ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
திருத்துழாய் அங்குரிக்கும் போதே பால்ய பிராயத்தில் ஸஹஜ பக்தி உடையவள் செவிலித்தாயார் இரங்கி –தலைமைகளின் இளமைக்கு-குறுக்கும் வகை -திருநாவாய் -ஆழ்வார் -ஆளவந்தார் உகந்த திருவாய்-ஆகத்து அவனை நிறுத்தும் மனம் -ஆகத்து வினையை அறுப்பானே
ஓ -என்று கிட்டுமோ -அங்கும் உண்டே-இங்கு திருவேங்கடம் கிட்டுமோ-இங்கு–ஐந்து ஓங்காரங்கள்
முலையோ என்னில்-கலையோ என்னில் நாவோ என்றால் தெரிநிலை ஓங்காரம் -இவை மூன்றும் -ஆச்சர்யம்-விலையோ -விலை ஆகாதே -கண்கள் பெருத்து உள்ளனவே-மலையோ -கேட்டால் திருவேங்கடம் என்று இத்தையே சொல்லிக் கொண்டே இருப்பாள்-இத்தையே அப்யஸித்துக் கொண்டே இருப்பாளே-இவை இரண்டும்-ஒரு ஏவகாரம் இவள் பரமே-எதிர்மறை ஏவ காரம்–
அவதாரிகை –தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன் என்னும் – என்றாளே –ப்ராப்த யௌ வநையாய்–பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ – பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் – தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்
இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை தலைவி ஈடுபாடு கண்ட தோழி அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்-இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார் அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு–அவதாரிகை–தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளே– ப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88–இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு அவ் வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
முலையோ இத்யாதி –இவை எல்லாம் நிரம்பினால் சொல்லுகை பிராப்தம் -இறே –இவை எல்லாம் -ஓங்காரம்-இவை இருந்தால் திருவேங்கடம் -திரு நாமம் சொல்லுகை பிராப்தம்-முலை வளர்ந்து கலை நின்று நா குழறாமல் இருக்க வேண்டுமே -முலையோ முழு முற்றும் போந்தில – முலைகள் சமைய வளர்ந்தன வில்லை என்று சொல்லும் அளவல்ல –முலை எழும் எல்லை இன்னது என்று கொண்டிக் கோல் நாடிற்றும் இல்லை –மொய் பூம் குழல் குறிய –செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்கள் ஆனவை –குறிய –நாயகன்-பேணி சூழி யஞ்சுற்றினால்-கொண்டை(க் கோலால் ) முடிந்தால் —
இவள் வினை கேட்டாலே செயல் அறுதியால் அழகு இல்லை என்று )குலைத்தால் அதுக்கு அவன் கால் பிடிக்கும் அளவு அல்ல – கொண்டை முடிக்க நீளம் போராது என்னுதல்–கலையோ அரை இல்லை –
உடுக்கும் இடம் அறியாள் –நாவோ குழறும் –தாய்மார் உருச் சொல்லி அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்கும் இத்தனை –(அவள் -தாய் பக்கம் என்றும் மகள் பக்கம் என்றும் ) ஐயர் ஆச்சி என்று சிலவற்றை கற்பிப்பர்கள் இறே அவர்களுடைய தெளிந்த சொற்களில் காட்டில் இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும்-
கடல் இத்யாதி –இவ் விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க – அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையைச் சொல்லி வைத்து இதனுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது –இங்கனே சொல்லலாவது தானும் இன்று -(பால்யத்தில்)-நாளை-இது தானும் சொல்லப் போகாது -என்று அருளிச் செய்தார் — இப்படி விசதமாக பார்க்கிறது இந்த பால்யத்தில்-இத்தனை –யௌவனம் குடி புகுந்தால் ஒறுக்கிப் பார்க்குமது ஒழிய இப்படி நன்றாகப் பாராள் –ஆகையால் இதுவும் பால்யத்துக்கு ஸூசகம் என்றபடி-
கடல் சூழ்ந்த பூமிப் பரப்பு அடங்கலும் விலையாகப் போகும் என்னும் படிக்கு-ஈடாக வாயிற்று
கண்கள் மிளிருகிறபடி –மிளிரும் –திரை மோதிக்கரையாலும்-வழிப் போக ஒண்ணாதபடி இரா நின்றது களவு கலந்து -(யௌவனம் குடிபுகுந்து -என்றபடி )நாயகனை ஒதுக்கிப் பார்க்குமது அன்றியிலே
சர்வ சாதாரணமாக ஜனனியோடு காந்தனோடு-வாசியற பார்க்கிறவள் ஆயிற்று–இவள் பரமே –
இவள் பருவத்துக்கு தகுதியோ – இது இவள் பரம் அல்ல –இணக்கத்தின் பொல்லாங்கு -(சஹவாசத்தாலே வந்தது -என்றபடி ) சாய்விலாத குறுந்தலை -(பெரியாழ்வார் -ஸஹ வாஸ தோஷத்துக்கு இப் பாசுரம் )பெருமான் மலையோ திருவேங்கடம் என்று –பர வ்யூஹாதிகளை விட்டு -திரு வேங்கடமுடையான்-பக்கலிலேயாய்-அவன் தன் அளவில் அன்றிக்கே திருமலையே உத்தேச்யம் என்று சொல்லுகிற-பாசுரம் இவள் பருவத்துக்கு தகுதியோ –பரத்வாதிகளையும் விட்டு அர்ச்சை அளவும் சென்று மேலே திவ்ய தேசமே பிராப்தம் என்கிறாளே-அதுவே சாம்யா பத்தி கொடுக்கும் -சமன் கொள் தடம் குன்றமே-அளவிட முடியாத திருமலையின் ஸுலப்யாதிகளை அன்றோ பேசுகிறாள் –
ஆனந்த குணத்தை பேசப் புக்கவாறே வேதங்கள் நிலம் அல்ல என்று மீண்டது – இங்குத்தை சீல பிரசுர்யம் நிலமல்ல என்கைக்கு நிலம் இல்லை இறே- அபரிச் சின்ன-வஸ்துவை -அர்ச்சாவதாரத்தில் சௌலப்யம் -பேசப் புக்கவாறே – அவை நிலம் அல்ல என்று கை வாங்கிற்று –கற்கின்ற வாசகம் –
சொல்லுகிற பாசுரம் என்னுதல் –அன்றிக்கே-இவள் வாயாலே சொல்லும்படி-கேட்கைக்காகவே –
தாங்கள் இவை தன்னை கற்பியா நிற்பர்கள் இறே –-இவள் வாயனகள் திருந்தவே -என்னக் கடவது இறே –பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே -என்னுதல் –அன்றிக்கே-பெருமான் மலையான திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் –-ஒ இவள் பரமே -என்னுதல் – ஒ -இது என்ன ஆச்சர்யம் –
உண்மையில் நாயகி யவ்வன பருவத்தை அடைந்து இருந்தும் அன்பு மிகுதியால் இவளது இளமையை தோற்றுகிறது–செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் –வாயில் பல்லும் எழுந்திலே -மயிரும் முடி கூடிற்று இல–மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே –கொங்கை இன்னம் குவிந்து எழுந்திலே –போன்ற பெரியாழ்வார் பாசுரங்களும் – முள் எயிறு ஏய்ந்தில கூழை முடி கொடா- தெள்ளியள் என்பதோர் தேசு இலள் –திரு மங்கை ஆழ்வார் பாசுரமும் காண்க –கடல் மண்ணெல்லாம் விலையோ -ரத்நாகரமான கடல்களும் பூ லோகமும் மற்று எல்லா உலகங்களும் விலை போதா –பருவத்தின் மிக்க இளமையை சொன்னவாறு-நாயகனை வசப்படுத்தும் சாதனங்கள் இல்லை என்றவாறு-
முலையோ முழு முற்றும் போந்தில-யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை- முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறது—மொய் பூம் குழல் குறிய-செறிந்த பூவை யுடைத்தான குழல்-பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய முடி கூடின வில்லை-கலையோ அரையில்லை–பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று-நாவோ குழறும்-நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்–கடல் சூழ்ந்த பூமியும் மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்–இவள் பரமே-இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –நாயகனை வசீகரித்து-முலை அழகாலே யாதல்-மயிர் முடி அழகாலே யாதல் உடை அழகாலே யாதல் உக்தி சாதுர்யத்தால் யாதல் ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க-(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல் கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )முலையும் அரும்பாதே குழலும் முடி கூடாதே பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே சொல்லும் மழலையாய் கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல் என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று–பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே-ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று-
இத்தால்-பரிவரானவர்கள் – பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ் வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது–முலையானது-போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி–குழல் குறிய -என்று முடி அழகில்லை என்றபடியாலே நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி–உடை அழகில்லை என்கையாலே–பந்த பரிகரஸ் தஸ்ய –ஹர்யஷ்டகம் -என்னுமா போலே-யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி–ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:-நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-திடவிரதத்துடன்,இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,முயற்சி புரிவோராகவும்,என்னைப் பக்தியால் வணங்குவோராய்,நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.–மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்திய யோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்-மிளிரும் கண் -என்கையாலே-ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி–இவள் பரமே -என்கையாலே-கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு சாதனம் இல்லாமல் த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று வ்யதிரேகம் சொன்னபடி–பெருமான் மலை -இத்யாதியாலே-அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3-1-என்கிறபடியே அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போக ஸ்த்தானம் என்றதாயிற்று (கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-வியாக்யானம்-முலையோ முழு முற்றும் போந்தில-இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்-முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல-முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை–மொய் பூம் குழல் குறிய— செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால் இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல–கலையோ அரையில்லை— தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான் திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை–நாவோ குழறும்-சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்-இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று-இவள் பரமே பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்–வியாக்யானம் ––முலையோ முழு முற்றும் போந்தில-முழு முற்றும் –
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை–மொய் பூம் குழல் குறிய–
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்-கலையோ அரையில்லை-கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்-நாவோ குழறும்-நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே–கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்-இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ-என்னும்படியான கண் பார்வையள்–இவள் பரமே பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே ––என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய் அப்போது சொல்லும் வாக்யமாவிது–இவள் பரமே-இவளுக்குத் தக்கதோ-இத்தால் அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும் பிரிவில் அத்யாவசன்னதையும் ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று-இதுக்கு வல் வினையேன் என்று நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –
ஸ்வாபதேசம் –
ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள் –எம்பெருமானை அடைய பக்தி முதலியன நிறையாமல் இருக்க -த்வரிப்பது ஏனோ –-முலை -பக்தி முதிர்ந்து பேற்றுக்கு சாதனமான பரம பக்தி அடைய வில்லை-மொய் பூம் குழல் குறிய-தலையால வசப்படுத்தும் பிரணாமம் பூர்ணமாகத் தோன்ற வில்லை-கலையோ அரையில்லை-மடிதற்று தான் முந்துறும் -திருக் குறள்-அரையில் ஆடையை இறுக உடுத்திக் கொண்டு முந்துற்று-கிளம்பும் முயற்சியில் இல்லை -முயற்சியை அதன் காரணத்தால் கூறின படி-நாவோ குழறும் -இடை விடாத பகவத் திரு நாம சங்கீர்த்தனம் இல்லை-கடல் மண்ணெல்லாம்-விலையோ வென மிளிரும் கண் -ஞானத்தின் சிறப்பு -மிளிரும் -த்யானம் -அவ்வறிவை-ஓர் இடத்தில் நிலை நிறுத்தி -த்யான ரூபமான ஞானம் இல்லை-இவள் பரமே-பரதந்த்ரராய் இருப்பார்க்கு -சாதனம் ஒன்றுமே இன்றி இருக்க இத்தனை விரைவு த்வரை கூடுமோ –-பெருமான்-மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – வெருவதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
என்கிறபடியே திருமலையையே வாய் புலத்தும் – ஆழ்வார் திருவவதரித்தது முதலே எம்பெருமானால் அல்லது தரியாமையைச் சொன்னவாறு –
ஸ்வாபதேசம்-பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்றும் – அறியாக் காலத்துள்ளே -என்றும் -சொல்லுகிறபடியே-இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் சத்தா பிரயுக்தமான படி -சொல்லுகிறது-முலையோ முழு முற்றும் -மீ மிசை யாலே ஒன்றும் இல்லை என்கிறது
இவள் இப்படி கூப்பிடுவது பால்யம் தொடங்கி உள்ளதாகையால் இது ஸ்வத ஸித்தம்-என்கிறார் —
தாத்பர்யம்–கீழ்ப் பாட்டில் யவ்வன அவஸ்தை ப்ராப்தமான இவள் சர்வேஸ்வரனையே கூப்பிடா நின்றாள்-இது பால்யாத் ப்ரவ்ருத்தி அன்றோ – ஸ்வதஸ் சித்தம்-நாயகன் விரும்பும் ஸ்தனங்கள் வளர வில்லை-அரையில் களையும் நிற்க வில்லை-நாவால் குழறுகிறாள்-நாயகனையும் மாதா பிதாவையும் ஒன்றாகவே வெட்கம் இல்லாமல் பார்க்கிறாள்-இவ்வளவு சிறிய பருவத்திலேயே திருவேங்கடமே என்றே அப்யஸியா நிற்கிறாள்-இத்தால் கீழே சொன்ன சர்வேஸ்வரத்வமும் விரோதி நிரசனத்வமும் – ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் என்றும் மது சூதனன் என்றதும் ஆச்சர்யம் இல்லையே -என்கிறாள் –
9-8-அறுக்கும் வினையாயின ஆகத்து அவனைநிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ப்ரவேஸம்-
திருவடி சென்று பிராட்டியைத் திருவடி தொழுது-மீண்ட பின்னர் பெருமாளை அடைவதற்கு முன்பு பிராட்டிக்கு பிறந்த
எண்ணங்கள் போலே
த்வம் சமேஷ்யசி ராமேண சசாங்கேந இவ ரோஹிணீ-ஷிப்ரம் ச தேவி சோகச்ய பராம் யாச்யசி மைதிலி -சுந்தர -39-45-
சந்த்ரனோடு ரோஹிணி சேர்வதைப் போலே நீ ராமபிரானோடு சேர்வாய்
அதி விரைவில் சோகத்தின் உடைய முடிவை அடைவாய் –
திருவடி வார்த்தையை எப்பொழுதும் எண்ணிக் கொண்டே இருந்த சீதைப் பிராட்டி போலே
மேல் திருவாய் மொழியில் விட்ட தூதுவர்கள்
அத்தலைப் பட்டு அவனைக் கொண்டு வருவதற்கு முன்பே-நடுவில் இவர்க்குப் பிறந்த
எண்ணங்களைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் –
இப்படி தம்முடைய துயரத்தை அறிவிக்கச் செய்தேயும்-அப்போதே வரக் காணாமையாலே துயர் உற்றவர்
தூது விடுகையாலும்
அவன் குணங்களை அனுசந்திப்பதாலும்
மனத்தின் தெளிவினாலும்
அவன் வந்து நம்மை அங்கீ கரித்து-அமர்ந்த நிலமான திரு நாவாயிலே கொடு போகை நிச்சயம்
என்று அறுதி இட்டு-
க்ரமத்தில் போக பற்றாமையாலே பதறி-அங்கே புக வல்லேனே-புகும் நாள் என்றோ
அங்கே புக்கு என் கண்ணாரக் கண்டு அடிமை செய்ய வல்லேனே-குறுக்கும் வகை உண்டு கொலோ –
என்று இப்படி பல வகையான எண்ணங்களை எண்ணுகிறார் –
உபாயமும் உபேயமும் இரண்டும் ஈஸ்வரனே -என்று அறுதி-இட்டார்க்கு
பிராப்யத்திலே ருசி கண் அழிவு அற்றால்-
விளம்பத்துக்கு காரணம் இல்லாமையால் –பேறு சித்திக்கும் அளவும் எண்ணம் செல்லா நிற்கும் அன்றோ-
இவ் எண்ணம் தான் இவனுக்கு தவிரதாதுமாய்-அது தான் இனியதுமாய்-
இவனுடைய ஸ்வரூபத்தோடு சேர்ந்து இருப்பதுமான-ஓன்று அன்றோ –
பெரிய முதலியார் -ஆளவந்தார் –பேற்றினை பெறுவதில் உள்ள விரைவாலே-
எப்பொழுதும் இத் திருவாய் மொழியினைச் சொல்லிக் கொண்டே இருப்பார் –ஆளவந்தார் மிகவும் உகந்த திருவாய்மொழி –
ஆகையால் இத் திருவாய்மொழி யினை-பெரிய முதலியார் திருமொழி -என்று ஆயிற்றுச் சொல்லுவது –
அன்றிக்கே
விட்ட தூதுவர்கள் தாழ்ந்தார்கள் என்று-தாமே அவன் எழுந்து அருளிய தேசத்துக்கு
ஏறப் போக ஒருப்படுகிறார் –என்பாரும் உளர் –
மூன்று அடுத்து அடுத்து வரும் திருவாய் மொழிகள் மலையாள திவ்ய தேசங்களுக்கு –
தாயாருக்கு தனி சந்நிதி -திரு நாவாய் முகுந்தன் -ஸ்ரீ விஷ்ணு போதம் –
வைகுந்தன் என்னும் தோனி பெறாமல் உழல்கின்றேன் -விபு -இவன் -அதனால் -இந்த தோனி -இக்கரைக்கு அக்கரைக்குமாக விபுவாக –
லீலா விபூதியில் இருந்து நித்ய விபூதி வரை பரந்து இருக்க – -நாமே -அனுபவித்து -விஷ்ணு போதம் -நாவாய் நாராயணன் -நாவாய் முகுந்தன்-
நவ யோகி ஸ்தலம் -எட்டு பேர் முத்தி ஒன்பதாவது யோகி வேண்டி சேவை நவ யோகி மருவி நாவாய்
திருவடி சேவை இல்லை -கால் வாசி உள்ளே -வற்கலை திருக்கையால் ஆசமனம்
இங்கு வேத விமானம் செங்கமல சரஸ் -பாரத புழா நதிக் கரையில்
பிண்ட பிரதானம் செய்வது இங்கே பிரசித்தம் -கடத்த -துன்பக் கடன் பித்ரு கடன் தீர்க்கவும் இந்த ஸ்தலம்
மு மோக்ஷம் கு பூமி த ததாதி முகுந்தன் –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு ஸம்ஸயம் நாவாயிலே நிழல் எழும் -சூர்ணிகை -180-
எட்டாம் திருவாய் மொழியில் -இப்படி கடக முகத்தால் பிராபிக்க அபி நிவேசித்தவர் -ப்ராப்ய த்வர அதிசயத்தாலே –
அவன் பரிபூர்ணனாய்க் கொண்டு திரு நாவாயிலே எழுந்து அருளி இருக்கிற படியை பிரகாசிப்பித்துக் கொண்டு அவனுடைய
அனுபவ விரோதி நிராசக தேச வர்த்தித்வத்தையும்
அனுபாவ்யத்வ வைபவத்தையும்
அசாதாரண ஸம்பந்தத்தையும்
நித்ய கைங்கர்ய விஷயத்வத்தையும்
பத்னீ பரிஜன ஸ்தாந அநு பூர்த்தியையும்
ஆஸ்ரித பவ்யதையும்
சேஷித்வ ரக்ஷகத்வ ஆகார பூர்ணதையையும்
அனுபவ ஞான பிரதத்வத்தையும்
ஸூ ர வஸ்ம ஸர்வேஸ்வரத்வத்தையும்
அதி ரமணீய விக்ரஹ யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பிரகாரனான சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற தேசத்தைக்கிட்டி அனுபவிப்பது
ஒரு நாளே என்று பஹு முகமாக மநோ ரதிக்கிறார்-
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-
ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-
அறுக்கும் வினையாயின–வினையாயின -அறுக்கும் – வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது-ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்-பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -ஸ்வயம் போக்யத்வ பேறு போல்வன-நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று- அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –
அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமே–நாளேல் அறியேன் என்பார்-மேல் இப்பதிகத்திலே
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் – உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே –
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது-கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியேனே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —அனைத்து உள்ளத்திலும் இருந்தாலும் அவர் இருக்கிறார் என்ற உணர்வே வேண்டுவது
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –மனத்திலே அவனை 1-நிறுத்த வேண்டும் என்னும் 2-உறுதியிலே-3-ஒருமைப் பட்ட-4-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-மநோ ரதம் மட்டுமே –தத் அபி சந்தி விரோதமாத்ராத் கூரத்தாழ்வான்-ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –
கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க -இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –
————–
கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன் –கூரிய வேல் போன்று-ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேராய் -நோக்காலே அகப்படுத்தி கொள்பவள் –
அனுபவிக்கின்ற்றவன் அளவு அல்லாத இனிமையை உடைய-கண்களை உடையவளாய்-ஆத்தும குணங்கள் நிறைந்தவளுமான
நப்பின்னை பிராட்டி உடைய செவ்வி நுகர்வதற்கு இட்டுப் பிறந்தவன் ஆயிற்று –வடி -மா வடுவாய் பிளவு போலேயும்-என்றுமாம் –
நெடியான்-இப்படிப் பட்ட தேவிமார் முதலிய பரிகரங்களால்-எல்லை காண ஒண்ணாதவன் –
அடியேன்- பவாமஸ்து சஹ வைதேஹயா கிரிசாநுஷூ ரம்ச்யதே அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ஸ தே-அயோத்யா -31-25–ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஒருத்தியுமே அன்றோ அங்கு இங்கு அதை விட ஏற்றம் உண்டே –
———
எவை கொல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய் அவையுள்–நிருபாதிக பந்து-அசாதாரண சம்பந்தம் -நாராயணன் -எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-ஸூலபனானவன்–வர்த்திக்கும் ஓலக்கத்தில் புகும் நாள் என்று-என்று அறிகின்றிலேன் –என்கிறார் –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று ஆசைப் பட்ட நான்-அத்திரளிலே சென்று கூடப் பெரும் நாள் என்று-என்று அறிகிலேன் –
கவை யில் மனம் இன்றி–ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு-கவை -கார்யம் -வேறு விஷயம் –-பரந்து திரி தரினும் –மறந்தும் பிரித்து ஒன்று அறிய மாட்டா -என் ஒரு நா வாய் -வாழ்த்தாது நாவோ வாயோ பாடாது -பிள்ளை பெருமாள் ஐயங்கார்
———–
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் – ஓங்கிப் பரப்பு மாறப் பூத்த-சோலைகளை உடைத்தான தேசம் -என்றது
அடிமை செய்கைக்கு பூக்கள் முதலான சாதனங்கள்-குறைவற்ற தேசம் -என்றபடி –
அன்றிக்கே –
நப்பின்னை பிராட்டியும் தானுமாக மலர்களைப் பறித்து குவிக்கலாம் தேசம் -என்பதனைத் தெரிவித்தபடி -என்னுதல்-
பிராட்டியும் கஜேந்திர ஆழ்வான் போலே தாமும் சேர்த்துக் கொள்கிறார் –
மடப்பின்னை மணாளா –அழகே அன்றிக்கே-ஆத்தும குணங்களாலும் துவக்க வல்லவளுக்கு-கணவன் ஆனவனே-
வேறு தேசத்துக்கு சென்று இருந்த குழந்தை ஊர்-அணித்தவாறே-தாய்மாரை பலகால் நினைக்குமாறு போன்று-அடையத் தக்க தெளி விசும்பு அணித்தானவாறே-
திரளவும் தனித் தனியும் பிராட்டிமாரை-அனுசந்திக்கிறார் பாட்டு தோறும் –
————
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5-
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்–புருஷகாரம் ஆவாரும் பொறைக்கு உவாத்து ஆவாரும்-உபாத்தியாயர் – உளராய் இருக்க இழக்க வேண்டுமோ -என்கிறார் –
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்–எல்லார்க்கும் நிர்வாஹகன் ஆனவன்-இதனால் அவர்கள் உடைய படுக்கைப் பற்று -சீதனம் –நோக்குகிற படியைத் தெரிவித்த படி
விண்ணாளன் –படுக்கை தான் இருக்கிறபடி -என்றது-பிராட்டிமாரும் தானும் -தனக்குத் தகுதியான பரமபதத்தில்-திவ்யமான கட்டிலிலே இருந்து-நித்ய ஸூரிகளை நிர்வஹிக்கிறவன் -என்கிறபடி –
பத்னி – பரிஜன -ஸ்தாநாதி– பரிபூர்ணன் –விரும்பி உறையும் திருநாவாய் –உபய விபூதி நாதன்-பெறாப் பேறாக விரும்பி வர்த்திக்கிற தேசம்–திருநாவாயை கண்ணின் விடாய் தீரக் கண்டு-அனுபவிப்பது என்று-என்கிறார்-
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே –காண்பது நிச்சயம் -என்னும் நம்பிக்கையாலே-களிக்கை அன்றியே–ஏவகாரத்தாலே –கண்டே களிப்பது என்றோ
———-
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6-
திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–ஊரை அன்றிக்கே-ஊரில் நின்று அருளின–ஆஸ்ரித ஸூலபன் -உன்னைக் கண்டு களிப்பது என்றோ-என்கிறார்
திருநாவாய் கொண்டே உறைகின்ற–நமக்கும் நம்மை உகந்தாருக்கும் நினைத்த படி செய்து-அனுபவிக்கலாம் தேசம் -என்று
திரு உள்ளத்திலே ஆதரித்துக் கொண்டு வசிக்கிற தேசம் ஆயிற்று – -உகந்து அருளினை திவ்ய தேசம் அன்றோ-என் கோ கோவலர் கோ -எம் கோவலர் கோவே –கிருஷ்ணனாய் வந்து அவதரித்து-ஆயர்கட்கு சுலபன் ஆனால் போலே-திரு நாவாயிலே வந்து -எனக்கு சுலபன் ஆனவனே –
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்-கரணங்கள் தனித் தனியே விரும்பும் நிலை அன்றோ ஆழ்வாருக்கு –கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே-கீழ் தமக்கு இங்கு அசேதனமான கண்களுக்கு
———–
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7-
அடியார்களுக்காக திரு நாவாயிலே நித்ய வாசம் செய்கிற தேவரீர்-வேறு ஒரு கதியும் இல்லாதவன் இவன் -என்று
என் பக்கலிலே கிருபை செய்து அருள வேண்டும் –என்கிறார் –மதீயையா கிருபையா -கேவலம் கிருபையையா –அருளால் -மட்டுமே பெறுவோம் –
சேஷித்வ-கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் ரக்ஷகத்வ-தேவா சுரம் செற்றவனே திருமாலே பிராப்யத்வ –ருமாலேநாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ-திரு மந்த்ரார்த்தம் -திருமாலே திரு -இருந்தும் அடியேன் இழப்பதே -ஆகார பூர்த்தியை உடைய -ஆகார த்ரய சம்பந்தனாம் -அரவிந்த நிவாஸினி கூடி இருப்பதால் -வந்தே வரத வல்லபம் –
நாரண நம்பீ-ஸமஸ்த குண விபூதி விசிஷ்டத்தால் வந்த நாராயணன் – -நாராயணத்தவத்தால் வந்த பூர்ணம் —என் நாரண நம்பீ-அடியார்களை பாதுகாப்பதே நோக்காக-எல்ல பொருள்களிலும் அந்தராமியாய் இருப்பவன்-அதற்கு உறுப்பாக அடியார்கள் இடத்தில்-அன்பு உள்ளவனாய்-அவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோம் என்றதனாலே-பரி பூரணன் ஆனவனே -என்பார் -நம்பீ -என்கிறார் – பஹு வரீஹீ சமாசம் -அந்தர்யாமித்வம் -வாத்சல்யம் ஸுலப்யம் இவற்றால் பூர்ணன்-
ஆவா அடியான் இவன் என்று அருளாயே-ஆஹா ஆஹா என்று ஆராய்ந்து -சேஷ பூதன் என்று -ஆகார த்ரய விசிஷ்ட சம்பந்தம் பார்த்து இரங்கி அருள வேணும்-அவன் அருளுகைக்கும்-இவன் அருள் கொள்கைக்கும்-சம்பந்தம் சொல்லுகிறது-அடியான்
————-
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-
மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார் அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –
அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –-பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே–அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அஞ்ஞான கந்தமே இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்- உன் திரு உள்ளம் ஆன படி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-
———
தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9-
இனி அந்தோ-இப்படி சொன்ன இடத்திலும்-ஒரு விசேஷ கடாஷம் செய்யாமையாலே-நான் இவ் வாசையோடு முடியா நின்றேன்
நான் விரும்பிய பொருளைப் பெற புகுகிற-யாவர் அணுகப் பெறுவார் –மிக்க புண்ணியத்தை உடையவர்கள் யாரோ –என்கிறார்
எனக்கு உள்ள ஆற்றாமை அபி நிவேசம் அவனுக்கு உண்டாக பெறாது ஒழிவதே -என்பார் அந்தோ –என்கிறார் –
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய் – இப்படி எல்லா பொருட்கட்கும் நிர்வாஹகன் ஆனவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதவன் ஒருவன் குடி இருப்பு பெற்றால் போலே-அடியார்களைப் பாது காப்பதற்கு பாங்கான தேசம் என்று மிகவும் விரும்பி வர்த்திக்கிற தேசத்தை –
————
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10-
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–பரமபதாதிகளை விட்டு -திருப் பாற் கடல் -சூர்ய மண்டலம் -விட்டு -நீல ரத்னம் போலே -விட ஒண்ணாத ரமணீய விக்ரகம் கொண்டு-நித்ய வாசம் செய்யும் உன்னைக் காணப் பெறாமையாலே-நெஞ்சு அழிந்து கூப்பிடா நின்றேன்-என்கிறார்-அணுக பெருநாள் எவை கொலோ அந்தோ என்று சொல்லப் பலம் இல்லாமல் –அந்தோ
என்று எப்போதும் –ஒருகால் சொல்லப் புக்கு இளைத்தால் விடுகை அன்றிக்கே-எல்லா காலத்திலும் –சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – மனம் கலங்கி-துயர் உற்ற பிள்ளைகள் தாய் தந்தையர் கல் பெயரைச் சொல்லிக் கூப்பிடுமா போலே –திருமால் என்று அழைப்பன் –
————-
வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே--9-8-11-
இத் திருவாய் மொழி கற்றார்—உபய விபூதியில் உண்டான ஆதரணீயத்தையை -பலமாக-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும்-எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர்-என்கிறார்
மண் ஆண்டு–இவ் உலகில் ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ யால் நிறைந்தவராய் –மணம் கமழ்வர் மல்லிகையே–மல்லிகை மணம் கமழ்வர் –-மல்லிகையை கூறியது எல்லா வாசனைக்கும் உப லஷணமாய்-
சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்- இவருடைய எண்ணம்-அவர்களுடைய பேற்றுக்கு உடலாகும் –
மல்லிகை போலே பரிசுத்த -அழுக்கு இல்லாமல் -அனுபவிக்க பரிமளம் -கொண்டு -கமழ்தல்–யசஸ் கீர்த்தி உடையவர் ஆவார்
நாவாயில் உளானை நறையூரில் கண்டேனே -ஆழ்வார் மநோ ரதம் திருமங்கை ஆழ்வார் பெற்றார் -தீர்த்தம் சடகோபர் பிரசாதம் பெற்று உஜ்ஜிவ்விப்போம் –
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்–சர்வேஸ்வரனுக்கு செல்வம் ஆழ்வார் ஆகையாலே- செல்வம் கிடக்கிற இடத்தில் அன்றோ மதிள் இடுதல் -என்னுதல் –ஆழ்வார் பரியவே அப்பரிவு தான் அவ் ஊருக்கு காவல் -என்னுதல்-
——————–——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply