ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –
இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –
(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)
(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)
இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது
அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-ஷிபாமி -என்கிறபடிய த்யாக விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –-ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –
—————
முதல் வார்த்தை (பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)–
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத் (ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர்-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் – –எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் -விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ ––அலமந்தால் -தடுமாறினால் –இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –-நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ-யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜ னார்த்தியாய் அழைக்கிறேனோ –-கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற-கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே – நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை-சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை –கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -என்பது பிரமாணம்- –
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – –கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை –செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப் பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன –இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்–இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே-இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்-இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று-அலந்தேன்;-வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இறே-பாவியேன் காண்கின்றிலேன்; ஆபத் சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்-காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை-எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது
——————————
இரண்டாம் வார்த்தை –(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)
அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –
இவற்றை பொகட்டு புறம்பே போய் –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை
அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –
யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-நானும் உனக்கு பிரகாரமே –அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்-மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி-ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே–என் உடைமையும் உனக்கு பிரகாரமே–யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமாநாதி கரண்யம்-என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி-வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமாநாதி கரண்யம்-அனைத்தும் அவனது சொத்து –-வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த-நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ–மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-என்னுடைய பிராணன் அவன் கையதே –நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் -மிதுனமானால்-உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ- உங்களுக்கு இது அவ்யுத் பன்னமோ –அஸ்யா தேவ்யா-
இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல் ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய் வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-தத் தஸ்ய சத்ரு சம்பவேத் –என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –
சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி-இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி-இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்–தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —-இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-
கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள்
————————————-
மூன்றாம் வார்த்தை –
இப்பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை எனபது –
திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் – தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது – பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி-
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் – வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே –ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே-சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்! ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இறே பாபம்-அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்-பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-
———————
நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுமரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத்தேவர் தம் துவக்கைப் பாரது ஒழிவதே (சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே)-என்றும் –
பரம் தாமத்தை பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதி யாம் போலேயும்
ஸ்தா லீஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும் (பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ) –
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்
நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய் இருக்கிற திருக் கடல் மல்லையிலே-ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –இது என்ன நீர்மை இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே– எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .(அவஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே –11-6-7-பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அ வைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –
——————–
ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்-மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே-அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –நளிர் அரங்கம்–நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்-நாகணையான்-அனந்த சாயி-என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் -புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று-பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்-பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் –சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே ––தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே-அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-மா முகில்காள்-ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே- அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து – அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் – புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்–பாம்பணையான் வார்த்தை என்னே- படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே
உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே-ஏதேனும் ஆவேனே – ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்-அது என் என்னில் –சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை-அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும் -என்றார் –
————
ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-தெருளுதியாகில்-அறிவுடைய யாகில் -ஞான இந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உண்டாகில் நெஞ்சே வணங்கு –-உபகாரகனான அவன் திருவடிகளில் விழப் பார்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாக புத்தி பண்ணு அறிந்து-அவன் விட அடான் என்று அறிந்து-உனக்கு ஒரு போதாக அயோக்யதா அனுசந்தானத்தாலே அகல நினைப்பதொரு அறிவு கேடு உண்டு -அவ்வளவிலும் விடாதே கிடாய்-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே-முன்பு உபகரித்து நின்ற படி கண்டாயே
இவ்விஷயத்தை விட்டால் எத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்க –
————————
ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்
(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)
——————–
எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் -விரித்துரைத்த வெநநாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான் போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல்திருவந்தாதி -33- என்றும் இருக்கை –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே-14-அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க – அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது-நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை – அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-இது தான் –“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிறஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.-நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ-அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று-அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;-இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.
——————-
ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –-(தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இறே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க-சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –பட்டு -என்பது- உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்- வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்தேட்டமாய் இறே இருப்பது –-இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு கலந்து கொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.-காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.
எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-15-உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன-போந்தார் –
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன-ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –போந்து எண்ணிக் கோள் –புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்-தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும்
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இறே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்-அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய-நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே– –நனி -மிகுதி – மா -வேண்டற்பாடு-நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3-ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே –பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்னக் கடவது இறே –
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.-நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா-மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும் அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“-வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று- ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்–வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று- பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்–தவம் –ஸூஹ்ருதம்–பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது-
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே -7-4-4-உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –
——————
பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும் (எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ))-எம்பாரைப் போலவும் (எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)
இப்பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப்பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிகே பட அனுசந்திப்பான்
இப்பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –
வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11–
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்-மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்-
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply