வார்த்தை -453-
முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு அறிய வேண்டிய அர்த்தம் நாலு உண்டு
இதில் அத்யவசாயமாய் இருப்பனவும் நாலு உண்டு -அவை எவை என்னில்
1-ப்ராப்யமும் -ப்ராப்ய அத்யவசாயமும் –
2-ப்ராபகமும் -பிராபக அத்யவசாயமும் –
3-ஆசாரமும் -ஆசார அத்யவசாயமும் –
4-போஜனமும் -போஜன அத்யவசாயமும் –
இதில் ப்ராப்யம் ஆவது –
அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமாக –
அர்ச்சிராதி மார்க்கத்தாலே -ஒரு தேச விசேஷத்திலே போய் –
அங்கு உண்டான பரிபூரணமான பகவத் அநுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் –
இதில் அத்யவசாயம் ஆவது –
கைங்கர்யத்தை ஒழிந்துள்ள தர்ம அர்த்தங்களிலும்
மோஷத்தில் கைவல்யம் முதலாய் உள்ள புருஷார்த்தங்களிலும்
அபோக்யதா புத்தி பூர்வகமாக இக் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை –
இதில் ப்ராபகம் ஆவது –
சௌலப்யாதி கல்யாண குண விசிஷ்டனுமாய் -விக்ரஹ விசிஷ்டனுமாய்
இருந்துள்ள ஈஸ்வரன்(பிரபத்தி சரணாகதி என்பதே இந்த எண்ணம் தானே- விடுவித்து பற்றுவிக்குமவன் அவனே பிராப்பகம் உபாயம் -ஸுலப்யம் குணபூர்த்தி உள்ள அர்ச்சாவதாரத்திலே ஆழ்வார்கள் பலகாலும் சரணாகதி செய்து காட்டி உள்ளார்கள் -)
இதில் அத்யவசாயம் ஆவது –
பெரிய பிராட்டியார் புருஷகாரத்தாலே
அவன் தானே உபாயம் என்று உபாயாந்தரங்களான கர்ம ஞான பக்திகளிலே
கால் தாழாதே இவ் உபாயமே நிர பேஷ உபாயம் என்று இருக்கை
இதில் ஆசாரம் ஆவது –
உபாய ஸ்வீகாரம் பண்ணினவன் யாவதாயுஷம் மநோ வாக் காயங்களாலும்
ஸ்வரூப அநுகூலமாக வர்த்திக்கும் வர்த்தனம் -(சம்பிரதாயத்தை ஒட்டி வாழும் வாழ்க்கை முறையே ஆசாரம்)
அதாவது
பர வியூஹ விபவாதிகளில் காட்டில் அர்ச்சாவதாரத்தின் நீர்மையிலே
அதி ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலே
அநுகூல வ்ருத்திகளைப் பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிர்ந்து வர்த்திக்கையும்
இதில் அத்யவசாயம் ஆவது –
கீழ் சொன்ன அநுகூல வ்ருத்திகளை பண்ணுகையும் –
பிரதிகூலங்களை தவிருகையும்
செய்யும் இடத்து
க்யாதி லாப பூஜைகளைப் பற்றவும் –
த்ருஷ்டப் பிரயோஜனர்தமாகவும் –
பகவத் ப்ராப்திக்கு சாதனமாகவும் -பிரதிபத்தி பண்ணிச் செய்யாதே –
இவ் வாசாரமே ஸ்வயம் பிரயோஜனம் என்று இருக்கை –
இதில் போஜனம் ஆவது
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு குஷி பூர்த்தியிலே அந்வயியாதே
ஷூநிவ்ருத்தி மாத்ரமே பிரயோஜனமாக ஜீவிக்கும் ஜீவனம் -(வயிற்றை நிறப்பதற்காக சாப்பிடாமல் பசியைப் போக்கவே உண்ண வேண்டும்)
இதில் அத்யவசாயம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஜீவிக்கும் ஜீவனம் என்ன
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
அமுதுபடி சாத்துப்படிகளுக்கு அர்ஹமான த்ரவ்யங்களிலே சாபேஷனாய் ஜீவிக்கும் ஜீவனம் என்ன
இவற்றில் கால் தாழாதே
ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தைக் கொண்டு தேக யாத்ரை நடத்துகை ப்ரபன்ன க்ருத்யம் –
—————————
வார்த்தை -454-
1-ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
2-ஸ்வ ரஷணத்தில் அசக்தியும்
3-ப்ராப்யத்தில் த்வரையும்
4-ப்ராபகத்தில் அத்யவசாயமும்
5-விரோதியில் பயமும் –
6-உத்தேச்ய விஷயத்தில் கௌரவமும்
7-உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞ்ஞதையும்
8-உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியும் —
ஸ்வரூபத்தில் உணர்த்தியாவது –
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியனோ -பெரிய திருமொழி -8-9-3-என்று இருக்கை(கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றி -அந்வயமும் தள்ள வேண்டியவற்றையும் அருளிச் செய்வார்கள்)
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-அநந்யார்ஹத்வம் -திருமந்த்ரார்த்த ஞானம் அருளப் பெற்று அருளிச் செய்கிறார் இப்பதிகம் –-உயிரான பாசுரம்-கண்ண புரம் ஓன்று உடையானுக்கு -பரமாத்மா அகாரம்-திருக் கண்ண புரத்தை தனக்கு
வாசஸ் ஸ்தானமாக உடையவனுக்கு –ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் இருப்புக்கு
அவ்வருகே ஓன்று போலே காணும் இது –—அடியேன் -சேஷ பூதன் -மகார அர்த்தம்
உடையானுக்கு -ஆய -சேஷத்வ வாசகம் லுப்த சதுர்த்தி–ஒருவர்க்கு உரியேனோ-அநந்யார்ஹ சேஷத்வம் குறிக்கும் உகார அர்த்தம் –-மோக்ஷ பிரதன் -ஸ்ரஷ்டா -இவன் ஒருவனே-பிரதிபந்தங்களைப் போக்கி இசைவித்து தனது தாளிணைக் கீழ் தனது பேறாக இருத்தும் ஸ்வாமி-இத்தால் தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் – பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு என்னும் இடம் சொல்லுகிறார் –
ஸ்வ ரஷணத்தில் அசக்தி யாவது –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -திருவாய்மொழி -5-8-3- என்று இருக்கை
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்
யாரே களை கண் –ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ-என்னை என் செய்கின்றாய்-நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும்,-“யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும் இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார்-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று;-க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக் கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-என் நான் செய்கேன்’-என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி -என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ-என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.-ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்ற இம் மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய, முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத் திருவுள்ளம்-என் நான் செய்கேன்–தாம் கை வாங்கின படி.-யாரே களைகண்-
பிறர் பக்கல் நின்றும் கை வாங்கினபடி.-என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என் செய்கின்றாய்” என்னும் இம் மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களும், அவனே ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப் படுகின்றன
ப்ராப்யத்தில் த்வரை யாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்று இருக்கை
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-மா கம் –பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என் மனம் ஏகம் எண்ணும் – என்னுடைய மனம் ஆனது-எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –இராப்பகல் இன்றியே இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது-
இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –-ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17
நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய
மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-
ப்ராபகத்தில் அத்யவசாயம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -திருவாய்மொழி -5-8-8- என்று இருக்கை
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி:”என்றது,
சரமஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் ––சர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்மதான பின்பு கிருஷியும் உம்மதாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ
விரோதியில் பயமாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றார் போல் -பெரிய திருமொழி -11-8-3- என்று இருக்கை
தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3—பாம்பு -விஷயாந்தரங்கள் )-அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை-இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –
உத்தேச்ய விஷயத்தில் கௌரவமாவது –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை யாண்டார் –இங்கே திரிய உறுமோ பாவியேனுக்கு -திருவாய்மொழி -8-10-3- என்று இருக்கை
உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே-8-10-3—ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-அவர்கள் ஆகிறார்
முன்னம் குறள் உருவாய் மூ அடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் -பெரிய திருமொழி -9-4-2-என்று இருக்குமவர்கள்
சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே -பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமை யே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்ன கடவது இறே –ஆத்ம அனுபவத்தை குறித்து சொன்ன வார்த்தையை பகவத் விஷயத்திலும் சொல்லுகிறார் -கீழ்ச் சொன்னவை போலே கழிக்க ஒண்ணாதே சரம அவதி இல்லாமையால் உறுமோ -என்கிறார் –பாவியேன் -பிரதம அவதிக்கும் சரம அவதிக்கும் வாசி சொல்ல வேண்டும் படி பாபத்தை பண்ணினேன்
உபகார விஷயத்தில் க்ருத்ஜ்ஞ்ஞதை யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி -2-7-8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7-
உனக்கு என் செய்கேன் –திருவாய்மொழி -2-7-8- -என்று இருக்கை
(அவன் பண்ணும் உபகாரங்கள் கிரமப்படி இருக்க வேண்டாமே -ஆகையால் மருவித் தொழும் மனமே தந்து அடுத்து என்னைத் தீ மனம் கெடுத்தான்)
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்-ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்-
பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –சுக்கிராதிகள் வார்த்தை செவிப்படாத படி மஹா பலியை வடிவு அழகால் வஞ்சித்தால் போலே என்னை அநந்யார்ஹனாக்கிக் கொள்ள வல்லை காண் இச் சக்தியை உடையவனுக்கு முடியாதது உண்டோ –1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே-மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது-அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது-என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்–ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே-வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –
உத்தாரக விஷயத்தில் பிரதிபத்தியாவது
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் –திருவாய்மொழி -10-10-3- என்று இருக்கை
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-விலக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –-என் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் இருப்பது ஓன்று உன்னை ஒழிய வேறு ஓன்று காண்கின்றிலேன் –
ஸ்ரீயபதியான சர்வேஸ்வரனைப் பற்ற
ஜீவாத்மாக்களுக்கு அத்யந்த பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் ஸ்வரூபம் என்று
சதாசார்ய உபதேச முகத்தாலே சகல வேத சங்ரஹமான
ஸ்ரீ மத் அஷ்டாஷர மகா மந்த்ரத்திலே பிரதம மத்தியம பதங்களாலே தெளிய அறிந்து(பிரணவத்தால் சேஷத்வம் -நமஸ்ஸால் பாரதந்தர்யம் என்று கொள்ள வேண்டும்-பீஷ்மர் தர்மம் கேட்ட ஆறு கேள்விகளில் இறுதி கேள்விக்கு முதலில் பதிலல் சொல்லியது போல் இங்கும் சேஷத்வம் இறுதியில் இருப்பதால் பிரணவம் முதலில் உள்ளது)
ஸ்வ ரஷணத்தில் சக்தியும் பிராப்தியும் இல்லாமையாலே
மந்திர ரத்னம் என்கிற திரு நாமத்தை உடைத்தான த்வயத்தின் உத்தர வாக்யத்தாலே
பிரதிபாதிக்கப் பட்ட சித்த உபாய பூதனான ஸ்ரீயபதி திருவடிகளையே உபாயமாக
உடையனான அதிகாரிக்கு(பற்றுவது உபாயம் அல்லவே -அதிகாரி விசேஷணம் மட்டுமே தானே) ஸ்வ விசேஷணமான சக்ருத் பிரபத்திக்கு மேற்பட அபேஷிதமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே –
கீத உபநிஷத் ஆசார்யன்
த்யாஜ்ய தயா அகர்தவ்யமாக விதித்த அஷ்டாங்க யோக யுக்தமான கர்ம யோகமும்
தத் உபாயமான ஜ்ஞான யோகமும் –
தத் உபாயமான பக்தி யோகமும் –
எல்லாவற்றிலும் அங்கத் வேன அனுவர்திக்க கடவதான வர்ண ஆஸ்ரம யோக்யதா பாதக தர்மங்களும் த்யாஜ்யம்(வர்ணாஸ்ரம தர்மங்கள் நேராக த்யாஜ்யம் அல்லவே உபாய புத்தியால் மட்டுமே த்யாஜ்யம்)
மாமேகம் சரணம் வ்ரஜ என்று உபாதேய தயா கர்தவ்யமாக விதித்த ஷட் அங்க யோக
யுக்தமான ந்யாச வித்யையே அதிகாரமாய் இருக்கும் –
(இத்தால் ரஹஸ்ய திரயங்களும் விவரண பாவங்களாக இருப்பதால் முமுஷுவுக்கு மூன்றும் அறிய வேண்டியவை என்பதை இந்த வார்த்தை அழகாக விவரிக்கிறது)
————————————————————————————-———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply