கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-–
சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்–பரி கணனையோடு பரம பக்தியோடு வாசி அற முகம் கொடுக்கும் என்று அக்குணத்திலே ஈடுபடுகிறார் –நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும்-சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா,
இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன் என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப் போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான்–இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான்-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும்-‘வரும்
வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’
109-எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமிலீலை.
ஆனால் பரமபக்திக்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கும் முகம் காட்டும் என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில், அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார் மேல். (எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம் காட்டும் என்னுமிடம் ஈஸ்வரனுடைய குணாதிக்யம் சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும் தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள் வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள் ஸித்திக்குமிடத்தில் ”எண்ணிலும் வரும்” என்றது தானும் மிகையாம்படி ‘“ஓரெண்டானுமின்றியே”” \என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே–
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-எண்ணிலும் வரும் -என்கிறது தானும் மிகை யானபடி கண்டாயே -என்று அவன் படியை மூதலிக்கிறார் –
தன் திறத்தில் எண்ணுகை தானும் இன்றியே இருக்கச் செய்தே எம்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்த படியைச் சொல்லுகிறார் –எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –-எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –-உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –பழம் கிணறு கண் வருகிறது என் –-நீ அவனைக் காண எங்கே எண்ணினாய்-பிரளய ஆபத்தில் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை-(விலக்குகைக்கு பரிகரமாவது – விஷய ப்ராவண்யம்-ஸ்வரூப யோக்யதை யாதல் என்றுமாம் –)பிரதி கூலிகைக்கும் பரிகரம் உடைய நீ யன்றோ பெற்றாய் –பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;-உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;-அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,-அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.
ப்ரஹ்மம் -கடவுள் -இறைவன் -பரத்வம் அறிந்து வணங்கி -எம்பிரான் எந்தை என்னுயிர் எளிமை நினைத்து நெருங்குவோம் -கண்ணன் -அஹம் மாம் -இரண்டையும் காட்டுமே–
1-உள்ளத்தால் எண்ணினால் நினைத்தால் வரும்
2- எண்ணம் இல்லாவிட்டாலும் வரும்
3-ஓன்று இரண்டு மூன்று இவ்வாறு எண்ணிக் கொண்டு வந்தாலும் வரும்-
பரம புருஷார்த்தம் -ஸ்ரீ வைகுண்டம் -எம்பெருமான் பதம் -அத்விதீயம் -ஓன்று
கண்ணன் கோபாலனாக கோயிலே கொண்டுள்ள ஸ்தலங்கள் -இரண்டு –
ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி பிரதான திவ்ய தேசங்கள் –மூன்று
பிரசித்த போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் -நான்கு
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -ஐந்து
விண்ணகர் என்று கொண்டாடப்படும் திவ்ய ஸ்தலங்கள் -ஆறு
முக்தி அளிக்கும் ஷேத்ரங்கள் -ஏழு
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
பகவத் ராமானுஜரின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்கும் ஷேத்ரங்கள் -ஒன்பது
ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்கள் -பத்து–
—
ஸ்வயம் பாதம் ப்ரசார்ய ஸ்ரித்து ரிதஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா
ஜானுன்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாக போக நிதாய
பஸ்ஸாத் பாஹுத் வயேந ப்ரதிப டஸமநே தாரயன் சங்க சக்ரே
தேவீ விபூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத
ஆத்ம பரமாத்ம ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றுக்கு குறைவற்ற ஸ்தலம் -ப்ரளயத்திலும் அழியாதது -கர்மங்களைத் தொலைத்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்ற ஆத்மா திரும்பி வருவதில்லை -பரமபத நாதனை ஆதிசேஷனில் அமர்ந்துள்ளார் –
–
வீர நாராயணப் பெருமாள் -மாடு கன்றோடு சேவை -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் திருவவதார ஸ்தவம் -ஸ்ரீ நாதமுனிகளுக்கு -அருளிச் செயல்களைக் காட்டிக் கொடுத்த ராஜகோபாலன் –பெரியவாச்சான் பிள்ளை -தென்னானாய் வடவானாய் -இத்யாதி பாசுரம் சமர்ப்பித்து அபிமானித்த ஸ்தலம்
லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
மன்னார்குடி -ராஜகோபாலன் -ருக்மிணி ஸத்யபாமையோடு ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் -32-திருக்கோல தர்சனம் ரிஷிகளுக்கு காட்டிக் கொடுத்து அருளினவன் –தக்ஷிண துவாரகை
உன்னுத்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
நும்மிச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே -4-6-10-மா முனிகள் ஸமர்ப்பித்து அபிமானித்து ஸ்தலம்
—
ஸ்ரீ தேவிக்கு பிரதான ஸ்தவம் -ஸ்ரீ ஸ்வேத கிரி என்னும் ஆதி திருவெள்ளறை -புண்டரீகாக்ஷப் பெருமாளுடன் சேவை -கிருத யுகத்திலே சிபி சக்ரவர்த்திக்காக ஸ்ரீ வராஹ ரூபத்தை காட்சி கொடுத்தருளிய ஸ்தலம்
நாச்சியார் ஆண்டாள் பிரதான ஸ்தவம் ஸ்ரீ வில்லிபுத்தூர் -பூதேவி நமக்காக குன்றாத வாழ்வான் வைகுந்தம் வான் போகந் தன்னை இகழ்ந்து ஆண்டாளாக திருத்துழாய்த் தோட்டத்தில் எடுத்து பெரியாழ்வார் திருமகளானார் –
நாச்சியார் கோயில் -நீளா தேவிக்குப் ப்ரதானம் -வஞ்சுளவல்லித்தாயார் -திருநம்பிக்கை நாச்சியார் -நறையூர் நம்பி சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தன் அனைவருடன் சாளக்கிராம திருமேனியுடன் சேவை ஸாதிக்கிறார் -திருமங்கை யாழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளிய பெருமாள்
—
1-போக மண்டபம் -ஸ்ரீ ரெங்கம் -பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள் –
2-புஷ்ப மண்டபம் –சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -திருமலை -தோ மாலை பிரஸித்தம் -குறும்பறுத்த நம்பி வைபவம் -அநந்தான் பிள்ளை வைபவம் –
3-தியாக மண்டபம் -அத்தியூரான் புள்ளை யூர்வான் –திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தைகள் -ஆலவட்டம் கைங்கர்யம்
4-ஞான மண்டபம் -திரு நாராயண புரம் -கிருதயுகத்தில் தத்தாத்ரேயராக அவதரித்து வேதங்களை உபதேசித்து அருளிய ஸ்தலம் -த்ரேதா யுகத்தில் ராமனாலும் த்வாபர யுகத்தில் கண்ணனாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாள் -யதிராஜர் எழுந்தருளி ஞான பக்தி வளர்த்தருளிய ஸ்தலம் -யதிராஜ சம்பத்குமார் ப்ரஸித்தம்
–
பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
1-திருக்கண்ணங்குடி -கண்ணனூர் கண்ணபுரம் -64 சதுர்யுக ங்களாக சேவை -சவுரி ராஜர் ஐதிக்யம் -அமாவாசை தோறும் திருக் கைத்தல சேவை -விபீஷணனுக்காக -திருமங்கை ஆழ்வாருக்கு திருவெட்டு எழுத்து அர்த்தம்- கற்ப்பித்தார்
2-திருக்கண்ணங்குடி -வசிஷ்டர் ஆராதனப் பெருமாள் –தாமோதர நாராயணன் -லோக நாயகித் தாயார் -திருமங்கை ஆழ்வாருக்கு உதவின நான்கு -தீரா வழக்கு-உறங்காப்புளி -ஊராக்கிணரூ -காயா மகிழ் -இங்கு பிரசித்தம்
3-திருக்கோவலூர் -த்ரிவிக்ரமப் பெருமாள் ஆயனாக சேவை ஸாதிக்கும் ஸ்தலம் -மிருகண்டு மகரிஷி முதல் ஆழ்வார்கள் ப்ரத்யக்ஷம் –
4-திருக்கண்ண மங்கை–பெரும் புறக் கடல்-அபிஷேக வல்லித் தாயாராய் திருமணம் செய்தருளிய ஸ்தலம் -அடியார்களை உயிராகக்கொண்ட பத்தராவிப் பெருமாள் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் –
5-திருக் கபிஸ்தலம் -ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் –கஜேந்திர மோக்ஷம் திருவடிக்குக் காட்டி-ரமாமணித் தாயார் ஸமேத கஜேந்திர வரதன்
—
மண்ணகத்திலேயே ஆறு விண்ணகர் திவ்ய ஸ்தலங்கள்
1-திருவிண்ணகர் -ஒப்பிலி அப்பன் -உப்பிலி அப்பன் -பொன்னப்பன் மணியப்பன் -முத்தப்பன் -என்னப்பன் –
2-திருக் காழிச் சீராம விண்ணகரம் -தாடாளன் -சீர் பெருகி பாபம் கழிகிற படியாக இந்தத் திருநாமம் – ஸித்தாஸ்ரமம் போல் இருப்பதால் ராம விண்ணகரம் என்றும் வழங்கப்படுகிறது –
3-திரு நந்திபுர விண்ணகரம் —ஸ்ரீ நாதன் கோயில் –செண்பக வல்லித் தாயார் ஸமேத ஜெகந்நாதப் பெருமாள்
4-திரு அரிமேய விண்ணகரம் -பொருள் வெண்ணெய் நம்முள்ளம் கோபிகள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யங்கள் -நம் பாபங்கள் அனைத்தையுமே அபகரிப்பதால் அரி -மூலவர் குடமாடு கூத்தன் -கோவர்த்தன கிரிநாதனே இங்கு எழுந்தருளி உள்ளார் –
5-திரு வைகுந்த விண்ணகரம் -வீற்று இருந்த திருக்கோலம் -ஸ்வேதகேது இங்கு கைங்கர்யம் செய்து முக்தி பெற்றான் –
6-திரு பரமேஸ்வர விண்ணகரம் -முகுந்தவல்லித்தாயார் ஸமேதரராய் வீற்று இருந்த திருக்கோலம்-நடு தளத்தில் சயனத் திருக்கோலம் -மேல் தளத்தில் நின்ற திருக்கோலம் –
—
முக்தி தரும் ஷேத்ரங்கள் -ஏழு
1-அயோத்யா -சரயு நதிக்கரை -அபராஜிதா
2-மதுரா -யமுனைக்கரையில் மதுரமான ஸ்தலம் -பாபங்களை மதனம் பண்ணி -கடைந் தெடுத்துப் போக்கி -புண்ணியங்களை அளித்து முக்தி தரும் -கீதையில் தான் பிராணத்தையும் வளர்ந்ததையும் த்யானித்தாலே அந்தப் பிறவியலே மறு பிறவியில்லா மோக்ஷம் அடைவான் -என்று அருளிச் செய்துள்ளான் அன்றோ –
3-மாயா -ஹரித்வாரம் -தேவ பிரயாக் கர்ண ப்ரயாக் -ருத்ர ப்ரயாக் -விஷ்ணு ப்ரயாக் -திருப்பிரிதி -பத்ரிநாத் அனைத்து ஸ்தலங்களுக்கும் தலைவாசல் -கங்கை கங்கையை என்னும் வாசகத்தினாலேயே கடு வினைகள் களையலாமே –
கங்கா த்வாரே குசா வர்தே பில்வகே நீல பர்வதே
ஸ்நாத்வா கநக லே தீர்தே புநர் ஜென்ம ந வித்யதே
வியத்தகு ஆற்றல் உள்ள படியாக இது மாயா என்றும் பெயர் பெற்றது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடைபெறும் இடம் –
4-காசி -வாரணாஸீ –
அன்யாநி முக்திக் ஷேத்ராணி காசீ ப்ராப்தி கராணி ச
காசீம் ப்ராப்ய விமுச்யதே நான்யதா தீர்த கோடிபி
காசீ காசீதி ஜபதோ யஸ்ய ஸம்ஸ்தி திஸ்
அந்யத்ராபி ஸதஸ்தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே —
வர்ணா மற்றும் அஸீ நதிகளுக்கு இடையில் -வாராணஸீ -ஆத்ம விஷயங்களை எல்லாம் –காசயதி ப்ரகாசயதி– விளங்கு வைக்கும் ஸ்தலம்-பிந்து மாதவனாக சேவை
5-காஞ்சீ -திருக்கச்சி -க -ப்ரஹ்மா யாகம் செய்து அஞ்சித்த-தொழுத ஸ்தலம் -ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்யகோடி விமானம் -ஒரு புண்ணியம் கோடி புண்ணியமாக வளர்ந்து முக்தியை அளிக்கும் –
6-அவந்திகா -உஜ்ஜைன் -ஸூதாமா என்னும் குசேலருடன் ஸாந்தீபனி மகரிஷியிடம் 64 கலைகளையும் கற்ற ஸ்தலம் -ஷிப்ரா நதிக்கரையில் உள்ளது -12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் -இவ்வூரின் வாழியே கடக ரேகை ஓடுகிற படியாக விக்ரமாதித்ய மன்னர் காலத்தில் வானவியல் வல்லுநர்கள் இங்கு கூடிய கால க்ரஹ நிர்ணயம் செய்தனர் –
7-துவாரகா -முக்திக்கு வாசல் -கோமதி நதிக்கரையில் உள்ளது த்வாரகாதீசனாக சேவை ஸாதித்து அருளுகிறான் —
—
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
1-ஸ்ரீ ரெங்கம்
காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம்
ஸ வாசூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
விமானம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவத் ப்ரணவார்த்ஹ ப்ரகாசக
பூ லோக வைகுண்டம் –
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான் –
2- ஸ்ரீ முஷ்ணம் –ஸ்ரீ தேவி பூ தேவி யுடன் ஒரே கல்லில் கரப்ப க்ருஹத்தில் -சங்கு சக்கரம் ஏந்தி சேவை -முத்தக்காசு கோரைக்கிழங்கு பிரஸாதம் ஸமர்பிக்கப் படுகிறது –
ஸ்வேதம் ஸூ தர்சந தராங்கித பாஹு யுக்மம்
தம்ஷ்ட்ராகரால வதனம் தரயா ஸமேதம்
ப்ரஹ்மாதி பிர் ஸூர கணை பரி ஸேவ்யமானம்
த்யாயேத் வராஹ வபுஷம் நிக மைக வேத்யாம்–
3-திருவேங்கடம் –
ஸ்ரீ ஸேஷாசல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வஸதே ரநிசம் வதந்தி ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸூ ப்ரபாதம்
பத்து புராணங்களும் பேசும் பெருமை -கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் –
4-சாளக்கிராமம்
மம தத் ரோஸதே ஸ்தாநம் கிரி கூட ஸி லோச்சய சாளக்ராம இதி க்யாதம் பக்த ஸம்ஸார மோக்ஷணம்
சாளக்ராம ஸிலாரூபீ தவ கர்ப கத ஸதா திஷ்டாமி தவ புத்ரத்வே பக்தா நுக்ரஹ காரணாத்
கண்டகி நதியின் பிரார்த்தனைக்கு ஏற்ப மடியில் தோன்றியருலி -இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் முக்திநாதனாக தர்சனம் அருளுகிறார்
5-நைமிசாரண்யம்
ததோ கச்சேத ராஜேந்திர மிஸ் ரகம் தீர்த முத்தமம்
தத்ர தீர்தா நி ராஜேந்த்ர மிஸ்ரிதாநி மஹாத்மநா
வ்யாஸேன ந்ருப சார்தூலத் விஜார்த மிதி நஸ் ஸ்ருதம்
ஸர்வ தீர்தே ஷு ஸ ஸ்நாதி மிஸ்ரகே ஸ்நாதி யோ நர
இங்கு காடாகவே தர்சனர் -ஒரு நிமிஷ நேரத்திலே அசுரர்களை அழித்தவன்
ஸூத மகரிஷி புராணங்கள் ஸுநகர் போன்ற முனிவர்களுக்கு அமர்ந்து உபதேசித்து அருளினார் -அயோத்யா மன்னர்களுக்கு யாக பூமியாக விளங்கிய ஸ்தலம்-
6-வானமா மலை -ஸ்ரீ வைகுண்டம் போல் வீற்று இருந்த திருக்கோலம் -சிரீவர மங்கை ஸமேதனாய் தெய்வநாயகன் -ரோமச முனிவருக்கு ப்ரத்யக்ஷம் -நித்ய எண்ணெய் தைலக்காப்பு –
7–புஷ்கரம் –
யதா ஸூராணாம் ஸர்வேஷாம் ஆதிஸ்து புருஷோத்தம
ததைவ புஷ் கரம் ராஜன் தீர்தா நாம் ஆதி ருச்யதே –
தீர்த்த வடிவமாகவே சேவை -நான்முகனுக்கும் கோயில் உண்டு -அவர் ஒரு அரக்கனை தமது கையிலே உள்ள தாமரையை வீசி அழிக்க -அது 52 பகுதிகளாகி இணைந்து புஷ்கரம் எனப்படுகிறது
8-பதரிகாச்ரமம்
யோவதீர்ய ஆத்ம நோம் ஸேந தாஷாயண்யாம் து தர்மத
லோகா நாம் ஸ்வஸ்தயே அத்யாஸ்தே தபோ பதரிகாஸ்ரமே
அலகானந்தா நதிக்கரையில் இலந்தை மரத்தடியில் தவம் செய்யும் திருக்கோலம் -நர நாராயணனாக -சிஷ்ய ஆச்சார்யனாக அஷ்டாக்ஷரம் உபதேஸித்து அருளிய திவ்ய க்ஷேத்ரம் -அக்ஷய திருதீயை முதல் தீபாவளி வரையே திறந்திருக்கும் -பின்னர் பனி மூடி விடும்
—
ஸ்ரீ ஸ்வாமி ராமானுஜ சரித்திர ஷேத்ரங்கள் ஒன்பது –
1-ஸ்ரீ பெரும்பூதூர் -பிங்கள வர்ஷம் -1017-சித்திரை வளர்பிறை பஞ்சமி திதி வியாழக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் திரவவதாரம் -சிவனின் பூத கணங்களால் கட்டப்பட்டதால் பூத புரீ -திருவவதார மண்டலத்தில் 74 ஆச்சார்யர்களின் திருவுருவங்களும் சேவை உண்டு
2-திருப்புட்குழி -வறுத்த பயறு முளைக்க வைக்கும் -மரகத வல்லித் தாயார் ஸமேத விஜய ராகவப் பெருமாள் -யாதவப்பிரகாசரிடம் கல்வி கற்ற ஸ்தலம் -பெரிய திருவுடையாருக்கு ஸம்ஸ்காரங்களைச் செய்த க்ஷேத்ரம்
3-மதுராந்தகம் –பெரிய நம்பிகளால் சமாஸ்ரயணம் பெற்றார் -ஏரி காத்த பெருமாள் மந்த்ர உபதேசம் பெற்ற ஆத்மாவைத் திருக்கல்யாணம் செய்தருளிய ஸ்தலம் –
4-தொண்டனூர் -நம்பி நாராயணப்பெருமாள் நின்ற திருக்கோலம் -ஆதிசேஷனாக ஆயிரம் புரவாதிகளை வாதத்தில் வென்றார்
5-ஸிம்ஹாசலம் -பக்த பிரகலாதனை ரக்ஷிக்க ஸிம்ஹ முகம் –ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர் -இங்கு ஸ்ரீ பாஷ்யம் உபதேசித்து அருளினார்
6- ஸ்ரீ கூர்மம்
நாரதரிடம் கூர்ம மந்த்ர உபதேசம் பெற்ற ஸ்வேத மஹாராஜாவுக்கு ப்ரத்யக்ஷம்
7-புரீ -புருஷோத்தமன் க்ஷேத்ரம்
8-ப்ரயாக் ராஜ் -திரிவேணி சங்கமம் -வேணி மாதவப் பெருமாள் சேவை –
த்ரிதண்டம் -தத்வத்ரயம் விளக்கி உபதேசம்
9-கயா -கயன் என்னும் அசுரனை அடக்கி கதாதரப் பெருமாளாக தர்சனம் -பால்குனி நதி தீர்த்தம் பிண்ட பிரதானம் –
—
ஆழ்வார்கள் திருவவதார ஸ்தலங்கள் பத்து
1-பொய்கையாழ்வார்
துலாயாம் ஸ்ரவணே ஜாதம் காஞ்சியாம் காஞ்சனா வாரிஜாத்
த்வாபரே பஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே
திருவெஃகா -சொன்ன வண்ணம் பொற்றாமரைக் குளத்தில் ஐப்பசி திருவோணம் அவதாரம் -பாஞ்சஜன்ய அம்சம் –
2-பூதத்தாழ்வார் -திருக்கடல் மல்லை –
துலாத நிஷ்டா ஸம் பூதம் பூதம் கல்லோல மாலிந
தீரே புல்லோத் பலே மல்லா புர்யாமீடே கதாம்சகம்
ஸ்தல சயனப் பெருமாள்
ஐப்பசி அவிட்டம் கதையின் அம்சம்
3-பேயாழ்வார் –
துலாஸ தனி ஷக்ஜாதம் மயூர பிரிகைரவாத்
மஹாந்தம் மஹாதாக்யாதாம் வந்தே ஸ்ரீ நந்தகாம்சகம்
ஐப்பசி சதயம் –மயூரவல்லித் தாயார் சமேத கேசவப் பெருமாள் சேவை சாதித்தருளும் மைலாப்பூரில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில்
4-திருமழிசை ஆழ்வார்
மகாயாம் மகர மாஸே சக்ராம்சம் பார்க்கவோத்பவம்
மஹீசார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே
திருச்சக்கர அம்சம் -தை மகம்
5-நம்மாழ்வார்
வருஷயே து விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
பாண்டிய தேசே கலே ராதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே
கலிபிறந்து 42 நாள் வைகாசி விசாகம்
மதுரகவியாழ்வார்
மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்டியதே சே கணாம்சகம்
ஸ்ரீ பராங்குச ஸத் பக்தம் மதுரம் கவிம் ஆஸ்ரயே
திருக்கோளூரில் கணாம்சம் -சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம்
6-குலசேகரப்பெருமாள்
கும்பே புனர்வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆச்ரயே
திருவஞ்சிக்களம் –
7-பெரியாழ்வார்
மிதுநீ ஸ்வாதி ஜம் விஷ்ணோரதாம்சம் தன்வின புரே
ப்ரபத்யே ஸ்வ ஸூரம் விஷ்ணோர் விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்
ஆனி ஸ்வாதி -பெரிய திருவடி -அம்சம்
ஆண்டாள்
கற்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீ காந நோத் பவாம்
பாண்டிய விஸ்வம்பராம் கோதாம் வந்தேறி ஸ்ரீ ரெங்க நாயகீம்
பூமா தேவி அம்சம் -திருவாடிப்பூரம் –
8-தொண்டரடிப் பொடி ஆழ்வார்
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவாம்
சோளோர்வ்யாம் வானமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
திருமண்டங்குடியில் மார்கழி கேட்டை
9-திருப்பாணாழ்வார்
விருஸ்சிகே ரோஹிணி ஜாதம் ஸ்ரீ பாணம் நிசுளாபுரே
ஸ்ரீ வத்ஸ அம்சம் காயகேந்த்ரம் முனிவாஹனம் ஆஸ்ரயே
திரு உறையூரில் கார்த்திகை ரோஹிணி
10-திருமங்கையாழ்வார்
விருஸ்சிகே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சிகாமணிம்
ஷட் பிரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிஹம் ஆஸ்ரயே
சார்ங்கம் அம்சம் -திருக் கார்த்திகை -திருக் கார்த்திகையில் அவதாரமே -இவர் மட்டுமே 47 திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணி அருளி உள்ளார் -குமுதவல்லி நாச்சியாருடன் சேவை –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply