-அசங்க்யாதரான நித்ய ஸூ ரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத பெருமையை யுடையவன்-எவன் -நித்ய விபூதி யோகத்தாலே வந்த ஸ்ருதி பிரசித்தி-அவன் -அதுக்கு மேலே விக்ரஹத்தாலே வந்த வை லஷண்யம் சொல்லுகைக்காக உத்தேசிக்கிறது

சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் – உபயவிபூதி யோகத்தாலும் — உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் — அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் – சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் – நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் — நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் – சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

ஸகல ஜகத்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்த்ருத்வத்தாலும்‌ உபய விபூ,தி யோகத்தாலும்‌ உபய விபூதி நாயகத்வத்தாலும்‌ ப்ராப்ய ப்ராபகத்வத்தாலும்‌ அபரிச்சேத்‌யாநந்த, யுக்ததையாலும்‌ ஸர்வ ஸரீரித்வத்தாலும்‌ ஸர்வ ஸப்த, வாஸ்யத்வத்தாலும்‌ நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தாலும்‌ பரத்வ ப்ரதிபாதகமான “உளன்‌ சுடர்மிகு சுருதி” (திருவாய்மொழி 1-1-7) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத்தாலும்‌ ”திருவுடையடிகள்‌” (திருவாய்மொழி 6-8-11) என்று ஸ்ரீய:பதித்வத்தாலும்‌ “என்‌ செய்ய தாமரைக்கண் பெருமானார்‌‘ (திருவாய்மொழி 1-4-2 என்று புண்டரீகாக்ஷத்வத்தாலும்‌ “ஓடும் புள்ளேறி” (திருவாய்மொழி 1-8-1) என்று கருட, வாஹநத்வத்தாலும்‌ அத ஏவ ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன்‌

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள்
இவை யுண்ட சுரனே –1-1-7-சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது-சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால்
அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –உளன்-இப்படிப்பட்ட ஸ்ருதியாலே பிரதிபாத்யனாகக் கொண்டு தோற்றினவன்-தாம் அனுசந்தித்த அர்த்தங்களுக்கு ஸ்ருதியை சாஷியாக சொல்லுகையாலே அதில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யமும் அனுசந்தித்தாராக வேணும்-இவருக்கு நிர்தோஷ ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே பாஹ்யரும் ஜகத் ஈஸ்வரர்களுக்கு அந்யதா சம்பந்தம் சொல்லும் குத்ருஷ்டிகளும் அர்த்தாத் பிரதி ஷிப்தர் ஆனார்கள் 

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8-நமக்கு அபிமதமான நாள் தோறும்-நமக்கே கூறப்பட்ட ஸ்ரீ மானான ஸ்வாமியினுடைய சர்வ ஸமாச்ரயணீயமாய் போக்யமுமான திருவடிகளை ஆஸ்ரயிக்கில்

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2–விஸ்லேஷ தசையிலே தான் வரும் தனையும் இவள் தரித்து இருக்கைக்காக -ஆத்மாத்யீங்கள் எங்கேனும் கிடக்கிலும் உன்னது அன்றோ என்கிற வார்த்தையாலே என்னுடையவர் என்கிறாள் ஐஸ்வர்யத்தாலும் வாத்சல்யத்தாலும் கலவியாலும் சிவந்த திருக் கண்களை யுடையவர் இவை எல்லாம் இவள் அனுபவித்தவை இறே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர் யமும் -மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யமும் இத் திருவாய் மொழியிலே கலவியும் –பெருமானார்க்கு –
ஸ்வ பாவிகமான பௌஷ்கல்யத்துக்கு மேலே தன்னைத் தோற் பித்தத்தால் வந்த மேணானிப்பைச் சொல்லுகிறாள் –சம்ச்லேஷதசையிலே ச்நேஹகமாக நோக்கி -அந் நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம் –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-ஓடும் புள்ளேறி –-புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும்-மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொள்ளுகை வாஹனத்துக்கு அபேக்ஷிதமாய் இருக்கை –மேற்கொள்ளும் அது தான் -அங்கு உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும் –அவனுடைய ஸ்வரூப லாபத்துக்குமாய் இருக்கும்-த்வத் அங்க்ரி சம்மர்த்த கிணங்க ஸோபிநா

1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –-அதாவது மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று ஸ்வ கேவல கிருபையாலே –ஞான அனுதய –
அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை இவருக்கு வாசனையோடு போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –இவர் திரு உள்ளத்திலே புகுந்து – சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான புண்ய பாப கர்மங்களையும் –பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி – அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் –தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு – அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி – தரிசு கிடந்த நிலத்தை செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

(மயர்வற மன்னி மனம்‌ வைக்கத்‌ திருத்தி) “மயர்வற மதிநலம்‌ அருளினன்‌” (திருவாய்மொழி 1-1-1 “மயர்வற என்‌ மனத்தே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-7-4) என்று ஜீஞாநாநுதய அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாநமான அஜ்ஞாநத்தை இவர்க்கு வாஸநையோடே போக்கி நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுத்து இவர்‌ திருவுள்ளத்திலே புகுந்து “சார்ந்த இருவல் வினைகளும்‌ சரித்து மாயப் பற்றறுத்துத்‌ தீர்ந்து தன் பால்‌ மனம்‌ வைக்கத்‌ திருத்தி” (திருவாய்மொழி 1-5-10) என்கிறபடியே இவருடைய புண்ய பாப ரூப கர்மத்தை ஸவாஸநமாகப்‌ போக்கி “அருவினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1) என்று அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகன்ற விடத்திலும்‌ தன்‌ ஸீலவத்தையைக்‌ காட்டிச்‌ சேர்த்துக்‌ கொண்டு இவர்‌ தாமே “மாயோன்‌” (திருவாய்மொழி 1-5-8) என்று தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி தரிசு கிடந்த நிலத்தைச்‌ செய்காலாகத்‌ திருத்துவாரைப்போலே திருத்தி,-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்–இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-மயர்வற-அஞ்ஞானம் சவாசனமாக போம்படி-என் மனத்தே மன்னினான் தன்னை-அஞ்ஞானம் பின்னாட்டாத படி என் ஹிருதயத்திலே வந்து புகுந்தான்-மன்னினான் தன்னை-இனி கந்தவ்ய பூமி இல்லை என்று ஸ்த்தாவர பிரதிஷ்டை போலே இருந்தான்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-தன்பால் மனம் வைக்கத் திருத்தி
விரோதியைப் போக்கும் அளவு அன்றிக்கே மனஸ் ஸூ க்குத் தானே விஷயமாம் படி அண்ணி

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-அரு வினையேன் -வாக்கியம் பூரிப்பதற்கு முன்பே தம்முடைய மௌர்க்க்யத்தைப் பார்த்து –அரு வினையேன் -என்கிறார் -இவர் இப்போது அருவினையேன் என்கிறது -பகவத் ப்ராவண்யத்தை-இப்போது பகவத் விஷயத்தை கிட்டுகை அநிஷ்டம் ஆகையாலே கடவது இறே-அநிஷ்டாவஹம் இறே பாவம் –

உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-மாயோனே-ஆச்சர்ய பூதனே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யமே தாரகமாய் இருக்கிறதொரு ஆச்சர்யம் இருக்கிறபடி என் –

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன-அதாவது-மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் , நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,-மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே – இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு – ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

(மறக்குமென்று நல்கி விடாதே மன்ன) “ மறக்குமென்று செந்தாமரைக்‌ கண்ணொடு” (திருவாய்மொழி 1-10-10) “நல்கி என்னை விடான்‌” (திருவாய்மொழி 1-10-8) “மறப்பற என்னுள்ளே மன்னினான்‌” (திருவாய்மொழி 1-10-10) என்று சொல்லுகிறபடியே இவரின்னம்‌ நம்மை விஸ்மரிக்கக் கூடுமென்று நிரதிஸய வ்யாமோஹத்தைப்‌ பண்ணி இவரை விடாதே இருட்டறையிலே புகுவார்‌ சிலர்‌ விளக்கேற்றிக் கொண்டு புகுருமா போலே அழகிய திருக் கண்களோடே இவர்‌ திருவுள்ளத்தே புக்கு நிரந்தர வாஸம்‌ பண்ண

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை

மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10—அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து-மறக்கக் கூடும் என்று பார்த்து-அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு-ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை-புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறப்பனோ இனி – மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இ றே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –
1-10-8-நான் ஒரு கால் தேடி விடா நின்றேன்-அவன் இடை விடாதே ஸ் நேஹியா நின்றான்-நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –-அபூரணனான என்னை பூர்ணனான தான் நம்பி விடுகிறிலன்-நம்பி -ஒருத்தனாக நினைத்து நம்பி அல்லும் பகலும் வீடின்றி நல்கி நம்பி என்னை விடான் மாயமே-ஆழ்வான் -நம்பியே என்று ஸ்வரத இவனையே பூர்ணன் என்பது என்பர் –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,-தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –-எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்று
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் — நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் – எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி – சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையார் ஆனவர்

(அயர்ப்பிலன்‌ அறுத்தேன்‌ என்‌ சொல்லி மறப்பனோ என்னும்படி தத்வ ஜ்ஞரானவர்‌) “பெரு நிலங் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன்‌” (திருவாய்மொழி 1-3-10) “மாயப்பிறவி மயர்வறுத்தேன்‌” (திருவாய்மொழி 1-7-3) “எம்பிரானை என் சொல்லி மறப்பனோ” (திருவாய்மொழி 1-10-9) என்று வர்ஷுகவலாஹகம் போலே ஸ்யாமமான திருமேனியை உடையவனுடைய திருவுலகளந்தருளின திருவடிகளை ஒருக்காலும்‌ விஸ்மரியேன்‌, நிரதியய போக்‌யனான அவனை ஸதா, அநுபவித்து ஆஸ்சர்யமான ஜந்மமடியாக வருகிற வஜ்ஞாநத்தைப்‌ போக்கப்‌ பெற்றேன்‌; எனக்கு உபகாரகனான அவனை எத்தைச்‌ சொல்லி விஸ்மரிப்பதென்னும்படி ஸம்ஸய விபர்யய விஸ்ம்ருதிகள்‌ இல்லாதபடி தத்வ ஜ்ஞாநத்தை யுடையரான இவர்‌-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
 —1-3-10-பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்த-குணாகுண நிரூபணம் பண்ணாத பரம போக்யமான திருவடிகள்-மோஹித்துக் கிடக்க கடவேன் அல்லேன் பிரகர்ஷத்தாலே அக்ரமாக கூப்பிடக் கடவேன் கண்டவாறே கட்டிக் கொள்ளக் கடவேன்-நிர்மமனாய் விழக் கடவேன் -பிரயோஜன நிரபேஷமாக செய்யக் கடவேன் இப்படிச் செய்யப் பெற்றேன் என்றும் சொல்லுவர்-

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3–அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –ப்ரஹ்மசர்யாதி நியதி உண்டு அதுக்கு -இருந்த படியிலே அனுபவிக்க அமையும் இதுக்கு-பருகிப் பருகி-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே-பிரகிருதி சம்பந்த பிரயுக்தமான ஜென்மத்தாலே சஞ்சிதமான அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கினேன்-அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–எம்பிரானை –நித்ய ஸூரிகளுக்கு போலே தானே தாரகமாம் படி எனக்கு உபகரித்தவனை-என் சொல்லி மறப்பேனோ–குண ஹீனன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ-வடிவில் பசை இல்லை என்று மறக்கவோ-மதிப்பன் அல்லன் என்று மறக்கவோ-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ 

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி-அதாவது-சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –-மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –-கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –-நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று – நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –-என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும் ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே-தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –-அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள் ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் – ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் – அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் – பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் – இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

(சுடரடி எம்பிரானை விடாது கண்டாயே நீயும்‌ நானும்‌ என்கிற ஸஹ்ருதயாநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாம்படி) “துயரறு சுடரடி தொழுதெழு என்‌ மனனே” (திருவாய்மொழி 1-1-1) “எம்பிரானைத்‌ தொழாய்‌ மட நெஞ்சமே” (திருவாய்மொழி 1-10-3) “மலராள்‌ மணவாளனைத்‌ துஞ்சும் போதும்‌ விடாது தொடர்‌ கண்டாய்‌” (திருவாய்மொழி 1-10-4) “கண்டாயே நெஞ்சே கருமங்கள்‌ வாய்க்கின்று” (திருவாய்மொழி 1-10-5) “நீயும்‌ நானும்‌ இந்நேர்‌ நிற்கில்‌ மேல்‌ மற்றோர்‌ நோயும்‌ சார்கொடான்‌” (திருவாய்மொழி 1-10-6) என்று நிரவதிக தேஜோ ரூபமான அவன்‌ திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்‌ பண்ணி உஜ்ஜீவிக்கப் பார்‌; எனக்கு பவ்யமான நெஞ்சே, நமக்கு உபகாரகனான அவனைத்‌ தொழப் பாராய்‌-ஸ்ரீய:பதியான ஸர்வேஸ்வரனை நான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி அகலும்போதும்‌ நீ விடாதே கிடாய்‌, அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்‌ இருந்தபடி கண்டாயே, நீயும்‌ நானும்‌ அயோக்‌யதாநுஸந்தாநம் பண்ணி அகலாதிருக்கப் பெறில்‌ அநாதி காலார்ஜிதமான கர்மம்‌ இதர விஷய ப்ராவண்யம்‌ ப்ரயோஜநாந்தர ஸ்ரத்‌தை. உபாயாந்தர ஸங்கம்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ தொடக்கமான விரோதிகள்‌ நம்மைக்‌ கிட்டாதபடி பண்ணுமென்று திருவுள்ளத்தைப்‌ பார்த்து உபதேஸித்துத்‌ தம்முடைய திருவுள்ளமும்‌ தாமும்‌ கூட அவனுடைய குணங்களை அநுபவித்து இப்படித்‌ திருவுள்ளத்தோடே கூட அநுபவித்த அநுபவம்‌ தனி யநுபவிக்க வொண்ணாமையாலும்‌ “ஏக ஸ்வாது ந புஞ்ஜீத” என்று இவர்‌ தனி யநுபவிக்க வல்லரல்லாமையாலும்‌ ஸம்பந்தம்‌ ஸர்வ ஸாதாரணமாகையாலும்‌ இவர்‌ பராநர்த்தம்‌ பொறாத படியான பரம க்ருபாவானாகையாலும்‌ இவ்வநுபவம்‌ ஸம்ஸாரிகளுக்குமாக வேணுமென்று ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயரறு-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி-சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை-தொழுது-சேஷியைக் கண்டால் பிறக்கும் வ்ருத்தி விசேஷம்-எழு-உஜ்ஜீவி-தொழப் பெறாதே போது-அசந்நேவ -என்னும்படி யாய் இ றே இருப்பது-என் மனனே-பகவத் பிரத்யாசத்தியாலே தமக்குத் திரு உள்ளத்தோடு ஒரு சம்பந்தத்தை ஆசைப் படுகிறார் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-–இச் சேர்த்தி அழகைக் கண்டு எம்பிரானை என்கிறார்
தொழாய் –-இவர் தொழும் வஸ்து மிதுனமாய் இறே இருப்பது-மட நெஞ்சமே–தொழுது எழு என்னலாம் படி பவ்யமான நெஞ்சே

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்
–1-10-4—மைந்தனை –-நித்ய யவ் வன ஸ்வ பாவனை
மலராள் மணவாளனைத்-நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-துஞ்சும் போதும் அயோக்கியன் என்று அகலும் போதும் – விஸ்லேஷம் விநாச பர்யாயம் -என்கை-ந ச சீதா த்வயா ஹீ நா யஸ்த்வயா சக-விடாது தொடர் – நான் விடிலும் நீ விடாதே மேல் விழுந்து அனுபவிக்கப் பார் -அவள் விடிலும் நீ தொடர பார்-கண்டாய்-இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது-பிராட்டி அகலகில்லேன் இறையும்-என்கிற விஷயத்தை அன்றோ நான் அனுபவிக்கச் சொல்கிறது –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5—கண்டாய் நெஞ்சே –-சைதன்யத்துக்கு ப்ரசரணை த்வாரமான உனக்கு தெரியாமை உண்டோ-கருமங்கள் வாய்க்கின்று-பிரயோஜனங்கள் நேர்படப் புக்கால்-ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு-எண்ணிலும் வரும் -என்று இது மிகையாம் படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே-இயலுகை– பலிக்கை

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்

தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6–நீயும் நானும் – தொழு என்று சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழச் சொல்லுகிற நானும் – பிரதி கூலித்துப் போந்த நீயும் -உன்னைப் பின் சென்ற நீயும்
இந்நேர் நிற்கில்-ஓர் எண் தானும் இன்றியே நிற்கில்-ந நமேயம் என்கிற நிர்பந்தத்தை தவிர பெறில்
இப்படி நின்றால் அவன் செய்வது என் என்னில் –மேல் மற்றோர்-நோயும் சார் கொடான் –-மேல் உள்ள காலம் ஒரு நோயும் சார விட்டுக் கொடான்-முன்பு பண்ணின பாப பல அனுபவம் பண்ண விட்டுக் கொடான்-விஷய பிரவணனாக விடான்-பிரயோஜ நாந்தரங்களைக் கொண்டு அகல விடான்
அயோக்கியன் என்று அகல விடான்-உபாயாந்தரங்களைப் பற்றி அகல விடான்
நெஞ்சமே சொன்னேன்--நான் உன்னை ஆராயாதே உன் அநர்த்தத்தைப் பார்த்து உனக்கு இவ்வர்த்தத்தை சொல்லிக் கொடு நின்றேன்-பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று இருக்கைக்கு திருக் கோஷ்ட்டியூர் நம்பியோடே ஒப்பர்-சொல்லிச் சமைந்து பதண் பதண் என்கைக்கு ஒரு கீதாசார்யனோடு ஒப்பர்-இதந்தே நாத பஸ்காய-சொன்னேன் –உபதேசத்தில் குறை இல்லை
பிரதி பத்தி பண்ணாது ஒழியில் இழக்கும் அத்தனை

4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து-அதாவது –வீடு மின் முற்றத்திலே –1-2- –வீடு மின் முற்றவும் –என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –-மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் -என்று அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும் நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்று அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும் வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்-எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்-வீடு செய்மினே –-இறை சேர்மின் –-இறைபற்று –-திண் கழல் சேர் – என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்-வண் புகழ் நாரணன் -என்று அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

(வீடுமின்‌ என்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்தரமாக உபதேஸித்து) வீடுமின்‌ முற்றத்திலே “வீடுமின்‌ முற்றவும்‌” (திருவாய்மொழி 1-2-1 என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும்‌ “மின்னின்‌ நிலையில மன்னுயிராக்கைகள்‌’ (திருவாய்மொழி 1-2-2) என்று அதினுடைய அல்பாஸ்த்திரத்வாதி தோஷத்தையும்‌ “நீர்‌ நுமதென்றிவை வேர் முதல்‌ மாய்த்து” (திருவாய்மொழி 1-2-3) என்று அவற்றினுடைய பரித்யாக க்ரமத்தையும்‌  “வீடுடையான்‌”  (திருவாய்மொழி 1-2-2) என்று உபாதேயமான பகவத்‌ ஸ்வரூபத்தையும்‌  “எல்லையிலந்நலம்‌”  (திருவாய்மொழி 1-2-5) என்று அவ்வஸ்துவினுடைய குணத்தையும்‌ ‘ வீடுசெய்ம்மின்‌’ (திருவாய்மொழி 1-2-1 என்றும்‌ “இறை சேர்மின்‌” (திருவாய்மொழி 1-2-3) என்றும்‌ “ இறை பற்று” (திருவாய்மொழி 1-2-5) என்றும்‌ “திண் கழல்‌ சேரே” (திருவாய்மொழி 1-2-10) என்றும்‌ அவ் விஷயத்திலே ஆத்மாவை சமர்ப்பிக்கும் கிரமத்தையும்‌ “வண்புகழ்‌ நாரணன்‌” (திருவாய்மொழி1-1-2-10) என்று அந்த ஸமர்ப்பணத்துக்கு ஆலம்பநமான திருமந்த்ரத்தோடே உபதேசித்து –

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1–விடுகிறவனுடைய த்யாஜ்யாதிசயம் தோற்றுகைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார்-எத்தை விடுவது என்னும் அபேஷையிலே முற்றவும் – என்கிறார் –
அஹம் மமேதி சண்டால-சண்டாலர் குடியிருப்பை பிராமணனுக்கு ஆக்கும் போது சண்டால ஸ்பர்சம் உள்ள பதார்த்தம் அடைய த்யாஜ்யம் ஆனால் போலே -அஹங்கார கர்ப்பமாக ஸ்வீகரித்த வற்றில் த்யாஜ்யம் அல்லாதன இல்லை -என்கை-வீடு-விடுகையை -சமர்ப்பிக்கையை-செய்ம்மினே
இசையுங்கோள்-அவன் நினைவு நித்தியமாய் இருக்க நீங்கள் இசையாமல் இறே இழந்து போந்தது

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2–மின்னின் நிலையில-மின்னுக்கு உள்ள நிலையும் இல்லை-சம்பதஸ் ஸ்வப்ன சங்காசா யௌவனம் குஸூமோபமம் தடிச்சஞ்சலமாயுச்ச கஸ்ய ச்யாஜ்ஜா நதோ த்ருதி –-அது தோற்றி நசிக்கும்-இது கர்ப்பத்தில் நசிக்கும்-தோற்றின போதே மாயக் கடவதாய் இருப்பதொரு வ்யவஸ்தை உண்டு அதுக்கு இது சில நாள் இருக்கிலும் இருக்கும் -அஸ்திரம் என்று ஹிதத்தில் ப்ரவர்த்திக்க ஒட்டாது -ஸ்திரம் என்று விச்வசிக்கப் பண்ணி நசிக்கும் –-மன்னுயிர் ஆக்கைகள்-உயிர் மன்னி விடேன் என்று பற்றிக் கிடக்கிற சரீரங்கள்-நித்யனான ஆத்மாவினுடைய சரீரங்கள் என்னவுமாம்-உயிர் என்கிற ஏக வசனத்துக்கும் ஆக்கைகள் என்கிற பஹூ வசனத்துக்கும் கருத்து -ஓர் ஆத்மாவே கர்ம அனுகுணமாக அநேக தேஹங்களிலே நலிவுபடும் என்று தோற்றுகைக்காக-

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–1-2-3—நீர் நுமது -என்று-அனர்த்த கரமான அஹங்கார மமகாரங்களை-நான் என்னது -என்னும் அர்த்தத்தை பிறர்க்கு உபதேசிக்கப் புக்கால் -நீங்கள் என்றும் உங்களது என்றும் இறே சொல்லுவது-அதாகிறது -அனாத்மயாத்மா புத்தியும் அஸ்வே ஸ்வ த்வய புத்தியும்-நான் என்னது — என்னில் நா வேம் இறே-அனாத்மன்யாத்ம புத்திர்யா அச்வேஸ் வமிதி யாமினி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதாஸ்திதம்-என்று சம்சார பீஜத்தையும்
அச்யுதாஹன் த்வாச்மீதி சைவ சம்சார பேஜஷம் என்று பரிகாரத்தையும் சொல்லிற்று இறே –இவை வேர் முதல் மாய்த்து-இவற்றை சவாசனமாகப் போக்கி-இது அக்னி நா சிஞ்சேத்-போலே துஷ்கரம்
இவை நேராக விடும் போது பகவத் விஷயத்தைப் பற்றி விட வேணும்-அவனைப் பற்றும் போது இவற்றை விட்டு அல்லது பற்ற ஒண்ணாது

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-இதர விஷயங்களிலே தொற்று அற்று -சர்வேஸ்வரனைப் பற்று என்னுதல்-ஆஸ்ரயிக்கும் போதே உன்னை பகவச் சேஷமாக அத்யவசித்து ஸ்வாமி யானவனை ஆஸ்ரயி என்னவுமாம் –-அன்றிக்கே-விபக்தியை மாறாடி இறையைப் பற்றி அத்தை அறுங்கோள் என்னவுமாம் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-வண் புகழ் –கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை-ஈறில -என்று குணங்களுக்கு விசேஷணம் ஆகவுமாம்-நாரணன் –-நித்ய சித்த கல்யாண குணங்களோ பாதி ஜீவ சமூஹத்தையும் ஸ்வ அதீனமாக யுடையவன் ஆகையாலே -நாராயணன்
திண் கழல் சேரே —இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி –

5 -எளிதாக அவதரித்து-அதாவது-ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி-பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே அவர்களுக்கு சுலபனாய் பிழைகளை சஹித்து-அதாவது-ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி அபராத சஹனாய் புரையறக் கலந்து-அதாவது அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே – அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்-திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஒருவனே –1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலனாய் –-அல்ப சந்துஷ்டனாய்-அதாவது ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன் ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –-புரிவதுவும் புகை பூவே -என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது-நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –-தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –மிகவும் இனிதாயிருக்கும் அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

(எளிதாக வந்தவதரித்து) “பல பிறப்பாய்‌ எளிவருமியல்வினன்‌” (திருவாய்மொழி 1-3-2) என்று அவன்‌ அதீந்த்‌ரியன்‌ என்று இறாயாதபடி ராம க்ருஷ்ணாதி ரூபேண வந்தவதரித்து ஆஸ்ரயிப்பார்க்கு ஸுலபனாய்‌ அப்படி யவதரித்து ஸூலபனானவன்‌ ஆஸ்ரிதருடைய அபராதங்களைக்‌ கண்டு கை விடுமோ என்னில்‌ அங்ஙனன்று (பிழைகளை ஸஹித்து) “என் பிழைத்தாள்‌ திருவடியின்‌ தகவினுக்கு” (திருவாய்மொழி 1-4-7) என்று அபராத ஸஹனாயிருக்கும்‌. (புரையறக்‌ கலந்து) அவன்‌ அபராத ஸஹனானாலும்‌ “அரு வினையேன்‌” (திருவாய்மொழி 1-5-1 என்று இவன் தான்‌ அயோக்‌யதாநுஸந்தாநம்‌ பண்ணி யகலிலும்‌ “திசைகளெல்லாம்‌ திருவடியால்‌ தாயோன்‌ தானோர்‌ உருவனே” (திருவாய்மொழி 1-5-3) என்றும்‌ “நெய்யூண்‌ மருந்தோ மாயோனே” (திருவாய்மொழி 1-5-8) என்றும்‌ தன்‌ செல்லாமையையும்‌ இவரோடே புரையறக்‌ கலக்கிற பலத்தையும்‌ காட்டி இவரைச்‌ சேர்த்துக் கொள்ளுந்தனை ஸீலவானாய்‌ இப்படி சேர்த்துக்‌ கொண்டால்‌ ஆஸ்ரயண மரிதாயிருக்குமோ என்னில்‌ (அல்ப ஸந்துஷ்டனாய்‌) அவன்‌ இவனிட்டது கொண்டு வயிறு வளர்க்க வேண்டாதபடி அவாப்த ஸமஸ்த காமனாய்‌ ஸ்ரீய:பதியாயிருக்கையாலே “புரிவதுவும்‌ புகை பூவே” (திருவாய்மொழி 1-6-1 என்று த்‌ரவ்ய நியதி அதிகாரி நியதி யில்லாதபடி ஆஸ்ரயணம்‌ ஸுகரமாம்படி அல்ப ஸந்துஷ்டனாய்‌ அவ்வாஸ்ரயணந் தான்‌ தேவையாயிருக்குமோ என்னில்‌ (அம்ருதமே ஒளஷத மாக்கி) “தூயவமுதைப்‌ பருகிப்‌ பருகி என்‌ மாயப் பிறவி மயர்வறுத்தேனே” (திருவாய்மொழி 1-7-3) என்று நிரதிஸய போக்‌யனான அவனுடைய ஆஸ்ரயணமாகையாலே ஸம்ஸார வ்யாதி பேஷஜமான அவ்வாஸ்ரயணம்‌ தானே இனிதாம்படி பண்ணி

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2-பத்துடை அடியவர்க்கு -என்று -சோபாதிகம் அன்று இவன் எளிமை -ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தம் எளிமையை இயல்வாக யுடையவன்-பல பிறப்பாய் – வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை – தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை – உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் – பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7–என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு-ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது-என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேச-திருவடியின் தகவினுக்கு-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ-பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே
–1-5-3-லோகங்களை எல்லாம் திருவடிகளாலே அளந்து கொண்டவன்-நாய்ச்சிமாரும் தொடும் போது கூச வேண்டும்படியான திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும் அளந்தது-இங்கனம் செய்வான் என் என்னில்-எல்லா எவ்வுயிர்க்கு தாயோன்-எல்லாரோடும் சம்பந்தம் ஒத்து இருக்கை-எல்லாம் என்று சாகல்ய பரம் –-எவ்வுயிர் என்று விலஷணம் அவிலஷணம் -என்று பாராது ஒழிந்தபடி-தாயோன்- தாய் போலே பரிவன் ஆனவன்-தான்ஓர் உருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-மண் கரைய நெய்யூண் மருந்தோ-அன்று இறே-ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தாலே யல்லது செல்லாமை இறே
சேஷித்தால் மருந்தாகாதோ-அன்றிக்கே-மனிசர்க்காகும் பீர்-மனுஷ்யருக்கு வரும் வைவர்ண்யம் அத்யல்பமும் சேஷியாத படி -என்னவுமாம்-மாயோனே-ஆச்சர்ய பூதனே-ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ளதொரு த்ரவ்யமே தாரகமாய் இருக்கிறதொரு ஆச்சர்யம் இருக்கிறபடி என் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-புரிவதும் நீங்கள் அருள் கொடையாகக் கொடுக்குமதுவும்-புகை பூவே-அகில் புகை -கரு முகைப் பூ என்று விசேஷியாமையாலே ஏதேனும் புகையும் ஏதேனும் புஷ்பமும் அமையும்-இது ஸ்வாராததையைப் பற்றிச் சொல்லிற்று
இவனைப் பார்த்தால் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டும் -என்றும் –நாடாத மலர் நாடி –
தூய நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு –
என்றும் சொல்லக் கடவது இறே-அவனைப் பார்த்தால் -கள்ளார் துளாயும்-இத்யாதிகளில் சொல்லுகிற மாத்ரமே அமையும்-ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயத் -என்கிற விதியாலே தவிருகிறதும் -ப்ரேம பரவசனாய்ச் சென்று பறிக்கிறவன் கையில் முள் பாயாமைக்காக என்று பட்டர் அருளிச் செய்வர்-ஸ்ரீ வராஹ புராணத்திலே ஸ்ரீ வராஹ நாயனாருக்கு முத்தக்காசை அமுதுபடியாக சொல்லிற்று –

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-தூய வமுதைப்
அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் – ப்ரஹ்மசர்யாதி நியதி உண்டு அதுக்கு -இருந்த படியிலே அனுபவிக்க அமையும் இதுக்கு-பருகிப் பருகி-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே
-பிரகிருதி சம்பந்த பிரயுக்தமான ஜென்மத்தாலே சஞ்சிதமான அஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கினேன்-அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-

6 -நீர் புரைய தன்னை நியமித்து-அதாவது-இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -என்று மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி தன்னை செவ்வியனாக நியமித்து-போகத்தை சாத்மிப்பித்து-அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -என்று தொடங்கி –உச்சி உளானே -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து

அப்படி ஆஸ்ரயிக்குமிடத்தில்‌ இவர்களைத்‌ தன்‌ நினைவுக்கீடாக நியமித்துப்‌ பரிமாறுவித்துக்‌ கொள்ளுமோ என்னில்‌ (நீர் புரையத்‌ தன்னை நியமித்து) “நீடு நின்றவை ஆடுமம்மானே”  (திருவாய்மொழி 1-8-1) என்றும்‌ “அம்மானாய்ப்‌ பின்னும்‌ எம்மாண்புமானான்‌” (திருவாய்மொழி 1-8-2) என்றும்‌ “நீர் புரை வண்ணன்‌‘ (திருவாய்மொழி 1-8-11) என்றும்‌ சொல்லுகிறபடியே மேட்டிலே நீரை விரகாலே ஏத்துவாரைப்‌ போலே இவர்களுடைய செவ்வைக் கேடு செவ்வையாம்படி தன்னைச்‌ செவ்வியனாக நியமித்து இப்படிப்‌ பரிமாறுமிடத்தில்‌ குளப்படியிலே கடலை மடுத்தாப்போலே நலக்கேடு கெடும்படி பரிமாறுமோ வென்னில்‌ (போகத்தை ஸாத்மிப்பித்து) “சூழலுளானே”  (திருவாய்மொழி 1-9-1) என்று தொடங்கி “உச்சியுளானே” திருவாய்மொழி 1-9-10) என்று ஸாத்மிக்க ஸாத்மிக்கத்‌ தன்னை அநுபவிப்பித்து

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-கர்ம அநு கூலமாகில் இறே-அநித்தியம் ஆவது –
ஸ்வரூபம் அநு கூலம் ஆகையால் நித்யமாகச் செல்லா நிற்கும் – அவனுக்கு இவர்களை ஒழியச் செல்லாது – இவர்களுக்கும் அவனை ஒழியச் செல்லாதுபுள் என்றும் துழாய் என்றும் சொல்லுகிற படியால் –அவை என்கிறது–ஆடும்-அவற்றோடு பரிமாறும் என்னும் இடத்தில் –ஆடும் -என்கிறது –
இரண்டு தலைக்கும் போக ரூபமாய் இருக்கையாலே
அம்மானே-நித்ய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் சாதாரணமான ஸ்வாமித்வம் உண்டாய் இருக்கச் செய்தேயும் இப்படி தனித்தனியே அசாதாரணமாய் பரிமாறுகை-இப்படி பரிமாறுகைக்கு நிபந்தம் சொல்லுகிறது என்னவுமாம்
நித்ய ஸூரிகளுடைய தாரகாதிகளும் தன் நினைவிலே யாம்படியான ஏற்றத்தை உடையவன் என்றுமாம் –

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2—சர்வாதிகனாய் வைத்து பின்னும் அதன் மேலே-எம் மாண்பும் ஆனான்-எல்லா அவதாரங்களையும் உடையான் ஆனான்-மாண்பு என்று அழகு –-பரத்வத்தில் காட்டில் அவதாரங்களில் அழகு மிக்கு இருக்கை –ச உஸ்ரேயான் பவதி ஜாயமான

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11–நீரோடு ஒத்த ஸ்வ பாவத்தை உடையவனுடைய ஆர்ஜவ குணத்தை-புரை -ஒப்பு-வண்ணம் –ஸ்வ பாவம்-நீரை வருந்தி மேட்டிலே ஏற்றினால் போலே சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை-

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-பிராட்டி அகலகில்லேன் -என்னுமவன் என் பர்யந்தத்திலே வர்த்திக்குமது தன் பேறாக இரா நின்றான் –அநாதிகாலம் இவர் இழந்த இழவு எல்லாம் தீரும் படியும் -ஸாத்மிக்கும் படியாக -சர்வ இந்த்ரியங்களாலும் -சர்வ காத்ரங்களாலும் சம்ச்லேஷிக்க அத்தை அனுபவித்து ப்ரீதர் ஆகிறார்

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10–ஒரு கலா மாத்ரமான சந்திரனை ஒப்பனையாக உடைய ருத்ரனும் சதுர்முகனும் இந்திரனும் மற்றும் உண்டான சர்வ தேவதைகளும்
அவர்கள் தங்கள் செல்லாமையாலே தொழா நிற்க -அவர்களை அநாதரித்து தான் என்னை ஒழியச் செல்லாதவனாய்-வந்து என் உச்சியிலே புகுந்தான் –

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —அதாவது-இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல் பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி – கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் – என்று பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு –எளிமையும் இனிமையும் உண்டு-அதாவது-எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே – கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —-பத்துடை அடியவர்க்கு எளியவன்
-1-3-1–என்றும் ,-அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்-தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

(பக்தி கணனைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு) இப்படி அநுபவிக்குமிடத்தில்‌ “கண்ணுள்ளே நிற்கும்‌ காதன்மையால்‌ தொழில்‌ எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌” (திருவாய்மொழி 1-10-2) என்று பர பக்திக்கும்‌ பரிகணனைக்கும்‌ ஒக்க முகம்‌ கொடுக்கிற அவனுடைய ஆஸ்ரயணத்துக்கு (எளிமையும்‌ இனிமையுமுண்டு) “ பத்துடை எளியவன்‌”  (திருவாய்மொழி 1-3-1”அமுதிலுமாற்ற இனியன்‌” (திருவாய்மொழி 1-6-6) என்று ஆஸ்ரயணந்தான்‌ எளிதுமாய்‌ இனிதுமாய்‌ இருக்கும்‌; இத்தால்‌ அபேஷித்த பலங்கள்‌ ஸித்‌திக்குமோ என்னில்‌ 

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2—அவனைப் பெறா விடில் தரியாதானாம் படியான பரம பக்தியை உடையனாய்க் கொண்டு தொழில் கண் வட்டத்தே விடாதே நிற்கும் –-இத்தலைக்காக நிற்கை யன்றிக்கே-தன் செல்லாமையோடே ஸ்தாவர பிரதிஷ்டை யாய் நிற்கும்-எண்ணிலும் வரும்- கட படாதிகள் உடைய அஸ்தி பாவத்தை இசையும் -ஈசுவரனுடைய அஸ்தி பாவத்தை இசையான்-
பஞ்ச விம்சதி தத்துவத்தையும் இசையும் -ஷட் விம்சகளை இசையான் – நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும் என்னவுமாம்-என்னினி வேண்டுவம்--சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-பக்தி சப்தத்தால் இங்கு பர பக்த்யாதிகளைச் சொல்லுகிறது அன்று – பக்த்யுபக்ரமான அத்வேஷ மாத்ரத்தைச் சொல்லுகிறது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் என்கிற குண பிரகரணம் ஆகையாலே-உடை –-இம்மாத்ரத்தைக் கனக்க யுடைமையாகச் சொல்லுகிறது –விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம்
பண்ணுவாரை நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ராயத்தாலே –யடியவர்கு-அடியவர் என்றதும் பகவத் அபிப்ராயத்தாலே-ஆநு கூல்ய லேசம் குவாலாய் இருக்கை –
த்வயி கிஞ்சித் சமா பன்னே என்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்ய ஆஸ்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்து இருக்கையாலே-எளியவன்-பாபத்தைப் போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தத் பலமான ஸ்வர்க்காதிகளைக் கொடுத்தல் -தன்னைக் கொடுத்தல் செய்யுமவன் அல்லன் –
அவர்களுக்குத் தன்னைக் கையாளாக்கி வைக்கும்-பக்திக்ரீதோ ஜனார்த்தன -தூத்ய சாரத்யங்களைப் பண்ணுகையாலே ஆஸ்ரிதர்க்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனான் இறே

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-இவர்கள் போக்யம் என்று இருக்கிற அம்ருதத்தில் காட்டில் நிரதிசய போக்யன் ஆனவன்-வாசி அறிவார்கள் ஆகில் அவனையே கிடீர் பற்ற அடுப்பது என்கை -பிள்ளை திருவழுதி நாடு தாசர் வார்த்தை –-ஆற்ற இனியன் மிகவும் இனியன்

8-தொழுதால் அரும் பயனாய தரும்-அதாவது அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,-தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி – அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில் உத்யோகத்தே வினைகளும் மாளும்-அதாவது நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் –என்று நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –

(தொழுதால்‌ அரும்பயனாய தரும்‌) அவனைத்‌ தொழுதால்‌ வழிநின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம்‌ தரும்‌” (திருவாய்மொழி 1-6-8) “தருமவரும்பயனாய” (திருவாய்மொழி 1-6-9) என்று அவனை பஜித்தால்‌ ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும்‌ நிஸ் ஸேஷமாகப்‌ போக்கி அழிவில்லாத பெறுதற்கரிய ப்ரயோஜநங்களையும்‌ தரும்‌. பஜித்தாலன்றோ தருவது, பஜந விரோதி, குவாலாகவுண்டே” என்னில்‌ (உத்யோகத்தே வினைகளும்‌ மாளும்‌) “நாளு நின்றடு நமபழமை அங்கொடு வினையுடனே மாளும்‌” (திருவாய்மொழி 1-3-8) என்று நாள் தோறும்‌ நின்று இவ்வாத்மாவை முடிக்கிற அநாதி யான அதி க்ரூரமான கர்மங்கள்‌ பஜநோபக்ரமத்திலே நஸிக்கும்‌;

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8—ஸ்வயம் பிரயோஜனமான ஆஸ்ரயணத்துக்கு பலம் இருக்கிற படி – இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ -என்னும் படி இருக்கிற பிரபல கர்மங்களை சவாசனமாகப் போக்கி நடுவே நின்று பிராப்தியை விரோதிக்கிற கர்மம் என்னவுமாம்-அழிவின்றி யாக்கம் தருமே-அபுநாவ்ருத்தி லஷண மோஷமான-நிரவதிக சம்பத்தைத் தரும் -அதாவது -கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9–உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –-தர்மத்தினுடைய பரம பிரயோசனமான திருமகளார் -என்றுமாம்-அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்
ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –-புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்-9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று-அதாவது பிணக்கற -என்று தொடங்கி-அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும் பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி – வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் – ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –-பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,-மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா – -ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

(அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம்‌ செய்வதென்று) பிணக்கற வித்யாதி.. “அம்ப கவன்‌ வணக்குடைத்‌ தவநெறி வழி நின்று” (திருவாய்மொழி 1-3-5) என்று பாஹ்யமான ஷட் ஸமயங்களுக்கும்‌ வைதிக ஸமயத்துக்கும்‌ தன்னில் தானுண்டான பிணக்கறும்படி வேத மார்க்கத்தை யதா, நிரூபணம்‌ பண்ணி யருளிச்‌ செய்தவனுமாய்‌ நிரவதிக வாத்ஸல்யத்தை யுடையனாய்‌ ஜ்ஞாநாதி குண பரிபூர்ணனான க்ருஷ்ணன்‌ திருத் தேர்த் தட்டிலே அர்ஜுந வ்யாஜத்தாலே ஸ்ரீ கீதா முகத்ததாலே “பக்த்யா து அநந்யயா ஸுக்ய:” (கீதை 11-54) என்றும்‌ “ மந்மநா பவ மத்பக்தோ மத்‌யாஜீ மாம்‌ நமஸ்குரு” (கீதை 9-34) என்றும்‌ அருளிச்செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-தனக்கு முடிவு இன்றிக்கே -எல்லார்க்கும் காரண பூதனாய் இருக்கும் ஹேய ப்ரத்ய நீகமான ஜ்ஞானாதி குண பூர்ணனாய் இருக்கை-இத்தால் -உதாரனாய் -பிராப்தனாய் -ஆப்தனாய் இருந்தவன் வார்த்தை யாகையாலே விச்வாச நீயம் என்கை –வணக்கத்தை யுடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நிலை நின்று -பக்தி சரீரத்திலே மாம் நமஸ் குரு என்கையாலே –வணக்குடை -என்கிறது-தபஸ் சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று –பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே –யஸ்ய ஜ்ஞான மயந்தப -என்கிற ந்யாயத்தாலே என்னுதல்-இவனுடைய பிரேம மாத்ரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் அவன் அபிப்ராயாத்தாலே யாதல்

பக்த்யா த்வநந்யயா ஸக்ய அஹமேவம்விதோऽர்ஜுந
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-
-11-54-பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:
–9-34-மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,-மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும் தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

“நும்மிருபசை யறுத்து” (திருவாய்மொழி 1-3-7) என்றும்‌ “மனனக மலமறக்‌ கழுவி” (திருவாய்மொழி 1-3-8) என்றும்‌ தேவதாந்தரங்களில்‌ பண்ணுகிற பரத்வ ஸங்கை யற்று இவனோ அவர்களோ ஆஸ்ரயணீயரென்று ஸம்ஸயாக்ராந்தராகாதே வாஸநையோடே விட்டு அவனுடை உணர்வு கொண்டு தத் விஷய ஜ்ஞாநத்தைக்‌ கொண்டு-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-நீங்கள் ஈஸ்வரதயா சங்கி த்த ப்ரஹ்ம ருத்ராதிகள் பக்கல் நசை அறுத்து-நும் இரு பசை-புருஷகதமான ரஜஸ் தமஸ் ஸூ க்களால் வந்த சங்கை ஒழிய பிரமாண கதிகளால் அவர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையும் இல்லை என்கை

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8–ஆஸ்ரயிணன் இவனோ -மற்றை யவனோ மனசில் உண்டான சம்சயத்தை சவாசனாமாகப் போக்கி-அஞ்ஜஸ் சாஸ்த்ரத்தா நச்ச சம்சயாத்மா வி நஸ்யதி

10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று-தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..அதாவது-சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே – சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த – விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி – ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார் முதல் பத்தால் என்கை-

நன்றென நலம்‌ செய்வது” (திருவாய்மொழி 1-3-7) என்று அநந்ய ப்ரயோஜந பக்தியைப்‌ பண்ணுங்கோளென்று. (தாம்‌ மயர்வற மதிநலமருளி பஐநத்திலே சேர்க்கிறார்‌ முதல்பத்தில்‌) ஸர்வேஸ்வரன்‌ தமக்கு மயர்வற மதிநலமருளினாப் போலே தாம்‌ ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே தத்வ ஹித புருஷார்த்த, விஷயமாக அஜ்ஞாநத்தைப்‌ போக்கி ஜ்ஞாந பக்திகளை யுபதேஸித்து பகவத்‌ பஜநத்திலே மூட்டுகிறார்‌

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜன பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-நம்முடை நாளே-க்ரமத்திலே செய்கிறோம் என்று இராதே
சரீரத்தின் உடைய நிலை இல்லாமையைப் புத்தி பண்ணி சடக்கென ஆஸ்ரயியுங்கோள்
நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யஸ்மிதே ரவௌ-ஆத்ம நோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading