ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
சரணம் என்றால் கார்யம் செய்யாமல் மரணம் என்றாலே தானே கடல் கார்யம் செய்யும்
இவளோ அபலை-நீர் முகில்வண்ணன் அரவணை மேல் பள்ளி கொண்டு அருளி
உமது இரக்கமே இவளுக்கு கார்யகரம் ஆகும்-தேவிமாராவார் – ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸர்வ சரீரீ -இரண்டாலும் கார்யம் ஆகவில்லை என்றால் -கூப்பீடு அங்கு-தலைவன் இயல்பை பழித்துப் பேசும் பாசுரம் அது-அத்தை மறுக்கும் குணம் தானே கற்பு இது தலைமகள் பாசுரம்-தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –-பழிப்பைத் தடுத்து பேசும் பாசுரம் இது
திருக் கண்கள் காட்சி பெற்று –
சாத்மிக்க -சாத்மிக்க போக பிரதாத்ருதம் -புள்ளு பிள்ளைக்கு இரை –-அனுபவம் மெதுவாக கொடுத்து அருளுபவர் தானே செங்கண் சிறுச் சிறிதே விழிப்பான் –ஆர்த்தி விளைக்க -இவையும் அவையும் -சூழல் உளானே -இதன் விவரணம்-சுவையன் திருவின் மணாளன் -திருமுடியில் நேராக வராமல்-
சூழலில் -அருகில் -ஒக்கலில் –நாவில் -உச்சியில் -படிப்படியாக -அமலங்களாக விளிக்கும்
வானாடமரும் குளிர் விழிய-நித்ய ஸூரிகள் -ஆர -அமர -தரிக்க கடாக்ஷம் அருளுபவர் –
பொலிந்து நின்ற பிரான் ஆழ்வாருடைய திருமுடி சேவை இன்றும் பிரஸித்தம்–ஒழிவிலன் என்னோடே உடனே –திருவாய் மொழியில் உண்டே –அடியேனோடு இக்காலம் இருக்கின்றனவே இங்கும்
அவதாரிகை ––முறையோ -என்று கூப்பிட்டால் ஆறி இரான் இறே –-வந்து குளிர நோக்கினான்-
இப்படித் தாங்களும் ஆர்த்தராய்க் கூப்பிடும்படி இவருக்கு ஆர்த்தியை ஈஸ்வரன் ஜநிப்பித்து
கடுக முகம் காட்டாமையாலே ஈஸ்வரன் பக்கலிலே க்ரூர்ய சங்கையைப் பண்ணின ஸூஹ்ருத்துக்களைக் குறித்து அவனுடைய பூர்ண கடாக்ஷம் நடத்தாத தம்முடைய திரு உள்ளத்தில் ப்ரதிஷ்டிதமாம் படி ப்ரகாசிப்பித்த பிரகாரத்தை அவர்களுக்கு அறிவித்து சமாதானம் பண்ணின பாசுரத்தை தலைவன் கொடுமையைச் சொல்லி இயல்பு அழித்த தோழிக்கு இயற்பட மொழிந்த தலைவி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-அவதாரிகை-இது உசிதமோ என்று நொந்து சொன்னால் ஆறி இரான் இறே-வந்து குளிர நோக்கினான் அந் நோக்குக்கு இலக்கான தலைமகள் ஹ்ருஷ்டையாய் தன் தாய்க்கும் தோழிக்கும் சொல்லுகிறாளாய் அருளிச் செய்கிறார் இதில்
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63–தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் —9–இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்-தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும் திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில் அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன் அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும் இவன் ஒருவனுடனே சர்வ இந்த்ரியங்களாலும் சர்வ காத்ரங்களாலும் பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற இவையும் அவை யில் அர்த்தத்தை இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –இப்படிப் பெறாப் பேறு பெற்று அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் யுடைய ஸ்ப்ருஹணீயமான சரணங்கள் நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –
வண்ணம் சிவந்துள ––திருக் கண்களுக்கு சிவப்பு பிறப்பே ஸ்வா பாவமாய் இருக்கும் இறே –இப்போது
வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால் – பூர்வ அவஸ்தையிலும் வைவர்ண்யம் அத்தலையிலே என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் ஷணம் அபி – என்னும் ஆற்றாமையில் ஏற்றம் அத் தலையிலே இறே –ஆகையால் கண்ணும் –காணாமையால் வந்த சிவப்பில் வைவர்ண்யம் தீர்ந்தது இப்போது என்று-தோற்றும்படி இருக்கை –வானாடு அமரும் குளிர் விழிய – த்ரிபாத் விபூதியாக -கண்ணில் குமிழிக்கு (மதகுக்கு )கீழே யாயிற்று ஜீவித்து கிடப்பது – வானாடு அமரும்படியான (தரிக்கும் படியான )-குளிர்ந்த கடாஷங்களை உடைய-அமருகை யாவது –இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை – தாரக போஷாக போக்யமும் -எல்லாம் இவையாய் இருக்கை –தண் இத்யாதி – குளிர்ந்து மிருதுவாய் இருப்பதொரு -தாமரைப் பொய்கை பரப்பு மாறப் பூத்தால் போலே-யாயிற்று திருக் கண்கள் இருப்பது –தாம் இவையோ –தஸ்ய யத்ர கப்யாசம் புண்டரீக மேவ அஷணீ-என்று கேட்டார் வாய் கேட்டு இருந்தோமே –
அவை தான் இருக்கும்படி இதுவே –கண்ணன் திருமால் –திருமால் கண்ணன் – ஸ்ரீ ய பதி யாகையாலே ஆஸ்ரிதர்க்கு கையாளானவன் –திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு – அழகிய திரு முகத்தோடு வந்து -குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு –எண்ணம் புகுந்து – நான் மநோ ரதித்தபடியே -கை புகுந்தது என்னுதல் –அன்றிக்கே- எண்ணம் புக்கு என்றாய் – என்னுடைய மநோ ரதத்தை தானே ஏறிட்டு கொண்டு –
அடியேனோடு-ஜிதம் -என்கிறார் –-அஹம் அர்த்தத்தின் உடைய ஸ்வரூபம் அடியேன் என்று போலே காணும் இருப்பது –(ஜிதந்தே புண்டரீகாக்ஷம் -தாமரைக் கண்ணன் என்றதுமே ஜிதந்தே சொல்ல வைக்கும் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்-ஞாத்ருத்வமா சேஷத்வமா -சேஷத்வம் என்கிற ஞாத்ருத்வமே – சேஷத்வமே பிரதானம்)-அஹங்காரம் ஆழ்வாராதிகள் -அடியேன் -அர்த்தம் தான் -நான் அர்த்தம் இல்லையே மணத்தையும் ஒளியையும் — -ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும்-ஓம் -பிரணவம் -அநந்யார்ஹ சேஷ பூதன்-ஜீவ ஸ்வரூப பரமான வாக்யத்தில் படியே இறே (அடியேன்) சொல்லுகிறது –அது (ஓம்) ஜீவ ஸ்வரூப பரமோ என்றால் –ஒமித் யாத்மானம் யுஞ்சித –என்றும் உண்டு –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் சொல்லா நின்றது இறே –பர ஸ்வரூபம் அன்றோ என்னில்
உபய பிரதானம் -திருக்குருகூர்-பரே சப்தம் பொலியும்-திருத்தேர் தட்டுப் போல்-ராஸ க்ரீடை போலவும்
இதுக்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார்-ஓம் என்று சொல்லி -உயிரை அறவிலை செய்தனன் –ஒமித் யாத்மானம் யுஞ்சித -ஜீவ ஸ்வரூபத்துக்கும்-ஓங்காரோ பகவான் விஷ்ணு–விஷ்ணு ஸ்வரூபத்துக்கும்-
இக் காலம் –இப் பேற்றுக்கு வருமாறு முனை நாள் அறிந்திலேன் கிடீர் –இருக்கின்றனவே –நச புன ஆவர்த்ததே -என்னும் பேற்றைப் பெற்றோம் என்று தோன்றி இரா நின்றது –ஒரு நாளும் இனி பிரிக்கைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றும்படி இரா நின்றது –மானஸ அனுபவம் )பிரத்யஷ சமாநகாரம் ஆகிலும் இவருக்கு சமானகாரமாக தோற்றாதே-பிரத்யஷம் என்று இறே தோற்றுவது –
-அவ்வளவு ஆழமான அனுபவம் கொடுத்து அருளுவான் அன்றோ ஆழ்வாருக்கு -கண் அழகுக்கு தோற்று அடியேன் என்கிறார் என்னுதல் –ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை இட்டு சொல்லுகிறார் ஆதல் –குண க்ருதம் ஆதல் –ஸ்வரூபம் ப்ரயுக்தம் ஆதல் –சிறந்த வர்ணத்தை உடையவனாய் -வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாஷத்தை உடையவனாய் – தண் மென் கமலத் தடம் போல் பொலிந்து இருப்பவனவான இந்த கண்களானவை –திருமால் கண்ணனுடைய திருமுகம் தன்னோடும் காதல் செய்த என்னுடைய எண்ணம் புகுந்தபடி – அடியேனோடு -இக்காலம் இருக்கின்றது -என்று அந்வயம் –ஜீவ ஸ்வரூப -ராஜ புருஷ -சப்த பிரதாந்யத்தாலே-ஜீவ பரமும் -ராஜ்ஞா புருஷ -என்கிற அர்த்த பிரதாந்யத்தாலே- பகவத் பரமுமாய் இருக்கும் என்றபடி இருக்கின்றதே -அருளிச் செய்கிறார் –அரசனின் ஆள் -வேற்றுமை உருபு இல்லாமல் அரசனுடைய ஆள் -அரசனுக்கு ப்ராதான்யம் –
தோழி நாயகனை பழித்துச் சொல்வதை பொறுக்காத நாயகி -அவன் திருக் கண்கள் என் நெஞ்சுள்ளும்
கண்ணுள்ளும் தோன்றி நீங்காது இருக்கின்றன –
இங்கனம் அன்போடு அணியனாய் உள்ளவனை அநாதரம் செய்து பிரிந்து சென்றான் என்று பழிப்பாயோ-என்கிறாள் – வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய-அநு ராகத்தாலும் சீற்றத்தாலும் சிவக்கலாம் -இங்கு குளிர்ந்த வேட்க்கையால் அன்றோ – தாம் இவையே -மானஸ அனுபவம் மாத்திரம் இன்றியே உரு வெளிப்பாடால் பிரத்யக்ஷம் ஆனவாறு-நினைவின் முதிர்ச்சியால் –அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே-அவன் பூர்ண கடாக்ஷம் தம் நெஞ்சில் நிலை பெறும் படி பேர் அருள் செய்த விதத்தை அறிவித்து அவர்களை சமாதானப் படுத்திய பாசுரம் –
வண்ணம் சிவந்துள-தம் பக்கல் இவருக்கு யுண்டான ராகம் இக் கண்களினுடைய நிறத்தில் சிவப்பிலே காணலாம்–அது சீற்றத்தாலோ என்னில்–வானாடமரும் குளிர் விழிய–நித்ய விபூதியிலே இருந்து நித்ய அனுபவம் பண்ணி நிரதிசய ஆனந்தத்தாலே குளிர்ந்த பார்வையை யுடைத்தாய் இரா நின்றன–இவர் திரு உள்ளத்தில் பிரகாசிக்கிற தசையிலும் குளிர்த்தி மாறாது இருக்கை –தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன-இக் கண் அழகுக்கு சீதளமாய் மிருதுவான தாமரைத் தடாகத்தைப் போலி யாக்கினால் மிகுத்துத் தோன்றா நின்றன –தாமிவையோ-இவை ஸ்ம்ருதி மாத்ரமும் இன்றியே உரு வெளிப்பாடாம் படி பிரகாஸியா நின்றன–ஸ்ம்ருதி -நினைவு மட்டும்-அத்தையும் தாண்டி உருவ வெளிப்பாடு -முழுவதாக அறிவது அத்தையும் தாண்டி பிரத்யக்ஷம் நேராக் காண்பது—கண்ணன்
பெண் பிறந்ததற்கு பவ்யனானவன்(சுவையன் திருவின் மணாளன் )திருமால்— நாரீணாம் உத்தமையான பிராட்டிக்குப் பிச்சனாவான்–திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு-கண்ணன் கோள் இழை வாண் முகம் -திருவாய் -7-7-8-என்கிறபடியே சகல ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்திலே ஸாமான்ய ஸ்நேஹம் பண்ணின எனக்கு–எண்ணம் புகுந்து-தடாகத்தின் சுழி போலே கொண்டு முழுகும் படியான கண்கள் தானே-என் நெஞ்சிலே புகுந்து–அடியேனோடு-தனக்கே சேஷமான என்னோடே கூட(ஏவகாரம்-அநந்யார்ஹ சேஷத்வம் )இக்காலம் இருக்கின்றதே-க்லேசிக்கிற இக்காலத்திலும் விடாதே இரா நின்றன–ஆதலால் அவன் நம்மை அநாதரித்தான் என்று
இயல் பழிக்கப் படாது காண் என்று தோழிக்கு இயற் பட மொழிந்ததாயிற்று–இத்தால் வண்ணம் சிவந்துள என்கையாலே ஆழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்குப் பிறந்த ராகம் ஸூசிதமாயிற்று—வானாடு இத்யாதியாலே அந்த விபூதியில் அனுபவத்தாலே யுண்டான செவ்வியும் இவர் பக்கல் செறிவாலே உண்டானமை தோற்றிற்று ஆயிற்று-(அந்தா மத்து அன்பு செய்து –என்னாவி சேர் அம்மான்
சேர்ந்த பின்பு தானே அவையும் சித்தி பெற்றது-என் உச்சி உள்ளே நிற்கும் -தேவதேவன் -நின்றபடியாலே தேவ தேவன் ஆனான் )
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-வண்ணம் சிவந்துள-திருக்கண்களுக்குச் சிவப்புப் பிறப்பே பிடித்து
ஸ்வ பாவமாய் இருக்கும் இறே-இப்போது வண்ணம் சிவந்துள -என்கிற இத்தால்-பூர்வ அவஸ்தையில் வை வர்ண்யம் அத்தலையில் என்னும் இடம் தோற்றுகிறது-ந ஜீவேயம் க்ஷணம் அபி -ஸூந்தர –66010-என்னும்படி இறே அத்தலையில் ஆற்றாமை ஆகையால் கண் உறங்காமையாலே வந்த சிவப்பும் வை வர்ண்யமும் தீர்ந்தது இப்போது என்னும்படி இருக்கை–வானாடமரும் குளிர் விழிய-ஒரு த்ரிபாத் விபூதியாக ஒரு கண்ணில் குமிழில் கீழே யாயிற்று ஜீவித்துக் கிடப்பது வானாடு அமரும்படியான குளிர்ந்த கடாக்ஷத்தை யுடையவன்–அமருகையாவது-இத்தாலே உண்டு உடுத்து வர்த்திக்கை-தாரகமும் போஷகமும் போக்யமும் எல்லாம் இவையே என்று இருக்கை–தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன-குளிர்ந்து மிருதுவாய் இருபத்தொரு தாமரைப் பொய்கை பரப்பு மாற அலர்ந்தால் போலே யாயிற்று திருக்கண்கள் இருப்பது–தாமிவையோ-தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -(சாந்தோக்யம் -1-6-7-)என்று கேட்டார் வாய் கேட்டு இருந்தோம் அவை தான் இருக்கும் படி இதுவோ–கண்ணன் திருமால்–திருமால் கண்ணன் -ஸ்ரீ யபதி யாகையாலே ஆஸ்ரிதற்குக் கையாள் யானவன்-திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு–அழகிய திரு முகத்தோடு வந்து குளிர நோக்க வேணும் என்று ஆசைப்பட்ட எனக்கு–எண்ணம் புகுந்து–மநோ ரதித்த படியே கை புகுந்தது என்னுதல்
அன்றிக்கே-எண்ணம் புகுந்து என்றாய்-என்னுடைய மநோ ரதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு-அடியேனோடு-ஜிதம் -ஜிந்ததே ஸ்தோத்ரம் என்கிறார்-அஹம் அர்த்தத்தினுடைய ஸ்வரூபம் தான் அடியேன் என்று போலே காணும் இருப்பது-ஜீவ ஸ்வரூப பரமான வாக்கியத்தில் அப்படியே இறே சொல்லுகிறது-அது ஜீவ ஸ்வரூப பரமோ என்னில்-ஓம் இத்யாத் மாநம் யூஞ்ஜீத -தைத்ரியம் –என்றும் யுண்டு-ஓங்காரே பகவான் விஷ்ணு என்றும் சொல்லா நின்றது இறே–இக் காலம்-இப் பேற்றுக்கு வரவாறு முன் நாள் அறிந்திலேன் கிடீர்–இருக்கின்றதே-நச புநரா வர்த்ததே -சாந்தோக்யம் -8-15- என்னும் பேற்றைப் பெற்றோம் ஆகாதே என்று தோற்றி இரா நின்றது-ஒரு நாளும் இனிப் பிரிகைக்கு சம்பாவனை இல்லை என்று தோற்றி இரா நின்றது-ப்ரத்யக்ஷ ஸமாநா காரமாகிலும் இவர்க்கு
சமாநாசா காரம் என்று தோற்றாதே -ப்ரத்யக்ஷம் என்றே தோற்றுகிறது –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்-வியாக்யானம்-வண்ணம் சிவந்துள என்னில் அநு ராக உத்தரமான கண்ணில் சிவப்பு இப்போது யுண்டாயிற்று–அதுக்கும் மேலே–வானாடமரும் குளிர் விழிய தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ-இவை திருக்கண் மலர்கள்-வான் நாட்டில் உள்ளாரில் காட்டிலும் என்னிவ் வக்நமாய் ஸூ சீதளமான பார்வையை யுடைத்தாய் குளிர்த்தியும் மார்த்தவமும் யுள்ள கமலங்களேயான தடாகத்தைப் போன்றதாய் அது தான் இவைக்கு சரியோ என்னலாய் இரா நின்றது–ஓ-இது ஹாவு ஹாவு -தைத்ரியம் என்றபடி-கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து அடியேனோடு யக்காலம் இருக்கின்றதே-என்பது இங்கே கூடும்
திருமால் வ்யாமோஹம் செய்யும் கண்ணனுடைய திரு முகத்தோடே
கோள் இழைத்த தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா வுடைய கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாண் முகமாய்க் கொள்கின்ற –திருவாய் –7-7-8–ஸகல ஆனந்த ஸுந்தர்ய ஸாம்ராஜ்ய ஸ்த்தலமான திரு முகத்தில் அதீப் தீயா நித்ய உபாயான சீலர்க்கு த்யான ரூடமாய் இருக்குமே அது-அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே–தனக்குப் பூவின் மீசை நங்கை போல் அடிமை செய்ய வேண்டின என்னோடே இப்போது அநு பாவ்யமாய் இருக்கிறது-ப்ரத்யக்ஷமாய்த் தானே இங்கும் ஓ என்பது அன்விதம்
தாத்பர்யம்–கீழே நாயகியின் ஆர்த்தியையே சொல்லி முறையிட்ட தோழி பாசுரம் கேட்டு த்வரித்து அவன் கடாக்ஷித்து அருளmநாயகி அத்தாலே அவனது ஸ்வ பாவத்திலே ஈடுபட்டு பாடுகிறார்
ஆஸ்ரித ஸூ லபனாயும் ஸ்ரீயப்பதியாயும் -கண்ணன் திருமால் –நித்ய ஸூரிகளுக்கு ஜீவன ஹேதுவாய் –கடாக்ஷம் தாரக போஷக போக்யமாய் -உள்ளவர்கள் அன்றோ –
தாமரைத் தடாகம் போல் குளிர்ந்த மிருதுவாய் சகல குண பரிபூர்ணமாய் குளிரக் கடாக்ஷித்து
இப்பொழுது ஆழ்வாரது மனோரதம் நிறைவேற்றி அதனாலேயே தானும் உளனாகி
அந்தாமத்து அன்பு செய்து -உளன் ஆனால் போல் ஆனான் அன்றோ ஆகவே அவன் மேலே குற்றம் சொல்லாதே என்றவாறு
1-9-இவையும் அவையும் -பிரவேசம் –
கீழ் திருவாய்மொழியில் இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;
இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.
ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் -பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என் என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க
புஜிப்பிப்பானாக -1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –2-இவருக்கு அந்திகஸ்தனாவது -3-கூட நிற்பது –4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
-5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது -7-தோள்களில் சேர்வது -8-நாவிலே நிற்பது -9-கண்ணுக்குள்ளே யாவது -10-நெற்றியிலே யாவது -11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-
ஜகத் காரண பூதனனாய் -சர்வ அந்தராத்மாவாய் -ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள கிருஷ்ணனானவன் –என்னுடைய பர்யந்தத்தை விட்டு போக மாட்டாத படியானான் -என்கிறார் –
அவையுள் தனி முதல்- இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள் அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.
‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின், தத் அநு ப்ரவேஸ்ய ‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே,-இவற்றுடைய -வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கு -அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும் பண்ணும் அநுப் பிரவேசத்தைச் சொன்னார் அங்கு;
இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்; ஆதலின், அடங்காது என்க.
கண்ண பிரான் –‘இப்படி இருக்கிறவன் தான் யார்?’ என்னில், ஸ்ரீ கிருஷ்ணன்.
இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம்.-என் அமுதம்-தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு.-சுவையன்-பரம ரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே!-திருவின் மணாளன் – இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.-திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே- ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான்-‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார்,‘என்னுடைச் சூழலுளானே’என்கிறார்.
————
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-
என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.-சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.-ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.-சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘கேழல் ஒன்றாகி’ என்கிறார். அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி. ‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார். கேசவன்– அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.வேழம் மருப்பை ஒசித்தான் –குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.-விரோதி நிரசன சீலன் என்றபடி-வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)
———
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்-என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –தண் தாமம் செய்து -என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினார் -என்கிறார் –இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறிலன்-
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தாம் அத்தனை
———-
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-
மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –
திருமகள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-மண் மகள் முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி –ஆயர் மட மகள் -அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி –திருமகள் அவன் ஐஸ்வர்யம்-மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –என்று இவர் மூவர்-மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-என் ஓக்கலையானே —ஸ்ரீ யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –
———
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-
விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,- சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன் என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.-மாயன்- ஸ்ருஷ்டமான -உண்டாக்கிய உலகத்திலே அநுப் பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன். சர்வ சரீரியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அன்றோ-என் நெஞ்சின் உளான் – என் சரீரத்தில் ஏக தேசத்தை ஓரிடத்தைப் பற்றி நின்றான்.-ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான சர்வ ஜகத்துக்கும் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ஜெகன் நியந்தாவாய் –ஆச்சர்ய பூதனுமாய் -விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் –
இருந்தவன் என் ஓக்கலையில் தான் இருந்த இருப்பு எனக்கு சாத்மித்தவாறே -என் மார்விலே வந்து இருந்து அருளினான் -என்கிறார் –
———–
மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-
சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.-காயமும் சீவனும்
சர்வ அந்தராத்மா என் தோளைப் பற்றி வர்த்தியா நிற்கிறான்-தூயன்-இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதை முதலானவர்கட்கு யதி சக் நோஷி ‘நீ வல்லையாகில் போய்க் காணாய்’‘
என்னலாம்படி இருப்பான்.-இதனால், அணிமைக்கு எல்லை கூறினார்.-துயக்கன் மயக்கன் –
உகவாதார்க்கு-சம்சய விபர்யயங்களை – ஐயம் திரிபுகளைப் பிறப்பிக்கின்றவன்.-என்னுடைத் தோளிணையானே–என் அளவில் அங்ஙன் அன்றிக்கே, ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருக்குமாறு போன்று, என் தோளில் இரா நின்றான்.-சம்சய விபர்யய ரஹிதமாக என் தோளிலே வர்த்தியா நின்றான்-பெரிய திருவடி தோளில் இருப்பை மாறி என் தோளிலே இரா நின்றான் –-இவனுக்கு என் பக்கலுள்ள அபி நிவேசம் இருக்கும் படியே இது -என்கிறார்
————
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-
நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.-ஆழ்வார் விரும்பிய வாறே திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’,
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.
அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,–அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்.-அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.-தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.
இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;-அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;-அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?-ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;-ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.
————–
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-
சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு-கமலக் கண்ணன் என் கண்ணினுளானே-திருமேனியின் அழகாகிய பெரு வெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின் ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார்.
பிராகிருத -வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாம் -ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து அருளிச் செய்கிறார்-
————
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-
ஸ்வ சங்கல்ப ஏக தேசத்தில் சர்வத்தையும் உண்டாக்கினவன்-என்னுடைய சரீர ஏக தேசத்தைப் பற்றி தான் உளனாக நினையா நின்றான்-கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார் –அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.-என் நெற்றி யுளான் – கர்மானுகுணமாக -கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். பிரயோஜன நிரபேஷமாக ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார், நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.
————–
நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-
ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.
ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியிலே வைத்தாலும், திருக் குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையா நிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். –கற்றை – தழைத்தல். -இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின்,
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –
———
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-
நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்-என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்-தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply