ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
————–
இவள் கண்ணான அம்புக்கும் புருவமான வில்லுக்கும் அகப் பட்டார் தப்ப முடியாதே-இவள் ஞானமே அம்பு-மன்மதனும் இவளையே அபாஸ்ரயமாகக் கொண்டான் -காமம் வளர்க்க
நின் கண் வேட்கை எழுவிப்பேன் -என்று அன்றோ இவர் அவதரித்தார்-திருப்புளிய மரம் அருகில் வந்தாலே தப்ப முடியாதே-செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் போல்
அஹங்கார மமகாரங்கள் உள்ளார் அருகில் வந்தாலே அவை போகுமே-உயிரை யுடையார் நாராயணன் என்று அறிவார் இல்லையே அத்தை உணர்த்தவே ஆழ்வார் எம்பெருமானார் அவதாரங்கள்
கிளவித் தலைமகன் பாசுரம் -இது
காமம் சாரா வெறியதினிளமை காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை –(விருப்பப்பட்டது நடக்காத போது -பித்து பிடித்து-அவனது இனிமை இளமை போல்வன நலம் பாராட்டும் துறை )அதாவது சம்ஸ்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது-சாரா -கிட்டாமையால் உண்டான-வெறி உண்டு -பிச்சு அதனுடைய இளமையாவது
காட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்-மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்-நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை-கிளவித் துறை –காட்சி -இது தான் பிரதம த்ருஷ்ட்டி பந்தம் -கண்ணும் கண்ணும் கவ்விக் கொள்ளுதல்
16 வருஷம் யோக நிஷ்டையில் இருந்தாரே ஆழ்வார்-அம்பு போன்ற தெளிந்த ஞானத்தால் தர்சனம் கிட்டி பார்க்க மாட்டாமல் வெட்க்கி கண்ணைச் சுருக்க பார்ஸ்த்வத்தார் -இத்தைப் பார்த்து சொல்லும் பாசுரம் –
அநந்தரம்-மகிழ்தல்-மந்தஸ்மிதம் -இன்றும் மூலவர் இடம் சேவிக்கிறோமே-அருள் பார்வை -ஹர்ஷ வசனம்-மேல் நலம் பாராட்டுதல்-தலைமகன் தலைவியின் அழகு போல்வன சொல்லுதல் –
அஹங்கார மமகாரங்கள் உள்ளாருக்கு கூற்றம் ஆழ்வார் என்கிறார்-சாஷாத் மன்மதன் -காமக்கோல் நடத்திய கூற்றம் –பக்தியை விளைக்கவே ஆழ்வார்-மணிவல்லி யாக இருந்தாலும் அஹங்காரதிகளுக்குக் கூற்றம் போல் தானே ஆழ்வார்–உண்ணும் சோறு -6-7-இதன் விவரணம்-திருத் தாயார் இவள் ஸ்வ பாவம் பேசும் பதிகம்-அவன் விரும்பிய ஆழ்வார் தேக குணங்களும் ஆத்ம குணங்களும் உத்தேச்யம்-
நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன் தாம் தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார் இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –
ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவருக்கு வசப்படாமல் தப்பித் பிழையுங்கோள்-என்று பாகவதர்கள் ஆழ்வார் பிரபாவம் சொல்கிறார்கள் –-அனைவரும் ஸ்வதந்தர்களாக இல்லாமல் அநந்யார்ஹர் ஆவார்கள்-பிரசித்த மன்மதன் மிருத்யுவைத் தப்பினாலும் -இப்படி மிருதுவாய் தோன்றினாலும் இவருக்கு தப்ப முடியாதே–கீழே எம்பெருமானைத் தலைமகன் என்றவர் இதில் கிளவித் தலைமகன் -பாட்டுடைத் தலைமகன் -இரண்டு வகை-எம்பெருமானைப் போல் அடியார்கள் இடமும் இவருக்கு கூடி அனுபவிக்க அபி நிவேசம் உண்டே -மாயப்பிரான் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-
பெருமாளைப் பற்றி ஆழ்வார் அங்கு-இங்கு தலைமகன் இவளைப் பற்றி-ஞாலத்தில் உண்டியே உடையே உகந்து போகும் சம்சாரிகளுக்கு கூற்றம் ஆழ்வார் கடாக்ஷம் என்றவாறு
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –
தடாவிய வம்பும் –
பரந்த வாயம்பும்–காணாக் கோலாய் இருக்கை –-வில்லோடு கூட அடுத்துப் பிடித்த அம்பு–புடை பெறுத்து இருக்கை-தடாவிய -வளைவாயாம்பு-கோடி வருகிறது மர்மத்திலே படுகை-பிடித்த பிடியிலே பயங்கரமாய் இருக்கை –
முரிந்த சிலைகளும் –
அகர்மகமாய்–அகர்த்ருகமாய் இருக்கை –((வளைந்த-நான் பழத்தை நறுக்கினேன்-நான் -கர்த்தா-கர்மா இல்லை-விஷயம் இல்லை-ஆளும் இல்லை வளைத்தவனும் இல்லை -தானே வளைந்த என்றபடி )
அம்பும் சிலைகளும் -என்பான் என் என்னில்-அம்பு -என்கிறது ஜாதி பன்மையாலே (பார்வை கடாக்ஷம் )
சிலைகளும் -என்கிறது இரண்டாகையாலே-அம்பும் சிலைகளும் உபமானமாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில் –சர்வதா சாத்ருசம் உண்டாகையாலே –
போக விட்டு கடாயின கொண்டு-
(கடாயின-பயன் தரும் சாதனம் )-ஆர் எதிராக இவற்றை விடுவது என்று தன் பக்கலிலே இட்டு வைத்தது
தன்னுடைய ஸ்த்ரீத்வத்தோடே பாவம் –போக விட்டுக் கடாயின தடாவிய அம்பையும் முதிர்ந்த சிலைகளையும் தன் பக்கலிலே ப்ரத்யா ஹரித்து –-உபயோகம் அற்ற மன்மதன் அம்பு சிலைகள் பிராகிருத உபாயந்தரங்கள் -போலே அன்றே ஆழ்வாருடைய நிலை நின்ற ஞான பக்திகள்-
ஒல்கும் வல்லி ஈதேனும் –
ஒடுங்குகிற வல்லியே யாகிலும்-தனக்கு என்ன ஒரு கொள் கொம்பைப் பற்றி அல்லது நிற்க ஒண்ணாத அளவிலும் செயல்கள் இப்படியாய் இருக்கை –-ஆழ்வார் எம்பெருமானை பற்றி அல்லது தரியார் வல்லி -கொடி போல் எம்பெருமானைப் பற்றி அல்லாமல் தரிக்க மாட்டாத பராங்குச நாயகி
வளைந்த அம்பையும் முரி போன சிலைகளையும் தவிர்ந்து–தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்-வல்லி ஈதேனும்-இது ஒரு கொடி என்று சொல்லும்படி -ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து-அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –அம்பும் -என்றது ஜாதி ஏக வசனம்-சிலைகள் என்று-முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் –
பிரதிபஷம் முடியும்படிக்கு ஈடான மிடுக்கை உடைய பெரிய திருவடியை நடத்துக்கிற நிர்வாஹகன் –
சர்வேஸ்வரன் காண வந்த சோழரோபாதி எதிரிகளை முடிக்கைக்கு தானே அமையும் –
பறவையின் பாகன் -சர்வேஸ்வரத்வ ஸூசகம்
இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்-அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்-அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்-பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே
மதன செங்கோல் நடாவிய –
இவளைப் பிராட்டியாக உடையவன்-காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்
அசுரர் மங்கக்கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்-
புற மதஸ்தர்கள் நிலை கெடும்படி வேத ஸ்தாபன ப்ரவர்த்தகாச்சார்யார்-வேத நாயகன் எம்பெருமான் பக்கலிலே வேட்க்கையை எழுவித்து முக்தராக்கி ஊழ்வினைத் தொடர்ச்சிக்கு யமன் போன்றவர் என்றவாறு
ஞானம் –கண் -குறி தவறாமல் எய்யும் அம்பு உவமை –எம்பெருமானை தவறாமல் பற்றும் தன்மையது என்பதால் –வில் –அம்பை விட சாதனம் -ஞானம் வளர –ஞான சாதனங்கள் –நிலை பெற்ற ஆழ்வார் திருவடியே சாதனம் –ஞானமாகிய அம்புக்கு வளைவாவது -விஷயாந்தரங்களிலே செல்லுதல்-
ஞான சாதனங்களாக விற்களுக்கு ஓடிவாவது -ஒரு கால் தவறிப் போதல்-கெடுதல் இல்லாத நிலை பெற்ற ஞான சாதனங்கள் யுடையவர் என்பதையே கடாவின கொண்டு-ஆழ்வாரை சேவிக்கவே ஸம்ஸாரம் அடி அற்றுப் போம் -என்பதையே-கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே-என்கிறார்-மன்மதன் ஐந்து புஷ்ப்ப பாணங்களிலும் ஒரு கரும்பு வில்லிலும்-இவளது இரண்டு கண் பார்வையும் இரண்டு புருவங்களும் வேட்க்கையை விளைவிப்பதில் ஸ்ரேஷ்டம் என்றவாறு –எம்பெருமான் அவதரித்து திருந்தாத சம்சாரிகளும் திருந்தி – கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக -என்பார் –-ப்ரத்யும்னன் மகன் மன்மதன் -பறவையின் பாகன் மதனன் –
கூற்றம் –
அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை என்கிறது –
கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–
ஜீவிக்க நினைத்து இருப்பார் தம் தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்–பிரதிகூலர் மங்கும் படி யுத்தத்தில் நடத்தும் திருவடிக்கு பாகனுக்கு சேஷ பூதனான -மகன் மன்மதன் யுடைய ஆணையை-செங்கோலை – நடத்திக் கொடுக்கும் கூற்றம் கிடிகொள்-சம்சாரத்தில் உள்ளார் உங்கள் பிராணனை நோக்கிக் கொள்ளுங்கோள் என்கிறான் தலைமகன் –ராமனுக்கு என்னிலையைச் செப்பும் என்னையும் உளள் –கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்-இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –
திருவடியை இங்கு சொல்லிற்று-அசுர நிரசனத்துக்கு த்வரிக்குமா போல் காமன் ஆஜ்ஜை நடத்த இவள் -வேட்கை எழுவிப்ப மன்மதனையும்- பகவத் சம்பந்தம் இட்டே சொல்வது -இவள் இது -அல்லது அறிய மாட்டாளே-எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்களாக தலைமகனாகச் சொல்லலாமோ என்னில்
எம்பெருமான் பாட்டுடைத்தலைமகன் பிரதான சேஷி-இவர்கள் கிளவித் தலைமகன் த்வார சேஷிகள்
இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்-தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு-அம்பு என்று லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது–சிலை என்று ப்ரேரகமாகையாலே க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது-அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே அப்ராப்த விஷய அவகாஹநம்-சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை-(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல் ஸாஸ்த்ர ஞானம் கொண்டே –ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர் மதி நலம் அருளப்பெற்றவர் )ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு-கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்-அதாவது-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்-உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –
இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்-அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்-ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட-நித்யத்வ
அபவ்ருஷேயத்வ ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே மதன செங்கோல் நடாவிய நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான–கூற்றம்-பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்-கண்டீர் உயிர் காமின்கள்-கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்–இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்–ஞாலத்துள்ளே– ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 ) ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று-பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் – என்று அந்வயிக்கவுமாம் –
ஞாலத்துள்ளே–
இப்புண்ய பூமியிலே பிறந்த நீங்கள் உங்களை ரஷித்துக் கொள்ளுங்கோள்-அதாவது
அவர்கள் சத்ருக்கள் இவர்கள் என்று அத்யவசித்தும் ஹேயப்பட்டும்-அவனில் கோப்த்ருத்வ வரண யுக்த பராதி நிக்ஷேபத்தை நைர் பர்ய சிரஸ் கமாக உபாயத்வ ப்ரார்தனையோடு அபாய நிவ்ருத்தி பெற்றவர்களாய்ச் செய்கை –
ஸ்வா பதேசம் –
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார்-ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச் செல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறது –(அம்பு -கண் வில் புருவம்-அகர்கமாய் -தனக்கு விஷயம் இன்றிக்கே இருக்க-அகர்த்ருகமாய் -தன்னை வளைக்கக் கர்த்தாவும் இன்றிகே இருக்க
பெரிய திருவடி பாகன் -பக்தியை நடத்துகிற குடி -க்ருஹம் தடி ஷேத்ரம் –போகட்டு போக விட்டு –
ஆழ்வாரை சேவிக்க சம்சாரம் அடி அறும் )
பகவத் விரஹத்தாலே அவசந்தனையாய் இருக்கும் ஆழ்வாரைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சம்சாரத்தில் அஹம் மம -நீர் நுமது என்ற இவை வேர் முதல் வாய்க்க வல்லார் –இவருக்கு பகவத் அலாபத்தால் வந்த அவசாதம் தீரும் படி -ஆச்வாஸம் ஏற்படுத்த சொன்ன பாடல்
இதில் தலை மகள் ஸ்ரீ வைஷ்ணவர்-இப்படி தலை மகள் பேதித்தால்-தலைவி ஒருத்தியே ஆழ்வார் தம்மதே திருப்புளி கீழே ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பொலிய வெற்றிச் செல்வம் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-லோகத்தில் அஹங்காரம் மமகாராம் கொண்டு உலாவுவார் இங்கே வராதே கொள்ளுவீர்
ஐஸ்வர்யம் புருஷார்த்தம் அல்பம் அஸ்திரம் கண்டு அவ்வருகே போகலாம்
ஸ்திரமான ஆத்ம அனுபவம் பற்றினாருக்கு அவனையே அனுபவிக்க அவ்வருகே போகலாம்
பகவத் விஷயத்தில் நிற்கிறவன் பிரதம நிலை தாண்டி சரம நிலையான பாகவத விஷயம் போகலாம்-அதுக்கு மேல் போக முடியாதே குறை சொல்லி மேலே போக முடியாதே-பகவத் சேஷத்து அளவில் நின்றால் குறை உண்டே-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-அநந்யார்ஹ சேஷ ஞான அனுரூபமான விருத்தம் இவர்கள் அளவும் வர வேண்டுமே-ஆகவே கிளவுத் துறையில் பாடுகிறார் –
தாத்பர்யம்-இப் பாசுரத்தில் ஆழ்வார் பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு-கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும் உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை அப்ரதிஹதமாய் நடத்தக் கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள் பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-
நெடும் கண்கள் பனி மல்கவே – நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ண நீர். – நெஞ்சுக்கு சைதில்யம் போலே கண்ணுக்கு கண்ணநீர்
ஆனந்தக் கண்ணீரோடு சோகக் கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ.
விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது;
த்ரஷ்டவ்ய -ஆஹ்லாத -கண்ணா நீர் மல்க -தேகம் பெற்ற பாக்யம்-
“காணத் தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.-திவ்ய தேசம் கண்டாலே இப்படி நைந்து இருக்க-அவனை நேரில் கண்டால் என்ன ஆகுமோ என்கிறாள்-
—
6-7-உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்-ப்ரவேஸம்-
மேல் திருவாய்மொழியிலே, மோகித்துக் கிடக்கிற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத் தாயாரானவள்,
‘அது போயிற்றது, இது போயிற்றது’ என்று அவன் திரு நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள் தானும் மோகித்தாள்;
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையாலே பெண் பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத் திருக்கோளூர் ஏறப் போனாள்;
திருத் தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைப் பார்த்தாள்;
வெறும் படுக்கையாய்க் கிடந்தது; இனி,
1-இவள் என் வயிற்றிற் பிறப்பாலும்,
2-தன் தன்மையாலும்,
3-இங்கு இருந்த நாட்களில் தேக யாத்திரை இருந்த படியாலும்
இவள் திருக்கோளூர் ஏறப் புறப்பட்டுப் போயினாள் என்று அறுதி யிடுகிறாள்.
வளையம் முதலாயினவற்றை எல்லாம் இழந்தாளே யாகிலும் நாம் இவளை இழக்க வேண்டி இராது
என்றே இருந்தாள் மேல் திருவாய் மொழியில்.
இத் திருவாய்மொழியில், இவள் தன்னையும் இழந்தோம் என்று கூப்பிடுகிறாள்.
ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்ச வேண்டுவது” என்று கேட்க,
“இருவராகப் போனவர்கட்கு வயிறு எரிய வேணுமோ? தனி வழியே போனவளுக்கன்றோ வயிறு எரிய வேண்டுவது!” என்று
இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்ச வேணும்;
“கள்வன் கொல்” என்றது பெரிய திருமொழி, 3. 7 : 1. தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச் செய்தார்.
அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்:
அகலகில்லேனிறையும்”, “பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” என்பன ஈண்டு நினைக்கத் தகும்.
யதவாத் கிரி -சேர்ந்து புறப்பாடு -ஸ்ரீ பாஷ்யகாரர் கூடவே எழுந்து அருளுவார் -செல்லப் பிள்ளை -யதிராஜ சம்பத் குமாரர் பித்ரு ஸ்தானம்
தானே கூடி சென்று ரஷித்து அருளுகிறார்
இன்றும் பரகாலன் குமுதவல்லி நாச்சியார் உடனே சேவை -நம்மாழ்வார் அன்றும் தனி இன்றும் தனி
இவள் அங்கே புக்கல்லது தரியாள் என்பதாம். “அள்ளல் அம் பூங்கழனி அணி ஆலி புகுவர் கொலோ!”
அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர் கொலோ! என்றே அன்றோ அங்கே வயிறு பிடி.
ஆனாலும், எங்கேும் போகிலும் இருவராயல்லது இராது அங்கு;
‘தனியே சென்ற இவள் என்படுகிறாளோ?’ என்று மிகவும் நொந்து கூப்பிடுகிறாள் இவளுடைய திருத்தாயார்.
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்கிறபடியே,
‘பகவத் கோஷ்டிக்கு இனி ஆளாக மாட்டாரே!’ என்னும்படி ஐம்புல இன்பங்களிலே கை கழிந்த இவர்,
‘சம்சாரிகளுக்கு இனி ஆளாக மாட்டார்’ என்னும்படி நாட்டாரோடு இயல்வு ஒழிந்து,
கொள்ள மாளா இன்ப வெள்ளத்தைப் புஜிக்கக் கை கழிந்த படி சொல்லுகிறது.
நரகத்திற்குக் காரணமான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகக் கடவ இவர்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகும்படி விழுந்தது.
க்ஷுத்ர விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார்.
அல்பம் -நரகாவஹம் -குணம் இல்லாமல் தோஷம் மிக்கு விஷயாந்தரங்கள் -மூன்றையும் காட்டி அருளினார் –
‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள். –திருத்தாயார் –
அவள் உடமை பராங்குச நாயகி
-லக்ஷ்மணேந கதாம் கதிம்“நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”
“ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-என்பது, உத்தர ராமாயணம்.–என்றாற்போலே.
ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய – தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.
ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.
பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.
புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.
திருத் தாயாரும் இம் மாளிகையைக் கண்டு வெறுத்து,
‘போகக் கடவதாகத் துணிந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போனால் ஆகாதோ?
தனி வழியே போவதே! நான் கூடப் போகாவிட்டால் அவனுடனே கூடப் போகவும் பெறாது ஒழிவதே!
இவள் தான் எங்ஙனே போகிறாளோ! நாடு அடங்க வாழ்வித்துக் கொண்டு போகிறாளோ!
அங்கே புக்கால் என்படுகிறாளோ! வழியிலுள்ளார் என் சொல்லுகிறார்களோ!
அங்கே புக்கால் அவ்வூரிற் சோலைகளையும் அங்குள்ள நீர் நிலைகளையும் அவன் குணங்களையும்
கண்டு உகக்கிறாளோ! கண்டு சிதிலை ஆகிறாளோ!
இவை எல்லாம் தாம் அங்கே சென்று புக்கால் அன்றோ என்றாற்போலே மனோ ரதித்துக் கொண்டு,
தன்னைப் பார்த்தல் எங்களைப் பார்த்தல் செய்யாதே,
இவற்றை எல்லாம் கடலிலே கவிழ்த்துப் போவதே!’ என்று
(தனது மார்த்வத்தைப் பாராமல்
எங்கள் விஸ்லேஷ அஸஹத்வத்தைப் பாராமல் )திருத்தாயார் இன்னாதாகிறாள்.-
திருப் பொருநல் தென் கரை -வைத்த மா நிதிப் பெருமாள் -சயனத் திருக்கோலம் -திருக் கோளூர் –
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார திவ்ய தேசம் –
கருட அம்சம் -நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –
கண்ணி நுண் சிறுத்தாம்பு -நாலாயிரம் நாதனுக்கு அருளிச் செய்ய உரு துணை இதுவே அன்றோ
இவர் ஒருவரே ஆழ்வார் உடன் கூட இருந்து நமக்கு பெரும் நிதி கிடைக்க உதவினார் –
நவ நிதிகள் -குபேரன் சிவ பக்தன் –சிவன் பார்வதி -சேர்ந்து இருக்க பார்த்தாதால் பார்வது சபிக்க -இழந்தான் –
ரஷிக்க-வைத்த மா நிதி -பெருமாள் -நிதிகள் ஸூரஷிதம் -குபேரன் -ஒரு கண் போனதே -மேனி விகாரம் –
இவன் திருவடி பற்றி நிதி பெற -பார்வதி தேவி உபதேசிக்க –
குமுத வல்லி கோளூர் வல்லி -மரக்கால் -உடன் சேவை –
தர்ம தலை சாய –தர்மம் நிதியாக காத்து -தர்ம சம்ஸ்தாபனம் அர்த்தமாக -தர்ம தேவதை நீராடி -திருவடி பற்றி –
இதே தர்ம ஸ்தாபனமே மதுரகவி ஆழ்வார் திரு பிறப்பித்து நம்மாழ்வார் திருவடி சேர்க்க அருள் செய்தார்
வியாசர் சந்ததி தர்ம குப்தன் -சாபம் -தர்மம் செல்வம் இழக்க -பரத்வாஜர் குல ரிஷி சொல்ல
இங்கே வந்து -ஸ்ரீ கர விமானம் -இழந்தது பெற்றான் –
நமக்கு சொத்து பெருமாள் திருவடிகளே சொத்து என்று இருக்கும் ஆழ்வார் திருவடிகளே சொத்து என்று
இருக்கும் மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சொத்து என்று இருக்கும் இவ்வூர் உள்ளோர் திருவடிகளே சொத்து நமக்கு
கீழும் இதுவும் தாய் பாசுரம் -இதில் இவள் ஆற்றாமை விஞ்சி -இவளை இழந்தோம் -தனி வழியே போனாள்
என்று அன்றோ திருத் தாயார் நினைவு –
கைம் முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரில் சம்ருத்தம் -ஆச்சார்ய ஹ்ருதயம் –169-
ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் ஆத்மாத்மீய ஸ்வ பாவங்கள் எல்லாம் தத் அதீனமாம்படி அவற்றில் தமக்கு
ஸ்வாம்யநிவ்ருத்தி பிறந்த படியை அனுசந்தித்து அருளினவர்
அத்தலையில் தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தால் அதி த்வரித சித்தராய் –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் விஷயமாகத் தமக்கு த்வரை பிறக்கைக்கு அடியான
அவனுடைய தாரக போஷக போக்யத்வாதி ஆகாரத்தையும்
ஸர்வ லோக பிரசித்தமான நாமாதி யோகத்தையும்
அத்திரு நாமத்தினுடைய ஸர்வ உபயோக யோக்யதையையும்
ஐஸ்வர்ய அதிசயத்தையும்
அத்யந்த விலக்ஷணமான போக ஸ்த்தானவத்தையும்
ஆகர்ஷகமான அவயவ சோபையையும்
அனவதிக வ்யாமோஹத்தையும்
அதிசயித போக்யயான ஸ்ரீ லஷ்மீ விஷயத்தில் அபிமத தமத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
அகில ஜகத் ஸ்வாமித்வத்தையும்
அனுசந்தித்து -தமக்குப் பிறந்த த்வரா அதிசயத்தாலே அவனை பிராபிக்கையிலே உத்யோகித்து நடந்த இவருடைய அவஸ்தையை
அனுசந்தித்துப் பரிவரானவர்கள் ஈடுபட்ட பிரகாரத்தை நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
அத்யந்த த்வரா விஷ்டையாய்க் கொண்டு அவன் இருந்த திருக் கோளூரை நோக்கி
அபி சாரிகா விருத்தியைப் பண்ணிக் கை கழிந்த தலைவியைப் பற்ற
நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
———
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் -உன்மத்தக அனுபவம் -தேடிப் போனாளோ. என்றது,-
தேக யாத்ரை பார்க்க வேண்டுமோ இவள்-இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கே புக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி.
“அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்” என்று இருப்பார்க்கும் -இங்கேயே பெற்று இருப்பார்க்கு -அவ்வருகு போக வேணுமோ?–அடைமொழிகட்குக் கருத்து-விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு-எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.-தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாஸு தேவஸ் ஸர்வம்”-உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும்,-இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.
என்று என்றே – இது ஒழிய வேறு ஒன்றனைத் ‘தாரகம்’ என்று இருக்கில் அன்றோ மற்று ஒன்றினைச் சொல்லுவது;-இது தன்னையே மாறாதே சொல்லி. என்றது, ஒருகால் இதனைச் சொல்லிப் பின்பு ஊண் உறக்கத்தாலே போது போக்கலாம் விஷயம் அன்றே
கண்கள் நீர் மல்கி--இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி.-இவர்கள் -தோழி உடன் தாய் -ஊரும் நாடும் உலகமும் திருத்தி -அனைவரும் ஒரே கோஷ்டி –-இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். -ஆழ்வார் த்வாரா -ஆழ்வார் திரு முக மண்டலம் – தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ?
நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன்.
அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது;-ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச் செய்வர்.
அனந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த் தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு, உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேக யாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன, அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ?
நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.
அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று,
அவன் விரும்பின தேசமும் பிராப்யத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ.
வினவி--‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று எதிரே வந்தாரைக் கேட்டு,
அவர்கள் ‘இன்னதனை இடம் போரும்’ என்ன, அது தானே வழிக்குத் தோட்கோப்பாகப் போகை.
“தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்” பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்.-என்றார் பிறரும்.
பூ அலரும் போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில் செவ்வி காணப் பெற்றிலேன் என்று காணும் திருத் தாயார் தான் நோவு படிகிறது.-
புகுமூர் –காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே,
சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ.-புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.
எம்பெருமானார் தெற்கே எழுந்தருளா நிற்க, எதிரே வருகிறாள் ஒரு பெண் பிள்ளையைக் கண்டு ‘எங்கும் நின்றும்?’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவராய் இருப்பர்களோ?’ என்று அருளிச் செய்தார்.
என் இள மான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் –
இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம்.
இவ் வூரில் பிள்ளைகளைக் காணா விட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.-
—————
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-
இங்கு உள்ளாரை தன்னோடு -தான் பிறந்த ஊர் மட்டும் இன்றி -தோள் தீண்டியான நாடும் லோகமும் –ராமாவதாரம் ஊர் ஒன்றே திருந்திற்று-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-இங்கு குறை உண்டால் அங்கு தேடித் போனாளோ-தான் இருந்த இடத்தே செல்ல வேண்டுமவன் இவள் இருந்த இடத்தே வரும் படியைச் சொல்லி –-இங்கு பிறர் திருந்தும் படி இருக்கும் இவள் திருந்தின இடம் போவதே-பெற்ற என்னையும் விட்டு வேறு தேடி போகும் படி-பெற்ற தாய் விட்டு அகலுகை இந்த குடிக்கே ஸ்வ பாவம் போலே காணும்
கள்வன் கொல்-அணி யாலி புகுவர் கொலோ-நல்லதோர் தாமரை -பொய்கை -மதுரைப் புறம்–
பூவைகளே உரையீர் –சொல்லாது ஒழி கைக்கு பெற்ற குற்றம் இல்லையே உங்களுக்கு -நான் ஹிதம் சொல்லுகையாலே மறைத்தாள் ஆகிலும் -இன்ன இடத்துக்கு போகிறேன் என்றும் -அங்குப் போனால் செய்யுமவையும் உங்களுக்கு சொல்லிப் போகக் கூடும் இறே -சொல்லி கோள்-
————-
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-
வேறு ஒன்று கொண்டு பொழுது போக்கும் பருவத்திலும் திருநாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கண்டீர் போனாள்.-இங்கு இருந்த நாள் மற்றொன்று தாரகமாய், அங்கே சென்று அவனாலே தரிக்கப் போனாளோ.-பூவை தொடக்கமான லீலையின் உபகரணங்களால் பிறக்கும் உவகை எல்லாம் துவயத்தின் படியே
ஸ்ரீய:பதி (திருமகள் கொழுநன்) என்கிற திருநாமத்தைச் சொல்ல அதனாலே உண்டாகா நின்றது.
“‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று, பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதை புட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன,
அங்ஙனேயோ என்று இசைந்து போனார்.-முதல் பூர்வ பக்ஷம் இது-
நன்று; அவன் திரு நாமங்களை இவற்றிற்கு இட்டு அழைத்ததாகக் கொண்டாலோ? என்னில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கிற
அளவு கடந்த ஈடுபாட்டிற்கு இது சேராது.-இரண்டாம் பூர்வ பக்ஷம்
பெற்றி என்னும் பெரியார் ஒருவருடைய நிர்வாகத்தையும், அவர் கூறும் நிர்வாகம் பொருந்தாமையையும் காட்டுகிறார்
‘ஊரும் நாடும்’ என்று தொடங்கி. பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து என்றும்,-“எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.
அன்றிக்கே,-பூவை பைங்கிளிகள். . . . . .எழும் என்பதற்கு, திருநாமச் சுவடு அறிந்த பின்பு
விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல் இவளுக்குப் பொறுக்கக் கூடாத தாயிருக்கும் என்னுதல்.
இனி இரண்டாவது சித்தாந்தம்
திருமால் திருநாமங்களைக் கூவி, “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு” என்கிறபடியே,-பூவை தொடக்கமான எல்லாவற்றையும் இகழும் என் பாவை என்றபடி.
இங்கே, “எழும்” என்றதற்கு,-அவற்றை விட்டு எழும் என்று பொருள் கொள்க.-
எழும் -த்வேஷிக்கும் -எழ்கல் இராகம் இலாதான் -என்றவாறு –
என் செய்யும் கொலோ –-சொல்ல மாட்டாள், தவிர மாட்டாள்; அழாதொழிய மாட்டாள்; எங்ஙனே படுகிறாளோ?-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அநுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்;
அவனையே கண்டு அநுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே.
நினைக்கும் வேளையில் போலே அன்று, கண்டால் பிறக்கும் விகாரங்கள்;-அலாபத்தோடே இருக்கும் இருப்புக் கண்டேன்; இலாபத்தோடே இருக்கும் இருப்புக் காணப் பெற்றிலேன் என்கிறாள்-
———–
கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-
சாதன விதியளவிலே நின்று தடுமாறுவர்களோ:-ஆத்ம ஸ்வரூபத்தைப் பார்த்துத் தெளிவர்களோ?-உபாய அம்சத்தைப் பற்றி நின்று, இது கடவது அன்று என்பர்களோ;
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் பேற்றின் ஸ்வரூபத்தையும் பார்த்து, இது கடவது என்பர்களோ?-ருசி ஸ்வபாவத்தாலும், விஷய ஸ்வபாவத்தாலும், ஆத்ம ஸ்வரூபத்தைப் பார்த்தாலும்’ என்று சொல்லப்படுகின்ற இவளுடைய பிராவண்யத்தின் மிகுதி,
விஷய வைலக்ஷண்யம், சேஷத்வ ஸ்வரூபம் ஆகிற காரணம் மூன்றாலும் இது
தக்கது என்கிற சித்தாந்தந் தன்னையே சொல்லுவர்களோ?’
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே –அவன் வரவை வாராமைக்குச் சமம் ஆக்கினாள்.-முற்பாடனாய் வந்தவனை, தான் நாலடி இட்டுப் பிற்பாடனாம்படி செய்தாள்.
அவன் ஸ்வரூபத்தை அழித்தாள். பரத்துவம் வியூகம் முதலியவைகளை விட்டு இங்கு வந்து கிடக்கிறது இவளுக்கு முற்பாடனாய் உதவுகைக்கு அன்றோ-அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே,-இவள் வரவு பார்த்து அவன் காலம் பார்த்துக் கொண்டு கிடக்கிறான் ஆதலின் ‘அவன் கிடந்த’ என்கிறாள்.-ரஷகத்வம் – -அன்வயித்தால் தானே நியந்தா உடைய செல்வம் மல்கும் –ஸ்ரீ வைகுந்தம் செல்வம் மல்காதே –
மெல் இடை நுடங்க – அவன் ஸ்வரூப ஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய ஸ்வரூப ஞானமோ தான் இவளுக்கு உண்டாயிருக்கிறது.-இவளுக்கு விழுக்காடு அறியாமை எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப் போமோ?
நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம் படியாக.
இந்த இடையைக் கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? -நமஸ் சப்தார்த்தம் அறியாமல் –-எதிரே புறப்பட்டு வராமல் செல்வக் கிடப்பாலே கிடந்தான் -குற்றம்-ரஷணம் முற்பாடனாய் இருக்க -நகராமல் கிடந்தது இருக்க வேண்டுமே -அவன் வரவு அசத்சமம் ஆக்கி -வந்தாளே-என்றுமாம்-
——————–
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-
என் சிறுத் தேவி –தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத் தேவி’ என்று விசேடிக்கிறாள்.
அன்றிக்கே,-பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு
ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத் தேவி’ என்கிறாள் என்னுதல்,
‘என் பெண் பிள்ளை’ என்கிற நினைவு இல்லை காணும் இவளுக்கு.
“பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –, பெரிய திருமொழி.8. 2 : 9.—
இவளுக்கு நல் வார்த்தை சொன்ன நாக்கினைக் கழுவ வேணும் என்கிறாள்.
சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற முக்தனுக்குப் பிறந்த ஞானம்,
இவளுக்கு இங்கே இருக்கச் செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ?
தன் திருமால் திருக் கோளூரில் – அவள் பக்கல் இருக்குமாறு போலே அன்றோ இவள் பக்கலிலும் அவன் இருக்கும்படி. –-தன் மால் -திருமால்–தன் திரு -தன் திருமால்
உலகத்தில் சேஷ சேஷி பாவம் போல் அன்றே காதலி பக்கல் பரிமாற்றம்.
அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு.
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்குப் பிரகாசகமான திவ்விய மங்கள விக்கிரஹம் போலே,
அவை இரண்டுக்கும் பிரகாசகமான கோயில்,
கோயிலைக் கண்ட போதே உள் உண்டான பொருளையும் அறுதி இடலாயிருக்கை.
உள்ளில் பொன்னுக்குத் தக்க செப்பாயிருக்கும் அன்றோ. கண்டு இங்கே இருந்து
மானச அநுபவ மாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு.
‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யா நிற்க, இட்ட அடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே திருக்குடந்தைக்கு நடக்கிற போது,
திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே,
திருப்பேர் நகரான் கோயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.
ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
‘சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.-(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )
———–
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-
சக்கரவர்த்தியைக் காட்டிலும் இவளுக்கு வேறுபாடு, பிரிந்தவுடனே அவன் முடிந்தான்;
இவள் முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே இருத்தல்.
இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நின்று தூங்குகின்றேன்’ என்று தொடங்கி. என்றது,
கொன்றைமாலை யாகையாலே அழகர்க்கும் ஆகாது;
அதுதான் திருமலையிலுள்ளதாகையாலே சைவரையும் பறிக்க ஒட்டார்கள்;
ஆக, இரண்டு இடத்துக்கும் ஆகாமல் நாலுமாறுபோலே, நானும்,
தம்முடைய சம்பந்தமே காரணமாகப் பந்துக்களும் ஆகாமல், தாமும் அங்கீகரிக்கப் பெறாமல் நடுவே நின்று தடுமாறா நின்றேன் என்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் போன்று, இவளும் தன்னோடேகூட இருக்கவும் பெறாமல் முடியவும் பெறாமல் நோவு படுகிறேன் என்கிறாள்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே-ஓர் ஆபரணம் தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே,
திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;
திருத் தாயார்க்கு அரிதாய்த் தோற்றுகிறபடி.
அவளுக்கு வழிப் போக்கோடு, ஊரில் புகுதியோடு, அவன் தன்னைக் காணுமதனோடு,
அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத் தக்கவனோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாய் இருக்குமன்றோ.
அர்ச்சிராதி கதியோடு, பரமபதத்தோடு, அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத் தக்கவனோடு
வாசியற பேற்றிலே சேர்ந்தனவாகக் கடவன வன்றோ.
பிராப்ய புத்தியாக பார்த்தால் எதுவும் ஸ்ரமம் இல்லையே –
உபாய புத்தியாக பார்த்தால் சிறியதும் அரியதாய் இருக்குமே –
தன் மால் என்னாமல் தன் திருமால் –-அவனுடைய பிராப்பிய வேஷந்தான் இலக்ஷ்மீபதியா யன்றோ இருப்பது. –-நீயும் திரு மாலால் கோட்பட்டாயே -வஞ்சிக்கும் பொழுதும் மிதுனமே –
விசிஷ்ட வேஷத்தில் அல்லது தன் எண்ணத்தைச் செலுத்த அறியாள்-
நெடும் கண்கள் பனி மல்கவே – நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ண நீர். – நெஞ்சுக்கு சைதில்யம் போலே கண்ணுக்கு கண்ணநீர்
ஆனந்தக் கண்ணீரோடு சோகக் கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ.
விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது;
த்ரஷ்டவ்ய -ஆஹ்லாத -கண்ணா நீர் மல்க -தேகம் பெற்ற பாக்யம்-
“காணத் தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.-திவ்ய தேசம் கண்டாலே இப்படி நைந்து இருக்க-அவனை நேரில் கண்டால் என்ன ஆகுமோ என்கிறாள்-
—————
மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-
கண், மல்குநீர்க் கண்ணாயிற்று;-மனம், மையல் உற்ற மனமாயிற்று.
அகவாயும் இருண்டு, புறவாயும் இருண்டு இருக்க, இவள் எங்ஙனே போனபடி?
கண்ண நீராலே கண் தோற்றாது,-அன்பினாலே மூடப்பட்ட தாகையாலே நெஞ்சு இருண்டு தோற்றாது-மையல் உற்ற மனத்தினளாய் நெடுமால் என்று அழைத்து–நெஞ்சு ஒழியவே தான் கூப்பிட்டது.-
அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் கிடக்கும்படி ஆவதே!-ஓர் அடியிலே பத்து அடி இட வேண்டும் படியாயிருக்கை.-ஒசிந்து – துவண்டு.-ஒடுங்கி ஒடுங்கி நடந்து, அது பொறாமல் துவண்டு, எங்ஙனே புகக் கடவளோ?-
—————–
ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-
ஒசிந்த நுண் இடை – இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நுண்ணிடை மேல் கையை வைத்து – நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;-அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.
ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.
பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது,
இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து –-இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ!
நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ?அடியே பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது.–கர உபத்ரவம் -அடியே -பொய் நின்ற ஞானம் தொடங்கி–அஷ்ட புஜ பெருமாள் ஓன்று பணித்தது உண்டு -நமஸ் சப்தம் ஆழ்ந்து அனுபவிக்க அவன் மேல் விழுந்து ரஷிப்பான்-கையுள் தன் முகம் வைக்கும் நையும் —பர பிரயத்தனமும் கூடாது ஸுவ பிரயத்தனமும் கூடாது-‘கையை வைத்து’ என்கிறாள், மலையை வைத்து என்னுமாறு போலே.–கசிந்த நெஞ்சினளாய் – அன்போடு கூடின மனத்தை யுடையளாய். பற்றுகைக்கு அவ்வூரே ஆக அமையும்,-விடுகைக்குத் தாயாக அமையும்.
எம்மை நீத்த எம் காரிகை –அவளுக்கு இங்குள்ள எனது என்னும் செருக்குக் கழியக் கழிய,
அது தானே காரணமாகா நின்றது திருத் தாயார்க்குப் பற்றுகைக்கு.
பகவத் விஷயத்திலே இறங்கி மூழ்குதலும், வேறு பட்ட பொருள்களை விடுகைக்கு எல்லை இவ்வளவாகையும்,-இப்படி விட்டால் பின்பு அவர்கள் தாங்களே உத்தேஸ்யர் என்னும் இடமும் சொல்லுகிறது.-புறம்பே உள்ளவற்றை விடப் பண்ணுவித்துக் கொண்ட விஷயத்தில் ஞான லாபமே யன்றோ இவளுக்கு வேண்டுவது.
இவள் சம்பந்தமே அன்றோ திருத் தாயார்க்கு வேண்டுவது.
விடப் பட்டவர்களுக்கு விட்டவர்கள் உத்தேஸ்யர் –
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகை திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லும் கொல் –
இவள் என்னை விடும்படி செய்து கொண்ட விஷயத்தில் ஈடுபாடானது அவ்வூரில் புகுதலையும் செய்து கொடுக்க வற்றோ?
‘எம்மை நீத்த’ என்று நிச்சயித்தாள்; ‘செல்லும் கொல்’ என்று ஐயப்படா நின்றாள்; இதற்குக் காரணம் என்? என்னில்,
பிரேமம் இரண்டனையும் செய்து கொடுக்குமே அன்றோ.
பரவசப்படும் தன்மையை விளைத்து இடையிலே பொகடிலும் பொகடும்;
அன்றிக்கே, கொண்டு போய்ப் பொகடிலும் பொகடும் அன்றோ.-
—————-
காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-
பல் பழி தூஉய் இரைப்ப – தன்னை அவனுக்கு ஆக்கி வைத்தாள்: பின்னை அது தானும் மாட்டிற்றிலள்; புறப்பட்டுப் போனாள்; தாயைப் பார்த்திலள்; ஊரார் பழி பார்த்திலள்;
இத்தனையும் செய்தால் அவன் தான் எதிரே வரப் பெற்றது இல்லை என்று இப் புடைகளிலே
ஒரு கோடி யன்றோ சொல்லுவன.
நடந்தாள் – தன் பெண் பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை- இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ.
தன் மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள் தான்!
வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேஸ்யராமித்தனை.
ஒரு நாள் நம் பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடி யருளி,
‘தன் சிஷ்யனைத் தான் கொண்டாட நின்றான்’ என்றிராதே கொண்மின்!
“கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச் செய்தார்.
அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடா நிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க,‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறிய வேணும்;
இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.
எம்மை ஒன்றும் நினைத்திலளே – வழிக்குத் துணையாகத் தான் கொடு போகா விட்டால், நினைக்கத் தான் ஆகாதோ? எதிர் கொள்வாரிலே சிலராகவாதல், வழித் துணையாவாரிலே சிலராக வாதல், ஏதேனும் ஓர் ஆகாரத்தாலே தான் நினைக்கலாகாதோ?என்பாள் ‘ஒன்றும் நினைத்திலன்’ என்கிறாள்.
‘அத் தலையில் நினைவே காரிய கரமாவது’ என்றிருக்கிறாள்.
பகவானிடத்தில் சம்பந்த முடையாருடைய அபிமானமே உத்தேஸ்யம்-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் திருவிட வெந்தை பிரானே –
ரசவாதி கையில் ரச குளிகை போலே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –
————-
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-
நெடும் கண் இள மான் இனிப் போய் –-விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்!
இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!
இனிப் போய் – யார் செய்யக் கூடியதை யார் தான் செய்கிறார்?
ஸ்வரூப ஞானம் உடைய -கண் படைப்பாளும் தானாய்ப் -புறப்பட்டுப் போவாளும் தானாவதே!
இத்தலை செல்லாதிருத்தற்குச் ஸ்வரூப ஞானமே அமையுமே யன்றோ.-ததேக உபாயத்வம் –பாரதந்த்ர்ய ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யத்ன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது
அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனனை – இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது.-ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ;
அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே
அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;
இவள் நெடுங்கண் இள மான். அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.
கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.-
காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண் –
தினைத்தனையும் விடாள் – நெகிழ்ந்து அணைக்கவும் பொறாள்.
இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே ‘நின்னைப் பிரியேன்’ என்று சொல்லவும் நெஞ்சு கொடாள். காரியப் பாட்டாலே பிரியிலும் நெஞ்சு ஒழிந்து கேட்க வேணுமே.-
———–
வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-
தளர்ந்தார் தாவளமாய், (ஆபத்துக்கு ரக்ஷணமாய் )
எய்ப்பினில் வைப்பாய்,
‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும் படியாய்,
உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய்,
உடையவனுக்கு அறவிட்டு ஜீவிக்கலாய்,
‘அற விட்டு ஜீவித்தான்’ என்று ஏசாதபடியாய்,
அவன் தனக்கு பெரு மதிப்பைக் கொடுப்பதுமாய்,
உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாதபடியாய்,
எல்லாம் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
இந்த விதமான குணங்களை யுடைத்தாயிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது.
மாநிதி என்றது,-அழியாத நிதி என்றபடியாய், அத்தால், தன்னைக் கொண்டே எல்லாம் கொள்ளா நின்றால்
தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லாத நிதி மாண்டு நிற்குமே.-ஆபன்னர்க்கு ரஷணம்--அஸ்தி ப்ரஹ்ம சேத் -ப்ரஹ்மம் உண்டு என்றதும் – நஷ்ட பிராணன் ஆன ஆத்ம சத்தை லாபம் பெறுமே
திகழ் பொன்னுலகு ஆள்வாரே –-ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே,
நித்தியாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-
———-
உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார்-தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்-ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம்
–என்னக் கடவது இறே-இத்தால்-வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-
தானும் வாழும்படி போனாள் என்றது ஆயிற்று –இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம் ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்-அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply