ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நோற்ற நாலும் போல் தூது நான்கும் வரிசையாக நான்கு பாசுரங்களில் அருளிச் செய்கிறார் –
சாலோக்யம் சாமீப்யம் ஸாரூப்யம் ஸாம்யாபத்தி சாயுஜ்யம் -ஐந்தும் உண்டே-மேகங்கள் ஸாரூப்யம் பெற்றுள்ளதே-சாதன பலமா -இருக்க முடியாதுஅவனது அருளாகவே இருக்க வேண்டும்-எங்கும் தீர்த்த கரராய் திரிகிறீர்களே-கீதா ஸ்லோகம் உபதேசிப்பவன் -என்னையே பெறுகிறான் -பிரியமானவன் -என்றானே-பகவத் விஷயம் வர்ஷிக்கும் பாகவதர்கள்-எனக்கு வரவில்லையே –-தலைவி போலி கண்டு உரைத்தல் துறை-வைகல் பூம் கழிவாய் -6-1–திரு வண் வண்டூர் -அங்கு குருகு தூது-மேகம் கண்டால் கண்ணன் என்றே ஏறப் பறக்கும்-பராங்குச நாயகி-ஓ மேகங்களே -தாமரைக் கண்ணாவோ போல் துன்பம் மிகுதியால் கூப்பிடுகிறாள்–
கீழில் பாட்டில் –மேகங்களே-என்னுடைய தூது வாக்கியத்தை கேட்டுப் போய்ச் சொல்லு கிறிகோள்-
உங்கள் திருவடிகளை என் தலையிலே வைக்கிறிலிகோள் -என்று சொன்ன படியே-இவை செய்ய மாட்டி கோளாகில்-இங்கே வந்து ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் என்ன –எங்களுக்குப் பெருங்கூட்டம் போகா நின்றது –துணை தப்பும் -என்றனவாகக் கொண்டு–அங்கே நின்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லிப் போங்கோள் -என்கிறாள் –யோக பிரஷ்டம் போல் -கர்ம யோகம் நழுவி -உலக இன்பமும் இல்லாமல் –நஹி கல்யாண க்ருதி -பெரும் பயத்தில் இருந்து அவனை விடுவிப்பேன்-விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேறே நல்ல பிறவி அளிப்பேன் என்றானே –
இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று பரமபத நிலையன் அளவும் சென்றபடியால் ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப் (முக்தர்களை )போலி கண்டு யுரைத்த (ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே ) தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்–
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-
வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-(பம்பை உத்தர தேசம் ரக்ஷண ஸ்தைர்யம்-அறிவித்த குணம் )
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை –என்று அனுசந்தித்து கடகரை இட்டு நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்–ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –
மேகங்களோ –
அவற்றைப் பார்த்து தன் ஆற்றாமை எல்லாம் தோற்றக் கூப்பிடுகிறாள் – தன்னுடைய ஆர்த்த த்வனி கேட்டால் கால் நடை தந்து போவார் இல்லை என்று –இவை போகிறது இந்த த்வனி கேளாமை என்னுமத்தாலே அவற்றுக்கு கேட்கும் அளவும் கூப்பிடுகிறாள் -தூராதாவாஹனம்-தூராத் ஆஹ்வானம் – பண்ணுகிறாள்–மேகங்கள் சிறிதிடம் போய்ச் செறித்து (சேர்ந்து) நின்றபடியைக் கண்டு குரல் கேட்டு நின்றதாகக் கொண்டு உரையீர் –என்கிறாள் –கீழ்ச் சொன்னவை எல்லாம் செய்யாது இருக்கச் செய்தேயும் –உரையீர் -என்கிறது –தன் ஆசையில் குறை இல்லாமை-அவை ஒரு வார்த்தை சொல்லுமாகில் சத்தை தரிக்கும் என்று இருக்கிறாள் –வாய் பேச மாட்டாத அசேதனமும் கூட வாய் பேச வேண்டும்படியான தசையைச் சொல்லுகிறாள் –திருமால் திருமேனி யொக்கும் –யோகங்கள் உங்களுக்கு –பரார்த்தமாய் விலக்ஷணமாய் இருக்கிற இவ் வடிவு எங்கே பெற்றி கோள்–அவனும் அவளும் பிரிந்து வெளுத்த வடிவு இன்றியிலே அவனும் அவளுமாக கலந்து புகர்த்த வடிவு எங்கே பெற்றி கோள்-திருவைப் பிரிந்த மாலின் வெளுத்த வடிவு என்னுடையது-திருவுடன் கூடிய மாலின் வர்ணம் உங்களது –நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்னுமதுக்கு அவ் வருகான வடிவு எங்கே பெற்றி கோள் -அவர்களுக்கு உள்ளது ப்ரஷீண அசேஷ பாவமே இறே என்று அத்தையும் வியாவர்த்திக்கிறது –
முக்தன் பரமாத்மாவை அடைந்து பெறும் சாரூப்பியம் விட சிறந்தது அன்றோ உங்களது
அவன் அங்கு-இதுவோ இங்கேயே-விண்ணுளாரிலும் சீரியர் போல் அன்றோ
ப்ரஷீண-கழிந்த –அசேஷ-ஒழிந்த-கர்ம பாவனையும் ப்ரஹ்ம பாவனையும்-உபய பாவனையும்
இல்லையே-ஸாதனமாகக் கொள்ளாமல் ப்ராப்யமாகவே கொள்ளுவான் அன்றோ-ப்ரஹ்மம் ப்ராப்யம் மட்டும் அங்கே-ஜகத் வியாவாராம் வர்ஜம் அவனுக்கு-ஜகத் ரக்ஷணம் -இவற்றுக்குத் தானே உண்டு
சாதனதயா ப்ரஹ்ம பாவனையும் வேண்டா -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் பிரமாணம்-நாங்களும் பாரதந்தர்யம் விட்டு உங்களை போல பண்ண அமையுமே –இவ் வடிவைப் பெறுகைக்கு சாதன அனுஷ்டானம் பண்ணுகைக்கு அதிகார சம்பத்தில் எங்கே பெற்றி கோள் – எவ்வாறு பெற்றீர் –நாமும் பிரணயித்தவத்தாலே பெற விராதே சாதன அனுஷ்டானம் பண்ண அமையும் அத்தனை இனி -என்கிறாள் –
உயிர் அளிப்பான் -மாகங்கள் எல்லாம் திரிந்து –விஷய விபாகம் இன்றிக்கே–சர்வாத்ம ரக்ஷணத்துக்காக -லோகம் எங்கும் திரிந்து–பஹு வசனம்-பிரதேச அநியமத்தைப் பற்ற
(எல்லா ஆகாசங்களிலும் நியமம் இல்லாமல் திரியுமே )-நன்னீர் சுமந்து –திரு வீதியிலே செறிந்து சேர்ந்து ஸ்ரமஹரமான தண்ணீரைக் கொண்டு நின்று –-ஏலக் குழம்பு ஏலக் குழம்பு -என்பாரைப் போலே-கடலில் உப்பு நீரைப் பருகி அம்ருத ஜலம் ஆக்கிக் கொண்டு–நுந்தம் -ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –உங்கள் உடம்பு நோவ வருந்திப் பண்ணின தபஸின் பலமோ
இவ் வடிவு எங்கனே யாகப் பெற்றது –சாதனாந்தரம்–ஸாத்ய ஸஹஜ -மூன்றும் உண்டே-அனுக்ரஹத்தால் சாதனாந்தரம் பெற்று -ஸாரூப்யமா -என்று மூன்றும் பக்திக்கு அங்கமான சரணாகதி
ஸ்வ தந்த்ர ப்ரபத்தியும் உண்டே–
பொய்கையார் –-மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் –கோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் –கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் –-நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்-
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குலைந்து நாளும் நாளும்-தொக்க மேக்கப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் –மேகங்களோ -ஓ—தூரமாக இருந்தாலும் கேட்க்கும்படி கூப்பிடுகிறாள் ––நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய்-யோகம் -ஒத்து இருக்க காரணமான உபாயம் – மாகங்கள் -ஒரு பொருளின் பல இடங்களைக் குறிக்கும் –நீர்கள் -பன்மை மிகுதி -மேகம் பல நீரும் பல—
மேகங்களோ-கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் –திருவாய் -4-4-9- என்கிறபடியே பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள் உரையீர்-நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறிலீர்–வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில் திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்-ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு எப் பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்–உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து-பிராணிகளை ரஷிக்கைக்காகப் பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து-நன்னீர்கள் சுமந்து ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான ஜல ஸம்ருத்தியைத் தரித்து-நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே-ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –
இத்தால்–ஸாம்யா பன்னரைக் குறித்து உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து மறு மாற்றம் பெறாமையாலே–பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே—பெருமாள் திருமொழி -2-6–தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத-நெறி–நன்னெறி-தீதில் நன்னெறி )ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே-பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று–இத்தால் வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது-நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று விஷண்ணரானமை தோற்றுகிறது –மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ உபாயம் என்றால் உழைப்பு இல்லை கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே –
தாத்பர்யம்
மேகங்கள் பதில் சொல்லாமல் போக கூப்பிட்டு அங்கு இருந்தாகிலும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதோ–தூதும் போக வில்லை–தலையில் காலையும் வைக்கவில்லை–ஸ்வர்ணன வரணையான அவள் -செய்யாள் அவள்–ஸ்வர்ணமும் மாணிக்கமும் சேர்ந்தால் போல் திருமால் திருமேனி வடிவு
என்ன தபஸ்ஸூ பண்ணிப் பெற்றீர்கள் என்று கேட்டால்–இதுக்கும் பதில் சொல்லாமல் போகிறீர்கள்
நானே ஊகிக்கிறான்-சர்வேஸ்வரன் நிர்ஹேதுக ரக்ஷணம் தீக்ஷிதத்தை-அவன் கார்யம் நீங்கள் ஏறிட்டுக்கொண்டு ஜல பாரம் தரித்து–அவனே இந்த ஸாரூப்யம் -பெற அருளினான் போலும்
பரமம் குஹ்யம் -18 அத்யாயம் -பக்தி சாஸ்திரம் -யார் சொல்கிறானோ அவனே இந்த பலம் பெறுகிறான்
என்னையே அடைகிறான் சங்கையே இல்லையே என்றானே—
ய இமம் பரமம் குஹ்யம் மத் பக்தேஷ்வபி தாஸ்யதி-
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்ய ஸம்ஸய–৷৷18.68৷৷எவன் ஒருவன் மேலான ரஹஸ்யமான இந்த சாஸ்திரத்தை என்னுடைய பக்தர்களிடம் வியாக்யானம் செய்கிறானோ-அவன் என்னிடத்தில் மேலான பக்தியைச் செய்து என்னையே அடைகிறான் -இதில் ஐயம் இல்லை-குஹ்யம் -சாஸ்திரம் -பக்தர்கள் இடம் வியாக்யானம் செய்தால் -ஸ்வயம் பிரயோஜனமாக பக்தி இதுவே உண்டாக்கும் –
ஐந்தாவது உபாயம் இது சரம தமமான உபாயம் அன்றோ இது -சங்கை இல்லாமல் -நான் சொல்லியபடி சொல்லி பலன் கெடுபவர் பெறுவார்-
ந ச தஸ்மாந் மநுஷ்யேஷு கஸ்சிந்மே ப்ரிய க்ருத்தம–
பவிதா ந ச மே தஸ்மாதந்ய ப்ரிய தரோ புவி–৷৷18.69৷৷இவ் வுலகில் மனிதர்களில் இந்த சாஸ்திரத்தை வியாக்யானம் செய்பவனைக் காட்டிலும் வேறு ஒருவன்-எனக்கு மிகவும் இனியது செய்பவன் இருந்தது இல்லை –அவனைக் காட்டிலும் வேறு ஒருவன் எனக்கு வரும் காலத்தில் மிகவும் இனியவனாக உண்டாக்கப் போவதும் இல்லை-ஸ்ரீ கீதா சொல்பவனை விட யாரும் எனக்கு பிரிய தமன் இல்லை -நேற்றும் நாளையும் இதுவே –
அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாத மாவயோ–
ஜ்ஞாந யஜ்ஞேந தேநாஹ மிஷ்டஸ் யாமிதி மே மதி–৷৷18.70৷৷-நம் இவர்கள் இடையே நிகழ்ந்த மோக்ஷ உபாயங்களைப் பற்றிய இந்த சம்வாத ரூபமான யோக சாஸ்திரத்தை எவன் ஓதுகின்றானோ அவனால் இந்த சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஞான யஜ்ஞத்தினால் நான் ஆராதிக்கப் பெற்றவன் ஆவேன் என்பது என் அபிப்ராயம்-இது என் மதி -அத்யயனம் பண்ணுபவன் -உனக்கும் எனக்கும் நடந்த வார்த்தா லாபம் –ஞான யாகம் தான் இது -நான் பூஜிக்கப் பட்டவன் ஆகிறேன் –
6-1-வைகல் பூங்கழிவாய் -ப்ரவேஸம்–
(ஸ்ரீ ராகவன் மஹாத்மா சர்வ லோக சரண்யன் –
ஸுவ்லபயமும் பரத்வமும் இருந்தவன் தானே சரண்யன் ஆகிறான்
அங்கு பரத்வம் பின்பு
இங்கு பரத்வம் நான்கு பாத்தால் முதலில் பின்பு ஸுலப்யம்
இரண்டுமே சரணாகதி சாஸ்திரங்கள் –
ஒன்பது திருவாய் மொழிகளால் ஸ்ரீ மத் நாராயணா குணங்களைச் சொல்லி
திருவடி ஒன்பது பாசுரங்களில் சரணம் சொல்லி
அகலகில்லேன் சரணவ்
பிரபத்யே
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் பாதம் பணிய வேண்டுமே
பக்ஷிகளை ஆஸ்ரயித்து
பிராட்டியைப் பற்றி பெருமானை ஆஸ்ரயிக்கிறார் )
முதற் பத்தால், பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்;
இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களையறுத்தார்;
மூன்றாம் பத்தால், களையறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்;
நான்காம் பத்தால், இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் என்றார்;
ஐந்தாம் பத்தால், அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே என்றார்;
விரோதிகளை அழிக்கும் இயல்பினனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரண் புகுகிறார் இந்த ஆறாம் பத்தால்.
மேல் “நோற்ற நோன்பு” என்ற திருவாய்மொழி தொடங்கி நான்கு முறை சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெற்றிலர்.
பலத்தோடு சம்பந்திப்பிக்கிறதாய் விரைவில் பலத்தைக் கொடுக்கக் கூடியதான உபாயத்தைப் பற்றி யிருக்கச் செய்தேயும்
அபேக்ஷிதம் கிட்டாது ஒழிவான் என்? என்னில், ஆழ்வாருடைய ஹிதத்தைப் போன்று உலகத்தினுடைய ஹிதத்துக்கும்
கடவனாகையாலே ஈஸ்வர புத்தியாலே தலைக் கட்டிற்று இல்லை.
உகந்தருளின நிலங்கள் தோறும் புக்குத் தட்டித் திரிந்தார், அங்குத் தாம் நினைத்தபடி பரிமாறப் பெற்றிலர்;
நினைத்தபடி பரிமாறக் கூடிய அவதாரத்து ஏறப் போனார், அது சென்ற காலாந்தரமாகையாலே கிட்டப் பெற்றிலர்;
அது தானே தளர்த்திக்குக் காரணமாயிற்று.
இனி, எப்பொழுதும் அண்மையிலிருப்பதாய், முகப் பழக்கத்தாலும் குறையற்று, சக்தி குறைவுமின்றிக்கே இருக்கிற
இவ்விடமே அமையும் என்று மீண்டார்;
அந்த அநுசந்தானந்தான் கால் நடை தந்து போகாதபடி ஈடுபடுத்திற்று; கால் நடை தருவார் காலிலே விழுந்து தூது விடுகிறார்.
தாம் மேலே அநுசந்தித்த அவதாரம் தூதுவர்க்குச் சென்று அறிவிக்க ஒண்ணாதபடி யாயிருந்தது;
‘இனி அறிவிக்கலாம் படி அண்மையில் நின்றானாகில் திருவண் வண்டூரிலே அறிவிப்போம்’ என்று அங்கே ஆள் விடுகிறார்.
இவர்க்குப் பிறந்தது ஞானத்தாலும் கர்மத்தாலும் உண்டான பக்தி அன்றே! ஒருவன் திருவருள் அடியாக வந்ததன்றோ.
தம் தலையிலேயும் ஒன்று உண்டாய் ‘அது நிரம்பிப் பெற வேணும்’ என்று இருக்கிலன்றோ விளம்பம் பொறுக்கலாவது,
அங்ஙன் சொல்லலாவது ஒன்று இன்றிக்கே இருந்தது. இவர் தாம் பற்றின சாதனந்தான் கால தாமதத்தைச் சகிக்கக் கூடிய தன்றே!
வேறு உபாயங்களைக் காட்டிலும் கால் வாசி ஏற்றம் உண்டே! இங்ஙனே அடிப்பட்ட உபாயத்தைப் பற்றினவர்
ஆறியிருக்க மாட்டார் அன்றோ, ஆகையாலே, ஆற்றாமை கரை புரண்டு ஆள் இட்டு அறிவிக்கிறார்.
‘சரணம் புக்கோமாகில் அத் தலையாலே பேறு ஆகுமளவும் ஆறியிருப்போம்’ என்று தரித்திருக்க வல்ல தன்மையரன்றே.
பிரஹ்மாஸ்திரம் வாய் மடியச் செய்தேயும் இவர் தூது விடுகிற இது,ஞான காரியமோ சாபல காரியமோ தெரிகிறது இல்லை;
சுருதிகளும் கூட “அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டன” என்று பேச்சுக்கு நிலம் அன்று என்று –
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸாஸஹ”-என்பது, தைத்திரீய ஆன. 9 : 1.-
மீண்ட விஷயத்தை மறுபாடு உருவப் பாசுரமிட்டுச் சொல்லவல்ல இவர்க்கு ‘அறிவில்லை’ என்ன ஒண்ணாது;
பறவைகளின் காலிலே விழுகிற இவர்க்கு ‘அறிவுண்டு’ என்னவும் ஒண்ணாது. ஆனால், என்னாவது? ஏது? என்னில்,
ஞான காரியமான சாபலமன்றோ இவரது. இதர விஷயங்களில் விரக்தி யன்றோ ஞானத்திற்குப் பிரயோஜனமாகச் சொல்லுகிறது,
சாபலம் ஞான காரியம் என்று சொல்லுகிறபடி யாங்ஙனம்? எனின்,
அந்த ஞான பலமாயன்றோ இவ் விஷயத்தில் சாபலம் இருப்பது. ஞானத்துக்கும் வைராக்கியத்துக்கும் சேர்விடமாய் இருப்பவர் அன்றோ இவர்.
ஞான வைராக்ய ராசயே-ஞான வைராக்ய –உலக விஷய -ஞான -அனுராக -பகவத் விஷய –என்பதால் சாபல்யமும் ஞான கார்யம் தானே
ஞானத்தால் உலக விஷயத்தில் வைராக்கியமும் பகவத் விஷயத்தில் சாபல்யமும் வருமே
நஞ்சீயர் திரைக்குள் தாம்பு தழும்பு பார்க்க ஆசைப்பட்டார் அன்றோ
இனி, தூது விடப் பார்த்தால் ஒரு ஐந்திர வியாகரண பண்டிதனைத் தூது விடுகிறது மன்றே.
இத்தால் சொல்லுகிறது, பிராட்டியில் உண்டான ஏற்றமோ? என்னில், அதுவும் உண்டு அன்றோ,
அவர் ஒருவரையும் அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு உள்ளது,
இருவரையும் கூட அநுபவிக்கக் கோலுகிற ஏற்றம் உண்டன்றோ இவளுக்கு.
அத் திரு அவளைப் பற்றும் -இத் திரு இருவரையும் பற்றுமே
விஷயத்துக்குத் தகுதியாக வன்றோ கலக்கம் இருப்பது.
இனித் தான், அத் தலையில் நின்றும் வந்தார்க்கே வார்த்தை சொல்லி விட வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் இல்லையே இவளுக்கு;
இராவண சங்கை இல்லாமையாலே. ஆகையாலே, கண்களால் கண்டாரை யடங்கலும் போக விடுகிறாள்.
பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலே யன்றோ; திருவல்லவாழ், திருவண்வண்டூர் என்பவை எல்லாம் அந் நிலங்கள் அலவோ.
தூது விடுவார், நாயகன் பக்கலிலே சில குணங்கள் கண்டன்றோ விடுவது. என்றது,
போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி, ஆக்கம் சேர் ஊடல் அணி மருதம் – நோக்குங்கால்
இல் லிருக்கை முல்லை, இரங்கல் நறு நெய்தல் சொல் விரிந்த நூலின் தொகை.-என்னும் பழம்பாடல் இங்கு நினைவு கூர்க.
இத் தலையில் துயரத்தை யறியுந்தனை அறிவையுமுடையனாய்,
அறிந்து நீர்மையையும் உடையவனாய்-
அறிந்தால் வருகைக்குத் தகுதியான சக்தியுமுடையனாயிருக்க வேண்டுமன்றோ என்றபடி.
அவையெல்லாம் இவள் தூது விடுகிற விஷயத்தில் குறை இல்லை.
அறிவில் வந்தால் – -“ஞான சம்பந்ந:” என்கிறபடியே,-வசிஷ்டர் இடம் கற்று -மேகம் மழை கடலில் பொழிந்தது போலே ராமர்
“யஸஸ்வீ ஜ்ஞாநஸம்பந்ந: சுசி: வஸ்ய: ஸமாதிமாந்”-என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 12.
அறிவு கொடுத்த வசிஷ்டர் முதலானோர்கட்கும் கொடுக்க வல்லனாம்படி இருப்பான் ஒருவன்.
நீர்மையில் வந்தால் “பகைவர்களிடத்தும் அன்புள்ளவன்” என்றால்
“தேவகல்பம் ருஜும் தாந்தம் ரிபூணாமபிவத்ஸலம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 21 : 6.
“கண்ணீரோடு கூடினவர்” என்னும்படியன்றோ
“ஸம்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹூர்த்தம் விமநா பபூவ”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 23 : 24.
அது இருப்பது.
சக்தியில் வந்தால் “பராக்கிரமத்தாலே மகிழச் செய்கின்றவனுக்கு” என்று எதிரிகள் பக்கலிலே கேட்க வேண்டுமத்தனை.
“ஸத்ரோ: ப்ரக்யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 6.
இனித் தான், நாயகனாவான் –அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி — என்று மிக் குணங்களையுடையவன் அன்றோ,
இத்தகைய குணங்களை யுடையவன் வாராமைக்குக் காரணம், அவ் விடங்களிலே துன்புறுவார் பலர் உளராகையாலே
அவர்கள் ரக்ஷணத்திலே ஒருப்பட்டு இத் தலையை மறந்தானித்தனை; –இதுவே சிறந்த செல்வம் பெருமாளுக்கு –
காத்தலைச் செய்ய ஒருப்பட்டால்-அஸ்தமித அந்ய பாவம்
“மறைந்து போன மற்றை எண்ணங்களை யுடையதாய்” என்னும்படி யன்றோ இருப்பது;
ஆன பின்பு, துயரத்தை அறிவிக்க வருவான் என்று பார்த்தாள்.
இனி, அறிவித்தால் ஆர்த்திக்கு இத் தலையில் மேற்பட்டார் இன்றிக்கே இருக்குமன்றோ.
அறிவிக்குமிடத்தில், தான் கால் நடை தந்து போக மாட்டாள்,
தன் பந்து வர்க்கம் தனக்கு முன்னே நோவு பட்டாரன்றோ.
இனி, கால் நடை தந்து போகவல்லார் வேண்டுமே;
“யாமுடைத் துணையென்னும் தோழி மாரும் எம்மின் முன் அவனுக்கு மாய்வ ராலோ”-என்பது, ஈண்டு அநுசந்தேயம். (9. 9 : 5.)
தன் பக்கத்தில் வாழ்கிற பறவைகளை, ‘ஒரே இடத்தில் வசிப்பதால் வந்த சம்பந்தமே நம் காரியம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பு’ என்று பார்த்து, அவற்றின் கால்களிலே விழுந்து போக விடுகிறாள்.
சீயர், இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கவாறே, உருத் தோறும் அருளிச்செய்யும் வார்த்தை:
‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூடத் திரியச் செய்தேயும்
அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும்.
அவர்கள் தாம் ஒரு தர்ம ஆபாசம் -உபாயாந்தரம்-உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்;
இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என் செய்யப் படுகிறார்’ என்று அருளிச் செய்வர்.
ஏ பிரபுவான கிருஷ்ணனே! நீர் ஜீவித்திருக்கும் போதும், அத்தகைய நான் ஒருவனால் மயிர் பிடித்து இழுக்கப்பட்டவளாய்
பெருந்துன்பத்தை அடைந்து பாண்டு புத்திரர்கள் இருக்கும் சபையை அடைந்தேனே!”-என்றவள் நிலையன்றோ இவளது.
“பெரிய ஆபத்து நேர்ந்த காலத்தில் பகவானாகிய ஹரி நினைக்கத் தகுந்தவர் என்று மஹாத்மாவான வசிஷ்டர்
கூறியது என்னால் அறியப்பட்டது” போலி ரக்ஷகரான கணவன்மார்களாலும் தன்னாலும் நோக்கிக் கொள்ள ஒண்ணாதபடி
அவ்வருகு பட்ட ஆபத்து அன்றோ. பகவான்-பூர்ணரன்றோ!
அபூர்ணர் காரியம் செய்ய வல்லார் என்று காணும் அவன் நினைவு.
‘ஹரி:’ – அடியார்களுடைய பகைவர்களை அழித்தலையே இயல்பாக வுடையவனைப் பற்றினாள்.
பகவான் -ஆறு குணங்களையும் சொல்லி அத்தாலே -ஞானம் முதலான குணங்களால் சொன்ன பூர்த்தியிலே
சக்தியுமுண்டாயிருக்கச் செய்தே,
ஹரி: என்று விசேடிக்க வேண்டிற்று, அல்லாதார்க்கும் இக் குணம் ஓர் ஒருகால் உண்டாகையாலே;
இவனுக்கு அங்ஙன் அன்று; இது இயல்பு என்கைக்காக எடுத்தது.–
பரத்வம் -காரணத்வம் -வியாபகத்வம் -நியந்த்ருத்வம் -முதல் நான்கில்
காருணிகத்வம் -ஐந்தாம் பத்தில் –
பரத்வ சௌலப்யம் -சேர்ந்து -இருந்தால் சரண்யத்வம் கூடுமே -அதுவே ஆறாம் பத்தில்
ராகவாயா மகாத்ம்யாய சர்வ லோக சரண்யா -சௌலப்ய பரத்வம் அங்கும் –
குணங்களைச் சொல்லி நாராயண அர்த்தம் -திருவடி -6-10 ஒன்பது பாட்டுக்களில் -அகலகில்லேன் சரணம் அடைகிறார் –
வேதம் வல்லார்களைக் கொண்டு -விண்ணோர் பெருமான் -பாதம் பணிய –அவரை விதை கொழு கொம்பு பந்தல் போலே –
பஷிகள்-வேதம் வல்லார்கள் பற்றி-பின்பு பிராட்டி பற்றி -பெருமானைப் பற்றுகிறார்
நாரதீய புராணம் -400000-ஸ்லோகங்கள் உள்ளவை -இந்த ஷேத்ரத்தில் அருளினார் என்பர் -பக்தி சாஸ்திரம் இது-
இரண்டாம் தூது இது -6-1—ராமாவதாரத்துக்கு தூது -ஏறு சேவகனார் -பம்பை வட பால் –1-4 -முதல் தூது –
தம் பிழையும் –சிறந்த செல்வமும் –படைத்த பரப்பும் –தமரோட்டை ஸஹ வாசமும் மறப்பித்த
ஷமா –தீஷா –சாரச்ய — சௌந்தர்யங்களை உணர்த்தும்
வ்யூஹ –விபவ –பரத்வ த்வய -அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் –சூர்ணிகை –156-
பரத்வ -காரணத்வ -வ்யாபகத்வ -நியந்த்ருத்வ –
காருணிகத்வ -சரண்யத்வ -சக்தத்வ
சத்ய காமத்வ -ஆபத் சகத்வ -ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டன்
மயர்வை அறுக்க -தத்தவ வேதன மறப்பற்று
ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து
மோஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து
புருஷார்த்த பல அந்ய ருசி ஒழிந்து
விரக்தி பல ராகம் கழிய மிக்கு
பிரேம பல உபாயத்தே புகுந்து
சாதனா பல உபகாரக் கைம்மாறின்றி
க்ருதஜ்ஞாத பல பிரதி க்ருதமானத்தை யுணர்ந்து
ஆத்மா தர்சன பல பிராப்தி மரண அவதியாகப் பெற்று
கால அசத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப்
பிறர் அறியப் பத்துத் தோறும் வெளியிடுகிறார் –சூர்ணிகை –218
இதில் சிறந்த செல்வமும் -தீஷை -மம வ்ரதம் என்றாரே பெருமாள் -அத்தை உணர்த்தும் -விபவ -தூது
நாராதீய பக்தி சாஸ்திரங்கள் இங்கே இருந்து அருளினார் என்பர் –
சர்வ பூதேப்யோ -என் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்துக் கொடுப்பவன் -தானே கண் காட்டாத ஆபத்து –
தீஷை நினைவு படுத்தினால் வருவானே -இதுவே சிறந்த செல்வம் நினைப்பூட்டுகை –
அறிவிப்பே அமையும் -ஜீவ ஸ்வாதந்தர்யம் -கொடுத்ததும் இதுக்கத் தானே –
அறிவிப்பதால் வரவில்லை -ஆனால் அறிவிக்கவும் வேண்டும் என்று அறிந்தவர் –
அவன் கிருபைக்கும் குறையில்லை –
அபராத சஹத்வத்துக்கும் மீறி அன்றோ நமது அபராத பூயிஷ்டம்
இதில் சிறந்த செல்வம் -ஆஸ்ரித ரக்ஷணமே அவனுக்கு செல்வம் -அத்தை அறிவிக்க அமையும் -என்று தூது இதில்
தீக்ஷை -அபயம் சர்வ பூபேப்யோ ததாமி -விரதம் -உண்டே -இத்தை அறிவிக்க வருவானே
பூ -சத்தாயாம்–அவன் மூலம் வந்த ஆபத்தையும் தவிர்த்து அருளும் தீக்ஷை உண்டே -கண் காட்டாமல் இருக்கும் அது தவிர்வானே-
ஆறாம் பத்தில் –கீழ் பத்திலே -ஈஸ்வரனுடைய யுபாய பாவத்தை ஸப்ரகாரமாக நிரூபித்து -அநந்தரம் –
இவ்வுபாய ஸ்வரூபத்தினுடைய ஸ்வீகார பிரகாரத்தை அருளிச் செய்வதாக
உபாய ஸ்வீ காரம் கடகரான ஆச்சார்யர்கள் முகமாக சித்திக்கும் பிரகாரத்தையும்
ஸ்வீ கர்த்தாவான அதிகாரியினுடைய பகவத் அபிமுக்யம் ஸ்வீ காரத்துக்கு அபேக்ஷிதம் என்னும் இடத்தையும்
அகடிதகட நா சமர்த்தனான ஈஸ்வர விஷயத்தில் பல பிரதத்வ சக்தியில் சம்சயம் இல்லை என்னும் இடத்தையும்
ஆகர்ஷக சேஷ்டிதானாகையாலே ஆஸ்ரயணம் ஸூ கரம் என்னும் இடத்தையும்
தத் ப்ராப்தியை ஆசைப்பட்டார்க்கு அந்நிய பரர் பக்கல் வைராக்யம் அபேக்ஷிதம் என்னும் இடத்தையும்
ஆத்மாத்மீய பதார்த்தம் எல்லாம் அவன்கிட்ட வழக்காம்படியான ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தியையும்
தாரகாதிகள் எல்லாம் தானே யான ப்ராப்ய விஷயத்தில் த்வரா யோகத்தையும்
த்வரிதனுடைய பராசக்தியிலே கடகரானார் விஷயத்தில் அத்யந்த ஆதாரத்தையும்
பரிபூர்ணமான ப்ராப்ய ப்ராவண்யம் அதிகாரிக்கு விசேஷணம் என்னும் இடத்தையும்
சர்வ ரக்ஷகனான சரண்யன் பக்கல் ச பிரகார சரணாகதியையும்
அருளிச் செய்து ஸ்வதஸ் ஸித்தமான உபாய விஷயத்தில் ஸ்வீ காரத்தை ஸ்வ அனுஷ்டானமாக அருளிச் செய்கிறார் –
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-
ஒரு கால் கலந்து பொகட்டுப் போன அவனைப் போல் அன்றிக்கே நீங்கள் எப்போதும் இங்கே வசிக்கும் படியாகப் பெற்றேனே! உங்கள் நீர்மையில் ஏற்றம் இருந்தபடி என்!–ஆச்சார்யர் எப்பொழுதுமே சந்நிஹிதன் -கூட இருந்து திருத்துவார் –-அவன் இருந்தும் உதாசீனனாய் –அழகிய சோலை, குளிர்ந்த தென்றல், இனிய வாசனை தொடக்கமான இவையுமுளவன்றோ.-பிரிந்தவனே பாதகனாகை அன்றிக்கே, இருந்த தேசமும் பாதகமாகை.-ஆள் இட்டு அறிவிக்க வேண்டிய நிலையிலே நீங்களே வந்து.
நாயகனை போலே உங்களை ஆள் இட்டு அழைக்க வேண்டாதபடி –நீங்களே வந்து –
பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணய ரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள்.-‘பாசுரந்தோறும், கிலாம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச் செய்யும்படி.-வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-
என்றும் பிறர்க்கு உதவி செய்யவே தேடித் திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்ய வேண்டாவோ!-உபவாசத்தினால் மெலிந்திருக்கிற என் காரியத்தை நிறைவுற்றிருக்கிற உங்களுக்குச் செய்ய வேண்டாவோ.
கை கொள் சக்கரத்து--செந்நெலின் படியாயிருக்கை. கைக்கெல்லாம் தானே ஆபரணமாயிருக்கை.-நெல் வயலை மறைத்து உயர்ந்து இருப்பது போலே திருக் கையை இடமாக கொண்ட திருச் சக்கரம்-பெருமான் –-வாய்க் கரையிலே எனக்கு ஜீவனத்தை இட்டு என்னை எழுதிக் கொண்டவன்.–வாய் அழகையே -என்றுமாம் – சேஷத்வம் –பிரணத்வம் மூலம் உணர்த்தி –கை கொள் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமான் –இராஜ புத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே, இடைச்செறி கடைச்செறி-மேல் கீழ் போட்டுக் கொள்ளும் மோதிரம்-திருவதரத்தில் பழுப்புக்கும்-சிகப்புக்கும் – கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக் கொடுத்தது.
சேர்த்தியே உத்தேச்யம்- ஆழ்வாருக்கு -மிதுனம் -தான் சேர்ந்து மிதுனத்தில் கைங்கர்யம் –
கண்டு – நான் அநுபவிக்கப் பாரித்த துறைகள் எல்லாம் நீங்கள் காண வன்றோ புகுகிறது.
இவளைப் பற்றினார்க்கு இவளைக் காட்டிலும் பேறு முற்பட்டிருக்குமன்றோ,
ஸ்ரீவிபீஷ்ணாழ்வான் முதலியோர் பக்கலிலே கண்டு கொள்வது.
திருவடி பெருமாள் உடைய ஆலிங்கனம் முதலிலே பெற்றாரே –
கைகள் கூப்பி--இத் தலையில் இராஜ குலங்கொண்டு மேன்மை யடித்திராதீர்கள்; அவர் பழையர் அல்லர், பெருமதிப்பர் கண்டீர்,-தொழுது கொடு நில்லுங்கோள்.
காதன்மை சொல்லீர்-இத் தலையில் பசலை நிறம் தொடக்கமான ஆற்றாமை யடங்கலும் உங்கள் பாசுரத்தில் அவன் அறியும்படி சொல்லுங்கோள்.
காதன்மை என்றவாறே, தம் மளவிலே இத் தலைக்கும் உள்ளது என்று இருப்பர்;
“ஒத்த விஷயமானால், விளையுமதுவும் ஒத்ததாய் இருப்பது” என்றன்றோ அவர் இருப்பது.
அல்லாத ஏற்றங்களைப் போன்றதே அன்றோ ஆற்றாமையில் வந்தால் இருக்கும்படியும் இத் தலைக்கு.-வன் நெஞ்சர் -பெருமாள் காதல் போலே அல்ல மெல்லியலார் -சீதை காதல் –-ஆழ்வார் காதல் மிதுனத்தை பற்றியதால் அதிலும் மேன்மை -மென்மை உண்டே- மெல்லியலார் காதல் அளவில்லாத என் காதன்மை சொல்லீர் -சொல்லின் தாழ்வே -வரவு தப்பாது என்று இருக்கிறாள் –
———–
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-
பேடையின் காதல் அறிந்து கூடத் திரியும் சேவலும் உண்டாகாதே.-அது வாய் அலகாலே கோத்து எடுத்துக் கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக் கீழே இழித்துமித்தனை இது செய்வது.-பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே!
திருவண் வண்டூர் நாதன் –-‘ஸ்ரீவைகுண்டநாதன்’ என்னுமதிற் காட்டில் உண்டான ஏற்றம் சொல்லுகிறது.-பாதம் கை தொழுது –-கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு.
‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ.
உண்ணா நிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுது வைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள்.
“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீ பாதத்தே தலை படத் தண்டன் இட்ட அன்று,
எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர் .
அன்றிக்கே,-கிலாம் தோற்றும்படி அவர் திருவடிகளிலே கை சென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது,-தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.
அடியேன் –-உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிறவனுக்கு அன்று;
அத் தலையால் வந்த இழவு நீக்கி அவனோடே சேர்க்க இருக்கிற உங்களுக்கு அடியேன் என்கிறாள்.-அடியேன் திறமே-அவன் திறம் போல் அன்று.-என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள்; சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்குப் போருமாகாதே.-
————–
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக்கை க் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3-
திறங்களாகி –கூட்டம் கூட்டமாக. இவை, திரள் திரளாகத் திரிதல் நம் காரியம் செய்து தலைக் கட்ட என்றிருக்கிறாள்.-“வாயுந் திரையுகளும்” என்ற திருவாய்மொழியில் வாசனையாலே, தன் துன்பம் கண்டு பொறுக்க மாட்டாமல் படுகின்றனவாகக் கொண்டு நினைத்திருக்கிறாள். அங்கு, தாம் தாம் விரும்பிய பொருள் பெறாமையாலே-திரு மாலால் நெஞ்சு கோட்பட்டாயே- நோவு படுகின்றன என்று இருந்தாள்; இங்கு, தன் இழவு கண்டு பொறுக்க மாட்டாமையாலே நோவு படுகின்றன என்று இருக்கிறாள்.-பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவு படுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து
அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி,-தேடினால் காண்கைக்குச் சம்பாவனை இல்லாத இடமெங்கும் புக்குத் தேடா நின்றனவாதலின் ‘எங்கும்’ என்கிறாள்.-சுயம் பிரபை யுடைய பிலம் அகப்படப் புக்குத் தேடினார்கள் அன்றோ முதலிகள்.
சிறந்த செல்வம் மல்கு திருவண் வண்டூர் உறையும்--வாராமை அவன் குற்றம் அன்று கண்டீர், அவ் வூரின் நிறைவு வேறேயும் சிலரை நினைக்க ஒட்டுமோ.-இங்குத்தை ஐஸ்வரியமும் இவனை மறக்கப் பண்ணிற்று அன்றோ. மிக்க ஐஸ்வரியம் கரை புரளும்படியான ஊர்.-சிறந்த செல்வம் – தகுதியான ஐஸ்வரியம் என்னுதல்.
கலந்து கூட இருக்கிறபோது ‘நீயே எனக்கு எல்லாச் செல்வங்களும்’ என்று சொல்லி வைத்து, இப்போது தனக்கு என்ன ஒரு சம்பத்து உண்டாயிருக்கிறபடி எங்ஙனே என்று இருக்கிறாள். ( பூர்வர் நிர்வாகப்படி )-‘திருவண் வண்டூர்’ என்கையாலே, பரமபதத்தில் வேறுபாடு.-உறையும்’ என்கையாலே, அவதாரத்தில் வேறுபாடு.
கறங்கு சக்கரம் கை – பகைவர்களை அழிக்கும் விரைவாலே சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியைக் கையிலே யுடையனான சர்வேஸ்வரனை. -பூர்வர் நிர்வாகப்படி –-அன்றிக்கே
பட்டர் நிர்வாகப்படி – இத்தலையைத் தோற்பித்துக் கொண்டோம் என்னும் மேன்மை தோற்ற,
ஆயுதத்தைச் சுழற்றிப் புன் முறுவல் செய்து இருக்கிறபடி யாகவுமாம்.
இறங்கி நீர் தொழுது பணியீர் –-தொழுங்கோள் என்கிறாள்; தொழுத அளவிலே நில்லாதே, முதலியார் கண்டீர் கோள்;-பிரம்புகள் படாமே கடுக விழுந்து கொடு நில்லுங்கோள் என்கிறாள்.-விழா நின்றாலும் அக வாயைச் சோதியா நிற்பர், அபிமானத்தைப் பொகட்டுக் கொண்டு விழுங்கோள் என்கிறாள்.-பணியீர் – இத் தலையில் நின்றும் சென்றாரை அவன் சொல்லும்படியே யாகிலும் சொல்ல வேண்டுமே.-தன்னை ஒழிந்தார் அடங்கலும் தன்னைச் சொல்லும்படியை, இத் தலையில் நின்றும் சென்றாரைச் சொல்லா நிற்கும் அவன்.
ஸ்வரூபத்தால் சொல்லுமவை இவையானால், காதலால் வருமவை சொல்ல வேண்டா அன்றோ.-(சேஷ சேஷி பாவம் அறிந்து சொல்லும் பொழுது காதலால் சொல்லும் என்பது சொல்லவும் வேண்டுமோ )-அடியேன் இடர் பணியீர் – அவன் அறியாதனவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமே! அறிந்தானாகில், ஆள் விடப் பார்த்திருப்பானோ.-அடியேன் இடர் பணியீர்-அத்தலைக்கு அடியேன் என்கிறாள் அன்று –சேர்த்தவர்களுக்கு அடியேன் என்கிறாள்.-இரண்டு தலைக்கும் கலவி ஒத்திருக்க,-இத் தலைக்கு வந்த இடரை அறிவியுங்கோள் என்பாள் ‘அடியேன் இடர் பணியீர்’ என்கிறாள். –
————
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4-
இடர் இல் போகம் மூழ்கி – விஸ்லேஷ கந்தமும் -பிரிவு சிறிதும் இல்லாத கலவி இன்பத்திலே மூழ்கி. நான் செய்தபடி செய்ய, இப்படியே இருப்பாரையும் காணப் பெற்றோம் அன்றோ உலகத்திலே. –
சுக்ரீவன் துக்கம் போக்கி பெருமாள் – போகத்தின் தொடக்கத்திலே பிரிவு பிறந்ததே யன்றோ தனக்கு வீட்டில் ஆய்ச்சிக்கும் ஐயர்க்கும் பர தந்திரராக வேணும்,
நாடு கேட்க வேணும் என்கிற அந்ய பரதை எல்லாம் தீரும்படி தனி இடம் தேடி அனுபவிக்கப் போக, அங்கே இராவணன் வந்து தோற்றினான் அன்றோ தனக்கு; அது இல்லை யன்றோ இவற்றுக்கு.-சீதை யாகவே பராங்குச நாயகி பேசுகிறாள் –-இடர் இல் போகம் மூழ்கி –
புணர்ச்சிக்குப் பாரித்துக் கொண்டிருந்து பிரிவோடே தலைக் கட்டும் என்னைப் போலே ஆகாது ஒழியப் பெறுவதே! இன்னம் தரை காண்கின்றன இல்லை என்பாள் ‘மூழ்கி’ என்கிறாள்.
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலை –-கடல் போலே சிரமத்தைப் போக்கக் கூடிய தான வடிவை யுடையனாய், அவ் வடிவைத் தாழ நின்று-இத் தலைக்கு முற்றூட்டாக உண்பித்து,-பின்னையும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவன்.-அன்றிக்கே,-குளிர்ந்த வடிவை பவ்யரைப் போலே நின்று உண்பித்து, இப்போது எட்டாதபடி இருக்கிறவன் என்னுதல்.-அன்று தானும் தனக்கு -ஆழ்வாருக்கு -வேண்டுவதாகச் செய்தானல்லன்,-இத் தலையை அழிக்கைக்காகச் செய்தானித்தனை;-அன்று வேண்டி யிருந்தானாகில் இன்றும் வேண்டி இரானோ.
உடலம் நைந்து –-அவ் வுடம்போடே அணைந்து பிரிந்த இவ் வுடம்பு கொண்டு பிழைக்க ஒண்ணாது என்னுமிடம் தாமே அறிவாரே அன்று.-ஒருத்தி –-‘இன்ன காட்டிலே மான் பேடை கிடந்து உழற்றா நின்றது’ என்றால், எய்தவன் கை உணருமன்றோ.-ஒருத்தி உருகும் –
எதிர்த் தலைக்கு இது இல்லை என்னுமிடம் அறிவியுங்கோள். -அணைக்கும் பொழுது இருவர் -உருகுபவள் ஒருத்தியே –ஒருத்தி படும் பாடே என்று சொல்லுங்கோள்–உணர்த்துமினே – உருகப் பண்ணி மறைந்து இருக்கிறவருக்கு அறிவியுங்கோள்–தாம் இத் தலையை மறந்தமையை நினைவூட்டுங்கோள். உணர்த்தி அற்றாரை உணர்த்த வேணுமே.-அறியாதாரை அறிவித்தல் அன்னத்துக்கே பணி யன்றோ;
பண்டும் பிறங்கு இருள் நிறம் கெட அன்னமா யன்றோ அருமறை பயந்தது.-பெரிய திருமொழி, 5. 7 : 3.-
—————-
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5-
ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும், காமத்தாற் பெற்ற பயன்” என்று மூன்றனையும்
பிரயோஜனமாகச் சொன்னார்கள் தமிழர்கள்.-இரண்டற்கும் பின்னே நிகழ்வது கலவி.
இவை எல்லாமுண்டன்றோ இவளை உடையவனுக்கும்.-கலவியை அதிகரிக்கச் செய்வது காண் இந்தப் பிரிவு என்றால்,-‘அவ்வளவும் ஆறியிருக்க வல்லார்க்கு அன்றோ பின்பு போகத்தின் நிறைவு வேண்டுவது’ என்னப் பெற்றிலேன் என்கிறாள்
வருவனவற்றை அறிந்து நீக்கிக் கொண்டிருப்பவர்கள், விழுக்காடு அறியாதே அகப்பட்டாருடைய காரியத்தைச் செய்து தலைக் கட்ட வேண்டாவோ என்பாள். ‘உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் அன்னங்காள்’ என்கிறாள்.-இந் நிர்த்தேசத்தாலும் இத் திருவாய்மொழி யடங்கலும் ஊடல் அடங்கியிருத்தல் தோற்றுகிறது.-அறிவில்லாத பொருள்களுங்கூடக் கால் வாங்க மாட்டாத தேசங்கண்டீர் என்பாள் ‘சங்கு சேரும்’ என்கிறாள்.-வேறு போக்கிடம் இன்றிக்கே யிருத்தலின் ‘சேரும்’ என்கிறாள்.-மீட்சியின்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.-மிருதுத் தன்மையாலும் குளிர்ச்சியாலும் வேறு ஒன்றனை நினைக்க ஒட்டாதிருக்கை.-சங்குகளை-வெள்ளைகளையும் கூடக் காற்கட்டுகிறதன்றோ மண்பாடு. –சாத்விகர்களை போக ஒட்டாத திவ்ய தேசம் –-ஆக, இரண்டாம் அடியால் வாராது ஒழிந்த இடம் அவன் குற்றம் அன்று கண்டீர் என்பதனைத் தெரிவித்தபடி.
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு-நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு ஒப்பித்தபடியே இருக்கிறவன்-இத் தலையைத் தோற்பித்த வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர் பட்டர்.-புணர்த்த கையினராய் –-அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கை ஒத்துச் செல்லுங்கோள் கண்டீர். என்றது, வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்;
அடியேனுக்கும் போற்றுமினே –-நீங்களும் அவனைப் போலே செய்யாதீர்கள், அங்கே புக்கால் என்னையும் நினைக்க வேண்டும்.-அதாவது, புக்காரை எல்லாம் தத்தமது பிரயோஜனத்திலே மூளப் பண்ணவல்ல தேசமாகையாலே, இத் தலையை நினைக்க விரகு இல்லையன்றோ; “முக்தன் இச்சரீரத்தை நினைப்பதில்லை” என்னும்படி யன்றோ இருப்பது.
“நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”-என்பது, சாந்தோக்யம். 3. 12 : 3.-அடியேனுக்கும் போற்றுமின் –-அடியேன் இடையாட்டத்தையும் அத் தலைக்கு அறிவிக்க வேண்டும்.-போற்றுகை யாவது கௌரவித்து சொல்லுகை-
——————
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6-
போற்றி –சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே, புன்னை மரத்திலே உயர இருந்தன சில குயில்கள்; –கூஜந்தம் ராம ராமேதி மதுர அஷரம் -வால்மீகி கோகுலம்-அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்.–ஒரு வியசனம் இன்றிக்கே ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் -முகம் பார்க்கைக்குச் சொல்லுகிற பாசுரம் இது போலே காணும்.-இந்த ஒலி செவிப்பட்டால் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாது என்றிருக்கிறாள்-யான் இரந்தேன் –-அவன் தான் இரக்க இருக்கக் கடவ வேண்டப்பாடுடைய நான் இரந்தேன்;-ஆள் விடுவானும் இரப்பானும் எல்லாம் தானே அன்றோ.-புருஷகாரத்திற்கு வழியாக எல்லாராலும் இரக்கப்படும் யான் இரந்தேன் -நியமிக்கிறேன் அல்லேன், இரக்கின்றேன்.-இரப்பார் காரியம் செய்தறவேணும் என்னும் நினைவாலே ‘இரந்தேன்’ என்கிறாள்.-இரந்தேன் என்று அவற்றின் நெஞ்சிலே புண்படுத்துகிறாள்.
பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,-‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,-‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி. ‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் – அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.
சேற்றில் வாளை துள்ளும் –-பிரளயத்திலே கொண்டு போய் விட்டாலும் யானைக் கன்று போலே செறுக்கிச் சேறு ஆக்குமாயிற்று வாளைகள்.-சேதனம் அசேதனம் என்னும் வேறுபாடு இல்லாமல் களித்து வாழ்கின்ற தேசமாயிற்று.-அவ்வூரில் பொருள்கள் செருக்கி வாழா நிற்கச் செய்தே கண்டீர் நான் பிரிந்திருந்து தூது விடுகிறது.-
ஆற்றல் ஆழி அம் கை அமரர் பெருமானைக் கண்டு –-அடியார்கள் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று நோவு பட்டு இருப்பான் ஒருவனுமாய்,
அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய்,
நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை.
அன்றிக்கே,-‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு,
அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக் காட்டிலும் கிருபையை யுடைய திருவாழியைக் கையிலே யுடையவனை என்னுதல்.
அன்றியே,-‘ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக் கொண்டு,
பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேஸ்வரனை என்று பட்டர் அருளிச் செய்வர்.(ஆற்றல் -வலிமை கீழே -இதில் -பிரிந்தும் குறி அழியாமை -குத்தல் -பட்டர் நிர்வாகம் )-
—————-
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண்கிளியே!
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7-
ஒரு வண்ணம் சென்று புக்கு –-இதற்கு இரண்டு படியாக அருளிச் செய்வர்கள்.
இத் தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளாய் இருப்பர்;
மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர்.
அன்றிக்கே,-செல்லும் வழி, நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்;-அதிலே கால் தாழாதே வருந்தி ஒருபடி சென்று புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்.
என்னைக் கண்ட உங்களுக்கு இனிமையிலே நெஞ்சு செல்லுதல்,-பரிபவம் கண்டு இறாய்த்தல் செய்யலாம்படியோ இருக்கிறது. –-பிறர் காரியம் செய்வார்க்கு அவை பார்க்க ஒண்ணுமோ?
திருந்தக் கண்டு –-என்னைப் போன்று மனத்தால் அன்றிக்கே வெளிப் படையாகப் புறக் கண்களால் கண்டு.-இவ் விஷயத்தில் காட்சி யன்றோ பிரயோஜனம், அது உங்களுக்கு முற்படப் பெற்றதே என்பாள் ‘கண்டு’ என்கிறாள்.-இத் தலையில் பசலை நிறத்தைக் கண்ட நெஞ்சாறல் எல்லாம் தீரும்படி, கலவியிலும் பிரிவிலும் ஒருபடியாயிருக்கும் வடிவைக் காணப் போகிறாய் அன்றோ -எப்பொழுதும் ஒருபடிப்பட்டதான திவ்விய மங்கள விக்கிரஹத்தை யுடையவன்” என்று சொல்லளவேயாய்ப் போகை யன்றிக்கே
அதனை அநுஷ்டான பர்யந்தமாக்கிக் கொண்டிருக்கிற வடிவைக் காண்பாய்-
———-
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8-
எனக்கு –உங்கள் சொற்கேட்டுத் தரிக்க இருக்கிற எனக்கு.-ஒன்று உரையாய் –
எனக்கு அவன் படிகள் எல்லாம் சொல்ல வேண்டா; ஒன்று சொல்ல அமையும்.
போகத்துக்கு அன்று இவள் தேடுகிறது, சத்தையை நோக்குகைக் கன்றோ பார்க்கிறது.ஓன்று உரை – மறு மாற்றம் ஓன்று சொல் /அடையாளம் ஓன்று சொல் /அவன் இடம் என் விஷயமாக ஓன்று சொல் -மூன்றும் சொன்னவாறு – அவதாரத்தில் ஒன்றும் இங்கு இரண்டும் சொன்னபடி – ஆக, இந்த இரண்டாலும் ஆசாரியன் வார்த்தை கேட்டுத் தரித்தல், அவன் அபிமானத்தாலே தரித்தல் ஒழிய, வேறு ஒன்று இல்லை
வாராமை அவன் குற்றம் அன்று, நிலப் பண்பு கண்டீர் கோள்-காற்கட்டு ஒன்று இரண்டாகில் அன்றோ வரலாவது, அவை நாலு பாடும் சூழ்ந்து நிற்க அவனாலே வரப் போமோ-ஒரு திக்குக்கு ஒன்றே அமைந்திருக்கிறது காணும்.
பெரு நீண் முடி –உபய விபூதிகட்கும் கவித்த முடியை யுடையவன்–உபய விபூதிகட்கு முடையவனாயிருத்தலுக்கு மேலே அன்றோ, அவ் வூர்க்குக் கடவனாயிருத்தல்-இவள் தன்னைத் தோற்பித்துச் சூடின முடி என்னுதல்.(பட்டர் நிர்வாகப்படி என்னை வஞ்சித்த ஓர் அரசே )
கரும் திண் மா முகில் போல் திருமேனி – கறுத்துத் திண்ணியதாயிருப்பதொரு மஹா மேகம் போலே யாயிற்று வடிவு இருப்பது.
அன்றிக்கே,-சிரமத்தைப் போக்கக் கூடிய நிறத்தை யுடைத்தாய், நிலைத்திருப்பதாய் அளவிடற் கரியதான மேகம் போலே இருக்கும் வடிவு என்னுதல்.
அன்றிக்கே,-நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம்.-கறுத்து அகவாய் திண்ணியதா யிருப்பதொரு மேகம் பெறலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர்.
திருமேனி அடிகளையே – வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்ட போதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை.
அன்றிக்கே,-அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச் செய்வர்.-
—————–
அடிகள் கை தொழுது, அலர்மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறுகொண்டே.–6-1-9-
அடிகள் கை தொழுது –-திருவடிகளைக் கையாலே தொழுது- அவனுக்கு மறுக்க ஒண்ணாத செயலைச் செய்து-திருவண் வண்டூர் உறையும் –-விடியாத ஊரிலே என்னை வைத்தான், விடியும் ஊரிலே தான் இருந்தான்.-அவன் எந்த விடத்தில் நின்றாலும் அவ் விடம் விடியுமத்தனை அன்றோ.-“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்”-கண்ணனை-நெடுமாலை – அடியார்கட்கு விரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண் பாராத ஆச்சரியத்தை யுடையவனை.-கண்ணனை–அடியார்கட்குத் தான் கையாளாக நின்று தன்னைக் கொடுக்குமவனை.-நெடுமாலை –-இத்தனையும் செய்தாலும் ‘ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்னும் வியாமோகத்தை யுடையவனை.
கடிய மாயன் –-தன்னைப் பிரிந்தார் படும் நோவறியாத கொடுமையை யுடையவனை.
கண்ணனை நெடுமாலை –-எளிமை-காதா சித்தம்- ஒரு கால விசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது-இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த செயல் கண்டீர் என்று அருளிச் செய்வர் பட்டர்-திறம் கூறுமின்; -ஒரு மஹா பாரதம் இறே-.-வேறு கொண்டு கூறுமின் –-செவிப்படாதபடி ஓலக்கத்திலே சொல்லாமல் ஏகாந்தத்திலே சொல்லுங்கோள்.-அதாவது, அவனும் அவளுமாயிருந்த இடத்திலே சொல்லுங்கோள்-அதனைப் பயனுடையதாகச் செய்கின்ற-ஜீவிப்பிக்கும் – அவள் சந்நிதியிலே சொல்லுங்கோள்.-நல் வார்த்தை சொல்லுவாரும் அவனுமான இடத்தே சொல்லுங்கோள்.
என் திரு மார்வற்கு என்னை’-திருவாய்மொழி, 6. 8 : 10.- என்றும்,
‘திருமாலார்க்கு என் பிழைத்தாள்’ -திருவாய். 1. 4 : 7.-என்றும்,
‘மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு’ என்றும்-திருவாய். 9. 7 : 6.-அன்றோ இவர் தமக்குப் பாசுரம்.-தூது அனுப்பிய மற்ற திருவாய்மொழிகளிலும் பிராட்டி முன்னாகத் தானே என்பதால்-இங்கும் அதே போலே என்றவாறு-
————-
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10-
என்னையும் உளள் என்மின்கள் – இன்னமும் நோவு படுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள்.-இதற்கு, “‘இத் தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை;-இத் தலையில் சத்தை உள்ளமையை அறிவியுங்கோள்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு பிரவாதம் உண்டு;-அதாகிறது, ஒரு தலை உண்டானால் ஒரு தலை இன்றிக்கே இராது; இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனை யாயிற்று. அதில், தாம் உளராகையால் இத் தலையும் உண்டு என்கை நிச்சிதம்;
ஆன பின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்கு எடுத்துப் பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய், ‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும் இல்லையே வண்டுகள் குறித்து இத்தலையில் சத்தை இன்றி இருப்பார் உளள் ஒருத்தி நானும்
ஒருத்தி என்று சொல்ல -பிள்ளான் நிர்வாஹம்
இத்தலை இல்லை என்றால் அத்தலையும் இல்லையே யாகில் ரஷய வர்க்கத்தில்
நானும் உண்டு எம்பெருமானார் நிர்வாஹம்
மணி மாமை குறையிலனே-நிறம் தொடக்கமானவை இல்லாதவோ பாதி சத்தையும் இல்லை என்று நினைத்து இருப்பான் –உளள் வார்த்தைக்கு சுவாரஸ்யம் பிள்ளான் நிர்வாகம்
ஏறு சேவகனார்க்கு-வார்த்தைகளுக்கும் சுவாரஸ்யம் -வைத்து எம்பெருமானார் நிர்வாகம் –
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன் – நம் ஆசாரியர்கள் வியாபக மந்திரங்கள் மூன்றிலும் -(சார தமமான திருமந்திர விவரணமான)-துவயத்தையே ஆதரிக்குமாறு போலே.-இவை தாம் ஆறு பதங்களை யுடையன வன்றோ.
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியில் முதல் ஓதுகிற பொருள் முடிவான சுருக்கித் தெய்வ வண்டாய் அன்னமாய் அமுதம் கொண்டவன் -திரு மந்திர விவரணம் தானே த்வயம் –-அதனால் இத்தையே ஆதரிப்பார்கள் என்றபடி –
வெறி வண்டு இனங்காள் –-உங்களுக்கு என் காரியம் செய்தல்லது நிற்க ஒண்ணாதா யிருந்தது.-கலவியால் உண்டான வேறுபாடு அடங்கலும் வடிவிலே தோன்றும்படி யாயிருந்தது.-வெறி – வாசனை. வாசனையை யுடைத்தா யிருக்கை.
தனித்துப் போனாலும் வழிக்குப் பாதேயம் போந்திருந்ததே! என்றது, உடம்பை மோந்து கொண்டு போக அமைந்து காணும் இருக்கிறது என்றபடி. இவை தமக்குப் பிரிவு இல்லை என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள்.-“ஸர்வ கந்த:” என்ற விஷயத்தோடே அணைந்த இவளுக்கு இவற்றின் பரிமளம் கண்டு ஆச்சரியப் படும்படி காணும் வாசனையும் கூட மறந்தபடி.
——
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11-
மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. –அருணோதயம் -வந்த பின்பு தானே ஸூர்யோதயம் –-அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக் கொண்டாற்போலே, பிரணய ரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேர விட்டுக் கொண்டபடி.-எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம்.-அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே.
விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனை யன்றோ.-அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றே யன்றோ இது.-
மின்னிடை மடவார்க்கு மதனர் – காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்–இவர் தூது விடுகிற விஷயத்துக்கு போக்யராவார்-.-எல்லா வகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக் கடவது.-
தாமரை யன்ன பொன்னார் அடி –-‘அது போல’ என்றும், ‘அது தான்’ என்றும் சொல்லக் கடவதாயிருக்கும்.
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply