ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -18-கடல் கொண்டு எழுந்தது வானம்-சூழ் விசும்பணி முகில் -10-9–

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

தோழி பாசுரம்-தாய் பாசுரம் என்றுமாம்-அரும்பதம் -சங்கதி சொல்லும்
கீழே தேர்க் காலைக் கண்டு -அழிக்காதே பிரார்த்திக்கும் தலைமைகளைத் தோழி என் என்று கேட்க
இருளிலே பிரிந்தவர் என் சொல்லிப் போந்தார்-வர்ஷா காலத்தில் வருவதாக சொல்லிப் போந்தார்
வர்ஷா காலம் வந்தது அவன் வரவில்லையே என்று வருந்தி கண்ணநீர் பெருகி இருக்க
காலம் மயக்கப் பார்த்து ஆற்றாமையைத் தணிக்கப் பார்க்கிறாள் -என்று சங்கதி கொண்டு அவதாரிகை அருளிச் செய்கிறார்
பிரளயம் வர கடலை மேகம் பருக -சண்டை கடலுக்கும் மேகத்துக்கும்-பாக்கி உள்ள ஜலத்தை மேகம் கொட்டித்து என்கிறாள் -மீன்கள் போல்வனவற்றுக்கு தண்ணீர் தானே தாரகம் -ஆகவே அன்றி -கோபித்து பின் தொடர்ந்து சென்று ஆகாசம் கொண்ட நீரைத் திரும்பப் பெற்று
அது ஒழிந்த -மேகத்தில் மீதம் உள்ள நீரை மேகம் மழையாகப் பொழிய -இது -என்று காட்டுகிறாள்
சங்கையாக சொல்லி நம்புவாள் என்று இரண்டையும் சொல்கிறாள்-கடல் கொண்டு -ஒவ்வொரு வரியிலும் -அர்த்தம் கொஞ்சம் மாறுமே –

துறை கால மயக்கு(ஏழாம் பாசுரம் போல் கால மயக்கு துறையாகும் இதுவும் ..
அது மழை காலம் தொடக்கம் இது முடிவு )-இவள் இவள் ஆகியும் ,(அதி பிரவணை ) அவன் அவனாகையும் ,(சர்வ விலக்ஷணன் )தசை இதுவாகையும், இது அல்லது இல்லையே இருந்த படி (கால மயக்கு சொல்லா விட்டால் இவள் சத்தையே அழிந்து போவாளே )திரு மங்கை ஆழ்வாருக்கு சரணம் புக வேண்டும் போலே–(வந்து உன் திரு அடி அடைந்தேன் என்று தொடங்கி பத்து பாசுரங்களிலும் பத்து விதமாக அருளுகிறார் பெரிய திரு மொழி 1-6-1-அதுக்கும் மேல் பத்து இடங்களிலே சரணாகதி பண்ணினார் ) இவருக்கு கால மயக்கு வேண்டிய படி –கீழ் காண்கிற பதார்த்தங்களை அபலபித்து கால மயக்கு ஏற்பட – இங்கு பதார்த்தங்களை அபலப்பதும் செய்து ,சாஸ்திர சித்த மானவற்றை முன்னிடுவதும் செய்தது –மேகத்துக்கும் கடலுக்கும் அன்யோன்யம் விரோதமாய் பிணங்குகிறது  காண்-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை
இது போய் பகவத் விஷயத்திலே மூட்டும் இறே-இதுவும் ஒரு கால மயக்கமாய் இருக்கிறது
இவர் தமக்குப் பல இடங்களிலும் வருமாயிற்று கால மயக்கு-அவற்றுக்கு எல்லாம் மூல ஹேதுக்கள் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -1-என்ற அநந்தரமே தொடங்கி பகவல் லாபத்தோடே செல்ல வேண்டி இருக்க-அது கிடையாமல் பிறந்த ஆற்றாமையைப் பார்ஸ்வஸ்த்தருக்கு ஆஸ்வசிப்பித்தும்
ஜீவிப்பிக்கிறது பரமாய் இருக்கும் இறே ஆகையால் சொல்லுகிறது
-கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்தைக் குறித்துப் போனானாய்-அக் காலமும் வந்து அவன் வாராமையால் பிறந்த ஆற்றாமை

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-இப்படி விஸ்லேஷ அஸஹரான இவருக்கு அனுபவ யோக்ய காலத்தில் ப்ராப்ய அலாப்ய நிபந்தனமான ஆர்த்தியைக் கண்டு பொறுக்க மாட்டாமல் ஸூஹ்ருத்துக்களான பாகவதர் சொன்ன பாசுரத்தை கார் காலம் கண்டு அழிந்ததலைவி ஆற்றாமை கண்ட பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹ மானை யான தலை மகளுடைய போக யோக்கியமான காலத்தில்
அவன் வாராமையாலே வந்த ஆர்த்தி அதிசயத்தாலே புறப்படும் கண்ணீர் வெள்ளத்தைக் கண்ட இவள் தாயார் அத்தைச் சொல்லிக் கொண்டு இக் காலம் பிரளய காலமேயோ வர்ஷா காலம் தானோ என்று
தானும் ஏங்கி அவசன்னை யாகிறாள் இப்பாசுரத்தில் –

கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்தைக் குறித்து போனானாய் -முக்காலமும் வந்து இவன் வாராது ஒழிய – அத்தாலே ஆற்றாமை மீதூர்ந்து நோவு படுகிற பிராட்டியைக் கண்டு தோழியானவள் அவன் வரும் அளவும் இவளை ஜீவிப்பைக்காக காலத்தை மயக்கி ஆசிவசிப்பிக்கிறாள் -நம்பிள்ளை-
கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்தைக் குறித்தும் போனானாய் அக் காலமும் வந்து இவன் வாராது ஒழிய அத்தாலே ஆற்றாமை மீதூர்ந்து நோவு படுகிற பிராட்டியைக் கண்ட தோழியானவள் அவன் வரும் அளவும் இவளை ஜீவிப்பிக்கைக்காகக் காலத்தை மயக்கி ஆஸ்வசிப்பிக்கிறாளாய் இருக்கிறது -நம்பிள்ளை ஈடு–பெரியவாச்சான் பிள்ளையும் இதே போல்- ஏழாம் பாட்டைப் போலவே -கால மயக்குத் துறை என்பர் –வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -இது காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்-அதாவது கார்காலத்திலே மீண்டு வருவேன் என்ற நாயகன் அக் கார் காலம் வந்தாலும் வரமால் இருக்க-தலைவி ஆற்றாது வருந்த தோழி -அது கண்டு இரங்கிக் கூறியது என்பர்-புயற் காலம் கொலோ -என்று இருப்பதால் காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்த பாசுரம் என்பர்

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
–18–கார்காலம் கண்டு வருந்திய தலைவியைப் பார்த்துத் தோழி இரங்கல் –

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-சர்வேஸ்வரனுடைய பூமி அந்தரிக்ஷம் ஸ்வர்க்காதிகள் அடைய -பிரளயம காலமோ-வர்ஷா காலமோ இரண்டாலும் உனக்கு இழவு இல்லை-அஸத் ஸமமாய்க் கிடக்கும்-உண்டது உருக் காட்டாமல் அவன் இருப்பானே-தான் உளனாக உண்டாக்குமவன் -உன்னையும் உண்டாக்கிவிடுவானே

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று கடல் கொண்டு –வானம் – மேகம் —
மேகமானது கடலை தரையாக பருகி-ஜல சர சத்வங்கள் துடிக்கும் படிக்கு ஈடாய் போகிற கண்டு ,
தம் பிரஜைகள் நோவு பட — நம் உடைமையை-நேராக கொடு போவதே -என்று தொடர்ந்து தம் உடைமையை வாங்கிக் கொள்கிறது காண் —அன்றி- சீறி-கோபம் கொண்டு –அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய போல்


ஒழிந்த அதனால் இது –
மேல் விழுந்த துளிகள் என்று என்று காட்ட –அவை பிணங்குகிற போது சிந்தினவை காண் இவை-மேகம் பாரார்தமாய் இருக்கையாலே தொங்கினவற்றை கொண்டு உபகரிகிற படி–
பெரிய உடையாரும் ராவணன் யுத்தம் புரிகிற போது ,சகலங்கள் விழுந்தால் போலே

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ-–
அங்கனே ஆகில் இவ் வெள்ளத்துக்கு அடி என் என்னில்–சர்வேஸ்வரன் உடைய பூமியும் மேல் உண்டான ஆகாசமும் கடல் கொண்டு போன அக் காலமோ அறிகிலேன்– பிரளயம் கொண்ட காலம்–தன்னை விஸ்வசிக்கைக்கு-தானும் அதுவோ ?–இதுவோ ?என்று சம்சயிகிறாள் —-இத் தசை வந்தால் அவன் வரும் என்னும் அத்தாலே–தோழி சமாதானம்-மழைக்காலமானால் நாயகன் வந்தே தீருவான்
ஒரு சொல்-பிரளய காலமாக இருந்தாலும் ஏகாகி ந ரமேத என்று ஏறு சேவகனாருக்கு என்னையும் உளள் உன்னையும் கூட்டியே போவான்

புயல் காலம் கொலோ அறியேன்-
அன்றியே அவ் வர்ஷா தானோ அறிகிலேன் ..-இவை எல்லாம் வேணுமோ ?இவ் வெள்ளத்துக்கு அடி அறிந்தோம் என்கிறாள் –

கடல் கொண்ட கண்–
கடலை தோற்பித்த கண் —அத்தை கொள்ளுகை ஆவது-அதன் படி எல்லாம் உண்டாய் இருக்கை ..-தோற்பித்தது என்றும் ஆம்

நீர் அருவி செய்யா நிற்கும்–
இப் பிரளயத்துக்கு அடி கடல் உடைந்தால் போல்  இக் கண்ணில் வெள்ளம் காண்-

காரிகையே–
இவை எல்லாம் பொறுக்க மாட்டாத அபலை கிடீர்-(படர்க்கையாக சொன்னதாகவும்-நீராக சொன்னதாகவும்-சம்போதகம் ஆகவுமாம்-இப்படி மூன்றும் கொள்ளலாம் )

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்–உரை-கடல் கொண்டு எழுந்தது வானம்-ஆகாசமானது கடலைக் கிரஹித்துக் கொண்டு கிளம்பிற்று என்னலாய்-அன்றி-அவ் வானத்தை அன்றி அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கோபித்து-கடல் -சென்று – கொண்டு ஒழிந்த அதனால்– கடல் தான் சென்று கொண்டு விட்டது என்னலாய் இருக்கையாலே–இது-இந்த அவஸ்தை–கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ-கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ–கார் காலமோ-காரிகை கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும்-அழகு வடிவு கொண்டால் போலே இருக்கிற இவள் திரை கொள்ளும் படியான கண்களிலே நீராலே அருவியைப் பண்ணா நின்றாள் என்று காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்தாள் யாயிற்று–காரிகைக்கு -என்ற-பாடமான போது இவர் கண்ண நீர் அருவி செய்யா நின்றது என்றபடிமண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ-என்று எல்லாவற்றுக்கும் முடியும் காலமோ-நமக்கு என்று வந்த கார் காலமோ என்கையாலே-ஆற்றுதலுக்கு உறுப்பான கால மயக்கம் அன்று –

இத்தால்
கடல் கொண்டு எழுந்தது வானம் -என்று பரம வ்யோமமானது ஸம்ஸார ஸாகரத்தைக் கபளீ கரித்தது -என்னலாய்-அவ்வானத்தை என்று(அசித் சித் வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே )அன்றியே இஸ் ஸம்ஸார சாஹரம் தான் பரம வ்யாமத்தோடே ஏகீ பவித்தது என்னலாம் படி இருக்கையாலே (சூழ் விசும்பு அணி முகில் இப்பாட்டுக்கு விரிவு சம்சாரம் முக்தனுக்குத் தானே தொலையும் )கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபி சாப்யய-என்று அவன் தான் விபூதி த்வயத்தையும் உப ஸம்ஹரிப்பதாக (மண்ணும் விண்ணும் -பரமபதத்தைச் சொல்ல வில்லை )
கால அகால யதாம் அஹம் -ஸ்ரீ கீதை -10-30- என்கிறவன் தானாம்படியாக ஒரு காலம் வந்ததோ
இவருடைய ஸைதில்யம் இருந்தபடியோ -இரண்டு விபூதியும் அழியுமா போலே இருந்தது என்று சங்கா வஹமாய் இருக்கை–புயல் காலம் கொலோ -என்று இவருடைய ப்ராப்ய த்வரையை அறிகைக்காக (அறிவிக்கைக்காக ) வந்து ஆர்த்தியை ஜனிப்பிக்கிற தொரு கால விசேஷமோ-கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே – பாரதந்தர்யத்தை அனுசந்தித்து இருக்கப் ப்ராப்தமாய் இருக்க அபரிச்சின்னமான ஞானத்துக்குக் காலுஷ்யம் பிறந்து நடவா இருந்தது என்று சிதிலராய்ச் சொன்ன பாசுரமாய் இருந்தது –

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி-வியாக்யானம்
கடல் கொண்டு எழுந்தது வானம் மேகமானது கடலை அடி மண்டியோடே பருகினதாய் எழும்பிற்று-அவ் வானத்தை அன்றி சென்று அன்றி –அவ்வானத்தைத் தான் கபளீ கரித்து அன்று விடாததாய்ச் சென்று
ஸ்வயம் விஜ்ரும்பித்து எழும்பினதாய்–கடல் கொண்டு ஒழிந்த-கடலானது அவ்வானத்தைக் கபளீ கரித்துக் கொண்டு ஸ்வயம் அதி மஹத்தாய் எழுந்தது ஆயிற்று-அதனால் இது-அந்தக் காரணத்தாலே இக்காலம்–கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ-கிருஷ்ணன் பூமி ஆகாச சமுத்ரங்களை வயிற்றிலே வைத்துக் கொண்டு விஜ்ரும்பித்த மஹா ப்ரளயமோ-புயல் காலம் கொலோ-இது என்ன காலமாயிற்றுமேகங்களே விஜ்ரும்பித்து எழும்பி வர்ஷிக்கும் காலம் தானோ–கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே-காரிகை –இவ்வவஸ்தை பொறுக்க மாட்டாத அபலையான சீர்மை யுள்ளவள் –கடல் கொண்ட கண்-கடலைத் தோற்பித்த கண்
அது யுடையவள்-அக் கண்ணீர் அருவிகளையே சொரியா நின்றாள் என்று அவசன்னை யாகிறாள்
இது கால மயக்குத் துறை 

மேகம் கடலைத் தரை அளவாகப் பருகி ஜல ஜந்துக்களைத் துடிக்க வைக்க -கடலும் வானமும் போர் செய்யும் காலம் இது -கார் காலம் இல்லையோ -சங்கையில் தோழி சொல்வதாக –மெய்யே கார் காலம் வந்தால் அன்றோ நாயகன் வருவான்-மேகமானது கடலைத் தரையளவாகப் பருகி ஜல ஜந்துக்களைத் துடிக்க விட்டுப் போயிற்று-அதைக்கண்ட கடல் பெரிய தத்துவமான நம்மை மதியாதே நம் பிரஜைகளை நோவு படுத்துவதே என்று சீற்றம் கொண்டு போர் செய்யும் காலம் இது என்று சொல்லி-மேலும் தானும் ஐயப்படுவது போல் பின்னடிகளிலே கூறுகிறாள்
எல்லாப் பொருள்களையும் முடிக்க வந்தானோ தெரிகிறது இல்லையீ -என்று இரண்டு வகையாகவும் சொல்லி ஆறுதல் படுத்துகிறாள்-நாமே ஆராய்ந்து நிச்சயிப்போம் என்று ஆராய்ச்சியில் சிறிது பொழுது ஆறி இருப்பாளே –-அதற்குள் நாயகனும் வந்து விடுவான் என்பதே தோழியின் கருத்துகாரிகை -அழகு -ஆகுபெயர் -அது உடையவள்

பேறு வரும் வரை ஆறி இருக்க வேண்டும் -ஆழ்வாரை அன்பார் ஆற்றுதல் -எம்பெருமான் தன்னோடு சம்பந்தம் உடையாரை ஒரு காலும் கைவிடான்-உரிய காலத்தில் கைக்கொள்வான் இது காலம் அன்று
அவன் திரு உள்ளத்திலே கொண்டு இருக்கும் காலம் வரை ஆறி இருக்க வேண்டுமே -என்று ஆழ்வாரை அன்பர் ஆற்றுதல் இதுக்கு உள்ளுறை பொருள்
––

தாத்பர்யம்-பாகவதர்கள் திருமலைக்குப் போகும் போது தேர் எடுத்துக் போனார்கள் கீழே
வரவு குறித்த காலத்தில் வராமல் போக -ஆற்றாமை மிக்கு விஷண்ணையாய் இருக்க
ஆஸ்வசிப்பிக்கும் வேறே பாகவதர்கள் – குறித்த காலம் வரவில்லையே
திருவடி இட்டு அனர்த்தம் நடக்காமல் பரதாழ்வானுக்கு தெரிவித்து ஆஸ்வாசப்படுத்தினாரே
கண்ணும் கண்ண நீருமாக இருப்பவளை அபலாபம் பண்ணும் தோழி வர்ஷாகால சிஹ்னங்களைப் பார்த்து நாயகி வியாசனப்பட
ஓ ஸஹி உனக்கு கண்ண நீர் வர வேண்டாமே வர்ஷா காலம் வந்தது என்றால் நாயகன் வந்து இருப்பானே – ஆகாசத்தில் இருண்டு சஞ்சரிப்பது என் என்று நாயகி கேட்க
நீ பிரமிக்கும் படி மேகம் இல்லை
மேகம் சமுத்திரத்தில் இறங்கி நீரைக் கொண்டு போக சண்டை போட -அதனால் வந்த மழை
மேகத்தில் சேஷித்த நீர் திவலைகள் நம் மேல் விழும் நீர் என்று நேராகப் பார்க்கும் ஒன்றை இல்லை என்னும் புத்த மதஸ்தர் ப்ரத்யக்ஷம் உள்ளதை இல்லை என்றால் நம்ப மாட்டாள் –
ஆகவே பிரளய காலமோ வர்ஷா காலமோ என்று இரண்டையும் சொல்கிறாள்

10-9-சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ப்ரவேஸம்-

மேலான யோகிகளுக்கு பிறக்கக் கூடியதான பரபக்தி இவருக்கு பிறக்க –
அதனால் உளவாகும் தன்மைகளை இத் திருவாய் மொழி அளவும் வர அனுபவித்து –
இனி இங்கு இருந்து அனுபவிக்குமது ஓன்று இல்லாமையாலே-
பரம பதத்துக்கு ஏறப் போக வேண்டும் -என்று எண்ணுகிற இவரை
தம்மிற்காட்டிலும் சடக்கென கொடு போக வேண்டும் என்று விரைகின்ற ஈஸ்வரன்
அங்குத்தை அனுபவத்துக்கு ஈடாம்படி மிக்க விடாய் பிறக்கைக்காக-
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை கண்களாலே கண்டால் போன்று-பிரத்யக்ஷ சமானஹார சாஷாத்காரம் —
தெளிவாக விளங்கும்படி செய்து அருளினான் –
பரஞானம் -தர்சன -தசை –தர்சன -சமா நாகாரமான தசை -இடைப்பட்ட நிலை —

அதாவது
வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி நெறியையும்-
சரீரம் பிரியும் போது வரும் துக்கம் எல்லாம் ஆறும்படி தான் வந்து முகம் காட்டும் படியையும் –
போகும் நெறியில் உள்ளவர்களான தேவர்கள் செய்யும் உபசாரங்களையும்-
அந் நெறியாலே சென்று புகக் கூடிய பரமபதத்தையும்-
நித்ய சூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும்-
பிராட்டி மாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும்-
நித்ய சூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடே வீற்று இருந்து அருளுகிறபடியையும்-
அடையத் தகுந்தவர்களில் மேலான வர்களான நித்ய சூரிகள் நடுவே தாம் பாரம் அற்றவராய்
ஆனந்தத்தை உடையவராய் இருக்கும்படியையும்-
காட்டி அருளக் கண்டு ப்ரீதராய்
அதனை அன்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –
தமக்கு அவன் செய்து கொடுத்த பேற்றினை ஸ்ரீ வைஷ்ணவர் எல்லாரும்-பெற்றாராக பேசின இது அன்யாபதேசம் ஆவது-
அதற்குப் பிரயோஜனம் -இங்கு உள்ளார் நமக்கும் ஆழ்வார் பேறு தப்பாது -என்று இருக்கை-

தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் —சுக்ல கிருஷ்னே –தேவயான மார்க்கம் -முக்தி அபிலாஷை -ஹார்த்தா அனுக்ரஹ தானே வந்து முகம் காட்டி –
7 பாசுரம் வரை பிரகிருதி ஸத்காரம் 8-11- மேலே –
மாதவன் வைகுந்தம் புகவே -அந்த மார்க்கம்
முடி உடை வானவர் எதிர் கொள்ள -நித்ய ஸூ ரிகள்-ஸத்காரம்
பிராட்டிமாரும் -தானுமாக – வந்தவர் –மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை –
மாதவன் தமர் -என்பதால் அந்யாபதேசம் –
ஸோஸ்ச்னுதே ஸர்வான் காமான் -சக ஸ்ருதி
பரமம் சாம்யம் உபைதி -சாம்ய ஸ்ருதி
மம சமதர்மம் -சமதர்ம ஸ்ருதி –
சூர்ய கிரணம் பிடித்தே –தேக சம்பந்தம் நீங்கிய பின்பு உடனே -மோக்ஷம் -பகலோ இரவோ -தஷிணாயனமோ உத்தரணமோ –
அர்ச்சிஸ் /பகல்/சுக்ல /உத்தர அயனம் /-சம்வத்சரம் / வாயு லோகம் -முதல் ஆறு –
சூர்ய லோகம் / சந்த்ர லோகம் /வித்யுத் -அமானவான்-/வருண லோகம் /-சுவர்க்கம் /சத்ய லோகம் -ஆகிய 12 -தாண்டி
இவ்வளவையும் காட்டி -மேலும் ருசியை வளர்க்க -நமக்கு அருளிச் செய்ய –
அர்ச்சிராதி மார்க்க பிரதர்சனம் -மார்க்கம் காட்டிக் கொடுத்த குணம் –

28 சூர்ணிகைகள் -கல்யாண குணங்கள் -காட்டி -30 திவ்ய தேசங்கள் -நவ திருப்பதி கணக்கில் 8 திவ்ய தேசம் –
தெளிந்த என் சிந்தை -ஒரே சூர்ணிகை மூன்று திவ்ய தேசங்கள் –
வன் பெரு வானக முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவாளர் திருப்பதி வடிவுடை கடலிடம் கட்கிலீ என்னுமவற்றில்
இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ ஸுஹார்த்த பிரதானம் -159
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்குக் உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் -160
உபய பிரதான ப்ரணவமான உறை கோயிலிலே எத்தேவும் என்னும் பரே சத்வம் பொலியும்-161 –
வைஷ்ணவ வாமனத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் -162-
ருசி விவசரக்குப் பாதமே சரணாக்கும் உதாரயம் வானமா மலையிலே கொழுந்து விடும் -163-
களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம் கூட மூக்கிலே ப்ரவஹிக்கும் -164
மெலிவிலும் சேமம் கோள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம் -165
வ்யவசா யஜ்ஞர் ரக்ஷண ஸ்தைரியம் பம்பா உத்தர தேசஸ்த்தம் -166-
விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கட நா சாமர்த்தியம் நன்னகரிலே விஸ்தீரணம் -167-
கடி தகட கவி கடநா பாந்தவம் அவ்வூரிலே த்வி குணம் -168-
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் -169
சென்று சேர்வார்க்கு உசாத் துணை யறுக்கும் ஸுந்தர்யம் மா நகரிலே கோஷிக்கும் -170
ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே -171-
சாதராரைப் பரிசு அழிக்கும் சேஷ்டித்த ஆஸ்ச்சர்யம் குளத்தே கொடி விடும் -172-
ஸ்ரம மனம் சூழும் ஸுகுமார்யா பிரகாசம் ஆய்ச்சேரியிலே -173
மஹா மத்தியில் அச்சம் கேட்டு அமரும் ஸுர்யாதிகள் சிற்றாற்றிலே கொழிக்கும் -174-
சாத்ய ஹ்ருதி ஸ்த்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் க்ருதஜ்ஞதா கந்தம் தாயப்பதியிலே -175-
அவகாஹித்தாரை அநந்யார்ஹம் ஆக்கும் நாயக லக்ஷணம் வளம் புகழமூரிலே கூட்டமிடும் -176-
போக்ய பாகத் த்வரை தெளிந்த சந்தைக்கு முன்னிலை மூன்றிலும் பிறக்கட்டும் -177
போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும் -178
மகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும் -179
பிரிந்த துன்பக் கடல் கடத்துக் விஷ்ணு போது ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் -180
சரண்ய முகுந்தத்வம் உத்பலாவதாகத்திலே பிரசித்தம் -181-
மார்க்க பந்து சைத்யம் மோஹ நத்தே மடுவிடும் -182-
ச ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூரார்ச்சிநத்துக்கு முக நாபி பாதங்களை த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் -183-
மோக்ஷ தானத்தில் ப்ரண பாரதந்தர்யம் வளம் மிக்க நதியிலே கரை புரளும் -184-
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே தலைக்கும் -185
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -186-
12 மலை நாட்டு திவ்ய தேசங்கள் / 5 சோழ நாட்டு திவ்ய தேசங்கள் / 1 வட நாட்டு திவ்ய தேசம் / 12 பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள் /-ஆக 30 –
38 திவ்ய தேசங்கள் –ஊரகம் / பாடகம்/ வெக்கா/ அயோத்யா/ த்வாரகா / வட மதுரை / பாற்கடல் / பரம பதம் -சேர்த்து -38-

அது வரை தான் கால தாமதம் -பிராரப்த கர்மம் தொலையும் வரை -ஞானம் ஆதித்யவது -கர்மங்களால் மூடப்படாமல் -விளங்கி –
சூஷ்ம சரீரம் -நுண்ணிய மேனி உடன் சென்று -ஸத்காரம் -பெரிய கல்யாணம் போலே
-பரன் போலே சஜாதீயம் தானே ஞாத்ருத்வம் -ஆனந்தமயத்வம் -சேஷத்வம் -பாரதந்தர்யம் –
சக சாம்யா சமதர்ம சுருதிகள்
இடத்தால் கூடி இருந்து -சாமியாபுத்தி பெற்று -சமதர்மம் பெற்று -ஞானா ஆனந்தங்களில் சாம்யம் -போக மாத்ர சாம்ய லிங்காசா -ஸூ த்ரம்-
ஜகத் வியாபாரம் வர்ஜம் -ஏக போக உரிமை அவனுக்கு -யுக பத்தாக அனுக்கிரக கார்யம் –
சேஷி மற்ற சேஷ பூதர்களையும் இப்படி ஆக்க பரம காருண்யத்தால் செய்யும் கிரியைகள் –
ஆனந்தம் இங்கே -அங்கு எதிர்பார்ப்பு -மகிழ்ச்சி -ஆழ்வார் திரு அடி சேவை -கைகளில் எழுந்து அருளி -பெருமாள் திருவடிகளில் –
பிரத்யக்ஷ மாக பிரமாணம் காட்டி -நம்பிக்கை கொடுத்து நமக்கும் இந்த பேறு-சூழ் விசும்பு -பாசுரம் அனுசந்தித்து
நம்பெருமாள் அனைத்தையும் களைந்து ஆழ்வாருக்கு சம்பாவனையாக கொடுத்து அருளி
செம்மா பாத பற்பு தலை மேல்சேர்த்து -இளையவர்க்கு கவித்த மௌலி – சர்வ ஸ்வதானம்-பண்ணி – பிரபன்ன ஜன கூடஸ்தர் –
பிரபத்தி ஏற்றம் காட்டி அருளி -திருத் துழாய் வைத்து மறைத்து -அவா அற ச் சூழ் -சாத்து முறை பாசுரம் சாதித்து பிரசாதம் சாதிப்பார்கள் –
பிரகிருதி உள்ளார் ஆர்ப்பாராம் முதல் இரண்டு பாசுரங்கள் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -கீழில்-திருவாய் மொழி இறுதியாக பகவத் விஷயமாகத் தமக்கு
அனுபவ ப்ராவண்ய ரூபமான பரபக்தி நடந்தபடியே அருளிச் செய்து
அனுபவத்தில் அன்விதாரான இவர்க்குப் பரிபூர்ண அனுபவத்தில் ப்ராவண்ய அதிசயம் பிறக்கைக்கு உறுப்பாக
இவரைக் கொண்டு போய் அனுபவிப்பிப்பதாக நினைத்து
அர்ச்சிராதி மார்க்கம் முதலாக பிராப்தி பர்யந்தமான ப்ரயோஜன அம்சத்தைப்
பரஞ்ஞான விஷயமாம்படி பிரகாசிப்பிக்க நினைத்த சர்வேஸ்வரனுடைய
போக்ய குண பூர்த்தியையும்
நிருபாதிக சேஷித்வத்தையும்
அநந்யார்ஹத அபாதகத்வத்தையும்
போக்யத்வ பூர்த்தியையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
சேஷித்வ சிஹ்னத்தையும்
சமுத்திர ஸாயித்வாதிகளால் வந்த சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஸத்காரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் முக்தராய்ப் போகிற பாகவதருக்கு பந்தவ்யமான அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உண்டான ஆதி வாஹிக சதிகார பிரகாரங்களையும்
தேச விசேஷ ப்ராப்தியையும்
நித்ய ஸூரி பரிஷத் அந்தர்பவாத்தையும்
அபரோஷித்த க்ரமத்திலே முக்தராய்ப் போகிற பாகவருடைய ஸத்கார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே ஸ்தாவர ஜங்கமங்கள்-கடல் முகில் விகாரம் அடைந்ததை அருளிச் செய்கிறார் -இவன் போக்க்குக்கு அடியான அவன் வரவில் இருந்த விகாரத்தை ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லிற்றே -இவன் போகும் பொழுது கர்ஜிப்பதற்குச் சொல்ல வேண்டாவே- -அபிமானிகளான இந்த்ரன் வர்ணன் பர்ஜன்யன் என்றுமாம்–ஏழ் பொழிலும் வளம் ஏந்திய-உபகரணங்களை சமர்ப்பித்ததன என்றும் புதுக் கணித்தன என்றும்-

என் அப்பன்-எனக்கு பரம பந்து வானவன் -இவர்களோடு நிருபாதிக சம்பந்தம் அவனுக்கு உண்டானால் -அவனோடு சம்பந்தம் உள்ளவை எல்லா வற்றுக்கும் ஆதரிக்க வேண்டி இருக்கும் இறே -ராஜ புத்ரன் போகா நின்றால் ராஜ சம்பந்தம் யுடையார்க்கு எல்லாம் அங்கீ கரிக்க வேண்டுமா போலே –வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே-வாழ் புகழ் நாரணன் -ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –தமரைக் கண்டு –என் ஸ்வாமி உடைய -பரம பந்து -நிருபாதிக சம்பந்த -சம்பந்திகளையும் –ஆத்ம பந்து -ஆதரிக்க வேண்டி இருக்கும்-யாரையும் எள்ளி நடையாடக் கூடாதே -பகவத் சம்பந்தம் வெட்டக் கூடாதே -சம்பந்தம் சாதாரணம் –-தாழ்ந்தவர்கள் என்று கீழ் நோக்கி பார்க்கக் கூடாது –
பிரகிருதி மண்டலம் முழுவதும் ஆர்பரித்தவாறு-ராஜா புத்ரன் போகா நின்றால்-ஆனந்தமாக -செய்ய வேண்டுமே –-சர்வேஸ்வரன் ஆழ்வார் சம்பந்திகளை பின் தொடர்ந்து விஷயீ கரிப்பானே -அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே– ப்ரீதி ப்ரேரிதராய் —இப்படி சர்வ லோகங்களும் மங்களமான செயல்களை செய்தன -என்கிறார் –

————-

நாரணன்  தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்-நிர்ஹேதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய-அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை- உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக-சமைந்தன –முற்பட கண்டு உகந்தன- பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை-ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே-ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே-ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —என்றுமாம் –முகில் ஒருமை ஜாதி பரம் -முகில்கள் அனைத்தும்

நீரணி கடல்கள் நின்றார்த்தன-நீராலே அணியப்பட்ட கடல்கள்-ஒரு கால் ஆடினோம் என்று இராமல்-உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –தொழுதனர் உலகே-உலகு -உயர்ந்தோர் மாட்டே –சத்ர சாமர பாணிஸ்து-என்கிறபடியே ஹர்ஷத்தாலே எல்லா அடிமைகளும் செய்யா நின்றார்கள் –
————–

தொழுதனர்  உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கு இசைத்தனர்  முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே–10-9-3-

ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் -கை படைத்த பிரயோஜனத்தைப் பெற்றோம் -என்று-
தூபத்தையும் நல்ல மலர் மழையையும்-பொழிந்து-தொழா நின்றார்கள் –அவன் திரு உலகு அளந்து அருளின நினைவைப் பயன் உடையதாகச் செய்தவர்கள் என்று ஆயிற்று-அவர்கள் ஆதரிக்கிறது –திருவடியால் தீண்டி சம்பந்தம் கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொள்ள பட்ட பலன் அன்றோ இவர்கள் அங்கு செல்வது –வேறு தேசத்திற்கு சென்று இருந்த அரசன் தன் தேசத்திலே புகுமாறு போலே-அங்கு நின்றும் பிரிகதிர் பட்டு போந்தாராய் இருக்கிறபடி –ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் பெருமாள் இடம் -சேர்ந்தால் போலே –அக்கரை -அநர்த்தம் சம்சாரம் இக்கரை -ஸ்ரீ வைகுந்தம்

இரு மருங்கு இசைத்தனர்  முனிவர்கள்-இங்கே எழுந்து அருள வேணும் என்று இரண்டு அருகும் நின்று சொன்னார்கள் முனிவர்கள் –முனிவர்கள் என்று வாங் நியமம் தவிர்ந்தமைக்கு ஸூ சகம் – மௌனத்துக்கு விஷயம் புறம்பே இறே என்று இருந்தார்கள் –வழி இது வைகுந்தர்க்கு என்று-பிரசித்தமாக இருந்தாலும் இவர்கள் சொல்வது தங்கள் ஸத்காரம் பெற –

————-

எதிர்  எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

இமையவர் என்றது -இயற்கையைச் சொன்னது அன்று–தோப்பு சமைக்கையில் உண்டான விரைவாலே கண் விழித்து இருக்கிற படியைச் சொல்கிறது–இளைய பெருமாள் அடிமை செய்வதற்கு உறுப்பாக உறங்காமல் இருந்தது போன்று –-இவர்கள் அங்கே புக்கு தங்குகிறார்கள் அன்று – தங்கள் தங்கள் ஸ்வரூப லாபத்திற்கு தொண்டு செய்கிற படி அன்றோ இது–அரசர்கள் ஒரு கால் கண்டு சிரித்து அழகிது என்று புகைக்காக மாநாவி சமைப்பாரைப் போலே-மஹா நவமி அன்று ராஜா துவாரம் அலங்காரம் பண்ணுவாரைப் போலே கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்-துவாதச ஆதித்யர்கள் -நிலை விளக்கு போலே-தேஜஸ் கை காட்டி -அடுத்து அடுத்து நின்று -கிரணங்கள் ஆகிற கை –

மாதவன் தமர்க்கே-பிராட்டி யினுடைய புருஷகாரம் மூலமாக பற்றியவர்கள்-
பிராட்டி முன்னாக அடிமை செய்வதற்கு வாரா நின்றார்கள்-என்று ஒப்பிக்கிறபடி –விரி என்பதால் -அலங்காரம் மாற்றி -என்றவாறு-திருமகள் கேள்வனுடைய ஒப்பனை அழகிலே அகப்பட்டு-அடிமை புக்கவர்களுக்கு -என்னுதல்-

மிளகு ஆழ்வான் படை வீட்டிலே அகரத்துக்கு -அக்ரகாரகதுக்கு – செல்ல-
நீ ஆந்தராளிகன்-சம்சாரியும் இன்றி முக்தனும் இன்று நடு நிலையாளன் – -உனக்கு பங்கு இல்லை -என்ன- நன்மையில் குறை உண்டாய்ச் சொல்லுகிறீர்களோ அன்றோ -என்ன-
நன்மையில் குறை இல்லை -இது அன்றோ கரணம் என்ன-
நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்களால் ஸ்ரீ வைஷ்ணவன் என்று கை விடப் பெற்றோமே அன்றோ – என்று புடைவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினார்-

————

மாதவன்  தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

வானவர்–வருண இந்த்ர ப்ரஜாபதிகள் ஆகிற ஆதி வாஹிக தலைவர்களானவர்கள்-வேத நல் வாயவர் -அவ்விடங்களில் கர்மஜ தேவராய்-வேத உச்ச்சாரணத்தாலே விலக்ஷண முனிவரானவர்கள்-ஜ்யோதிஷ்டோமாதி யாக ஸித்தமான தங்கள் ஸம்ருத்தியைக் கொடுத்தார்கள் என்கிறார் –மேலே உள்ள லோகங்களிலே-வைதிகராய்க் கொண்டு யாகங்களைச் செய்கின்றவர்கள்-தங்கள் யாகங்களின் பலன்களை-இவர்கள் திருவடிகளிலே சமர்ப்பித்தார்கள் –விருப்பம் இல்லாதவராய் போகின்ற இவர்களுக்கு- தம் தம் அதிகாரங்களைக் கொடுப்பார் -பாடுவார்-யாகங்களின் பலன்களை சமர்ப்பிப்பார் ஆகிறார்கள்-தங்கள் தங்கள் விருப்பத்தாலே –

—————

வேள்வி  உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று –சர்வேஸ்வரனுக்கு அடியவர்களான நீங்கள்-
இவ்விடத்தை ஆளீர் கோள்-என்று ஆயிற்று துதிப்பது – நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5-பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது – ஆளுகைக்கு குறை என் என்பார்கள் –பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றார் அன்றோ 

வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே-வேறு தேசத்துக்கு போன குழந்தையை தாய் மார்-குளிரப் பார்க்குமாறு போலே–ஓளியை உடையைவாய அழகிய கண்களாலே குளிர நோக்கின்படி-இங்குப் பகவான் உடைய சம்பந்தமே காரணமாக நீசராலே-பரிபவம் செய்யப் பட்டவன்-சரீரத்தை விட்டு பிரிந்த காலத்தில் தங்களுக்கு மேலே ஒருவர் இல்லாதாரான-தேவர்கள் கொண்டாடும்படி அன்றோ இவன் பேறு-ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –இவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தினாலே இவர்கள் தங்கள் வரப் புகுகிற மங்களத்தில் காட்டில் மேற் பட்டதொரு மங்களம் இல்லாமையால் ஆழியான் தமரான நீங்கள்
ஆண்மின்கள் வானகம் 
என்று இது தன்னையே மங்களமாக ஆசாசித்தார்கள் என்கிறார் –

———-

மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தையன் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-(குடந்தையன் கோவலன் -குடந்தை என் கோவலன் பாட பேதங்கள்)

தங்கள் எல்லைக்குள்ளில் புகுந்த அளவால் மனம் நினைவு பிறவாமையாலே
தொடர்ந்து புகழ்கின்றார்கள் ஆகையால் –எங்கும் தொடர்ந்து -என்கிறார் –தம் தாமுடைய லோகங்கள் அன்றியே-லோகாந்தரங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து ஸ்துதித்தார்கள் என்கிறார் –அவர்கள் தாம் சடக்கென போகிற இதற்கு அடி என் என்னில் –
தாங்கள்-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்ற சங்கம் -திரு விருத்தம் -47 -என்றும்
காண்பது எஞ்ஞான்று கொலோ -5-9-4- என்றும்
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் -9-8-7-என்றும்
உடன் கூடுவது என்று கொலோ-8-9-10-என்றும் இருக்கையாலே-

கிளர் ஒளி மணி முடி-குடந்தையன் கோவலன் குடி அடியார்க்கே-பரத்வன்- ஷீராப்தி நாதனாகவும்- ஸ்ரீ கிருஷ்ணனாகவும் -அந்தர்யாமியாகவும் -அர்ச்சாவதாராமாகவும்
ஆவிர்பவித்து பட்ட பாடு எல்லாம் பலித்ததே -நீர்மை சொல்லப் பட்டது –
அவன் சென்று பண்ணின கிருஷியின் பலம் அன்றோ என்று அன்றோ ஸ்தோத்ரம் செய்வார்கள் –ஆதி ராஜ்யம் -கோள் சொல்லிக் கொடுக்கும் -நீர்மையில் தோற்று சந்தானமாக எழுதிக் கொடுத்த அடியவர்கள் அன்றோ இவர்கள் –
அடியார்களை தொடர்ந்து எங்கும் ஸ்தோத்ரம் சொன்னார்கள் என்றபடி-

குடந்தையன்-தொடக்கமும் –சூழ் புனல் குடந்தையே தொழுது -ஆறு பிரபந்தங்களும் இவனுக்கே -இதனால் தானே திவ்ய பிரபந்தம் கிடைக்க மூல கர்த்தா –திராவிட ஸ்ருதி தர்சனகாயா

———

குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

இவ் உலகங்கட்கு எல்லாம் அவ்வருகே-பரமபததுக்கு புறம்பாக- நித்ய ஸூரிகள் இவர்களை-எதிர் கொள்ளுகிறபடியை-அருளிச் செய்கிறார் –

குடந்தை எம் கோவலன் குடி அடியார் -என்றார் மேலே – குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு -என்றது இங்கே – இதற்கு கருத்து என் என்னில்
இவர்கள் அவதாரங்களைப் பற்றினவர்கள்–இவர்கள் உகந்து அருளின நிலங்களைப் பற்றினவர்கள் என்று ஆயிற்று அவர்கள் சிறப்பிப்பது –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -3-3-10- என்றும்-சொல்லுகிறபடியே- தங்களுக்கு உத்தேயர் ஆனவர்களுக்கு உத்தேச்யர் ஆகிறார் அன்றோ இவர்கள்-

வடிவுடை மாதவன் –தங்கள் வரவால் உண்டான உவகையாலே புதுக் கணித்த-வடிவை உடைய-திருமகள் கேள்வன் 

வைகுந்தம் புகவே –பரம பதத்தில் புகுகைக்காக-வந்து கிட்டினார் -என்றவாறே
தனக்கும் பிராட்டிக்கும் வடிவு இட்டு மாறினால் போலேயாம் -என்றபடி-
வைகுந்தம் புகவே மாதவன் வடிவுடை ஆனார்கள் -என்றபடி -திருவா மாலா வாசி தெரியாதபடி மாறினால் போலே –

————-

வைகுந்தம்  புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

பரமபதத்தில் சென்று திரு வாசலில்-முதலிகளால் உபசரிக்கப் பட்டவர்களாக-
அங்குள்ள நித்ய ஸூரிகள்-பரம பதத்தில் வருவதே –இது என்ன புண்ணியத்தின் பலம் –என்று ஈடுபட்டார்கள்

வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று –ஸ்ரீ வைகுண்ட நாதன் உடையார் எங்கள் உடைய ஸ்வாமிகள்–எங்கள் பதத்தினைக் கைக் கொள்ள வேண்டும் -என்று ஆயிற்று அவர்கள் பாசுரம் –
பயிலும் திரு உடையீர் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -2-7-1- என்ற இவரைப் போலே ஆயிற்று -அங்கு உள்ளாறும் இருப்பது -என்றது
திருவாசலில் முதலிகள் எதிரே வந்து உபசரித்து கையைக் கொடுத்து-கொண்டு புக்கு தங்கள் கைப் புடைகளிலே இருத்தி திருக் கையில் பிரம்பையும் கொடுப்பார்கள் -ஆயிற்று -என்றபடி –
சென்று புகுகிற வர்களுக்கும் அடிமை வேலையே உத்தேச்யம்-
அங்கு இருக்கிற வர்களுக்கும் அடிமை வேலை செய்தலே தொழில் ஆகையாலே-
கைங்கர்யமே உத்தேச்யம் கைங்கர்யமே யாத்திரை என்றவாறு -இவர்கள் கொள்ளுவதும் அது-–புகுத -என்றது -புகுதுக –என்றபடி –

வைகுந்தத்து அமரரும் முனிவரும் –பகவத் குண அனுபவ ஜெனித நிரதிசய ப்ரீதி காரித சர்வ பரிசர்ய ஏக போகரான அமரரும்
பகவத் குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கதராய் ஒரு பிரவ்ருத்தி பண்ணுகைக்கு ஷமர் இன்றியே இருக்கும் முனிவரும்-ஸ்ரீ பரத ஆழ்வானையும் இளைய பெருமாளையும் போலே-குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும் –

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று-இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்–பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக-புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

————–

விதி  வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று —வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று-வேறு சிலர் –இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-
நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது-
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து-வேறு பயனைக் கருதாதவராய் –பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்-விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற-இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
மேலே –வைகுந்தம் புகுவது -என்றார் –இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புண்யத்தைக் காட்டுகிறது –

பாங்கினில் பாதங்கள் கழுவினர் –இவன் பிறப்பு இறப்புகளில் உழன்று திரிந்து போந்த ஒருவன்-நாம் சம்சாரத்தின் வாசனை தீண்டப் பெறாதவர்கள்-என்ற வாசி வையாதே-
இவனை சிங்காசனத்திலே உயர வைத்து-அவர்களுக்கு பாங்காக தாங்கள் இருந்து-திருவடிகளை விளக்குவார்கள் –
சிஷ்யர்கள் ஆகவுமாம் புத்திரர்கள் ஆகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவம் பண்ணப் படுபவர்கள் -நீராடப் போதுவீர்- பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் –
கண்ணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்னப் பெறுவரோ
பராசர பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் திருத் தாயார் ஆண்டாள் ஸ்வீகரித்துக் கொண்டாளே

மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–தேசாந்திரம் போன பிரஜை வந்து கிட்டினால் தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே ஹர்ஷத்தாலே பூர்ண சந்திரனைப் போலே இருக்கிற முகங்களை யுடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் –இவர்களைக் கண்டு ப்ரீதைகளாய்
அந்த ப்ரீதி அதிசயத்தினாலே சரத்காலத்தில் பரிபூர்ண சந்த்ர மண்டல சத்ருசமான திரு முக மண்டலங்களை யுடையரான பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியாரும் தங்களுடைய நித்ய பரிசாரிகைகளோடே கூட தங்களுக்குப் பரம தனமான ஸ்ரீ சடகோபனும் நல் சுண்ணமும் நிறை கூட விளக்கமும் மற்றும் மங்களமான சத்கார உபகரணங்களை எல்லாம் ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொண்டார்கள் என்கிறார் –

———

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள –அவர் வந்து எதிர் கொள்ள –வடிவுடை மாதவன் -அவர் -பிராட்டி யோடு கூட எம்பெருமான்-தானே வந்து எதிர் கொள்ள 

அந்தமில் பேர் இன்பத்து-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது என்றவாறு-அடியரொடு இருந்தமை –அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது –அந்தமில் பேர் இன்பத்து குருகூர்ச் சடகோபன்-ஆழ்வாருக்கும் கொள்ளலாம்

இவை வல்லார் முனிவரே –இப் பத்தினை கற்க வல்லார்-அப் பரம பதத்திலே பகவான் உடைய குணங்களை அனுபவித்து-அவற்றிலே ஈடுபட்டவராய்-
அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே-இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்- இங்கேயே முக்தர்களைப் போலே ஆவார்கள் –சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே-ஆயிரத்து பத்து –இங்கு இவை பத்தும் சொல்லாமல் -பர பக்தி தசையில் -அப்படி

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி 
–99-இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும் ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்-முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –-அவன் – மது விரி துழாய் மாதவன் – இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading