ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
தமிழர் வியாக்யானத்தில் உள்ள சங்கதி-நல் தாய்-செவிலித்தாய்-உடைய நங்கையார் நல் தாய் என்றும்
செவிலித்தாய் பாகவதர் போல் என்றும் கொள்ளலாமோ என்னில் அது போல் இல்லை
உமக்கும் நமக்கும் இடையே இல்லை –-கோயில் ஆழ்வார் இரண்டையும் பாதுகாக்கும் நல் தாய்
அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும் மதுரகவி -வேறு ஒன்றும் அறியாதவர் -செவிலித்தாய் –-தோழி பாசுரமாகவும் இருக்கலாம்
என் சின் மொழி -தாய் பாசுரமாகவே இருக்க வேண்டும்-காலம் குறித்துச் சென்ற தலைமகன் வந்து அருளாமையால்-ஆற்றாமை மிக்கு இருக்கும் தலைவி ஊரார் பழிக்கு ஆளாக பழிக்கு செவிலி அஞ்சிய துறை-
என்னுடைய சின் மொழி -தனக்கு உடைமை யாதல்-தோழி இருக்க முடியாதே-தாய் வார்த்தையாகவே இருக்கும் -என் மகள் -வாய்ப்பாடு -இருக்கும் –அவ்வாய்ப்பாடு தோன்றாமல் தோழி பாசுரம் இருக்குமே
இந்த அடையாளம் கொண்டே அறியலாம்-இது பிறளுவதும் உண்டு-அழகிய மணவாள ஜீயர் ஒருவர் மட்டும் தோழி பாங்கி இரங்கிய பாசுரம் என்கிறார்
மேகம் முழக்கத்தைக் கேட்டு தலைவி வருந்த தோழியும் கலங்க தாயார் இவற்றை அறிந்து -உற்ற தோழி -இருவருக்குமாக வாழ்த்து பாடுகிறாள்
நல் தாய் என்பது மரபு இல்லை செவிலித் தாய் ஆகவே இருக்கும் வேறு உடைமையும் இல்லற பணியும் இருக்குமே முகக் குறிப்பை அறிந்து உற்று நோக்க செவிலித்தாய் ஆகவே இருக்க வேண்டும்
செவிலித் தாய் சிறப்பு நக்கினாருக்கு இனியான் சொல்லுமே
ஆழ்வார் திருமேனி ஒன்றையே நோக்கி இருக்கும் மதுரகவி ஆழ்வார் போல்வார் என்றபடி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அகத்துறை பாடல்களையும் இவர் நாவில் நின்று தானே அருளிச் செய்கிறான் –
இவள் இருந்து பொய் என்னும் காட்டில் பொய் ஆகாது இறே-ரனோத் யததாம் இவ வாரணானாம்-கிஷ்கிந்தா காண்டம் -28-32-என்று-ஆணை அணி வகுத்தால் போல- மேகம் நாலு மூலையும் கையும் அணியும் வகுத்து வர்ஷிகிற படியை கண்டு இவள் மோஹிக்க-மின்னல் முகப்படாம் போல் ஆனை பிளிறுவது போல் மேகம் கர்ஜிக்கும்-சீதாபிராட்டி உடன் என்று இவற்றை நாம் அனுபவிப்போம் –பெருமாள் இளையபெருமாள் இடம் ஆற்றாமையைச் சொன்ன ஸ்லோகம் -“எம்மின் முன்னவருக்கு மாய்வர் “-திருவாய் மொழி -1-1-5 என்னும் படி இவள் உடைய மோகத்தை கண்டு தோழியும் மோகிக்க
இவ் அளவிலே உணர்ந்து இருந்த தாயார் இவ் அவசாதம் நீங்கிடுக என்று-ரஷா விதாநம் பண்ணுகிறாள்-
செவிலித்தாய் பழிக்கு இரங்கல் என்பது துறை-இன்ன காலத்திலேயே வருகிறேன் என்று சொல்லிப் போன நாயகன் வாக்குத் தவறிதற்கு ஆற்றாத தலைவிக்கு நிகழும் பழிக்கு செவிலித்தாய் இரங்கல்-அழகிய மணவாள சீயர் உரையில் பாங்கி பழிக்கு இரங்கின பாசுரம் என்பர்
நம்பிள்ளையும் பெரிய வாச்சான் பிள்ளையும் தாய் பாசுரமாகவே வியாக்யானம் செய்து இருப்பதாலும்
என் சின் மொழிக்கு -என்று தனது உடைமையாக கூறி உள்ளதாலும் தாய் பாசுரமாகவே கொள்ள வேண்டும்
இப்படி அனுபவ யோக்ய கால தர்சனத்தாலே ஈடுபட்ட இவருக்கு ஈஸ்வரன் சடக்கென அனுக்ரஹம் பண்ணாதே விளம்பிக்கிறபடியைக் கண்டு ஸூஹ்ருத்துகள் ஈடுபட்டு உரைத்த பாசுரத்தை
கார் காலத்தில் ஈடுபட்ட தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே பாங்கி பழிக்கு இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு அவதாரிகை
தோழியானவள் காலத்தை மயக்கி இவளை ஆஸ்வசிப்பித்து வார்த்தை சொல்லா நிற்க-அவ்வளவில் பிரிந்து தனி இருப்பாரைக் காலத்தை மயக்கி தரிப்பிப்பார் யுண்டாகில் தரிப்பிப்புயுங்கோள் என்று வாய் பற்றிக் கொண்டு வந்து தோற்றின சில மேகங்கள் அவற்றின் உத்யோகத்தைக் கண்ட திருத்தாயார் வார்த்தையாகாச் செல்லுகிறது
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-அவதாரிகை
இப்படி வர்ஷா காலத்திலேயே அத்யாவசன்னையாகும் தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
இவள் தாயார் ஊரார் சொல்லும் பழிக்கு இரங்கி அவசன்னை யாகிறாள் இப்பாட்டில் –
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-செவிலி பழிக்கு இரங்குதல் –
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்; இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-இங்கு சின்மொழி)
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று-
1-நாங்கள் சஞ்சரியா நிற்க-ஸ்திரிகளின் அடக்கத்தை நோக்குவன் என்பார் யார் ?–2-பெண் பிறந்தாராய் இருந்து வைத்து எங்கள் சந்நிதியில் தம் தாமுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்கி கொடு இருப்பார் யார் ? என்றும்-கார் கொண்டு-கறுத்து கொடு–இன்னே மாரி கை ஏறி அறை இடும் காலத்தும் -அதி வ்ருஷ்ட்டியான வர்ஷம் ஆனது அணிக்கு அணியும் தூசியும் ஆக தோற்றின படி-அறை இடும் காலத்து —அறை கூவுகிற படி–மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வாலியை அறை கூவினார் போல் —இது அங்கனும் அன்றியே , தனி நின்று வென்ற படி-அங்கு ஓர் ஏக வீரனான வாலியை–
இங்கு ஓர் அபலையை —அங்கு சொல்லிற்று ஒரு அறிவானனான சேதனன் — இங்கு அசேதனம்-வாழியரோ– இவ் அவசாதம் நீங்கி ஜீவித்திடுக–
சாரிகை புள்ளார்–
அபரிகரனாய் வாராது இருந்தான் அல்லன் கிடீர் —பதினாலாண்டு கூட வந்த வழியை இன்றும் போகலாமோ என்று இருக்க வேண்டாத படி-சகசாரியான பரிகரத்தை உடையவன் ..-ஆசீதரை இட்டு தன்னை நிரூபிக்கும் படி அவர்களுக்கு வைத்து கொடுத்த தரம்-1-பெரிய திரு அடி மேலே போரா இருத்தல்–2-திரு ஆழியை கையிலே உடையன் ஆதல்–3-பெரிய பிராட்டியாரை எனக்கு என்ன பெறுதல்–
4-திரு துழாயை தனக்கு தாராக உடையன் ஆதல் –இவை இறே சர்வாதிகார லஷணம்-
அம் தண் துழாய் –
போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை —சந்தாந கரணி -விசல்ய கரணி-என்னுமா போலே —சந்தான கரணி -வெட்டுண்ட காயம் சேர்க்க -புள் -சேர்த்து வைக்கும்-விசல்ய கரணி -அம்பு பட்ட காயம் தீர்க்க -உள்ளத்தில் வலி நீங்க திருத்துழாய் )-
இறை கூய் அருளார்–
பிரணயித்வம் தவிர்ந்தால் ஸ்வாமித்வமும் தவிர வேணுமோ ? தாம் வந்து அணைத்து தம் தோளில் மாலை என் மார்பில் கிடக்க பேரா விட்டால் -சத்தா தாரமாக அது தனையும் தந்தால் ஆகாதோ ?தாமே வரவுமாம் (புள்ளார் )-அழைக்க்கவுமாம் (கூய்)-பேறு அத் தலையாகவே என்று இருந்த படி–
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது —
சந்நிவேசத்தில் உள்ளார் எல்லாரும் ஒரு விஷயத்துக்காக இப்படி துடிப்பதே–என் தலையாலே பேறு-என்று இருப்பதே என்று-கை எடுத்து கூப்பிடும் படி ஆயிற்று
சின் மொழிக்கே –
இதுக்கு எல்லாம் பருவம் இல்லை கிடீர் —சொல் என சொல்ல மாட்டாத பருவம் கிடீர்–இவ்வளவென்று கிடீர் பழியின் கனம்-
தாய் வார்த்தை இதில் –வீர வாதம் செய்து மேகம் -என் முன் ஸ்த்ரீத்வம் காப்பார் யார்
–கார் மாரி கொண்டு கை ஏறி -படை அணி வகுத்து–மேகங்கள் கர்ஜிப்பதை பார்த்தால்
எங்கள் முன்னே ஸ்த்ரீகள்-நாண் மடம் அச்சம் – அடக்கத்தைக் காத்துக் கொள்வார் உண்டோ -என்று
உத்ப்ரேஷித்து அருளிச் செய்கிறார் – கார் கொண்டு -கோபம் கொண்டு என்றுமாம்-கறுப்பும் சிகப்பும் வெகுளிப்பொருள்-கார் -கருமை என்னும் பண்பின் விகாரம்-கார் மாரி கொண்டு கையேறி –என்று மாற்றி -மேகங்கள் மழையைக் கொண்டு அணிந்து ஏறி என்றுமாம்-கையேறிதல் –படை அணி வகுத்தால் போல் வரிசைப்பட்டு நிற்றல்-மேகத்தின் கர்ஜனையை அறை கூவுதல் என்கிறார்-சாரிகைப் புள்ளார்–எவ்வளவு தூரத்தில் இருந்து வர வேண்டி இருந்தாலும் பெரிய திருவடி வாஹனம் உண்டே
விரைந்த நடையும் வட்டமிட்ட நடையும் –சாரிகை—தண் துழாய் — அருளார்–கலவி தந்து விடா விடிலும்
சம்பந்தம் கொண்ட திருத் துழாயும் தருகிறாய் இல்லையே –உயிர் தரும் மூலிகை போலே அன்றோ திருத் துழாய் –கூய் அருளார்–திருத் துழாய் தாரா விடிலும் அன்போடு அழைப்பதும் அரிதாய் இருந்ததே-என் சின் மொழிக்கே –சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது -இந்நிலையிலும் வந்திலனே என்று பல படியாக தோன்றினவாறு எல்லாம் பேசுமே சேரி-சின் மொழி-இளம் பருவத்தள்-நாலு வார்த்தைகளை சேர்த்துச் சொல்ல திறமை போராமல் குதலைச் சொற்களை யுடையளாய் இளம் பருவத்தனள் செயல் முழுதும் அற்றுச் சில் சொல் மாத்திரமே மிச்சமாக உள்ளவள் என்றவாறு-
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகு பார்த்து இருக்கும் பெண் பிறந்தாரில் தங்கள் பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று-இன்னே-இப்படியே–கார் கொண்டு மாரிகை ஏறி-மேகங்களானவை வர்ஷித்துக் கொண்டு அணிந்து ஏறி–அறை இடும் காலத்தும்-யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்–வாழியரோ சாரிகை புள்ளார்-இவ்வளவிலும் தம்முடைய வைபவத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ண இருக்கிற இவர்–சாரிகை புள்ளார்-ஆ பன்னர் இருந்த இடத்தில் சடக்கென வருகைக்கு ஈடான பரிகரத்தை யுடையவர்–சாரிகை என்று மண்டல ஆகார கதியைச் சொல்லுகிறது
தர்ச நீய கதியான புள் என்றபடி(சிறப்பான நடத்தை ஆச்சாரம் அனுஷ்டானம் வேதம் தானே சொல்லும் ) ஆர்ந்து அம் தண் துழாய்-அழகிய குளிர்ந்த திருத் துழாயை–இறை கூய் அருளார்-ஏக தேசமும் அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்-கொடுக்கும் போதை ஸாந்த்வ வாதமும் தேட்டமாய் இருக்கிற படி (இறை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை இங்கு ஏகதேசம் )சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –என்னுடைய மித பாஷிணி யானவளுக்கு ஊரார் கை வகுத்து உறும்படியான பழியாய்ப் ;பலித்தது–கை ஏறும் பழி என்று கை எடுத்து உரைக்கவுமாம் –
இத்தால்
காரிகையார் –என்று ஸ்த்ரீத்வத்தைச் சொல்லுகையாலே பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-ஸூந்தர –37-62- என்று இருக்கும் ஸ்வரூபத்தைச் சொன்னபடி-நிறை காப்பவர் யார் -என்று இந்த ஸ்வரூப பூர்த்தியை யாராலே நோக்கலாம் என்று அபிப்ராயம்-கார் கொண்டு என்று தொடங்கி ஸ்மாரக முகத்தாலே ஆகர்ஷகமான விக்ரஹத்தையும் அனுபாவ்யமான குண அபி வர்ஷத்தையும் ஆவிஷ் கரித்து–இப்படி அனுபவ யோக்ய அவஸ்தையானது அபி முகமாய் த்வரிப்பிக்கச் செய்தேயும் மங்களா ஸாஸனம் பண்ணும்படி தர்ச நீயமான வாஹன வை லக்ஷண்யத்தை யுடையவர்-போக்யமாய் ஸ்ரம ஹரமான தம்முடைய ப்ரஸாதத்தை ஸ்நிக்த கம்பீரமான திரு மிடற்று ஓசையாலே அழைத்து ஏக தேசமும் கொடுத்து அருளுகிறீலீர்–என் சின் மொழிக்கு-என்று இதனுடைய அபேக்ஷையில் புனர் வசனம் மிகையாம் படி ஸக்ருத் யுக்த அதிகாரிகளால் எங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான அவருக்கு என்றபடி(ஸக்ருத் ஏவ யுக்தி த்வயம் பிரபத்தி ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ இவர் மாறன் சொல் வேராக வீடு )சேரி இத்யாதி-இந்த ஸ்ரேணி யிலுள்ள சாத்விக ஜனம் கை எடுத்துக் கூப்பிடும்படி பழியாய் பரிணமித்தது என்றார் ஆயிற்று –
ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்
காரிகையார் உண்டு -அபலைகள் அவர்களுடைய நிறையுண்டு -அடக்கம் அத்தை ஆர் தான் அறியாதபடி நோக்குகிறார்கள் நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் என்று-கார் கொண்டு–
புறம்பு கறுப்பு அகவாயில் கறுப்பு புறம்பு பொசித்துத் தோற்றிற்று என்னலாய் இருக்கை
இன்னே இதனுடைய ஒருப்பாடு இருந்தபடி கண்டோ உமக்கு இப்படி -என்னும் அத்தனை போக்கிப்
பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லையே–மாரிகை ஏறி-ரண உத்யதா நாம் கிஷ்கிந்தா -28-21-என்னும்படி கையும் அணியும் வகுத்துக் கொண்டு–அறை இடும் காலத்தும்–நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் -என்று அறையோ அறை -என்னா நின்றதாயிற்று-தேந நாதேந மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர -பால -1-68-
அவன் ரக்ஷகன் நாம் ரஷ்யம் என்று ஆச்சார்ய உபதேச மாத்திரம் அறிந்து ஆறி இருக்கலாய் –
க்ரமத்தாலே பெறுவோம் என்று இருக்கலாம்-இவருக்கு அனுபவ பூர்வகமாக அறிந்து –கிருபா குண ஞானம் பிறந்து இரக்கமே உபாயம் -அதுக்கு நான் ஆள் என்று உணர்ந்த பின்பு க்ரம பிராப்தி என்று ஆறி இருக்காமல் -துடிப்பாரே-பேற்றுக்குத் த்வரிக்க வேணுமே-வழி அல்லா வழி மேல் விழுந்து அடைய த்வரிப்பது குற்றம் அன்றே-ஸாஸ்த்ரங்கள் விதித்தாலும் செஞ்சே தீர கங்கணம் கொண்டு – வாஸனை பலத்தாலும் கவனக்குறைவால் -பிராமாதிகமாகவும் அபிராப்த விஷயங்களில் புத்தி பூர்வகமாக குற்றம் நாம் செய்வது போல் பகவத் விஷயத்தில் ஞானாதிக்யத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறலாம் பத்தி மேலீட்டால் தெரிந்தே செய்தாலும் குறை இல்லையே குணாதி விஷயத்தில் விஷய வை லக்ஷண்யம் பண்ண வைக்கும் ஷூத்ர விஷயம் அல்பம் அஸ்திரம் அப்ராப்யம் –இதிலே மேல் விழுந்து இது அநந்தமாயும் ஸ்திரமாயும் ப்ராப்த விஷயமுமாய் அதுக்கும் மேலே குணாதி விஷயமுமாய் –ஆக நான்காலும் இருக்க கைமுதிக நியாயத்தால் செய்வதிலே குறை இல்லையே–
இத்தால் சொல்லிற்றாயிற்று என் என்னில்
ஷூத்ர விஷய ப்ராவண்யத்தோ பாதி பகவத் விஷயத்துக்கு குற்றம் உண்டாகிலும் விட மாட்டாத படியான இவருடைய ப்ராவண்ய அதிசயம் சொல்லுகிறது –பகவத் விஷயத்தில் குற்றமே சொன்னாலும் விட மாட்டார்-கடியன் கொடியின் நெடிய மால் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பர் அன்றோ
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி–காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகைக் கண்டு உகக்கும் பெண்களுடைய பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று-கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி-இன்னே –இப்படியே கார் கொண்டு மாரிகை ஏறி-மேகங்களானவை மேல் மேல் வர்ஷித்திக் கொண்டு அணி அணியாக ஏறி–அறை இடும் காலத்தும்-யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்–வாழியரோ-என்று சிலராலே தமக்கு மங்களத்தை ஆஸாஸிப்பித்திக் கொண்டு–சாரிகை புள்ளார்-மண்டல ஆகார கதியால் ஸாரி விடும் புள்ளுடையவருடைய–அம் தண் துழாய்-அழகிய குளிர்ந்த திருத்துழாயை–இறை கூய் அருளார்
ஈஷத்தாகிலும் மனமுற்று அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்-என் சின் மொழிக்கே –-என் மகளாய்
மித பாஷிணியான இவளுக்கு–சேரி –ஊரார்–கை ஏறும் பழியாய் விளைந்தது-கை வகுத்து ஏறும்படியான பழியாய்ப் பலித்தது–அவனில் பிரவணை யானாய் உனக்கு இத்தனையும் வேணும் காணும் -என்னும்படி ஓர் அவதி அற்றுத் தூற்றுவார்களே என்று அவசன்னை யாகிறாள்
இது இவள் பசி வளர்க்கப் பட்டினி இடா நின்றவன் என்று அறிந்தும் சிலருக்கு அவனில் ப்ராவண்யத்தைத் தவிர்க்கவாய் சேரியர்க்கே பழியாய்த் தன் குலத்துக்குப் பழியாய் விளைந்தது என்னா நின்றாள் –
ஸ்வாபதேசம்-ஆழ்வார் படும்பாட்டை அறிவுடையார் கூறுதல்-காரிகையார் நிறை காப்பவர் யார் என்று – பாரதந்த்ரமே ஸ்வரூபமான இவர் நிலையை அழியாது காப்பார் உண்டோ –கார் கொண்டு இன்னே-மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் – எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும் -குண மழையையும்-நினைப்பூட்டிக் கொண்டு காலம் நேர்ந்து விரைவை யுண்டாக்கவும்–வாழியரோ-சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்–அழகிய வாஹனம் -தவறாத பிரமாணம்-ஸ்ரீ கஜேந்த்ரனுக்கு அருள் செய்தால் போலே விரைய வந்து திரு மிடற்று ஓசையால் இவளை அழைத்து இவளுக்கு அருளுகின்றிலன்–என் சின் மொழிக்கே –சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சொல் அழகு உடையவர் –எங்கள் விருப்பத்துக்கு உரியரான இவர்க்கு–சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது –
சாத்விக ஜனங்கள் எல்லாம் இரங்கி கை எடுத்துக் கூப்பிடும் படி –இப்போது இவர் பழி என்கிறது-பகவத் பிராவண்யத்தை இறே-அத்தை பழி என்பான் என் என்னில்- அத்தலையால் வரக் கண்டு இருக்கும் அத்தனை ஒழிய இத் தலையால் பெற ப்ரவர்த்திக்குமது பழியாய் இருக்கும் இறே –
ஆன பின்பு பழி என்னத் தட்டில் இறே -நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் –
இத்தால்
ஆழ்வாருக்கு பக்த வியதிரேகத்தில் அங்கே சம்பந்தம் உள்ளதால் ஒன்றாலே ஆகிலும் தரிக்க வேண்டும் படி ஆற்றாமை மிக்க படி சொல்லிற்று-
தாத்பர்யம்
வர்ஷாகாலத்தில் வராமல் நாயகியும் தோழியும் மோஹித்துக் கிடக்க-தன்னைப்போல் ஆக்கி
தாயானவள் காலத்தினுடைய -நாயகனுடைய -இரண்டாலும் நலியும் இவளுடைய விரஹ வேதனை
ஸ்த்ரீகள் லஜ்ஜையால் அடக்கிக் கொண்டு -கீழ் மேகம்-நாம் இப்பொழுது புறப்படுவோம் -கண்ணனை நினைவு படுத்த விஜும்ப்ரணம் -கர்ஜித்து -வர்ஷித்திக் கொண்டு -அழிக்க சஞ்சரிக்க
இப்பொழுதாவது வந்து அணைத்தால் ஆகாதோ-அன்றிக்கே முகப்பே கூவிப் பணி கொண்டால் ஆகாதோ-கூவுதல் வருதல் செய்யாமல்-கர்த்ருத்வம் அவனத்துவே போக்தாவும் அவனே
அது இல்லாமல் போனால் -திருத்துழாய் பிரஸாதம் கொடுத்து அருளக் கூடாதோ
இவளது துன்பத்தை க்ஷமிக்க ஒன்றுமே செய்யாமல் அதி ப்ராவண்யம் கண்டு பழி சொல்ல
இவளுக்கு இவ் வேதனை சீக்கிரம் நீங்க வேண்டும் என்று மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –
4-2-பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு-ப்ரவேஸம்-
இராம விரகத்தில் திரு வயோத்தியில் உள்ளார் கூப்பிட்டாற்போலே, தாமும் தம்முடைய உறுப்புகளுமாய்ப்
பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார், ‘முடியானே’ -3-8-என்ற திருவாய்மொழியில்;
இக்கூப்பீட்டை அல்லாதார் மிகச் சிறிய பிரயோஜனங்களுக்காகப் புறம்பே கூப்பிடுகிறபடியைக் கண்டு, ‘இது இவ்விஷயத்திலே
ஆகப் பெற்றது இல்லையே!’ என்று நொந்து, ‘நாம் முந்துற முன்னம் இவ்விஷயத்திலே கூப்பிடப்பெற்றோம் அன்றோ?’ என்று உகந்தார்,
‘சொன்னால் விரோதம்’3-9- என்ற திருவாய்மொழியில்;
‘அவ்வளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தகுந்த உறுப்புகளை உடையோமாகவும் பெற்றோம்,’ என்றார்
‘சன்மம் பலபல’-3-10- என்ற திருவாய்மொழியில்;
அல்லாதார் தங்கள் தங்களுடைய உறுப்புகளைப் பாழே போக்குகைக்கு அடியான ஐஸ்வரிய கைவல்யங்களிலே ஈடுபாடு
உள்ளவராய்க் கேட்டினை அடைகிறபடியைக் கண்டு, அவற்றினுடைய சிறுமை,நிலையின்மை முதலிய தோஷங்களையும்,
சர்வேசுவரன் அடையத்தக்க மேலான பலமாய் இருக்கிறபடியையும் உபதேசித்து,
‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,’ என்றார், ‘ஒரு நாயகம்’ -4-1-என்ற திருவாய்மொழியில்.
பரம புருஷார்த்வம் -பரம பிராப்யத்வம் கல்யாண குணம் காட்டி அருளினார் -ஒரு நாயகம் பதிகத்தில் –
நான்கு -அன்யாபதேசம் -2 தாய் /1 மகள் /1 தோழி பதிகங்கள் –
கிண்ணகத்தில் இழிந்து ஓடும் ஆறு -கரைகள் இரண்டையும் நடுவிலும் ஓடுமா போலே மூன்று தசைகள் -அனைத்திலும் பக்தி ரசம் ஓடுமே –
திவ்ய தேசம் -4-10/திரு நாராயண புரம் மன்னார் குடி சமர்ப்பித்த பாசுரங்கள் இந்த பத்தில்
4-2/6-10-திருவடி பிரஸ்தாபம் எல்லா பாசுரங்களிலும் உண்டு
திருத் துழாய் சம்பந்தத்தையும் அடிக்கடி சொல்லி -சங்க சக்கரம் -6-1 போலே இதிலும் சொல்லி வருவார்
3-3- சகல கைங்கர்யம் பிரார்த்தித்தார் -இதில் முன் காலத்து அனுபவம் -பூத காலம் மட்டும் பிரார்த்திக்கிறார்
பிராசங்கிகமாக, இவ்வொரு நாயகம் அருளிச் செய்தவரே அன்றோ ‘சூழ்விசும்பு அணிமுகி’லும்-10-9- அருளிச்செய்தார்?
இதனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவுள்ளம் பற்றுங்கோள்’ என்று பிள்ளை அருளிச்செய்வர். என்றது,
‘இது கண்கூடாகக் காண்பது போன்று இச்சரீரம் நீங்கிய பின்னர்
அதுவும் காண அன்றோ நாம் புகுகிறது! இனி எத்தனைநாள்?’ என்றபடி.
ஆக மூன்று திருவாய்மொழிகளாலும்-வீடு -சொன்னால்- ஒரு – இப்படிப் பரோபதேசம் செய்த இது,
சமுசாரிகள் திருந்துகைக்குக் காரணம் ஆகாமல்.
அத்தாலும் தமக்குப் பகவானிடத்திலே விடாய் பிறந்தபடி சொல்லுகிறார் இதில்.
அத்தாலும்–உம்மைத் தொகை -முடியானே பதிகத்தில் கரணங்கள் விடாய்த்தாலும் -இந்த உபதேசத்தாலும் என்றபடி –
‘அவற்றை விட்டு அவனைப் பற்றுங்கோள்,என்றது, மற்றைய விஷயங்களினுடைய தோஷங்களைச் சொல்லுதல்
முன்னாகப் பகவானுடைய வேறுபட்ட சிறப்பினைச் சொல்லி,
‘அவனைப் பற்றுங்கோள்; மற்றைய விஷயங்களை விடுங்கோள்,’ என்றே
அன்றோ அருளிச் செய்தது?-
அது அவர்கள் திருந்துவதற்குக் காரணமாகாமல் தமக்குப் பற்று மிகுதற்குக் காரணமாயிற்று;
ஸ்ரீ விபீஷணாழ்வான் இராவணனுக்குச் சொன்ன நலம் அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல்
தான் பெருமாளைப் பற்றுதற்குக் காரணம் ஆனாற்போலேயும்,
ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் இரணியனுக்குச் சொன்ன நலம் அவன் நெஞ்சிலே படாமல் தனக்குப் பகவானிடத்தில் பத்தி
மிகுதற்குக் காரணம் ஆனாற்போலேயும்,
‘வீடுமின் முற்றவும்’, ‘சொன்னால் விரோதம்’, ‘ஒரு நாயகம்’ என்னும்
இம் மூன்று திருவாய்மொழிகளிலும் பிறரைக் குறித்து அருளிச் செய்த நலம் அவர்கள் திருந்துவதற்குக் காரணம் ஆகாமல்,
மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே
தமக்கு அவன் பக்கலிலே காதல் நூறு கிளைகளாகப் பணைக்கைக்குக் காரணம் ஆயிற்று என்றபடி.
சங்காயம்–ஆனைப்புல்-பயிர் போலவே இருக்கும் -ஏமாற்றி கெடுக்கும் -கைவல்யம் என்றவாறே-
இவர்களுக்குக் களையாவது,
1-2-பகவானுக்கு வேறுபட்ட விஷயங்களும்,
3-9-சேவிக்கத் தகாதாரைச் சேவை செய்து திரிகையும்,
4-1-ஐஸ்வர்யத்தைப் புருஷார்த்தம் என்று இருக்கையும்.
சங்காயமாவது, பயிர்களின் இடையிடையே முளைத்து,
அறியாதார்க்குப் பயிர் போலே தோற்றி, அதனை வாரிப் பொகடாத போது
நெல் பதர்க்கும்படியாய் இருப்பது ஒன்று.
அப்படியே கைவல்யமும்.
இந்தக் காதற்பெருக்கும் இப்படிச் செல்லாநிற்கச் செய்தே, முன்பு ‘முடியானே’-3-8- என்ற திருவாய்மொழியில் பிறந்த விடாய்
வேறு ரசங்களாலே மூடப்பட்டுக் கிடந்தது;
அந்த விடாய் தலை எடுத்து, ‘தேசத்தாலும் காலத்தோடும் தேசத்தோடும் கூட்டி
இப்போதே அனுபவிக்க வேண்டும்,’ என்னும் விடாயையும் பிறப்பித்தது;
அவை அப்போதே கிடையாமையாலே அந்த விடாய்தான் வேறு நிலையைப் பிறப்பித்தது;
அந்த நிலைதான் சர்வேசுவரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி நிலையாய், பிராட்டி தான் மயங்கினவளாய்க் கிடக்க,
அவள் நிலையைப் பார்த்த திருத்தாயார்,
‘தேசத்தாலும் காலத்தாலும் கை கழிந்த அவன் படிகளையும்
அந்த அந்தத் தேசத்தோடும் காலத்தோடும் கூட்டி இப்போதே பெற்று அனுபவிக்க வேண்டும் என்கிறாள்,’
என்கிற பாசுரத்தாலே தம் நிலையைப் பேசுகிறார்
திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, ‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி
செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே,
‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ?
அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடி யாலேயும்,
தன் ஆசையின் மிகுதி யாலேயும்
இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படா நின்றாள் என்கிறாள்.
இரண்டாம் திருவாய் மொழியிலே
கீழ் -இதர புருஷார்த்தங்களுடைய அபகர்ஷ உபதேச பூர்வகமாக ஈஸ்வரனுடைய பரம ப்ராப்யத்வத்தை உபதேசிக்கையாலே
ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அனுசந்தித்து அவ்வழியாலே பஹு வித சஹஜ போக்ய ஆகார யுக்தனான
சர்வேஸ்வரனுடைய விப்ரக்ருஷ்ட அபதானங்களில் போக அபி நிவேச யுக்தராய்
அவனுடைய வடதள ஸாயித்தவத்தையும்
கோபிகா லீலா சங்கித்வத்தையும்
த்ரை விக்ரம பிரகாரத்தையும்
பரத்வ வைபவத்தையும்
சப்த ருஷப நிரசனத்தையும்
ஸ்ரீ வராஹ ப்ராதுர் பாவத்தையும்
அம்ருத மதன வ்ருத்தாந்தத்தையும்
லங்கா நிரசனத்தையும்
அசாதாரண சிஹ்னங்களையும்
ஆபரண சோபையையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே போக்யதா ஸூ சகமான திருத் துழாய் விஷயமாகத்
தமக்குப் பிறந்த ஆதர விசேஷத்தைப் பரிவார் பார்ஸ்வஸ்தர்க்குச் சொல்லுகிற பாசுரத்தை விஸ்லிஸ்டையான நாயகியினுடைய ஆர்த்தி அதிசயம் கண்ட தாயாரானவள் வினவினார்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-
பாலன் ஆய் –கலப்பு அற்ற பிள்ளைத்தனத்தை உடையனாய்; ‘படியாதும் இல் குழவிப் படி’ என்னக் கடவது அன்றோ?-ஏழ் உலகு உண்டு –‘இது சரிக்கும்; இது சரியாது,’ என்று அறியாமல் ஏதேனுமாக முன்பு தோன்றியதை வாயிலே எடுத்து இடும்படி ஆயிற்றுப் பருவம்.ரக்ஷகன் உடைய வியாபாரம் ஆகையால் ரக்ஷணம் ஆயிற்று-
அவன் பொறுக்கும் செயலைச் செய்தானாகில், இவளும் பொறுக்கும்படியானவற்றை ஆசைப்படாளோ?’ என்பது தாயாருடைய உட்கோள்.
ஆல் இலை –அப்பொழுது தோன்றியது ஓர் ஆல் இலையிலே. என்றது, ‘அவ்வடம் பண்ணிக்கொடுத்த சுத்த பத்திரத்திலே’ என்றபடி,-அவ்வடம் பண்ணிக்கொடுத்த’ என்றது, ‘வேறு படுக்கை படுப்பார் இல்லை,’என்றபடி.-அவ்வடம் – அந்த ஆலமரம். சுத்த பத்திரம் – வெற்று இலை
‘அண்ணலார் தாள் இணை’ -அவன் இளமைப்பருவத்தில் பாதுகாப்பதில் குறிக்கோளாய் இருப்பது போலே ஆயிற்று இவள் மயங்கி இருக்கும் காலத்திலும் முறையில் கலக்கம் அற்று இருந்தபடி.-ரஷணம் பாலனாய் இருந்தாலும் விடாதவன் போலே சேஷத்வத்தில் இவள் கலக்கம் அற்று இருக்கிறாள் –அடியோம் என்றும் -அடிச்சியோம் -நாயகி -தேறியும் தேறாமால் இருந்தாலும் சேஷத்வம் மாறாதே-–அடிமையாக உள்ளவன் பற்றுவது ஸ்வாமியினுடைய திருவடிகளை அன்றோ?-தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் – இப்படி இவள் ஆசைப்படுகைக்கு அடியிலே பச்சை யிட்டாள் காணும்.-பிராஹ்மணன் பிச்சு ஏறினாலும் ஓத்துச் சொல்லுமாறு போன்று,-இவளும் அடியில் கற்றுப் பழகியதனையே சொல்லா நின்றாள்;தாள் பட்ட தண் துழாய்த் தாமத்திலே -திருவாய். 2. 1 : 2.-அன்றோ வாசனை பண்ணிற்று?-இவளை இப்படி காணும்படியான பாபத்தை பண்ணினேன்
மோஹித்தவளுக்கு துக்க அனுபவம் இல்லை-உணர்ந்து இருந்து கிலேசப் படுகிறாள் தான் ஆகையால் –வல்வினையேன் -என்கிறாள்-
—————-
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-
குரவை பிணைந்தவர் –அவர்களோடு தன்னைத் தொடுத்தபடி.-இதனால், ‘என் பருவத்தினை யுடைய பெண்கள் பலர்க்கும் உதவினவர்,-அவர்கள் எல்லார் விடாயையுமுடைய எனக்கு உதவத் தட்டு என்?’ என்னா நின்றாள் என்றபடி.
ஒவ் ஒன்றில் ஆழ்வாருக்கு சாம்யம் சொல்லி -அனைத்திலும் இவருக்கு ஈஸ்வரனும் சாம்யம் இல்லை -நல் அடிமேல் அணி –பெண்களும் தானுமாய் மாறி மாறித் துகைத்த திருத்துழாய் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.-பிரஹ்மசாரி எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாய் ஆசைப்படுபவள் அன்றே இவள்?-நாறு தூழாய் –-அவர்களும் அவனுமாகத் துகைத்தது என்று அறியுங்காணும் இவள் வாசனையாலே; ‘கலம்பகன் நாறுமே அன்றோ?’
தாயார் மாலை மாத்தின வாசனை வேற நாற்றம் உண்டாகுமே -வாசனை அறிந்தார் அறிவார் -அடி அறிந்தார் அறிவார் —என்றே சொல்லுமால் –நினைத்தது வாய் விடமாட்டாத பெண்மை எல்லாம் எங்கே போயிற்று?-பாவையே –‘எல்லா நிலைகளிலும் தன் அகவாயில் ஓடுகிறது பிறர் அறியாதபடி இருக்கக்கூடிய இயல்பாகவே அமைந்த பெண்மையையுடைய இவள் தன் பேற்றுக்குத் தான் வார்த்தை சொல்லும்படி ஆவதே!-
—————
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-
‘ஓர் ஊருக்காக உதவினதே அன்றிக்கே, ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல் உள்ளது பெறத் தட்டு என்?’என்னா நின்றாள் என்கிறாள்.-கீழும் மேலும் திரு அவதாரபரம் என்பதால் இப்பாசுரமும் திரு அவதாரபரம் என்கிறார்-ஸ்ரீ ஆறாயிரப்படி மட்டும்-பாற் கடல் சேர்ந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம் பொன் துழாய் என்று இவள் கூப்பிடா நிற்கும் என்கிறாள்
சே அடி –‘மா முதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி’ என்கிறபடியே,தலையிலே பூப்போலே வந்திருக்கிற போது மேலே பார்த்தவாறே
அனுபவிக்கத் தகுந்ததாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை. –‘அடியில் ராகம் அன்றோ இப்படி ஆக்கிற்று இவளை?-செவ்விய அடி என்றாய், அடிக்குச் செவ்வையாவது, ‘பொது நின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே, அடியார் அடியர் அல்லார் என்ற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் வைத்த செவ்வை.‘தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே’ என்று ஈடுபடும்படி அன்றோ அடியில் நேர்மை இருப்பது?தோளிற் சார்த்தின மாலை கொடுக்கிலும் கொள்ளாள்’ என்பாள்,-சே அடி துழாய் என்றே கூவுமால்’ என்கிறாள்.
கோதையே –தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமதனைத் தான் படுவதே!
இம் மாலையையுடைய இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலையான இவள் வேறு ஒரு மாலையை ஆசைப்படுவதே! மார்வத்து மாலைக்கு மால் அவன்; அம்மாலுக்கு மால் இவள்.
————
கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-
என்றும் ஒக்க ஓரே தன்மையனாய் இருக்கின்ற பரமபத நிலையன் திருவடிகளில் திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னா நின்றாள்-குணத்திற்குக் கோது இல்லாமையாவது, ஒரு குணத்தை அநுசந்தித்தால் மற்றைய குணங்களிற் போகாதபடி காற் கட்டுகை.
அப்படி இராதாகில், அல்லாத விஷயங்களிற் காட்டில் வேற்றுமை இல்லையே அன்றோ?
சமயிகள் – ஒரோ குணத்தில் கால் தாழ்ந்து மற்றைய குணங்களில் போக மாட்டாதவர்கள்; என்றது,‘சீல குணம் துவக்க வற்று; அதிலும் வீரகுணம் துவக்க வற்று;
அதிலும் உருவ குணமான அழகு முதலானவைகள் துவக்க வல்லன,’ என்று
இவற்றிலே நிஷ்டரானவர்கள் என்றபடி.
இனி, சொன்ன இவர்களை ஒழிய, ‘சத்வித்யா நிஷ்டர், தகரவித்யா நிஷ்டர்,
உபகோசல சாண்டில்யாதி வித்யா நிஷ்டரைச் சொல்லவுமாம்.
சர்வஜ்ஞத்வம் முதலான குணங்களோடு கூடின சொரூபம் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுபவர்கள் சத் வித்யா நிஷ்டர்.
‘குணமும் உபாசிக்கத் தக்கது; சொரூபமும் உபாசிக்கத் தக்கது’ என்று கூறுமவர்கள் தகர வித்யா நிஷ்டர்.
‘கண்களில் வசிக்கின்ற சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் உபகோசல வித்யா நிஷ்டர்.
‘உலகமே உருவாயுள்ள சர்வேசுவரன் உபாசிக்கத் தக்கவன்’ என்று கூறுமவர்கள் சாண்டில்ய வித்யா நிஷ்டர்.
பிரான் பரன் –அவர்களுக்கு இப்படி உபகாரகனான ஸ்ரீவைகுண்டநாதன்; என்றது,
இமையோர் தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்’-திரு விருத்தம்- என்கிறபடியே,-இக் குணங்களை அவர்களுக்கு நிலமாக்கி அனுபவிப்பிக்கையாலே ‘பிரான்’ என்கிறாள் என்றபடி.
பரன் பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதும் –-‘சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி’ என்கிறபடியே,-மிக்க சீர்த் தொண்டரான நித்தியசூரிகள் அவன் திருவடிகளிலே சாத்தினதாய் அதனாலேயே மிகவும் விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று எப்போதும் சொல்லாநின்றாள்.இத் தோள் அழகுக்கு இலக்கு ஆனாரோ, இவளோ, இப்படி அடைவு கெடப் பிதற்றுவார் என்பாள், ‘தடந்தோளி’ என்கிறாள்.-
———–
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—
இங்கே என்னைப் போன்றாள் ஒருத்திக்காகத் தன்னைப் பேணாதே எருது ஏழ் அடர்த்த கிருஷ்ணன் திருவடிகளில் சாத்தின திருத்துழாய் பெறத் தட்டு என்?’ என்னா நின்றாள்-தோள் அழகு அவனைக் காட்டிலும் இவளுக்கு விஞ்சி இருக்கும் ஆதலின், ‘தோளி’ என்கிறது.-அவளுடைய அவயவ சோபையிலே தோற்று அத் தோளோடே அணைக்கைக்காக;-அடுத்த கணத்திலே அவளைத் தழுவப் பார்க்கிறான் ஆகையாலே,
அவளைத் தழுவினாற் போலே இருக்கிறதாயிற்று எருதுகளோடு பொருததும்;
ஆகையாலே அன்றோ ‘எருது ஏழ் தழீஇ’ என்கிறது?-அவளைப் பெறுகைக்குக் காரணம் ஆகையாலே, அவற்றின் கொம்போடே பொருததும்-இக்கொம்போடே சேர்ந்தாற்போலே போக ரூபமாய் இருக்கிறபடி.-வில் முரித்தாலும் இக்ஷ்வாகு வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப் போலே, எருது ஏழ் அடர்த்தாலும்-ஆய்க்குலத்தில் குறை உண்டாகில் பெண் கொடார்கள் அன்றே ஆயர்கள்? ஆதலின், அதனை அடுத்துக் ‘கோவலனார்’ என்கிறது.நாளும் நாள் நைகின்றது –-ஒருநாள் நைகைக்கும் ஆஸ்ரயம் இல்லாத மென்மையையுடையவள், நாள்தோறும் நையா நின்றாள்.-நைவதற்குரிய சரீரத்தையும் கொடுத்து நையப் பண்ணும் விஷயமே அன்றோ?
———-
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-
மாதர் –அழகு. நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னுதல்; –ஆழ்வார் போலே -பெண் தன்மை ஏறிட்டுக் கொள்ள வேண்டாமே–மாதர் என்று காதலாய், ‘சினேகத்தை யுடையவள்’ என்னுதல்.-அஹம் -சிஷ்யாச்சா -தாஸ்யாச்சா -பக்த்யாச்சா -என்றாளே
ஏனமாய் – ‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்’ என்கிறபடியே, காதலி உடம்பு பேணாமல் கிடக்க, காதலன் உடம்பு பேணி இருக்கை காதலுக்குத் தக்கது அன்றே? ஆதலால், ‘மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றியாம் தேசு’ என்கிறபடியே, நீருக்கும் சேற்றுக்கும் இளையாத வடிவை யுடையவனாய்.
ஆதி –வராக கல்பத்தின் ஆதியிலே.–அம் காலம்-அழகிய காலத்தில் -காப்பாற்றுகின்ற சர்வேசுவரன் தன் விபூதியைக் காப்பதற்காகக் கொண்ட கோலத்தை அனுபவிக்கிற காலம் ஆதலின், ‘அம் காலம்’ என்கிறது. கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் –மானஸ குமாரர்கள்- இட்ட திருத்துழாயை ஆயிற்று இவள் ஆசைப்படுகிறது.
இதனையே எப்போதும் சொல்லும்படி பிச்சு ஏறினாள்’ என்பாள், ‘மால் எய்தினள்’ என்கிறாள்.-என் றன் மடந்தையே – ‘அவன் அன்றோ பிச்சு ஏறுவான்?’ என்று இருப்பவளாதலின், ‘என் மடந்தை’ என்கிறாள். ‘இப் பருவத்தைக் கண்டார் படுமதனை இப் பருவமுடைய இவள் படுவதே!’ என்கிறாள்.-அவள் மாதர் மா மண் மடந்தை -இவள் என் மடந்தை -ஆபிஜாத்யம் ஏற்றம்-பேதை- பெதும்பை -மங்கை- மடந்தை -அரிவை – தெரிவை – பேர் இளம் பெண் அவஸ்தைகள் –
———-
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-
‘அமிர்தத்திற்காகத் திருப்பாற்கடலைக் கடைகிற காலத்திலே பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளினவனுடைய திருவடிகளிற் சார்த்தின திருத்துழாயை ஆசைப்படா நின்றாள்,’ என்கிறாள்.-தானே பெண்ணாகி-வானவரை பெண்ணாகி அமுதூட்டியவன் அன்றோ -திருமார்பில் இடம் கேட்க வில்லையே-பிறந்த அன்றே நேரே அமர்ந்து திருக்கல்யாணம் -பிறந்த அன்றே விரோதி நிரசன சீலன் நரசிம்ஹன் –மடந்தையை –
எப்போதும் ஒக்க போகத்திற்குத் தகுதியான பருவத்தை யுடையவளை.
அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் ‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ என்று தன்பாடு ஏற வர, அவளும் தண்ணீர் தண்ணீர் என்னும் படி அம்மா -ஸ்வாமி -இவனும் அம் மா பிராட்டி தனக்கு வேண்டும் என்றபடி – அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின் மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப் பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள்.-
—————-
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-
அவன் சக்கரவர்த்தி திருமகனாய் இருக்கச் செய்தேயும். பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை உடையவனாய் இருப்பது போன்று, அவன் ஏதேனும் ஒன்றாலே வளையம் வைத்தாலும் இவர்களுக்குத் தோற்றுவது திருத்துழாயாயே ஆதலின்,
‘இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் தாள்இணை மேல் அணி துழாய் மலர்’ என்கிறாள். நான் இதற்கு என் செய்கேன் – ஸ்ரீகிருஷ்ணனைப் போலே ஊர்ப் பொது அன்றிக்கே, ஏகதார விரதனானவன் திருவடிகளில் திருத்துழாயை நான் எங்கே தேடும்படி?
நங்கைமீர் –‘நீங்கள் எல்லாவற்றாலும் நிறைந்தவர்களாய் இருக்க, இவள் இப்படிப் படுகிறபடி கண்டீர்கள் அன்றோ? இதற்கு ஒரு பரிகாரம் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறாள். அவன் தான் இன்னமும் அவதரித்து உபகரிக்குமது ஒழிய என்னால் செய்யலாவது இல்லை என்று கருத்து-
——————-
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9-
எங்ஙனே சொல்லுகேன்-இவள் படி பேச்சுக்கு நிலம் ஆகில் அன்றோ நான் சொல்லுவது? என்றது,,-படி எடுத்து உரைக்கும் படி அல்லன் பெருமாள் -திருவடி
‘மனத்தாலுங் கூட நினைக்க முடியாமல் வேத வாக்குகள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்புகின்றன-
சங்கு என்னும் –மலையை எடுத்தாற்போலே பெரு வருத்தத்தோடே சங்கு என்னும். அது பொறுத்தவாறே,-சக்கரம் என்னும் – மீளவும் மாட்டுகின்றிலள், சொல்லவும் மாட்டுகின்றிலள். இரண்டற்கும் நடுவே கிடக்கிற மாலையை நினைத்து,-துழாய் என்னும் –
கண் மலங்க மலங்க விளித்து நடுவில் உள்ள திருத் துழாய் மாலை கண்டு துழாய் என்பாள்
சூர்ய சந்திரர் போலே சக்கர சங்கு பார்த்து இராப்பகல் –‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும் -என்றும்,-‘கூரார் ஆழி வெண் சங்கு’ என்றும் சொல்ல மாட்டுகின்றிலள்.
ஆபத்து மிக்கவாறே ஒருத்தி, ‘சங்க சக்ர கதா பாணே – சங்கையும் சக்கரத்தையும் கதையையும் கைகளில் தரித்திருப்பவனே!’ என்றாள் அன்றோ?
மற்றவரால் ஆபத்து வந்தால் இப்படி முழுக்க கூப்பிடலாம் -இவனாலே வந்ததால் இவளால்
முழுக்க சொல்ல முடியாமல் ஒவ் ஒன்றைச் சொல்லி சோர்ந்து போகிறாள்
என்செய்கேன் – இவளைத் தொடங்கினதைச் சொல்லித் தலைக்கட்டப் பண்ணவோ?
பெண்மையைப் பார்த்து மீளும்படி பண்ணவோ?
என் செய்கோ?-
——————–
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-
கண்ணன் கழல் துழாய்-வண்டுவரைப் பெருமாள் திருவடிகளில் திருத் துழாய் தத் சம்ஸ்லேஷார்த்தம் மங்களமான பூஷணங்களாலே அலங்க்ருதமான தன்னுடைய மென்முலைக்கு என்று மெலியா நிற்கும் -என் செய்கேன் என்று அலற்றுகிறாள் –
அவன் புருஷத் தன்மைக்கு இலக்கணமான கௌஸ்துபம் போலே ஆயிற்று, பெண் தன்மைக்கும் பசலை;-ஆதலின், ‘மின் செய் பூண் மார்பினன் – பொன் செய்பூண் முலை’ என்று விசேடித்துக் கூறுகின்றாள்.-மெலியும் –‘மென்முலைக்கு வேண்டும்’ என்று சொல்லப்புக்கு மெலிவோடே தலைக்கட்டும்.
—————–
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-
‘மெலியும்’ என்று தாயார் கை வாங்கினாள்;‘பெற்றார் பெற்றொழிந்தார்’ என்கிற பாசுரப்படியே உடையவன் – சுவாமி. பின்னையும் உடையவன் கைவிடானே? ஆதலின், ‘மெலியும் நோய் தீர்க்கும்’ என்கிறது.-இப்படிப்பட்ட ஆபத்துகளிலே வந்து முகங்காட்டுவான் என்னும் பிரமாண பிரசித்தியைப்பற்ற, ‘நம் கண்ணன்’ என்கிறது.-இப்படி இவரை விடாய்ப்பித்தவன் அவ்விடாய் போன இடம் தெரியாதபடி நீக்க வல்லன் என்கிற கல்யாண குணங்களை விளக்கமாகச் சொல்லுகிற இந்தப் பத்தையும் கற்க வல்லவர்கள்.-மலிபுகழ் வானவர்க்கு நற்கோவை ஆவர் – வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர். ‘மலி புகழ் வானவர்’ என்றதனால், இவ்வாழ்வாரோடு ஒப்பர்கள் ஆயிற்று அவர்களும். பகவானுடைய பிரிவால் விடாய்க்கைக்கு இடம் இல்லாத சமுசாரத்திலிருந்து இவர் விடாய்க்க வல்லவர் ஆனாற் போலே ஆயிற்று, பகவானோடு நித்திய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே விடாய்க்க வல்லராம்படியும்.- அசம்பாவித விடாய்-இருவருக்கும் சாம்யம் –அயர்வறும் அமரர்களுடைய திவ்ய பரிஷத்துக்கு ஒரு பூஷணம் ஆவர் என்கிறார் –
பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —-32-பக்தி சத சாகமாகப் பணைக்க அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் பாலரைப் போலே -இத்யாதியாலே–இப்படி தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் –ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே சிதிலர் ஆனார் –இதுக்கடி திரு அயோத்தியில் பிறப்பு ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே-இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply