ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –தேவிமார் ஆவார் -8-1-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடியவர் அங்கு அணை மேல் பள்ளி கொண்டமை வியக்தமாக இல்லை-இதில் தான் முகில் வண்ணன் பத பிரயோகமும்-அரவணை மேல் பள்ளி கொண்டவன் வியக்தமாக உள்ளது-ஆனால் இப் பாசுர விவரணம் தேவிமார் ஆவார் –8-1-திருவாய் மொழியே அங்கும் ஓங்காரம் பல உண்டே–இங்கு முறையோ கேள்வி போல் அங்கும் திருத் தாயார் உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-தோழி கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சியைப் பற்றி புலம்பும் -பாசுரம்-தலைவன் மறைந்து இருக்க -முறையோ என்று அவனையே குறித்து சொல்லும் பாசுரம் என்றுமாம்–முறையோ ஓங்காரம் -இரக்கம் குறித்து–அறையோ -சந்தேகம் -அறை கூவுகிறதோ ஐயம் இது-நிறையோ -அடக்கம் -தெரிநிலை ஓங்காரம் -நிறை யானது-உனது திரு அருளாலே காக்கப்பட வேண்டும்-தேவிமார் -தாள்களைத் –பேர் உதவிக்கைம்மாறு –ஆத்மா சமர்ப்பணம் -உயிரை அறவிலை செய்தனன்-அதுவும் அவனது இன்னருள் -எனது ஆவி யார் யான் யார் தந்த நீ உனது இரக்கமே சாதனம் -தடுமாறி சொல்லுவார் அங்கும்-ஆளவந்தார் -மயா சமர்ப்பித்தம் -கின்னு ஸமர்ப்பயாமி போல் உண்டே இரக்கமே உபாயம் இதில் வியக்தமாக உள்ளதே

அவதாரிகை–கீழ் கிருஷ்ண அவதார சௌலப்யம் இறே  அனுசந்தித்தது – அந்த அவதார சம காலத்திலேயே-தாம் உளராகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே – கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தரானார் –அவள் பிறிவாற்றாமைக்கே மேலே கடலோசையும் பாதகமாக நின்றது என்று திருத் தாயார் (செவிலித்தாயார் )சொல்லுகிறாளாய்  இருக்கிறது- தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு கூறுதல் –

இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் வந்து அவதரித்தது தமக்குச் சடக்கென லபிக்கைக்கு உறுப்பாகக் காணாமையாலே(கீழே நமக்கு இறை என்றாரே ஸ்வாமித்வம் தானே ஆய்க் குலத்துக்குத் தான் எளியவன் ) ஆர்த்தரான இவருக்கு ஸம்ஸார சாகர கோலாஹல தர்சனத்தால் பிறந்த ஸைதில்யத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து யுரைத்த பாசுரத்தை கடவோதத்துக்கு ஆற்றாத தலைவி யுடைய தளர்த்தி கண்ட தோழி புலம்பி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கீழ் ஸ்ரீ கிருஷ்ண அவதார ஸுலப்யத்தை அனுசந்தித்து அவதார சமகாலத்திலே தாமாகப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாலே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை ப்ராப்தரானார் அந்த பிரிந்த ஆற்றாமைக்கு மேலே கடலோசையும் வந்து பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் என்று திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
– 62–தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் – அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்-ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ இரங்காது--காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் – சரணம் புகை தான் மிகையாம்படிக்கு ஈடே இறே இவள் தசை -என்று தசையைக் காட்டச் செய்தேயும் – புறம்பொரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் -என்னச் செய்தேயும் – ஏக தேசமும்  இரங்குகிறது  இல்லை –பாதகர்க்கு இத் தலைவி எளிமையை அறிவித்த அளவாய் விட்டதே –
இத்தனை எளிதாகில் நமக்கு-நினைத்தபடி பாதிக்கலாம்  ஆகாதே என்று அதிலேயும் முறைக்கைக்கு உடலாயிற்று  —இது தான் சரணம் என்றால் இரங்குமதும்  அன்றிக்கே –
அம்புக்கு முகம் காட்டுமது இறே –அது ஆர்த்திக்கு இரங்கும் அது அல்லவே -அம்புக்கு இரங்கும் அது இறே –தனக்கு சரணம் என்றால்-இரங்கும் அது   அன்றே –மரணமானால்  இரங்கும் அது இறே –அறையோ என நின்றதிரும்  கருங்கடல் –-இங்கனே வெளியிலே புறப்பட்டாயோ –-அறையோ அறை என்று கூறுவாரைப் போலே இரா நின்றது –கருங்கடல் –அகவாயில் சீற்றம் உடம்பிலே நிழல் இட்டால் போலே இருக்கை –சிவப்பும் கருப்பும் சினம் -என்னக் கடவது இறே –ஈங்கு இத்யாதி –இவ் அவஸ்தா பந்னையான இவளுடைய அடக்கமானது –உன் திருவருளால் அன்றி காப்பது அரிதால் –உம்முடைய  பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே –ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது –ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-முறையோ – தத் தஸ்ய சத்ரு சம்பவேத் -என்று இருக்கும் நிலை கழிந்து – கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது –அரவணை -இத்யாதி –செங்கற் சீரை கட்டி கூப்பிட்டாகிலும் பெற வேண்டும் படி யாயிற்று வடிவு அழகும் படுக்கையும் –அரவணை மேல் – இவள் கடின ஸ்த்தலத்திலே கிடக்க–நீர் மெல்லிய படுக்கையை தேடிக் கிடக்கிறீரே –முகில் வண்ணனே-இத்தை எம்பார் அருளிச் செய்கிற போது –இயலைச் சொல்லுகிறவரைப் பார்த்து -இவ்வளவிலே முகம் காட்டாதே-செங்கற் சீரை கட்ட இருக்கிறவர் -முதலிகளாய்  இருப்பார் –தலையிலே பிரம்புகள் விழிலும்-முகில் வண்ணரே -என்னீர் -என்று அருளிச் செய்தார் –இருவருமான வன்று சேர நிற்கவும்- பிரிந்த வன்று தாய்க் கூற்றிலே நிற்குமவர் இறே இவர் –முகில் வண்ணன் -என்று ஏக வசனமாக சொன்னால் – நம்மை ஏக வசனமாக உதாசீனமாக சொல்லுகிறது -என் -என்றபடி – ஆகையால் முகில் வண்ணர் -என்று பூஜ்யமாக சொல்லீர் என்று அருளிச் செய்தார் -என்றபடி –மிதுனமே உத்தேச்யமாய் இருக்க – எம்பார் பிராட்டி பஷமாய் இருந்து ஈஸ்வரனை வெறுக்கிறது என் என்ன என்று அருளிச் செய்கிறார்-(அன் விகுதி இல்லாமல் அர் விகுதி வெறுத்துப் பேசுவான் என் என்னில் பிரிந்தால் தாயார் பக்கமே ஒதுங்கி இருப்பார் அது போல் பட்டரும் நாச்சியார் திருவிழி விளிக்க ஒண்ணாது என்றாரே )

நாயகனை நோக்கி நாயகியின் ஆற்றாமையை தோழி கூறுதல் – தானே இரங்க ப்ராப்தமாய் இருக்க -அப்படி செய்யாததோடு இவளது பெண்மையையும் ஸுகுமார்யத்தையும் இளமையையும் காட்டி இரங்குமாறு வேண்டிக் கொண்டாலும் இப்பாழும் கடல் இரங்குகிறது இல்லை-மேலில் காணும் கருமை நிறத்தோடு உள்ளுள்ள கருமையும் -கொடுமையையும் -காட்டுவதற்கு கருங்கடல் -என்றது –
இனி -கடல் ஆகிய பெரும் பகையும் யுண்டாய் -தனக்கு நிறை காக்கும் சக்தியும் இல்லையுமான பின்பு –
நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடைக்க -அரவணைமேல் பள்ளி கொண்ட-படுக்கை கொள்ளாமல் கருந்தரையில் இவள் கிடக்க இவளுக்கு இடம் கொடாமல் மெல்லிய படுக்கை தேடிக் கிடக்கிறீரே –
முறையோ — முகில் வண்ணனே -மேகம் போலே உதார குணம் கொண்ட நீர் இவளுக்கு உதவாமல் இருப்பதும் ஒரு முறைமை தான் –

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது -சக்ரவர்த்தி பரசுராமனை இரந்து
பிள்ளைகள் பால்யத்தை முன்னிட்டால் போலே நான் ப்ரார்த்தனா ரூபமான பிரபதனத்தைப் பண்ணிலும் அவள் ஒரு பெண் அன்றோ இன்று பல ஹானியை முன்னிடிலும் இவ்விடத்தில் இறையும் இரக்கம் இன்றியே இருந்தது ஓ ஒரு கொடுமையே–இரக்கம் இல்லாமை கண்டபடி என் என்னில்–அறையோ என நின்றதிரும் இவள் எதிராக அறை கூவுகிறதோ -என்னலாம் படி நிலை நின்று கோஷியா நிற்கும்–கருங்கடல்-இவள் அளவில் கடலுக்கு யுண்டான நெஞ்சில் கருகுதல் வடிவிலும் தோன்றா நின்றது–ஈங்கிவள் தன் நிறையோ-இவ் விடத்தில் ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தையான இவளுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தி யானது-வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய் ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே முறையோ-நீ படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்க
இவள் பாடாற்ற மாட்டாத இது கிரமமோ–முறையோ என்று க்ரம ஹானியை ஸூசிப்பித்துக் கூப்பிட்ட படி–1-ஸ்ரம ஹரமாய்–2-தர்ச நீயமாய்–3-உதாரமான வடிவை யுடைய நீ-இவள் ஆர்த்தி தீர உபகரியாதது முறையோ என்று தோழியானவள் தன் ஆற்றாமையாலே தலைவனை யுட் கொண்டு விளித்து யுரைத்தாள் யாயிற்று-இது செவிலி இரங்கல் யாகவுமாம் –(தமிழர் அகத்துறைப்படி தோழி பாசுரம் கொள்ளத் தகும் என்பர் )இத்தால் அநந்த க்லேச பாஜனமாய் கோரமான ஸம்ஸார ஸாஹரத்தினுடைய
கோலாஹலத்தைக் கண்டு ஆழ்வார் ஈடுபாட்டுக்கு அஞ்சின ஸூஹ்ருத்துக்களால் இது பரிஹரிக்க அரிது என்று நினைத்து ஆழ்வாருடைய ஸ்வரூபம் ஈஸ்வரனுடைய கிருபா ஏக ரஷ்யம் ஆகையால்
ரக்ஷகரான பெரிய பெருமாளைக் குறித்துத் தங்கள் ஆர்த்தி தோற்ற விண்ணப்பம் செய்த பாசுரமாய் இருக்கிறது —

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்–இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
காலிலே விழுந்து சரணம் புகச் செய்தேயும் சரணம் புகுகை தான் மிகை என்னும்படிக்கு ஈடாய் இருக்கிறவளுடைய தசையைக் காட்டாச் செய்தேயும் புறம்பு ஒரு புகல் இல்லாதாள் ஒரு அபலை கிடாய் என்னச் செய்தேயும் ஏக தேசமும் இரங்குகிறது இல்லை பாதகர்க்கு இத்தலையிலே அருமை காற்றுமது அன்று இறே-அறையோ என நின்றதிரும்-இங்கனே வெளியில் புறப்படாயோ என்று அறையோ என்று அலற கூவுகிறால் போலே இரா நின்றது –கருங்கடல் ஈங்கிவள் தன்நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன் நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும்
ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது –இவ் வவஸ்தையில் இவள் நிறை அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு உன்னருளால் அன்றி இல்லையே அத்தால் அவ்வவஸ்தை யானானாள் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் ஆற்றாமைக்கு வருந்தும் பாகவதர்கள் -சம்சார சாகரம் பயங்கரம் -இவள் ஸ்வரூபத்தை உன் திருவருளால் அன்றி பாதுகாக்க ஒண்ணாது -ஆதி சேஷன் இடம் கைங்கர்யம் பெறுவது போலே இவள் இடமும் அருள் காட்ட வேணும் உமது இனிய வடிவை இவர் அனுபவிக்கப் பெறும் படி செய்வதே உமக்குத் தகுதி –

ஸ்வாபதேசம் –
இப் பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது – கருங்கடல் இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இறையோ  இரங்காது  -அறையோ என நின்று அதிரும்- இனி ஈங்கிவள் தன் நிறையோ உன் திருவருளால் அன்றி காப்பது அரிது – அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -முறையோ -என்று அந்வயம்-
ஒ ஸ்வாமி  -இப்போது நீ இவள் இடம் அருள் செய்து -உன் வடிவு அழகை காட்டினால் அல்லது- இவள் ஜீவிக்க உபாயம் இல்லை – ஆகையால் ஒருகால் நீ வந்து தோற்ற வேணும் என்கிறார்கள் –

தாத்பர்யம்
கீழ் அனுசந்தித்த கிருஷ்ண அனுபவ ஸுலப்யம் அனுபவிக்கப் பெறாமையால் நம்மிறை என்றாரே -ஸ்வாமித்வம் ஒழிய ஆயர்கள் போல் அனுபவிக்க வில்லையே அத்தாலே கலங்கி அதுக்கும் மேலே
சம்சார கடல் ஓசையும் நலிவதை ஸூஹ்ருத்துக்கள் சொல்லும் பாசுரம்-கடலைச் சரணம் புகுந்தால்
அது சரணாகதி தர்மம் அறியாது என்பது பிரசித்தம் அன்றோ பெருமாளும் சரண் புகுந்து பாலியாதே அம்பை எடுக்க வேண்டிற்றே-இவள் ஒரு அபலை தாங்க மாட்டாள் என்றால் அதுவே ஹேதுவாக மேலும் நலிந்து ஜெயகோஷம் பண்ண இவள் இப்படி இருக்க நீ அரவணை மேல் பள்ளி கொண்டு அருளுவதே
ஓ ஸ்வாமி உனது அருளாலே தான் இவள் தரிக்க முடியும் நீ நேரே வந்து தோற்ற வேண்டும்
இத்தால் தலைமகன் மறைந்து இருந்தான் என்றும் அவன் முன்னிலையாகச் சொன்னது என்றும் இரண்டு நிர்வாஹங்கள் உண்டே –

8-1-தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-ப்ரவேஸம்-

முதல் பத்தால் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார்
மூன்றாம் பத்தால் -அந்த களை அறுக்கப் பட்ட கைங்கர்யம் ஆனது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்
ஐந்தாம் பத்தால் அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்
ஆறாம் பத்தல் விரோதிகளைப் போக்குமவனான சர்வேஸ்வரன் திருவடிகளில் சரணம் புகுந்தார்
ஏழாம் பத்தால் இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியைக் கண்டு நோவு பட்டார் –
இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தகத பட நியாயம் போலே நம்மை விடாமலே தொடருகிறது –
நமது ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அறாத படியாலே என்று பார்த்து
அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார் இந்த எட்டாம் பத்தில்

சர்வ சக்தன் -ஏழாம் பத்தில்
சத்ய காமத்வம்-எட்டாம் பத்தில்
ஆபத் சஹத்வம் ஆர்த்தி ஹரத்வங்கள் -9/10-பத்தும் பத்தாக்கி –
ஞப்தி பல முக்தி பல வ்ருத்தி -முதல் மூன்றும்
விரக்தி -நாலாம் பத்தில்
பக்தி ராகம் கழிய மிக்கு -பேரமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல்
பிரபத்தி ஆறாம் பத்தில்
சக்தி வெளியிட்டு ஏழாம் பத்தில்
பிராப்தி -எட்டாம் பத்தில்
பூர்த்தி -ஒன்பதாம் பத்தில்
ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தில்

கிருதஞ்ஞாதா பலம் பிரதி க்ருதமானம் உணர்ந்து – -நின்ற உன்னை உணர்ந்தேன் –
தோள்களை ஆரத் தழுவி தாள்களை –பேர் உதவிக்கு கைம்மாறா –
கண்கள் சிவந்து –நின்ற உன்னை உணர்ந்தேன்-8-8- -அநந்யார்ஹ சேஷ பூதன் அடியேன் உள்ளான்-சேஷம் பிரதானம்

பிராட்டிமாரோடே நித்ய பரிகரம் சேவிக்க
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வனந்த ஆழ்வான் மேலே சர்வேஸ்வரன் நாம் பாடின திருவாய்மொழி
கேட்க்கைக்காக திரு வாறன் விளையிலே எழுந்து அருளி இருந்தான்
நாம் அங்கே சென்று திருவாய்மொழி கேட்ப்பித்து அனுகூலமான கைங்கர்யங்களையும்
செய்து அனுபவிப்போம் என்று பாரித்தார் –

அது எண்ணம் மாத்ரமேயாய் நினைத்தபடி தலைக்கட்ட பெற்றது இல்லை –
1-பிராட்டிமார் -எழில் மலர் மாதரும் -அருகே எழுந்து அருளி இருக்க-தேவிமார் ஆவார் திருமகள் பூமி
2-நித்ய ஸூரிகள் -யாவரும் வந்து வணங்கும் -உளராய் இருக்க-ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
3-நினைத்த படி கார்யம் செய்து தலைக் கட்டுக்கைக்கு தகுதியான ஐஸ்வர்யம் குறைவற்று இருக்க-மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
4-அடியார்கள் உகந்தனவற்றை தனக்கு திரு மேனியாக கொண்டு உதவும் தன்மையனாய் இருக்க-வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்-
5-நான் ருசியில் குறைவற்றவனாய் இருக்க -காணுமாறு அருளாய் –
நினைத்த கார்யம் பெறாமல் ஒழிவோமே என்று வெறுத்தார் –

இவர் தாம் சர்வேஸ்வரன் பக்கல் தமக்கு தஞ்சமாக நினைத்து இருப்பது இரண்டு ஸ்வ பாவங்களை -தன்மைகளை –
அவை –
1-அடியார்களுக்கு பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பும் –உமர் உகந்து உகந்த உருவம் –
2-தனக்கு வேறு பட்ட எல்லா பொருள்களும் தனக்கு பிரகாரமாய்–தான் பிரகாரியாய் –
இவற்றுக்கு வந்த வ்யசனம் தனக்கு வந்ததாக நினைக்கும் சம்பந்தமும்

(இறந்ததும் நீயே -இத்யாதி -பூத பவ்ய பவிஷ்ய பிரபு)

வ்யசுகேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கிதா
உச்த்வேஷு ச சர்வேஷூ பித்தேவ பரிதுஷ்யதி -அயோத்யா 2-40-
அவை இரண்டும் தனக்கு கார்யகரமாக கண்டிலர்

நான் ஒருவன் தோன்றி சர்வேஸ்வரனுக்கு இவையும் பொய்யாக புகுகின்றனவோ -என்று ஐயம் கொண்டார்
குண ஞானத்தாலே ஜீவிக்குமவர் குணங்களில் –அதி சங்கை -ஐயம் கொண்டால் ஜீவிக்க மாட்டாரே
இவர் தம்மை நாம் இழக்க ஒண்ணாது
இவரை சமாதானம் செய்யும் விரகு ஏதோ -என்று பார்த்து

வாரீர் -நீர் கண்டது எல்லாவற்றிலும் –அதி சங்கை -ஐயம் கொள்கிறது என்
நாம் உமக்கு ஒன்றும் செய்திலமோ
இவ்வளவாக உதவிய நாம் மேலே உள்ளனவற்றையும் செய்வோம் காண்
நீர் இங்கனே ஐயம் கொள்ள வேண்டா என்று
நம்பத் தக்கவனாக இருக்கை முதலான தன்னுடைய கல்யாண குணங்களையும் -பெரிய அப்பனை -பாசுரம்
தான் இவ்வளவாக செய்த உபகாரங்களையும் காட்டி -தாள்களே எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவி –
இவருடைய ஐயத்தை தீர்த்து சமாதானம் செய்ய
சமாதானம் அடைந்தவராய்
அதனை அனுசந்தித்து – இனிதர் ஆகிறார்

ப்ராஜ்ஞ -க்ருதஜ்ஞஸ் ச –ஸாநு குரோஸஸ் ச-ராகவ-சத் வ்ருத்த–க்யாத-நிரநுக்ரோச சங்க–மத் பாக்ய சங்க்ஷயாத் –ஸூந்தர காண்டம் -26-13-

ப்ராஜ்ஞ –
விரும்பினவற்றை தம்மாலே பெற இருப்பார் அறிவில் குறையாலே இழக்க வேண்டாதபடி தம்
அளவையும் அவர்கள் அளவையும் அறிக்கைக்கு தகுதியான அறிவை உடையவர்
க்ருதஜ்ஞஸ் ச –
கிட்டுமவன் தன் பக்கல் முகம் பாராமை பண்ணுமது தவிர்ந்து ஓர் அடி வர நின்ற எல்லையும் அறிவர் –
ஸாநு குரோஸஸ் ச-
அறிவு கொண்டு கார்யம் கொள்ளவும் அறியாதே இருக்கும் அவர்களுக்கு
அவர்கள் இழவை நினைந்து ஐயோ என்று இரங்குமவராய் இருப்பர்-(அநு க்ரோஸம் -தயை)
ராகவ –
இது இவர் தம்மைத் தோற்றி -தொற்றி- வந்தது அன்று -குடிப் பிறப்பாலே
சத் வ்ருத்த
பிறருடைய நன்மையே தன் பிரயோஜனமாக கொண்டு இருப்பவர்
க்யாத
இப்படி பகைவர் கோஷ்டியிலும் பிரசித்தமானவர்(க்யாதி புகழ்)
நிரநுக்ரோச சங்க-இந்த குணங்களை உடைய பெருமாளை
இந் நிலைமையில் எனக்கு முகம் காட்டக் காணாமையாலே
இந்த குணங்களில் ஒன்றும் இல்லாத (ஆன்ரு சம்சயம் இல்லாதவராக)
அருள் அற்றவரைப் போன்றவராக ஐயப்படா நின்றேன் –
அவர் குணங்களை உடையவர் அன்றோ
மத் பாக்ய சங்க்ஷயாத்
எனக்கு புண்யம் இல்லாமை யாலேயாம் அத்தனை அன்றோ

அறிவு ஒன்றும் சங்கிப்பேன் -வினையேன் -திருவாய்மொழி -8-1-7-என்றார் அன்றோ இவரும் –

இத் திருவாய்மொழிக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் ஸ்லோகம் இது-

எட்டாம் பத்தில் -இப்படி -ஏழாம் பத்திலே –
உபாய நிவர்த்யமான விரோதி ப்ராபல்யத்தை அனுசந்தித்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தை இப்பத்திலே அனுசந்திப்பதாக –
விரோதி நிவர்த்தகனுடைய ஆஸ்ரித ஆகாங்ஷ அதீன சாந்நித்யத்தையும்
ஸ்வ விஷயத்தில் சங்கம் யுண்டே யாகிலும் இதர சங்கம் அற்றார்க்கு அல்லது ஸூலபன் அல்லன் என்னும் அத்தையும்
ஸ்வ ஆஸ்ரித ஜன விஸ்லேஷத்தில் தான் அஸஹாயன் என்னும் படியான ப்ரேம ஜனகத்வத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அத்யந்த துர் மோசமான விரோதிகளைப் போக்கி அவர்கள் சம்பத்தே சம்பத்தாய் இருக்கும் ஆகாரத்தையும்
ப்ராப்ய பூதனான தன் பக்கலிலே ப்ராவண்யம் யுண்டானால் பிரதிபந்தகம் தன்னடையே கழலும் என்னும் இடத்தையும்
ஆஸ்ரித விரோதியைப் போக்குகைக்கு ஆசன்னமாய் இருக்கும் இருப்பையும்
அந்தஸ்த்திதனாய்க் கொண்டு அசேஷ விரோதி நிவர்த்தகனாம் படியையும்
அப்ருதக் ஸித்தமான ஆத்ம ஸூத்தீயை பிரகாசிப்பித்து உபாதி அடியாக தோஷத்தினுடைய அதி பூரி கரணத்தையும்
அபாஸ்த தோஷனான அதிகாரியை அதிசயித தாஸ்ய அம்ருதத்திலே மக்நனாக்கும் படியையும்
ஸ்வ தாஸ்யத்திலும் அதிகமான ஸ்வ கீரை தாஸ்ய போகத்தை பிரகாசிக்கும் படி தத் விரோதி நிவர்த்தன பிரகாரத்தையும்
அருளிச் செய்து –
பூர்வ நிரூபிதமான விரோதியினுடைய நிவ்ருத்தி கிரமத்தை உபபாதித்து அருளுகிறார் –

இதில் -முதல் திருவாய் மொழியில்
அடிமை செய்யப் பாரித்த அர்ச்சாவதார ஸ்தலத்தில் ஆசானுரூபமான அபிமதம் சித்தியாமையாலே ஆர்த்தராய்
மிகவும் பகவத் அனுபவ ஆகாங்ஷை நடக்க -அந்த ஆகாங்ஷைக்கு ஹேதுவான
அனவதிக விபூதி பூர்த்தியையும்
அந்த விபூதி ரக்ஷண அர்த்தமா அவதாரங்களினுடைய அதிசயித போக்யதையையும்
ஆஸ்ரித பவ்யதா விசிஷ்டமான அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும்
ஆஸ்ரித அநாஸ் ரித விபாகேந யுண்டான அனுகூல பிரதிகூல ரூபத்தையும்
அசேஷ பிரகார ரக்ஷகத்வத்தையும்
அகிலாத்ம பாவத்தையும்
அசேஷ பிரகார போக்யதையையும்
ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான ஷீரார்ணவ ஸாயித்த்வத்தையும்
அதிசயித புருஷார்த்தமான ப்ராப்ய தேச வர்த்தித்தவத்தையும்
ஆசானுரூப உபகாரத்தால் வந்த அத்யந்த மஹத்தையையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆகாங்ஷ அநுரூபமாக முகம் காட்டி
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்-

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

வேண்டு வேண்டு உருவம் நின் உருவம் –
அந்த ரட்ஷணத்துக்கு வேண்டின வேண்டின உருவம் நின் உருவம் –
அன்றிக்கே
இச்சையால் கொள்ளப்படுகின்ற உருவம் நின் உருவம் என்னுதல் –
அன்றிக்கே
அடியார்கள் உகந்தவற்றையே தனக்கு திருமேனியாக கொள்ளும் உருவம் நின் உருவம் என்னுதல் –

இவருக்கு பிராணன் ஒரு வாயு விசேஷம் அன்று –
நாய்ச்சிமாரோடும் நித்ய ஸூரிகளோடும் கூடிய கண்ணும் வாயும் வடிவும் ஆயிற்று–இவருடைய உயிர் இருப்பது

காணுமாறு அருளாய் –
எனக்கு கடல் கடைய வேண்டா–அவ்வடிவைக் காட்ட அமையும்—வடிவை காண்கை பிராப்யம்
அருள் பிராபகம்
பிராப்ய பிராபகங்கள் நீயே -என்று இருப்பார் கார்யம் செய்யலாகாதோ

————

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

காண வேண்டும் -என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்பேயோ -என் திறத்து செய்து அருளப் பார்த்தது –
நான் இங்கனம் படாமே உன்னைக் காணும்படி திருவருள் செய்து அருள வேணும் –என்கிறார் –

இவருக்கு வகுத்த விஷயம் விருப்பமாய் இருக்கும் –கடமை இனிமை இரண்டும் ஒன்றே –

உன்னை நீ பிரிந்து அறியாய் –
பிரிந்தாரை கண்டு அறியாய் -என்றது
நித்ய ஸூரிகள் பிரிந்து அறியார்கள் –சம்சாரிகள் பிரிவு அறியார்கள் –
ஆதலால் இந்த ஆற்றாமை உடையவன் நான் ஒருவனே ஆயிற்று -என்ற படி
சேஷத்வம் மறந்தால் நம்மை நாம் பிரியலாம் -சேஷித்வம் மறவானே அவன் –

உன்னை ஆசைப்படுதல் ,ஆபத்தை அறிவித்தல் செய்ய மாட்டாத உலகத்தை அன்றோ காத்தாய் -என்றது
அதாவது
நீ அறிய ஆபத்து உண்டாம் அத்தனை அன்றோ காத்தற்கு வேண்டுவது –
இரட்ச்சகனுடைய பாரிப்பு இரட்சிக்கப் படுகின்ற பொருள்களின் அளவுக்கும் விஞ்சி இருத்தலின்
பேராளா -என்கிறார்-

———–

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

அடியாருக்கு எளியனாய் இருக்கிற நீ –
இன்று வந்து என் ஆபத்தை நீக்காது ஒழியின்–உன் குணமே ஜீவனமாக இருக்கும் அடியவர்கள்
உன்னை எங்கனே நம்பும்படி -என்கிறார்

நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது
அடியேன் என்று நான் சொல்ல நீ ஈச்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

——

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
அவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

உன்னை அடியார்கள் இட்ட வழக்கு ஆக்கி வைப்புதி -என்னும் அறிவு ஒன்றாலுமே தரித்து இருக்கிற
அதுவும் பொய்யோ என்று ஐயப்படா நின்றேன் -என்கிறார்

அமர்ந்த செய்கை உன் மாயை –
ஒருவகையான பிரயோஜனத்தையும் விரும்பாமலே கிட்ட வேண்டும் செயல்கள்-உன்னுடைய ஆச்சர்யமான செயல்கள்-
அநந்ய பிரயோஜனராக தூண்டும் அவன் சேஷ்டிதங்கள் எல்லாம் –
(ப்ரயோஜன நிரபேஷமாகவே நம்மை செய்விக்கும் படி தூண்டும் அவனது ஆச்சர்யமான சேஷ்டிதங்கள் )

அறிவு ஒன்றும் சங்கிப்பன் –
இந்த ஒரு குணத்தையும் பற்றின அறிவு ஆயிற்று இவர் உடைய -சத்தா ஹேது -இருப்புக்கு காரணம்-
அதிலே ஆயிற்று இவர்க்கு இப்போது ஐயம் தொடர்கிறது –

என்னுடைய ஆர் உயிரேயோ-
நான் தரித்து இருப்பதற்கு காரணம் ஆனவனே-
தேவர்களுக்கு இனியனாய்–அசுரர் கூட்டத்துக்கு நஞ்சாய் இருக்கிற இருப்பு-
தம்முடைய இருப்புக்கு காரணமாய் இருக்கிறபடி-

———

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ ! (சீரியரேயோ) மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

நான் முயற்சி செய்து வந்து காண என்று ஒரு பொருள் இல்லை -காண் என்கிறார் –

பேறும் என்னது இல்லையே -உம் பேற்றை நீர் அடையாததால் தான் கதறுகிறேன்-சேதனன் என்பதால் –
ஞான கார்யம் -சரணாகதி -உபாயம் இல்லை -ராஜ்யஞ்ச அஹஞ்ச -பரதன் -சொல்லாது ராஜ்யம் -சொல்லுவது சேதனன்

இங்கே சீர்மை என்றது –
பிராட்டியாரோடு அல்லாதாரோடு வாசி அற அங்கீகரிக்கும் தன்மையினை –

ஆத்துமா சரீரத்துக்கு வேண்டிய ஹிதம் சிந்தனை செய்யுமது ஒழிய-
சரீரம் தன்னை தான் காத்துக் கொள்ளுவது என்று ஓன்று உண்டோ-
ஆதாரமாய் -நியமிக்கிறவனாய் -சேஷியாய் இருக்கிற நீ ஒழிய-
ஆதேயமாய் நியமிக்கப் படும் பொருளாய் -சேஷமான இது தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ளவோ –
ஆதார ஆதேய -நியந்த்ரு நியாமய – பாவங்களால் சரீர லஷணம் இந்த உலகுக்கு உண்டான பின்பு-
சிறிது அறிவும் -நீயே கடவாய் -என்கிற எண்ணத்துக்கு கண்ட இத்தனை அன்றி-
ஒரு சாதனத்தைச் செய்யக் கண்டதோ –

——–

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

இதனால் என் சொல்லியவாறோ எனின் –
காரிய நிலையோடு -காரண நிலையோடு -முக்தனான நிலையோடு
வாசி அற உன் கை பார்த்து இருக்க வேண்டின பின்பு
நான் என் கார்யத்துக்கு கடவேன் ஆதல் எனபது ஒரு பொருள் உண்டோ -என்பதனைச் சொல்லியபடி –

——–

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே ! பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

எல்லா பொருள்களும் பிரகாரமாய் இருப்பதனால் சேஷமாய்–நீ பிரகாரியாய்-
நீயே அவற்றுக்கு நிர்வாஹகன் என்னும் அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான்-
என் பாவத்தால்
அதிலும் ஐயம் கொள்ளா நிற்கிறேன் -என்கிறார்-

நாலாம் பாட்டில் ஐயப் பட்டத்துக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு
அடியாருக்கு பரதந்த்ரப் பட்டவன் என்ற தன்மையிலே ஐயப்பாட்டால்
திருவருள் செய்யாமை நம்முடைய ஆஸ்ரயணத்தில் குறையாலே என்று நினைத்து இருக்கலாம்-ஸ்வபாவ சங்கை அது –

இப் பாசுரத்தில் அவனுடைய சத்பாவத்தில் அன்றோ ஐயம்-ஸ்வரூப சங்கை இது –
பிரகாரியாய்க் கொண்டு அன்றோ அவனுடைய சத்தை-
அவன் நின்றும் வேறு பட்ட பொருள்கள் அவனுக்கு பிரகாரமாய்க் கொண்டே அன்றோ உண்டாவது-

இத்தால்
பிரியில் உலகம் அழியும் என்று நினைக்க வேண்டும்படியான
அவனது இனிமையின் மிகுதியே ஐயத்திற்கு காரணம் என்பதாயிற்று –

——–

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகணைப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

ஆத்மாவும் ஆத்மாவோடு சம்பந்தப் பட்ட பொருள்களும் ஆகிய அனைத்தும் உன் அதீனமான பின்பு
என்னால் செய்யலாவது ஒன்றும் இல்லை
நீயே பாதுகாக்க வேண்டும் -என்கிறார்-

மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நெஞ்சும் வாக்கும் செய்கையும்-
எனக்கு ஆய் இருப்பது ஒரு நானும் உண்டாக வேண்டுமே –
எல்லாம் நீ இட்ட வழக்காய் அன்றோ இருக்கின்றன-
வணங்க வேண்டும் என்ற நினைவு உண்டு-
வணங்கும் வகை அறிகின்றிலேன் –

———-

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

எல்லா பொருள்களும் நீ இட்ட வழக்கு -என்கிற ஞானத்தோடு இருக்கும் இடத்தில்-
சம்சாரத்தோடு பரமபதத்தோடு வாசி இல்லை ஆகிலும்-
இந்த ஞானத்துக்கு விரோதியான சம்சாரத்தில் இருக்க அஞ்சுகிறேன் –
இதற்க்கு தகுதியான பரம பதத்தில் என்னைக் கொண்டு போக வேண்டும் என்கிறார் –

வான் உயர் இன்பம்,மன்னி வீற்று இருந்தாய் –
நின் தாள்களை எனக்கு அருளு -இதுவே அன்றிக்கே–
நித்ய விபூதியிலே நிரதிசய ஆனந்தத்தை உடையனாய்–உன்னுடைய சேஷியாம் தன்மைக்கு உரிய வேறுபாடு தோற்ற
இருப்பதோர் இருப்பு உண்டு -அவ் இருப்பில் என்னை அழைத்து–அசாதாரணர்களுடைய கைங்கர்யத்தை எனக்குத் தர வேண்டும்

——–

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

தாம் நினைத்த படியே திருவடிகளைத் தந்து அருளின மகா உபகாரத்துக்கு பிரத்யுபகாரமாக-
இந்த ஆத்ம வஸ்துவை உனக்கு தந்தேன் என்கிறார் –
இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது-
சம்சாரத்தோடு பொருந்தாத படியையும்-தன்னை ஒழிய செல்லாத படியையும்-
தமக்குப் பிறப்பித்த நிலையைப் பிரகாசிக்கை-

தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
முன்பு இழவாலே கூப்பிட்டவர் தரித்து பிரத்யுபகாரத்தில் இழிந்ததைக் கண்டு
அதனாலே அவனுக்கு பிறந்த பௌஷ்கல்யத்தை பேசுகிறார் –

உபகாரத்தின் நினைவாலே இவர் உடைய ஆத்ம வஸ்து தாளும் தோளுமாக தளிர்த்தாப் போலே
எப்பொழுதும் ஒரே தன்மையான அவன் வடிவும் நூறு கிளைகள் ஆயிற்று

அவாப்த சமஸ்த காமனாய் இருக்கும் தன்மையும் பிரமாணத்தால் சித்தித்ததாய்-
அடியார்கள் இடம் வாத்சல்யமும் பிரமாண சித்தம் ஆனால்-அப்படியே கொள்ளுமத்தனை அன்றோ –

எனக்கு உவகையைப் பிறப்பித்து-அந்த உவகையைக் கண்டு அதனாலே தான் இப்படி-
விரிந்தவன் ஆவதே -என்று கொண்டாடுகிறார் –

——–

பெரிய வப்பனைப் பிரம னப்பனை உருத்திர னப்பனை முனிவர்க்
குரிய வப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

முனிவர்க்கு உரிய அப்பனை என்றதனால்
அடியார்க்கு பரதந்த்ரப் பட்டு இருக்கும் தன்மையை சொல்லுகிறது-சாமீப்யம் –
ஸ்வ பாவம் சங்கை உரிய சேஷி என்பதால் தீர்ந்தமை -பெரிய அப்பன் இத்யாதியால் ஸ்வரூபம் சங்கை தீர்ந்தது –

ஸ்வரூப சங்கை தீர்ந்தமையை ஸ்பஷ்டம்
ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸ்வ பாவ சங்கை அஸ்பஷ்டம்
பரம சேஷீ
உபய பாவனையில் இல்லாத சனகாதிகளுக்கு அசாதாரணம் -உரிய விசேஷணம்
இதனால் ஆஸ்ரித பரதந்த்ரன்
அவர்களுக்கு உரிய -பாரதந்த்ரம் காட்டுபவன்-

——————–——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading