ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-நீராய் நிலனாய் -6-9-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–

—

இரவு நலிய கீழ்-மேலும் வாடைக்காற்று நலிகிறது இதில்-புன் வாடை – மந்த மாருதம்-வாடைக்கு வருந்தின தலை மகள் வார்த்தை-அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
அருள் உண்டு-இன்று எனக்கு அருளவில்லை -இதுக்கு என் பேரிலும் அவன் பேரிலும் பழி சொல்லுகிறார்களே-திக்கு எட்டும் பரவும் படி காற்றின் கைங்கர்யம் – நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில் – )

அவதாரிகை-
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று எமக்கு ரஷகர் ஆவார் யாரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரஷிக்கிறபடி –என்று சத் ஆகாரமாகிய இவை பாதகம் ஆகிற படி-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை – பிரிந்த நிலையில் மீண்டும் மீண்டும் வாடை நலிவதால் இது புனர் யுக்தி தோஷம் அல்ல இன்ன வடிவம் இன்ன குணம் இன்னவாறு வருத்தம் என்று சொல்ல முடியாத படி வருத்துவதே

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய் நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள் நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே
–41-வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—
59-தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல் சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -அத்யபி நிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும் ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-சிறை கூடத்தில் பிறந்து வளர்ந்தாரை போலே காற்றுக்கு உடல் கொடுத்து போந்த படி –புன் வாடை –மந்த மாருதம்-இது கண்டு அறிதும் – இப்படி ஒத்தது ஓன்று கண்டு அறியோம் –போந்ததை  இது என்று சொல்வான் என் எனில்-சர்வதா சாத்ருச்யம் உண்டாய் இருக்கும் அவை எல்லாவற்றிலும் -தத் தத் வியவகார யோக்யதையும் உண்டாகையாலே — ஜாதியை சொன்ன அத்தனை ஒழிய வியக்தியை சொல்லிற்று அன்று – பிரிவாற்றாமை ஒன்றையே அதிகப்  படுத்தும் ஜாதி(இது என்று படுத்தும் ஸ்வ பாவம் -ஜாதி-வாடை என்று இந்த வியக்தி )இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்  –இப்படி பட்ட வெவ்விய ஸ்வாபத்தை உடைத்ததாய் இருப்பது ஒன்றும் காண்கிறிலோம்   —ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் –பிரிவாற்றாமை மெலிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே சேஷ பூதராய் ஒசிந்து இருக்கிறவர்கள் அன்றியிலே –(ஓசித்த நுண்ணிடை இடவாய்ச்சியார் அல்லவே-ஊண் மல்கி -அஹங்காரத்தால் உடல் பெருத்து இருப்பார்களே )ம மேதம் என்று ரஜஸ் தமஸ்ஸூக்களால் பிரசுரமான வடிவை உடையவராய் இருக்கிற அசுரர் பொன்றும் படி பெரிய திரு அடியை நடத்துகிற சர்வேஸ்வரனுடைய அருள் மறுத்த இந்நாள் – திரு அடி உடைய திருக் குளம்பால் அசுரரைத் துகைத்தாரைப் போலே இவ் வாடையும் துகைக்கக் காணும் நினைக்கிறது-அருள் அருளாத இந்நாள்-தாய் முலைப் பால் மறுத்த இந்நாள்–மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே- இவள் அங்கே பெருகைக்கு அன்றியிலே – பழி சுமைக்குக்கு உருப்பாயிற்று . -லோகம் அடங்க -ஒருத்தி-(பெருமானைப்) பிரிந்த அளவிலே ஒரு காற்றுக்கு யீடு பட்டு துடிப்பதே -என்று பழி சொல்லும் படி ஆயிற்று –நிறை பழி –தன் அளவிலே அன்றியிலே இவள் காற்றிலே ஈடு பட (அவன்)வாராது ஒழிவதே -என்று நாயகனுக்கும் பழி ஆன படி –
காற்று எங்கும் பரவி -அவனுக்கும் பழி வரும் படி செய்வதால் தூற்றுகிறாள்–நின்று எம்மை வன் காற்று அடுமே –ஒரு கால் நலிந்து போகிறது இல்லை –எம்மை- இக் காற்றுக்கு தடவிப் பிடிக்க வேண்டும் படி ஆஸ்ரயம் காண ஒண்ணாத என்னை –வலிதான காற்று சத்தையை முடியா நின்றது –வன் காற்று –நீர்மை கலவாத காற்று-அடுமே –ஸ்திரீ வதமே என்று பார்க்கிறது இல்லை-

வாடைக்கு வருந்தின நாயகி வார்த்தை – நான் வாடைக்கு வருந்துவதைக் கண்டு ஊரார் அலர் தூற்றும் படி ஆனதே – இப்படி அன்றோ இவ்வாடை என்னை கொலை செய்கிறது-நிறை பழி –நாயகியையும் நாயகனையும் பற்றிய பழி –-புன் வாடை -மந்த மாருதம் –

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்-எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்-இவ்வாறு வெம்மை-இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது-ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்-ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம் அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை-அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்-ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்-உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி பெரிய திருவடியை நடத்துகிறவன்-அருள் அருளாத இந் நாள் -தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே-மன்றில் நிறை பழி தூற்றி-மன்றிலே நிறைந்த பழியை அயலாரை இட்டுத் தூற்றுவித்து-நின்று-போகாமல் நின்று–எம்மை-பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை–வன் காற்று அடுமே–பலவானான வாடைக் காற்றானது அடியா நின்றது என்கிறாள்-இத்தால் பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள் தண்ணீர்ப் பந்தல் என்னும்படி பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்—என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை–புன்வாடை-மந்தமாருதம்–இது கண்டறிதும் -இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம் அனுபவித்தோம் இறே–இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்-இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்-பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல-வாடை-லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்–ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப் பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான அருளும் மறுத்த படி-வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35- அல்லாதாராபாதி –
பெருமாள் –மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே-

ஸ்வாபதேசம்
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
-எப்பொழுதும் வருத்தும் தன்மையான இவ்வுலகப் பொருளை கண்டு அறிவோம் –இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் –இப்படிப் பட்ட பொருளின் தன்மையும் கூறியும் ஒரு படியாலும் எம்மால் கூற முடியாத படி மிக்கு உள்ளனசரண் அடைந்தும் இங்கனம் பரிபவப் படுகிறேன் என்று உலோகர் பழி இடும் படி-பேற்றுக்குத் தான் ப்ரவர்த்திக்கையும் பழி இறே -நம்பிள்ளை –

ஸ்வாபதேசம்
இத்தால் நெடு நாள் பொருந்திப் போந்த சம்சாரம் தானே பகவத் ப்ராவண்யம் உறைக்க உறைக்க
இதில் பொருந்தாத படியான நிலை பிறந்த படி சொல்லுகிறது –

தாத்பர்யம்
பகவத் விஸ்லேஷம் பிறந்த தமக்கு சம்சாரம் அஸஹ்யமாம் படியைச் சொல்லி வாடையில் அகப்பட்ட நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார்
ஓ ஸஹியே நான் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாமையால் வருந்த வாடைக் காற்று நலி வதை
முன்பே நெடும்காலமாக அறிவேனாகிலும் இப்பொழுது கருட வாஹனான -பரம காருணிகனுடைய அனுக்ரஹத்துக்கும் கூட விஷய பூதர் ஆகாமல் இருக்க அவன் இடத்தில் அன்பு -ப்ரேமம் உள்ள என் மேல் வீசி நலிகிறதே-இதனால் ஊரெல்லாம் நாயகனையும் கூட பழிக்கும் படி நலிய இப்போது தான் இதன் கொடுமையான ஸ்வபாவம் அறிந்தேன் இது அதி அஸஹ்யமாய் உள்ளதே

6-9-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-ப்ரவேஸம்-

யஸ்ய ஆத்மா சரீரம் -ஜெகதாகாரம் -வேதார்த்தமான அவனை ப்ரேமம் உடன் -பக்தி பாரவஸ்யத்தால்
ஞானம் மிகுந்து கூப்பிட்டு -தவித்து -ஆறி இருக்காமல் கூப்பிடுகிறார்
ஆறாம் பத்து தொடக்கத்திலும் கீழும் தூது-ஜெகதாகாரம் அறிந்தவராலும் –
அவனை அவனாகவே காண ஆசைப்பட்டுக் -கூப்பிடுகிறார் –
கிடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழும் குலசேகரப் பெருமாள்
நடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழ இவர் இதில் –

பிரவேசம் –

எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூது போகச் சொன்னார்;
அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்;
“மரங்களும் இரங்கும் வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்கா நின்றால்,
சிறிது அறிவை யுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே,
“ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.6. 8 : 11.-என்றது,
தூதரை ஒழிய அல்லவே.
ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே.
“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்ல வேணுமோ?” என்று பார்த்து,
தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போக வேண்டும்படியாய் இருந்ததோ?
கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி,
கால் குலைந்து வரும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இனித் தான், தூது போவார்க்குக் காலாலே யாதல் சிறகாலே யாதல் போக வேண்டுகையாலே தடை உண்டு;
இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ.

இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப் போகாது,
பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப் போகாதவாறு போலே.
அவள் இருப்பு பிறர் மேல் வைத்த திருவருளாலே ஆனாற் போலே,
இவருடைய வியசனமும் பிறர் மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி.

கர்மம் ஹேது வானாலோ என்னில் ஆகாது -ஹேது சொல்லப் போகாது –
காரணம் -கார்யம் பூர்வ வ்ருத்தி இருக்க வேண்டுமே –
அதுக்கு த்ருஷ்டாந்தம் பிராட்டி -சிறை இருந்தவள் ஏற்றம் –
ஆழ்வாரை இங்கு வைத்து வியசனம் செய்ய வைத்தது -பிறர் உஜ்ஜீவனத்துக்காகவே -அவன் ஸங்கல்பமே ஹேது –

அவள் சிறையிருந்த படியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே,
அன்று இவர் தாம் வியசனப் பட்டாரே யாகிலும்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப் பந்தலாயிற்றது.

திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத்
தம் மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.

“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்?
நாம் உம்மை விட்டுத் தூரப் போனோமோ? –
ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி
இருக்கிற உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக;
அதில் குறை என்?
நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ?
இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காண வேணும்” என்னப் பண்ணுகிறது;
ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார்.

அதுவும் உன் ஐஸ்வரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்;
அதனால் -ஜகதாகாரம் அறிந்து பாடியதால் -வந்தது –
உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது.
அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;
பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”
“கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.
என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.

என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும்,
உன்னுடைய விபூதி அழியாமல் நோக்க வேணுமாகில் வா என்கிறார் என்றுமாம்.
இவருடைய துயர ஒலி தான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க் காணும் இருக்கிறது.-

ஞானமும் பிரேமமும் கலந்து அருளிச் செய்த பதிகம் -அசாதாரணமான மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் –
அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசைப்பட்டு அருளிச் செய்கிறார்-

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி கடக்க முகத்தால் ஸம்ஸ்லேஷிக்கப் பாரித்த இவருடைய ஆர்த்தி அதிசயத்தைக் கண்டு
ஈஸ்வரன் தன்னுடைய சர்வாத்ம பாவத்தால் சமாதானம் பண்ணப் பார்க்க –
அது இவர்க்கு த்ருஷ்ட்டி விஷயம் அல்லாமையாலே -அசாதாரணமான விக்ரஹத்தோடே காண வேணும் என்று
விஸ்வ ரூபம் கண்ட அர்ஜுனனைப் போலே ஆசைப்பட்டு அதுக்கு ஹேதுவான
அநு பாவ்ய சிஹ்ன யோகத்தையும்
அழகைக் காட்டி அநந்யார்ஹம் ஆக்கும் அதிசயித சக்தியையும்
அகில பிரகார ரக்ஷணத்தையும்
அதி பிரபல விரோதி நிவ்ருத்தியையும்
பரத்வாதி அவஸ்தா பஞ்சக யோகத்தையும்
அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும்
அகில வாஸ்து வ்யாபகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
விரோதி நியமன யோக்யதையையும்
அதி ஸயிதா வை லக்ஷண்யத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான நீ உன் வடிவை என்னுடைய கண்ணுக்கு இலக்காம்படி காட்டி அருள வேணும் என்று
அபி நிவேச அதிசயத்தாலே அத்யந்தம் ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார்
இந்த ப்ராப்ய விஷயத்தில் அபி நிவேச க்ருதையான ஆர்த்தி இறே
ஆஸ்ரயண உன்முகனான அதிகாரிக்கு விசேஷணம்

நீராய்  நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

யாவையும் யாவரும் தானே நின்ற மாயன் என்றாரே கீழே-திரளச் சொல்லி -கணக்கு சொல்லி ஞானம் உண்டு என்று காட்டி அருளுகிறார்-நீராய் – நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார்.-குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க் கொண்டு தோற்றுவிக்குமாறு போலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப் பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி,
பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப் பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக் கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்ட சிருஷ்டியைப் பண்ணி நின்றது.

இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டு வைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற் போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி.
நீர்க் களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கின படி. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று, இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.

மண்ணும் விண்ணும் மகிழவே ––மண்ணும்-எனக்காக வந்திலை யாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.-‘மானாவிச் சோலை போலே ஆவது-மானாவிச் சோலை – நவராத்ரியில் மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.- அழிவதான இது போனால் என் செய்ய வேணும்?’ என்று இருக்கிறாயாகில்,-விண்ணும்--அவ் விபூதியும் அழியுங்காண்;
இது அழியவே அதுவும் அழிந்ததாமன்றோ.-இனித் தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில், ஆழ்வாரின் ஆர்த்திக்கு துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே!-ஆர்த்திக்கு அழியும் -காதல் இருந்தால் தானே உனக்கு பெருமை –
மண்ணும் விண்ணும் மகிழவே ஒரு நாள் வாராய் –

——————————-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனைநான் கண்டு உகந்துகூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே.
–6-9-2-

மண்ணும் விண்ணும் கொண்ட –பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக் கொண்ட. இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது,
அவன் அசுரத் தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்ட படியும்,-தன்னை யடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்-அ விபாக ரசம் – என்க.-என்னையே உபாசிப்பாய் -என்றான் இந்த்ரனும் ரிஷிகள் இடம் -அவிபாக ரசம் -அந்தராத்மா என்பதால் —மாய அம்மானே – திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும்,-வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி மூவடி ” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,-சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.

வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது;-வந்தால் உகக்கை தான் இவரது செயல்.-நான் கண்டு உகந்து கூத்தாட –-மஹாபலியைப் போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்;-இந்திரனைப் போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்;
‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக் கொண்டு பரிமாறுவது?-உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ?-

ஞாலத்தூடே நடவாய்– நடை அழகில் வாசி கண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது?-நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என் முன்னே நடக்கலாகாதோ?

—————

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?
–6-9-3-

ஞாலத்தூடே நடந்தும் –-எப்பொழுதும் காணக் கூடியவர்கள் முன்னே நடக்கக் கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது;
குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.

வட தேசத்தினின்றும் போரப் பாட வல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடி தொழ வேணும்’ என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து,
பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கை வசப் படுத்துமாறு போலே ஏத்தி-ஸ்தோத்ரம்-வசமாக்கிக் கணிசம்-சபதம் -கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது;
இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணி யருள வேணும்” என்ன,
அவரைப் பெருமாள் அருளப் பாடிட்டு, திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தே திருக் கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப் பாடிட்டு,
“வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்;
அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தே பட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.

கிடந்தும் –-கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.-ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி

இன்னும் தளர்வேனோ –“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?-‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,-‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது.-ரக்ஷிக்குமிடத்தில், எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;-அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்;
அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;

இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;
ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.

“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;-“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;-‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.

அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.-

—————

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.
–6-9-4-

தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ, பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே.

திருக் கால் ஆண்ட – அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ
இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார்.-“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலை வரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்;-அவ்வளவிலே பொடி பட்டானித்தனை;

இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார்-ஆகாசம் அவகாசம் எல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்.-ஒரு நாள்-நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார்.-காண வாராய்-நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காண வாராய்’ என்கிறார்.-விண் மீதே-இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண் மீதே’ என்கிறார்.

————–

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–
6-9-5-

விண்மீ திருப்பாய்! -இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.-மலை மேல் நிற்பாய் – நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ

கடல் சேர்ப்பாய்–கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.

‘விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-
பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –-ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு-மண் மீது உழல்வாய்--அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!-இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –-கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!-தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே-அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.-எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –-எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!-எனது ஆவியுள் மீது ஆடி –-என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.-அன்றிக்கே,-என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.-உருக் காட்டாதே ஒளிப்பாயோ –-வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.-குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?-பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

—————-

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
–6-9-6-

சேதனர் தலைகளிலே திருவடியை வைக்கிற போது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? –
சாதனம் பண்ணவில்லையே-வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன் கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ.-ஓர் அடியைப் பரப்பி வைத்து.-கடல் சூழ்ந்த பூமிப் பரப்படங்கலும் அளந்து. -சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்து கொண்டது.-பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அன்றோ-

மயர்வற மதி நலம் அருளிய பின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.-தீயோடு உடன் சேர் மெழுகாய்--நெருப்பிலே பட்டுக் கரிந்து போகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே,-உருகுவது வலிப்பது ஆகிறபடி.
மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே
உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி.-நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப் பண்ணச் சொல்லுகிறபடி.-நசை -கிடைக்குமோ கிடைக்காதோ சபல புத்தி —-ஆசை –அனுபவ அலாபத்தில் தரியாமையை விளைவிக்கும் அபி நிவேசம்-உலகில் திரிவேனோ –ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப் பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே
யாதநா சரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!-

—————-

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக் கேஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவி லேனுக்கு அருளாயே
.–6-9-7-

ஆகிஞ்சன்யம் இல்லை என்ற உடன் -அருளத் தட்டு என் -தயைக்கு உத்தம பாத்திரம் நான் தான்-சேதனர்க்கு தொகை உண்டாகிலும் என் அறிவுகேட்டுக்கு எண்ணில்லை-என்னளவு இதான பின்பு நீயே கிருபை பண்ணி அருளும் அத்தனை அன்றோ -அறிவை உண்டாக்கி -அத்தை பக்வமாக்கி -அதன் பலமான உன்னையும் தந்து அருள வேணும் –

——————

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே
.–6-9-8-

அறிவார் உயிரானாய் –-அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்;-அறிவாரை உயிராக வுடையவனே என்னுதல்.-வெறி கொள் சோதி மூர்த்தி –-அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வ கந்த:” என்னுமதன்றோ.-அடியேன் நெடுமாலே –-எனக்கு இப்போது எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ;-வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல்.-என்னைப் புறத்திட்டு – பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற் போலே,பகவத் குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள்
நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ?-“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத் குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ?-கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே? என்று ஒன்று உண்டோ என்கிறார்.-என்னை இங்கே வைத்த போதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார்.-பேறு அவனாலே யானால் இழவும் அவனாலே என்னலாம் இறே -ஸ்தநந்த்யபிரஜை கிணற்றில் விழுந்தால் -தாயார் தள்ளினாள் என்னுமா போலே

———

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.
–6-9-9-

காட்டிப் படுப்பாயோ–நாட்டார் ‘காணா விடில் பிழையோம்’ என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே-மோஹிக்கும் படியாக இருக்கிறதன்றோ; ஆகையால், ‘காட்டிப் படுப்பாயோ’ என்கிறார்.-இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி.
இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்–(அசுணமா முடியுமா போலே –ஸ்ரீ  வசன பூஷண ஸூத்ரம் 

தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன்
என்னும் சத்தி யோகம் கூறியபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.-இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-‘கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது–பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது-‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.

பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,
‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,
இதனைக் கேட்டுச் சீயர் அழ,-சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?
அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.-

————–

குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே
.–6-9-10-

‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்;
உன்னைப் பற்றிற்றும் நீ -பிராப்த சேஷி யாகையாலே ,-அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே-பிராப்த சேஷி – அல்லாமையாலே’ என்கிறார்.
பிராப்த-வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.–இருப்பதற்காகப் பற்ற வில்லை -என்றபடி

கைங்கர்யத்துக்கும் இதர புருஷார்த்தத்துக்கும் உண்டான நெடு வாசி உபதேசிக்க வேண்டுவதே-பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே!-

———–

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.
–6-9-11-

சம்சாரத்தின் தன்மையை நினைத்த கொடுமையாலும்,-பகவத் விஷயத்திலே மூழ்கின கனத்தாலும்,-பெரு விடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘-தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. -இது இவருடைய அஹம் புத்தி இருக்கிறபடி.-தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்த போது ஆத்மாவிலே அஹம் புத்தியைப் பண்ணுவான்;-தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்த போது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக் கொண்டு போவன்;
‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்த போது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன்.

உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்--சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.-சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார். “குண க்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,-

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply