1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 234 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-234 (27)
14 –விபாக, பாதம் -214 – 217—மொத்தம் – 4– –ஸூரணைகள்- இரண்டு அதிகரணங்கள்–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம் –214 —ஒரே -1–ஸூரணை
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217—மொத்தம்—3–ஸூரணைகள்–
—
இனிமேல் இப் பிரபந்தம் பத்து பத்தாக அவதரித்ததின் பிரயோஜனத்தை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் —இனி மேல் “பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம் போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்-
சாது சனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர் அடிமையற வுரிய நோய்களறுக்கும் உடைந்து ஏற்றரும் வானின் தாளின் கீழ் அடிக்கீழின்பக்கதி பயக்கும் ஊடுபுக்கு மூவுலகும் உருகா நிற்பர் என்னும் ஸாம்யத்தாலே வாச்யம் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதினாவிர்ப்பாவம்.–சூரணை -214–
1-சாது சனம்-நண்ணா-அதாவது சாது சனத்தை நலியும் கஞ்சனை சாதிப்பதற்கு–திருவாய்-3-5-5–என்றும் – சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சமஸ்த்தாபனர்த்தாய சம்பவாமி யுகே யுகே –ஸ்ரீ கீதை -4-8- -என்றும் – இத்யாதிப் படியே சாது பரித்ராண துஷ்க்ருத் விநாசார்தமாக அவன் அவதரித்தாப் போலே – இதுவும் – நண்ணா அசுரர் நவிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த-திருவாய்-10-7-5- -என்று
பகவத் பிரதி பஷ பூதரான ஆசூர பிரக்ருதிகள் மண் உண்ணவும் – பகவத் பக்தி பரரான தேவ பிரக்ருதிகள் வாழவும் அவதரித்தது என்றும் —
சாது சனம்) “சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஸாது, பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து–போலே திருவாய்மொழியும் (நண்ணா) “நண்ணா வசுரர் நவி வெய்த நல்லவமரர் பொலி வெய்த எண்ணாதனகள் எண்ணும் நன்முனிவரின்பம் தலைச் சிறப்ப பண்ணார் பாடல்” (திருவாய்மொழி 10-7-5) என்கிறபடியே ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமாக அவதரித்து-
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5—சாது ஜனம் என்று நினைக்கிறது ஸ்ரீ வ ஸூ தேவரையும் தேவகி முதலானாரையும் தான் அவதரிக்க நினைத்த ஸ்தலத்தில் நலிந்து நெடு நாள் சிறை வைத்துப் போந்த கம்சனை நிரசிக்கைக்காக-
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே–4-8–நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—விபரீதஸ்ததா அஸூர -என்கிறபடியே விபரீதரான அ ஸூ ரர்கள் இஸ் ஸம்ருத்தி பொறுக்க மாட்டாமையாலே முடியவும் –கிட்டக் கடவோம் அல்லோம் -என்று இருக்கும் அஸூர வர்க்கம் — நல்ல அமரர் பொலிவு எய்த—விஷ்ணு பக்தி பரோ தேவ -என்கிறபடியே அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்கள் -இதுவே ஜீவனமாக சம்ருத்தமாகவும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றார் இறே
எண்ணா தனகள் எண்ணும் -உபய விபூதி யுக்தனுக்கு இன்னம் விபூதி வேணும் என்றும் -அசங்க்யாத குணகனுக்கு இன்னம் குணம் வேணும் என்றும் மேன் மேலே என எண்ணா நிற்குமவர்கள் –
நன் முனிவர் -ஈஸ்வரன் அடியாக தங்கள் ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் முனிவர் –அத்தலைக்கு ஸம்ருத்தியை எண்ணுமவர்கள் நல் முனிவர் –இன்பம் தலை சிறப்ப-திருவாய் மொழி ஒழிய வேறு ஒரு சம்பத்து வேண்டா -என்று மிகவும் ஹ்ருஷ்டராம் படியாகவும் –பண்ணார் பாடல் இன் கவிகள் -பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –
2-மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவார்-அதாவது-மயர்வற மதி நலம் அருளினன்-திருவாய்-1-1-1–என்று அவன் அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி ஞான பக்திகளைக் கொடுக்குமா போலே –
இதுவும் –-ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசறுக்கும்–திருவாய்-5-2-11 -என்று
மனசுக்கு மாஸான அஞ்ஞானத்தைப் போக்கி –-தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரம்-திருவாய்-2-10-11–என்றும் ,-தூய ஆயிரத்து இப் பத்தால் பத்தராவார் -திருவாய்-6-4-11-என்றும் சொல்லுகிறபடி –ஞான பக்திகளை கொடுக்கும் .என்றும் ..
மயர்வற மதிநலம் அருளினன் (திருவாய்மொழி 1-1-1 என்கிறபடியே அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி ஜ்ஞாந பக்திகளை உண்டாக்கி —மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர்) “ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தை மாசறுக்கும்” (திருவாய்மொழி 5-3-11 என்று நெஞ்சுக்கு மாசான அஜ்ஞானத்தை வாஸநையோடே போக்கி “தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரம்” (திருவாய்மொழி 2-10-11 என்றும் ‘தூயவாயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றிமே” (திருவாய்மொழி 6-4-11) என்றும் சொல்லுகிறபடியே ஜ்ஞாந பக்திகளைக் கொடுத்து
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1–மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி
மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி-அருளினன்
இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே.–5-2-11-ஒலி புகழ் -பகவத் குணங்களை வ்யக்தமாக ப்ரதிபாதித்த இப்பத்து-உள்ளத்தை மாசறுக்குமே.– அந்தகரண தோஷத்தை போக்கும் -அதாகிறது -தேவதாந்தரங்களில் பரத்வ சங்கை -பகவத் பரத்வத்தில் அதி சங்கை -ஸ்ரீ வைஷ்ணவ விஷயத்தில் சஜாதீய புத்தி -அபாகவத சம்ச்லேஷம் -பிரயோஜனாந்தர புத்தி -இப்படிப் பட்ட அந்தகரண தோஷங்களை அறுக்கும் –
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-கேட்டார்க்குத் தம்மிலும் தெளிவைப் பிறக்கும் படி அருளிச் செய்தது – தம்முடைய ஞானத்துக்கு ஆதி ஈஸ்வரன் -இவர்களுக்குத் தாம் அடியாக வந்தது –
அருளே நிரூபகமான அழகர் திருவடிகளிலே சம்சாரத்தை முடித்துச் சேர்க்கும் –
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11–தூய்மை யாவது -ஸ்ரீ -கிருஷ்ண விருத்தாந்தத்தில் கலப்பு அற்று இருக்கை – துவள் -குற்றம் –அதாவது பரத்வத்திலே நெஞ்சு செல்லுகை -அத்தை தவிர்ந்து ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பிரவணராக பெறுவார் -திருவடி ஸ்ரீ ராமாவதாரத்தில் பிரவணராய் இருக்குமா போலே
3-அடிமை அற வுரிய-அதாவது-அடிமை அறக் கொண்டாய்-திருவாய்–4-9-6- -என்று தனக்கு அனந்யார்ஹ சேஷமாக அவன் அங்கீகரிக்குமா போலே –-இதுவும்-உரிய தொண்டர் ஆக்கும் உலகு உண்டாற்கே–திருவாய்-6-9-11 -என்று தத் அனந்யார்ஹ சேஷம் ஆக்கும் என்றும் .
அடிமை யற) அடிமை யறக்கொண்ட (திருவாய்மொழி 4-9-6) என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷமாக அங்கீகரித்து -“உரிய தொண்டராக்கும்” (திருவாய்மொழி 6-9-11) என்கிறபடியே அங்குத்தைக்கு அநந்யார்ஹ ஸேஷமாமாக்கி
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-இத் திருவாய் மொழி தானே சர்வ ரக்ஷகனுக்கு அந்தரங்க பரிகரமாகும்-
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-முன்பு விஷயாந்தர பிரவணனாய்ப் போந்த என்னை அநந்யார்ஹமாக சேஷமாக்கிக் கொண்டாய
4-நோய்கள் அறுக்கும்-உடைந்துஅதாவது–அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே-திருவாய்-9-3-3- -என்கிறபடி- அவன் சம்சார வியாதி பேஷஜமாம் போலே-இதுவும்-உடைந்து நோய்களை ஒடுவிக்கும் –திருவாய்-1-7-11- என்று சாம்சாரிக சகல துக்கங்களையும் உரு மாய்ந்து போம் படி பண்ணும் என்றும் .
நோய்களறுக்கும்) “நோய்களறுக்கும் மருந்தே (திருவாய்மொழி-9-3-3) என்கிறபடியே ஸம்ஸார வ்யாதி பேஷஜமாய்–(உடைந்து) “உடைந்து நோய்களை ஓடுவிக்குமே” (திருவாய்மொழி 1-7-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல துரிதங்களையும் ஸவாஸநமாகப் போக்கி-
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-சம்சார துரித பேஷஜம் –என்னும் இவ்வளவு அறிந்தவர்கள் –சம்சார சர்ப்ப சந்தஷ்ட நஷ்ட சேஷ்டைக பேஷஜம் –அவனுடைய போக்யதையிலே இழிந்திலர்கள் -அவனுடைய நிரபேஷ உபாய பாவத்தில் இழிந்திலர்கள்
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-இப்பத்து தானே நோய்களை உடைந்தோடும் படி பண்ணும்-நோயாகிறது -ஷூ த்ர புருஷார்த்த ருசி உடைந்து ஓடுகை-ஆஸ்ரயாந்தரங்களுக்கும் ஆகாதபடி உரு அழிகை –
5-ஏற்றரும்- வானின் –அதாவது–ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு – திருவாய்-7-6-10–என்கிறபடி-
ஸ்வ யத்னத்தால் பிராபிக்க அரிதான பரம பதத்தை அவன் கொடுக்குமா போலே – இதுவும்-வானின் மீது ஏற்றி அருள் செய்து -திருவாய்-8-4-11-என்று பரமபத பிராப்தியை பண்ணுவிக்கும் என்றும்-
(ஏற்றரும்) “ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு” (திருவாய்மொழி 7-6-10) என்று ஸ்வ யத்நத்தானாலே பெற வரிதாயிருக்கிற பரம பதத்தைக் கொடுத்து–வானின் மீதேற்றி அருள் செய்து” (திருவாய்மொழி 8-4-11 என்று தேஸ விஸேஷ ப்ராப்தியைப் பண்ணுவித்து,
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10–ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத பரம பதத்தை-தன்னாலே பெற்றேன் என்று துணிந்து இருக்கிற நமக்கு அருளும் –
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-அராஜகம் ஆனால் ராஜ புத்ரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே இப்பத்து தானே முந்துற பரமபதத்தை கொடுத்து பின்னை சம்சாரம் ஆகிற மஹா நாடகத்தை அறுத்துக் கொடுக்கும் –
6-தாளின் கீழ் – அடிக் கீழ்--அதாவது–-தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை –திருவாய்-7-5-10–என்கிறபடியே அவன் பாத உபாதானம் போலே திரு அடிக் கீழ் சேர்த்து கொள்ளுமா போலே
இதுவும்-அருளி அடிக் கீழ் இருத்தும்–திருவாய்-8-8-11 -என்று அவன் திரு அடிகளின் கீழே சேர்த்து வைக்கும் என்றும் —
தாளின் கீழ்) “தன் தாளின் கீழ்ச் சேர்த்து” (திருவாய்மொழி 7-5-10) என்கிறபடியே தனக்கு பாதோபதாநமாக இட்டுக் கொண்டு–(அடிக்கீழ்) ‘அடிக்கீழிருத்தும்” (திருவாய்மொழி 8-8-1॥ என்கிறபடியே அவனுக்கு பாதோபதாநமாக்கி-
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10—அதுக்கு மேலே நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி-அவன் செய்யும் சேமத்தை -இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்கும் என்னுதல்-இக்கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூரிகளோடு சேர்த்து யாவதாத்மபாவி யாக்கும் என்னுதல் எண்ணித் தெளிவுற்றே.–இம் மஹா உபகாரத்தை அனுசந்தித்து -இதுவே அர்த்தம் என்று தெளிந்து வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-இப்பத்தை அப்யசித்தவர்களை அதுவே ஹேதுவாக-நமக்கு ஸ்வாமியாய் ஸ் ப்ருஹணீயமான வடிவு அழகை யுடையவன் -தன் கேவல கிருபையால் தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் -இப்பத்தும் கற்றவர்களை ஆழ்வாருக்கு பண்ணின கிருபையை பண்ணிச் சேர்த்துக் கொள்ளும் –
7-இன்பக் கதி- பயக்கும்--அதாவது—-இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனை -திருவாய் -7-5-11-என்றபடி- அவன் தன்னோடு அன்வயித்தார்க்கு தன்னுடைய அனுபவம் ஆகிற நிரதிசய ஆனந்த யுக்தமான பிராப்யத்தை கொடுக்குமா போலே –இதுவும் –-எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும்-திருவாய் -7-9-11-என்று ஸ்வ அன்வித சேதனருக்கு பகவத் அனுபவ ஆனந்தத்தை உண்டாகும் என்றும்
( இன்பக் கதி) “இன்பக் கதி செய்யும்‘ (திருவாய்மொழி 7-5-11 என்று நிரதஸயாநந்தி யாக்கி-(பயக்கும்) “எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே” (திருவாய்மொழி 7-9-1॥ என்கிறபடியே இவனுக்கு ஆநந்தத்தை உண்டாக்கி-
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அத்யவசித்து -பின்னை யுக்தி ஆபாச வசனங்களால் அதுக்கு குஅநந்ய பிரயோஜனராய் நிலை நின்றவர்கள் என்னுதல் – இன்பக்கதி செய்யும்-ஸூ கரூபமான ப்ராப்யத்தைக் கொடுக்கும் –ஏஷ ஹ்யேவ ஆனந்தாதி –
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11--இப்பாவ வ்ருத்தியோடே சொன்ன இப்பத்தும் – சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்-என்று மநோ வாக் காயங்கள் மூன்றும் பாஹ்ய விஷயங்களில் தொற்று அற்று உத்தேச விஷயத்திலே மூன்றும் இறே இவர்க்கு இருப்பது -இப்பாசுரமே அமையும் இது அப்யசித்தவர்களுக்கு -அவர்களை பார்த்து அன்று இறே ஈஸ்வரன் அங்கீ கரிப்பது -இவர் பாசுரம் என்று இவரை பார்த்து இறே-எங்ஙனே சொல்லிலும் -அஹ்ருதயமாகவுமாம்–சஹ்ருதயமாகவுமாம் -பழத்தில் வ்யபிசரியாது என்கை-இன்பம் பயக்குமே.–ஆனந்தத்தை உண்டாக்கும் -ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரவதிகமான ஆனந்தத்தை விளைக்கும் –
8-ஊடு புக்கு -மூஉலகும்- உருகா நிற்பர்-அதாவது–ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தன்னை–திருவாய் -5-10-10—என்கிறபடி–அவன் தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாம்படி வுருக்குமா போலே –-இதுவும் –-ஒன்பதோடு ஒன்றுக்கு மூ உலகும் உருகும்–திருவாய்-9-5-11- -என்றும்-ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்-திருவாய்- -6-8-11–என்று
சொல்லுகிறபடி -தன்னை அனுபவிக்க இழிந்தாரை த்ரவ த்ரவ்யமாக்கும் என்றும் —
(ஊடு புக்கு) “எடுபுக்கெனதாவியை உருக்கி உண்டிடுகின்ற (திருவாய்மொழி 5-10-10) என்று தன்னுடைய போக்யதாதிஸயத்தாலே சேதநனை த்ரவ த்ரவ்யமாம்படி உருக்குமாபோலே திருவாய்மொழியும்-(மூவுலகும் உருகா நிற்பர்) ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகும் உருகுமே” (திருவாய்மொழி 9-5-11 என்றும் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர்” (திருவாய்மொழி 6-8-11 என்றும் சொல்லுகிறபடியே தன்னுடைய போக்யதையாலே சேதநரைத் த்ரவ த்ரவ்யமாக்கி-
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-ஒன்பது பாட்டிலும் உண்டான வியஸனம் ஸூகம் என்னலாம் படி வியஸனம் மிக்கு இருந்த பத்தாம் பாட்டு -இவற்றை யுடைய இத்திருவாய் மொழி
-ஸ்மாரக பதார்த்தங்களாலே ஜீவனத்தில் நசையோடே நோவு பட்ட ஒன்பது பாட்டோடு ஜீவனத்தில் நசை அற்ற ஒரு பாட்டுக்கும் விசேஷஞ்ஞரோடு அவிசேஷஞ்ஞரோடு வாசி இன்றிக்கே சிதிலராவார் –
கீழே நம் ஆர்த்த த்வனி கேட்டு நாட்டுக்கு நோவு பட வேண்டா -என்றார் -பின்னையும் நாட்டுக்கு ஸைதில்யமே சேஷித்து விட்டது –
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-ஊற்று வாயில் சிறு மணல் போலே நீராய் சிதிலர் ஆவார் -நம் தசையை வாய் விட்டு நாட்டை அழித்தோம் ஆகாதே என்கிறார் -இத்தை பலமாகச் சொல்லிற்று -பகவத் பிரவணரைக் கண்டு ஈடுபடுகை நாட்டார்க்கு ப்ராப்யம் என்கைக்காக
என்னும் சாம்யத்யாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப் பத்தான இதின் ஆவிர்பாவம் — அதாவது—இப்படி அவனோடு சாம்யம் உடைத்தாகையாலே
வாச்யனான -சர்வேஸ்வரனுடைய – பத்தினாய தோற்றம் -திருச்சந்த-79-என்கிற பத்து அவதாரம் போலே – தோற்றங்கள் ஆயிரம் -திருவாய்-6-8-11-என்கிற இதனுடைய பத்து பத்தான ஆவிர்பாவம் என்கை .-இத்தால் வாச்யனான ஈச்வரனோடு பலபடியாலும் சாம்யத்தை உடைத்தது ஆகையாலே
அவன் தான் லோக ரஷண அர்த்தமாக பத்து அவதாரமாய் அவதரித்தது போலே இதுவும் லோக ரஷண அர்த்தமாக பத்துப் பத்தாக அவதரித்தது என்றது ஆய்த்து-
இப்படி ஸர்வேஸ்வரனோடு ஸாம்யத்தை உடைத்தாகையாலே (வாஸ்யன் பத்தினாய தோற்றம் போலே ) தனக்கு வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய பத்தினாய தோற்றம் திருச்சந்த -79)என்கிற பத்து அவதாரமே போலே ‘தோற்றங்களாயிரம் (திருவாய்மொழி 6-8-11) என்று இத்திருவாய்மொழியின் பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமுமென்கிறார் –
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-தச ப்ராதுர்பாவத்தாலே ஆவிர்பவித்து
சம்சாரிகள் பண்ணும் பரிபவதை பொறுத்து ரஷிக்கும் பூர்வஜன் பக்கலிலே-தோற்றம் ஆவது -அதீந்த்ரியனான தன்னை சஷூர் விஷயம் ஆக்குகை
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-நிதியினுடைய தோற்றம் போலே இருக்கை -ஆவிர்ப்பவித்த ஆயிரம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply