ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
உபய விபூதி நாயகன் -நித்ய ஸூரி நாயகன் -ப்ரஹ்மாதிகளும் ஆஸ்ரயிக்கும் படி –-நம் இறை -மநுஷ்யர்களுக்கும் ஸ்வாமி அன்றோ அவனே உலகு அளந்தான் -உலகமாகத் தொட்டு
வேய் மூங்கில் -குத்தும் இடமும் இல்லாமல் முழுவதும் அளந்தவன் அன்றோ-தாயவன் -தாவி அளந்தவன்-பரத்வ வாசகம் முதல் மூன்று அடிகள்-ஸுலப்யம் அடுத்து -கண்ணனாக ஊராகத் தொட்டு
பெரியவன் எளிமை சொல்ல முடியுமோ -வாசகம் செய்வது நம் பரமோ என்கிறார் –பரமே -எதிர்மறை ஏகாரம் -நம் பரம் அல்ல-இரண்டே அடியால் -பிரிவினை ஏகாரம்-தோன்றிற்று இறந்த காலம் தொழில் பெயர் -வந்து அவதரித்த படியை –-இரண்டாம் வேற்றுமை -தோன்றின படி என்றபடி–துறை
தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —-பிறந்தவாறும் -5-10-இதன் விவரணம்
கிருஷ்ண அவதாரத்தில் சரணாகதி-நோற்ற நான்கும் -முதல் மூன்றும் அர்ச்சையில் சரணாகதி
அதி ஸூலபனாக அவதரித்தவன் அன்றோ-
அவதாரிகை –பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் -என்று
இவள் சொன்ன அநந்தரம்-(கற்கின்ற -வாசகம் -வர்த்தமானம் -நிகழ் காலம் -வேங்கடம் என்றே அப்யசிப்பாளே-மயங்கிய நிலையிலும் -தேறியும் தேறாமலும் இதே தானே வாசகம் இவளுக்கு )திருத் தாயார் (செவிலித்தாயார் )அத்தை அநுபாஷிக்கையாலே – அத்தைக் கேட்டு –பிராட்டியான தசை போய் தாமான தசையாம் படியாய் தரித்தார் –(இது இரண்டு பாசுரங்களுக்கு நடுவில் உள்ள நிலை
திருத் தாயார் சேர்த்து வைப்பாள் என்று உணர்ந்து தரித்தார்-மீண்டும் தோழி பாசுரமாக இருப்பதால் இது நடுவில் உள்ள அவஸ்தை என்றபடி )இவர் தம்மை தாம் உணர்ந்தால் இவர்க்குப் பாழி கிருஷ்ணாவதாரம் இறே –-அங்கே புக்கு -எத்திறம் -என்கிறார் – தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்கு கூறல் —
இப்படி இவளுடைய பிராப்தி த்வரையைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள் உபய விபூதிக்கும் நாயகனான மேன்மையை யுடைய ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஸூலபனாகைக்காக கிருஷ்ணனாய் வந்து அவதரித்த பிரகாரம்-வாஸா மகோசரம் ( மொழியைக் கடக்கும் பெரும் புகழான்) அன்றோ என்று அவனுடைய ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த பிரகாரத்தை வரைந்து தோளிலிலே விரைந்த தலைமகனைக் குறித்து அவன் பெரியவனே யாகிலும் நமக்கு எளியனாய் வரும் காண் என்று
தோழி நாயகனுடைய சீலம் புகழ்ந்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-பெருமாள் மலையோ திருவேங்கடம் -என்று இவள் சொன்ன பாசுரமாகத் திருத்தாயார் அநு பாஷித்த இத்தைக் கொண்டு பிராட்டியான தசை போய் தாமான நிலையானாம் படி தரித்தார்-இவர் தம்மைத் தாம் உணர்ந்தால் பின்னை இவர் இழியும் துறை ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் இறே அங்கு புக்கு எத்திறம் -என்கிறார்
வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்து உலகம் காத்து அளிக்கும் பேர் அருட் கண்ணா உன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் -திறம் தவிர்ந்து
சேர்ந்து அனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே வைகு–50–கீழ்-ஸ்தான த்ரயத்திலும் தம் அபேஷிதம் கிடையாமையாலே ஸ்ரீ அர்ச்சா ஸ்தலங்களிலே ஆஸ்ரிதர் நினைவுக்கு ஈடாக ஆலோக ஆலாப ஆலிங்கநாதிகளான அனுபவ விசேஷங்களை வுபகரித்து அருளக் கடவோம் அல்லோம் -என்று அவன் சங்கல்ப்பித்து அருளுகையாலேயாய் இருக்கும் நம் அபிமதம் சித்தியாது ஒழிந்தது-அவன் சங்கல்பம் குலையும்படி அங்கு நிர்பந்திக்கக் கடவோம் அல்லோம் – ஆஸ்ரிதர் நினைவு அறிந்து முகம் கொடுத்த அவதாரத்தில் செல்லுவோம் -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலே அனுபவிப்பதாகச் செல்ல அதுவும் கை கழிந்து தாம் பிற்பாடராய் அத்தாலே நொந்து அவ் வவதார குண சேஷ்டிதங்களை யாகிலும் அனுசந்தித்து தரிப்போம் என்று பார்த்த இடத்தில் அதுவும் விஸ்லேஷ தசையில் அனுசந்திக்கையாலே சைதில்யத்தை விளைக்க நான் தரித்து நின்று உன் குண சேஷ்டிதங்களை அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிற -பிறந்த வாற்றில் அர்த்தத்தை பிறந்து உலகம் காத்து அளிக்கும் -என்று அருளிச் செய்கிறார்–தாம் தரித்து நின்று அனுபவிக்கும் பிரகாரம் பண்ணி அருள வேணும் என்று அர்த்தித்த-ஞானாதி குணங்களை யுடையரான-ஸ்ரீ ஆழ்வார் உடைய பரஸ்பர-சத்ருசமாய்-பொருந்தி இருக்கிற திருவடிகளிலே –மனசே தங்கிப் போரு-அவருக்கு நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஆனாப் போலே உனக்கும் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே பிராப்தம் என்று சென்று அங்கேயே தங்கிப் போரு-
வாசகம் செய்வது நம் பரமே–எத்திறம் -என்று மோஹித்து கிடக்கும் இதுக்கு மேற்ப்பட பாசுரம் இட்டு சொல்லுமது நம்மால் செய்யவாவது ஒன்றோ –என் தான் –-பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது ஒழிகிறது என் என்னில் –தொல்லை வானவர் உண்டு –யத்ர ருஷய ப்ரத்ம ஜாயே புராண -என்கிறவர்கள்-(முன்னில் முன்னவர் அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்ய ஸூரிகள் ) அவர்களுக்கு நிர்வாஹனானவன் –ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே -என்கிறார் –
வேதங்களோடு வைதிக-புருஷர்களோடு வாசி இல்லை ஆயிற்று பாசுரம் இட்டு சொல்ல மாட்டாமைக்கு வேதங்களும் ஆநந்த குணத்தை சொல்ல புக்க மாத்ரத்திலே இறே – யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டது –தொல்லை வானவர் தம் நாயகன் -வாசகம் செய்வது நம் பரமே-நாயகர் எல்லாம் தொழுமவன் -வாசகம் செய்வது நம் பரமே-ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் -வாசகம் செய்வது நம் பரமே-ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று -வாசகம் செய்வது நம் பரமே நம் மிறையே-வாசகம் செய்வது நம் பரமே என்று தனித் தனியாகவும்—தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே-வாசகம் செய்வது நம் பரமே சேர்த்தும் அந்வயிக்கலாமே –
தஸ்ய தீர பரிஜானந்தி யோநீம் –தஸ்ய யோநீம் –அகர்ம வச்யனாய் இருக்கிறவன் – பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க –வந்து பிறந்த-நீர்மையை –தீர–தீமதாமக்ரேசராய்-அது தன்னில்-(நீர்மையில்) இழிந்து அறியப் போகாமையாலே –அத்தை-பரிஜானந்தி யோநீம் – சுற்றும் வந்து
ஆழங்கால் படா நிற்ப்பார்கள் –சர்வஞ்ஞனான தான் சொல்லிலும் –-ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்றும் –
பரம்பாவம் -என்றும் -சொல்லும் இத்தனை –இவருக்குத் தானே எத்திறம் என்று மோஹித்து கிடக்கை
பிரகிருதி (ஸ்வ பாவம் )இறே –ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:-த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9--எனது தெய்வத் தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.–அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,அறிந்து கொள்ளாமல்,புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்றுமனிதனைப் போல பிறப்புள்ளவனாக கருதுகின்றனர்.–
தொல்லை வானவர் தம் நாயகன் –-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு ஆனவன் – நாயகர் எல்லாம் தொழுமவன் –(விரஜைக்கு )இவ்வருகிலாக்கரான ப்ரஹ்மாதிகளும்-சதுர் தச புவனத்துக்கும் கடவோம் – என்று இருக்கும் அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள் –பிறவாதவராய் இருக்கிறவர்கள் இறே -பிறக்கிற ஈஸ்வரனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் –
(நியமன சாமர்த்தியம் உள்ளவன் என்பதால் கண்ணன் என்று சொல்லாமல் ஈஸ்வர பத பிரயோகம் )
மனுஷ்யர் கண்ணுக்கும் கூட தோற்றாதவர்கள் – ராவண வத அனந்தரத்திலே-வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் –வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்தானே -தனது இச்சையால் பிறக்கும் ஈஸ்வரனை பிறக்காத ஈஸித்வயர்கள் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்-இப்படிச் சேராச் சேர்க்கை வாழி
நரர்கள் கண்ணுக்குத் தோற்றாமல் வானரர்களுக்கு தோற்றும் படி உண்டே-
ஞாலம் இத்யாதி –பூமிப் பரப்பை அடைய ஓர் கோல் குத்தும் விடாதே இரண்டடியால்-அளந்து கொண்டவன் –துரியோத நாதிகள் பாண்டவர்களுக்கு ஒரு கோல் குத்து நிலமும் விடோம் -என்று
அபிமானித்ததால் போல் ஆயிற்று – இவனும் இந்த்ரனுக்காக மகா பலி இடம் ஒரு கோல் குத்து-நிலமும் விடேன் என்றபடி –இரண்டே அடியால் தாயவன் – மூவடியை இரந்து ஓர் அடியால் அவனை சிறை-இட்டு வைக்கைக்காக இரண்டு அடியால் அளந்து கொண்டவன் –ஆய்க் குலமாக வந்து தோன்றிற்று –பூமிப்-பரப்படைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டவன் –தன் காலின் கீழே துகை உண்ட ஒரு-பதார்த்தத்துக்கு தான் புத்ரனான இது – நம்மால் பாசுரம் இட்டு சொல்லலாவது ஓன்று அன்று இறே –ஆய்க் குலமாய் –சம்சாரிகளில் ஒருவனுக்கு அல்பம் விவேகம் உண்டானால் – பால்யேன திஷ்ட்டா சேத் -என்று அபிஜன வித்யா வ்ருத்தாதிகளாய் வந்த அபிமானத்தை பொகடா நின்றான் இறே –(ப்ரஹதாரண்யம் சொல்லுமே-தஸ்மாத் பாண்டித்யம் நிர்வித்யே –மறைத்துக் கொண்டு இருக்கக் கடவன் )-அல்பம் விவேகம் உண்டாய் இருக்கிற இவன் அகப்பட இத்தை பொகடா நிற்க –
சர்வஞ்ஞனான தான் பரத்வத்தையும் கால்கடைக் கொண்டு இக்குல அபிமானத்துக்கு அவ்வருகு ஓன்று அறியாதனாய் வந்து பிறந்தான் –அர்த்தித்தோ மானுஷ்ய லோகே –ஜஜ்ஞ்ஞே விஷ்ணு சநாதன-என்கிறபடியே –தன்னைப் பற்றினாரும் பழையருமாய் பிறவாதருமாய் இருக்க அவன் வந்து பிறந்த
இதுக்கு பாசுரம் இடப் போமோ –வந்து தோன்றிற்று –ஆவிர்பூதம் -என்னக் கடவது இறே –
(கிழக்குத் திக்குக்கும் சூரியனுக்கும் உள்ள சம்பந்தம் போல் இவனுக்கும் கர்ப்பத்துக்கு சம்பந்தம் )இரண்டே அடியால் தாயவனாய்-நம் இறையாய் –ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது-
நம் பரமே -என்று அந்வயம் –வேயகமாயினும் –வேய் -என்று மூங்கில் கோலை சொல்லுகிறது –
அகம் -உட்பட்ட அளவாய் –கோல் குத்தும் -என்றது-தாயாரும் அநு பாஷித்து – இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் -என் சிந்தித்தாய் -அவனைக் கேட்டு கூட்டுகிறாள் என்று தேறி இருந்து தானான தன்மை பிறந்து வேங்கடத்தாயன் படியில் ஈடுபடுகிறார் –
அவன் ஸுலப்யன் என்று சொல்லி தோழி தலைவியை ஆசிவசிப்பிக்கிறாள்
வாசகம் செய்வது நம் பரமே-யதோ வாசோ நிவர்த்தக்கே -என்று வேதங்களே மீண்டனவே –
வேயகமாயினும்-ஒரு மூங்கில் நடும் சிறு இடங்களையும் விடாமல் அன்றோ அளந்தான்
இரண்டே யடியால்-தாயவன்–ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக என்னா-மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் –என்றபடி இரண்டு அடிகளாலாயே அளவிட்டு முடித்தவன் –-ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று–அரசர் குலத்திலே ஒருத்தி மகனாய் வந்து பிறந்து இடையர் குலத்திலே-ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த எளிமை -வாசகம் செய்வது நம் பரமே–ஆஸ்ரித ஸூலபனாய் கண்ணனாய் வந்த நீர்மை யுடையவன் -உம்மை விரைந்து வந்து சேர்த்துக் கொள்வான்-இந்த நீர்மை -எத்திறம் என்று மோஹிக்கப் பண்ணும் -அது ஒழிய புகழ சாத்தியப் படுமோ –
வாசகம் செய்வது நம் பரமே-அவன் மேன்மைக்கு வேதங்களும் அகப்படப் பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமல் மீளா நிற்க அவன் நீர்மைக்குப் பாசுரம் இட்டுச் சொல்லுகை நம் தலையிலே கிடப்பது ஒன்றோ–தொல்லை வானவர் தம் நாயகன்-நீர்மைக்கு ஊற்றான மேன்மையைச் சொல்லுகிறது
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம் -என்று பழையவரான நித்ய ஸூரிகளுக்கு அசாதாரண சேஷி யானவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லிற்று-மேல் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-நாயகர் எல்லாம் தொழுமவன்–ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே
இந்த்ராதிகளான லோக பாலாதிகளோடே வாசியற ஸ்வ அதிபத்ய ஸித்யர்த்தமாகத் தொழப்படுமவன்–ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை-ரக்ஷணீயமான விபூதி எல்லாவற்றையும் குழற் குத்தும் சோராத படி–இரண்டே யடியால் தாயவன்-அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இரண்டும்
இரண்டு திருவடிகளாலும் போம்படி அளந்து கொண்டவன்–இப்படி-1-ஸூரி போக்யனுமாய்-2-ப்ரஹ்ம ருத்ராதி ஸேவ்யனுமாய்-3-நிருபாதிக பந்துவுமானவன்-4-ஆஸ்ரிதற்கு பவ்யனாகைக்காக–ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று–இடைக் குலத்தை யுடையனாய்க் கொண்டு ஆவிர் பவித்தது–நம்மிறையே-நமக்கு ஸ்வாமி யானவன்–நம் இறை வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே
என்று அந்வயம்–இத்தால் பிராப்தி த்வரையாலே கலங்கின இவரை ஸூஹ்ருத்துக்கள் ஸுலப்ய அதிசயத்தைச் சொல்லி ஆஸ்வஸிப்பித்த தாயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வாசகம் செய்வது நம் பரமே எத்திறம் -திருவாய் -1-3-1- என்று
மோஹித்திக் கிடக்குமத்தனை போக்கி பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது–என் தான் பாசுரம் இட்டுச் சொல்லப் போகாமை என் என்ன–தொல்லை வானவர்-நித்ய ஸூரிகள் உண்டு- யத்ர ர்ஷய பிரதமஜா யே புராணா -(அச்சித்ரம் -92-)என்கிறவர்கள்–தம் நாயகன்–அவர்களுக்கு நிர்வாஹகனானவன்-ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் சேருவது நம் பரமே -என்கிறார்-வேதங்களோடு
வைதிக புருஷர்களோடு வாசியில்லை யாயிற்று பாசுரம் இட்டுச் சொல்ல மாட்டாமைக்கு வேதங்களும் ஆனந்தாதி குணங்களைப் பேசப்புக்க மாத்திரத்திலே இறே —யதோ வாஸோ நிவர்த்தந்தே -(தைத்ரியம் ஆனந்த வல்லி )என்றது–தஸ்ய தீரா பரிஜாநந்தி யோநிம் -(புருஷ ஸூக்தம் )அகர்ம வஸ்யனானவன்
பிறக்கைக்கு ஹேதுவான கர்மம் இன்றிக்கே இருக்க வந்து பிறந்த நீர்மையை-தீமதாம் அக்ரேசரராய் இருக்குமவர்கள் அது தன்னிலும் இழியப் போகாமையாலே அத்தைச் சுற்றும் வந்து ஆழங்கால் படுகிறார்கள்-ஸர்வஞ்ஞனான தான் சொல்லும் போதும்-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந-ஸ்ரீ கீதை -4-9-எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.–அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய: பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்-ஸ்ரீ கீதை -7-24-அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்,-அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பர நிலையை,-அறிந்து கொள்ளாமல்,-புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை,கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று மனிதனைப் போல பிறப்புள்ளவனாக கருதுகின்றனர்.–என்றும் சொல்லும் அத்தனை-இவருக்குத் தான் எத்திறம் என்று மோஹித்துக் கிடக்கை ப்ரக்ருதி இறே–தொல்லை வானவர் தம் நாயகன்-நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகு வானவன்–நாயகர் எல்லாம் தொழுமவன்-இவ்வருகு ஆக்கரான நாயக்கர் உண்டு -ப்ரஹ்மாதிகள் சதுர்தச புவனங்களுக்கும் கடவோம் என்கிற அபிமானத்தைப் பொகட்டு வந்து தொழா நிற்பர்கள்-பிறவாதாய் இருக்கிறவர்கள் இறே பிறக்கிறவனை வந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்-மனுஷ்யர் கண்ணுக்கும் கூடத் தோற்றாதவர்கள்
ராவண வத அநந்தரத்திலே வந்து ஸ்தோத்ரம் பண்ணினார்கள் இறே–ஞால முற்றும் வேயகமாயினும் சோரா வகை-பூமிப் பரப்பு அடங்க ஒரு கோல் குத்து நிலம் விடேன் என்று அபிமானித்தால் போலே யாயிற்று -இவனும் இந்திரனுக்காக மஹா பலிக்கு ஒரு கோல் குத்தும் விட்டேன் என்றபடி–இரண்டே யடியால் தாயவன் மூன்று அடியை இரந்து இரண்டு அடிக்காக்கி ஓரடிக்காக அவனைச் சிறை யிடுகைக்காக இரண்டு அடியாலே யாயிற்று அளந்து கொண்டது—ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று
இப்படிப் பூமிப் பரப்பு அடங்கலும் தன் காலின் கீழே இட்டுக் கொண்டவன் காலின் கீழே துகையுண்ட பதார்த்தத்துக்குத் தான் புத்ரனாய் வந்தவன் இது நம்மாலே பாசுரம் இட்டுச் சொல்லலாவது ஓன்று அன்று இறே–ஆய்க்குலமாய்— ஸம்ஸாரிகளிலே ஒருவன் அல்ப விவேகம் யுண்டானால்-பால்யேந திஷ்டா ஸேத் -(ப்ருஹதாரண்யம் -5-4-) என்று அபிஜன வித்யா விருத்தங்களால் வந்த அபிமானத்தைப் பொகடா நின்றான் இறே அல்பம் விவேகியாய் இருக்கிறவன் உட்பட பொகடா நிற்க ஸர்வஞ்ஞனான தான் அபஹத பாப்மத்வாதிகளைக் காற் கடை கொண்டு இக் குல அபிமானத்துக்கு அவ் வருகு ஓன்று அறியாதானாய் வந்து பிறந்தான்–ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந –அயோத்யா -1-7-என்றபடியே தன்னைப் பற்றினாரும் பழையாரும் பிறவாதாருமாம் படி இருக்கிறவன் வந்து பிறக்குமதுக்குப் பாசுரம் இடப் போமோ-வந்து தோன்றிற்று நம்மிறையே ஆவிர் பூதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-2-2-என்னக் கடவது இறே–இரண்டே அடியால் தாயவனான நம் மிறை ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று வாசகம் செய்வது நம் பரமே-
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம் வாசகம் செய்வது நம் பரமே-வாய் அவனை விட்டுச் சொல்லுவது நம்மால் தகுமோ அவன் பர ஸானத்தைக் கேளாய்–தொல்லை வானவர் தம் நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன்—யத்ர பூர்வே -என்னப்பட்ட விண்ணவர்க்கு எல்லாம் நித்ய நிர்வாஹக சேஷி யானவன் சில ஒவ்பாதிக சேஷியான விதி சிவ இந்த்ராதிகளால் தொழப்படுமவன்-இப்படிப்
பரனே ஸூஸீலனுமானவனே -என்கிறார்கள்-ஞால முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் பூ லோக உபரித லோகங்களில் ஒரு கோல் குத்து நிலமும் விடாதபடி க்ருத்ஸ்நத்தையும் இரண்டு அடியால் அளந்து கொண்டவன்-இப்படியான நம்மிறையே அவனே
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று – இடைக்குலத்திலும் ஆவிர் பவித்தான்-இவனுடைய-1- பரத்வ 2-ஸுசீல்ய 3-ஸுலப்யங்கள் வாசா -இவ்வளவு என்று நம்மால் சொல்லப் போமோ
தாத்பர்யம்--கீழே திருவேங்கடம் என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் சொல்லக் கேட்டு மோஹம் தெளிந்து தாமான தன்மை அடைந்து தமது பாழியான கிருஷ்ண அவதாரத்தில் இழிகிறார்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான அபரிச்சின்ன வைபவம் உள்ள நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன்
இந்த விபூதியில் ஆக்கரான ப்ரஹ்மாதிகளும் வணங்கும் ஸர்வேஸ்வரன் ஓங்கி உலகு இரண்டு அடியால் அளந்த நமது ஸ்ரீ யபதி நமது இறை -ஸ்வாமி -மிதுன சேஷித்வம் தானே
இப்படியுள்ள தனது மேன்மையும் பாராதே இடைக்குலத்தில் வந்து பிறந்த ஸுலப்யம் சொல்லப் போமோ முடியாதே என்றபடி
5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்-
திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று
மநோ ரதித்துக் கொண்டு போக, கால் நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்;
இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க,
அது தானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க;
எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று
குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
மோஷத்துக்கு சரணாகதி பண்ண வில்லை -தரிக்கவே -இது -வேற நான்கும் வேற ரீதியில் –
கூரத்தாழ்வானுடைய நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச் செய்கிறார்.
‘குணாநுபவம் பண்ணியாகிலும்’ என்ற இவ்விடத்திலே
“கோவிந்தன் குணம் பாடி —- ஆவி காத்திருப்பேனே” என்னும் நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.
இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்;
அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யா நிற்பர்கள்,
இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியா நிற்பர்கள்;
அவர்களுக்குத் தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம்,
இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள்.
‘அவன் அடியாலே நம் பேறு’ என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது.
“இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று,
நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே,
“நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவ:
ஜலாந் மத்ஸ்யாவிவ உத்ருதௌ:-என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 31.
லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளைய பெருமாள்.
“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது,
என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று,
திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று,
“ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:பக்திஸ்ச நியதா வீர
பாவோ நாந்யத்ர கச்சதி”-என்பது, ஸ்ரீராமா. உத். 40 : 16.
இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர்.
அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்;
விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே.
நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு,
‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில்,
அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை,
சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும்
விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய,
குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக்
கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே,
“கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன,
‘ஆழ்வான் திரு மதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு
உடையவர் ஓடிச் சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்குப் பரம பதத்தே போக வேண்டிற்றோ’ என்ன,
அடியேன் சம்சாரத்திலே அடிக் கொதிப்பாலே மறந்தேன்’ என்ன,
‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சில நாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திரு வாசலளவும் சென்று,
‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக் குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற
சரிதம் அநுசந்திக்கத் தகும். என்றது,
நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி.
‘அதி நிர்ப்பந்தம் செய்யக் கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.
“ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.
என்று, “அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய
கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்து கொண்டார்” என்னும்
கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.
இவ்வாழ்வார்கள் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள்,
இதற்குக் காரணம் என்’ என்று பட்டரைக் கேட்க,
ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ;
அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே,
‘ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே
வயிறு எரிதலாலே யாயிருக்கும்’ என்று அருளிச் செய்தார்.
இனித் தான், இராமவதாரத்தில், தமப்பன் சம்பரனனாய்- கொன்றவனாய் – ஏக வீரனாய் இருப்பான் ஒருவன்;
பிள்ளைகள் தாம் ஆண் புலிகள், குடி தானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி; இவை எல்லாம் மிகையாம்படி,
குணத்தாலே நாடுகளை யெல்லாம் ஒருமார்வு எழுத்தாக்கிக் கொண்டிருப்பர்கள்,
ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை; இங்கு அங்ஙன் அன்றிக்கே,
தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக் கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே;
ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்;
ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படி யாயிற்று இவன் தன் படிகள் இருப்பன;
அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்;
அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள்,
அவ்விழவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள்.
அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடி யன்றோ இது, ‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்;
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்களெல்லாம் – கரந்துருவின்
அம்மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து.-என்பது, பெரிய திருவந்தாதி. 82.
புலையாம் பிறவி பிறந்தென் செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னையொடும்
தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.-என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.
மாயா மிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடி சுட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
தழைகளை முறித்துப் பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு,
‘பாவியேன்! அன்று உதவி அத் திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேன்,
ஒரு பயனுமின்றியே கழிந்தனவே யன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ.
இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி.
‘திருநீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ இவர்.
“தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணியார் மேனியோடு
என் மனம் சூழ வருவாரே.”- என்பது, திருவாய். 8. 3 : 6.
சங்கர மங்கலம் -பெண்மணி திரு வல்ல வாழ் வந்து -ஏகாதசி விரதம் -இருந்து த்வாதசி -சேவிக்க வருவாளாம்
தொலகாசுரன் தடுக்க -பிரமச்சாரி -வேஷம் கொண்டு அழித்து-மூன்று கூறாக்கி
தலைப்பகுதி – -தலையாறு -இடைப்பகுதி -கால் பகுதி -வெவேற இடங்களில் போக -இவன்
பிரமச்சாரி -அங்கி அவிழ -பெண் மணி -திருமார்பில் பிராட்டியைக் கண்டு -திருமார்பை மறைத்து –
திரு இருப்பைக் காட்ட -திரு வல்ல வாழ் -திரு வாழ் மார்பன் –திருவல்லா –என்றே இங்கே பழக்கம்
கண்ட கர்ணன் தபஸ் இருந்த திவ்ய தேசம் இது என்பர்-
கிருபையைக் காட்டி அருளினான் இங்கு –
‘இவர் அவனுடைய அவதாரங்களையும் உலகைப் படைத்தல் முதலான வியாபாரங்களையும்,
“தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்த” – பெரியாழ்வார் திருமொழி, 1. 7 : 11.-என்கிறபடியே,
அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும் அடி யிட்டு அப்படி வளர்ந்தருளின
கிருஷ்ணாவதாரத்தையும் அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர்,–
1-தரித்து நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று
ஆழ்வான் பணிக்கும். -தரித்து நின்று அநுசந்திக்க–மானஸ அனுபவம்
அன்றியே,
2-‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய,
அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி
செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.–
உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்
அங்ஙனம் அன்றிக்கே,
3-“சர்வேஸ்வரன் கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தருளா நின்றான்’ என்று கேட்டு,
‘அங்கே மநோ ரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று தெற்குத் திருவாசலாலே சென்று புக,
‘இப்போது இங்ஙனே வடக்குத் திரு வாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் சோதி யேற எழுந்தருளினான்’ என்று
கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று
பிள்ளான் பணிப்பர் என்று அருளிச்செய்வர்.-பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே -வருத்தம் —
கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்–கடாக்ஷித்து ஸ்ருஷ்டிகள்
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–கடாக்ஷித்து பகைவர்களை அழியச் செய்ய
“நின்று நின்று நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து எழுகின்றது ஆழ்வான் நிர்வாகம்.
எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.
“செய்து போன மாயங்களும்” என்றதிலே நோக்கு, பிள்ளான் நிர்வாகம்.
கோ கோபிரளர் மக ரிஷிகள் –வாசு தேவர் மூலவர் -சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் உத்சவ சேவை –
இருந்த இடமே- 32-சேவை பெற்றார்களே -மன்னார்குடி சேவை-
பத்தாம் திருவாய் மொழியில் இப்படி திரு வல்ல வாழிலே யநுபவிக்க ஆசைப்பட்டு அது கிடையாமையாலே ஆர்த்தராய்
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்கிறபடியே
அவனுடைய ஸர்வ அவதார ஸித்தமான குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து தரிக்கப் பார்த்து –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதாராதி வ்ருத்தாந்தத்தையும்
அபிமத விஷய வியாபாராத்தையும்
பால சேஷ்டிதங்களையும்
திரிபுர வாசிகளான அஸூர வர்க்கத்தினுடைய அந்தர் பேதத்தையும்
அதி மானுஷ சேஷ்டிதங்களையும்
ஸ்த்தித் யாஸன சயநாதி வியாபாரத்தையும்
ஆந்தரமாகவும் பாஹ்யமாகவும் பிரகாச அப்பிரகாச கரத்வத்தையும்
சர்வாதிகத்வ ஸூ சகமான ஸ்ருஷ்ட்டி வ்யாபாரங்களையும்
அர்த்தியாயும் தன் அபேக்ஷிதம் தலைக் கட்டிக் கொள்ளும் ஆகாரத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் யரும் தொழில் செய்து அபகரிக்கும் படியையும்
அனுசந்தித்து அவை தானே அபிராப்தி தசையில் சையில்யாவஹம் ஆகையால் ஆர்த்தராய்
உன்னுடைய சேஷதீதாதிகளை நான் நிலை நின்று அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்று அபேக்ஷித்து
அவன் திருவடிகளில் பிறந்த உபாய விசுவாசம் யாவத் பிராப்தி அனுவர்த்திக்கும் படியை அருளிச் செய்து
இப்படி உபாய பூதனுடைய ஸ்வரூப யாதாம்யத்தை நிரூபித்துத் தலைக் கட்டுகிறார் –
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-
பிறந்தவாறும் – தாய் தந்தையர்கட்குக் காற்கட்டு அறும்படி யன்றோ பிறந்தது. -பாசம் அறுத்து —-தன்னைப் பெற்றவர்களுடைய பந்தத்தை அறுத்துக் கொண்டு வந்து பிறப்பாரும் உளரோ.‘இவன் அன்றோ நமக்குக் காற்கட்டு ஆனான்’ என்றிருந்தார்கள் அவர்கள்;
அது பொறுக்க மாட்டாமல், ‘உங்களுடைய கட்டு நான் பொறுக்க மாட்டேன்’ என்று விட்டான்.தந்தை காலில் விலங்கு அற அன்றோ வந்து தோன்றிற்று-நானும் பிறந்து அர்ஜுனா நீயும் பிறக்க வேண்டுமோ –பிள்ளாய்! பிறக்கிற போதும் ஒரு விளக்கு எரிந்தால் ஆகாதோ, தானே விளக்காக அன்றோ பிறந்தது.-ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கன்றோ.-கர்மங்கட்குக் கட்டுப்படாதவனான தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவரோடு ஒக்கப் பிறப்பது,-பிறந்தால் -ஆஸ்ரித சம்ரக்ஷணமே -அடியார்களைப் பாதுகாத்தலே தனக்குப் பிரயோஜனமாக இருப்பது,-அவர்கள் ஆபத்துப் படுங்காலமே தனக்குப் பிறக்கைக்கும் காலமாவது,-பிறவா நின்றால் தன் ஐஸ்வர்யத்தில் ஒன்றும் குறையாமற் பிறப்பது,-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை -பிரகிருதி சம்பந்தமில்லாத திருமேனியை இதர சஜாதீயமாக்கா நிற்பது,-தன் பிறப்பை அநுசந்தித்தாருடைய பிறவிகள் போகும்படியாக இருப்பது, இவை யெல்லாவற்றையும் நினைக்கிறது. – நமக்காக இவர்கள் பிணை பட்டுச் சிறையிருக்கும்படி இவர்களுக்கு இங்ஙனே பிறப்பதே!’ என்று ஈடுபடா நிற்பனவான படிகளை யெல்லாம் நினைக்கிறது.-பிறந்தார் பால் குடித்தார் நினைத்தால் பிறக்காமல் பால் குடிக்க வேண்டாமல் போவதே –-அவதார ரகசியம் நான்கு ஸ்லோகங்கள் -ஆறு விஷயங்கள் –-1-மெய் 2-பெருமைகள் குறையாமல் -3-சுத்த சத்வ மயம்
4-இச்சையால் பிறக்கிறான் -5- சாது சம் ரஷணம் -தர்ம சம்ஸ்தாபனம் -6-துஷ்ட நிக்ரகம்
அவளுக்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவு படுகையாலும்,
தன்னைக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் பிறந்தவாறும் என்கிறார்.-பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர்,
அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி.
‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ!
ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க,
தாய் மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே,-ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ-
வளர்ந்தவாறும் – வளர்ந்தபடியை அநுசந்தித்தால் பிறந்தவாற்றிலே கால் வாங்கி இளைப்பாற வேண்டும்படி யன்றோ இருப்பது.-பிறக்கிற போது சிறைக் கூடத்திலே தான் பிறந்தால், வளருகிற போது நாட்டாரைப் போன்று வளரத்தான் பெற்றதோ.
விபவத்தில் ஓர் அந்தர்யாமி பட்டது அன்றோ பட்டான் –பூதனை முதலாயினோர்கள் உயிர்கள் மாளவும், யசோதை முதலானவர்களுடைய சிநேகம் வளரவுமன்றோ வளர்ந்தது.-இவன் கால் நெடுக நெடுக, பகைவர் உடலும் மாண்டது, அநுகூலர் உடலும் மாண்டது;-திறங்கள்’ என்றது, தூது சென்றும், தேரை ஓட்டியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகலை இரவாக்கியும், எதிர்கள் உயிர் நிலைகளைக் காட்டிக் கொடுக்கை தொடக்கமானவற்றை யெல்லாம் சொல்லுகிறது.நிறந்தனூடு புக்கு--தோல் புரையே போமதன்று, மர்மத்திலே நலிகிறபடி.-
உன்னை என்று கொல் சேர்வதுவே – நான் தரித்து நின்று அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேண்டும்.என்கிறார். –-மானஸ -கூரத் ஆழ்வான் நிர்வாகம் –அன்றிக்கே, சேருகையாவது இரண்டு தலையும் சேருகையாய், நான் அநுசந்தித்து நைகின்றவனாதல் தவிர்ந்து உன்னைப் பிரியாதபடி கிட்டப் பெறுவது என்று? என்கிறாராகவுமாம்.– காயிக -எம்பார் நிர்வாகம் –ஒரு தமிழன் -பிறந்த வாற்றாலும் என்று தொடங்கி –செய்து போன மாயங்களாலும்–உருக்கி உண்கின்ற இச் சிறந்த வான் சுடரே -என்று அவன் பக்கலிலே யாக்கி நிர்வஹித்தான்-
———
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்ன லாவன அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–5-10-2-
என்னை உன் செய்கை நைவிக்கும் – அச் செயலாகவுமாம், இச் செயலாகவுமாம், உச் செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை;-உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது.
“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப் பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்;
இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும்.
முதுவைய முதல்வா! உனைஎன்று தலைப்பெய்வனே?–
பிரவாஹா ரூபேண நித்தியமாய் -பிரளய காலத்தில் அழிந்த ஜகத்தை உண்டாக்கினவனே -அழிந்த வஸ்துவை உண்டாக்கின அருமை -உண்டோ உள்ள வஸ்துவை தரிப்பிக்கைக்கு –அழிந்த வஸ்துவை உண்டாக்கினால் போலே சிதிலனான என்னை தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ண வேணும் –உன்னை என்று கிட்டுவது -என்றுமாம்
இத் திருவாய்மொழியில், கிட்டுகைக்கு வாசகங்களான சொற்களெல்லாம், ஆழ்வான் நிர்வாஹத்திலே மானசாநுசந்தான பரங்கள் என்றும் எம்பார் நிர்வாஹத்திலே சரீரத்தாலே கிட்டுதல் என்றும் கொள்க.-
————
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-
பெய்யும் பூங்குழல் பேய் முலை உண்ட பிள்ளை--பிரதிகூலருடைய பிராணன்களும் அடியார்கள் சம்பந்தமுடைய திரவியமுமே தாரகமாக வளர்ந்தான் என்று ‘வளர்ந்தவாறு’ என்று சொன்ன இடத்தை விவரிக்கிறது இங்கு.-பிள்ளைத் தேற்றம் – ஐஸ்வர்யமான ஞானம் இன்றிக்கே, ‘தாய் முலை’ என்றும், ‘வேற்று முலை’ என்றும் அறியும் தெளிவு.
மிகச் சிறிய இளமைப் பருவத்திலும் பிள்ளைகள் முலைவாசி அறிவர்கள் அன்றோ.
இவனும் ‘தாய்’ என்றே நினைத்து உண்டான் காணும். பால்யத்தில் தெளிவு இருக்கிறபடி. என்றது,-யசோதைப் பிராட்டி முலை கொடுக்கும் போது பிரீதியினாலே செய்யும்-முக்த ஜல்பிதங்களை – மழலைச் சொற்களை-இவள் பக்கலிலே செய்தானாயிற்று.
‘பாதகர்’ என்று அறியவுமாம், அறியாதிருக்கவுமாம், பகைவர்கள் கிட்டினால் முடியக் கடவதான பொருளின் ஸ்வபாவம் இருக்கிறபடி.
செய்த நின் சிறுச் சேவகமும் – நீ சேவகம் செய்ய அடியிட்டபடியும். என்றது, அரச குமாரனாய்ப் பிறந்து, பருவம் நிரம்பி, ஆயுதப் பயிற்சி செய்து, வசிஷ்டர் முதலியவர்களைப் பின் சென்று, விஸ்வாமித்திரர் முதலியோர் பக்கலிலே அத்திரங்களைப் பெற்றுப்
பின்பே யன்றோ தாடகை மாரீசன் சுபாகு முதலியவர்களைக் கொன்றது;
அவை யெல்லாம் பருவம் நிரம்புவதற்கு முன்பே, வாயாலும் காலாலுமாயிருக்கிறபடி இங்கு. -முலை உண்டதும் சகடாசுர நிரசனமும் வாயால் வலியார்க்குத் தாயாரும் வேண்டாவாயிற்றுக் காணும். இவனைப் போன்று கால் கடியார் இலர், ஆகையாலே யன்றோ காலிலே கொடி கட்டி வைக்கிறது.
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் –பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப் பண்ணுமாறு போலே காணும் பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும் படியும்.
நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்க –-வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கிற நீ, அதற்கு மேலே கண்களும் கோட் புக்கால் பொறுக்கப் போமோ.-கோட் புக்கால்-நூதனமாக அலர்ந்தால்–வன் தாம்புகளால் புடைக்க அலந்தான் அலர்ந்தான் -பட்டர் நஞ்சீயர் சம்வாதம் –
“பிராட்டிக்குத் தகுந்தவர் பெருமாள்” என்கிறபடியே அவனுக்குத் தகுதியான கண்கள் ஆதலின் ‘உன் தாமரைக் கண்கள்’ என்கிறது.-“துல்ய ஸில வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம் ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேக்ஷணா–
நெய் யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
நெய் யைக் களவு கண்டான் என்னும் வார்த்தா பிரஸ்தாவத்திலே ஸ்நேஹ அதிசயத்தாலே தாயார் கையில் கோலை எடுத்தாள்-எதிரிகள் அஞ்சும் படி கோல் கொள்ளுமவன் கிடீர் இவள் கையில் கோலுக்கு அஞ்சுகிறான் -சத்ருக்களை அஞ்சப் பண்ணும் -ஆஸ்ரிதற்கு தான் அஞ்சும் -தாய் எடுத்த சிறு கோலுக்கு -என்ன கடவது இறே
நீ -வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும் அழகை யுடைய நீ -சர்வ சக்தியான நீ என்றுமாம்-உனக்குத் தகுதியான கண்கள் –கண்ணில் பரப்பு அடங்க நீரிலே நிறையும் படி
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–-அஞ்சி முகத்தை பாரா நிற்க செய்தே-தெரியாத படி பின்னே கால் வாங்கி நிற்கும் என்னுதல் -பேகணித்து நின்ற நிலை என்னுதல்-பூத காலத்தில் செய்து போனது என்று இருக்க ஒண்ணாத படி புக்க இடம் புக்கு என்நெஞ்சை நீராக்கா நின்றன-
———–
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக் கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு.-சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு.-காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று.-
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –-“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று
ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் – சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,
இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.
அவனுடைய சேஷத்வத்துக்கும் இவனுடைய சேஷித்வத்துக்கும் பிரமாணம் ஒரு வெள்ளம் என்கிறார் காணும்.-சிவன் சடையில் கொன்றையும் சர்வேச்வரன் அடியில் திருத்துழாயும் கூடி வந்து இழிகிறபடி.-அலகனந்தா பாகீரதி இரண்டும் கலக்கும் -முடி மலரும் திருவடி துழாயும் கலந்து இரண்டு நிறங்களில் வரும்–கண்டம் என்னும் கடி நகரே பிரமாணம்
உள்ளம் உள் குடைந்து –என் மனத்திலே புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் –ஆத்மாவைப் புக்கு அழித்து நோவு படுத்தா நின்றன.-ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.-
———-
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-
இவன் தானே சொன்னவை மறுக்க ஒண்ணாதபடியாயிருக்குமே;-இம்மலையின் முன்னே இடுங்கோள்” என்ன, அங்கே கொடுவந்து குவித்தார்கள்;-அதனைத் தான் புக்கிருந்து அமுது செய்தான். தனக்கே உரியராயிருப்பாருடைய பொருளை வேறே சிலர்க்குக் கொடுக்கையாவது,-மஹிஷீ ஸ்வேதத்தைப் பிறர்க்குக் கொடுத்த அளவே யன்றோ. அவன் தன் பரிகரத்தோடுங்கூட இதனைக் கொண்டு திருப்தனாக இருக்க, இதனைத் தான் கைக் கொண்டானாயிற்று.
எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே –-அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு.
எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி.
தரிக்க எண்ணுவார் -எண்ண சிதிலம் ஆவாரே அதனால் எண்ண மாட்டார் -மாறி மாறி அன்றோ இவர் நிலை –
இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார்.
அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இரா நின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.-
—————
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!–5-10-6-
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-திரு ஊரகம்-திருப் பாடகம் -திரு வெக்கா -இவற்றிலே நின்றபடியும் இருந்த படியும் கிடந்தபடியும்
அப்படியே ஆஸ்ரிதர் ஹிருத்யங்களிலே பிராமண சித்தமாம்படி வர்த்தித்த படியாகவும் -நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் திருத் தொட்டிலிக்குள்ளே நின்று இருந்து கிடந்த படியையும் சொன்னபடி ஆகவுமாம்-இவர் இவ் விஷயத்தில் படுகிற பாடு எல்லாம் நமக்கு இதர விஷயங்களிலே அநுபவ சித்தமன்றோ. இவ் விஷயத்தில் இன்றிக்கே ஒழிகிறதித்தனை.
நின்ற வாறும் –-இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல்,
வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்;-இருந்தவாறும்-
“பர்ண சாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும்,-கிடந்தவாறும்-
“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு-கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே;-“கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ-நின்றும் இருந்தும் கிடந்தும்’ என்று திரளச் சொல்ல அமையுமாயிருக்க, ‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்கிறார் அன்றோ,
தனித் தனியே உளுக்கினபடி.-நின்றானாகில் ‘நிலையார நின்றான்’-இருந்தானாகில், “பிரான் இருந்தமை காட்டினீர்” என்னும்படி இருக்கும்-கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” என்பர்கள்.-
நம் பெருமாள் நிற்க -பெரிய பெருமாள் கிடக்க -நம் பெருமாள் -நாச்சியார் திருக்கோலம் இருந்து-திருவல்லிக்கேணி -நின்றும் இருந்தும் கிடந்தும் -பரந்தும் -நடந்தும் -சேவிக்கலாம்-
திரு நீர் மலையிலும் நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான் –
கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்து நின்ற நிலையாதல்,-திருக் குரவைக்கு முற் ஜாமமாகப் பெண்களோடே கழகம் இருந்த இருப்பாதல்,-ஓரொருத்தர் மடியிலே சாய்ந்த படியாதல்.
அன்றிக்கே-“நிற்பதும் ஒர் வெற்பகத் திருப்பும் விண் கிடப்பதும், நற் பெருந் திரைக் கடலுள்” என்கிறபடியே,-திருமலையிலே நின்றபடியும்,-பரம பதத்திலே இருந்தபடியும், திருப் பாற் கடலிலே திருக்கண் வளர்ந்தருளின படியுமாகவுமாம்
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று ‘ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பாடா நிற்க,-‘இவை யெல்லாம் தொட்டிலிலே’ என்று அருளிச் செய்தார் எம்பெருமானார்.
தொட்டிற் பழுவைப் பிடித்துக் கொண்டு நிற்கும்படியும்,
தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும்,
அது தான் பொறுக்க மாட்டாமை சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது.
அன்றிக்கே,-போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறங்கி-சிறிய திருமடல். கண்ணி. 31.-அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும்,-அடி ஓசை பட்டவாறே வந்து இருந்தபடியும்,-நிழல் ஆடினவாறே முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தவாறும் என்றுமாம்.
போரப் பாட வல்லாராய் இருப்பார் ஒருத்தர்,வடக்கு நின்றும் பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்று-தீர்த்தவாரி உத்சவம் அன்று –
இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்துப் பெருமாளை
மத்த கஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி வசமாக்கிக் கணிசம்-சபதம் – கொண்டு,
“நாயன்தே! தேவர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருத்தன், எழு நூற்றுக் காதம் ஆறு உண்டு
தேவரைத் திருவடி தொழ வேண்டும் என்று வருகிறது; இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை செய்தருள வேண்டும்” என்ன
பெருமாளும் ‘அப்படியே செய்கிறோம்’ என்று திருவுள்ளமாய் அருளப் பாடிட்டு,
திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தளவும் செல்ல நாலு கோல் தறை திருக் கைத்தலத்திலே எழுந்தருளி
விண்ணப்பஞ் செய்வார்களை எல்லாம் அருளப் பாடிட்டு,
‘வாரீர் கோள், இவன் வந்த தூரத்துக்கெல்லாம் போருமோ நாம் இவனுக்குச் செய்த தரம்’ என்று திருவுள்ளமானார்.
இப்படியே யன்றோ நம்மிழவுகளும் திருவுள்ளத்திலே பட்டவை யெல்லாம் ஆறும்படிக்கு ஈடாக முகம் தந்தருள வல்லபடியும்.
இதுவே யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு –
ஒரு நாள் ஸ்ரீ வைஷ்ணவ வண்ணாத்தான் திருப் பரிவட்டங்களை அழகிதாக வாட்டி எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட,
போரத் திருவுள்ளமுகந்தாராய் இவனையும் கூடக் கொண்டு பெருமாள் பாடே புக்கு,
‘நாயன்தே! இவன், திருவரைக்குத் தகுதியாகும்படி இவற்றைத் தொட்டபடி-வெளுத்த படி- பார்த்தருள வேண்டும்’ என்று காட்ட,
கண்டு போர உகந்தருளி எம்பெருமானாரை அருளப் பாடிட்டு,
‘இவனுக்காக, கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்திற் செய்த குற்றம் பொறுத்தோம்’ என்று திருவுள்ளமானார்.
ஆகவே பக்தனுக்காகவும் அபக்தனுக்காகவும் செய்து அருளினார் என்பதைக் காட்டிய வாறே-அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் அன்றோ –
ஒன்று நன்கு உரையாய்-ஆத்ம ஸ்வரூபத்தின் சித்தி யன்றோ பேறு ஆகிறது. பேற்றின் பலமான கைங்கரியம் சொல்ல வேண்டாவே,-பேற்றின் அளவுமன்றோ பிரமாணம் சொல்லுவது. அதற்கு அப்பாலுள்ளது பிரமாணத்துக்கு விஷயம் அன்றே.
வாசா மகோசரம் அன்றோ அது–அப்படியே ‘உனக்கும் நானே கடவேன்’ என்று ஒரு வார்த்தை சொல்ல வல்லையே.
உலகம் உண்ட ஒண் சுடரே!-உண்டி உடல் காட்டுமே. நினைக்கை குற்றமாய் விட்டதோ. நினைவுங்கூடத் தேட்டமானால் நீயே செய்து தலைக் கட்ட வேண்டாவோ.
(நினைக்கின்றேன் என்று சொன்னதே குற்றம் -நீயே அறிந்து செய்ய வல்லை அன்றோ )
இவை, ஆபத்துங்கூட அறிவிக்க மாட்டாத சமயத்திலே நீயே அறிந்து வயிற்றிலே வைத்து நோக்கி,இந்த உபகாரத்தை இவை அறியாதொழிய ‘இது உன் பேறு’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற இருப்பான் ஒருவன் அல்லையோ.-‘உன் பேறாக ரக்ஷித்தாய்’ என்பதனை மெய்யே யன்றோ சொல்லுகிறது- மெய்யே -சத்தியமாக -சரீரமே லோகம்-
(ஜகம் சரீரமான படியால் நீயே ரக்ஷித்தாய் என்றபடி )-இங்கிதம் நிமிஷிதம் -தாவகம் -உன் செயல் எல்லாம் நைவிக்கும் –
—————
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7-
உண்மையோடு இன்மையாய் வந்து ஒண் சுடரோடு இருளுமாய் நின்றவாறும் –
எனக்கு உண்மையோடே ஒண் சுடராய் நிற்கும் மனத்தின் கண்ணே;-இன்மையோடு இருளாய் நிற்கும் புறத்திலே காண்கையில்.
அன்றிக்கே,-அடியார்கட்குத் தன் படிகளில்-சேஷித்வம்- ஒன்றும் குறையாதபடி காட்டிக் கொடுத்து, அவர்கட்கு ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறியும்படி பிரகாசித்து நின்றபடியும்,
அடியரல்லாதார்கட்குத் தன் படிகளில் ஒன்றும் தெரியாதபடி செய்து, அதனாலே அவர்களுக்கு ‘இல்லை’ என்னும்படி இருளச் செய்து கொண்டு நின்றபடியும் என்னுதல்;
அடியார்கட்கு ஒண் சுடரோடு உண்மையாய் நின்றும், அடியரல்லாதார்க்கு இருளோடு இன்மையாய் நின்றும்
வந்து என் கண் கொளா வகை நீ கரந்து என்னைச் செய்கின்றன – இவை யெல்லாம் தவிர, என் பக்கல் பரிமாறுகிற வேறுபாடும்.-ஒண் சுடராதல், இருளாதல் இரண்டத்தில் ஒன்றாகப் பெற்றிலேன்; நடுவே நின்று கிலேசியா நின்றேன்.
முத்தர்க்குக் கூட்டு அல்லர், சம்சாரிகளுக்குக் கூட்டு அல்லர்; அந்தரப்பட்டு நிற்கிறாரன்றோ இவர் தாம்.-என் நெஞ்சிலே வந்து புகுந்து கண்களுக்கு விஷயமாகாமல் மறைய நின்று நீ என்னை நலிகிறவற்றையும்.
ஒரு நாள் அருளாய் – ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்; விடாய் கொண்டவன் ‘ஒரு கால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே. ‘கிட்டினால் பின்னை விடும் படி சொல்லுகிறோம் என்று.
உன் திரு உருவே – இது ஏதேனும் உன்னதோ! நோக்கிக் கொண்டு கிடக்கைக்கு;
“உன் திரு மேனி உனக்காக அன்று, உன் அடியார்கட்காகவே” அன்றோ
பிரிநிலை ஏவகாரம் இது உனது திரு உருவமே அன்றே என்னது அன்றோ பக்தானாம்-
———
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-
ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது மலை நெகிழ்ந்தாற் போன்று நெகிழ்ந்து, கண்ண நீர் அருவியாய்ப் பாயா நின்றது.-என் செய்கேன் அடியேனே – பர தந்திரனான நான் காரியம் செய்து கொள்ளப் பார்த்திருக்கிறாயோ,-வேறு ஒன்றாலே போது போக்கித் தரித்திருக்கவோ,-நான் எதனைச் செய்வேன்?ப்ராப்தியை உணர்ந்த வாறே விட்டுத் தரிக்கப் போகிறது இல்லை –பரதந்த்ர வஸ்து யாகையாலே பேற்றுக்கு யத்னம் பண்ணப் போகிறது இல்லை —
——————-
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9-
ஆழ் கடலும்-இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி.-பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து-தலைக் கட்டிக் கொண்டபடியும்.-மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன்,
இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன்,
என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.-என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும் அவாப்த ஸமஸ்த காமனான நீ ஆஸ்ரித அர்த்தமாக அர்த்தியான நீர்மையை அனுசந்தித்து -என் மனஸ் ஸூ இது என்ன நீர்மையே என்று த்ரவித்து சிதிலமாகா நின்றது
கொடிய வல் வினையேன் –பிராயச்சித்த சாத்தியம் அன்று -அனுபவ விநாஸ்யம் அன்று -சைத்திலய ஹேதுவான பிரமத்தை இ றே பாபம் என்கிறது -திரு நாம சங்கீர்த்தனம் மஹா பாதகங்களையும் போக்கும் என்று சொல்லா நிற்க,-அது தானே-சைதில்ய ஹேதுவாகும் படி – நிலை குலைவதற்குக் காரணமாம்படி மஹா பாவத்தைச் செய்தேன்.-உன்னை என்று கொல் கூடுவதே – நான் தரித்து நின்று உன்னை அநுபவிப்பது என்றோ? அநுபவிப்பதற்கு வந்து கிட்டுவது என்றோ?-
—————
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10-
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
தோல் புரையே போகாதே மர்மத்திலே புக்கு -அச்சேத்யயோயம் அயமதாஹ்யோயம் என்கிற ஆத்மவஸ்துவை -த்ரவ்ய த்ரவ்யமாக்கி முடித்து விடாதே ஒழிகிற யுன்னை -புருஷோத்தமன் இப்படி செய்வதே என்கிற குண பிரசங்கத்தில் சிதிலன் ஆகா நின்றேன்
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!-தரித்து அநுபவிக்கும்படி நல் விரகு சொல்ல வேண்டும்.–உம்மைத் தரிப்பிக்கப் போமோ நம்மால் என்ன, ‘நச்சு நாகணையானே’ என்கிறார். என்றது,-ஒருவன் பரம போகியாய் நின்று தரித்து உன்னை அநுபவிக்கப் பண்ணிக் கொடுத்திலையோ;-அப்படியே நானும் தரித்து உன்னை அநுபவிக்கும்படி செய்தருள வேண்டும் –
————-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-
‘சரணே சரண்’ என்ற ஏகாரத்தாலே, வேறு உபாயத்தை விரும்பாத உபாயம் என்கிறது.
இத்தால் ‘ஏக’ பதத்தில் அர்த்தம் சொல்லுகிறது.–ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே –
ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –
அன்றிக்கே,-சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர்.-மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.
நாடொறும் ஏக சிந்தையனாய் – புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய்,-பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் -தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –
வைகலும் மகிழ்வு எய்துவர்- காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்.-‘அநுசந்தானத்துக்குத் தடை வாராதபடி பண்ணி யருள வேண்டும்’ என்று பிரார்த்திக்க வேண்டும் படியான சம்சாரத்தை விட்டு, பகவானுடைய அநுபவத்துக்கு நழுவுதல் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர் என்றபடி.–மாக வைகுந்தத்து-‘மா’ என்றது, மஹத் என்னும் தத்துவத்தினை. ‘கம்’ என்றது ஆகாசம்.
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply