ஸ்ரீ த்ரிம்சத் ப்ரஸ்ந உத்தரம்-ஸ்ரீ பழ நடை விளக்கம்‌-ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமிகள்-

ஸ்ரீ அண்ணா அப்பங்கார் ஸ்வாமி செய்தருளிய ப்ரபந்தங்கள்.
க. ஸ்ரீ வசந பூஷண வ்யாக்யாநத்திற்கு அரும் பதம்.
உ.தத்வ ஸார வ்யாக்யாநம்.
3-ஸூக்தி ஸாதுத்வ மாலிகை
ச. வச ஸூதா மீமாம்ஸை.
ரு .நியாய மந்திரம்.
சு. ஸ்ரீதத்வஸூ
எ .லஷ்மீ மங்கள தீபிகை.
இவை முதலானவை இன்னும் 30 க்ரந்தங்களுண்டு

பழநடைவிளக்கம் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஆச்சாரியர்களின் மரபு, வழிமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் ஒரு முக்கிய நூலாகும். இந்த நூலை திருமழிசை அண்ணா அப்பங்கார் சுவாமி அருளிச்செய்துள்ளார்.

வேதாந்தாசார்யர், குரு பரம்பரையிலெங்கே யிருந்து பிரிவென்றில் –
எம்பெருமானார், கிடாம்பி யாச்சான், கிடாம்பி ராமாநுஜாசார்யர், ஸ்ரீரங்க ராஜ குரு, கிடாம்பி யப்புள்ளார், வேதாந்தாசார்யர், என்று க்ரமமாகையாலே கிடாம்பி யாச்சான் வகுப்பிலே பிரிவு. அதிலிவர் திருவடிகளிலே யாச்ரயித்தவர் நயிநாராசார்யரும் ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்.அதில் ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் திருவடிகளிலே யாச்ரயித்தவர் வாத்ஸ்ய வரதாசாரயர். அவரை யாச்ரயித்தவர் வரத விஷ்ணவாசார்யர். அவரை யாஸ்ரயித்தவர் தயாதீசகுரூத்தமர். அவரை யாஸ்ரயித்தவர் ந்ருஸிம்மாசார்யர். அவரை யாச்ரயித்தவர் வரதாசார்யர் . அவரை யாஸ்ரயித்தவர் பராங்குசார்யார். அவரை யாச்ரயித்தவர் தாதாசார்யர் . அநந்தரம் ராமானுஜாசார்யர். அநந்தரம் ஸ்ரீ வேங்கடா சார்யர்.அநந்தரம் ஸ்ரீவீரராகவாசார்யர். அநந்தரம்ஸ்ரீரங்கபதி தேசிகர். அநந்தரம்ஸ்ரீ
ரங்கநாதாசார்யர், அநந்தரம் ஸ்ரீதத்வ ஸித்தாஞ்சந நிர்னமாதிரு வேதாந்த ராமாநுஜ ஜீயர். அநந்தரம் கோபாலாசார்யர், அநந்தரம் வேதாந்த ராமாநுஜ ஜீயர்
இவர்களுக்குள் சிலருக்கு தப்த சக்ராங்கனமும் க்ரந்தமுமுண்டு. சிலருக்கு க்ரந்த மாத்ரம் வேதாந்தாசார்யர் ஸம்ரதாயத்திலே யென்று சொல்லுவார்கள். ப்ரம்ம தந்த்ர ஜீயர் துடங்கி ஜீயர்கள் க்ரமமாக வந்த மடம் பிரம்ம தந்தர ஜீயர் மடமென்று சொல்லுவர்கள். வேதாந்தாசார்யர் தம்முடைய சிஷ்யரான ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயருக்கு தம்முடைய திருவாராதநமானஸ்ரீ ஹய க்ரீவரை யெழுந்தருளப் பண்ணிக் கொடுத்தாரென்று சொல்லுவர்கள். இவருக்கு பிதா அநந்தாசார்யர். அவருக்கு பிதா புண்டரீகாக்ஷயஜ்வா.
வேதாந் தாசார்யர் குடி தூப்பில். அவதார ஸ்தலம் பெருமாள் கோவில் . அவதரித்த
வருஷம் கலி யுகத்தில் சகாப்தம் ஆயிரத்து நூற்றுத் தொண்ணூத்திரண்டாவதான சுக்ல வர்ஷம். திருநாட்டிற் கெழுந்தருளினது சகாப்தத்தில் ஆயிரத்தி யிரு நூற்றி முப்பத்திரண்டாவதான சவ்ம்ய வருஷம்.

ஆதி வண் சடகோப ஜீயர் மடத்திலவர் விஷயமான ஏக விம்சதி ப்ரஸ்நோத்தரம் எங்ஙனே யென்றில் :-பெரிய வாச்சான் பிள்ளை துடங்கி யாதி வண் சடகோப ஜீயரளவும் இப்பால் மூன்று நான்கு பட்டத் தளவிலும் திரு விலச்சினை விஷயமாகவும் கிரந்த விஷயமாகவும் பெரிய வாச்சான் பிள்ளை யொன்றே யாகக் கலப்பற்று நடந்து வந்தது. இப்பால் ருசி பேதத்தாலே ஸ்ரீ ரகஸ்ய த்ரய ஸாரம் ஸ்வாசார்ய ஸம்பிரதாய விருத்தமே யாகிலும் அத்தை யதிகரித்துக் கொண்டு போந்து ததனுகுண ப்ரதிபத் யநு வர்த்தனமும் பண்ணிக் கொண்டு போந்தார்கள். இப்படி யிருந்தாலும் யைந்த் யுத்ஸவ தத் பாரணாதி விஷயங்களிலே ஸம்பரதாயாத்திலங்கம் பண்ணினார்களில்லை. ஈடு முப்பத்தாறாயிரம் முதல் திருமந்திரார்த்த விஷயமான முமுஷுப்படி பர்யந்தமான பூர்வ ஸம்பரதாய கிரந்தங்களையும் விட்டார்களில்லை. ஆகையால் இப்படி உபய ஸம்ப்ரதாய மிச்ரராயிருப்பர்கள். இந்த ஆதி வண் சடகோப ஜீயருடைய மடம் மணவாள மா முனிகளுடைய நியமநத்தாலே யுண்டாய்த்த தென்று தத் ஸம்ப்ரதாயஸ்தருஞ் சொல்லுவார்கள். ஆதி வண் சடகோப ஜீயர் திரு நாராயண புரத்திலே செல்வப் பிள்ளை ஸன்னிதியிலே மணவாள மா முனிகளைத் திருப்ரதிஷ்டை பண்ணி வைத்து தனிக் கோவிலும் கட்டி வைத்தா ரென்றும் சொல்லுவார்கள்
இவர் திருநக்ஷத்ரம் புரட்டாசி கேட்டை

இந்த மடத்தில் வடகலையார் ப்ரவேச விஷயமான ப்ரஸ்நத்திற்கு உத்ததரம்:- முன்னெழுதிய நாலு மூன்று பட்டத்திற்கிப்பால் வரவர ஸஹவாஸ விசேஷத்தாலும் ருசி விசேஷத்தாலும் புண்டர பேதமும் ஸம்ப்ராதாய விருத்தமாக மடத்து சிஷ்யர்கள் ஏகாதசீச் ராத்தாதிகள் பண்ணிக் கொண்டு வர,அத்தை நிவாரியாமல் ராமானுஜ தயா பாத்ரத்தையுங் கூட்டி யநுஸந்தித்துக் கொண்டும் போருகையாலே இந்த மடத்திலே வடகலையார்கள் பிரவேசித்தார்களென்றும்படி யிருந்தார்களல்லது பெரிய வாச்சான் பிள்ளையோடே திருவிலச்சினை ஸம்பந்தமற்ற சுத்த வடகலையார் இந்த மடாதிபதிகளாய் இருப்பதில்லை.

அநந்தரம் ப்ரம்ம தந்த்ர ஜீயர் மடத்திற்கும் பரகால ஜீயர் மடத்திற்கும் நிஷ்பத்தி க்ரம ப்ரஸ்நத்திற்குத்தரம் எங்ஙனே யென்றில் – வேதாந்தாசார்யர் திருவடிகளிலே யாச்ரயித்த பேரருளாளயனென்கிறவர் அவர் ஸன்னிதியிலே ஸகல சாஸ்த்ரங்களை யுமதிகரித்து வேதாந்தத்திலே அதி நிபுணராயிருக்கையாலே நீர் ப்ரம்ம தந்த்ர ஸ்தந்ரரென்று வேதாந்தாசார்யராலே திருநாமஞ் சாற்றப் பட்டு பின்பு ஸந்யஸித்து ஆசார்ய பரதந்த்ரராயிருந்தார். இவருக்கு
வேதாந்தாசார்யர் தம்முடைய ஹயக்ரீவரை யெழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் . பரம்ம தந்திர ஜீயரும் பின்பொரு ஜீயருக்கு ஹயக்ரீவரை யெழுந்தருளப் பண்ணிக் கொடுக்க அன்று முதல் அவர் நியமனத்தாலே அந்த மடம் நடந்து வருகிறது. இந்த ஜீயர்களுடைய திரு முடி வர்க்கம் வண் சடகோப ஜீயர் மடத்திலே பிரிவு.இதை பரகால ஜீயர் மடமென்று வண் சடகோப ஜீயர் மடத்தார் சொல்வார்கள்-

அநந்தரம் முனி த்ரயமென்று லோகத்தில் வ்யவஹரிக்கிற வேதாந்த ராமாநுஜ ஜீயரவர்களுக்கும் வண் சடகோப ஜீயரவர்களுக்கும் மடத்தாருக்கும் ஆசார பேத மென்னென்ன வித்யாதி ப்ரச்நோத்தரம்–எங்ஙனே யென்றில் –
முனி த்ரய ஸம்பரதாயத்தில் அவர்கள் ஸ்ரீஜயந்தி விஷயத்திலே ஸர்வ வித வேதாத்யாகம் வைஷ்ணவர்களுக்கு ஆவஸ்யகமா யிருக்க, சந்த்ரோதய வேதா த்யாகம் மாத்ரம் ஆவஸ்யகம்,மற்றை வேதாதோஷமன்றென்றும்; அஹோ ராத்ரம் உபவாஸமும் மற்றை நாள் பாரணையும் ;ஸ்ரீராம நவமி விஷயத்திலும் ந்ருஸிம்ம ஜயந்தீ விஷயத்திலும் அஹோராத்ரோபவாஸமும் மற்றை நாள் பாரணையும் ; ஸ்ரீ தத்வ விஷயத்தில் ஈச்வர தத் வாந்தர்ப்பாவமும் ஐச்சிக பகவச் சேஷத்வமும்; பர நியாஸ விஷயத்தில் பிராட்டிக்குப் ப்ரயோக பேதேந ஸம பிரதாந்யேநோத்தேசயத்வமும் விசேஷண விசேஷ பாவேந உத்தேச்ய த்வமும்; இன்னும் சில பேதங்களையுங் கொள்ளுவர்கள் -வண் சடகோப ஜீயர் ஸம் ப்ரதாயஸ்தர் ஐயந்தீ விஷயத்தில் ஸர்வ வேதா த்யாகமும் ராத்ரியிலே உத்ஸவாந்தத்திலே பாரணையும் ந்ருஸிம்ம ஜயந்தியிலே ஸாயங்கால மானவாறே உத்ஸவாந்தத்தில் பாரணையும் ஸ்ரீராம நவமி விஷயத்தில் திவாப் பாரணையும் பிராட்டி விஷயத்தில் வேதா தாசார யோக்த பஞ்சகங்களிலே
த்விதீய பக்ஷமும் பிராட்டிக்கு வயாஸஜ்ய விருத்யுபாயத்வமாதல் ஸம ப்ராதாங்யேந ப்ராத்யேகருத்யு பாயவமாதல் விசேஷண விசேஷயாவே உபா யத்வமாதல் விசேஷ்ய கதோபாயத்தில் லஷணமான விசேஷணோபாயத்வ மாதவில்லை; பின்னை புருஷகாரத்வ மாத்ரமுள்ளது என்றுங் கொள்ளுவர்கள்.
இன்னுமிரண்டு மடஸ்தர்களுக்கும் ப்ரபத்தி ப்ரயோகாதிகளிலும் பேத முண்டு. இந்த விரண்டு மடஸ்தர்களுக்கும் பரகால ஜீயர் மடஸ்தர்களுக்கும் தத்வ விஷயத்திலும் பேதமுண்டு. எங்ஙனே யென்றில் – பரகால ஜீயர் ஸம்பரதாயஸ்தர் பிராட்டிக்கு ப்ரம்மத்வமும் ஜகதி யாபாரமும் நிக்ரஹ கர்த்ருத்வமாகிற தத்வ விஷயத்தில் ப்ரகார பேதமும் யதிவந்தந விஷயத்தில் ஆசாரயனான க்ரஹியையுங் கூட யதியானவன் வந்தநம் பண்ணக் கூடாதென் றித்யாத்யாசார பேதங்களுங் கொண்டார்கள். கீழ்ச் சொன்ன விரண்டு ஸம்ப்ரதாயஸ்தரும் இவை யொன்றுங் கொண்டார்களில்லை.ஆகையா லிந்த ஸம் பரதாயத்திற்கு தத்வவிஷயத்திலும் ஆசார விஷயத்திலும் பரஸ்பர பேத முண்டு.

தென்னாசார்யர்களிலே யிப்படி தத்வ விஷயத்திலும் ஆசார விஷயத்திலும் பேத முண்டோ வென்கிற த்ரயோ விம்சதி ப்ரச்நோத்தரம். எங்ஙனே யென்னில் -கீழ்ச் சொன்னவர்களைப் போலே தத்வ விஷயத்திலும் ஆசார விஷயத்திலும் நிபந்த க்ரந்தங்களிலே அநுவாதமும் தூஷணமும் பண்ணும்படியான ப்ரபல விரோத மொன்றுமில்லை. கிந்து, ஸ்ரீபாத தீர்த்த க்ரஹண விஷயத்தில்
த்விவாரமென்று வானமாமலையார். திரிவாரமென்று கந்தாடையார். இங்ஙனே ஸூஷ்ம பேதங்கள் சிலதுண்டு.

சதுஸ்ஸப்தி பீடஸ்த விஷயமான சதுர் விம்சதி ப்ரச்நோத்தரம் எங் ஙனேயென்றில் –
ஆளவந்தார் திருப்பேரனாரப் பிள்ளையப்பன்-க.
பெரியநம்பி குமாரர் ஸ்ரீபுண்டரீகர்-உ.
திருக் கோட்டியூர் நம்பி குமாரர் தெக்காழ்வான்-
திருமலை யாண்டான் குமாரர் சுந்திரத்தோளிணையார் -ச.
பெரிய திருமலை நம்பி குமாரர்களில் இராமாநுஜ நம்பியும்- திருமலை நம்பியும் -ரு.
கூரத்தாழ்வான் குமாரர்களான பட்டரும் ஸ்ரீ ராமப் பிள்ளையும் –
முதலியாண்டானவர் குமாரர் கந்தாடை யாண்டான்- எ.
நடுவிலாழ்வான் – அ.
கோமடத்தாழ்வான்- சூ.
திருக்கோவலூராழ்வான் – க0.
திருமோகூராழ்வான்-கக.
பிள்ளைப் பிள்ளை யாழ்வான் – உ.
நடா தூராழ்வான் – ககூ.
எங்களாழ்வான்- கசா.
அனந்தாழ்வான்- கரு.
மிளகாழ்வான் -16
நெய்யுண்டாழ்வான்- கஎ.
சேட்டலூர் சிறியாழ்வான்- கஅ. வேதாந்தியாழ்வான் -19
கோவிலாழ்வான்- உ0.
உக்கலாழ்வான் – உக
அரணபுரத்தாழ்வான் – உஉ.
எம்பார் – உங.
கிடாம்பி யாச்சான்- உச.
கணியனூர் சிறியாச்சான் -உரு .
தொங்கிலச்சான்- 26-
ஈச்சம்பாடி யாச்சான்-27
திருமலை நல்லான் -28
செட்டம்பள்ளியர்-உசு.
ஈச்சம்பாடி யர் – 30.
திருவள்ளரையர் -கூக.
ஆட்கொல்லி யர்-கூஉ.
திருநகரிப்பிள்ளை- கூகூ .
காராஞ்சி ஸோமயாஜியார் – கூசு.
அலங்கார வேங்கடவர் – உரு .
நம்பி குருந்தேவர் – கூசு.
செருப்பள்ளி தேவராஜ பட்டர் – கூ எ .
பிள்ளையுரந்தை யுடையார் – கூ அ.
திருக்குறுகைப் பிரான் பிள்ளான்- கூ க.
பெரியகோயில் வள்ளலார்4O.
திருக்கண்ணபுரத்தெச்சான்-சுக .
ஆசூரிப்பெருமாள்- சுஉ .
முனிப் பெருமாள் -சங.
அம்மங்கிப் பெருமாள்-சுசு .
மாருதிப் பெரியாண்டான்-சரு
மாறொன்றில்லா மாருதி யாண்டான்-சசு.
ஸோயாஜி யாண்டான் சஎ.
ஜீயராண்டான்- சஅ.
ஈச்வராண்டான்-சுக.
ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான் – 50 .
பெரியாண்டான் – ருக.
சிறியாண்டான்- ருஉ.
குஞ்சிப்பூர் சிறியாண்டான்- 53-
அம்மங்கி யாண்டான்-54
ஆளவந்தாராண்டான்-ருரு.
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ருகா.
தொண்டனூர் நம்பி – ருஎ .
மருதூர் நம்பி – ருஅ.
மழுவூர் நம்பி -ருசு.
திருக்குருங்குடி நம்பி-60-.
குரவிநம்பி – சுக.
முடும்பை நம்பி கூஉ.
வடுகநம்பி – 63.
வங்கி புரத்து நம்பி – காச .
ஸ்ரீ பாரங்குச நம்பி -கரு.
அம்மங்கியம்மாள்- 66
பருத்திக் கொல்லை யம்மாள் – காஎ. உக்கலம்மாள் –கூஅ.
சொட்டை யம்மாள்- 69
முடும்பை யம்மாள்- 70-
குமாண்டூர் பிள்ளை- 71-
குமாண்டூர் இளைய வில்லி – எவு.
கிடாம்பிப் பெருமாள்–73
ஆர்க்காட்டுப் பிள்ளான்–74

பாஷ்யகாரர் நாளையிலே தத்வ விஷயத்திலும் ஆசார விஷயத்திலும் அந்யோயம் ஸ்புட விரோதத்தை யுடைத்தான தென்கலை வடகலை பேதமில்லை. பின்பு வேதாந்தாசார்யர் நாளிலே ஸ்புட விரோதத்தாலே பேதமுண்டாய்த்தது. அப்போது எழுபத்தினாலு ஸிம்மாஸனாதிபதிகளுடைய வம்சஸ்தரிருந்தார்கள். அவர்களிலே சிலர் வேதாந்தாசார்யருடைய ஸம்ரதாயஸ்தராய்க் கொண்டு வடகலை யானார்கள். அவர்களாரென்றில்
பெரிய திருமலை நம்பி வம்சயர் -க.
நடுவிலாழ்வான் வம்சயர்-உ.
நடா தூராழ்வான் வம்சியர் – கூ .
கிடாம்பியாச்சான் வம்சயர் – ச .
ஈச்சம்பாடியாச்சான் வம்சயர் – ரு.
திருமலை நல்லான் வம்சியர் – சு.
ஸோமாஜி யாண்டான் வம்ச்யர் எ.
ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான் வம்ச்யர் – அ.
வங்கி புரத்து நம்பி வம்சயர் -கூ. இவர்களெல்லாரிலும் நாலு திருமாளிகையார் தென் கலையாரும்
நாலு திருமாளிகையார் வடகலையாருமாக நடந்துக் கொண்டு வருகிறது . மற்ற அறுபத்தியைந்து ஸிம்மாஸனாதிபதி வம்ச்யரில் பூர்த்தியாய்ப் போனது போக இருக்கிறவர்களெல்லாரும் அன்று முதல் இன்றளவாக தென் கலையாராகவே நடந்து வருகிறார்கள்.இதிலே பிள்ளை லோகாசார்யரும் ப்ரதிவாதி பயங்கர மண்ணனும் எழுபத்தினாலு பீடஸ்தரிலே ஒருவரான முடும்பை நம்பி யினுடைய திரு வம்ச்யரென்று சொல்லுவர்கள்.

அநந்தரம் இந்த எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளிலே ஸப்த கோத்ரத்தாரும் அஷ்ட கோத்ரத்தாரும் அந்தர்ப் பூதர். இந்த ஸப்த கோத்ர வ்யவஸ்த்தை யாருடைய நியமனத்தாலே யென்கிற பஞ்சவிம்ச ப்ரச்நத்திற்கு உத்தரம்–எங்ஙனே யென்றில் – கோயிற் கந்தாடை யண்ணனும் எரும்பியில் ஸ்ரீரங்கராஜரும் முன்பு லாட புரத்திற்கு ஸ்தாலீபாகார்த்தம் போன விடத்திலே நடந்த லாட புரஸ்தருடைய வாசார வைகல்யாதிகளையும் தமக்கு அந்த தேஹாநுபந்தத்தில் ருசி யில்லாமையையும் பெரிய ஜீயருக்கு விண்ணப்பஞ் செய்ய,அதைக் கேட்டருளிய பெரிய ஜீயரும் வைலக்ஷண்யமுடையராய் பூர்வமே பிடித்து அந்யோய ஸம்பந்த முடையராய் ஸமான ப்ரவர தோஷமில்லாம லிருக்கிற வாதூல ஹரீத ஸ்ரீவத்ஸ களண்டிய களசிக பரத்வாஜாத்ரேயகோ
த்ரஸ்தர் எழுவர்களையும் அந்யோய ஸம்பந்தம் பண்ணிக் கொண்டு வரும்படியும் கோத்ராந்தரத்திலே ஸம்பந்தம் பண்ணாதே யிருக்கும் படியும் ஏதத் கோத்ரங்களிலே குடிக் கந்தாடை முதலான வந்ய ஸம்பந்த மில்லா திருக்கும்படியும் அண்ணனையும் வேடலப்பையையும் எரும்பியிலப்பா முதலானாரையும் நியமித்து அத்தைத் தப்பாமைக்குத் தம் ஸ்ரீபாதத்திலாணை யிட்டருளினார்.இச் சேதிக்கு எரும்பி, விராலி, வேடல்-திருவிண்ணகர், திருக்குடந்தை, முறப்பாக்கம், கடிகை, கச்சிநகர்,ஸ்ரீபெரும்பூதர்,திருநறையூர், திரு எவ்வுளூர்,திருமழிசை,முதலான விடங்களில் உண்டான தாசரதி வம்ச்யரான வாதூலவருக்கும் ஸ்ரீபாஷ்யகார வம்ஸ்யரான ஹாரிதருக்கும் மற்றும் ஏததனுபந்திகளான கோத்ராந்தரஸ்தருக்கும் ஜீயர் ஸ்ரீமுகம் வர அத்தை சிரஸாவஹித்து அன்று
முதலின்றளவும் அந்த நியமனத்தாலே நடந்து வருகிறது

இந்த நியமனத்திற்குட்பட்ட விந்த ஏழு கோத்ரத்தாருக்கும் கந்தாடையாரென்று வியபதேசம் நடந்து வருகிறது. இவர்களெல்லாரும் எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளுக்குள் சேர்ந்த முதலியாண்டான் முதலானாருடைய திருவம்ஸ்யர்.இது ஸப்த கோத்ர வியவஸ்தா ப்ரகாரமிருக்கும்படி. இந்த ஸப்த கோத்ரத்தாரில் வாதூல வம்சியராய் ஸ்ரீ பாஷ்ய ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் ஐகஜ் ஜீவாதுவான போளிப்பாக்கம் நயினார், பெரியதிருமலை நம்பி வம்ச்யராய் சடமர்ஷண கோத்ரரான எட்டலூர் சிங்கராசாரியரையும் மற்ற வேழு கோத்ரஸ்தரையுங் கூட்டி யஷ்ட கோத்ரமாக நியமித்தருளினார்.போளிப்பாக்கம் நயினார் ஸப்த கோத்ரஸ்தர்; அஷ்ட கோத்ரத்திற்கு நியமன கர்த்தா.
இது அஷ்டகோத்ர வயவஸ்த்தை. இவர்களிலும் ப்ரயாச: எழுபத்திநாலு ஸிம் மாஸனாதிபதி வம்ஸ்யர்களுண்டு. திருவனந்தாழ்வான் பூமியை வஹிக்க அஷ்டதிக் கஜங்கள் ஸஹகரிக்க ஸப்த குல பர்வதங்களும் பூமிக்கு அஞ்சூராணி விட்டாப் போலே யிருக்கும். அது போல திருவநந்தாழ்வானுடைய திரு வவதாரமான பெரியஜீயர் பராங்குச பரகால யதிவரர்களுடைய ஸம்ப்ரதாய நிர்வஹணமாகிற பாரத்தை வஹித்தருளுவதற்கு அஷ்ட திக் கஜங்களும் ஸஹகரித்து ஸப்த கோத்ரமும் ஸம்ப்ரதாயத்திற்கு ஆணி விட்டாப் போலே வியவஸ்தாபகமா யிருக்கும்படி. கோத்ரமென்று பர்வதத்திற்கும் குலத்திற்கும் பேரென்று சொல்லுவர்கள்.

அநந்தரம் ஏவம் பூதரான மணவாள மா முனிகளுக்கு ஈடு வந்த க்ரமம்-அவர் பெருமாளுக்கு ஸாதித்தருளின க்ரமம் முதலானவை விஷயமான பிரஸ்நத்திற்குத்தரம். எங்ஙனே -யென்றில் ஈடு வந்த க்ரமம் த்விதீய பிரஸ்நோத்தரத்திலே சொல்லிற்றிறே. ஒரு நாள் முதலிகளுடனேக் கூட பெருமாளை பெரிய ஜீயர் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருக்கப் பெருமாளும் ஜீயரை யருளப் பாடிட்டருளி நம் பெரிய திருமண்டபத்திலே திருவாய்மொழிப் பொருளை ஈடு மூப்பத்தாறாயிரம் துடக்கமான வியாக்யானங்களோடே நடத்துமென்று நியமித்தருள, ஜீயரும் மிகவும் ஹ்ருஷ்டராய் உபக்ரமிக்கிற வளவிலே பெருமாளும் நாச்சிமாரும் எழுந்தருளி ஸ்ரீஸேநாபதியாழ்வான் நம்மாழ்வார் துடக்கமான ஆழ்வார் பதின்மரோடும் அனைத்துப் பரிகரத்தோடும் கூடப் பெருந் திருவோலக்கமாக வெழுந்தருளி யிருக்க, இவர் துடங்கி யர்த்தம் நடத்தும் படியைத் திருச் செவி சாற்றி யருளி, இப்படி யொரு ஸம்வத்ஸரம் நிர்விக்நமாக நடந்து சாற்றி யருளும் போது முன்பு போலே பெரிய பெருமாள் பேரோலக்கமாக வெழுந்தருளி யிருந்து திருச் செவி சாற்றி யருளி, மிகவு முவந்து தீர்த்தம் முதலான வரிசைகளைப் ப்ரஸாதித்து அந்த வுகப்பின் மிகுதியாலே அகில ஸ்ரீவைஷ்ணவர்களையுங் குறித்து நம் வீடு முதலான நூற்றெட்டு திருப்பதியிலும் இவர் தனியனான ஸ்ரீ சைல தயா பாத்ரமாதியாய் பிரபந்தாநுஸந்தாநம் நடத்திப் போருங்கோளென்று நியமித்தருளினார். இது யதீந்தர பிரவணப் ரபாவத்தின்படி. இது ஸ்ரீபாதத்து முதலிகள் மூவர் நாலு பாதமருளிச் செய்தாரென்று மதற்குச் சேரும். அப் பெரிய திருவோலக்கத்திலே சாற்று முறை திருச் செவி சாற்றி யருளின பின்பு பெரிய பெருமாள் ஒரு பாலனாய் வந்து இந்தஸ் ஸ்ரீ சைலேசதயா பாத்ரமாதியாய் இந்தத் தனியனை யருளிச் செய்து அந்தர்த்தாகதரானார். அது முன்பே பதரிகாச்ரமத்தி லெம்பெருமான் அங்கே யிந்தத் தனியனை யனுஸந்திக்கும்படி நியமித்தருளினாரென்று பின்பு சில நாளையிலே யங்கு நின்றும் வந்தவர்கள் சொன்னார்களாய், இங்கு நடந்த வித்தையு மங்கு நடந்தவத்தையுங் கூட்டி யநுஸந்தித்துக் கோயில் முதலான ஸர்வ தேசங்களிலுண்டான ஸகல ப்ராமாணிகரும் இந்தத் தநியனை பகவத் ப்ரஸாதமென்று நிர்ணயித்துக் கோயில்களிலும் திரு மாளிகைகளிலும் இந்தத் தனியனை ப்ரபந்தாதியிலே யநு ஸந்தித்துக் கொண்டு வருகிறார்களென்றுஞ் சொல்லுவர்கள். இது அயோத்யை ராமாநுஐய்யங்கார் படி, என்கிற க்ரந்தத்தில்படி. இன்னுந் தடஸ்தங்களான திருவரங்கம் பெரிய கோயில் ஒழுகுகளிலே இவ் வர்த்தங்கள் ஸ்பஷ்டங்களாயிருக்கும். இன்னமும் மாசி மாஸத்திலே க்ருஷ்ண பக்ஷ த்வாதசியிலே பெரிய பெருமாள் தம்முடைய திருக் கோயிலனைத்துப் பரிஜநங்களுடைய படித் தனத்தைக் கொண்டு பெரிய ஜீயருடைய திருவத்யயநத்தை அத்யாபி நடத்துகிற விதுவும் இவரிடத்தில் அவர் முப்பத்தாறாயிரப்படி கேட்டமையில் ப்ரமாணம். இதுவும் –
வாசி யறிந்த வதரி நாராயணனார் மணங் கொட் டேசுடை யெந்தை மணவாள முனி சீர் தழைப்பச் சிரீசை,லேச தயா பாத்திரமென்று மிம் மா மந்திரத்தைத், தேசிகராய்க் கண்டுரைத்தார் வையகஞ் சீருறையவே.” என்று கோயில் கந்தாடை யண்ணனும் பெரிய ஜீயர் விஷயமான “கண்ணி நுண் சிருத்தாம்பு என்கிற ப்ரபந்தத்திலே முடிவிலே யருளிச் செய்கிறார்

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —

மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

இப்படி யநந்யா ஸித்த பிரபல ப்ரமாணங்களாலே இதினுடைய மாஹாத்ம்யம் வியக்தம்.-இன்னாரின்னாரென்றாதே ஸகல ஸ்ரீ வைஷ்ணவர்களையும் குறித்து நம் வீடு முதலான நூற்றெட்டு திருப்பதியிலும் இவர் தனியனான ஸ்ரீசைலேச தயா பாத்ரமாதியாய் திவ்ய பிரபந்தாநு ஸந்தாநம் நடத்திப் போருங்கோளென்று பெரிய பெருமாள் ஆஜ்ஞா பித்தருளி யிருக்க, ராமாநுஐ தயா பாத்ரமாதியாய் திவ்ய ப்ரபந்தானுஸந்தாநம்
நடக்க வேணு மென்று நிர்ப்பந்தித்துக் கொண்டு திவ்ய தேச ஷோபம் பண்ணு
மவர்களுக்கு பகவதாக்ஞாதி லங்கநமன்றி வேறு ப்ரயோஜந மில்லை யென்னுமிடம் நிரூபர்களுக்கு ஸூஜ்ஞேயம்.

அநந்தரம் பூர்வ ப்ரஸ்துதமான ராமாநுஜ தயா பாத்ர விஷயமான ஸ்ப்த விம்சதி ப்ரச்நோத்தரம் எங்ஙனே யென்னில் – இந்த “ராமாநுஜ தயா பாத்ரம்” என்கிற தநியன் பரகால ஜீயர் நியமித்தா ரென்கிற லோக ப்ரஸித்திக்கு மபவாதக பிரமாண மில்லாமையாலே அவருண்டாக்கினா ரென்று மிடம் யுக்தம்.-இந்தத் தநியன் அவருக்கு முன்னே யுண்டு, அவர் இதற்கு ப்ரவசந மாத்ரம் பண்ணினார், அது கொண்டு அவர் செய்தாரென்று லோக ப்ராஸித்தி; என்று சொல்லப் பார்க்கில் வேதாந்தாசார்யருடைய வைபவ விஷயமாக நடுவிலாழ்வான் திரு வம்சஸ்தரான மத்யேஸ-தர்சநாசார்யர் முதலானார் பண்ணின அனுஷ்டுப் ஸ்லோக ப்ரபந்தத்திலும் ஆசார்ய விருத்த ஸ்லோக ப்ரபந்தத்திலும் இந்தத் தனியனை ப்ரதிபாதியாமையாலே யிது முன்புண்டென்று மிடம் அனுபபந்நம்
வேதாந்தாசார்யருடைய அவதார விஷயமாகவும் ராமானுஜ தயா பாத்ர மென்கிற தநியன் விஷயமாகவும் ப்ரம்மாண்ட புராணத்தில் க்ருஷ்ணார்ஜூந ஸம்வாதமான நாலு அத்யாய முண்டென்று வைத்துக் கொண்டிருக்கு மவர்கள் அத் யந்தம் அபஹாஸ்யர். எங்கனேயென்றில்

ஸ்வப்ந வ்ருத்தாந் தாதிகளாகிற உபபத்திகளாலே புத ஜநங்கள் தம்மைக் கண்டாவதாரமாக உத்ப்ரேஷிக்கிறார்கள்; அதாவது:- உத் கட கோடிக ஸம்சயமான ஸாம்பாவநாத்மகக் ஞாநத்திற்கு விஷய மாக்குகிறார்களென்று புராண ப்ரதிபாத்யராக ஸ்வாபிமதரான வேதாந்தா
சாரியரே யருளிச் செய்கையாலே புராண மில்லை யென்று மிடம் ஸித்தம். புத
ஜனங்கள் கண்டாவதாரமென்று ஸம்சயிக்கிறாரென்று மிதிற் காட்டில் பரம ரிஷிகள் புராணங்களிலே கண்டாவதார மென்று தம்மை நிச்சய ரூபேண ப்ரதிபாதித்தார்கள் என்றால் ப்ரசம்ஸாதிசயம் ஸித்திக்குமே. ஆகையாலிவ் விஷயத்தில் புராணமில்லை யென்னு மிடம் ஸித்திக்கையாலே யிவ் விஷய த்தில் புராணமுண்டென்றுமவர்கள் அத்யந்த மபஹாஸ்யர்.இந்தத் தநியன் உண்டாய் நூற்றிருப்பது ஸம்வத்ஸரமுண்டு.இத்தை மேல் நாட்டிலே க்ருஷ்ண தேவராய வுடையார், சிங்க தேவராய வுடையார், கண்டீரவ நரஸ தேவ ராய வுடையார் என்கிற விவர்களை பரகால ஜீயர் அனுவர்த்தித்து வச்யராக்கிக் கொண்டு அவர்கள் பலத்தினாலே இந்தத் தநியனையுங் கூட பிரபந்தாதியிலே யநுஸந்திக்கும்படி திரு நாராயண புரத்திலே இசைவித்தார். இந்த ராஐ க்ருஹத்திலே போக்கு வரத்தாயிருக்கிற சிங்காரம்ம னென்கிற ஸ்வ சிஷ்யை யடியாக ராஜானுமதியாலே வேதாந்தாசார்யரைத் திரு நாராயண புரத்திலே ப்ரதிஷ்டை பண்ணி வைத்தாரென்று சொல்லுவர்கள். இவருடைய யத்னம் தொண்டீர மண்டலத்தில் பலியாமற் போச்சது. பகு விடங்களிலே பலியாமலிருந்தது. கோயிலிலே யிந்த பரகால ஜீயர் ப்ரஸத்தி யில்லை.

பரகால ஜீயர் பெருமாள் கோவிலுக்கு வந்த விஷயமான வஷ்டாவிம்ச ப்ரச்நோத்தரம் எங்ஙனேயென்றில் – பரகால ஜீயர் பெருமாள் கோவிலுக்கு வந்து அழகிய மணவாள ஜீயர், ஆத்தான் ஜீயர், திருமலை தாதாசார்யார், இவர்கள் யெழுந்தருளி யிருக்கிற நாளையிலே திருமலை தாதாசார்யர் திருமாளிகையிலே வந்து ” ராமாநுஜ தயா பாத்ரம்” என்கிற தநியனை இந்தக் கச்சி நகர் பதி னெட்டுத் திருப்பதியிலும் ப்ரபந்தானுஸந்தானத்திற்கு ஆதியிலே யனுஸந்திக்கும்படி பண்ண வேணுமென்ன,திருமலை தாதாசார்யரும் “கோயில் அழகிய மணவாள ஜீயர் அயோத்யை ராமானுஐய்யங்கார் நாள் துடங்கி பகு காலமாய் நடந்து வந்து முன்பு அஸ்மத் கூடஸ்தரான தாததேசிகரும் நடப்பித்து பெரியஜீயருக்குத் தனிக் கோவிலுங் கட்டி வைத்து அங்கே யெழுந்தருளப் பண்ணி வைத்து இப்படி யன்று முதவின்றளவு மவிச்சிந்தமாய் நடந்து வருகிற விந்த ஸ்ரீசைலே தயா பாத்ரமென்கிற தநியனை நாம் விரோதிப்பதில்லை” யென்று சொல்ல,பரகால ஜீயரும் அத்யந்தம் கோபித்துக் கொண்டு தம்முடைய கமண்டலுவைத் திருமலை தாதாசார்யர் திருமாளிகை வாசலிலே யுடைத்து சபித்துப் போனார். திருமலை தாதாசார்யரும் பேரருளாளருடையவும் பெரிய ஜீயருடையவும் பெருங் கருணையாலே நிர்த் துக்கராய் – கோத்தரராய்க் கொண்டு பதினெட்டு திருப்பதியிலும் அத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸன்னிதிகளிலும் “ஸ்ரீசைலேச தயா பாத்ர மென்கிற” தநியனை நடப்பித்துக் கொண்டு வந்தாரென்று ப்ரஸித்தம். கூடஸ்தரான தாதாசார்யர் தம்முடைய சிஷ்யரான ராயனுடைய ராஜ்ய தந்த்ரம் பண்ணிக் கொண்டு வருகிற போது தென்னேரி உடைந்து போனதாய் ஸர்வ ப்ரகாரத்தாலும் கட்டுப்படாததாய் தாமே போய் கட்டி வைக்க வேணுமென்று புறப்பட்டு,வழியாக ஹஸ்திகிரியிலே யேறிப் பேரருளாளரை ஸேவிக்க வர, அப்பொழுது சதிராக வாழ்திடுவர் தாமென்கிற சாற்று முடிவு செவிப்பட, அத்தை யுப ச்ருதியாகக் கொண்டு ஹர்ஷப்பட்டு நாம் போகிற கார்யம் தலைக் கட்டினால் இப்ரபந்த கர்த்தாவான பெரிய ஜீயருக்குத் தனிக் கோவில் கட்டி வைக்கிறேனென்று ப்ரதிஞைபண்ணிக் கொண்டுபோன விடத்தில் யேரி யுடைப்பு ஸ-கமாய்க் கட்டுப்பட்டதாய் மீண்டு அதி த்வரையுடனே வந்து பெருமாளுடைய திருநந்தநவநத் துள்ளிருக்கிற சது ஸ்தம்ப மண்டபத்தை மூன்று பக்கம் சுவரடைத்து கர்ப்ப க்ரஹமாக்கி யதிலே பெரிய ஜீயரை ப்ரதிஷ்டை பண்ணிவைத்து க்ரமண மகாமண்டபம் மடப்பள்ளி முதலானவை கட்டி வைத்தாரென்று ப்ரஸித்தமிறே.

அநந்தரம் தென்கலையார் வடகலையார் என்கிற வயபதேச பேத விஷயமான பராச்நத்திற்குத்தரம் எங்ஙனே யென்றில் -கலையென்று வித்யையாய் தென்கலை யென்று தமிழ் வித்யை.வடகலையென்று ஸம்ஸ்க்ருத வித்யை -அதில் விவக்ஷாவிசேஷத்தாலே தென்கலையென்று ஆறாயிரப்படி முதலான திவ்ய ப்ரபந்த வயாக்யாநங்களையும், வடகலை யென்று ப்ரஹ்ம ஸூத்ர போதாய வருத்தி ஸ்ரீ பாஷ்யாதி க்ரந்தஙகளையும் வியபதேசிப்பதாய்,தத்ர வர்த்தக வத்தாலே ஆழ்வான், எம்பார், பட்டர், நஞ்சியர், நம்பிள்ளை, முதலானாரைத் தென்கலையா ரென்பதாய், பாஷ்யாதி விர்த்தகத்வத்தாலே நடாதூர் பெரியம்மாள் முதலானாரை வடகலையாரென்பதாய்,உபயர்க்கு முபய ப்ரவர்த்தகத்வ முண்டா யிருக்கச் செய்தேயும் ” பூயஸா வியபதேசோ மல்லக்ராமா திவத்” என்கிற நியாயத்தாலே தத்தத்ர வர்த்தகத்வ பிராசுர்ய மடியாகத் தென்கலையாரென்றும் வடகலையாரென்றும் வியபதேச பேத மிருக்கிறது. இன்னமும் இவர்களுக் குத் தென்னாசார்யரென்றும் வடமாசார்யரென்றும் வியபதேசபேதமுண்டு. இது பரீஷிக வ்யஹாரபேத மிருக்கிறபடி, இது வன்றிக்கே யிராமானுஜனோடே கூடின திருமண்காப்பும் ”ஸ்ரீசைலேசதயாபாத்ர மாகிற தனியன் விஷயமான ப்ராவண்யமாகிற விவற்றை யிட்டு சிஷ்யாசார்ய ஸாதாரண்யேந தென்கலையா ரென்கிற வ்யவகாரமும்,ஸ்ரீராமாநுஐ நிழந்த திருமணும் ராமானுஜ தயா பாத் ரத் தனியன் விஷயமான ஸ்ரத்தையுமாகிற விவற்றை யிட்டு வடகலையார் என்கிற வ்யவஹாரமுமுண்டு . இது பரீஷக பாமர ஸாதாரண வ்யவஹாரமிருக்கிற படி.
அயமத்ரநிஷ்கர்ஷ -தென்கலையாரில் வாநமாமலை மடம்.கோயில் ஸ்ரீரங்கராஜ ஜீயர் மடம், திருமலையில் பெரிய ஜீயர் மடம், சிறியஜீயர்மடம், பெருமாள் கோவில் அழகியமணவாளஜீயர்மடம்,முதலானமடங்களும் தத் ஸம்பந்திகளும், முதலியாண்டான்,பட்டர்,அநந்தாண்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, முதலான அசேஷாசார்ய புருஷ வம்சயர்களும் தத் ஸம்பந்திகளுமாக விவர்களெல்லாம் பிள்ளான் முதலான கூடஸ்த ஸம்ப்ரதாயத்திற்கனுகுண மான பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை முதலானார் ஸம்பந்தத்திலே பஞ்ச ஸம்ஸ்காரத்தைப் பெற்று, மந்த்ரோப தேஷ்டாக்களானவர்கள் ளருளிச் செய்த மந்திரார்த்த விஷய ப்ரபந்தங்களை யத்யாதரத்துடனே யதிகரித்துக் கொண்டு,ததுக்தங்களான ஸ்வரூபானுரூப விருத் தங்களையும் நிஷிந்த காம்ய ஸ்பர்சர ஹிதங்களுமாய் அத்யாவச்யகங்களுமான வர்ணாச்ரம தர்மங்க ளையும் அநுஷ்டித்துக் கொண்டு சத்வ விஷயத்திலும் அனுஷ்டானாதி விஷயத்திலும் அந்யோக்ய வைஷம்ய விரஹிதராய் ஸ்ரீ பாஷ்யவிஷயத்தில் வேதாந்தாசார்ய ஸம்ப்ராதாய முடையராயிருக்குமவர்கள் தத்தனுகுணமாக ஸ்ரீ பாஷ்ய குருரம்பராத்ரமத்திலே “ஸ்ரீமாங் வேங்கடநாதார் !” என்கிற தனியனை யனுஸந்தித்துக் கொண்டுஸ்ரீ பாஷ்ய கர்த்தா விஷயத்தில் வேதாந்தசார்யா பிப்ராயாநு குணமாகவே வசந பிரவசநங்களைப் பண்ணிக் கொண்டு இப்படி ஏக கண்டராய்ப் போருவர்கள். வடகலையாரில் அஹோபில மடத்தாரும் தத் ஸம்பந்திகளும் தங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்கார ரதரான பெரியவாச்சான்பிள்ளை முதலானார் அருளிச் செய்த மந்த்ரார்த்த விஷய க்ரந்தங்களை யநாதரித்துத் தத் விருத்தங்களான ரஹஸ்ய த்ரய ஸாராதி க்ரந்தங்களை யாதரித்து அதிகரித்துக் கொண்டு ஸம்ப்ரதாயாதி லங்க ம் பண்ணுகிறார்களாகையாலே அதவர்களுக்கு மனுசிதம்.முநி த்ரய ஸம்ராதாயஸ்தருக்கும் பரகால ஜீயர் ஸம்ரதாயஸ்தருக்கும் அஹோபில மடத்திற் கதிபதியான ஷஷ்ட பராங்குச ஸ்வாமி யினுடைய ஸம்பரதாய முண்டாகையாலே ஷஷ்ட பராங்குச ஸ்வாமிக்குப் பெரிய வாச்சான் பிள்ளை ஸந்நிதியிலே பஞ்ச ஸம்ஸ்கார ஸம்பரதாயமுண்டாகையாலே யவரினி யிரண்டு ஸம்பரதாயஸ்தருக்கும் தத்ச் சிஷ்ய ப்ரசிஷ்யர்களுக்கும் ஸ்வ பரமாசார்யரான ஷஷ்ட பராங்குச ஸ்வாமிக்குப் பரமாசார்யாரான் பெரியவாச்சான்பிள்ளை திருவடிகள் விஷயத்தில் அநாதரம் பண்ணுகை யனுசிதம். வேதாந்தாசார்ய ரருளிச் செய்த தாத்பர்ய சந்த்ரிகை,மணி ப்ரவாளமான ரஹஸ்ய த்ரய விரோத பரிஹாரம்,ஸ்ரீபாஞ்சாராத்ர ரஷை , இவைகளாகாங் க்ஷிதாம்சங்களிலே யந்
யோந்யமேக வாக்கியங்களாய்க் கொண்டு நாதயாமுந யதிவர ஸம்பரதாய விருத்
திகளாகிற கார்த்தயுக தர்ம்ம் நிஷ்டாத்திகாரிகளுக்கு பிஷ்டபசுயாக மல்லது ஸாக்ஷாத்பசு யாகங்கூடாதென்று வேதாந்தாசார்யருக் கபிமதமென்று ப்ரதி பாதியா நிற்கச் செய்தேயும், அத்தை யதிலங்கித்து ப்ரத்ய பசு யாகம்பண்ணுகையும், இப்படி தத் விருத்தங்களுமாய் தம்மில் மிதோ விருத்தங்களுமான தத்வ அனுஷ்டானங்களைப் ப்ரதிபாதித்துக் கொண்டு திவ்ய தேசங்களைத் தநியனுக்காக ஷுபிதங்களாக்கிக் கொண்டு இப்படி ஜகத் க்ஷோப பர்யவஸிதராகிறார்.ஆகையால வர்களெல்லார்க்கு மிது அத்யந்தமனுசிதம். இவ் வர்த்தம் நிரூபக மத்யஸ்த த்ருஷ்டியாக நிரூபித்துப் பார்க்குமளவில் ஸஹ்ருதய ஹ்ருதயாரூடமாம்.

அநந்தரம் திவ்ய தேசங்களிலே பெருமாள் புறப்பாடு கண் டருளுகிற போது திவ்ய பிரபந்தானுஸந்தாநம் முன்னும் வேத பாராயணம் பின்னுமாக நடந்துப் போருகைக்கு மூலமென்னென்கிற பிரஸ்ந த்துக்கு உத்தரம் எங்ஙனேயென்றில் – ருக் யஜுஸ் ஸாமாதர்வண வேதங்கள் நாலும் தனித் தனியே ஸ்வ ஸ்வ மாத்ர பர்யவஸிதங்களாகையாலும் திவ்ய ப்ரபந்தம் சதுர்வேத ஸம்மிதமாகையாலும் இந்த பிராதாந்ய அப்ராதாந் யங்களை யிட்டு சதுர் வேத ஸம்மிதங்களான பிரபந்தங்கள் முன்னும், சதுர் வேதங்களி லொன்றான ருகாதிகள் பின்னும், அநுஸந்திக்கப் படுகிறது. இன்னமும் வேதம் பரத்வ பிரவண மாகையாலும் திவ்ய ப்ரபந்தம் அர்ச்சாவதார பிரவணமாகையாலும் இவற்றிற்கு ப்ரக்தோபயோகானுபயோக பிரயுக்த வை
லஷ்ன்ய நிபந்தனமாக திவ்ய ப்ரபந்தம் முன்னும் வேதம் பின்னுமாகிறது. இன்னமும் “ராஜவத்சோபசாராத்’ என்கிறபடியே ராஜாக்களுக்கு போகா வலி பிருத வலிகள் முன்னும் ஸ்வஸ்தி வசநம் பின்னும் ஆகிறாப் போலே யிங்குமர்ச்சவதாரம் ராஐவதுபசரணீய மாகையாலே விருதாவலி ஸ்தாநீயங்களான திவ்ய ப்ரபந்தங்கள் முன்னும் ஸ்வஸ்தி வாசந ஸ்தாநீய வேத பாராயணம் பின்னுமாயிருக்கும். இன்னமும் ஸூரியனுக்கு முன்னே காநமும் பின்னே ஸ்துதியும் நடக்கிறாப் போலே யிங்குங் கோடி ஸூர்ய ஸமரான வர்ச்சாவதாரத் தெம்பெருமான்களுக்கு முன்னே திவ்ய ப்ரபந்தாஸந்தானமும் பின்னே பகவத் ஸ்துதி பரமான வேத பாராயணமும் நடக்கிறது. இன்னமு மிதற்கு மூலாந்தரமுங் கண்டு கொள்வது.

பரீதாபி வருஷத்ற் கைந்தாவதான நள வருஷத்திலே வேதாந்தாசார்யருடை யவதாரம். அநற்கைம்பத்தினாலாவதான் ஸெளம்ய வருஷத்திலே வேதாந்தாசார்யர் திருநாட்டிற் கெழுந்தருளினார். ஸாதாரண வர்ஷம்-மணவாளமாமுநிகள் திருவதாரம் . விரோதி க்ருத் வர்ஷத்தில் நம்பெருமாள் மீளவுங் கோயிலுக் கெழுந்தருளினார். ஆக பரீதாபி வருஷம் முதல் விரோதிக்
ருத் வருஷத்தளவும் அறுபது வர்ஷம் உலசைசெய்ய, அந்த விரோதிக்ருதி வரு ஷத்திற்கு நாற்பத்தி மூன்றாவதான ஐய வர்ஷத்திலே நயினாசார்யர் திருநாட் டிற்கெழுந்தருளினார். அந்த ஐயாக்ய வருஷத்திற்கு முப்பத்தோராவதான் ருத்ரோத்காரி வருஷத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டிற் கெழுந்தருளினார். இது அவதார தீர்த்த வருஷாதிகளிருக்கும்படி. இன்னமும் மணவாளமாமுநிகள் வண்டுவராபதி மன்னனென்கிற மந்த்த லிங்கமடியாக தக்ஷிணத்வாரகாயீசரான மன்னனாருக்கு மாசறு சோதி யென்கிற திருவாய்மொழியை நித்யாநுஸந்தேயமாக ஸமர்ப்பித்தார். மணவாள மாமுகளுக்கநந்தரம் அவர் திருப் பேரனாரான ஜீயர் நயினார் திருநகரியில் திருக்கோபுரங்களையும் பிராகாரங்களையும் பெரியஜீயர் நாளையில் குறை யிருந்ததைத் தலைக் கட்டினார். ஆழ்வார் விஷயமான நக்ஷத்ர மாலிகை யென்கிற சப்தார்த்தோபயசித்ர ப்ரபந்தத்தை யருளிச் செய்தார்-

நம்பெருமாள் தம்முடைய ஸந்நிதி வாசல் படியைப் பிடித்துக் கொண்டு உள்ளே யிருந்து கொண்டு நம்பிள்ளை திருவோலக்கத்தைக் கடாட்சித்துக் கொண்டு பிள்ளை யுபந்யாஸத்தைத் திருச் செவி சாற்றி யருளா நிற்க,திருவிளக்குப் பிச்சனென்கிறவன் ”இப்படி கலியிலே அர்ச்சாவதார ஸமாதியைக் குலைத்துக் கொள்ளக் கடவீரோ” வென்று அடர்த்து வார்த்தை சொல்ல, ஆகிலுள் ளே போகிறேனென்று பூபாலராயனிலே யெழுந்தருளுவராம். இப்படியிறே நம்பெருமாள் பிள்ளை யுபந்யாஸத்திலே செவிசீபாய்ந்திருப்பது? பட்டருக்கு உடையவர் வேதாந்தசார்ய பதத்தையும் ஸ்ரீஸூக்தி ஸிம்மாஸனத்தையும் சாதித்தருளி நம்மைப் போலே இவரை ப்ரதிபத்தி பண்ணுங்கோளென்றருளிச் செய்கையாலே கிடாம்பியாச்சான் முதலானாரும் பட்டரை யநுவர்த்தித்துக் கொண்டு போந்தார்கள். உடையவர் திருவெள்ளறை யெம்பெருமான் விஷயமாக ஒரு ஸ்லோகமும் ஆழ்வார் விஷயமாக ஒரு ஸ்லோகமும் ஆண்டாள் விஷயமாக ஒரு ல்லோகமும் முக்தகமாக வருளிச் செய்தார். இன்னமும் இங்கனே கண்டு கொள்வது. மணவாளமாமுநிகள் அவ்வோ திவ்ய தேசங்களி லெம்பெருமான்களை மங்களாசாஸனம் பண்ணும் போது முக்தகங்களாகப் பாட்டுக்களைப் பலவு மருளிச் செய்தார்.

விசேஷித்து திவ்ய பிரபந்த விஷயமாக சர்வ ஜநங்களுக்கும் திவ்ய ப்ரபந்த பிரமாண ப்ரத்யயம் வரும்படி யருளிச் செய்தார்.-ஏவம் பூதரான மணவாளமாமுநிகள் விஷயமான ஸ்ரீ சைலேச தயா பாத்ரதஸ் தநியனை விரோதிக்க வேணு மென்று சில அத்யந்தார்வாசீநர் திருமலையிலே போய் அவிடத்தில் அதிகாரி யாயிருக்கிறவன் தம்முடையவனென்று அவன் முகத்தாலும் அர்த்த ப்ரதாந முகத்தாலும் அர்ச்சகனை யநுகூலிப்பித்துக் கொண்டு அநாதி காலமாகத் திருவாராதநோப க்ரமத்திலே “துடங்கண்டி ஸ்ரீசைலேச தயா பாத்ர மென்று பெரிய ஜீயர் முதலானாருக்கு அருளப்பாடிடுமத்தைத் தவிர்த்து ராமாநுஜ தயா பாத்ரமென்று அர்ச்சகனைச் சொல்லும்படி கற்பித்து வைக்க,வவனுமத்தை யங்கீகரித்துக் கொண்டிருக்க,பெரிய திருவோலக்கமாய் வடகலையாரும் ராஜகீயருமாய்த் திரண்டிருக்கிற வளவிலே திருவாராதநோ பக்ரமத்திலே யந்த வர்ச்சகன் பரவசஹ்ருதயனாய் அத்தை மறந்துப் பழையபடியே தானே “துடங் கண்டி ஸ்ரீசைலேசதயாபாத்ர” மென்றருளப் பாடிட, வவர்கள் பக்நோத்ஸாஹராய் நம்முடைய யத்னம் பெருமாளுக்குத் திருவுள்ளமில்லை யென்று ஸ்வயமோ நிவ்ருத்தரானார்களென்று ப்ரஸித்தம். மற்றொரு காலத்திலே யொரு வடகலை ஜீயர் அதிகாரி பலத்தாலே பெருமாள் புறப்பாட்டிலே இயல் துடக்கத்திலே ராமாநுஜ தயா பாத்ரத்தைச்சொல்லுவதாக வுருப்பட்டு எல்லாரும் திரண்டிருக்கிற வளவிலே வாத்யவாஹமான அநட் வாஹமானது ஜீயர் மேலே பாய்ந்து விழ ,வெல்லாருங் கூட்டங் கலைந்து பெருமாளுக்குத் திரு வுள்ளமில்லை யென்று நிவ்ருத்தரானார்களென்று ப்ரஸித்தமிறே

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading