ஸ்ரீ திரு விருத்தம்–பாசுரம் -15-கயலோ நும் கண்கள் என்று-கண்ணன் கழலினை -10-5-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

இங்கும் கண் -ஞானம்-தலைவியைப் பார்த்து கண் மீனோ-கலங்கி யானை வந்ததோ கேட்டு -உளறி
அயலார் கேட்டால் என்ன ஆகுமோ-கேலியாகவோ-வெறுப்போ-சந்தோஷமாகவோ-உண்மையே இல்லையே-நான்கிலும் சொல்லலாமே –-ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் கேலி வெறுப்பு கொண்டாட்டம் தக்க ஸ்வரம் மாறுமே-காதலனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டுமே
கடியன் கொடியன் நெடுமால் –ஆகிலும் என்நெஞ்சம் அவனே என்று கிடக்கும் -என்பர் அன்றோ –

கொல்லை காக்கின்ற -திவ்ய தேசம் ரக்ஷணத்தைச் சொன்னபடி-ஸ்வ ரக்ஷண அந்வயம் கூடாதே
ஆழ்வாராதிகள் தானே திவ்ய தேசங்களை ரக்ஷிக்க வேண்டும் -ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் தானே அரண்
-ஸ்ரீ வைஷ்ணவர்கள் கால தாமதமாக வர –-அதற்குள்-திரு வாட்டாறு எம்பெருமான் இவரைக் கூட்டிப்போக விரைய உபதேசம் பண்ண நேரம் இல்லையே என்று ஆழ்வார் கேட்பதாகவும் கொள்ளலாம்-நேரம் தாழ்ந்து வந்து அசங்கத பாஷணம் பண்ணுகிறார்கள் என்றுமாம் –வெறுப்பில் த்வனி– ஈது என்ன வார்த்தை-இனி ஆச்சார்யர்கள் இடம் நாம் கால தாமதமாகப் போக –இப்பொழுதாவது வந்தானே என்று பிரசாதம் தருவார்கள்-ஈது என்ன வார்த்தை -ஆச்சர்யம் என்றுமாம்
கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் -ஆசை யுடையார்க்கு எல்லாம் -வரம்பு அறுத்தவர்கள்
இப்படி வெவ்வேறே ரசங்கள் இதில் உண்டே – அயலோர் அறிய மாட்டார்கள் -அறிந்தாலும் -சங்கை -ஈது என்ன வார்த்தை-அந்தரங்கமான எனக்கே தெரியவில்லை அறிந்தாலும் அசங்கத வார்த்தையை அறிய மாட்டார்களே-ஆழ்வார் படியைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் தடுமாறி பேசும் துறை-கிளைவித் தலை மகன் வார்த்தை -அங்கதமாக பேசும் ஈது என்ன வார்த்தை என்றபடி 

தலைமைகளும் தோழிகளும் புனலைக் காக்க தலைமகன் தங்கள் தர்சனத்தாலே கலங்கி
அடைவு கெ ட்ட படி பேசிய வார்த்தையைக் கேட்டவர்களுக்கு அவனது வ்யாமோஹத்தை நிஷேதித்து
வியாகத பாஷணம் என்கிறார்கள்-தங்கள் ஆசையையும் ஆவிஷ்கரிக்கிறார்கள்
அயலோர் என்பதால் தங்கள் அந்தரங்கர் என்பது தோன்றுமே

இயற்கையிலே கலந்து பிரிந்த தலை மகன் ,இரண்டாம் கூட்டத்துக்காக புனத்திலே வந்து
கிட்ட கடவதாக குறி வர விட்டு போய், கால அதிக்கிரமம் பிறந்து பின்பு,அங்கே சென்று கிட்டினவன்
இவர்களைக் கண்டு கலங்கி,அசந்கத பாஷணம் பண்ண, அவர்களும் அத்தை கொண்டு, இவர் வருவதாக போன படிக்கும், வந்த படிக்கும், இப்போது ஆற்றாமை தோற்ற பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி,கண்டிலோம் என்று சிரித்து கொண்டாடுகிறார்கள்-இவனும் வீரன் ஆகையாலே, என்றும் ஆனை வேட்டைக்கு போம் பழக்கத்தாலே ஆனை  வேட்டையை வினவி கொண்டு,செல்ல  கடவதாக நினைக்கிறான்-பிடியை இழந்த தொரு களிறு,தன் ஆற்றாமையாலே, அமாணனை பட்டு (மன்மத விகாரம் ) திரியுமா போலே இவர்களை இழந்து ,தன் ஆற்றாமை யோடு திரிகிற படியை அன்யாபதேசத்தாலே ,ஆவிஷ்கரிகிறான்-

காந்தர்வ விவாக முறையிலே நாயகியோடே புணர்ந்து தெய்வம் பிரிக்கப் பிரிந்த நாயகன்
நாயகியும் தோழியும் தினைப்புனம் காக்கும் வியாஜத்தாலே தனது வரவை எதிர்பார்த்து இருக்கும்
கொல்லைப் புறத்திலே காலதாமதமாகச் சென்று நின்று இவர்கள் மனம் சினம் கொண்டு இருக்கும்
அன்பு வார்த்தைகள் பேசலாகாது இவர்கள் மனம் அறிய அந்நிய பரமான சாதாரண வார்த்தைகளைப் ப்ரஸ்தாபித்து-வேட்டை கருதிச் சென்றானாக வினவ -காலை மான் வினாதல் -வழி வினாதல் -பெயர் வினாதல் – தீர்த்தம் கிடைக்குமா -சுண்ணாம்பு கிடைக்குமா –அபேக்ஷைகளை வியாஜ்யமாகக் கொண்டு புகுந்து வார்த்தை சொல்லவும் கருத்தறிந்து கொள்ளவும் இடம் பெறுதல் பேசத்  தொடங்கினாலும் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு இவை கண்களோ கயல்களோ கேட்க
இவன் கருத்தை அறிந்த தோழி அவன் ஆசையை மறுப்பதாக பிறர் அறியவும்
தலைவியின் ஆற்றாமையும் அன்பையும் மிகுத்து இருப்பதையும் உணர்த்துகிறாள்-அன்பு மிகுதி தோற்றும் விதமாகவும் அன்பை மறுத்து உரைக்கும் விதமாகவும் அமைந்து இருக்கும் சொல் போக்கு அறிந்து அனுபவிக்க வேண்டும்

இப்படி ஆழ்வாருடைய ஞான வை லக்ஷண்யத்திலே வித்தரானவர்கள் இவர் ஞானத்தை ஸ்லாகிக்கச் செய்தே அந்ய பரதை தோன்ற வர்த்திப்பார் சிலரைக் குறித்து அவர்கள் ஹ்ருதய சோதன அர்த்தமாக
பார்ஸ்வஸ்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை புனத்திடைக் களிறு வினவ வந்த கண் அழகைக் கொண்டாடின தலைவனைக் குறித்து தோழி (பேச வந்த தலைமகன் )கருத்து அறிந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –(ஆக இவர் இது தோழி பாசுரம் என்றே திரு உள்ளம் கொள்கிறார் )கயிறு வினவ வந்த கோஷ்ட்டி வேறே-ஆழ்வார் ஞானம் பேசும் கோஷ்ட்டி வேறே-உபாயாந்தர கோஷ்ட்டி அயலோர்-ஆழ்வார் இடம் அவர்களை இழுத்து பிரபன்னர் கூட்டத்தில் சேர்க்க எண்ணி பார்ஸ்த்வத்த ஸூஹ்ருத்துகள் பாசுரத்தை என்றபடி )

கலந்து பிரிந்த தலைவனானவன் பிற்றை நாள் தலை மகளும் தோழி மாரும் கூடப் புனம் நோக்கி இருந்த இடத்தே சென்று தன் ஆயாஸத்தை ஆவிஷ்கரித்து ஆற்றாமையைச் சொல்ல அத்தைக் கேட்ட தோழிமார் வார்த்தையாகச் செல்லுகிறது

பேராமலே நின்றான்-இவள் அவன் பாவஜ்ஜையாய் அதுக்குத் தானும் உள்பட்டாளாய்
இது என்ன வார்த்தை என்று இவள் சொல்லி-என்தான் முன் உன்னோடு நமக்கு அந்வயம் இல்லையோ என்னும்படியான அவன் பாவத்தை நாங்கள் புனத்தில் பண்ணும் பயிரில் உமக்கு அந்வயம் இல்லையே என்று அந்யதா கரித்துச் சொல்ல ஆகில் நீங்கள் இங்கே நிற்பான் என் என்று அவனும் கேட்க இக் கொல்லை காக்க நாள் தோறும் வந்து நிற்பன் நான் உமக்கு என்னில் இப்படிகள் தகுமோ -என்கிறான் கயலோ நும கண்கள் -என்கிற இதில்

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே
–15-தோழி தலைவன் எண்ணம் தெரிந்து அவனை நோக்கி உரைத்தல் –

(கண்ணன் கழலினை -10-5-இதன் விவரணம்–நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே
–10-5-2-களிறு இங்கும் உண்டே–எண்ணும் மனமுடையீர் -பெண்ணின் அழகைச் சொல்ல வந்து களிறு வினவி வந்தார் இங்கும்-)

கயலோ
இங்கனே ஓர் ஆனை போந்ததோ என்று சொல்லுவதாக மநோ ரதித்துக் கொடு போன அவன்
அவர்களோடே கிட்டிக் கண்ணுக்கு இலக்கனவாறே சொல்லுவதும் அறியாதபடி கலங்கி கண்ணை ப்ரஸ்னம் பண்ணத் தொடங்கினான்–கண்கள் கயலோ என்றான்-இது ஒரு வ்யாஹத பாஷணம் இருந்தபடி என் என்ன-இங்கு ஒரு வ்யாஹதீ இல்லையீ –இதுக்கு சம்பாவனையும் இல்லையீ என்கைக்காக கயலோ நும் கண்கள் என்கிறான்-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
முக்தமான உங்கள் கண்களோ என்று வினவத் தொடங்கி அசங்கதமான அம்போடு ஒரு யானை போந்ததோ என்று வினவி சொல்லத் தொடங்கினது இது -சொல்லி முடித்தது அது என்று அறியாதே மரம் போல் -ஸ்தப்ஸ்தமாக திகைத்து நின்றார்-இவள் பூ பரிக்க தோட்டத்தில் இருக்க அவன் வேட்டை யாட குதிரை நம்பிரானில் போவது பழக்க தோஷம் அன்றோ-நுமது கண்கள் என்று கண்டால் கயல் என்று சங்கை தீர்ந்து கயல் தான் என்று நிர்ணயம் பண்ணும் படி ஸர்வதா ஸாத்ருஸ்யம் உண்டே-

கயலோ நும் கண்கள் –
ஓர் ஆனை இங்கனே போந்ததோ என்று சொல்ல ,மனோ ரதித்து  கொண்டு,வந்த இவன் இவர்களை கண்டு கலங்கி , உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போல,இக் கண்களை கயலோ என்கிறான்..நோபஜனம் ஸ்மர்நிதம் சரீரம்—சாந்தோக்ய உபநிஷத்-8-12-9-என்று கொண்டு, முக்தர் சம்சார யாத்திரையை நினையாதார் போல , இவனும் இவர்கள் கண்களை கண்ட பின் , வேறு ஒன்றை நினைக்க அறியாது இருந்த  படி..இது இவனுடைய மற்று ஒன்றைக் காணாவே-யத் விஸ்மயஸ்தி மந்தஸ்மித அந்நிய பாவம் (மாலதி மாந்தவம்) –என்று தன்னையும் அறியாதே விஷயத்தையும் அறியாது இருப்பார்கள் என்று சொல்லுமா போல,-யத்ர நான்யத் பச்யத் நான்யச் ச்ருணோதி நான்யத் விஜாநாதி சபூமா-சாந்தோக்ய உபநிஷத்-7-23-1- –யாது ஒன்றை கண்டால் வேறு ஒன்றை காணாது ஒழியும், யாது ஒன்றை கேட்டால் வேறு ஒன்றை கேட்க்காது ஒழியும் -யாது ஒன்றை அறிந்தால் வேறு ஒன்றை அறியாது ஒழியும் ,-அது நிரபேஷ விஷயம் என்கையாலே ,–மூன்று பிரமாணங்கள்-முதலில் முக்தர்படி-அடுத்து சம்சாரி படி-அடுத்து நித்யர் படி-அதே போல் யானையை மறந்தான் இவன்

கயலோ என்று
(கயல் போன்றதோ சொல்லாமல் )உபமானத்தாலே சொல்லாதே ,-பிரதான்யத்தாலே சொல்லுவான் என் என்னில், சர்வதா சாத்ருச்யத்தாலே,–த்ரவ்யாந்தரத்துக்கும் ,சாம்யம் உண்டோ என்னில் ,-கேவலம் கண்ணை சொல்லிற்று ஆகில்- இல்லை என்னலாம் .. அது ஸ்வ தசையால் ஆகலாம் .-அறிவு அழிந்து சொன்ன வார்த்தை அன்றோ இவள் மேல் பேர் அன்பால் தன்னை மறந்து சொன்ன வார்த்தை-

கயலோ நும் கண்கள்-பஹு வசனத்தால் சொல்லுவான் என் என்னில் ,-மை அமர் வான் நெடும் கண் மங்கைமார்-என்று அவனுக்கு தன் ஓர் ஆயிரம் பிள்ளைகளோ பாதி , இவளுக்கும் அநேகர் உண்டாய் இருக்கையாலே , (வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்தான் அன்றோ அவனும் )அவனோடு கிட்டினார்க்கு ,நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி-என்னுமா போல இறே இவர்களோடு கூடினாரும் இவளைப் போலே இறே இருப்பது ..காணப் புகுகிற தன்னை மறந்ததோ பாதியும் காண்கிறவர்கள் தன்னையும் மறந்தபடி-அவயவ பிரதி பத்தி யாதல் அவயவாந்தர  பிரதி பத்தி யாதல் இன்றிக்கே வெறும் கண்ணுக்கு மேற்பட அறியாது இருந்த படி-அவயவம்- கண் -ஒன்றிலே இவனுக்கஇதுக்கு மேற்பட்ட அறியான்-கண்களிலும் இரண்டாவது அறியான்-கண்கள் –இரண்டு இவளுக்கு என்று அறியான் –ஆகவே இரண்டாவது வியக்தியைச் சொன்னபடி-ஒரு கண்ணின் அனுபவம் தாண்ட வல்லன் அல்லனே –

இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் பண்ணி வ்ரீளை யாலே கவிழ்ந்து இருந்தார்கள்-அநந்தரம் தப்பினோம் ஆகாதே என்று வாஸனை கை கொடுத்து களிறு வினவத் தொடங்கினான்-திரியட்டும் இவன் இந்த அசங்கத பாஷணம் பண்ணத் தொடங்கினான் என்று அறிந்து கேளாமைக்காக முகத்தை மாற வைத்தார்கள்–பின்னை அதுவும் கூடச் சொல்ல மாட்டாதே ஸ்தப்தனாய் நின்றான்--தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து தரிக்க வந்தவனை முடிய நிஷேத வசனத்தைப் பண்ணினால் பின்னை அவனுடைய ஸ்வரூப ஸ்திதி இல்லையே என்றதுக்காக நேரே முகத்தைப் பார்த்து-பாவீ நீ இது என் சொன்னாய் -என்கிறார்கள் -இவன் தன்னை உளனாக்கிக் கொண்டு நின்று வார்த்தை சொல்ல வேணும் என்று

கயலோ நும் கண்கள் என்று
களிறு வேட்டைக்கு வந்தவரைப் போலே உன் கண்கள் கயல் போல் இரா நின்றது என்று கொண்டு-களிறு வினவி நிற்றீர்
களிறு எங்கே என்று தேடி நில்லா நின்றீர்-உறவு என்ன உமக்கு என்னோடு என்று இவளுக்கு ஸ்வ கதம்
இப்படி இவள் சொல்ல என் தான் என்னும்படி அவன் சில சொன்னான்

களிறு வினவி நிற்றீர்–
அசங்கத பாஷனம் பண்ணுகிற இவர் ஆர் என்று முகத்தை மாற வைத்தார்கள்-நோக்கு பெறாத போது ,தன் சத்தை இலையாய் இருக்கும் இறே– இவர்கள் பார்க்கும் படியாக ஓர் ஆனை இங்கே போந்ததோ என்கிறான் .–இங்கனே சொன்னவாறே இவர்கள் பார்ப்பாரோ என்னில் – அழிகிற இவரைப்   பாராது ஒழியிலும் அழியும் புவனத்தை பார்ப்பார்கள் என்னும் அத்தாலே முன் மறந்ததை இப்போது சொல்லிற்று–துணுக் என்று இவர்கள் பார்க்க -திவ்ய தேச ஆபத்தை சொன்னபடி-பகவானை விட உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கு ஏற்றம் உண்டே-திருவேங்கடத்தை வைத்தே அவனுக்குப் பெயர்-தோட்டம் அழிவதைப் பார்ப்பார்கள் அன்றோ )பிரத்ய அபிக்ஜை உண்டாயோ என்னில்-அன்று
வாசனையால் கள்ளர்க்கும் காமுகர்க்கும் முதல் பதம் தெரிந்து இரண்டாம் பதம் தெரியாது இருக்க கடவர் ஆகையாலே-நினைவு வர கண்ணில் இருந்து மனம் மாற வேண்டுமே பழக்க வாசனை உந்த பேசுகிறான் -இப்படி சேரா சேர்தியான வார்த்தைகள் சொல்லுகிறார்கள் என்ன பார்த்தார்கள் —அந் நோக்கிலே ஈடு பட்டு பேசவும் அறியாதே நின்ற படி —முன்புத்தையுள் காட்டில் பிறந்த தசா  விபாகம் இப்படி நிற்கிற இவனைக் கண்டு முதல் கெட ஒண்ணாது என்று பார்த்து இரண்டு தலைக்கும் உஜ்ஜீவனத்துக்காக சொல்கிறாள்-முதல் வார்த்தை கயலோ நும் கண்கள்-இரண்டாம் வார்த்தை களிறு வினவி-மூன்றாம் நிலை ஸ்தப்த்தோஸி -பேச முடியாத நிலை

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
அந்நியர் என்றவாறே அற்றுத் தீர்ந்தார் ஆவார்-யுகாவாதார் என்றவாறே அவனுக்கே அநந்யார்ஹர் இவர்கள் அந்தரங்கை அன்றோ–அடிக்கழஞ்சு பெறலாம் என்று கொண்டாட்டம்–தானும் உள்ளான படி இதற்க்கு இணங்காதார் எல்லாரையும்-அயலார் என்கிறாள் —பகவத் விஷயத்தில் இத்தனை துவரை இல்லாதவரை அயலார் என்கிறாள் அவர்களில் தனக்கு உண்டான வ்யாவர்த்தி சொல்கிறது-(தாத்பர்யத்தால் இவர்கள் அவனுக்கே அற்று அநன்யார்ஹை என்கிறார்கள் )அறியிலும் அறியக் கூடாது என்று இருக்கிறாள்-இவள் விரஹம் தான் அவகாகித்த பின்பும் வாய் புகு நீரும் நில நீருமாய் இருக்கிற படியாய் இருக்கையாலே , அவகாகியாதார்க்கும் ,அறியலாமோ என்று இருக்கிறாள் .-பண்டு இவரை  கண்டு அறிவது எவ் ஊரில் என்னா – இன்னார் என்று அறியேன் என்பாரை போலே கிட்டின போது சம்சயமாய் , உள் புக்கவாறே அறியாமையாலே நிர்ணயமாய் இருக்கிறபடி– பாஷிக  தோஷம் பரிகரிக்க வேணும்  இறே-(பயில்கின்றாளால் -முதலில் தெரியும் என்பார் பின்பு தெரியாது என்பார்
ஸ்வரம் -பார்த்த போது பார்த்தவர் போல்-பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்பாரே )

அயலோர் அறியிலும்
நாங்கள் அறிந்தோம் என்கை-நீர் தான் இதுக்கு முன் கண்டு அறியாதார் ஒருவராய் இரா நின்றீர்
நாங்கள் தனியே இருந்த இடத்தே இது என் சொன்னீர் என்கிறார்கள்
நாங்கள் இருக்கிற இடத்திலே வந்து அசங்கத பாஷணங்களைப் பண்ணா நின்றாள்
இவ்வார்த்தையில் உள்மானம் புற மானம் அறியாதார் என் நினைத்து இருப்பார்கள்–அறியிலும்
உள்ளுள்ளார் குமிழி நீர் உண்ணா நிற்க-புறம்பு உள்ளாருக்கு அறிய ஒண்ணாது இறே-ஆனாலும் பாஷிக தோஷமாய் வருமாதுவும் பரிஹரிக்க வேணும் இறே

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை என்கிறாள்-அயலார் அறியும்படி வரிலும் வரும்
இது என்ன அசங்கத பாஷிதத்தைச் சொல்லா நின்றீர் என்று அபிப்ராயம்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8- என்பதான சுத்தாந்த சித்தாந்திகள் அன்றே அயலார்-மாதவர் இவரே -ஏவம் பூதன் என் கணவன் என்னுமத்தை ஸூ சிப்பிக்கிறாள்
நீர் யாரோ என்பதானதாய்

ஈது என்ன வார்த்தை
அனந்விதமுமாய்
அபார்த்தமுமாய்
இரா நின்றதீ
முன்னிலை வார்த்தைக்கும் பின்னில் வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லாமையாலே அசங்கத பாஷணமாய் இரா நின்றதே-முன்பே அற்ற எங்களை இப்போது அறுகைக்குச் சொல்லுகிறது ஆகையாலே ப்ரயோஜன சூன்யமாய் இரா நின்றதே-அன்றிக்கே அடிக்கழஞ்சு பெறும் சீரிய வார்த்தையாய் இருந்ததீ

இத்தால்-தங்களுடைய ஈடுபாடும்-நிஷேதமும்-இரண்டும் தோற்றச் சொல்லுகிறார்கள்ஈது என்ன வார்த்தை-என்று வார்த்தையைக் கொண்டாடுகிறார்கள்–அயலோர் அறியிலும் என்று-உள்ளீட்டைக் கொண்டாடுகிறார்கள்-கடல் கவர்ந்த உம்மை முன்பு கண்டு அறியோம்-

ஈது என்ன வார்த்தை –
1-(வெறுப்பில் )இச் சேராச் சேர்த்தியான வார்த்தை எங்கே உள்ள –வெறுப்பில் முகம் அறியாதார் ஒருவர் வந்து நின்று முகம் அறியாத வார்த்தைகளை சொல்லா நின்றீர்-–2-ஆற்றாமை தோற்ற இங்கனம் சொல்லில் புறம்புள்ளார் என் நினைத்து இருப்பார்கள் –நாங்கள் பரண் இடுவது ஆயோ வென்பதாய் கோபிக்கிறதை எல்லாம் வெளியிடா நின்றீர் –3-(கொண்டாட்டம் )தென்றலும் சிறு துளியும் போலே உத்தேசியத்தோடே சேர்ந்ததொரு வார்த்தை இருந்தபடி என்-(கலங்கி இருப்பவனைப் பார்ப்பதே காதலிக்கு உத்தேச்யம் ) வார்த்தையைக் கேட்டு எத்திறம் என்கிறாள் –4-நீர் வார்த்தைக்கு பாவிகளோ என்கிறாள் – உம்முடைய பாடு வார்த்தை இறே -அனுஷ்டானம் இல்லை என்கிறாள்– ஷேபம் -கேலி -ஆச்சர்யம் -கொண்டாட்டம் -நான்கு நிர்வாகம்

எங்கள் பாடு அனுஷ்டானம் இல்லையே யாகிலும் உங்கள் பாடு அனுஷ்டானம் உண்டோ என்ன –
(இது பகவான் வார்த்தை-எனது பக்கம் இல்லை என்றால் உங்கள் இடம் உண்டோ என்ன
திவ்ய தேசம் சேவை சாதிக்கா விட்டாலும் நாங்கள் ரக்ஷித்து உள்ளோமே
)

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
கடலை நிஸ்ஸேஷமாகப் பருகி -கரு உண்ட பெண் போல்-மந்தமாக சஞ்சரிக்கும் மேகம் போல் -உலாவி
திரு நிறம் உடைய அவனது-திருவேங்கடத்தானது வடிவு அழகே நீராக விளையும் தோட்டம் உடைய தேசம் என்றவாறு-அங்கு உள்ள புனம் இல்லை -இதனால் விளைந்த தோட்டம் என்றவாறு
திவ்ய தேசம் ரக்ஷிக்கும் எங்கள் உடன் உமக்கு சேர்த்தி- அப்யாசம் இல்லையே-
பெரும் கடல் மண்டி யுண்டு எங்கும் வர்ஷிக்கலான சஞ்சாரம் உள்ள காள மேகம் போலே
குளிர்ந்த நிறத்தை யுடையவனுடைய வேங்கடத்தில் உள்ள புனத்தில் என்னோடு உமக்கு
கூட்டுப் பயிரும் இல்லையே உமக்கு என்னோடு என்ன சம்பந்தம் என்றபடி

கடல் கவர்ந்த-புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் –
உமக்காக வன்றோ -நாங்கள் குடில் கட்டிக் கொண்டு கிடக்கிறது என்கிறாள் –கடல் நீரைத் தாரையாகப் பருகி அந்நீரோடே கூட கர்ப்ப கேதத்தாலே நெகிழ்வாரைப் போலே சஞ்சரியா நின்றுள்ள மேகம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடைய திரு வேங்கடமுடையான் – சமுத் வகந்தஸ் ஸலீலாதி பாரம்-என்னும் படியே–கொண்டல் வண்ணன் – உபமானமாகச் சொல்லப்பட்ட மேகத்தில் உண்டான நீர் அன்றிக்கே
உபமேயத்தின் வடிவே இங்குள்ள பதார்த்தங்களை தாரகமாய் இருந்தபடி –அதில் நீர் இவன் இடத்தில் நீர்மை-இதுவே தாரகம்-வண்ணம் -தன்மை –

புன வேங்கடதெம்மாடும்-பயலோ இலீர் —
வேங்கடத்து புனத்து எம்மோடும் பயலோ இலீர் –
-நீர் சேஷீ பூர்வஜர் என்னுமதுவும் தப்பிற்று இறே –
நாங்களும் வேணும்-காணும்-நாங்கள் பற்றி இருக்கிறது ப்ராப்ய பூமியை அன்றோ –நிரபேஷரை சாபேஷர் பற்ற வேண்டாவோ –(நீர் சா பேஷன் -எங்களைத் தேடி அன்றோ நீர் வந்தீர் ) எங்களுக்கு படி கடந்து புறப்படில் குற்றம் –-உமக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –-நீர் சேஷியும் ரக்ஷகரும் ஆகையால் உமக்கு குற்றம் – நாங்கள் சேஷ பூதரும் ரஷ்ய வர்க்கமும் ஆகையால் எங்களுக்கு குற்றம் –இவர்களுக்கு பரார்த்தமாகப் புறப்படலாம் –-தீதில் நன்னெறி காட்டி -என்னும் படியால் ஸ்வார்த்தமாக ஒன்றும் செய்யலாகாது -பாதி பதார்த்தமாக எல்லாம் செய்யலாம் என்றபடி-உபாயம் என்று ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக ஒழிவில் காலமாக அனைத்துமே செய்ய வேண்டுமே-பயல் என்று பாகமாய் எங்களுக்கு உம்மோடு கூட்டுப் பயிர் இல்லையே-நெடு நாள் கூட்டுப் பழக்கம் உடையவர் போலே நின்று பேசாதீர் மேல் எழுந்த அபிப்ராயம் உம் வருகையை எதிர் பார்த்து கொல்லை காத்தோம் -இது ஒரு வியாஜ்யமே-பயலோ இலீர்–-நெடு நாள் பழகினாலும் கண்டு அறியாதது போலே என்றும் புதியனவாய் உள்ள உமது அழகுடைமை முதலியன -என்றுமாம் -இங்கனம் தலைமைகளின் காதலைத் தலை மகனுக்குத் தெரிவித்தபடி –எம்மொடும் பயலோ இலீர்-எங்களுடன் பயிர்க்கூட்டு இல்லை-பயல் என்று பாகமாய் கூட்டுப் பயிர் இல்லை என்றபடி-ஆதலால் நிற்கிற இதுவும் மிகை என்றதாயிற்று 

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே
நாங்கள் கொல்லை நோக்கும் காலத்துக்கு ஒரு வரம்பு இல்லை-புனல் காக்கும் -நாங்கள் திவ்ய தேசம் காப்பது நீர் வருவீர் என்று வருந்தி இருந்தோம் பல காலமாக-ஆனால் நீரோ வரவில்லையே என்று வருந்தி சொல்லும் வார்த்தை என்றும்-நெடுநாள் பழகினாலும் முழுக்க கண்டு முடிக்க முடியாத ஸ்ப்ருஹணீயம் -அழகு உள்ள நீர் என்று கொண்டாட்டமாகவும் –-பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் –நாங்கள் இங்கே வந்து நிற்பது கொல்லை காக்கைக்காவே காண் என் உன் ரஷ்ய ரஷாக பாவத்துக்கு நான் இல்லை என்று தான் நீ இல்லை என்று தான் குறை சொல்ல வல்லையே
நாளும் பல பலவே–நியமனத்தின் படியிலே கொல்லைக்கு அழிவு வாராமல் நோக்கிக் கொண்டு
போருகிற நாள்களும் பல பல யுண்டு ஆண்டு தோறும் பல பல நாள்களும் காக்கின்றோம்

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே-
நாங்கள் கொல்லை நோக்கியோ இருக்கிறது -உம்மை நோக்கி யன்றோ –(வாஸூ தேவா உன் வரவு பார்த்து இருந்தோம் )நுனி பழுத்த வாறே தொடங்கிப் போகும் காலம் கூறுகிறது என்று அஞ்சுகிறபடி –
இத்தனை காலம் வழி பார்த்துக் கண் மறைந்தோம்- இப்போது வந்தீரோ உம்முடைய ஆற்றாமை காட்ட –நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொகட்டு இன்றோ உமக்கு போது விடிந்தது என்கிறான் –நீர் வேட்டைக்குப் போந்தால் போலே காணும் நாங்கள் கொல்லை நோக்கி இருந்தபடி –அன்யார்த்தமாக நாங்கள் இருந்த இருப்பையும்-அன்யார்த்தமாக நீர் வந்த வரத்தையும் விபவிக்க பண்ணினீரே என்கிறாள்(இரண்டுமே பலம் இல்லாமல் வீணாக்கப் போனதே )நாங்கள் புனம் நோக்கி இருந்தோம் ஆகில் நீர் இருவியை (கதிர் கட்டை )நோக்கி இரும் என்கிறாள் –புனம் கொய்து இற் செறியக் காலம் ஆயிற்று – நீர் வழித் துணையாக வந்தீரோ –நாங்கள் எங்களுக்கு  உரியவர்கள் என்று இருந்தீரோ –
சிலர் வைக்க இருந்தவர்கள் என்று இருந்திலீரோ –என் நான் செய்கேன் யாரே களை கண் என் செய்கின்றாய் —உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டோம்

இத்தால் ஆழ்வாருடைய வை லக்ஷண்யத்தைக் கண்டு-இப்படிப் பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு
தாம் ஈடுபடுகிறபடி –
இத்தால் பகவத் விஷயம் பிரசாதிக்கிறோம் இந்நாளில் வாரும் என்று குறித்த நாளில் வராமல் காலம் விளம்பித்து வந்த ஸ்ரீ வைஷ்ணவர்களைக் குறித்து நமக்குத் பிராப்தி அணித்தாய் விட்டது இப்போது விளம்பி வந்தால் என்ன பயன் என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறாராய் செல்லுகிறது–இத்தால் ஓர் ஆச்சார்யன் சிஷ்யருக்கு அர்த்த பிரகாசிக்கக் காலம் குறித்து விட அவன் காலம் தப்பி வர நமக்கு சரமகாலம் வந்து விட்டதே ஆனால் காலம் போய் விட்டது என்று இல்லாமல் வந்தீரே உம்முடைய ஆஸ்திக்த்வத்வம் இருந்த வாறு என்று வாழி என்ற வாறு

இத்தால்
கயலோ நும கண்கள் என்று
எங்கள் தர்சனத்தையும் கொண்டாட நின்றீர்-பிரபத்தி நிஷ்டை தானே எம்பெருமானார் தர்சனம் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-த்வமேவ உபாய பூதோ மே பவ அத்யவசாயம் கொண்டாடுவது )களிறு வினவி -என்கையாலே ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா வந்தம் ப்ரமாதினம் ஞான அங்குசேந க்ருஹ்ணீயாத் வஸ்ய இந்திரிய தந்தினம் -சுக்ர நீதி -1-98-என்று காடு பாய்ந்து திரிகிற கடக் களிற்றைத் தேரோட்டி விட்டுப் பிடிக்க நினைப்பாரைப் போலே இந்த்ரிய அநுதா வனத்திலே தேட்டமாய் இரா நின்றது –உபாயாந்தர நிஷ்டர் இந்திரியங்கள் திரிய ஞானம் என்றும் அங்குசன் கொண்டு நாம் கட்டுப்படுத்த வேண்டும் இவர்களுக்கு ஆழ்வார் ஹ்ருஷீகேசன் இடம் விட்டார் அன்றோ-கீதாச்சார்யன் அருள் கொண்டு அருளியவற்றையே அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினார் நிற்றீர் -என்கையாலே இங்கு உண்டானது புறம்பு போக மாட்டு கிறிலீர் -என்றபடி–அயலோர் -என்று
இம் மர்யாதைக்குப் புறம்பானவர்கள் என்றபடி –அதாவது ஆழ்வார் ஞான வை லக்ஷண்யத்துக்குப் புறம்பாய் ஸ்வ ஞானத்தாலே இந்த்ரிய வஸீ கரணம் பண்ணத் தேடும் உபாஸகரை நினைத்த படிஅறியிலும் -என்கையாலே தேவாநாம் குஹ்யமான இந்த ஞான அநு ப்ரவேஸம் உபாயாந்தர நிஷ்டர் அறியாமல் மறைக்கப்படும் ரஹஸ்யம் என்றதாயிற்று –

ஈது என்ன வார்த்தை -என்கையாலே இந்த்ரிய வஸீ காரத்துக்குத் தான் யத்னம் பண்ணுகையும்
அநந்ய ஸாதனருடைய ஞானத்தை ஸ்லாகிக்கைக்கும் ஏக அதிகாரிக்குச் சேராது என்றபடி–ஞானத்தால் தானே இருவருக்கும் இந்திரிய வஸ்யத்தை செய்ய வேண்டும் தர்ம வீர்ய ஞானத்தால் ரிஷிகள்
அருளின பக்தி ஆழ்வாருக்கு -அவனது ஞானத்தால் அவனே செய்து அருளுவான்
அன்றோ –கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் -என்கையாலே-இந்த ஞான நிஷ்டருக்கு
1-உபாய பூதனானவனுடைய உள் நீர்மையால் உண்டான பூர்த்தியையும்
2-ஜல ஸ்தல விபாகம் இல்லாத உபகாரகத்வத்தையும்
3-ஸர்வ ஸந்நிதியையும்
4-தர்ச நீயமான விக்ரஹ யோகத்தையும் சொல்லிற்று-

வேங்கடத்து என்று-உபாய பூதனானவன் உத்துங்கன் அன்றியே ஸர்வ ஸூ லபனான அர்ச்சாவதார யுக்தன் -என்றதாயிற்று–புன வேங்கடத்து -என்கையாலே-அர்ச்சாவதார ஸ்தலமே போக ஸ்தானம் என்றபடி–எம்மொடும் பயலோ இலீர் -என்று ஏவம் வித போக பாக்த்வம் உபாயாந்தர நிஷ்டருக்கு இல்லை என்றபடி–கொல்லை காக்கின்ற -என்று -இந்த போக ஸ்தானத்துக்கு ரக்ஷை இந்த அநந்ய ஸாதனருடைய நித்ய ஸந்நிதி என்றபடி–நாளும் பல பலவே–என்று இவ்வதிகாரிகளுக்குப் போக அந்வயம் தத் தத் கால உசிதமாய்க் கொண்டு அவிச்சின்னமாய் நடக்கும் என்றதாயிற்று –கொல்லை என்று-வரம்பு அறுதியைக் காட்டுகையாலே அர்வாசீன போகம் போலே பரிச்சின்னம் அன்றியிலே
இருக்கும் என்றதாயிற்று (கொல்லை எல்லை என்றபடி )ஆக இப்படி ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்திலே அவகாடரானவர்கள் உபாயாந்தர ஆகாங்ஷை யுடையாரையும் திருத்தி
உள்ளே புகுர விடும் பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்வாப தேசம்
ஆழ்வார் படியைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் தடுமாறிச் சொன்ன வார்த்தை

தாத்பர்யம்
ஆழ்வாருக்கு பகவத் விஷய அவஹானத்துடைய வைலக்ஷண்யம் கண்ட பாகவதர்கள் இவருடைய
ஞானாதி குணங்களில் ஈடுபட்டு மக்நராய் இருக்க அவர்கள் ஈடுபாட்டில் ஆழ்வார் தாம் ஈடுபட்டு அருளிச் செய்த பாசுரத்தை-ஈது என்ன வார்த்தை கேட்டாரே சகிகளுடன் புனத்தில் இருந்த நாயகி அங்கு தம்முடன் கலக்க வந்த நாயகன் தடுமாறி நிற்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
நாயகன் வரவைக் கண்ட போதே இவர்கள் கண்கள் பரந்து நீண்டு மிளிர்ந்து இருக்க
அவற்றின் அழகைக் கண்ட போது தான் வந்த கார்யம் மறந்து இவை மத்ஸ்யமா என்று கேட்டு
அத்தை அவர்கள் கேட்டு உனது வார்த்தை உன்மத்தர் வார்த்தை போல் பரிகசிக்க
இவ்வளவில் அவன் மறந்தத்தை நினைத்துக் கொண்டு-இங்கி யானை போனதா என்று கேட்டான்
முன் பின் சங்கதி இல்லாமல் பேசுகிறீர் என்ன
ஸ்தாப்த்தனாய் இருக்க அசங்கதத பாஷாணம் பேசி நின்ற இத்தை அசலார் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்ன
அவன்
நீங்கள் செய்தது சரியா என்ன திருவேங்கட நீர்மையே தாரகமே விளை நீராகக் கொண்ட இந்த பயிர் காக்கிறோம் என்று வ்யாஜத்தால் உம்மை எதிர்பார்த்து இருந்தோம்
அப்போது எல்லாம் வராமல் இப்போது வந்தீர் இப்படி உபேக்ஷித்து இருப்பது யுக்தம் அல்ல காணும்

10-5-கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்-ப்ரவேஸம்-

விஸ்ரம் பதோ-அதி சங்கை போக்கி -10-3
பக்தி ஏக லப்தன் -10-4-
கரண த்ரய ஆச்ரயணீயத்வம் -10-4-

கண்ணன் கழலினை -பிரவேசம் –

பக்தியானது தனது பலத்தோடு பொருந்தின படியை அருளிச் செய்தார் மேல் –
அத்துணை முறையைப் பொறுக்க மாட்டாமல் ஈஸ்வரன் தன்னை கொடு போகையிலே
விரைகிற படியைக் கண்டு -என்றது -மரணமானால் -என்றது-
அவனுக்கு பல நாள்களாய் அத்துனையும் பொறுக்க மாட்டாமல் அவன் கொடு போகையில் விரைகிற படியைக் கண்டு -என்றபடி-
நமக்கு போக்கு தவிராத பின்பு-இனி இவர்களுக்கு-பக்திமான்கள் உடைய செயல்கள் இருக்கிற படியையும்
அறிய வேண்டுவது ஓன்று ஆகையாலே-அதனை உபதேசிப்போம் என்று பார்த்தார்-
இவர் தாம் எம்பெருமானாரைப் போலே பேர் அருள் உடையவர் காணும் –காரேய் கருணை ராமாநுசன் அன்றோ

இது தான் ஓன்று இவர்களுக்கு குறை கிடந்தது ஆகிறது என் -என்று
அது இருக்கும்படியை உபதேசிப்போம் என்று பார்த்து-பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்-பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு
அந்த பக்திக்கு – -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு நினைக்க தகும் மந்த்ரம் -நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்-
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ்வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக்கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –5-
இப்படிப் பற்றுவார்க்கு அவன் -மேயான் வேங்கடம் – சுலபன் என்றும் –6-
மாதவன் -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –7-
மாதவன் என்று என்று -இவனை இடுவித்து பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்-8-
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு சொன்ன முறைகள் வேண்டா-
ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்-9-
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு-அடையுங்கோள் என்றும்-10-
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்-
இப்புடைகளிலே சொல்லி-
நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று-உபதேசித்து-
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-

வீடு முன் முற்றவும் -திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை-
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-

அஞ்சாம் திருவாய் மொழியில் கீழ் போக உபகரண போதையான பக்தியினுடைய ஸ்வரூபத்தை ப்ரதிபாதித்து
அதனுடைய பிரகார ப்ரதிபாதன அர்த்தமாக பஜநீயனான சர்வேஸ்வரனுடைய
மந்த்ர லிங்கமான அசாதாரண நாமத்வத்தையும்
நாமார்த்த பூத குணாதி யோகத்தையும்
ஸ்ருஷ்ட்யாதி கர்த்ருத்வத்தையும்
ஆஸ்ரயண அர்த்தமான அருணாவை ஸாயித்வத்தையும்
மோக்ஷ பிரதத்வத்தையும்
ரக்ஷணார்த்த ஸுலப்யத்தையும்
உபாய உபேயத்வத்தையும்
அதிசயித்த புருஷ போக்யத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜன ஸூல பத்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷணத்தில் அதிசயித மஹத்த்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரனை யுக்தார்த்த ப்ரதிபாதகமான மந்த்ர அனுசந்தான பூர்வகமாகப்
புஷ்பாதி யுபகரணங்களைக் கொண்டு கரண த்ரயங்களாலும் அனுபவிக்க ஸமஸ்த விரோதிகளும் தானே போம் –
நிரதிசய புருஷார்த்தமும் கைப்படும் -என்று பல வ்யாப்தமான
பக்தி யோக பிரகாரத்தை ஸூ க்ரஹமாம் படி சங்க்ரஹேண யுபதேசித்துத் தலைக் கட்டுகிறார் –

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே
–10-5-1-

தோல் புரையே போமதுக்குப் பழுதிலா யோக்யதை -ஒழுகலாறு -வேணும் -மனமுடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு – நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-

எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே-அனுசந்திக்கைக்கு யோக்கியமான -மந்த்ர பிரதானம் -வியாபக மந்தரங்களுள் ஸ்ரேஷ்டம்-சார தம காயத்த்ரியில் முன்னோதிய-பிரணவ -நமஸ் -சதுர்த்தி அபேக்ஷிதங்கள் அல்ல -இத்துணையே அமையும் -என்பார் –நாரணமே -எனத்-தேற்றகாரம் கொடுத்து ஓதுகிறார்-நாராயணம்-அதிலும் சுருக்கி –நாரணமே-பக்தியை உடையராய்க் கொண்டு-அவனை நினைப்பார்க்கு-பற்றுக் கோடானா-திருமந்தரம் -இன்னது –-சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –என்று மேலே சொன்னதனையே இங்கே கண்ணன் கழல் இணை என்கிறார்

பிரிந்து கூடினாரைப் போலே இருக்கிறது காணும்-ஆதலின் –நண்ணும் -என்கிறார் -இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-வந்தான் என்பது போலே-ஸூ ஸ்தானம் போலே –இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –

மனம் உடையீர் -என்கிறார் -நிதி உடையீர் -என்னுமாறு போன்று-இதனையே குவாலாக நினைத்து இருத்தலின் –இதனால் -இதற்கு அதிகாரம் தேட வேண்டா-ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் -என்பது போதரும் –

எண்ணும்- திருமந்தரம் -என்னாமல்-நாமம் -என்கிறது-இதற்கு ஒரு அதிகாரி நியதி -அங்க நியதி -வேண்டா-குழந்தை தாயின் பெயரைச் சொல்லுமாறு போன்று அமையும் -என்கைக்காகா –எண்ணும் திரு நாமம் -நினைக்கப் படும் திருப்பெயர் –சுலபமான அநுஸந்திக்கும் திரு நாமம்
அன்றிக்கே –பக்திமான்களைச் சொல்லுகையாலே அது தான் -அது அது –என்னும்படியாய் ரசமாக இருக்கையாலே சொல்லுதல் -என்னுதல் –தேனும் பாலும் — நானும் சொன்னேன் நமரும் உரைமின் –

—————–

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே
–10-5-2-

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்-நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய பொருளை அருளிச் செய்கிறார் –குண விபூதி யோகம்-எம்மான் –இது லீலா விபூதிக்கு உப லஷணம்-குற்றம் செய்தது பொறுக்கைக்கு ஒரு உலகமும்-பாரணங்கு ஆளன்-ஸ்ரீ பூமிப் பிராட்டி யைச் சொன்னது நித்ய ஸூரிகளுக்கு உப லஷணம்-பொறுப்பிக்கைக்கு ஒரு உலகமும்-குற்றம் செய்தது பொறுக்கைக்கு ஒரு உலகமும்-பொறுப்பிக்கைக்கு ஒரு உலகமும் -ஆயிற்று 

காரணன் தானே –இவற்றின் உடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்-தன் அதீனமாய் உடையவனாய் இருக்கையும் – இவற்றுக்கு ஆஸ்ரயம்-இவை தனக்கு ஆஸ்ரயமாக –இவை இரண்டாலும் பலித்தது -பரத்வ சௌலப்யங்கள் அந்தர்யாமித்வமும் -உபாயத்வமும் -உபேயத்வமும்-வாரணம் தொலைத்த காரணன்-என்கிறது திரு அவதாரங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம் –

இரண்டாம் பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும்-நாராயணன் -என்னும் திருப் பெயரின் உடைய பொருளை அருளிச் செய்கிறார் –
ஏதேனுமாக திரு மந்த்ரத்தை சொல்ல நேர் பட்டவாறே-
முன்னே அர்த்தத்தைச் சொல்லி பின்பு பெயரினைச் சொல்லுதல் –
முன்பே திருப் பெயரைச் சொல்லி பின்பு அர்த்தத்தை சொல்லுதல்

செய்யக் கடவதாய் இருப்பது ஒரு நிர்பந்தம் உண்டு இவர்க்கு-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – என்னுதல்
யாவையும் எவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்னுதல் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -என்னுதல் –
நாராயணன் நங்கள் பிரான் அவனே -என்னா -அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -என்னுதல் செய்வர்-
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் -நாராயணா
நாராயண பரஞ்சோதி இரண்டு வகைகளும் உண்டே

—————–

தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே
–10-5-3-

ஸ்வாமித்வ ப்ரயுக்தமான-சர்வேஸ்வரன்-ஸ்வரூபத்துக்கு ஏற்ற-பல வகைப் பட்ட ரஷணங்களை-சொல்லுகிறார்-சர்வம் கலு இதம் ப்ரஹ்ம-தத் த்வம் அஸி-தஜ்ஜலான்-சாந்த உபாசித–இங்கு சொல்லுகிற தாதாத்மியம் -ஓன்று பட்டு இருத்தல் -ஸ்வரூபத்தால் ஐக்கியம் சொல்லுகிறது அன்று-
சரீராத்மா பாவத்தால்-காரண காரிய பாவ -ரஷ்ய ரக்ஷக பாவ-ஆதார ஆதேய பாவ-நியந்தரு நியாந்தா பாவ சம்பந்தம் உண்டே –ஏக பிரகாரி -அபிருதக் சித்த விசேஷணம்

தானே உலகு எல்லாம்ஏக பிரகாரி-பிரகார பிரகாரி பாவம் -நாராராயணனே நமக்கே-ஏகோ பஹு நாம்

தஜ்ஜலான்-சாந்த உபாசித-
தஜ்ஜத்வ-அந்த பரம் பொருள் இடத்து உண்டாவதாலும் –
தல்லத்வ – அந்த பரம் பொருளில் லயம் அடைவதாலும் –
தத் நத்வ -அந்த பரம் பொருளால் காப்பாற்றப் படுவதாலும்-
இதம் சர்வம் -காணப் படுகிற இவை எல்லாம்
ப்ரஹ்ம கலு -அந்த பரம் பொருள் அல்லவா –
தத் அநத்வம் -உயிர்பித்தல் -காப்பாற்றுதல்-

தஜ்ஜத்வ தல் லத்வங்களில் –
தச் -சப்தம் -சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம பரம்
தத் அநத்வத்தில்-தச் சப்தம் கேவல ஸ்வரூப மாத்ரம்-

தானே படைத்து இடந்து-சஹாயாந்தரம் இல்லாமல் ஸ்ருஷ்ட்யாதிகள்
தானே உண்டு உமிழ்ந்து -அபேக்ஷிக்காமல் தன் பேறாக ரக்ஷித்து
தானே ஆள்வானே -சேஷியாந்தரம் இல்லாமல்
தானே உலகு எல்லாம் -இவற்றால் தானே ஸ்வாமி –

இப்படி பல விதமான பாது காத்தலை பண்ணுகையாலே-தானே உலகு எல்லாம் –எல்லா பொருள்கள் எல்லாம் ப்ரஹ்மமாகவே இருக்கின்றன-தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே –ஆகையாலே-தானே உலகு எல்லாம் -என்கிறது –

சிலந்திப் பூச்சி தானே நூலை கட்டி அழிப்பது போலே -வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன்

————-

ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே-
10-5-4-

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6-தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று- பெரிய நீரைப் படைத்துஅதில் கிடந்தது படைத்து இத்யாதி–ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு-அவ் வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திரு மந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு-மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள்

ஆள்வான் –இவற்றை முழுதும் அடிமை கொள்ளுமவன் –

ஆழி நீர் ஆள்வான்-அடிமை கொள்ளும் வகை இருக்கும்படி-காரணமான தண்ணீரிலே-
படைத்தலில் நோக்கு உள்ளவனாய்-திருக் கண் வளர்ந்து அருளி –அந் நிலையிலே ஆத்மாக்களை காப்பாற்றியவன் –

நாள்வாய் நாடீரே –நாள் தோறும் வணங்குங்கோள்-அத் திரு வநந்த ஆழ்வான் உடைய பேறு நீங்களும் பெறலாம்-

————

நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-
-10-5-5-நிதானப் பாசுரம் -முக் கரணங்களால் ஆராதனம்

நாடீர் -என்பதனால் –மானசீகம் நாடீர் நாள் தோறும்-பசித்த போது எல்லாம் உண்ணுமாறு போலே –கால நியமம் இல்லை என்றவாறு —வாடா மலர் இட்டு –காயிகம்–ஆன்மாவாகிய மலர்–பாடீர் –வாசகம் -முக்தர் சாம கானம் பண்ணுமாறு போலே-அவனுடைய திருப் பெயர்களை பக்தி-முன்னாக பாடுங்கோள் –ஆக முக் கரணங்களின் தொழிலையும் சொல்லிற்று –-வீடே பெறலாமே –இப்படிச் செய்யவே ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியைப் பெறலாம் -அங்கு சூட்டு நன் மாலைகளைக் கொண்டு ஆராதிக்கையும் -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்னும் பாட்டுமாய் இறே இருப்பது – ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே-ஸ்வரூப ஆவிர்பாவம் வந்தாலே முக் கரண கைங்கர்யம் தானே-பாடுகையாகிய வீடே பெறலாமே

————

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே
–10-5-6-

மேயான் வேங்கடம்-பிற்பாடரான நமக்காக திரு மலையிலே நின்று அருளினான்-அவனை அடையுங்கோள்-என்கிறார்–காயா மலர் வண்ணன் –-துரும்பும் எழுந்து ஆடி-அடிமையில் மீண்டு அல்லது நிற்க-ஒண்ணாதபடியான வடிவு படைத்தவன் –-பேயார் முலை உண்ட வாயான்-பிரகிருதி அழித்து அஹங்காரம் மமகாராம் போலே பூதனை முலைகள்-மாதவனே –நம்முடைய செயலைப் பாராதே-அங்கீ கரிப்பதற்கு அருகே இருப்பாரும் உண்டு

—————-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே
-10-5-7-

வேங்கடத்து உறைவார்க்கு -நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -வினை முற்றவும் சாராதீது ஒன்றும் அடையா –முன் செய்தவை எல்லாம் அழிந்து விடும் – ஏதம் சாரவே –
இனித் தீய செயல் அடையாது -என்றது-முன் செய்த இரு வினைகளையும் மறந்து விடும் –
இனி செய்வன வற்றில் தன் நெஞ்சு செல்லாது – போய பிழையும் புகு தருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும் செப்பு –

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்– நாராயண நாமத்தோடே-இதனைச் சேர்த்து சொல்லப் பாருங்கோள்என்று என்று–பூர்வ உத்தர வாக்கியம் -உபாயத்வம் பூர்வ கண்டம் -அவனை உபாயம் இவளை புருஷா காரம் -உபேயத்வம் இரண்டு ஆகாரம்-ஓத -ஒருவர் உச்சாரணம் செய்ய நீங்கள் அநு உச்சாரணம் செய்ய –-ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி அடையவும்-இனிமையோடு திருநாமம் சொல்லவும்-மாட்டாதார் அந்தப்புர பரிகரமானார்-வார்த்தையைச் சொல்லவே-பக்தியை செய்தார் அடையும் பலத்தை-நீங்களும் அடையலாம்

மேலே கூறின திரு மந்த்ரமும்-இப் பாசுரத்தில் சொன்ன ஸ்ரீமத் பதமும்
தனித் தனியே பேற்றுக்கு போதியவாய பின்பு-இரண்டினையும் சேர்த்து சொன்னவர்களுக்கு-பேறு சொல்ல வேண்டாவே அன்றே
மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10

ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டனானவனுடைய மாதவன் என்கிற திரு நாமத்தை
பூர்வ கண்ட மர்யாதையாலே உபாயத்வேன ஆஸ்ரயணீயன் என்றும்
உத்தர கண்ட மர்யாதையாலே உபேயாத்வேன புருஷார்ய பூதன் என்றும் அனுசந்தித்து

முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது
பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-
முமுஷுப்படி -சூர்ணிகை -122
ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று

—————

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே-
-10-5-8-

சர்வ புருஷ போக்ய பூதன் -திரு நாமம் சொல்வார் நித்ய ஸூ ரிகள் சமம்-அதிகாரி நியதி இல்லை-யாரேனுமாக திருப் பெயரை-எப்பொழுதும் சொல்லுவார்-நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள்-ஓதுவார் -வர்த்தமானம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டு இருப்பவர் என்றபடி —-ஆரார் அமரரே –அவர்கள் பிறவிகளில் தாழ்ந்தவர்களாய் இருப்பினும்-அவர்கள் இருந்தபடியே-நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-அந்த அந்த பிறவிகளோடு இருக்கும் போதே-நித்ய ஸூரிகளோடு ஒப்பார்கள் – ஆஸ்ரயம் ருசி வரபக்திமான்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார்– ஆரார்-திருப்தராகார் என்றுமாம் 

——–

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே
–10-5-9-

தமர்கட்கு எளியானை –அநந்ய பிரயோஜனர்கட்கு சுலபன் ஆனவனை -என்றது –ஒரு குரங்கு ஆகவுமாம்-ஒரு வேடுவச்சி ஆகவுமாம்-ரிஷிகள் ஆகவுமாம்-அவர்களுக்கு எளியனாக இருக்கும் -என்றபடி-அமரத் தொழுவார்கட்கு –ஒரு பயனைக் கணிசியாதே-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு-தொழுமவர்க்கு –மிக்க சீர் தொண்டர் -திரு மங்கை மன்னன்-அமரா வினைகளே –வேறு பயன்களை விரும்புவதற்கு அடியான-தீ வினைகள் வந்து கிட்ட மாட்டா-

————–

வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே
–10-5-10-

நினைமின் –சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் -கைங்கர்ய பிரதிபந்தகங்களும் போம் -ஆனபின்பு அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் ––-நெடியானே – எல்லா குணங்களாலும் நிறைந்தவனாய்-கர்மங்கட்கு வசப் படாதவனும் ஆகையாலே- உருவ நினைத்த படியே இருக்கும் அன்றோ அவன் –ஸ்மராமி -நினைத்த படியே -நிகழ் காலம் -இருப்பானே

——-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே
–10-5-11-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன் –
சர்வேஸ்வரன் திருவருளுக்கு-பாத்திரமாகும் தன்மையரான-ஆழ்வார் -என்றது-
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் –4-5-5-என்று
தன் குணங்களையும் செயல்களையும்-பொறுக்கப் பொறுக்க-அனுபவிப்பித்துக் கொண்டு போந்த படியை-நினைத்து ஈடுபட்டார் மேல் –
இப்போது அவன் கொடுத்த அருள் எல்லாம் உண்டு-அறுக்க வல்லார் ஆனார் ஆயிற்று -என்றபடி

ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே –
இப் பத்து தானே இதனைக் கற்றார்க்கு-நெடியான் அருள் சூடும் படியான் -என்றதுவே பேறாக்கும்-
ஈஸ்வரன் கொடுத்த பேறு-ஆழ்வாரால் கொடுக்க மாட்டாமை இல்லை யன்றோ –

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்
–95-ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே அருளிச் செய்கிறார்–எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி- கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading