ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்–

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

வெறி விலக்கு துறை –-மேஹ சந்தர்சனத்திலே தோழியும் தானும் மோஹித்துக் கிடக்க-
இத் தசையைக் கண்டு சோகித்து இருக்கிற திருத் தாயார் முன்னே-தேவதாந்த்ர ஸ்பர்ச முடையார் புகுந்து பரிஹாரத்திலே பிரவ்ருத்தராக-அபிஜாதையுமாய் இவள் பிரபாவத்தையும் அறிந்து இருப்பாள் ஒரு தோழி கருமுக மாலையை (செவ்வி பெருக்க ) நீர் கொடுக்க -என்று நெருப்பிலே இடுவாரைப் போலே –இவளுக்கு பரிஹாரம் என்று தொடங்கி விநாசத்தையே உத்பத்தியா நின்றி கோள்-என்று
அத்தை நிஷேதித்திக் கொண்டு – இவளுடைய நோயையும் (பக்தியையும்) இந் நோய்க்கு நிதானத்தையும் இதுக்கு பரிகாரத்தையும் சொல்லுகிறாள் –(நம்பியை –என் சொல்லி மறப்பனோ என்று இருக்கும் இவளை எத்தால் மறக்க பண்ணுவீர்கள் )

வெறி விலக்கு துறை பாசுரம்-தீர்ப்பாரை யாம் இனி -திருவாய் மொழி பாசுரம் போல் உலகமுண்ட பெரு வாயனின் திரு நாமங்களை செவிப்படுமாறு சொல்வதும் அவன் திருத்துழாயைத் தருவதும் பரிஹாரம் இது தெய்வ நல் நோய் -என்கிறாள் தோழி

இப்படி நோவு படுகிற இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கைக்காக-ஈஸ்வரன் அநந்ய ஸாத்யன் -என்று அறியாதே இவர் பக்கல் பரிவாலே உண்டான கலக்கத்தாலே
ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -அயோத்யா காண்டம் -2-52-என்னுமா போலேயும்
நாய்ச்சியார் காமன் காலிலே விழுந்தால் போலேயும்
பகவத் விபூதி பூதரான தேவதாந்தர அனுவர்த்தனத்தாலே யாகிலும் இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கலாமோ என்று ப்ரவர்த்தித்த பரிவரைக் குறித்து
இவருடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கும் ஸ ப்ரஹ்மசாரியான ஸூஹ்ருத்துக்கள் விலக்கின பாசுரத்தை
தலை மகள் ஈடுபாட்டுக்கு நிதானம் அறியாதே வெறி யாடலுற்ற தாயாரைக் குறித்து இவள் பிரகிருதி அறிந்த தோழி வெறி விலக்கின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ நம்பிள்ளை -ஈடு-அவதாரிகை
காலமும் போய் மர முதிர்ந்து மேகங்களுமாகக் கை வளர்ந்து நாயகனும் வாராமையாலே இவள் மோஹங்கதையாக இத்தைக் கண்ட தாயார் தொடக்கமான பந்து வர்க்கமும் போய் அறிவு இழந்து
இவளுக்கு இது ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாக நினைத்து-பாஹ்ய ஆகமங்களைத் த்ருஷ்டியாகக் கொண்டு தேவதாந்தர ஸ்பர்சமுடையாரை சிகித் சகரராய்க் கொண்டு சிகிச் ஸஹையிலே இழிய இவள் பிரக்ருதியை அறிந்த தோழி யானவள்-இவர்கள் இவளை இழக்கும்படி வ்யாபரியா நின்றார்கள் -அவன் வந்திலனேயாகிலும் நாம் இவள் சத்தியை நோக்கி இட்டு வைப்போம் என்று பார்த்து வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து -திருவாய் -4-6-8-என்கிறபடியே வேதத்தைத் த்ருஷ்டியாகக் கொண்டு வேத தனரைத் தேசிகராய்க் கொண்டு வேதாந்த வேத்யமான பரதத்வம் அடியாக வந்தது என்று புத்தி பண்ணி இக்குடிக்கு அனுரூபமாகப் பரிஹரிக்கப் பாருங்கோள் என்று பரிஹாரத்தைச் சொல்லி இவள் வெறி யாட்டத்தை விலக்குகிறாள்

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே
–20–துறையடைவு -வெறி விலக்கு-

திசைக்கின்றதே யிவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்காடும் இளந்தெய்வம் அன்றிது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில் பெறுமிது காண்மினே-4–6-2–

இது காண் மின் அன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவளுற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே -4–6-3

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய் பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி-இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும் தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்) செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் – செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

சின்மொழி –
சொல்லிற்று சொல்ல மாட்டாத அளவு –சப்த அவசேஷை -என்னவுமாம் – பேசும் பருவமே இல்லாத போது பெற்ற ஸஹஜ பக்தி தானே இவரது–அங்கனே யாகில்-இத் தசை கூடினபடி எங்கனே என்னில்-
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த -போலே –இளையவள் மொழி இதுவரை மேல் இளைத்து -சிதிலமான இவள் மொழி-சின் மொழி -என்றது முக்தை-இம் முக்த்யையை விதக்தை யாக்கும் போது-ஒரு விதக்தன் வேண்டாவோ என்கிறது-சத்தா மாத்திரம் என்னும் படியான இவளை உண்டாக்கும் போது ஒரு சர்வ சக்தி வேண்டாவோ –நோயோ –நோய் ஓ –பரிஹாரத்துக்கு புகுந்தவள் -நோயைக் கொண்டு கிடக்கப் பெறாதே இந் நோய்க்கு பரிஹாரம் சொல்ல இருப்பதே என்கிறாள் –இவள் பருவம் அளவு அன்று –
கிட்டி இந்நோய் கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய் –பகவத் விஸ்லேஷத்திலே தரியாமை ஸ்வரூபமாய் இருந்த படி

கழி பெருந்தெய்வம்–
கழிய மிக்க பெரும் தெய்வம் –
அவ் வருகு இல்லாத தெய்வம் –பதிம் விஸ்வஸ்ய-என்றும்-
பதிம் பதீனம் -என்றும் தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்-என்றும் – அவ்விஞ்ஞாதம் விஜா நதாம்-என்றும்-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றும் – உபபாதிக்கிற பிரமாணங்களுக்கும் அவ்வருகாய் இருக்கை-

இன்னஇந் நோய் இது என்று –இந்நோயும்-இந்நோய்க்கு நிதானமும் இன்னது என்று–இன் மொழி –
1-அர்த்த ரஹிதமான மொழி –2-கேட்கும் இளந்தெய்வம் அன்று இது –தனக்கு இல்லாததை யுண்டாக்கிக் செல்லப் புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது கைக்கூலி கொடுத்து கவி பாடுவித்திக் கொள்ளும் தேவதைகள் அன்று-3-இன் மொழி –வாசகத்துக்கு வாஸ்யம் போராது-புறம்பு – பகவத் விஷயத்தில் வந்தால் வாஸ்யத்துக்குத் தக்க வாசக சப்தம் போராது –

வேல! நில் நீ –
தன் காரியத்தை நிஷேதிக்கப் புக்கவாறே-பெற்றது உடலாக க்ரஹிப்போம் என்று பதறினான் –
இங்கே புகுராதே கொள்–எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் -என்கிறாள் –கூராழி வெண் சங்கு ஏந்தி -என்று சொல்லுகிறபடியே கையும் திருவாழியுமாக காண வேண்டி இருக்கிற இடத்தே நீ கையும் வேலுமாகத் தோற்றுவதே-என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் !–-அம்மனைமீர் என்று சம்போதித்து நான் சொல்லுகிற வார்த்தையை கேளுங்கோள் என்கிறாள்

புத்ரகா இதி ஹோவாச –(சுக்ரன் பிரம சாபம்தீர்க்க வந்த பித்ருக்களை -வயது மூத்து இருந்தாலும் -சிஷ்யர் என்றால் போல் ) சிஷ்யர்களை புத்திரர்களை சொல்லுமா போல் அன்றியே அம்மனைமீர் என்பான் என் என்னில்-இவ்வர்த்தம் இவர்களுக்கு அபூர்வம் இல்லாமை –(பகவத் பிரபாவம் ஆழ்வார் பிரபாவம் அறிந்தவர்கள் தானே-அறிந்தவர்களே யானாலும் இவளது ஆற்றாமை விஞ்சி இருக்கும் காலத்திலேயே கலங்கி அன்றோ இருப்பார்கள் ) தாங்களே இவ் வர்த்தத்திலே தேசிகராய் இருக்கச் செய்தே-வியதிரேகத்திலே இவள் கலங்கின கலக்கம் கண்டு கலங்கின படி-உலகு ஏழும் உண்டான் -சொல் மொழி-பிரளயம் முதலிய ஆபத்து வந்தால் ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷிக்கும்
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லு
–ஜகத்துக்காக வரும் நோயைப் பரிஹரிக்குமவன் –
இவளுடைய நோயைப் பரிஹரிக்கவே -ஜகத்தை அடைய பரிஹரித்தாம் இறே-ஜகத்துக்காக உண்டான நோய் இவள் ஒருத்திக்குமே உண்டான படியால்

மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –
அவன் தோளில் இட்ட அழகிய திருத் துழாயைக் கொண்டு இவள் மேல் ஸ்பர்சிப்பது–சொல் மொழி என்று உப ஜீவிக்கும் மருந்தும் –தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே -என்று-மேல் பூசும் மருந்தும் –தேவதாந்த்ர ஸ்பர்சமும் தத் சம்பந்தி ஸ்பர்சமும் இவருக்கு சத்தயா பாதகமாய் இருந்த படியும்–
பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தயா தாரகமாய் இருந்த படியும் சொல்லுகிறது

சின் மொழி –
மித பாஷிணி -மழலைச் சொல் மிழற்றுபவள் -குளிர்ந்த மொழிகள்
பிறர் நன்மைக்காக பேசுவது அன்றி ஸ்வ கார்யார்த்தமாக மிக்குப் பேச அறியாதவள் –நோய் கழி பெரும் தெய்வம்-நோயோ -ஓ இரக்கம்-எம்பெருமானுக்கும் ஷூத்ர தேவதைக்கும் வாசி பர்வத பரம அணு போல் கழி பெரும் தெய்வம் -இளம் தெய்வம் ஷூத்ர தேவதாந்த்ர விஷயம் அடியாக வந்த நோய் அல்லவே-அர்த்த ரஹிதமான மொழி கேட்க்கும் இளம் தெய்வம் அன்று இது-தனக்கு இல்லாததை உண்டாகச் சொல்லப் புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று -கைக்கூலி கொடுத்துக் கவி பாடுவித்துக் கொள்ளும் தேவதைகள் அன்று -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள்வேலன் என்றது –கையிலே வேலைக்கொண்டு ஆடுபவன்-வேல நில் நீ –தேவதாந்த்ர பரர் புகும் மாளிகை அன்று
கூராழி வெண் சங்கு ஏந்தி ஸேவை சாதிக்க வேண்டிய திரு மாளிகையில் நீ கையும் வேலுமாக நிற்பதே பாவீ ஒழிந்து போ என்கிறாள்-சூட்டுமின் –சஞ்சீவி மூலிகை உட் கொள்வது அன்றிக்கே சிரஸா வகிக்க வேண்டுமே –உள் மருந்து -செவி வழிய திரு நாமம் -பூச்சு மருந்து திருத் துழாய் சூடிக் கொள்வதுமொழி –ஏவல் ஒருமை வினை முற்று–உலகு எழும் உண்டானுடைய சொற்களை -திரு நாமங்களைச் சொல்லு –வேல நில் நீஉலகு எழும் உண்டான் சொல் மொழிஎன் அன்னைமீர் என் மொழி கேண்மின் மாலை யம் தண் துழாய் கொண்டு சூட்டுமின் என்று அன்வயித்து வேலனுக்கு கட்டளை விடுகிறாள்-ஆழ்வாரது தன்மையை அறிந்த அன்பர்கள் தேவதாந்த்ர பஜனத்தாலாவது ஆழ்வாருடைய ஆற்றாமையைத் தீர்க்க முயலும் ஞானிகளை விலக்குகிறார்கள்
சின்மொழி -பிறரது நன்மைக்காகவே பேசுமவள்

சின்மொழி நோயோ-வாய் விட்டு வார்த்தை சொல்லவும் மாட்டாத இவளுடைய நோய்--நோயின் முதிர்த்திக்கு ஈடுபட்ட படி-கழி பெருந்தெய்வம்-மிகவும் பெரிய ஈஸ்வரன் அடியாக வந்தது–இன்ன-இந்நோய் இது என்று-இந்த நோய் இப்படிப்பட்டது என்று ஸ்வரூப பிரகாரங்களைப் பரிச்சேதித்து-இன்மொழி கேட்கும்-இல்லாத மொழியைக் கேட்கப்படுவதான-இளந்தெய்வம் அன்று இது-இது அர்வாஸீன (தாழ்ந்த )தேவதை அன்று-வேல! நில் நீ-முருகனே -நீ வெறி யாடுகிற வேலனே -கடக்க நில்லு-என் மொழி கேண்மின்-இவள் பிரகிருதி அறிந்த என்னுடைய வார்த்தையை கேளுங்கோள்
ப்ரக்ருதி அறியாதே அசம்பாவிதத்தைச் சொல்லுகிற கட்டு விச்சி வேலன் தொடக்கமானவர் வார்த்தையைக் கேளாதே என்று கருத்து –என்னம்மனை மீர் !-மெய் சொல்லுகைக்கு அடியான பந்தமும்
ப்ரக்ருதி அனுகுணமாகப் பிரவர்த்திப்பிக்கும் வாத்சல்யத்தையும் யுடைய நீங்கள்-உலகு ஏழும் உண்டான் சொல் மொழி-ஸப்த லோகத்தையும் தனது வயிற்றிலே வைத்து நோக்கினவன் திரு நாமத்தைச் சொல்லுகை–மாலை யம் தண் யம் துழாய்-மாலா ரூபமாய் தர்ச நீயமுமாய்க் குளிர்ந்த திருத்துழாய்–கொண்டு சூட்டுமினே –-சொன்மொழியைக் கொண்டு திருத்துழாயைச் சூட்டுமின் என்று நேர் நிரல் நிறை-இந்நோய்க்கு பகவன் நாமமாகிற மந்த்ரத்தை உச்சரித்து ப்ரஸாதமாகிற பசு மருந்தை சிரஸா வஹியுங்கோள் என்றதாயிற்று –

இத்தால்
சின்மொழி நோய் –
என்று ஸ்வ காரியத்தில் ஸக்ருத் வசனமும் ஒழிய அறியாதவள் என்றபடி –நோயாவது-அனுபவ அபி நிவேச ரூபமான பக்தி யோகம்–கழி பெருந்தெய்வம் -என்று
ஸமாப்யதிக ரஹித ஸர்வேஸ்வரன் என்றபடி(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ )-இந்நோய் இது என்று-இத்யாதியாலே இந்த ஆர்த்தி ஏவம் விதம் என்று பரிச்சேதிக்கலாம் படி
அஸத்ய ப்ரலாப ஸ்ரவண விஷயமான அர்வாஸீன தேவதைகளுக்கு ஸாத்யம் அன்று
ஆகையாலே வேல நில் நீ -என்று தேவதாந்த்ர அந்வயம் நிற்கப்படுவதாக என்றபடி-பிரதமத்திலே பகவத் சம்பந்தம் உடையோருக்கு அவதானித்துக் கழிக்க வேண்டுவது தேவதாந்த்ர சம்பந்தம் ஓன்று இறே-பின்பு இறே ஆர்த்தி பரிஹாரமும் போக ஸித்தியும்–பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் –என் மொழி கேண்மின் -என்று ஆர்த்தி பரிஹாரம் -ஆப்த உபதேச மூலம் என்றபடி-என்னம்மனை மீர் ! -என்று-பிதா புத்ர ஸம்வாதம் போலே மூப்பு இளமையால் வரும் தாரதம்யம் இன்றியே அறிவுடையார் உபதேஷ்டாக்கள் என்றபடி–உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று
நாம உச்சாரண பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி–மாலை யம் தண் யம் துழாய் -என்று போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை சமிப்பிக்கும் என்றதாயிற்று–கொண்டு சூட்டுமினே –என்கையாலே போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி-அத்தாலே-நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே-ஆகையால்
உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும் போக்ய அந்வயமும் விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

ஸ்ரீ நம்பிள்ளைவியாக்யானம்
சின் மொழி
-கீழ்ச் சொன்ன தசா விசேஷம் தன்னையே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே சில கற்ப்பித்தவை சொல்லுமது ஒழியத் தானாக ஒன்றும் சொல்ல மாட்டாத படி யன்றோ இவள் பருவம் -இப் பாவைக்கு வந்தது அவனடியாக வேண்டாவோ-சின்மொழி நோயோ-இவள் கொண்ட நோய் அறிந்து ஸர்வேஸ்வரன் அடியாக வந்தது என்னுதல்–அன்றிக்கே –சின் மொழி நோய் கழி பெரும் தெய்வம் ஓ -என்னவுமாம்-இவள் இந்நோய் கொள்ள பாக்யம் பண்ணுவதே-இது என்ன ஆச்சார்யமோ-நாம் இந்நோயைக் கொள்ளாதே-இதுக்குப் பரிஹாரம் பண்ணுவதாகப் புகுந்து அவிக்ருதிகளாய் இருப்பதே என்று-ஓ என்னவுமாம்–கழி பெரும் தெய்வம்-இவளுடைய இந்நோய் கழியப் பெரிதான பரதேவதை அடியாக வந்தது-இந்த்ராதிகளில் காட்டில் ப்ரஹ்மாதிகள் யுடைய ஐஸ்வர்யத்துக்கு ஏற்றம் உண்டே யாகிலும் இருவருக்கும் ஷேத்ரஞ்ஞத்வம் அவிசிஷ்டம் இறே
சேஷித்வ ப்ரயுக்தமான இதர விஸஜாதியை யுள்ளது அவன் ஒருவனுக்கும் ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ ஷேத்ரஞ்ஞத்வங்கள் இங்கு உள்ளார் எல்லாருக்கும் ஒக்கும் இறேகழி பெரும் தெய்வம்-அவ் வருகு இல்லாத தத்வம்-பதிம் விஸ்வஸ்ய -தைத்ரியம்-பதிம் பதீ நாம் -ஸ்வேதாஸ்-தமீஸ் வரணாம் பரமம் மஹேஸ்வரம் -ஸ்வேதாஸ்-யதோ வாஸோ நிவர்த்தந்தே -தைத்ரியம்

தாத்பர்யம் –நாயகியினுடைய வேதனை சமிப்பிக்கைக்காக சில தேவதாந்த்ர பஜனம் பண்ணத் தொடங்க மோகம் தெளிந்த தோழி ஒருத்தி நிஷேதிக்கிறாள்
ஓ தாய்மாரே
இப்பெண்ணுக்கு வந்த நோய் இன்னது இதுக்கு நிதானம் இன்னது இதுக்கு பரிஹாரம் இன்னது
இதுக்கு ஏறிட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் பெறும் வேலன் போன்ற ஷுத்ர தெய்வம்
அவனை நிறுத்தி -அவனது பூஜையையும் நிறுத்தி – தாய் மாறே நான் சொல்லுமுபாயம் கேளுங்கோள்
சர்வேஸ்வரனுடைய திரு நாமம் அனுசந்தித்து அவனது திருத்துழாயையும் சூட்டுங்கோள் -என்கிறாள்

4-6-தீர்ப்பாரை யாம் இனி -ப்ரவேஸம்-

கீழ் -வீற்று இருந்து ஏழ் உலகில் – தாம் அனுபவித்த அனுபவம் மானஸ அனுபவ மாத்ரமாய் பாஹ்ய கரண யோக்யம் அல்லாமையாலே
அத்யந்தம் அவசன்னரானார் -எத்தனையேனும் உயர ஏறினால் தகர விழுகைக்கு உறுப்பாமா போலே மோஹங்கதராய் -பிறர் அனுசந்தித்து
பரிஹரிக்க வேண்டும்படி தமக்கு பிறந்த தசையை அந்யாபதேசத்தால் அருளிச் செய்கிறார் –
நோய் இன்னது -நோய்க்கு நிதானம் இன்னது என்றும் அறியாமையால் -வேர் அறிவார் மந்த்ரம் அறிவார் -ஒளஷதம் அறிவார் புகுந்து
பரிஹாரம் பண்ணிச் செல்லா நிற்க -அவ்வளவிலும் தேவதாந்த்ர ஸ்பர்சம் உடையாள் ஒரு கட்டுவிச்சி வந்து புகுந்து
-த்ரவ்யம் நிந்த்ய ஸூ ராதி தைவத மதி ஷூத்ரஞ்ச பாஹ்யாக மோ த்ருஷ்டிர் தேவலகாச்ச தேசிக ஜநா-என்கிறபடியே –
பாஹ்ய ஆகமத்தை த்ருஷ்டியாகவும் -நிந்த்யமான த்ரவ்யங்களை உபகரணங்களாகவும் கொண்டு ஷூத்ர தேவதையால் ஆவிஷ்டையாய்-
அம்முகத்தாலே சிகித்சிக்க உபக்ரமிக்க -பந்துக்களும் இவளை பெறலாமோ -என்னும் ஆசையால் அனுமதி பண்ண –
இத்தசையிலே இவள் பிரக்ருதியையும் நோவையும் நேரே அறிந்த தோழியானவள் ஓடுகிற நோவைத் தான் அறிந்தாளாக சொல்லில் தன் காவல் சோர்வாம்
-பேசாது இருக்கில் இவளை இழக்க வரும் -என்று இவர்களோ பாதி தானும் நிரூபித்து அறிந்தாளாய் –
நோவும் பரிஹாரமும் நீங்கள் நினைக்கிறவை அல்ல –நோய் இன்னது -நோய்க்கு நிதானம் கிருஷ்ணனே -என்று சொல்லி நீங்கள் பண்ணுகிற பரிஹாரம்
இவளுடைய சத்தையையும் கூட இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை –
பரிஹாரம் பண்ண பார்த்தி கோளாகில் வைஷ்ணவ கோஷ்ட்டியில் பிரசித்தமான பகவான் நாம சக்ரீத நாதிகளாலே இவளை பிழைப்பியுங்கோள் -என்கிறாள்
இது திருவாய்மொழி யால சொல்லிற்று யாயிற்று -அஞ்ஞான தசையிலும்-தேவதாந்த்ர ஸ்பர்சமும்-ததீய ஸ்பர்சமும் விநாச ஹேதுவாய்
அத்தசையிலும் பகவத் ஸ்பர்சமும் பாகவத ஸ்பர்சமும் சத்தா தாரகமாம் படி இவருடைய வைஷ்ணத்வம் அதிசயித்தபடி சொல்லுகிறது –

ஆறாம் திருவாய் மொழியில்
கீழில் திருவாய் மொழியில் இவருக்குப் பிறந்த ஹர்ஷ ப்ரகர்ஷம் மானஸ அனுபவ ஜெனிதமாகையாலே தத் அனுரூபமாக
அவனுடைய ஆலோகநா லாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாத அவசாதம் அதிசயிக்க
அநு பாவ்யனான அவனுடைய ஆஸ்ரித விஷய பக்ஷ பாதத்தையும்
ஆதிக்ய ஸூ சகமான அசாதாரண சிஹ்னங்களையும் அதிசயித போக்யத்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
அத்யாச்ரயமான உபகாரகத்வத்தையும்
நித்ய ஸூரி சேவ்யத்வத்தையும்
நிரதிசய ஸுலப்யத்வத்தையும்
நித்ய பிராமண கம்யத்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதமானவன் நம்மை அனுபவிப்பியாது ஒழிவதே என்று அப்ரக்ருதிங்கதராய் மோஹிக்க
பார்ஸ்வஸ்தரான பரிவார் இவரை ஆஸ்வசிப்பிக்கத் தேடி பரிவின் கனத்தாலே அமார்க்கங்களாலே யாகிலும் பரிஹரிக்கப் போமோ
என்று உத்யோகிக்க இவர் பிரகிருதி அறிந்த பிரபல ஸூ ஹ்ருத்துக்களான ஸ்ரீ மதுரகவி போல்வார் அத்தை விலக்கி
பகவத் திரு நாம சங்கீர்த்தன ததீய பாத பராஸ் ஸ்பர்சாதிகளாலே பரிஹரணீயம் என்று ப்ரதிபாதித்த பாசுரத்தை
நாயகனைப் பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வேறுபாடு கண்டு ப்திரா பன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி வார்த்தை கேட்டு
வெறியாட்டாலே பரிஹரிக்கத் தொடங்கின செவிலி தொடக்கமானாரைப் பார்த்து இவள் ப்ரக்ருதி அறிந்த பிரபல்ப்பையான தோழி
அவர்கள் உத்யோகத்தை விலக்கித் தான் இப்போது நிரூபித்து நோயின் நிதானம் அறிந்தாளாக பாவித்து
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனை அநு சந்தித்துப் பிழைக்குமது ஒழிய இது பரிஹாரம் அல்ல -என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே
.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –இதற்கு, மூன்று படியாக அருளிச்செய்வர்;
‘தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்’ என்கையாலே, ‘நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல’ என்று அவற்றை விலக்குவதிலே தாத்பரியம்;‘என்னை?’ எனின், இவர்கள், நோயினை நீக்குவதற்கு வேண்டிய உபாயங்களைச் செய்து கொண்டிருக்கும் போது‘தீர்ப்பாரை எங்கே தேடுவோம்’ என்று கூறினால், இவை பரிஹாரம் அல்ல என்பது தானே போதருமே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,‘இவள் ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போலே ஆக்கிக்கொண்டே அன்றோ இருப்பது?ஆதலால், இவளோடு ஒக்க மோஹிப்பவர்கள் கிடைப்பார்களத்தனை போக்கித் தீர்ப்பாரை எங்கே தேடுவோம்?’ என்னுதல்;
அன்றிக்கே,
‘தோழியாகிய தானும் இப்போது தீர்ப்பாரை ஆராயா நிற்கிறாள் என்று தோற்றி இருந்தது’ என்னுதல்.
அன்றிக்கே,
‘கடல்வண்ணர் இது செய்தார்; காப்பார் ஆர்?’ என்கிறபடியே, -சொல் என்றே கட்டுவிச்சி சொன்னாள் –‘மருந்தே நோய் நீங்குதற்குத் தடையாய் இருந்தால், பரிஹாரம் உண்டோ?’ ‘நச்சு மா மருந்த’மேயன்றோ தடையாகிறது?‘ஆனந்தமாக இருப்பவர், மருந்தாக இருப்பவர், மருத்துவராக இருப்பவர்’–நிர்வாணம் பேஷஜம் பிஷக் –மருந்தே அபத்யம்-
என்கிறவன் ஆயிற்று விரோதி ஆகிறான்’ என்பாள், ‘இனி’ என்கிறாள்,’ என்னுதல்.

யாம் –அன்னைமீர்?’ என்று விளித்தவள் அவர்களையும் உளப்படுத்தி, ‘யாம்’ என்கிறாள்;
இதனால், தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அற்று இருத்தலைத் தெரிவித்தபடி.-அன்றிக்கே,-தாய்மார்க்கும் தோழிமார்க்கும் வாசி அறுக்கும் விஷயம் என்று தோழிமார்க்கு ஏற்றம் சொல்லுகிறது என்னுதல்.-இனி, நாம் முன்னே அறிந்தோமாகச் சொல்லில் நம் காவற் சோர்வாலே வந்தது ஆம்;நாம் இப்போதே ஆராய்ந்தோம் ஆவோம்,’ என்று பார்த்து,-ஓர்ப்பால் –இப்போது ஓர்ந்து பார்த்தவிடத்து’ என்கிறாள்.-இவள் தான் ஒரு கூரத்தாழ்வானோடு ஓக்குங்காணும்; –போதாயன வ்ருத்தி கிரந்தம் -இழந்தோம் -துக்கம் பட -ஸ்வாமி திரு உள்ளம் ஆகில் சொல்லவா என்றாரே —

இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் –-இத்தகைய சிறப்பினையுடைய நுதலை யுடையவள் இம் முகத்தை யுடையவளுக்கு வேறு முகத்தாலே வருவது ஒரு நோய் உண்டோ?
முகாந்தரத்தாலே -சாடு -வேறு காரணத்தால் -கண்ணன் திரு முகத்தைப் பார்த்தே இவள் மயங்குவாள் –‘கண்ணன், கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே!’ -7-7-8-என்கிறபடியே,-அம்முகத்தால் வர வேண்டாவோ?-இவள் நோய் என்றால் அவன் அடியாக வர வேண்டாவோ? ஸ்ரீ பரதாழ்வான் நோய் என்றால், சாதுர்த்திகமா யிருக்குமோ?
ஸ்ரீ ராம விரஹத்தாலே வந்தது என்று பிரசித்தமன்றோ? இவளை இப்படிப் படுத்துவது ஒரு விஷயமாக வேண்டாவோ?-அம்பு பட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும், நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ?-அப்படியே, குணங்களால் மிக்க சர்வேசுவரனை ஆசைப்பட்டுப் பெறாமையால் உண்டான மோஹம் ஆகையாலே முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி ஆயிற்று இருக்கிறது.

இந்நோய் கொள்ளுகைக்கே அன்றோ முமுக்ஷூக்கள் முயற்சி செய்வது?-பரிஹாரம் இல்லாதபடி மறுபாடுருவக் கொண்ட நோய் ஆதலின்,-உற்ற நோய்’ என்கிறாள்.-இந்நோய்தான் பரிஹரிக்கவேண்டா;-‘கைக்கூலி கொடுத்துக் கொள்ள வேண்டும் நோய்,’ என்பாள், ‘நல்நோய்’ என்கிறாள்.-சிலாக்கியமான ஆபத்தை அடைந்தவனாய்’ என்கிறபடியே,அடிக்கழஞ்சு பெற்ற ஆபத்தாயிற்று;-இடர்ப்பட்ட இடத்திலே சர்வேசுவரன் அரை குலைய வந்து விழும்படியான ஆபத்தாயிற்று இது.

போர்ப் பாகு தான் செய்து –போர்க்கு வேண்டும் வகைகளை எல்லாம் தானே செய்து-பாகு – நிர்வாஹகர் செய்யும் தொழில்.-‘ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருந்த தான் -ஆசன பலத்தாலே எல்லாவற்றையும் நடத்தக் கடவ தான் செய்து கை தொடனாய்’-செய்து’ -என்று மேன்மை சொல்லிற்று.அம் மேன்மை யுடையவன் தாழ நின்றதிலே அகப்படுமவளே அன்றோ இவள்-துரியோதனன் முதலியோர்களையும் இவளையும் தோற்பித்தவதிலும்
அரிது காணும் பாண்டவர்களை வெல்வித்தது ஆதலின், ‘ஐவரை வெல்வித்த’ என்கிறது.

மாயம் போர் –ஆச்சரியமான போர்;-அன்றிக்கே, ‘ வஞ்சனையுடைய போர்’ என்னுதல். பகலை இரவாக்குவது, ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுப்பது ஆனவைஇத் தலையிலும் உண்டு; மஹாரதர் பலர் கூடி ஒருவனான அபிமன்யுவைக் கொன்றது தொடக்கமானது அத் தலையிலும் உண்டு; இவற்றைச் சொன்னபடி.

தேர்ப்பாகனார்க்கு – அருச்சுனனைப் பகைவர்கள் சீறினால் அழியச் செய்வது தன்னை யாம்படி, உடம்புக்கு ஈடு இடாதே வெறுங்கையோடே -கவசம் சாத்திக் கொள்ளாமல் –சாரதிக்கு கவசம் கூடாது யுத்த நீதியாம் -தேர்த்தட்டிலே முன்னே நின்று சாரதி வேஷத்தோடே செய்த தொழிலைச் சொல்லுகிறது.அப் பாகிலே பிடிபட்ட இவள்.சாரதியாய் இருக்கும் வேஷம் இவள் வடிவிலே நிழல் எழுந்து தோற்றுகிறது இல்லையோ? –
அன்று தேர் கடாவிய கனை கழல் காண்பது என் கொலோ கண்கள் -விபவத்திலே மூழ்கி

சிந்தை துழாஅய்த் திசைக்கின்றது – இவள் நெஞ்சு கலங்கி மோஹிப்பது தேர்ப்பாகனார்க்கு; ‘கடல் கலங்கிற்று’ என்றால், ‘மந்தரத்தாலே’ என்று இருக்க வேண்டாவோ?(பராங்குச பயோதி ரஸீமா பூமா அன்றோ ஆழ்வார் )
சாரதியாய் இருந்து செய்த தொழில்களைத் தவிர, பரமபதத்தில் முதன்மைக்கு மோஹிப்பாளோ மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற இவள்?
மயர்வுஅற மதிநலம் அருளப்பெற்றார் கலங்கும் போது அவனுடைய அடியார்கட்குப் பரதந்திரப்பட்டு இருக்கும் குணத்திலே ஆகவேண்டாவோ?
ஒருவனுக்குச் சோகத்தை நீக்கினவன் காணுங்கோள் இவளுக்குச் சோகத்தை விளைத்தான்.-ஆணுக்குச் சோகத்தைப் போக்கினான்; அபலைக்குச் சோகத்தை விளைத்தான்.-

————

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெருமிது காண்மினே
 –4-6-2-

இது மிக்க பெரும் தெய்வம்-கம்பீர -வானோர் தலைமகன் சீராயின வந்த நோய் -திருவிருத்தம்-53–சாமாநாதி காரண்யம் -கார்ய காரண பாவனத்தால் சர்வேஸ்வரன் அடியாக வந்த கனவிய-இந்த நோய்க்கும் இத்தை உண்டாக்கிய அவனுக்கும் அபேதம் -கார்ய காரண பாவத்தால் – இது தன்னை அவனாக சொல்கிறாள்

நீர் பரிகாரம் செய்யும் உங்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லை-இந்த நோய்க்கும் சேர்த்தி இல்லை-இவளுக்கும் சேர்த்தி இல்லை பகவத் விஷயத்தில் முதலில் கை வைத்தார் பெரும் நோய் இல்லையே-ஒரு வழியாலும் ஒரு சேர்த்தி இல்லை –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -குடி மகன் -ஒருவனுக்கு ஐயனார் ஏறி வலித்தவாறே
உனக்கு வேண்டியது என் என்று கேட்க-பால் பழம் சாந்து -தண்டு ஏற வேண்டும் அணுக்கன் குடை வேணும் என்ன-சாந்து புழுகு ஆபராணாதிகள் வாங்கி சாந்தி செய்து வர
அன்று இரவு – பண்டை விட இரண்டு பக்கம்-பிள்ளை -பிடிக்கும் குடைக்கு கீழே நான் வரவோ -கூவிக் கொண்டே ஓடிற்றே-பரமபக்தன் உடைமை சேராது – கோவர்த்தனம் -இதனால் தான் -செய்து அருளினான் -தேவதாந்திர பிரசாதம் பக்தருக்கு கூடாதே
பகவத் விஷயத்தில் விக்ரதராக வேண்டிய நீர் உதவாத ஷூத்ர தேவதை கண்டு ஆடுவதோ 

சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீர் ஆகில்-சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்-சங்கு என்னும்-வட்ட வாய் நேமி வலம் கையா என்று மயங்கும்-இத்தையே சொல்லி -மருந்தாகுமே நோவு வந்த வழியை அறிந்து பரிகரிக்க வேண்டாமோ-

ஆய்ச்சி மகன் அந்திம சமயத்தில் -பட்டர் -தம்மை அறியாதே கலங்கிக் கிடக்கிற படியைக் கண்டு-மெல்ல அழகிய மணவாள பெருமாளே சரணம் -காதில் சொல்ல -இவர் பக்தியை அறிந்த பட்டர் -இவர் காதில் சொல்ல–அனந்தரம் அதிலே உணர்த்தி உண்டாய் -நெடும் பொழுது அத்தையே சொல்லி திருநாட்டுக்கு நடந்தாராம்

நான் கை கண்டு சொன்னேன் -சங்கு சக்கரம் கையிலே கண்டதை சொன்னபடி- ஒன்றேயோ பரிகாரம்-பலத்துடன் சேர்விக்கும்-பெண் புள்ளைக் கடாவுகின்றது காணீர்
இது காண்மின்-இவள் தன நெஞ்சில் பிரகாசிக்கிற படியை காண்மின்
நெஞ்சினூடே ஏசல் காண்கிறான்-வெள்ளைச் சுரி சங்கினுடன் ஆழி ஏந்தி –நன்றேயில் பெருமிது காண்மினே-இல் பெரும் -சரீரம் என்றும் குடும்பம் என்றும் அர்த்தம்
ஆத்மாவுக்கு ஆயதனமான சரீரம் பெரும்–இல் கிளத்தி – க்ருஹுணியாக பெரும் -என்று தமிழர்-ஏ இல் -எயில் கானமாய் பண்ணை வென்ற வார்த்தை சொல்லும்-மயக்கம் தெளிந்து மதுரா மதுராலாபா போலே –

—————-

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே
.–4-6-3-

அன்னைமீர் இது காண்மின்-வயிற்றில் பிறந்தவர்கள் என்னுமது ஒன்றனையே கொண்டு சொல்லுகிற நலத்தைக் கேளாதொழிய வேண்டுமோ?-ஏவுகின்றவர்கள் என்னும் இத்தனையோ வேண்டுவது? வயிற்றிலே பிறந்தவர்களாகிலும் சொன்ன வார்த்தை
நல்லதாக இருக்குமாகில் கைக்கொள்ள வேண்டாவோ? 

இவள் சொன்ன வார்த்தையை யான் கூறினாலும் என்னையுங்கூடத் துறக்கும்படி அன்றோ
வார்த்தையின் பொல்லாங்கு இருப்பது?’ என்பாள், ‘இச்சொல்’ என்கிறாள். ‘செவிக்கு இனாத கீர்த்திய’ராய் இருக்கின்றமையைத் தெரிவித்தபடிநீர்-பேய் முலை நஞ்சு, ஊணாக உண்டான் உருவொடு பேர் அல்லால், காணா கண் கேளா செவி,’ என்று இருக்கக்கூடிய நீங்கள்-‘செய்யாதன செய்யோம்’ என்றும், ‘மேலையார் செய்வனகள் வேண்டுவன’ என்றும் அன்றோ உங்கள் ஒழுக்கம்?அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!-’ என்று முகத்தை மாற வைத்துச் சொல்லுகிறாள். ‘

மது வார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால் – ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’ என்று நீங்கள் சொல்ல அன்றோ நான் கேட்டது? திருக்குழலின் சம்பந்தத்தாலே தேன் பெருக்கு எடுத்து ஓடுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலே யுடையனாய்,
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியத்தையுடையனாய், அந்த அழகு முதலானவற்றை அடியார்களுக்காக ஆக்கி வைக்கும் உபகாரகன் திருவடிகளை வாழ்த்தினால். ‘உன் சேவடி செவ்வி திருக்காப்பு’ என்றே அன்றோ வாழ்த்துவது?
ஆதலால், இவர்கள் திருநாமம் சொல்லுவதுதான் மங்களாசாசன முகத்தாலே ஆயிற்று என்க.-மிக்க சீர்த்தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்து ஊதுமாகிலே –பெரிய திருமொழி 11-1-9- உறக்கத்தால் அல்லாத செல்லாத கண் துயிலும்
கலப்பதற்கு முன்னே -பண்டு பண்டு நிலை – -வாசி அறியாதார்-பரிவர் இல்லை என்றே இவள் துக்கம் -வியாதியும் போனது பரிவர் உள்ளார் என்று அறிந்துநஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் 

அதுவே-அடையத் தக்கதுமாய் இனியதுமான அதுதானே-இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகும் – இவள் மறுபாடு உருவக் கொண்ட நோய்க்கு பெறுதற்கு அரிய மருந்தாம். என்றது,‘மேல் காற்றிலே காட்டப் பரிஹாரமாம்,’ என்றபடி.அரு மருந்தாகுமே.–-
பெறுதற்கு அரிய மருந்தாம்-ஸ்பர்ஸ வேதியான மருந்தாம்-உங்கள் நோயும் இவள் நோயும் தீரும் என்றுமாம் –

———-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.
–4-6-4-

நீர் –சத்துவ குணத்தை உடையவர்களாய், பகவத் விஷயமல்லது சொல்லாதவர்களாய், நேர்மையாளர்களா யிருக்குமவர்கள் வார்த்தையைக் கேட்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே!
அன்றிக்கே, ‘போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?’ என்ற சத்துவ குணமுடையார் அமுது செய்த பிரசாதத்தின் பெருமையை அறிந்த நீங்கள். என்றது,
‘சத்துவகுணமுடைய அன்னமல்லது தொடக்கூடியவர் அல்லாத நீங்கள்’ என்றபடி.

தாமச அன்னமும் அதனோடு தோள் தீண்டியான இராஜச அன்னமும். களன் இழைத்து என் பயன் –-பிரயோஜனம் இல்லாமை மாத்திரமேயன்று; அழிவோடே முடியும்-‘ஒருவர் களன் இழையாதிருக்கச்செய்தே வந்து,வரையாதே பாதுகாக்குமவன்’ என்பாள், ‘ஒருங்காகவே’ என்கிறாள்.‘ஒருவர் விரும்பாதிருக்க, ஆபத்தே காரணமாக வந்து உதவுமவன்’ என்பாள், ‘உலகு’ என்கிறாள். ஆக, ‘அத்தகைய எம்பெருமானைப் பற்றுங்கோள்,’ என்கிறாள்-தளர்ந்தார் தாவளமானவன்-ஆர்த்த ரக்ஷகன்-இத்தலையில் காப்பதற்கு அறிகுறியான விலக்காமையே வேண்டுவது.-இங்கு நேர்த்தி திருநாம மாத்திரம் சொல்லுகையாய், பேற்றில் வந்தால் இவளைப் பெறுதலாகிற பெரிய பலத்தைப் பெறலாம்.
‘பேர் சொல்ல வல்லீர்கோளாகில் இவளைப் பெறலாம்; இல்லையாகில் இழக்குமித்தனை,’ 

—————

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே
.–4-6-5-

இந்த நற் சரக்கைப் பெறப் பார்ப்பவர்கள் இந்தத் தாழ்ந்த செயல்களாலேயோ பெறப் பார்ப்பது?’-அந்தோ –‘ஐயோ! இவளை இழந்தோமே அன்றோ!’குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் –‘குவளை அம் கண்ணி’ என்கிறபடியே,
குவளைப் பூப்போலேயாய் அனுபவிக்கின்றவர்கள் அளவு அல்லாத பரப்பையுடைத்தான கண்ணும்,‘கோவை வாயாள்’ என்கிறபடியே, கோவைப்பழம் போன்ற சிவந்த உதடும் பசலை நிறத்தை யடைந்தாள்.
‘தொண்டை அம் செங்கனி வாய் நுகர்ந்தானை’-பெரிய திருமொழி-3-7-2- என்றும்,
‘மணநோக்கம் உண்டான்’-பெரிய திருமொழி -8-10-1- என்றும் சொல்லுகிறவாறே ‘இவை அல்லவோ அவனுக்கு ஊண்? ஆதலால், அவனுடைய வாய்புகுசோறு அன்றோ பறி உண்டாகிறது?’ என்கிறாள்.(ஞானியை விக்ரகத்தோடே ஆராதிக்குமே )

கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால் தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; ‘பிரபலமான தடைகளையும் வருத்தம் இன்றிப் போக்க வல்லவன்’ இட்டிடுமின்’ என்றது, ‘இவள் மேலே இடுங்கோள்’ என்றவாறு. ‘வேறு தெய்வங்களின் சம்பந்தம் உண்டானதற்குப் பகவானுடையநாமத்தைச் சொல்லிப் பரிஹரிக்கப் பாருங்கோள்;
வேறு தெய்வங்களின் அடியார்களுடைய சம்பந்தத்துக்கு ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்கிறாள்
ஆக, ‘இங்கே புகுந்த அநீதிகள் இரண்டு உள :-அவ்விரண்டனுக்கும் இவ்விரண்டனையுங் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ -தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்குப் பரிஹாரம் -திரு நாம சங்கீர்த்தனம் –ததீய சந்நிதிக்கு பரிஹாரம் -ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத தூளி-என்கிறாள்-தணியுமே – இவள் கண்ணும் விழித்து நிறமும் வரும்படி காட்டித் தரக் கடவேன்.

———–

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே
.–4-6-6-

பாததூளியினுடைய பிரபாவத்தைப் பார்த்தால் இவையெல்லாம் வேண்டா; முயலுதல் மாத்திரம் அமையும்,’ என்பாள்,‘அணிய முயலின்’ என்கிறாள்.-‘தொண்டர் அடிப்பொடி ஆட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே!’

நலம் தரும் காரியங்களில் நினைதல் மாத்திரமே அமையும்; தீமை தரும் காரியங்களில் வர்ஜனமே வேண்டும்.
வண்டரும் சுண்டர் ( செண்டர் என்பர் ) என்கிறவர்களுக்கு –த்ரவ்யம் சேமிக்க வைக்கும் கைங்கர்ய பரர்-ராமானுஜர் நியமித்தவர்கள் – அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளை உறங்கா வில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை இங்கே நினைப்பது. ‘என்றது
என் சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித் ‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும் மெய் என்று திருவடி தொழுது, ‘அது அமணன் பாழி’ என்று அறிந்தவாறே மோஹித்து விழ,
பிள்ளை உறங்கா வில்லி தாசர் தம் ஸ்ரீ பாத தூளியை அவர்களுக்கு இட, உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.

திருக்கொட்டாரத்தின் அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத் திருவாய் மொழி அருளிச் செய்கிறாராய் இப்பாசுரத்தளவிலே வந்தவாறே, ‘
தேர்ப்பாகனார்க்கு’ என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை யிட்டு நீக்கிக்கொள்ளாமல், ‘மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்? நோய்க்குக் காரணம் ஒன்றும் பரிஹாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் (நம்பிள்ளை) கேட்டேன்;
‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே, ‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப்பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே தேற்றிப் பின்னை அவரைக் கொடு வந்து காட்டுவதாகக்காணும்’ என்று அருளிச்செய்தார்.
(சுக்கு ஸ்லாங்க்யம் -மாறன் திரு அடி நீரை விட தமர் திரு அடி நீர் ஸ்ரேஷ்டம் என்றவாறு )

அழகு சீலம் முதலியவைகளாலே ஆயிற்று இவள் மோஹித்தது; நீங்களும் அழகு சீலம் முதலியவைகளிலே தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாததூளியைக் கொண்டு பரிஹரிக்கப் பாருங்கோள்,’ என்பாள்,‘மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு’ என்கிறாள்.-‘பொடி படத் தீரும்’ என்றபடி.
மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே – பொடி பொடி யாகத் தீரும் என்றுமாம் –
இஃது அல்லது பரிஹாரம் இல்லாதபடியான மேன்மையை உடைய இவளுக்கு இதனையே பரிஹாரமாகப் பாருங்கோள்.-

————-

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.
–4-6-7-

துணங்கை எறிந்து – துணங்கை என்பது ஒரு கூத்து விசேடம். எறிதல் – இடுதல். ‘ஆடல் இட்டு’ என்றபடி.-துணங்கைக் கூத்து என்று கைதட்டி ஆடுவதொரு கூத்து உண்டு; அதனைச் சொல்லிற்றாதல்;-அன்றிக்கே, மஞ்சட் பொடியைக் கையிலே பிடித்து ஒருவர்க்கு ஒருவர் எறிந்து ஆடுவது ஒன்று உண்டு. அதனைச் சொல்லிற்றாதல்.

நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –பகவானிடத்தில் செய்த அஞ்சலி மாத்திரமும் ‘இறைவனுடைய நீர்மையாலே மிகை’ என்று இருக்கக்கூடிய நீங்கள் படும் எளிவரவே இது! ‘தொழுது எழுதும் என்னும் இது மிகை’ என்றே அன்றோ இவர்கள் இருப்பது? சம்பந்தம் உணர்த்தும் பதிகம் -தோழி -பிரணவார்த்தம்-உபாய நிரபேஷன்-கை கூப்புச் செயலும் கூடாதே -நமஸ்-தாயார் நிலை -என்பதால் -இப்படி இருக்கக் கடவ நீங்கள் என்றவாறு-

உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் – ஜீவனத்திற்குச் சாதனமாய் இருக்கின்ற நெல்லானது அழிந்துபோகும்படிக்குத் தகுதியாக, அதனைத் தின்னுகிற கழுதையினுடைய உதட்டின் செயலைக் கண்டிருந்தால் என்ன பிரயோஜனம் உண்டு?
அப்படியே இவளைக் கொண்டு வாழ்வதற்கு இருக்கிற நீங்கள் இவளுக்கு அழிவினை உண்டாக்கக் கூடியதான வேறு தேவதைகளின் சம்பந்தமுடையாருடைய செயல்களைக் கண்டுகொண்டிருக்கிற இதனால் என்ன பிரயோஜனம் உண்டு? பிரயோஜனம் இல்லாமை மாத்திரமே அன்று; அழிவே சித்திப்பது.
அன்றிக்கே,-உணங்கல் கெட – இவளுடைய உணங்குதல் கெட; ‘இவள் இளைப்புத் தீர’ என்றபடி.
கழுதை – பேயை, கழுது – பேய். உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நீங்கள் ஆடும் கள்ளும் பிரார்த்தித்துக் கொடுக்க, அது அதனை உண்ணும்போது அதனுடைய உதடு ஆடுகிற படியைக் கண்டிருப்பதனால் என்ன பயன் உண்டு?’ என்று ஐயன் திருக்குருகைப் பெருமாள் அரையர் நிர்வஹிப்பர். ‘கழுது பேயும் பரணும்’ என்னக் கடவதன்றோ?

மாயப்பிரான் தமர் வேதம் வல்லாரை வணங்கீர்கள் -அவனை ஒழிந்தது ஒரு தேவதைக்குத் தனித்து ஓர் உயிர்ப்பு இல்லை;அவனே உத்தேஸ்யம்,’ என்று இருக்குமவர் காலிலே விழுங்கோள்,’- (பரன் திறம் அன்று பல்லுலகீர் தேவம் ஒன்றும் இல்லையே )
‘தேவதைகள் தோறும் தனித்தனியே காரியம் உண்டு’ என்று இராமல்,‘எல்லாச் சொற்களும் ஒரே பொருளைச் சொல்லுவது’ என்று இருக்குமவர்களைப் பற்றப் பாருங்கோள் –

———

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே
.–4-6-8-

வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? இது உலகில் நடை பெறாதே –தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?-ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,

சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,-விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச் செய்வதனால்-நித்தியஸூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது; நோய் கொண்டவள் இவள்; நோய் தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்ய வேண்டுமே-அவனைக் கொண்டு பெறுதற்குப் பாராமல், அவனுக்குப் புறம்புமாய் யான் எனது என்னும் செருக்குகளை உட்கொண்டதான கிரியா கலாபங்களாலே பெறுதற்குப் பார்க்கையும் அதனைப் போன்றது ஒன்றே ஆயிற்று-அற மேலாய் இருக்கும் மருந்தே அன்றோ இவள் சொல்லிற்று? அதனை அன்றோ இவர்கள் விரும்புதல் இன்றி நிற்கிறது?

நீர் அணங்கு ஆடுதல் – பகவானுடைய குணங்களை அனுபவிக்கின்ற அனுபவத்தாலே ‘உண்டு களித்தேற்கு உம்பர் என்குறை?’ என்னக்கூடிய நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுவது.-கீழ்மையே –‘சாலத் தண்ணிது. உங்கள் அளவில் போகுமது அன்று; உங்கள் வழிக்கும் கொத்தை’ என்றபடி. ஊடு -உள்ளே.-

————

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே
.–4-6-9-

நாழ் என்பது குற்றத்திற்கும் இல்லாததனைச் சொல்லுகைக்கும் ‘நான்’ என்று அபிமானித்திருக்கைக்கும் பேர்.நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் –நீங்கள் தெய்வம் ஏறினவர்களாய்க்கொண்டு ஆடுகின்ற இப்பொய் என்கண்களுக்கு ஒரு பொருளாய்த் தோற்றுகிறது இல்லை.
‘பலவகைப்பட்ட பொருள்கள் இல்லை,’ -ப்ரஹ்மத்தை அந்தராத்மாவாகக் கொள்ளாத வஸ்துவே இல்லையே -என்கிறபடியே, ‘அவனை ஒழிந்தது ஒரு தெய்வத்திற்கு அவன் துணை இன்றித் தானே ஒரு பொருளாய் இருக்கும் தன்மை உண்டு,’ என்று
இருக்கில் அன்றோ அவர்கள் செய்வது ‘மெய்’ என்று தோற்றுவது?

ஏழ்மை பிறப்புக்கும் சேமம் – எல்லாப் பிறவிகளிலும் காவலாம்; ஒரு நன்மை உண்டானால், அதனை ஏழ் ஏழாகச் சொல்லக் கடவதன்றோ? அதனால், ‘ஏழ்மை’ என்கிறாள்.
அன்றிக்கே,-தண்ணிதான பிறவி’ என்னலுமாம். ஏழ்மை – தண்மை

இந்நோய்க்கும் ஈதே மருந்து –-அடி பற்றின மருந்து அன்றோ-கண்ணபிரான் கழல் உன்னித்து வாழ்த்துமின் –-‘உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள். ‘அடிக்கழஞ்சு பெறும் மருந்தே யன்றோ அது?-வாழ்த்துமின் -பன்மை-எல்லாரும் ஒக்க நினைத்து வாழ்த்தப்பாருங்கோள்,-ஸம்ருத்தி மாத்திரத்திலே போம் –

————

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே
.–4-6-10-

பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.-பிறரை தொழுது அறியாள் -சந்தரன் தலையில் கொண்ட ருத்ரனை தொழ மாட்டாள் என்றுமாம் — பிறை பல் முளைக்கும் பொழுதும் என்றுமாம் –
‘முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’ என்று நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ்விளமைப் பருவத்திலும் இருந்தது? –சாதனா பக்தி இல்லை சாத்திய பக்தியும் இல்லை -சஹஜ பத்தி –
‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க்கூட்டத்தைப் பற்றுமோ? ஆகையாலே,

நும் இச்சை சொல்லி – உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும் வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ? இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.

நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?‘தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ததேக சேஷத்வம் –விருத்தவான்கள் -பஞ்ச சம்ஸ்காரம் பண்ணாத துர்வ்ருத்தர்கள் –
ஆதலால், நீங்கள் இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறைவாணனை – நித்தியமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;-மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே, வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே
‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும்
வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி
அஷட் கரணம் கேட்காமல் மூன்றாவது ஆள் கேட்காமல் காலஷேபம் -வேத அத்யயனம் –

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.-‘நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே, தேர்ப்பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் பாருங்கோள்,’ என்பாள்,
‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.
32 சேவை -மூல மூர்த்தி முதல் சேவை பரவாசு தேவன் -உத்சவர் -32 சேவை ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் –32 சேவைகள் கொடுத்த -வண்மை –வண்டு வராத -செண்பகா ஷேத்ரம் –

ஏத்துமின் – வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள். ‘
சீர் பரவாது, உண்ண வாய்தான் உறுமோ ஒன்று?-பெரிய திருவந்தாதி -51-’ என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?
மிண்டர் பாய்த்து உணும் சோற்றை விலக்கி நாயக்கி இட்டு -இவர்களுக்கு புல்லைத் திணிமின் -திருமாலை –
ஏத்துதலும் தொழுது ஆடும்– நீங்கள் செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;-பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே ஏத்தின உடனேயே தெளிவையுடையவளாய்த் தொழுது ஆடுவாள். உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து ஆடுதற்குத் தக்க ஆற்றலையுடையவளும் ஆவாள்,’ என்றபடி.விழிக்கும்- தொழுது ஆடு என்னாமல் –சொல்ல வேண்டியது இல்லை இவளுக்கு –உணர்த்தி உண்டானால் இத்தையே செய்பவள் அன்றோ -தரித்து -வியாபரிப்பாள்-என்றவாறு –நீர் ஏறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாம் போலே நோவுக்கு அடியானை கிருஷ்ணனுடைய குண கீர்த்தனமே பரிஹாரம் என்று கருத்து –

மன்னார் குடி ஸ்ரீ ராஜமன்னார் சமர்ப்பித்து அருளினார் மணவாள மா முனிகள்-தெற்கு த்வாராபதி-

————-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.
–4-6-11-

மோஹித்தவள் சிறிது தெளிந்தவாறே, மோர்க்குழம்பு குடித்தாள், தரித்தாள், கண் விழித்தாள்,வார்த்தை சொன்னாள்,’ என்பார்களே அன்றோ?’ அது போன்று காணும்,’ என்று அம்மங்கி அம்மாள் பணிப்பர்.
பின்பு பிறந்த மிகுந்த மயக்கத்தாலே பிறந்த உணர்த்தியைக் குவாலாகச் சொல்லுகிறது.
மேல் ‘சீலம் இல்லாச் சிறியன்’ என்னும் திருவாய்மொழி யாகையாலே, உணர்ந்து கூப்பிட வேண்டுமளவே பிறந்தது. இந்தத் தோழி தானும் அறிந்திலள் காணும் பகவானுடைய பெருமையை. அவர்களை ‘ஏத்துங்கோள்’ என்றாளே அன்றோ?
அது வேண்டாதே, தான் ‘ஏத்துங்கோள்’ என்ற இது தானே அமைந்தது இவள் உணருகைக்கு.
பகவானுடைய பெருமை புறம்புள்ளார்க்கு அறிய ஒண்ணாததைப் போன்று, உட்புகுந்தாராய் அறிந்தாராய் உள்ளவர்கட்கும் ‘இவ்வளவு’ என்று அறிய ஒண்ணாததாய்க் காணும் இருப்பது.-தனக்கும் தன் தன்மை அறியாதவன் அன்றோ –
முன்பு மயக்கம் -அழுகை இல்லை-தெளிந்தாள்-சம்ச்லேஷம் இல்லையே என்று கூவுவாள் அடுத்த பதிகம் -நடுவு நிலை இல்லையே இவளுக்கு
தோழி வார்த்தை கேட்டதுமே தெளிந்தாள் -திரு நாம சங்கீர்த்தனம் –-நமனும் முத்கலனும் பேச நரகமும் ஸ்வர்க்கமும் ஆகும் நாமங்கள் உடைய நம்பி பிரபாவம் தோழியும் அறிய வில்லையே –

மயங்கிக் கிடக்கிற நிலையிலும் பகவானுடைய திருப்பெயரும் அவன் அடியார்களுடைய சம்பந்தமும்-பொருள்களின் தன்மையால் தாரகமுமாம்படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயிலே நிலைநின்ற புகழ்.-ஒருவன் வைஷ்ணவனாகையாவது, இது. ‘சர்வேசுவரன் ரக்ஷகன்’ என்று ஒருவன் பக்கலிலே ஒரு வார்த்தை கேட்டு விட்டு, வேறு தெய்வங்களின் சம்பந்தமும் பாகவதர் அல்லாதார் சம்பந்தமும் உண்டாகுமே யானால், வைஷ்ணவன் ஆவதற்கு விரகு இல்லை கண்டீர்.
முன் பகுதியை அநுசந்தித்தால் இத்தலையால் ஒரு துரும்பு நறுக்கவும் தகுதி இல்லாதபடியாய் இருக்கும்; பின் பகுதியை நினைத்தால், இளைய பெருமாளைப்போலே கண்ணுறங்கவும் விரகு இல்லையாய் இருக்கும்;

அவகாத ஸ்வேதம் போலே ஆனுகூல்ய சங்கல்பம் அங்கங்கள் -பிரபத்திக்கு அங்கமாக கொள்ளக் கூடாது -என்றவாறு-
‘திருவடிதன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர்’ என்றும்,
‘திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்றும்,
‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே’ என்றும்,-எண்ணும் கோஷ்டியில் இருக்க வேண்டும் –
‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன்’ என்றும் அன்றோ இவர்கள்படி?
பல காலங்களாக இவன் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் போகையும், நித்திய கைங்கரியம் பெறுகையுமாகிற இப் பேற்றுக்கு இவ்வளவாகிலும் செய்யாதிருக்க விரகு உண்டோ?

தொழுது அடிப்பாட வல்லார் – பெண்பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.
துக்க சீலம் இலர்களே –மோஹித்த விடத்து வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும்,-பாகவத சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது.
அஃது இல்லாமையே தன்மையாக உடையர் ஆவர்.-சீலம் – -ஸ்வ பாவம்-தன்மை.

தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால்
ஒர்ப்பாதும் இன்றி யுடன் பிரிய -நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்—36-கலந்து பிரிந்த தலைமகள் அறிவு அழிவு கண்டு கலங்கி பரிவின் கனத்தாலே -தேவதாந்திர பரையாய் பிரதிபன்ன பாஷிணியான கட்டுவிச்சி பாசுரம் கொண்டு
வெறி யாட்டாலே பரிஹரிக்க தேடுகிற தாய்மாரை நோக்கி-இவள் பிரகிருதி அறியும் உயிர் தோழி யானவள் நோயின் நிதானத்தை நிரூபணத்தாலே அறிந்தாளாய்க் கொண்டு கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனைக் கொண்டே பரிஹரிக்கும் அது ஒழிய நீங்கள் செய்கிறவை பரிஹாரம் அல்ல
தேவதாந்த்ர ஸ்பர்சத்துக்கும் தத் சம்பந்தி ஸ்பர்சத்துக்கும் தேர் பாகனாரான வண் துவாராபதி மன்னனை ஆஸ்ரயித்து மாயன் தமர் அடி நீர் கொண்டு அணியுங்கோள் என்று வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிற தீர்ப்பாரை யாமினி — யில் தாத்பர்யத்தை தீர்ப்பார் இலாத மயல் தீரக் கலந்த மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-ஆழ்வார் ஸ்வபாவம் இது வாயிற்று -(மயங்கின நிலையிலும்) செவிக்கு இனாத கீர்த்தியை கேட்டு சத்தயா பாதகமாகவும் – செவிக்கு இன்பம் ஆவதும் செங்கண் மால் நாமம் -என்கிற கேசவன் கீர்த்தியைக் கேட்டு சத்தை பெறவுமே இறே இருப்பது-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading