அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
————————-
ஸித்த த்விகம் பார்த்துள்ளோம் -ஸாத்ய த்விகம் பார்க்கப் போகிறோம் –
முதல் அதிகரணம் -ததந்திர பிரதிபத்த்ய அதிகரணம் -7 ஸூத்ரங்கள் –
ஜீவன் இந்த உடலை விட்டு கிளம்பும் பொழுது
பஞ்ச பூதங்களுடன் கூடிய சூஷ்ம ரூபத்துடன் செல்வதை சாந்தோக்யம் -கருத்து நிரூபிக்கப்படுகிறது –
இரண்டாவது அதிகரணம் –க்ருதாத்ய யாதிகரணம்–4 ஸூத்ரங்கள்-
அனுபவிக்க வேண்டிய எஞ்சிய கர்ம பலன்களுடன் ஸ்வர்க்கத்தில் இருந்து ஜீவன் வருகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது-
மூன்றாம் அதிகரணம் –அநிஷ்டாதிகார்யாதிகரணம்-10- ஸூத்ரங்கள்–
பாபம் செய்தவர்கள் சந்திர மண்டலம் செல்வது இல்லை என்பது நிரூபிக்கப் படுகிறது-
நான்காவது அதிகரணம் –தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணம் – 1 ஸூத்ரம்-
மேலே கிளம்பிய ஜீவன் ஆகாசம் போன்றவற்றுடன் தொடர்பு மட்டுமே அடைகின்றான் என்று நிரூபிக்கப் படுகிறது
ஐந்தாம் அதிகரணம் -நாதிசிராதி கரணம்- 1 ஸூத்ரம்-
ஆகாசம் போன்றவற்றில் ஜீவன் சிறிது காலமே தங்கி விட்டுக் கிளம்புகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
ஆறாவது அதிகரணம் -அந்யா திஷ்டிதாதி கரணம் -4-ஸூத்ரங்கள்–
மற்ற ஜீவன்களுடன் தொடர்பு மட்டும் கொள்கின்றான் என்கிறதாயிற்று-
–
3-1-1-தத₃ந்தரப்ரதிபத்த்யதி₄கரணம் –மூன்றாம் அத்யாயத்தின் அறிமுகம் -ஸங்கதி –
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலில் 4 அத்யாயங்கள் உள்ளன –ஸமந்வய, அவிரோத, ஸாதந, பல அத்யாயங்கள் என்று. அதில் முதல் இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸித்₃த₄ த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன, ஸித்தமான (தயாரான) பொருளான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையும், அவர் தான் ஜகத் காரணம் என்பதையும், மோக்ஷம் அடைவதற்கு அவரைத் தான் உபாஸிக்க வேண்டும் என்பதையும் சொல்வதால். இனி மேலுள்ள இரண்டு அத்யாயங்களும் சேர்த்து ஸாத்₄ய த்₃விகம் என்று அழைக்கப் படுகின்றன–ஸாதிக்கப் பட வேண்டிய(செய்யப் பட வேண்டிய) பொருள்களைப் பற்றிப் பேசுகிற படியால். அதில் மூன்றாம் அத்யாயத்தில் மோக்ஷம் அடைவதற்கான உபாயமான (வழியான) உபாஸநம் என்பதைப் பற்றிஆராய்கிறார் வ்யாஸர். நான்காம் அத்யாயத்தில் அடையப்படுகிற மோக்ஷத்தின் தன்மைகளை ஆராய்கிறார்–
இந்த மூன்றாம் அத்யாயத்தில் 4 பாதங்கள் உள்ளன–வைராக்₃ய பாதம், உப₄யலிங்க₃ பாதம், குண உப ஸம்ஹார பாதம் மற்றும் அங்க₃பாதம். இந்த நான்கு பாதங்களின் பொருளையும் சுருக்கமாக ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகார ஸாரா வலீ என்னும் நூலில் காட்டுகிறார்
பாதா₃ப்₄யாம் அத்ர பூர்வம் ஜநயதி ப₄விநாம் ப்₃ரஹ்ம வித்₃யாதி₄காரம்
பஶ்சாத் தேஷாம் உபா₄ப்₄யாம் வத₃தி ப₃ஹுவித₄தாம் தாம் அசேஷ꞉ ஸஹாங்கை ₃꞉ ।
ஐஶ்வர்யாதௌ விரக்திம் நிரவதி₄விப₄வே புருஷே சாபி₄லாஷம்
வித்₃யா பே₄தா₃வலம்ப₃ம் தது₃பகரண மப்யாஹ பாதை ₃꞉ க்ரமேண ॥
உபாஸநம் செய்வதற்கு அடிப்படைத் தகுதி–உலக விஷயங்களில் வைராக்யம் (பற்றின்மை ) மற்றும் பரமாத்மாவிடம் மிகுந்த ஆசை (பக்தி). இவை இரண்டையும் ஏற்படுத்துவதற்காகத் தான் முதல் பாதத்தில் ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மா வெவ்வேறு நிலைகளில் படக் கூடிய துன்பங்களையும், இரண்டாவது பாதத்தில் பகவானுடைய பெருமைகளையும் வ்யாஸர் கூறுகிறார். அதற்கு மேல் மூன்றாவது பாதத்தில் உபாஸநம் செய்வதில் உள்ள வெவ்வேறு முறைகளையும் நான்காவது பாதத்தில் உபாஸநத்துக்குத் தேவையான அங்கங்களையும் விவரிக்கிறார்.
3-1-1-தத₃ந்தர ப்ரதிபத்த் யதி₄கரணம் -அதிகரணத்தின் பின்புலம் ––இந்த அதிகரணத்தில் ஓர் ஆத்மா ஓர் உடலை விட்டு, வேறொரு உடலுக்குச் செல்லும் நிலம் ஆராயப் படுகிறது.
ஸந்தேஹம்– உடல் என்பது ஐம் பூதங்களால் ஆக்கப் பட்டது. பூத ஸூக்ஷ்மங்கள் அதாவது ஐம் பூதங்களில் நுண்ணிய பகுதிகளால் தான் அது உண்டாக்கப் பட வேண்டும். எனவே , ஜீவாத்மா ஓருடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களைத் தன்னோடு எடுத்துச் செல்கிறாரா? அல்லவா? என்பது தான் இந்த அதிகரணத்தில் உள்ள ஸந்தேஹம்-
பூர்வ பக்ஷம்– பூத ஸூக்ஷ்மங்கள் இல்லாமல் தனியாகத் தான் செல்கிறார் ஜீவாத்மா. ஏனெனில், அவர் எந்த இடத்தில் போய் சேருகிறாரோ , அங்கேயே பூத ஸூக்ஷ்மங்கள் இருக்கப் போகின்றன, அவற்றைக் கொண்டே புது உடலை உண்டாக்கி விடலாம்.அதனால் முன் உடலிலிருந்து பூத ஸூக்ஷ்மங்களைச் சுமந்து செல்லத் தேவை யில்லை–
ஸித்தாந்தம்– ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் செல்கிறார் என்று இந்த அதிகரணத்தில்உள்ள 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் நிரூபிக்கிறார்.
1–தத₃ந்தர ப்ரதி பத்தௌ ரம்ஹதி ஸம் பரிஷ்வக்த: ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம்(நிரூபணாப்யாம்
)
தத₃ந்தர ப்ரதி பத்ததௌ–வெவ்வேறு உடலை அடையும் பொழுது–தத் என்றால்’அது’ என்று பொருள்.
முன் அதிகரணத்தில் ’ஸம்ஜ்ஞா மூர்தி க்லிப்தி’ (நாம ரூப வியாக்ரணம் -பெயர் உருவம் கொடுத்தல் )என்ற ஸூத்ரத்தில் மூர்த்தி என்ற சொல்லால் ’உடல்’ குறிக்கப்பட்டது. அதைத் தான் இவ் விடத்தில் அது என்று நினைவு கூறுகிறார். ஆகவே , தத்= உடல்; ததந்தரம்= வெவ்வேறு உடல்; பிரதிபத்தி= அடைதல். அப்பொழுது–
ஸம் பரிஷ்வக்த: – பூத ஸூக்ஷ்மங்களை (அணைத்துக் கொண்டு )அழைத்துக் கொண்டு (எடுத்துக் கொண்டு) ரம்ஹதி–(ஜீவாத்மா) செல்கிறார்
ப்ரச்ந ப்ரதிவசநாப்₄யாம் – கேள்வி பதில்களால் (நிரூபணாப்யாம்
)-
பஞ்ச அக்நி வித்யை – சாந்தோக்ய உபநிஷத்தின் 5 ஆவது அத்யாயத்தில் பஞ்சோக்₃நி வித்₃யா என்பது வருணிக்கப் பட்டுள்ளது. அதிலிருக்கும் கேள்வி பதில்களைத் தான் இங்கு வ்யாஸர் குறிப்பிடுகிறார்
ச்வேத கேது என்பவன் (ஆருணி என்றும் இவர் பெயர் ) பாஞ்சால தேசத்து அரசனான ப்ரவாஹணனுக்குச் சில வைதிக கர்மங்களைச் செய்து வைப்பதற்காகச் சென்ற போது அவர் இவனிடம் 5 கேள்விகள் கேட்டார். அவனுக்குப் பதில் தெரியாததால் தன் தந்தையிடம் (கௌதமர் இவர் தகப்பனார் )வந்து அவன் கேட்க, அவரும் பதில் தெரியாமல் ப்ரவாஹணரிடமே சென்று விடை கேட்டார். அப்போது பஞ்சோக்₃நி வித்₃யா என்பதை ப்ரவாஹணர் உபதேசித்தார். அந்த ஐந்து கேள்விகள்-
1-வைதிக கர்மங்களைச் செய்பவர்கள் எந்தப் பாதையால் ஸ்வர்கத்தை அடைகிறார்கள்?
2-அவர்கள் எந்தப் பாதையால் திரும்பவும் பூ லோகத்தில் வந்து பிறக்கிறார்கள்?
3–தேவ யானம் பித்ரு யானம் என்ற இரண்டு பாதைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
4-யாரெல்லாம் ஸ்வர்க லோகத்தை அடைவதில்லை ?
5–ஜலமானது ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி ’மனிதன்’ என்றழைக்கப்படும் உடலாக மாறுகிறது?
இதில் ஐந்தாவது கேள்வியும் அதற்கான பதிலும் தான் நமக்கு இப்போது தேவையானவை
அக்நி என்ற உருவகப் படுத்தப்பட்ட ஐந்து பொருள்களில் ஜலத்தை ஆஹுதியாகக் கொடுக்கக் கொடுக்க அது பல மாறுபாடுகளை அடைந்து இறுதியில் மனித உடலான கர்பமாக மாறுகிறது என்று ப்ரவாஹணர் பதில் கூறினார். இது தான் பஞ்சோக்₃நி வித்₃யா என்று அழைக்கப் படுகிறது. இறுதியில் மனித உடல் உண்டாகிற படியால், அதற்குத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு தான் ஜீவாத்மா இந்த ஐந்து நிலைகளையும் கடக்கிறார் என்று கேள்வி-பதில்களைக் கொண்டு நாம் அறிய முடிகிறது.
ஹோமப் பொருள் ஸ்ரத்தா-(பூத சூஷ்மங்களுடன் கூடிய ஜீவாத்மா)-அக்னி -ஸ்வர்க்கம் -மாற்றம் -ஸோமராஜா -அழகிய உடல்
ஹோமப் பொருள் -சோமராஜா -அக்னி -மேகம் -மாற்றம் -மழை –
ஹோமப் பொருள் -மழை -அக்னி -பூமி – -மாற்றம் -அன்னம் -சோறு
ஹோமப் பொருள் –அன்னம் -அக்னி -ஆண் -மாற்றம் -ரேதஸ் விந்து –
ஹோமப் பொருள் -ரேதஸ் -அக்னி -பெண் -மாற்றம் -கர்ப்பம் -மனித உடல் –
ஜீவாத்மா அடுத்த உடலுக்குப் பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறாா்–புலன்களும் பூத ஸூக்ஷ்மங்களும் செல்கின்றன -ஒரு ஜீவாத்மா ஓரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் போது, அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துக் கொண்டு செல்கிறாரா? இல்லையா ? என்கிற ஆராய்ச்சி செய்யப் படுகிறது. சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள பஞ்ச அக்நி வித்யையில் ப்ரவாஹணர் ஸ்வேத கேதுவுக்கும் அவருடைய தந்தைக்கும் உபதேசிக்கும் போது, இந்த உடலிலிருந்து பிரிந்த ஜீவாத்மா ஸ்வர்கம்,மேகம், பூமி, ஆண், பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டதும் மனித உடலை அடைகிறார் என்று கூறுவதால், கண்டிப்பாக அந்த உடலை உண்டாக்கத் தேவையான பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் அவர் சென்றிருக்க வேண்டும் என்று முதல் ஸூத்ரத்தில் வ்யாஸர் நிரூபித்தார். இனி மேலுள்ள ஸூத்ரங்களைப் பார்ப்போம்.
பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரவாஹணரின் கேள்வியில் “ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனிதனாக மாறுகிறது என்று தெரியுமா?” என்று தானே உள்ளது. ஜலத்தை மட்டும் தானே குறிப்பிட்டு்கிறார். பிறகு எப்படி எல்லாப் பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துச் செல்வதாகக் கொள்ள முடியும்?
வ்யாஸரின் பதில் அடுத்த ஸூத்ரத்தில்–2-திரியாத் மகத் வாத் து பூ₄யஸ்த்வாத்–“மூன்றின் வடிவமானதால்; அதிகமானதால்”
முன் அதிகரணத்தில் சொன்ன படிக்கு, ஐம்பூதங்களையும் படைத்த பிறகு பகவான் அவற்றைக் கலந்து பஞ்சீகரணம் என்ற செயலைச் செய்கிறார். அதனால் ஒவ்வொரு பூதமுமே ஐம் பூதங்களின் வடிவமாகத் தான் உள்ளது. எனவே இங்கு ஜலம் என்று குறிப்பிடப் பட்டதும் ஐம் பூதங்களின் பூத ஸூக்ஷ்மங்களும் தான்.(பஞ்சீகரணத்துக்கு உப லக்ஷணம் -பஞ்சாத்மகத்வாத் என்றே கொள்ள வேண்டும்)
-பிறகு ஏன் அதை மற்ற பெயர்களால் குறிப்பிடாமல் ’ஜலம்’ என்று குறிப்பிடுகிறார்? அதிகமான பகுதி ஜலமான படியால். உண்டாக்கப்படும் மனித உடலிலும் ஜலம் தானே பெரும்பாலும் உள்ளது–
3– ப்ராண க₃தே : ச – “ப்ராணன்கள் (புலன்கள்) செல்வதாலும்”;
இதில் வேறொரு காரணம் காட்டுகிறார். -ஜீவன் உடலிலிருந்து புறப்படும் பொழுது மூச்சுக் காற்றையும் புலன்களையும் எடுத்துச் செல்கிறார் எனப்படுகிறது. புலன்களை மட்டும் எடுத்துச் செல்ல இயலாதாகையால், அவற்றுக்கு இருப்பிடமான பூத ஸூக்ஷ்மங்களையும் சேர்த்துத் தான் எடுத்துச் செல்ல வேண்டும், காற்று புஷ்பத்தின் துகள் களோடு மணத்தை எடுத்துச் செல்வது போல்.(கீதையிலும் இதே போல் அருளிச் செய்துள்ளார்)
ஸ்ரீ கீதை 15-7/8–மன ஷஷ்டானி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தானி கர்ஷதி சரீரம் யத் அவாப் நோதி யத் ச அபி உக்த்க்ரமாதீச்வர க்ரஹீத்வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – என்று காற்று மலர்களில் உள்ள நறு மணத்தை கவர்ந்து செல்வது போலே ஜீவன் அனைத்தையும் எடுத்துச் செல்கிறான்-இவற்றுக்கு ஆஸ்ரயமாக பூத ஸூஷ்மங்களும் கூட செல்கின்றன –
புலன்கள் அழிகின்றனவா? செல்கின்றனவா?
கேள்வி–வேதத்தில், ஒருவன் மரணமடையும் பொழுது புலன்கள் அழிந்து போகின்றன என்று தான் சொல்லப் படுகிறது. (யத்ர அஸ்ய புருஷஸ்ய ம்ருதஸ்ய அக்₃நிம் வாக்அப்யேதி, வாதம் ப்ராண :, சஷுஸ் : ஆதி₃த்யம்) அதாவது“ஒரு மனிதன் மரணம் அடையும் பொழுது அவனுடைய வாக்(பேச்சுப் புலன்) நெருப்பில் லயம் அடைகிறது (அழிந்து போகிறது), மூச்சு காற்றில் சேர்கிறது, கண் ஸூர்யனிடம் லயம் அடைகிறது” என்றுள்ளது. எனவே , ஜீவாத்மா வேறொரு உடலுக்குச் செல்லும் பொழுது புலன்களையும் எடுத்துச் செல்கிறார் என்பது தவறு.
வ்யாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்
4–அக்₃ந்யாதி₃ க₃தி ச்ருதே : இதி சேத் ந பா₄க்தத்வாத்
அக்₃ந்யாதி₃க₃திச்ருதே : – புலன்கள் அக்நி முதலானவற்றில் லயம் அடைவதாக வேதம் சொல்வதால்
இதி சேத் ந–என்று நீங்கள் கூ₂றினால், அது தவறானது
பா₄க்தத்வாத்– இந்த வாக்யம் நேரடிப் பொருளைக் குறிக்காமல் வேறொரு அர்த்தத்தில் சொல்லப் பட்டு்ள்ளபடியால்.
இதே இடத்தில் (ஓஷதீ₄: லோமாநி, வநஸ்பதீந் கேசா 🙂 அதாவது “உடலிலிருக்கும் முடிகள் செடி கொடிகளைச் சென்றடைகிறது, தலையிலிருக்கும் முடிகள் மரங்களில் லயம் அடைகின்றன” என்றும் கூறப்பட்டு்ள்ளது. அது கண்டிப்பாக நேரடியான பொருளில் கூறப் பட்டிருக்க முடியாது, அப்படி எதுவும் நடக்காததால். எனவே , இந்தப் பகுதி முழுவதுமே அதி₄ஷ்டா₂த்ரு தே₃வதா அபக்ரமணம் என்ற பொருளில் தான் உள்ளது. -அதாவது, உடலிலிருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வலுவூட்டக் கூடிய தெய்வங்கள் உள்ளார்கள் . நெருப்புக்கான கடவுள் பேச்சுப் புலனையும், காற்றுத் தேவதை மூச்சுக் காற்றையும் , ஸூர்யனுக்கான தேவதை கண்ணையும், செடி கொடிகளின் தேவதை உடல் முடிகளையும், மரங்களுக்கான அபிமாநிநீ தேவதை தலை முடியையும் பாதுகாக்கிறார்கள் ஒருவன் மரணமணடயும் போது, பேச்சுப் புலனை இதுவரை காத்து வந்த தெய்வம், இனி அதற்குத் தேவை இல்லாதலால், அக்நிக்கு மட்டும் தெய்வமாக இருக்கும். அதைத் தான்“பேச்சுப் புலன் அக்நியில் சேர்கிறது” என்று வேதம் கூறுகிறது. அதே போல் தான் மற்ற இடங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே , புலன்கள் அழிவதில்லை , ஜீவாத்மாவால் தான் அடுத்த உடலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.
ஸ்ரத்தா என்றால் என்ன?
கேள்வி–ப்ரவாஹணரின் கேள்வியில்-’ஜலம் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு எப்படி மனித உடலாக ஆகிறது?’ என்று ஜலத்தை (பூத ஸூக்ஷ்மங்களை ) பற்றின பேச்சு இருந்தாலும், ஆஹுதிகணை ஒவ்வொன்றாகச் சொல்லும் பொழுது, முதல் ஆஹுதியில் ’ஸ்ரத்₃தா₄’ என்ற பொருள் தான் ஸ்வர்கம் என்ற அக்நியில் ஆஹுதியாகக் கொடுக்கப் படுவதாகச் சொல்லப் பட்டு்ள்ளது. ஸ்ரத்தா என்றால் ஈடுபாடு-நம்பிக்கை என்கிற எண்ணம் தான் -ஆகவே , ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்வதாக எப்படிச் சொல்ல முடியும்? வியாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில்–
5– ப்ரத₂மே அஶ்ரவணத் இதி சேத் நதா: ஏவ ஹி உபபத்தே :
ப்ரத₂மே அஶ்ரவணத்-முதல் ஆஹுதியில், ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் )வேதத்தில் சொல்லப்படாதபடியால்
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால், அது தவறு
தா: ஏவ ஹி–அந்த பூத ஸூஷமங்கள் தானன்றோ (ஸ்ரத்₃தா₄ என்ற சொல்லால் குறிக்கப் படுகின்றன)
உபபத்தே :– (அப்போது தான் கேள்வியும் பதிலும்) பொருந்துகிற படியால்
முதலில் ப்ரவாஹணரின் கேள்வியில் ’ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. பதிலின் முடிவிலும் ’இவ்வாறு ஜலம் மனித உடலாக மாறுகிறது’ என்றுள்ளது. எனவே நடுவில்’ ஸ்ரத்தா என்ற பொருள் ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி மனித உடலாக மாறுகிறது’ என்று சொல்லப்பட்டாலும், அந்த ஸ்ரத்தா என்பது ஜலம் (பூத ஸூக்ஷ்மங்கள் ) என்று தான் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், கேள்விக்கும் பதிலுக்கும் பொருத்தமே இல்லாமல் போய் விடும்.
மேலும் வேதத்தில் வேறொரு இடத்தில்“ஸ்ரத்₃தா₄ வை ஆப:” அதாவது ’ஜலம் அன்றோ ஸ்ரத்தா என்று சொல்லப் படுகிறது’ என்று தெளிவாகவே சொல்லப்பட்டு்ள்ளது. எனவே இங்கும் அதுவே பொருள் –
ஜீவாத்மா எங்கே சொல்லப் பட்டு்ள்ளார்? கேள்வி–ஸ்ரத்தா-ஜலம் என்று பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட்டு்ள்ளன. அவை ஐந்து ஆஹுதிகளைக் கடந்து மனித உடல் ஆகின்றன. ஆனால் இங்கு ஜீவாத்மாவைப் பற்றின பேச்சே இல்லையே ? பிறகு இதைக் கொண்டு எப்படி ஜீவாத்மா பூத ஸூக்ஷ்மங்களை எடுத்துச் செல்கிறார் என்று கூற முடியும்? வ்யாஸரின் பதில்-
6-அஸ்ருத்த்வாத் இதி சேத் ந இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே : ச-•
அஸ்ருத்த்வாத்–ஜீவாத்மா இங்கு சொல்லப் படாதபடியால் இதைக் கொண்டு முடிவு செய்ய இயலாது
இதி சேத் ந–என்று நீங்கள் சொன்னால் அது தவறானது
இஷ்டாதி₃காரிணாம் ப்ரதீதே ச:-யாகம் முதலானவற்றைச் செய்பவர்கள் என்றும் சொல்லப் படுகிற படியால்-அறிந்து கொள்ளலாம்-
இதே பஞ்சாக்நி வித்யையில்(அத₂ ய இமே க்₃ராமே இஷ்டா பூர்தே த₃த்தம் இத் யுபாஸதே தே தூ₄ம மேவ அபி₄ஸம்ப₄வந்தி… ஆகாசாத் சந்த்₃ரமஸம், ஏஷ ஸோமோ ராஜா) அதாவது “யாரெல்லாம் உலகத்தில் இஷ்டம்(தேவர்களுக்குச் செய்யும் யாகம் ஹோமம் முதலானவை ), பூர்தம் (மனிதர்களுக்காகச் செய்யும் மரம் நடுதல், குளம் வெட்டுதல் முதலானவை ), த₃த்தம் (தானம் செய்தல்) முதலானவற்றைத் தொடர்ந்து செய்கிறார்களோ அவர்கள் இந்த உடலை விட்டு புகை மண்டலம் இரவுக்காக தேவதை மூலமாக–ஆகாசம், சந்த்ரன் மூலமாக ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக (அழகான உடலை உடையவராக) ஆகிறார்” என்றுள்ளது.
ஒரு இடத்தில் “ ஸ்ரத்தா என்பது ஸ்வர்கத்தில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு ஸோமராஜாவாக ஆகிறது” என்றும், மற்றொரு இடத்தில் “யாகம் முதலானவற்றைச் செய்த ஜீவாத்மா ஸ்வர்கத்தை அடைந்து ஸோம ராஜாவாக ஆகிறார்” என்றும் சொல்லப் பட்டு்ள்ளபடியால், இங்கு ஸ்ரத்தா எனப்படுவதும் வெறும் பூத ஸூக்ஷ்மங்களை அல்ல, அவற்றோடு கூடின ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.
ஸ்ரத்தா, ஸோமராஜா, மழை , அந்நம், ரேதஸ், கர்பம் என்று ஒவ்வொரு நிலையிலும் வெறும் பூத ஸூக்ஷ்மங்கள் சொல்லப் பட வில்லை , அந்தந்த நிலையில் உள்ள பூத ஸூக்ஷ்மங்களை உடலாகக் கொண்ட ஜீவாத்மா தான் சொல்லப் படுகிறார்.
(சாந்தோக்யம் -5-10-3-அத ய இம க்ராமே இஷ்டாபூர்த்தா தத்தம் இதி உபாசதே தே தூமம் அபி சம்பவந்தி –குளம் வெட்டுதல் போன்ற -புண்யம் செய்து மார்க்கம் வழியாக ஸ்வர்க்கம் செல்கிறார்கள் –-இதை முடிக்கும் பொழுது -5-10-4/5- பித்ரு லோகன் ஆகாசம் ஆகாசாத் சந்த்ரமசம் ஏஷ சோமோராஜா தத் தேவா நாமந்தம் தம் தேவா பஷயந்தி தஸ்மின் யாவத் சம்பாதம் அத ஏவம் எத அத்வானம் புன நிவர்த்தந்தே
யோ யோ ஹி அந்தமத்தி யோ யோ ரேத சிஞ்சதி தத் பூய ஏவ பவதி-என்று-பித்ரு லோகம் -ஆகாயம் -சந்திர மண்டலம் -சோமராஜா வாகிறான் அங்கு உணவாகிறான்)
ஸ்வர்கம் செல்லும் ஜீவாத்மாவின் நிலை கேள்வி–இங்கு ஸோம ராஜா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாக இருக்க முடியாது. ஏனெனில் (ஏஷ ஸோமோ ராஜா, தத் தே₃வாநாம் அந்நம், தம் தே₃வா: ப₄க்ஷயந்தி) அதாவது “ஸோம ராஜா என்பது தேவர்களின் அந்நம் (உணவு), அதை தேவர்கள் உண்ணுகிறார்கள் ” என்று ப்ரவாஹணர் உபதேசிக்கிறார். ஜீவாத்மாவை உண்ண முடியாதே ?வ்யாஸரின் பதில்–அடுத்த(கடைசி) ஸூத்ரத்தில்
7–பா₄க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா₂ ஹி த₃ர்ஸயதி
பா₄க்தம் வா–“உருவகம் தான்”. உணவு- உண்கிறார்கள் என்றது நேரடியான பொருளிலல்ல, உருவகமாக. உணவு எப்படி ஒருவனுக்குத் திருப்தியை அளிக்குமோ அது போல் ஸ்வர்கத்தை அடைந்த இந்த ஜீவாத்மா தேவர்களுக்குத் திருப்தி அளிக்கிறான் என்று தான் பொருள்
(ந வை தே ₃வா: அச்நந்திம் ந பிப₃ந்தி, ஏத்தே₃வ அம்ருதம் த்₃ருஷ்ட்வா த்ருப்யந்தி) அதாவது “தேவர்கள் உண்பதில்லை , பருகுவதில்லை , இதைப் பார்த்தே த்ருப்தி அடைகிறார்கள் ” என்று வேதமே காட்டுகிறது. அதனால், இங்கு நேரடியாக உண்பது சொல்லப் படாதபடியால் ஸோம ராஜா என்பது பூத ஸூக்ஷ்மங்களோடு கூடின ஜீவாத்மா தான்–
அநாத்ம வித்த்வாத்–“ஆத்ம ஜ்ஞாநி அல்லாத படியால்”. ஸ்வர்கத்தை அடையும் இந்த ஜீவாத்மா சிறந்த ஆத்ம ஜ்ஞாநியோ ,பரமாத்மாவை உபாஸிப்பவனோ அல்ல. உலகத்தில் இஷ்டம் பூர்தம் த₃த்தம் முதலானவற்றைச் செய்தவன் தான். அதனால் அவன் ஸ்வர்கத்தை அடைந்து, அங்கு தேவர்களுக்கு ஒரு கருவி போல் -உதவியாளனாக இருந்து தொண்டு செய்து த்ருப்தியை ஏற்படுத்துகிறான் என்று சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை-
ததா₂ ஹி த₃ர்ஸயதி–“அவ்வாறு அன்றோ வேதம் காட்டுிறாது”.
(யதா₂பசு: ஏவம் ஸ: தேவாநாம்₃) அதாவது “எப்படி ஒரு விலங்கோ அது போல் தான் அவன் தேவர்களுக்கு” என்று இவன் தேவர்களுக்கு ஒரு கருவியாக இருப்பதை வேதமே காட்டுகிறது. அதனால் இந்தப் பொருள் பொருத்த முடையதே .-
(ப்ரஹ்மத்தை பற்றி அறிவில்லாத காரணத்தால் அந்த அதிகாரிகள் தேவர்களுக்கு உணவாகிறார்கள்
வா -என்கிற பதம் இத்தைக் காட்டும்-ப்ருஹத் உபநிஷத் -1-4-10-யதா பசு ஏவம் ச தேவா நாம் –
மனிசர்களுக்கு பசு உணவாவது போலே தேவர்களுக்கு இவர்கள் உணவாகிறார்கள்-இத்தையே ஸ்ரீ கீதை -7-23–தேவான் தேவ யஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாம்பி –-ஆக தேவர்களுக்கு பணிவிடை செய்வார்கள் என்ற கருத்து-இதனையே சாந்தோக்யம் -3-6-1-ந வை தேவா அச்நந்தி ந பிபந்தி எதத் ஏவ அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்யந்தி -என்றபடி-தேவர்கள் உண்ணாமல் பருகாமல் –அமிர்தத்தை கண்களால் பார்த்த படி மகிழ்ந்து இருப்பார்கள் மன நிறைவும் அடைவார்கள்)
ஆக, பஞ்சாக்நி வித்யையில் உள்ள கேள்வி பதில்களின் மூலம், ஒ்ரு உடலை விட்டு வேறொரு உடலுக்குச் செல்லும் ஜீவாத்மா, பூத ஸூக்ஷ்மங்களையும் எடுத்துக் கொண்டு தான் செல்கிறாா் என்பது நிரூபிக்கப் பட்டது.
இந்த பஞ்ச அக்னி வித்யையில் ப்ரக்ருதியை விட வேறுபட்ட பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை
ப்ரஹ்மாத்மகமாகவே உபாஸிக்க வேண்டும் என்று கருத்துஇவ் வித்யைக்குப் பலம் ஸ்வ ஆத்ம அனுபவத்துடன் கூடிய பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம்-மதுவித்யா நிஷ்டனுக்கு வஸூவாதி பத பிராப்தி இடைப்பட்ட பலன் போல் இவனுக்கு ஸ்வ ஆத்ம அனுபவம்-இங்கு ஸ்வாமி தேசிகன் –
தேவ லோகம் -மேகம் -ப்ருத்வீ புருஷன் ஸ்த்ரீ என்று ஐந்து அக்னிகளைக் கல்பித்து
அவற்றில் ஸ்ரத்தை என்னும் பூத ஸூஷ்மம் க்ரமமாக பரிணாமம் அடைந்து
சோமன் மழை அன்னம் ரேதஸ் என்ற ஹவிஸ்ஸை ஜீவனுடன் தேகத்தில் உள்ள ப்ராணன்கள்
ஹோமம் செய்கின்றன -என்பது பஞ்ச அக்னி வித்யை என்று
த்யவ் பர்ஜன்யோ அத ப்ருத்வீ ஜூஹ்வதீதி ப்ரவீதி -என்ற ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்–
—
3-1-2-க்ருதாத்ய்யாதி₄கரணம் ஜீவாத்மா ஸ்வர்கத்திலிருந்து புண்ய பாபங்களோடு திரும்புகிறாரா? –ஸங்க ₃தி–முன் அதிகரணத்தில் ஸ்வர்கத்துக்குச் சென்ற ஜீவாத்மா எப்படி பல படிகளைத் தாண்டி மறுபடியும் மனிதப் பிறவியை அடைகிறார் என்று கூறப்பட்டது. அதில் ஒரு ஸந்தேஹம் எழுகிறது–ஸ்வர்கத்திலிருந்து திரும்பி வரும் ஜீவாத்மா, தன்னுடைய எல்லா கர்மங்களையும்(பாப புண்யங்களையும்) ஸ்வர்கத்தில் அநுபவித்துக் கழித்து விட்டு எந்தக் கர்மங்களும் இல்லாமல் திரும்ப வருகிறாரா? அல்லது ஸ்வர்கத்தில் அநுபவித்து முடித்த கர்மங்களைத் தவிற மற்ற கர்மங்கவளோடு கூடத் திரும்பி வருகிறாரா? என்று. இதற்கான விடையைத் தான் இந்த அதிகரணத்தில் ஆராய்கிறார் வேத வ்யாஸர்-
பூர்வபக்ஷம்– எந்தக் கர்மமும் இல்லாமல் தான் வருகிறார், அனைத்துக் கர்மங்களையும் ஸ்வர்கத்தில் அநுபவித்துக் கழித்து விட்டதாக வேதம் சொல்கிறபடியால்.
தஸ்மிந் யாவத் ஸம்பாதம் உஷித்வா அத₂ ஏதமேவ அத்₄வாநம் புந: நிவர்தந்தே -ஸம்பாதம் என்றால் கர்மங்கள், அவற்றால் தான் ஸ்வர்கத்தை அடைகிறார். “யாவத் ஸம்பாதம்” என்றால் கர்மங்கள் இருக்கும் வரை என்று பொருள். எனவே , “அந்த ஸ்வர்க லோகத்தில் கர்மங்கள் இருக்கும் வரை வாழ்ந்து விட்டு, அதற்குப் பின் இந்த பூலோகத்துக்குத் திரும்பி வருகிறான்” என்று இந்த வாக்கியம் சொல்கிறது.
பிராப்ய அந்தம் கர்மண: தஸ்ய யத் கிஞ்ச இஹ கரோதிஅயம்| தஸ்மாத் லோகாத் புந: ஏதி அஸ்மை லோகாய கர்மணே || “இவ் வுலகில் எந்த எந்த கர்மங்களைச் செய்கிறானோ , ஸ்வர்கத்தில் அவற்றின் முடிவை அடைந்த பிறகு (அவற்றின் பயனை அநுபவித்து முடித்த பிறகு), அந்த ஸ்வர்கத்திலிருந்து திரும்பவும் இந்த உலகத்துக்கு வருகிறான், மேலும் கர்மங்களை ஸம்பாதிப்பதற்காக”
ஆகவே ஸ்வர்கத்திலிருந்து வரும் ஜீவாத்மாவிடம் எந்தக் கர்மங்களும் கிடையாது.–
ஸ்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் காட்டும் பதில் ஸித்தாந்தம்–இந்த அதிகரணத்தில் மொத்தம்-4 ஸூத்ரங்கள்-
முதல் ஸூத்ரம் ஸித்தாந்தத்தைச் சொல்கிறது.
1 க்ருதாத்யயே அநுசயவான் த்₃ருஷ்ட ஸ்ம்ருதிப்₄யாம் யதே₂தம் அநேவம் ச
க்ருதாத்யயே –ஸ்வர்கத்தில் அநுபவிக்க வேண்டிய கர்மங்களின் பயனை அநுபவித்து முடித்த பிறகு
அநுசயவான்–மீதமுள்ள கர்மங்களை உடையவராகத் தான் (ஜீவாத்மா திரும்ப வருகிறார்)
த் ₃ருஷ்ட ஸ்ம்ருதிப்₄யாம்–வேதமும் ஸ்ம்ருதிகளும் அவ்வாறு சொல்கிறபடியால்.
யதே₂தம் அநேவம் ச–ஸ்வர்கத்துக்குச் சென்ற வரிசையிலும், வேறு முறையிலும் திரும்ப வருகிறார்.
த் ₃ருஷ்டம்–நேரடியாகக் காணப்படும் வேத வாக்கியம். அதிலும் இந்தக் கருத்து சொல்லப்படுகிறது.
தத்ய இஹ ரமணீய சரணா அப்₄யாஶ꞉ ஹ யத் தே ரமணீயாம் யோநிம் ஆபத்₃யேரந்| அத₂ ய இஹ கபூயசரணா꞉ அப்₄யாஶ꞉ ஹ யத் தே கபூயாம் யோநிமாபத்₃யேரந் ॥ இங்கு
சரணம் என்றால் கர்மங்கள்.
ரமணீயம் என்றால் சிறந்த என்று பொருள்.
கபூயம் என்றால் தீய என்று பொருள்.
ஆக“ஸ்வர்கத்திலிருந்து வரும் ஜீவாத்மா நல்ல கர்மங்களை உணடயவராக இருந்தால் நல்ல பிறவியான மனிதப் பிறவியை அடைகிறார்; தீய கர்மங்களை உடையவராக இருந்தால் தாழ்ந்த நாய், பன்றி முதலான பிறவிகளை அடைகிறார்.”
சாந்தோக்யம் -5-10-7–தத்ய இஹ ரமணீய சரணா அப்யாசோ ஹ யத் தே ராமணீயாம் யோநிம் ஆபத்யேரன் ப்ராஹ்மண யோநிம் வா ஷத்ரிய யோநிம் வா வைசிய யோநிம்வா அத யே இஹ கபூய சரணா அப்யாசோ ஹ யத் தே கபூயாம் யோ நிம் ஆபத்யேரன் ஸ்வ யோ நிம் வா ஸூகர யோநிம் வா சண்டாள யோநிம் வா -என்று பிராமணன் ஷத்ரியன் வைஸ்யன் நாய் பன்றி சண்டாளன் ஆக பிறக்கிறார்கள்
ப்ருஹத் உபநிஷத் 4-4-6–யத் கிஞ்சேஹ கரோத்யம் இதே பொருளில் சொல்லும்
ஸ்ம்ருதி–வேதத்தின் பொருளை ஒட்டி ரிஷிகளால் இயற்றப்பட்ட நூல்கள். அவற்றிலும் இது சொல்லப்படுகிறது
கௌதமர்- (ஸ்வ கர்ம நிஷ்டா₂꞉ ப்ரேத்ய கர்ம ப₂ல மநுபூ₄ய தத꞉ஸேஷேண விஶிஷ்ட தே₃ச ஜாதி குல ரூப ஆயு꞉ஸ்ருத வித்த வ்ருத்த ஸுக₂ மேத₄ஸ꞉ ஜந்ம ப்ரதிபத்₃யந்தே ) அதாவது “இவ் வுலகில் தங்களுக்கு விதிக்கப் பட்ட கர்மங்களை செய்பவர்கள் மரணமடைந்து, தங்கள் செயல்களின் பயனை ஸ்வர்கத்தில் அநுபவித்து விட்டு, மீதமிருக்கும் கர்மங்களால் குறிப்பிட்ட இடம், குலம், உடல், ஆயுஸ், கல்வி, செல்வம்,நடத்தை , திறமை ஆகியவற்றோடு பிறக்கிறார்கள்.”
இதே போல் தான் ஆபஸ்தம்பர் என்ற ரிஷியும் கூறுகிறார். எனவே , மீதமுள்ள கர்மங்களால் தான் அடுத்த பிறவி.-ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரமும்-2-1/2/3–தத பரிவ்ருத்தௌ கர்ம பல சேஷேண ஜாதிம் ரூபம் வர்ணம் பலம் மேதாம் பிரஜ்ஞாம் த்ரவ்யாணி தர்ம அனுஷ்டானம் இதி பிரதிபத்யந்தே தத் சக்ரவத் உபயோர் லோகயோ ஸூ கே ஏவ வர்த்ததே -என்றும் கூறும்
ஸ்வர்கத்திலிருந்து திரும்ப வரும் பாதை
கேள்வி–“யாவத் ஸம்பாதம் உஷித்வா” அதாவது“கர்மம் உள்ள வரை ஸ்வர்கத்தில் வாழ்ந்து விட்டு” என்ற வேத வாக்கியத்துக்கு எப்படிப் பொருள் கொள்வது?
பதில்–இங்கு ஸம்பாதம் என்ற சொல் ஜீவாத்மாவிடம் இருக்கும் எல்லாக் கர்மங்களையும் குறிக்க வில்லை . அவன் ஸ்வர்கத்தை அடைவதற்குக் காரணமான புண்யத்தை மட்டும் குறிக்கிறது. எனவே “ஸ்வர்கத்துக்குக் காரணமாக புண்யம் எது வரை உள்ளதோ அதுவரை ஸ்வர்கத்தில் வாழ்ந்து விட்டு” என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேணும்
ஜீவாத்மாவிடம் எண்ணிறந்த பாபங்களும் புண்யங்களும் உள்ளன. அவை அனைத்தும் சேர்ந்து ஒருவனுக்கு ஸ்வர்கத்தையோ , நரகத்தையோ , மனிதப் பிறவியையோ , விலங்குப் பிறவியையோ கொடுக்காது. ஒவ்வொரு கால கட்டத்தில், ஒரு சில பாப-புண்யங்கள் தான் கனிந்து பயன் கொடுக்கத் தயாரான நிலையில் இருக்கும். அவை தான் பிறவிகளைக் கொடுக்கின்றன. அதைத் தவிற பயன் கொடுக்கத் தொடங்காத ஆயிரக் கணக்கான கர்மங்கள் அந்த ஜீவனிடம் இருக்கலாம். எனவே , ஸ்வர்கத்திலிருந்து திரும்பும் போதும் அவற்றோடு தான் வருகிறார் ஜீவாத்மா–
ஸூத்ரத்தின் கடைசிப் பகுதி, ஜீவாத்மா எந்தப் பாதையில் திரும்ப வருகிறார் என்று கூறுகிறது.
யதே₂தம்–பூலோகத்திலிருந்து ஸ்வர்கத்துக்கு எந்தப் பாதையில் சென்றாரோ , அதே பாதையிலும் திரும்ப வருகிறார்;
அநேவம் ச–வேறு விதமாகவும் திரும்ப வருகிறார்-
ஸ்வர்கத்துக்குப் போகும் பாதை ––(தூமாதி மார்க்கம்)புகை , இரவு, தேய்பிறை , தக்ஷிணாயனம், பித்ரு லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் என்ற உலகங்கள் வழியாக ஸ்வர்கம் அடைகிறான்-
ஸ்வர்கத்திலிருந்து திரும்பும் பாதை –ஆகாசம், வாயு, புகை மேகம், பூமி என்ற உலகங்கள் வழியாகத் திரும்ப வருகிறான்.
எனவே போகும் போது இருந்த ஆகாசம் என்ற உலகத்துக்குத் திரும்ப வரும் போதும் செல்கிறபடியால் யதே₂தம் (போன பாதையிலேயே ) என்று கூறப்படுகிறது. போகும் போது செல்லாத வாயு லோகத்துக்குத் திரும்பும் போது செல்கிறபடியாலும், பித்ரு லோகத்துக்குச் செல்லாத படியாலும் அநேவம்(வேறு விதமாக) என்று கூறப்படுகிறது.-
கார்ஷ்ணாஜிநி ரிஷியின் பதில்
பூர்வ பக்ஷியின் கேள்வி–முன் உதாகரிக்கப் பட்ட வேத வாக்யத்தில் ’ரமணீய சரணா :’, ’கபூய சரணா :’ என்ற இடங்களில் சரணம் என்ற சொல்லுக்கு’கர்மங்கள்’ என்று பொருள் கொண்டது தவறானது. உலகத்தில் சரணம், ஆசாரம், சீலம், விருத்தம் என்ற சொற்கள் எல்லாம் நடத்தையை (ஆசாரத்தை ) தான் காட்டுகின்றன. வேதத்திலும் கர்மங்கள் தனியாகவும் சரிதம்(ஆசாரம்) தனியாகவும் தான் சொல்லப் பட்டுள்ளது. எனவே சரணம் என்றால் ஆசாரம் தான்-எனவே , “முன் பிறவியில் நாம் செய்யும் தர்மச் செயல்கள் ஸ்வர்கத்தைத் தருகின்றன, அதர்மச் செயல்கள் நரகத்தைத் தருகின்றன. அதற்குப் பின், முன் பிறவியில் நாம் கடைப்பிடித்த ஆசாரம் பூலோகத்தில் மனிதனாகவோ விலங்காகவோ அடுத்த பிறவியைத் தருகிறது” என்று தான் இந்த வேத வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்
இதற்கு கார்ஷ்ணாஜிநி என்னும் ரிஷி கூறும் பதிலை அடுத்த ஸூத்ரத்தில் வ்யாஸர் காட்டுகிறார்
2- சரணாத் இதி சேத் ந தது₃ப க்ஷணார்தா₂ இதி கார்ஷ்ணாஜிநி:
சரணாத்–ஆசாரத்திலிருந்து தான் அடுத்த பிறவு ஏற்படுகிறது, எனவே மீதம் எந்தக் கர்மங்களும் கிடையாது
இதி சேத் ந–என்று நீங்கள் கூறினால், அது தவறானது
தது₃பலக்ஷணார்தா₂-இங்கு சரணம் என்ற சொல் கர்மங்களைக் குறிப்பதாகத் தான் கொள்ள வேண்டும்.
இதி கார்ஷ்ணாஜிநி:-என்று கார்ஷ்ணாஜிநி என்னும் ரிஷியின் அபிப்ராயம்
ஒரு சொல், தனது முக்கியமான பொருளைவிட்டு, வேறொரு பொருளைக் குறிப்பதற்கு உபலக்ஷணம் என்று பெயர். ’அந்த அறை (room)அதிகமாகச் சத்தமிடுகிறது’ என்று சொன்னால், அறை என்ற சொல் அறையிலிருக்கும் மக்களைத் தான் குறிக்கிறது. அறையால் சத்தமிட முடியாத படியால்- அதுபோல் இங்கும் சரணம் என்ற சொல் பொதுவாக ஆசாரத்தையே குறிப்பதாக இருந்தாலும், இவ் விடத்தில் கர்மங்களைத் தான் குறிக்க வேண்டும், ஆசாரத்திலிருந்து பிறவி ஏற்பட முடியாதபடியால் என்று கார்ஷ்ணாஜிநிரிஷியின் அபிப்ராயம்.
தைத்ரிய சம்ஹிதை -1-11-12–யானி அனவத்யானி கர்மாணி தானி சேவிதவ்யாநி நோ இதராணி யானி அஸ்மாகம் ஸூ சரிதானி தானி த்வயா உபாச்யாநி–இதனால் இன்ப துன்பங்கள் புண்ய பாப கர்மாக்களே ஆகும்–சரணாத் -ரமணீய சரணா என்னும் ஸ்ருதியில் ரமணீயம் என ஸ்ம்ருதியால் விதிக்கப் பட்ட ஸந்த்யா வந்தனாதி ஆசாரங்களால் ப்ரஹணாதி பிறப்பை யுடையவர் என்று சொல்வதால் அனுபவித்து மிஞ்சிய கர்மத்தால் நல்ல கெட்ட பிறப்புக்கள் என்பது இல்லை
இதி சேத ந –என்பது தவறு-தத் உப லஷணார்த்தா இதி கார்ஷ்ணாஜிநி –இவை உப லக்ஷணமாகக் கர்மாக்களையே குறிக்கும் என்பதே கார்ஷ்ணாஜிநியின் திரு உள்ளம்-ஸந்த்யா வந்தனாதிகளை அங்கங்களாகக் கொண்ட யஜ்ஞாதி புண்ய கர்மாக்களாலேயே ஸ்வர்க்க பிராப்தி என்று அவர் திரு உள்ளம்
பூர்வ பக்ஷியின் கேள்வி–அப்படி யென்றால் ஆசாரத்துக்கு எந்தப் பயனும் இல்லாதலால் அவை வீணானவையா? – கார்ஷ்ணாஜிநியின் பதில்-அடுத்த ஸூத்ரம்- 3-ஆநர்த₂க்யம் இதி சேத் ந தத₃ பேக்ஷத்வாத்
ஆநர்த₂க்யம்–கர்மங்களால் தான் ஸ்வர்கம், நரகம், அடுத்த பிறவவி முதலான அனைத்துமே என்றால் ஆசாரமே வீண்
இதி சேத் ந–என்று நீங்கள் கூறினால் அது தவறானது,
தத₃பேக்ஷத்வாத்–ஆசாரம் புண்ய காரியங்களுக்கு அங்கம்; எனவே ஆசாரம் இருந்தால் தான் தர்ம கார்யம் பயனளிக்கும்.
(ஸந்த்₄யாஹீந: அசுசி: நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு)–தஷ ஸ்ம்ருதி -2-027– ஸந்த்யா வந்தனம் செய்யாதவன் அசுத்தமானவன், அவனுக்குத் தர்மச் செயல்களில் தகுதியே இல்லை
(ஆசார ஹீநம் ந புநந்தி வேதா₃: யத்₃யப்யதீ₄தா: ஸஹ ஷட்பி₄ரங்கை –வசிஷ்ட ஸ்ம்ருதி -6-3-🙂 ஆசாரம் இல்லாதவன் ஆறு அங்கங்களோடு கூடிய வேதங்களைக் கற்றாலும், அவை அவனைப் புனிதமாக்க மாட்டா –சரணம் என்ற சொல் ஆசாரத்தைத் தானே குறிக்கும், கர்மங்களை அல்லவே என்று முன்னால் எழுப்பப்பட்ட கேள்விக்குக் கார்ஷ்ணாஜிநியின் பதிலை முன் இரண்டு ஸூத்ரங்களால் காட்டினார் வ்யாஸர்.
அடுத்த ஸூத்ரத்தில், இதே கேள்விக்குப் பா₃த₃ரி என்ற ரிஷி கூறும் பதிலைக் காட்டுகிறார் வ்யாஸர்.
4-ஸுக்ருத து₃ஷ்க்ருதே ஏவ இதி பா₃த₃ரி:-“பாப புண்யங்கள என்கிறார் பா₃த₃ரி” –பா₃த₃ரி என்ற ரிஷியின் அபிப்ராயம் சரணம் என்ற சொல் நேரடியாகவே தர்ம அதர்ம செயல்களையே குறிக்கும், ஆசாரத்தை அல்ல. உலகத்தில்“புண்யச் செயல்களை ஆசரிக்கிறான்”, “பாபச் செயல்களை ஆசரிக்கிறான்” என்ற சொல்லாடல் உள்ளது. எனவே சரணம் என்ற சொல்லுக்கு நேரடியாகவே தர்ம-அதர்ம-செயல்கள் என்று தான் பொருள்.
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ இது து பாதரி-து ஸப்தம் முன் பக்ஷத்தை நிவ்ருத்தி செய்து அங்கம் என்பதால் குறிக்கும் என்றும் நேரடியாகவே குறிக்கும் என்றும் இரு முனிவர்களின் திருவுள்ளங்கள்–பா₃த₃ரி ரிஷியின் அபிப்ராயம் தான் வ்யாஸரின் அபிப்ராயமும், இதற்கு மேல் தனியாகத் தன் கருத்தைக் கூறாத படியால்-ஆக இவ்வாறு, ஸ்வர்கத்தில் இருந்து திரும்ப வரும் ஜீவாத்மா மீதமுள்ள கர்மங்களோடு தான் வருகிறார் என்று முடிவானது. வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை — 3-1-3-அநிஷ்டாதி₃கார்யதி₄கரணம் வைதிக கர்மங்களைச் செய்யாதவர்கள் ஸ்வர்கத்துக்குச் செல்வார்களா ?–புண்ணிய சாலிகளும் பாபிகளும் -ஸங்கதி– பூர்வ பக்ஷம்–அவர்களும் ஸ்வர்கம் அடைகிறார்கள் என்ற பூர்வ பக்ஷம் முதல் 5 ஸூத்ரங்கங்களால் கூறப்படுகிறது. கேள்வி– புண்யம் செய்தவர்களுக்கும் பாபம் செய்தவர்களுக்கும் ஒரே கதி தானா? பாபிகள் செல்லும் நரக லோகங்கள் ஆக, இஷ்டா பூர்த்தங்களைச் செய்பவர்கள் நேரடியாக சந்த்ர லோகம் சென்று வருகிறார்கள். அதைச் செய்யாதவர்கள் நரகம் சென்று துன்பங்களை அநுபவித்து விட்டு அதற்குப் பின் சந்த்ர லோகம் செல்வார்கள் என்பது பூர்வ பக்ஷியின் அபிப்ராயம். 3-ஸ்மரந்தி ச –“(பாபிகள் யமனின் வசத்தில் செல்கிறார்கள் என்று) ஸ்ம்ருதிகளும் சொல்கின்றன” 4–அபி ஸப்த–“மேலும் ஏழு (நரகங்கள் பாபிகளின் தண்டனைக்காக உள்ளன என்கின்றன ஸ்ம்ருதிகள்)” கேள்வி– பாபிகள் நரக லோகங்களுக்குச் செல்கிறார்கள் என்றால் அவர்கள் யமனின் வசத்தில் இருக்கிறார்கள் என்பது எப்படிப் பொருந்தும்? தேவ யானமும் பித்ரு யானமும் தத்₃ய இத்த₂ம் விது₃: யே ச இமே அரண்யே ச்ரத்₃தா₄ தப: இத் யுபாஸதே … தே அர்சிஷமேவ அபி₄ ஸம்ப₄வந்தி-“யாரெல்லாம் பரமாத்மாவை உணர்ந்து, காட்டில் அமர்ந்து, பற்று அற்றவராய், ச்ரத்தை யோடும் தவத்தோடும் உபாஸநம் செய்கிறார்களோ , அவர்கள் அர்சிஸ்(ஒளி), பகல், வளர்பிறை , உத்தராயணம், ஸம்வத்ஸரம், ஸூர்ய லோகம், சந்த்ர லோகம், மின்னல் உலகம் முதலானவை வழியாக ஶ்ரீவைகுண்டம் அடைகிறார்கள்;திரும்ப வருவதில்லை- (தேவ யானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-1–தத்ய இத்தம் விது யே ச இமே அரண்யே ச்ரத்தா தப இதி உபாஸ்யதே–தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி அர்ச்சிஷ அஹ -என்றும்-பித்ரு யானத்தைப் பற்றிக் கூறும் பொழுது சாந்தோக்யம் -5-10-3- அத யே இமே க்ராமா இஷ்டா பூர்த்தா தத்தம் இதி உபாசதே –தே தூமம் அபி சம்பவந்தி -என்றது–கௌஷீதகி உபநிஷத் -யே கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ரமசம் ஏவ தே சர்வே கச்சந்தி -என்று அனைவரும் சந்திர மண்டலம் செல்கின்றனர்) அத₂ய இமே க்₃ராமே இஷ்டா பூர்யதத₃த்தம் இத் யுபாஸயத…தே தூ₄மமேவ அபி₄ஸம்ப₄வந்தி “யாரெல்லாம் இஷ்டம் பூர்த்தம் த₃த்தம் ஆகியவற்றை விடாமல் செய்கிறார்களோ , அவர்கள் புகை , இரவு, தேய் பிறை , தக்ஷிணாயனம், பித்ரு லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் வழியாக ஸ்வர்கம் அடைகிறார்கள்” சந்த்ர லோகம் செல்ல இரண்டு பாதைகள் தான் உள்ளன. அதில், உபாஸநம் (வித்₃யை) உடையவர்களுக்குத் தான் தேவ₃யாணம்–அர்ச்சிராதி₃என்ற பாதை , இஷ்டா பூர்தம்(கர்மம்) உடையவர்களுக்குத் தான் பித்ரு யாணம்- தூ₄மாதி₃ என்ற பாதை என்றும் நிச்சயமாகிறது. உபாஸநம்,கர்மம் இரண்டும் இல்லாதவர்களான பாபிகள் (இஷ்டா பூர்த்தம் செய்யாதவர்கள்) இந்த இரண்டு பாதைகளிலும் செல்ல முடியாது என்பதால் அவர்கள் சந்த்ர லோகம் செல்ல இயலாது. பாபிகளுக்குக் கிடைக்கும் தாழ்ந்த பிறவிகள் பஞ்சாக்நி வித்யையில் ப்ரவாஹணர் கேட்ட ஐந்து கேள்விகளுக்குள் ஒன்று–(வேத்த₂ யதா₂ அஸௌ லோக: ந ஸம்பூர்யதே )அதாவது “யாரால் இந்த ஸ்வர்க லோகம் நிரம்புவதில்லை ” (யாரெல்லாம் ஸ்வர்கத்தை அடைவதில்லை )என்பதாகும். ஐந்து ஆஹுதிகள் தேவைப் படாத பிறவிகள் 9- த₃ர்சநாத் ச – “(வேதத்தில்) காணப் படுகிற படியாலும்” கேள்வி–இவ் வாக்கியத்தில் வியர்வை யிலிருந்து பிறப்பவை சொல்லப்பட வில்லையே ? ஆக, இஷ்டா பூர்த்தங்களைச் செய்யாமல் பாபங்களை மட்டும் செய்பவர்கள் சந்த்ரனை அடைவதில்லை எனப்பட்டது. — 3-1-4–தத் ஸ்வாபா₄வ்யாபத்த் யதி₄கரணம்-ஆகாசத்தில் பிறவியா ஒன்றுதலா?-பிறவியா? ஒற்றுமையா?––ஸங்கதி–முன் அதிகரணங்களில், இந்த உலகத்தில் மரணமடைந்து புறப்பட்ட ஒரு ஜீவாத்மா -ஸ்வர்கம்-ஆகாசம்-வாயு-புகை -மேகம்-பூமி-உணவுப் பொருள்கள்-ரேதஸ்-கர்பம் என்கிற படிகளைத் தாண்டி மறுபடியும் உடல் பிறவியை அடைகிறார் என்று கூறப்பட்டது–இப்படிகளுக்குள் ஸ்வர்கத்தில் ஜீவாத்மா உயர்ந்த அழகான ஓர் உடலோடு பிறக்கிறார் என்பது அறிந்ததே . அதே போல், பூமியில் விழுந்த பிறகு உணவுப் பொருள்களைத் தனக்கு உடலாகக் கொண்டு பிறக்கிறார் என்பதும் தெரிந்ததே . இறுதியில், மனித-விலங்கு உடல்களைக் கொண்டு பிறக்கிறார் என்பதும் கண் கூடானதே – இவ்வாறு இருக்க, ஆகாசம் வாயு முதலானவற்றை அடையும் போது இந்த ஜீவாத்மா ஆகாசத்தையும் வாயுவையும் உடலாகக் கொண்டு பிறக்கிறாரா? அல்லது வெறுமனே ஆகாசத்தோடும் வாயுவோடும் ஒட்டிக் கொண்டு, பிரித்து அறிய முடியாதபடி ஒன்றி யிருக்கிறாரா? என்கிற கேள்வி எழுகிறது. அதைத் தான் இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார் வ்யாஸர்– பூர்வ பக்ஷம்– -சாந்தோக்யம் ஜீவன் திரும்பும் வரிசையை -5-10-5/6- அத ஏவம் ஏவ அத்வானம் புன -நிவர்த்தந்தே யத் ஏதம் ஆகாசம் –ஆகாசாத் வாயும் வாயுர்பூத்வா தூமோ பவதி தூமோ பூத்வா அப்ரம் பவதி -அப்ரம் பூத்வா மேகோ பவதி -மேகோ பூத்வா ப்ரவர்ஷதி–ஸ்வர்கத்தில் உயர்ந்த உடலோடு பிறக்கிறார் என்பது உறுதியானதால், அதோடு கூடவே சொல்லப்படும் ஆகாசம் முதலான நிலைகளிலும் அவற்றை உடலாகக் கொண்டு பிறக்கிறார் என்பதே பொருத்தமானதாக இருக்கும்– ஸித்தாந்தம்- 1–தத் ஸ்வாபா₄வ்யாபத்தி: உபபத்தே : — 3-1-5-ந அதி சிராதி₄கரணம் –-ஒவ்வொரு நிலையும் சுருக்கமானதா ? நீளமனதா?-(அடுத்தடுத்த நிலைகளில் தாமதமில்லை )-ஸங்கதி– முன் அதிகரணத்தில் ஸ்வர்கத்திலிருந்து திரும்ப வரும் ஜீவாத்மா ஆகாசம், வாயு, புகை , மேகம் ஆகியவற்றோடு ஒட்டிக் கொண்டு கீழே பூமிக்கு வருகிறார் என்று கூறப்பட்டது. அதில் ஒரு ஸந்தேஹம் எழுகிறது–ஆகாசம், வாயு, புகை , மேகம் ஆகிய நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் பல காலம் இருந்து விட்டு, அதற்குப் பின் இந்த ஜீவாத்மா பூமிக்கு வருகிறாரா? அல்லது உடனடியாக அடுத்தடுத்த நிலைகளை அடைந்து வேகமாக பூமிக்கு வருகிறாரா? என்று. அதை இவ்வதிகரணத்தில் ஆராய்கிறார். பூர்வ பக்ஷம்–ஒவ்வொரு நிலையையும் வேகமாகவோ நிதானமாகவோ தாண்டி வருகிறார் என்பதற்கு எந்தப் ப்ரமாணங்களும் இல்லாதபடியால், எந்த நியமமும் கிடையாது. அவர் எப்படியும் வரக் கூடும்– ஸித்தாந்தம்– 1– ந அதிசிரேண விஸேஷாத்–“மிக நீண்ட காலம் இல்லாமல்; சிறப்புள்ளதால்” — 3-1-6-அந்யாதி₄ஷ்டி₂தாதி₄கரணம் (கர்மங்களால் தான் உடல் பிறவி )உணவாகப் பிறவியா? சேர்க்கையா? —ஸங்கதி– முன் அதிகரணங்களில் ஸ்வர்கத்திலிருந்து பூமிக்கு வரும் ஜீவாத்மா ஆகாசம் வாயு புகை மேகம் ஆகிய நிலைகளை எப்படிக் கடக்கிறார் என்று ஆராயப்பட்டது. இந்த அதிகரணத்தில் மழை மூலம் பூமிக்கு வந்த ஜீவாத்மா உணவுப் பொருள்களாக ஆகும் அடுத்த நிலை ஆராயப் படுகிறது ஸந்தேகம்– (தே இஹ வ்ரீஹியவா: ஒஷதி₄வநஸ்பதய: தில மாஷா: இதி ஜாயந்தே ) அதாவது “மழை மூலம் பூமிக்கு வந்த ஜீவாத்மாக்கள் நெல் யவை செடிகள் மரங்கள் எள் உளுந்து முதலானவையாகப் பிறக்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அவர்களே நெல் முதலானவற்றை அதிஷ்டானம் செய்து(உடலாகக் கொண்டு) ஒரு பிறவி எடுக்கிறார்களா? அல்லது வேறொரு ஜீவாத்மாவால் அதிஷ்டானம் செய்யப்பட்ட நெல் முதலான வற்றில் ஒட்டிக் கொள்கிறார்களா? என்பது தான் ஆராயப்படுகிறது. பூர்வ பக்ஷம்– சாந்தோக்யம் -5-10-6–மேகோ பூத்வா ப்ரவர்ஷதி தா இஹ வ்ரீஹியவா ஓஷதி வனச்பதய திலாமாஷா இதி ஜாயந்தே“மனிதனாகப் பிறக்கிறார்”, “தேவனாகப் பிறக்கிறார்” என்பது போல்“நெல் யவை செடிகள் மரங்கள் எள் உளுந்து முதலானவையாகப் பிறக்கிறான்” என்று வேதம் கூறுவதால் ஸ்வர்கத்தில் இருந்து திரும்ப வரும் ஜீவாத்மா தான் நெல் முதலானவற்றை உடலாகக் கொண்டு பிறக்கிறார் என்று கொள்வதே தகுந்தது– ஸித்தாந்தம்- 1–அந்யாதி₄ஷ்டி₂ தே பூர்வ வத் அபி₄லாபாத் எங்கெல்லாம் ஆத்மா உடல் பிறவி அடைவது சொல்லப் படுமோ , அங்கெல்லாம் வேதமே அதற்குக் காரணமான கர்மங்களை (பாப-புண்யங்களை ) தவறாமல் கூறி விடும்.(சாந்தோக்யம் – ரமணீய சரணா கபூய சரணா -சந்திர மண்டலத்தில் பலன்கள் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடிந்தன என்று ஜென்மத்தின் காரணமான புண்ய பாப ரூபமான கர்மம் கூறப்படுகிறது) ஆனால் ஆகாசம் முதலானவற்றைச் சொல்லும் போதும், நெல் முதலானாவற்றைச் சொல்லும் போதும் கர்மத்தைப் பற்றின பேச்சு வேதத்தில் இல்லை . எனவே இது உடல் பிறவி அல்ல . மேலும், இந்த ஜீவாத்மாவுக்குப் பயன் கொடுக்கத் தொடங்கி விட்ட கர்மங்களால் அவர் ஸ்வர்கம் சென்றார், பயனளிக்கத் தொடங்காத கர்மங்களால் தான் அடுத்த பிறவி அடைகிறார். இடையில் நெல்லாகப் பிறக்க எந்தக் கர்மமும் இல்லை யாகங்களில் ப்ராணி பலி பாபம் தருமா? கேள்வி–இடையில் நெல்லாகப் பிறப்பதற்குக் காரணமான பாபம் இவனிடம் இருக்கிறது. அதாவது, இஷ்டம் பூர்த்தம் தத்தம் ஆகியவற்றைச் செய்பவன் தான் ஸ்வர்கம் சென்று திரும்புகிறான். இந்த இஷ்டம் பூர்த்தம் முதலானவற்றில் சில இடங்களில் ப்ராணி ஹிம்ஸை (விலங்குகளைத் துன்புறுத்துதல்-பலி கொடுத்தல்) உள்ளது- (ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூ₄தாநி)அதாவது “எந்த ஜீவராசிகளையும் ஹிம்ஸிக்கக் கூடாது, துன்புறுத்தினால் பாபம் வரும்” என்று வேதமே சொல்கிறது. எனவே , இவனால் செய்யப்பட்ட யாகம் புண்ணியத்தைக் கொடுத்து அதனால் இவன் ஸ்வர்கத்தை அடைந்தாலும், அந்த யாகத்தின் ஒரு பகுதியாக இவன் செய்த ப்ராணி ஹிம்ஸையால் இவனுக்குப் பாபமும் ஏற்படுகிறது. அதன் விளைவாகத் தான் திரும்ப வரும் வழியில் நெல் முதலான தாவரங்களாக இவன் பிறக்கிறான் (சரீரஜை : கர்ம தோ₃ஷை : யாதி ஸ்தா₂வரதாம் நர: )அதாவது “வைதிக கர்மங்களில் உடலால் ஏற்படும் தோஷங்களின் விளைவாகத் தாவரப் பிறவியை மனிதன் அடைகிறான்” என்று வேதமே இதைக் காட்டுகிறது.வ்யாஸரின் பதில்–அடுத்த ஸூத்ரத்தில் (காம்ய கர்மங்களுக்கு பிஷ்ட விலங்கையே -மாவால் செய்த விலங்கையே பலியாகக் கொடுக்க வேண்டும் என்று ரிஷிகளும் -தேவர்கள் பிராணியையே கொடுக்கலாம் என்றும் சொல்லும் விருத்தாந்தங்கள் புராணங்களில் உண்டு) 2-அசுத்₃த₄ம் இதி சேத் ந சப்₃தா₃த்–“தூய்மை யற்றது என்றால், அல்ல, வேதம் சொல்வதால்” (ஹிரண்ய சரீர: ஊர்த்₄வ: ஸ்வர்க₃ம் லோக மேதி) அதாவது “யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட ப்ராணி தங்க மயமான உடல் கொண்டு ஸ்வர்கத்தை அடைகிறது” என்கிறது வேதம். அதே போல், (தே₃வாந் இதே₃ஷி பதி₂பி₄꞉ ஸுகே₃பி₄꞉, யத்ர யந்தி ஸுக்ருத꞉ ந து₃ஷ்க்ருத꞉) அதாவது “நீ அழிய வில்லை , உயர்ந்த பாதைகளால் தேவர்களை அடைவாய், புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே செல்லக் கூடிய ஸ்வர்கத்தை அடைவாய்” என்று மந்த்ரமும் கூறுகிறது. எனவே , இந்த பலி ஹிம்ஸை ஆகாது. (கிருஷ்ண அநு ஸ்மரணம் -பிராயச்சித்தம் -பண்ணுகிறோம்) வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல் (தைத்ரிய பிராமணமும் –நா வா வு ஏதன் ம்ரியதே ந ரிஷ்யசி தேவான் இதேஷி பதிபி ஸூ கேபி மேல் நிலைகளின் விவரம்-இந்த ஜீவாத்மா நெல் முதலானவற்றை அடையும் போது அவையாகப் பிறப்பதில்லை , முன்னால் சொல்லப்பட்ட ஆகாசம் முதலானவற்றில் போல் ஒட்டிக் கொள்கிறார், என்று முதல் ஸூத்ரத்தில் கூறினார். அடுத்த ஸூத்ரத்தில், இதற்குப் பின்னால் உள்ள நிலைகளைக் கொண்டு இதை நிரூபிக்கிறார். 3-ரேதஸ் ஸிக்₃யோக₃: அத₂- “அடுத்து ரேதஸ்ஸை செலுத்துபவனோடு தொடர்பு(கூறப்பட்டுள்ளதால்)” ஆகவே , முன்னால் ஆகாசம் முதலானவற்றிலும், பின்னால் உணவு உண்பவர்-ரேதஸ்ஸை செலுத்துபவரோடும் சேர்க்கை தான் சொல்லப் பட்டுள்ளதால், நடுவில் சொல்லப் பட்ட நெல் யவை முதலானவற்றிலும் ஜீவாத்மா ஒட்டிக் கொள்கிறார் என்று கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். அவையாகப் பிறக்கிறார் என்று சொல்வது பொருந்தாது. 4–யோ நே : சரீரம்– “பெண்ணின் கருவை அடைந்த பிறகு தான் சரீரம்” ஆக இவ்வாறு இந்தப் பாதத்தில் மரணமடையும் ஒரு ஜீவன் திரும்பப் பிறப்பதற்குள் எந்தெந்த விதமான துன்பங்களை அநுபவிக்கிறார் என்று காட்டி, அதன் மூலம் இந்த ஸம்ஸாரத்தில் வைராக்யத்தை விளைக்கிறார் வேத வ்யாஸர். இந்தப் பாதத்தில் ஜீவனுக்கு ஸம்ஸார பந்தம் உண்மையானது என்று கூறுவதால் – இப்பாதத்தில் ஆறு அதிகரணங்களின் பொருள்களை 1-ததந்திர பிரதிபத்த்ய அதிகரணத்தில் தேஹத்தை விடும் ஜீவன் பூத ஸூஷ்மங்களுடன் போகிறான் என்றும் —————————————————————— ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸூஹ்ருத துஷ்ஹ்ருதே ஏவ-ரமணீய சரணா கபூ சரணா என்னும் ஸ்ருதியில் புண்ய கர்மாவை ஆசரிக்கிறான் பாப கர்மாவை ஆசரிக்கிறான் என்ற பிரயோகம் போலே சரண ஸப்தத்தாலே ஸூஹ்ருத துஷ்ஹ்ருத கர்மங்களே குறிக்கப்படுகின்றன-அது தவிர ஸதாசார துராசாரங்கள் குறிக்கப் படுவது இல்லை-இது பாதரி -என்பது பாதிரி முனிவர் திரு உள்ளம்-இதுவே ஸூத்காரரின் திரு உள்ளமும்
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4–என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.–அதே போல் இனி யாம் உறாமை என்ற வைராக்யம் வருவதற்காகவே இந்தப் பாத ஆராய்ச்சி –
முதல் அதிகரணத்தில் இஷ்டம் (தேவர்களைக் குறித்துச் செய்ய வேண்டிய கர்மங்கள்), பூர்தம் (மனிதர்களைக் குறித்துச் செய்ய வேண்டிய கர்மங்கள்), தத்தம்(தானம்) ஆகியவற்றை இந்த உலகத்தில் செய்த ஒரு ஜீவாத்மா ஸ்வர்கம் முதலானவை வழியாக எப்படி மறுபடியும் மனிதப் பிறவியை அடைகிறார் என்று கூறப் பட்டது. இரண்டாம் அதிகரணத்தில், அவர் ஸ்வர்கத்திலிருந்து திரும்ப வரும் போது மீதமுள்ள கர்மங்களோடு சேர்ந்து தான் வருகிறார் என்று நிரூபிக்கப் பட்டது. இந்த அதிகரணத்தில், இஷ்டம் பூர்தம் தத்தம் முதலானவற்றைச் செய்யாதவர்களும் ஸ்வர்கத்தை அடைகிறார்களா ? இல்லையா? என்று ஆராயப் படுகிறது.
1–அநிஷ்டாதி₃காரிணாம் அபி ச ச்ருதம்“–இஷ்டா பூர்த்தம் செய்யாதவர்களுக்கும்(ஸ்வர்கத்தை அடைவது) சொல்லப் பட்டுள்ளது
(வேதத்தில்) யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி,சந்த்₃ர மஸமேவ தே ஸர்வே க₃ச்ச₂ந்தி–கௌஷீதகீ உபநிஷத் -1-2-–“யாரெல்லாம் இந்த உலகத்தில் மரணமடைந்து புறப்படுகிறார்களோ , அவர்கள் அனைவரும் சந்த்ர லோகத்தை (ஸ்வர்கத்தை ) அடைகிறார்கள்” என்று வேதம் கூறுகிறது. எனவே இஷ்டா பூர்த்தம் செய்யாதவர்களுக்கும் ஸ்வர்கம் உண்டு –
பதில்–அடுத்த ஸூத்ரத்தில்
2- ஸம்யமநே து அநுபூ₄ய இதரேஷாம் ஆரோஹ அவரோஹௌ தத்₃ க₃தி த₃ர்சநாத்
இதரேஷாம்– இஷ்டம் பூர்த்தம் முதலானவற்றைச் செய்யாதவர்களுக்கு
ஆரோஹ அவரோஹௌ–சந்த்ரனுக்கு ஏறிச் செல்வதும் அங்கிருந்து திரும்ப வருவதும்
ஸம்யமநே அநுபூ₄ய து–யமனுக்கு வசப்பட்டு அவன் கொடுக்கும் துன்பங்களை அநுபவித்த பிறகு தான்
தத்₃க₃தி த₃ர்சநாத்– பாபத்தைச் செய்பவர்கள் நரக லோகம் செல்வது வேதத்தில் சொல்லப் பட்டுள்ள படியால்.
அயம் லோகோ நாஸ்தி பர:, இதி மாநீ புந : புந: வசம் ஆபத்₃ யதே மே–கட உபநிஷத்–
“இந்த உலகிலோ மேலுலகத்திலே உண்மையான ஸுகம் இல்லை , இதை அறியாமல், இவ் வுலகத்திலேயே நல்ல ஸுகம் உள்ளது என்று தவறாக நினைத்திருப்பவன் திரும்பத் திரும்ப என் வசத்தில் சிக்குகிறான்”-தைத்ரீய ஆரண்யகம் -2-1-வைவஸ்வதம் சங்கமனம் ஜனா நாம் யமம் ராஜா நாம் –(விவஸ்வான் -சூர்ய பகவானின் மகன் -யமன் -கர்மத்துக்குத் தக்கபடி சேர்க்கக்கப் படுகிறார்கள்)
பராசர மஹரிஷி(ஸர்வம் சைதே வசம் யாந்தி யமஸ்ய ப₄க₃வன் கில-ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் -3-7-5–) அதாவது “இவர்கள் அனைவருமே யமனுக்கு வசப்பட்டுப் போகிறார்கள்” என்கிறார்.
பாபிகள் தண்டனை பெருவதற்காக ரௌரவம் முதலான ஏழு நரகங்கள் (ரௌரவம் மஹா ரௌரவம் தாபனம் அவீசி சம்ஹாரம் கால சூத்ரம் கும்பீபாகம் ஆகிய) உள்ளன என்கின்றன ஸ்ம்ருதிகள். எனவே பாபிகள் நரகம் சென்று துன்பங்களை அநுபவித்து விட்டு, அதற்குப் பின் சந்த்ர லோகம் செல்வர்.
பதில்– அடுத்த ஸூத்ரத்தில்
5–தத்ராபி தத்₃ வ்யாபாராத் அவிரோத₄:
தத்ராபி– அந்த ரௌரவம் முதலான ஏழு நரக லோகங்களிலும் கூட
தத்₃ வ்யாபாராத்– யமனுடைய ஆணையால் தான் ஜீவாத்மா சென்று துன்பப் படுகிறார்;
அவிரோத₄:- அதனால் எந்த முரண்பாடும் இல்லை –
6–வித்₃யா கர்மணோ : இது து ப்ரக்ரு தத்வாத்”
வித்₃யா கர்மணோ : – வித்யை மற்றும் கர்மத்தின் பயனை அநுபவிக்கத் தான்(தேவ யாநம் பித்ரு யாநம் இரண்டும்) இது து–என்கிற படியால் (இஷ்டா பூர்த்தம் செய்யாதவர்கள் சந்த்ர லோகம் செல்வதில்லை );
ப்ரக்ரு தத்வாத்–(அந்த வழிகளைப் பற்றிப் பேசும் போது) வித்₃யையும் கர்மமும் சொல்லப் பட்டுள்ள படியால்.
கேள்வி–இந்த உலகத்திலிருந்து புறப்படுபவர்கள் எல்லாரும் சந்த்ர லோகம் செல்கிறார்கள் என்று வேதம் சொன்னதே ?
பதில்–அந்த வாக்கியத்துக்கு“இஷ்டா பூர்த்தங்களைச் செய்து இந்த உலகத்திலிருந்து புறப்படுபவர்கள் எல்லாரும்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். எனவே , எந்த முரண்பாடும் இல்லை .
கேள்வி–பஞ்சாக்நி வித்யையில் ஐந்து ஆஹுதிகளுக்குப் பிறகு தான் ஒரு ஜீவாத்மாவுக்கு உடல் பிறவி ஏற்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதில் முதல் ஆஹுதியே ஸ்வர்கத்தை அடைவது தான். அநிஷ்டாதிகாரிகள் (இஷ்டா பூர்த்தங்களைச் செய்யாதவர்கள்) ஸ்வர்கத்துக்கே போவதில்லை என்றால் அவர்களுக்கு ஐந்து ஆஹுதிகள் இல்லை என்றாகும்;அப்படி யானால் அவர்கள் அடுத்த பிறவியையே அடைய முடியாதே ?
பதில்– அடுத்த ஸூத்ரம் –
7–ந த்ருதீயே ததா₂ உப லப்₃தே ₄:– “மூன்றாவதுக்கு இல்லை , அவ்வாறு காண்கிற படியால்”
த்ருதீயே –“மூன்றாவது விதமான மனிதர்களுக்கு”.
மனிதர்களில் மூன்று விதமானவர்கள் உள்ளார்கள். முதல் விதம் மோக்ஷம் அடைவதற்காக உபாஸநம்(பக்தி யோகம்) செய்பவர்கள். இரண்டாவது விதம்-இஷ்டா பூர்த்தங்களைச் செய்து அதன் மூலம் ஸ்வர்கம் அடைபவர்கள். மூன்றாவது விதம்–உபாஸநத்தையோ இஷ்டா பூர்த்தங்களையோ செய்யாமல், உலகத்தில் பாபத்தை மட்டுமே சேர்ப்பவர்கள். “அப்படிப் பட்ட பாபிகளுக்கு”என்று இங்கு பொருள்.
ந –“(உடல் உண்டாவதற்கு ஐந்து ஆஹுதிகள்) தேவையில்லை
ததா₂உப லப்₃தே ₄:- “அவ்வாறு(வேதத்தில்) காணப் படுகிற படியால்”
அதற்குத் தானே பதில் கூறும் போது“ (“அத₂ ஏதயோ ꞉ பதோ ₂꞉ ந கதரேண சந, தாநி இமாநி க்ஷுத்₃ராணி அஸக்ரு₃தா₃ வர்த்தீநி பூ₄தாநி ப₄வந்தி, ஜாயஸ்வ ம்ரியஸ்வ இதி । ஏதத் த்ருதீயம் ஸ்தா₂நம் । தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே ॥) அதாவது“தேவ யாநம் பித்ரு யாநம் என்ற-இரண்டு வழிகளாலும் செல்லாதவர்கள், புழு பூச்சி முதலான மிகத் தாழ்ந்த பிறவிகள் திரும்பத் திரும்பப் பிறந்து பிறந்து மரணமடைகிறார்கள், இவர்கள் பாபிகள்,இவர்கள் ஸ்வர்கத்தை அடைவதில்லை ” என்று கூறப் பட்டுள்ளது. அதனால் உடல் பிறவுக்கு ஐந்து ஆஹுதிகள் அவசியமல்ல–
8–ஸ்மர்யதே அபி ச லோகே–“ஸ்ம்ருதிகளிலும் உலகத்திலும் காணப் படுகிறது”
சிறந்த புண்ணியம் செய்தவர்களில் சிலர் கூட ஐந்து ஆஹுதிகள் தேவைப்படாமலேயே பிறக்கிறார்கள் என்று ஸ்ம்ருதிகளிலும் உலகத்திலும் காண்கிறோம்.
எடுத்துக் காட்டுக்கு–த்₃ரௌபதீ₃, த்₃ருஷ்டத்₃யும்நன் முதலானவர்கள் ஹோம குண்டத்திலிருந்து பிறந்த படியால் ஐந்து ஆஹுதிகளைக் கடந்து ஆண்-பெண் சேர்க்கையால் பிறக்கவில்லை – அதே போல் பாபம் செய்தவர்களும் ஐந்து ஆஹுதிகளின் தேவை இல்லாமலேயே உடல் பிறவியை அடையலாம்.-
ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி உடல் பிறவி கண்டிப்பாக ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டதே தவிற , ஐந்து ஆஹுதிகளைத் தாண்டி வந்தால் மட்டும் தான் உடல் பிறவி என்று சொல்லப்பட வில்லை –
தேஷாம் க₂லு ஏஷாம் பூ₄தாநாம் த்ரீணி ஏவ பீ₃ஜாநி ப₄வந்தி, ஆண்ட₃ஜம் ஜீவஜம் உத்₃பி₄ஜ்ஜம் இதி”–சாந்தோக்யம் -6-3-1-—“எல்லா ஜீவராசிகளின் பிறப்பும் மூன்று வகைகளில் அடங்கும்–முட்டையிலிருந்து பிறப்பது, கர்ப்பை யிலிருந்து பிறப்பது, முளையிலிருந்தோ வியர்வையிலிருந்தோ பிறப்பது என்று”
இதில், முளையிலிருந்து பிறக்கும் செடி கொடிகளும்(உத்₃பி₄ஜ்ஜம்) வியர்வை யிலிருந்து பிறக்கும் புழு பூச்சிகளும் (ஸ்வேத₃ஜம்) ஐந்து ஆஹுதிகளும் ஆண்-பெண் சேர்க்கையும் இல்லாமலேயே பிறக்கின்றன என்கிறது வேதம்.
பதில் -அடுத்த ஸூத்ரம்
-10-த்ருதீய சப்₃த₃ அவரோத₄: ஸம் சோகஜஸ்ய
ஸம் சோகஜஸ்ய-ஸ்வேத₃ஜம் அதாவது வியர்வை யிலிருந்து பிறப்பவை – .
த்ருதீய சப்₃த₃ அவரோத₄:– மூன்றாவது சொல்லான ’உத்₃பி₄ஜ்ஜம்’ என்பதாலேயே குறிக்கப்படுகிறது.
தத் ஸ்வாபா₄வ்யாபத்தி: – அவற்றோடு ஒற்றுமையை மட்டுமே அடைகிறார்(அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்)
உபபத்தே :– பொருத்தத்தால்
ஜீவாத்மா ஸ்வர்கத்திலும் பூமியிலும் தனது கர்மங்களின்(பாப-புண்யங்களின்) விளைவான இன்ப துன்பங்களை அநுபவிக்கத் தான் வருகிறார். எனவே அவ்விடங்களில் அவர் உடல் பிறவி எடுப்பது பொருத்தமானதே . ஆனால் ஆகாசம் வாயு முதலானவற்றை அடைவது இன்ப துன்பங்களை அநுபவிப்பதற்காக அல்ல, பூமிக்குத் திரும்பும் வழியில் உள்ள படியால் அவ்விடங்களை அடைகிறார், அவ்வளவே . எனவே , அங்கு அவர் உடல் பிறவி எடுப்பதில்லை என்பதே பொருத்தமானது.
சிரம் என்றால் நீண்ட காலம் .
அதி சிரம் என்றால் மிகவும் நீண்ட காலம் .
’ந அதிசிரேண’என்றால்’மிகவும் நீண்ட காலம் இல்லாமல்’ என்று பொருள். எனவே , ஜீவாத்மா ஆகாசம், வாயு, புகை , மேகம் என்ற நிலைகளில் நீண்ட நேரம் இருப்பதில்லை , சிறிது நேரம் இருந்து விட்டு அடுத்தடுத்த நிலைகளை அடைந்து விடுகிறார்.
இதற்குக் காரணம் சொல்லுகிறார்–“விஸேஷாத்” –“சிறப்பு உள்ளதால்”என்று. ஆகாசம், வாயு, புகை , மேகம் என்ற நிலைகளைக் கடந்த பிறகு அந்த ஜீவாத்மா நெல், ரவை , எள், உளுந்து, மரங்கள், செடி கொடிகள் முதலானவற்றில் சேர்கிறார் என்று சொல்லி விட்டு, (அதோ வை க₂லு து₃ர் நிஷ் ப்ரப தரம்-சாந்தோக்யம் -5-10-6-(ப்ரபத தரம் -என்பதை சுருக்கி ப்ரபத தரம்)-சிரமப்பட்டு அரிசியில் இருந்து வெளியேறுகின்றான்) அதாவது “இந்நிலை தான் தாண்டுவதற்கு மிகவும் கடினமானது”என்று வேதமே கூறுகிறது. உணவுப் பொருள்களில் இருக்கும் ஜீவாத்மா ஒரு ஆணால் உண்ணப் படுவதே அரிது, பின் கழிவோடு வெளி வராமல் உடலில் சேர்ந்து ரேதஸ்ஸாக மாறுவதும் மிகவும் அரிது. எனவே தான் வேதம் இவ்வாறு கூறிற்று.
இதிலிருந்து, இதற்கு முன்னால் இருந்த நிலைகள் தாண்டுவதற்கு எளிதானவை என்று தெரிவதால், அந்த முன் நிலைகளில் ஜீவாத்மா வெகு காலம் இருப்பதில்லை என்று தெரிகிறது. இதுவே வ்யாஸரின் அபிப்ராயம்.
அந்யாதி₄ஷ்டி₂தே –வேறொரு ஜீவாத்மாவால் அதிஷ்டானம் செய்யப்பட்டவற்றில் (ஒட்டிக் கொள்கிறார்)-(தே ஏழாம் வேற்றுமை உருபு-)
பூர்வவத்--முன் போல் (ஆகாசம் வாயு புகை மேகம் ஆகியவற்றைப் போல்)
அபி₄லாபாத்–(கர்மத்தைப் பற்றின பேச்சு இல்லாமல்) சொல்கிறபடியால்
அசுத்₃த₄ம்–(வைதிக கர்மங்கள் புண்ணியத்தோடு கூட பாபத்தையும் கொடுப்பதால் அவை ) அசுத்தமானவை
இதி சேத் ந–என்று நீங்கள் கூறினால், அது தவறானது
சப்₃தா₃த்– (யாகத்தில் செய்யப்படும் ப்ராணி பலி ஹிம்ஸையே அல்ல என்று) வேதம் சொல்கிறபடியால்.
துன்பத்தை மட்டுமே தரக் கூடிய ஒரு செயல் தான் ஹிம்ஸை எனப்படுகிறது. இப்போது துன்பத்தை அளித்தாலும் பிற் காலத்தில் மிகுந்த நன்மை தரும் செயல் ஹிம்சை ஆகாது–மருத்துவர் செய்யும் அருவை சிகிச்சை போலே–
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே— 5-4-அறிவை சிகிச்சை ஹிம்ஸையாகாதே
எத்ர யந்தி ஸூ க்ருதோ நாபி துஷ்க்ருத தத்ர த்வா தேவ சவிதா ததாது என்று-சவிதா என்னும் ஸூர்யன்
அந்த மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இடம் அழைத்துச் செல்வான் -என்றதே-)
இந்த ஜீவாத்மா நெல் முதலானவையாக ஆகிறார் என்று கூறிய பிறகு வேதம் இவ்வாறு கூறுகிறது– (யோ யோ ஹி அந்நம் அத்தி யோ ரேதஸ் : ஸிஞ்சதி, தத்₃ பூ₄ய ஏவ ப₄வதி-சாந்தோக்யம் -5-10-6-) “யாரெல்லாம் உணவு உண்கிறார்களோ , ரேதஸ்ஸைச் செலுத்துகிறார்களோ , அடுத்து அவர்களாக ஆகிறான்”உணவுப் பொருளில் இருக்கும் ஜீவாத்மா உணவை உண்பவராக இருக்க முடியாது, ரேதஸ்ஸில் இருக்கும் ஜீவாத்மா ரேதஸ்ஸைச் செலுத்துபவராக இருக்க முடியாது. எனவே , இந்த இடங்க்களில் எல்லாம்“அவர்களாக ஆகிறான்” என்று சொல்லப் பட்டிருந்தாலும், “அவர்களோடு தொடர்புடையவன் ஆகிறான்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும். நேரடியான பொருள் பொருந்தாத படியால், இரண்டாம் பக்ஷமான பொருளைத் தான் கொள்ள முடியும்.
ஆணின் உடம்பில் ரேதஸ்ஸாக ஆன ஜீவாத்மா, பெண்ணின் உடலுக்குள் சென்று கருவாக ஆகும் போது தான் உடலை எடுத்துக் கொள்கிறார், ஏனென்றால் அப்போது தொடங்கித் தான் இவர் இன்ப துன்பங்களை அநுபவிக்கிறார். எனவே , அதற்கு முன்னால் நெல் முதலானவையாக இருக்கும் நிலையிலும் இந்த ஜீவாத்மா உடல் பிறவி எடுக்கவில்லை –
சாங்க்யர்கள் -மித்யா வாதிகள் மதங்கள் நிரசிக்கப் பட்டவை ஆகின்றன –
2-க்ருதாத்ய யாதிகரணத்தில் -ஸ்வர்க்கத்தை அனுபவித்த ஜீவன் போன வழியிலும் வேறு வழியிலும் திரும்புகிறான் என்றும்
3-அநிஷ்டாதிகார்யாதிகரணத்தில் நரகம் அடைந்தவர்களுக்கு சந்த்ர பிராப்தி இல்லை என்றும்
4-தத் ஸ்வா பாவ்யாபத்த்யதிகரணத்தில் ஆகாசாதிகளுடன் ஸாம்யமே தவிர ஆகாசாதிகளாக ஜென்மம் இல்லை என்றும்
5-நாதிசிராதி கரணத்தில் -ஆகாசாதிகளில் இருந்து சீக்கிரம் இறங்குகிறான் என்றும்
6-அந்யா திஷ்டிதாதி கரணத்தில் -பர சரீர பூதமான வ்ரீஹ் யாதிகளிலே ஸம்பந்தம் மாத்ரமே
என்றும் விளக்கப்பட்டன என்று ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply