ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
நாயகன் நாயகியுடைய நலம் -கண் அழகைப் புகழ்ந்து பேசும் பாசுரம் இது
பரம ஆகாசம் -நித்ய விபூதியைத் தேடும் கண்கள் என்றும் அவர்களால் தேடப்படுகிறவள் என்றுமாம்
கிளைவித் தலைமகன் -பாகவதர்கள் ஆழ்வாருடைய ஞானத்தைக் கொண்டாடிப் பேசும் பாசுரம் –
நாயகன் நாயகியினது நன்மையைக் கொண்டாடி -நலம் பாராட்டு துறையில் அருளிச் செய்தது
மூன்று காரணங்கள்
அழகிலே ஈடுபட்டு பேசுவது
விஸ்லேஷத்தில் தன்னுடைய தரிப்புக்கு
நம்மைப் பிரிந்து நெடும்காலம் இருக்க மாட்டாமல் கடுக வந்திடுவார் என்று உணர
நாயகியின் கண் அழகிலே ஈடுபட்டுப் பேசும் பாசுரம் இது-இவள் கண் அழகிலே ஈடுபட்ட தலைமகன் அவற்றின் வை லக்ஷண்யத்தைப் பேசும் பாசுரம்
நாயகனானவன் தலைமகளோடே கலந்து பிரிகிற சமயத்திலே-தன் ஈடுபாட்டாலும் தனக்குத் தாரண அர்த்தமாகவும் மேல் பிரிந்தால் இவன் தம்மை ஒழியவும் ஜீவிக்க வல்லன் என்று அவள் நெஞ்சில் படாமைக்காகவும் அவள் அழகைக் கொண்டாடுகிறான் –
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுதல் –நலம் பாராட்டு –
ஈர்வன வேலும்
தன்னை ஈடுபடுத்துவதாலே-குத்தினாலும் பார்க்காமல் இருக்க முடியாதே விடாதே ஈருமே
அஞ்சேலும்
சவுந்தர்யத்தால் அழகிய மீன் போல்
ஈர்வன வேலும் அஞ்சேலும் —
காம பானம் ஆன பொழுது ஈர்வனவே ஆகிலும், அஞ்சேலே ஆகிலும் ,-அன்றியே
ஈர்வன வாகிய வேலாயும் அழகிய சேலாயும்–இரண்டாலும்-வைதக்யமும், மௌதக்யமும் சொல்லிற்று (சாமர்த்தியமும் அழகையும் ) தன்மை (ரூபம் கூர்மை )அழியாமே எதிரிகளை முடிக்கும் படி-சாமர்த்தியமும்–ஈர்வன வேல் என்று பாதகத்தை விசேஷித்த படி –-கூரிய பார்வையாலே எதிரியை அழிக்கையாலே வேல்களாயும் நீர்மையின் மிகுதியாலே செல்லாமை தோற்றுகையாலே சேல்களாயும் இருக்கிற இவை–வேல் என்கையாலே நாயக அநுராக ஜனகமாய்க் கொண்டு ஈடுபடுத்தும் என்றபடி-சேல் என்கையாலே பிரிவில் தரியாமை தோற்றுகிறது–ஆக உபய அநுராகமும் பிரகாசித்ததாயிற்று–ஈர்வன வேலும் அஞ்சேலும் -என்று பாதகத்வ போக்யத்வங்கள் இரண்டும் உண்டான படி
ஈர்வன வேலும்
ஈர்வனவான வேல் போலவும்
அஞ்சேலும்
அழகிய சேல் போலவும் இருக்கிற
இவை கண்ணோ
ஸ்வ கார்யம் செய்து தலைக்கட்ட வற்றாய் இருக்கையும் தர்ச நீயமாய் இருக்கையும் பற்ற வேலைச் சொல்லுகிறது-இரண்டாலும் செய்கிறது பின் அழியாமே நின்று கார்யம் செய்ய வற்றாய் இருக்கை –
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல
தன் கண்களுக்கு லஷ்யனான என்னை வேதிப்பது கொண்டு வேலுமாய்-என்னைத் தன்னில் அநு ரக்தனாக்கி ஆகர்ஷிக்க வல்ல அழகிய மத்ஸ்யங்களுமாய் என் ப்ராணன்கள் மேல் விழுந்து கார்ய க்ரூரத்தால் தன்னால் இவையே என்னவான இவை நின்று வசீகரியாமல் தவிர்வன வல்ல-ஓ
இது என்ன இதன் வசீகரண சக்தி என்று ஆச்சர்யப்படுகிற படி –
உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
அங்கு நின்றும் பேதித்து கழிய பேர்வனவோ அல்ல உயிர் நிலையிலே பட்டு அங்கு நின்றும் மீளாமலே இருக்குமே எடுத்து திரும்ப குத்தவும் மீளாமலே இருக்குமே-
உயிர் மேல் மிளிர்ந்து இவையோ —
பாத்யத்தையும் விசேஷித்த படி–தோல் புரை போகிறதில்லை….அழியும் அத்தை அழிக்கவோ என்று கொண்டு,அச்சேத்யோயம்-என்று அழிக்காததை அழித்தபடி-குத்தின வேலை அங்கே பொதித்தால் போலே – மிளிர்ந்து-(மர்ம ஸ்பர்ஸி -அழிக்காததை அழிப்பதால் வை லக்ஷண்யம் சொன்னபடி ) -பிராணனை வசீகரிப்பதாக ப்ரவர்த்தியா நின்று கொண்டு-இவையோ-இவற்றில் க்ரூர்யம் இருந்தபடி-கீழ்ச் சொன்ன ஆகாரங்கள் அபரோஷிக்கும்படியான இவை
உயிர் மேல்
அவ்வேல் போலே தோல் புரையே போமவை யல்ல-அசேத்யமாயும் அதாஹ்யமாயும் இருக்குமதிலே யாயிற்று வியாபரிப்பது-உயிர் மேல் மிளிர்ந்து-குத்தின வேலைப் புரித்து யுடைத்தால் போலே–இவையோ பேர்வனவோ அல்ல-பறித்துக் குத்த ஒண்ணாதே அவ்விடம் தன்னிலே இடம் காணும் அத்தனை –
பேர்வனவோ அல்ல–
பரிகாரத்துக்கு அன்றியிலே-பறித்து குத்த என்னிலும் பேர்கிறதில்லை–உயிர் மேல் மிளிர்தல் தவிருமோ என்னில் தவிரா
ஓ
விஷய அதிசய ஸூ சகம்–இவற்றினுடைய வைச்சித்ர் யத்துக்கு ஆச்சர்யப்பட்ட படி
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
காமன் உடைய அம்பின் ஒளியை வென்று-அத்தை அஸத் சமமாகும்-திவ்யமான ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையை யுடைய சரங்கள் ஆகிற தாமரை நீலம் தொடக்கமான வற்றின் யுடைய மகத்தான பிரபையை அனுபவியா நின்று கொண்டு காமுகதையை ஜநிபிப்பபவனாய் யுள்ளன–பேர் ஒளியே சோர்வன -என்று ஒளியை பிரஸரிப்பன என்றுமாம்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன —
சொவ்ரியை போல பல வடிவு கொள்ளுகிறது தான் என் தான் ?(வேல் மீன் காமன் பானம் போன்ற வடிவுகள் கொண்டனவே )கார்யகர்த்ருத்வத்தாலே (ஆண் பெண் சேர்க்கை) பிரதானுமாய்,,
விலஷணனுமாய் இருந்துள்ள , காமன் உடைய பாணன்களில் உண்டான ,மிக்க ஒளியை
காலா நின்றது புறப்பட விடா நின்றது-
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
ஈர்வன வேலும் சேலும் என்று விசேஷித்தால் போலே-நாட்டில் காமன் தான் ஒப்பாகப் போராமை அவனையும் விசேஷிக்கிறதாயிற்று-அப்ராக்ருத ஸ்வ பாவனுமாய் விலக்ஷணமாய் இருப்பான் ஒருவன்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்ய ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையுள்ள காமனதான சரங்களினுடைய மஹத்தான பிரபையைத் தன் ஒளியாலே அபஹரியா நின்றன
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வான –
நீலமான சுடரை புறப்பட விடா நின்றுள்ள ,திரு மேனி உடைய சர்வேஸ்வரன் உடைய ,பரம பதத்தை தேடா நின்றது அயர்வறும் அமரர்களுக்கு தாரக போஷகமாம் படிவிட்டு இருக்கும் திருமேனி-நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியுடைய ஸர்வேஸ்வரனதாய் பரம வ்யோம ஸப்த வாஸ்யமான ஸ்ரீ வைகுண்டத்தையும் தான் இட்ட வழக்காகக் கணிசியா நின்றன
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியை யுடையவளாய் நம்மில் விளையாடும் ஸ்வாமியுடைய விண்ணில் வியாபித்ததாய் அதில் தன் போன்ற கண்களைத் தேடா நின்றன
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
கண் வட்டத்தில் அகப்பட்டாரை மீள ஒண்ணாத படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவனான சர்வேஸ்வரன் யுடைய திரு நாடு ஸ்ரீ வைகுண்டம் -அனுபவித்தார் –அடைந்தவர் திரும்பாதார் போல் -இவள் கண்ணுக்கு அடி பட்டார் திரும்பா மாட்டார்களே-இவள் கண் அந்த தேசம் எனக்கு ஒப்பாகுமோ என்று தேடுகிறதாம்-விண்ணுளாரிலும் சீரியர் -அங்கு உள்ளாரும் இங்கே வந்தார்கள் –-அங்கு உள்ளாரும் ஆசைப்படும் கண்கள் அன்றோ-இவரும் அங்கே சென்று தந்தோம் தந்தோம் -வருகிறார் ஆண்டு தோறும் ரீதி பங்கம் உண்டே -இரண்டு இடங்களிலும்–லீலா விபூதியை அகப்படுத்திக் கொண்டதில் திருப்தி பெறாமல் பரமபதத்தை வசப்படுத்திக் கொள்ள தேடும் பரம பதத்தை தேடும் -என்றும் பரமபதத்தினால் தேடப்படுகின்றன -என்றும் நித்ய முக்தரும் ஆசைப்படும் கண்கள் என்றவாறு –
அம்மான்-
அவ் வடிவுக்கு தோற்று ஜிதம் என்று இருக்கும் படி.-தச்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம்-என்னும் படியான திரு மேனியை –-சதா பஸ்யந்தி-பண்ணி இருக்கும் அவர்கள்..–விசும்பூர் என்னும் காட்டில் அங்குள்ளாரை தோற்றுமோ என்னில்- மஞ்சா குரோசந்தி -என்னுமா போலே-தேர்வன—
அப்படி விலஷணமான விஷயத்தை காற் கடை கொண்டு , அதிலும் விலஷணமான இக் கண்களை ,தேடி வருகிற படி, லீலா விபூதியை ஜெயித்து நித்ய விபூதியை ஜெயிக்க தேடிக் கொண்டு சென்ற படி-
தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே –
அப்ராக்ருதமான நீர்மையை யுடையீர்-அது போன்ற என்றுமாம்
அப்ராக்ருத ஸ்வபாவம் உடைய உங்களில் கண்ணோ மீனோ சங்கை-ஸ்லாகித்துப் பேசுகிறார்கள்-தைவம் அந் நீர கண்ணோ தேவ மாயேவ நிர்மிதா –பால-1-27-என்கிறபடியே திவ்ய ஆகாரைகளான உங்களுடைய கண்ணாய் இருக்கின்றனவோ என்று வியந்து உரைத்தலாய் இருக்கிறது-இச் செழும் கயலே-தர்ச நீயமான ஸம்ஸ்தானத்திலே கயல்கள் என்று சொல்லலாம் படி இருக்கிற இவை
தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே —
இங்கே நாம் காண்கின்றன அன்றிக்கே , அப்பிராக்ருதமாய் இருக்கிற படி–அந்நீர்– அன்னார் என்ற படி-கண் என்று சம்சயித்து , கயல் என்று நிர்ணயித்த படி-
இச் செழும் கயலே
தர்ச நீய ஸம்ஸ்தானத்தால் கயல்களே என்று சொல்லலான இவை
தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயையே என்னலானதாய்-என்னை அந்ய பரன் ஆகாமல் பலாத்கரிப்பதான கண் தானோ
இவள் கண் தான் இவள் தோழிக்கும் இப்படி ஆகர்ஷகமாய் இருக்கிற படி –
இது பாங்கியுடன் தன்னைப் புனத்திடைக் கண்டு மதி யுடன்படுத்த தலைவன் குறை நயந்து உரைத்தல் ஆகவுமாம் –இத்தால்-இவருடைய ஞான வை லக்ஷண்யம்-ஈர்வன வேலும் அஞ்சேலும்-வேல் என்றும்
சேல் என்றும் சொல்லுகையாலே கூர்மையும் நீர்மையும் தோற்றிற்று-ஈர்தலும் அழகும் சொல்லுகையாலே எதிரிகளை வித்தராக்கி உகப்பிக்கும் என்றதாயிற்று–உயிர் மேல் மிளிர்ந்து -என்கையாலே சேதனர் பக்கல் பூர்ண விஷயீ காரம் தோற்றிற்று–இவையோ பேர்வனவோ அல்ல -என்கையாலே இந்த விஷயீ காரத்துக்கு குலைத்தல் இல்லாமை தோற்றிற்று-ததீய சேஷத்வத்தைக் குலைக்க முடியாதே மதுரகவி ஆழ்வார் பெற்று மகிழ்ந்தமை கண்டோமே –தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன -என்கையாலே போக்ய விஷயத்தில் பக்தி காமரான திவ்ய புருஷர்களுடைய
ஸதா பஸ்யந்தி என்று இலக்குத் தப்பாத கிரணங்களுடைய பெரிய ப்ரகாஸத்தையும் தன்னதாக்கிக் கொண்டமை தோற்றிற்று-நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன -என்கையாலே
நித்ய விபூதியையும் ஸ்வா தீனமாகக் கணிசிக்கும் என்றதாயிற்று–பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றாரே-இச் செழும் கயலே-என்று லீலா விபூதியில் அவதார அனுபவத்திலும் அவகாடம் என்றதாயிற்று-தைவம் அந் நீர கண்ணோ -என்று நித்ய ஸூரி ஸமானரான வோபாதி ஞானமும் லோக விஸஜாதீயமாய் இரா நின்றது என்று விஸ்மிதரான அந்யர் பாசுரத்தை வெளியிட்டார் ஆயிற்று –
ஸ்வாபதேசம்
பகவத் விரஹத்தால் உறாவுதலாகிற செல்வம் ஸ்ரீயைக் கண்டு -அத்தைக் கண்டு உற்ற நல் நோய் இது தேறினோம்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடி-கடியன் கொடியன் நெடியாமால் –ஆகிலும் கண்ணன் என்றே கிடக்கும் கொடிய நெஞ்சம் யுடையவர் -இதுவே செல்வம்-பகவத் அனுபவம் பண்ணுகையாலே பொன்னைப் புடம் இட்டால் போல் தெளிந்த ஞானத்தை கண் அழகு வியாஜத்தாலே சொல்லிற்றாகவுமாம்
ஈர்வன வேலும் அஞ்சேலும்-இவரது ஞானத்தின் கூர்மையும் நீர்மையும் புற சமயிகளைத் தோற்கடித்து
ஸ்வ கீயர்களை உகப்பிக்கும் தன்மையும் சொன்னபடி-உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல இவருடைய ஞானம் சேதனர் யாவர் இடத்தும் பூர்ணமான அருளைத் தவறாமல் கொண்டுள்ளமையைச் சொன்னபடி-தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
மன்மத பாணங்கள் போல் ஸூ குமாரமாய் உள்ள ஞானம் கேவல முரட்டு ஞானம் அன்றே
பக்தி ரூபா பன்ன ஞானம் அன்றோ மதி நலம் அருள பெற்றவர் தானே-நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன இருள் தரும் மா ஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன் என்று வெறுத்து
நித்ய விபூதியிலே நித்ய கைங்கர்யம் தேடும் ஞானம்-தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே –
தேவரீர் லோக விலக்ஷணமாய் இருப்பது போலவே தேவரீருடைய ஞானம் லோக விலக்ஷணம்-
தாத்பர்யம்--ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக் கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை – நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்-அழகிய இரண்டு மத்ஸ்யம் போலேயும் மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை வேல் போல் என் மேல் பாய்ந்து
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக் கொண்டு வந்தார்கள்
இப்படி முக்தமாக அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்
6-5-துவளில்மா மணி மாடமோங்கு-ப்ரவேஸம்–
இத் திருவாய்மொழிக்கு முன்னும் பின்னும் எல்லாம் எம்பெருமானைக் கவி பாடினார்;
இத் திருவாய்மொழியில் தம்முடைய படி சொல்லுகிறார்.
சிம்ஹாவலோகந நியாயத்தாலே “பொய்ந்நின்ற” என்னும் பாசுரம் தொடங்கி இவ்வளவும்
வரத் தமக்குப் பகவத் விஷயத்தில்
உண்டான பிராவண்யத்தின் மிகுதியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.
“இத்திருவாய்மொழி, ஆழ்வார் தன்மை சொல்லுகிறது” என்று நம் முதலிகள் எல்லாரும்
போர விரும்பி இருப்பர்கள்.
பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தினை யுடையவராய்,
“வேத வாக்குக்கள் அந்த ஆனந்த குணத்தினின்றும் திரும்பின” என்கிற விஷயத்தை
மறுபாடு உருவப் பேசினதாமே வேணுமாகாதே தம்படி பேசும் போதும்.
ஸ்ரீஜனகராஜன் திருமகள் பிறந்த சமயத்திலே சோதிடர்களை அழைத்து, ‘இவள் ஜீவிக்கும்படிகள் என்?’ என்று கேட்க,
‘இவள் ஜீவிக்கும் படிகளில் ஒரு குறை இல்லை, எல்லா வுலகங்களையுமுடைய ஒருவனைக் கைப் பிடிக்கவும் கடவள்;
இங்ஙனே இருக்கச் செய்தேயும் வனவாச ரசம் அநுபவிக்கக் கடவள்’ என்றார்கள்;
வனவாச க்ருத உத்ஸாகம்-கொண்டு இருந்தேன் -சீதை பெருமாள் இடம் -கச்ச ராம மயா ஸகா-
அப்படியே, இப் பெண் பிள்ளை பிறந்த போது இவள் திருத் தாயார் உள்ளிட்டார், காரணம் அறிந்தவர்களை அழைத்து,
‘இவள் ஜீவிக்கும்படிகள் எங்ஙனே?’ என்று கேட்க, ‘எல்லாம் நன்றாகத் தலைக் கட்டக் கடவன;
ஆனாலும், இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அது தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும்.
அதாவது, திருத் தொலை வில்லி மங்கலத்திற் கொடு போகாதே ஒழியப் பெறில் இவளைப் பெறலாம்’ என்றார்கள்.
1-இவள் மரணத்தையே அடையினும் திருத் தொலை வில்லி மங்கலத்தில் கொடு போகாது ஒழிய வல்ல குடி அன்றே;
‘இவள் அங்கே புக்கு இறப்பினும் அமையும்’ என்று இருப்பார் சிலர் அன்றோ.
பிராட்டி வனவாச ரசம் அநுபவியாத அன்றே அன்றோ இவள் திருத் தொலை வில்லி மங்கலத்தில் புகாதொழிய வல்லளாவது.
ஸ்ரீநளர் வார்த்தையை நினைப்பது. பெருமாள் சோகிக்கை-மட்டும் சம்பவிக்கலாமோ –நான் தொட்ட மலையும் மிதக்கும் –
கல்பிதம்-அதிக்ரமம்-நளன் நீலன் சொன்ன வார்த்தை-கர்ம பலனும் கிருபா பலனும் அனுபவித்தே தீரும்
விதி வாய்கின்ற்து காப்பார் யார் -விஸ்வகர்மா மகன் -பிது ஸாமர்த்யம்-நளன்-சேது பந்தம் செய்ய வல்லன்-கல்பிதம்-
தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும்
‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலை மாற்றப் போகாதவாறு போலே,
2-இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறை சொல்லி மீட்கப் போகாது.
சிற்றின்பத்திலே ஈடுபாடு உடையராயிருப்பார் ‘அதர்மம்’ என்றும், ‘பழி’ என்றும், ‘மேல் நரகம்’ என்றும் சொன்னால்
சிற்றின்பத்தில் நின்றும் மீளார்களே அன்றோ.
3-இங்குக் குணாதிக விஷயமாகையாலே ஒரு குறை சொல்லி மீட்கப் போகாதே. —
கடியன் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
‘குறை சொல்லுவோம்’ என்று நினைக்கிலும் குணங்களின் மிகுதியைச் சொல்லுமத்தனை அன்றோ.
அது பின்னை ஈடுபாட்டுக்குக் காரணமாமத்தனை அன்றோ.
4-பழியும் உண்டாயிடுக, மதிப்புக் கேடும் வருக; ஆனாலும், அது கண்டு மீள மாட்டாத
உறுதி யன்றோ இவளது. -அத்தியாவசாயம் –
அங்ஙனேயாகிலும், இவர்கள் இவ்விஷயத்தில் நின்றும் இவளை மீட்கப் பார்க்கிறது என்? என்னில்,
1-‘பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் நம்மளவு அல்லாத அளவு கடந்த ஈடுபாடு இவளுக்கு விளையா நின்றது;
அது இவளை இழக்க வரின் செய்வது என்?’ என்னும்அச்சமாயிற்று இவர்களுக்கு ஓடுகிறது.
2-இனித்தான், அளவு கடந்த ஈடுபாடு சாதனத்தை அநுஷ்டிப்பார் கையிலே கிடக்கக் காண்கையாலே
‘இவள் சாதன புத்தியால் இழியின் செய்வது என்?’ என்னும் அச்சத்தாலே மீட்கவும் பார்ப்பரே.
‘இந்த ஈடுபாடு ஸ்வருபத்திற்கு விரோதமானாலன்றோ சாதனத்தில் சேர்வது என்றே அன்றோ இருப்பது இவள்.
‘ஸ்வருப பேதத்துக்கு இசைந்தால் ஸ்வருபத்திற்குத் தகுதியான காரியங்களுக்கு இசைய வேண்டாவோ?’
என்று காணும் இவள் கருத்து.
சேஷிக்கு உபாயமாயிருத்தல் ஸ்வருபத்திற்குச் சேர்ந்தது ஆன பின்பு,
சேஷனாயிருப்பவனுக்கும் பிராவண்யம் ஸ்வருபத்தில் கட்டுப்பட்டதாகக் கடவதன்றோ.
இனித்தான், மேல் திருவாய்மொழியோடு இத் திருவாய்மொழி சேர்ந்திருக்கும்படி என்? என்னில்,
கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியா நிற்கச் செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி
அது தானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே,
அந்த அநுபவம் தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.-
ராசாந்தாரம் -அர்ச்சாவதாரம் -தாய் பேச்சாககவும்
அதாவது, “பொய்ந்நின்ற ஞானம்” தொடங்கி இவ்வளவும் வர, பகவத் விஷயத்தில் பூர்ண அநுபவம் இன்றிக்கே இருக்கையாலே,
தமக்குப் பிறந்த பிராவண்யத்தின் மிகுதியை அருளிச் செய்கிறார். –பட்டர் நிர்வாகம் இது –
அன்றிக்கே,
மேலே அநுபவித்த அநுபவம் தான் மானச அநுபவ மாத்திரமாய்,
புறத்திலேயும் அநுபவிக்க வேண்டும் என்ற அபேக்ஷை பிறந்து,
அது பெறாமையால் வந்த கலக்கத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் என்னலுமாம். –பூர்வர் நிர்வாகம்
இப் பெண் பிள்ளையின் தன்மையை அறியச் செய்தேயும் தாய்மார் விழுக்காடு அறியாமையாலே
திருத் தொலை வில்லி மங்கலத்திலே கொடுபுக, அவள் “அரவிந்தலோசந” என்பது, “தேவபிரான்” என்பது:
நீர்மையைச் சொல்லுவது, மேன்மையைச் சொல்லுவது,
ஒப்பனை வாசி அறிந்தமை தோற்றச் சொல்லுவதாய் வாய் வெருவ,
இவள் நிலை இருந்தபடியால் ‘இவள் கிடைக்க மாட்டாளே அன்றோ’ என்று தாய்மார் வெறுத்துத் தோழிபாடே வந்து,
‘இவள் படி உனக்குத் தெரியாமை இல்லை; இவளை மீட்கலாம் விரகு சொல்ல வேண்டும்’ என்ன, தோழி,
‘நீங்களே இவளுக்குப் பிராவண்யத்தை உண்டாக்கி இப்போதாக இவளை மீட்க ஆசைப்படுகிற இதனால் பிரயோஜனம் என்?
முன்னரே விலக்கப் பெற்றிலீர்; இனி, இவள் பக்கல் நசை அறுங்கோள்;
இவளைத் தடை செய்யப் பாராமல் நீங்களும் துணையாக இருந்து இவள் உஜ்ஜீவிக்கும்படி பண்ணப் பாருங்கோள்’ என்கிறாள்.
தாய்மார் கேட்கத் தோழி அன்றோ சொல்லுகிறாள்;
பகவத் விஷயத்துக்குப் “பழையார், புதியார்” என்று இலர்; தேசிகர் சொல்ல ஆதரமுடையார் கேட்குமித்தனை.
ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:” என்று இளைய பெருமாள் படியை
ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ குகப் பெருமாளன்றோ சொல்லுகிறார்.
ஆசசக்ஷே – வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே
“ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய குஹோ கஹன கோசர:”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 : 1.
ஸ்லோகத்திற்குப் பொருள் அருளிச் செய்கிறார் ‘வாக்கு இந்திரியத்திற்கு’ என்று தொடங்கி.
“மஹாத்மந:”என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,சிறிது சொன்னான் என்றபடி.
அத – ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்த பின்பு.
ஸத்பாவம் – “இளமைப் பருவம் தொடங்கியே அதிக அன்புள்ளவராயிருந்தார்”
“பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.என்றும்,
“பரதந்திரனாக இருக்கிறேன்” “பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.என்றும்
சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான்.
லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: – கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான்.
பரதாய அப்ரமேயாய – ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’ என்று இல்லை ஆகாதே.
குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள் நிலை அறியும்படி நிலவரானார்.
அன்றிக்கே,
இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.
பிராப்ய த்வரை-முறுகி -அதி மாத்ர பிராவண்யம் -ஆஸ்ரயம் அழியும் படி வருதல் –
உபாயத்திலே முதல் இடுதல் -செய்யுமாகில் அவத்ய கரமாய் முடியுமே
உபாய அத்யவசாய அனுகுணமாக -காட்டாற்று வெள்ளத்தை -வகைப்படுத்தி —
சம்பந்த ஞானத் உடன் சேர்ந்த உபாய அத்யவசாயம்
சம்பந்த ஞானம் தோழி உபாய அத்யவசாயம் தாய் -பிராப்ய த்வரை பதற்றம் -தலைமகள் –
பிரணவம் நமஸ்-சேர்ந்து தோழி தாய் இருவரும்
முதலில் பிராப்ய த்வரை சஹிதமாக -பகவத் பிரசாத லாபத துடிப்பு -குணாதிக வஸ்துவில் ஆழ்ந்து –
குணா அனுபவம் தூண்ட -உபாயத்தில் சேராதே -இவ்வஸ்தாபன்ன நிலை இதனால் –
உபாய அத்யாவச்யத்தில் கீழ் இத்தை அடக்க முடியாதே -தாயார் கீழ் இவள் அடங்க மாட்டாள் –
பிராப்த விஷய பிராவண்யம் ஸ்வரூபம் -சேஷத்வ பாரதந்த்ர்யம் -அவத்யம் இல்லை ஸ்லாக்கியம்
என்று அனுசந்தித்து அருளினாள் –
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற பிரஜ்ஞ்ஞா அவஸ்தைகளுக்கு
தோழி தாயார் மகள் என்று பேர் –133-
பஹூ வசனம் –
தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரஷகத்வாதி பந்த வாத்சல்யாதி வ்யவஸாய புத்தி பேதத்தால் –135-
ரஷ்ய ரஷக பாவம் -அவ ரஷனே -ரஷகத்வம் -காரணத்வம்-சேஷத்வம் -சரீராத்மா பாவம் -நான்கு வித தோழிகள் உண்டே –
ஸ்வாமித்வம்- சௌசீல்ய- சௌலப்ய -வாத்சல்யம் -ஆஸ்ரய -ஆஸ்ரையண – சௌகர்ய ஆபாதாக குணங்கள் -அன்னையர் -பலர் –
சகி வெறி விலக்கி –ஆசையறுத்து-அறத்தொடு நின்ற மூன்றில் அனந்யார்ஹத்வமும்–134
தீர்ப்பாரை -சகி வெறி விலக்குதல் பதிகம் பார்த்தோம் –
இதில் ஆசை அறுத்து –
தர்மத்தோடு நின்று -குட்ட நாட்டுத் திருப்புலியூர் -கரு மாணிக்க மலை –8-9-
மூன்றுமே திவ்ய தேச பாசுரங்கள் -அதனாலே மா முனிகள் மன்னார்குடி ராஜகோபாலனுக்கு சமர்ப்பித்ததால் –
வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டிழந்து கன்று சார்வதே வலித்தமை சாதனம் ஆமாமோ வென்று மாதா அஞ்சி
முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும்
கரும் தடம் கண்ணி நாச்சியார்-தேவ பிரான் -அரவிந்த லோசனான் -இரட்டைத் திருப்பதி
கடித கடக வி கடனா பாந்தவம் அவ் வூரிலே த்வி குணம்-168-
அன்னையாரும் தோழிமாரும்-
சிந்தை யாலும் –இத்யாதி –தேவ பிரானையே தாய் தந்தையாக அடைந்த சடகோபன்
சர்வ வித பந்து அவனே –
நவ திருப்பதி-இரண்டு-திவ்ய தேசம் திவ்ய தேச கணக்கில் ஒரே திவ்ய தேசம் –
துலை வில்லி -தராசு வில் கதைகள் -ஸூ பிரபவர் யஜ்ஞ்ஞம் -கலப்பை நிற்க வில்லும் தராசு தட்டும் –
தேவ தத்தை மனைவியும் -குபேரன் வணங்காமல் – சாபம் வில்லாகவும் தராசும் –
ஹவிர்பாகம் வாங்க -தேவாதி தேவன் வந்தால் தான் கொடுப்பதாக -சேவை சாதித்து -தேவ பிரான் -கொடுத்ததால் உகந்தோம் –
திருக் கண் மலர்ந்து உகப்பைக் காட்ட -அரவிந்த லோசனன் -இரட்டைத் திருப்பதி –
இருவருக்கும் மங்கலம் கொடுத்த திவ்ய தேசம் -திருக் குல திவ்ய தேசம் ஆழ்வாருக்கு
தஸ்ய உதித நாம –உயர்வற -பிறந்தார் உயர்ந்தே -உத் –
பிரதாந்யம்-உபதேசம் பெற்று ஆர்த்தமாக ஜீவனுக்கு -சப்தமாக பரமாத்மா -அனன்யார்ஹ சேஷத்வம் எளிதில் புரியாதே –
சேஷி சேஷன் வாதம் பண்ண வேண்டாம் -அனன்யார்ஹ சேஷத்வம் புரிய வைப்பதே கஷ்டம் –
அதனால் உகாரம் சொல்லி மகாரம் சொல்லி அகாரம் சொல்லி முதல் பாசுரம் –
27 -திருமந்தரம் -மணி வல்லி பேச்சு வந்தேறி இல்லையே –
நாயகி பாவம் -வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –சங்கை -ஆன் பாவம் தான் -முன்னும் பின்னும் ரீதி பங்கம் கூடாதே
பூர்ண -நாயகி பாவ த்ரயம் -நம் ஆழ்வார் இடம் மட்டுமே -தோழி பாவம் ஆர்த்தமாக திருமங்கை ஆழ்வார்
மூன்றில் ஏழில் பதினேழில் -தோழி / தாயார் /தலை மகள் –
அனன்யார்ஹத்வத்வம் –அத்யவசாயம் -த்வரை –
அஞ்சாம் திருவாய் மொழியில் -கீழே -இப்படி ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களிலே அவகாஹித்து அத்யந்தம் ஹ்ருஷ்டரான
இவ்வாழ்வாருடைய மானஸ அனுபவம் முதிர்ந்து -பாஹ்ய சம்ச்லேஷம் அபி நிவேசத்தைப் பிறப்பிக்க –
அபி நிவேச அநு ரூப அநு பாவ அலாபத்தாலே -அவசன்னராய்
பூர்வ அநு பூதமான சர்வேஸ்வரனுடைய அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
விலக்ஷண அநு பாவ்யத்தையும்
ரக்ஷண அர்த்த ப்ரவ்ருத்திகளையும்
தர்ச நீய விக்ரஹ யோகத்தையும்
திவ்ய ஆபரண உஜ்வல்யாதிகளையும்
ஸூக்ரஹா ஸுந்தர்யத்தையும்
உதார ஸ்வ பாவத்தையும்
ஆதிக்ய ஸூ சகமான அரவிந்தாக்ஷத்வத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
வ்யாமோஹாதிசயத்தையும்
அநு சந்தித்து -ஏவம் வித ஸ்வ பாவனானவன் விஷயத்தில் அத்யந்த ப்ரவணரான இவருடைய நினைவை
பூர்வ அநுபாவ ப்ரவர்த்தகரான பரிவர் தாங்களே அவ்சாத்தை பரிகார அர்த்தமாக நிஷேதிக்கத் தேட –
இவருடைய ப்ரக்ருதி அறிந்த ஸூஹ்ருத் பூதரானவர்கள்
அடியில் ப்ரவர்த்தகரான நீங்களே நிவர்த்தகரானால் இவருக்கு அஹ்ருத்யக்கரராவதே பலம் என்று சொல்லி
அதுக்கு அடியான இவருடைய பகவத் ப்ராவண்யாதிசய விகாரங்களை அறிவித்த பிரகாரத்தை
திருத் தொலை வில்லி மங்கலத்திலே தேவ பிரானை அனுபவித்து ஈடுபட்டாள் ஒரு நாயகியினுடைய ஈடுபாட்டைக் கண்டு
அடியில் கூடக் கொண்டு போய்த் திருவடி தொழுவித்த தாய் மார் இவள் ஈடுபாடு சமிக்கைக்காக இவள் நினைவை நிஷேதிக்கத் தேட
இவள் நெஞ்சு அறிந்த தோழியானவள் -அடியிலே இவளை மூட்டின போதே ஆசையற்று மூட்டினிகோள் அன்றோ
இனி இவள் பக்கல் சங்கத்தை விடுங்கோள் என்று சொல்லி
இவளுடைய ப்ராவண்ய விகார பிரகாரங்களை அறிவித்த பாசுரங்கள்-
துவளில்மா மணி மாடமோங்கு தொலைவில்லி மங்கலம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
அசலிட்டுத் திருத் தொலை வில்லிமங்கலத்தை விரும்புகிற இவளை எங்ஙனே மீட்கும்படி?
சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது?
குற்றமுண்டாகிக் கழிந்தது அன்று.-ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச் செய்தே,-ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்;-பரமாத்மா குற்றங்கள் சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்;-அப்படியே யாயிற்று, அவ்வூரில் மாடங்களில் இரத்தினங்களும்.
அவன் பிரிந்த போது தொடங்கி அவ்வூரையும் அவ்வூரில் மாடங்களையும் அவற்றில் மாணிக்கங்களையும் பார்த்து, வைத்த கண் வாங்க மாட்டாதே இருந்தாள் போலே காணும்-தொழுகையே நிரூபகமாக வுடையவள் என்பாள் ‘தொழு மிவளை’ என்கிறாள்.–அழும் தொழும்-இளைய பெருமாளுக்கு சாம்யம் -நாயனார்-கை தொழும் பிள்ளை–இவள் படி கை மேலே காணா நிற்கச் செய்தே நீங்கள் மீட்கத் தேடுகிறபடி எங்ஙனே?-இவளை நீர்-பழி சொல்லப் பணைக்கிறவள் இவள், பழியை நீக்குவதற்குப் பார்க்கிறீர்கோள் நீங்கள் என்பாள் ‘இவளை நீர்’ என்கிறாள்.-நறையூரும் பாடுவாள் நவில்கின்றாள் –தொழுகை தேக யாத்திரை யாதற்கு முன்னே யன்றோ மீட்கப் பார்க்க வேண்டும்-
இவற்றோடே வர வேணும்’ என்னுதல் சொல்ல மாட்டுகின்றிலள் பலக் குறைவாலே.-அந்த ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற திருக் கண்கள்.-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் சொன்னதும்-பங்கயக் கண்ணன் -ஆங்கு அலரும் குவியும் -ஸூர்ய சந்த்ரர்கள் அன்றோ இவர்கள் –-தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாகச் சொல்லலாய், அநுபவிக்கின்றவர்கள் அளவன்றிக்கே இருக்கின்ற திருக் கண்கள் ஆதலின் ‘தடம் கண்’ என்கிறாள்.-ஒரு மலை எடுத்தாற் போலே சொல்லுக்குச் சொல்லு தளர்ந்து நடு நடுவே விட்டு விட்டுச் சொல்லுகிறாள் என்பாள் ‘என்றும் என்றும்’ என்கிறாள். திவ்வியாயுதங்களையும் கண்ணழகையும் காட்டியாயிற்று இவளைத் தோற்பித்தது.
இந்தக் கண்களைக் கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர் மல்க அடுப்பது?
கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டு கொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு அடுப்பது?-இதனால், எப்பொழுதும் தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒரு தேசம் தேடிப் போக வேண்டா காணும் என்பதனைத் தெரிவித்தபடி.
நின்று நின்று குமுறும் – பேச்சுப் போய்க் கண்ண நீராய்,-கண்ண நீர் போய்த் தடுமாறுகிற நிலையிலே மீட்கப் போமோ?-இராஜ கோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர் பொருள் சொல்ல,( உருகும் தளர்ந்து விழும் )-விக்கிரம சிங்கன் என்பான் ஒருவன்,
‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டி வைத்தால் முலைக் கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறு போலே, உள்ளோடுகிற கிலேசம் வாய் விட மாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான்.-பெரு வெள்ளத்தில் சுழிக்குமாறு போலே, அகவாயில் உள்ளது வெளியிட மாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி –-கஜேந்த்திரன் -பெரிய திருவடி வேகம் போகாமல் அவன் கனைத்தால் போலே –
தொலை வில்லி மங்கலம் தொழும்’ என்கையாலே, சரீரத்தின் செயல் சொல்லிற்று;
‘தவள ஒண் சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடங்கண் என்றும்’ என்று சொல்லுகையாலே,
வாக்கின் செயல் சொல்லிற்று;-‘குமுறும்’ என்கையாலே, மனத்தின் செயல் சொல்லிற்று.
பதிகம் நிகமத்திலும் சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் -முக் கரணங்களின் வியாபாரம் –-தேவபிரானையே தந்தை தாயாக அடைந்தாள்
6-5-3- இனி எனக்கு ஆசை இல்லை -என்று தானே தாய் இடம் சொல்கிறாள் –
இதில் தோழி தாயாருக்கு சொல்வதாக அமைத்து இருக்கிறாள் –
————-
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
ஓத்துச் சொல்லுவார், சங்கீர்த்தனம் பண்ணுவார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக் கொண்டு எழுகின்ற ஒலியை யுடைய திருநாளில் ஆரவாரம்.-பாவியேன்! இந்த ஒலி செவிப் பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது! ‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறு போலே காணும் ஒலி இருக்கிறது.-அவ் வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டு வைத்து இவளைக் கொண்டு புகுவார் உளரோ?
தேவ தேவபிரான்என்றே-இங்கே கண்டாலும் அயர்வரும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து ஸூலபனானான் -என்றாயிற்று இவள் புத்தி பண்ணுவது-
———–
கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3-
திருப்பொருநல் கரையைப் பொழில் கொண்டாற்போலே, இவளைக் குணம் கொண்டபடி.-அந்தத் திருச்சோலையை உங்களுடைய நல் வார்த்தைகளால் பேர்த்துக் கொடுப்போம் அன்றன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது!
உரைகொள் இன் மொழியாளை –-ஐந்து அர்த்தங்கள்-
1-“படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும் ஸ்ரீராமாயணம்-குத்துண்ணும்படியான பேச்சு என்னுதல்;
“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்”-என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 8.
அன்றிக்கே,-2-பொருளில் இழிய வேண்டாமல் ‘உரையே அமையும்’ என்னும் படியான பேச்சு என்னுதல்;-பர வ்யூஹ விபவம் அனைத்துமே உண்டே
அன்றிக்கே,-3-‘இது ஓர் உரையே! பேச்சே!’ என்று உலகத்தார் கொண்டாடும் படியான பேச்சு என்னுதல்;
அன்றிக்கே,-4-மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல்; (உரை மாற்று -கொள் ஜெயிக்கும் )
அன்றிக்கே, 5-உரை – அடைவு சொல் என்னுதல்.
அவ் வூரிலே கொடு புகுகையும், இவள் பக்கல் நசை அறுகை என்பதும் பரியாயம்.
இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்ட வேணும்’ என்று ஆசைப் பட்டுக் காணும் கிடக்கிறது பூமி.-படுகை – உடைத்தாகை.-பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது.
நெடும் கண் நீர் மல்க –இக் கண்ணில் பரப்பு அடங்கலும் பரப்பு மாறத் தண்ணீர் உண்டாவதே!-நிற்குமே – பிதற்றவும் சக்தியில்லாமல், கண்ணீர் மல்குகை ‘தன்னுடைய குண நிலை’ என்னும்படி செயலற்று நில்லா நின்றாள்.-
——————
நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-
வேதப் பொருளை விளங்குமவனைக் கண்ணாலே கண்டு வாழா நிற்பர்கள்.
(காட்சி இருந்தாலே வாழ்ச்சி தானே )-கண்ட பின் –-அவ்வூரில் வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர்கோள்.-சம்சார விஷ விருக்ஷம் -கதாசித் -கேசவ பக்தி -பக்த பக்தி -இரண்டையும் சேர்த்து காட்டிய பின்பு –
அற்கம் ஒன்றும் அற உறாள் – நம் சொல் வழி வந்திருக்கும் இருப்புத் தவிர்ந்தாள்.
அற்கம் – அல்குதல். அதாவது, அடக்கம்.-(தாயார் சொன்னாள் என்பதாலே அற விட்டாள் )
மலிந்தாள் –நம்மால் ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி மிக்காள். என்றது, மீட்கைக்குத் தகுதியுமில்லாதபடி ஆனால் என்றபடி.
அன்றிக்கே,-எனக்கும் தெரியாதபடி இவள் பகவானிடத்தில் ஈடுபட்டிருத்தலில் விஞ்சினாள் கண்டீர் என்னுதல்.-(எனக்கும் தெரியாதபடி தோழி வார்த்தை )
அன்னைமீர் –மீட்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாகச் சொல்லுகிற என்னோடு வாசி இல்லை தெரியாமைக்கு.-நித்திய ஸூரிகள் யாத்திரை சம்சாரிகளுக்குத் தெரியிலன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது.
“கிருஷ்ணனாகில் அடியார்கட்குப் பவ்யன்” என்பது பிரசித்தமன்றோ.-பிரான்-
அவ் வடிவழகைத் தாழ நின்று இவளை அநுபவிப்பித்த உபகாரகனாதலின் ‘பிரான்’ என்கிறது-திருநாமங்களைச் சொல்லுதல் மூலமாக அவனுடைய அழகு சீலம் முதலிய குணங்களை நினைத்து மேன்மேல் எனப் பிரீதியுடையவள் ஆகா நின்றாள்.
(கரும் கடல் வண்ணன் கண்ணபிரான்-அழகு சீலம் முதலிய )-மனத்திலே உண்டான பிரீதியின் மிகுதியாலே -ஆஸ்ரயம் -உடல் – அழியா நிற்பாள்.-
———————
குழையும் வாண்முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-
அவ்வூரில் வாழ்கின்றவர்கள் படியைக் காட்டினால், அவர்கள் ஜீவனத்தையும்
இவளுக்குக் காட்டிக் கொடுக்க வேணுமோ?-தேவ பிரானுடைய அழகினைக் காட்டிக் கெடுத்தீர்கோள்-குழையும் வாள் முகத்து ஏழையை – ஒரு கலவி வேண்டாமலே இயல்பிலே அமைந்த மிருதுத் தன்மையாலே நையும் தன்மையளாய்,-“உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையும்” என்கிற பகவானுடைய அநுபவத்தாலே ஒளியை யுடைத்தான முகத்தை யுடையளாய்,-கிடையாது’ என்றாலும் மீள மாட்டாத சாபலத்தை யுடையவளை-தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு – பகவானாலே விரும்பப் படுகின்ற தேசத்திலே கொடு புகத் தவிராத பின்பு, ஸ்ரீ வைகுண்டத்திலே மேன்மையைக் காட்ட அன்றோ அடுப்பது!
நீர்மைக்கு எல்லை நிலமான இடத்தே கொடு புகுவார் உளரோ?
இழை கொள் சோதி –-1-ஆபரணங்களினுடைய ஒளியை யுடைத்தாயிருக்கும் என்னுதல்;
2-வேறு ஓர் ஆபரணம் வேண்டாதே தானே ஆபரணமான ஒளி என்னுதல்;
(இழை யாகையைக் கொண்டு இருக்கும் திருமேனி )-அன்றிக்கே,-3-ஆபரண ஒளி தன்னுள்ளே அடங்கும்படியான இயல்பாகவே அமைந்த ஒளி என்னுதல்.
(திரு மேனி ஜோதி ஆபரண ஜோதியை வெல்லும் படி )
இருந்தமை – இருப்பில் வீறு அங்கே முடிந்து நிற்றல் போலே.
நின்றானாகில், நிலையார நின்றான்” பெரிய திருமொழி, 6. 9 : 8.-என்பர்கள்;
இருந்தானாகில், “இருந்தமை காட்டினீர்” என்பர்கள்;
கிடந்தானாகில், “கிடந்ததோர் கிடக்கை” –திருமாலை, செய். 23.-என்பர்கள்.
அன்றிக்கே,-அவன் தன்மையைக் காட்டினீர்கோள் என்றுமாம்.
நோக்கு இருந்தபடி கண்டாயே, முறுவல் இருந்தபடி கண்டாயே என்று-தனித் தனியே காட்டினீர் என்பாள் ‘காட்டினீர்’ என்கிறாள்.
ஆளவந்தார் மணக்கால் நம்பி பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே,-சரம ஸ்லோகம் கேட்டதும் -எம்பெருமானை -கேட்டது போலேவே நினைத்து-
“உபாயம் இதற்கு மேல் இல்லை;-ஸ்வீ காரத்திலும் உபாய புத்தி தவிர்த்து -ஏவம்- இவ் விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?” என்றாராம்.-அப்படிக் கண்டவுடனே கண்ண நீர் வெள்ளமிடப் புகுந்த தத்தனை.
இவள் நுழையும் சிந்தையள் – அவன் குணங்களிலே உட் புகா நின்ற நெஞ்சினை யுடையள்.
ஸ்வரூபத்தையும் ஆத்ம குணத்தையும் ஒழிய வடிவழகிலே இடம் கொள்ளா நின்றாள்.
அங்கே சுழித்து நின்று, ‘இது ஒரு வடிவழகே! இது ஓர் ஒப்பனையே! இது ஒரு கண்ணழகே!’
என்று இடம் கொள்ளா நின்றாள்-அன்னை மீர் –-இவளை மீட்கப் பார்க்கிற அளவே அன்றோ உங்களது.-அத்திசை உற்று நோக்கியே.தொழும் -அவ் வூரின் திக்கை ஏகாக்ர சிந்தையாய் நோக்கித் தொழா நின்றாள் –அந்தத் திக்கை மறுபாடு உருவப் பார்த்துத் தொழா நிற்கும்.-இவள் தொழிலும் ஒரு திக்குப் பட்டல்லது இராது காணும்.–
————
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்குசெந்தாமரை
வாய்க்கும் தண்பொருநல் வடகரை வண்தொலைவில்லி மங்கலம்
நோக்குமேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6-
நோக்கு மேல் அத்திசை அல்லால் மறுநோக்கு இலள் – முதலிலே நோக்க வலியுடையள் அல்லள்; வருந்திப் பார்த்தாளாகில் அத் திக்கை ஒழிய முகம் எடுத்துப் பார்க்கிறிலள்.-வைகல் நாள்தொறும்--கழிகிற நாள்தோறும்.-வாய்க்கொள் வாசகமும்- வாயாலே சொல்லுகிற சொலவும்.-மணி வண்ணன் நாமமே –-வடிவழகுக்கு வாசகமான வற்றையே சொல்லா நின்றாள்.-குண விஷயமாதல் விபூதிவிஷயமாதல் அன்றிக்கே, வடிவழகிற்குத் தோற்றமை தோற்றச் சொல்லா நின்றாள்.-இவள் நிலை எது? நம் நிலை எது?
உங்களது ஸ்வரூப ஞானம்;-இவளது உருவ ஞானம்.-நாரசிம்ஹவபு ஸ்ரீ மான் -அழகால் வந்த ஸ்ரீ மத்வம் போலே-
————–
அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-
இது சித்த தர்ம பலமாக வேணும்;-ஆகையால், முகில் வண்ணன் மாயம் கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? —-பிடாம் -பச்சை வடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –-இத் தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே-‘முன்னம் நோற்ற விதி கொலோ?’ என்று ஐயப்பட்டாள்.-இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில் வண்ணன் மாயம் கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.
அவன் சின்னமும் திருநாமமும் –-“தவளொண் சங்கு சக்கரம்” என்பதான அடையாளங்களும்,-“அரவிந்த லோசனன்”, “தேவ பிரான்” என்பனவான திருநாமங்களும்.-இவள் வாயனகள் திருந்தவே –-பண்டே திருந்தி இருக்கிறவை இவள் சொல்லப் புக்கவாறே உயிர் பெற்று இரா நின்றன.-மூத்துவர் வேதம் இவள் வாயனகள் ஆனவாறே சர்வருக்கும் ஆனதே -நாயனார்-பிராவண்யத்தால் சொன்னால் நிறம் பெறுமே
பட்டர் “அழகிய மணவாளப் பெருமாள்” என்றால் திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்,
சோமாசி யாண்டான்“எம்பெருமானார்” என்றால், திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்,
அனந்தாழ்வான் “திருவேங்கடமுடையான்” என்றால், திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்;-திருமங்கை ஆழ்வார் திருக் கண்ண புரம் என்றால், திருநாமம் நிறம் பெறுமாறு போலேயும்;-“எவை உம்மால் சொல்லப்பட்ட குணங்கள்” -வால்மீகி பகவான் பக்கலிலும்-குணங்கள் நிறம் பெறுமாறு போலேயும்;
———
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-
திருந்து வேதமும் –-வேதம் கட்டளைப்பட்டது அவ்வூரிலுள்ளார் கைக்கொண்ட பின்பாயிற்று.
சொரூபம் ஞான மாத்திரம் என்கிற சுருதிகள், ஞாத்ருத்வ சுருதிகள், பேதாபேத சுருதிகள், சகுணசுருதிகள், நிர்க்குணசுருதிகள் இவை அடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்கவிட்டிருக்குவமர்கள்.
தடம் கண்ணி – அவளைக் காட்டிலும் வேறுபாடு. அவனை அநுபவிக்கையால் வந்ததன்றோ அவளுக்கு;-அவள் கண்களைக் காட்டிலும் ஏற்றம் உண்டன்றோ, அவர்கள் இருவரையும் அநுபவிக்கையாலே இவள் கண்களுக்கு;-தொழும் போதும் வடிவு அழகியராயிருப்பார் தொழ வேணுமாகாதே.-கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும் –-திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றளவும் வர என்னுதல்;-தன் சத்தை உண்டான அன்று தொடங்கி இன்று அளவும் வர என்னுதல்.
“அஸந்நேவ – அசத்தைப்போல”, “அன்று நான் பிறந்திலேன்” – திருச்சந்த விருத்தம். 64.-இதுவன்றோ முன்புற்றை நிலை.
அவன் கையிலும் அன்றிக்கே, பிறர் கையிலும் அன்றிக்கே, தன் கையதாயிருந்தபடி என் தான் தன் சத்தை!
இருந்து இருந்து அரவிந்த லோசந! என்று என்றே –-ஒருகால் அரவிந்தலோசந! என்னும் போது, நடுவே பதின்கால் பட்டைப் பொதி சோறு அவிழ்க்க வேணும்.
வலி இன்மையாலே சொல்லமாட்டாளோ? என்று இருக்கச் செய்தே, சொல்லித் தலைக்கட்டா நின்றாள்.-அவன் அரவிந்தலோசனன், இவள் கருந்தடங்கண்ணி.
இருவரும் ஒருமுகத்திலே காணும் அகப்பட்டது.–பரஸ்பரம் கண்களில் அன்றோ அகப்பட்டார்கள் –-நைந்து இரங்கும் –-உருக்குலைந்து அழியா நின்றாள்.-சரீரத்தளவும் அன்றிக்கே, நெஞ்சும் அழிகின்றது. இரக்கம் – ஈடுபாடு.-
—————–
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9-
எம்பாரை ‘மரங்களும் இரங்கக் கூடுமோ?’ என்று கேட்க,
இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவ சுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது;-இங்ஙனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம் செய்யப் பார்த்தாலும்-சுக்கான் பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால்
சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ? என்று அருளிச் செய்தார்.
இவள் சொல் கற்ற பின்பு.-திருநகரியிலுள்ளார் சொல் கற்பது, “திருத்தொலை வில்லிமங்கலம்” என்று போலே காணும்.-இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை.-கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே.
தோழி, தன் வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள் சொன்ன இனிமை பிறவாமையாலே,-‘அவ்வூர்’ என்கிறாள் காணும்.-
———-
பின்னை கொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-
சர்வேஸ்வரனுடைய செல்வமாக இருக்குமவள் பிறந்திட்டாளோ?
அச் செல்வம் விளையும் பூமியாயிருக்குமவள் பிறந்திட்டாளோ?
அவ்விளை பூமியினுடைய பல ரூபமாயிருக்குமவள் பிறந்திட்டாளோ என்னுதல்.
சென்னியால் வணங்கும் – தன் கரங்கள் கூப்பித் தொழுகையும் வேண்டத் தக்கதானபடி.
இருந்த இடத்தே இருந்து தலை சாய்க்கும்படி ஆனாள். –கை தூக்கும் பலமுமிழந்து-அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே – அவ்வூர்த் திருநாமம் கேட்கச் செவி தாழ்க்கையிலே இவளுக்கு மநோரதம்.-இவள் ‘அவ்வூர்’ என்றது, பெண் பிள்ளை சொன்னாற்போலே இராமையாலே.-ஆயின், ஒருகால் சொன்னாளே என்னில்,-‘அது வறை முறுகல் ஆயினமையால் அன்றோ பின்பு தவிர்ந்தது’ என்று அருளிச் செய்வர்.-
—————-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் –மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட அவன் பக்கலிலே ஈடுபட்டனவாய் இருக்கிறபடி.
“இரங்கி” என்றும்,
“மணி வண்ணவோ” என்றும்,
“தன் கரங்கள் கூப்பித் தொழும்” என்றும் என்னும்
இம் மூன்றாலும் இவர்க்கு உண்டான ஈடுபாட்டின் மிகுதியன்றோ இத் திருவாய் மொழியிற் சொல்லிற்று.-கரணங்கள் -கரணங்கள் வியாபாரம் கீழே சொல்லி லஷணையால் இவற்றையும் சொன்னபடி –
அவனே தமக்கு சர்வவித பந்துவும் ஆனால் போலே அவ் வூரில் உள்ளார் -ஆழ்வாரே எல்லா உறவு முறையும் -என்று ஆயிற்று இருப்பது -அன்னையாய் அத்தனாய் -என்னும் ஸ்ரீ மதுர கவிகளை போலே
பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே,
சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் திருமாலுக்கு அடிமை செய்வார்’ என்கிறார்.
அன்யாபதேச பதிகம் மேலும் தொடங்கும் -மாலுக்கு – –
ஆண் பாவனை -மகள் பாவனை தொடரலாம் –
இது அபூர்வம் -தோழி பாசுர பதிகம் -தானான தன்மைக்கு மாறாமல் திருத் தாயார் பதிகம்-
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க (6-4)புக்க இடத்தில் குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க-அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார்-இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார்கள் –என்று இறே ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
February 13, 2026 at 4:14 pm |
ஸ்ரீ திரு விருத்தம்–பாசுரம் -13 வெளியிடப்படவில்லை. வெளியிட பிரார்தனை