ஸ்ரீ ஸூரி ஸூக்தி-ஸ்ரீ ப்ரஹ்ம ஸாஸ்திரம் – ஸ்ரீ திராவிட ப்,ரஹ்ம ஸூத்ரம் -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்
[| திருநாராயணபுரம் அரையர் ஸ்ரீஉ வே ஸ்ரீராம சர்மா ஸ்வாமிகள் ]
(1 -ஸாஸ்த்ர ப்ரதாநாதி,கரணம்(ஸாஸ்த்ராரப், யாதி, கரணம்) 1 – 15 —-15
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்- 16—1
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம் —17 – 18 —2
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம் —19 – 38 –20-
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—-3-)
இந்தக் கிரந்தம்
த்விக த்வயமாகவும்,
அத்யாய சதுஷ்டயமாகவும்,
ஷோடச பாதமாகவும்,
ஸப்த விம்சத் யதிகரணமாகவும்
பிரிவுகளை உடையது.
(1) பூர்வ த்,விகம் – ஸூரி வைபவம் 1 முதல் 186 வது ஸூத்ரம் வரை (186)
(2) உத்தர த்,விகம் – ஸூரி ஸுக்த்தி வைபவம்– 187 முதல் 284 முடிய (48)
(1) ப்ரத, மோத், யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம் 1-38 (38)
(2) த்,விதீயோத், யாய: – க்,ரந்த, கர்த்ரு வைப,வம் 39 – 186 (148)
(3) த்ருத்யோத், யாயம் – க்,ரந்தாந்தர தார தம்ய வைப,வம் 187-207 (21)
(4) சதுர்த்தே ரத், யாயம் -கிரந்த, ப்ரதிபாத்,ய க்ரம வைப,வம் 208-284 (27)
பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
1 -ஸாஸ்த்ர ப்ரதாநாதி,கரணம்
(ஸாஸ்த்ராரப், யாதி, கரணம்) 1 – 15 —-15
2 தாத்பர்ய மூலபாத, – த்,விதீய 1 – 2 —16 –1
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்- 16—1
3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம் —17 – 18 —2
4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம் —19 – 38 –20-
5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—-3-
6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம் 97 –117—-21 —
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —
7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்,யதி, கரணம்–122–132– 11
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம் —-133–155– —23-
8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம் 156 –158—-3–
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்– 159 —186—–28–
9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்– 187 -188—2-
10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத் கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்–189—1–
11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத் கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம் 190–195—–5–
12 –ப்ரயோஜந பாத –த்வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–
13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம் —208–210—–3-
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்,ரஹ-விவரணாதி,கரணம் -211 -212—2
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்-213–1–
14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம் –214 —-1–
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–
15 –குணாநுபவ பாத 3-பஞ்சதஸ — 4 – 3 –இரண்டு அதிகரணங்கள்– 218 – 228 ——11–
23 –தஸ ஸதக கத பகவத் குண தஸக அநு குண அநுபவ உபதேச அதிகரணம் —-218—–1-
24-தஸ ஸதக பகவத் குண அநுபவ விவரண அதிகரணம் –219–228—–10–
16 –முக்திபாத–ஷோட்ஸ — 4-4 –மூன்று அதிகரணங்கள் -229 – 234 ———–6 –
25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம் –229—— 1
26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம் 230 – –233—–4–
27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்-ப்ரஸாதாதி கரணம் –234 ———1
இதி ஸ்ரீராம நாம்நேஹ யாதவாத்ரி நிவாஸிநா
த்ராவிட ப்ரஹ்ம ஸூத்ராணாம் விபாகஸ் ஸம் ப்ரதர்ஸித
ஸ்வபாநுப பாத்ர ஸூத்தாஷ்ட மீஜ்யேஷ்டாபு,த, வாஸரே
யதாத் யயநமக்,ரே ப்ரகரணைஸ் ஸ்யாத் ப்ரபஞ்சநம்
—
ஆசார்ய ஸ்வாந்த வக்தாரம் அபி ராமவராபிதம்!
ஸ்ரீக்ருஷ்ண தநயம் வந்தே, ஐகத் குருவராநுஜம் ॥
பணவாளரவணைப் பள்ளி பயில் பவர்க்கெவ்வுயிரும்
குண போகமென்று குருகைக் கதிபனுரைத்ததுய்ய
உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய
மணவாளன் மாறன் மனமூரைத்தான் வண்முடும்பை வந்தே.
மாதவத்தோன் மாறன் மனங்கூறும் மணவாளன்
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா
லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி
பூங்கமலத் தாள்கள் நெஞ்சே போற்று
ஆசார்ய ஹ்ருத,யஸ்யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: !
ஸ்ரீஸாநு தாஸ மமலம் தே,வராஜம் தமாஸ்ரயே ॥
த்,ராவிட ஆம்நாய ஹ்ருத.யம் கு,ருபர்வ க்ரமாக,தம் ।
ரம்ய ஜாமாத்ரு தே,வேந தர்ஸிதம் க்ருஷ்ண ஸூநுதா
—
த்ராவிட வேதமான படியாலே பலவான அர்த்தங்களை உடைத்தாய், பரந்திருக்கையாலே இதில் தாத்பர்யம் எல்லார்க்கும் ப்ரதிபத்தி பண்ணப் போகாதென்று பார்த்து, இதில் அர்த்த, விஸேஷங்களையும், இவற்றில் இவ்வாழ்வார்க்குத் திருவுள்ளக் கருத்து இன்னபடிப் பட்டிருக்குமென்று, இவ்வாசார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தமே எல்லார்க்கும் தஞ்சம் என்னுமிடத்தையும், இவர் தம்முடைய பரம க்ருபையாலே-ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான அர்த்த விஸேஷங்களை எல்லார்க்கும் ப்ரதிபத்தி யோக்யமாம்படி ஸங்க்ரஹேண இவ்வாசார்ய ஹ்ருதய ப்ரபந்த முகத்தாலே அருளிச் செய்கிறார்–
–
இதில் முதல் சூர்ணையாலே பரம காருணிகனான ஸர்வேஸ்வரன் “*தத் ஸ்ருஷ்ட்வா” என்கிறபடியே ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி ஸ்ருஷ்ட்யநந்தரம் அஜ்ஞாந அந்தகாரா வ்ருதரான சேதநர் ஜ்ஞாந ப்ரகாஸத்தை உடையராய் அஜ்ஞாநம் நீங்கி, வேதாந்த வேத்யனாய், நித்யனாய், ஸ்வயம் ப்ரகாஸனாய் இருந்துள்ள தன்னைக் கண்டு ஸாராஸார விவேகம் பண்ணுகைக்கு ஸகல ஸாஸ்த்ர ஸங்க்,ரஹமாய், ஸகல ஸப்தங்களும் தன்னுடைய கார்யமாகையாலே தான் காரணமாய், ஸகலார்த்த,ப்ரகாஸகமான அகாரத்தில் நின்றும் விஸ்த்ருதமான ஸாஸ்த்ரங்களைத் தன் க்ருபையாலே வெளியிட்டருளினான் என்கிறார்
பாத-அதிகரண க்ரம-சூர்ணைகள் -முதல் -முடிய -மொத்தம் –
1 -ஸாஸ்த்ராரம்ப, பாத. ப்ரத,ம 1-1 —–1-15
1 -ஸாஸ்த்ர ப்ரதாநாதி,கரணம்
(ஸாஸ்த்ராரப், யாதி, கரணம்) 1 – 15 —-15
காருணிகனான சர்வேஸ்வரன் –அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கிமேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு-நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்–சூர்ணிகை 1–
ஆக இத்தால் “ஹர்த்தும் தமஸ் ஸத.,ஸதீ ச விவேக்துமீஸோ மாநம் ப்ரதீ,பமிவ காருணிகோ ததாதி” (ர.ஸ்தவே -2-1) என்கிறபடியே ஸம்ஸாரிகள் அஜ்ஞாந நிவருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரகாநத்தை உடையராய் ஸாராஸார விவேகம்பண்ணி உஜ்ஜீவிக்கைக்காக ஸாஸ்த்ர ப்ரதாநம் பண்ணினதுக்கடி நிர்ஹேதுக க்ருபை என்றதாய்த்து-
—
விவேக பலம் வீடு பற்று.–சூர்ணிகை –2-
த்யாஜ்ய உபாதேயங்கள் ஸுக, துக்க,ங்கள்.–3-
இவற்றுக்கெல்லை இன்பு துன்பளி பன் மா மாயத் தழுந்துகையும், களிப்பும் கவர்வு மற்றுப் பேரின்பத் தின்புறுகையும்–4-
அநந்த க்லேச நிரதிசய ஆனந்த ஹேது மறந்தேன் அறியகிலாத உணர்விலேன் ஏணிலேன் அயர்த்து என்றும் உய்யும் வகை நின்ற ஒன்றை நன்கு அறிந்தனன் உணர்வினுள்ளே ஆம் பரிசு என்றும்
சொல்லுகிற ஞாதவ்ய பஞ்சக ஞான -அஞ்ஞானங்கள் –5-
ஆக, கீழ்ச் சொன்ன ஸம்ஸார ஸம்பந்தத்துக்கும் மோக்ஷ ப்ராப்திக்கும் ஹேது ‘ஜ்ஞாநாந் மோக்ஷம், அஜ்ஞாநாத் ஸம்ஸாரம்’ என்று அறியப்படுமதான அர்த்த, பஞ்சக ஜ்ஞாநமும், தத் அஜ்ஞாநமும் என்றதாய்த்து.
—
இவற்றுக்குக் காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்.–6-
இத்தால் அர்த்த, பஞ்சக ஜ்ஞாநாஜ்ஞாந காரணம் ஸத்த்வாஸத்த்வ ப்ராசர்யங்கள் என்றபடி,
—
ஸத்த்வாஸத்த்வ நிதாநம் – இருள் தரும் அமலங்களாக என்னும் ஜந்ம ஜாயமாந கால கடாக்ஷங்கள்.–7-
இவற்றுக்கு மூலம் –இரு வல்லருள் நல் வினைகள்.–8-
கர்ம க்ருபா பீஜம், பொய்ந் நின்ற அருள் புரிந்த என்கிற அவித்,யா ஸெளஹார்த்த.ங்கள்.–9-
ஏதந் நிமித்தம் முன்னமே முதல் முன்னமேயான அசித் , அயநா நாதி, ஸ்ம்பந்தங்கள்–10-
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே ஒண் பொருள் பொருளல்லாத(வை) என்னாதே நானிலாத யானுமுளனாவன் என்கிற ஸாம்யம் பெறத் தின்றூதி அந்தமும் வாழ்வுமாகிற ஹாநி ஸத்தைகளை உண்டாக்கும்.–11-
ஒன்று கூடினதாய்ப் பற்றறுக்க மீண்டொழிகையாலே பழவடியேன் என்னுமதொன்றுமே ஒழிக்க ஓழியாதது.-12-
இந்த உதரத் தரிப்பு த்ரை கு,ண்ய விஷயமானவற்றுக்கு ப்ரகாஸகம்.-13-
ஆக, இந்த உதரத் தரிப்பு த்ரைகுண்ய விஷய மானவற்றுக்கு ப்ரகாஸகம் என்கிற இத்தால் ருச்யநுரூப புருஷார்த்தங்களையும் தத் ஸாதநங்களையும் விதிக்கிற ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு அடி இந்த ஸம்பந்தம் என்றதாய்த்து.கீழ் ‘ நீர்மையினாலருள்செய்தான்”’ (திருமொழி 1 -8 – 5) என்று சொன்ன ஸாஸ்த்ர ப்ரதாநத்துக்கு ஹேது சொல்லிற்று ஆய்த்து
வத்ஸலையான மாதா பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு ப்ரத்யெளஷதம் இடுமாப் போலே எவ் வுயிர்க்கும் தாயிருக்கும் வண்ணமான இவனும் ருசிக் கீடாகப் பந்தமும் பந்த மறுப்பதோர் மருந்தும் காட்டுமிறே.14-
அது தானும் ஆஸ்திக்ய விவேகம் அந்ய ஸேஷத்வ ஸ்வ ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பாரதந்த்ர்யங்களை உண்டாக்கின வழி.–15-
—
2 தாத்பர்ய மூலபாத, – த்,விதீய 1 – 2 —16 –1
2 ஸாஸ்த்ர தாத்பர்ய ப்ரதாநாதி, கரணம்- 16—1
இனி மேல் ஸாஸ்த்ர ப்ரதிபாத்யமான அர்த்த விமேோஷங்களை ஸங்க,ரஹேண ப்ரதிபாதியா நின்று கொண்டு ஏவம் வித,மான ஸாஸ்த்ரத்தினுடைய ௮ப்யாஸத்துக்கு ஐம்பூ, த்வீபாதி, தேஸ தேஹாதி,ஸாபேக்ஷதயா ஜ்ஞாதும் அஸக்யமாயிருக்குமென்று இப்படி ஸாபேக்ஷமன்றிக்கே, நித்ய நிரபேக்ஷமாய், அத ஏவ ஸூகரமுமாய், ஸாஸ்த்ர தாத்பர்யமுமான திருமந்தரத்தை ஸ்ரீபதரிகாஸ்ரமத்திலே வெளியிட்டருளினான் என்கிறார்
சதுர் விதமான தே,ஹ-வர்ண- ஆஸ்ரம-அதிகார- ப,ல- மோக்ஷ -ஸாதந ,-கதி- யுக.- தர்ம-வ்யூஹ-ரூப-க்ரியாதிகளை அறிவிக்கிற பாட்டுப் பரப்புக்கு – பெரிய தீவினில் ஒன்பதாம் கூறும், மானிடப் பிறவியும், ஆக்கை நிலையும், ஈரிரண்டிலொன்றும், இளமையும், இசைவுமுண்டாய், புகுவரேலும் என்கிறதுக்குள்ளே விக்நமற, நின்றவா நில்லா ப்ரமாதியைக் கொண்டு அறக்கற்கை அரிதென்றிறே வேத ஸார-உபநிஷத் ஸார தர அநுவாக-ஸார தம காயத்ரியில் முதலோதுகிற பொருள் முடிவான சுருக்கைத் தெய்வ வண்டாய், அன்னமாய், அமுதம் கொண்டவன் -ஸாகை களிலும், ஓதம் போல் கிளர் நால் வேதக் கடலிலும், தேனும் பாலும் அமுதுமாக எடுத்துப் பெரு விசும்பருளும் பேரருளாலே சிங்காமை விரித்தது –16-
—
3 –விஷய பாத, – த்ருதீய 1-3— 17 – 18 —2
3 –ஸாஸ்த்ர தாத்பர்ய விஷய விஸேஷாதி, கரணம் —17 – 18 —2–
முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணனாயும் வெளியிட்ட ஸாாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம்.–17-
தோல் புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை வேணும் ; மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்ஸிக்கு நானும் நமரும் என்னும்படி ஸர்வரும் அதிகாரிகள்.–18-
இத்தால் ஸாஸ்த்ரம் அதி க்ருதாதிகாரமா யிருக்கும் ; ஸாஸ்த்ர தாத்பர்யமான திருமந்த்ரம் ஸர்வாதிகாரமென்றதாய்த்து –
—
4 –ஆசார பாத.; – சதூர்த்த- 1-4– 19 – 38— 20
4 ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதி கரணம் —19 – 38 –20-
இனி மேல் ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும், தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும் ப்ரதிபத்திகளைச் சொல்லுகிறது
ஸாஸ்த்ரிகள் தெப்பக் கையரைப் போலே இரண்டையு மிடுக்கிப் பிறவிக் கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத்தி லிருப்பாரைப் போலே இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்.-19-
இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச் சொல்லுகிறது
இவை ஸ்வரூபத்தை உணர்ந் துணர்ந் துணரவும் உணர்வைப் பெற வூர மிக உணர்வு முண்டாம்.–20-
ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –
ஸேஷத்வ போக்த்ருத்வங்கள் போலன்றே பாரதந்த்ர்ய போக்யதைகள்.-21-
ஜ்ஞாந சதுர்த்தி,களின் மேலே யிறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்.–22-
இனிமேல் இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும் அத்யந்த வைஷம்யம் சொல்லுகிறது
முளைத்தெழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் . ப்ரதம மத்யம தஸைகளைப் பகல் விளக்கும் மின்மினி யுமாக்கும்.–23-
24-நாலிலொன்று பரவர்த்தகம் ; ஒன்று நிவர்த்தகம்.–24-
முற்பாடர்க்கு க்ரியாங்கமானவை இரண்டும், செயல் தீர்ந்தார் வ்ருத்தியில் ஸ்வ நிர்பந்த மறுக்கும்.–25-
கர்ம கைங்கர்யங்கள் ஸத்யாஸத்ய-நித்யாநித்ய-வர்ண தாஸ்யாநுகுணங்கள்.–26-
இவற்றுக்கு விதி, ராக,ங்கள் ப்ரேரகங்கள்.–27-
28-மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்.-
இத்தால் கர்மத்துக்கு ஆஸ்ரயம் உபாஸகர், கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம் ப்ரபந்நர் என்றபடி-
அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோரருள் தன்னாலே நன்றுமெளியனாகிறதும் விஷயம்,–29-
30-இவற்றாலே ஸாதாரணம் அஸாதாரணம் என்னும்.
31-ஜாத் யாஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் த,ர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்.
இனி கர்ம நிஷ்டனிற் காட்டில் கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம் சொல்லுகிறது-
32-ஸாதந ஸாத்யங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் என்று துறை வேறிடுவித்தது.
33- வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும், அதுக்கும் தாயாய்த் தாயினுமாயின செய்யுமத்தாலும் பிறப்பிக்குமது இருவர்க்கும் ஸ்ரேஷ்ட ஜந்மம்.
34-அந்தணர் மறையோர் என்றும், அடியார் தொண்டர் என்றும் இவர்களுக்கு நிரூபகம்–
35-ஒரு தலையில் க்ராம குலாதி வ்யபதேஸம் குலந்தரும் மாசில் குடிப்பழி என்று பதியாகக கோயிவில் வாழுமென்பர்கள்.–
36-விப்ரர்க்கு கேரத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராஸர பாராஸர்ய போதாயநாதி,கள்; ப்ரபந்ந ஜந கூடஸ்தர் பராங்குசா பரகால யதிவராதிகள்.–
இனிமேல் விப்ரரூம் ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும் ப்ராஹ்மண்ய ஸித்தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்தி, ஹேது ஏது? என்னச் சொல்லுகிறார்
37-அத்யயந ஜ்ஞாநாநுஷ்டாநங்களாலே ப்ராஹ்மண்யமாகிறாப் போலே சந்தங்களாயிரமும் அறியக் கற்று வல்லரானால் வைஷ்ணவத்வ ஸித்தி,
38–இந்த உட்பொருள் கற்றுணர்ந்து மேலைத் தலைமறையோ ராகாதாரை அயல் சதுப்பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்.
—
5 –ஸூரி வைபவ பாத, – பஞ்சம– 3அதிகரணங்கள் இதில் – 1 —39 – 96— 58–
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –36-
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—-3-
5– க்ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம் —39 – 74 –36-
“39-“எவ்வுலகத் தெவ்வெவையும்’” என்கையாலே வேதம் பஹு விதம்.
40-இதில் ஸம்ஸ்க்ருதம், த்ராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே.–
41-செந்திறத்த தமிழென்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி..
42-வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.
43-வேத,சதுஷ்டய-அங்கோபாங்க,ங்கள் பதினாலும்போலே, இந் நூலுக்கும் இருந் தமிழ் நூற் புலவர் பனுவலாறும், மற்றை எண்மர் நன் மாலைகளும்.
45-வேத நூல், இருந் தமிழ் நூல், ஆஜ்ஞை, ஆணை, வசையில், ஏதமில், ௬ருதி, செவிக்கினிய, ஓதுகின்றதுண்மை, பொய்யில் பாடல், பண்டை, நிற்கும், முந்தை, அழிவில்லா என்னும் லக்ஷணங்கள் ஓக்கும்.
46-‘“சொல்லப்பட்ட”” என்றதில் கர்த்ருத்வம் “ஸ்ம்ருதி – அத்தை ஸ்வயம்பு படைத்தான்’ என்றது போலே–
47-நால் வேதங்கண்ட புராண ருஷி-மந்த்ர தர்மிகளைப் போலே இவரையும் ருஷி, முனி, கவி என்னும்.–
48-“படைத்தான் கவி” என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பதமாமே.–
44-ஸகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய ப்ரபந்த, ப்ரதாநம்.
49-உறக்கம் தலைக் கொண்ட பின்னை மறை நான்குமுணர்ந்த தங்களப்பனோடே ஓதின சந்தச் சதுமுகன் சலங்கலந்த வெண் புரி நூல் மானுரி திரிதந்துண்ணும் காமனுடல் இருக் கிலங்கு ஜயேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே ஆதுமில் காலத் தெந்தையான வாய் முதலப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்லக் கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்று ஓத வல்ல பிராக்களை **கண்மின்கள்’” என்று சொல் பயிற்ற, வேதம் ஓதுவாரோத்தாகையாலே அதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது.
50-இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே; பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே. :
51-ருக்கு ஸாமத்தாலே ஸ ரஸமாய், ஸ்தோப,த்தாலே பரம்புமாப் போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரமாயிற்று.
52-சந்தோகனென்று ஸாமாத்யமாகாமல் முதலிலே பிரித்து யாழ் பயில் காந ஸ்வரூபியை *பாலையாகி”” என்று விஸேஷிக்கையாலே வேத கீதச்சாமி நானென்ன ஸாமந் தோன்ற உத் கீத ப்ரணவத்தை ப்ரத மத்திலே மாறாடி சரமகதி முடிவாகத் தொண்டர்க்கமுதென்ன தேவாந்நமாக்கி மஹா கோஷ நல் வேத வொலி போலே மஹாத்,யயந மென்னப் பாடுகையாலே இத்தை சாந்தோக்ய ஸமமென்பர்கள்.
அதிலே சொல்லுகிற அந்தராதித்யவித்யை தொடக்கமான வற்றையும் இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார் மேல்
53-புரவியேழொரு காலுடைய தேரிலே திருச் சக்கர மொத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜ்யோதிஸ் சக்ரவொளி சுருக்கி அக்நீஷோமீய தோஜோம்ருதத்துக் கூற்றும்- மந்தேஹர்க்குச் செந்தீயும், முக்தி மார்க்கத் தலை வாசலும், கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும், த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண்டாமரை சுமக்க தோள் வளையும் குழையும், திருச் செய்ய முடியும் ஆரமும் படையும், திகழும் பொன் மேனியும், செஞ்சுடர்த் தாமரைக் கண்ணுமாய், அணி நிற மூர்த்தி ஈதென்னும்படி இரண்டையும் தன்னிறமாக்குகிற செய்யாளான வித்யையோடே அருக்கன் மேவின ஸதாத்யேய தேஜஸ்ஸின் ஸாம ரஸோத் காந நாமமுள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓராயிரமாமவற்றிலே ஒன்றை ஆயிர முகத்தினா லருளின தீர்த்தம் போலே தீர்த்தங்களாயிரமுமாக விஸ்தரிக்கிறாரென்று வேத குரூபதேஸம்—
ஆக, ‘“எவ்வுலகத்தெவ்வெவையும்”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் நாலுக்கும் வேத ரூபத்வமும், அங்கோபாங்க ஸஹிதத்வமும், ஸாஸ்த்ரதவம் முதலான வேத லக்ஷணங்களும் இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும், இந்நாலு ப்ரபந்தங்களுக்கும் நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும், அதில் திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும், அதில் விசேஷ லக்ஷணங்களையும் சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்துக்கு வேத,ஸாம்யம் சொல்லா நின்றது –
இனி மேல் ஸ்வரூபாதிகளை விஸத, மாகச் சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்ரஹத்தை விஸதமாகச் சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம் விவரண ரூபமாயிருக்கும் என்பாரு முண்டென்கிறார்-
54-அன்றிக்கே, ஸ்வரூப கு,ண விபூ,தி சேஷ்டிதங்களை விஸமமாக்குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூபோக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருூம்ஹணமென்பர்கள்.
55-கல்பாதி,யில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர்முகன் சந்தஸ்ஸும் மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன் பிணச்சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறேறிச் சுழன்றாடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து தான் வணங்குமாறுரைக்கக் கேட்ட ஸஜாதீயர் ப்ரஸாதமும் ஆர்ஷ மூலம்.
56-பரம ஸத்த்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறை ஞானத்தயனாம் சிவனாம் திருமாலருள் கொண்டு இவர் பாடினார்.
57–கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யுமவை போலே மூவுருவாம் முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது நேர் படச் சொல்லும் நீர்மையிலா என்னைத் தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து தப்புதலறத் தன்னை வைகுந்தனாகத் தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்ல வல்லேனென்று நானும் சொல்லி நாடும் கையெடுக்கும்படி என் சொல்லால் யான் சொன்ன இன் கவி யென்பித்தா னென்றாரிறே.–
இதுக்குக் கீழ் ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம் சொல்லிற்று. இனி மேல் வக்த்ரு வைலக்ஷண்யம் சொல்லுகிறது
58-தர்ம வீர்ய ஜ்ஞாநத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே உள் கலங்கிச் சோகித்து, மூவாறு மாஸம் மோஹித்து, வருந்தி, ஏங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிற விவர்.
இனி மேல் இந்த ருஷிகளிற் காட்டில் இவர்க்கு ஸம்ஸாரத்தில் நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம் சொல்லுகிறது
59-ஸ்வாத்,யாய யோக,ங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர் இன்றும் ஆஸா பாஸ பத்தர்.
60-அவர்களுக்குக் காயோடென்னுமவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே.
61-அழுநீர் துளும்பக் கடலும் மலையும் விசும்பும் துழாய் திருமால் என்று “எங்கே காண்கேன்!* என்னுமிவரலமாப்பு அவர்களுக்கு புத்ர வியோகத்திலே.–
62-பல ஸாதந தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்.
இதுக்கு கீழ் வக்த்ரு வைலக்ஷண்யம் சொல்லிற்று – இனி மேல் ப்ரபந்த, வைலக்ஷண்யம் சொல்லுகிறது-அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்றுகொண்டு இதினுடைய ஸார தமத்வம் சொல்லுகிறார்
63-ராமாயணம் நாராயண கதை என்று தொடங்கி கங்கா காங்கேய ஸம்பவாத்ய ஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாய் ஸூத்தி பண்ணாமல் ““திருமாலவன் கவி’” என்ற வாயோலைப் படியே மாற்றங்களாய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்தவிது – வேதாதிகளில் பெளருஷ-மாநவ-கீ,தா- வைஷ்ணவங்கள்-போலே அருளிச் செயலில் ஸாரம்.
இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும் பரஸ்பர விருத்தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும் ஏக கண்டராகையாலே எல்லாம் ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய், எல்லா ப்ரபந்தங்களும் இவருடைய ப்ரபந்தத்தைப் பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய், இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம் த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம் சொல்லுகிறது–
64-குரு சிஷ்ய க்ரந்த,விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ் சொல், செந்தமிழ், இன் கவி, பரவி, அழைக்கும் என்று அந்யோத்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசும் ஏக கண்டரில் “என்னில் மிகு” என்னுமிவருரை கொளின்மொழி கொண்டு ஸாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங் கொண்ட இதுக்குச் சேராதவை மநு விபரீதங்கள் போலே.
65- பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்கவிடுவர்.–
66-அதுக்கு மூலம் ““விதயஸ்ச’” என்கிற பரமாசார்ய வசநம்.(ஸ்தோ. ர. 20)
67-ஆப்திக்கு இவர் “சுருதி, மார்க்கண்டேயன், பார்த்தன்” என்கிற இவை வ்யாஸ மநு ப்,ரஹ்மவாதிகளை வேதம் சொல்லுமாப் போலே.
68-பாரத கீதைகளின் வேதோபநிஷத்த்வம் போலே இதுவும் வ்யாக்யை யானாலும் வேத ரஹஸ்யமாம்.
69-உதாத்தாதி -பத-க்ரம-ஜடா-வாக்ய-பஞ்சாதி-பாத-வ்ருத்த ப்ரஸ்ந -காண்ட,-அஷ்டக-அத்யாய- அம்ஸ -பர்வாத் யலங்காரங்கள் போலே, எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொடை, நிரைநிரை, ஒசை, தளை, இனம், யாப்பு, பா, துறை, பண், இசை, தாளம், பத்து, நூறு, ஆயிரம் முதலான செய் கோலம் இதுக்குமுண்டு.-
ஆக இதுக்குக் கீழ் வேதத்தினுடையவும், தது,பப்ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்த லக்ஷணங்களும் அர்த்த லக்ஷணங்களும் அருளிச் செய்தார். இனி மேல் ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார டரம்பரையில் எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்
70-அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்னும்.–
71-மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச் சங்கணித் துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய் அந்தஸ்தத்தைக் காட்டுமாப் போலே அல்ப ஸ்ருதர் கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது.—
இனிமேல் அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும் இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம் சொல்லுகிறது
72-மேகம் பருகின ஸமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோபஜீவ்யமாமே.–
73-ம்ருத் கடம் போலன்றே பொற்குடம்.
74-பெரும் புறக் கடலும், ஸ்ருதி ஸாக,ரமும் அலைத்தாழ்ந்து ஓடுமிடங்களில் அயோக்யர்க்குச் சமைத்த மடுவும், சாய் கரகமும் மாந மேய சரமம்.
இத்தால் **பரத்வபரமுதுவேதம்’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும் திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –
—
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –19-
ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்-மேலெல்லாம் இதில் ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும், திருவாய்மொழியினுடையவும் த்ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்தவத் கரித்து இவற்றோடொக்கும் ப்ரமாதாக்களின் ஜந்ம நிரூபணம் என்கிறார்-
75-வீட்டின்ப-இன்பப் பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூுபண ஸமம் இன்பமாரி யிலாராய்ச்சி,–
76-பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய்ந் தூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாமோத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்.–
இதுக்குக் கீழ் கருஷ்ண த்வைபாயநனான வ்யாஸனோடும், க்ருஷ்ணனேடும் உண்டான ஜந்ம ஸாதர்ம்யம் சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள் போலன்றே’‘ என்று – இனி மேல் வைதர்ம்யம் சொல்லுகிறது,
77–கிருஷ்ண க்ருஷ்ண த்வைபாய நோத்பத்திகள் போலன்றே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வ ஜந்மம்.–
78-பெற்றும் பேறிழந்தும் கன்னிகை யானவளும் எல்லாம் பெற்றாளாயும், தத்துக் கொண்டாள் என்பர் நின்றார் என்னுமளவும் நெடுங் காலமும் நங்கைமீர் என்னுமிவர்க்கு நேரன்றே.-
79-மீந நவநீதங்கள் கந்திக்குமிடமும் வெறி கொள் துழாய் கமழுமிடமூம் தன்னிலொக்குமோ—
80-ஆற்றில் துறையில் ஊரிலுள்ள வைஷம்யம் வாசா மகேசரம்.–
81-தேவத்வமும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும் ஜநிகள் போலே ப்ரஹ்ம ஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத் தேசிறே.–
82-ஜநக-தஸரத,-வஸுதேவ-குலங்களுக்கு மூத்த பெண்ணும், நடுவில் பிள்ளையும், கடைக் குட்டியும் போலே இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அஞ்சிறை யுமறுத்தார்–
83–ஆதித்ய-ராம திவாகர-அச்யுத பாநுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி, சோஷியாத பிறவிக் கடல் வற்றி, விகஸியாத போதில் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே.—
84-வம்ஸ பூ,மிகளை உத்தரிக்கக் கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே இவரும் நிமக்நரை உயர்த்தத் தாழ இழிந்தார்.
ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும் வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும் திருவாய்மொழியினுடையவும் த்ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும் ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால் வரும் ப்ரத்யவாயத்தையும், வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்யத்தையும், அவதாரம் பரார்த்த,ம் என்னுமிடத்தையும், இப்படி மஹா ப்ரபாவரான இவர் தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும் அருளிச்செய்தார்–
இனிமேல் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப் பல உதாஹரணங்களாலும் அருளிச் செய்கிறார். அதில், அவர்கள் ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் குறைய நின்றார்களே யாகிலும் பகவத் பக்தரானார்களாகில் அவர்கள் ஸர்வ உத்க்ருஷடரென்றும், அவர்கள் உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும், அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும், அவர்கள் விஷயத்தில் பகவானுடையவும், பகவதீயருடையவும் ஆதர ப்ரகாரத்தையும், அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம் என்னுமிடத்தையும், ப்ரமேய பூதனுடையவும், ப்ரமாதாக்களினுடையவும், உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்.–
85–ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம் என்கிற திருமுகப் படியும், விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ் மகன் தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத் பாவம் சொல்லும்படி ஏக குலமானமையும், தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும், ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள் அக்ர பூஜை கொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாஸமமாகச் செய்த புத்ர க்ருத்யமும், புஷ்ப த்யாக போக மண்டபங்களில் பணிப் பூவும் ஆல வட்டமும் வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும் வைதிகோத்தமரும் மஹா முனியும் அநுவர்த்தித்த க்ரமமும், யாக,அநுயாக உத்தர விதிகளில் காய அந்ந ஸ்தல ஸூத்தி பண்ணின வ்ருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது.–
கீழ் ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால் குறைய நின்றார்களேயாகிலும் பகவதீ யரானார்களாகில் அவர்கள் ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச் சொல்லிற்று–இனிமேல் பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர் ப்ரமிக்கிற கேவல வர்ணாதிகள் வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார் –
86-அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்யா வ்ருத்தங்களை கர்த்தப ஜந்மம், ஸ்வபசாதமம், ஸில்பநைபுணம், பஸ்மாஹுதி, ஸவவிதவா லங்காரமென்று கழிப்பர்கள்.–
இனி மேல் பகவத் விநியோகார்ஹமாயும், பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும் மிகவும் உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம் மாநஸைரந்த்ய ஜாதிதாம் | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம் நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக் கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள் போலன்றிக்கே, பகவத் விநியோகார்ஹமாய், பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்ரஹிக்கவும் ஆதரிக்கவும் படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்-
87-அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜதநிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப் பெரு மக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்.–
இனி மேல் ஸேஷேத்வத்துக்குப் புறம்பான ஆத்மாவையும் அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச் சொல்ல வேணுமோ? என்கிறார்
88-ஸேஷத்வ பஹிர்பூத ஜஞாநாநந்த மயனையும் ஸஹியாதார் த்யாஜ்யோபாதியை ஆதரியார்களே.
இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்-
89-இதின் ஓளபாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறை முனிவனாக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யதிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்.–
கீழ் பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம் அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள் அநுபாதேயரென்றும், பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம் உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள் உபாதேயரென்றும் சொல்லா நின்றது. இனி மேல் ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள் மூன்றிலும் த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம் படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும் ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம் பண்ணுமவர்கள் அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண ஸமம் இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார் (மா வுருவில் கள்ள வேடம் என்று தொடங்கி].
90- மாவுருவில் கள்ள வேடம், திருந்து வேதமலமான மானிடம் பாடல், ஸர்வ வர்ண ஸூத்ரத்வம், காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம், தென்னுரையில் ஹரி கீர்த்தி, ஸ்வபசரில் பத்தி பாசனமும் அறிவார் ஆரார் அமரரென்ன ஏற, அறியாதார் சாதி யந்தணர்களேலும் தகர விழுவர்.—
இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம் வ்யாஸ ஸூகாதி களாலும் ப்ரகாஸிப்பிக்கப் பட்ட தென்கிறார் மேல்.-
91-தமிழ் மா முனி திக்கு ஸரண்ய மென்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவராவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்.–
இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில் ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள் என்கிறார் –
92–அத்ரி-ஜமதக்நி-பங்க்திரத,-வஸு-நந்த, ஸூநுவானவனுடைய யுக,-வர்ண-க்ரமாவதாரமோ? வ்யாஸாதி வத் ஆவேஸமோ? மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் ப,லித்தவரோ? என்று ஸங்கிப்பர்கள்,–
இப்படி இவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில், இவருடைய ப்ரபாவம் கண்டு என்கிறார் மேல்.
93-இதுக்கு மூலம் – யான் நீ என்று மறுதலைத்து வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி நிலயிடம் தெரியாதே தெய்வத்தினம் ஒரு வகைக் கொப்பாக இனத் தலைவன் அந்தாமத்தன்பு செய்ய, சேர்ந்தமைக் கடையாளம் உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழித்து ஸடரை யோட்டி மதாவலிப்தர்க்கு அங்கு மிட்டு நடாவிய கூற்றமாய், தீயன மருங்கு வாராமல் கலி யுகம் நீங்கிக் கித யுகம் பற்றிப் பட்டெழுபோதறி யாதிருந்த ப்ரபாவம்.
—
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம் 94–96—-3-
இவர்க்கு இந்த ப்ரபாவமுண்டாகைக் கடி என் என்னில், ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜஜீவநத்துக்கு கிருஷி பண்ணுகிற ஈஸ்வரன் ஸஜாதீயரைக் கொண்டு இவர்களைத் திருத்த வேணு மென்று பார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில் கிடையாத தஸையிலே தேவ மநுஷ்யாதி சரீரங்களிலே பரவேஸித்து, ததநுஸாரிகளாய்க் கொண்டு ஜந்ம பரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸார ஸாகர மத்யஸ்தரான இவர் பக்கலிலே நிர்ஹேதுகமாகப் பண்ணின விஸேஷ கடாக்ஷமென்கிறார் –
94-இதுக்கு ஹேது – ஊழி தோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண் காண வந்து ஆள் பார்க்கிறவன் உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக் கழறலர் ஞானமுருவின மூழுதுமோட்டின பெருங் கண் எங்குமிலக்கற்று அன்பொடு தோக்கான திசையிலே ஆக்கையில் புக்குழன்று மாறிப் படிந்து துளங்குகிறவர் மேலே படப் பக்க நோக்கறப் பண்ணின விஸேஷ கடாக்ஷம்.
இத்தால் கீழ்ச் சொன்ன அவருடைய ப்ரபாவத்துக்கு ஹேது பகவத் கடாக்ஷம் என்றதாய்த்து.நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தாரொருவர்க்கு ப,க,வத் கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல பாபங்களும் போய் இந்த ப்ரபாவமெல்லாம் உண்டாகக் கூடுமோ என்னில்; ஸபரி முதலானாரை பரி ஸூத்,த,மாக்கின ஸர்வேஸ்வரனுடைய தி,வ்ய கடாக்ஷம் அவஸ்ய மநுபோக்தவ்யமான ஸகல பாபங்களையும் நஸிப்பிக்குமிறே என்கிறார்
95-ஸ்ரமணீ-விது,ர-ருஷிபத்நிகளைப் பூதராக்கின புண்ட,ரீகாக்ஷ்ன நெடுநோக்கு சாபமிழிந்தென்னப்பண்ணுமிறே.
ஸர்வேஸ்வரன் இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம் என் என்னில், லோக ஹிதார்த்தமாக என்கிறார்-
96-கோவ்ருத்திக்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன் ஐகத்திதார்ததமாக “எனக்கே நல்லவருள்கள்” என்னும்படி ஸர்வ ஸெளஹார்த்த,ப்ரஸாதத்தை ஒரு மடை செய்து இவரைத் தன்னாக்க, லோகமாகத் தம்மைப் போலாக்கும்படி யானார்.
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply