நாளும் மேவி -நாள் தோறும் நாள் தோறும்-மிக்க விருப்பத்தைச் செய்து-அவ் ஊரில் விடிந்த விடிவு தோறும் அவனுக்கு-அத்ய மே சபலம் ஜன்ம சூப்ரபாதாச மே நிச
யத் உந்தித்ராப்ஜ பத்ராஜம் விஷ்ணோ த்ரிஷ்யாமி அஹம் முகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-8என்னும்படியாயிற்று இருப்பது –-இவருடைய குஹ்யதே ரங்க யாத்ரே -அகலகில்லேன் இறையும்-இருக்கும் படி –
வத்யதாம் ஏஷ தண்டேன தீவ்ரேன சசிவை சஹ-ராவனச்ய ந்ருசம்சஷ்ய ப்ராதா ஹி ஏஷ விபீஷண-யுத்தம் -17-27-மித்ர பாவேன சம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் கதஞ்சன-தோஷாயத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத் அகர்ஹிதம் -யுத்தம் -18-3-அடைந்தவர்கள் உடைய குணங்களையும் குற்றங்களையும்-நினையாத திருவடிகள் -அவர்கள் தாம் அன்பினால் மயங்கினவர்களாய்-இவன் கொல்லத் தக்கவன் -என்றாலும் நான் விட மாட்டேன் -என்னுமவன்-தஸ்மாத் ஹே ராகவ மஹா ப்ராஞ்ஞ விபீஷண அஸ்மாபி பிஸ் ஸஹ துல்ய பவது நஸ் ஸஹித்வஞ்ச அப்யுபைது -யுத்த18-38–ஆகையால் ஓ ராகவனே சிறந்த புத்தியுடைய விபீஷணாழ்வான் நம்முடன் கூட ஒப்பாக ஆகுக -நமக்குத் தோழமையும் அடையக் கடவர் -என்று மஹாராஜர் விண்ணப்பம் செய்தார்-
பதி தருமருவாபீ வாரிவத் ஸர்வ போக்யம் -வழியில் மரம் என்ன மருப்பிரதேச ஜலம் என்ன இவைகள் போல் எல்லாருக்கும் போக்யமானவனை
ஸம்ஹாரிணா ராகவ சாகரேண பிரச்சாத்யமாந காகுத்ஸ பாதாளமுகே பதன் ஸ அயம் பவத்பி சமேத்ய தரஸா தாரயிதும் யுக்தஸ்து -யுத்த -14-20-
சத்ருவை அழியச் செய்வதான இலஷ்மணனாகிற கடலாலே மூடப்பட்டவனும் ராமனாகிய வடவாக்னியில் விழுமவனான அந்த இந்த ராவணன் உங்களால் ஓன்று கூடி விரைவாக காப்பாற்றுவதற்குத் தக்கவன் அல்லவோ –
வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகளை-வேதத்தை பறி கொடுத்தலால் உளதாய துன்பம் முதலானவைகள் போம் படியாக-
ஏஹி பஸ்ய சரீராணி முநீநாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரை பஹூநாம் பஹதா வனே ஆரண்ய -6-18-எங்களுடைய இந்த சரீரத்தை பார்த்து அருள வேண்டும்
அகால பலினொ வ்ருஷா சர்வேச அபி மது ச்ரவா-பவந்து மார்க்கே பகவன் அயோத்யாம் பிரதி கச்சதி -யுத்தம்-17-18–அவனுடைய திரு முகப் பார்வையாலே ஊரும்-காலம் அல்லாத காலங்களிலும் மரங்கள் பயனைக் கொடுக்கின்றன-
இங்கு ஆடுதும் கூத்தே –அங்கு சென்று-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்-அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – என்று களிக்கும் களிப்பினை-இங்கே களிப்போம் –
கூத்தன் –நடக்கப் புக்கால் -வல்லார் ஆடினால் போல் இருக்கை –-அக்ரத ப்ரயயௌ ராம சீதா மத்யே ஸூ மத்யமா-ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மண அனுஜகாம ஹ -ஆரண்யம்-11-1-என்கிறபடியே-நடைச் சக்கரவத்து பிடிக்கலாமாய் இருக்கும் ஆயிற்று –
அவன் முன்னே போக பின்னை போகையாவது-கூத்துக் கண்டு போகை யாயிற்று –
தான் தனக்கு இல்லாத மரண சமயத்தில்-ததா தம் பிரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்-அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம் –ஸ்ரீ வராக சரம ஸ்லோஹம்
என்னுடைய பக்தனை நானே நினைக்கிறேன்-என்னும் பரம ஆப்ததமன்-
ஆப ஏவ சசர்ஜா தௌ தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத்-மனு ஸ்ம்ருதி -1-8–முதல் முன்னம் தண்ணீரை உண்டாக்கினார்
யதாஹி ஏவ ஏஷா எதஸ்மின் அத்ருச்யே அநாத்ம்யே-அநிக்ருதே அநிலயதே அபயம் பிரதிஷடாம்-விந்ததே அதச அபயம் கதோபவதி –தைத்ரியம் -7-இந்த பரம் பொருள் இடத்தில்-பயம் இன்மைக்காக-இடைவிடாத நினைவின் ரூபமான த்யானத்தை-எவன் அடைகிறானோ அவன் பயம் அற்றவனாக ஆகின்றான்-
சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-
யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-
இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே-விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது
மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30–என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –
வண் திரு மோகூர்க்கு ஈத்த பத்திவை –மேலான வண்மையை உடைய திரு மோகூர்க்கு கொடுத்த-பத்து-கவாம் சத சஹஸ்ரேன தீயதாம் சபலாம் மம-ரத்னம் ஹி பகவத் ஏதத் ரத்ன ஹரீச பார்த்திப -பால -58-9–ஸ்ரீ வசிஷ்ட பகவானைக் குறித்து ஸ்ரீ விஸ்வாமித்ரர் கூறியது
இந்த காம தேனு பசுக்களில் ரத்னம் -போலே-என்பது பிரசித்தம்–தர்ம சாஸ்திர விதிப்படி -இரத்தினத்துக்கு உரியவன் அரசன் -என்னுமாறு போலே-இத் திருவாய் மொழியின் இனிமையாலே-திரு மோகூர்க்காய் இருந்தன என்று கொடுத்தார் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்-மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச –ஸ்ரீ கீதை -4-11-எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ-அவர்களுக்கு அந்த விதமாகவே நான் அருள் செய்கிறேன்
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்-உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான்
ஸ ஸைன்ய புத்ர சிஷ்ய சாத்ய சித்த பூ ஸூ ரார்ச்ச நத்துக்கு முக நாபி பாதங்களை
த்வார த்ரயத்தாலே காட்டும் சாம்யம் அநந்த சயனத்தில் வ்யக்தம் –சூர்ணிகை -183-
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்
க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம்-கிலேச நாசன கேசி ஹந்தா ப்ரசாஸ்த கேசம் -க ஈச நியாமகன் -நான்கும் உண்டே -ஸ்வரூபம் ரூபம் குண விபவம்-
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13–ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்-எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து- பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள் பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று பயந்து சொல்லுகிறான்–ஸ்வ புருஷம் –தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில் தாழ்வு சொல்கிறானாய் ஆயிற்று தவிர ஒண்ணாமையாலே
அபிவீஷ்யே –அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –-சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின் கௌரவம் எல்லாம்-தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –-இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன-இவர்கள் அவன் பக்கலிலே பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –-இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே-
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு-சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்-நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருனாம் எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்-அன்றோ எனக்கு குறையாவது- நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –-தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச-ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் – அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -அஹம் அமரவரார்சிதென தாத்ரா யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்-நான் ஸ்வ தந்த்ரன் அல்லன் என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு-என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது-அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -பாரதம் –
நிர்த்தோஷம் வித்தி –சாவது பிறப்பதாய் போந்தவனாவது – கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்-குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –இவனையோ பார்ப்பது-இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் –
பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகத-பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே ஆயிற்று-அங்கு கண் வளர்ந்து அருளுகிறது
ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா-விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84-யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான்-விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜென்-ஜாபாலி ஸ்ம்ருதி –-எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும்
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசானுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதஸ்ச தே -அயோத்யா -31-25-இவன் எல்லா தொண்டுகளும் செய்வேன் என்று இருந்தாலும் பயன் இல்லை அன்றோ–குருஷ்வ மாம் அனுசரம் வைதர்ம்யம் ந இஹ வித்யதே-க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவசார்த்த பிரகல்ப்யதே -அயோத்யா -31-22-
செய்க -என்று அவன் ஏவிக் கொள்ளாத அன்று-
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருத்ய புஜம் உச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் -பாரதம்
தர்சனம் சித்ரகூடச்ய மந்தாக்னி யாச்ய சோபனே-அதிகம் புரவாசாச்ச மன்யே தவச தர்சநாத் -அயோத்யா -95-12-என்கிறபடியே-இந்த சித்ரகூடத்தில் வசிப்பது அயோத்யா வாசம் விட மேலானது
மத்ம நாபவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ்குரு-மாமேவ ஏஷ்யசி யுக்த்வா ஏவம் ஆத்மாநாம் மத் பராயணா-ஸ்ரீ கீதை -18-65–என்னிடத்திலேயே பக்தியை உடையவனாய் என்னிடத்திலேயே மனத்தை உடையவன் ஆவாய் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்தி அபி ச அப்யய-கிருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் -பாரதம் வீட்ம பர்வம் –உலகின் உடைய தோற்றமும் கிருஷ்ணன் தான் அழிவும் செய்து அருளினான் என்பது – பிரசித்தம்
மரணாந்தானி வைராணி பிரசவாந்தம் ச யௌவனம்-குபிதம் பிரணதாந்தம் ச யாசிதாந்தாம் ச கௌரவம்
தஸ்மின் அஸ்தமிதே பீஷ்மே கௌரவானாம் துரந்தரே-ஜ்ஞானானி அல்பீபவிஷ்யந்தி தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் -பாரதம்-தர்ம புத்திரன் இடம் கிருஷ்ணன் அருளியது-
வீடுமன் முடியா நின்றான்-பின்னை இவ்வர்த்தம் கேட்கலாவார் இலர்-ஜ்ஞானானி அல்பீ பவிஷ்யந்தி – ஆத்மாவைப் போன்று நித்யமாக இருக்கும் அன்றோ-தர்ம பூத ஞானமும் இப்படி இருக்க -ஜ்ஞானானி அல்பீ பவிஷ்யந்தி -என்பான் என் என்னில் –
இதற்கு தோன்றலும் மறைதலும் ஆகிய செயல்கள்-ஞானம் செல்லுதற்கு உரிய வழியை பற்றியதாய் இருக்கும் அன்றோ –ஆதலால் -என்க – வீடுமன் போனால் பின்னர் கொள்வாரும் கொடுப்பாரும்-இன்றிக்கே தொடர்ச்சி அறும்- இதற்கு பட்டர் -அருளிச் செய்ததாக பரிஞை என்கிற ஊரில் -அப்பர் பணிக்கும் ஒரு மதிப்பன் தலையில் கிடவாத அன்று-கொள்வார் கொடுப்பார் இன்றியே- எளி விலையனாய்ப் போம் -என்று அருளிச் செய்வார்-தஸ்மாத் த்வாம் சோதயாமி அஹம் – ஆகையால் காண் உன்னை விரைவு படுத்தி-அவன் பக்கலிலே போய்க் கேள் -என்கிறது-
தம் பஞ்ச சதானி அப்சரஸாம் பிரதிதாவந்தி சதம் மாலா ஹஸ்தா -கௌஷீதகி உபநிஷத்
நூறு பேர்கள் மாலைகளைக் கையில் உடையவர்களாய்-அந்த முத்தனை எதிர் கொண்டு அழைக்கிறார்கள்
ச உத்தம புருஷ சதத்ரபர்யேதி ஜஷத் கிரீடன் ராமமான-
ஸ்த்ரீபிர்வா யானைர்வா ஜ்ஞாதிபிர்வா நோபஜனம் ஸ்மரன் இதம் சரீரம் -சாந்தோக்யம் -8-12-3-
யதா யதா ஹி கௌசல்யா தாசிவச்ச சகீவச-பார்யாவத் பைநீவச்ச மர்த்ருவச்ச உபநிஷ்டதே -அயோத்யா -18-68- ஸ்ரீ கௌசல்யார் சகரவர்த்திக்கு-வேலைக்காரி தோழி மனைவி உடன் பிறந்தவள் தாய் ஆகிய இவர்களைப் போன்று இருந்தாரே-
அனயா சித்ரயா வாசா த்ரிஸ்தான வ்யஜ்ஞ நச்தையா-கஸ்ய நாராத்யனே சித்தம் உத்யதாசே அரேரபி -கிஷ்கிந்தா -3-32- கொல்லுதற்கு தூக்கின கத்தியை எந்த பகைவனுடைய மனம் தான் மகிழ்விக்கப் படுகிறது இல்லை –
மயூரச்ய வனே நூனம் ரஷசா நஹ்ருதா ப்ரியா-தஸ்மாத் ந்ருத்யதி ரம்யேஷூ வநேஷூ சஹ காந்தயா-கிஷ்கிந்தா 1-40-மயூரச்ய-இருவராய் இருப்பார் எல்லாரையும் பிரித்தான் என்றே இருக்கிறார்-மயிலினுடைய பெண்டாட்டியை இராவணன் கொண்டு போயிற்று இலனோ-
வனே-திரு அயோத்தியில் வந்து பிரித்தான் அல்லனே –இன்பத்துக்கு தனி இடமான காட்டில் அன்றோ –ரஷசா நஹ்ருதா ப்ரியா –நீர்மை கேடனான அப் படுகொலை காரனால் பிரிக்கப் படாதது இது ஒன்றுமே அன்றோ –
அக்ரூர க்ரூர ஹ்ருதய சீக்ரம் பிரேரயதே ஹயாத்-
ஏவம் ஆர்த்தாஸூ யோஷித்ஸூ க்ருபா கஸ்ய ந ஜாயதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-90-
இப்படி பெண்கள் கஷ்டப் படும் கால் யாருக்குத் தான் அருள் உண்டாக மாட்டாது -என்றபடி –
தேநவிநா ஷண அப்த கோடி ப்ரதிம யதா அபவத் ததா ஸ மது ஸூதந கோபீபி ஸஹா ராஸ -விஷ்ணு புராணம்-இந்தக் கிருஷ்ணனை விட்டுப் பிரிந்தால் ஒரு ஷணமும் கோபிகளுக்கு ஒரு கோடி வர்ஷம் போல் எப்படித் தோன்றுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் கோபிகளுடன் ராஸக்க்ரீடை செய்தருளினார்-
பத்ம கேசா சம்ஸ்ருஷ்ட வ்ருஷாந்தர வினிஸ் ஸ்ருத-நிச்வாச இவ சீதாயா வாதி வாயு மநோ ஹர -கிஷ்கிந்தா -1-17--தாமரைப் பூக்களின் தாதுக்களின் சேர்ந்ததும்-மரங்களின் நடுவில் இருந்து புறப்பட்டதும்-சீதையின் மூச்சுக் காற்றைப் போன்று மனத்தை கவர்வதுமான காற்று வீசுகிறது-
ச்வோசித விவித விசித்ரானந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய-நிரதிசய சுகந்த நிரதிசய சுகச்பர்ச கௌச்துப -சரணாகதி கத்யம்-5- இவளுடைய பெண்மைக்கு முலை போலே ஆயிற்று-அவனுடைய ஆண்மைக்கு ஸ்ரீ கௌஸ்துபம்- புருஷோத்தமன் ஆகும் தன்மைக்கு இலக்கணம் அன்றோ –
ஆயதாஸ்த ஸூ வ்ருத்தாஸ்ச பாஹவ பரிகோபமா-சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவிபூஷிதா -கிஷ்கிந்தா -3-14-எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கத் தகுந்தனவான
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீயம் மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-
ஷோடசஸ்திரீ சஹஸ்ராணீ சதமேகம் ததோதிகம்-தாவந்தி சக்ரே ரூபாணி பகவான் தேவகீ ஸூதா – ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-18-அரிவையர் –-தங்கள் பருவத்தாலே துவக்க வல்லவர் பலர் -ஒருவர் இருவரா –பெண்கள் பதினாறாம் ஆயிரவர் –
யதித்வம்பிரசிச்தோ துர்க்கம் வனமத்யவை ராகவ-அக்ர தச்தே கமீஷ்யாமி மிருந்னந்தி குச கண்டகான்-அயோத்யா -27-9-ராமா நீ காட்டுக்கு புறப்படுவாயானால் தருப்புக் கட்டுகளையும் முட்களையும் அழித்து கொண்டு-உனக்கு முன்பே செல்வேன் -என்னுமவள் அன்றோ-
மாம்வா ஹரேயு த்வத் ஹஸ்தாத் விசஸ் யுரதாபிவா-அவ்ய வச்தௌ ஹி த்ருச்யேதே யுத்தே ஜய பராஜ யௌ -சுந்தர -37-53-போரில் வெற்றியும் தோல்வியும் நிலை இல்லாதவனாக காணப் படுகின்றன அன்றோ
தாசாம் ஆவிர்பூத் சௌரி சமயமான முகாம்புஜ-பீதாம்பரதர ஸ்ரக்வீ சாஷாத் மன்மத மன்மத -ஸ்ரீ பாகவதம் -10-32
நயச்த தண்டா வயம் ராஜன் ஜிதக்ரோதா ஜிதேந்த்ரியா-ரஷிதவ்யா த்வயா சஸ்வத் கர்ப்ப பூதா தபோதனா -ஆரண்யம் -1-20
ஏஹி பஸ்ய சரீராணி முநிநாம் பாவிதாத்மானம்-ஹதாநாம் ராஷசை கோரை பஹூநாம் பஹுதா வனே -ஆரண்ய -6-16-
ஏகதாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் யயௌ-விசசார வ்ருத்தோ கோபி வன்ய புஷ்ப சரக் உஜ்வல -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-1-நம்பி மூத்த பிரானை ஒழியவே சஞ்சரிக்கும் காலம் பெரிது உனக்கு –
உபய பரிகர்மித ச்வாந்தச்ய ஐகாந்தி காத்யந்திக பக்தி யோகைக லப்ய -ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்தி--ஆத்மசித்தி-கர்ம ஞானங்கள் இரண்டாலும் தூய்மை செய்யப் பட்ட- மனத்தினை உடையவனுக்கு உண்டாகும் பக்தி யோகம் ஒன்றினாலே அடையத் தக்கவன் இறைவன் –
ஸ அஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபஸ்சிதா--சர்வஞ்ஞன் உடன் சேர்ந்து முக்தன் அனுபவிக்கிறான் எல்லா குணங்களையும்-
பண்டே பரமன் பணித்த பணி வகையே-கண்டேன் கமல மலர்ப்பாதம் -காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின எல்லாம்-என்றும் – இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றான் -என்றும் –சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் விரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா சுச -என்ற-அர்த்தத்தை அருளிச் செய்தார்-
அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜா-நத்வம் சமர்த்த தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயாம் வனே -ஆரண்ய -37-18-
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதஸ்சன இதி -தைத்ரியம் -9-1-
தன் சோகம் மறு நனையும்படியான ஆனந்தம் இவன் பக்கலில் உண்டு என்று அறிந்தால்-பின்னை இவன் சோகம் போகைக்கு குறை இல்லை அன்றோ –
குதஸ்சன –பின்னர் புத்தி பூர்வகமாக பண்ணின பாபத்துக்கும் அஞ்ச வேண்டா-
ஸஹிஷ்ணு -தேஷாம் ஆபி முக்யாத்-ப்ராக் உத்தர சஞ்சித புத்தியா அபுத்தியா சகல கரணை ஸர்வதா -விதி நிஷேத -சாசன அதி லங்கன சித்தி ஸூஅவஞ்ஞா நிந்தாதீநாம் சர்வ சகேன விஷயாவகாஞ்ச அபராதானாம் —ஸஹிஷ்ணு பொறுத்து விடுகிறான் –
பாஹூச் சாயம் அவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான-அபக்ருஷ்ய ஆஸ்ரமபதான் ம்ருக ரூபேண ராகவம் -சுந்தர -14-31-ஒதுங்கினவர்கள் குறைய நிற்க -நிழலே விஞ்சி இருக்கும்-
யாம் ஒஷதீம் இவ ஆயுஷ்மன் அந்வேஷசி மகா வனே – ஆரண்யம் -67-15-
சீதையை அருமருந்து போலே பெரும்காட்டில் தேடி வருகிற-நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்களாக-உனக்கு இந்த நினைவு மாறாதே சென்றிடுக -என்கிறார் –
பத்ரம் தே -ஸ்ரீ ஜனகர் போலே –
ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதிபி-நாராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி பிரஜாயதே –-பல ஆயிரக் கணக்கான பிறவிகளில்-செய்த கர்ம ஞான பக்தி என்னும் இவைகளால்-அழிந்த பாபத்தை உடைய மனிதர்களுக்கு-கிருஷ்ண பக்தி உண்டாகிறது
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் –-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-மாசுச –ஸ்ரீ கீதை -18-66-என்கிறபடியே-அவன் அடியாக வருகிறதே அன்றோ-
இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்–மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –-நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோவை நர ஸூ நவே-அயனம் தஸ்ய தர பூர்வம் தேன நாராயண ஸ்மிருத -விஷ்ணு புராணம் -1-4-6--தண்ணீர் நரன் என்ற பரம் பொருளின் நின்றும் உண்டாயிற்று–ஆதலால் தண்ணீர் -நாரம் -என்று சொல்லப் படுகிறது -என்னும்-ஒரு நிர்வசனம் உண்டே அன்றோ இதற்கு–அவ்வழியாலே திருமந்த்ரத்துக்கு-பொருள் கொண்டு-திருமந்த்ரத்தைச் சொல்லிக் கொண்டு மலர்களைக் கொண்டு கை கூப்பி வணங்கி அடையுங்கோள் –என்கிறார்-
வீடே பெறலாமே –ஸ்வேன ரூபேண அபிநிஷ்பத்யதே -சாந்தோக்யம் – உயிர்க்கு உரியதாக கைங்கர்யத்தைச் செய்யவே- தனது உருவத்தோடு தோன்றுகின்றான் -என்றதனைப் பெறலாமே-இனியதனைச் செய்ய-
அமரர்க்கு அரியானை –எத்தனையேனும் மேலான ஞானத்தை-உடைய வரான பிரமன் முதலாயினோர்கட்கும் தங்கள் முயற்சியால் அடைய முடியாதவனை – யன் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-59-
பிதா யஸ்ய புராஹி ஆஸீத் சரண்ய தர்ம வத்சல-தஸ்ய புத்ர சரண்ய ஸ சுக்ரீவம் சரணம் கத -கிஷ்கிந்தா -3-20-என்றும்-ஸ அப்ய கச்சத் மகா தேஜா சபரீம் சத்ரு ஸூ தன-சபர்யா பூஜிதா சம்யக் ராம தசரதாத்மஜா -என்றும்-இமௌ ஸ்ம முனி சர்த்தூல கின்கரௌ சாம் உபச்திதௌ-ஆஜ்ஞா பய யதேஷ்டம் வை சாசனம் கரவாவ கிம் -பால காண்டம் -31-4-என்றும்
சுக்ரீவன் சபரி விஸ்வாமித்ரர் போல்வாருக்கு-எளியன் ஆன பெருமாள் போலே –
நினைமின் –சிந்திப்பே அமையும் –உங்கள் மனம் நல்ல நிலையில்-இருக்கும் பொழுது ஒரு கால் நினையுங்கோள் –ஸ்திதே மனசி ஸூ ஸ் வச்தே சரீரே சதியோ நர-நாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம்ச மாமஜம்-ஒரு கால் நினைத்து இவனைப் போலே கலங்க வேண்டியது இல்லை அன்றோ அவனுக்கு –
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19-தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் –கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-
தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன் –
தஸ்மாத் ஷிப்ரம் சஹ அஸ்மாபி துல்யோபவதி ராகவ-விபீஷணோ மகா ப்ராஜ்ஞ்ஞா சஹித்வம் சாப்யுபைது ந-யுத்தம் –19-38-எங்களோடு ஒத்தவர் ஆகக் கடவர் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே-அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே-ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்-விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்-
நமது விதி வகையே –த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா-த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்-ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42-சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி-விண்ணப்பம் செய்யப் பட்டதோ-அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-சேனை முதலியார் சட்டையும் மயிர்க்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப் புக்கவாறே நாய்ச்சிமாரும் தானும் விரும்பியபடி இருக்குமது தவிர்ந்து-நாய்ச்சிமாரும் சிங்காசனத்திலே ஒரு மூலையிலே ஒதுங்க
தானும் வினயத்தோடே இருக்கும் ஆயிற்று-வயது சென்ற சேனாதிபதியை கண்ட அரசர் போலே-வான் இளவரசு-விண்ணாட்டவர் மூதுவர்-இவர் தாமும் இவ்விருப்புக்கு தண்ணீர் துரும்பாக ஒண்ணாது -என்று உலகினை நிர்வாகம் செய்ய வேண்டுமவற்றை பாசுரப் பரப்பு அற விண்ணப்பம் செய்வார் ஒருவர் ஆயிற்று – பிராட்டிமாரோடு இருக்குமதிலும் காட்டிலும் இனிதாய் இருக்குமே அன்றோ அவனுக்கு இவர் தம்மைக் காண-பிரியத்தாலே -அன்றோ
இன்னானை பிரமன் ஆக்க வேண்டாம்-இன்னானை மாற்ற வேண்டும்-என்று வேண்டுமவற்றை சுருங்க விண்ணப்பம் செய்வர் ஐயர் யாதொன்று சொல்லிற்று அவை எல்லாம் அப்படியே-என்று கண்களாலே மேல் எழுத்து இட்டுக் கொடுக்கும்
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூநரதமான்-ஷிபாமி அஜஸ்ரம் அஸூபான் ஆஸூ ரிஷ் வேவ யோநிஷூ -ஸ்ரீ கீதை -16-19- தன்னை வைகின்றவர்களையும் வெறுக்கின்ற வர்களையும் – கொடிய தன்மை உள்ளவர்களையும் -பரி சுத்தம் இல்லாதவர்களையும்-மனிதரில் தாழ்ந்தவர்களையும்-என்னை அடைவதற்கு தடைகளாக உள்ள பிறவிகளில்-சம்சாரத்தில் நான் போடுகிறேன்-தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம்-ததாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே-ஸ்ரீ கீதை -10-10-
என்னை அடைவதற்கு உரிய புத்தி யோகத்தை அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்
மேரு மந்திர மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்தியம் ஆசாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –இவன் பலகாலமாக ஈட்டின இவை -எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த இறைவன் போக்கப் புக்கால் ஒரு காலே போகலை இருக்கும் அன்றோ –
சௌமித்ரே புங்க்ஷ்வ போகான் தவம் –சுமத்ரையின் மகனே நீ விரும்பிய இன்பங்களை நுகர்வாய் -என்றும்-வைதேஹி ரமசே கச்சித் சித்ரகூடே மயா சஹ-பஸ்யந்தி விவிதான் பாவான் மனோ வாக்காய சம்யதான் -அயோத்யா -94-18-ஜனக குல த்தில் பிறந்தவளே -நீ முக் கரணங்களையும் ஒருமைப் படுத்தினவளாய் –பல விதமான பொருள்களையும் பார்த்துக் கொண்டு என்னோடு கூட-சித்ரகூட பர்வதத்தில் களிக்கிறாயா-
மோஷ தானத்தில் பிரணத பாரதந்த்ர்யம்-வளம் மிக்க நதியிலே கரை புரளும் -ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி-சூர்ணிகை -85
கிம் தத்ர பஹூபி மந்தரை கிம் தத்ர பஹூபி விரதை-நமோ நாராயணாயேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறபடியே மோஷ மாகிற பலத்தை விரும்பினால் இதுவே அமையும் –
ப்ரீதியினாலே தூண்டப் பட்டவர்களாகி திரு நாமங்கள் பல வற்றையும் சொல்லி என்பார் -நாமங்கள் பல சொல்லி -என்கிறார் –
தத அகர்ஜத் ஹரிவர சுக்ரீவ ஹேமபிங்கல-தேன தாதேன மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர-சந்ஷேப ஸ்ரீ ராமாயணம் -68--என்கிறபடியே மகாராஜர் வந்து அறை கூவ முன் கணத்திலே மானம் கெட்டு ஓடினவன் இப்போது வந்து அறை கூவும் போது-இது வெறுமன் -அன்று
போது அல்லாப் போதிலே நீ நீ புறப்படக் கடவை அல்லை –என்று தாரை கால் கட்டச் செய்தேயும் ஷத்ரியன் ஆகையாலே மானக் கேட்டிற்கு பொறுக்க மாட்டாமல் புறப்பட்டு-மிடற்று ஓசை இருந்தபடி என் –பழைய கோழைத் தனம் அற்று தெளிந்த முழக்கு ஓசையாய் இருந்தது-இதற்கு ஓர் அடி உண்டாக வேண்டும் உண்டாயிற்றாகில் நமக்கு இரை போருகிறது -என்றானே அன்றோ –
ஹரீஸ்வர-இதற்கு முன்பு இப்படி பிறர் கூவ கேட்டு இருந்தவன் அல்லன் –
அப்படியே அவனை அண்டை கொண்ட பலத்தாலே இவ் உலக வாழ்க்கையைப் பார்த்து
உன்னை வென்றோமே அன்றோ என்று கையைக் தட்டி சிரித்து காண் பொருவது –
அறிவு கேடர்கு நரகம் என்று எமன் முதலாயினோர் குடி இருப்பினைச் சொல்லிற்று ஆகவுமாம்-இங்கு மற்றை நரகம் –8-1-9- என்கிற இவ் உலக வாழ்க்கையை சொல்லுகிறது-
வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டே அன்றோ-
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது –கருதுமிடம் பொருது -கைந்நின்ற சக்கரத்தன் –குறிப்பினை அறிகின்றவன் ஆகையாலே-சர்வேஸ்வரன் திரு உள்ளத்தின் கருத்து அறிந்து போரிலே புக்கு எதிரிகளை அழியச் செய்து வெற்றி கொண்டு –
சசரோ ராவணம் ஹத்வா ருதிராக்த க்ருதச்சவி-க்ருதகர்மா நிசிதவத் ஹவதூணீம் புதராவிசத் -யுத்தம் 11-20- மீண்டு வந்து அம்புறாத் துணியை அடைந்தது -என்கிறபடியே
கையிலே வந்து இருக்கும் ஆயிற்று – ஸ்ரீ ராம பிரானது பக்கத்திலே வந்து நின்றார் -என்றாப் போலே
அதஹரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-நிசிசர பதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண
ககன மதி விசாலம் லங்கயித்வா அர்க்க ஸூ ந-ஹரிவர கணமத்யே ராம பார்ச்வம் ஜகாம-யுத்தம் -40-29-
அதஹரி வர நாத –ஒரு முத்தின் குடை நிழலிலே பையல் பெருமாளுக்கு எதிராக வந்து தோற்றினவாறே பொறுக்க மாட்டாமை மேல் விழுந்து-நெடும் போது பொருது இளைப்பித்து
அவன் மாயப் போர் செய்யத் தொடங்கின அளவானவாறே இனி நமக்கு அது வேண்டி வரும்-அது நமக்கு தக்கது அன்றுபெருமாள் செய்த சூளுறவை நாம் அழிக்க ஒண்ணாது -என்று மீண்டார் –
ராமேண ஹி பிரதிஜ்ஞ்ஞானம் ஹர்யர்ஷைகண சந்திதௌ-உத்சாதனம் அமித்ரானாம் சீதாயை பரிவஞ்சிதா -சுந்தர 51-32--திருவடி ராவணன் இடம் அருளியது-சத்ய சங்கல்பரான பெருமாள் சூளுறவு செய்தார்
ஹர்யர்ஷைகண சந்திதௌ-வீரர்கள் திரள் நடுவே சூளுறவு செய்ததும்-ஆனபின்பு இவர்க்கு போர் செய்ய இடம் இல்லாமல் ஆக்க ஒண்ணாது என்று பார்த்தார் –
ஹரி வர நாத – ஹரி நாத என்னாமல் ஹரி வர நாத -என்றது தாம் செய்த இக்கார்யம் தன் சேனையில் செய்வார் இல்லாமல்-செய்தார் அல்லர்-பொறுக்க மாட்டாமையால் செய்தார் இத்தனை –ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம்-பூசல் புண்ணியம் என்று தனியே ஓன்று உண்டே அன்றோ-அதனால் வந்த புகழினைத் தாம் படைத்தார் –நிசிசர பதிம் –களவு பூசல் செய்வாருக்கு ஒதுங்க நிழலான பையலை-இராஜ புத்ரர்களை அகற்றி தனி இடத்திலே பிராட்டியைப் பிரித்த பையல் அன்றோ –ஆஜௌ –அவர்களுக்கு நிலம் அல்லாத செவ்வைப் பூசலிலே –யோஜயித்வா ஸ்ரமேண-அவனை இளைப்போடே கூட்டினார் –தம்மை புகழோடு கூட்டினார் -கீர்த்திம் பிராப்ய –ககன மதி விசாலம் லங்கயித்வா –நாடு இடைவெளி பெருத்து இருக்கிற-ஆகாயத்தை வருத்தம் அறக் கடந்தார் –அர்க்க ஸூந-அது செய்த படி -சூர்ய புத்திரன் என்று-தோற்றும்படியாய் இருந்தது –உதய கிரியில் தோன்றினால் பின்பு மறைந்து நிற்க காணும் இத்தனை அன்றோ –ராம பார்ச்வம் ஜகாம-பெருமாளைப் பிரிந்தபடியால்-வந்து கிட்டுவதும் செய்தோம் என்று தோற்றும்படி-மதிக்கத் தக்கது ஓன்று செய்து வராமையாலே நேர் கொடு நேர் முன் நிற்க மாட்டாதே-பெருமாள் அருகே போய் நின்றார் பையல் தலையைப் பிடிங்கிக் கொடு வந்து திருவடிகளில் இடப் பெறாத நாம் என் சொல்லி முன் நிற்பது-என்று பெருமாள் அருகே வந்து நின்றார்-
நதர த்ருஷ்ட்யா மயா சீதா ராவனாந்தபுரே சதீ-சந்த்யச்ய த்வயி ஜீவந்தீ ராமா ராம மநோரதம்-சுந்தர -65-10-பெரிய உடையாரைப் போலே தடையோடே முடிந்தேனோ –
திருவடியைப் போலே -காணப்பட்டாள்சீதையை -என்று வந்தேனோ-
ஸ அஹம் புருசார்த்த கருணாம் குரு த்வம்-சம்சார கர்த்தே பத்தி தஸ்ய விஷ்ணோ
மகாத்மநாம் சம்ஸ்ரய அப்யுபேத-நைவா வசீ ததி அதி துர்க்கதோ பி -விஷ்ணு தர்மம் கத்திர பந்து வியாக்யானம் – விஷ்ணுவே நான் மிகவும் துன்பம் உற்றவன்-அடியேனுக்கு கருணை செய்க- மிக்க வறியனும் பெரியோர்களை அடைந்தவனுமாய் இருக்கிற ஒருவன் ஒருக்காலும் குறைவு அடைய மாட்டான்
த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலே தழைக்கும் -சூர்ணிகை -185-
அபிஷிச்ய ஸ லன்காயாம் ராஷசெந்த்ரம் விபீஷணம்-க்ருத க்ருத்யா ததா ராம
விஸ்வர பிரமுமோதா ஹ -சங்ஷேப ஸ்ரீ ராமாயணம் -85
என்னை முற்றும் உயிர் உண்டு –-என் உயிரை முற்றும் உண்டு –-அப்ரமேயம் ஹி தத்தேஜ யஸ்ய ஸா ஜனகாத்மஜ-ந த்வம் சமர்தச்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ர்யாம் வனே -ஆரண்ய -37-108-என்கிற ஏற்றத்தை போலும் போரும் ஆயிற்று இவர் உயிரை எங்கும் புக்கு அனுபவிக்கப் பெறுகையால் வந்த ஏற்றம் –
அநேக ஜீவேன ஆத்மநா அனுப்ரவச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -8-2-
இந்த உயிரை சரீரமாக உடைய என்னால் அந்தர்யாமியாகப் பிரவேசிக்கப் பட்டு-
நாம ரூபங்கள் உண்டு பண்ணப் படுகின்றன-
நின்ற –உள்ளும் புறம்புமான எல்லா இடங்களிலும் நாராயணன் பரந்து–அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித-தைத்ரியம் -11-8-
பரித்ராணாயா சாதூநாம் விநாசாய துஷ்க்ருதாம்-தர்ம சம்ஸ்த்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-–தத அகில ஜகத் பத்மபோதாயா -அச்யுத பாணினா-தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மகாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2--பகைவர்களை அழிப்பதற்கும் வேறு ஒரு கருவி எடுக்க வேண்டாதபடி–அடியார்களை பாதுகாப்பதற்கும் வேறு ஓன்று தேடவும் வேண்டாதே–அநந்ய பிரயோஜனருக்கு தானே பிரயோஜனமாய் இருக்கும் ஆயிற்று-
உலகத்தில் தெய்வப் பிறவி என்றும்-அசுரப் பிறவி என்றும் உயிர் களின் படைப்பு இரண்டு விதம்-த்வௌபூத சர்கௌ லோகேஷூ தைவ ஆசுர ஏவச-விஷ்ணு பக்தி பரோதேவ விபரீத ததா சூர-ஸ்ரீ கீதை -16-6–
துக்த அப்தி ஜெநநோ ஜெநநீ அஹம் இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ வர
ஸ்ரீ ரெங்கேஸ்வர ஏதத் அர்ஹம் இஹ கிம் குர்யாம் இதி ஏவ ஆகுலா
சஞ்சத் சாமர சந்த்ர சந்தன மஹா மாணிக்யா முக்தா உத்கராந்
காவேரீ லஹரீ கரைஸ் விதததீ பர்யேதி சா சேவ்யதாம் —1-21-
துக்த அப்தி ஜெநநோ–திருப் பாற் கடலானது தந்தை
அஹம் ஜெநநீ -அக்கடலின் மனைவியாகிய நான் தாய்
இயம் ஸ்ரீ ஏவ புத்ரீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகள்
வர ஸ்ரீ ரெங்கேஸ்வர–ஸ்ரீ அழகிய மணவாளன் மணவாளப் பிள்ளை
ஏதத் அர்ஹம் இஹ-இப்படி இருக்கையில் இந்த மகளுக்கும் மணவாளப் பிள்ளைக்கும் தகுதியாக
கிம் குர்யாம்–என்ன சிறப்பு செய்யக் கடவோம்
இதி காவேரி -என்று திருக் காவேரி யானவள்
ஏவ ஆகுலா சஞ்சத்-வியாகுலப் பட்டவள் போலே விளங்கா நின்றுள்ள
சாமர–சாமரங்கள் என்ன
சந்த்ர –பச்சைக் கற்பூரங்கள் என்ன
சந்தன -சந்தன மரங்கள் என்ன
மஹா மாணிக்யா -சிறந்த ரத்தினங்கள் என்ன
முக்தா உத்கராந்-முத்துக்கள் என்ன -இவற்றின் குவியல்களை
காவேரீ லஹரீ கரைஸ் –காவேரீ அலைகளாகிற கைகளினால்
விதததீ சதீ பர்யேதி-ஏந்திக் கொண்டு பெருகுகின்றது
சா சேவ்யதாம் —அப்படிப்பட்ட திருக் காவேரீ-சேவிக்கத் தக்கது –
ஜனங்களால் நீராடப்பட வேணும்
இன்னார் இனையார் என்று பாராமல் எல்லாரும் ஓக்க திருக் காவேரியைப் பற்றுங்கோள் என்று பர உபதேசம் –
ச அப்யகச்சத் மகா தேஜோ சபரீம் சத்ரு ஸூதன-சபர்யா பூஜித சம்யக் ராம தசரதாத் மஜ-ஸ்ரீ சங்ஷேப ராமாயணம் -58சபரியை சென்று அடைந்தார் என்னுமா போலே –
அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ர ஜனபாந்தவம்-அயோத்யாம் நப்ரவேஷ்யாமி த்ரிபிஸ்தை ப்ராத்ருபி சபே -யுத்தம் 19-21--அந்த தம்பி மார் மூவருடன் இராவணனைக் கொல்லாமல்-அயோத்யைக்கு மீளேன்
யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே-லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15-இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்-இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் – நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்- இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்-ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19-அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்
சேவா ஸ்வவ்ருத்தி ஆக்யாதா தஸ்மாத் தாம் பரிவர்ஜயேத் – மனு ஸ்ம்ருதி -4-4-8
ஒருவனுக்கு அடிமையாக இருப்பது இழிந்த செயல் -என்றது போல் அன்றே –ஸ்வரூப அனுரூபமாக உள்ளதன்றோ இது –தொண்டு உகளித்து – தொண்டாலே உகப்புத் தலை மண்டை இட்டு –
முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின -பாரதம் மோஷம் -என்கிறபடியே –அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது-எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்
யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே
ஹே வாநரா அஸ்மின் முஹுர்த்தே நசிராத் ஜகத் அராவணம் அராமம் த்ரஷ்யத வ ஸத்யம் ப்ரதி ஸ்ருணோமி -யுத்த -21-
ஓ வானர வீரர்களே இந்த சமயத்திலே வெகு சீக்கிரமாக இந்த ஜகத்தை ராவணன் இல்லாததாகவாவது ராமன் இல்லாததாகவாவது பார்க்கக் போகிறீர்கள் -ஸத்யமாகச் சொல்லுகிறேன் –
ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-
மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி-யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்-குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று-
கண்ணுள் நின்று அகலான் – எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயம் ஆகா நின்றான் -என்றது –சதா பஸ்யந்தி -எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு-வேறு தனக்கு ஒரு உலகம் உண்டு என்று இருக்கின்றிலன்
யச்யாமதம் தஸ்ய மதம் –அவிஞ்ஞாதம் விஜாநதாம் – கௌஷீகிதி உபநிஷத்
என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –-சக்யா லோபயிதம் ந அஹம் ஐஸ்வர்யேண நநேநவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15- பிராட்டி போலே பிரிக்க ஒண்ணாதபடி புகுந்தான்-
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே ராம கமல லோசனே-தேநத்வாம் நாநயதி ஆஸூ சசீமிவ புரந்தர -சுந்தர -36-33-பிராட்டி திருவடியைப் பார்த்து அருளியது –
நத்வாம் இஹஸ்த்தாம் ஜாநீதே--தேவரீர் இங்கு இருப்பதனை பெருமாள் அறிய வில்லை -என்கிறபடியே-நடுவே சிலர் சொல்லும்படி ஆயிற்று–எழுந்து அருளிய இடம் அறியாமையாலே-ஆறி இருந்தார் இத்தனை போக்கி – அறிந்தால் ஒரு கணம் ஆறி இருப்பாரோ –இது தான் என் வார்த்தை கொண்டு அறிய வேண்டுமோ –
கமல லோசனே--உம்முடைய கண் அழகே அன்றோ பிரமாணம் –
ராம-அவரை அறியாது ஒழிய வேண்டுமோ –
சிரஞ்ஜீவதி வைதேஹீ யதிமாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணாம்-சுந்தர 66-10--கருத்த கண்களை உடைய சீதையைப் பிரிந்து ஒரு கணம் கூட உயிர் வாழேன் -என்றே அன்றோ அவர் இருப்பது –
ராம கமல லோசனே –கமலா பத்ராஷா ரம்யய்தி ராமயா –-அவரை அறியாமையும் இல்லை –உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியாமையும் இல்லை –
கமல லோசனே —-அன்றிக்கே-யார் எதிராகத் தான்-இக்கண் சிவப்பும் சீற்றமும் எல்லாம் -என்னுதல்-பிரணய ரோஷத்திலே நோக்கு-என்னுதல்-
ஸமுத்ர ஸிந்துபி இவ ஸர்வதா ஸத்பி அபிகத ஆர்ய ஸர்வ ஸமச்சைவ சதைக ப்ரிய தர்சன-பால -1-16-சமுத்ரமானது நதிகளால் அடையப்படுவது போல் எப்பொழுதும் சத்புருஷர்களால் அடையப்பெற்றவரும் பூஜ்யரும் எல்லாரிடமும் ஸமமாய் இருப்பவரும் எப்பொழுதும் எல்லோருக்கும் பிரியமான தர்சனத்தை யுடையவரும்-திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ-ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92--இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்- தமையனாரோடு தேரிலே ஏறிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்-
கச்சின் முனி ப்ரீத தாப்யாம் கலசம் ததவ் மஹா யஸா கச்சித் ப்ரஸன்ன வல்கலம் ததவ்-பால -4-20-அதைக்கேட்டு முனிவர் களித்து அவர்களுக்கு கலசத்தைக் கொடுத்தார் -பெரும் புகழ் பெற்ற ஒரு முனிவர் காட்சி கொண்டு மரவுரியை ஈந்தார் –
வத்யமாநா பதிதா ச வீரா நாநத்யமாநா பயசல்யவித்தா ராவணஸாய கர்த்தா தே சாகாமிருகா சரண்யம் ராமன் சரணம் ஜக்மு -யுத்த
கொல்லப்பட்டவர்களும் கீழே விழுந்தவர்களும் வீரர்களும் மிக்க கூச்சலிடுபவர்களும் பயத்தினாலும் சல்யத்தினாலும் அடிபட்டவர்களும் அந்த வானரர்கள் ஸர்வ சரண்யனான பெருமாளைக் சரணம் அடைந்தார்கள்-
விஷ்ணு ஸ்ரஷ்டா ஆத்மாநம் ஸ்ருஜதிச பால்யம் ச பாதி ச அந்தே உப ஸம் ஹ்ரியதே ஸம் ஹர்தா ஸ்வயம் ப்ரபு -விஷ்ணு புராணம் -1-2-67-விஷ்ணுவானவர் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்டமான தன்னை ஸ்ருஷ்ட்டி காலத்திலேயே ஸ்தூல சித் அசித் விஸிஷ்டமாக ஸ்ருஷ்டிக்கிறான் -ரக்ஷிக்கப்படுகிற வஸ்துவும் ரக்ஷிக்கிறவனும் அவனே என்றபடி -பிரளய காலத்தில் ஸம்ஹரிக்கப்படுபவனும் ஸம்ஹரிக்கிறவனும் நியாந்தாவான தானே என்றபடி –
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ ச சர்க்க கர்த்தா ஸ ஏவ பாதி அத்தி ச விஷ்ணு பிரும்மா த்யவஸ்தாபி அசேஷ மூர்த்தி வரிஷ்ட வரேண்ய வரத
அவரே ஸ்ருஷ்டிக்கப்படுகிறவன் -அவரே ஸ்ருஷ்ட்டியைச் செய்கிறவர் -அவரே காப்பாற்றுகிறவர் -ஸம்ஹரிப்பவரும் அவரே -இவ்விதமுள்ள விஷ்ணுவானவர் பிரும்ம ருத்ராதி பேதத்தால் ஸர்வ சரீரகன் -மேம்பட்டவர் -மிகச்சிறந்த வரம் அளிப்பவர் –
மமைவ அம்ச ஸநாதந ஜீவபூத ப்ரக்ருதி ஸ்தாநி மநஸ் சஷ்டாநி இந்திரியாணி ஜீவலோகே கர்ஷதி -என்னுடைய அம்சமாகவும் அநாதியாகவும் இருக்கிற ஜீவனானவன் மாயையில் அடங்கி இருக்கிற மனதை ஆறாவதாக யுடைய இந்திரியங்களை சம்சாரத்தில் போகார்த்தமாக இழுக்கிறான்
அம்ச நாநா வ்யபதேசாத் அந்யதா ச ஏகே ஆதர்வணிகர் தாஸகித வாதித்வம் அதீயதே -சாரீரிக மீமாம்ஸை -2-3-42-
ஜீவன் ப்ரஹ்மத்தினுடைய அம்சமே -நாநா வாகவும் ஏகமாகவும் ஸ்ருதிகளில் சொல்லியிருப்பதால் -சில சாகிகள் -ஆதர்வணிகர்-ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மேமே கிதவா -என்று சொல்லியிருக்கிறார்கள் -இப்படி இரண்டு விதமாகச் சொல்லியிருப்பதால் ஜீவன் ப்ரஹ்ம அம்சமே என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் –
ஸூத்ரம் –254–அம்சோ நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் தா சகித வாதித்வ மதீயத ஏ கே –2-3-42-
அம்சோ –ஜீவன் அம்சமே -பரமாத்மாவின் சரீரமாய் இருந்து கொண்டே
விசேஷணமாய் இருப்பதால் அம்சம் ஒரு பகுதி ஆகிறான்
நாநா வியபதேசாத் அந்யதா ச அபி வியபதேசாத் –ப்ருதக் ஆத்மானம் முதலிய
ஸ்ருதியால் பேதம் கூறப்படுவதாலும்
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய வேறுபட்ட வ்யபதேசத்தாலும்
இவ்வாறு அபேத ஸ்ருதி பேத ஸ்ருதிகளுக்கு முக்கியமாக அர்த்தம் ஸித்திக்க
சித் அசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் என்று ஒரே வஸ்துவில் பரமாத்மாவில்
விசேஷணமான ஜீவன் அம்ச பூதன் என்றே கொள்ள வேண்டும்
பேத ஸ்ருதிகள் விசேஷணமான ஜீவனுக்கும் விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கும்
ஸ்வரூபத்திலும் ஸ்வ பாவத்திலும் பேதத்தைக் காட்டுகின்றன
தத் த்வம் அஸி
அயம் ஆத்மா ப்ரஹ்ம -முதலிய அபேத ஸ்ருதிகள்
ஜீவ சரீரகனான பரமாத்மா ஒருவன் என்று சொல்லுகின்றன –
இந்த இரு ஸ்ருதிகளும் முக்ய அர்த்தங்கள்
அஞ்ஞனான ப்ரஹ்மமே ஜீவன் என்கிற வாதத்திலும்
உபாதியுடன் கூடிய ப்ரஹ்மம் ஜீவன் என்கிற வாதத்திலும்
பரமாத்மாவுக்கு ஸர்வஞ்ஞத்வம் நிர் தோஷத்வம் முதலியவற்றைப் போதிக்கும் ஸ்ருதிகள் விரோதிக்கும்
தா சகித வாதித்வ மதீயத ஏ கே –சில ஸ்ருதிகள்
ப்ரஹ்ம தாஸா ப்ரஹ்மே மே கிதவா உத -முதலிய வாக்யங்களால்
ப்ரஹ்மம் ஸர்வ ஜீவ அந்தர்யாமியாய் இருக்கையால் ஸர்வ ஜீவ ஸமூஹமும்
ப்ரஹ்மாத்மகமே என்று கூறும் –
தத சத்ரு கர்சந ராவண நீதாயா ஸீதாயா பதம் அந்வேஷ்டும் சாரணா சரிதே பதி கத்தும் இயேஷ -ஸூந்தர -1-1-
ஜாம்பவனால் உத்ஸாஹம் பண்ணப்பட்ட பிறகு-சத்ருவை நாஸம் பண்ணத்தக்க திருவடி ராவணனால் கொண்டுபோகப்பட்ட சீதாப்பிராட்டியுடைய ஸ்தானத்தை தேடுவதற்கு சாரணன் என்கிற தேவர்களால் சஞ்சரிக்கப்பட்ட ஆகாச மார்க்கத்தில் போக இச்சித்தார் –
நதேரூபம் நசாகார நாயுதானி ந சாஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் தவம் பிரகாசச -ஜிதந்தா -5--பக்தர்களுக்காகவே என்றோ அன்றோ இருப்பது –
சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷ ணாம் -சுந்தர 66-10-
பிராட்டியைப் பிரிந்து காண நேரமும் உயிர் வாழேன் என்று இருக்குமவன் கருத்து அறியுமவர்கள்
யத்ர பூர்வே சாத்யா –புருஷ சூக்தம்–எவ்விடத்தில் முன்னோர்கள் பற்றத் தக்கவர்கள்-
சாத்யா -உத்தேச்யர்-
நந்தாமி பஸ்யநபி தர்சனேன பவாமி த்ருஷ்ட்வாச புன யுவா-அயோத்யா -12-105-
பெருமாளைக் கண்ட சக்கரவர்த்தி மீண்டும் இளமைப் பருவம் அடைந்தார்-வா போகு-இத்யாதி
பஹூச்யாம் –-சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் இதி –-அவன் இடத்தில் பிறக்கையாலும் அவன் இடத்தில் இலயிக்கையாலும் அவனாலே காக்கப் படுகையாலும் இப்பொருள்கள் யாவும் அவனே
ஸ்ருஷ்டௌ ஸ் ருஜதிசை ஆத்மாநாம் விஷ்ணு பால்யஞ்ச பாதிச-உப சம்ஹ்ரியதே சாந்தே சம்ஹர்த்தாச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-67-
ஸ ஏவ ஸ்ருஜ்ய ஸ் ச ஸ்ர்க்க கர்த்தா-ஸ ஏவபாதி அத்திச பால்யதி-ப்ரஹ்மாதி அவஸ்தாபி அசேஷ மூர்த்தி-விஷ்ணு வசிஷ்ட வரத வரேண்ய-
வசிஷ்ட வரத வரேண்ய-சேஷித்வம் சரண்யத்வம் பிராப்யத்வம்-அவனே படைக்கப் படுகிறான் -அவனே படைக்கிறான் -அவனே பாதுகாக்கின்றான் அழிக்கின்றான்
அவனே பாதுகாக்கப் படுகின்றான்-பிரமன் சிவன் முதலிய நிலைகளோடு கூடி எல்லாப் பொருள்களையும் சரீரமாக உடையவனாய்-மேம்பட்டவனாய் சிறந்த வரங்களைக் கொடுப்பவனாய் இருப்பவன் விஷ்ணுவே -என்றும்
மமைவ அம்ஸ ஜீவலோகே ஜீவபூத சனாதன-மன ஷஷ்டாதி இந்த்ரியாணி பிரகிருதி ஸ்தாதி கர்ஷதி -ஸ்ரீ கீதை -15-7- என்னுடைய சரீரமாயும் அநாதியாயும் இருக்கின்ற உயிரானது மாயையில் அடங்கி இருக்கிற மனத்தினை ஆறாவதாக உடைய இந்த்ரியங்களை-இவ் உலகத்தில் இன்பத்தின் பொருட்டு இழுக்கிறது -என்றும்
அம்ஸ நானா வ்யபதேசாத் அந்ய தாச-அபிதாச கிதவாதித்யம் அதீயதே ஏக -சாரீரக மீமாம்சை -2-3-42
அம்சம் -ஜீவாத்மா பரமாத்மாவுக்கு -நாநா-வெவ்வேறாக -என்றும் ஓன்றும் என்றும் சொல்லி – பேத அபேத சுருதிகள் இரண்டையும் சேர்த்து கடக சுருதி
பிரியாமல் இருப்பதால் ஓன்று -தனித்த தனி தத்வங்கள் அதனசால் நாநா -அம்ச அம்சி பாவம் என்றதாயிற்று -ஈசன் அநீசன் இரண்டும் உண்டே –
ப்ரஹ்மமே தாசர் ப்ரஹ்மமே கிதவத்ய -/தத்வம் அஸி -அபேத சுருதி
பிருத்தாகாத்மானம் பிரேரிராத் தாஞ்ச மத்வ -பேத சுருதி –
சாகா ம்ருகா ராவண சாயகர்த்தா ஜக்மு சரண்யம் சரணம் சம ராமம் -யுத்தம் -60-45
வானரங்கள் ராவணன் உடைய அம்பால் துன்புற்று ஓடின-புகலிடமான ராமனை சரணம் அடைந்தன -என்றும்
ராஷச ஸ வத்யமானனாம் வானரானாம் மகா சமு-சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -யுத்தம் -94-17-
அரக்கர்களால் துன்புறுத்தப் பட்ட வானரர்கள் உடைய பெரிய கூட்டமானது-
காப்பாற்றுகின்றவனான ஸ்ரீ ராமனை புகலாக அடைந்தது என்றும் சொல்லுகிறபடியே-
உன்னை ஒழிய ஒரு புகல் இல்லாதவருக்கு உதவுமவன் அன்றோ-
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசூதாதலம்-அக்னி கோப பிரசாத தே சோம ஸ்ரீவஸ்த லஷனை-யுத்தம் -118-80-–என்றும் –
தஸ்ய ஸ்ருஜ்யச்ய சம்பூதௌ தத் சர்வம் தத ஹரேஸ்து-என்றும்
யானி மூர்த்தாதி ய மூர்த்தாதி யானி அத்ர அன்யத்ரவா கிவசித்-சந்திவைவஸ்து ஜாதாதி தாதி சர்வாணி தத்வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் ––என்றும் –
உனக்கு உலகம் முழுதும் சரீரம் -அவை யாவும் அவனது உடல் -என்றும் –
அவை எல்லாம் அரியினுடைய உடல் என்றும் – சொல்லுகிறபடி-
யஸ்ய ப்ரஹ்மா ஷத்ரஞ்சஉபே பவத ஓதனம்–என்றும் -ம்ருத்யு யஸ்ய உபசேசனம்சு இத்தா வேத யத்ர ஸ -கடவல்லி-என்றும் – ம்ருத்யு -நெருப்பு எமன் சிவன் -இவர்களைச் சொல்லுகிறது-எவனுக்கு பிராமணனும் ஷத்ரியனும் உணவாகிறார்களோ-அழிக்கிறவன் வெஞ்சன பொருளோ அத்தகைய அவனுடைய பெருமை இவ்வளவு என்று அறிகிலர்
ஏக த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா சம்ஹாரக ததா-அத்யஷஸ் சானுமந்தாச குணமாயா சமாவ்ருத -ஜிதந்தா
நீ ஒருவனே உலகத்தை படைக்கிறவனும்-அப்படியே உலகத்தை அழிக்கின்றவனும் ஆகின்றாய் –
கோஹவை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்ம ந ஈசான நேமே தயாவா ப்ருத்வி-ந நஷத்ராணி ந ஆப ந அக்னி ந சோம ந சூர்ய ஸ் ஏகாகி
நா மேதி தஸ்ய த்யானாத்தச்ய தஸ்ய ஏகாகத்யா ந சேந்த்ரியாணி — அனபுனரேவ நாராயண ஸ் அத்யம் காமம்
மனஸா த்யாலீத-தஸ்ய த்யாநாத் தச்தச்ய லலாடாத் ஸ்வேத அபதத் தா இமா ஆப
தத் ஹிரண்மயம் அண்டம் அவ்வத் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே-என்று உபநிஷத்திலும் சொல்லப் பட்டதே -என்கிறார்
நாராயணன் ஒருவனே ஆதியில் இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை –
இந்த விண்ணும் இல்லை மண்ணும் இல்லை -நஷத்ரங்கள் இல்லை நீர் இல்லை நெருப்பு இல்லை-சந்தரன் இல்லை சூர்யன் இல்லை -அவன் தனியனாய் வருந்தினான் –
முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்கிற இந்த விளி வாக்கியம்
அதபுனரேவ நாராயணஸ் அநயம் காமம் மனஸா த்யாயீத தஸ்ய த்யானாந்தச்ய தஸ்ய லலாடாத் ஸ்வேத
அபதத் -ஸ்வேதான் புத் புதம் அபதத் புத்புநாத் த்ர்யஷ-சூல பாணி புருஷோ ஜாயதே -மகா உபநிஷத் வாக்கியம்
சிருஷ்டி ஸ்திதி அந்தகரனீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம்-ஸ சம்ஜ்ஞானம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-
படைத்தல் காத்தல் அழித்தலைச் செய்கிற-பிரமன் விஷ்ணு சிவன் என்ற பெயர்களை-
பகவானான அந்த ஜனார்த்தனனே அடைகிறான் –
பரமாத்மாச சர்வேஷாம் ஆதார பரமேஸ்வர-விஷ்ணு நாமா சவேதேஷூ-வேதான் தேஷு ச கீயதே -எல்லா பொருள்களுக்கும் ஆதாரமாய் உள்ள பரமாத்மா சர்வேஸ்வரன்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம்-ச்திதௌ ஸ்திதம் மஹாத்மானம் பவதி அன்யச்ய கச்யசித் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-13-
காப்பாற்றுவதில் நிலை நின்றவரும்–எல்லா பொருள்களுக்கும் ஈச்வரனாயும் மகாத்மாவாயும் இருக்கிற திருமாலைத் தவிர வேறு ஒருவருக்கும் பாது காக்க ஆற்றல் இல்லை -இது பிரசித்தம் –
ந சம்பதாம் சமாஹாரரே விபத்தாம் விநிவதத்தே-சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம்வினா புருஷோத்தமா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-
எல்லா செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும் அந்த
புருஷோத்தமனான விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவருக்கும் ஆற்றல் இல்லை
ஸ்வ கர்மாதல தப்தானாம் த்யாயினாம் கேதசாந்தயே –
தங்களுடைய வினைத் தீயினால் வந்தவர்களுக்கு துன்பம் நீங்கும் படி
தேவ பிரபன்னார்த்திஹர பிரசாதம் குரு கேசவ-அவலோகன தானேன பூயோ மாம்பாலய அவ்யய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-14-
தேவனே அடைக்கலம் அடைந்தவர்கள் உடைய துன்பத்தை போக்குகிறவனே கேசவனே அழிவு இல்லாதவனே–திருவருள் புரிய வேண்டும்-பார்வையைச் செய்தலாலே மறுபடியும் என்னை காப்பாற்றி அருள வேண்டும் –
ஏஷ சர்வச்ய பூதச்து பரிஷ்வங்கோ ஹனூமத-மா காலம் இமம் ப்ராப்ய தந்த தஸ்ய மகாத்மான -யுத்த -1-14-
இரண்டு சரீரங்களையும் உளவாக்கின மகாத்மாவான அந்த திருவடிக்கு காலம் கருதி என்னால் விருப்பத்தோடு கொடுக்கப் பட்ட எல்ல பொருள் களுமான-இந்த ஆலிங்கனம் ஆவது அவனது பெரிய கோடிக்கு ஒத்தது ஆகாது-
அநாஹரோ நிராலோகோ ததஹீனா யதாத்விஜா-சேஷ்யே புரஸ்தாத் சாலாய யாவத்மே ந பிரசிதிதி -அயோத்யா -111-14
ஸ்ரீ பரத ஆழ்வான்-உணவு இல்லாதவனும்-ஒளி இழந்த முகத்தை உடையவனும்-
செல்வம் இல்லாத பிராமணன் போலே-எத்துணைக் காலம் என்னிடம் இரங்க இல்லையோ-
அத்துணைக் காலம் இலைக் குடிலின் முன்பு படுக்கிறேன்-
ப்ரசீநந்து பவந்த மீ ஹ்ரீ ஏஷா ஹி மமதுலா-யத் ஈத்ருசை அஹம் விப்ரை உபச்தேயை உபஸ்தித -ஆரண்ய -10-9-
நான் அடையத் தக்கவர்களான இப்படிப் பட்ட அந்தணர்களால்-நான் அடையப் பட்டேன் என்னும் இது எனக்கு–மிகவும் நாணமாய் இருக்கிறது -நீங்கள் என்னுடைய தவறினைப் பொறுத்து அருள வேண்டும் –
ஏஹீ பஸ்ய சரீராணி முநினாம் பாவிதாத்மநாம்-ஹதானாம் ராஷசை கோரி பஹூதாம் பஹூதாவனே -ஆரண்ய -6-16-
காட்டிலே கொடிய அரக்கர்களால்-பல வகையிலே துன்புறுத்த பட்டவர்களாய்
பலரை இருக்கிற முனிவர்கள் உடைய-சரீரங்களை பார்த்து அருள வேண்டும் -எழுந்து அருள வேண்டும்
தத் ஸ்ருஷ்ட்வா –தத்அனுபிரவேச -படைத்த பின்பு -இரண்டு அனுபிரவேசம் –
ஜீவனை சரீரமாகக் கொண்டு அனுபிரவேசம் -அண்ட கடாகம் ஸ்ருஷ்டித்த பின்பு தானே -முன்பு சமஷ்டி சிருஷ்டியில் நேராக புகுகிறார் –
தைவீஹி ஏஷா குணமயி மம மாயா துரத்யயா-மா மேவ யே பிரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
என்னையே எவர்கள் சரணமாக அடைகின்றார்களோ-அவர்களே இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்
நித்யைவ ஏஷா ஜகத்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ-யதா சர்வகதா விஷ்ணு ததைவ இயம் த்வ்ஜோத்தம -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17–விஷ்ணுவுக்கும் செல்வமாய் இருப்பவள்-சிரஞ்ஜீவதி வைதேஹி யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணம் அபி விநாதாம் அஸி தேஷணா-யுத்தம் -66-10-பிராட்டியைப் பிரிந்தால் ஒரு கண நேரமும் உய்யேன்-ஸ்ரிய ஸ்ரீயம் பக்த ஜனைக ஜீவிதம்-சமர்த்ததம் ஆபத்சகம் அர்த்தி கல்பகம் -ஸ்தோத்ர ரத்னம் -45
தாம் ஸ்ரீ இதி த்வத் உபசம்ஸ்ரயநாத நிராஹூ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -29
திருமகளாலே சர்வேஸ்வரன் தெய்வத் தன்மையை அடைகிறான் –
ந தே ரூபம் நா ஆகார ஆயுதானி நச ஆஸ்பதம்-ததாபி புருஷாகார பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5-
அடியார்களுக்காகவே தேவரீர் உடைய ஸ்வரூபம் திரு மேனி–அடியார்களுக்காகவே பிரகாசித்துக் கொண்டு இருக்கிறீர் –
மாதரம் ரஷ கைகேயீம் மா ரோஷம் குரு தாம் ப்ரதி-மயா ச சீதாயாசைல சப்த அஸி ரகுநந்தன -அயோத்யா 118-27-
ஒ பரதனே தாயான கைகேயியைக் காப்பாற்று-அவள் இடம் கோபம் வையாதே-
மயா ச சீதாயா-என் மேலும் சீதை மேலும் ஆணை
சக்யா சோபயிதும் ந அஹம் ஐஸ்வர்யேண நநேனவா-அனன்யா ராகவேண அஹம் பாஸ்கரேண பிரபா யதா -சுந்தர -21-15-
சூர்யனோடு கூடிய ஒளி போன்று என்ற விளக்கம் இல்லை என்னலாம் படி செய்தான் என்றபடி –சூரியன் பிரபை என்று பிரித்து சொல்லும் படி அங்கு -இங்கு உயிர் வேறு இன்றி -விசத தமமாகப் பண்ணி -அன்றோ கலந்து –
அத புநரேவ ஸ நாராயண அந்யம் காமம் மநசா த்யாயீத த்யான அந்தஸ் தஸ்ய லலாடாத் ஸ்வேதோ அபதத் தா இமா ஆபஸ் தத் ஹிரண்மய மண்டமபவத் தத்ர சதுர்முகோ பிரும்மோ அஜாயத அத புநரேவ நாராயணஸ் ஸோந்யம் காமம் மநஸாத்யாயீத தஸ்யத்யாநந்த ஸதஸ்ய லலாடாத் ஸ்வேதோ பதத் ஸ்வேதாத் புத்புதமவத் புதபுதாத் த்ரி யக்ஷஸ் ஸூல பாணி அஜாயத –மஹா உபநிஷத்
பிறகு மறுபடியும் அந்த நாராயணன் வேறொன்றை ஸங்கல்பிக்க விரும்பி த்யானம் செய்தார் -தான் பண்ணுகிற தியானத்துக்கு உள்ளே இருக்கிறவனுக்கு நெற்றியினின்றும் வேர்வை கீழே விழுந்தது -அது இந்த ஜலம் அது ஹிரண்ய மயமான அண்டமாக மாறிற்று -அதில் நான்முகப் பிரம்மா உண்டானான் -பிறகு மறுபடியும் அந்நாராயணன் வேறு ஒன்றை ஸங்கல்பிக்க நினைத்து த்யானம் செய்தார் -தான் பண்ணுகிற த்யானத்துக்குள்ளே இருக்கிற அவனுடைய நெற்றியின்று வேர்வை கீழே விழுந்தது -வேர்வையினின்றும் குமிழி யுண்டாயிற்று-அக்குமிழியினின்றும் முக்கண்ணனுமாய் சூலம் ஏந்தியவனாய் ஒருவன் உண்டானான் –
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பிரபலார்த்தன-மாம் நயெத் யதி காகுத்ச தஸ் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர 9-9-
பகைவர்கள் வலியை அழிப்பவரான ஸ்ரீ ராம பிரான் இலங்கையை அம்புகளாலே-
நெருக்கினதாக செய்து என்னை அழைத்துக் கொண்டு செல்வராகில்-அந்த செயலே அவருக்குத் தக்கதாக இருக்கும் -என்றாளே பிராட்டியும்-
நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய் என்றான் –
யத் அம்பு வைஷ்ணவ காயா தத விபர வசூந்தரா-பத்மாகாரா சமுத்பூதா பர்வதாப்த்யாதி சம்யுதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-
விஷ்ணு உடைய சரீரம் யாதொரு காரணத்தால் தண்ணீர் ஆயிற்றோ -இதில் தண்ணீரை சொல்லி மற்றைய பூதங்கட்கு உப லஷணம் ஆனால் போலே –
சதேவ ஏக மேவ அத்விதீயம் நீயே தான் காரணமும் காரியமும் -சாந்தோக்யம் –
நைவ கிஞ்சித் பரோஷம்தே பிரத்யஷோசி ந கச்யசித் -ஜிதந்தே-
உன்னால் அறியப் படாத பொருள் ஒன்றும் இல்லை- நீ ஒருவருக்கும் அறிய ஒண்ணாதவனாய் இருக்கிறாய் –
தத் குண சாரத்வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -சாரீரக மீமாம்சை-2-2-20-
ஞானத்தை முக்கிய குணத்தை உடையவன் ஆகையாலே
ஜீவன் ஞானம் என்று இறைவனைப் போன்று கூறப்படுகிறான் –
தானி சர்வாணி தத் வபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86-அவை யாவும் அவனுடைய சரீரம் என்றும்-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ரதிவி சரீரம் –அந்தர்யாமி ப்ரஹ்மணம்-எவனுக்கு ஆத்மாக்கள் சரீரமோ எவனுக்கு மண் சரீரமோ -என்றும்-தத் சர்வம் வை ஹரே தாணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-38-அது முழுதும் அவனுடைய சரீரம்-
அண்டாநாம் து சஹாஸ்ரானாம் சஹாஸ்ராணி அயுதாநிச-ஈத்ருசாநாம் ததா தத்ர கோடி கோடி சதானி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-7-27
அந்த மூலப் பகுதியில் ஆயிரம் அண்டங்கள் உடைய ஆயிரமும்-பதினாயிரமும்-
இப்படிப் பட்ட அண்டங்கள் பல கொடிகள் இருக்கின்றன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரம் –பக்தியின் தூண்டுதலாலே பிறந்த ஆயிரம்-
இவருடைய அவா -மைத்ரேய பகவான் ஸ்தானத்திலே நிற்கிறது ஆயிற்று –-ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணம் அருளியது மைத்ரேய பகவான் தூண்டுதல் போலே –ஸ்ரீ மைத்ரேயர் கேட்க கேட்க சொன்னது போலே ஆழ்வாருக்கு பக்தி உந்த அருளிச் செய்கிறார் என்றவாறு –பக்தி பூர்வகமாக பிறந்த பிரபந்தம் -பரமபக்தி அளவும் -வேதத்துக்கும் பரிக்ரகம் கிடைத்ததே ஆழ்வார் வாயனவாய் ஆனதால் பொற்குடம் ஆனதே சர்வரும் அனுபவிக்கும் படி –
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply