ஸ்ரீ அநந்தாழ்வான் மஹாத்ம்யம்—ஸ்ரீ மா முனிகள் மஹாத்ம்யம்–

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

https://acharya.org/mag/g/g0505.pdf–கீதாசார்யன் -505-ஐப்பசி 2020–மா முநிகழ் 650-திரு நஷத்ர மலர்

இயற்பெயர் அழகிய மணவாளன் -ஸந்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த திருநாமம் தொடரும் -பால்யாத் -ஸஹஜ -மஹாத்ம்யம் -அழகிய மணவாள மா முனிகள் -கொண்டாடுகிறோம்-கீதா உபதேசம் -62 திருநக்ஷத்ரம் -ஈடு ஸாதித்த மா முநி களுக்கும் 62 திருநக்ஷத்ரம்-எம் ஐயன் ராமானுஜன் -திருக்குமாரருக்கு திருநாமம் ஸாதித்து அருளினார்-

ராமாநுஜ ரஹச்யத்ரயம் மூலம் – நித்தியம்  -அனுசந்திக்க வேண்டியவை :1-திருமந்த்ரம் – திருவஷ்டாக்ஷரம்–ஓம் நமோ ராமாநுஜாய-2. த்வய மந்த்ரம்–ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே : /ஸ்ரீமதே  ராமாநுஜாய நம :  //3. சரமச்லோகம்–ஸர்வகர்மாணி  ஸந்த்யஜ்ய ராமாநுஜ இதி ஸ்மர /விபூதிம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம //

ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!

திருவானந்தாழ்வானுக்கு திருவேங்கடமுடையான் ஸாதித்த தனியனும் உண்டே-தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
–அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ஈட்டுப் பெருக்கர் கோயில் செல்வ அழகிய மணவாள மா முனிகள் -கோயில் செல்வமான பெரிய பெருமாளைக் கொண்டவரே -கோயிலுக்கு செல்வமான -ஸ்ரீ ரெங்க தனம் மா முனிகள் –

அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*

ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார்.

இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.-தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.-பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்

ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.

செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,-எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது-எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.-ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது-பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது-இந்த குணங்களோடு-சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.-ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை-தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

ஸ்ரீ மா முனிகள் திருவரங்கத்தில் தமது திருமடத்தில் எழுந்தருளி இருப்பதை -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் –ததஸ் தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் ப்ராங்முகம் ஸூக மாஸீநம் ப்ரஸாத மதுர ஸ்மிதம் -பூர்வ திநசர்யை – 18-கம்பத்தின் அடிக்கு அலங்காரமாக கிழக்கு நோக்கி இனிய புன்முறுவலுடன் வீற்று இருந்தார் -என்று அருளிச் செய்துள்ளார் -இன்றும் நாம் ஆதி சேஷனுடன் இருக்கும் இருப்பை உத்தம நம்பிக்கு சேவை ஸாதித்த விருத்தாந்தம்-சித்ர வடிவில் நாம் சேவித்துக் கொள்கிறோம் அன்றோ இந்த திருவுருவத்தை –

தம்முடைய திருக்கை சொம்பை உபாதானமாக்கி இரண்டு சிறிய திரு விக்ரஹங்கள் -ஓன்று ஆழ்வார் திரு நகரியில் மூன்று அங்குல உயர நின்ற திருக்கோலம் அஞ்சலித்த திருக்கையுடன் சேவை -மற்ற ஓன்று திருவரங்கத்தில் ஞான முத்திரையுடன் வீற்று இருந்த திருக்கோலம்-ஐப்பசி திரு மூலம் சாற்றுமுறை என்று மா முனிகள் நம்மாழ்வார் திருவடிகளில் எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் கண்டருளப்பண்ணி நம்மாழ்வாருக்குச் சாத்தியருளிய திருமண் காப்பை மா முனிகளுக்கு சாத்தி அருளும் அழகை இன்றும் சேவிக்கலாம் -திருவரங்கத்தில் பெரிய பெருமாளே கஜ துரக சித்ரா சாமர வாத்ய விசேஷங்களுடன் பெரிய கோயில் அர்ச்சகர்கள் கைங்கர்ய பரர்கள் வந்து அமுது செய்யப்பண்ணி நடத்துவது அசாதாரண சிறப்பாகும்-காஞ்சி புரத்திலும் மா முனிகள் பரமபதித்த 50 வருடத்துக்குள் சந்நிதியும் உருவாகி -தேவப்பெருமாள் சாற்றுமுறை அன்று இங்கு எழுந்தருளி நடை பெறும் வைபவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்-ஸ்ரீ பெரும்பூதூரில் எம்பெருமானார் பெரிய சேஷ வாகனத்திலும் மா முனிகள் சிறிய சேஷ வாகனத்திலும் எழுந்தருளி புறப்பாடு கண்டருளுகிறார்கள்-

பூர்வாச்சார்கள் என்னும் வ்யாபதேசம் மா முனிகள் அளவில் –மதுரேண ஸமாபயேத் -என்னும்படி விஸ்ராந்தமாயிருக்கும் அன்றோ-ஆழ்வார் ஆச்சார்ய பரம்பரை பொய்கையாழ்வார் தொடக்கி பொய்யில்லாத மா முனிகளுடன் தலைக் கட்டுகின்றது -இவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் பல பல ஸ்தோத்ர பிரபந்தகளை அருளிச் செய்துள்ளமையும் இவருக்கே அசாதாரணம்-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைகதாமநி -ஆதிசேஷன் இவர் அவதாரம்–இவை இவரது பரம விலக்ஷண திரு நாறு வீறு பற்றி அருளிச் செய்துள்ளார்கள் –விசதவாக் சிகாமணிகள் -என்று கொண்டாடுகிறோம்

நாந் ருக்வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண நா சாமவேத விதூஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம்
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்கடலுமீ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொலிச்
சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-

சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
மாறிச் சொல்லும் இடமும் உண்டு –

மாறிச் சொல்லுவதும் உண்டு என்னாமல் மாறிச் சொல்லும் இடமும் உண்டு –என்று அருளிச் செய்து-பாஷ்யக்காரரே -16-1 கீதா பாஷ்யத்தில் அந்தக்கரண நியமனத்தை தமமாகவும் பாஹ்ய கரண நியமனத்தை சமமாகவும் அருளிச் செய்துள்ளார்-தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )-இரண்டு படியும் ஹ்ருத் கதமாயிருக்கையாலே இவ்வாறு அருளிச் செய்துள்ளார்

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –சூர்ணிகை -162—அதாவது இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –இதுக்கு பிரயோஜனம் -என்று சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே-தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும் தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இறே இவனுக்கு –இத்தால் –லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று–ஜகத் சர்கே லீல ஏவ கேவலா பிரயோஜனம் -என்றும் பரஸ்ய ப்ரஹ்மணோ லீல ஏவ பிரயோஜனம் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி–கிரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய –என்று ஸ்ரீ பராசர பகவானும் அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ–மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும் நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும் அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இறே-

ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் |
|-திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading