ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌-15 –குணாநுபவ பாதம் –(218 – 228)-23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-(218) ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
(2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
(2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
(3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
(4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

15 –குணாநுபவ பாதம் –218 – 228 —மொத்தம் —11– ஸூரணைகள் –இரண்டு அதிகரணங்கள்–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—ஒரே ஸூரணை
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—மொத்தம் –10–ஸூரணைகள்

இப்படி பத்து தோறும் உள்ள அர்த்தங்களை பர உபதேசத்துக்கு உறுப்பாக ஒருங்க விட்டு –
விஸ்தரேண மேல் -யோஜிப்பதாக திரு உள்ளம் பற்றி – பரத்வாதி குண விசிஷ்டனான சர்வேஸ்வரன் தமக்கு பிறப்பித்த தசா விசேஷங்களை பத்து தோறும் வெளி இடுகிறார் என்று ஸங்க்ரஹேண வாக்கியம் அருளிச் செய்கிறார் மேல்–இனி மேல்‌ திருவாய்மொழியில்‌ பத்துப்‌ பத்தாலும்‌ பரத்வாதி, குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ தமக்குப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களை வெளியிடுகிறார்‌ என்கிறார்‌.-

பரத்வ, காரணத்வ, வ்யாபகத்வ, நியந்த்ருத்வ, காருணிகத்வ, ஸரண்யத்வ, ஸக்தத்வ, ஸத்யகாமத்வ, ஆபத்ஸகத்வ, ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன்‌ மயர்வை யறுக்க, தத்த்வவேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த, பலாந்யருசி யொழிந்து, விரக்தி பல ராகம்‌ கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக்‌ கைம்மாறின்றி, க்ருதஜ்ஞதாபல ப்ரதி க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்ஸந பல ப்ராப்தி மரணாவதியாகப்‌ பெற்று, காலாஸத்தி பல திக்குத்‌ துணை கூட்டின தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத் தோறும்‌ வெளியிடுகிறார்‌.-சூரணை -218-

அதாவது-சர்வ ஸ்மாத் பரனாய்–அந்த பரத்வ பிரகாசகாம் படி சர்வ காரண பூதனாய் — லோகத்தில் காரிய காரணங்கள் போல் அன்றிக்கே -உபாதான காரணமும் தானே ஆகையாலே –-கார்ய பூத சமஸ்த வஸ்துக்களுக்கும் வ்யாபகனாய் – அந்த வியாப்தி தானே ஆகாச வ்யாப்தி போல் அன்றிக்கே அந்தர் ஆத்மா ஆகையாலே –சர்வ நியந்தாவாய் – அந்த பரத்வாதிகளைக் கண்டு வெருவ வேண்டாதபடி பரம காருணிகனாய் – இப்படி க்ருபாவான் ஆகையாலே சர்வ சரண்யனாய்– சரண்ய க்ருத்யமான -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -பிராப்தி கரணதுக்கு ஈடாகும் படி –சர்வ சக்தி யுக்தனாய் – அந்த சக்தியாலே நித்யமாக கல்பித்த பத்நீ பரிஜனாதிகளை உடைய வான் ஆகையாலே-சத்ய காமனாய் – அந்த போகங்களில் அந்ய பரனாய் இருந்து விடாதே -பிரளயாத்ய ஆபத்துகளில் உதவி – லீலா விபூதியை ரஷிக்கையாலே –ஆபத் சகனாய் – இப்படி ஆபத் சகன் ஆகையாலே சம்சார தாபத்தரான ஆஸ்ரிதர்க்கு ஆர்த்தி கரனாய் – இப்படி பத்து பத்தாலும் பிரதிபாதகமான பத்து குணத்தோடு கூடி இருக்கிற சர்வேஸ்வரன்-

பரத்வ காரணத்வாதி, ஸர்வ ஸ்மாத் பரனாயிருந்த பரத்வ லக்ஷணம்‌ காரணத்வத்தாலே யாகையாலே ஸர்வ காரண பூதனாயிருந்த காரணத்வம்‌ நாட்டிலுள்ள காரண கார்யங்களைப்‌ போலே ப்ருதக் ஸித்‌தனா யிருக்கை யன்றிக்கே கார்ய வஸ்துக்களிலே வ்யாபித்திருக்கையாலே ஸர்வ வ்யாபகனாய்‌ அந்த வ்யாப்தி தான்‌ ஆகாஸ வயாப்தி போலன்றிக்கே நியந்த்ருத்வேந வாகையாலே ஸர்வ நியந்தாவாய்‌ இப்படி இருக்கிற பரத்வாதிகளைக்‌ கண்டஞ்ச வேண்டாதபடி பரம காருணிகனாய்‌ இப்படிப்‌ பரம காருணிகனாகையாலே ஸர்வ ஸரண்யனாய்‌ இப்படி ஸர்வ ஸண்யனாம் போது அநிஷ்ட நிவ்ருத்தி பூர்கமான இஷ்ட ப்ராப்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்க வேண்டுகையாலே அதுக்கு ஈடான ஸர்வ சக்தித்வத்தை யுடையனாய் அந்தப் ஸக்தி தன்னாலே கற்ப்பிக்கப்பட்ட நித்ய போகத்தை யுடையவனாகையாலே ஸத்யகாமனாய்‌ இப்படி நித்யபோகத்தை யுடையவனாய்க் கொண்டிருக்கையாலே லீலா விபூதியை நோவு பட விட்டு இருக்குமோ என்னில் அதனுடைய பிரளய ஆபத்தில் உதவி ரக்ஷிக்குமவனாகையாலே ஆபத் சகனாய் -இப்படி ஆபத் சகனாகையாலே ஸம்ஸார தாப ஆர்த்தரான ஆஸ்ரிதர்களுடைய ஆர்த்தியைப் போக்குமவனாகையாலே ஆர்த்தி ஹரனாய் -ஆர்த்திஹரனாய்‌ ஆக இப்படி பரத்வ காரணத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்ய காமத்வ ஆபத் சஹத்வ ஆர்த்தி ஹரத்வ விஸிஷ்டன் -இப்படி பத்துப் பத்தாலும் பிரதி பாதிக்கப்பட்ட பரத்வாதிகளான பத்துக் குணங்களுடன் கூடியிருக்கிற சர்வேஸ்வரன்

மயர்வை அறுக்க தத்வ வேதன மறப்பற்று-அதாவது- மயர்வற மதி நலம் அருளினன் -1-1-1–என்கிறபடியே பக்தி ரூபான்ன ஞான பிரதான முகேன அஜ்ஞ்ஞானத்தை ஸ்வாசனமாக போக்க-
அதனால் தத் விஷய ஞானம் ஆகிற தத் வேதனத்தில் – மறப்பேனோ இனி யான் என் மணியை -1-10-10-– என்கிறபடியே -விஸ்ம்ருதி அற்று –ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கரிஷித்து--அதாவது –
அந்த ஞான பலமான மோஷத்தை – நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர்த்து -2-9-1- -என்று –ஸ்வரூப அனுரூபமாக நிஷ்கர்ஷித்து –

(மயர்வை அறுக்க தத்வ வேதந மறப்பற்று )மயர்வற மதிநலம் அருளினன் -மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4-என்றும் சொல்லுகிறபடியே அஜ்ஞாநத்தை ஸ வாஸநமாகப்‌ போக்கி ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்க “மறப்பனோ இனி யான்‌ என்‌ மணியையே” (திருவாய்மொழி 1-10-10) என்று விபூதியிலில்லாதபடியான தத்வ ஜ்ஞாநத்தை யுடையராய்‌ (ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து) அந்த தத்வ ஜ்ஞாந பலமான மோக்ஷத்தை “நின்‌ செம்மா பாத பற்புத்‌ தலை சேர்த்து”” (திருவாய்மொழி 2-9-1) என்று ஸ்வரூபாநுரூபமாக “தனக்கேயாக” (திருவாய்மொழி 2-9-4) என்று நிஷ்கர்ஷித்து-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன் இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே – எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4-மயர்வற-அஞ்ஞானம் சவாசனமாக போம்படி-என் மனத்தே மன்னினான் தன்னை -அஞ்ஞானம் பின்னாட்டாத படி என் ஹிருதயத்திலே வந்து புகுந்தான்-மன்னினான் தன்னை-இனி கந்தவ்ய பூமி இல்லை என்று ஸ்த்தாவர பிரதிஷ்டை போலே இருந்தான்-

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10-
-அறிவுக்கு அடைவு இன்றிக்கே இருக்கிற என் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து மறக்கக் கூடும் என்று பார்த்து அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி என்னுள்ளே ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்தவனை புறம்பு ஒரு அந்நிய பரதை தோற்ற இருக்கிறிலன்-மறப்பனோ இனி –-மறவாமைக்கு பரிஹாரம் அவன் கையிலே உண்டாய் இருக்க இனி மறக்க உபாயம் உண்டோ கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதாப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்

கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1—ப்ராப்யமாய் -அகவாய் சிவந்து -அதுக்கு பரபாகமான புறா வாயில் கறுப்பை உடைத்தாய் -விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் இவற்றாலே நிரதிசய போக்யமான திருவடிகளை – ஆஸ்ரிதற்கு அருமைப் பட வேண்டாத படி செவ்வியதாய் பூஜ்யமான திருவடிகள் என்னவுமாம்-என் தலையிலே கொக்குவாயும் படி கண்ணியும் போலே சேர்த்து அருள வேணும்
சேர்த்து -என்று ல்யப்பு அன்று -விதியாய் -சேர்த்து அருள வேணும் என்கை –ஒல்லை -ஈண்டென-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை- கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது – முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது-தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது-எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே – எனக்கு அசாதாரணமான சிறப்பு -ப்ராப்தனாய் பவ்யனானவனைக் கொள்ளும் சிறப்பு –-ஸ்வரூப ஞானம் உடைய நான் கொள்ளும் சிறப்பு –-சிறப்பு ஆகிறது ஏற்றம் -அதாகிறது புருஷார்த்தம் –-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டை -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து--அதாவது- அந்த மோஷத்துக்கு பலமான கைங்கர்ய ரூப வ்ருத்தியை- வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1–என்று அர்தித்து –

(மோக்ஷ பல விருத்தி செய்ய அர்த்தித்து) அந்த ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்துக்கு பலமான வ்ருத்தியை “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” (திருவாய்மொழி -3-3-1) என்று அர்த்தித்து

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

புருஷார்த்த பல அந்ய ஒழிந்து--அதாவது–-அந்த புருஷார்தத்துக்கு பலம் அந்ய ருசி நிவ்ருத்தி ஆகையாலே தத் பலமாக – ஐம் கருவி கண்ட இன்பம் -சிற்றின்பம் ஒழிந்தேன் -4-9-10–என்று அந்ய புருஷார்தங்களில் ருசியைத் தவிர்ந்து –

(புருஷார்த்த, பலாந்ய ருசியொழிந்து) அந்த புருஷார்த்தத்துக்குப்‌ பலம்‌ தத்‌ வ்யதிரிக்தங்களில்‌ ருசியை “‘ஐங்கருவிகண்ட இன்பம்‌ சிற்றின்பமொழிந்தேன்‌‘ (திருவாய்மொழி 4-9-10) என்று தவிர்ந்து-

கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்;
அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-ரூபாதிகளை க்ரஹிக்கைக்கு கருவியான சஷூராதிகளாலே அனுபவிக்கப் பட்ட ஸூகம்-ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம் கர்மத்தால் சங்குசிதம் ஆகையால் உழக்காலே அளக்குமா போலே இந்த்ரியத்வாரா பிரஸ்ருதமான ஞானத்தால் வந்த ஐஹிக ஸூகம்-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம், சம்சாரிகளுக்கு துர் ஜேயமாய் இந்திரிய ஸூ கத்தில் காட்டிலும் பெருத்து பகவத் கைங்கர்ய ஸூகத்தைப் பற்ற அத்யல்பமான ஆத்ம அனுபவ ஸூகம் இவற்றை ஒழிந்தேன் -விட்டேன்

விரக்தி பல ராகம் கழிய மிக்கு-அதாவது– அந்த இதர விஷய விரக்திக்கு பலமான பகவத் விஷய ராகம் –கழிய மிக்கதோர் காதல்-5-5-10- -என்னும் படி அதிசயித்து 

விரக்தி பல ராகம்‌ கழிய மிக்கு) அந்த விரக்தி விஷய வைராக்‌யத்துக்குப்‌ பலமான பகவத்‌ விஷயத்தில்‌ ராகம்‌ “கழிய மிக்கதோர்‌ காதலளிவள்‌” (திருவாய்மொழி 5-5-10) என்று அதிஸயித்து

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10—அலைவு அற விஞ்சின காதல் என்னுதல் -நாள் கழிய கழிய விஞ்சின காதல் என்னுதல் –சோகச்சகில காலேந கச்ச தாஹ்யபக்கச்சதி -மம்ஸாபச்யதிச் காந்தா மஹான் யஹனி வர்த்ததே –தாயார் நம்பியை நினைக்கவும் விட்டுக் கொடாள்-ஒரு விஷயத்தில் பிரவணையாக காண வல்லனே என்று இருந்தவள் -நெஞ்சையும் காவலிடா நின்றாள் -கிருஷி பண்ணினவள் தானே நிஷேதிக்கிறது -தர்மி லோபம் வரும் அளவாகையாலே

ப்ரேமே பல உபாயத்தே புகுந்து--அதாவது– அந்த நிரதிசய பிரேம பலமான விளம்ப அஷமத்வத்தால் வந்த த்வரையாலே – அலர்மேல் மங்கை உறை மார்பா -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10–என்று உபாய வரணம் பண்ணி –

(ப்ரேம பலோபாயத்தே புகுந்து) இப்படி நிரதியய ப்ரேம பலமான விளம்ப அக்ஷமத்வத்தால்‌ வந்த த்வரையாலே “அலர் மேல்‌ மங்கை உறை மார்பா அடிக்கீழமர்ந்து புகுந்தேனே” (திருவாய்மொழி 6-10-10) என்று உபாய வரணம்‌ பண்ணி-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10—வெய்யிலில் நின்று நிழலிலே ஒதுங்கினார் சொல்லுமா போலே க்ஷண மாத்ரமும் விஸ்லேஷிக்க க்ஷமை அல்லேன் என்று நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையையாய் -பிராட்டியோட்டை பழக்கத்தால் ஆஸ்ரிதரை கைவிடாத ஒப்பில்லாத குண பிரதையை யுடையையாய் -எல்லோரோடும் அவரஜனீயமான சம்பந்தத்தையும் உடையையாய் -உன்னை அறியாதே இருக்கிற எனக்கு குணங்களை அறிவித்து அத்தாலே என்னை நடத்துவதும் செய்து திரு நாட்டில் உள்ளாரும் திருமலையில் எனக்கு ஆஸ்ரயிக்கைக்கு எளிதாம் படி வந்து நின்று அருளினவனே –சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயம் ஒன்றும் இல்லாத நான் அநந்ய பிரயோஜனனாயக் கொண்டு உன் திருவடிகளே உபாயமாகப் பற்றினேன் -புருஷார்த்த சாதனமாக என் தலையில் உள்ள வற்றை எல்லாம் தவிர்ந்து என் தலைக்கும் திருவடிகளுக்கு நடுவு விளக்கு வாய் தெரியாத படி செறிந்து புகுந்தேன் என்றுமாம் –

சாதன பல உபகார கைம்மாறு இன்றி-அதாவது- அந்த சாதன பலமான உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக –-உதவி கைம்மாறு என் ஆர் உயிர் –7-9-10–என்று ஆத்ம சமர்ப்பணம் பண்ணத் தேடி –
அவ் வாத்ம வஸ்து ததீயம் என்று அறிகையாலே – அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -எதுவும் ஓன்று இல்லை செய்வது இங்கும் அங்கும் – என்று பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறி –

(ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி) இப்படி ஸித்‌த ஸாதந பரிக்ரஹம்‌ பண்ணின இவர்‌ அந்த ஸாதந பலமான க்ருதஜ்ஞதையாலே ப்ரத்யுபகாரமாக ஆத்மாவை ஸமர்ப்பிக்கத்‌ தேடி “அதுவுமற்றாங்கவன்‌ தன்னது எதுவுமொன்றுமில்லை செய்வதிங்குமங்கே” (திருவாய்மொழி 7-9-10) என்று அவ்வாத்மா அவனுக்கு அநந்யார்ஹ ஸேஷம்‌ என்றிருக்கையாலே ப்ரத்யுபகாரம்‌ காணாதே தடுமாறி-

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.
–7-9-10-ஆராயாதே கொடுக்கில் கொடுக்கும் அது ஒழிய ஆராய்ந்து பார்க்கில் அதுவும் அவனதாய் இருக்கும்-இப்படி கவி பாடின மஹா உபகாரகனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது -செய்யலாவது எதுவும் ஒன்றும் இல்லை -இங்கு இருந்த நாள் சங்கோசத்தாலே செய்யலாவது ஒன்றும் இல்லை யாகிலும் -சங்கோசம் அற்று முக்தன் ஆனால் பிரத்யுபகாரம் பண்ணத் தட்டில்லையே என்னில்-இங்கும் அங்கே.–இங்கு ஆனால் தேஹாத்ம அபிமான வாசனையால் செய்யலாவது உண்டோ என்று பிரமிக்கலாய் இருக்கும் -சங்கோசம் கழிந்த அளவில் செய்யலாவது ஒன்றும் இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டாம் இறே –ஸ்வேந ரூபேண ஆபிநிஷ்பத்யதே-என்று ஸ்வரூப ஞானம் பிறந்த இடத்தில் ஸ்வா தந்தர்ய கார்யமான ப்ரவர்த்திக்கு இடம் இல்லை –

க்ருத்ஜ்ஞதா பல ப்ரதி க்ருதமானத்தை உணர்ந்து-அதாவது–அந்த க்ருதக்ஜைக்கு பலமான பிரத்யுபகாரமாக – தோள்களை ஆரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன்-8-1-10- -என்ற ப்ரீதியாலே கலங்கி சமர்ப்பித்த ஆத்ம வஸ்துவை –-நின்ற ஒன்றை உணர்ந்தேன் -8-8-4–என்று தேகாதிகளில் விலஷணமாய்-அவனுக்கு பிரகார தயா சேஷமாக கொண்டு -அனந்யார்ஹமாய் இருக்கும் என்று அறிந்து –

(க்ருதஜ்ஞதா பல ப்ரதி க்ருதமா னத்தை உணர்ந்து) அந்த க்ருதஜ்ஞதா பலமான ப்ரத்யுபகாரம்‌ பண்ணத்‌ தேடி ஆத்ம ஸ்வரூபத்தை “நின்றவொன்றை உணர்ந்தேன்‌” (திருவாய்மொழி 8-8-4) என்று தேஹேந்த்‌ரியாதி களில்‌ விலக்ஷணமாய்‌ பகவத நந்யார்ஹ ஸேஷமாயிருக்கிற ஆகாரத்தை அறிந்து

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10—உனக்குத் தரப் புகுகிற வஸ்து என்று மிகவும் கொண்டாடி -உபகார ஸ்ம்ருதியில் உண்டான ஹர்ஷத்தாலே அமூர்த்தமான ஆத்மவஸ்து சாவயம் போலே அணைக்கலாம் படி தடித்தது –-என்னுயிரை – விலக்ஷணமான ஆத்மவஸ்துவை –அறவிலை செய்தனன்-இஷ்ட விநியோக அர்ஹமாம் படி அற விலை செய்து தந்தேன் –தாம் முன்பு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே -என்று சொன்ன வார்த்தையை மறந்து உபகார ஸ்ம்ருதியாலே வந்த ஹர்ஷத்தாலே பிரமித்து சொல்கிறார்
சோதீ-இவர் பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தாலே அவனுக்கு பிறந்த உஜ்ஜ்வல்யம் –இவர் தம்மது அல்லாத ஒன்றை ஹர்ஷத்தாலே கலங்கி கொடுத்தார் -அவன் தன்னது அல்லாத ஒன்றைப் பெற்றானாய் அத்தாலே உஜ்ஜவலன் ஆகா நின்றான் -மயர்வற மதிநலம் அருள பெற்ற இவர் கலங்க சொல்ல வேணுமோ -மயர்வற மதிநலம் அருளினான் தானே கலங்கா நின்றான்-

யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-என் சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வ்யாப்தமான விலக்ஷணமான ஆத்மாவை தனக்கு சரீரமாக யுடையவனை அறியப் பெற்றேன் –நின்ற ஓன்று -என்கிற ஆத்ம ஸ்வரூப வாசியான சப்தம்ஆஸ்ரயமான பிரகாரி பர்யந்த அபிதானம் பண்ணுகிறது -ஸ்வ நிஷ்டம் அல்லாமையாலே பகவத் பர்யந்தமாய் இறே இருப்பது -ஆத்மாவினுடைய போக்யத்தை யாகில் சொல்லுகிறது -காரணத்வம் சொல்லுகிறது என் என்னில் –விமுகரான அவர்களை கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டித்து விட்டான் – ஐஸ்வர்ய காமரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுத்து அதிகாரங்களை நடத்திக் கொடுத்தான் –என்னளவில் இவ்வாத்மா தனக்கு அநந்யார்ஹமாய் போக்யமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் என்கிறார் -நின்றனர் இருந்தனர் பாசுரம் போலே இஸ் சாமானாதி கரண்யத்துக்கு விசேஷண அம்சமான போக்யதையில் தாத்பர்யம் -வையதி கரண்யத்துக்கும் நாட்டார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள் -சாமானாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள் –யாதும் யவர்க்கும் முன்னோனை–என்று தொடங்கி –என்-ஊனில் உயிரில் உணர்வினில்-நின்ற ஒன்றான – -யானும் தானாய் ஒழிந்தானை-யுணர்ந்தேனே-என்று அந்வயம் –

ஆத்ம தர்சன பல ப்ராப்தி மரணா வதியாகப் பெற்று-அதாவது–ஆத்ம தர்சன பலமான –பகவத் பிராப்தியை – மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்கிறபடி சரீர அவசானத்திலே பண்ணித் தருகிறோம் என்று அவன் நாள் இட்டு கொடுக்கப் பெற்று –

(ஆத்மதர்ஸந பலப்ராப்தி மரணாவதி யாகப்‌ பெற்று) அந்த ஆத்ம தர்ஸநத்துக்குப்‌ பலமான பகவத்‌ ப்ராப்தியை “மரணமானால்‌ வைகுந்தம்‌ கொடுக்கும்‌ பிரான்‌” (திருவாய்மொழி 9-10-5) என்கிறபடியே ஸரீராவஸாநத்திலே பண்ணித்‌ தருகிறோம்‌ என்று அவன்‌ நாளிட்டுத் தர பெற்றுடையராய்‌-

சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5-தன் பக்கல் ந்யஸ்த பரனானவன்று தொடங்கி -இவனை ஒழிய தனக்கு செல்லாது இருக்கச் செய்தே –இவனுடைய ருசியை வர்த்தித்து -சரீர அவசானத்திலே பரம பதத்தை கொடுத்த மஹா உபகாரகன் -தன் அழகைக் காட்டி அத்தாலே இவற்றுக்கு ருசி பிறக்கும் அளவும் அவசர பிரதீஷனாய் இருக்கும் படியைச் சொல்கிறது – மரணமானால்-தனக்கு அசத்தி இல்லை -இவனுக்கு கர்த்தவ்யம் இல்லை -இவன் ருசியைக் கடாக்ஷித்து இருக்கிற அத்தனை -இப்பாட்டில் –மரணமானால் -என்றத்தைக் கொண்டே கீழ்ச் சொன்ன நிரூபணம் எல்லாம் –

காலாசத்தி பல கதிக்கு துணை கூட்டின தம் பேற்றை-அதாவது–இப்படி பிராப்தி காலம் அணித்தானதுக்கு பலம் அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்துக்கு ஏறப் போவதாகையாலே -அவ அர்சிராதிகதிக்கு – காள மேகத்தை இன்றி மற்று ஓன்று இல் அம் கதி -என்றும் , ஆத்தன் தாமரை அடி இன்றி மற்று இலம் அரணே -என்று பரம ஆப்தன் ஆனவன் தன்னையே துணையாகக் கூட்டின தம்முடைய பேற்றினை-

(காலாஸத்தி பல கதிக்குத்‌ துணை கூட்டின) அணித்தாக நாளிட்டுக்‌ கொடுக்கையாலே அதுக்கு பலம்‌ அர்ச்சிராதி, மார்க்கத்தாலே போகையிறே, ஆகையாலே அவ் வர்ச்சிராதி கதிக்கு “காளமேகத்தையன்றி மற்றொன்றிலம்‌ கதியே” (திருவாய்மொழி 10-1-1 என்றும்‌ “ஆத்தன்‌ தாமரையடியன்றி மற்றிலம்‌ அரணே” திருவாய்மொழி 10-1-6) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆபத்‌ தநமான அவன்‌ தன்னை இவருக்குத்‌ துணையாக்க அவனைத்‌ துணையாக உடையராய்‌-

தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-10-1-1-வழி போம் போது முன்னே ஒரு காளமேகம் வர்ஷித்திக் கொண்டு போக பின்னே போமா போலே ஸ்ரமஹரமாய் இறே இருப்பது –சர்வகந்த -என்கிற விஷயம் ஆகையால் -அவ்வாஸ நாற்றத்தை அனுபவித்திக் கொண்டு போம் அத்தனை -யன்றி மற்று ஓன்று இலம் கதியே--அவனை ஒழிய வேறு கதி உடையோம் அல்லோம் -வேறு ஒருவரை ரக்ஷகமாக உடையோம் அல்லோம் –

கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-
–திரு மோகூரிலே நின்று அருளின-பரம பந்து -தான் தனக்கு அல்லாத மரண சமயத்தில் –அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி -என்னும் பரம ஆப்த தமன் –தன்னை அஞ்சின போது அவன் பக்கலிலே ந்யஸ்த பரனாம் படி யான ஆப்த தமன் –-தாமரை யடி யன்றி-அநாப்தன் ஆகிலும் விட ஒண்ணாத படி யாய்த்து -திருவடிகளில் போக்யத்தை –மற்று இலம் அரணே–வேறு சிலரை ரக்ஷகமாக யுடையோம் அல்லோம் -போக்யத்தை இல்லை யாகிலும் -அநாப்தன் ஆகிலும் புறம்பு புகல் இல்லை என்கை –

பிறர் அறிய பத்து தோறும் வெளி இடுகிறார் ..-அதாவது- பிறர் அறிந்து வாழும் படி – முதல் பத்தே தொடங்கி பத்துப் பத்தாலும் பிரகாசிப்பித்தது அருளுகிறார் என்றபடி-

(தம்‌ பேற்றைப்‌ பிறரறியப்‌ பத்துத்தோறும்‌ வெளியிடுகிறார்‌) இப்படி ஈஸ்வரன்‌ தமக்குப்‌ பண்ணிக்‌ கொடுத்த தஸைகளைப்‌ பத்துப்‌ பத்தாலும்‌ வெளியிடுகிறார்‌.

இத்தால் பரத்வாதி குண விசிஷ்டனான ஈஸ்வரன் தமக்கு பண்ணிக் கொடுத்த பேறுகளை
பலரும் அறிந்து வாழ வேண்டும் என்று பத்து பத்தாலும் பிரகாசிப்பிக்கிறார் என்று பத்து நிகமனத்துக்கு வாக்யார்த்தம் சொல்லப் பட்டதாய்த்து

மூன்றாம் பிரகரணம் முற்றிற்று.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading