(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
—
ஆக சர்வேஸ்வரன் தன் கிருபையால் சம்சாரி சேதனரை உஜ்ஜீவிப்பதற்க்காக
சாஸ்திரத்தையும் சாஸ்திர தாத் பர்யமான திரு மந்தரத்தையும் வெளி இட்டான் என்றது கீழ் -இவை இரண்டையும் வெளி இட்ட பிரகாரம் என் ? அவற்றுக்கு விஷயம் எது ? என்னும் ஆகாங்ஷையிலே தத் பிரகாரங்களையும் தோற்றுவித்துக் கொண்டு விஷயங்களையும் சொல்லுகிறது மேல்-(ஸாஸ்த்ரத்தையும் ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரத்தையும் வெளியிட்டருளினான் என்று நின்றது கீழ் ; அவற்றை வெளியிட்ட ப்ரகாரமென் ; அவற்றுக்கு விஷயமேது” என்கிற சங்கையில் சொல்லுகிறது)
முனிவரை இடுக்கியும்–முந்நீர் வண்ணனாயும்-வெளி இட்ட சாஸ்திர தாத் பர்யங்களுக்கு
விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம்-சூரணை 17–
அதாவது –இருள்கள் கடியும் முனிவர்-திருவாய் -10-7-7– -என்கிற ஸ்ம்ருதி கர்த்தாக்களான
(இருள்கள் கடியும் முனிவர் -ஸ்ருதி–ஸ்மர்த்தா -ஸ்மர்த்தர்-மனன சீலர் -ராம ஷேம மனன சீலத்வம் பரத்வாஜருக்கு -ஜகத் ரக்ஷண சிந்தை முனியே -அவனையே சொல்லுவார் ) வியாஸாதி ரிஷிகளை கிருஷ்ணத் த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் பிரபும் கோஹ்யன்ய புண்டரீகாஷாத் மகா பாரத க்ருத் பவேத் –என்கிற படியே-தானாகச் சொல்லலாம் படி அந்தர்யாமியாய் எடுத்து நின்று தன் முகேன வெளி இட்ட சாஸ்தரத்துக்கு சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-வதரி யாஸ்ரமத்துள்ளானை கரும் கடல் முந்நீர் வண்ணனை -என்கிற படியே-ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட-சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை–இத்தால் சாஸ்த்ரத்தில் தேஹத்திலே நோக்கு-தாத் பர்யத்திலே ஸ்வரூபத்திலே நோக்கு -என்றது ஆய்த்து-
இருள்கள் கடியும் முனிவரும்” (திருவாய். 10 – 7 – 7) என்கிற ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி,களுக்கு க்ருஷ்ண த்வைபாயநம் வ்யாஸம் வித்தி, நாராயணம் ப்ரபு,ம் | கோஹ் யந்ய: புண்ட,ரீகாஷாந் மஹா பாரத க்ருத்,பவேத்”’ (வி.பு. 3 – 4 – 5) என்கிறபடியே அந்தர்யாமியாய் நின்று தந் முகேந ப்ரவர்த்திப்பித்த ஸாஸ்த்ரங்களுக்கு விஷயம் இவர்களுடைய தேஹ விஸிஷ்ட ஸ்வரூபம் என்றும், *“கருங்கடல் முந்நீர்வண்ணன்”’ (திருமொழி 1 – 4 10) என்கிறபடியே ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே ஸ்வேந ரூபேண நின்று வெளியிட்ட தாத்பர்யமான திருமந்த்ரத்துக்கு விஷயம் சேதநருடைய நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம் என்றும் சொல்லப்பட்டது ; ஸாஸ்த்ரத்துக்கு தேஹத்திலே நோக்கு; தாத்பர்யத்துக்கு ஸ்வரூபத்திலே நோக்கு என்றதாய்த்து –
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-அஞ்ஞான அந்தகாரத்தை வாசனையோடு போக்கும் ஸ்மர்த்தாக்களும் –இவர்கள் எல்லாரும் கூட ஏத்தும் சர்வேஸ்வரனுடைய திருமலை –
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-முந்நீரான கரும் கடல் –
ஆற்று நீர் -ஊற்று நீர் -வேற்று நீர் -வர்ஜ ஜலமான –மூன்று வகை நீரை உடைத்தாய் கறுத்த நிறத்தை உடைய கடல் போலே இருக்கிற நிறத்தை உடையவனை அனுசந்தித்து ஆழ்வார் அருளிச் செய்த பாட்டுக்கள்-
—
ஏவம் பூதமான இவை இரண்டும் சர்வ அதிகாரமோ அதிகிருதா அதிகாரமோ என்ன சொல்லுகிறது மேல்-(இவை யிரண்டும் ஸர்வாதிகாரமா யிருக்குமோ? அதி க்ருதாதிகாரமா யிருக்குமோ? என்கிற சங்கையிலே சொல்லுகிறது)
தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா யோக்யதை வேணும் மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும் நமரும் என்னும் படி சர்வரும் அதிகாரிகள்-சூரணை -18-
அதாவது விசிஷ்ட வேஷம் விஷயம் ஆகையாலே ஆந்தரமான ஸ்வரூபத்தில் ஊற்றம் இன்றியே
மேல் எழ தேஹத்திலே நோக்காய் -(மேம் பொருள் போக விட்டு உண்டே )நடக்கிற சாஸ்தரத்துக்கு
பழுதிலா ஒழுகலாறு –என்ற படி நெடுக போகிற வம்ச பிரவாகத்திலே உத்பத்தியிலே ஆதல் ஆசாரத்திலே ஆதல் ஒரு பழுது அற்று இருக்கிற யோக்யதை வேணும்-—கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்-திருவாய் -10-5-1- என்றும்-ஸ்ரத்தைவ காரணம் பும்ஸாம் அஷ்டாஷா பரிக்ரஹே என்றும் சொல்லுகிற படியே (ஆசை உடையார்க்கு எல்லாம் இத்தையே தமிழ் படுத்தி கிருபா மாத்ர பிரசன்னாச்சார்யார் -நம் ஸ்வாமி ) ஸ்ரத்தா மாத்திரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்சி யான தாத் பர்யத்துக்கு நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாரயணமே –என்று சொல்லும் படி யோக்ய அயோக்ய விபாகமற சர்வரும் அதிகாரிகள் என்கை—இத்தால் சாஸ்திர தாத் பர்யங்களின் அதிக்ருதாதிகாரத்வ சர்வாதிகாரத்வங்களை தத் ஹேது சஹிதமாகச் சொல்லிற்று ஆயிற்று-
தேஹ விஸிஷ்ட ஸ்வரூபத்தை விஷயமாக உடைத்தாகையாலே தேஹாவஸாநமே தனக்கு அவஸாநமான ஸாஸ்த்ரத்துக்கு ”பழுதிலா ஒழுகலாற்றுப் பல சதுப் பேதிமார்கள்” ் (திருமாலை 42) என்கிறபடியே அதிகாரி ஸம்பத்தி ஸாபேக்ஷமாயிருக்கும். “மன முடையீர்” என்கையாலே * “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்”” (திருவாய். 10 – 8 – 1) என்றும், “ந தீர்த்தம் ந ச நக்ஷத்ரம் ந க்ரஹா ந ச சந்த்ரமா: ஸ்ரத்தைவ காரணம் ந்ரூணாம் அஷ்டாக்ஷர பரிக்ரஹே”” (பாஞ்சராத்ரே) என்றும் சொல்லுகிறபடியே ஸ்ரத்தா மாத்ரமே அமைந்த ஸ்வரூப ஸ்பர்ஸியான தாத்பர்யத்துக்கு “நானும் சொன்னேன் நமருமுரைமின் நமோ நாராயணமே ‘ (திருமொழி 6 – 10 – 6) என்கையாலே அதிகாரி நியமமில்லை. இத்தால் ஸாஸ்த்ரம் அதி க்ருதாதிகாரமா யிருக்கும் ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம் ஸர்வாதிகாரமென்றதாய்த்து –
–——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply