ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ -ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌– ஸ்ரீ திருநாராயணபுரம்‌ அரையர் -ஸ்ரீ உ .வே .ஸ்ரீ ராம சர்மா ஸ்வாமிகள்-பகுதி-2–

6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —
9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11
11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–
13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

2 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-
19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2
20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–
22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

6 — ப,க்திபாதம் -ஷஷ்ட? 2-2 —97–121—-25-
8–ஜ்ஞாந ப,க்த்யதி கரணம்‌ 97 –117—-21 —

97-அதாவது மயர்வற மதிநலமருளுகை.

அஜ்ஞாநத்தைப் போக்கி பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநத்தைக்‌ கொடுக்கையாவது – பகவஜ்‌ ஜ்ஞாந விரோதியான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம்‌ போய்‌ ஜ்ஞாந ப்ரஸரண த்‌வாரமான மநஸ்ஸு அவித்‌யாதி களாலே திரோஹித மாகையாலே குண்டிதமாய்‌, தந் நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க் கொண்டு மேல் நோக்கிக்‌ கிளருகிற ஜ்ஞாநத்தை பரம பக்தி பர்யந்தமாக வளர்க்கை என்கிறார்‌.

98-இருள்‌ துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய-ஸம்மய-விபர்யய-விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக்‌ காதல்‌ அன்பு வேட்கை அவா என்னும்‌ ஸங்க-காம-அநுராக,ஸ்நேஹாத்‌,யவஸ்தா நாமங்களோடே பரமபக்தி தஸை யாக்குகை.–

பகவத் கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாய்க்‌ கொண்டு உண்டான பக்தி ரூபாபந்ந ஜ்ஞாநம்‌ பரமபக்தி பர்யந்தமாக அபி வ்ருத்‌தமான படி சொல்லிற்று-இனிமேல்‌ இவருடைய இந்த பக்தி கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையாய்‌, உபாஸந ரூபையான ஸாதந பக்தியோ? அன்றிக்கே ஸித்‌த,ஸாதந பரிக்‌ரஹம் பண்ணினவர்கள்‌ கைங்கர்‌யோப கரணமாக அபேஷித்துப் பெற்ற பக்தியோ? என்னில்‌; உபயமுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரண பக்தி என்கிறார்-(அதில்-ஜந்மாந்தர ஸஹ்ஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸந ரூபையான பக்தி வுடைய வேஷத்தை அருளிச் செய்கிறார்‌.

99-ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்‌யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய்‌, குளித்து ஓதி உருவெண்ணும்‌ அந்தி, ஐ வேள்வி அறு தொழில்களால்‌ மிக்கு, ஊன்‌ வாடப்‌ பொருப்பிடைத்‌ தாம்‌ வருந்தி, துன்ப வினைகளை விடுத்து, விவேகமாமாதிகள்‌ வளர, எட்டு நீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப் பூவில்‌ சாந்தொடு தேவ- காரியம்‌ செய்து உள்ளம்‌ தூயராய்‌, வாரிப் புன்புலவகத்தினுள்‌ இளைப்பினை அடைவே விளக்கினைக்‌ கண்டு, யோக நீதி நண்ணி, அறந்திகழுமறையோர்‌ மனந்தன்னுள்‌ அமர்ந்துறையும்‌ அரும்பெரும்‌ சுடரை *கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம்‌ மறவாமை துடக்கறா ஸ்ம்ருதியாய்‌, கனவில் மிக்க தர்ஸந ஸமமாய்‌, ஆகத்துப் புல்கும்‌ அத்யர்த்த,ப்ரியமாய்‌, வைகும்‌ சிறப்பு விட்டுக்‌ குற்றேவல்‌ என்னாதே அநந்ய ப்ரயோஜநமாய்‌, வேதந-உபாஸந- ஸேவா-த்‌யாநாதிகள்‌ என்று சொல்லுமது ஸாத்‌ய ஸாதந பக்தியாக ஸாஸ்த்ர ஸித்‌,த,ம்‌.

101-இது உபயமுமின்றிக்கே அறியாக் காலத்துள்ளே ஓக்கப்‌ பிறந்து தழுவி நின்று கட்டமே நோயா யுலர்த்தி வீழ்ந்தலப்பாய்‌ த்யாக ஸ்வீகார நிஷ்டா ஹாநிகளாக்கி ஸத்தா போக வ்ருத்த் யுபகரணமான ஒன்று.

இவருடைய பரபக்தி ஸாதித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, அபேக்ஷித்துப்‌ பெற்ற பக்தியுமன்று, ஸஹஜையாய்‌, ஸத்தா ப்ரயுக்தையான பக்தி என்றார் –இவருடைய பரபக்தி ஜந்மாந்தரங்களிலே கர்ம ஜ்ஞாநாதிகளை அநுஷ்டித்து தத் பலமாய்க் கொண்டு வந்ததானாலோ என்னில்‌, ஜந்மாந்தரங்களில்‌ அவை தமக்கு இல்லை என்னுமிடம்‌ தாமே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌-

102-இடகிலேன்‌ நோன்பறிவிலேன்‌ கிற்பன்‌ கீழ் நாள்கள்‌ என்கையாலே ஸாதந த்ரய பூர்வாப்‌யாஸ ஜமல்ல.

ஜந்மாந்தரங்களிலே ஸாதித்துப் பெற்றதன்றாகிலும்‌ இந்த ஜந்மத்திலே சில தாள்‌ ஸாதித்துப் பெற்றதானாலோ என்னில்‌, அதுவுமல்ல என்கிறார்‌-

103-இப் பிறப்பே சில நாளில்‌ என்ற போதே இரண்டும்‌ கழியும்‌.

ஆனால்‌ இவர்க்கு இந்த ப,க்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில்‌ பல போக்தாவான ஸர்வேஸ்வரனுடைய க்ருஷிபலம்‌ என்னுமிடத்தை க்ஷேத்ரமும்‌, கர்ஷகனும்‌, க்ருஷியும்‌, தத்பலமுமான வேஷத்தாலே அருளிச் செய்கிறார்‌-

104-பெரும்பாழில்‌ ஷேத்ரஜ்ஞன்‌ பெருஞ்செய்‌ கலியாரேவ ஆளும்‌ வன் குறும்பர்‌ குடியேறிப் பெருங்குடியும்‌ தங்கள்‌ கருத்துள்ளே யாக்கிப்‌ படிந்துண்ணும்‌ போகத்தே தூராதே யொறுக்கெணுப்‌ போகத்துக்குக்‌ காவல் செய்து குமைத்துத்‌ திரித்து வீழ்த்து வலித்‌தெற்றி அருவியறுத்துக்‌ கடனாயின இறுப்பிக்கப்‌ பாழ்த்த விதி யானவாறே தன்பால்‌ மனம்‌ வைப்பிப்பதாகத்‌ தேய்ந்தற மன்னி ஒள் வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத்‌ தீக் கொளீஇக்‌ கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல்‌ வித்தி எழுநாற்றுக்களையையும்‌ வேர் முதல் மாய்த்துப்‌ பட்டிச் சேவதக்கி மீதுகொள்ளாமல்‌ குறிக்கொள்வித்துக்‌ கடல்புரைய விளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள்‌ கோட்குறையாக நின்றாரறியாமல்‌ குணங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே திலத்துகாமல்‌ பற்றறுத்துத்‌ தண்டாலடித்துப்‌ பதரறுத்துப்‌ போர்த்த தோல் விடுத்து ஸுக்ஷ்மவொட்டும்‌ நீரிலே கழுவி வேறோர்‌ கலத்திட்டு பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்‌ குண்ரஸாந்நமாக்கி வானோர்க்காரா வமுதானவாறே முற்றுமுண்ண முன்னம்‌ பாரித்து உழுவதோர்‌ நாஞ்சில் கொண்டு பெருக முயலும்‌ பத்தி யுழவன்‌ க்ருஷி பலமிறே-

இப்படி இத்தலையில்‌ ஒரு நன்மை யின்றிக்கே யிருக்க ஈஸ்வரனுடைய கிருஷி பலித்தவிடமுண்டோ வென்னில்‌

105-கோஸல கேகுல சராசரம்‌ செய்யும்‌ குணமொன்றின்றியே அற்புதமென்னக்‌ கண்டோம்‌.

ஆனால்‌ ”ஸமோஹம்‌ ஸர்வபூதேஷு ந மே த்‌வேஷ்யோஸ்தி ந ப்ரிய?” (கீதை 9 – 26) என்கிறபடியே ஸர்வ ஸமனுமாய்‌, பரதுக்கம்‌ ஸஹியாதபடியான பரம க்ருபையை உடையனான ஸர்வேஸ்வரன்‌ ஸர்வரோடும்‌ தனக்கு ஸம்பந்தம்‌ ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்‌ என்றால்‌ அவனுக்கு வைஷம்ய நைர்க்‌ருண்யங்‌கள்‌ வாராதோ என்னில்‌ நிருபாதிக ஸர்வ ஸேஷியுமாய்‌, ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய்‌, அத ஏவ உபய விபூதியையும்‌ ஸ்வாதீநமாகவும்‌, ஸ்வார்த்தமாகவும்‌ உடைய ஸர்வேஸ்வரன்‌ ஸ்வகீயமான வற்றிலே ஒன்றை ஸ்வ விநியோகார்த்தமாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் போது வைஷம்ய நைர்க்‌ருண்யங்களை யிட்டு நிவாரகர்‌ இல்லை என்னும்‌ அர்த்தத்தை லோக த்‌ருஷ்டாந்த த்‌வாரா அருளிச் செய்கிறார்‌.
(பட்டத்துக்குரிய ஆனையும்‌ அரசும்‌ செய்யுமவை ஆராயாது)-106-

107-முந்நீர்‌ வாழ்ந்தார்‌ சூட்டும்‌ கோவை ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வ பர வ்ருத்தாந்தர்க்கு யாத்‌ருச்சிகாதிகள்‌ உண்டாகில்‌ தோன்றும்‌.

108-செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய்‌ தந்தாய்‌ என்ற அத்‌வேஷாபிமுக்‌,யங்களும்‌ ஸத் கர்மத்தாலல்ல.

109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.

110-மதியால்‌ இசைந்தோம்‌ என்னும்‌ அநுமதி-இச்சைகள்‌ இருத்துவம்‌ என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.

111-மாதவன்‌ மலை நீர்‌ நிழல்‌ என்றேறிடுமது, வ்யாவ்ருத்த் யுக்தி, அந்யார்த்தம்‌, அபுத்‌தி பூர்வகம்‌, அவிஹிதம்‌, பலவிஸத்‌ருஸம்‌, பலாந்தரஹேது.

இவன்‌ நடுவே அடியான்‌ என்று ஓலைப்படா ப்ரமாணம்‌ பக்ஷபாதி ஸாஷி வன் களவில்‌ அநுபவமாகிற இந்திர ஞாலங்கள்‌ காட்டிக்‌ கொள்ள காப்பாரற்று விதி சூழ்ந்தது.–112-

113-வரவாறில்லை, வெறிதே என்று அறுதி யிட்டபின்‌ வாழ் முதல்‌ என்கிற ஸுஹ்ருதமொழியக்‌ கற்பிக்கலாவதில்லை.

ஆக, இதுக்குக்கீழ்‌ இவருடைய ப்ரபாவத்தையும்‌, ப்ரபாவத்துக்கடி பகவந் நிர்ஹேதுக கடாக்ஷம்‌ என்னுமிடத்தையும்‌, அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான பக்தியினுடைய வ்யாவ்ருத்தியையும்‌, அந்த பக்தி தான்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யையுமல்ல, அதுக்கடியான யாத்‌ருச்சிகாதிகளுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்றென்னுமிடத்தையும்‌ அருளிச் செய்து தலைக்கட்டினாராய்த்து –

ஆனால்‌, உபாஸகனுக்கு கர்ம ஜ்ஞாநங்களாலே ஸாத்‌யையான பக்தி பகவத் ப்ராப்திக்கு ஸாதநமாகக்‌ கண்டோம்‌, இவர்க்கு நிர்ஹேதுக க்ருபையாலே பக்தி உண்டாயிற்றாகில்‌ பகவத் ப்ராப்திக்கு இது ஸாதநமானாலோ என்னில்‌, அந்த பக்த் யுத்பத்தி ஹேதுவான க்ருபை தானே ப்ராப்திக்கும்‌ ஸாதநம்‌ என்கிறார்‌ மேல்‌

114-நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.

இப்படி பரம க்ருபாவானானவன்‌ இவர்க்கு ஸம்ஸ்லேஷ விஸ்‌லேஷங்களினாலே ஸோக ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரேயாஜநம்‌ என்‌ என்னில்‌, இவர்க்கு தேஸ விஸேஷத்தில்‌ அநு பவம்‌ ஸாத்மிக்கைக்காக ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களினாலே ஐஞாந பக்திகளை வளர்த்து ஸ்ரமம்‌ செய்வித்தபடி என்கிறார்‌

115-புணர்தொறுமென்னக் கலந்து பிரிந்து ஜ்ஞாந பக்திகளை வளர்த்தது கனங்குழையிடக்‌ காது பெருக்குதலும்‌, மாஸோபவாஸி போஜநப் புறப்பூச்சும் போலே ஆற்ற நல்ல் மாபோகச் சிரமமாக.

இவர்க்கு இங்கு ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகச்‌ சொல்லுகிறவை எவை என்னில்‌, ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான மாநஸாநுபவமும்‌, அவ்வநுபவத்தை பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேக்ஷை பண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுபவத்துக்கு வந்த கலக்கமும்‌ என்கிறார்‌ மேல்‌

116-இவற்றால்‌ வரும்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களாகிறன எளியனாய்‌ நிற்கும்‌ அரியனாய்‌ எய்தான்‌ என்கிற தர்ஸந ஸமமான மாநஸாநுஸந்தாநமும்‌ திண் கொள்ளப் பெறாத மநஸ் ஸைதில்யமும்‌.

அபிமத விஷயத்தில்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷங்களிரண்டும்‌ நாட்டார்க்கு புண்ய பாப பலமாயன்றோ உண்டாகிறதென்னில்‌; அந்த பாபங்கள்‌ வாஸனையோடே போகப்‌ பெற்ற இவர்க்கு ப்ரிய ஹித பரனான ஈஸ்வரன் தானே நடத்தும்‌ என்கிறார்‌

117-புண்ணியம்‌ பாவம்‌ புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரிய ஹித பரன் தான்‌ துளக்கற எங்கும்‌ தழைக்க நடத்தும்‌.

9-ஜ்ஞாந ப,க்த் யவஸ்தா ஸூக்தி அதிகரணம் –118-121—–3 —

118-ஜ்ஞாநத்தில்‌ தம் பேச்சு, ப்ரேமத்தில்‌ பெண் பேச்சு.

119-தேறும்‌ கலங்கி என்றும்‌ தேறியும்‌ தேறாதும்‌ ஸ்வரூபம்‌ குலையாது

120-அடியோம்‌ தொடர்ந்து குற்றேவல்‌ அடிச்சியோம்‌ அடிக் கீழ்க்‌ குற்றேவலாகை அவஸ்தாந்தரம்‌.

121-வித்யை தாயாகப் பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள் போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப்‌ பேச்சுப் படாமல்‌, விஸ்வபதி லோக பர்த்தா என்னும்‌ மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்புரியான ப்‌ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்கப்‌ பரம் புருடன்‌ கைக்கொண்ட பின்‌ சதுர்த்தியுள் புக்கு இடையீடு நடுக் கிடக்கும்‌ நாள் கழித்து ஜந்ம பூமியை விட்டகன்று சூழ்விசும்பிற் படியே உடன்சென்று குடைந்து நீராடி வியன் துழாய்‌ அஞ்சனத்தின்‌ நீறு நானப் பொடி பீதக வாடை பல்கலன் கொண்டு நோக்கி அலங்கரித்துப்‌ பல்லாண்டிசைத்துக்‌ கவரி செய்ய நிறை குட விளக்கமேந்தி இளமங்கையர்‌ எதிர் கொள்ள வைகுந்தம்‌ புக்கிருந்து வாய் மடுத்துப்‌ பெரும்‌ களிச்சியாக வானவர்‌ போகமுண்டு கோப்‌புடைய கோட்டுக்கால்‌ கட்டில்‌ மிதித்து ஆரோஹித்து பரத-அக்ரூர-மாருதிகளை பரிஷ்வங்கித்த மணி மிகு மார்விலே குரு மா மணி யாயணையும்‌ வஸ்துவுக்கு மணிவல்லிப் பேச்சு வந்தேறியன்று.

7-ஒளபம்ய பாத,3 – ஸப்தம; 2 – 3 -இரண்டு அதிகரணங்கள் —122–155—34
10-ப,க,வந்நாயி கெளபம்யாத்‌,யதி, கரணம்‌–122–132– 11-

கேவலம்‌ ஸ்த்ரீத்வ ஸாம்யமே யன்றிக்கே பரிஸூத்‌தமான ஸ்வரூபத்தினுடைய யாதாத்ம்யத்துக்குப்‌ பெரிய பிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதிகளாலே ஸ்வரூப ஸாம்யம்‌ உண்டென்கிறார்‌-

122-இன்பும்‌ அன்பும்‌ முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடுள்ள ஸாம்ய ஷட்கத்தாலே.

இப்படிப்‌ பெரியபிராட்டியாரோடு ஸாம்யம்‌ சொன்னவளவன்றிக்கே நிரதிஸய போக்‌யதையை உடைய பிராட்டிமார்‌ மூவரோடும்‌ இவர்க்கு ஸாம்யம்‌ உண்டு என்னுமாகாரம்‌ இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

123-உண்ணாது கிடந்தோர் மாயையினால்‌ என்னும்‌ வீறுடைய முடிக்குரியாரோடு இத்திருமண்ணேரன்ன ஒண்ணுதல்‌ பின்னை கொல்‌ என்கிற ஒப்பு தென் பால்‌ நெடு மாடம்‌ கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறைழவெரித்த பெருந்தோற்றத் தாருயிர்க் காகுத்தன்‌ ஆதியங்கால மண்புரை பொன்மாதின்‌ துகளாடி எருதேழ்தழீஇச்‌ சறையினார்‌ என்னுமவற்றிலே தோன்றும்‌.

அவ்வளவே யன்றிக்கே, ப்ரதாந மஹிஷிகளான இவர்களையும்‌ உபேக்ஷித்து வந்து மேல் விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில்‌ பெண்களுடைய பாவமும்‌, அவர்களையும்‌ தங்கள்‌ பேச்சழகாலே மறப்பிக்கும் படியான ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பாவமும்‌, நரகவத,அநந்தரம்‌ பரிக்‌ரஹித்த “கோப ஸ்த்ரீ ஸஹஸ்ராணி” (வி. பு. 5 – 31 – 18) என்கிற ஸ்ரீமத்‌ த்‌வாரகையில்‌ பதினாறாயிரம்‌ தேவிமார்களுடைய பாவமும்‌ இவர்க்குண்டான ஆகாரம்‌ இவர் பேச்சிலே தோன்றும்‌ என்கிறார்‌ 

124-இவர்கள்‌ தேடி நிற்கப்‌ பொய்கை முதுமணல்‌ முற்றம்‌ முல்லைப்‌ பந்தல்‌ வாரிச் சிதைத்துப்‌ பறித்துக்‌ கிழித்து மச்சொடு மாளிகை அவ்வவ்விடம்‌ புக்கு கோயின்மை குறும்பு செய்து அல்லல்‌ விளைத்துக்‌ கவரும்‌ உகக்கு நல்லவர்‌ மூழுசி ஆவரென்னும்‌ தேன்‌ மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும்‌ நகர ஸ்த்ரீகள்‌ நரகனைத்‌ தொலைத்துக்‌ கவர்ந்த பதினாறு பல்லாயிரம்‌ எண்ணிரந்தார் பாவம்‌ கடல் ஞாலம்‌ மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறற்கஞ்சனை மங்கநூற்ற வாயும்‌ தீர்ப்பாரென்னுமவற்‌நிலே தோன்றும்‌.

ஆகக் கீழ்‌, ப்ரதாந மஹிஷிகளான மூவரோடும்‌ மற்றும்‌ பகவத் பரிக்‌ரஹ முடையாரோடும்‌ ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும்‌ இவர்க்கு ஒரு புடைக்கு ஒப்பாய்‌ ஸர்வதா ஸாம்யமுள்ளது ஜநக குல ஸுந்தரியான பெரிய பிராட்டியாரோடே என்கிறார்‌ –

அவள்‌ மார்வைப் பற்றி அகலகில்லேனென்னும்‌; இவர்‌ தாளைப் பற்றி அகலகில்லேனென்பர்‌. இதுவே இருவர்க்கும்‌ வாசி. ஆனாலும்‌ அவளைப் பற்ற இவர்க்குக்‌ கால் கூறு ஏற்றமுண்டிறே –

இனிமேல்‌, மற்றும்‌ பகவத் ப்ரத்யாஸத்தியை யுடையரான லக்ஷ்மண-பரத-ஸத்ருக்‌ந-தஸரத,-யஸோதா – ப்ரஹ்லாத-விபிஷண-மாருதி-அர்ஜுநன்‌ என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார்‌.-

126-பிரியிவிலேனுக்கு இளங்கோவும்‌ அக் குளத்தில்‌ மீனிறே.

127-அழுந்தொழும்‌ ஸ்நேஹ பாஷ்பாஞ்ஜலியோடே ருசிர-ஸாநுக்‌களில்‌ கூவிக் கொள்ளும்‌ பிரியா வடிமைக்குச்‌ சரணே சரண்‌ என்று வாளும்‌ வில்லுங் கொண்டு பந்துவும்‌ பிதாவுமவரே என்கையும்‌, அன்னை யென் செய்யிலென்‌ ராஜ்யமும்‌ யானே என்று பெருஞ்‌ செல்வமும்‌ இச்சியாமல்‌ வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும்‌ கண்ண நீர்‌ பங்கமாக நிலந் துழாவிக்‌ குடிக் கிடந்த கையறவும்‌ கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள்‌ நித்ய ஸத்ரு விசிந்தநமுமான ப்‌ராதாக்கள்‌, அப்பொழுதைக்கப் பொழுது போனாய்‌ என்னும்‌ மாதா பிதாக்கள்‌, செந்தீ தண் காற்று இள நாகம்‌ முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுளனென்னும்‌ பள்ளிப்‌ பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும்‌ தர்மாத்மா வாளி பொழிந்த நிர்குண விஸ்வாத்மா உள்ளே உறைய ஊக வீர சரிதம்‌ கற்பார்‌ பாவம்‌ மற்றிலேன்‌ என்னும்‌ ராம தாஸன்‌ பல்வகையும்‌ கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ஸ்வேதன்‌ முதலானார் படிகளும்‌ காணலாம்‌.

இப்படி இளையபெருமாள்‌ முதலானவர்களெல்லாரோடும்‌ ஸாம்யம்‌ சொல்லிற்று.-இனிமேல்‌ இவர்களெல்லார்க்கும்‌ இவரோடு ஏகதா ஸாம்யமல்லது ஸர்வதா ஸாம்யமில்லை என்று அவர்களில்‌ இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்‌செய்கிறார்‌

128-குழவில்‌ நெஞ்சும்‌ அருகவில்‌ சுவையுமான இவர்‌ அவர்களளவல்லர்‌.

இப்படி ஸாம்யம்‌ சொல்லுகிற மாத்ரமே யன்றிக்கே தம்முடைய பாவத்தாலும்‌ வ்ருத்திகளாலும்‌ பிராட்டிமாரையும்‌, திருவடி திருவநந்தாழ்வான்‌ தொடக்கமானவர்களையும்‌ தாம்‌ அவர்களாக பாவிப்பர்‌ என்கிறார்‌-

129-எற்றைக்கும்‌ என்றது தோன்றப்‌ பிறந்து ஒப்பித்து வீசிக்‌ காப்பிட்டுக்‌ காட்டுக்கு முற்பட்டு தூமம்‌ சொல்லிக்‌ கேட்டு ஸிஷ்யா -தாஸீ-பக்தைகளாய்ப்‌ பாடி வருடி இன்று வந்தென்பாரையும்‌ சென்றாலூரும்‌ நிவாஸ-தாஸ-பேதம்‌ கொள்வாரையும்‌ தாம்‌ அவனாக பாவிப்பர்‌.

இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பாவமும்‌ இந்த விருத்தி பேதத்தில்‌ அபி, நிவேஸமு முண்டானபடி எங்ஙனே என்னில்‌, அப்ராக்ருதமான விக்‌ரஹம்‌ பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும்‌, அநுரூப ப்ராப்தமான அவ் விஷயத்திலுண்டான வ்ருத்த்யபி நிவேஸத்துக்கும்‌, ப்ராக்ருதமாய்‌ ஓளபாகிகமா யிருக்கிற விஷயங்களிலுண்டானவற்றை த்‌ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூலம்‌ என்கிறார்‌-

130-எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப்‌ பாஞ்சாலி படுத்துமதும்‌ கெளஸல்யாதநுவ்ருத்தியும்‌ ஓப்பாக்குகை பரிசு.

ஆனால்‌ தாமான தன்மையும்‌ பிராட்டிமார் தஸையுமுண்டான இதில்‌ தாமான தன்மையில்‌ அபிநிவேஸம்‌ அளவு பட்டிருக்குமோ? என்னில்‌; ஆறு பெருகா நின்றால்‌ பல வாய்த்தலை களிலும்‌ போரா நிற்கச்செய்தே, தானும்‌ கடலில்‌ போரும்‌ அம்ஸம்‌ குறையாதிருக்குமாப்‌ போலே பிராட்டிமார் தஸையோடும்‌, தாமான தன்மையோடும்‌ வாசியற அபி நிவேவம்‌ கரை புரண்டு பகவத்‌ விஷயத்தை அவகாஹிக்கும்‌ என்கிறார்‌

131-பெருக்காறு பலதலைத்துக்‌ கடலை நோக்குமாப் போலே நெக்‌கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப்‌ பெருகு காதல்‌ கடலிடங்கொண்ட கடலை பஹுமுகமாக அவகாஹிக்கும்‌.

இப்படி இரா நிற்கிற இவருடைய பக்தி தான்‌ ஸக்ரமமாயிருக்கமோ? என்னில்‌, இவருடைய பக்திக்கு “ந ஸாஸ்த்ரம்‌ நைவ ச க்ரம:‘” என்கிறபடியே தேஸ விஸேஷத்தில்‌ பக்தி போலே இதுவும்‌ வைதமல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார்‌-

132-அச்சேத்‌யமென்னுமது ஈரும்‌ வேம்‌ ஈரியாய்‌ உலர்த்த என்னப்பட சித்தம்‌ சித்தாய்‌ அல்லேனென்று நீங்க கரணங்கள்‌ முடியானேயிலவையாக உடலம்‌ ஆத்மதர்மம்‌ கொள்ள காற்றும்‌ கழியும்‌ கட்டி யழக்‌ கொண்ட பெருங் காதலுக்குப்‌ பத்திமை நூல்‌ வரம்பில்லையே.

11-அந்யாபதேஸ -ஸ்வாபதேஸ அதி கரணம்‌ —-133–155– —23-

ஆனால்‌ பக்தி தஸையில்‌ பெண் பேச்சாகில்‌ பிராட்டி ஒருத்தியாகப்‌ பேசுகை ப்ராப்தம்‌, தோழி தாய்‌ மகள்‌ என்கிற த்ரைவித்‌யமான பேச்சுக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌, இந்த அதி ப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும்‌, நிரோதகமாயுமிருக்கிற ஸம்பந்த உபாயங்‌களில்‌ ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்‌தில்‌ த்வரை யென்ன இவற்றைத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்கிறார்‌-

133-ஸம்பந்த உபாய பலங்களில்‌ உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா வஸ்தைகளுக்குத்‌ தோழி தாயார்‌ மகள்‌ என்று பேர்‌.

இனிமேல்‌ மூன்று தஸையின்‌ பேச்சினுடைய ப்ரகாரங்களையும்‌ அவ்வோ தஸைகளில்‌ திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும்‌ அருளிச் செய்கிறார்‌-

134- ஸகி, வெறி விலக்கி ஆசை யறுத்து அறத்தொடு நின்ற மூன்றில்‌ அநந்யார்ஹத்வமும்‌, வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக்‌ கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறை யிடுகிற ஏழில்‌ அத்‌யவஸாயமும்‌, புத்ரி பலகால்‌ ஆள் விட்டு ஆற்றாமை சொல்லிக்‌ கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக்‌ கண் புதையப்‌ போக்கற்று, உருதெஞ்சுள்ளெழக்‌ கூடுதாள்தேடித்‌ தாழ்த்ததுக்கு ஊடி, உசாத் துணேயற்றுச்‌ சூழவும்‌ பகைமுகம்‌ செய்யத் தடை நில்லாதே புயக்கற்று மாலையும்‌ காலையும்‌ பூசலிடுகிற பதினேழில்‌ த்வரையும்‌ தெரியும்‌.

ஆனால்‌ தோழி என்றும்‌, தாய்‌ என்றும்‌ சொல்லுகிறது ஸம்பந்த ஜ்ஞாநத்தையும்‌ உபாயாத்‌யவஸாய ஜ்ஞாநத்தையுமாகில்‌ இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம்‌ என்‌ என்னில்‌; அந்த ஸம்பந்த உபாயங்களினுடைய வித பேதங்களை விஷயீகரித்த ஜ்ஞாந வ்யவஸாயங்களினுடைய பேதத்தாலே சொல்லுகிறதென்கிறார்‌ –

135-தோழிமார்‌ அன்னையர்‌ என்கிற பன்மை ரக்ஷகத்வாதி, பந்த வாத்ஸல்யாதி வ்யவஸாய புத்‌தி பேதத்தாலே.

தலைமகளுக்கும்‌ இந்த பக்தியினுடைய அவஸ்தா பேதங்களினாலே பேதை முதலான பருவங்கள்‌ உண்டென்கிறார்‌-

136-அபிலாஷா-சிந்தந-அநு ஸ்ம்ருதி-இச்சா -ருசி-பர- பரம பக்திகளிலே பேதை முதலான பருவம்‌ கொள்ளும்‌.

மேல்‌ அந்தத்‌ தலைமகளுக்குச்‌ சொல்லுகிற அவயவ வைலக்ஷண்யம்‌ இவ் வாத்மாவினுடைய ஜ்ஞாந விகாஸாதிகளாகக்‌ கடவதென்கிறார்‌

137-மயில்‌ பிறை வில்‌ அம்பு முத்து பவளம்‌ செப்பு மின்‌ தேர்‌ அன்னம்‌ தெய்வவுரு விகாஸ ஸூத்‌தி, தாந்தி ஜ்ஞாநாநந்தாநுராக,.பக்த் யணுத்வ போக்‌யதா கதிகளை யுடைய அகமேனியின்‌ வகுப்பு.

இனி மேல் கீழ்ச் சொன்ன அவஸ்தா த்ரயத்தினுடைய வ்ருத்தியைச்‌ சொல்லுகிறது

138-சூழ்ச்சி அகற்றினீர்‌ என்னும் பழி, இணக்கி எங்ஙனே என்னும்‌ மேலெழுத்து, முன்னின்றாய்‌ இவளை நீரென்னும்‌ இருபடை மெய்க்‌ காட்டு, நீரென்னேயென்னு முடன்பாடு, இடையில்லை யென்னுமுதறுதல்‌, இருந்திருந்து நடந்தாளென்னும்‌ கொண்டாட்டம்‌ அவஸ்தா த்ரய வ்ருத்தி.

139-தாயார்‌, ஏதலர்‌ உற்றார்கள்‌ என்னும்‌ ஸாத்‌ய ஸித்‌த ஸாதந நிஷ்டரை; மகள்‌, நம்முடை ஏதலர்‌ யாமுடைத் துணை என்னும்‌ ஸித்‌த ஸாதந ஸாத்‌ய பரரை.

140-நாலயலார்‌ அயற்சேரியார்‌ உபாய சதுஷ்டயாந்தர்யாமித்வ பரர்‌.

ஆனால்‌ ப்ரபத்தி நிஷ்டரையும்‌ அசலாகச்‌ சொல்லுமோ என்னில்‌,

141-கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத்‌ தன்பற்றுள்ளசல்‌.

142-ஊரார்‌ நாட்டார்‌ உலகர்‌ கேவல ஐஸ்வர்ய காம ஸ்வதந்தரர்‌.

கேவலனையும்‌ ஓரூராகச்‌ சொல்லுவானென்‌ என்னில்‌, (இறுகலிறப்புக்கும்‌ இறந்தால்‌ தங்குமூரொக்குமே)-143-

144-சிறு சீரார்‌ சுளகுகள்‌ உபய விவேக பரிகரம்‌

145-மாலை கங்குல்‌ காலை பகல்‌ ரஜஸ்‌ தமஸ்‌ ஸத்த்வ ஸூத்‌த-ஸத்தவ ஜ்ஞாநங்கள்‌.

146-நிலா முற்றம்‌ ப்ரஜ்ஞா ப்ராஸாத மென்னு மெல்லை நிலம்‌.

147-கலை வளை அஹம்‌ மம க்ருதிகள்‌.

148-பட்டம்‌ சூடகமாவன பராவர குருக்கள்‌ பூட்டும்‌ ஆத்ம பூஷணங்கள்‌.

149-பந்து கழல்‌ பாவை குழமணன்‌ யாழ்‌ தென்றல்‌ மதியம்‌ அடிசில்‌ சாந்தம்‌ பூண்‌ அகில்‌ சிற்றில்‌ தூதை முதலாவன குண த்ரய விசித்ர கர்ம ஸுூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும்‌ சுழன்‌றுழன்றும்‌ பறிபட்டும்‌ அற்பசாரமாமவையுமாய்‌, மதீயமென்னில்‌ விட்டகலவும்‌ ததீயமென்னில்‌ இகழ்வறவும்‌ முனிவதும்‌ இக் காலம்‌ ஈதோ என்னப்படும்‌ பொங்கைம்புலனில்‌ போக்‌யாதி ஸமூஹம்‌.

இனிமேல்‌ இவர்‌ தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில்‌,

150-சேர்ப்பாரைப்‌ பஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச்‌ சிறகென்று குரு ஸப்‌ரஹ்மசாரி புத்ர ஸிஷ்ய ஸ்தாநே பேசும்‌.

குண ஸாம்யத்தாலே ஆசார்ய ஸ்தாநீயரா யுள்ளாரை அன்னமென்கிற தென்கிறார்‌

151-விவேக முகராய்‌ நூலுரைத்து அள்ளலில்‌ ரதியின்றி அணங்கின்‌ நடையைப்‌ பின் சென்று குடை நீழலிலே கவரி யசையச்‌ சங்கமவை முரல்‌ வரிவண்டிசை பாட மாநஸ பத்‌மாஸநத்திலே யிருந்து விதியினால்‌ இடரில்‌ அந்தரமின்றி இன்பம்‌ படக்‌ குடிச் சீர்மையிலே யாதல்‌ பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன்‌ மெய்ந்நாவன்‌ நாத யாமுநர்‌ போல்வாரை அன்னமென்னும்‌.

152-என் பெறுதி யென்ன ப்‌ரமியாது உள்ளத்துளுறிய மது வ்ரதமாய்‌ தூமது வாய்கள்‌ கொண்டு குழல் வாய்‌ வகுளத்தின்‌ ஸாரம்‌ க்‌ரஹித்துத்‌ தேதெனவென்று ஆளம் வைத்துச்‌ சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள்‌ காமரம்‌ கந்தாரம்‌ தலைக்‌ கொள்ளப்‌ பாடித்‌ துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புதம்‌ தகைவறப்‌ புக்கு வண்டொத்திருண்ட குழலிலே றங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமே யூதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும்‌ சேமமுடை நாரதன்‌ முனி வாஹனர்‌ தம்பிரான்மார்‌ போல்வாரை வண்டு தும்பியென்னும்–-

153-கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார்‌ கையிருந்து தயிர்‌ நெய்யமர்‌ பாலமுதுண்டு ஒருமிடறாய்ப்‌ போற்றி ஒரு வண்ணம்‌ திருந்த நுவலாததுக்கு என்பிழைக்கும்‌ நீயலையே நல்வளம்‌ துரப்பனென்னு மவற்றுக்கும்‌ உகந்து சொல்லெடுத்துச்‌ சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம்‌ கைகூப்பி வணங்கப்பாடி ஆலியா அழையா பராபிமாநத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர்‌ தலைமீதடிப்பொடி உடையவருடையார்‌ போல்வாரைக்‌ கிளி பூவை குயில்‌ மயிலென்னும்‌.

154-ஆசறு தூவி என்னும் பாஹ்யாப் யந்தர ஸூத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதை யற்றுத்‌ தாய் வாயிலுண்ணும்‌ பிள்ளைக்‌கிரை தேடி வைகலுடன்‌ மேய்ந்து நுங்கால்‌ பைங்கானமென்று ப்‌ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவைகொண்டு நல்லபதத்தையும்‌ வேண்டேனென்னும்‌ தனிப்பெரும்‌பித்தர்‌ நம்முதலிகள்‌ போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும்

155- பூண்ட நாள் சீர்க்கடலை யுட் கொண்டு திருமேனி நன்நிறம் ஒத்து உயிரளிப்பான்‌ தீர்த்தகரராய்‌ எங்கும்‌ திரிந்து, ஜ்ஞாந ஹ்ரதத்தைப்‌ பூரித்துத்‌ தீங்கின்றி வாழ நிதி சொரிந்து, கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து, வெளுத்தொளித்துக்‌ கண்டுகந்து , பரஸம்ருத்‌தியே பேறான அன்புகூரும்‌ அடியவர்‌, உறையிலிடாதவர்‌, புயற்கை அருள்மாரி, குணந்திகழ்‌ கொண்டல்‌ போல்வாரை மேகமென்னும்‌.

8–கு,ண பாத, – அஷ்டம: 2-4 —156–186—-31-
12 சதுர்தவ்த்யாதி, கரணம்‌ 156 –158—-3–

இனிமேல்‌ இவர்‌ இப்படித்‌ தூது விடும்படி முகம்‌ காட்டாதிருக்கைக்கு ஹேதுக்களையும்‌ தூது விடுகைக்குப்‌ பற்றாசையும்‌ அது தனக்கு விஷயத்தையும்‌ அருளிச்செய்கிறார்‌-

156-தம்பிழையும்‌ சிறந்த செல்வமும்‌ படைத்த பரப்பும்‌ தமரோட்டை வாஸமும்‌ மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸெளந்தர்யங்களை உணர்த்தும்‌ வ்யூஹ விபவ பரத்வ த்‌வய அர்ச்சைகள்‌ தூது நாலுக்கும்‌ விஷயம்‌.-

இப்படிப்‌ பரத்வாதிகளிலே தூது விட்டால்‌ இவற்றுக்கு விஷய பேதமுண்டோ என்னில்‌, பகலிருக்கை தொடக்கமான ராஜ நீதி போலே ஸ்தல பேதமொழிய வஸ்த்வைக்யத்தினாலே விஷய பேதமில்லை என்கிறார்‌-

157-பகலோலக்கமிருந்து , கறுப்புடுத்துச்‌ சோதித்து, காரியம்‌ மந்த்ரித்து, வேட்டையாடி, ஆராமங்களிலே விளையாடும்‌ ராஜநீதி ஆதும்‌ சோராமல்‌ செங்கோல்‌ நடாவுகிற பாரளந்த வென்னும்‌ மூன்று முடிக்குரிய இளவரசுக்கு விண்மீதென்கிற ஐந்திலும்‌ காணலாம்‌.

இந்த பரத்வாதி களிலுண்டான குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்திலே ப்ரகாஸிக்குமென்கிறார்‌ இனிமேல்‌.-

158-தமருகந்த அடியோமுக்கே யென்னும்‌ பின்னானார்‌ வணங்குமிடத்திலே எல்லாம்‌ பூர்ணம்‌.


13 திவ்ய தேஸ பா-அர்ச்சாவதார விஸேஷ கு,ணாதி கரணம்‌– 159 —186—–28–

அதில்‌ எல்லா ஸ்தலங்களிலும்‌ எல்லா குணங்களும்‌ பரிபூர்ணமே யாகிலும்‌
கோயில்‌ முதலான திவ்ய தேசங்களிலே பரத்வாதிகளுக்கு அஸாதாரணமான ஓரோ குணங்கள்‌ ப்ராதாந்யேந ப்ரகாஸிக்குமென்கிறார்‌-

159-வன்பெரு வானக முதலுய்ய இனிதாகத்‌ திருக் கண்கள்‌ வளர்கின்ற திருவாளன்‌ திருப்பதி, வடிவுடை, கடலிடம்‌, கட்கிலீ என்னுமவற்றில்‌ இவள்‌ திறத்தென் கொலோ வென்பிக்கிற வ்யூஹ ஸெளஹார்த்த ப்ரதாநம்‌.-

160-மண்ணோர் விண்ணோர் வைப்பில்‌ போகின்ற ஏழுலகுக்குயிர் பாசம்‌ வைத்த நிகரில்‌ வாத்ஸல்யம்‌ உஜ்ஜ்வலம்‌.

161-உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலில்‌ எத்தேவு மென்னும்‌ பரே ஸத்வம்‌ பொலியும்‌.

162-வைஷ்ணவ வாமநத்தில்‌ நிறைந்த நீலமேனியின்‌ ருசிஜநக விபவ லாவண்யம்‌ பூர்ணம்‌.

163-ருசி விவஸர்க்குப்‌ பாதமே சரணாக்கும்‌ ஒளதார்யம்‌ வானமாமலையிலே கொழுந்து விடும்‌.

164-களை கணற்றாரை யுருக்கும்‌ மாதுர்யம்‌ குடமூக்கிலே ப்ரவஹிக்கும்‌.

165-மெலிவிலும்‌ சேமம்‌ கொள்விக்கும்‌ க்ருபை தென்னகரிலே நித்யம்‌.

166-வ்யவஸாயஜ்ஞர்‌ ரக்ஷண ஸ்தைர்யம்‌ பம்போத்தர தேஸஸ்த்தம்‌.

167-விளம்ப விரோத மழிக்கும்‌ விருத்‌த கடநா ஸாமர்த்‌யம்‌ நன்னகரிலே விஸ்தீர்ணம்‌.

168-௧டித கடக விகடநா பாந்தவம்‌ அவ்வூரிலே த்‌விகுணம்‌.

169-கைம்முதலிழந்தாருண்ணும்‌ நிதியின்‌ ஆபத் ஸகத்வம்‌ புகுமூரிலே ஸம்ருத்‌தம்‌.–

170-சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும்‌ ஸெளந்தர்யம்‌ மாநகரிலே கோஷிக்கும்‌.

171-ப்ரவண சித்தம்‌ பரத்வ விமுகமாக்கும்‌ ஆரந்த வ்ருத்‌தி நீணகரிலே.

172-ஸாதரரைப்‌ பரிசழிக்கும்‌ சேஷ்டித ஆஸ்சர்யம்‌ குளத்தே கொடிவிடும்‌.

173-ஸ்ரமமனம்‌ சூழும்‌ ஸெளகுமார்ய ப்ரகாமம்‌ ஆய்ச்சேரியிலே.

174-மஹாமதிகள்‌ அச்சம்‌ கெட்டு அமரும்‌ சவ்ர்யாதிகள்‌ சிற்றாற்றிலே கொழிக்கும்‌.

175-ஸாத்‌ய ஹ்ருதிஸ்த்தனாயும்‌ ஸாதநம்‌ ஒருக்கடுக்கும்‌ க்ருதஜ்ஞதாகந்தம்‌-தாயப் பதியிலே

176-அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும்‌ நாயக லக்ஷணம்‌ வளம்‌ புகழுமூரிலே குட்டமிடும்‌.

177-போக்ய பாக த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில்‌ மூன்றிலும்‌ ப்ரகடம்‌.

178-போகத்தில்‌ தட்டுமாறும்‌ ஸீலம்‌ காட்கரையிலே கரையழிக்கும்‌.

179-மஹாத்மாக்கள் விரஹம்‌ ஸஹியாத மார்தவம்‌ வளத்தின்‌ களத்தே கூடு பூரிக்கும் –

180-பிரிந்த துன்பக்‌ கடல்‌ கடத்தும்‌ விஷ்ணுபோதாந்ருஸம்ஸ்யம்‌ நாவாயிலே நிழலெழும்‌.

181-ஸரண்ய முகுந்தத்வம்‌ உத்பலாவதகத்திலே ப்ரஸித்‌தம்‌.

182-மார்க்க பூந்து ஸைத்யம்‌ மோஹநத்தே மடுவிடும்‌.

183-ஸஸைன்ய புத்ர ஸிஷ்ய ஸாத்‌ய ஸித்‌த பூ ஸுரார்ச்சநத்துக்கு முக நாபி பாதங்களை த்‌வார த்ரயத்தாலே காட்டும்‌ ஸாம்யம்‌ அநந்தஸயநத்திலே வ்யக்தம்‌.

184-மோக்ஷதாநத்தில்‌ ப்ரணத பாரதந்த்ர்யம்‌ வளம்மிக்க நதியிலே கரைபுரளும்‌.

185-த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம்‌ மருள்கள்‌ கடியும்‌ மயல்மிகு பொழிலிலே தழைக்கும்‌.

186-அங்கீ,கரிக்க ௮வகாஸம்‌ பார்க்கும்‌ ஸ்வாமித்வம்‌ பெருககரிலே பேர் பெற்றது,

9 –ஸ்ரீ ஸூக்தி வைப ,வ பாத, – நவம–3 – 1 –ஒரே அதிகரணம் 187–188—–2-
14 –பகவத் அநுபவ ப்ரீதி காரித ஸ்ரீ முக, ஸூக்தயதி கரணம்‌– 187 -188—2-

187-இவற்றில்‌ ப்ராவண்யம்‌ இவள்‌ பரமே யென்ன வுண்டாய்‌ ஷோடஸ கலா பூர்ணமான சந்த்‌ர மண்டலம்‌ போலே பதினாறு திருநஷத்ரம்‌ நிரம்பினவாறே தேவ போக்யமானவதில்‌ அம்ருதம்‌ போலன்றிக்கே என்னாத்‌ தமிழர்‌ இசைகாரர்‌ முதற்பத்தர்‌ வானவர்‌ என்னம்மான்‌ பார்பரவென்னும்படி ஸேஸ்வர விபூ,தி போக்‌யமான பாலோடமுதன்ன மென்மொழி முகம்‌ செய்தது.

இப்படி போக்‌யமான ஸப்த ப்ரவ்ருத்தி மாத்ரமே யன்றிக்கே பரபக்தி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு அந்த ஸப்‌த ஸந்தர்ப்ப ரூபமான ப்ரபந்தமாய்க்‌ கொண்டு அவதரித்ததென்கிறார்‌.

188-நீர்‌ பால்‌ நெய்யமுதாய்‌ நிரம்பின வேரி நெளிக்குமா போலே பரபக்த்யாதி மய ஜ்ஞாநாம்ருதாப்‌தி நிமிகிற வாய்கரை மிடைந்து மொழி பட்டு அவாவிலந்தாதி என்று பேர் பெற்றது.

10 –ஸாம்ய பாத தஸம 3-2—189—-1–
13–பகவத்‌ கீதாஸ்ரீ முக ஸூக்தி ஸாம்யாதி கரணம்‌–189—1–

தத்வதர்ஸிகளான இவர் பக்கலிலே இப்படி பகவத் குணாநுபவ ஜநித ப்ரீதி ப்ரகர்ஷ பலாத்காரத்தாலே அவதீர்ணமான இப்ரபந்தத்தில்‌ பரதிபாதி தமான அர்த்தங்கள்‌, தர்மஸம்ஸ்தாபநார்த்தமாக அவதரித்து கிருஷ்ணன்‌ உபய ஸேநைக்கும்‌ நடுவே அர்ஜுந வ்யாஜத்தாலே அருளிச் செய்த ஸ்ரீகீதையிலே ப்ரதிபாதிக்கப்பட்ட தத்த்வ விவேகாதிகளான அர்த்தங்களாகை யாலே இந்த ப்ரபந்தம்‌ ஸ்ரீகீதையோடொக்கும்‌ என்கிறார்‌. 

189-மனம்செய்‌ எல்லையில்‌ ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர்‌ ஞானப் பிரானை ஞானத்து வைம்மினென்றவிது தத்வ விவேக, நித்யத்வாநித்யத்வ, நியந்த்ருத்வ, ஸெளலப்‌ய, ஸாம்ய, அஹங்கார, இந்த்‌ரியதோ,ஷபல, மந ப்ராதா,ந்ய, கரண நியமந ஸுக்ருதி பேத, தேவாஸுரவிபாக, விபூதி யோக, , விஸ்வருபதர்ஸந, ஸாங்கபத்தி, ப்ரபத்தி த்‌வை வித்‌யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமம்‌ என்னும்‌.

11-விஸேஷ பாத : – ஏகாதஸ –3-3 –190–194—–5–
16–பகவத்‌ கீதா ஸ்ரீமூக, ஸுத்தி விஸேஷாதி கரணம்‌ 190–195—–5–

இதுக்குக்‌ கீழ்‌ ஸ்ரீ கீதையோ டொக்கத்‌ திருவாய்மொழிக்கு ஸாம்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ இதற்குண்டான வக்த்ரு வைலக்ஷண்யமும்‌ ப்ரபந்தோதய ஹேது வைஷம்யமும்‌ உபதேஸத்தனுடைய பல வைஷம்யமும்‌, ப்ரபந்த ப்ரதிபாத்‌ய அர்த்த வைஷம்யமும்‌ சொல்லுகிறது.-

190-அது தத்த்வோபதேஸம்‌; இது தத்த்வதர்ஸி வசநம்‌.

191-அது ஐவரை வெல்வித்துப்‌ பதிற்றைந்திரட்டி படச் சொன்னது; இது நாடாகத்‌ தோற்றோமென்று ஐயைந்து முடிப்பான்‌ சொன்னது.

192-அங்கு நம்பி சரணென்று தொடங்கி முடிவில்‌ அப்ரிய மென்றது; இங்கு பரமே யென்றிழிந்து பொலிக வென்று உகந்தது.

193-அதில்‌ ஸித்‌த தர்மவிதியே; இதில்‌ வித்‌யநுஷ்டாநங்கள்‌.

அந்த கீதை தனக்கும் உத்கர்ஷம் இவருடைய பரிக்ரஹத்தாலே என்கிறார்

194-பகவன்‌ ஞானவிதி பணிவகையென்று இவரங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்

12 –ப்ரயோஜந பாத –த்‌வாதஸ –3 – 4 –195–207–13–
17–ஸ்ரீமுக, ஸூக்த் யுபதேஸ -பாத்‌ர-ரீதி-நீத்யர்த்த, விஸேஷா -லக்ஷண –காரண -ஸ பலத்வாதிகரணம் –195–207–13–

இனி மேல்‌ அவனுடைய ௨பதேஸம்‌ ஸங்குசித விஷயம்‌; இவருடைய உபதேஸம்‌ அஸங்குசித விஷயமென்கிறார்‌ –

195-வேத வேத்‌ய வைதிகோபதேஸம்‌ ஆவித்‌யரளவிலே; அஜ்ஞர்‌ ஜ்ஞாநீகள்‌ ஜ்ஞாந விஸேஷ யுக்தர்‌ ஸர்வஜ்ஞனென்னாமல்‌ இவர்‌ திருத்துவர்‌.

திருத்துகையாவது அஜ்ஞாதஜ்ஞாபநம்‌ பண்ணுகையிறே. அதில்‌ இவ்வதிகாரிகளுக்கு உபதேஸிக்கும்‌ அர்த்த விஸேஷங்கள்‌ எவை யென்னில்‌,

196-அறியாதார்க்கு உய்யப் புகுமாறும்‌, இக்கரை யேறினார்க்கு இன்ப வெள்ளமும்‌, நிலை அறியாதாருக்கு ஆழங்காலும்‌ , கரையேற்றுமவனுக்கு நாலாறும்‌ அறிவிக்க வேணும்‌.

இனி அவர்களுக்கு இவ்வர்த்தங்கள்‌ ஜ்ஞாதமாகைக்கு ஹேதுவையும்‌, இவர்களுக்கு இவ்வர்த்த விஸேஷங்களை உபதேஸிக்கைக்கு ஹேதுவையும்‌ அவ்வர்த்த விஸேஷங்கள்‌ தன்னையும்‌ அருளிச் செய்கிறார்‌.

197-அவன்‌ முனிந்தார்க்குத்‌ தாம்‌ கண்டது; தம்மை முனிவார்க்குத்‌ தம்‌ கண்‌; காணாதது காண்பார்க்குக்‌ கண்மாறும்‌ இடம்‌; ராகாந்த னுக்கு மாயாதோஷம்‌ இவர்‌ காட்டுமவை.

ஆனால்‌ அஜ்ஞர்களுக்கு உபதேஸிக்குமா போலே இவர்களெல்லார்க்கும்‌ எப்போதுமொக்கவும்‌ உபதேஸிப்பரோ என்னில்‌, 

198-ஸாதந ஸாத்‌யஸ்த, மத்‌யஸ்தரை விட்டு அவற்றில்‌ கலங்கும்‌ ஜீவேஸ்வரர்க்கு வீடுமின்‌ நினைமின்‌ பிடித்தேன்‌ விடுவேனோ வைத்தெழ வூது வாடிநிற்கக்‌ கன்மமன்று ஆன்பின்‌ கைகழியேல்‌ உழிதராய்‌ என்‌ சொற்‌ கொள்‌ என்று இவர்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுவர்‌.

ஆனால்‌ இருவர்க்கும்‌ பலகாலும்‌ ஹிதாஹிதங்கள்‌ சொல்லுகைக்கு ஹேது என்னென்னில்‌, இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ என்கிறார்‌.-

199-கதிர் ஞான மூர்த்திக்கு உணர்த்துவது ப்ரேமத்தாலே; தமமூடுவார்க்கு வேட்கை யெழுவிப்பது ஜ்ஞானத்தாலே.

இவர்களளவில்‌ இவர்க்குண்டான ஜ்ஞாந ப்ரேமங்கள்‌ இரண்டாலும்‌ பர துக்கம்‌ ஸஹியார்‌ என்னுமிடம்‌ சொல்லுகிறது மேல்‌-

200-உயிர்‌ மாய்தல்‌ ஆழுமென்னாருயிர்‌ என்னும்‌ பர துக்கம்‌ ஸஹியாமை இரண்டிலுமுண்டு.

இன்னும்‌ இவ்வளவன்றிக்கே ஸ்வ ஸரீரத்திலே ஸர்வர்க்கும்‌ பரிவு நடக்கையாலே அவனுக்கு ஆத்ம பூதரான இவர்‌ அவனுக்குப்‌ பரியக் கடவர்‌ என்னுமிடமும்‌ தோன்றும்‌ என்கிறார்‌ மேல்‌.

201-என்னதுன்னதாவியிலே அறிவாராத்மா என்று அவன்‌ மதம்‌ தோன்றும்‌.

202-இருத்துமெண்டானாய்ப்‌ பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய்‌ ஷூத்‌த்‌ருட்‌ பீடித நிர்த்தநரைப்‌ போலே கண்டு கொண்டுண்டு பருகிப்‌ பரிஜனாதிகளோடே தன்னைத் தந்து என் செய்வன்‌ என்றே யிருந்து அகில பரத்தையும்‌ ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும்‌ போகு என்றாலும்‌ அகல்வானுமல்லனாய்‌, போகேலென்றால்‌ உகப்பையும்‌ தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேஸ ஸத் பாத்ரம்‌.

ஆனால் ஸம்ஸாரிகளில் விரக்தராய்‌ இப்படி அநுவர்த்தநமுடையார்க்கு உபதேஸிக்கும் அர்த்தத்தை பகவத் விமுகராய்‌ ப்ரயோஜநாந்தர பரராய் தன் பக்கல் அநு வர்த்தனமும் இன்றிக்கே இருக்கிற ஸம்ஸாரிகளையும்‌ பார்த்து இவர்‌ மேல் விழுந்து உபதேசிப்பான் என் என்னில் அவனோடிவர்களுக்குண்டான ஸம்பந்தத்தை அறிகையாலும் இவர்கள்‌ துக்கம் கண்டு பொறுக்க மாட்டாதே க்ருபையாலும்‌ உபதேஸிப்பர்‌ என்கிறார்‌-

203-நண்ணாதார்‌ மெய்யிலூன்‌ ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநீத்வாதிகள்‌ விஞ்சின ப்ரணிபாத அபிவாதந பரிப்ரஸ்ந ஸேவா பரர்க்கு உளங்கொள்‌ பேசுமளவன்றென்னும்‌ அர்த்தத்தை வம்மின்‌ விரோதம்‌ ஈனச் சொல்‌ எவ்வுயிர்க்கு மறிய வென்று ௮டைவுகெட அதபஸ்கர்க்கு உபதேஸிக்கிறது ஞாலத்தார்‌ பந்த புத்தியும்‌ அநர்த்தம்‌ கண்டு ஆற்றாமையும்‌ மிக்க க்ருபையுமிறே .

மற்றும் இப்படி உபதேசிப்பார் பலரும் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் .

தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தவர்க்குமே இவை உள்ளது .–204-

ஆனால்‌ இப்படி விமுகராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்குத்‌ தம்முடைய க்ருபையாலே இவருபதேஸிக்கிறாராகில்‌, இவ்வுபதேஸம்‌ பலித்தமை உண்டோ என்னில்‌, இவர்‌ க்யாதி லாப, பூஜா நிரபேக்ஷராய்க்‌ கொண்டு பகவத்‌ கைங்கர்யமாக உபதேஸிக்க ஜகத்தாகத்‌ திருந்துகையாலே தம்முடைய தனிமைக்கும்‌ ஸம்ஸாரிகளுடைய தனிமைக்கும்‌ எம்பெருமானுடைய தனிமைக்கும்‌ க்லேஸப்பட்ட இவருடைய இழவுகளும்‌ தீரப் பெற்றதென்கிறார்‌.

205-க்யாதி லாப, பூஜாபேக்ஷையற மலர்‌ நாடி ஆட்செய்ய உய்யக்‌ கொண்டு ஆரைக்‌ கொண்டு வாளும் வில்லும்‌ கொண்டு என்கிற இழவுகள்‌ தீரப்பெற்றது.

206-ப்‌ரஹ்மநிஷ்டரும்‌ ஸம்வத்ஸர வாஸிகளுமாகில்‌ ஏ பாவம்‌ பயனன்றாகிலும்‌ சேராது.

ஆனால்‌ அபரிச்சே,த்‌,யமாய்‌ நிரதிஸயபோக்யமான பகவத்‌ விஷயத்தை அநுப விக்கிற இவர்‌ பரோபதேஸம்‌ பண்ணுகிறார்‌ என்னும்போது, இவர்க்கு அவ்வநுபவம்‌ கூடினபடி எங்கனே என்னில்‌, இவருடைய அநுபவ பரீவாஹ ரூபமான சொற்கள் தானே பரோபதேஸமாயிருக்கையாலே உள்ளே அநுபவமானது செல்லா நிற்கச்‌ செய்தே பரோபதேஸமாயிருக்கும்‌ என்கிறார்‌.-

207-மெய்க்நின்று மங்கவொட்டுக்கு நடுவு அநுபவ கர்ப்‌போபதேஸம்‌.

இது தான்‌ ஸ்வாநுபவகர்ப்ப, பரோபதேஸமாய்‌ பரோபதேஸ முகத்தாலே ஸ்வாநுபவமாயிருக்கையாலே எல்லா அவஸ்தையிலும்‌ இவர்க்கு அநுபவத்தில்‌ குறை யில்லை

13 –உபதேஸ பாத :-த்ரயோதஸ — 4 – 1 –மூன்றுடன் அதிகரணங்கள் கொண்ட பாதம் — 208 –213—–6–
18– ரஹஸ்ய த்ரயார்த்த உபதேஸாதி, கரணம்‌ —208–210—–3-

ஆனால்‌ இந்நாலு ப்ரபந்தத்தாலும்‌ இவருபதேஸிக்கும் வர்த்தம்‌ ஏதென்னில்‌

208-இவற்றுக்கு மந்த்ரவித்‌யநுஸந்தாந ரஹஸ்யங்களோடே சேர்த்தி.

அவற்றில்‌ ப்ரதிபாதிக்கிற அர்த்த பஞ்சகம்‌ இவற்றிலே ப்ரதிபாதிதமாகிறபடி எங்ஙனே என்னில்‌

209-அளிப்பானடியேனடைக்கலம்‌ சூடிய பொய்‌ யாதானும்‌ அழுந்தாரென்று ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும்‌ தாமரை யுந்திப்‌ பெருமா மாயனாளாகவே வாழியவென்று ப்ராப்ய பலங்களையும்‌, நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனாலடித்துக்‌ கண்டிலமால்‌ யாதாகிலென்று உபாயத்தையும்‌ சொன்னவை மந்த்ர ஸ்லோகங்களோடே சேரும்‌.

திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தையும்‌ ப்ரதிபாதிக்கையாலே அவை மூன்றும்‌ அர்த்த பஞ்சகத்தை ப்ரதிபாதி,க்கிற திருமந்த்ரத்தினுடையவும்‌ சரம ஸ்லோகத்தினுடையவும்‌ அர்த்த மாயிருக்கிறது –

திருவாய்மொழி த்‌வயத்தில்‌ அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே தீர்க்க ஸரணாகதி என்கிறார்‌.

210-த்வயார்த்தம்‌ தீர்க்க ஸரணாகதி யென்றது ஸாரஸங்க்‌ரஹத்திலே.

19 –அர்த்த, பஞ்சக ஸங்க்‌,ரஹ-விவரணாதி,கரணம்‌ -211 -212—2

இனி மேல்‌ திருமந்த்ரத்திலும்‌ சரம ஸ்லோகத்திலும்‌ ஸங்க்‌ரஹேண ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்திலே விவரித்தாப் போலே திருவிருத்தம்‌ திருவாசிரியம்‌ திருவந்தாதி என்கிற மூன்று ப்ரபந்தத்திலும்‌ ஸங்க்‌ரஹேண சொல்லப்பட்ட அர்த்த பஞ்சகத்தை த்‌வயத்தினுடைய ஸ்தாநேயாயிருக்கிற இத்‌ திருவாய்மொழியிலே விஸ்த்ருதமாகச்‌ சொல்லுகையாலே அர்த்த பஞ்சகமும்‌ இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அந்த அர்த்த பஞ்சகத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு உபாயோபேயங்களிரண்டுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ அவை தன்னிலும்‌ உபாயமொன்றுமே இதுக்கு ப்ரமேயமென்றும்‌ சொல்லக்‌ கடவதென்கிறார்‌.-

211-மூன்றில்‌ சுருக்கிய ஐந்தையும்‌ உயர்‌ திண்‌ அணை ஒன்று பயில்‌ ஏறு கண்‌ ௧ரு வீடு சொன்னால்‌ ஒருக்‌ கொண்ட நோற்ற நாலும்‌ எம்மா ஒழிவில்‌ நெடு வேய்‌ என்கிற இருபதிலே விஸதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும்‌ அருளினன்‌ வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும்‌, தொழுது களித்தேன்‌ சொல்லுப்‌ பெற்றேன்‌ பணிசெய்யென்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்‌ டிலொன்றையும்‌ இதுக்கு ப்ரமேயமென்னும்‌.-

திருமந்த்ரமும்‌ த்‌வயமும்‌ முதல்‌ பதங்களிலே ஸங்க்‌ரஹமாய்‌ ஒழிந்தவிடம்‌ அவற்றினுடைய விவரணமா யிருக்குமா போலே திருவிருத்தமும்‌ திருவாய்மொழியும்‌ முதல்‌ பாட்டுக்களிலே ஸங்க்‌ரஹமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌.-

212-ரஹஸ்யத்துக்கோரெழுத்தும்‌ அதுக்கோருருவும்‌ போலே யானவற்றிலே இமையோரதிபதி அடியேன்‌ மனனே பொய்‌ மயர்வு பிறந்தருளினன்‌ விண்ணப்பம்‌ தொழுதெழென்ற பஞ்சகத்தோடே அவித்‌யாதி ஸ்வரூப ஸ்வபாவாத்மேஸ்வர பந்த ரக்ஷண க்ரம குண விக்ரஹ விபூதி யோக ததீயாபி மாநோபதேஸ விஷய அந்யாபதேஸ ஹேத்வாதிகளும்‌ ஸங்க்‌ருஹீதம்‌

20-மங்க லாசரண-ஸத்வத் தத்த்வாதி கரணம்‌-213–1–

ப்ரபந்த ஆரம்பத்திலே அந்த ப்ரபந்தத்தினுடைய அவிக்‌ந பரி ஸமாப்த்யர்த்தமாகவும்‌ சொல்லக் கடவதான ஆஸீர் நமஸ்க்ரியா வஸ்து நிர்தேஸம்‌ என்கிற இவை இப் ப்ரபந்த ஆரம்பத்திலுமுண்டோ என்னில்‌,

213-அடி தொழுதெழென்ற இதிலே வஸ்து நிர்த்தேஸ நமஸ்கார ஆஸீஸுக்களும்‌ உண்டு.

14 –விபாக, பாத. – சதுர்தஸ — 4 – 2 –இரண்டு அதிகரணங்கள்– 214 – 217—– 4–
21 ஸ்ரீ மூக,ஸுூக்தி தஸாவதார விபாகாதி, கரணம்‌ –214 —-1–

“பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாஸாய ச துஷ்க்ருதாம்‌ தர்ம ஸம் ஸ்த்தாபநார்த்தரய ஸம்பவாமி யுகே யுகே,” (கீதை 4-8) என்று ஸாது பரித்ராண துஷ்க்ருத் விநாஸநார்த்தமான பகவதவதாரம்‌ போலே இத் திருவாய்மொழியினுடைய அவதாரமுமென்கிறார்‌ –

214-சாது சனம்‌ நண்ணா மயர்வற மாசறுக்கும்‌ தெருள்‌ கொள்ளப்‌ பத்தராவர்‌ அடிமையற வுரிய நோய்களறுக்கும்‌ உடைந்து ஏற்றரும்‌ வானின்‌ தாளின் கீழ்‌ அடிக்கீழின்பக்கதி பயக்கும்‌ ஊடுபுக்கு மூவுலகும்‌ உருகா நிற்பர்‌ என்னும்‌ ஸாம்யத்தாலே வாச்யம்‌ பத்தினாய தோற்றம்‌ போலே தோற்றங்கள்‌ ஆயிரத்தின்‌ பத்துப்‌ பத்தான இதினாவிர்ப்பாவம்‌.


22 ஸ்ரீமுக, ஸூக்தி ஸத தஸக பத்‌ய ப்ராதாந்ய-அபிப்ராய விசேஷ அதிகரணம்–215–217——3–

215-ஐந்தினாடொன்பதோட ஒருபத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு ஒராயிரமென்றதும்‌ ஸாபிப்ராயம்‌.

216-பாட்டுக்கு க்ரியையும்‌ பத்துக்குக்‌ கருத்தும்‌ போலே நூற்றுக்கு உபதேஸப் பத்து.

217-பகவத்‌ பத்த பரங்கள்‌ ஆஸ்ரயண விதி, ஸேஷங்கள்‌.

பகவத் குணங்களையும்‌ தத் பக்தனான ஜீவனுடைய குணங்களையும்‌ சொல்லுகிற விடங்களை ஆஸ்ரயண விதிக்கு ஸேஷமென்கிறார்‌. அன்றிக்கே பகவத் பக்த பரமாம்படி ஒருங்க விட்டு பரோபதேஸம்‌ பண்ணுகிற திருவாய்மொழியில்‌ என்று இதற்குத்‌ தாத்பர்யமாகக்‌ கடவதென்று ஏக வாக்யமாகச்‌ சொல்லவுமாம் –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading