ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
இருள்- யமகம் -வேறே வேறே பொருள் இருந்தால் தான்-இங்கு ஒரே அர்த்தம்-தலைவி பாசுரம்
தேர் வழி தூரல்–தேர் வழி நோக்கி -கடலைப் பார்த்துச் சொல்வது-அன்பர்-பாகவதர் -தலைமகன்
இருளிலே -இரவில் பிரிந்தான் – சக்கரச் சுவடு பார்த்து தரித்து இருக்கப் பார்த்தேன்
நெய்தல் நிலம்-கடல் அலை அழிக்கப் பார்க்க-நில் என்று சரணம் புகுகிறாள் -இதுவே பாசுரத்தில் முக்கிய பகுதி –பெருமாள் நித்ய வாசம் செய்யும் கடல் -சயனம் அழகைச் சொல்லி -இவை பாசுர விரிவு
கண்ணி நுண் சிறுத்தாம்பு –அப்பனில் போல்-நீலக்கடல் கடைந்தாய்-தண்டகாரண்யம் ரிஷிகள் பெருமாள் வரவை அனுமானித்தது போல்-இவனது நிழல் வெளுத்த கடலை நீலமாக்குமே-உறையும் -வர்த்தமானம்–ஸம்ஸ்லேஷம் நித்யம் –-பிரிவே அறியாமல் உள்ளாய்-ஒரே கார்யம் செய்து கொண்டே அலுப்பு இல்லாமல் நிரதிசய ஆனந்தம் உண்டே-அலை ஓயாமல் இருக்க-அவன் உறைவதுதே ஹேது
பரம சேதனான எனக்கு விஸ்லேஷம் எப்படி இருக்கும்-பிரிந்த பெருமாள் சரண் புகுந்தது போல்
நடுவில் வாழியரோ சொல்லி -இயம் ஸீதா மம சுத -பத்ரம் தே -போல்-அவர் சரணாகதி பலிக்க வில்லை
அது போல் ஆகக் கூடாதே-
சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே முகம் தெரியாமே போக என்று நினைத்து , இருளிலே நாயகன் தேரிலே ஏறிப் போக தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனைப் போலே தேர் காலை மறைத்துப் போகாதே தெரியும் படி போன தேர் காலைப் பார்த்துத் தரித்து இருக்க ,
சமுத்ரமானது ,தன் திரையாலே வந்தது இத்தை அழிக்க புக , கடலை நோக்கி சரணம் புகுகிறாள் -மற்றும் ஆற்றமை மிக்கார் –பிரதிச்சையே மகோததே-என்று கடலை சரணம் புகும் இத்தனை இறே இவர் உடைய அளவு —பெருமாள் போலே இவரும் கடலை சரண் அடைகிறார்-
தலைவி கடலை நோக்கித் தேர் வழி தூரல் என்னும் துறை இது –
இத்துறை திருக்கோவையாரில்
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப யுடையவனாட் கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தான் குனிக்கும் புலியூர்
விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய் புள்ளும் திரையும் பொரச் சங்க மார்க்கும் பொரு கடலே–
களவு முறையால் நாயகியைப் புணர்ந்து நின்ற நாயகன் அதனால் ஊரெல்லாம் பழி பரவுதலை அறிந்து அப்பழி தூற்றல் அடங்குமாறு சில நாள் பிரிந்து இருக்கக் கருதி நாயகிக்கு கூறாமல்
தான் பிரிவதை அறிந்தால் அவள் வருந்துவாள் என்றும் அவள் அறியாதபடியும் ஊரார் அறியாதபடியும் இருளிலே பிரிந்து செல்ல அப்பிரிவை அறிந்து ஆற்றாது வருந்தும் நாயகி அவன் தேர்ச்சக்கரம் சென்ற அடையாளத்தை நோக்கி அவன் திரும்பி வரும் அளவும் அதனையே தனது உயிருக்குப் பற்றுக் கோடாகப் பாவித்துப் பார்த்துக் கொண்டு இருக்கையில் அங்கனம் பிரிந்து இருக்கும் இடம் நெய்தல் நிலம் ஆதலால் அத்தேர்க்கால் அடையாளத்தைக் கடலின் அலை வந்து அழிக்கப் புக அழித்திடாதே என்று அதனை வணங்கி வேண்டிக்கொள்ளுமதாயிற்று இது –தேர் வழி நோக்கிகே கடலோடு கூரும் துறை -பிரிந்து இரங்கும் இடம் நெய்தல் –கடல் கரையில் தேர்க்கால் அடையாளம் கண்டு கொண்டு தரிக்க ஒட்டாமல் –கடலின் அலை வந்து அழித்திடாமல் இருக்க வேண்டி அதனை வணங்கி வேண்டிக் கொள்ளுமது –முன்பு ஸ்ரீ ராமபிரான் வனவாசம் யாத்ரை புறப்பட்ட பொழுது உடன் சென்ற அயோத்யா நகர ஜனங்கள் அறியாத படி தேர் ஏறிச் சென்றால் போல் இங்கு மறைத்துப் போகாமல் போன வழி தெரியும் படி போனதே இவ்விடத்துக்கு வாசி –
இப்படி அபிமதரான பாகவதருடைய விஸ்லேஷ தசையில் அவர்கள் பக்கல் தமக்கு ஆஸ்வாஸ ஜனகமான மநோ ரத ஸரணியைக் குலையாது ஒழிய வேணும் என்று ஸம்ஸார ஆர்ணவத்தை அபரோக்ஷித்து உரைத்த பாசுரத்தைத் தலைவன் பிரிந்து போன நேர் வழி தூரல் என்று கடலை நோக்கி இரந்த தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை
தலைமகன் கலந்து பிரிந்து போனானாய்-இவளும் தேர்க்கால் சுவட்டைத் தனக்குத் தாரகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாளாய் இனித்தான் பிரிந்தார் இரங்கும் நிலம் நெய்தல் நிலமாகையாலே கடற்கரை யாய் இருக்கும் இறே-அத்தேர் சுவட்டை அலை வந்து அழிக்கப் புக அத்தை அழியாதே கொள் -என்று அதின் காலிலே விழுந்து கூப்பிடுகிறாள்
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி அவதாரிகை
இப்பாட்டின் வகுப்பு இப்படி –-கண்ணன் விண்ணனையாய் -பல பல நாள் அன்பர் கூடிலும் ஒரு நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும் அன்றி நீங்கிலும் யாம் மெலிதும் பல பல ஊழிகள் ஆயிடும் அன்பர் யாம் மெலிதும் பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-
என்று தன்னோடு ஸம்ஸ்லிஷ்டனான தன் தலைமகன் அவ்விருளிலே தானே ஒரு கார்யத்துக்காகப் பிரிந்தவனாய் கடற்கரையிலே தேர் ஏறிப்போக அதின் மார்கம் அழியும் படி தரங்க விஜ்ரும்பணமுள்ள கடலைத் தன் தலைவன் வர்ணத்தாலும் ஸம்பந்தத்தாலும் உள்ள ஸ்நே ஹத்தைப் புரஸ்கரித்து
அதின் மார்க்கத்தை அழியாமைக்காகப் பிரார்த்திக்கிறாள்-பிரிவில் கடலும் தத் வியாபாரமும் துஸ் ஸஹமாய் இருள் விரிந்தால் -என்று இதில் –
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-தலைவி கடலை நோக்கித் தேர்க்கால் சுவடுகளை அழிக்காதே என்றல் –
ஸ்ரீ நம்பிள்ளை-வியாக்யானம்
இருள் பரம்பினால் போலே இருக்கிற பெரிய நீர்த் திரைகள் ஆகிற கையைக் கொண்டு
அபாம் அபி -சுக்லம் என்று கொண்டு கடலுக்கு குணம் வெளுப்பாகச் சொல்லா நிற்கச் செய்தே-மா நீர் -என்றதைக் கொண்டாயிற்று இருட்சியைச் சொல்லிற்று பரப்பாலும் நீர்ச் செறிவாலும் கறுத்துத் தோற்றும் இறே
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு தேர் வழி தூரல் -என்னவாயிற்று உபக்ரமித்தது
கடல் மலை போலே நடுவே வந்து அத்தை அழிக்கில் செய்வது என் என்று-வாழியரோ என்று
அதின் காலிலே விழுந்து சரணம் புக்கு அத்தை நியமிக்கிறாள் தன்னைப் பிரிந்தவன் செய்ததைத் தானும் செய்கிறாள் அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா -யுத்த -21-1-விஸ்லேஷத்தில் அவர்களோடு சம்பந்தம் உள்ளது ஓன்று கொண்டாகிலும் தரிக்க வேண்டும்படியாக இவருக்குப் பிறந்த தஸா விசேஷத்தைச் சொல்லுகிறது-ஸோபி ரேணுர் ந லஷ்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-8-31-
இருள் விரிந்தால் அன்ன —
இருள் விரிந்தால் போலே இருக்கிற கடலை பார்க்கிற படி —நீருக்கு வெளுப்பு ஸ்வாபமாய் இருக்க ,
கறுப்பை சொல்லுவான் என் என்னில்–நீர் திரட்சியாலே –பறித் தள்ளினால் வெளுப்பே யாய் இருக்கும் -கறுப்பை சிவப்பும் வெகுளிப்பு–வெகுளிப்பாகிறது–சீற்றம் —கடலுக்கு நெஞ்சில் சீற்றத்தாலே கருத்து இருந்தது ஆகவுமாம் —இருள் விரிந்த மா நீருக்கும் -செறிந்த நீர்–கடலுக்கும் –மா நீர்த் திரை கொண்டு –சம்ருத்தமான நீர் திரைகள் ஆகிய கைகளால் ,தேர் காலை அழித்து கொண்டு வருகிற படி —வாழியரோ–வருகிற கடலை நோக்கி –வாழியரோ-என்று சரணம் புகுகிறாள் -நலிய வந்தாரை வாழ்த்துமா போலே-திரை கடல் ஆகையாலே கார்யம் (தூரல் -கார்யம் )செல்லும் அளவும் கேளாதே-அழிக்கும் படியை கண்டு ,- நடுவே சரணம் புக்காள்–
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு
இருள் பரம்பினால் போலே இருக்கிற கறுத்த நீர்த் திரையைக் கொண்டு–மா நீர் -என்று பெரிய நீர் என்றுமாம்-வாழியரோ-இருள் பிரிந்தார்-என் பக்கல் அன்புடையவர் யாகையாலே-அயல் அறிய ஒண்ணாது என்று இருளிலே பிரிந்து போனவருடைய-தேர் வழி தூறல் ,–எனக்குக் கண்டு தரிக்கைக்கு உடலான நேர் வழியைத் தூராது ஒழிய வேணும்
இவள் சரணம் புக்க படியாலே –நீ என் செய்தாய் என்று கடல் கேட்க –கெடுவாய் பட்டது கேட்டு இலையோ -என்கிறாள்–என் என்ன —அன்பர் இருள் பிரிந்தார் காண்– பகல் பட போனார் ஆகில் ஆற்றாமையாலே கடக்க மாட்டாது ஒழிகிற படியும் அவர் முகத்தில் உண்டான குளிர்த்தியும் ஸ்மிதைதையும் கண்டு தரித்து இருத்தல் ஆகாது —அவர் தாமும் பகல் போகில்-இவளைக் கண்டு வைத்து கால் நடை தாராது –என்னும் படியே போனார் —எங்கேனும் போனாரும் சேரும் காலத்திலேயே போனார் —பதார்த்த தர்சனங்களாலே ஆறி இருக்க ஒண்ணாத காலத்திலேயே போனார் –நான் செய்ய வேண்டுவது என் என்று கேட்க (விஸ்லேஷ வாசனையே இல்லையே இதுக்கு )
தேர் வழி தூரல்–
உள்ளது எல்லா வற்றையும் கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரை போலே ,
அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் —இத்தை அழியாதே கொள் என்கிறாள்
(அவனுக்கு நியாமகமான கடல் தனக்கும் நியாமகம் என்று சொல்கிறாள் )
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக்
கருவாகச் சமைத்த ஆதித்யன் ப்ரபையை உமிழுமாப் போலே-இருள் விரி சோதி பெருமாள் உறையும்
இருண்டு விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிற-எறி கடலே–எறிதல் -கொந்தளித்தல்–எறிகிற கடலே -வாழியரோ-வாழியரோ என்று தேர் வழி தூராமைக்கு வாழ்த்துகிறாள் –
அரவணை மேல் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் என்னுமா போலே — நீர் உறுத்தாத படி திருவனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு
இருள் நீல இத்யாதி —
இருள் விரித்தால் போலே நீலச் சுடரை புறப்பட விடா நின்று உள்ள ஆதித்யனை போலே —
இதி அபூதோ உவமை –பூதமான உவமை போதாது ஆகையாலே அபூத உவமை ஒன்றைக் கற்பிக்கிறது-
இருள் விரி சோதி இத்யாதி —
இருள் விரிந்தால் போலே கறுத்த திரு மேனியில் ,தேஜஸ் உடைய சர்வேஸ்வரன் நித்ய வாசம் பண்ணுகிற-உறையும் எறி கடலே —வெண்ணெய் கட்டிப் போலே இருக்கிற சந்த்ரனைக் கண்டால் போலே அன்றிக்கே சர்வேஸ்வரனுடைய நித்யவாஸம் பண்ணுகிற ஹர்ஷம்-மாலும் கரும் கடலே நோக்கும்–எறி கடலே-சம்ஸ்லேஷம் அறிந்தாய் அத்தனை போக்கி —விஸ்லேஷம் புதியது உண்டிலை காண் —அவனை கிட்டினார்-பரசம்ருத்யைக பிரயோஜனராய் அன்றோ இருப்பது —உன்னை குற்றம் கொள்ளுகிறது என் ?-உனக்கும் குருகுல வாஸம் அங்கே அன்றோ ?-தம்மையே ஒக்க அருள் செய்வாரே (பெரிய திருவந்தாதி )
இருள் விரி சோதி–பெருமாள்–அரவணை மேல்—-உறையும் எறி கடலே–
இருள் விரிந்தால் அன்ன–மா நீர்த் திரை கொண்டு–
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல்–வாழியரோ–-என்று அந்வயம்
கடலே அன்பருடைய தேர் வழியை இருள் விரிந்தால் போல் மா நீர்த் திரைகளைக் கொண்டு
தூறல்-எதிர்மறை ஏவல் ஒருமை-மறைத்திடாதே என்று கைகூப்பி யாசிக்கின்றாள்
தேர் வழி தூராமல் தனக்கு உதவும் பொருட்டு வாழியரோ என்று வாழ்த்துகிறாள்
கடலே உனது தலைவன் உன்னை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் பண்ணுவதால்
பிறவித் துயர் அறியாதே களித்து கிளர்ந்து உள்ளாய் நீ-அபூத உவமையால் அவன் திருமேனியை -நீல ரத்னம் போன்று கரிய நிறமுடைய சூர்ய மண்டலம்-ஓர் கரு நாயிறு –அந்தமில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மான் -திருவாய் -8 -5 -7 – இருள் விரி -நீலம் -கரு-மூன்றுமே -ஒரு பொருள் பன் மொழி -மிகவும் கரிய சூர்யன் –திரை கொண்டு வாழியரோ–இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல்-–
நடுவில் வாழியரோ-என்று சரணம் புகுகிறாள்-பகல் பட போனார் ஆகில் ஆற்றாமையாலே கடக்க மாட்டாது ஒழிகிற படியும் அவர் முகத்தில் உண்டான குளிர்த்தியும் ஸ்மிதைதையும் கண்டு தரித்து இருத்தல் ஆகாது –அவர் தாமும் பகல் போகில்-இவளை கண்டு வைத்து கால் நடை தாராது –என்னும் படியே போனார்
ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி வியாக்யானம்
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு –
இருள் பரம்பினால் போலே இருக்கிற உன்னுடைய மஹா ஜலமயமனான அலைகளைக் கொண்டு-இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி-அன்பானவன் இந்த அந்தகாரத்தில் பிரிந்தவனாய்த் தேர் ஏறிப் போம் வழியை-தூரல் ,-அழியாதே கொள்ளாய்–எத்தால் நம்மை நீ இப்படிப் பிரார்த்திப்பது என்ன
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–-என்கிறாள் திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக் கருவாக உண்டாக்கின அதி நீல ஆதித்யனுடைய ப்ரபையை உமிழுமா போலே
இருள் போலே விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன் நித்ய வாஸம் பண்ணுகிறானே உன்னில் என் கணவனவன் அவனதான தேர் மார்க்கத்தை-தூரல்-அலைகளை வீசி எறியும் கடலே
வாழியரோ -என்று தேர் வழி தூராமைக்குச் சொல்லுகிறாள் ஆயிற்று –
இத்தால்
பகவத் விஸ்லேஷம் தீர காண்கிற பதார்த்தங்கள் அடங்கலும் பாதகமாய் தோற்றுகிற படி-
இத்தால்
எறி கடலே என்று-பாத்ய பாதக பாவத்தாலே கொந்தளிக்கிற ஸம்ஸார ஆர்ணவத்தைக் காட்டுகிறது-அரவணை மேல் என்று தொடங்கி பகவத் சம்பந்தத்தைச் சொல்லுகையாலே தமக்கு விருத்தாசரணம் பண்ணாமைக்கு உறவு சொல்கிறாள்–இருள் பிரிந்தார் அன்பர் என்று-இருள் தரும் மா ஞாலமான -திருவாய் -10-6-1-ஜகத்திலே ஸ்நிக்த பந்துக்களான பாகவதர் விஸ்லேஷித்தார் என்றபடி –மச் சித்தா மத்கத ப்ராணா –ஸ்ரீ கீதை -10-9– இத்யாதியாலே துணைத் தேட்டமாய் இருப்பது இத் தேசத்திலே இறே-தேர் வழி தூரல் -என்கையாலே-ஸாம் சாரிக கோலா ஹலம் மேலிட்டால் தத் விஷய மநோ ரத ஸரணியும் குலையும் என்று நினைத்துக் குலையாமையை அபேக்ஷித்த படி–இருள் விரிந்தால் அன்ன -இத்யாதி-மோஹ அந்தகார பிரசரத்தைப் பண்ணும் வாஸநா கல்லோலம் சைத்தில்ய ஹேது என்றபடி-வாழியரோ என்று-தம் ஆற்றாமையாலே இம் மநோ ரத ஸரணியைக் குலையாமைக்காக பாதகரை வாழ்த்துமா போலே மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –
ஸ்வாபதேசம்
அன்பரான பாகவதரைப் பிரிந்து வருந்தும் நிலையே -அவர்கள் இடம் இடைவிடாமல்
மநோ ரதம் செலுத்தி ஆறி இருக்கும் ஆழ்வார்-அந்த மநோ ரதத்தை குலையாது ஒழிய ஸம்ஸாரமாகிற கடலை வேண்டிக்கொண்டபடி– துன்ப அலைகளையே மேல் மேல் தருவதால் ஸம்ஸாரம் கடல் தானே –
தமக்கு இத்தீங்கு செய்யாமைக்காக வாழியரோ என்கிறார் –
சம்சாரத்துக்கு உள்ள பகவத் ஸம்பந்தத்தைக் காட்டி -அவனுக்கு லீலா விபூதி தானே –
உறவு கொண்டாடுகிறார் பின்னடிகளில்-சம்சாரத்தை அலை வீசும் பெரும் கடல் -பாகவதர்கள் சம்ச்லேஷம் குலையாமல் இருக்க வேண்டி – மோஹ அந்தகார பெருக்கு -உண்டே அவற்றால் குலையாமல் இருக்க வேண்டிக் கொள்கிறார் –
தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை-தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல் விஸ்லேஷ துக்கம் அறியாய்-இன்று கூடி இருந்து இரவிலே போனான் தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம் அத்தை அழியாதே கொள்-எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்
2-8-அணைவது அரவணை மேல் -பிரவேசம் –
சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு –சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை –ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது –ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –
சங்க்ரஹ சங்கதி அருளிச் செய்து அத்தை விஸ்தரிக்கிறார் மேல் –
இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில்-1- அத்வேஷத்தைப் பிறப்பித்து –2–ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து–3- ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
4-இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி–5- இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்-இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு –நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்-
பரத்வம் முதல் பத்தில் அருளி -இரண்டாம் -பத்தில் காரணத்வம் -த்யாநித்தால் மோஷம் கிட்டும் –முக்த பிராப்த போகம் -அருளிச் செய்கிறார் –
இதில்
உபகார பரம்பரைகள் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மாற்றி –அத்வேஷம்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஆபி முக்கியம் -மயர்வற மதி நலம் அருளினன்
தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்
அடிமைக் கண் அன்பு செய்வித்து -ருசியை விளைத்து –
நின் அலால் இலேன் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -கேசவன் தமர் –சம்பந்தி அளவும் -வளர்ந்ததே
ஷீணே புண்யே மர்த்ய லோகம் – -ந புன ஆவர்த்தந்தே -இருள் அகற்றும் -வைகுந்த லோகம் ஏற்றி வைத்து ஏணி வாங்கி –புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே –
மாம் உபேத்ய -புனர் ஜன்ம -துக்க ஆலயம் -அசாஸ்வதம் சம்சாரம் -கர்மத்தால் திரும்ப திரும்ப பிறப்பானே –
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் -சாஸ்திரம் -எழுதா மறை ஏழு முறை சொல்லி –
இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி- திருவடி திரு வநந்த ஆழ்வானை- பரிகரமாக யுடைத்தாய் -பெருமானை-
விஷயமாகக் கொண்ட –முக்த பிராப்ய போகம் -அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது -யானை இடர் கடிந்த -பெரிய திருவடி அங்கே –
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்-
புணைவன் -தெப்பம் -அவனை உபாயமாகக் கொண்டு அடையப் பார்ப்பார்க்கு –நாயாமாத்மா -தேர்ந்து எடுத்து அருளுவான் –
நலம் அந்தமில்லதோர் நாடு புகப் பெறுவீர் -துயரில்லா வீடு-
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே – நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூககைதாநமாய்-மங்களமாய் -உத்தமமாய்- அபரிச்சின்னமாய் –
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
மால்யமான் -மாதா மகன் -காலச்ய வசப்பட்டு ஏற்க வில்லை -மாரீசன் –பலியோ நமுசியோ ராமர் முடிப்பார் -வீரன் சூரன் -மஹா தேஜஸ்வி –
விபீஷணன் -துஸ் ஸ்வப்னம் -கருடன் பாம்பை பிடித்தால் போலே -சீதையை ஒப்படைக்கா விடில் கோரம் –குருஷ்வ மம வசனம் -குல பாம்சினி
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று-
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே –நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –
மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –
இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –
முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
முக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது-முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்-மேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –அவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி –ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்-ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் –
1-1- உயர்வற பரத்வனே -திண்ணன் வீடு -அவதரித்து -விபவ பரத்வன் -அணைவது -இங்கே மோஷ ப்ரதத்வ பரன்–மேலே 4-10- ஒன்றும் தேவும் -அர்ச்சா பரத்வம்
விஷ்ணு போதம்-ஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று – லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் பற்றி நிற்கும் –சர்வ வியாபி–
—————
நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2-
அவனோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம்–தாண்ட விருப்பம் வேண்டுமே -அப்பொழுது தான் சம்பந்தம் பிரயோஜனப்படும் –பிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற விவரணமாய் இருக்கிறது –வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று –ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை–
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —
1-வைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது -புருஷோத்தமன் லஷணம் அன்றோ
2-திருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது -சம்பந்தமே மோஷம் – –வாட்டம் தணிய வீசீறே
3–ஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –
நிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-
திரௌபதிக்கு எங்கேயோ இருந்து புடவை சுரந்தது போலே ஆகாதே -கையில் உள்ள செவ்வித் தாமரையை திருவடியில் இட வன்றோ இது ஆசைப்பட்டது
என் தனி நாயகன்-–ஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது-புணர்ப்பே — அவனோட்டை சம்பந்தம் –-அவன் திருவடிகளிலே சம்பந்தம் துக்க நிவ்ருத்தியையும் பண்ணி –ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் –
—-
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3-
இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –
ஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே – சிவன் நான்முகன் புத்திர முகேன இவரை விடாமல் இருப்பானே –ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் ஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே-பெரும் புணர்ப்பு எங்கும் புலனே — ப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும்- வ்யூஹ மூர்த்தியாக –-தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும் -தனக்கு தகுதியான சேஷ்டிதங்கள்- போருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –
—————
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-
புகுவீர்–இப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்–இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்-ஓவாதே – அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே -என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை
தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்-நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே-ரசித்த பேரைச் சொல்லச் சொல்லி -கலியன் –பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ரசித்த குணங்களைச் – சொல்லச் சொல்லி –நம்மாழ்வார்– யானி நாமானி கௌனானி- வியாசர்–
————
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5-
இணைவனாம் எப்பொருட்கும் -என்றதை உபபாதிக்கிறார் –துயர் பிறவி -தப்பாக சொன்னேன்- ஓவா துயர் பிறவி என்கிறேன் -என்கிறார்-உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும்-ஷட்பாவ விகாரம்-என் தீர்த்தனே — நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்--அன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –
———-
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-
நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து நிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -என்கிறார் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை–இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்-இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே-
————-
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-
ஒருவன் -அர்ஜுனன் -ருத்ரன் -அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ –அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ–இஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –தன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்-
———
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8-
அவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும் திரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார்-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை-அவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால் காணப் போமோ-ஜாதி வியக்தி தோறும் – குறைவற வியாபித்து இருக்கும்-ஆன பின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –
————
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9-
நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்-இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –எங்கும் உளன் கண்ணன்--இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான் என்ற மகனைக் காய்ந்து-இவ் வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று-பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்-பருவத்தாலும் கொண்டாட வேண்டும் ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்-பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன் திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்-அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்–உச்சியது புருவமுமாய்க் கொண்டு- தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே–
——————–
சீர்மை கொள் வீடு ஸ்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே –அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறே– என்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்–முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்-தனி நின்ற ஸ்ரீ வைகுண்டத்தில் தனித்து உள்ளார் – தோஷங்கள் தட்டாமல் உள்ளார் என்றுமாம்–
——————-
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-
இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் –ஆள்வர் எம்மா வீடே – தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும் தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார் – ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –-பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-பிரதிபாத்ய வைலஷ்யண்யம் .-வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது – வக்த்ரு வைலஷ்யண்யம்-தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான் அன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல் பிரபந்த வைலஷ்யண்யம்–
அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு–18-ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற அணைவது அரவணை மேல் அர்த்தத்தை அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார்–ஏவம் வித உபதேஷ்டாவான ஆழ்வார் உடைய-புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஆழ்வாருக்கு –செம்மா பாதம் -இறே எம்மா வீடு-–பொசிந்து காட்டும் இங்கே இவருக்கு மாறன் மலர் அடியே யாயிற்று–விபூதிஸ் சர்வம்- ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply